Archive for நவம்பர், 2009

தமிழர்களே உங்களுக்கு புத்தி இல்லையா?

நவம்பர் 29, 2009

வரலாற்றுச் சுவடுகள்: தமிழர்களே உங்களுக்கு புத்தி இல்லையா?

http://viduthalai.periyar.org.in/20091129/news12.htmlதமிழ்நாடும் தமிழ் மக்களும் மனிதத் தன்மை-யாகிய சுயமரியாதையை இழந்து மிருகங்களிலும் பூச்சி புழுக்களிலும் கேவலமாய் வாழவும் நிலைமை ஏற்பட்டதற்கு முக்கிய காரணங்களில் பார்ப்பன மதமாகிய இந்து மதமும் அம்மத ஆதாரங்களாகிய வேதம், சாஸ்திரம், ஸ்மிருதி, புராணம் முதலிய ஆபாச புரட்டுகளே முக்கிய காரணம் என்று வெகுநாளாகச் சொல்லி வருகிறோம். அநேக விதங்களில் அறிவைக் கொண்டும் அனுபவங்களைக் கொண்டும் யாவருக்கும் நன்றாய் விளங்கும்படி விவரமாய் எழுதியும் வந்திருக்கின்றோம். இவற்றை மறுத்து இதுவரை யாரும் எவ்வித சமாதானமும் சொல்லாமல் மதம் போச்சு, நாதிகமாச்சு, தெய்வம் போச்சு என்று பொய் அழுகை அழுகிறார்களேயல்லாமல் சற்றாவது கவனித்துப் பார்த்து இதற்கு என்ன செய்ய வேண்டும் இனி எப்படி நடந்து கொள்ள வேண்டும்? என்பதைப்பற்றி ஒருசிறிதாவது கவலை கொள்ளாமல் இருப்பதுடன் செய்ய முயற்சிப்பவர்களையும் காலைவாரி விட சூழ்ச்சிகள் நடந்த வண்ணமாகவும், எதிர் பிரச்சாரங்கள் நடந்த வண்ணமாகவும் இருந்து வருகின்றன.

அன்றியும் முன்னையை விட பார்ப்பனப் பிரச்சாரமும் பலமாய் நடந்து வருகின்றது. என்னே, தமிழர்களின் மானங்கெட்ட தன்மை!

தமிழ் மக்களில் பலர் படித்தவர்கள் என்றும், பண்டிதர்களென்றும், வித்துவான்கள் என்றும், ஆராய்ச்சிக்காரர்கள் என்றும், சீர்திருத்தக்காரர்கள் என்றும் சொல்லிக் கொண்டு வெளியில் புறப்பட்டு புத்தகம் எழுதுவது மூலமும், புராண பிரசங்க மூலமும், ஆராய்ச்சி மூலமும், சீர்திருத்தப் பிரச்சாரம் மூலமும், பத்திரிகையின் மூலமும் தமிழ் பாஷையைப் பரப்புவ தென்பதன் மூலமும் மற்றும் பலவழிகளில் பார்ப்பன மதப்பிரச்சாரங்களையே மேலும் மேலும் செய்கின்றார்களே யொழிய வேறு ஒரு காரியமும் செய்ய அறிவும் ஆற்றலும் இல்லாதவர்களாகவே இருக்கிறார்கள். இந்த உபத்திரவம் போதாமல் இப்பொழுது சினிமாக்களும் நாடகக்காரர்களும் பாராட்டுக்காரர்களும் உபந்நியாசகாரர்களும் இப்பார்ப்பனப் பிரச்சாரத்தையே கைப்பற்றி தினமும் கோடிக்கணக்கான மக்களுக்கு புராணப் பிரச்சாரம் செய்து வருகின்றார்கள்.

அன்றியும் சமீப காலமாக நமது நாட்டில் உள்ள எல்லா பத்திரிகைகளும் அறிந்தோ அறியாமலோ இதே வேலையையே செய்து வருகின்றன எந்தவாரப் பத்திரிகையின் முகப்பைப் பார்த்தாலும் ஆரியப் புராணப் புளுகுகளைப்பற்றி வியாக்கியானம் பண்ணுவதும், அதற்கு விசேஷ அர்த்தமும், தத்துவார்த்தமும் சொல்லுவதும், எழுதி வைத்தவர்-களைப் புகழ்வதுமாகவே இருக்கின்றன. எந்த தினசரிப் பத்திரிகையைப் பார்த்தாலும் பார்ப்பன மதக் கொள்கை-களைப் பிரச்சாரம் செய்யத்தக்க வண்ணம் ஆரியக் கதைகளையே விளக்கி வருகின்றது.

ஆனால் ஒவ்வொரு பத்திரிகையும் ஏன் தான் இந்த காரியம் செய்கின்றது என்பதைக் கவனிக்கும்போது தான் நமது மனம் பதறுகின்றது.

அன்றியும் இந்தக் கொடுமைக்கு இன்னதுதான் பரிகாரம் என்பது நமக்கு விளங்கவில்லை. தேவஸ்தான மசோதா வந்தக் காலத்தில் கூட எல்லா பார்ப்பன-ரல்லாத பத்திரிகைகளும், பார்ப்பனர்களையும் பார்ப்பன பத்திரிகைகளையும் பின்பற்றி அம்மசோதாவினால் ஒரு காதொடிந்த பலனும் ஏற்படுவதற்கில்லாமல் செய்து-விட்டன. திராவிடன் ஒன்று மாத்திரம் தைரியமாய் உண்மையாய் பிரச்சாரம் செய்துவந்தது. ஆனாலும் ஒரு பயனும் உண்டாகவில்லை. தவிர தற்சமயம் முக்கிய பிரச்சினையாய் இருக்கும் சுவாமிக்காக தமிழ் பெண்களை பொட்டுக்கட்டி விபச்சாரத்திற்கு அனு-கூலமாக்கினதை ஒழிக்கச் செய்யும் பிரயத்தனத்தையும், பக்குவமறியாக் குழந்தைகளைப் பெண்ஜாதி புருஷர்களாக ஆக்கி குரங்கு குட்டிகள் போல பிள்ளைகள் பெற்று மிருகப் பிராயத்திற்கு போய்க் கொண்டிருக்கும் நிலையைத்தவிர்க்கச் செய்யும் பிரயத்தனங்களையும் அடக்க பார்ப்பனர்கள் செய்யும் இடையூறுகள் ஒன்றல்ல, பல. கொஞ்ச காலமாக சுதேச மித்திரன் முதலிய தினசரி பத்திரிக்கையில் இதே விஷயங்கள் வெளியாகின்றன. சங்கராச்சாரியர்களும், பண்டிதர்களும், சாஸ்திரிகளும், வைதீகர்களும் தினம் ஒவ்வொரு இடத்தில் மீட்டிங்குகள் நடந்ததாகப் பேர் செய்து இவ்விரு காரியங்களையும் மறுத்து கண்டித்து தீர்மானங்கள் செய்ததாக எழுதி வருவதும், பொதுமக்கள் ஏமாறும்படி கடவுள் சொன்னதாகவும் தேவர்கள் சொன்னதாகவும் ரிஷிகள் சொன்னதாகவும் அசரீரி சொன்னதாகவும் அநேக விஷயங்களை எடுத்து எழுதுவதுமாய் இருக்கின்றார்களே! இதை யாராவது கவனிக்கின்றார்களா? என்று கேட்கின்றோம்.

இது தவிர பள்ளிக்கூட டெக்ஸ்ட் பாடப்புதகங்கள் என்று அநேக பார்ப்பனர்களும் சுயமரியாதையும் அறிவும் இல்லாத சில பார்ப்பனரல்லாதார்களும், ராமாயணம், பாரதம், பாகவதம், கந்தப்புராணம் பெரிய புராணம், அருணாசலப்புராணம், திருவிளையாடல் புராணம், முதலிய குப்பை கூளங்களின் பேரால் சிறு-சிறு கதைப்புத்தகமும் எழுதி சிறு குழந்தைகளுக்கு பார்ப்பன விஷத்தை ஊட்டுவதும் சகிக்கக் கூடியதாயில்லை.

எந்தப் புத்தகத்தைப் பார்த்தாலும் ஆரியர் மேலோர் என்பதும், பிராமணன், க்ஷத்திரியன், வைசியன், சூத்திரன், பஞ்சமன் என்பதும் தென்னாட்டில் ஒரு முரட்டு ஜாதியர் காட்டுமிராண்டிகளாய் இருந்தார்கள், அவர்களைத்தான் வானரங்கள் என்று சொல்லப்படுவது என்றெழுதுவதும், ஆரியர் தென்னாட்டிற்கு வந்த பிறகே தமிழ் மக்கள் மனிதத் தன்மையை அடைந்தார்கள் என்று எழுதியதுமான புத்தகங்களைப் படிக்கச் செய்வதே இப்போது தேசீயப் படிப்பாக மாறி வருவதும் நினைக்க நினைக்க வயிறெல்லாம் பற்றி எரிகின்றது. இன்னும் பல வழிகளில் தமிழர்களை இழிவுபடுத்தியிருக்-கின்-றார்கள். அவைகளையெல்லாம் இதில் எழுத மனம் வெட்-கப்படுகிறது. இதற்கு என்ன வழி என்று யார் சிந்திக்கிறார்கள். பார்ப்பனர்களுடைய முகக்கோணலை பொறுத்துக்கொள்ள தமிழ் மக்களில் ஆட்கள் இல்லை-யென்றால் அந்த சமூகம் வாழுவதால் பயன் என்ன? என்று கேட்கின்றோம். பார்ப்பனரல்லார்களில் வயிற்றுக்கில்லாத கூலிகளின் செய்கைகளைப்பற்றி நாம் பிரமாதமாய் இதில் எழுத வரவில்லை.

வயிற்றுக்கு தாராளமாய் கிடைக்கத்தக்க தொழிலையும் தனி சம்பாத்தியத்தையும் சொத்துகளையும் நிலையை-யும் வைத்துக் கொண்டிருக்கும் ஆசாமிகள் பார்ப்பனப் பிரச்சாரங்கள் செய்யும் முட்டாள் தனத்திற்கு நாம் என்ன சமாதானம் செய்து கொள்ளக்கூடும் பார்ப்பன-ரல்லா அரசர்களில் பெரும்பகுதியார் பார்ப்பனர்-களுக்குப் பிள்ளையாய் பிறக்கக் கருதுகிறார்களே-யொழிய பார்ப்பன மதக் கொடுமையில் தமிழ் மக்கள் அனுபவிக்கும் இழிவைப்பற்றி கருதுகிறார்களா? என்று பார்த்தால் அதுவும் ஒரு சிறிதும் இல்லை.

பார்ப்பனரல்லாத ஜமீன்தார்கள் பிரபுக்கள் லேவா தேவிக்காரர்கள், வியாபாரிகள் என்போர்களோ ஏழைகளை வதைத்துப் பட்டினி போட்டு ஏமாற்றிக் கொள்ளையடித்து பல லக்ஷக்கணக்கான சொத்துக்-களைச் சேர்த்துக் குட்டிச்சுவர்களாக விளங்கும் கோவில்களைக் கட்டுவதும் அங்கு பார்ப்பனத் திருவிழா செய்வதும் பார்ப்பன மதப்பிரச்சார பள்ளிக் கூடங்கள் வேத பாடசாலைகள் கட்டுவதும் பார்ப்பனர்கள் சாப்பிட சத்திரங்கள் கட்டுவதான கொடுமைகளைச் செய்வ-தற்காகவே தங்கள் பணங்களை உபயோகிக்கின்றார்கள். பார்ப்பனரல்லாத உத்தியோகஸ்தர்களோ தங்கள் செல்வாக்கு முழுவதையும் பார்ப்பன நன்மைக்கே உபயோகிக்கிறார்கள். இல்லாவிட்டால் அவர்களுடைய உத்தியோகத்திற்கும் வாழ்வுக்கும் ஆபத்தாய் முடிந்துவிடுகின்றது. பார்ப்பனரல்லாத சன்னியாசிகளின் சங்கதி சொல்லவே வேண்டியதில்லை எனலாம். சுருங்கக் கூறினால் இயற்கைக்கு விரோதமான இன்பத்தை அனுபவிப்பதே அவர்களது ஸ்தபசாகிவிட்டது. இனி மீதி இருக்கும் பாமர மக்களோ மேல்கண்ட பெரிய ஆசாமிகள் என்பவர்கள் நடப்பதைப் பார்த்தும் அவர்களைப் பின்பற்றி மேலும் மேலும் தங்களை உயர்ந்த ஜாதியான் என்றும் பக்திமான் என்றும் சனாதன இந்து என்றும் சொல்லிக் கொள்வதற்கே ஆசைப்பட்டு விபூதியையும் நாமத்தையும் பூசிக் கொள்ளுவதும் யாத்திரையும் சடங்கும் செய்வது-மான வாழ்க்கையிலேயே தமது சம்பாதனையை கூடப் போடுவதுமாய் இருக்கின்றார்களே யொழிய அய்யோ பாவம்! மனிதத் தன்மை இன்னது என்பதைப்பற்றி ஒரு சிறு கவலையும் இல்லாதவர்-களாய் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் இந்த நிலையில் தமிழ் மக்களின் சுயமரியாதை எங்கே இருக்கின்றது? எப்பொழுதுவரும் என்பதைப்பற்றி சற்று யோசித்துப் பாருங்கள் நேயர்களே!

உங்கள் மனம் பதற வில்லையா? உங்கள் அறிவு வெட்கப்படவில்லையா? நீங்களும் மக்கள் என்று எண்ணிக் கொள்ள உங்கள் எண்ணம் இடம் கொடுக்-கின்றதா? உலகத்தில் மானமற்ற மக்கள், ஈனம் உற்ற மக்கள் சுயமரியாதை இன்னதென்று உணராத மக்கள் என்பவர்கள் எங்கிருக்கின்றார்கள்? அவர்கள் யார்? என்பதை சற்று நிதானமாய் தேடிப்பார்த்தால் உங்களைத் தவிர வேறு யாரையாவது கண்டு பிடிப்பார்களா? போதும்! போதும்! இனியாவது உங்கள் முயற்சியை சற்று சுயமரியாதைப் பக்கம் திரும்புங்கள்! தேசீய நரகத்தில் அழுந்தாதீர்கள்! கடைந்தெடுத்த அயோக்கியர்-களுக்கும் துரோகி-களுக்கும் பிழைப்புக்காரர்-களுக்-கும் அறிவிலி-களுக்-கும். அதை விட்டுவிடுங்கள். தமிழ்த்தாயின் மானத்-தைக் காப்பாற்ற முன்வாருங்கள்.

சமீப காலத்தில் நடைபெற வேண்டிய சுய-மரியாதை சத்தியாக்கிரகத்திற்கு வரிந்து கட்டி முன் நில்லுங்கள், உங்கள் விண்ணப்பங்களில் உங்கள் ரத்தத்தைக் கொண்டு கையெழுத்துச் செய்து அனுப்புங்கள். உங்கள் சொத்துக்கள் என்பதில் ஒரு பகுதியை இப்போதே ஒதுக்கி வைத்து விடுங்கள். புரட்டுப்பிரச்சாரங்களை வெறுத்துத் தள்ளிப் பாமர மக்களுக்கு உண்மை இன்னது, போலி இன்னது, சத்தியம் இன்னது பொய் இன்னது என்று உணரும்-படி செய்யுங்கள்! சுயமரியாதைக்கு உழைக்கும் உண்மைப் பத்திரிகைகளை எல்லா தமிழரும் படிக்கும்படி செய்யுங்கள்! இனி உறங்காதீர்கள்! பார்ப்பனர்களின் மதத்தின் மூலமாக புராணங்கள் மூலமாக அதில் உழலும் பண்டிதர்கள் மூலமாக அரசியல் பார்ப்பனரல்லாதார்கள் மூலமாக தமிழ் மக்கள் தலை எடுக்கக் கூடும் என்றோ அல்லது சுயமரியாதை அடையக்கூடும் என்றோ நினைப்பதை அடியோடு மறந்து விடுங்கள்! மறந்து விடுங்கள்!

_- குடிஅரசு, 19.02.1928

பக்ரீத் அன்று கோவிலில் கழிவு-வீசல், அவமதிப்பு!

நவம்பர் 29, 2009

பக்ரீத் அன்று கோவிலில் பீ-வீசல், அவமதிப்பு!

இவ்வாறு தலைப்பிட்டால் என்னவாகும்?

எல்லாம் கருத்து சுதந்திரம் தானே?

பிறகு ஏன் “விடுதலை” வினோதமாக செய்திகள் வெளியிடுகின்றன?

அறிவு முற்றியதாலா, அறிவு பகுத்தறிவானதாலா, புகுந்து அறிந்ததால் புழுத்து விட்டதாலா?

கடவுள் ஒருவன் என்றால், நாத்திகனுக்கு எப்படி வெவ்வேறு கடவுள்கள் இருக்கமுடியும்?

அத்தகைய “பல கடவுள்கள் நாத்திகம்” கூடாது  என்பதினால்தான் “ஒருகடவுள் எதிர்ப்பு நாத்திகத்தை” பெரியார் பேசும் சீடர்கள் அல்லது பக்தர்கள் கடைப் பிடிக்கிறார்களா?

இன்று “தினமலர்” செய்தி இவ்வாறு உள்ளது:

“விடுதலை” செய்தியோ இப்படி:

மூடநம்பிக்கையின் முடைநாற்றம்பாரீர்!

விநாயகன் கோயிலுக்குள் செருப்பு, துடைப்பம் வீச்சு: தூணிலும் இருப்பார் துடைப்பத்திலும் இருப்பார்

http://viduthalai.periyar.org.in/20091129/news21.html

திருநெல்வேலி, நவ. 29_- திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை மேலூர், பெரியசாமி தெருவில் பாலசக்தி விநாயகர் கோயில் உள்ளது. நேற்று இரவில் அந்தக் கோயில் இரும்பு கிரில் கதவில் யாரோ சிலர் செருப்பு, துடைப்பம், ஆகியவற்றை தொங்கவிட்டுள்ளனர். ஆட்டு மலத்தை கோயிலுக்குள் வீசியுள்ளனர். அதே பகுதியில் உள்ள வடக்கத்தியம்மன் கோயில் முன்பு இருந்த கருப்பசாமி பீடத்தின் பைரவர் சிலையையும் தூக்கி, கால்வாயில் வீசியுள்ளனர். செங்கோட்டை காவலர்கள் வழக்குபதிவு செய்து விசாரிக்கின்றனராம். எல்லாமே அவன் செயல்.

இதோ மற்றுமொரு செய்தி “தினமலரில்”:

அதை அப்படியே காபியடித்து போடுகிறது “விடுதலை”, ஆனால் மேலே குறிப்பிட்டபடி எந்த விமர்சனமும் இல்லை! ஏனெனில் கிருத்துவர்கள் இவர்களது நண்பர்கள்!

பெண்ணை கடத்திய பாதிரியார் கைது

http://viduthalai.periyar.org.in/20091129/news21.html

சேத்தூர், நவ. 29_- ராஜபாளையம் அருகே பெண்ணை கடத்திய பாதிரியார் உள்பட இரண்டு பேரை காவலர்கள் கைது செய்தனர். ராஜ-பாளையம் வடக்கு மலையடிப்பட்டியைச் சேர்ந்தவர் ஞானசேகரன்; சேத்தூர் மேட்டுப்-பட்டி தூய பவுல் தேவாலயத்தில் பாதிரியராக இருக்கிறார். மேட்டுப்பட்டியைச் சேர்ந்த கருப்பன் மகள் தங்கேஸ்வரி. சர்ச்சுக்கு வந்தபோது பாதிரியாருக்கும் இவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நேற்று முன்தினம் மாலை தங்கேஸ்வரி வீட்டுக்கு வந்த பாதிரியார், அவரை வேனில் கடத்தினார். தங்கேஸ்வரியின் அண்ணன் இசக்கிமுத்து, சேத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். பாதிரியாரையும், வேன் ஓட்டுநர் அலாவுதீனையும் காவல்துறை ஆய்வாளர் ஜெயக்குமார் கைது செய்தார்.

அதே “விடுதலை”யில் மற்றொரு செய்தி [பக்கம்.6]! வங்கதேசத்தில் படகு கவிழ்ந்து 49 பேர் பலி

ஈத் பண்டிகை கொண்-டாட்டத்தையொட்டி சுமார் 1,500 பயணிகள் டாக்காவிலிருந்து போலா நோக்கி சென்ற படகில் தங்களது சொந்த ஊருக்கு திரும்பிக்-கொண்-டிருந்தனர். அந்த படகு போலா பகுதியை நெருங்கிக் கொண்டி-ருந்தபோது அதன் பின்பகுதி திடீரென நீரில் மூழ்கி விபத்துக்-குள்ளானது.

இந்தியாவை அதிரவைக்-கும் அளவுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படாது என்றார்.

http://viduthalai.periyar.org.in/20091129/news15.html

 

டாக்கா, நவ. 29_- வங்கதேசத்தில் படகு ஒன்று கவிழ்ந்து விபத்-துக்-குள்ளானதில் அதில் பயணம் செய்த 49 பேர் நீரில் மூழ்கி பலியா-னார்கள். வங்கதேசத்-தின் தென்மேற்கு பகுதி-யிலுள்ள நஸீர்பூர் பகுதி-யில் இந்த விபத்து நிகழ்ந்தது.

ஈத் பண்டிகை கொண்-டாட்டத்தையொட்டி சுமார் 1,500 பயணிகள் டாக்காவிலிருந்து போலா நோக்கி சென்ற படகில் தங்களது சொந்த ஊருக்கு திரும்பிக்-கொண்-டிருந்தனர். அந்த படகு போலா பகுதியை நெருங்கிக் கொண்டி-ருந்தபோது அதன் பின்பகுதி திடீரென நீரில் மூழ்கி விபத்துக்-குள்ளானது.

இதில் அந்த படகில் பயணம் செய்த பெண்-கள், குழந்தைகள் உள்பட 49 பேர் நீரில் மூழ்கி பலியானார்கள். இது-வரை 16 சடலங்கள் மீட்-கப்பட்டுள்ள நிலையில், மற்ற சடலங்களை தேடும் பணி தீவிரமாக மேற்-கொள்ளப்பட்டு வருவ-தாக காவல் துறை அதி-காரி ஒருவர் தெரிவித்தார்.

* “ஈத் பண்டிகை கொண்-டாட்டத்தையொட்டி சுமார் 1,500 பயணிகள் டாக்காவிலிருந்து போலா நோக்கி சென்ற படகில் தங்களது சொந்த ஊருக்கு திரும்பிக்-கொண்-டிருந்தனர்”.

இவர்களை ஏன் அல்லா காப்பற்றவில்லை என்றோ, அல்லது வேறுவிதமாகவோ விமர்சனம் இல்லையே? ஏன்?

இது எந்த நாத்திகத்தில் சேர்த்தி?

அய்யப்பன் பிறப்பு வளர்ப்பு தெரிந்தால் மாலை போடுவீர்களா?

நவம்பர் 29, 2009

அய்யப்பன் பிறப்பு வளர்ப்பு தெரிந்தால் மாலை போடுவீர்களா?

இது “விடுதலை” என்கின்ற திராவிட கழகத்தினரின் நாளிதழில் “ஓடும் நதி” என்ற பெயரில் மறைந்து கொண்டு யாரோ ஒரு இந்து-விரோதி எழுதி வெளிவந்த சிறு கட்டுரையாகும். இன்றும் (டிசம்பர் 2013) கீழ்கண்ட தளத்தில் இருக்கின்றது:

http://viduthalai.periyar.org.in/20091129/news22.html

அதனால் தான், கீழ் கண்ட குறிப்பையும் நவம்பர் 2009லேயே செர்த்திருந்தேன்.

இதோ, ஐயப்பன் பக்தர்களையும் விட்டுவைப்பதில்லை.வருடா வருடம் இதே மாதிரியான தூஷணங்கள்! ஆனால், யாரும் நடவடிக்கை எடுக்காததால், இப்படியே அச்சடித்து இப்பத்திரக்கை நடதத்தப் படுகிறது.இதன் ஆசிரியர் கே. வீரமணியோ ஒரு நிகர்-பல்கலைக் கழகம் வைத்து நடத்துகிறார்.அதில் வேலை செய்யும் பலர் மாலை அணிந்துள்ளனர். அவர்கள் என்ன செய்வார்கள்?

அவர்கள் என்ன நினைப்பார்கள்?

அங்கு படிக்கும் மாணவர்கள் என்ன நினைப்பார்கள்?

ஏனெனில் மாணவர்களில் பலரும் மாலை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்!!

குறிப்பு: ஐய்யப்பப் பக்தர்களைப் புண்படுத்த இப்பதிவு செய்யப்படவில்லை. உண்மையில் நாத்திகவாதிகளின் மனப்பாங்கை எடுத்துக் காட்டி, அவர்களைன் போலித்தனத்தை எடுத்துக் காட்டவே நான் இப்பதிவை செய்துள்ளேன்.     

                                                                                                                  சென்னை, நவ. 29_ கேரளம் _ கேர என்ற மலையாள சொல்-லுக்கு தென்னை என்று பெயர். கேரளம் என்றால் தேங்காய் விளைகிற இடம் என்று பெயர். சந்தேகமாக இருந்-தால், உங்களுக்குத் தெரிந்த மலையாள சேட்டான், சேச்சியிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். கேரளாவிலிருந்து வந்த தேங்காயை, தமிழ்நாட்-டுத் தமிழன் விலைக்கு வாங்கி, தலையில் இரு-முடிகட்டி திரும்பவும் எங்கிருந்து வந்ததோ, அங்கேயே பக்தியின் பெயரால் கொண்டு போய் சேர்கிறான். அந்த தேங்காய்களை சபரிமலை கோவில் நிர்-வா-கமும் ஏதாவது எண்-ணைய் எடுக்கிற நிறுவனத்-திற்கு மொத்த விலைக்கு விற்று விடுகிறது. அந்த நிறுவனங்கள் தமிழ்-நாட்-டில் சிறு சிறு பாக்கெட், பாட்டில்களில் தேங்காய் எண்ணையை அடைத்து வந்து விற்கிறது. தேங்-காயை விலைக்கு வாங்-கிய தமிழன்,அதே தேங்-காயை, எண்ணைய் என்ற வடிவத்தில் திரும்ப-வும் விலைக்கு வாங்கு-கிறான். அதாவது புரிகிற மாதிரி சொல்வது என்-றால், ஒரு பொருளை இரண்டு முறை விலைக்கு வாங்குகிறான். கேரளக்காரன் தமிழ-னின் தலையில் இப்படித்-தான் மிளகாய் அரைக்-கிறான்! அய்யப்பனுக்கு மாலையணிந்து கோவி-லுக்கு போய் திரும்பும் வரை மிகவும் ஒழுக்கமாக நடந்து கொள்ள வேண்-டும் சரியாகச் சொன்-னால், கோயிலுக்குப் போய் திரும்பும் வரைக்கு-மாவது நல்லவர்களைப் போல நடியுங்கள் என்-கிறார்கள்! கேரள அய்யப்பனுக்கு மாலை போட்டுப் போகிற தமிழர்கள் தயவு செய்து அய்யப்பனின் பிறப்பு, வளர்ப்பு கதையை படித்த பிறகு,தைரியம் இருந்தால் அதற்கு பிறகு மாலை போடுங்கள்! எவ்வளவுக் எவ்வளவு அசிங்கங்-கமாக, கேவலமாக இருக்க வேண்டுமோ, அவ்வள-வுக்கு அவ்வளவு ஆபாச-மாக இருக்கிறது, அய்யப்-பனின் பிறப்பு வளர்ப்பு வரலாறு! அவைகளை படித்தால் ஒழுக்கக் கேடு-கள் தான் நாடெங்கும் தலை விரித்தாடும்..! கேரளா கிறித்தவர்கள் அதிகம் நிறைந்த மாநிலம்.

அதாவது அய்யப்பன் பிறந்து வளர்ந்து கிழித்த-தாக கூறப்படும் கேரளத்-தில், கேரள மக்கள் அய்யப்-பன விட இயேசு கிறிஸ்துவைத் தான் அதிகம் பின்பற்று-கிறார்-கள்! இது ஒன்று போதாதா? அய்யப்பன் வெறும் பொய்யப்பன் என்று புரிந்து கொள்ள… அதா-வது தன்னை சிலுவை-யில் உயிரோடு அறைந்த போது தன்னையே காப்-பாற்றிக் கொள்ளாத இயேசு தான் இவர்களை காப்பாற்றும், சக்தி வாய்ந்த கடவுளாம்! கொடுமைடா சாமி! நீங்கள் சொல்வதெல்-லாம் சரிதான்ங்க, ஆனால் நம்மை மீறிய சக்தி ஒன்னு இருக்கு, அதுக்கு பெயர் தான் கடவுள் என்பர்களே! கடவுளின் பெயரால் இந்த கேணத் தனங்கள், எதற்கு? கடைசியாக உங்களிடம் வேண்டிக் கொள்வ-தெல்-லாம், ஒன்றே ஒன்று தான்! தமிழர்களே! தமிழர்-களாக இருங்கள்!!

நன்றி: ஓடும் நதி

பின்குறிப்பு: இந்த இடுகை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இடப்பட்டது. நாத்திகம் என்ற போர்வையில், வீரமணி எப்படி தூஷணம் செய்கிறார் என்பதைத்தான் எடுத்துக் காட் ட அவ்வாறு செய்யப்பட்டது. கோடிக்கணக்கான பக்தர்களின் உணர்வுகளைப் புண்படுத்தக் கூடாது என்ற எண்ணம் அந்த மெத்த “படித்த” மேதாவிக்கு, நிகர்நிலை பல்கலைக்கழக வேந்தருக்குத் தெரியாமல் இருப்பதையும் எடுத்துக் காட்டப்பட்டது. இப்பொழுதும் இதற்கு பதில்கள் வருவதால், இக்குறிப்பு சேர்க்கப்பட்டுள்ளது.

 2009லிருந்து 2013 வரை படிப்பவர்கள் இதனை முழுவது படிக்காமலேயே, என்னை திட்டி பதில்களை பதிவு செய்து வருகிறார்கள்.

ஆகவே, தயவு செய்து முழுமையாக படித்து விட்டு பதிலை இடுங்கள் .

வேதபிரகாஷ்

04-12-2013

கார்த்திகைக்கு இந்துக்களுக்கு மற்றுமோர் பரிசு: “பக்ரித்”திற்கு பின்னே!

நவம்பர் 29, 2009

கார்த்திகை தீபம்: தந்தை பெரியார்

மதத்தின் பெயரால் ஏற்பட்ட பண்டிகைகளின் மூலமாகவே நமது நாட்டுச் செல்வங்களும், மக்களின் உழைப்பும் பெரிதும் வீணாகிக் கொண்டு வருகின்றன என்பதை பல தடவை எடுத்துக்காட்டிப் பேசியும், எழுதி-யும் வருகிறோம்.

எவ்வளவு பேசினாலும், எவ்வளவு எழுதினாலும் நமது மக்களுக்கு இன்னும் அப் பண்டிகைகளில் உள்ள அபிமானமும், மூட நம்பிக்கையும் ஒழிந்தபாடில்லை.

அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்பதைப் போல், அடிக்கடி அவற்றின் புரட்டுகளை வெளிப்-படுத்தி வருவதனால், நமது மக்களுக்கு அவை-களின் உண்மை விளங்கக்கூடும் என்று கருதியே நாமும் இடைவிடாமல் எழுதிக் கொண்டு வருகிறோம்.

சென்ற மாதத்தில்தான் நமது நாட்டின் செல்வத்தைக் கொள்ளை கொண்டு பாழாக்கிச் சென்ற தீபாவளிப் பண்டியைப் பற்றி எழுதியிருந்தோம்.

(வீடுகளுக்குள்ளும், வெளிப் புறங்களி லும், காடுகளிலும், மேடுகளிலும், குப்பைகளி லும், கூளங்களிலும் எண்ணற்ற 100, 1000, 10,000, 100,000 கணக்கான விளக்கு களைக் கொளுத்தி வைப்பதன் மூலம் செல வாகும் நெய், எண்ணெய்ச் செலவு எவ்வளவு!

கோயில்கள் என்பவைகளுக்குச் சொக்கப் பனை கட்டி நெருப்பு வைப்பதற்காகச் செலவு செய்யும் நெய், எண்ணெய், விறகு முதலிய வைகளுக்கு ஆகும் செலவு எவ்வளவு!

கார்த்திகைப் பண்டிகைக்காகத் திருவண்ணா மலை முதலிய ஊர்களுக்குப் பிரயாணஞ் செய்வதன் மூலமாகும் ரொக்கப் பணச் செலவு எவ்வளவு! அங்குக் கூம்புக்கு (சொக்கப் பனை) செலவாகும் விறகு, கற்பூரம், வெண் ணெய், நெய் ஆகியவற்றிற்காகும் செலவு எவ்வளவு!

இவ்வாறு பலவகையில் செலவு செய் யப்படும் கோடிக்கணக்கான பணங்களால் நமது நாட்டிற்குக் கடுகளாவாவது பயனுண்டா என்று ஆலோசித்துப் பாருங்கள்!

இன்னும் இப்பண்டிகையினால் மக் களுக்கு உண்டாகும் மூடநம்பிக்கையையும், அதனால் உண்டாகும் மூடப் பழக்க வழக்கங் களையும் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்!)

அப்பண்டிகையால் நமக்குக் கிடைத்த பயன் என்ன? தீபாவளியின் பெயரால் ஏறக்குறைய 20 கோடி மக்களா-வது பண்டிகை கொண்டாடி இருப்பார்கள். இவர்கள் பண்டிகையால் சுமார் 10 கோடி ரூபாய்க்குக் குறையாமல் பாழ்பட்டிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இந்தப் பத்துகோடி ரூபாயும், அனாவசியமாய் துணி வாங்கிய வகையிலும், பலகாரங்கள் செய்த வகையிலும், பட்டாசு வாங்கிப் பொசுங்கிப் புகையும் கரியுமாக ஆகிய வகையிலும் செலவாகியிருக்கும் என்பது மட்டுமல்ல; பண்டிகை நாளில் வருத்தமின்றிக் களித்திருக்க வேண்டும் என்பதைக் கருதி, ஏழை மக்கள்கள், சாராயம், பிராந்தி, விஸ்கி, ஜின், ஒயின், பீர், ராமரசம் முதலிய வெறும் பானங்களைக் குடித்துக் கூத்தாடிய வகையிலும் ஏராளமான பணம் செலவழிந்திருக்கும் என்பதை யாரும் மறுக்க முடியாது.

இந்தப் பண்டிகையினால் வெற்று நாளில் மறந்து போயிருந்த சாமிக்குப் படையல் போடத் தூண்டும் புராணக்கதை, மூடநம்பிக்கை மக்கள் மனத்தில் மறுபடியும் வந்து குடி புகுந்ததோடு, அவர்களுடைய செல்வமும் கொள்ளை போகும் நிலை ஏற்பட்டது.

இவ்வளவு மாத்திரம் அல்ல, தீபாவளிப் பண்டிகைக்கு விடுமுறை விட்டதன் பயனாய், தினக் கூலிக்கு வேலை செய்யும் ஏழை மக்களின் கூலியை இழந்ததோடல்-லாமல், கடன் வாங்கி நஷ்மடைந்தது எவ்வளவு? வேலை நடக்கும் தொழிற்சாலைகள் மூடப்பட்டு, அத-னால் தடைப்பட்ட காரியங்கள் எவ்வளவு!

தீபாவளிக்கு முன் சில நாட்களும் தீபாவளியைக் கருதி மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தாமல், விளையாட்டுகளிலும் வேடிக்கைகளிலும் கவனம் செலுத்திய காரணத்தால், அவர்களுடைய படிப்புக்கு நேர்ந்த கெடுதி எவ்வளவு! அரசியல் காரியங்கள் நடை-பெறுவதில் இந்த ஓய்வால் தடைப்பட்ட காரியங்கள் எவ்வளவு!

இவ்வளவு தொல்லைகளையும் உண்டாக்கிச் சென்ற தீபாவளிப் பண்டிகையின் ஆர்ப்பாட்டம் மறைந்து இன்னும் ஒரு மாதம் கூட ஆகவில்லை; சரியாக 15 நாள்களுக்குள்ளாகவே மற்றொரு சனியன் தொடர்ந்து வந்துவிட்டது.

இவ்வாறு தவறாமல் ஒவ்வொரு மாதமும் நமது நாட்டுச் செல்வத்திற்குச் சனியன் பிடிப்பது வழக்க-மாகவும், அவ்வழக்கம் தெய்விகம் என்று சொல்லப்படு-வதாகவும், மதத்தின் முக்கியப் பகுதி என்று சொல்லப்-படுவதாகவும் இருந்து வருகின்றது.

இப்பொழுது வரும் சனியனாகிய பண்டிகை கார்த்திகைத் தீபம் என்பதுதான்.

இந்தக் கார்த்திகைத் தீபப் பண்டிகையை ஒரு பெரிய தெய்விகம் பொருந்திய சிறந்த நாளாகக் கருதி இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதை இந்து மதத்தில் உள்ள சைவர், வைணவர், வீர சைவர், ஸ்மார்த்-தர் முதலிய எல்லாப் பிரிவினரும் கொண்டாடுகின்றனர்.

சாதாரணமாக, கார்த்திகை நட்சத்திரத் தினத்தைச் சுப்பிரமணியன் என்னும் சாமிக்கு உகந்த – சிறந்த நாளாகக் கருதியே பக்தர்கள் என்பவர்கள் விரதங்களும், பூசைகளும் நடத்தி வருகின்றனர். சாதாரண காலத்தில் வரும் கார்த்திகைகளை விட, கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகையே மிகவும் சிறந்த பண்டிகையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதன் பொருட்டுத் திருவண்ணாமலை முதலிய பல ஊர்களுக்கு யாத்திரை போய்ப் பணத்தைச் செலவு செய்துவிட்டுத் திரும்பும்போது, அங்கிருந்து வாந்தி பேதியைக் கொண்டு வருகின்றனர்.

ஒவ்வொரு மாதமும் கார்த்திகைக்காக, வைத்தீசுவரன்கோயில், குன்றக்குடி, திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், சுவாமிமலை முதலிய ஊர்களுக்கு மக்கள் சென்று செலவு செய்யும் செல்வங்களே பதினா-யிரக்கணக்காகவும் இலட்சக் கணக்காகவும் ஆகும்-போது, பெரிய கார்த்திகை என்று பெயர் பெற்ற கார்த்-திகை மாதப் பண்டிகை நாளில் செலவாகும் பொருள் கோடிக்கணக்கில் குறைவுபடுமா?

இதில் எவ்வளவு பொருள் வீணாக்கப்படுகிறது என்-பதை நினைத்துப் பாருங்கள்.

தீபாவளிக்காக வரவழைத்து விற்பனையாகாமல் கடைகளில் தேங்கிக் கிடக்கும் பட்டாசுகளுக்கு செலவு வந்து இந்தப் பட்டாசுகளின் மூலம் பணம் படபட-வென்று சத்தமிட்டு வீணாக்கப்படும்.

வீடுகளுக்குள்ளும், வெளிப்புறங்களிலும், காடு-களிலும், மேடுகளிலும், குப்பைகளிலும், கூளங்களிலும் எண்ணற்ற 100, 1000, 10,000, 100,000 கணக்கான விளக்குகளைக் கொளுத்தி வைப்பதன் மூலம் செலவாகும் நெய், எண்ணெய்ச் செலவு எவ்வளவு!

கோயில்கள் என்பவைகளுக்குச் சொக்கப்பனை கட்டி நெருப்பு வைப்பதற்காகச் செலவு செய்யும் நெய், எண்ணெய், விறகு முதலியவைகளுக்கு ஆகும் செலவு எவ்வளவு!

கார்த்திகைப் பண்டிகைக்காகத் திருவண்ணாமலை முதலிய ஊர்களுக்குப் பிரயாணஞ் செய்வதன் மூலமாகும் ரொக்கப் பணச் செலவு எவ்வளவு! அங்குக் கூம்புக்கு (சொக்கப்பனை) செலவாகும் விறகு, கற்பூரம், வெண்ணெய், நெய் ஆகியவற்றிற்காகும் செலவு எவ்வளவு!

இவ்வாறு பலவகையில் செலவு செய்யப்படும் கோடிக்-கணக்கான பணங்களால் நமது நாட்டிற்குக் கடுகளா-வாவது பயனுண்டா என்று ஆலோசித்துப் பாருங்கள்!

இன்னும் இப்பண்டிகையினால் மக்களுக்கு உண்-டாகும் மூடநம்பிக்கையையும், அதனால் உண்டாகும் மூடப் பழக்க வழக்கங்களையும் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்!

கார்த்திகையைப் பற்றி வழங்கும் புராணக் கதை இரண்டு. அவைகளில் ஒன்று:

ஒரு சமயம் அக்னிதேவன் (நெருப்பு) என்னும் கடவுள் சப்தரிஷிகளின் மனைவிமார்களைப் பார்த்து மோகங்கொண்டானாம்.

அதையறிந்த அவன் மனைவி சுவாகாதேவி என்பவள், அந்த ரிஷிகளின் மனைவிகளைத் தொந்தரவு செய்தால், அவர்களால் தன் கணவன் சபிக்கப்படுவான் என்று எண்ணினாளாம்.

அதனால் அவள் வசிஷ்டரின் மனைவியாகிய அருந்ததி உருவத்தை மாத்திரம் விட்டு விட்டு, மற்ற ஆறு ரிஷிகளின் மனைவிமார்களைப் போல் உருவம் கொண்டு தன் கணவன் ஆசையை நிறைவேற்றி-னாளாம்.

இவ்வாறு சுவாகாதேவி கொண்ட ஆறு உருவத்-திற்கும் கார்த்திகை என்ற பெயராம். இவைகள்தான் கார்த்திகை நட்சத்திரமாகக் காணப் படுவதாகும்.

இந்த நட்சத்திரப் பெண்கள்தான் சுப்பிரமணியன் என்னுஞ்சாமி, குழந்தையாக இருக்கும் போது, அதை-யெடுத்து வளர்த்தார்களாம், என்பது ஒரு கதை.

இக்கதையினால்தான் கார்த்திகை நட்சத்திரத்திற்குப் பெருமை. இக்கதை நமது மக்களுக்குக் கற்பிக்கும் மூடநம்பிக்கையைப் பாருங்கள்.

பிறர் மனைவிமேல் ஆசைப்பட்டு விபச்சாரம் பண்ணுவது குற்றம் இல்லை என்பது ஒன்று.

மனைவி தன் கணவன் எந்தத் தகாத காரியத்தை விரும்பினாலும் அதை எப்பாடுபட்டாவது பூர்த்தி செய்து கொடுக்கும் அடிமைக் கருவியாக இருக்க வேண்டுமென்பது ஒன்று.

இவை மட்டும் அல்லாமல், இயற்கைக் பொருள்-களின் மேல் எல்லாம் தெய்விகம் என்னும் மூடநம்பிக்-கையை உண்டாக்கும் துர்ப்போதனை ஒன்று.

ஆகவே, இவற்றை ஆராயும்போது, இக்கதையும் இதன் மூலம் ஏற்பட்ட விரதம், பண்டிகை முதலி-யனவும் புரட்டு என்று உணரலாம்.

இனி, இக்கார்த்திகையைப் பற்றிய இரண்டாவது கதையாவது:

ஒரு காலத்தில் பிரம்மா என்னும் கடவுளும், விஷ்ணு என்ற கடவுளும் தாம் தாமே ஆதிமூலக் கடவுளர் என்று கூறிக் கொண்டதால், இருவருக்கும் முதலில் வாய்ச் சண்டை உண்டாகிப் பிறகு அது கைச் சண்டையாக மூண்டு ஒருவரோடு ஒருவர் அடி-பிடிச் சண்டை செய்தனராம்.

அவர்களுடைய சண்டை சீக்கிரத்தில் ஒரு முடிவுக்கு வரவில்லையாம்.

ஆகையால், அப்பொழுது பரமசிவன் என்னும் கடவுள் அவர்கள் மத்தியில் ஒரு பெரிய ஜோதி உருவத்தோடு வானத்திற்குப் பூமிக்குமாக நின்றாராம். சண்டைக்காரக் கடவுள்கள் இருவரும் ஒன்றும் தெரியாமல் திகைத்து நின்றார்களாம். அப்பொழுது ஜோதி உருவாக நின்ற பரமசிவக்கடவுள், ஏ, பிரம்ம விஷ்ணுக்-களே! இந்த ஜோதியின் அடிமுடிகளை யார் முதலில் கண்டு வருகிறாரோ அவர்தான் உயர்ந்தவர் என்று ஒரு அனாமதேய (அசரீரி) வார்த்தை சொன்னாராம்.

உடனே, விஷ்ணு பன்றி உருவங்கொண்டு அடியைக் காண பூமியைத் துளைத்துக் கொண்டு வெகு தூரம் சென்றும் காண முடியாமல் திரும்பி வந்து-விட்டாராம்.

பிரம்மன் அன்னப்பறவை உருவம் கொண்டு ஜோதியின் முடியைக் காணப் பறந்து மேலே செல்லும் போது, வழியில் ஒரு தாழம்பூ வந்து கொண்டிருந்ததாம்.

அதைக் கண்ட பிரம்மன், தாழம்பூவே, எங்கே-யிருந்து எவ்வளவு காலமாக வந்து கொண்டிருக்கிறார்? என்று கேட்க, அது, நான் பரமசிவனுடைய முடியி-லிருந்து கோடிக்கணக்கான வருடங்களாக வந்து கொண்டிருக்கிறேன் என்று சொல்லிற்றாம்.

உடனே பிரம்மன், நான் சிவனுடைய முடியைப் பார்த்துவிட்டதாக அவனிடத்தில் எனக்காகச் சாட்சி சொல்லு-கிறாயா? என்று கேட்க, அதுவும் சம்மதிக்க, இருவரும் பரமசிவனிடம் வந்து, முடியைக் கண்டு வந்த-தாகப் பிரம்மன் கூற, தாழம்பூ அதை ஆமோதித்த-தாம்.

அதுகண்ட சிவன் கோபங்கொண்டு இருவரும் பொய் சொன்னதற்காக, பிரம்மனுக்கு இவ்வுலகில் கோயில் இல்லாமல் போகக்கடவது என்றும், தாழம்பூ இனிமேல் தனக்கு உதவாமல் போகக் கடவது என்றும் சாபம் கொடுத்தாராம்.

பிறகு பிரம்மாவும், விஷ்ணுவும் தங்கள் கர்வம் ஒழிந்து பரமசிவனே பெரியவர் என்றும் எண்ணி இருவரும் அவரை வணங்கி, எங்கள் வழக்கைத் தீர்த்து வைத்த-தற்கு அடையாளமாக இந்த மலையின் மேல் ஒரு ஜோதி உருவாக இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டார்களாம்.

பரமசிவனும் அதற்குச் சம்மதித்து, ஒவ்வொரு வருடத்-திலும் கார்த்திகை மாதத்தில், கார்த்திகைப் பண்டிகை-யன்று, நான் இந்த உச்சியில் ஜோதியாகக் காணப்படுவேன் என்று சொன்னாராம்.

இதுதான் திருவண்ணாமலை புராணமாகிய அருணாச்சலப் புராணத்தில் சொல்லப்படும் கார்த்திகைப் பண்டிகைக் கதை.

இந்தக் கதையை ஆதாரமாகக் கொண்டுதான் இன்றும் சைவப் பெரியோர்கள் என்பவர்கள் சிவன் என்ப-வரே மற்ற கடவுள்களை விட உயர்ந்தவர் என்று சண்டை போடுகின்றனர்.

இந்தக் கதையைக் காட்டி, சிவனை உயர்த்தியும் மற்றவர்களைத் தாழ்த்தியும் பாடாத சைவப் புராணங்-களும், தேவாரங்களும், திருவாசகங்களும், தோத்திரங்-களும் இல்லை.

இதற்கு எதிராக மற்ற மதத்தினர்கள் எழுதி வைத்-திருக்கும் கதைகள் பல. இவ்வாறு, மதச் சண்டையை உண்டாக்குவதற்கு இக்கதை முதற் காரணமாக இருப்-பதை அறியலாம்.

இந்தக் கதையில் தாழம்பூ பேசுவது ஒரு வேடிக்கை! கடவுள்களுக்கிடையே சண்டை வந்தது ஒரு விந்தை! இது போலவே, ஆராய்ந்தால் பரிகாசத்திற்கும், வேடிக்கைக்கும் இடமாக இக் கதையில் அநேக செய்தி-கள் அமைந்திருப்பதைக் காணலாம்.

இவ்வாறு, இரண்டு முரண்பட்ட வேடிக்கைக் கதைகளை ஆதாரமாகக் கொண்ட இந்தக் கார்த்திகைப் பண்டிகையினால் நமது மக்கள் மனத்தில் குருட்டுப் பக்தியும், மூடநம்பிக்கையும், முட்டாள்தனமும் அதிகப்படும் என்பதில் சந்தேகம் உண்டா?

இது நிற்க, மேலே கூறிய கதைகளில் இரண்டாவது கதையைச் சைவர்கள்தான் சிவனுக்குப் பெருமை கற்பிக்-கிறதென்று நம்பிக் கார்த்திகைப் பண்டிகை கொண்டாடு-கிறார்கள் என்றால், வைணவர்களும் கொண்டாடுவதில் என்ன அர்த்தமிருக்கிறது என்பதுதான் நமக்கு விளங்கவில்லை. வைணவர்களின் கடவுளைப் பன்றி-யாக்கிக் கேவலப்படுத்தியிருப்பதுடன், சிவனுடைய பாதத்தைக் கூடக் காணமுடியாத அவ்வளவு சக்தியற்ற தெய்வம் என்று இழிவு படுத்தி இருப்பதை அறிந்தால் அவர்கள் இந்தப் பண்டிகையைப் பெருமையாகக் கொண்டாட சம்மதிப்பார்களா?

இவர்கள் போகட்டும், ஏதாவது ஒரு கடவுளாவது இருக்கிறார் என்ற நம்பிக்கையில்லாததுதானே கடவுள் என்றும் கொள்கையுடைய ஸ்மார்த்தர்களும் இக்கதையை நம்பிப் பண்டிகை கொண்டாடுகிறார்களே! இதில்தான் என்ன அர்த்தமிருக்கிறது? இவற்றை-யெல்லாம் யோசிக்கும்-போது, இவர்கள் முட்டாள்தனம் காரணமாகவாவது, வீண் ஆடம்பரம் காரணமாகவாவது இப் பண்டி-கையைக் கொண்டாடுகிறார்கள் என்றுதான் நினைக்க வேண்டி இருக்கிறது.

அல்லது, அறிந்தோ, அறியாமலோ நமது மக்கள் மனத்தில், பண்டிகைகள் புண்ணிய நாள்கள்,அவற்றைக் கொண்டாடுவதால் புண்ணியம் உண்டு; கொண்டாடா-விட்டால் பாவம் என்றும் குருட்டு எண்ணம் குடி-கொண்-டி–ருக்கிறது என்ற முடிவுக்குத்தான் வர வேண்டி-யிருக்கிறது.

ஆகவே, இது போன்ற பண்டிகைகளால், நமது நாட்டில் பொருட்செலவும், வறுமையும், மூட நம்பிக்கை-யும், வீண் காலப்போக்கும் நிறைந்திருப்பதை எடுத்துக் கூறத் தொடங்குகின்றவர் களுக்கு, உடனே பகுத்தறி-வற்ற வைதிக மூடர்கள், தேசத்துரோகி, வகுப்புவாதி, நாத்திகன் என்ற பட்டங்களைச் சூட்டி விடுகின்றனர். சிறி-தேனும் பொறுமை கொண்டு, சொல்லும் விஷ-யத்தைப் பகுத்தறிவு கொண்டு ஆராய்ந்து பார்க்கின்றவர்-களில்லை.

இத்தகைய வீண் காரியங்களை ஒழித்து மக்களைப் பகுத்தறிவுடையவர்களாகச் செய்ய இது வரையிலும் எந்த தேசியத் தலைவர்களாவது, எந்தத் தேசியத் தொண்-டர்களாவது, எந்தத் தேசியப் பத்திரிகைகளாவது முயற்சியெடுத்துக் கொண்டார்களா?

இன்னும் இது போன்ற மூட நம்பிக்கைக்கான விஷயங்களை, சுயராச்சியம், சுதந்திரம், காங்கிரசு, பாரதமாதா, மகாத்மாகாந்தி, காந்தி ஜெயந்தி, என்னும் பெயர்களால் பிரச்சாரம் செய்து மற்றும் பண்டிகை-களையும் உற்சவங்களையும் விக்கிரகங்களையும் கற்-பித்து மக்களை ஏமாற்றிக் கொண்டு தானே வரு-கிறார்கள்! இவ்வாறு தேசியப் பிழைப்புக்காரர்கள் ஒரு புறமும், பண்டிகையில் நம்பிக்கையுள்ள வைதிக மூடர்கள் ஒரு புறமும், பணம் சேர்க்க ரயில்வே கம்பெனிக்-காரர்கள் ஒரு புறமும், புராண பிழைப்புக்-காரர்களும், குருக்களும், புரோகிதர்களும் மற்றொரு புறமும் பண்டிகைப் பிரச்சாரம் பண்ணினால் மக்-களுக்குப் பகுத்தறிவு விளங்குவது எப்பொழுது?

(22-11-1931 குடிஅரசு)

கடவுள் இருக்கும் இடமெல்லாம் காமலீலைக் கூடாரமாக மாறுகிறது அதிர்ச்சி தரும் ஆய்வுத் தகவல்!

நவம்பர் 29, 2009

கடவுள் இருக்கும் இடமெல்லாம் காமலீலைக் கூடாரமாக மாறுகிறது அதிர்ச்சி தரும் ஆய்வுத் தகவல்!
http://viduthalai.periyar.org.in/20091129/news01.html

புதுடெல்லி, நவ.29_ பகுத்தறிவற்ற கும்பலால் கடவுளின் முக்கிய திருத்தலங்கள் என்று போற்றப்படும் இடங்கள் எல்லாம் தற்போது அவை காம லீலை கூடாரங்களாக மாறி வருகின்றன. பகுத்தறிவாளர்களால் தொடர்ச்சியாகச் சொல்லப்பட்டு வரும் இந்தக் கூற்றை இரு அரசு சாரா நிறுவனங்களின் ஆய்வு ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளன.

புனிதத் தலங்களுக்கு ஆன்மிக யாத்திரை என்ற பெயரில் செல்லும் பக்தர்கள் அங்கு நடத்தும் காமக் களியாட்டங்கள் குறித்து இரு அரசு சாரா நிறுவனங்கள் தேசிய அளவில் சமீபத்தில் ஆய்வு நடத்தின. அதில் குறிப்பாக சிறுவர், சிறுமியர் பாலி-யல் கொடுமைக்கு உள்ளாவது குறித்து பல்வேறு அதிர்ச்சித் தகவல்களும் வெளிவந்து உள்ளன.

நாடு முழுவதும் ஆய்வு: மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் சார்பில் கிராம நியோஜன் கேந்திரா என்ற அமைப்பு நாடு முழுவதும் ஆய்வு நடத்தியது. சுற்றுலாத் தலங்கள், ஆன்மிக திருத்-தலங்கள் என நாடு முழுவதும் உள்ள 68 இடங்-களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்-போது ஆன்மிக திருத்தலங்கள் பலவும் காம விளை-யாட்டு அரங்கங்களாக மாறியிருப்பதை கண்டறிந்-துள்ளதாக ஆய்வில் தெரிவித்துள்ளனர். அந்த ஆய்வறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது: ஆன்மிகத் தலங்களில்தான் இந்தியா மற்றும் வெளி-நாட்டினர் தமது காம விளையாட்டுகளை அதிகமாக நடத்தி வருகின்றனர். இதில் பாலியல் தொழி-லாளர்கள் மட்டுமின்றி வலுக்கட்டாயமாக சிறுவர், சிறுமியரும் ஈடுபடுத்தப்படுகின்றனர். பக்தர்கள் என்ற போர்வையில் இந்த ஆபாச அரங்கேற்றத்தைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

ஆன்மிகத் திருத்தலங்கள்: இந்தியாவில் பாலியல் வேட்கையைத் தணிப்பதற்கான இடமாக வெளிநாட்டினர் தேர்வு செய்துள்ள இடங்கள் ஆன்மிக திருத்தலங்கள்தாம். அந்த அளவுக்கு அங்கு காமக் களியாட்டத் தொழில் கொடிகட்டிப் பறப்பதாக அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல், பெங்களூருவில் உள்ள அரசு சாரா அமைப்பு ஒன்றும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஓர் ஆய்வு மேற்கொண்டது. அந்த ஆய்வில் திருப்பதி, குருவாயூர் மற்றும் பூரி போன்ற ஆன்மிகத் தலங்களில் சிறுவர், சிறுமியர் பெரும் எண்ணிக்கையில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகின்றனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சுற்றுலாத் தலங்களின் பாலியல் சுரண்டலிலிருந்து சிறுவர், சிறுமியரைப் பாதுகாப்பது என்ற தலைப்பில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது ஆன்மிகத் தலங்களில் சிறுவர், சிறுமியர் மட்டு-மின்றி இளம் பெண்களும் பாலியல் துன்புறுத்-தலுக்கு உள்-ளாவது உண்மை என்பது கண்டறியப்-பட்டுள்ளது.

ஆன்மிகம் என்ற பெயரில் மக்கள் கூடும் இடங்களில் நடைபெறும் இந்தக் காம லீலைகளைக் கட்டுப்படுத்த போதிய சட்டம் இல்லை என்று அந்த ஆய்வறிக்கையில் கவலை தெரிவிக்கப்-பட்டுள்ளது. இந்த ஆய்வறிக்கையை அடுத்து இதனைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்-பான வரைமுறைகளை உருவாக்க மத்திய சுற்றுலாத் துறை அமைச்சகம் தற்போது தீவிர நடவடிக்கையில் இறங்கி உள்ளது. சமீபத்தில் இதுதொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வுக் கூட்டத்தில் சுற்றுலாத்துறை அமைச்சகத்தின் சார்பில் கடும் நடவடிக்கைகள் மேற்-கொள்ளப்படுவது குறித்து ஆலோசிக்கப்-பட்டது.

மத்திய அரசு வலியுறுத்தல்: ஆன்மிகம் என்ற பெயரில் நடத்தப்படும் சுற்றுலாக்கள் தீவிரமாக கண்காணிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சிறுவர், சிறுமியர் இக்கொடுமைக்கு உள்ளாகாமல் இருக்கும் விதமாக கடும் சட்டங்களும், காவல்துறை கண்-காணிப்பும் அதிகரிக்கப்பட வேண்டும் என்று மாநில அரசுகளை மத்திய சுற்றுலாத்துறை வலியுறுத்தி உள்ளது.

திராவிட நாத்திகம் எப்படி போலி-நாத்திகம் மற்றுமில்லாது, ஒரு பத்திரிக்கை ஒழுங்குத்தனம் கூட இல்லாமல் இருக்கிறது என்பதற்கு இன்னொரு எடுத்துக் காட்டாக இது இருக்கிறது.

செக்ஸ் டூரிஸம் என்பதை “ஆன்மிக யாத்திரை” என்று மாற்றி, ஏதோ ஒரு குறிப்பிட்ட மதத்தினர்தான் காரணம் என்று காட்டும் போக்கு.

உண்மையில் அத்தகைய குறிப்பாக சிறுவர், சிறுமியர் பாலியல் கொடுமைக்கு உள்ளாவது அயல்நாட்டு மதத்தவர்தாம். அதைக் குறிப்பிடாமல் மறைக்கிறது.

“திருப்பதி, குருவாயூர் மற்றும் பூரி போன்ற ஆன்மிகத் தலங்களில் சிறுவர், சிறுமியர் பெரும் எண்ணிக்கையில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகின்றனர்” என்று குறிப்பிட்டு ஆனால் யார் அத்தகைய பாலியல் வன்குற்றங்களை செய்வது என்பதை மறைக்கும் போக்கு!

செக்யூலார் நாத்திகமா?

தம்பி, மஸ்ஜித் எங்கே இருக்கிறது, அது கோவில்தானே?: வி. பி. சிங்!

நவம்பர் 29, 2009

தம்பி, மஸ்ஜித் எங்கே இருக்கிறது, அது கோவில்தானே?: வி. பி. சிங்!

திரு நீதிபதி லிபரானுக்கு, “தம்பி, மஸ்ஜித் எங்கே இருக்கிறது, அது கோவில்தானே?” என்று கேட்ட வி. பி. சிங்கை ஞாபகம் இல்லை, பாவம், 99வது வயதில் இறந்துவிட்ட, ஒருவேளை யாருக்குமேத் தெரியாத குல்ஸாரி லால் நந்தா என்பவரையும் குற்றவாளி என்று சொல்லியிருப்பது சரியான ஜோக்குதான்.

“பால் கமிஷன் அறிக்கை” மர்மங்கள்!

நவம்பர் 28, 2009

“பால் கமிஷன் அறிக்கை” மர்மங்கள்

நாளென் செய்யும், கோளென் செய்யும்” என்று நாத்திகர்ளும், ஆத்திகர்களும் கேட்கலாம். ஆனால், சரித்திரரீதியில் கடந்தகாலத்தை அதாவது இப்பொழுதைய 50-60 ஆண்டுகால நடப்புகளை நினைவில் வைத்திருந்தாலே அத்தகைய சம்பந்தத்தைப் பார்க்கலாம். “நவம்பர் 26” “26/11” என்று குறிப்பிட்டு எழுதுகிறார்களே, இது என்ன மூடநம்பிக்கையா, பகுத்தறிவா என்று நவீன மனங்கள் கேட்கலாம். ஆனால், அந்த 26-11 26/11 தேதிகள் நிச்சயம் கருணாநிதியை பாதித்துள்ளன. எவ்வளவு ஒப்புமைகள் பாருங்கள்!

லிபரான் அறிக்கை பால் அறிக்கை
    1. 1. மன்மோஹன் சிங் லிபரான் மன்மோஹன் சிங் மற்றும் சிதம்பரத்திடம் அறிக்கையைக் கொடுக்கிறார். மன்மோஹன் சிங்

அமெரிக்கா சென்றுவிடுகிறார்

    .
    1. 2.

24-11-2009

    மன்மோஹன் சிங் லிபரான் அறிக்கை விவரங்கள் கசிங்கின்றன! வெளியிட்ட நாளிதழ் “உள்துறை” அமைச்சகத்திடம் விவரங்கள் பெற்றதாகக் கூறுகிறது!
    1. 3.

26-11-2009

    நெருங்குகிறது. ஆகவே, அத்தேதியில் இது விவாதத்தைக் கிளம்பவேண்டும் என்ற போக்கு நன்றாகவே தெரிகிறது.
    4. அக்காலத்தில் பி.ஜே.பியுடன் இருந்தவர்கள் இன்று குற்றஞ்சாட்டுகின்றனர்!
    5. இனி கல்யாண்சிங் காங்கிரஸில் சேரவேண்டியதுதான் பாக்கி! ஜஸ்வந்த சிங்கிற்கு ஏற்கெனவே கதவு திறந்திருக்கிறது!
1. சி. ஜே. ஆர், பால் [அன்றைய கமிஷனின் அறிக்கையாளர்] தனது அறிக்கையை அரசிடம் கொடுத்து அமெரிக்கா சென்றுவிடுகிறார்.

2. 24-11-1981; அமைக்கப்பட்ட நீதிபதி பால் கமிஷன் அறிக்கையை அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கருணாநிதி  அறிக்கையின் பிரதியைக் கைப்பற்றி நிருபர்களிடம் வெளியிட்டார்.

3. 26-11-1989 அன்றுதான் திருச்செந்தூர் கோயில் விடுதியில் கோவில் அதிகாரி சுப்பிரமணியப்பிள்ளை மர்மமான முறையில் இறந்து கிடந்தார்

4. கருணாநிதி குற்றஞ்சாட்டிய ஆர். எம். வீரப்பன் இன்று நண்பராகிறார்!

5. தண்டிக்கப்பட்ட அன்றைய அரசு அதிகாரி சண்முக நாதன் இப்போதும் கருணாநிதியின் செயலாளராக இருக்கிறார்!

26-11-1980: “திருச்செந்தூர் கோயில் விடுதியில் கோவில் அதிகாரி சுப்பிரமணியப்பிள்ளை மர்மமான முறையில் இறந்து கிடந்தார்”, என்ற செய்தி, கொலை என்றெல்லாம் தமிழிதழ்களில் வெளிவந்தன. ஆளும் அதிமுக மற்றும் எதிர் கட்சி திமுக ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டிக் கொண்டனர். உண்டியல் பணத்தை சுப்பிரமணியப்பிள்ளையே திருடி மாட்டிக் கொண்டதாகவும் அவமானம் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டதாகவும் ஆர்.எம்.வீ முதல் அ.தி.முகவினர் எல்லாரும் பிரசாரம் செய்தார்கள்[1]. கருணாநிதியும் தி.முகவும் இதை மறுத்தார்கள். உண்டியலில் இருந்த வைர வேலைத் திருடிக் கொண்டது வீரப்பன்தான் என்றும் அதைத் தட்டிக் கேட்ட நேர்மையான அதிகாரி சுப்பிரமணியப்பிள்ளை கொலை செய்யப்பட்டதாகவும் தி.மு.க குற்றம் சாட்டியது. பதிலுக்கு அதிமுக, திமுகவைக் குற்றஞ்சாட்டியது!

-12-1980: திருச்செந்தூர் கோயில் உதவி ஆணையர் சுப்பிரமணியப் பிள்ளை கொல்லப்பட்டது குறித்து விசாரிக்க ஒரு கமிஷன் அமைக்கப்பட்டு, அதற்கு சி. ஜே. ஆர். பால், என்ற ஓய்வு பெற்ற நிதிபதி உறுப்பினராக அமர்த்தப்பட்டார்.

1981: அறிக்கை முதல்வரிடம் சமர்ப்பிக்கப் பட்டது. நீதிபதி சி.ஜெ.ஆர்.பால் அறிக்கையைக் கொடுத்துவிட்டு அடுத்த விமானத்தில் ஒரேயடியாக அமெரிக்கா சென்று செட்டிலாகிவிட்டார்.

1981: அதற்குள் அறிக்கையின் நகல் கருணாநிதிக்குக் கிடைக்கிறது.

24-11-1981; அமைக்கப்பட்ட நீதிபதி பால் கமிஷன் அறிக்கையை 24-11-1981-ல் அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கருணாநிதி  அறிக்கையின் பிரதியைக் கைப்பற்றி நிருபர்களிடம் வெளியிட்டார்.

01-02-1982: G. O. M. S. No. 161  பொது (சட்டம் மற்றும் ஒழுங்கு – ஆ) 01-02-1982 தேதியிட்ட, ஆணை வெளியிடப்பட்டது.

01-02-1982: இந்து அறநிலை மற்றும் காப்பாணையத்தின் சரிபார்க்கும் அதிகாரி இறந்ததற்கான காரணங்களை ஆய்ந்து வெளியிட்ட சி. ஜே. ஆர். பால், என்ற ஓய்வு பெற்ற நிதிபதியின் பரிந்துரைகள் சட்டசபையில் பார்வைக்கு வைக்கப்பட்டது.

11-02-1982: வீரப்பன், செய்தி மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் கீழ்கண்ட தீர்மானத்தை வைத்தார்[2]:

26 நவம்பர் 1980 என்று சி. சுப்பிரமணியப் பிள்ளை, இந்து அறநிலை மற்றும் காப்பாணையத்தின் சரிபார்க்கும் அதிகாரி இறந்ததற்கான காரணங்களை ஆய்ந்து வெளியிட்ட சி. ஜே. ஆர். பால், என்ற ஓய்வு பெற்ற நிதிபதியின் பரிந்துரைகள்  (02-02-1981 அன்று அவையில் வைக்கப்பட்டது) G. O. M. S. No. 161  பொது (சட்டம் மற்றும் ஒழுங்கு – ஆ) 01-02-1982 தேதியிட்டது, ஆணைக்கு பிற்சேர்க்கையாக இணக்க்ப்பட்ட அரசாங்கத்தால் எடுக்கப் பட்ட நடவடிக்கைப் பற்றி விவாதம் எடுத்துக் கொள்ளப்படுகிறது.

இந்த விவாதம் 11 முதல் 13 வரை நடந்தது, 14 உறுப்பினர்கள் பங்கு கொண்டார்கள்”.”

13-02-1982: பால் கமிஷன் அறிக்கைப் பற்றிய விவாதம் தொடங்கியது. விவாதத்தில் சட்டப் பேரவையில் பேசிய கரு, அறிக்கை எவ்வாறு வெளியானது என்பது குறித்து ஆராயாமல் அதில் கூறியுள்ளது பற்றி கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

அறிக்கை கசிந்த குற்றத்திற்காக, அரசு அதிகாரிகள் சதாசிவம் (மொழி பெயர்ப்புத் துறை) மற்றும் சண்முக நாதன் இருவர் மீதும் எம்.ஜி.ஆர் அரசு கடும் நடவடிக்கை எடுத்தது.

15-02-1982: கருணாநிதி மதுரையிலிருந்து, திருச்செந்தூர் வரை நெடும்பயணம் என்று ஆரம்பித்தார்.

22-02-1982: திருச்செந்தூர் அடைந்து பயணம் முடித்துக் கொள்ளப் பட்டது.

26-11-1982: எஸ். கேசவ ஆதித்தன்,  ஒரு கார் விபத்தில் மரணம் அடைந்தார். 26-10-1980 அன்று, சுப்பிரமணியப்பிள்ளை மர்மமான முறையில் இறந்து கிடந்தார் / கொல்லப்பட்டார் என்றால், அதே தேதியில் இரண்டு வருடங்கள் கழித்து, இறந்தது ஆச்சரியம் தான்!

ஆர்.எம்.வீரப்பனின் இருமுகங்கள்: ஆர்.எம்.வீரப்பன் எம்.ஜி.ஆர் உயிரோட இருக்கும்போது அவருக்கு நெருக்கமாக இருந்தார். அற நிலைய அமைச்சர் பொருப்பில் இருந்து நிறைய சம்பாதித்தார். அவர் இறந்த்கபிறகு, தானே முதலமைச்சர் ஆகவேண்டும் என்ற ஆசையும் வளர்ந்தது. இதனால்தான், ஜானகி ராமச்சந்திரனைத் தூண்டிவிட்டு அவரை முதல்வராக்கி, அதிமுகவைப் பிளக்கப் பார்த்தார். அப்பொழுது ஜெயலலிதா வெளியேற்றப்பட்டதால், கருணாநிதியும் ஆதரித்தார். இப்போழுதோ கருவை ஆதரிக்கிறார்!

கருணாநிதி, சிதம்பரம், மற்றவர்களின் இருமுகங்கள், இரு நாக்குகள்: கருணாநிதி பி.ஜே.பியுடன் கூட்டு சேர்ந்துதான், மாறன் அமைச்சராக இருக்கமுடிந்தது. சிதம்பரம், ஒரு நேரத்தில் பி.ஜே.பியில் ஐக்கியமாக வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால், சில பி.ஜே.பி காரர்கள் சிதம்பரம் பி.ஜே.பியில் சேருவதைக் கடுமையாக எதிர்த்தனர்.

வேதபிரகாஷ்

28-11-2009

 


[1] ஞாநி , மறதி அல்லது வெட்கங்கெட்டவர்கள் , திண்ணை.காம்,

http://www.thinnai.com/?module=displaystory&story_id=20411253&format=html

[2] The Tamilnadu Legislative Assembly, Seventh Legislative Assembly, Fourth Session – First meeting (From 2nd February, 1982 to 19th February 1982), ப. 19, இங்கே பார்க்கவும்:

http://www.assembly.tn.gov.in/archive/Resumes/07assly/07_04_1.pdf

“உதயசூரியன்” என்னைப் பார்த்துக் காப்பியடித்துள்ளது!

நவம்பர் 28, 2009

“உதயசூரியன்” என்னைப் பார்த்துக் காப்பியடித்துள்ளது!

“உதயசூரியன்” என்ற பெயரில் யாரோ எனது கட்டுரையை அப்படியே காப்பியடித்து தனது போன்று போட்டிருக்க்கிறார்!

நான் அந்த தளத்திலேயே ஒரு கண்டன பதிவு செய்தேன்.

ஆனால் பதில் இல்லை.

அகையால் கீழ்கண்டவாறு ஒரு புகாரையும் செய்துள்ளேன்:

Flag this message
My article copied by another [Tamil blogs]: Registering a complaint
Saturday, 28 November, 2009 8:31 PM
From:
This sender is DomainKeys verified
“Vedaprakash Vedaprakash”
View contact details
To:
dmca@automattic.com
Cc:
vedamvedaprakash@yahoo.com

— On Sat, 28/11/09, Vedaprakash Vedaprakash wrote:

From: Vedaprakash Vedaprakash
Subject:
To: dmca@automattic.com
Cc: vedamvedaprakash@yahoo.com
Date: Saturday, 28 November, 2009, 8:29 PM

Dear Sirs,

I have been a regular blooger in http://www.wordpress.com.

I have posted a critical essay in Tamil at:

http://evilsofcinema.wordpress.com/2009/11/22/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE/

Now, today I find another person has simply copied and posted as follows:

http://udayasuriyan.wordpress.com/2009/11/28/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE/#respond

Therefore, I request to take appropriate action against the blooger – “Udhyasuriyan”.

Thanking you.

Sincerely yours,
Vedaprakash
28-11-2009.

சிதம்பரம் மீது சீற்றம் ஏன்? கலைஞர் கேள்வி!

நவம்பர் 28, 2009

சிதம்பரம் மீது சீற்றம் ஏன்?  கலைஞர் கேள்வி
(முதலமைச்சர் கலைஞர் எழுதிய கடிதத்தின் முக்கிய பகுதி)

http://viduthalai.periyar.org.in/20091128/news07.html

நினைப்புதான் பொழப்பைக் கெடுத்துதான் பேராண்டி என்று கிராமப் புறத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள். அதைப்போல நம்-முடைய எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதாவுக்கு எப்படியோ பொழுது விடிந்தால் ஒரு அறிக்கை விட்டுவிட வேண்டும். இல்லாவிட்டால் தலை வெடித்துவிடும். தற்போது லிபரான் கமிஷன் அறிக்கை கசிவுக்கு முழுப் பொறுப்-பேற்று உள்துறை அமைச்சர், மாண்பு-மிகு ப. சிதம்பரம் அவர்கள் வெளியேற வேண்டுமாம் அல்லது வெளியேற்ற வேண்டுமாம். அப்படி ஜெயலலிதா அறிக்கை விட்டுவிட்டார்.

லிபரான் கமிஷன் அறிக்கையிலே உள்ள செய்திகளை ஆராயப் புகுந்தால் அம்மையாரும் சிக்கிக்கொள்ள வேண்டும். ஏனென்றால் லிபரான் தனது அறிக்கையின் இறுதியில் கூறும்போது, அதிகாரத்தைக் கைப்-பற்றும் நோக்கில் சாதி மதத்தை துஷ்பிரயோகம் செய்பவர்களைத் தண்டிக்க தனிச் சட்டம் கொண்டு-வரப்பட வேண்டும் என்றும், இது தொடர்பான வழக்குகளை விசாரிக்க நாட்டின் சகல பகுதிகளிலும் பிராந்திய நடுவர் மன்றங்களை அமைக்க வேண்-டும் என்றும் சொல்லியிருக்கிறார். பாபர் மசூதி இடிப்பின் போது கரசேவையை ஆதரித்தவர் அப்போது முதல்வர் பதவியிலே இருந்த ஜெய-லலிதா.

அறிவிக்கப்பட்ட கரசேவையைத் தடுத்து நிறுத்த உறுதியான நடவடிக்-கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டுமென்று பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அறிக்கை விடுத்-தனர். அது குறித்து நான் கூறும்போது, தேசிய முன்னணி ஆட்சியில் பிரதமர் வி.பி. சிங் அவர்கள் பதவியைப் பற்றிக் கவலைப்படாமல் எடுத்த நடவடிக்-கையைப் போல அன்றைய பிரதமர் நரசிம்மராவ் அவர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லாவிட்டால் நாட்டில் ரத்தக் களரியை உருவாக்கிட நடைபெறும் செயலுக்கு வாசல் கதவைத் திறந்துவிட்ட குற்றத்துக்கு மத்திய காங்கிரஸ் ஆட்சி பொறுப்-பேற்க வேண்டியிருக்கும் என்று கூறினேன்.

தேசிய ஒருமைப்பாட்டுக் குழு கூட்டம் கூடி பொருத்தமான நட-வடிக்கை எதையும் எடுக்க பிரதமருக்கு அதிகாரம் அளித்து ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்தத் தீர்மானத்தைக் கொண்டு வந்தவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் சுர்ஜித் அவர்கள். அந்தக் கூட்டத்தில் பேசிய அன்றைய தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா டிசம்பர் 6ஆம் தேதி பாரதீய ஜனதா, விஸ்வ இந்து பரிட்சத் மற்றும் சில அமைப்புகள் துவக்கப் போவதாக அறிவித்துள்ள கரசேவை நடை-பெறுவ-தற்குத் தேவையான சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டும் என்று பேசி அது 24-.11.-1992 தேதிய தினமணி நாளிதழில் வெளிவந்தது. மேலும் அவரது பேச்சில் குறிப்பிட்ட சில கருத்துகள் வருமாறு :-

அரசியல் சட்டத்தின்படி பெரும்-பான்மையினருக்குக் கிடைக்கும் சாதாரண உரிமைகளையும், சிறப்-புரி-மைகளையும் பாதிக்கும் வகையில் அரசியல் சரித்திர, சமூக அமைப்-பு-களின் பின்னணியில் தங்கள் நலன்-களை முன்னிருத்தி செயல்படுவது சிறுபான்மையினருக்கு ஏற்றது அல்ல. இந்த நாட்டில் பெரும்-பான்மை வகுப்பு, இந்துக்கள் என்-பதை அனைவரும் ஒப்புக் கொள்-வார்கள். அவர்கள் தங்களுடைய மதச் சார்பான லட்சியங்களை அரசியல் சட்டத்தின் குறிக்கோள்-களுக்கு மாறுபடாத வகையில் அமைதியான வழியில் நிறைவேற்றிக் கொள்ள முயன்றால் அதனை அனுமதிக்க வேண்டும். பெரும்-பான்மை யினரும், அவர்களுடைய உரிமைகளை சிறுபான்மையினரைப் போல அனுபவிக்க அனுமதிக்க வேண்டும். அயோத்தி பிரச்சினையில் இதனைத் தொடர்புபடுத்தி குறிப்-பாகக் கூற வேண்டுமென்றால், உத்-தரப் பிரதேச அரசு கையகப்படுத்திய இடத்தில் இந்துக்கள் விரும்பியபடி கட்டுமானப் பணியை நிறைவேற்ற அனுமதிக்க வேண்டும். கரசேவையை அனுமதிக்-கும்-படி நீதி மன்றங்களை அணுகத் தேவையான எல்லா நட-வடிக்கை-களும் எடுக்கப்படவேண்டும். மிகவும் சுருக்கமாக என்னுடைய வேண்டு-கோளைத் தெரிவிக்கிறேன். உத்-தரப்பிரதேச அரசு கையகப்-படுத்-திய இடத்தில் கரசேவை நடைபெறத் தேவையான சூழ்நிலைகளை உரு-வாக்க வேண்டும். அயோத்தியில் கோயில் கட்டப்பட வேண்டும் என்பது இந்த நாட்டின் பெரும்பான் மையான மக்களின் விருப்பத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாக உள்ளது. பொது மக்கள் கருத்தை இந்த நாட்டின் பெரும்பான்-மை-யான மக்களின் கருத்தை நாம் புறக்கணிக்கக் கூடாது

இவ்வாறு அப்போது கர-சேவையை ஆதரித்து ஒருமைப்-பாட்டு மன்றக் கூட்டத்திலேயே பேசியவர்தான் ஜெயலலிதா. அதனால்தான் தற்போது லிபரான் கமிஷன் அறிக்கையில் கசிவு என்றெல்லாம் கூறி, அந்தப் பழியை நண்பர் ப.சிதம்பரம் அவர்கள் மீது போட்டு, அவரை பதவி விலகச் செய்ய வேண்டுமென்றெல்லாம் அறிக்கை விடுகிறார்.

பாபர் மசூதியின் முழுக் கட்டிட-மும் மாலை 5 மணிக்குள் இடித்துத் தள்ளப்பட்டது. இந்தியா முழுவதும் அதற்கு கடுமையான எதிர்ப்பு தோன்றியதால் தான் கரசேவையை ஆதரிக்கவே இல்லையென்று ஜெயலலிதா ஒரு பல்டி அடித்தார். தமிழ் ஈழம் பற்றி அடித்த பல்டி-போல; அது வேறு கதை. அதை-யெல்லாம் அப்படியே மறந்துவிட்டு அல்லது மக்கள் மறந்திருப்பார்கள் என்ற நம்பிக்கையில் ஜெயலலிதா இப்போது மத்திய உள்துறை அமைச்-சர் திரு.சிதம்பரம் அவர்களை வெளியேற்ற வேண்டும் என்கிறார்.

ஒரு ஆட்சியின் சார்பில் ஒவ்-வொரு சம்பவத்தின்போது கமிஷன் நியமிப்பதும், அந்தக் கமிஷன் அதற்கான அறிக்கையினை அரசுக்-குத் தாக்கல் செய்வதும் பொதுவான நடைமுறை. அப்படி வெளியிடப்-படு-வதற்கு முன்பு அந்த அறிக்கைகள் எதிர்க்கட்சியினரால் வெளியிடப்-பட்டு-விடுவதும் உண்டு. அதற்கோர் உதாரணம் கூற வேண்டுமேயானால் _ 26-.11.-1980 அன்று திருச்செந்-தூர் கோயில் வளாக விடுதியில் அறநிலையத் துறையின் உதவி ஆணையாளராக இருந்த சுப்பிர-மணிய பிள்ளை, அப்போது ஆளுங் கட்சியாக இருந்த அ.தி.மு.க.வைச் சேர்ந்த சில அறங்காவலர்களால் படுகொலை செய்யப்பட்டு அதற்கு தற்கொலை என்று பெயர் சூட்டி மறைத்திடப் பார்த்தபோது, தி.மு. கழகம் போர்க் குரல் கொடுத்தது. இந்தச் சம்பவம் குறித்து முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர். அரசினால் அமைக்கப்பட்டு விசாரணை நடத்திய நீதிபதி சி.ஜெ.ஆர். பால். அவர் அரசாங்கத்திற்குக் கொடுத்த அறிக்கை தங்களுக்குச் சாதகமாக இல்லை என்பதால், அரசு அதனை வெளியிடாது இருந்த நேரத்தில், நீதிபதி பால் அவர்களின் அறிக்கையின் நகல் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் எனக்குக் கிடைத்ததால், அந்த அறிக்கையின் நகல்களை 24-.11.-1981 அன்று ஏடுகள் மூலமாக நான் வெளியிட்டேன். 13.-2.-1982 அன்று சட்டப் பேரவையில் பால் கமிஷன் அறிக்கை மீதான விவாதம் நடை பெற்றபோது, கழகத்தின் சார்பில் பேசிய நான் – நீதிபதி பால் அவர்களின் அறிக்கை எவ்வாறு வெளியானது, அதற்கு யாரைப் பழி வாங்குவது என்பதைப் பற்றியெல்லாம் அரசு நேரத்தைச் செலவிடாமல், அந்த அறிக்கையிலே கூறியிருப்பது என்ன என்பதிலே கவனம் செலுத்த வேண்டும். உண்மையான குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்.

அரசின் சார்பில் அந்த வழக்கை குற்றப் புலனாய்வுத் துறை மீண்டும் விசாரித்த பிறகுதான் பரிசீலிக்க வேண்டுமென்று சொன்ன போது, தி.மு. கழகம் அவையிலிருந்து வெளி நடப்பு செய்தது. அப்போது முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். எழுந்து, திருச்செந்-தூர் கோவில் அறங்காவலர்கள் தங்-களுடைய பதவி விலகல் கடிதங்களை அனுப்பியிருப்பதாக அப்போதுதான் அவைக்கு தகவலைச் சொன்னார். அதன் பின்னரும் நடவடிக்கை எதுவும் எடுக்காத காரணத்தால், 15.-2.-1982 அன்று மது-ரை-யிலிருந்து நானும் கழகத் தோழர்களும் திருச்செந்தூர் வரை நீதி கேட்டு நெடிய பயணம் நடத்தினோம் என்பது வரலாறு.

லிபரான் கமிஷன் அறிக்கை கசிந்து விட்டது எனக் கூறி, அதற்குப் பொறுப்-பேற்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் வெளியேற வேண்டும் அல்லது வெளியேற்றப் பட-வேண்டும் என்று முழங்குகின்றாரே ஜெயலலிதா, அப்போது நீதிபதி பால் கமிஷன் அறிக்கை வெளியான போது அப்போது ஆட்சியிலே இருந்த முதல-மைச்சரோ அல்லது அமைச்சர்களோ யாராவது அதற்கு தார்மீகப் பொறுப்-பேற்று பதவி விலகினார்களா அல்லது விலக்கப்பட்டார்களா என்பதையும் தெரிவித்திருந்தால் அது பொருத்தமாக இருந்திருக்கும்.

“பக்ரீத்” அன்று “இந்துக்களுக்கு” திராவிட நாத்திக பரிசு!

நவம்பர் 28, 2009

“பக்ரீத்” அன்று “இந்துக்களுக்கு” திராவிட நாத்திக பரிசு!

ஒவ்வொரு இந்து பண்டிகையின்போதும் எப்படி வசவுகள், அவதூறுகள், தூஷணங்கள் செய்யப் படுகின்றன என்பதனை முன்னமே http://dravidianatheism.wordpress.com என்ற தளத்தில் எடுத்துக் காட்டியுள்ளேன். அதில் ஆங்கிலம் மற்றும் தமிழ் என்றுள்ளதால், இனி தமிழ் பதிவுகள் தனியாக இங்கு https://dravidianatheism2.wordpress.com பதிவு செய்ய தீர்மானித்துள்ளேன்.

இந்து பண்டிகைகளின் போது சமதர்மம், சமத்துவம், செக்யூலரிஸம் ரீதியில் வாழ்த்து சொல்லவேண்டாம், ஆனால் அவதூறு செய்யவேண்டும் என்ற மனப்போக்கு எதனைக் காட்டுகிறது?

சரி, இன்று “பக்ரீத்”, நேற்றே முந்திகொண்டு வந்து அரசியல்வாதிகள், தலைவர்கள் வாழ்த்து சொல்லிவிட்டார்கள்!

நன்று!

பிறகு, இந்துக்களை கேலி பேசவேண்டும், சீண்டவேண்டும் என்ற போக்கு எதற்கு?

நவராத்திரி விழா? பாலுறவு கொள்ளும் பள்ளியறையா? பெற்றோர்கள் கடும் அதிர்ச்சி

விடுதலை, முதல் பக்கம், 27-11-2009

http://viduthalai.periyar.org.in/20091128/news01.html

அகமதாபாத், நவ. 28_ நவராத்திரி என்பது இந்து மதப் பண்டிகை என்றாலும், அந்த வாய்ப்-பைப் பயன்படுத்தி இரு-பால் இளைய சமுதாயமும் உடலுறவு கொள்ளும் வாய்ப்பாகப் பயன்-படுத்திக் கொள்கின்ற-னர் என்கிற அதிர்ச்சி தக-வல் வெளிவந்துள்-ளது.

குஜராத்தின் பெரு நக-ரங்களிலும், சிறு நகரங்-களிலும் நவராத்-திரி விழாவின் போது அந்த ஒன்பது நாட்களிலும் இரவு நேரங்களில் தாண்-டியா நடனம் நடப்பது வழக்கம். மற்ற நேரங்-களில் இரவு நேரங்-களில் வெளியே செல்ல இளம் பெண்களை பெற்-றோர்கள் அனுமதிக்க மாட்டார்கள். ஆனால் இந்த தாண்டியா நட-னத்தைக் காண இளம் பெண்கள் இரவில் வெளியே செல்வதற்கு பெற்றோர்கள் அனுமதி அளிக்கின்றனர். இந்த தாண்டியா நடனம் நள்-ளிரவு வரையிலும், சில நேரங்களில் விடியும் வரை-யிலும் நடைபெறும். இந்த சுதந்திரத்தைப் பயன்படுத்திக் கொண்டு சில இளம் பெண்-களும், இளைஞர்களும் பாலியல் உறவு கொள்-வது கடந்த சில ஆண்டு-களில் அதிகரித்து வருவ-தாக பத்திரிகை, தொலைக்-காட்சி மற்றும் இதர ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த நவராத்திரி விழாவின்போது ஆணுறை விற்பனை 25 முதல் 50 விழுக்காடு வரை அதிகரித்திருந்தது என்று பத்திரிகை செய்தி-களும், ஊடகச் செய்தி-களும் தெரிவிக்கின்றன. நவராத்திரிக்கு முந்தைய மூன்று நாட்களில் மட்-டும் அவற்றின் விற்-பனை இரு மடங்கு பெரு-கியுள்ளது. நவராத்திரி விழாவின்போது ஆணுறை தயாரிப்பு நிறுவனங்கள் சிறப்பு விற்பனை திட்டத்தை அறிமுகப் படுத்துகின்-றன. ஒரு வாரத்தில் இவற்-றின் விற்பனை 50 விழுக்காடு அதிகரித்தி-ருந்தது என்பதை இந்த நிறுவனங்கள் ஒப்புக் கொள்கின்றன.

ஆணுறை வாங்கும் பெண்கள்

இத்தகைய கருத்-தடுப்பு கருவிகளைக் கேட்டு வாங்கும் அள-வுக்கு இளம் பெண்கள் துணிவு பெற்றவர்-க-ளாக உள்ளனர் என்று மருந்து விற்பனையாளர் சங்கச் செயலாளர் ஜஸ்-வந்த் படேல் கூறுகி-றார்.

நவராத்திரி நடந்து முடிந்தபின் வரும் மாதங்களில் குஜராத் மாநிலத்தில் கருக்-கலைப்பு எண்ணிக்கை-யும் அதிகரித்து வருவ-தாகக் கூறப்படுகிறது.

ஓட்டல் உரிமையா-ளர்கள் இந்த நேரத்தில் பெரும் லாபம் ஈட்ட முடி-கின்றது. ஒரு மணி நேரத்திற்கு ஒரு அறைக்கு ரூ.200 முதல் ரூ.500 வரை வாடகை வசூ-லிக்-கின்றனர்.

இத்தகைய செய்தி-கள் பெற்றோருக்குக் கவலை அளிப்பதாக இருக்கின்றன. வசதி படைத்த பெற்றோர் தங்களின் மகள்கள் தாண்டியா நடனத்தின்-போது எங்கு செல்கின்ற-னர், என்ன செய்கின்-ற-னர் என்பதைக் கண்-காணிக்க தனியார் துப்-பறியும் நிறுவனங்களின் உதவியை நாடுகின்றன-ராம்.

ஒரு சில இளைஞர்-கள் பாலுறவு கொள்-ளும் காட்சிகளை தங்-கள் கைபேசிகளிலும், மறைத்து வைத்திருக்கும் காமிராவிலும் பதிவு செய்து அவர்களையோ அல்லது அவர்களது பெற்றோர்களையோ மிரட்டி பணம் சம்பா-திப்-பற்கு மனச் சாட்சி-யற்ற சிலர் இதைப் பயன்-படுத்திக் கொள்கின்ற-னர். சிலர் இணைய தளங்-களுக்கு இவற்றை விற்று பணம் சம்பாதிக்-கின்றனர்.

இந்தப் பிரச்சினை-யின் தீவிரத்தைப்பற்றி தங்கள் மகன், மகளு-டன் பேசி அவர்களை எச்சரிக்கும் துணிவு பெற்றோருக்கு வேண்-டும். இதற்கான விழிப்-புணர்வு செயல் திட்டங்-களை மேற்கொள்ளும் மக்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்க-ளுடன் கலந்து பேசுவ-தற்கு பெற்றோர்கள் தயங்கக்கூடாது. இத்த-கைய விழிப்புணர்வு செயல் திட்டங்களைப் பார்ப்பதற்கு தங்கள் குழந்தைகளுக்கு பெற்-றோர் தூண்டுதலாக இருக்க வேண்டும்.

கருக்கலைப்புகள்

நவராத்திரியைத் தொடர்ந்து வரும் மாதங்களில் நடக்கும் கருக்கலைப்புகளின் எண்ணிக்கை 5 ஆண்டு-களுக்கு முன்பு இருந்த-தைவிட இந்த ஆண்டு 10 விழுக்காடாகக் குறைந்-துள்ளதாகக் கூறப்-படு-கிறது. இது ஏதோ இளம் பெண்கள் எல்-லாம் ஒழுக்கம் மிகுந்த-வர்களாக ஆகிவிட்-ட-னர் என்பதைக் காட்-டாது; கருத்தரிக்காமல் இருக்கத்தக்க வழி-முறைகளை அவர்கள் புத்திசாலித்தனத்துடன் பின்பற்றினர் என்று வேண்டுமானால் கூற-லாம்.

கருத்தரிப்பதைத் தவிர்ப்பதற்குப் பயன்-படும் பல்வேறு பொருள்-களைப் பற்றி இளை-ஞர்-கள், குறிப்பாக இளம் பெண்கள் நன்-றாகவே அறிந்துள்ள-னர் என்றும், அவற்றை நன்றாகவே பயன்-படுத்-திக் கொள்கின்றனர் என்றும் கடந்த அய்ந்து ஆண்டு காலமாக அக-மதாபாத் நகர நிகழ்வு-களை கவனித்து வரும் மருத்துவர்கள் கூறு-கின்றனர்.

நவராத்திரி தேவைதானா?

பெரும்பாலான இளை-ஞர்கள் இந்த ஒன்பது நாள் விழாவின்-போது இரவு நேரங்-களில் தங்களின் ஆற்-றலையும், நேரத்தையும், பணத்தையும் முறையற்ற வழிகளில் வீணாக்கி வரு-கின்றனர். இந்த விழாக் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்பவர்கள் மட்டுமன்றி, ஆணுறை உற்பத்தியாளர்களும், மருத்துவர்களுக்கூட நல்ல வருவாய் பெறு-கின்-றனர். இத்தகைய ஒரு திருவிழா தேவை-தானா? சிந்தித்துப் பாருங்கள்.

இது எதனை எடுத்துக் காட்டுகிறது?

“நவராத்திரி” போய், “தீபாவளி” இல்லை “தீபாவலி” போய் “கார்த்திகை”யும் வந்துவிட்டது. இன்று நடப்பது “பக்ரீத்”!

சமத்துவ, சமதர்ம, ஒருமைப்பாடு, ஜீவகாருண்யம், அஹிம்சை, கொல்லாமை, புலால் உண்ணாமை எப்படி எத்தனையோ தமிழில் உள்ளது.

ஆனால் எதுவுமே ஞாபகத்திற்கு, தமிழ்சிந்தனைக்கு, தமிழ் மனங்களுக்கு வராது, வரவே வராது!

திருவள்ளுவரும், வல்லளாரும் வரமாட்டார்கள்!

ஆனால், அதே “நன்னாளில்” மேலேகுறிப்பிட்டமாதிரி எழுத்துகள் வரும்!

அதே மாதிரி, மற்ற மதங்களைப் பற்றியும் தாராளமாக எழுதலாம்.

ஏனெனில், அங்கு அத்தகைய நிகழ்வுகள், நிகழ்ச்சிகள், ………………….அதிகம்.

ஆனால், பிரச்சினை அதுவல்ல. லிபரான் கமிஷன் அறிக்கை 26/11 தேதிக்கு முன்பு வந்தது போன்று இன்று இது வந்துள்ளது.

பகுத்தறிவு, பகுக்காமல் இருக்கும் அறிவு, சாதாரண அறிவு, …………….எது இருந்தாலும், இந்த பாரபட்சத்தை, பாகுபாட்டை, ……….அறிந்து கொள்ளலாம்.

கொசுருக்கு, இந்த செய்தி வேறு!

விநாயகன் சிலை விழுந்து முதியவர் உயிரிழப்பு

சென்னை, நவ. 28_ சென்னை அருகே சேலை-யூ-ரில் நடைபெற்ற ஒரு திருமண வரவேற்பு மண்-டபத்தில் வைக்கப்பட்டி-ருந்த பனிக்கட்டி பிள்-ளையார் கரைந்து விழுந்-ததில் முதியவர் ஒருவர் அடியில் சிக்கி பரிதாப-மாக இறந்து போனார்.

படப்பையை அடுத்த அழகூர் கிராமத்தைச் சேர்ந்த அரிஹரன் என்-பவரின் மகன் தனசேக-ரன் கிழக்கு தாம்பரம் வால்மீகி தெருவில் உள்ள ஒரு திருமண மண்டபம் ஒன்றில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். அம்-மண்டபத்தில் திருமணம் நடக்கும் போது அவரும் அவரது மனைவி சந்திரா-வும் அங்கு வந்து சாப்-பாடு இலை எடுப்பது, துப்-புரவு செய்வது போன்ற வேலைகளைச் செய்து-விட்டு பின்னர் சாப்-பிட்டுவிட்டுச் செல்வார்-கள்.

26ஆம் தேதியன்று அந்த மண்டபத்தில் நடைபெற்ற திருமண வரவேற்வு விழாவின்-போது மண்டபத்தின் முன்னாள் 300 கிலோ எடையுள்ள பனிக்கட்டி பிள்ளையார் ஒன்று வைக்கப்பட்டிருந்தது. இரவு 10 மணி அளவில் சாப்பிட்டு முடித்த அரி-ஹரன் பிள்ளையார் சிலை அருகே நின்று அதைப் பார்த்துக் கொண்டி-ருந்தார். திடீரென்று பிள்-ளையார் சிலை பனிக்-கட்டி உருகி உடையத் தொடங்கியது. அருகில் நின்று வேடிக்கை பார்த்-துக் கொண்டிருந்த அரி-ஹரன் மீது பனிக்கட்டி-கள் சரிந்து விழுந்தன. பனிக்கட்டிக்குள் சிக்கிக் கொண்ட அவருக்கு பலத்த காயம் ஏற்பட்-டது. இடிபாட்டில் சிக்-கிய அவரை மீட்டு மருத்-துவமனைக்குக் கொண்டு செல்லும்போது, வழியி-லேயே அவர் உயிர் நீத்-தார். இச்சம்பவம் இப்-பகுதியில் பெரும் பர-பரப்பை ஏற்படுத்தி-யுள்-ளது.

“கொல்லும் பிள்ளையார்”………….