Archive for செப்ரெம்பர், 2010

திமுக அப்படி யொன்றும் ஏமாந்த சோணகிரியாக ஆகிவிடாது!

செப்ரெம்பர் 21, 2010

திமுக அப்படி யொன்றும் ஏமாந்த சோணகிரியாக ஆகிவிடாது!

மெட்ராஸ் பாஷை செத்தபாடையிலிருந்து வந்ததா? தமிழில் உள்ள சில திட்டுக்கள் எல்லாம் செத்தப்பாடையில் இருந்து பெறப்பட்டதைக் கட்டு வியப்பாக உள்ளது. கஸ்மாலம்[1], கர்மாந்தரம்[2], துராந்துருவே[3], பேமாணி[4], சோணகிரி[5]…….இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால், இவையெல்லாம் கருணாநிதிக்குப் பிடித்தவையாக இருக்கின்றன. இப்பொழுதுகூட “திராவிட முன்னேற்றக் கழகம் அப்படி யொன்றும் ஏமாந்த சோணகிரியாக ஆகிவிடாது”, என்று சொல்வது கருணாநிதிதான்!.

ஆரியக் கலாச்சாரத்தைப் பிரித்துக் காட்டவே திராவிடக் கலாச்சாரம்[6]!  இதோஒ கருணாநிதி பேசுவதை கவனியுங்கள்: “நம்முடைய கலாச்சாரம் தனி கலாச்சாரம், அதற்குப் பெயர்தான் நண்பர்களே, திராவிடக் கலாச்சாரம்[7]. திராவிடக் கலாச்சாரம் என்று சொல்லும்போது அதிலே சாரம் இருக்கிறது, அதனால்தான் இதை திராவிடக் கலாச்சாரம் என்று பிரித்துச் சொல்லுகிறோம் என்ற அந்த வேறுபாட்டை பொதுவிலே உணரக்கூடியவர்கள் உண்டு. ஆரியக் கலாச்சாரத்தைப் பிரித்துக் காட்ட, நாம் திராவிடக் கலாச்சாரத்தைச் சொல்ல வேண்டி இருக்கிறது. திராவிடக் கலாச்சாரத்தில் ஊறி வளர்ந்தவர்கள் நாம். அதனால்தான் இந்த இயக்கத்திற்கு திராவிட முன்னேற்றக் கழகம் என்று பெயர் வைத்திருக்கிறோம் என்றால் திராவிடக் கலாச்சாரத்தை வாழ்த்த, திராவிடக் கலாச்சாரத்தைப் போற்ற, திராவிடக் கலாச்சாரத்தை வெற்றி கொள்ளச் செய்ய நாம் உருவாக்கியிருக்கின்ற கழகத்திற்குப் பெயர்தான் திராவிட முன்னேற்றக் கழகம்.

திராவிட என்ற சொல்லை எதிர்த்தவர்கள் இன்றைக்கு தாங்கள் ஆரம்பிக்கின்ற புதிய கட்சிகளுக்கு அதை வைத்துக் கொள்கிறார்கள்[8]: திராவிட என்ற சொல்லை எதிர்த்தவர்கள் இன்றைக்கு திராவிட என்ற சொல்லை தாங்கள் ஆரம்பிக்கின்ற புதிய கட்சிகளுக்கெல்லாம் வைத்துக் கொண்டு நம்முடைய வாய்ப்பை, நம்முடைய எதிர்காலத்தை, நம்முடைய பெருமையை, நம்முடைய மக்கள் பற்றை, மக்கள் தொடர்பை அறுத்துவிடுவோம் என்றெல்லாம் மார்தட்டுகிறார்கள். நான் அவர்களுக்குச் சொல்வேன், இங்கே பேசியவர்கள் எல்லாம் குறிப்பிட்டதைப் போல, திராவிட முன்னேற்றக் கழகம் அப்படி யொன்றும் ஏமாந்த சோணகிரியாக ஆகிவிடாது.

வளர்ந்து வரும் கழகத்தரு[9]: ஏனென்றால், இதனுடைய அடிப்படை, இன உணர்வு அடிப்படை. இது ஏதோ திடீரென்று அங்கிருந்து ஒரு செடியை எடுத்து இங்கே பதியம் போடுவதைப்போல வைத்த செடி அல்ல. இங்கிருந்தே

தெள்ளிய ஆலின் சிறுபழத் தொருவிதை

தெண்ணீர் கயத்துள் சிறுமீன் சினையினும்

நுண்ணிதே ஆயினும் அண்ணல் யானை

அணிதேர்ப்புரவி ஆட்பெரும் படையுடன்

மன்னர்க்கு இருக்க நிழலா கும்மே!

என்ற பாட்டின் கருத்தைப்போல்; மீன் முட்டையைவிட சிறிதாக – அந்த சினையைவிட சிறிதாக இருக்கின்ற ஒரு விதையில் இருந்து முளைத்ததாக இருந்தாலும், அணி தேர் புரவி ஆட்பெரும் படையோடு மன்னருக்கு இருக் கின்ற நிழலைத் தரக்கூடிய மாபெரும் தருவாக இன்றைக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தரு வளர்ந்து இருக்கிறது. இந்தத் தரு நிழலிலே நமது மக்கள் குளிர்காண்பது மாத்திரமல்ல, நம்முடைய குலப் பெருமையைக் காணலாம், இந்தத் தரு நிழலிலே, நாம் இன்னும் பல மேன்மைகளைக் காணலாம்.

(நாகர்கோவில் முப்பெரும் விழாவில் முதலமைச்சர் கலைஞர் – 20.9.2010)

ஆரியக் கலாச்சாரம் திராவிடக் கலாச்சாரம், கஸ்மாலம், துராந்துருவே, பேமாணி, சோணகிரி, திராவிடம், ஆசாரம், தரு


[1] கஸ்மாலம் = கசு + மலம் = மனிதன் இரண்டையும் அகற்றவேண்டும். அதாவது அவற்றுடன் இருப்பவன், அவைகளாகவே ஆகிறான்.

[2] கருமம் + அந்தரம் = கருமத்தின் முடிவு, செய்த வினையின் முடிவு.

[3] துராந்துவே = காணாமல் போய் விடுவாய், அதாவது துவாரம் + அந்தரம் = துவாரந்தரம் என்பதுதான், துராந்துருவே / துராந்துவே ஆகிறது. அதாவது போய் சேரும் முடுவு தெரியாமல் போய் விடுவாய் என்ரு பொருள்.

[4] நல்ல மனிதத்தன்மைக்கு எதிர்ப்பதமாக உபயோகப் படும் கெட்ட வார்த்தை.

[5] சோணகிரி = சோணம் + கிரி = பொன்னால் ஆன மலை, அதாவது, அத்தகைய மலை எங்கும் இருக்காது. எனெவே அப்படி சொல்லி ஏமாற்றினால், அதை நம்புகிறவர்கள் தாம் “சோணகிரி”!

[6] http://www.viduthalai.periyar.org.in/20100921/news24.html

[7] திராவிட, ஆசாரம், முதலியவை செத்தப்பாடை சொற்கள்.

[8] http://www.viduthalai.periyar.org.in/20100921/Page07.html

[9] இங்கு தரு என்ற வார்த்தையும், செத்தப்பாடையில் இருந்து எடுத்தாளவதுதான்!