Archive for பிப்ரவரி, 2010

ஓம் என்ற எழுத்துருவம் உருவானது எப்படி?

பிப்ரவரி 28, 2010

ஓம் என்ற எழுத்துருவம் உருவானது எப்படி?

ஓம் என்பது அ-உ-ம என்ற மூன்று எழுத்துகளால் உருவானது.

அரேபிய மொழியில் 786 என்ற எண் கடவுளைக் குறிப்பதாகக் கூறுகிறார்கள்.

786 என்ற அரேபிய எண்கள்

786 என்ற அரேபிய எண்கள்

அந்த மூன்று எண்கள் இதோ:

٧ ٨ ٦

7 8 6

அதே மூன்று எண்கள் சமஸ்கிருதத்தில்:

Arabic-7

Arabic-7
Arabic-8

Arabic-8
Arabic-6

Arabic-6

அரேபிர மொழியில் 786 எண்கள் இவ்வாறு உள்ளன. அவற்றைச் சேர்த்தால், கீழ் கண்ட உருவம் பெறப்படும்.

three-segments-joined-together

three-segments-joined-together

அரேபிய மற்றும் சம்ஸ்கிருத எழுத்துகளுக்குள்ள ஒற்றுமையைக் காணலாம். அதுமட்டமல்லது, உச்சரிப்பு சப்தத்திலும் உள்ள ஒற்றுமையைக் காணலாம்.

three-segments-joined-together - rotated

three-segments-joined-together - rotated

உள்ள ஓற்றுமையை அரிந்துக் கொள்வதற்காக அந்த மூன்று குறியீடுகளையும் தனித்தனியாக எடுத்துக் கொண்டு சேர்த்துக் காட்டப்படுகிறது.

OM-segment-1

OM-segment-1
OM-segment-2

OM-segment-2
OM-segment-3

OM-segment-3

அலிஃப், லம், மிம்

விடுதலையின் ஆபாச சித்திரம்

விடுதலையின் ஆபாச சித்திரம்
OM - இடது பக்கமாகத் திருப்பியது

OM – இடது பக்கமாகத் திருப்பியது
Ujjaini-symbol-punch-marked-coin

Ujjaini-symbol-punch-marked-coin

மேலேயுள்ள மூன்று படங்களையும் பார்க்கவும்,

முதலாவது, விடுதலையில் வெளியிடப்பட்டுள்ளது.

இரண்டாவது, உள்ள ஓம் என்ற எழுத்துருவம் இடது பக்கமாகத் திருப்பப்பட்டது.

மூன்றாவது, அதே தோற்றம் பொறிக்கப்பட்ட இந்தியாவின் பழங்கால நாணயத்தில் காணப்படும் சித்திரம். இது உஜ்ஜயினி குறியீடு / அடையாளம் எனப்படும். குறைந்தபட்சம் இரண்டு மலை, அதன் மீது பிறைச்சந்திரன் போல உருவம் பொறிக்கப்பட்டிருக்கும்.

ஆமென்

ஓம்

தமிழ் முன்னேற்றம் அடைய என்ன செய்ய வேண்டும்?

பிப்ரவரி 27, 2010

தமிழ் முன்னேற்றம் அடைய என்ன செய்ய வேண்டும்?

தந்தை பெரியார், விடுதலை 1.5.1949

http://viduthalai.periyar.org.in/20100227/snews02.html

மதமும் இலக்கணமும்: உதாரணமாக மக்கள், தேவர், நரகர், உயர்திணை என்றால் என்ன? நரகர்கள் யார்? தேவர்கள் யார்? இலக்கணத்திலேயே மதத்தைப் போதிக்கும் சூழ்ச்சிதானே இது?

இனி பள்ளிக் கூடங்களில் பிள்ளைகளுக்குத் தமிழ் இலக்கியத்துக்குப் புத்தகங்கள் எவை? கம்பராமாயணம், பாரதம், பாகவதம், பெரியபுராணம், தேவாரம், திருவாய்மொழி போன்ற மத தத்துவங்களையும், ஆரிய மத தத்துவம் என்னும் ஒரு தனிப்பட்ட வகுப்பின் உயர்வைப் போதித்து மக்களை மானமற்றவர்களாக்கும் ஆபாசக் களஞ்சியங்களும் அல்லாமல் வேறு இலக்கியங்கள் மிதந்து காணப்படுகின்றனவா? பண்டிதர்களுக்கு உலக ஞானத்தைவிடப் புராண ஞானம்தானே அதிகமாகயிருக்கின்றது?

மேல் நாட்டு இலக்கியம்: மேல்நாட்டுப் புலவர்கள், மேல் நாட்டு இலக்கியங்கள் ஆகியவைகளுக்கு இருக்-கும் பெருமையும், அறிவும் நம் தமிழ்ப் புலவர்களுக்கு இருக்கின்றது என்று சொல்ல முடியுமா? ஷேக்ஸ்பியர் வேண்-டுமா? இங்கிலாந்து வேண்டுமா? என்றால் இங்கிலீஷ் மகன் ஷேக்ஸ்பியர் வேண்டும் என்பானாம். நாம் எதைக் கேட்பது? இந்தியா வேண்டுமா? கம்பராமாய-ணம் வேண்டுமா என்றால் உண்மைத் தமிழ் மகன் என்ன சொல்லுவான்? இரண்டு சனியனும் வேண்டாம் என்றுதானே சொல்லுவான்.

மேல் நாட்டில்தான் அறிவாளிகள் உண்டு என்றும், கீழ் நாட்டில் அறிவாளி-கள் இல்லை என்றும் நான் சொல்ல வரவில்லை.

மேல்நாட்டு அறிவாளிகள் தாங்கள் செய்த இலக்கியங்களை மத சம்பந்தமின்றி பெரிதும் செய்து வைத்தார்கள். அதனால் நூற்றுக் கணக்காக மேல்நாட்டு இலக்கி-யங்களும் பண்டிதர்களும் போற்றப்படு-கிறார்கள்.

கீழ் நாட்டில் குறிப்பாக இந்தியாவில் எத்தனை இலக்கியம் உலகத்தால் மதிக்கப்-படுகின்றன? எத்தனை பண்டிதர்கள் உலகத்தால் போற்றப்படுகிறார்கள்? தாகூர் அவர்கள் கவிக்கு ஆகப் போற்றப்படலாம். ஆகவே மதம், கடவுள் சம்பந்தமற்ற இலக்கியம், யாவருக்கும் பொதுவான இயற்கை ஞானத்தைப் பற்றிய இலக்கியம், யாவரும் மறுக்க முடியாத விஞ்ஞானத்-தைப் பற்றிய இலக்கியம் ஆகியவைகள் மூலம் தான் ஒரு மொழியும் அதன் இலக்கியங்களும் மேன்மையடைய முடியும் என்பது மாத்திரமல்லாமல் அதைக் கையாளும் மக்களும் ஞானமுடையவர்-களா-வார்கள்.

மலத்தில் அரிசி பொறுக்கலாமா? கம்ப ராமாயணம் அரிய இலக்கியமாய் இருக்கிறதாகச் சொல்லுகிறார்கள். இருந்து என்ன பயன்? ஒருவன் எவ்-வளவு தான் பட்டினி கிடந்தாலும் மலத்தில் இருந்து அரிசி பொறுக்குவானா? அது போல்தானே கம்பராமாயண இலக்கியம் இருக்கிறது. அதில் தமிழ் மக்-களை எவ் வளவு இழிவாகக்குறிப்பிடப்-பட்டி-ருக் கிறது. தமிழரின் சரித்திர கால எதிரிகளை எவ்வளவு மேன்மையாகக் குறிப்பிடப்பட் டிருக்கிறது. சுயமரியா-தையை விரும்பு கிறவன் எப்படி கம்பரா-மாயண இலக்கி யத்தைப் படிப்பான்? இன்று கம்பராமா யணத்தால் தமிழ் மக்-களுக்கு இலக்கியம் பரவிற்றா என்று நடு-நிலையில் இருந்து யோசித்துப் பாருங்கள்.

கடவுளால் மொழி உயராது தமிழ் மொழியின் பெருமை பரமசிவ-னுடைய டமாரத்திலிருந்து வந்ததென்றோ, பரமசிவன் பார்வதியிடம் பேசிய மொழி என்றோ, சொல்லி விடுவதாலும், தொண்டர் நாதனைத் தூதிடை விடுத்த-தாலும், முதலை உண்டபாலனை அழைத்த-தாலும், எலும்பைப் பெண்ணாக்கின-தாலும், தமிழ் வளர்ச்சியையும், மேன்மை-யையும் குறைக்கத்தான் பயன்படும்.

பரமசிவனுக்குகந்த மொழி தமிழ் என்றால் வைணவனும் முஸ்லிமும் தமிழைப் படிப்பதே பாவமல்லவா? அன்றி-யும் அந்தப்படியிருந்தால் பார்ப்பான் தமிழ் மொழியைச் சூத்திர பாஷை என்றும், அதைக்காதில் கேட்பதே பாவம் என்றும் சொல்லுவானா? என்று யோசித்துப் பாருங்-கள். இந்திப் புரட்டு

இன்று தமிழ் நாட்டில் வந்து தமிழ் கற்று வயிறு வளர்ப்பவர்களாகிய பார்ப்-பனர்களே இந்தி பாஷை இந்தியப்பாஷை ஆகவேண்டுமென்று முயற்சித்து வெற்றி பெற்றுவருகிறார்கள். கோர்ட்பாஷை, அரசாங்க பாஷை ஆகியவை எல்லாம் இந்தியமயமாக வேண்டும் என்கிறார்கள். காரணம் கேட்டால் இந்தி பாஷையில் துளசிதாஸ் ராமாயணம் நன்றாய் விளங்குமென்கிறார்கள்.

தமிழ்ப் பண்டிதர்கள் பெரும்பா-லோர்க்கு இதைப்பற்றிச் சிறிதும் கவலை இருந்தது என்று சொல்ல முடியவில்லை; தமிழ்ப் பண்டிதர்கள் இந்த அரசியல்-வாதிகளின் கூச்சலுக்கும் பார்ப்பனர்கள் ஆதிக்கத்துக்கும் பயந்து கொண்டு வாயை மூடிக்கொண்டு இருந்திருக்கிறார்கள்.

செத்த பாம்பு: பார்ப்பனர்கள் செத்த பாம்பான சமஸ்-கிருதத்தை எடுத்து வைத்துக் கொண்டு எவ்வளவு ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். பொதுப் பணம் சமஸ்கிருதத்தின் பேரால் எவ்வளவு செலவாகின்றது? பொது மக்களின் வரிப்பணம் சமஸ்கிருதத்துக்கு ஆக ஏன் ஒரு பைசாவது செலவாக வேண்டும்? தமிழ் மக்கள் யாரும் இதைப் பற்றிக் கவனிப்பதில்லை. தமிழ் தமிழ் என்று எங்கோ ஒரு மூலையில் சில பண்டி-தர்கள் தான் சத்தம் போடுகிறார்கள், ஆனால் சமஸ்கிருதத்துக்கும் இந்திக்கும் கேபினெட் மெம்பர்கள், அய்க்கோர்ட் ஜட்ஜுகள் முதல் எல்லா பார்ப்பன அதிகாரிகளும் பாடுபடுகிறார்கள். நம்ம பெரிய அதிகாரிகளுக்கோ, பெரிய செல்-வாக்கும் செல்வமும், உள்ளவர்களுக்கோ தமிழைப் பற்றிக் கவலையும் இல்லை. தமிழைப் பற்றி அதிகம் பேருக்கு ஒன்றும் தெரியவும் தெரியாது.

தமிழாபிமானம் தேசத்துரோகம்! தமிழினிடத்தில் ஒருவன் அபிமானி-யாக இருந்தாலே அவன் தேசத்துரோகி, வகுப்புவாதி, பிராமணத்துவேஷி என்றொல்லாம் ஆய்விடுகிறான். ஆதலால் கூட்டத்துக்கு வரக்கூட நமது மந்திரிகள் பயப்படுகிறார்கள். தமிழின் பரிதாப நிலைக்கு இதைவிட வேறு என்ன வேண்டும்? தமிழ் மொழியில், ஒரு சிறு மாற்றமோ, முற்-போக்கோ செய்யக்கூட ஒரு தமிழ் அபிமானியும் முயற்சிப்பதில்லை. யாரா-வது முயற்சித்தாலும் ஆதர-வளிப்பதுமில்லை. தற்கால நிலைக்கு தமிழ் போதியதாகவும், சவுகரிய-முள்ளதாகவும் ஆக்க யார் முயற்சித்-தார்கள்? மாறுதல் அவசியம்

மேல் நாட்டு மொழிகள் எவ்-வளவு மாற்றமடைந்து வருகின்றன; எழுத்துகளில் எவ்வளவு மாறுதல் செய்து வருகிறார்கள். ரஷ்யாவில் சில பழைய எழுத்துகளை எடுத்து விட்டார்கள். புதிய எழுத்துகள் சேர்த்-தார்கள். அமெரிக்காவில் எழுத்-துக் கூட்டுவதாகிய இஸ்பெல்லிங் (ஷிஜீமீறீறீவீஸீரீ) முறையை மாற்றி விட்டார்கள். துருக்கியில் துருக்கி மொழிக்கு உண்டான எழுத்து-களையே அடியோடு எடுத்துவிட்டு ஆங்கில எழுத்துகளை யேற்படுத்திக் கொண்டார்கள். தமிழர்கள் தமிழுக்காக நமக்கு விவரம் தெரிந்த காலமாய் என்ன காரியம் செய்-தார்கள்? காலத்துக்கு ஏற்ற-மாறு-தலுக்கு ஒத்துவராதவன் வெற்றி-கரமாய் வாழ முடியாது; மாறுதலுக்கு மனி-தன் ஆயத்தமாய் இருக்க-வேண்டும். முன்னேற்றம் என்பதே மாறுதல் என்பதை உணர்ந்த மனி-தனே உலகப் போட்டிக்குத் தகுதி-யுடையவனாவான்.

தமிழ் எழுத்துகளில் ஒரு சில மாற்-றம் செய்தேன். அநேக பண்டிதர்கள் எனக்கு நன்றி செலுத்தி என்னைப் பாராட்டினார்களேயல்லாமல், ஒருவ-ராவது அம்முயற்சிக்கு ஆதரவளித் தவர்கள் அல்லர்.

இவ்வளவு பெரிய காரியத்தைச் செய்ய நான் தகுதியற்றவன் என்பதை நான் ஒப்புக்கொள்ளுகிறேன்.

ஆனால், தகுதி உள்ளவர்கள் எவரும் வெளிவராவிட்டால் நான் என்செய்வது? என்னைக் குறை-கூறவோ, திருத்தவோ, முயற்சிப்பதின் மூலமாகவாவது இதற்கு ஒரு வழி பிறக்காதா என்றுதான் துணிந்தேன். இதுவரை யாரும் அதை லட்சியம் செய்யவில்லை. ஆனாலும் நான் அம்முறையி-லேயே பத்திரிகைகள் நடத்துகிறேன். அம்முறையிலேயே 10, 20 புத்தகங்-களும் வெளியிட்டிருக்-கிறேன். இன்னும் எவ்வளவோ செய்ய வேண்டி இருக்கிறது.

இவைகளை யெல்லாம் பார்ப்-பனர்களே செய்வதாகப் பாசாங்கு செய்து பார்ப்பனர்கள் தமிழின் மீது ஆதிக்கம் செலுத்தப் பார்த்தார்கள். அநேக பண்டிதர்கள் அவர்களுக்கு ஆதரவு அளித்தார்கள்.

எங்கும் திருநாள்: எப்படி ஆனாலும் தமிழ் மொழி உணர்ச்சி தமிழ் மக்களுக்கு இன்றி-யமையாதது, அதன் மூலம் தமிழ் மக்கள் ஒன்று சேர வசதி உண்டு.

தீபாவளி போன்ற மூட நம்பிக்-கையும், சுயமரியாதை அற்றதும், ஆபாசமானதுமான பண்டிகைகள் கொண்டாடுவதைவிட இப்படித் தமிழ்த்திருநாள் என்று தமிழ் மக்கள் கூட்டுறவுக்கும், மகிழ்ச்சிக்கும், கொண்டாட்டத்துக்கும் அனுகூல-மாகத் திருநாள்களைப் பரப்ப-வேண்டும். நமது நண்பர்களுக்குப் பகுத்தறிவும், சுயமரியாதையும் இருந்தாலும் ஒரு திருநாள் வேண்டி இருக்கிறதால் தீபாவளியும், மாரிப் பண்டிகையையும் கொண்டாட ஆசைப்படுகிறார்கள். ஆதலால் தக்கது செய்யவேண்டுகிறேன்.

(விடுதலை 1.5.1949)

மகா சிவராத்திரியாம்! மகா ஒழுக்கக்கேடு!!

பிப்ரவரி 9, 2010

மகா சிவராத்திரியாம்! மகா ஒழுக்கக்கேடு!!

விடுதலை – 09-02-2010, ப.8

http://viduthalai.periyar.org.in/20100209/news13.htmlசிவராத்திரிக்காக ஆரியர்கள் புனைந்த கதைகள்: சிவராத்திரிக்காக ஆரியர்கள் புனைந்த கதைகள் மிக அற்பமான கருத்தை உடையவையே ஆகும். இதிலிருந்தே அக்கால ஆரியர்களின் புத்தியின் போக்குத் திறத்தை ஒருவாறு அறியலாம். சிவராத்திரி கதை, ஆரியர்களின் புராணங்களில் உள்ளபடியும், பண்டிகை, உற்சவம், விரதங்களுக்காக என்று பார்ப்பனர்கள் தொகுத்த ஓர் ஆதாரமான புத்தகத்திலிருந்தும் இது தொகுக்கப்படுவதாகும். அதாவது, ஒரு பார்ப்பன வாலிபன் பஞ்சமா பாதக_- அக்கிரமங்கள் பல செய்து கொண்டிருந்தான். அதனால் அவன் நாட்டை விட்டு விரட்டப்பட்டான். இந்த நிலையில் ஒரு நாள் அவன் பட்டினியோடு காலை முதல் இரவுவரை அலைந்து திரிந்து கொண்டி-ருந்தான். இரவு அவன் ஒரு சிவன் கோயிலை அடைந்து கர்ப்ப கிரகத்திற்குள் சென்று பார்த்தான். அப்போது கோயில் பூசாரி சிவன் சிலைக்குமுன் பிரசாத வகைகளை வைத்துவிட்டு எங்கோ சென்றி-ருந்தான். பிரசாதங்களைக் கண்டதும் அந்த வாலிபன் அவற்றைக் கவர்ந்து சென்று உண்ண எண்ணினான். அப்போது அந்தச் சிலைக்குப் பக்கத்தில் எரிந்து கொண்டிருந்த விளக்கு மங்கலாக இருந்ததால் பூசைக்கு வைக்கப்பட்டிருந்த பலகாரங்களைத் தெளிவாகக் காண முடியவில்லை. எனவே அவன் விளக்கைச் சிறிது தூண்டிவிட்டு அதிக வெளிச்சம் ஏற்படும்படிச் செய்தான். அப்போது அங்கு வந்த பூசாரி இந்த வாலிபன் பிரசாதங்களைத் திருடுவது கண்டு சீற்றமடைந்து அந்த வாலிபனை வெட்டிக் கொன்றுவிட்டான்.

“பாரதிதேவி” இக்கதையை 1953ல் சொல்லியதாம்! அன்றைய நாள் சிவனுக்கு இரவு நாளாகும். அன்று பகல் முழுவதும் அந்த வாலிபன் பட்டினியாக இருந்தது சிவராத்திரி விரதம் இருந்தது போலாகிறதாலும், மற்றும் சிலையின் முன் வைத்திருந்த விளக்கைத் தூண்டிவிட்டு, அதிக ஒளியுடன் பிரகாசிக்கச் செய்தது போலாகிறதாலும், அந்த வாலிபனுக்குச் சிவன் மோட்சத்தை அருளி-னான். ஆதலால் அந்த வாலிபனைப் போல், பகலில் பட்டினி கிடந்து இரவில் கண்விழித்து அதிகாலையில் உணவு கொண்டால் எவ்வளவு அயோக்கியனுக்கும் மோட்சமளிக்கும் என்பதாக சிவராத்திரி விரத நாள் கொண்டாடப்படுகிறதாம்.    (பாரததேவி 8.2.1953)

பக்தர்களே, நீங்கள் எந்த பஞ்சமா பாதகத்தைத் செய்துள்ளீர்கள்? இதுதான் மகா சிவராத்திரியாம். இந்தக் கதையை நம்பினால், இதை நம்பி மகாசிவராத்திரியைக் கொண்டாடினால் மனிதனுக்கு ஒழுக்கம் வளருமா?  பஞ்சமாபாதகம் செய்தவனாம். அவனும் சிவனுக்குத் திட்டமிட்ட வகையில பக்தியின் அடிப்படையில்கூட பூஜை செய்யவில்லை. அத்தகைய கயவனுக்கு மோட்சமாம்!  அந்தப் பாதகன் சிவனுக்குத்தான் இவ்வளவும் செய்தான் என்று இட்டுக் கட்டி திணிக்கப்பட்டுள் ளது. எப்படியாக இருந்தாலும் சிவனைப் பூஜை செய்ய வேண்டும் என்ற வறட்டுத் தனம்தான் இதில் தொக்கி நிற்கிறது. மகாசிவராத்திரி கொண்டாடும் பக்தர்களே, நீங்கள் எந்த பஞ்சமா பாதகத்தைத் செய்துள்ளீர்கள்? ஒரு கணம் சிந்திப்பீர்!

திருக்குறள் பேரவை சார்பில் கருணாநிதிக்கு திருக்குறள் பேரொளி பட்டம் !

பிப்ரவரி 8, 2010

திருக்குறள் பேரவை சார்பில் கருணாநிதிக்கு திருக்குறள் பேரொளி பட்டம் !

திருவள்ளுவரை இருட்டில் அனுப்பியவர்களுக்கு “பேரொளி” பட்டம்!: உலக திருக்குறள் பேரவை சார்பில் தமிழக முதல்வர் கருணாநிதிக்கு திருக்குறள் பேரொளி பட்டம் வழங்கப்பட உள்ளது. இது குறித்து உலக திருக்குறள் பேரவை தலைவர் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் செய்தியாளர்களிடம் கூறியதாவது குன்றக்குடி அடிகளாரால் துவங்கப்பட்ட திருக்குறள் பேரவை, தற்போது உலக திருக்குறள் பேரவையாக வளர்ந்துள்ளது.
கருணாநிதி திருவள்ளுவரை எப்படி அவமதித்தார் என்பதை கிருத்துவர்கள் கூறுவார்களே?: திருக்குறளுக்கு எழுத்துப்பணி, சொற்பணி, செயல்வடிவம் அளித்தவர்கள் உண்டு. எழுத்து, சொல், செயல் என்று ஒருங்கிணைத்து திருக்குறள் பணியாற்றியவர், பணியாற்றுபவர் நமது தமிழக முதல்வர் கருணாநிதி என்றால் அது மிகையல்ல.

திருவள்ளுவரை இழிவு படுத்தி சிலையெடுப்பதால் என்ன புகழ்?: திருவள்ளுவருக்கு பெருமை சேர்த்தவர் கருணாநிதி. காரணம், சென்னையில் வள்ளுவர் கோட்டம், கன்னியாகுமாரியில் திருவள்ளுவருக்கு திருவருவச்சிலை, பெங்களுரில் 18 ஆண்டுகளாக முடக்கப்ட்ட திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்தது,1330 குறள்களை ஒப்புவிக்கும் மாணவர்களுக்கு பொற்கிழி விருது, குறளோவியம், திரு வள்ளுவர் ஆண்டை தமிழ்புத்தாண்டாக அறிவித்தது போன்ற செய்லகள் மூலம் திருக்குறள் மீது கருணாநிதிக்கு உள்ள உள்ளத்துஈடுபாட்டை காணலாம்.

சாதனைக்கு பரிசு என்றால், எற்படுத்திய வேதனைகளுக்கு என்ன செய்வது?: இதன் மூலம் திருக்குறள் பணியில் வாழ்நாள் சாதனையாளராக கருணாநிதி விளங்கி வருகின்றார். எனவே, இந்த பேரவை மூலம் தமிழக முதல்வருக்கு வரும் 10 ம் தேதி சென்னையில் திருக்குறள் பேரொளி பட்டம் வழங்கப்பட உள்ளது என்றார்.

கிருத்துவர்களுடன் சேர்ந்து கொண்டு திருவள்ளுவர் இழிவு படுத்தப்பட்டார்: 1970களிலிருந்தே கருணாநிதி, திருவள்ளுவரை இழிவுபடுத்தும், திருக்குறளைக் கேவலப்படுத்தும் கிருத்துவக் கூட்டத்துடன் சேர்ந்து செயல்பட்டு வந்துள்ளார். “சந்தேகிக்கும்” மற்றும் “சந்தேகப்படும்” தாமஸ் திருவள்ளுவரை சந்தித்தான், அவருக்கு பைபிள் சொல்லிக் கொடுத்தான், பைபிள் படித்துதான் திருவள்ளுவர், திருக்குறளை எழுதினார். பிறகு அதிலிருந்துதான் சைவ சித்தாந்தம் வளர்ந்தது. வைணவமும், சைவமும் வளர்ந்தன, என்றெல்லாம் பேத்தித் திரியும் கூட்டத்திற்கு துணை போனார். அது மட்டுமா, அத்தகைய போலி ஆராய்ச்சியாளர், கள்ள-ஆவணத் தயாரிப்பு கோஷ்டி, மோசடிக் கூட்டத்திற்கு ஆதரவாக, தாமஸ் திரைப்படத்தையும் ஆரம்பித்து வைத்தது கருணாநிதிதான்!

இந்த கேவலங்களை, இழிவுகளை, அவதூறுகளை எந்தத் தமிழனும் தட்டிக் கேட்கவில்லை!

தமிழ் புலவர்கள், கவிக்கள், கவிக்கோக்கள், கவியரசுகள், முனைவர்கள், பேராசிரியர்கள்……………..எவரும் கவலைப்படவில்லை.

ஆனால், “உலக திருக்குறள் பேரவை” என்ற பெயரில் கருணாநிதிக்கு “திருக்குறள் பேரொளி” பட்டம் வழங்கப் போகிறார்களாம்!

என்னே தமிழர்களின் அலங்கோலம்?

சுயமரியாதை பேசும் தமிழனுக்கு இது உரைக்கவில்லையா?

திராவிட புரோகிதர்கள் நடத்திவரும் திருமணங்கள்!

பிப்ரவரி 2, 2010

திராவிட புரோகிதர்கள் நடத்திவரும் திருமணங்கள்!

சுயமரியாதை உள்ளவர்கள் நடத்தும் திருமணமே சுயமரியாதைத் திருமணம்
ந.ம.மதன்-த.ஆர்த்திகா சுயமரியாதைத் திருமண விழாவில் தமிழர் தலைவர் உரை

http://www.viduthalai.com/20100607/news12.html

சென்னை, ஜூன் 7_ சுயமரியாதைத் திருமணம் என்பது சுயமரியாதை உள்ளவர்கள் நடத்தும் விழா என்று குறிப்பிட்டார் திரா-விடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள்.

தென்சென்னை மாவட்ட திராவிடர் கழக அமைப்-பாளர் மு.ந.. மதியழகன் _ தமிழ்மதி ஆகியோரின் மகன் ந..ம. மதன் பி.இ.,எம்.பி.ஏ., சோலையார்பேட்டை சி.தங்கவேல் _ தேவி ஆகியோரின் மகள் த. ஆர்த்திகா பி.டெக்., ஆகியோரின் சுயமரியாதைத் திருமணம் 6.6.2010 ஞாயிறு காலை 11 மணிக்கு சென்னை நியூ உட்லண்ட்ஸ் ஓட்டலில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

மணமகன் தந்தையார் மு.ந.மதியழகன் விழாத் தலைவரை முன்மொழிந்து உரையாற்றினார்.

திருப்பத்தூர் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் கே.சி. எழிலரசன் அனைவரையும் வரவேற்று உரை-யாற்றினார்.

கழகத் தோழர் மதியழகன் தந்தையார் சுய-மரியா-தைச் சுடரொளி ஆசிரியர் நடராசன் அவர்களுக்கும், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களுக்கும் இருந்த தொடர்பையும், நட்பையும் எடுத்துக் காட்டிப் பேசினார்.

பாராட்டுரை

மணமக்களைப் பாராட்டி, வாழ்த்தி நீதியரசர் அரிகிருஷ்ணன் உரையாற்றுகையில் சுயமரியாதைத் திருமணம் சட்டப்படி செல்லாது என்று இருந்த நிலை-யிலும் கூட தந்தை பெரியார் கொள்கையை ஏற்று நாட்டில் ஏராளமான எண்ணிக்கையில் சுயமரியாதைத் திருமணங்கள் நடைபெற்றதைப் பெருமையாகச் சுட்டிக் காட்டி மணமக்களை வாழ்த்திப் பேசினார்.

டாக்டர் ருத்திரன்

பிரபல உளவியல் மருத்துவர் டாக்டர் ருத்திரன் அவர்கள் தனது திருமணமும் சரி, தம் மகனின் திருமணமும் சரி சுயமரியாதைத் திருமணமாக நடந்ததை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொண்டார்.

சுயமரியாதைத் திருமணத்தில் பொய் இல்லை: போலித்தனம் இல்லை. வாழ்க்கை ஆரம்பமே இந்தச் சிறப்புடன் துவங்குவது சுயமரியாதைத் திருமணத்-தில்தான் என்று ரத்தினச் சுருக்கமாகக் குறிப்பிட்டார்.

கலி.பூங்குன்றன்

திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கலி. பூங்-குன்றன் அவர்கள் தன்னுரையில் குறிப்பிட்டதாவது:

தந்தை பெரியாரின் கடவுள் மறுப்பு _ மத எதிர்ப்பு, சாஸ்திர புராணங்கள் எரிப்பு என்பதே தமிழர்களின் இன இழிவு ஒழிப்பிலிருந்து தொடங்குகிறது என்று குறிப்பிட்டார்.

தொடக்கத்தில் பார்ப்பனப் புரோகிதர்கள் பார்ப்பனர்களுக்கும், சத்திரியர்களுக்கு மட்டுமே திருமணங்களை நடத்தினார்கள். திருமலை நாயக்கன் காலத்தில் வட மாநிலங்களிலிருந்து ஏராளமான பார்ப்பனர்கள் தமிழ் நாட்டுக்கு வந்து சேர்ந்தனர். இவர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லாத ஒரு நிலை ஏற்பட்டது.

அப்பொழுதுதான் திருமலை நாயக்க மன்னனின் முன்னிலையில் கூடி, வைசியர்களுக்கும், சூத்திரர்-களுக்கும் கூட பார்ப்பனர்கள் திருமணங்களை நடத்தி வைக்கலாம் என்ற முறை மேற்கொள்ளப்பட்டது.

இந்தப் பார்ப்பனப் புரோகிதர்கள் சூத்திரர்களுக்கு மந்திரங்களைச் சொல்லி கல்யாணத்தை நடத்தி வைக்கும்போது மறக்காமல் ஒரு முகூர்த்த நாழிகைக்கு மணமகனுக்கு பூணூல் அணிவித்து, சடங்குகள் முடிந்த பின் மறக்காமல் அந்தப் பூணூலைக் கழற்றி தண்ணீரில் எறிந்துவிடுவார்கள் என்ற வரலாற்று உண்மையையும் எடுத்துக் கூறினார்.

பொருளாளர் கோ.சாமிதுரை

திராவிடர் கழகப் பொருளாளர் வழக்குரைஞர் கோ.சாமிதுரை அவர்கள் தன்னுரையில், சுயமரி-யா-தைக் கொள்கைகளைக் கடைப்பிடிப்பவர்களுக்கு வாழ்க்கையில் தோல்வி கிடையாது என்று அழுத்த-மாகக் குறிப்பிட்டார்.

சுயமரியாதைக்காரர்கள் நீண்ட நாள் வாழ்வதற்குக் காரணம் அவர்கள் சரியான -_ பகுத்தறிவு ரீதியான வாழ்க்கை முறையே என்றும் கூறினார்.

திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரிப் பேராசிரியர் அருள்தந்தை மரியா மணமக்களை வாழ்த்திப் பேசினார்.

தமிழர் தலைவர் கி.வீரமணி

சுயமரியாதைத் திருமணத்திற்குத் தலைமை வகித்த திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றுகையில் குறிப்பிட்டதாவது:

தோழர் மதியழகன் குடும்பம் பாரம்பரியமான கழகக் குடும்பமாகும். தோழர் கொள்கையில் மிகவும் பிடிவாதக்காரர் _ பெரியார் திடலோடு நெருக்கமாக உறவு கொண்டவர்.

கழகத் தொடர்பான செய்திகளையும், ஆதாரங்களையும் ஆவணமாகத் தொகுத்து வைக்கக் கூடிய ஆற்றல் மிக்கவர்.

மணமகன் பி.இ. படிப்போடு எம்.பி.ஏ. பட்டமும் பெற்றிருக்கிறார். மணமகள் பி.டெக். படித்திருக்கிறார்.

இந்த மாற்றங்கள் எல்லாம் வருவதற்கு உழைத்தவர் தந்தை பெரியார் _ இந்த இயக்கம் என்பதை யாரும் மறுக்க முடியாது.

இங்கு பேசிய நீதிபதி அரிகிருஷ்ணன் அவர்கள் சுயமரியாதை முறையில் திருமணம் செய்து கொள்பவர்களுக்கு மட்டும்தான் சுயமரியாதை இருக்கிறதா _ மற்றவர்களுக்குக் கிடையாதா என்று சிலர் கேட்டதாகக் குறிப்பிட்டார்.

உண்மைதான். சுயமரியாதை முறையில் திருமணம் செய்து கொள்பவர்களுக்குத்தான் சுயமரியாதை உண்டு _ இந்த முறையில் திருமணம் செய்துகொள்ளாதவர் களுக்கு சுயமரியாதை கிடையாது என்ற அழுத்தமாகச் சொல்லுவதில் எங்களுக்கு ஒன்றும் தயக்கம் இல்லை (பலத்த கைதட்டல்).

இப்படிக் கூறுவது யாரையும் புண்படுத்த அல்ல: மாறாகப் பண்படுத்தத்தான்.

சுயமரியாதைத் திருமுண முறையில் ஒருவர் எஜமானர் அல்ல -_ இன்னொருவர் அடிமையும் அல்ல _ சமமானவர்கள் என்பதே இதன் தத்துவம்.

வைதீக முறையில் இதற்கு என்ன பெயர்–? தாரா முகூர்த்தம். அப்படியென்றால் பெண்ணைத் தாரை வார்த்துக் கொடுப்பதாகும். இன்னொரு பெயர் கன்னிகாதானம் என்பதாகும். பெண்ணைத் தானமாக _ பண்டமாக நினைத்து இன்னொருவருக்குக் கொடுப்பதாகும்.

வரதட்சணை என்ற சொல்லேகூட தமிழ் கிடையாது. தமிழர்களிடத்தில் இந்த ஏற்றத் தாழ்வு இல்லாதிருந்தது. ஆரியம் புகுந்ததால் பெண்ணை சந்தைப் பொருளாக்கி விட்டனர்.

சந்தையில் மாட்டை விற்கும்போதுகூட பணத்தை வாங்கிக் கொண்டு மாட்டைக் கொடுப்பார்கள். இந்த வரதட்சணை சந்தையில் பணத்தையும் கொடுத்து பொருளையும் கொடுத்து, பெண்ணையும் கொடுக்கிறார்கள்.

நெருப்புக்கும் நமக்கும் சம்பந்தம் உண்டா?

பார்ப்பனர்களை வைத்துக் கல்யாணம் நடத்தினால் தீக்குண்டம் வைப்பார்கள். அதனைச் சுற்றி ஏழு அடி எடுத்து வைக்க வேண்டும். அப்படி வைக்காவிட்டால் அந்தக் கல்யாணம் செல்லாது என்கிறார்கள். யார் எண்ணிப் பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள்?

நெருப்பு என்பது பார்ப்பனர்கள் குளிர் நாடுகளில் இருந்து வந்ததால் குளிர் காய்வதற்கு அவர்களுக்குத் தேவைப்பட்டது. அவர்கள் நடத்தும் சடங்குகளில் நெருப்பை முக்கியப்படுத்துவார்கள். நமக்கும் இந்தச் சடங்களுக்கும் சம்பந்தமே கிடையாது.

இதுகுறித்து தமிழறிஞர் டாக்டர் இராசமாணிக்கனார் போன்றவர்கள் பல வரலாற்றுத் தகவல்களை ஆய்வுக் கண்ணோட்டத்தோடு எழுதி இருக்கிறார்கள்.

தமிழர் திருமணத்தில் தாலி என்பதே கிடையாது என்று நிறுவியுள்ளார்.

தமிழர் தொன்மை வாய்ந்தவர் என்பதும், அவர்தம் தமிழ் மொழி வடமொழியிலிருந்து வேறுபட்டது என்பதும் ஆரியர்க்கு முற்பட்ட இந்தியருள் தமிழர் சிறந்தவர் என்பதும், பிறவும் மொழி ஆராய்ச்சியாலும், புதை பொருள்களாலும் இந்திய வரலாற்றிலும், பிறவற்றாலும் உறுதிப்பட்டுள்ள செய்திகள் ஆகும். எனவே தமிழர் மொழி வேறு, கலை வேறு, வாழ்க்கை முறை வேறு _ சுருங்கக் கூறின், தமிழர் ஆரியரின் (வடமொழியாளரின்) முற்றும் வேறுபட்டவர் என்பது ஆராய்ச்சியாற் போந்த உண்மை! பண்டைச் சங்க இலக்கியங்களைக் கொண்டு ஆராயினும், இவ்வுண்மை உணர்தல் கூடும். உண்மை இங்ஙனம் இருப்ப, இடைக் காலத்தே தமிழ் மரபுக்கு மாறான வாழ்க்கை முறை தமிழரிடை புகுந்துவிட்டது; தமிழர் பழக்க வழக்கங்கள் மாறின; மணமுறை மாறிவிட்டது; பிற சடங்குகள் பெருகின; இவற்றின் பயனாக இன்றுள்ள தமிழர்கள் பெயரளவில் தமிழர்களாக இருக்கின்றனரே அல்லாமல் மெய்த் தமிழராக -_ சங்ககாலத் தமிழர்தம் வழித் தோன்றல்களாக இல்லை என்பதை அறிய _ தமிழர் தலைகுனிய வேண்டுபவராக உளர்.

நம்மிடையே நடைபெறும் இக்காலத் திருமண முறை நமது பண்டைத் தமிழர் மரபுக்கு முற்றும் மாறானதாகக் கருதப்படும் என்று டாக்டர் இராசமாணிக்கனார் கூறியுள்ளார்.

பார்ப்பனரை அழைத்துத் திருமணத்தை நடத்தும் நிலை பிற்காலத்தில் வந்தது. தமிழர் வீட்டுத் திருமணத்தில் தமிழுக்கு இடமில்லை; சமஸ்கிருதம் குடிபுகுந்தது.

பொருள் புரியாமல் புரோகிதர்களும் மந்திரங்களை ஓதினார்கள்.

ஸோம : ப்ரதமோ விவிதே

கந்தர்வோ விவத உத்தர:

த்ருதியோ அக்னிஷ்ட பதி:

துரியிஸ்தே மநுஷ்யஜா

கீழாத்தூர் சீனிவாச ஆச்சார்யார் என்ற பார்ப்பனர் விவாஹ மந்திரார்த்த போதினி என்ற நூல் ஒன்றினை எழுதியுள்ளார். தி லிட்டில் ஃப்ளவர் கம்பெனி அதனை வெளியிட்டுள்ளது.

இந்த மந்திரத்துக்கு பொருள் என்ன? இந்த மணப் பெண்ணின் முதல் கணவன் ஸோமன்; இரண்டாவது கணவன் கந்தர்வன்; மூன்றாவது கணவன் அக்னி. நான்காவது கணவன்தான் மனித ஜாதியில் பிறந்தவன் என்று இந்த மந்திரத்தில் கூறப்படுகிறது. திருமணம் ஆவதற்கு முன் நான்கு பேருக்கு மனைவி என்பது தமிழர் வாழ்வு முறைக்கு உகந்ததுதானா?

நாவலர் சோமசுந்தர பாரதியார் கலந்துகொண்ட ஒரு திருமணத்தில் ஒரு பார்ப்பனப் புரோகிதர் கருமாதி மந்திரத்தைக் கல்யாண வீட்டில் ஓதிக்கொண்டு இருந்ததைக் கண்டுபிடித்து எதிர்த்துக் குரல் கொடுத்த நிலையும் உண்டு.

இந்த மணமக்களைப் பொறுத்தவரை சுயமரியாதைக் கொள்கையில் பூத்த பகுத்தறிவு மலர்கள். மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாகவும் வாழக் கூடியவர்கள்.

முதலில் தங்கள் பெற்றோர்களுக்கு நன்றியும் பாசமும் காட்ட வேண்டும். முதல் வட்டம் என்பது உங்கள் பெற்றோர்களைப் பாதுகாப்பது பாசம் காட்டுவது _ அவர்களுக்கு நன்றியுடன் நடந்து கொள்வது; இரண்டாவது வட்டம் என்பது உங்களுக்கு யார் யாரெல்லாம் உதவி செய்தார்களோ, அவர்களுக் கெல்லாம் நன்றி காட்டுவது; மூன்றாவது வட்டம் _ தான் உண்டு, தன் குடும்பம் உண்டு, தன் பெண்டு, தன் சுற்றம் என்கிற கடுகு உள்ளத்தோடு நடந்து கொள்ளாமல் தொண்டறம் என்ற வட்டம் _ மற்றவர்களுக்குத் தொண்டு செய்வது, உதவி செய்வதாகும்.

சமுதாயம் உங்களுக்குக் கொடுத்ததை நீங்கள் சமுதாயத்துக்குத் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று கூறினார். மணமக்களை உறுதிமொழி கூறச்செய்து சுயமரியாதைத் திருமணத்தை தமிழர் தலைவர் நிறைவேற்றி வைத்தார். தாலி தவிர்க்கப்பட்டது.

இறுதியில் திருப்பத்துர் மு.ந.அன்பழகன் நன்றி கூறிட சிறப்பான மதிய விருந்துடன் விழா வெகு நேர்த்தியாக நடந்தேறியது. உற்றார், உறவினர்கள், கழகக் குடும்பத்தினர் பல்துறைகளைச் சேர்ந்த பெருமக்கள் ஏராளமானவர்கள் வருகை தந்திருந்தனர்.

http://www.viduthalai.com/20100607/news11.html

கொரட்டூர் வை. செயபாலன் _ செ. தேன்மொழி ஆகியோரின் மகன் செ. சந்திரகுமாருக்கும், இ. மகேசுவரன் _ நந்தினி ஆகியோரின் மகள் எம். சொப்னாவிற்கும் வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழாவினை தமிழர் தலைவர் கி. வீரமணி நடத்தி வைத்தார். உடன் கழகப் பொருளாளர் வழக்கறிஞர் கோ. சாமிதுரை, லெப்டினன்ட் கர்னல் துரைராமன் (ஓய்வு) திருமதி மோகனா வீரமணி, கோ. செல்வமணி, தேசிங்குராஜன் உள்ளனர் (7.6.2010).

தமிழர் தலைவர் நடத்தி வைத்த மணவிழாக்கள்

திரைப்பட இயக்குநர் எஸ்.பி. ஜனநாதனுக்கு தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்தார். வி. சந்திரசேகரன்_ சி. உமாமகேசுவரி ஆகியோரது வாழ்க்கை இணைநல ஏற்பு விழாவினை தமிழர் தலைவர் நடத்தி வைத்தார் (திருவாரூர், பூந்தோட்டம், 30.1.2010).

ஆ. பெரியார் அரசு _ ஈ. ஜோதி ஆகியோரது வாழ்க்கை இணைநல ஏற்பு விழாவினை தமிழர் தலைவர் நடத்தி வைத்தார். உடன் மதுரை மாநகர மேயர் தேன்மொழி கோபிநாதன், நன்மாறன் எம்.எல்.ஏ., மற்றும் முக்கிய பிரமுகர்கள் உள்ளனர் (மதுரை, 31.1.2010).

மு. ரமேசு _ இ. சிவசங்கரி ஆகியோரது வாழ்க்கை இணைநல ஏற்பு விழாவினை தமிழர் தலைவர் நடத்தி வைத்தார். சட்டமன்ற உறுப்பினர்கள், தொழிலதிபர்கள் உடன் உள்ளனர் (மதுரை, 31.1.2010).

ரா. சுதேஷ்பாபு _ ஸ்வீட்டி ஏஞ்சலின் பிளாரன்ஸ் ஆகியோரின் மண விழாவினை துணை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நடத்தி வைத்தார். தமிழர் தலைவர் கி. வீரமணி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்துரை வழங்கினர் (சென்னை, 1.02.2010).

தைபூசம், பெரியார் மற்றும் பகுத்தறிவு!

பிப்ரவரி 1, 2010

தைபூசம் (விடுதலை 01-02-2010)

ஆதாரம்: குடிஅரசு, 19.1.1936

கோயில்களில் தைபூசம் என்பதுபற்றி ஏடுகளில் பிர-மாதமாக செய்திகள் வெளி-யிடப்படுகின்றன. அதிலும் பழனியில் தைபூசம் என்-றால் அதற்குத் தனி மவு-சாம். பக்தர்கள் போட்டி போட்டுக் கொண்டு திரள்-வார்கள்.

தை பூசத்தன்று காவடி எடுப்பதுதான் பிரசித்தம். காவடிகளில் பல வகை உண்டு; பால் காவடி, இள-நீர் காவடி, புஷ்பக் காவடி, கரும்புக் காவடி என்று எடுப்பார்களாம்.

அவரவர்களும் அன்-றாட சாப்பாட்டுக்கே காவடி எடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். இந்தியா-வில் 77 சதவிகித மக்-களின் நாள் வருமானம் ரூ.20 தானாம். இந்த யோக்கியதையில் கோயில்-களுக்குக் காவடிகள் எடுப்-பதில் மட்டும் குறைச்சல் இல்லை.

பழனிக்குக் காவடி எடுத்துக்கொண்டு போனால் கொன்ற பாம்பு, அறுத்துச் சமைத்த கோழி, சமைக்கப்பட்ட மீன் ஆகி-யவை உயிர் பெற்று விடு-கின்றன என்றெல்லாம்கூட கொட்டி அளப்பது உண்டு.

தந்தை பெரியார் வாழ்-வில் ஒரு சுவையான சம்-பவம் உண்டு.

நீதிக்கட்சியின் முதல-மைச்சராய் இருந்தாரே முனுசாமி நாயுடு அவர், சி.எஸ். இரத்தினசபாபதி முத-லி-யார், தந்தை பெரியார் ஆகியோர் பழனிக்குச் சென்றார்கள். பெரியார் அடி-வாரத்தில் இருந்து கொண்-டார்; மற்றவர்கள் மலைக்-குச் சென்றார்கள்.

இந்தச் சமயத்தில், அடி-வாரத்தில் ஒரு விபூதிக் கடைக்காரன் இரண்டு சேவல்களை தன் கடை-முன் கட்டி, அதன்மீது மஞ்-சள், குங்குமம் தெளித்து, வெற்றிலை பாக்கை முன்-னால் வைத்து ஒரு உண்-டி-யலும் வைத்திருந்தான். ஒரு கூட்டம் பய பக்தி-யாக சேவலைக் கும்-பிட்டு, உண்டியலில் காசு-களையும் போட்டுச் சென்-றது.

இதுகுறித்து அந்தக் கடைக்காரனிடம் பெரியார் விசாரித்தபோது,

இந்தச் சேவல்கள் நேற்று வந்த சோதனைக் காவடியின் அருள் என்று கூறினான்; அதாவது அறுத்-துச் சமைத்து காவடியில் கட்டிக் கொண்டு வந்த சேவல்கள் இவை கடவுள் அரு-ளால் இந்தச் சேவல், கோழிகள் உயிர் பெற்று-விட்டன என்று விளக்கி-னான்.

அந்த நேரத்தில் மேலே மலைக்குச் சென்ற பெரி-யாரின் அந்த இரு நண்-பர்களும் அங்கு வந்து சேர்ந்தார்கள். அவர்-களைக் கூப்பிட்டு கடைக்-காரன் சொன்ன தகவலை விளக்கிக் கேலி செய்தார் பெரியார்.

அவர்கள் இருவரும் சிரித்துவிட்டு, இப்படிப்-பட்ட ஆட்கள் உங்கள் பிரச்-சாரத்துக்கு அனுகூலம் செய்து விடுகிறார்கள் என்று கூறி, நாங்கள் எல்லாம் பக்தர்கள்தான் என்-றாலும், இதுபோன்ற-வற்றை நம்பமாட்டோம் என்று சொன்னார்களாம்.

(ஆதாரம்: குடிஅரசு, 19.1.1936)

இது எப்படியிருக்கு?

– மயிலாடன்

விமர்சனம்:

இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டு பொருட்கள் வெளிநாடுகளுக்குச் செல்கின்றன / ஏற்றுமதியாகின்றன. வெளிநாடுகளினின்று இங்கு வரும்போது அதை வாங்கி வருகின்றனர். அமெரிக்காவில் வாங்கினேன் என்று கொடுக்கிறார்கள்!

ராமகிருஷ்ணன் இந்தியாவில் இருந்தபோது கண்டுகொள்ளவில்லை. இப்பொழுதோ, இந்தியர் / தமிழர் என்றேல்லாம் மேலே-மேலே விழுகின்றனர்.

மழை வரும் என்றபோது, வருவதில்லை. வராது என்றால் வருகிறது!

விலைவாசி குறையும் என்கிறர்கள், ஆனால், உயர்ந்து கொண்டே இருக்கிறது!!

பனி உருகல், கடலேற்றம்……………………பற்றி ஏதோதோ சொன்னார்கள், ஆனல் இப்பொழுது அவையெல்லாம் அப்படியில்லை என்கிறார்கள்!

கொசுக்களை வைத்து கொசுக்களின் வியாதிகளைக் கொல்லுவோம் என்று தினமும் கோடிக்கணக்காக மரபணு மாற்றம் செய்யபட்ட கொசுக்களை உற்பத்தி செய்து புழகத்தில் விடுகிறார்கள். ஆனால், அதனால், கொசுக்கள் தானே அதிகமாகிறது? இதற்கு பகுத்தறிவோ, விஞ்ஞானமோ என்ன சொல்லப்போகிறது?
செய்வதைச் சொல்லுவோம், சொன்னதைச் செய்வோம் என்றார்கள். ஆனால், இப்பொழுது, சொல்வதும் இல்லை, செய்வதும் இல்லை.