Archive for ஓகஸ்ட், 2010

தஞ்சை பெரிய கோவிலில் புத்தர் விகாரம்!

ஓகஸ்ட் 22, 2010

தஞ்சை பெரிய கோவிலில் புத்தர் விகாரம்!

http://www.viduthalai.periyar.org.in/20100821/snews04.html

குறிப்பு: புத்தர் சிலை கோவிலில் காணப்படுவது ஒன்றும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. இதற்கான விளக்கம், கீழ்கண்ட கட்டுரையிலேயே இருக்கிறது. இருப்பினும், தலைப்பு வேண்டுமென்றே விஷமத்தனமாக, “தஞ்சை பெரிய கோவிலில் புத்தர் விகாரம்”, என்று கொடுக்கப்பட்டுள்ளது!

மழை பெய்யும்போது, அழகுடன் நிலவொளி பொழியும்போது, நண்பகல் நேரத்தில், மாலை கதிரவன் மறையும் நேரத்தில் மின்னும் தங்கநிற ஒளியில் என்று தஞ்சை பெரிய கோயிலை நான் பல்வேறு நிலைகளிலும் பார்த்திருக்கிறேன். ஆனால் இவை அனைத்திலும் காலை கதிரவன் எழும்போது காணும் காட்சியே மிகச் சிறப்பானதாக இருந்தது. சுற்றுச்சூழல் மகிழ்விக்கும் வண்ணம் இருக்கும் இக்காலை நேரமே பிரகாரத்தைச் சுற்றிவர ஏற்றது.

சிலமாதங்களுக்கு முன் ஒருநாள் அதிகாலை நேரத்தில் நான் சென்றிருந்த போது திருச்சுற்று மாளிகை என்ற கல்வெட்டுகளில் குறிக்கப்பட்டிருந்த சுற்றுப் பாதையில் இருந்த அடித்தளங்கள், தூண்களில் பொறிக்கப்பட்டிருந்த கல்வெட்டு எழுத்துக்களின் மேல் சாய்வான கதிரவனொளிக் கற்றைகள் படிவதைக் கண்டேன். கருப்பு வண்ணத்தில் அழகுறச் செதுக்கப்பட்டது போன்று அந்த எழுத்துக்கள் தோன்றின. முருகன் சன்னிதி படிகளில் அமர்ந்து வழக்கம்போல ஓதுவார் ஒருவர் தேவாரப் பாடல் பாடிக்கொண்டிருந்தார். பிரகாரத்தில் எதிரொலித்த அவரது குரல் தொலைவில் கூவிக்கொண்டிருந்த குயிலின் ஓசையுடன் கலந்து ஒலிக்கையில் கம்பீரமாக நிற்கும் இந்த மாபெரும் கோயிலைப் பற்றிய பல கேள்விகள் மனதில் தோன்றின.

இக்கோயில் முழுவதுமாக ஏன் கட்டி முடிக்கப்படவில்லை?

இக்கோயில் கட்டப்பட்ட பல நூற்றாண்டு கழிந்த பின் வந்த நாயக்கர்கள் கருவறைக்கு முன் உள்ள பெரிய மண்டபத்தைக் கட்டி முடித்தனர். இம்மண்டபத்தின் தூண்களில் 108 பரதநாட்டியச் சிற்பங்கள் உள்ளன. ஆனால் 20 தூண்களில் மட்டும் எந்தவிதமான சிற்பங்களும் செதுக்கப்படாமல் நிற்கின்றன. வேலை நடந்து கொண்டிருந்தபோது திடீரென நிறுத்தப்பட்டும் இருக்கக்கூடும். இவ்வாறு கட்டி முடிக்கப்படாத கோயிலுக்கு ஏன் குடமுழுக்கு செய்யப்பட்டது? இராஜராஜ சோழனின் மகன் ராஜேந்திர சோழன் தனது தலைநகரை தஞ்சையில் இருந்து ஏன் கங்கைகொண்ட சோழபுரத்துக்கு மாற்றிக் கொண்டான்? தனது தந்தை கட்டத் தொடங்கிய தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டி முடிப்பதை விட்டுவிட்டு கங்கைகொண்ட சோழபுரத்தில் மற்றொரு கோயில் அவன் ஏன் கட்டத் தொடங்கினான்? சைவக் கோயிலில் காணப்படும் புத்தரின் சிலைகள் எவ்வகையில் முக்கியத்துவம் வாய்ந்தவை?

தஞ்சை பெரிய கோயிலுக்கு வழக்கம்போல நான் சென்று கொண்டிருந்த காலத்தில் அங்கிருந்த புத்தர் சிற்பம் காணப்படும் மாடத்தை எனது கவனத்துக்கு முதன் முதலாகக் கொண்டு வந்தவர் அமெரிக்க டேவிட்சன் கல்லூரியில் ஆசிய கலை, வரலாற்றுப் பேராசிரியராக இருந்த எனது நண்பர் முனைவர் ஜபாப் தாமஸ்தான். சாக்யமுனி புத்தரின் சிற்பம் உள்ள மாடங்கள் இரண்டு இந்தக் கோயிலில் உள்ளன. ஒன்று இரண்டாவது கோபுரத்தின் அடிப்பகுதியில் உள்ளது; மற்றொன்று பிரதானக் கோயிலுக்குள் உள்ளது. இதில் சில நிகழ்வுகள் தொடர் சிற்பக் சங்கிலி மூலமாக ஏதோ கோமாளித்தனமான பாணியில் தெரிவிக்கப்படுபவையாக உள்ளன. மத்திய கால தமிழகத்தின் கோயில்களில் இவ்வாறு சிற்பங்களை அமைப்பது ஒரு பாணியாகவே இருந்தது. கதை சொல்லும் இது போன்ற சிறுசிறு சிற்பச் சங்கிலிக் காட்சிகளை வேறு சில கோயில்களிலும் நீங்கள் காணலாம். அது இதிகாசங்களில் வரும் ஒரு காட்சியாகவோ அல்லது ஒருவரலாற்று நிகழ்வாகவோ இருக்கலாம். இதனைப் போலத்தான் பல்லவர்களின் வரலாறு காஞ்சிபுரம் வைகுந்த பெருமாள் கோயிலில் சிற்பச் சங்கிலிகளில் கூறப்பட்டுள்ளது. கங்கைகொண்ட சோழபுரத்தில் பகீரதனின் கதை இவ்வாறு சிற்பத்தில் கூறப்பட்டுள்ளது.

தஞ்சை பெரியகோயிலின் இரண்டாவது கோபுர நுழைவாயிலின் அடித்தளத்தில் முதல் புத்தர் சிற்ப மாடம் உள்ளது. உள்ளே நுழைந்தவுடன் இடது பக்கம் திரும்புங்கள். மேற்கு நோக்கியிருக்கும் இந்த சிற்ப மாடம் உங்கள் கண்களுக்கு நேராகத் தெரியும். இங்கே இரண்டு சிற்பங்கள் உள்ளன. ஒரு மரத்தின் கீழ் புத்தர் உட்கார்ந்திருப்பது போன்றது ஒன்று. அந்த மரத்தின் அடிப்பாகத்தை ஒரு மனிதன் பிடித்துக் கொண்டிருப்பான். மற்றொரு சிற்பத்தில் ஒரு இணையர் (கணவன்_மனைவி) இறைஞ்சும் நிலையில் காணப்படுவர்; கணவன் தலையில் ஒரு லிங்கம் இருக்கும்.

பிரதானக் கோயில் கட்டமைப்பில் புத்தரின் இரண்டாவது சிற்பம் காணப்படுகிறது. கருவறைக்குச் செல்லும் படிகளின் தென்புறத்தில் உள்ள அலங்காரக் கைப்பிடிச் சுவர் மீது இது உள்ளது. இத்தொகுப்பில் மூன்று சிற்பங்கள் உள்ளன. முதல் சிற்பத்தில் புத்தர் ஒரு மரத்தின்கீழ் அமர்ந்திருக்கிறார். மேல்புறத்தில் கந்தர்வர்களின் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இரண்டாவது சிற்பத்தில் ஒரு மரத்தின் கீழ் புத்தர் நின்றிருக்கிறார். அவரை அரசகுடும்பத்தினர் வணங்கி நிற்கின்றனர். அவர்களுக்குப் பின் வணங்கி நிற்கும் நிலையில் கந்தர்வர்கள் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. மூன்றாவது சிற்பத்தில் வானத்திலிருந்து வரவேற்பது போன்று அமைக்கப்பட்டுள்ளது. கோயிலின் முன் உள்ள கந்தர்வன் ஒருவன் தன் தலைமீது லிங்கம் சுமந்து நிற்கிறான். உள் பிரகாரத்தின் வடக்குச் சுவர் சித்திரங்களில் விவரிக்கப்பட் டுள்ள கதைதான் இங்கும் விவரிக் கப்பட்டுள்ளதாக எனக்குத் தெரிவிக் கப்பட்டது. ஆனால், இவற்றை ஒப்பிட்டுப் பார்க்க என்னால் அந்த ஓவியங்களைப் பார்க்க இயலவில்லை.

இக்கோயில் பற்றி எழுதப்பட்டுள்ள எண்ணற்ற நூல்களில் எது ஒன்றிலும் இந்த புத்தர் சிற்பம் உள்ள மாடங்களைப் பற்றிய குறிப்பு எதுவுமே இல்லை. தென்னிந்தியக் கலை வரலாற்று ஆசிரியரான சிவராமமூர்த்தி என்பவர் எழுதிய அதிகாரபூர்வமான இந்திய தொல்பொருள் ஆய்வு அறிக்கையிலும் இது பற்றிய குறிப்பு ஏதுமில்லை. இது பற்றி பல இலக்கியங்களில் நான் தேடிப்பார்த்தபோது, ஒரே ஒரு பண்டிதர் மட்டுமே இந்தச் சிற்பங்களைப் பற்றி பதிவு செய்திருப்பதுடன், அவற்றைப் புரிந்து கொள்ளவும் முயன்றிருப்பதைக் கண்டேன். 1976ஆம் ஆண்டு கோயில் சட்டம் பற்றிய ஆய்வின் முன்னுரையில் முனைவர் சுரேஷ் பிள்ளை இந்த புத்தர் சிற்ப மாடங்களைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சோழ மன்னர்கள் காலத்தில் கடற்கரைப் பகுதியில் புத்த மதமும் டெல்டா பகுதியில் ஜைன மதமும் பரவலாகப் பின்பற்றி வரப்பட்டன என்று அவர் குறிப்பிடுகிறார். ஒரே குழுவைச் சேர்ந்த கட்டடக் கலைஞர்கள் ஒரு கோயிலையோ, புத்த விகாரத்தையோ, ஜைனமடத்தையோ கட்டுவதில் ஈடுபட்டிருப்பார்கள். இத்தகைய இடங்களில் இந்த கட்டடக் கலைஞர்கள் சுதந்திரமாக நடமாடுவர்.

தஞ்சை பெரியகோயிலில் புத்தரைப் பற்றிய மற்றொரு சிற்பமும் உள்ளது. கருவறையைச் சுற்றிவரும் பாதையில் இரண்டு நிலைகளில் சுவர்களில் ஈரக் காறையில் வரையப்பட்ட சோழர்களின் வடிவங்கள் உள்ளன. அனைத்துக்கும் மேலே தவ நிலையில் உட்கார்ந்திருக்கும் ஒரு மீட்டர் நிளமுள்ள புத்தரின் ஓவியம் உள்ளது. இந்தச் சிற்பங்கள் எல்லாம் நமக்கு என்ன தெரிவிக்கின்றன? இதில் உள்ள கதை என்ன? கோயிலின் ஒரு பகுதியாக இவற்றை வைத்திருப்பதன் முக்கியத்துவம் என்ன? இக்கோயிலைப் பற்றி விடைகாண இயலாத கேள்விகள் மேலும் பல உள்ளன. கஜுரஹோ கோயிலின் ரகசியங்களைக் கண்டுபிடித்து தெரிவித்த சோபிதர் பூஞ்சா போன்ற கற்றறிந்த பண்டிதர் எவரேனும் வந்து இவற்றுக்கு விடை கண்டால்தான் உண்டு.

கோடம்பாக்கம் குஷ்புவும், ஹாலிவுட் ஜூலியா ராபர்ட்ஸும்

ஓகஸ்ட் 10, 2010

கோடம்பாக்கம் குஷ்புவும், ஹாலிவுட் ஜூலியா ராபர்ட்ஸும்

ஒருவேளை, ஒரே நாளில் அல்லது காலகட்டத்தில், இந்தியாவில் இரண்டு நடிகைகள், தமது இடங்களை விட்டு, வேறு இடத்திற்கு வந்து தமது நம்பிக்கைகளைப் பற்றி பேசியுள்ளது வியப்பாக உள்ளது.

கோடம்பாக்கம் குஷ்பு: இவரைப் பற்றி இப்பொழுது சொல்லவேண்டிய அவசியம் இல்லை. முஸ்லீமாக பிறந்து, “ஹிந்து” போல உலா வந்து, மக்களை ஏமாற்றி, கற்ப்பைப்பற்றி கேவலமாக பேசி, இப்பொழுது தான் “பெரியாரிஸ்ட்” என்று தம்பட்டம் அடித்துக் கொள்கிறார். கோடம்பாக்கத்திற்கு இறக்குமதி செய்யப்பட்ட, இந்த நடிகை, கருணாநிதியுடன் கைக்கோர்த்துக் கொண்டு, நாத்திகம், பெரியாரிஸம் என்றெல்லாம் பேச ஆரம்பித்துள்ளார்.

ஹாலிவுட் ஜூலியா ராபர்ட்ஸ்: ஆலிவுட் திரை உலகின் சூப்பர் ஸ்டார் ஜூலியா ராபர்ட்ஸ்(42) ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர் நடிப்பில் தனி முத்திரை பதித்து வரும் இவருக்கு உலகம் முழுவதிலும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இவரது நடிப்பில் வெளியான பிரட்டி உமன் என்ற படம் வசூலில் சாதனை படைத்தது. இப்படத்தில் நடித்ததற்காக ஆஸ்கார் விருதையும் பென்று சாதனை படைத்தார். இவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஈட்பிரே அண்ட் லவ் என்ற படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள டெல்லி வந்திருந்தார் தொடர்ந்து 3 மாதங்கள் வரை இந்தியாவில் தங்கி இருந்தார். “ஈட் பிரே அண்ட் லவ்” படத்தில் ஜூலியா ராபர்ட்ஸ் விதவைப் பெண் கேரக்டரில் நடித்தார். கதைப்படி அவர் நிம்மதிக்காக இந்தியா வந்து கோவில்களில் வழிபடுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றன. இதனால் அவருக்கு பல்வேறு இந்து கோவில்கள் ஆசிரமங்களுக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. படத்தில் நடிப்பதற்காக இந்து கோவிலுக்கு சென்ற அவருக்கு உண்மையிலேயே மன நிம்மதி, கடவுளின் அருள் ஆசி கிடைத்தது.

உலகின் சிறந்த மதம் மன அமைதி கிடைத்ததால் இந்து மதத்திற்கு மாறினேன்

இந்து மதத்துக்கு மாறினார் ஜூலியா ராபர்ட்ஸ், ஆகஸ்ட் 08,2010

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=57126

புதுடில்லி :ஹாலிவுட்டின் பிரபல நடிகை ஜூலியா ராபர்ட்ஸ்(42), இந்து மதத்துக்கு  மாறிவிட்டார். கோவிலுக்குச் சென்று பிரார்த்தனை செய்கிறார். “அடுத்த பிறவியிலாவது நான் நிம்மதியாக இருக்க வேண்டும்’ என, மனமுருகிக் கூறியுள்ளார்.

எனது சொந்த நாடு ஜார் ஜியா. ரோமன் கத்தோலிக்க மதத்தில் பிறந்தவர். சிறுவயது முதலே வேதாகமத்தை (பைபிளை) படித்து வந்தேன். கிறிஸ்தவ கோவில்களுக்கு சென்று அவ்வப்போது வழிபடுவேன்.

ஆனாலும் என் வாழ்வில் தொடர்ந்து பிரச்சினைகள், குழப்பங்கள் இருந்து வந்தன. கடந்த ஆண்டு இந்தியா வந்த போது இந்து மத வழிபாடுகளால் ஈர்க்கப்பட்டேன். இந்த வழிப்பட்டால் என் வாழ்வை சீரழித்த பிரச்சினைகள் நொடிக்பொழுதில் மாய மானதை கண்டு மகிழ்ச்சி அடைந்தேன். குழப்பமான நிலையில் இருந்த எனக்கு ஒரு தெளிவு கிடைத்தது.

இந்து கோவில்களில் அர்ச்சகர்கள் காட்டும் தீபத்தை கை வைத்து கும்பிடும் போது எனக்கு புத்துணர்ச்சி கிடைத்ததை உணர முடிந்தது.

எனது பிரார்த்தனையை கடவுள் கேட்டு உடனடியாக தீர்த்து விடுவது போன்ற பிரமிப்பு ஏற்பட்டது. நெற்றியில் இடும் திருநீறு தீயசக்திகளிடம் இருந்து என்னை கடவுள் பாதுகாப்பது போல உணர்ந்தேன். தற்போது எனது 3 குழந்தைகளுக்கும் திருநீறு பூசி வருகிறேன். கைகளில் புனிதமான சிவப்பு கயிரை கட்டிக் வருகிறேன். இந்து மதம் என் வாழ்வில் திருப்பு முனையை ஏற்படுத்தி உள்ளது.

நான் ஒரு பெரியாரிஸ்ட்! நடிகை குஷ்பு அறிவிப்பு

http://www.viduthalai.periyar.org.in/20100810/news01.html

முஸ்லீமாக இருந்து பிறகு இந்து மாதிரி இருந்து, இப்பொழுது தான் பெரியாரிஸ்ட் என்று கூறிக்கொள்ளும் இவரையும் இந்தியர்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கின்றனர்.

அய்தராபாத்தில் நேற்று பெரியார் திரைப் படம் தெலுங்கு மொழியில் வெளியீட்டிற்கான முன்னோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பேசிய நடிகர் இனமுரசு சத்ய ராஜ், தான் ஒரு பெரியார் கொள்கைப் பற்றாளன் என்பதை ஏற்கெனவே பிரகடனப்படுத்தியவர்.

அய்தராபாத்தில் நடைபெற்ற பெரியார் தெலுங்கு திரைப்பட முன்னோட்ட நிகழ்வில் பெரியார் திரைப்படத்தில் அன்னை மணியம் மையாராக நடித்த நடிகை குஷ்பு தன்னுடைய உரையில், அன்னை மணியம்மையாரைப் பற்றி எந்த படச் சுருளையும் தான் பார்க்கவில்லை. அவர் இயல்பாக இருக்கின்ற போட்டோக்களை மட்டுமே பார்த்தேன். அன்னை மணியம்மை யாரைப் பற்றிய வரலாற்றுச் செய்திகளை மட்டுமே படித்தேன். திராவிடர் கழக தலைவர் வீரமணி அவர்கள் அன்னை மணியம்மையாரைப் பற்றித் தெரிந்து கொள்ள பல செய்திகளைக் கூறினார். அதுதான் நான் மணியம்மையாராக சிறப்பாக நடிப்ப தற்குக் காரணமாக இருந்தது.

நான் ஒரு பெரியாரிஸ்ட் என்பதை இந்த நேரத்தில் பிரகடனப்படுத்திக் கொள்வதில் பெருமை அடைகின்றேன் என்றும் குஷ்பு கூறினார். குஷ்பு இவ்வாறு அறிவித்ததை மேடையில் இருந்தவர்களும், பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்திருந்தவர்களும் மகிழ்ந்து கைதட்டி வரவேற்றனர்.