கருணாநிதி சிலை திறப்பு – சிலை வைத்தல், எடுத்தல், கடத்தல், உடைத்தல் எல்லாமே திராவிட கலாச்சாரம், பண்பாடு, நாகரிகம் தான்! சேர்ந்த அரசியல் அநாகரிகம் [2]
1973, ஈவேராவுக்கு சிலை வைத்த போது, மறுபடியும் கருணாநிதி சிலை பேச்சு எழுந்தது: அதன் பின்னர் 1973-ம் ஆண்டு பெரியார் மறைவுக்குப் பின்னர் திமுக சார்பில், சென்னை அண்ணா சாலையில் (சிம்சன் அருகில்) பேராசிரியர் க.அன்பழகன், தலைமையில், மணியம்மை முன்னிலையில், பெரியார் சிலையை அப்போதைய முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார். சிலை திறப்பு விழாவில் பேசிய அப்போதைய தி.க.தலைவர் மணியம்மை, “சொன்னபடி பெரியாருக்கு சிலை வைத்துவிட்டீர்கள். பெரியாருக்கு சிலை திறந்த பின்னர் எனக்கு சிலை வைக்கலாம் என்று பேசிய நீங்கள் இனியும் சாக்குப்போக்கு சொல்ல முடியாது தி.க.சார்பில் உங்களுக்குச் சிலை அமைக்க அனுமதி தரவேண்டும் என்று மேடையிலேயே கோரிக்கை வைத்தார். திராவிடர் கழகம் சார்பில் அண்ணா சாலையில் முழு உருவ வெண்கலைச் சிலை அமைக்க உள்ளோம், இதற்கு மறுப்பு கூறக்கூடாது,” என்று பேசினார்.
சிலை விவகாரத்தில் திமுக–அதிமுக மோதல்: சிலைத் திறப்பை எதிர்த்து அதிமுக சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டது[1]. துலுக்கர் எதிர்க்காதது ஆச்சரியமே! ஒருவேளை, அப்பொழுது தர்கா தான் இருந்தது என்று இப்பொழுது வாதிக்கலாம்! முதலமைச்சர் கலைஞர் வெளியூர் பயணத்தில் இருந்தபோது, இடையில் அ.தி.மு.க.வினால் ஏற்பட்ட சட்டப் போராட்டத்தையும் திராவிடர் கழகம் எதிர் கொண்டு வென்று, அண்ணாசாலை- ஜெனரல் பேட்டர்ஸ் சாலை சந்திப்பில் முறைப்படி அரசாணை பெற்று, 21.9.1975 அன்று பெரியதோர் திருவிழாவாக நடத்தினோம். (G.O. MS.No.877 Dated 21.5.1975, Rural Development and Local Administration Department). அந்த வழக்கை திராவிடர் கழகம் வென்று அண்ணாசாலை தர்கா அருகே 1975-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21-ம் தேதி கருணாநிதியின் வெண்கலச்சிலை திறக்கப்பட்டது[2].
குன்றக்குடி அடிகளார் சிலையைத் திறந்து வைத்தார். இளமையான தோற்றத்துடன் மேடையில் பேசுவதுபோன்று கையை மூன்று விரல்களை உயர்த்திய நிலையில் அமைக்கப்பட்ட தத்ரூபமான சிலை அது. அதன் பின்னர் 1987-ம் ஆண்டு டிசம்பர் மாதம் எம்ஜிஆர் மறைந்தபோது ஏற்பட்ட கலவரத்தில் கருணாநிதியின் சிலையை சில விஷமிகள் கடப்பாரையால் இடித்துத் தள்ளினர். சிலையை உடைத்ததைக்கூட நகைச்சுவையாக எடுத்துக்கொண்ட கருணாநிதி அந்தப்படத்தை முரசொலியில் வெளியிட்டு “உடன் பிறப்பே, செயல்பட விட்டோர் சிரித்து மகிழ்ந்து நின்றாலும் அந்த சின்னத்தம்பி என் முதுகிலே குத்தவில்லை– நெஞ்சிலே தான் குத்துகிறான், அதனால் நிம்மதி எனக்கு. வாழ்க! வாழ்க!” என்று குறிப்பிட்டிருந்தார்[3]. அதன்பின்னர் அதே இடத்தில் திராவிடர் கழகம் சார்பில் சிலை அமைக்க முயற்சி எடுத்தபோது மனதை பாதித்த அந்த நிகழ்வால் கருணாநிதி அதைத் தடுத்துவிட்டார்[4]. இதையடுத்து தி.க.வினர் மீண்டும் சிலை அமைக்கும் முயற்சியைக் கைவிட்டனர். இந்நிலையில் கருணாநிதி மறைந்தவுடன் மீண்டும் அதே இடத்தில் சிலை அமைக்கப்படும் என்று தி.க.தலைவர் வீரமணி சமீபத்தில் அறிவித்திருந்தார். மீண்டும் அதே இடத்தில் சிலை கம்பீரமாக எழுந்து நிற்கும் என்று அறிவித்திருந்தார். இந்நிலையில் திமுக சார்பில் அண்ணா அறிவாலயத்தில் அண்ணா சிலை அருகே அவரை நேசித்த தமையன் கருணாநிதியின் சிலை அமைக்கப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்து அதற்கான செயலிலும் இறங்கினார். வேக வேகமாக சிலை அமைக்கும்பணி நடந்தது. அதை பலமுறை நேரில் பார்வையிட்டு திருத்தங்கள் கூறி சரியான முறையில் தத்ரூபமாக கொண்டுவரும் செயலில் ஸ்டாலின் செயல்பட்டார்.
ஈவேராவின் பிடிவாதம், வீரமணியின் தீவிரம், ஸ்டாலினை துரிதப் படுத்தியதா?: 07-08-2018 அன்று கருணாநிதி காலமானார். அப்பொழுதே, அவரைப் புதைக்க சர்ச்சை உண்டானது. அண்ணாவுக்கு அருகில் புதைக்க வேண்டும் என்று திமுக ஆர்வம் காட்டியது. மெரினாவில், இனி யாரும் சிலை வைக்க்க் கூடாது என்று ஒரு திமுககாரரே வழக்குப் போட்டிருந்தார். ஒருவழியாக நீதிமன்றத்தில் வழக்குகள் விலக்கிக் கொள்ளப் பட்டதும், மெரினாவில் உடல் புதைக்கப் பட்டது. பிறகு தினம்-தினம் அரசியல் தலைவர்கள், நண்பர்கள், பிரபலங்கள் என்று வந்து எல்லா விதமான கிரியைகளையும் செய்து சென்றனர். வைர்முத்து, பால் சகிதம் வந்து, பூஜை செய்து, பால் சொரிந்து சென்றது, விமர்சனத்திற்கு உள்ளானது.
2018ல் சிலை வைக்க ஸ்டாலினின் பிடிவாதம்: ஈவேராவே கருணாநிக்கு சிலை வைக்க வேண்டும் என்று 1968 மற்றும் 1971ல் ஆசைப்பட்டாராம், ஆனால், கருணாநிதி மறுத்தாராம்! 1987ல் உடைக்கப் பட்டப் பிறகு, வீரமணி அதே இடத்தில் சிலை வைக்க ஆசைப் பட்டாராம், ஆனால், கருணாநிதி, அவரது குடும்பம் மற்றும் திமுகவினர் அதற்கு ஒப்ப்புக் கொள்ளவில்லை. வழக்கம் போல ஆஸ்தான ஜோதிடரிடத்தில் கருத்து கேட்ட போது, வேண்டாம் என்றதால், அத்திட்டம் முடிவடைந்தது. வீரமணி விடவில்லை ஆகஸ்ட் 18, 2018 அன்று வெண்கலத்தில் சிலை வைப்பேன் என்று ஆரம்பித்தார், வைகோ தொந்தரவும் சேர்ந்தது. உடனே, ஸ்டாலின் ஆலோசனை செய்ய ஆரம்பித்தார். தயாளு அம்மாள் வேண்டாம் என்று சொல்லி விட்டார். இதனால், தேர்தல் சமயத்தில் லாபம் பெற கருணாநிதி சிலை செய்யப் பட்டு, இறந்ததிலிருந்து 130வது நாளில் சிலை திறப்பு என்று பிடிவாதமாக ஸ்டாலின் இறங்கினார்.
மாமியாரை வைததையும், கொலை செய்ய தீர்மானம் போட்டதையும், பதியை கொன்ற பழியையும் மறந்து சிலை திறக்கும் விதி! ஸ்டாலின் ஒப்புக் கொண்டதால், சிலை தயாரிக்கும் வேலை ஆரம்பித்தது. இனி கருணாநிதி பக்தி மிகும் நிலையில், பெரியாரின் மனைவிக்கு சிலை வைத்தது போல, அவரது மனைவிக்கும் சிலைவைக்கப் படலாம்! ஆகஸ்ட் 7ம் தேதியில் அண்ணா திவசம் போலவே கடை பிடிக்கலாம், கோவில்களில் வருடாந்திர சாப்பாடு போடலாம்! சிற்பி தீனதயாளனின் குழுவினரால் உருவாக்கப்பட்ட கருணாநிதியின் சிலை காங்கிரஸின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, ஆந்திரா மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் மற்றும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஆகியோர் கலந்துகொள்ளும் நிகழ்வில் இன்று மாலை அண்ணா அறிவாலயத்தில் அண்ணா சிலைக்கு அருகில் திறக்கப்பட்டது. அந்த வகையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் சிலை திறப்பு விழாவுக்கு சோனியா காந்தி மற்றும் ராகுல்காந்தி உள்ளிட்டோர் மாலை சென்னை வந்தடைந்தனர். அதேபோல கேரளா முதல்வர் பினராயி விஜயன், ஆந்திரா முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோரும் வருகை தந்தனர். மேலும் திருமாவளவன், வைகோ, முத்தரசன், ஜி.கே.வாசன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் கலந்துகொண்டனர். திரையுலகம் சார்பில் ரஜினி,வைரமுத்து, சத்ருகன் சின்ஹா, பிரபு, நாசர், குஷ்பு, வடிவேலு ஆகியோர் பங்கேற்றனர். விழாவுக்கு வந்த தலைவர்களை ஸ்டாலின் வரவேற்றார்[5].
டுவிட்டர் சண்டை – யார் வென்றது?: இச்சூழலில், ட்விட்டர் வலைத்தளத்தில் கருணாநிதி சிலை தொடர்பான ஹாஷ்டேக்குகள் இந்திய அளவில் டிரெண்டாகி வருகின்றன. திமுக ஆதரவாளர்கள் #StatueOfKalaignar என்ற ஹாஷ்டேக்கை பயன்படுத்த, எதிர்ப்பாளர்கள் பயன்படுத்தும் #StatueOfCorruption என்ற ஹாஷ்டேக்கும் டிரெண்டிங் பட்டியலில் இடம்பெற்றுள்ளது[6]. இதுமட்டுமின்றி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை தமிழகத்தில் இருந்து திரும்பச் செல்லக்கோரி #GoBackSonia என்ற ஹாஷ்டேக் டிரெண்டாகிறது. 200,000 ட்வீட்களை பெற்று உலகளாவிய அளவில் டிரெண்டிங் பட்டியலில் முதலிடம் பெற்ற #GoBackModi என்ற ஹாஷ்டேக்கை #GoBackSonia முந்துமா என்பது சந்தேகமே[7].
வேதபிரகாஷ்
16-12-2018.
[1] தமிழ்.ஒன்.இந்தியா, அண்ணா சாலையில் கருணாநிதி சிலை.. ஞாபகம் இருக்கிறதா?, By Sutha | Published: Saturday, August 11, 2018, 16:50 [IST]
[2] https://tamil.oneindia.com/news/tamilnadu/k-veeramani-bats-karunanidhi-statue-at-mount-road-327220.html?fbclid=IwAR1TfHm2WTDjcNm6fHtujL2arp-HduBPV2OlftOO-MtZsa2G_ImHrFFlhX0
[3] தமிழ்.இந்து, சிலை வைக்க கடைசிவரை தடைப்போட்ட கருணாநிதி: சிலைத் திறப்பு ஒரு மீள்பார்வை, மு.அப்துல் முத்தலீஃப், Published : 16 Dec 2018 13:53 IST; Updated : 16 Dec 2018 14:54 IST
[4] https://tamil.thehindu.com/tamilnadu/article25756876.ece
[5] https://www.vikatan.com/news/tamilnadu/144787-sonia-gandhi-unveiled-karunanidhis-statue-in-anna-arivalayam.html
[6] பிபிசி, மு.கருணாநிதி சிலை திறப்பு விழா: #GoBackModiக்கு பழித்தீர்க்கும் பாஜக தொண்டர்கள், 16-12-2018.
[7] https://www.bbc.com/tamil/india-46583135
குறிச்சொற்கள்: அண்ணா சிலை, அண்ணாதுரை, இந்தி எதிர்ப்பு, இந்திரா, இந்திரா சிலை, கருணாநிதி சிலை, சிலை, சிலை உடைப்பு, சிலை திறப்பு, சிலை வைப்பு, பெரியார், பெரியார் திடல், மோடி, மோடி எதிர்ப்பு, மோடி திரும்பிப் போ
4:25 பிப இல் செப்ரெம்பர் 2, 2021 |
[…] [4].https://dravidianatheism2.wordpress.com/2018/12/17/karunanidhi-statue-unveiled-by-sonia-arya-dravidi… […]