ஆனைமுகத்தோனுக்கு ஆனைவெடி வைத்து உடைத்தேன் என்று ஆண்டிப்பட்டி ராஜா, ஆனைமுத்து இழவு விழாவில் பேசி ஒப்பாரி வைத்தது! (1)

ஆனைமுகத்தோனுக்கு ஆனைவெடி வைத்து உடைத்தேன் என்று ஆண்டிப்பட்டி ராஜா, ஆனைமுத்து இழவு விழாவில் பேசி ஒப்பாரி வைத்தது! (1)

பிள்ளையார் சிலைக்கு அடியில் ஆனை வெடி வச்சவன் நான்“.. அது சுக்குநூறாகி ஊரே ரெண்டாச்சு.. அலறவிட்ட .ராசா:  சென்னை சேப்பாக்கத்தில் பெரியார் ஆனைமுத்து படத்திறப்பு மற்றும் வெளியீட்டு நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினரும் திமுக துணைப் பொதுச் செயலாளருமான ஆ ராசா பேசியதாவது :………., என்று ஏசியாநெட்.நியூஸ் கதையை ஆரம்பிக்கிறது[1]. “அதன்பிறகுதான் அந்த விபூதிகளை எல்லாம் தூக்கிப் போட்டேன். தூக்கிப் போட்டதும் இல்லாமல் எங்க ஊரில் ஒரு பிள்ளையார் சிலை இருந்தது, அந்த சிலைக்கு கீழே ஒரு  ஆனைவெடி வச்சுட்டேன்.. அது உடைந்து சிதறியது, பின் அது பெரிய பிரச்சனை ஆயிடுச்சு. அதெல்லாம் ஒரு காலம்……,” என்று ராசா பேசியதை வெளியிட்டுள்ளது[2]. “என் வாழ்வில் நான் மாறியதற்கு காரணம் பெரியார் பேசிய அந்த கடைசி பேச்சு தான். பெரியாரின் சிந்தனைகள் என்னுள் வந்த பின்பு ஊரில் இருந்த பிள்ளையார் சிலைக்கு அடியில் ஆனைவெடி வைத்து அதை தகர்த்தவன் தான்,” என திமுக நாடாளுமன்ற உறுப்பினரும், அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளருமான ஆ.ராசா கூறியுள்ளார்[3]. பெரியாரின் கருத்துக்கள் உள்வாங்கிய நான் அம்மா கொடுத்த விபூதி பொட்டளங்களை தூக்கி எறிந்ததாகவும் அவர் பேசியுள்ளார்[4]. பொட்டலம், என்று தமிழில் ஒழுங்காக எழுதத் தெரியாத இந்த திராவிடத்துவ வாதிகள் தாம் தமிழைக் காக்கிறோம், உயிரை விடுகிறோம் என்று வீராப்பு-சால்ஜாப்பு பேசி வருகின்றனர்.

விளம்பரம்தினசரி அறிக்கைஅதிரடி டிவி செய்திகள் மூலம் ஆட்சி நடத்துவது: ஏசியாநெட்.நியூஸ் கதையை தொடர்கிறது, “திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்தது முதல் அரசியல் ரீதியாகவும் நிர்வாக ரீதியிலும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனா காலம்தொட்டு, மழை வெள்ளம் பாதிப்புவரை அரசு எடுத்த ஒவ்வொரு நடவடிக்கைகளையும் மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். இது ஒருபுறம் இருந்தாலும் எதிர்க்கட்சிகளான அதிமுகபாஜக பிரச்சாரத்தின் போது திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை, பொய் வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்துவிட்டது என்று திமுக மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. அதேபோல் பல்வேறு மாநிலங்களில் பெட்ரோலுக்கான மாநில வரி குறைக்கப்பட்டுள்ளது, அதேபோல் தமிழக அரசும் அந்த வரியை குறைக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன”. விளம்பரம்-தினசரி அறிக்கை-அதிரடி டிவி செய்திகள் மூலம் ஆட்சி நடத்துவது என்பது தொடர்ந்து வருகிறது. ஆக, ஆ. ராசவின் பேச்சு, அத்தகைய பிரச்சஆத்தின் யுக்தியாகவும் இருக்கலாம். ஏனெனில், இதெல்லாம் திராவிடத்துவவாதிகளுக்கு கைவைந்த கலை.

இந்துக்களை எதிர்த்து வரும் கழகங்கள்: ஏசியாநெட்.நியூஸ் கதையை தொடர்கிறது, “அதிமுக எதிர்க்கட்சியாக இருந்தாலும் உண்மையான எதிர்க்கட்சி பாஜகதான் என்பதை கட்டமைக்கும் வகையில் பாஜகவினர் தொடர்ந்த திமுக அரசை மூர்க்கமாக எதிர்த்து வருகின்றனர். அந்த வகையில் திமுக ஆட்சி என்பது இந்துக்களுக்கும் இந்து மதத்திற்கும் எதிரானது, அதனால்தான் இந்து அறநிலைத்துறையின் பெயரில் இந்துக் கோவில்களில் உள்ள தங்க நகைகளை உருக்குவோம் எனக் கூறி வருகின்றனர். இன்னும் பல்வேறு இடங்களில் கோவில் சொத்துக்கள் மீட்கப்படாமல் உள்ளன[5]. அதை மீட்க முயற்சிகள் இல்லை, அதேபோல விநாயகர் சதுர்த்தியின் போது சிலைகளை வைக்க அனுமதி வழங்காததும் இந்து மத விரோத போக்கு இல்லாமல் வேறொன்றும் இல்லை என கடுமையாக விமர்சித்து வருகின்றனர்[6]. கழகங்கள் இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம் என்ற முழக்கத்துடன் பாஜக செயல்பட்டு வந்தாலும் அதிமுக திமுக என்ற இரண்டு கழகங்களில் அதிமுகவுடன் கைகோர்த்து திமுகவை கடுமையாக விமர்சித்து வருகிறது. திமுக எதிர்ப்பு என்பது அரசியல் எதிர்ப்பு மட்டும் அல்ல சித்தாந்த ரீதியான எதிர்பார்க்க பாஜக செய்து வருகிறது. தமிழகத்தைப் பொறுத்த வரையில்  அதிமுகதான் எதிர்க்கட்சி என்றாலும் பாஜக- திமுகவுக்கு இடையேதான் கடுமையான எதிர்ப்பு நிலவி வருகிறது என்பதே நிதர்சனம்.

கருப்பு சிவப்பு நீலம் ஒன்றாக இருந்தால் மட்டுமே 2024 ல் பாஜக என்ற காவியை வீழ்த்த முடியும்: ஏசியாநெட்.நியூஸ் கதையை தொடர்கிறது, “இந்நிலையில் அதை மெய்ப்பிக்கும் வகையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் .ராசா பெரியாரின் சுயமரியாதை மற்றும் கொள்கை பாதையைப் பின்பற்றிய ஆனைமுத்து படத்திறப்பு விழாவில் இந்து மதத்தை தான் ஏன் எதிர்க்கிறேன் என்றும், காவி எவ்வளவு ஆபத்தானது என்பது குறித்தும் விளக்கி பேசியுள்ளார். மேலும் கருப்பு சிவப்பு நீலம் ஒன்றாக இருக்க வேண்டும் அப்படி இருந்தால் மட்டுமே 2024 ல் பாஜக என்ற காவியை வீழ்த்த முடியும்,” என்று பேசியுள்ளார்[7]. தொடர்ந்து அவர் தனது பேச்சுக்கள் மூலம் பாஜக எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்.  இதை தமிழ்.ஒன்.இந்தியாவும் வெளியிட்டுள்ளது[8]. இங்கு பச்சையை ஏன் விட்டனர் என்று தெரியவில்லை. அதை வைத்து தான், கடந்த 100 ஆண்டுகளாக ஆட்சி நடத்துகின்றனர், பிரிவினையையும் வளர்த்து வருகின்றனர். தீவிரவாதத்தை வளர்க்கின்றனர் என்று தெரிந்தும், கூட்டு வைத்துக் கொண்டு அரசியல் நடத்தி வருகின்றனர். இதைப் பற்றி என்.ஐ.ஏ, மற்ற அனைத்துலக நிறுவனங்களே எடுத்துக் காட்டி வருகின்றன. இருப்பினும், இங்கு ஒன்றுமே தெரியாதது போலவும், உள்ளூர் ஊடகங்களில் செய்திகள், தகவல்கள் வராமலும் கட்டுப்பாடுகளை வைட்துள்ளனர்.

.ராசாவின் பேச்சுஅதன் விவரம் பின்வருமாறு: ஏசியாநெட்.நியூஸ் கதையை தொடர்கிறது,   சென்னை சேப்பாக்கத்தில் மார்க்சிய பெரியாரிய பொதுவுடமைக் கட்சியின் சார்பில் பெரியாரியல் பெரியார் ஆனைமுத்து படத்திறப்பு மற்றும் நினைவலைகள் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது இதில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர் அதில் நாடாளுமன்ற உறுப்பினர் திமுக துணைப் பொதுச் செயலாளர்களில் ஒருவரான ஆ ராசா கலந்து கொண்டார் அப்போது பேசிய அவர், “96 வயது வரை வாழ்ந்து, 75 ஆண்டுகாலம் பெரியார் குறித்து மட்டுமே பேசி மறைந்த ஆனைமுத்து படத்திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். அவருக்கும் எனக்கும் உள்ள தொடர்பு நீண்ட நெடியது, டெல்லிக்கு வரும்போதெல்லாம் என் வீட்டிற்கு வந்து நீண்ட நேரம் பேசுவார். ஒரு தத்துவத்தை கூறி அந்த தத்துவம் நிறைவேறுவதை தன் கண்ணால் பார்த்த ஒரே தலைவர் பெரியார் அந்த பெரியாரே பேரறிஞர் என ஆனைமுத்துவை கூறினார். அதை விட அவருக்கு நாம் என்ன பெருமையை செய்ய முடியும். பூலோக ரீதியாக ஆனைமுத்துவும் நானும் ஒரே மாவட்டத்தை சேர்ந்தவர்கள்”.

© வேதபிரகாஷ்

06-01-2022


[1] ஆசியாநெட்.நியூஸ், பிள்ளையார் சிலைக்கு அடியில் ஆனை வெடி வச்சவன் நான்“.. அது சுக்குநூறாகி ஊரே ரெண்டாச்சு.. அலறவிட்ட .ராசா, Ezhilarasan Babu, Chennai, First Published Jan 4, 2022, 10:57 AM IST.

[2]  https://tamil.asianetnews.com/politics/i-am-the-one-who-put-the-elephant-explosive-under-the-idol-of-pillaiyar-a-rasa-speech–r5675u

[3] விநாயகருக்கே வெடி வச்சவன் நான்! ஆ.ராசா பேச்சு | A Raja Speech | Periyar | DMK | Anaimuthu | Aa Rasa, Jan 3, 2022.

[4] https://www.youtube.com/watch?v=EQnK87JGQhQ

[5] ஒரேதேசம், பிள்ளையார் சிலைக்கு யானை வெடிவச்சு சிலையை சுக்குநூறாக்கியவன் நான்! .ராசாவின் ஆணவ பேச்சு!, Oredesam BY OREDESAM  January 4, 2022.

[6] https://oredesam.in/explosive-statue-to-the-pillaiyar-statue/

[7] தமிழ்.ஒன்.இந்தியா, கருப்பு + சிவப்பு + நீலம் ஒன்றாகட்டும்.. காவியை விட்டுவிடுவோம்.. சேப்பாக்கத்தை தெறிக்கவிட்ட .ராசா, By Hemavandhana Published: Monday, January 3, 2022, 12:09 [IST]

[8] https://tamil.oneindia.com/news/chennai/bjp-can-be-toppled-if-black-red-and-blue-combine-says-mp-a-rasa-444125.html

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: