Posts Tagged ‘வைஷ்ணவி’

குருவின் சாவிக்காக சிஷ்யைகள் சண்டை – பீட்டரிடம் சாவியிருந்தால் இந்த தொல்லை வந்திருக்காதே?

மே 7, 2012

குருவின் சாவிக்காக சிஷ்யைகள் சண்டை – பீட்டரிடம் சாவியிருந்தால் இந்த தொல்லை வந்திருக்காதே?

லெனின், நக்கீரன், தினகரன்: “இம்மூவரும்” முன்பு ஆபாச விடியோ எடுத்ததற்கு, டிவி-செனலில் விடாமல் ஒலி-ஒளிபரப்பியதற்கு, ஊடகங்களில் தாராளமாக தூண்டிவிடும் வகையில் செய்திகளை வெளியிட்டுப் பரப்பியதற்கு காரணமாக இருந்தார்கள். லெனின் குருப் தான் சரியான ஆள். அந்த ஆளிருக்கும் போது, பெட்ரூமிலேலேயே வீடியோ கேமரா வைத்து படம் எடுத்துள்ளதாக, ஊடகங்கள் வெளியிட்டு, பெரிய பிரச்சினையாகி இருந்தது. அப்பொழுது நித்யானந்தா அறையின் சாவியை யார் வைத்திருந்தது என்று தெரியவில்லை. அப்பொழுது, லெனின் குரூப் எப்படி உள்ளே சென்று வீடியோ கேமரா வைத்தான், ஆபாசப் படம் எடுத்தான் போன்ற விவகாரங்கள் தெரியவில்லை. ஒருவேளை “நக்கீரனுக்கு” பிரத்யேகமாகத் தெரிந்திருக்கக் கூடும். இப்பொழுது, லெனின் இருந்திருந்தால், சாவிக்காக இப்படி சிஷ்யைகள் சண்டை போட்டுக் கொண்டிருக்க மாட்டார்கள்.

  சொர்க்க வாசலின் சாவியையே, பீட்டர் என்ற ஏசுவின் சீடர் வைத்திருந்தாராம். அதற்கு பலத்த எதிர்ப்பு, சண்டைகள் இருந்து வந்தனவாம். இது போப்புடைய அதிகாரத்தை இன்று எடுத்துக் காட்டுகிறது, ஏனெனில் முதல் போப், பீட்டர் என்று கிருத்துவப் புராணங்கள் கூறிகின்றன.அதாவது, சாவியுள்ளவரிடம் தான் அதிகாரம் இருக்கும். அது[போல, இளையப்பட்டம், முதியப்பட்டத்தின் சாவியை வாங்கிக் கொள்ள அவசரப்படுகிறது போலும்.

நிச்சயமாக, இவ்வளவு அவசரம் கூடாது சாமி. அதற்கு, சிஷ்யைகள் இப்படி சண்டைப் போட்டுக் கொண்டால், மடம் என்னாவது?

மதுரை ஆதீனத்தின் பெண் உதவியாளர் வைஷ்ணவி மீது தாக்குதல்: நித்யானந்தா பெண் சீடர் மீது புகார்[1]: மதுரை ஆதீனம் அருணகிரிநாதரின் பெண் உதவியாளர் வைஷ்ணவி (வயது-28). இவர் தஞ்சை அருகே உள்ள கச்சனம் பகுதியை சேர்ந்தவர். பல மாதங்களாக அருணகிரி நாதரின் “நெருக்கமான”[2] உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நித்யானந்தா நியமிக்கப்பட்ட பின்னர் வைஷ்ணவியை அங்கிருந்து வெளியேற்ற நித்யானந்தா சீடர்கள் அவரிடம் தகராறு செய்து வருவதாக ஏற்கனவே புகார் எழுந்தன. இந்த நிலையில் நேற்று முன்தினம் மதுரை ஆதீன மடத்தில் வருமானவரி துறை சோதனை நடத்தியது. அப்போது வைஷ்ணவியிடம் அதிகாரிகள் அதிக நேரம் விசாரணை நடத்தி உள்ளனர்.

தினகரன் கூறுவது[3]: மதுரை ஆதீனத்தின் செயலாளாரான வைஷ்ணவி மீது நித்தியானந்தாவின் ஆட்கள் சரமாரியாக தாக்குதல் நடத்தியதாகவும்,சுடிதாரை கிழித்து விட்டதாகவும் பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து அங்கு போலீஸார் விரைந்து சென்றனர். பத்திரிக்கையாளர்களை நித்தியானந்தாவின் ஆட்கள் ஆதினத்திற்குள் அனுமதிக்கவில்லை. இதற்கு மதுரை ஆதீனத்தின் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் நித்தியானந்தாவின் ஆட்களுக்கும், மதுரை ஆதீனத்தின் ஆதரவாளர்களுக்குள் மோதல் மூண்டதாக கூறப்படுகிறது. தினமலர் கூறுவது[4]: மதுரை ஆதீன மடத்தில் ஆதீனம் தரப்பினருக்கும், நித்தியானந்தா தரப்பினருக்கும் இடையே மோதல் ‌ஏற்பட்டது. மதுரை ஆதீனமாக நித்தியானந்தா முடிசூட்டப்பட்டதை பெரும் சர்ச்சை நிலவிவருகிறது. இந்நிலையில் மதுரை ஆதீன மடத்திற்குள் பத்திரிகையாளர்களை அனுமதிப்பதாக வேண்டாமா என ஆதீன தரப்பினரு்க்கும், நித்தியானந்தா தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இரு தரப்பினரும் மடத்திற்க்குள்ளேயே மோதிக்கொண்டனர்[5].
தினமலரின் மற்றொரு செய்தி[6]: முன்னதாக மதுரை ஆதீன மடத்தில் பணிவி‌டை செய்து கொண்டிருந்த வைஷ்ணவி என்ற ‌பெண் சீடர் ஆதீன மடத்தினை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த நித்தியானந்தா சீடர்கள் அப்பெண்ணை மிரட்டி தாக்கினார். இனி இங்கு உனக்கு வேலை இல்லை வெளியேறுமாறு கூறியதாக கூறப்படுகிறது. இதனால் மதுரை ஆதீன மடத்தில் பரபரப்பு ‌ஏற்பட்டுள்ளது. நக்கீரன் கூறுவது[7]: அருணகிரிநாதருடைய நெருக்கமான உதவியாளராக வைஷ்ணவி இருந்தார். அவரது தனி அறையின் சாவியை (பணம் மற்றும் தங்க நகைகள் உள்ள அறை) வைஷ்ணவியிடம் ஒப்படைத்துவிட்டு திருவண்ணாமலைக்கு சென்றார். இந்த நிலையில் வைஷ்ணவியிடம், நித்தியானந்தாவின் சீடர் ரிஷி மற்றும் அவரது மனைவி, ஆட்கள் அந்த சாவியை கேட்டதற்கு வைஷ்ணவி மறுத்துள்ளார். இதனால் வைஷ்ணவியை அவர்கள் தாக்கியதில் அவரின் சுடிதார் கிழிந்துவிட்டது.

ஆதினத்தின் அறை சாவிக்காக தகராறு: இந்த நிலையில் நேற்று மதுரை ஆதீனம் அருணகிரி நாதரும், இளைய ஆதீனம் நித்யானந்தாவும் திருவண்ணாமலையில் இருந்து மதுரைக்கு திரும்பி கொண்டிருந்தனர். அவர்களது அறையை வைஷ்ணவி தயார் செய்ததாக கூறப்படுகிறது. அப்போது நித்யானந்தாவின் பெண் சீடர் மத்தியா (30) சமையல் செய்வதற்காக பாத்திரங்கள் வேண்டும் மதுரை ஆதீன அறை சாவியை தா என்று வைஷ்ணவியிடம் கேட்டுள்ளார். இதற்கு வைஷ்ணவி மதுரை ஆதீனம் சொன்னால் மட்டுமே சாவியை தருவேன் என்று கூறியதாக தெரிகிறது. அப்போது நித்யானந்தா சீடர்கள் வைஷ்ணவியை அடிக்க பாய்ந்தனர். அப்போது பெண் சீடர் மத்தியா, வைஷ்ணவியின் துப்பட்டாவை பிடித்து இழுத்ததில் கிழிந்து விட்டது. அப்போது கதறி அழுத வைஷ்ணவி வெளியே வந்து நடந்த சம்பவங்களை விளக்கினார். இதனால் மதுரை ஆதீன மடத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.   இதற்கிடையில் நேற்று இரவு 8 மணிக்கு திருவண்ணாமலையில் இருந்து மதுரை ஆதீனமும், நித்யானந்தாவும் மதுரை வந்தனர். அவர்களிடம் மடத்தில் நடந்த சம்பவங்கள் குறித்து கூறினார்.

சீஷ்யைகளிடம் சமாதான பேச்சு: மதுரை ஆதீனம் அருணகிரி நாதரும், இளைய ஆதீனம் நித்யானந்தாவும் வைஷ்ணவி, மத்தியா இருவரையும் அழைத்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். அதன் பின்னர் அங்கு அமைதி ஏற்பட்டதாக மடத்தில் உள்ள சீடர்கள் தெரிவித்துள்ளனர். வைஷ்ணவி தாக்கப்பட்டதற்கு முக்கிய காரணம், நேற்று முன்தினம் வருமானவரித்துறை சோதனை நடத்தப்பட்டபோது முக்கிய ஆவணங்களை வைஷ்ணவி சொல்லித்தான் ஆதீனத்திடம் அதிகாரிகள் கேட்டு பெற்றதாக கூறப்படுகிறது. இதன் பின்னணியில்தான் வைஷ்ணவியை நித்யானந்தா சீடர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த மோதல் சம்பவம் குறித்து போலீசில் புகார் தெரிவிக்கப்படவில்லை. ஆனாலும் அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் குறித்து மதுரை ஆதீனம் மாலைமலர் நிருபரிடம் கூறியதாவது:-

பத்திரிக்கைக்காரர்களுக்கு சொன்னது: நேற்று ஆதீன மடத்தில் பெண் சீடர் வைஷ்ணவி தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து இரவு அனைவரையும் அழைத்து விசாரித்தோம். பின்னர் அவர்களை சமரசம் செய்து வைத்தேன். மற்றப்படி எந்த பிரச்சினையும் இல்லை. இது ஒரு சாதாரண சம்பவம் சிலரால் பெரிதாக்கப்பட்டுள்ளது. இப்போது மதுரை ஆதீன மடத்தில் எந்த பிரச்சினையும் இல்லை. நேற்று முன்தினம் நடந்த வருமான வரித்துறை சோதனையின்போது அதிகாரிகள் கேட்ட கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் விளக்கமாக பதில் கொடுத்துள்ளோம். அவர்கள் மடத்தின் கணக்கு புத்தகங்களை எடுத்து சென்றுள்ளனர். மற்றபடி ஒன்றுமில்லை. இவ்வாறு மதுரை ஆதீனம் கூறினார்.

வேதபிரகாஷ்

07-05-2012


 


[2] இப்படி விவரித்துள்ளது “நக்கீரன்” தான்!