Posts Tagged ‘மயிர்’

திக-திமுக பேச்சாளர்கள், தலைவர்கள் மற்றும் சித்தாந்தவாதிகள், 1950களிலிருந்து பேசி வரும் கெட்ட, ஆபாச மற்றும் மோசமான வார்த்தைகள், வசவுகள் மற்றும் திட்டுகள் (1)

ஜனவரி 14, 2023

திகதிமுக பேச்சாளர்கள், தலைவர்கள் மற்றும் சித்தாந்தவாதிகள், 1950களிலிருந்து பேசி வரும் கெட்ட, ஆபாச மற்றும் மோசமான வார்த்தைகள், வசவுகள் மற்றும்  திட்டுகள் (1)

திகதிமுக பேச்சாளர்கள், தலைவர்கள் மற்றும் சித்தாந்தவாதிகள், 1950களிலிருந்து பேசி வருவது: திக-திமுக பேச்சாளர்கள், தலைவர்கள் மற்றும் சித்தாந்தவாதிகள், 1950களிலிருந்து பேசி வந்ததை, இன்றைய 70-80-90 வயதானவர்களுக்கு, அதிலும் நேரிடையாக கூட்டங்களுக்குச் சென்று அவர்கள் பேசியதைக் கேட்டவர்களுக்கு, அவர்கள் எவ்வாறு, எப்படியெல்லாம் அநாகரிகமாக, கெட்ட வார்த்தைகள், மோசமான வசைபாடுகள், முதலியவற்றையெல்லாம் சரமாரியாக, வழக்கமாக பேசுவார்கள் என்று அறிவார்கள். அத்தகைய தரமற்ற, மோசமான, ஆபாசமான, மிகக் கேவலமான பேச்சுகள், இப்பொழுது, 2021-2023 ஆண்டுகளிலும் பேசப் படுகிறது என்பதைக் கேட்கும் பொழுது, கவனிக்கும் பொழுது, மிக வருத்தமாக, திகைப்பாக மற்றும் அதிர்ச்சியாக இருக்கிறது.  சைதை சாதிக், துரை முருகன், கே.என். நேரு, ஆர்.எஸ். பாரதி, சிவாஜி கிருஷ்ணமூர்த்தி என்று பலர் பேச ஆரம்பித்து விட்டார்கள். இப்பொழுது, சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசியது, பழைய அந்த 1950களில் பேசிய திக-திமுகவினரை ஒத்துப் போகிறது. இதை விட கேவலமாக எல்லா கூட பேசியிருக்கிறார்கள். திகவினர் பேசும் பொழுது, பெண்களே வேகமாக நடந்து, ஏன் ஓடவும் செய்வார்கள், அந்த அளவுக்கு மோசமாக, ஆபாசமாக, அருவருப்பாகப் பேசுவது உண்டு.

9-01-2023 ஆளுநர் ஆர்.என்.ரவி உரை: தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் ஜனவரி 9 ஆம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. திமுக அரசுக்கும் ஆளுநருக்கும் நீண்டநாட்களாக இருந்து வரும் பஞ்சாயத்துக்கு மத்தியில் பெருத்த எதிர்பார்ப்புடன் இக்கூட்டத்தொடர் தொடங்கியது. இதற்கிடையே, தமிழ்நாட்டை தமிழகம் என்று சொல்வதுதான் சரியானதாக இருக்கும் என்று ஆர்.என். ரவி கருத்து பதிவிட்டிருந்தார். அந்த கருத்து தமிழ்நாட்டில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆளுநர் ரவி ஆளுநராக செயல்படாமல் தொடர்ந்து பாஜக கட்சிக்காரராகா கருத்து கூறி வருகிறார் என்றும் அவர் உடனே பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். உண்மையில் இவையெல்லாம் கடந்த 50-70 ஆண்டுகளில் ஏற்கெனவே பேசி முடித்தது தான். அச்சிலும் உள்ளது தான்.

திராவிட சித்தாந்த வார்த்தைகளை ஆளுனர் தவிர்த்தது: இதற்கு மத்தியில் சட்டசபை உரையை வாசித்த ஆளுநர் ரவி, உரையில் இருந்த சமூகநீதி, சுயமரியாதை, திராவிட மாடல் என்ற வார்த்தைகளை வாசிக்காமல் தவிர்த்தார். மேலும், தமிழ்நாடு சட்டம் ஒழுங்கை சிறப்பாக கையாள்கிறது, அமைதி பூங்காவாக திகழ்கிறது என்பதையும் வாசிக்காமல் கடந்தார். குறிப்பாக, பெரியார், அம்பேத்கர், காமராசர், அண்ணா, கலைஞர் ஆகிய தலைவர்களின் பெயர்களையும் வாசிக்காமல் கடந்துவிட்டார். இதை விமர்சித்த முதல்வர் ஸ்டாலின் ஆளுநருக்கு முன்பாகவே எதிர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார். ஆளுனர் உட்கார்ந்திருக்கும் பொழுதே, ஏற்கெனவே தயாரித்த, அச்சிடத்த காகிதப் பேச்சை வைத்து ஸ்டாலின் படிக்க ஆரம்பித்தார். ஆளுனருக்கு தமிழ் தெரியாது என்பதால், ஸ்டாலின், ஆங்கில மொழிபெயட்ப்பைக் கொடுத்திருக்க வேண்டும். அந்நிலையில், ஆளுனர் போலீஸ் அதிகாரியைக் கூப்பிட்டு கேட்கிறார். அவர், ஸ்டாலின் பேசியதைப் பற்றி சொல்லியிருக்கலாம். அதனால், அதிகாரிகளைக் கூப்பிட்டு, வெளியே சென்று விட்டார். “அப்போது ஆளுநர் வெளிநடப்பு செய்தார் என்பது அனைவரும் அறிந்ததே,” என்று தமிழ் ஊடகங்கள் சுருக்கமாக கூறியுள்ளன. அதற்கு பிறகு திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் ஆளுநரை விமர்சிக்க கூடாது என்றும் அவரை குறித்து கருத்து தெரிவிக்கக்கூடாது என்றும் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி ஆளுநரை பாகிஸ்தானுக்கு அனுப்பி கொல்ல வேண்டும் என்று பேசியது: இந்நிலையில் திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி ஆளுநரை பாகிஸ்தானுக்கு அனுப்பி கொல்ல வேண்டும் என்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை கெட்ட கெட்ட வார்த்தைகளில் வசைபாடியும் இருப்பது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது[1]. சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசியதாவது[2]; “அரசு கொடுத்த உரையை ஒழுங்காக படித்திருந்தால் ஆளுநரை கையெடுத்து கும்பிட்டு அனுப்பி இருப்பேன்[3]. ஆனால், அவர் டாக்டர் அம்பேத்கர் பெயரையே சொல்லமாட்டேன் என்று தவிர்த்தால் செருப்பால் அடிப்பேன் என்று சொல்ல எனக்கு உரிமை இருக்கா இல்லையா? அம்பேத்கர் பெயரை சொல்லமாட்டேன் என்று சொன்னால் ஆளுநர் காஷ்மீருக்கு செல்லட்டும்; நாங்களே தீவிரவாதிகளை அனுப்பி சுட்டு கொல்வோம்,” என்றார். இப்படி சுருக்கமாக செய்தி போட்டிருந்தாலும், மிகவும் கெட்ட வார்த்தைகளை உபயோகப் படுத்தியிருப்பதை கேட்கலாம்.

திமுக பேச்சாளரின் கொலைவெறி பேச்சு: இந்தியா டுடே[4], “ஆளுநரை திட்ட வேண்டாம் என முதல்வர் கேட்டுக்கொள்கிறார். அவர் பேச்சை சரியாகப் படித்திருந்தால், அவரது காலில் பூ வைத்து கைகூப்பி நன்றி தெரிவித்திருப்பேன்[5]. ஆனால், அம்பேத்கரின் பெயரைச் சொல்ல மறுத்தால் அவரை செருப்பால் அறைய எனக்கு உரிமை இல்லையா?[6] அவருடைய பெயரைச் சொல்ல மறுத்ததால், நீங்கள் காஷ்மீருக்குச் செல்லுங்கள்[7]. உங்களைச் சுட்டுக் கொல்ல ஒரு தீவிரவாதியை அனுப்புவோம்,” என்று பேசியது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது[8]. இப்பேச்சு ஆங்கில ஊடகங்களில் 13-01-2023 அன்றே பரவலாக, இணைதளங்களில் வெளியிட்டுள்ளன. ஏனெனில், 2023ல் இவ்வாறு பேசுவது தான் அதிர்ச்சியளிப்பாக உள்ளது. இதனால், இழிவுபடுத்துதல், துஷ்பிரயோகம் செய்தல், அசிங்கமாக-ஆபாசமாக எப்படி பேசுவார்கள் என்று திகைத்து விட்டனர் எனலாம்.

கொஞ்சம் விவரமாக; திமுக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், தமிழக அரசு எழுதி கொடுத்ததை முழுமையாக படிக்காத ஆளுநரை தகாத வார்த்தையில் பேசியும், அவரை செருப்பால அடிப்பேன் என ஆவேசமாக பேசினார்[9]. தொடர்ந்து, அம்பேத்கர் பெயரை சொல்லாத அவரை, ஜம்மு காஷ்மீருக்கு சென்று விடலாம் என்றும், அங்கு தீவிரவாதிகளை அனுப்பி கொல்வோம் என்று எச்சரிக்கை விடுத்தார்[10]….மேலும், தனது பதவியை பாதியிலேயே ராஜினிமா செய்து வந்த அண்ணாமலை எனக் கூறி அசிங்கமான வார்த்தையில் விமர்சித்த திமுக நிர்வாகி சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, பிரான்ஸ்ல தயாரித்த கடிகாரத்தை கட்டிக்கொள்வதுதான் தேசபக்தியாடா..? என்று கேள்வி எழுப்பினார்.…….தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்த அவர், வாரிசு அரசியல் குறித்து பேசினார். கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதிக்கு ஆண்மை இருப்பதால் வாரிசு அரசியல் நடத்துவதாகவும், ஆண்மை இல்லாதவர்கள் மருத்துவமனைக்கு செல்லுமாறு கிண்டலாக குறிப்பிட்டார்……..அதோடு, திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று அதிமுக குற்றம்சாட்டி வருவது குறித்து பேசிய அவர், பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கேளியாக குறிப்பிட்டு, ஜெயலலிதா மரணம் எப்போது நடந்தது என்று சொல்லும் யோகிதை இருக்கிறதா..? என அதிமுகவுக்கு கேள்வி எழுப்பினார்.

© வேதபிரகாஷ்

13-01-2022


[1] சமயம், கவர்னரை நாங்களே கொல்லுவோம்‘… அண்ணாமலையை… – திமுக பேச்சாளர் பகீர்..!, Divakar M | Samayam Tamil | Updated: 13 Jan 2023, 4:05 pm.

[2] https://tamil.samayam.com/latest-news/state-news/dmk-spokesperson-sivaji-krishnamurthy-has-criticized-governor-ravi-and-annamalai-using-filthy-words/articleshow/96965349.cms

[3] India Today, Will send terrorist to kill Tamil Nadu Guv, says DMK leader; BJP demands arrest under Goondas Act, Pramod Madhav and Apoorva Jayachandran , Chennai,UPDATED: Jan 13, 2023 23:07 IST

[4] https://www.indiatoday.in/india/story/tamil-nadu-cm-governor-stand-off-dmk-leader-remark-row-bjp-reacts-2321350-2023-01-13

[5] Times.Now, ‘If you don’t read government’s speech, go to Kashmir and we will…’, DMK leader’s abusive remarks against TN Guv, Updated Jan 13, 2023 | 10:17 PM IST.

[6] https://www.timesnownews.com/india/dmk-leader-shivaji-krishnamurthy-abusive-remarks-against-tamil-nadu-governor-rn-ravi-article-96973932

[7] ANI, “If you don’t read govt’s speech, then go to Kashmir”: DMK leader’s remark against Tamil Nadu Governor, ANI | Updated: Jan 14, 2023 00:51 IST

[8] https://www.aninews.in/news/national/politics/if-you-dont-read-govts-speech-then-go-to-kashmir-dmk-leaders-remark-against-tamil-nadu-governor20230114005143/

[9] அப்டேட்.நியூஸ், எச்சை சோறு.. பாதியிலே ஓடி வந்த பொ*** அண்ணாமலை ; ஆளுநரை செருப்பால அடிப்பேன் ; திமுக பிரமுகர் சர்ச்சை பேச்சு, Author: Babu Lakshmanan, 13 January 2023, 5:44 pm.

[10] https://www.updatenews360.com/trending/dmk-executive-controversial-speech-about-governor-rn-ravi-and-annamalai-130123/