சமையல் வணிகம், உணவு வியாபாரங்களில் பிராமணர்களை இழுத்து விமர்சனம் செய்வதுஏன்? பிராமணர் அல்லாத உணவகங்களை ஆரம்பிக்கலாமே? (3)

ஒக்ரோபர் 21, 2023

சமையல் வணிகம், உணவு வியாபாரங்களில் பிராமணர்களை இழுத்து விமர்சனம் செய்வது ஏன்? பிராமணர் அல்லாத உணவகங்களை ஆரம்பிக்கலாமே? (3)

தனிப்பட்ட வியாபாரப் பிரச்சினைகளுக்கு பிரமணர்களை இழுத்து அரசியல் செய்ய வேண்டாம்: இப்பொழுது கூட இந்த உணவகம் உணவகங்களை நடத்துவது சமைப்பது போன்ற விஷயங்களை அலசும் பொழுது, தேவையில்லாமல் பிராமணர்கள் தான் அதற்கு காரணம் என்பது போலவும் இல்லை அவர்கள்தான் சமைப்பார்கள் சமைக்க தெரியும் என்றும் என்பது போலவும் மற்றவர்களுக்கெல்லாம் சமைக்க தெரியாது என்பது போலவும் அது பெரியார் சொல்லித்தான் எல்லாரும் சமைக்க ஆரம்பித்தார்கள் எல்லா சமூகத்தினரும் ஓட்டல் வைத்தார்கள் கருத்தை இப்பொழுது 2023 இந்த ஒரு குறிப்பிட்ட நபர் சொல்லுவது மிகவும் அதிர்ச்சியாக தான் இருக்கிறது அவருக்கு வியாபாரம் இதில் ஏதாவது பிரச்சனை இருக்கலாம் அரசியல் ஏதாவது சட்ட ரீதியில் அல்லது வேறு வகையான புகார்களாலும் தொந்தரவுகள் இருக்கலாம் ஆனால் அதற்காக வேண்டி எதையோ விவரிக்கும் பொழுது பிராமணர்களைக் குறிப்பிட்டு அரசியல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

சமையல், சமைக்கு முறை, உணவு வியாபாரம் இவற்றில் பிராமணர்அல்லாதவை என்றும் செய்யலாம்: குலத் தெருவில் என்று குறிப்பிட்டு பேசி உள்ளதும் அரசு எல்லாருக்கும் நிதி-கடன் அளித்து உதவி வருகிறது என்று விளக்கம் கொடுப்பதில் இருந்தும், இது நிச்சயமாக ஒரு அரசியல் ரீதியிலாக உள்நோக்கத்துடன் செய்த விமர்சனமாகவே புலப்படுகிறது. ஏனெனில் கேட்ட கேள்விக்கு நேரடியாக பதில் சொல்லி, இத்தகைய வெறுப்பு பேச்சை தவிர்த்து இருக்கலாம். பொதுவாக அடையார் ஆனந்த பவன் ஹோட்டல்கள் பற்றி மற்ற மாநிலங்களில் “பிராமணர்கள் சாப்பாடு” கிடைக்கும் இடம் என்று தான் சொல்லி வருகிறார்கள். அப்படியென்றால் இந்த நிர்வாகமே அத்தகைய ஒரு அடையாளத்தை அதாவது உணவின் தரம், சிறப்பு, சுவை முதலியவற்றை அத்தகைய ஆதாரமாக வைத்துக் கொண்டுதான் வியாபாரம் நடைபெற்று வருகிறது. ஒருவேளை அவர்கள் அத்தகைய சாப்பாடு தேவை இல்லை என்றால் நிச்சயமாக அவர்கள் மாற்றிக் கொள்ளலாம், பெயரையும் மாற்றிக் கொள்ளலாம் அல்லது வேறொரு பெயர் அடையாளத்தையோ, சமைக்கும் முறையோ, இல்லை அந்த சாப்பாட்டில் போடப்படுகின்ற பதார்த்தங்கள் மற்ற வகைகளையும் மாற்றி அமைத்துக் கொள்ளலாம்.

பிராமணர் இல்லாத சமையல், ஓட்டல், பதார்த்தங்கள்என்று தைரியமாக ஆரம்பிக்கல்லாம்: எத்தனையோ அயல்நாட்டு வகைகளை சமையலில், உணவுகளில் சேர்த்துக் கொள்ளும் பொழுது, அத்தகைய “பிராமணர்-அல்லாத-வகையறாக்களையும்” சேர்த்துக் கொள்ளல்லாம். ஆனால் அவ்வாறு செய்யாமல் முறையை அவ்வாறு கையாண்டு, இன்னும் சொல்லப் போனால் அவர் தந்தை குறிப்பிட்டது போல, அத்தகைய சமையல் முறையை பிராமணர்களிடம் கற்றுக் கொண்ட இந்த வியாபாரம் செய்யும் பொழுது, நான் பிராமணர்களையே சமையலுக்கு வைத்துக் கொள்ளவில்லை, பிராமணர்கள் அல்லாதவர்கள் தான் என்னுடைய ஹோட்டலில் சமைத்து வருகிறார்கள் என்பதையும் வெளிப்படையாகவும் அவர் சொல்லிக் கொண்டு மார்-ட்டிக்கொண்டு இத்தகைய விமர்சனத்திலும் உண்மையை சொல்லி இருக்கலாம். ஆனால் அவர் செய்யாமல் தேவையற்ற அந்த விமர்சனத்திற்கு ஆள் தான் இப்பொழுது பிரச்சனை வந்துள்ளது பிரச்சனை எழுந்துள்ளது. முன்பு “பிராமணர் அல்லாத இயக்கம்” என்று ஆரம்பித்தது போல, இப்பொழுதும், “பிராமணர் இல்லாத சமையல், ஓட்டல், பதார்த்தங்கள்” என்று தைரியமாக ஆரம்பிக்கல்லாம், போர்டுகள்-விளம்பரம் செய்து கொள்ளல்லாம். பார்ப்போம் அவ்வாறு செய்வார்களா என்று.

ஜூன் 2023 அடையாறு ஆனந்த பவன் அரசியல் பேசக் கூடாது: அக்டோபரில் இப்படி என்றால், ஜூனில் இப்படி இருந்தது! சென்னையில் உள்ள முக்கிய ஹோட்டல்களில் அரசியல் பிசினஸ் சார்ந்த விஷயங்களை பேச அனுமதி மறுக்கப்பட்டுள்ளது[1]. உள்ளூர் அரசியல் முதல் உலக அரசியல் வரையிலும், அலுவலக சார்ந்த பேச்சுகள் முதல் தொழில் சார்ந்த விஷயங்கள் வரை பிரைவசி தேடி செல்லும் கோடிக்கணக்கான சாமானியர்களின் புகலிடமாக இருப்பது டீ கடைகள்தான்[2]. அந்த டீ கடைகள் இப்போது பரந்து விரிந்து ரெஸ்டாரண்டுகளாக மாறியுள்ளது. இங்கு ரியல் எஸ்டேட், பிசினஸ், அரசியல் சார்ந்த பெரிய பெரிய டீலிங்கும் நடக்கிறது. இந்த நிலையில், சென்னையில் முக்கியமான உணவகங்களில் சமீப நாட்களாக ஒட்டப்பட்டு வரும் போஸ்டர்கள் கவனத்தை ஈர்த்துள்ளன. அந்த வகையில் பிரபலம் வாய்ந்த ஹோட்டலான அடையார் ஆனந்த பவன் ஹோட்டல் ஒன்றில் ‘ இங்கு அரசியல், ரியல் எஸ்டேட், மற்றும் வியாபாரம் பேச அனுமதி இல்லை’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை பார்க்கும் வாடிக்கையாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

சட்ட ஒழுங்கு பிரச்சினை வரலாம் என்பதால் தடை: நண்பர்களுடன் இது போன்ற ஹோட்டல்களுக்கு செல்பவர்கள் எதைத்தான் பேசுவது என்றும் நாம் பேசுவதை ஊழியர்கள் கவனிப்பார்களோ என்றெல்லாம் வாடிக்கையாளர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். இதுகுறித்து கருத்து தெரிவிக்கும் நெட்டிசன்கள், பொதுவாக தென் மாவட்டங்களில்தான் இப்படி போஸ்டர்கள் ஓட்டுவார்கள். அங்குள்ள டீ கடைகளிலும், சலூன்களிலும் அரசியல் பேசக்கூடாது என்று எழுதப்பட்டிருக்கும். இப்போது சென்னை போன்ற முக்கிய நகரத்திலும் அந்த நடைமுறை வந்திருப்பது வியப்பாக உள்ளது. குறிப்பாக பெரிய உணவகத்தில் இதுபோன்ற உத்தரவு போடப்பட்டிருப்பது ஆச்சரியமாக இருப்பதாக சொல்கின்றனர். ஆனால், இப்படி போஸ்டர் ஒட்ட என்ன காரணம் என்று விசாரித்தபோது, ஒரு குழுவில் வெவ்வேறு கட்சிகளை சார்ந்தவர்கள் இருப்பார்கள்.. அதேபோல மற்ற டேபிள்களில் இருப்பவர்களும் ஏதோவொரு கட்சியை சார்ந்து இருப்பார்கள். இந்த நிலையில் ஹோட்டலுக்குள் இருந்துகொண்டு வேறு கட்சியை பற்றி இழிவாக பேசும்போது அதை மற்றவர்களால் ஏற்க முடியாது. இதனால் வாடிக்கையாளர்களுக்குள் பிரச்சினை ஏற்படலாம் என்று கூறுகின்றனர். இதேபோல பிசினஸ், ரியல் எஸ்டேட்டும் பணம் செட்டில்மென்ட் அடங்கிய விஷயம் என்பதால் சட்ட ஒழுங்கு பிரச்சினை வரலாம் எனவே மேற்கண்ட மூன்று விஷயங்களை பேச அனுமதி இல்லை என்று போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். ஆக, இப்படித்தான் அரசியலும் செய்யலாம் போலிருக்கிறது.

© வேதபிரகாஷ்

21-10-2023


[1] சமயம், இங்கு இத பத்தி பேசக்கூடாது‘… பிரபல உணவகம் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு..!, Authored By திவாகர் மேத்யூ | Samayam Tamil | Updated: 4 Jun 2023, 12:03 pm

[2] https://tamil.samayam.com/latest-news/state-news/adyar-ananda-bhavan-hotel-has-been-denied-permission-to-customers-discuss-political-and-business-matters/articleshow/100740332.cms

சமையல் வணிகம், உணவு வியாபாரங்களில் பிராமணர்களை இழுத்து விமர்சனம் செய்வது ஏன்? பிராமணர் அல்லாத உணவகங்களை ஆரம்பிக்கலாமே? (2)

ஒக்ரோபர் 21, 2023

சமையல் வணிகம், உணவு வியாபாரங்களில் பிராமணர்களை இழுத்து விமர்சனம் செய்வது ஏன்? பிராமணர் அல்லாத உணவகங்களை ஆரம்பிக்கலாமே? (2)

2016 – கரூர் பூச்சி பிரச்சினை: திருச்சியை சார்ந்த வழக்கறிஞரும், உதவி அரசு வழக்கறிஞருமான ரவி தனது குடும்பத்துடன் கரூரில் உள்ள இந்த உணவகத்தில் உணவு அருந்தியுள்ளனர். அப்போது, அவர்களுக்கு பரிமாறப்பட்ட உணவுகளில், சாம்பாரில் பூச்சி இருந்ததாக கூறப்படுகிறது[1]. நீதிபதி அதுவும் பெண் நீதிபதி உணவிலேயே பூச்சி இருப்பதாகவும், அந்த பாதிக்கப்பட்ட அரசு உதவி வழக்கறிஞர் ரவியிடம் ஹோட்டல் நிர்வாகத்திடம் சமாதானப்படுத்த முயன்றுள்ளனர்[2]. பின்னர் வாக்குவாதம் நீடித்த நிலையில் செல்பேசி வழியாக அனைத்து துறைகளுக்கும் புகார் தெரிவித்து அவர்கள் குடும்பத்துடன் திருச்சிக்கு காரில் புறப்பட்டனர். இதையடுத்து கரூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் மீனாட்சி சுந்தரம் மற்றும் உணவுத்துறை அதிகாரிகள் திடீரென்று ஆய்வு மேற்கொண்டு ஹோட்டலின் உணவுகளை பற்றி திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அவர்களை, அடையார் ஆனந்தபவன் கரூர் மேலாளர் இசக்கி சமாதானப்படுத்தி அனுப்பினார். கரூரில் உள்ள உயர்ரக சைவ ஹோட்டலான அடையார் ஆனந்தபவன் ஹோட்டலில் நடந்த இச்சம்பவம் இங்கு வரும் வாடிக்கையாளர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்ந்து பல புகார்கள்: இவ்வாறாக பல இடங்களில், பலரால் புகார்கள் கொடுப்பதும், பதிவாகுவதும், இணைதளங்களில், செய்திதாள்களில் விவரங்கள் வருவதும் தொடர்ந்தன்ன. விசம் வாய்ந்த தும்பி கிடந்தது[3], வடையில் ஆணி கண்பட்டது[4] என்று புகார்கள் எழும்பின, பதிவாகின. ஆனால், அவையெல்லாம் என்னவாகின என்று தெரியவில்லை. பழைய செய்திகள் இப்பொழுது கிடைப்பதில்லை. ஒருவேளை பணம், அதிகாரம், அரசியல் செல்வாக்கு என்றெல்லாம் வைத்து சரிகட்டப் பட்டன போலும். இப்பொழுது 2023ல், இப்பிரச்சினை எழுந்ததால், இவையெல்லாம் ஆராய வேண்டிய நிலை ஏற்பட்டது. இல்லையென்றால், அவரவர் தத்தம் வேலைப் பார்த்து சென்றிருப்பர். இதைப் பற்றி யாரும் கவலைப் பட்டிருக்க மாட்டர்கள். ஆனால், அரசியல் கலந்த பேச்சு வெளிப்படும் பொழுது, அப்பிர்ச்சினைகளை மக்கள் களையத் தான் பார்ப்பார்கள்.

செப்டம்பர் 2018ல் ஏற்பட்ட விபத்தில் மூன்று பேர் பலி: சேலம் நெய்க்காரப்பட்டியில் தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள அடையார் ஆனந்தபவன் உணவகத்தின் மேற்கூரை சரிந்து விழுந்த விபத்தில், ஹோட்டலுக்குள் சாப்பிட்டுக் கொண்டிருந்த வாடிக்கையாளர்கள் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்[5]. சேலம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கனமழை பெய்தது[6]. இதன் காரணமாக சேலம் – கோவை தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் நெய்க்காரப்பட்டியில் உள்ள அடையார் ஆனந்தபவன் உணவகத்தின் ஆஸ்பெடாஸ்  மேற்கூரை சரிந்து விழுந்தது[7]. அப்போது உணவகத்தில் இருந்த ஊழியர்கள் உள்பட அனைவரும் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்து வெளியேறினர்[8]. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினரும் போலீசாரும் அங்கு உடனடியாக விரைந்து சென்று ஜே.சி.பி. உதவியுடன் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்[9]. இடிபாடுகளுக்குள் சிக்கி உடல் நசுங்கி உயிரிழந்த இருவரது உடலை போலீசார் மீட்டனர்[10]. விசாரணையில் ஒருவர் உணவகத்தில் உணவருந்திக் கொண்டிருந்த ஈரோட்டைச் சேர்ந்த நூருல் அமீன் என்பதும், மற்றொருவர் உணவகத்தில் பணிபுரிந்த பீகாரைச் சேர்ந்த அர்ஜூன் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டனர். அதில் நூருல் அமீனுடன் வந்திருந்த ஈரோட்டைச் சேர்ந்த சையது அலி என்பவரும்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கே.டி.சீனிவாச ராஜாவின் உணவு வியாபாரமும், பிராமண விமர்சனமும்: நடிகரும் எழுத்தாளருமான சித்ரா லட்சுமணனுக்கும், அடையாறு ஆனந்த பவனின் நிர்வாக இயக்குநர் கே.டி.சீனிவாச ராஜாவுக்கும் இடையே நடந்த நேர்காணலின் கிளிப்பைக் காட்சிப்படுத்தும் சமூக வலைதளமான X-ல் வைரலாகி வரும் காணொளியில், வணிக உரிமையாளரின் கேள்விக்குரிய கருத்து ஒன்று இடம் பெற்றுள்ளது. பிராண்டின் வாடிக்கையாளர்கள் மற்றும் புரவலர்கள் மத்தியில் ஒரு சர்ச்சையை கிளப்பியுள்ளது. வீடியோவில், பேட்டியாளர் கேட்கிறார், “ஒரு காலத்தில், ஹோட்டல் தொழில் குறிப்பாக உணவகங்கள் குறிப்பாக சைவ உணவுகள் ஐயர்களால் நடத்தப்பட்டன, பின்னர் அது மாறத் தொடங்கியது, அதற்கு என்ன காரணம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?” அதற்கு சீனிவாச ராஜா, “யார் வேண்டுமானாலும் எதையும் செய்யலாம் – இந்த மாற்றத்திற்கு முக்கிய காரணம் தந்தை பெரியார். பரம்பரைத் தொழிலில் (குலத்தோழில்) மாற்றத்தைக் கொண்டு வந்தவர். யார் வேண்டுமானாலும் எந்த வேலையும் செய்யலாம்/எந்த தொழிலையும் செய்யலாம். காலம் மாறுகிறது, அரசாங்கங்கள் கடன்களை வழங்குகின்றன, வங்கிகளும் மக்களுக்கு ஆதரவளிக்கின்றன. ஒரு குறிப்பிட்ட சமூகம் செய்து வந்த ஒரு தொழில் இப்போது யாராலும், எல்லோராலும் செய்யப்படுகிறது. யார் வேண்டுமானாலும் கடலுக்குச் சென்று மீன் பிடிக்கலாம் என்பது போல் உள்ளது.

பிராமணர் அல்லாத உணவகங்களைப் பற்றி விமர்சிக்கலாமே?: வீடியோவின் முந்தைய பகுதியில், அவர் தனது தந்தை ஒரு பிராமண சமையல்காரரிடம் இருந்து சமையல் மற்றும் இனிப்புகள் செய்யும் தொழிலைக் கற்றுக்கொண்டார் என்று முரண்பாடாக,  கூறினார். ஹல்திராம், அகர்வால் பவன், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ், சங்கீதா உணவகங்கள், உட்லண்ட்ஸ், அன்னபூர்ணா, சரவண பவன், வசந்த பவன், தாசபிரகாஷ், ஸ்ரீ மித்தாய் மற்றும் பிற உணவு வணிகங்களின் பெயர்களையும் அவர் ஏக்கத்துடன் பார்த்தவர்கள் என்று குறிப்பிடுகிறார். கடையின் வெளியில் இருந்து அவர்களைப் போல் வெற்றி பெற வேண்டும் என்ற நம்பிக்கையில் 70களின் பிற்பகுதியில்/80களின் முற்பகுதியில் தொடங்கப்பட்ட சிறிய ஸ்வீட் கடையாக இருந்த A2B கடந்த பத்தாண்டுகளில் வேகமாக விரிவடைந்தது, அதன் வெற்றியை 1973 இல் மறைந்த EVRக்கு எப்படிக் கூற முடியும் என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பினர். பல நெட்டிசன்கள் A2B விற்கும் உணவுப் பொருட்களின் மோசமான தரத்தையும் சுட்டிக்காட்டினர். முதலில் தர்க்கமற்ற கேள்வியைக் கேட்டதற்காக நேர்காணல் செய்பவரை ஏன் விசாரிக்கவில்லை என்றும் சில நெட்டிசன்கள் ஆச்சரியப்பட்டனர்.

எல்லாவற்றிற்கும் பிராமணர்களை விமர்சிப்பது ஏன்?: தமிழகத்தை பொருத்தவரைக்கும் எந்த பிரச்சினையாக இருந்தாலும் பிராமணர்களை விமர்சிப்பது, கேலி பேசுவது, தாக்குவது என்ற போக்கு தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக திராவிடத்துவ அதாவது திக- திமுக போன்ற சித்தாந்த வாதிகளால் 1950-70 ஆண்டுகளில் தொடர்ச்சியாக வாய் பேச்சு, சொற்பிரயோக வன்மத் தாக்குதல் மூலம் இவ்வாறு திட்டமிட்டு விமர்சித்து வருகிறார்கள். ஒரு காலகட்டத்தில் பூணல் அறுப்பு போன்ற தாக்குதல்களும் நடைபெற்றுள்ளன, நடைபெறுகின்றது. ஒரு முறை அயோத்தியா மண்டபம் பழைய மாம்பலம் – அந்த இடத்தில் இரண்டு அப்பாவி பிராமணர்கள் கத்திகளால் வெட்டப்பட்டு தாக்கப்பட்டுள்ளனர். பிறகு சமீப காலகட்டத்தில் மயிலாப்பூரில் ஒரு பிராமணர்களின் பூணூல் அறுத்தது மற்றும்  தாக்கியது, பன்றிக்கு பூணூல் போட வேண்டும் போன்ற காரியங்களும் அரங்கேறியுள்ளன். இப்பொழுதும் எப்பொழுதும் எந்த பிரச்சனை வந்தாலும், சம்பந்தமே இல்லாமல், எளிதாக அந்த குறிப்பிட்ட சமூகத்தை தாக்கலாம் என்ற போக்கில் தான் இத்தகைய விமர்சனங்கள் தொடர்ச்சியாக செய்யப்பட்டு வருகின்றன.

© வேதபிரகாஷ்

21-10-2023


[1] தமிழ்.வெப்.துனியா, கரூர் அடையார் ஆனந்தபவன் ஹோட்டல் உணவில் புழு பூச்சி, Written By Murugan Last Modified: சனி, 28 மே 2016 (17:45 IST).

[2] https://tamil.webdunia.com/regional-tamil-news/insect-in-karur-adayar-ananda-bhavan-hotel-116052800048_1.html

[3] Consumer alert- adyar Ananda Bhavan – Poisnous dragon fly in gravy, March 22, 2017.

Consumer complaint as posted by Joshuva on March 19th in consumercomplaints.in

[4] Consumer alert- adyar Ananda Bhavan – Nail in Vada, April 19, 2018.

Consumer complaint as posted by Dinakaran MV on April 16th in Indian Consumer Complaints Forum

[5] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், சூறாவளி காற்றில் பறந்த அடையாறு ஆனந்த பவன் மேற்கூரை…. சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள் உயிரிழந்த பரிதாபம்,First Published May 19, 2018, 11:56 PM IST,Last Updated Sep 19, 2018, 2:23 AM IST.       

[6] https://tamil.asianetnews.com/tamilnadu/adayar-ananda-bavan-hotel-accident-3-dead

[7] Times of India, 3 killed, 3 injured as hotel roof collapses in heavy rain, wind, TNN / Updated: May 20, 2018, 00:40 IST.

[8] https://timesofindia.indiatimes.com/city/salem/3-killed-3-injured-as-hotel-roof-collapses-in-heavy-rain-wind/articleshow/64240276.cms

[9] Behindhoods, Shocking 3 die after wall collapses in adyar Ananda Bhavan, By Ramya Ashok Kumar | May 19, 2018 09:57 PM

[10] https://www.behindwoods.com/news-shots/tamilnadu-news/wall-of-adyar-ananda-bhavan-at-salem-collapses-taking-the-lives-of-3.html

சமையல் வணிகம், உணவு வியாபாரங்களில் பிராமணர்களை இழுத்து விமர்சனம் செய்வது ஏன்? (1)

ஒக்ரோபர் 21, 2023

சமையல் வணிகம், உணவு வியாபாரங்களில் பிராமணர்களை இழுத்து விமர்சனம் செய்வது ஏன்? (1)

வெஜிடேரியன் / சைவ ஓட்டல்களின் வளர்ச்சி: தமிழகத்தில் சமீப காலங்களில் ஹோட்டல் / உணவகங்கள் நடத்துவதில் பெரும் போட்டி, பொறாமை, சண்டைகள் நடந்து வருகின்றன. தரம், சுவை, சுத்தம், பரிமாறுவதில் திறமை என்று நடத்தப் படும் உணவகங்கள் 1990களில் அதிகமாகின. அதற்கு 1981ல் துவக்கப் பட்ட சரவண பவன் காரணம் என்று சொல்லலாம்[1]. அதனால், மற்ற உணவகங்களும் அதே போன்ற தரத்துடன் இருக்க வேண்டும் என்று நுகர்வோர்களும் எதிர்பார்த்தனர். கியூவில் / சரிசையில் காத்திருந்து, சாப்பிடும் நிலையும் உண்டாகியது. இதனால், ஓட்டல் தொழில் அதிகமாகின. குறிப்பாக வெஜிடேரியன் ஓட்டல்களுக்கு கிராக்கி அதிகமாகின. இதனால், பாரம்பரிய சைவ உணவகங்கள், தாசப்பிரகாஷ், மத்ஸ்யா, உடுப்பி போன்றவை மூடப் படும், மூடப் பட்ட நிலையும் ஏற்பட்டன. சரவண பவன் அதன் முதலாளி கொலை வழக்கில் சிக்கிக் கொண்டதால் பெயர் பாதிக்கப் பட்டது. இருப்பினும் அந்த ஓட்டல்கள் தொடர்ந்து இயங்கின. ஆனால் 2000களில் ஒன்று ஒன்றாக மூடப்பட்டு வந்தன. இப்பொழுது, ஒரு-சில இடங்களில் தவிர அது இல்லை என்ற நிலை உண்டாகி விட்டது.  காவிரிப் பிரச்சினையால் “உடுப்பி” ஓட்டல்கள் மறைந்தன. அதனால், அதன் வெற்றிடத்தைப் பிடிக்க மற்ற ஓட்டல்கள் முயன்றன. இதனால், இருக்கும் ஓட்டல் முதலாளிகளுக்குள் பெரும் போட்டி, பொறாமை, சண்டைகள் அதிகமாகின. அரசியல்வாதிகளும் முதலீடு செய்ய தயாராகினர், முன்வந்தனர்.

பலர் வியாபாரத்தில் நுழைந்ததால் தரம் குணம் மாறியது: போதாகுறைக்கு வெஜிடேரியன் / சைவத்திற்கே சம்பந்தமே இல்லாதவர்களும் நுழைந்தனர். இதனாலும், பிரச்சினைகள் அதிகமாகின. இவை வெளிப்படையாகத் தெரியாவிட்டாலும், வியாபார-லாப-நஷ்டங்களில் அறியப் பட்டன. 2000ங்களில் நான்–வெஜிடேரியன் / அசைவ ஓட்டல்கள் அதிகமாகின. பிரியாணி என்றாலே துலுக்கர்-முஸ்லிம்கள் என்ற நிலை போய், இந்துக்கள் அதிகமாக ஓட்டல்களை நடத்த ஆரம்பித்தனர். “வேலு மிலிட்டரி ஓட்டல்கள்” அவ்வாறு தான் கிராக்கியாக இருந்தன. கியூவில் / சரிசையில் காத்திருந்து, சாப்பிடும் நிலையும் இருந்தது. “தலைப்பாகட்டி” பிரியாணி, அடையாளம் முதலியவை இந்துக்களுக்கு சொந்தமாக இருந்தாலும், சில முஸ்லிம் ஓட்டல்கள் உபயோகப் படுத்தியபோது, வழக்குகள் உயர்நீதி மன்றங்களுக்குச் சென்றன. முஸ்லிம்கள் அந்த சின்னத்தை உபயோகப் படுத்தக் கூடாது என்று தீர்ப்பும் வழங்கியது. பிறகு, 2000களில் சைவ உணவு சாப்பிட வேண்டும், ஆரோக்கியம் போன்ற விழிப்புணர்வு உண்டாகியது. இதனால், மற்படியும் வெஜிடேரியன் / சைவத்திற்கு கிராக்கி அதிகமாகின. கொரோனா காலத்திற்குப் பிறகு இது இன்னும் அதிகமாகியது. போதா குறைக்கு ஆன் – லைனில் ஆர்டர் செய்து சாப்பிடும் பழக்கமும் உண்டாகி அதிகமாகின.

1981 முதல் 2019 வரை சரவண பவனின் வ்ளர்ச்சியும் வீழ்ச்சியும்: முருகன் இட்லி, சங்கீதா, அன்னபூர்ணா என்று தலைநகரில் தங்கள் முயற்சிகளை ஆரம்பித்தனர். ஆனால் அவர்களின் ஒவ்வொரு உணவும் சரவண பவனுடன் ஒப்பிடப்பட்டதால் அவர்கள் மனதில் இடம் பெற முடியாமல் தவித்தனர். (முருகன் இட்லி காலப்போக்கில் சாம்பாருக்கு ஒரு தனித்துவமான சுவையை அளித்தது). ஆனால் வாடிக்கையாளர்கள் மெதுவாக ஆனால் நிச்சயமாக தங்கள் விருப்பங்களைப் பெறத் தொடங்கினர். Swiggy மற்றும் Uber eats உணவு வணிகத்தை வியத்தகு முறையில் மாற்றியது. பெரும்பாலான முன்னணி பிராண்டுகள் வியாபாரத்தில் நுழைந்தன, ஆனால் சரவண பவன் அவர்களுக்கு மட்டுமே தெரிந்த காரணங்களுக்காக அதில் நுழையவில்லை. ரவண பவன் சென்னையில் பிரபல ஹோட்டல்களில் ஒன்று. 5,000 ரூபாய் முதலீட்டில் ஆரம்பித்த சரவணபவன் கடந்த 2017-ம் ஆண்டு கணக்குப் படி சுமாராக 3,000 கோடி ரூபாய் (சரியாக 2,978 கோடி ரூபாய்) வருவாய் ஈட்டும் நிறுவனமாக வளர்ந்து, இப்பொழுது மறையும் நிலையில் உள்ளது. எல்லா சட்ட ரீதியான கதவுகளும் அடைபட்ட நிலையில் கடந்த ஜூலை 09, 2019 அன்று சிறைக்குப் போன உரிமையாளர் ராஜகோபால் கடந்த ஜூலை 18, 2019 அன்றே கடுமையான மன உளைச்சல் மற்றும் உடல் நலக் குறைவால் காலமானார்.

அக்டோபர் 2023 திருவண்ணாமலை விவகாரம்: திருவண்ணாமலை வேங்கிக்கால் கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அமைந்துள்ளது பிரபல அடையார் ஆனந்த பவன் உணவகம். இந்த உணவகத்திற்கு நேற்று திருவண்ணாமலை தியாகி அண்ணாமலை நகரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் சச்சின் (25) மற்றும் அவரது நண்பர் வெங்கடேஷ் (26) ஆகியோர் இரவு உணவு உண்பதற்காக சென்று ஹோட்டலில் அமர்ந்து சாம்பார் இட்லி 2 ஆர்டர் செய்துள்ளனர். ஆர்டரின் பெயரில் ஓட்டலில் இருந்து கொண்டுவரப்பட்ட சாம்பார் இட்லியை சாப்பிட்டுக் கொண்டிருந்த பொழுது சாம்பாரில் இருந்து வெளியே வந்த புழுவைக் கண்டு இருவரும் அதிர்ச்சி அடைந்து ஹோட்டல் ஊழியர்களிடம் கேட்டபொழுது, நாங்களும் திருவண்ணாமலை சேர்ந்தவர்கள் தான் அமைதியாக சென்று விடுங்கள் என்று மிரட்டும் தோணியில் பேசியதுடன் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்[2].  இதுகுறித்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த கிராமிய காவல்துறையினர், உணவு ஆர்டர் செய்த சச்சின் மற்றும் வெங்கடேசனிடம் ஒரு மணி நேரத்திற்கு மேலாக சமாதானம் பேசி அனுப்பி வைத்துள்ளனர[3]. இந்த நிலையில் வெங்கடேசன் சாப்பிட்ட உணவை வாந்தி எடுத்து திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். பிரபல உணவகம் ஒன்றில் சாப்பிடச் சென்ற பொழுது உணவில் புழு இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு முறையான பதில்களை கூறாமல் மிரட்டும் தூணியில் உணவக ஊழியர்கள் பேசியது பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

ஜூன் 2022- திருவொற்றியூர் பிரச்சினை: சென்னை திருவொற்றியூர் பகுதியை சேர்ந்தவர் யுவராஜ். தனியார் நிறுவன ஊழியர். 10-06-2022 அன்று இரவு யுவராஜ் திருவொற்றியூரில் தனது வீட்டின் அருகே உள்ள A2B அடையார் ஆனந்த பவன் எனப்படும் ஓட்டலுக்கு சாப்பிட சென்றார்[4]. இதன் பிறகு யுவராஜ் நூடுல்ஸ் ஒன்று ஆர்டர் செய்துள்ளார்[5]. சிறிது நேரத்தில் ஓட்டல் ஊழியர்கள் நூடுல்ஸ் கொண்டு வந்து யுவராஜிடம் கொடுத்துள்ளனர். மிகவும் பசியுடன் இருந்த யுவராஜ் நூடுல்ஸ் ஆசை ஆசையாக சாப்பிட தொடங்கி உள்ளார்[6]. அப்போது யுவராஜின் ஆசைக்கும், பசிக்கும் வேட்டு வைக்கும் வகையில் அவர், சாப்பிட்டுக்கொண்டு இருந்த நூடுல்சில் இறந்த நிலையில் கரப்பான் பூச்சி ஒன்று கிடந்ததை கண்டு கடும் அதிர்ச்சி அடைந்தார்[7]. இதுகுறித்து ஓட்டல் ஊழியர்களை தொடர்புகொண்டு யுவராஜ் கேட்டபோது அவர்கள் சரியான முறையான பதில் அளிக்காமல் அலட்சியமாகவே பதில் கூறியதாக கூறப்படுகிறது. இதையடுத்து யுவராஜ் தனது செல்போனில் நூடுல்ஸ் மற்றும் கரப்பான் பூச்சியை வீடியோவாக எடுத்துக்கொண்டு ஓட்டலை விட்டு வெளியேறினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்து யுவராஜ் திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவத்தால் அடையார் ஆனந்தபவன் ஓட்டலில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மே 2022 கரப்பான் பூச்சி கிடந்த பிரச்சினை: சமீபகாலமாக அடையார் ஆனந்தபவன் ஓட்டல் உணவில் கரப்பான் பூச்சிகள் கிடப்பது தொடர்கதையாகி வருகிறது. கடந்த மாதம் 10ம் தேதி [மே 2022] கூட கடலூர் புதுநகரில் இயங்கி வரும் அடையார் ஆனந்தபவன் ஓட்டலில் மாநகராட்சி ஒப்பந்ததாரர் சென்றுள்ளார்[8]. பின்னர் நெய் பொங்கல் மற்றும் மெதுவடை பார்சல் வாங்கி வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு குடும்பத்தினருடன் சாப்பிட பொங்கல் பார்சலை பிரித்தபோது, பொங்கலில் கரப்பான் பூச்சி இறந்து கிடந்ததை கண்டு அனைவரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர்[9]. இதைத் தொடர்ந்து கடலூர் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அந்த ஓட்டலுக்கு நேரில் சென்று இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு ஆய்வு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

© வேதபிரகாஷ்

21-10-2023


[1] சென்னையில் இருபத்தைந்து கிளைகளும் அமெரிக்கா, கனடா,இலண்டன், பாரிசு, சிங்கப்பூர், மலேசியா, மத்திய கிழக்கு என உலகெங்கும் வெளிநாட்டு விற்பனை உரிமை கிளைகளும் கொண்டுள்ளது

[2] நியூஸ்.டி.எம், ஆர்டர் செய்தது சாம்பார் இட்லி..! வந்ததோ புழுவுடன் சாம்பார் இட்லி..!, By: Newstm Admin, Tue, 17 Oct 2023.

[3] https://newstm.in/tamilnadu/ordered-sambar-idli!-sambhar-idli-with-worm!/cid12488675.htm

[4]  சமயம், கரப்பான் பூச்சி நூடுல்ஸ்; மீண்டும் சிக்கிய பிரபல ஓட்டல்!, Josephraj V | Samayam Tamil | Updated: 11 Jun 2022, 9:21 pm

[5] https://tamil.samayam.com/latest-news/chennai-news/youth-shocked-to-see-cockroach-in-noodles-at-a2b-adyar-ananda-bhavan-hotel-in-chennai/articleshow/92143203.cms

[6] தமிழ்.ஹிந்துஸ்தான்.டைம்ஸ், Cockroach noodles : கரப்பான் பூச்சி நூடுல்ஸ்.. வாடிக்கையாளர் அதிர்ச்சி.!, Divya Sekar HT Tamil, Jun 11, 2022 09:52 AM IST.

[7] https://tamil.hindustantimes.com/tamilnadu/cockroach-in-noodles-bought-at-adyar-ananda-bhavan-hotel-131654921056369.html

[8] டாப்.தமிழ்.நியூஸ், அடையாறு ஆனந்த பவன் ஹோட்டலில் வாங்கிய நூடுல்ஸில் கரப்பான் பூச்சி, By AISHWARYA G Updated: Jun 10, 2022, 22:19 IST10:19:04 PM

[9] https://www.toptamilnews.com/thamizhagam/Cockroach-in-noodles-bought-at-Adyar-Ananda-Bhavan-Hotel/cid7801966.htm

தமிழக மடங்கள் அரசியலில் சிக்குகின்றனவா–தேர்தல் யுக்திகளில் பிரிவினைக்குத் துணை போகின்றனவா? (2)

ஓகஸ்ட் 26, 2023

தமிழக மடங்கள் அரசியலில் சிக்குகின்றனவா – தேர்தல் யுக்திகளில் பிரிவினைக்குத் துணை போகின்றனவா? (2)

ஸ்டாலினுக்கு அமைக்கப் பட்ட மேடை….

வரவேற்பு…….

ஸ்டாலின் மாணவர்…….

திமுகவும், கோவில்களும்: ஸ்டாலின் தொடர்ந்து பேசியது, “எல்லார்க்கும் எல்லாம் என்ற திராவிடவியல் கருத்தியலுக்குள் எல்லாமும் அடங்கி இருக்கிறது. அந்த வகையில் அனைத்துத் துறையையும் சம விகிதத்தில் நாங்கள் வளர்த்து வருகிறோம். அதிலும் குறிப்பாக இந்து சமய அறநிலையத் துறையை மிகமிக சிறப்பாக நிர்வகித்து வருகிறோம்.

* அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்

* ஆலயங்களில் அன்னைத் தமிழ்

* 3000 கோடி ரூபாய் மதிப்பிலான கோவில் நிலங்கள் மீட்பு

* அறநிலையத் துறை சார்பில் 10 கலைக் கல்லூரிகள்

* கோவில் திருப்பணிகளை ஒருங்கிணைக்க குழு

* இந்து சமய அறநிலையத் துறையின்கீழ் உள்ள பழமையான கோயில்களை பழமை மாறாமல் சீர்செய்து குடமுழுக்கு விழா நடத்த உத்தரவு

* திருக்கோயில் பணிகளை மேற்கொள்ள மண்டல, மாநில அளவிலான வல்லுநர் குழு

* தற்போது வரை 3,986 திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்வதற்காக வல்லுநர் குழுவால் அனுமதி

* 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான, வரலாற்றுச் சிறப்புமிக்க 112 திருக்கோயில்களை, பழமை மாறாமல் சீர்செய்ய 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு

* இந்த நிதியாண்டில் மட்டும் 5078 திருக்கோயில்களில் திருப்பணிகள் என இந்து சமய அறநிலையத் துறையைக் காத்து வரும் ஆட்சி தான் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஆட்சி! இதனை மக்கள் அறிவார்கள். அறிவது மட்டுமல்ல, அதை அறிந்துகொண்டு வாழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்.

* நீதிபதிகளே அறநிலையத் துறைக்கு நாம் ஆற்றும் பணிகளைப் பார்த்து, வியந்து பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

காலை உணவுத் திட்டம்: ஸ்டாலின் தொட்ர்ந்து பேசியது, “முதலமைச்சரின் செயல்பாடுகள் ஆட்சிக்கு மட்டுமல்ல, திருக்கோவில்களின் விடியலுக்கும் வழிகாட்டியாக உள்ளது” என்று பல்வேறு மடாதிபதிகள் வெளிப்படையாக பாராட்டி வருகிறார்கள். அந்த வகையில், ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணும் அரசாக நமது அரசு செயல்பட்டு வருகிறது. நாளை மாணவர்களின் பசியாற்றும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் தமிழ்நாடு முழுவதும் அது விரிவாக்கம் செய்யப்படவிருக்கிறது. அப்படி விரிவாக்கம் செய்யப்படக்கூடிய அந்தத் திட்டத்தை தலைவர் கலைஞர் அவர்கள் படித்த திருக்குவளை பள்ளியில் இருந்து அதை நான் தொடங்கி வைக்க இருக்கிறேன். ஏற்கெனவே ஏழை மாணவர்களுக்கு, காலை உணவு கொடுக்கப் படுகிறது, பிறகு, இது எப்படி புதிய திட்டம் என்று தெரியவில்லை.

திமுகவை ஆதரிக்கும் மடம்: ஸ்டாலின் தொட்ர்ந்து பேசியது, “வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் என்ற வள்ளலாரின் ஏக்கத்தை போக்கும் வகையிலான மக்களுக்கான திட்டம்தான் காலை உணவுத் திட்டம். அனைத்து நன்மைகளும் அனைவருக்கும் கிடைக்கக் கூடாது என்று ஏங்கும் ஒரு கூட்டம் தான் எங்களுக்கு எதிரான பரப்புரையில் ஈடுபடுகிறது. அதனைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. தருமபுரம் ஆதீனம் போன்ற நல்லிணக்கத்தையும் சகோதரத்துவத்தையும் விரும்பும் குருமகா சந்நிதானங்களும் தமிழ்நாட்டு மக்களும் எங்களை ஆதரிக்கிறார்கள் என்பதே எங்களுக்கு போதுமானது. நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும், பண்பாட்டுக்கும் ஆபத்து வரும் போதெல்லாம் ஆன்மீகப் பெரியவர்களும் அதற்கு எதிராக குரல் கொடுத்துள்ளார்கள். போராடி இருக்கிறார்கள்”.

தமிழ் மொழி, தமிழர்கள், தமிழ்நாடு காப்பாற்றப்பட வேண்டும்[1]: ஸ்டாலின் தொடர்ந்து பேசியது, “இந்தி எதிர்ப்புப் போராட்டம், தமிழ்காக்கும் போராட்டம், சமூக சீர்திருத்த இயக்கம் உள்ளிட்ட அனைத்திலும் இனம் மொழி நாட்டு உரிமை காக்க ஆன்மீக ஆளுமைகள் தனது பங்களிப்பை கடந்த 100 ஆண்டுகளாகச் செலுத்தியதைப் போல இன்றைய ஆன்மீக ஆளுமைகளும் பங்களிக்க வேண்டும்[2]. தமிழ் மொழி காப்பாற்றப்பட வேண்டும்[3]. தமிழர்கள் காப்பாற்றப்பட்ட வேண்டும்[4]. தமிழ்நாடு என்ற மாநிலம் காப்பாற்றப்பட வேண்டும் இந்த மூன்றும் காப்பாற்றப்பட்டால்தான்[5], இதுபோன்ற தமிழ் மடங்கள் எந்த நோக்கத்துக்காக 400 ஆண்டுகளுக்கு முன் தோற்றுவிக்கப்பட்டதோ அந்த நோக்கம் நிறைவேறும்[6]. இங்குள்ள மாணவர்களுக்கு நான் சொல்ல விரும்புவதெல்லாம், கல்வியில் மிக மிக உயரங்களை நீங்கள் அடைய வேண்டும்.” ஸ்டாலின் இவ்வாறு பேசியது[7] வேடிக்கையாக இருந்தது. ஆன்மீகவாதிகள் போராட வேண்டும், என்பது எப்படி[8]. இவ்வாறு தமிழ்-தமிழ் என்று பிரித்துப் பேசுவது, குறுகிய நோக்கில் சுருக்குவது முதலியன ஒற்றுமையை உண்டாக்குவதாக இல்லை. ஆன்மீகவாதிகள் இதற்கு ஏன் வரவேண்டும். இவ்வாறு அரசியல் தோரணையில் பேசி, இதில் மடங்களை இணைப்பது, என்ன சித்தாந்தம் என்று தெரியவில்லை.

அனைவரும் தமிழ்த்தாயின் பிள்ளைகள்:  ஸ்டாலின் தொடர்ந்து பேசியது, நேற்று சந்திரயான்-3 விண்கலம் நிலாவில் தரையிறங்கிருப்பதன் மூலமாக, நமது இந்திய நாட்டை உலகமே வியப்போடு திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. இந்தச் சாதனைக்கு பின்னால், சந்திரயான்-3 விண்கல பயணத்தின் திட்ட இயக்குநராக இருப்பவர், நமது தமிழ்நாட்டின் விழுப்புரத்தைச் சேர்ந்த வீரமுத்துவேல். அது மட்டுமல்ல, அரசுப் பள்ளி ஒன்றில் படித்து இன்று இந்தளவுக்கு உயர்ந்திருக்கிறார். அவர் போன்ற அறிவியலாளர்களை, கல்வியில் எடுத்துக்காட்டாக கொள்ள வேண்டும். பல்வேறு துறைகளில் நீங்கள் சாதனைகள் படைக்க வேண்டும். அனைவரும் தமிழ்த்தாயின் பிள்ளைகள் என்ற நோக்கத்தோடு செயல்படுவதற்கான உணர்வை அனைவரும் பெற வேண்டும் என்று நான் இந்த நேரத்தில் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன். உங்களின் கோரிக்கைகள் எதுவாக இருந்தாலும் எங்களிடம் தயங்காமல் சொல்லுங்கள். நிறைவேற்றித் தரத் தயாராக இருக்கிறோம்[9]. இது எனது அரசல்ல, நமது அரசு. என முதல்வர் கூறினார்[10].

ஆன்மீகவாதிகள் என்று கூறி, சில மடங்களை பிரிக்கலாம் என்று திட்டமிட்டுள்ளது போலிருக்கிறது. முன்னர், குன்றக்குடி மடம், மடாதிபதி அப்படித்தான் இரட்டை வேடம் போட்டு ஏமாற்றினார். பெரியாருக்கு உற்ற நண்பராக இருந்தும், பிள்ளையார் உடைப்பு, முருகன் பழிப்பு, சிவன் – பார்வதி தூஷிப்பு முதலியவற்றைத் தடுக்கவில்லை, அவ்வாறான முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. இப்பொழுது, இன்னொரு மடம் தயாராகி வருகிறது போலும். ஆன்மீகம் போர்வியில், இதே உபன்யாசங்களை, மசூதிகள்-சர்ச்சுகள் மற்றும் அவர்களது பள்ளிகளில் இதே மாதிரி செய்வார்களா? ஓட்டு போட பேரம் வேண்டுமானாலும் பேசுவார்கள். ஆனால், இந்துக்களைத் தான், இவ்வாறு ஏமாற்றுவார்கள். கன்னடம், கன்னடிகர், கர்நாடக நாடு,தெலுங்கு, தெலுங்கர், ஆந்திரதேசம்; மலையாளம், மலையாளத்தவர், கேரளம், மராத்தி, மராத்தியர், மஹாராஷ்ட்ரம்….என்று எல்லோரும் வரிசையாக வைத்து சொல்லலாம்! திராவிட மாடலில், திராவிட ஸ்டாக்கில், தமிழ் மடம் போல, தெலுங்கு மடம், கன்னட மடம், மலையாள மடம், மராத்தி மடம் என்றெல்லாம் கூட வரலாம்!

© வேதபிரகாஷ்

26-08-2023


[1] தமிழ்.முரசு, தமிழ் மொழியை காக்கும் போராட்டங்களில் ஆன்மிகவாதிகள் பங்களிக்க வேண்டும், 25 Aug 2023 18:12 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 25 Aug 2023 21:18,  

[2] https://www.tamilmurasu.com.sg/tamilnadu/story20230825-135746

[3] தமிழ்.இந்து, தமிழ் மொழியை காக்கும் போராட்டங்களில் ஆன்மிகவாதிகள் பங்களிக்க வேண்டும்முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள், செய்திப்பிரிவு, Published : 25 Aug 2023 08:55 AM; Last Updated : 25 Aug 2023 08:55 AM.

[4] https://www.hindutamil.in/news/tamilnadu/1107555-spiritualists-should-contribute-to-struggles-to-protect-tamil-language-chief-minister-stalin-s-appeal.html

[5] தமிழ்.இந்துஸ்தான்.டைம்ஸ், MK Stalin: ’மொழி, இன போராட்டங்களுக்கு ஆன்மீக ஆளுமைகள் பங்களிக்க வேண்டும்தருமபுர ஆதீன நிகழ்ச்சியில் முதல்வர் பேச்சு, Kathiravan V • HT Tamil, Aug 24, 2023 08:58 PM IST

[6] https://tamil.hindustantimes.com/tamilnadu/cm-m-k-stalins-speech-at-dharmapuram-atheena-program-131692890574088.html

[7] மாலைமலர், நாட்டுக்கும், மக்களுக்கும் பிரச்சினை வரும்போது ஆன்மீகவாதிகளும் போராடி உள்ளனர்முதல்வர் ஸ்டாலின், By மாலை மலர், 24 ஆகஸ்ட் 2023 10:29 PM; (Updated: 24 ஆகஸ்ட் 2023 10:42 PM)

[8] https://www.maalaimalar.com/news/state/mk-stalin-says-when-there-is-a-problem-for-country-and-people-the-spiritualists-are-also-struggling-654020

[9] தமிழ்.ஒன்.இந்தியா, குருமகா சந்நிதானங்களும், மக்களும் எங்களுக்குதான் ஆதரவாக உள்ளார்கள்.. ஸ்டாலின் ஒரே போடு!, By Arsath Kan, Published: Friday, August 25, 2023, 18:14 [IST].

[10] https://tamil.oneindia.com/news/tamilnadu/stalin-says-we-have-the-support-of-gurumaha-sannithanam-532919.html

தமிழக மடங்கள் அரசியலில் சிக்குகின்றனவா–தேர்தல் யுக்திகளில் பிரிவினைக்குத் துணை போகின்றனவா? (1)

ஓகஸ்ட் 26, 2023

தமிழக மடங்கள் அரசியலில் சிக்குகின்றனவா தேர்தல் யுக்திகளில் பிரிவினைக்கு துணை போகின்றனவா? (1)

ஆதீனம்ஆன்மீக ஆட்சிதான் நடந்து கொண்டிருக்கிறது என்று நான் தொடர்ந்து கூறி வருகிறேன்: பவளவிழா நிறைவு நிகழ்ச்சி முப்பெரும் விழாவாக நேற்று (ஆகஸ்ட் 24) கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். கல்லூரிக்கு வந்த முதலமைச்சருக்கு பூர்ண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது[1]. ஆதீனம் பேசும் பொழுது, “தருமை ஆதீன கல்லூரியில் ஒவ்வொரு 25 ஆண்டுகளுக்கும் திமுக ஆட்சி அமைந்திருக்கிறது[2]…… அடுத்த நூற்றாண்டு விழாவிற்கும் இவர்கள்தான் ஆட்சியில் இருக்க வேண்டும். ஆன்மீக ஆட்சிதான் நடந்து கொண்டிருக்கிறது என்று நான் தொடர்ந்து கூறி வருகிறேன். ……,” என்றெல்லாம் பேசியது, ஏதோ முன்னரே பேச்சைத் தயாரித்து வைத்து, பேசியது போலத்தான் இருந்தது. அரசியல்-மதம் சேரக் கூடாது, சேர்க்கக் கூடாது என்றெல்லாம் பேசினாலும், இவ்வாறு நாத்திகம்-ஆத்திகள் உறவுகள் திராவிடத்துவ சித்தாந்திகளிடம் தான் பார்க்க முடியும். பிள்ளையார் உடைத்தால் அமைதியாக இருப்பர், சதுர்த்தியும் கொண்டாடுவர். சில மடாதிபதிகளை மோடியை-பிஜேபியை ஆதரிப்பதால்,திமுகவும், சில மடங்களை வளைத்துக் போடுகிறது போலும்.

16-ஆம் நூற்றாண்டில் குருஞான சம்பந்தரால் தொடங்கப்பட்ட மிக மிகப் பழமையான மடம்: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 24.8.2023 அன்று மயிலாடுதுறை மாவட்டம், தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியின் 75-ஆம் ஆண்டு பவள விழா நிறைவை முன்னிட்டு நடைபெற்ற முப்பெரும் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றினார்[3]. முதல்வர் ஆற்றிய உரையில்: “தருமபுரம் ஆதீனத்தின் முப்பெரும் விழாவில் பங்கேற்று, நல்ல பல நிகழ்ச்சிகளை மகிழ்ச்சியோடு அரங்கேற்றும் வாய்ப்பை இந்த மேடையில் நான் பெற்றிருக்கிறேன். 16-ஆம் நூற்றாண்டில் குருஞான சம்பந்தரால் தொடங்கப்பட்ட மிக மிகப் பழமையான மடம், இந்த தருமை மடம். திருவில்லிப்புத்தூரில் பிறந்து, மதுரையில் ஞானம் பெற்று, திருவாரூருக்கு வந்து சேர்ந்த குருஞான சம்பந்தர் உருவாக்கியது இந்த மடம்[4]. அன்று முதல் இன்று வரை ஆன்மீகப் பணிகளிலும், தமிழ்ப் பணி மருத்துவச் சேவை கல்விப் பணி அறப்பணி ஆகிய சமூகபணிகளிலும் தருமை ஈடுபட்டு வருகிறது[5]. இந்த தொண்டுள்ளம் மடம் தொடர்ந்து தொய்வின்றித் தொடர வேண்டும்[6]. 1946-ஆம் ஆண்டு தருமை ஆதீனத்தின் 25-ஆவது குருமகா சந்நிதானம் தொடங்கிய இந்தக் கல்லூரியின் வெள்ளிவிழாவில் 1972-ஆம் ஆண்டு[7], முதலமைச்சராக இருந்த முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர், பொன் விழா நிகழ்ச்சியில், கல்வி அமைச்சராக இருந்த இனமானப் பேராசிரியர் கலந்துகொண்டு சிறப்பித்திருக்கிறார்கள்[8].” இதே சம்பந்தரை அவதூறு பேசி, திக குறும்புத்தகம் வெளியிட்டுள்ளது. பிறகு, ஆதீனம் இப்படி இதையெல்லாம் ஏற்றுக் கொள்கிறார் என்பது புதிராக உள்ளது.

திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய பவள விழா மற்றும் தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியின் 75-ஆம் ஆண்டு பவள விழா: ஸ்டாலின் தொடர்ந்து பேசியது[9], “இப்போது பவள விழா கண்ட இந்த கலையரங்கத்தில் கலந்துகொண்டு உரையாற்றுவதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்[10]. இன்றைக்கு இங்கு பவள விழா. இந்த முப்பெரும் விழா கொண்டாடுகிற நேரத்தில் பவளவிழாவையும் இணைத்து நீங்கள் கொண்டாடிக் கொண்டிருக்கிறீர்கள். இதில் ஒரு ஒற்றுமை என்னவென்று கேட்டால், வரக்கூடிய செப்டம்பர் மாதம் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய பவள விழாவை நாங்கள் கொண்டாட இருக்கிறோம்[11]. அந்த பவள விழாவை கொண்டாடுவதற்கு முன்பே உங்கள் பவள விழாவில் கலந்து கொள்ளக்கூடிய வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது. தலைவர் கலைஞர் திருவாரூர் பள்ளியில் தமிழாசிரியராக இருந்த மகா வித்துவான் .தண்டபாணி தேசிகர் பின்னாட்களில் இந்தக் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்தார் என்ற சிறப்பும் இந்தக் கல்லூரிக்கு உண்டு என்பதை இங்கே நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.” இதனால், நாத்திகமும், ஆத்திகமும் ஒன்றாகி விடமுடியுமா? இந்துவிரோதம் மறைந்து விடுமா? இனம் இனத்தோடு சேரும் என்று தொடர்ச்சியாக கஞ்சி குடித்து, கேக் சாப்பிட்டு தூஷணம் புரிந்து வருவதை எல்லோரும் அறிவர். அதனால், உண்மையும் மறைக்கமுடியாது.

தருமை ஆதினத்துக்கும் குடும்ப தொடர்பு உண்டு[12]: ஸ்டாலின் தொட்ர்ந்து பேசியது, “தருமை ஆதீன மடத்துடன் தமிழ் நட்பு மட்டுமல்ல, எங்களுக்கு குடும்ப நட்பும் உண்டு[13]. தருமை ஆதீனத்துக்கு கட்டுப்பட்ட 27 கோவில்களில் ஒன்றுதான் தலைவர் கலைஞரின் திருக்குவளை ஆகும்[14]. அதனால்தான் எங்களுக்கும் இந்த தருமை ஆதினத்துக்கும் குடும்ப தொடர்பு உண்டு என்று நான் கொஞ்சம் கம்பீரமாக, உரிமையோடு சொன்னேன்[15]. 1972-ஆம் ஆண்டு இங்கு நடைபெற்ற வெள்ளிவிழாவில் உரையாற்றிய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் இன்னொரு தகவலையும் சொன்னார்கள்[16]. அது என்னவென்று கேட்டால், நவகிரகங்களையும் ஒன்று சேர்த்து குடமுழுக்கு நடத்திய நேரத்தில் கொடிமரத்தைச் சுற்றுகிற பெண்கள் பாட்டுப் பாடுவது வழக்கமாம். அதுவரையில், அப்படி பாட்டு எழுதப்படாத சூழலில் அருகில் இருந்த எனது தாத்தா, தலைவர் கலைஞருடைய தந்தை, என் தாத்தா, முத்துவேலரிடம் சொல்லி ஒரு பாட்டு எழுதக் கேட்டு இருக்கிறார்கள். அப்போது அந்த இடத்திலேயே முத்துவேலரும் ஒரு பாடலை எழுதிக் கொடுத்திருக்கிறார்கள். உடனடியாக தட்டி சுற்றும் பெண்கள் அதனை பாடி இருக்கிறார்கள். அதற்கு பிறகுதான் ஆலயத்துக்குள் நவகிரகங்களைக் கொண்டு சென்றார்களாம். இது கலைஞர் சிறுபிள்ளையாக பார்த்த காட்சி. இதனை தலைவர் கலைஞரே தருமை கல்லூரி வெள்ளிவிழாவில் உரையாற்றும் போது சொல்லி இருக்கிறார். திருக்குவளை ஆலயத்திலும் முத்துவேலர் பணியாற்றி இருக்கிறார்கள். நம்முடைய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு என்று பெயர் பெற்றிருந்தாலும், நாங்கள் எல்லாம் அவரை எப்போதும் செயல்பாபு, செயல்பாபு என்றுதான் பெருமையோடு அழைப்பதுண்டு. அந்த பெருமைக்குரிய சேகர்பாபு மூலமாக நான் நம்முடைய 27-ஆவது குருமகா சந்நிதானம் அவர்களை அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பை பெறுகிறேன். பல்வேறு நிகழ்ச்சிகளில் நாங்கள் சந்தித்து இருக்கிறோம்”. இதனால் நவக்கிரகங்களுக்கு என்னவாயிற்று என்று தெரியவில்லை. ஒருவேளை, பாடிய பிறகு, கோவிலை விட்டு ஓடிவிட்டன போலும்…

© வேதபிரகாஷ்

26-08-2023


[1] இ.டிவி.பாரத், தமிழ்நாட்டில் ஆன்மீக ஆட்சிதான் நடக்கிறதுதருமை ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம், Published: 23 hours ago

[2] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/state/nagapattinam/cm-mk-stalin-participate-dharmapuram-adhinam-mupperum-vizha/tamil-nadu20230825075945839839132

[3] தினகரன், ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்ற அடிப்படையில் திமுக அரசு செயல்பட்டு வருகிறது: தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரி விழாவில் முதலமைச்சர் மு..ஸ்டாலின் உரை, August 24, 2023, 9:56 pm.

[4] https://www.dinakaran.com/dmk-govt-dharumapuram-atheenam-cm-mkstalin-speech/

[5] தினத்தந்தி, தமிழ் மொழி, தமிழர்கள், தமிழ்நாடு என்ற மாநிலம் காப்பாற்றப்பட வேண்டும்” – முதல்அமைச்சர் பேச்சு, Update: 2023-08-24 14:59 GMT

[6] https://www.dailythanthi.com/amp/News/State/tamil-language-tamils-tamil-nadu-state-must-be-saved-prime-ministers-speech-1037408

[7] நக்கீரன், இவர்கள் எங்களை ஆதரிக்கிறார்கள் என்பதே போதுமானது” – முதல்வர் மு.. ஸ்டாலின் பேச்சு, நக்கீரன் செய்திப்பிரிவு, Published on 24/08/2023 (19:43) | Edited on 24/08/2023 (19:55)

[8] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/it-enough-dharmapura-adheena-kurumaka-sannithans-support-us-principal

[9] சமயம், தருமை ஆதீனத்திற்கும், எங்களுக்கும் குடும்ப நட்பு உள்ளதுமயிலாடுதுறையில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு, Curated By ரம்யா. S | Samayam Tamil | Updated: 24 Aug 2023, 9:32 pm

[10] https://tamil.samayam.com/latest-news/mayiladuthurai/chief-minister-mk-stalin-attend-75th-anniversary-of-dharmapuram-adheenam-arts-college-at-mayiladuthurai/articleshow/103032279.cms

[11]  நியூஸ்.7.தமிழ், இது எனது அரசல்ல, நமது அரசு : தருமபுரம் ஆதீனம் கல்லூரி விழாவில் முதலமைச்சர் மு..ஸ்டாலின் பேச்சு!, by Web EditorAugust 24, 2023

[12] https://news7tamil.live/this-is-not-my-government-our-government-stalin.html

[13] தினமலர், தருமை ஆதீன நட்பு எங்களுக்கு குடும்ப நட்பும் உண்டுமுதல்வர் ஸ்டாலின்., மாற்றம் செய்த நாள்: ஆக 24,2023 21:27;

[14] https://m.dinamalar.com/detail.php?id=3412608

[15] மின்னம்பலம், தருமை ஆதீனமடத்துடன் குடும்ப நட்பு: முதல்வர் ஸ்டாலின், 2r Aug 2023 08:55 PM IST.

[16] https://minnambalam.com/political-news/family-friendship-with-dharumapuram-adheenam-mk-stalin-speech/

திக சேலம் மாநாட்டிற்காக வசூல் வேட்டை- வியாபாரிகள் தர்ணா!

ஏப்ரல் 28, 2023

திக சேலம் மாநாட்டிற்காக வசூல் வேட்டை- வியாபாரிகள் தர்ணா!

திராவிட, திராவிடத்துவ மற்றும் அத்தகைய போர்வையில் பேனர்களில் உலா வரும் குழுக்கள், கோஷ்டிகள், இயக்கத்தினர் கடந்த 100 ஆண்டுகளாக செய்து வரும் அட்டகாசங்கள், கலாடாக்கள், சட்டமீறல்கள், ஏன் குற்றங்கள் கூட முறையாக ஆவணப் படுத்தப் படாமல் இருக்கின்றன. இப்பொழுது கூட, தினத்தந்தி போட்ட வீடியோவை ”கிளிக்கினால்” காணவில்லை என்று வருகிறது[1]. மற்ற ஊடக-இணைதளங்களில் சன்பந்ஹப் பட்ட வீடியோ இருக்கும் பொழுது, தினத்தந்தி ஏன் நீக்கியது என்று தெரியவில்லை[2]. இதை என்னுடைய பிளாக்குகளில் அடிக்கடி எடுத்துக் காட்டி வருகிறேன். இப்பொழுது, மறுபடியும் இன்னொரு சம்பவம் வெளிப்பட்டு  பதிவாகியுள்ளது. போலீஸாருக்கும் தெரிந்துள்ளது. இதில், எவ்வாறு இனம், இனவெறி, இனவெறித்துவம், முதலியவை அப்பட்டமாக வெளிப்படுகின்றன என்பதனைக் கவனிக்கலாம். மற்ற நாடுகளிலிருந்து இந்தியர்கள் கலவரம், சண்டை போன்ற காரணங்களால் திரும்பி வரும் நிலைகளில் கூட, “தமிழர்” திரும்பி வந்தனர் என்று தான் செய்தி போடுகின்றனர். ஏன் மற்ற மாநிலத்தவர் வரவில்லையா என்ன, இருப்பினும் அத்தகைய மொழித்துவ-வெறித்துவம் தனித்துவமாக்கிக் காட்டப் படுகிறது.  இனி, இந்த திராவிட விடுதலைக் கழகத்தினரின் அடாவடித் தனத்தைக் காண்போம்.

 சேலத்தில் நடைபெறும் மாநாட்டுக்காக, திராவிட விடுதலைக் கழகத்தினர், வியாபாரிகளை மிரட்டி 500 ரூபாய் கட்டாய வசூலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது[3]. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் மக்களின் வசவுகளை பெற்று வருகிறது[4]. திராவிடர் கழகத்தில் இருந்து பிரிந்த கொளத்தூர் மணி, திராவிடர் விடுதலைக் கழகம் என்கிற புதிய அமைப்பைத் தொடங்கினார்[5]. இந்த அமைப்பின் தலைவராக கொளத்தூர் மணியும், பொதுச்செயலாளராக விடுதலை ராஜேந்திரனும் இருந்து வருகிறார்கள்[6]. இந்த அமைப்பினர் தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர்[7]. இந்த சூழலில், இந்த அமைப்பின் மாநாடு சேலத்தில் ஏப்.29 மற்றும் 30 தேதிகளில நடைபெற உள்ளது[8]. இம்மாநாட்டிற்காக அக்கட்சியினர் சேலம் மாவட்டம் முழுவதும் நிதி வசூலில் ஈடுபட்டு வருகின்றனர்[9]. அந்த வகையில், சேலம் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள அருணாச்சல ஆசாரி தெரு பகுதியிலும் வசூலில் ஈடுபட்டிருக்கிறார்கள்[10]. அப்போது, வட மாநிலத்தவர்களின் மொத்த வியாபார கடைகளுக்குச் சென்று, கடைக்காரர்களிடம் 500 ரூபாய் தர வேண்டும் என்று கட்டாயப்படுத்தி இருக்கிறார்கள். வேறு வழியின்றி கடைக்காரர்களும் கொடுத்திருக்கிறார்கள்.

அதேபோல, மகாவீரர் என்பவர் நடத்தி வரும் துணிக்கடைக்கும் சென்று பணம் கேட்டிருக்கிறார்கள். அதற்கு, வியாபாரம் சரியில்லை என்று சொல்லி 100 ரூபாய் கொடுத்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த திராவிடர் விடுதலைக் கழகத்தினர், தமிழர்கள் மூலம் வியாபாரம் நடத்திக் கொண்டு, எங்களது மாநாட்டுக்கு நிதி தர மறுப்பதா என்று கூறி, வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, அவரை தாக்கவும் முயற்சி செய்திருக்கிறார்கள். கெட்ட வார்த்தைகளில் திட்டி மரியாதை இல்லாமல் கூட பேசியது, வீடியோவில் பதிவாகியுள்ளது. உடனே, மகாவீரர் தொலைபேசி மூலம் போலீஸாரை தொடர்பு கொண்டு நடந்தவற்றை கூறியிருக்கிறார். அனால், போலீச் வரவில்லை என்று தெரிகிறது. மேலும், திராவிட விடுதலைக் கழகத்தினரின் அடாவடியை கண்டித்து சாலையில் அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் அங்கு வந்த சேலம் நகர போலீஸார் அவரை சமாதானப்படுத்தினர். இதனிடையே, அடாவடி வசூலில் ஈடுபட்ட திராவிட விடுதலைக் கழகத்தை சேர்ந்தவர்கள் மீது சேலம் மில் ஜவுளி மொத்த வியாபாரிகள் சங்கம் சார்பில் சேலம் நகர போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, போலீஸார் வழக்கு பதிவு செய்து பணம் கேட்டு மிரட்டிய நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், தி.மு.க.வுடன் கூட்டணியில் இருக்கும் தைரியத்தில்தான் இப்படிச் செய்கிறார்கள் என்று மக்கள் வசைபாடி வருகிறார்கள்.

சேலத்தில் ஏப். 29, 30 தேதிகளில் கழகம் நடத்தவிருக்கும் சனாதன சக்திகளே, தமிழகத்தில் நீங்கள் காலூன்ற முடியாது என்று எச்சரிக்கும் இளைஞர்கள் மாநாட்டுக்கு மக்களிடையே பேராதரவு கிடைத்து வருகிறது. ‘கருப்பு – சிவப்பு – நீலம்’ என்று பெரியார் – அம்பேத்கர் – மார்க்சிஸ்ட் சிந்தனையாளர்கள் இணைந்து சனாதன எதிர்ப்பில் ஒன்றுபட்டு நிற்கிறோம் என்பதை எதிரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் மாநாடாக திராவிடர் விடுதலைக் கழகம் ஒழுங்கு செய்துள்ளது. மாநாட்டில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. இராசா, விடுதலை சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு, தீக்கதிர் ஆசிரியர் மதுக்கூர் இராமலிங்கம், வைகுண்டர் வழி வந்த பால பிராஜாபதி அடிகள் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள், சிந்தனையாளர்கள் பங்கேற்கிறார்கள்.

© வேதபிரகாஷ்

28-4-2023


[1] தந்திடிவி, திக மாநாட்டுக்கு கட்டாய நிதி வசூல்… “நீங்க என்ன ரவுடிசம் பண்றிங்களா..” – துணிக்கடை உரிமையாளர் நடுரோட்டில் கதறல், Uploaded: Apr 28, 2023

[2] https://www.thanthitv.com/latest-news/compulsory-collection-of-funds-what-kind-of-rowdism-are-you-doing-a-clothing-store-owner-yelling-in-the-middle-of-the-street-182847

[3] பாலிமர் செய்தி, வட மாநிலத்தவர் கடையில் மாநாட்டுக்கு கட்டாய வசூல்..கத்திக் கூச்சலிட்ட வியாபாரி….! . திராவிடர் விடுதலை கழகத்தினர் திகைப்பு…!, April 28, 2023 08:02:47 AM.

[4] https://www.polimernews.com/dnews/201681/%E0%AE%B5%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D..%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF..!%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81…!

[5] மீடியான்.காம், வியாபாரிகளை மிரட்டி ரூ.500 கட்டாய வசூல்தி.மு.. தைரியத்தால் திராவிட விடுதலை கழகத்தினர் அடாவடி!, Karthikeyan Mediyaan News, 28-04-2023.

மாலைமலர், பணம் கொடுக்க மறுத்த கடைக்காரரை தாக்க முயன்ற கட்சி நிர்வாகிகள், By மாலை மலர்28 ஏப்ரல் 2023 12:34 PM.

https://www.maalaimalar.com/news/district/the-party-officials-tried-to-attack-the-shopkeeper-who-refused-to-pay-602312

[6] https://mediyaan.com/salem-dravida-viduthalai-kazhakam-threatening-traders-forcing-collect-money/

[7] மாலைமலர், பணம் கொடுக்க மறுத்த கடைக்காரரை தாக்க முயன்ற கட்சி நிர்வாகிகள், By மாலை மலர்28 ஏப்ரல் 2023 12:34 PM.

[8] https://www.maalaimalar.com/news/district/the-party-officials-tried-to-attack-the-shopkeeper-who-refused-to-pay-602312

[9] தினமலர், சேலத்தில் கட்சி மாநாட்டிற்காக திராவிடர் விடுதலை கழகம் வியாபாரிகளிடம் அடாவடி வசூல், Updated : ஏப் 28, 2023  20:51 |  Added : ஏப் 28, 2023  20:50

[10] https://www.dinamalar.com/news_detail.asp?id=3306539

திக-திமுக பேச்சாளர்கள், தலைவர்கள் மற்றும் சித்தாந்தவாதிகள், 1950களிலிருந்து பேசி வரும் கெட்ட, ஆபாச மற்றும் மோசமான வார்த்தைகள், வசவுகள் மற்றும் திட்டுகள் (2)

ஜனவரி 14, 2023

திகதிமுக பேச்சாளர்கள், தலைவர்கள் மற்றும் சித்தாந்தவாதிகள், 1950களிலிருந்து பேசி வரும் கெட்ட, ஆபாச மற்றும் மோசமான வார்த்தைகள், வசவுகள் மற்றும்  திட்டுகள் (2)

அண்ணாமலையைக் கடுமையாக வசைப் பாடியது: மேலும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மிக மோசமாக பேசியுள்ளார். போலீஸ் வேலையை பாதியிலேயே விட்டுவிட்டு ஓடி வந்த அண்ணாமலை திமுகவை பற்றி பேசுகிறார். பிரான்சில் வாங்கிய வாட்சை இந்தியாவில் கட்டிக்கொண்டு தேச பக்தியை பற்றி பேசுகிறார். அவர் தாய் அவரை எப்படி பெற்றெடுத்தார் என்று மிக மோசமாக விமர்சித்துள்ளார். மேலும், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியை உருவ கேலி செய்து பேசியது அதிமுகவினரை கொந்தளிக்க செய்துள்ளது. கவர்னரை அவதூறாகவும், கொலை மிரட்டல் விடுக்கும் வகையிலும் கடந்த சில நாட்களாக பேசி வரும் தி.மு.க,வைச் சேர்ந்த ஆர்.எஸ்.பாரதி, சிவாஜி கிருஷ்ணமூர்த்தி ஆகியோரை கைது செய்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ஜ., செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கோரிக்கை விடுத்துள்ளார்[1]. இது குறித்து அவர் கூறியதாவது[2]: கவர்னர் குறித்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசிய அந்த தரம் கெட்ட வார்த்தைகள் தி மு கவின் ஒப்புதலோடே பேசப்பட்டிருக்கிறது என்பதை உறுதி செய்யும்.

புகார் கொடுத்தும் போலீஸார் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது: “தொடர்ந்து பா.., தலைவர்களை தரக்குறைவாக பேசியது குறித்து புகார் அளித்தும் தமிழக காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை. கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் கூட பா.., தலைவர் அண்ணாமலை குறித்து சிவாஜி கிருஷணமூர்த்தி கூறிய கருத்துக்களை கண்டித்து நாம் புகாரளித்திருந்தும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்காது, கண்டும் காணாமல் இருப்பது தி மு கவின் முழு ஒப்புதலோடு பேச வைக்கப்படுகிறார் என்பதையே உறுதி செய்கிறது. காஷ்மீருக்கு கவர்னரை போகச்சொல்லி, தீவிரவாதிகளை இங்கிருந்து காஷ்மீருக்கு அனுப்பி வைத்து கவர்னரை கொலை செய்வோம் என்றும், சட்டசபையில் கொலை செய்தாலும் வழக்கு இல்லை என்று கூறியதும், அடித்தால் வீடு திரும்ப முடியாது என்று திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குறிப்பிட்டதையும் பார்க்கும் போது, திட்டமிட்ட ரீதியில் தமிழக ஆளுநர் ரவி மீது வன்முறையை கட்டவிழ்த்து விட தி.மு.., சதி செய்கிறதோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது”.

ஸ்டாலின் சொல்வதும், திமுகவினர் செய்வதும்; “திமுக அரசின் தோல்விகளை மறைப்பதற்கு, சட்ட ஒழுங்கு சீர்கெட்டுக் கொண்டிருக்கிறது என்பதை மூடி மறைப்பதற்கு, பொருளாதார ரீதியாக தமிழகத்தை மேம்படுத்த முடியவில்லை என்பதை மறைப்பதற்கு, மத்திய அரசின் பல்வறு நலத்திட்டங்களில் கொண்டு வரப்பட்டுள்ள சீர்திருத்தங்களால் அத்திட்டங்களில் ஊழல்கள் செய்ய முடிவதில்லை என்ற ஆத்திரத்தில்,மாநில அரசு நிர்வாகத்தை திறம்பட செலுத்த முடியாத காரணத்தினால், மொழி ரீதியாக, சாதி ரீதியாக, மத ரீதியாக மக்களை தூண்டிவிட்டு திசை மாற்ற முயற்சிக்கிறது தி.மு.. கவர்னரை காஷ்மீருக்கு செல் என்றும், அங்குநாங்கள்தீவிரவாதிகளை அனுப்பி உன்னை கொன்று விடுவோம் என்று கூறியிருப்பது அதிர்ச்சியளிப்பதோடு, தி மு கவிற்கு தீவிரவாதிகளின் தொடர்பு குறித்த சந்தேகங்களை எழுப்புகிறது. தமிழக காவல் துறை உடனடியாக, இந்த இரு நபர்களையும் கைது செய்து விசாரணை செய்ய வேண்டும். இரு நாட்களுக்கு முன்னர் முதல்வர் ஸ்டாலின் , கவர்னர் குறித்து திமுகவினர் விமர்சிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தியதாக செய்திகள் வெளியான நிலையில், இரு நாட்களாக தான் அதிகளவில் ஆளுநரை விமர்சிக்கின்றனர்”.

சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஆர்.எஸ். பாரதி ஆகியோர் தி மு தலைமையின் ஒப்புதலோடு, ஆசியோடு தான் ஆளுநரை தரக்குறைவாக, கொலை மிரட்டல் தொனியில் பேசியுள்ளனர்: “சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஆர்.எஸ். பாரதி ஆகியோர் தி மு தலைமையின் ஒப்புதலோடு, ஆசியோடு தான் ஆளுநரை தரக்குறைவாக, கொலை மிரட்டல் தொனியில் பேசியுள்ளனர் என்பது தெளிவாகிறது. தமிழக காவல் துறை தலைவர் ,சென்னை மாநகர ஆணையர் உடனடியாக இந்த நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டியது அவசியம் மட்டுமல்ல அவசரமும் கூட. உண்மையில், முதல்வர் ஸ்டாலினுக்கு இந்த பேச்சுகளில் உடன்பாடு இல்லையெனில், சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஆர் எஸ் பாரதி இருவரையும் கைது செய்ய உத்தரவிடுவதோடு, தி மு பொது கூட்டங்களில் அமைச்சர்களின் முன்னிலையில் இந்த கருத்துக்களை கூறியிருப்பதற்கு பொறுப்பேற்று தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இந்த இருவரையும் தி மு கவை விட்டு நீக்க வேண்டும். இல்லையேல், ஆளுநர் குறித்த அவதூறுகள் மற்றும் கொலை மிரட்டல்களுக்கு முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்க வேண்டும்,”. இவ்வாறு அவர் கூறினார்.

திகதிமுகவினரின் கெட்ட வார்த்தை பாரம்பரியம்:

  1. தி.மு.க..வின் துணை பொதுச் செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா, தேர்தல் பரப்புரையின் போது, கள்ள உறவில் பிறந்த குறைப் பிரசவம் தான் எடப்பாடி பழனிசாமி என தமிழக முதல்வரின் பிறப்பைப் பற்றி அருவருப்பான வகையில் பேசியுள்ளார்.
  2. தி.மு.க.வின் தலைவர் அண்ணாதுரையே இம்மாதிரியான பேச்சுகளுக்கு அடித்தளம் அமைத்தவர். காந்தியார் மீரா பாயுடனும், சுசிலாக்களுடனும், சத்காரியாதிகளிலே ஈடுபட்டுச் சரோஜினிகளின் பராமரிப்பில் பிர்லா மாளிகையில் இருந்தார் என எழுதியவர்.
  3. 1962 அக்டோபர் மாதம் 23ந் தேதி பாரத பிரதமர் நேரு இலங்கை விஜயத்தின் போது, சிறிமாவோ பண்டாரநாயக்காவை சந்தித்து, ஒரு மணி நேரம் விவாதித்த செய்தியை, அண்ணாதுரை, தம்பி, நேருவோ மனைவியை இழந்தவர், சிறிமாவோ கணவனை இழந்தவர், இருவரும் ஒரு மணி நேரம் தனிமையில் சந்தித்தார்கள் என்றால் என்ன நடந்திருக்கும் என சிந்தித்து பார் தம்பி என கட்டுரை எழுதியவர்.
  4. 1962-ல் சேலத்தில் நடந்த தி.க. மாநாட்டில் மாற்றான் மனைவி மற்றொருவனை விரும்பினால் அதை குற்றமாக கருத கூடாது என தீர்மானம் இயற்றிய ஈவெ. ராமசாமி நாயக்கர்.
  5. சேலத்தில் நடந்த தி.முக. பொதுக் கூட்டத்தில், அண்ணாதுரை, சினிமா நடிகையின் கற்பு பற்றி கீழ்தரமாக விமர்சனம் செய்தவர். அவள் ஒன்றும் படிதாண்டா பத்தினி அல்ல. நான் முற்றும் துறந்த முனிவன் அல்ல என கூறியது மட்டுமில்லாமல், அவள் தபால்நிலையத்தில் உள்ள மைக்கூடு, அதை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம், நானும் பயன்படுத்தினேன் என்றார்.
  6. சட்டசபையில் திராவிட நாடு எங்கே இருக்கிறது என கேள்வி எழுப்பிய காங்கிரஸ் உறுப்பினர் திருமதி அனந்தநாயகிக்கு பெண் உறுப்பினரிடம் பாவாடை நாடா பற்றி விரசமாகச் சொன்னவர் கருணாநிதி.
  7. மதுரையில் இந்திரா காந்தி வருகை தந்த போது, கருப்பு கொடி ஆர்பாட்டம் என்ற பெயரில் தாக்குதல்களை நடத்தியவர்கள் தி.முக.வினர்.
  8. தாக்குதலின் போது இந்திரா காந்தியின் நெற்றியில் கல் பட்டு ரத்தம் வழிந்தது. இது பற்றி கருணாநிதி முன் வைத்த விமர்சனம், அம்மையாருக்கு மாதவிடாய் ஏற்பட்டு இருக்கும் என்ற ஈனத்தனமாக விமர்சித்தவர்.
  9. 1972ல் எம்ஜிஆர் திமுக விலிருந்து பிரிந்து கணக்கு கேட்ட போது, கருணாநிதியின் பதில்களில் முக்கியமான பதில், ‘யாரிடம் கேட்கிறார் கணக்கு, போய் லதாவிடம், சரோஜா தேவியிடம், மஞ்சுளாவிடம் கணக்குக் கேள்’ என்பதுதான்.
  10. அன்பழகனை ஜெயலலிதா உதவிப் பேராசிரியர் என்று குறிப்பிட்டு பேசியதற்கு (திமுகவினர் அன்பழகனை ‘பேராசிரியர்’ என்றே பல காலம் கூறி வந்தனர். சமீபத்தில் தான் ஜெயலலிதா போட்டு உடைத்தார். அவர் கடைசியாக வகித்த பதவி ‘உதவிப் பேராசிரியர்’ என்று கூறியதற்கு, அன்பழகன் சட்டசபையிலேயே “எனக்கு நான் முன்பு செய்த தொழில் தெரியும் உங்களுக்கு உங்கள் பழைய தொழில் தெரியுமா” என்று விரசமாகப் பேசினார்.
  11. கல்லக்குடியில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்து கடும் விமர்ச்சனம் செய்தார். அதில், அவர் எடப்பாடி இல்ல. டெட்பாடி.
  12. உதயநிதி ஸ்டாலின் – முதல்வர் பதவிக்காக, சசிகலா கால்ல அப்படி தானே விழுந்து கெடந்தாரு. டேபிள், சேர்குள்ளலாம் புகுந்து வந்தாரு. விட்டா அந்த அம்மா காலுக்குள்ளயே புகுந்துருப்பாரு என்று நக்கல் நையாண்டி செய்தார்.

அழுக்கு வார்த்தைகள்: தூற்றுதல் மற்றும் துஷ்பிரயோகத்தின் கலாச்சார வரலாறு” – வெங்கடாசலபதி: 07-01-2017 அன்று மாலை, சென்னை, சென்னை மேம்பாட்டு ஆய்வுக் கழகத்தின் பேராசிரியர் வெங்கடாசலபதி அவர்களால் “அழுக்கு வார்த்தைகள்: தூற்றுதல் மற்றும் துஷ்பிரயோகத்தின் கலாச்சார வரலாறு” வழங்கப்பட்டது. அவர் விசித்திரமான, கோபமான மற்றும் வினோதமான சூழ்நிலைகளில் மக்களால் துஷ்பிரயோகம், சாபம், பெயர்-அழைப்பு, கெட்ட மொழி பயன்படுத்துதல் போன்றவற்றைக் கையாண்டார். 19 ஆம் நூற்றாண்டில், ஷேக்ஸ்பியரில் தோன்றிய அழுக்கு வார்த்தைகள் தாமஸ் பவுட்லரால் அகற்றப்பட்டு “பவுட்லெரிசடோயன்” என்று அழைக்கப்பட்டது. அதே வழியில், பிரிட்டிஷ் அரசாங்கம் சில பகுதிகளை வெளியேற்றிய பிறகு சில தமிழ் இலக்கியங்களை அனுமதித்தது. கமல்ஹாசனின் “அபூர்வ ராகங்கள்” என்ற வார்த்தையில் எப்படி பயன்படுத்தப்பட்டது என்பதைக் குறிப்பிடும் இலக்கியங்களை விட சினிமாக்களில், அரிதாகவே மோசமான வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டன. அவர் தேர்ந்தெடுத்த எடுத்துக்காட்டுகள் தேர்ந்தெடுக்கப்பட்டவை, இது போன்ற மோசமான மொழியைப் பயன்படுத்துபவர்கள் மட்டுமே பயன்படுத்துகிறார்கள், மற்றவர்கள் பயன்படுத்தவில்லை. திராவிடத் தலைவர்கள் மேடைகளில் எப்படி அநாகரிகமான, ஒழுக்கக்கேடான வார்த்தைகளால் அவதூறாகப் பயன்படுத்தினார்கள் என்பதை வசதியாக அடக்கி வைத்திருந்தார். பெண்கள் ஒருபோதும் துஷ்பிரயோகம் செய்வது போல், இயற்கையில் “ஆணாதிக்கம்” போன்ற துஷ்பிரயோகங்களை அவர் பின்பற்ற முயன்றார். அவர் லாவகமாகவும், முரட்டுத்தனமாகவும், வாய்மொழியாகவும் இருந்தபோதிலும், “அடப்பாவி” என்பதைத் தவிர, எந்த ஒரு மோசமான வார்த்தையையும் அவர் ஒருபோதும் உச்சரிக்கவில்லை. அவர் நான்கு வார்த்தைகளை குறிப்பிட்டார், சில உதாரணங்களை மேற்கோள் காட்டி “F….K” என்ற வார்த்தை. முட்டாள், தட்டான், போர்ச்சுகீசியர் பறவர்களை, முகமதியர் திட்டுவதால் தான் மதம் மாறினர். அதாவது, சேவியர், பாதுகாப்பேன் என்ற சரத்துடன் தான் அவர்களை மதம் மாற்றினார்[3].

© வேதபிரகாஷ்

13-01-2022

இந்திரா காந்தியை, இவ்வாறெல்லாம் வசைபாடினார்………………….பிறகு கூட்டணியும் வைத்டுக் கொண்டார்………..


[1] தினமலர், ஆர்.எஸ். பாரதியை கைது செய்ய பா.ஜ., கோரிக்கை, மாற்றம் செய்த நாள்: ஜன 13,2023 22:19.

[2] https://m.dinamalar.com/detail-amp.php?id=3217369

[3] வெங்கடாசலபதி பேச்சை, இங்கே கேட்கலாம்: https://podtail.com/en/podcast/centre-of-south-asian-studies-seminars/professor-a-r-venkatachalapathy-dirty-words-a-hist/

காமராஜரை வசவு பாடிய, மாமேதை-கலைஞர்-கருணாநிதி……

எம்ஜிஆரையும் இவ்வாறு வசைபாடியுள்ளதை கவனிக்க வேண்டும்……

திக-திமுக பேச்சாளர்கள், தலைவர்கள் மற்றும் சித்தாந்தவாதிகள், 1950களிலிருந்து பேசி வரும் கெட்ட, ஆபாச மற்றும் மோசமான வார்த்தைகள், வசவுகள் மற்றும் திட்டுகள் (1)

ஜனவரி 14, 2023

திகதிமுக பேச்சாளர்கள், தலைவர்கள் மற்றும் சித்தாந்தவாதிகள், 1950களிலிருந்து பேசி வரும் கெட்ட, ஆபாச மற்றும் மோசமான வார்த்தைகள், வசவுகள் மற்றும்  திட்டுகள் (1)

திகதிமுக பேச்சாளர்கள், தலைவர்கள் மற்றும் சித்தாந்தவாதிகள், 1950களிலிருந்து பேசி வருவது: திக-திமுக பேச்சாளர்கள், தலைவர்கள் மற்றும் சித்தாந்தவாதிகள், 1950களிலிருந்து பேசி வந்ததை, இன்றைய 70-80-90 வயதானவர்களுக்கு, அதிலும் நேரிடையாக கூட்டங்களுக்குச் சென்று அவர்கள் பேசியதைக் கேட்டவர்களுக்கு, அவர்கள் எவ்வாறு, எப்படியெல்லாம் அநாகரிகமாக, கெட்ட வார்த்தைகள், மோசமான வசைபாடுகள், முதலியவற்றையெல்லாம் சரமாரியாக, வழக்கமாக பேசுவார்கள் என்று அறிவார்கள். அத்தகைய தரமற்ற, மோசமான, ஆபாசமான, மிகக் கேவலமான பேச்சுகள், இப்பொழுது, 2021-2023 ஆண்டுகளிலும் பேசப் படுகிறது என்பதைக் கேட்கும் பொழுது, கவனிக்கும் பொழுது, மிக வருத்தமாக, திகைப்பாக மற்றும் அதிர்ச்சியாக இருக்கிறது.  சைதை சாதிக், துரை முருகன், கே.என். நேரு, ஆர்.எஸ். பாரதி, சிவாஜி கிருஷ்ணமூர்த்தி என்று பலர் பேச ஆரம்பித்து விட்டார்கள். இப்பொழுது, சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசியது, பழைய அந்த 1950களில் பேசிய திக-திமுகவினரை ஒத்துப் போகிறது. இதை விட கேவலமாக எல்லா கூட பேசியிருக்கிறார்கள். திகவினர் பேசும் பொழுது, பெண்களே வேகமாக நடந்து, ஏன் ஓடவும் செய்வார்கள், அந்த அளவுக்கு மோசமாக, ஆபாசமாக, அருவருப்பாகப் பேசுவது உண்டு.

9-01-2023 ஆளுநர் ஆர்.என்.ரவி உரை: தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் ஜனவரி 9 ஆம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. திமுக அரசுக்கும் ஆளுநருக்கும் நீண்டநாட்களாக இருந்து வரும் பஞ்சாயத்துக்கு மத்தியில் பெருத்த எதிர்பார்ப்புடன் இக்கூட்டத்தொடர் தொடங்கியது. இதற்கிடையே, தமிழ்நாட்டை தமிழகம் என்று சொல்வதுதான் சரியானதாக இருக்கும் என்று ஆர்.என். ரவி கருத்து பதிவிட்டிருந்தார். அந்த கருத்து தமிழ்நாட்டில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆளுநர் ரவி ஆளுநராக செயல்படாமல் தொடர்ந்து பாஜக கட்சிக்காரராகா கருத்து கூறி வருகிறார் என்றும் அவர் உடனே பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். உண்மையில் இவையெல்லாம் கடந்த 50-70 ஆண்டுகளில் ஏற்கெனவே பேசி முடித்தது தான். அச்சிலும் உள்ளது தான்.

திராவிட சித்தாந்த வார்த்தைகளை ஆளுனர் தவிர்த்தது: இதற்கு மத்தியில் சட்டசபை உரையை வாசித்த ஆளுநர் ரவி, உரையில் இருந்த சமூகநீதி, சுயமரியாதை, திராவிட மாடல் என்ற வார்த்தைகளை வாசிக்காமல் தவிர்த்தார். மேலும், தமிழ்நாடு சட்டம் ஒழுங்கை சிறப்பாக கையாள்கிறது, அமைதி பூங்காவாக திகழ்கிறது என்பதையும் வாசிக்காமல் கடந்தார். குறிப்பாக, பெரியார், அம்பேத்கர், காமராசர், அண்ணா, கலைஞர் ஆகிய தலைவர்களின் பெயர்களையும் வாசிக்காமல் கடந்துவிட்டார். இதை விமர்சித்த முதல்வர் ஸ்டாலின் ஆளுநருக்கு முன்பாகவே எதிர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார். ஆளுனர் உட்கார்ந்திருக்கும் பொழுதே, ஏற்கெனவே தயாரித்த, அச்சிடத்த காகிதப் பேச்சை வைத்து ஸ்டாலின் படிக்க ஆரம்பித்தார். ஆளுனருக்கு தமிழ் தெரியாது என்பதால், ஸ்டாலின், ஆங்கில மொழிபெயட்ப்பைக் கொடுத்திருக்க வேண்டும். அந்நிலையில், ஆளுனர் போலீஸ் அதிகாரியைக் கூப்பிட்டு கேட்கிறார். அவர், ஸ்டாலின் பேசியதைப் பற்றி சொல்லியிருக்கலாம். அதனால், அதிகாரிகளைக் கூப்பிட்டு, வெளியே சென்று விட்டார். “அப்போது ஆளுநர் வெளிநடப்பு செய்தார் என்பது அனைவரும் அறிந்ததே,” என்று தமிழ் ஊடகங்கள் சுருக்கமாக கூறியுள்ளன. அதற்கு பிறகு திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் ஆளுநரை விமர்சிக்க கூடாது என்றும் அவரை குறித்து கருத்து தெரிவிக்கக்கூடாது என்றும் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி ஆளுநரை பாகிஸ்தானுக்கு அனுப்பி கொல்ல வேண்டும் என்று பேசியது: இந்நிலையில் திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி ஆளுநரை பாகிஸ்தானுக்கு அனுப்பி கொல்ல வேண்டும் என்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை கெட்ட கெட்ட வார்த்தைகளில் வசைபாடியும் இருப்பது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது[1]. சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசியதாவது[2]; “அரசு கொடுத்த உரையை ஒழுங்காக படித்திருந்தால் ஆளுநரை கையெடுத்து கும்பிட்டு அனுப்பி இருப்பேன்[3]. ஆனால், அவர் டாக்டர் அம்பேத்கர் பெயரையே சொல்லமாட்டேன் என்று தவிர்த்தால் செருப்பால் அடிப்பேன் என்று சொல்ல எனக்கு உரிமை இருக்கா இல்லையா? அம்பேத்கர் பெயரை சொல்லமாட்டேன் என்று சொன்னால் ஆளுநர் காஷ்மீருக்கு செல்லட்டும்; நாங்களே தீவிரவாதிகளை அனுப்பி சுட்டு கொல்வோம்,” என்றார். இப்படி சுருக்கமாக செய்தி போட்டிருந்தாலும், மிகவும் கெட்ட வார்த்தைகளை உபயோகப் படுத்தியிருப்பதை கேட்கலாம்.

திமுக பேச்சாளரின் கொலைவெறி பேச்சு: இந்தியா டுடே[4], “ஆளுநரை திட்ட வேண்டாம் என முதல்வர் கேட்டுக்கொள்கிறார். அவர் பேச்சை சரியாகப் படித்திருந்தால், அவரது காலில் பூ வைத்து கைகூப்பி நன்றி தெரிவித்திருப்பேன்[5]. ஆனால், அம்பேத்கரின் பெயரைச் சொல்ல மறுத்தால் அவரை செருப்பால் அறைய எனக்கு உரிமை இல்லையா?[6] அவருடைய பெயரைச் சொல்ல மறுத்ததால், நீங்கள் காஷ்மீருக்குச் செல்லுங்கள்[7]. உங்களைச் சுட்டுக் கொல்ல ஒரு தீவிரவாதியை அனுப்புவோம்,” என்று பேசியது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது[8]. இப்பேச்சு ஆங்கில ஊடகங்களில் 13-01-2023 அன்றே பரவலாக, இணைதளங்களில் வெளியிட்டுள்ளன. ஏனெனில், 2023ல் இவ்வாறு பேசுவது தான் அதிர்ச்சியளிப்பாக உள்ளது. இதனால், இழிவுபடுத்துதல், துஷ்பிரயோகம் செய்தல், அசிங்கமாக-ஆபாசமாக எப்படி பேசுவார்கள் என்று திகைத்து விட்டனர் எனலாம்.

கொஞ்சம் விவரமாக; திமுக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், தமிழக அரசு எழுதி கொடுத்ததை முழுமையாக படிக்காத ஆளுநரை தகாத வார்த்தையில் பேசியும், அவரை செருப்பால அடிப்பேன் என ஆவேசமாக பேசினார்[9]. தொடர்ந்து, அம்பேத்கர் பெயரை சொல்லாத அவரை, ஜம்மு காஷ்மீருக்கு சென்று விடலாம் என்றும், அங்கு தீவிரவாதிகளை அனுப்பி கொல்வோம் என்று எச்சரிக்கை விடுத்தார்[10]….மேலும், தனது பதவியை பாதியிலேயே ராஜினிமா செய்து வந்த அண்ணாமலை எனக் கூறி அசிங்கமான வார்த்தையில் விமர்சித்த திமுக நிர்வாகி சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, பிரான்ஸ்ல தயாரித்த கடிகாரத்தை கட்டிக்கொள்வதுதான் தேசபக்தியாடா..? என்று கேள்வி எழுப்பினார்.…….தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்த அவர், வாரிசு அரசியல் குறித்து பேசினார். கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதிக்கு ஆண்மை இருப்பதால் வாரிசு அரசியல் நடத்துவதாகவும், ஆண்மை இல்லாதவர்கள் மருத்துவமனைக்கு செல்லுமாறு கிண்டலாக குறிப்பிட்டார்……..அதோடு, திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று அதிமுக குற்றம்சாட்டி வருவது குறித்து பேசிய அவர், பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கேளியாக குறிப்பிட்டு, ஜெயலலிதா மரணம் எப்போது நடந்தது என்று சொல்லும் யோகிதை இருக்கிறதா..? என அதிமுகவுக்கு கேள்வி எழுப்பினார்.

© வேதபிரகாஷ்

13-01-2022


[1] சமயம், கவர்னரை நாங்களே கொல்லுவோம்‘… அண்ணாமலையை… – திமுக பேச்சாளர் பகீர்..!, Divakar M | Samayam Tamil | Updated: 13 Jan 2023, 4:05 pm.

[2] https://tamil.samayam.com/latest-news/state-news/dmk-spokesperson-sivaji-krishnamurthy-has-criticized-governor-ravi-and-annamalai-using-filthy-words/articleshow/96965349.cms

[3] India Today, Will send terrorist to kill Tamil Nadu Guv, says DMK leader; BJP demands arrest under Goondas Act, Pramod Madhav and Apoorva Jayachandran , Chennai,UPDATED: Jan 13, 2023 23:07 IST

[4] https://www.indiatoday.in/india/story/tamil-nadu-cm-governor-stand-off-dmk-leader-remark-row-bjp-reacts-2321350-2023-01-13

[5] Times.Now, ‘If you don’t read government’s speech, go to Kashmir and we will…’, DMK leader’s abusive remarks against TN Guv, Updated Jan 13, 2023 | 10:17 PM IST.

[6] https://www.timesnownews.com/india/dmk-leader-shivaji-krishnamurthy-abusive-remarks-against-tamil-nadu-governor-rn-ravi-article-96973932

[7] ANI, “If you don’t read govt’s speech, then go to Kashmir”: DMK leader’s remark against Tamil Nadu Governor, ANI | Updated: Jan 14, 2023 00:51 IST

[8] https://www.aninews.in/news/national/politics/if-you-dont-read-govts-speech-then-go-to-kashmir-dmk-leaders-remark-against-tamil-nadu-governor20230114005143/

[9] அப்டேட்.நியூஸ், எச்சை சோறு.. பாதியிலே ஓடி வந்த பொ*** அண்ணாமலை ; ஆளுநரை செருப்பால அடிப்பேன் ; திமுக பிரமுகர் சர்ச்சை பேச்சு, Author: Babu Lakshmanan, 13 January 2023, 5:44 pm.

[10] https://www.updatenews360.com/trending/dmk-executive-controversial-speech-about-governor-rn-ravi-and-annamalai-130123/

பத்ரிசேஷாத்ரி, அண்ணாவை முட்டாள் எனக் குறிப்பிட்டது, தமிழ் இணைய கல்விக்கழக ஆலோசனை குழுவிலிருந்து நீக்கப் பட்டது! பூணூலை அறுப்பேன் என்று சுப.வீரபாண்டியன் பேசிதற்கு கண்டனம் தெரிவிக்கப் பட்டது!(2)

ஒக்ரோபர் 25, 2022

பத்ரி சேஷாத்ரி, அண்ணாவை முட்டாள் எனக் குறிப்பிட்டது, தமிழ் இணைய கல்விக் கழக ஆலோசனை குழுவிலிருந்து நீக்கப் பட்டது! பூணூலை அறுப்பேன் என்று சுப.வீரபாண்டியன் பேசிதற்கு கண்டனம் தெரிவிக்கப் பட்டது! (2)

பிராமணர்கள் திருப்பி தாக்கமாட்டார்கள்[1]: நாராயணன் திருப்பதி பேசியது, “பிராமணர்கள் திருப்பி தாக்கமாட்டார்கள் பத்ரி சேஷாத்ரி என்ற தனிநபரை விமர்சனம் செய்ய வேண்டுமென்றால் செய்து கொள்ளட்டும், ஆனால், இது போன்று தனிநபர் தொடர்புடைய விவகாரங்களில் வேறு எந்த சமூகத்தையாவது ஒட்டுமொத்தமாக இழித்தும், பழித்தும் பேசுவதற்கு சுப.வீரபாண்டியன் போன்றகோழைகளுக்குதைரியம் உள்ளதா? பிராமண சமுதாயத்தை சேர்ந்தவர்கள் திருப்பி தாக்க மாட்டார்கள் என்ற தைரியத்தில் இது போன்ற வன்மம் மிகுந்த தரக்குறைவான, மலிவான சாதிய விமர்சனங்களை இந்தகோழைகள்முன்வைப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது”.

வன்முறையை தூண்டும் வகையில் பேசியுள்ள சுப.வீரபாண்டியனை கைது செய்ய தமிழக காவல்துறைக்கு உத்தரவிடுவாரா?: நாராயணன் திருப்பதி பேசியது, “ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பாரா? பத்ரி சேஷாதிரி தவறு செய்திருந்தால், முதல்வர் மு.க.ஸ்டாலின், அவர் மீது நடவடிக்கை எடுக்கட்டும். ஆனால், ஒட்டுமொத்தமாக ஒரு சாதியை இழிவுபடுத்தும் வகையில் பேசியுள்ள, மிரட்டியுள்ள சுப. வீரபாண்டியன் மீது நடவடிக்கை எடுப்பாரா முதல்வர் மு.க.ஸ்டாலின்? பூணூலை அறுப்பேன் என்று பேசிய சுப.வீரபாண்டியனை, இது அனைவருக்குமான ஆட்சி என்று பெருமிதம் கொள்கிற முதலமைச்சர், அதன்படி நடந்து கொள்வாரா? நேர்மையான ஆட்சி நடக்குமா? மத துவேஷங்களை செய்பவர் மீது நடவடிக்கை எடுப்பேன் என சட்டசபையில் உறுதி கொடுத்த முதலமைச்சர் ஒரு குறிப்பிட்ட சாதியினரை அவதூறு செய்து, மிரட்டல் விடுத்து வன்முறையை தூண்டும் வகையில் பேசியுள்ள சுப.வீரபாண்டியனை கைது செய்ய தமிழக காவல்துறைக்கு உத்தரவிடுவாரா? நேர்மையான ஆட்சி நடத்துவதாக சொல்லிக்கொள்வதை உறுதி செய்வாரா? நியாயமாக நடந்து கொள்வாரா?,” என்று சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.

பா.., தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் கூறியதாவது: இது குறித்து, பா.ஜ., தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் கூறியதாவது[2]: “ஒருவரை அரசின் குழுவில் சேர்க்கவோ, குழுவில் இருந்து விலக்குவதற்கோ அரசுக்கு உரிமை உண்டு. ஆனால், பத்ரி சேஷாத்திரியை அரசின் இணைய கல்வி ஆலோசனை குழுவில் இருந்து நீக்கிய விதம் தவறானது.எந்த தலைவரும் விமர்சனத்துக்கு உட்பட்டவர் தான். தலைவர்களை நியாயமாக, கண்ணியமாக விமர்சிக்க யாருக்கும் உரிமை உண்டு. அண்ணாதுரையை பத்ரி விமர்சித்த விதம் தவறு என்றால், அதை எதிர்க்கவோ, விமர்சிக்கவோ யாருக்கும் உரிமை உண்டு. அதை தவறு என சொல்ல முடியாது. அதற்காக நாகரிக குறைவாகவோ, மிரட்டும் வகையிலோ பேசுவதை ஏற்க முடியாது. விமர்சனத்துக்காக ஒருவரை அரசு குழுவில் இருந்து வெளியேற்றினால், இப்படிப்பட்ட குழுக்களில் இருக்கும் மற்றவர்கள், எந்த தலைவர் குறித்தும் இதுவரை விமர்சித்தது இல்லையா. பத்ரி சேஷாத்ரி, அண்ணாதுரையை விமர்சித்து விட்டார் என்றதும், தி.மு..,வின் ஆதரவு இயக்க தலைவர்கள் துள்ளி குதித்து வருகின்றனர். தி.மு.., எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் இப்படிப்பட்ட அநாகரிக சூழல் உருவாவது, வாடிக்கையாகி இருக்கிறது.தி.மு.., தலைவரோ, இரண்டாம் நிலை தலைவர்கள் கூட, இப்படிப்பட்ட அநாகரிக விமர்சனங்களை வைப்பதாக தெரியவில்லை. ஆனால், தி.மு.., ஆதரவு இயக்கங்கள் என்று கூறும் இயக்கங்களின் தலைவர்கள் தான் அராஜகமாக பேசுவதும், அநாகரிகமாக நடந்து கொள்வதும் நடக்கிறது. பிராமணர்களுக்கு எதிராக முதலில் பூணுால் அறுப்பு போராட்டம் நடத்திய தி.., இயக்கம் தி.மு..,வுக்கு ஆதரவு நிலை எடுத்து செயல்படுவதாலேயே, அவர்களுக்கு இத்தனை தைரியம்.”

ஒரு ஜாதியினரை மட்டும் அவமதிப்பதும், கேவலமாக நடத்துவதும் எப்படி சமூக நீதியாகும்?:வானதி சீனிவாசன் பேசியது, “தி.மு..,வினருக்கு இரு வண்ண பட்டை எப்படி அடையாளமாக இருக்கிறதோ, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அடையாளம் உள்ளது. சிலர் திருநீறு பூசுகின்றனர்; சிலர் திருமண் பூசுகின்றனர். அதைப்போல பிராமணர்கள் தங்கள் அடையாளமாக பூணுால் அணிகின்றனர். பிராமணர்களுக்கு எதிரான பிரச்னை என்றால், உடனே அவர்களின் பூணுாலை அறுப்பேன் என்பது எந்த விதத்தில் நியாயம்? அனைத்து ஜாதியினரையும், மதத்தவரையும் சமமாக மதித்து நடப்பது தானே சமூக நீதி? அதை விடுத்து, ஒரு ஜாதியினரை மட்டும் அவமதிப்பதும், கேவலமாக நடத்துவதும் எப்படி சமூக நீதியாகும்? தி.மு.., ஆட்சிக்கு வந்து விட்டாலே கூடவே ரவுடித்தனமும் வந்து விடும் என்பதற்கு சுப.வீ., போன்றவர்கள் பேச்சும் உதாரணம். இப்படி முதல்வர் ஸ்டாலின் பேசுவதில்லை என்று சொன்னாலும், இப்படிப்பட்ட நிகழ்வுகள் நடக்க, அவர் அனுமதிப்பதே தவறு தானே. அவருக்கு இதில் உடன்பாடு இல்லை என்றால், இவர்களை கட்டுப்படுத்தாது ஏன்?”

திராவிட குடும்பத்தவர் பிராமணர் உதவி பெறுவது: வானதி சீனிவாசன் பேசியது, “பூணுால் போட்டிருக்கும் ஆட்கள் வேண்டாம் என்று சொன்னால், தி.மு.., தலைவரோ, அக்கட்சியின் மற்ற தலைவர்களோ தங்களுக்கு மருத்துவம் பார்த்து கொள்ளவோ, ‘ஆடிட்டிங்பணிக்கோ, சட்ட ரீதியிலான பணிக்காகவோ, பிராமணர்களிடம் செல்வதே இல்லையா? ஏன் தி.மு.., தலைவர் வீட்டுப் பெண்கள், கோவில் கோவிலாகச் செல்லும்போது, பூணுால் அணிந்த பிராமண அர்ச்சகர்களிடம் பிரசாதம் வாங்க மறுத்து விடுகின்றனரா? தங்கள் கட்சிக்கு அரசியல் ஆலோசனை வழங்க, ஒரு பிராமணரை நியமித்து கொண்டனரேஅவரிடம் அவர் அணிந்திருக்கும் பூணுாலை கழற்றி விட்டு வந்து, எங்களிடம் பணியாற்றுங்கள் என்று நிபந்தனை போட்டுத் தான் பணியாற்ற அனுமதித்தனரா?முதல்வர் இனியும் இந்த விஷயத்தில் அமைதியாக இருப்பது சரியல்ல. இப்படி பேசுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், இவ்வாறு அவர் கூறினார்[3].

சுப.வீரபாண்டியனுக்குதாம்ப்ராஸ்கண்டனம்: ”முன்னாள் முதல்வர் அண்ணாதுரையை பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரி விமர்சித்தார் என்பதற்காக பூணுால் குறித்து அநாகரிகமாகவும், சட்டத்திற்கு புறம்பாகவும் கருத்து தெரிவித்த திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொது செயலர் சுப.வீரபாண்டியனுக்கு தமிழ்நாடு பிராமணர் சங்கம் ‘தாம்ப்ராஸ்’ கண்டனம் தெரிவித்து உள்ளது[4]. சங்க மாநில தலைவர் என். நாராயணன் கூறி உள்ளதாவது[5]: “ஒரு பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர் தனிப்பட்ட முறையில் கூறிய கருத்து, ஒட்டுமொத்த பிராமண சமூகத்தின் கருத்து என எண்ணுவது, பகுத்தறிவுக்கு உகந்ததா? ஓர் இனத்திற்கு எதிராக வன்முறையை துாண்டுவதாக அமைந்துள்ள சுப.வீரபாண்டியனின் செயல்பாடு நடுநிலையாளர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த, 1967, தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் மறைந்த முன்னாள் முதல்வர் ராஜாஜி, ‘பூணுாலை கையில் பிடித்து கொண்டு தி.மு..,விற்கு ஓட்டளியுங்கள்என்று பாடுபட்டு, தி.மு.., முதன் முதலில் ஆட்சியில் அமருவதற்கு பூணுால் வெளியே வந்தததை மறுக்க முடியுமா?

திமுகவும், பிராமணர்களும்: நாராயணன் கூறியது “கடந்த 2021 சட்டசபை தேர்தலில் பிரஷாந்த் கிஷோர் பாண்டே என்ற பூணுால் அணிந்துள்ள பிரமாணர், தி.மு..,விற்கு வியூகம் அமைத்து கொடுத்து அக்கட்சியை வெற்றி பெற செய்த போதும், பூணுால் வெளியே வந்தததை மறக்கத் தான் முடியுமா? இந்த உண்மைகள் எல்லாம் தி.மு..,வினருக்கு நன்றாகவே தெரியும். ஆனால், ஆட்சியில் உள்ள தி.மு..,வை காக்காய் பிடித்து இயக்கம் நடத்துவோருக்கு தெரிந்திருக்க நியாயமில்லை. பூணுால் தொன்று தொட்டு வெளிவந்து கொண்டு தான் இருக்கிறது. தேவைப்படும் தருணங்களில் எல்லாம் தொடர்ந்து வெளிவரும். பூணுால் அறுப்பு மற்றும் இனப்படுகொலை போன்ற பிரசாரங்களை புறம்தள்ளி, தமிழக மக்களுக்கு தன் கடமைகளையும், சேவைகளையும் தொடர்ந்து பெருந்தன்மையாக செய்து வரும் பிராமண சமூகம் குறித்து தமிழக மக்கள் நன்கு அறிவர். சுப.வீரபாண்டியனின் அநாகரிக மற்றும் சட்டத்திற்கு புறம்பான செயல்பாட்டை சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. அவர் மீது முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் வரிப்பணத்தில் அமைத்துள்ள குழுக்களில் இருந்து அவரை முதல்வர் கத்தரித்து விட வேண்டும்,” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

© வேதபிரகாஷ்

23-10-2022.


[1]  இந்த வாதமே தேவையற்றது, இதுவரை பிராமணர்கள் தொடர்ந்து எல்லாமுறைகளிலும் தாக்கப் பட்டு வந்துள்ளனர், ஆனால், அரசியல் ரீதியில் யாரும், ஒன்றும் செய்யவில்லை, செய்து விட முடியவில்லை. அதனால் தான் அவர்கள் ஒதுங்கி போய், தங்களது வேலைகளை செய்து கொன்டிருக்கிறார்கள்.

[2] தினமலர், தி.மு.., ஆதரவு இயக்கங்களின் அநாகரிக, அராஜக அரசியல்: வானதி கடும் கண்டனம், Updated : அக் 23, 2022  10:36 |  Added : அக் 23, 2022  10:31

[3] https://www.dinamalar.com/news_detail.asp?id=3152818

[4] தினமலர், சுப.வீரபாண்டியனுக்குதாம்ப்ராஸ்கண்டனம், Added : அக் 24, 2022  06:10

[5] https://www.dinamalar.com/news_detail.asp?id=3153332

பத்ரிசேஷாத்ரி, அண்ணாவை முட்டாள் எனக் குறிப்பிட்டது, பூணூலை அறுப்பேன் என்று சுப.வீரபாண்டியன் பேசிது, தமிழ் இணைய கல்விக் கழக ஆலோசனை குழுவிலிருந்து நீக்கப் பட்டது! (1)

ஒக்ரோபர் 25, 2022

பத்ரி சேஷாத்ரி, அண்ணாவை முட்டாள் எனக் குறிப்பிட்டது, பூணூலை அறுப்பேன் என்று சுப.வீரபாண்டியன் பேசிது, தமிழ் இணைய கல்விக் கழக ஆலோசனை குழுவிலிருந்து நீக்கப் பட்டது! (1)

பத்ரி சேஷாத்ரி, அறிஞர் அண்ணாவை முட்டாள் எனக் குறிப்பிட்டு 17-10-2022 அன்று ட்விட்டரில் பதிவு செய்தது: குறிப்பிட்ட சாதியினரை அவதூறு செய்து, மிரட்டல் விடுத்து வன்முறையை தூண்டும் வகையில் பேசியுள்ள சுப.வீரபாண்டியனை கைது செய்ய தமிழக காவல்துறைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிடுவாரா என பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்[1]. பத்ரி சேஷாத்ரி, அறிஞர் அண்ணாவை முட்டாள் எனக் குறிப்பிட்டு ட்விட்டரில் பதிவு செய்தது கடும் கண்டனங்களைக் கிளப்பிய நிலையில், அவர் தமிழ் இணைய கல்விக் கழக ஆலோசனை குழுவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்[2]. இந்நிலையில், சுப.வீரபாண்டியன் பத்ரி சேஷாத்ரிக்கு கண்டனம் தெரிவித்துப் பேசுகையில், அவர் சார்ந்துள்ள சாதியினரை மிரட்டும் வகையில் பேசியதாக பாஜக நாராயணன் திருப்பதி கண்டனம் தெரிவித்துள்ளார்[3]. சிறுபான்மையினரான பிராமணர்களை மிரட்டும் வகையில் பேசிய சுப.வீரபாண்டியன் மீது முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்[4].

19-10-2022 அன்று தமிழ் இணைய கல்விக் கழக ஆலோசனை குழுவிலிருந்து நீக்கப் பட்டது: பதிப்பாளர் பத்ரி சேஷாத்திரி இடம்பெற்ற தமிழ் இணைய கல்விக் கழக ஆலோசனை குழு மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது[5]. இது தொடர்பான அரசாணை அக்டோபர் 19ஆம் தேதி வெளியான நிலையில், அதற்கு ஒருநாள் முன்பாகத்தான் 18-10-2022 அன்று பத்ரி சேஷாத்ரி அண்ணா தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துக்களை தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்[6]. பத்ரி சேஷாத்திரி கிழக்குப்பதிப்பகம் மூலம் பல புத்தகங்களை வெளியிட்டிருக்கிறார். தொலைக்காட்சி விவாதங்களில் அவர் அரசியல் ஆய்வாளராகவும் பங்கேற்று வருகிறார். வலதுசாரி சிந்தனை கொண்டவராக பொதுவெளியில் அறியப்படும் அவர், தமது ட்விட்டர் பக்கத்தில், அறிஞர் அண்ணாவின் இந்தி எதிர்ப்பு தொடர்பான கருத்துக்கள் அடங்கிய இடுகையை சமீபத்தில் வெளியிட்டிருந்தார். அதில் இடம்பெற்ற சில கருத்துக்கள் சர்ச்சையாக ஆளும் திமுகவினரால் கருதப்பட்டன.

டுவிட்டர் பதிவுகளும், செய்தி உருவாக்கமும்: பத்ரி சேஷாத்ரி நீக்கம் முன்னாள் தமிழக முதல்வர் அறிஞர் அண்ணாவை ட்விட்டரில் தரக்குறைவாக விமர்சித்த கிழக்கு பதிப்பக உரிமையாளர் பத்ரி சேஷாத்ரியை, தமிழ் இணைய கல்விக் கழக ஆலோசனை குழுவில் இருந்து நீக்கவேண்டும் என திமுகவினர் பலரும் கோரிக்கை விடுத்தனர்[7]. அதைத் தொடர்ந்து, தமிழ் இணைய கல்விக் கழக ஆலோசனைக் குழுவில் இருந்து பத்ரி சேஷாத்ரி நீக்கப்பட்டு, அக்குழுவை தமிழக அரசு மாற்றி அமைத்தது[8]. எனினும், திமுக எம்.பிக்கள் vs பத்ரி சேஷாத்ரி கருத்துகள் என சமூக வலைதளத்தில் அனல் பறந்தது. இன்றைக்கு, சமூக ஊடகப் பதிவுகள் செய்திகளாக மாற்றப் படுவதை கவனிக்கலாம். இவ்வாறு கிளப்பிவிடும் “செய்தி” ஓரிரு நாள், ஏதோ முக்கியமான விசயம் போல பேசுவார்கள், அலசுவார்கள், பிறகு அமைதியாகி விடுவார்கள். அதை மறந்தும் விடுவர்.

 சுப.வீரபாண்டியனின் வெறுப்புப் பேச்சு: சுப.வீ கொதிப்பு இந்நிலையில், திமுக மேடை ஒன்றில் பேசிய திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன், பத்ரி சேஷாத்ரியின் கருத்தைக் கண்டித்திருந்தார்[9]. தமிழகத்தில் ஒருபோதும் ஆரிய மாடலை நுழையவிடமாட்டோம், அண்ணா, கருணாநிதி பற்றி எவன் ஒருவன் தவறாக பேசினாலும் மரியாதை கொடுக்க முடியாது எனப் பேசியிருந்தார் சுப.வீரபாண்டியன்[10]. இந்த நிலையில், ‘பத்ரி சேஷாத்ரி என்பவன் அண்ணாதுரையை முட்டாள் என விமர்சிக்கிறான். இனிமேலும் அமைதியாக இருக்க முடியாது. ‘இதுநாள் வரை சட்டைக்குள் இருந்த பூணுால் மெல்ல மெல்ல வெளியே வருகிறது. கத்தரித்து விடுவோம் என்பதை மனதில் வைத்து கொள்ளுங்கள்.’வழக்கமாக யாரையும் அவன் என்று விமர்சிப்பதில்லை. இனிமேல், மரியாதை கொடுக்க முடியாதுஎன, பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்[11], திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச் செயலர் சுப.வீரபாண்டியன். தி.மு.க., ஆதரவாளராக செயல்படும் இவர், தமிழக அரசு அமைத்துள்ள சமூக நீதி குழு உறுப்பினராகவும் உள்ளார்[12]. தமிழ் இணைய கல்விக் கழக ஆலோசனை குழுவில் இவரும் உறுப்பினராக உள்ளார் என்பது நோக்கத் தக்கது.

சுப்வீரபாண்டியனின் தாக்கம்: திராவிடத்துவவாதியாக, பெரியாரிஸவாதியாக, உலா வரும் இவர், திகவிலிருந்து, திமுக வரை, சென்னை பல்கலைக் கழக மேடைகளில் பேசுவது வழக்கமாக இருக்கிறது. இம்மாதத்தில் சென்னை பல்கலைக்கழகத்தில், சரித்திரத் துறை சார்பில் நடந்த செமினாருக்கு கனிமொழி, மற்றும் இவரும் வந்திருந்தார்கள். கருணானந்தம் ஏற்கெனவே திகவில் இருந்து கொண்டு, சரித்திரத் துறையில், கௌரவ விரிவுரையாளராகவும் பணியாற்றி வந்தார். ஜகதீசன், நாகநாதன் போன்றோரின் நண்பரும் ஆவார். ஆக, இவர்கள் எல்லோரும் பல்லாண்டுகளாக, தமது சித்தாந்தத்தில் ஊறி ஒன்றாக சேர்ந்து வேலை செய்து வருகின்றனர். தமிழக கல்வி, பாடதிட்டம், பாடமுறை, புத்தகங்கள் முதலியவற்றை வடிவமைத்தல், உருவாக்குதல் பள்ளி-கல்லூரிகளில் பாடம் எடுப்பது, விளக்குவது போன்றவற்றிலும் ஈடுபட்டு வருகிறார்கள். அந்நிலையில் தங்களது விசுவாசத்திற்கு ஏற்றபடி தான் பேசுவார்கள், வேலை செய்வார்கள். அத்தகைய ஒற்றுமை இந்துத்துவவாதிகளிடம், குறிப்பாக அரசியல் இந்துத்துவவாதிகளிடம் இல்லை.

பத்ரி சேஷாத்ரியை விமர்சிக்க சாதியை இழுத்து மிரட்டல் விடுத்துள்ள சுப.வீரபாண்டியனை கைது செய்வாரா முதல்வர்?: என பாஜக நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார். உங்களுக்கு உரிமை உண்டு இதுகுறித்து பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில், “பத்ரி சேஷாத்திரியை அரசு பொறுப்பில் நியமிப்பதும், நீக்குவதும் அரசின் உரிமை. அவர் யாரையாவது அநாகரீகமாகவோ, தரக்குறைவாகவோ பேசியிருந்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு அதிகாரமும், கடமையும் உள்ளது. நேரு, இந்திரா காந்தி, இராஜாஜி, காமராஜர், எம்ஜிஆர், ஜெயலலிதா மற்றும் எண்ணற்ற தலைவர்களை அச்சில் ஏற்ற முடியாத தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சித்த கூட்டம் தான் இந்த திராவிடர் கழக கூட்டம். பிராமண சமுதாயத்தை இழிவாக அதே போல், தற்போதும் ஹிந்து மத கடவுள்களை, மத நம்பிக்கைகளை அநாகரீகமாக, தரக்குறைவாக, இழிவாக பேசிய, பேசிக்கொண்டிருக்கின்ற திராவிடர் கழக மற்றும் அதன் தோழமை கும்பல் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் மாநில அரசுக்கு உள்ளது. ஆனால், பத்ரி சேஷாத்ரியை கண்டிக்கும் போர்வையில், திராவிடர் இயக்க தமிழர் பேரவையின் சுப.வீரபாண்டியன், பிராமண சமுதாயத்தை இழிவுபடுத்தும் வகையில் பேசியுள்ளதோடு, பூணூலை கத்தரித்து விடுவோம் என்று மிரட்டும் தொனியில் பேசியிருப்பது சிறுபான்மை சமூகமான பிராமண சமூகத்திற்கு விடப்பட்டு இருக்கும் அப்பட்டமான மிரட்டல்.

© வேதபிரகாஷ்

23-10-2022.


[1] தமிழ்.ஒன்.இந்தியா, பூணூலை அறுப்பேன் என்று பேசிய சுப.வீரபாண்டியனை கைது செய்வாரா முதல்வர்? – கொந்தளித்த பாஜக நாராயணன்!, By Vignesh Selvaraj, Updated: Saturday, October 22, 2022, 17:12 IST.

[2] https://tamil.oneindia.com/news/chennai/bjp-narayanan-thirupathy-has-questioned-whether-cm-stalin-will-arrest-suba-veerapandian-who-has-defa-481781.html

[3] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், பூணூலை அறுப்பேன்.! கொந்தளித்த சுப.வீரபாண்டியன்.. கடுப்பான பாஜக , நாராயணன் திருப்பதி,Raghupati R; First Published Oct 22, 2022, 7:24 PM IST; Last Updated Oct 22, 2022, 7:24 PM IST.

[4] https://tamil.asianetnews.com/politics/auspicious-will-stalin-order-the-tamil-nadu-police-to-arrest-veerapandian-rk5qnn

[5] பிபிசி.தமிழ், அண்ணா பற்றிய சர்ச்சை ட்வீட்பத்ரி சேஷாத்ரி இடம்பெற்ற ஆலோசனை குழு மாற்றம்என்ன நடந்தது?, 20 அக்டோபர் 2022

[6] https://www.bbc.com/tamil/india-63326503

[7] தமிழ்.நியூஸ்.18, ட்விட்டரில் அண்ணா குறித்து அவதூறு கருத்து தெரிவித்த பத்ரி சேஷாத்ரி நீக்கம், News Desk, தமிழ்நாடு, 13:54 PM October 20, 2022.

[8] https://tamil.news18.com/videos/tamil-nadu/action-against-badri-seshadri-for-making-comments-about-anna-on-twitter-822178.html

[9] ஜீ.நியூஸ், பேரறிஞர் அண்ணா முட்டாள்பத்ரி சேஷாத்ரி போட்ட ட்வீட்ஒரே இரவில் தூக்கியடித்த அரசு!, Written by – க. விக்ரம் | Last Updated : Oct 20, 2022, 02:54 PM IST.

[10] https://zeenews.india.com/tamil/tamil-nadu/cn-annadurai-should-be-called-an-idiot-too-says-badri-seshadri-415837

[11] தமிழ்.வெப்.துனியா, அண்ணாவை அவமதித்து பேசிய பத்ரி சேஷாத்ரி..! – ஆலோசனை குழுவிலிருந்து நீக்கி நடவடிக்கை!, Written By Prasanth Karthick; Last Modified; வியாழன், 20 அக்டோபர் 2022 (16:17 IST)

[12] https://tamil.webdunia.com/article/regional-tamil-news/badri-sheshadri-removed-from-tn-education-advice-council-122102000059_1.html