ஸ்டாலினை பசு முட்ட வந்ததும், குங்குமத்தை அழித்ததும், இப்பொழுது சனியைப் பற்றி பேசும் ஸ்டாலினும், வாய்ச்சொல் கேட்டு அஞ்சும் கனிமொழியும்! (3)
10 ஆண்டுகளுக்கு முன்பு (2008) பெரியாரை செருப்பால் அடிப்பேன் என்றுக் கூறியதை பொறுத்து ரௌத்திரம் பழகாததன் விளைவை தான் தற்போது அனுபவிப்பது (2018): ஆரூர் புதியவனின் “சொற்களால் ஒரு சுதந்திரப் போர்” நூல் வெளியீட்டு விழா சென்னை கவிக்கோ அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பங்கேற்ற கனிமொழி எம்.பி நூலை வெளியிட்டதுடன், சிறப்புரை நிகழ்த்தினார். ஜி.எஸ்.டி., முத்தலாக் என எல்லா திசைகளிலும் மக்களை ஒடுக்கும், அச்சுறுத்தும் நிகழ்வுகள் நடைபெறுவதாக குறிப்பிட்ட கனிமொழி, இவைகள் குறித்து பேசாததன் விளைவாக நமது மௌனமே நம்மை அழித்துவிடும் என்ற நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தமிழன் ரௌத்திரம் பழகுவதை நிறுத்திக் கொண்டதால் தான் இந்த நிலையில் தமிழன் உள்ளதாகக் கூறிய கனிமொழி, 10 ஆண்டுகளுக்கு முன்பு ஒருவர் பெரியாரை செருப்பால் அடிப்பேன் என்றுக் கூறியதை நாம் பொறுத்துக் கொண்டு ரௌத்திரம் பழகாததன் விளைவை தான் தற்போது அனுபவித்து வருவதாக அதே நூல் வெளியீட்டு விழாவில் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டதை நினைவுக்கூர்ந்து அது சரியான கருத்து என்றார். சுயமரியாதையை இழந்துவிட்டு ஏதுமில்லை என்றுக் கூறிய கனிமொழி, நம் வாழ்க்கையில் வெள்ளை என்ற ஒளி உருவாக வேண்டும் எனில் நாம் கருப்பில் இருந்துதான் ஆரம்பிக்க வேண்டும் என்றும், பெரியார் என்ற கருப்புச்சட்டை இல்லாமல் விடியல் இல்லை என்று குறிப்பிட்டார்.
ஆண்டாள் எந்த சாதியில் பிறந்திருந்தால் என்ன?: ஜாதி என்ற சொல்லையே அழிக்க வேண்டும், ஜாதியே இல்லாத நிலையை உருவாக்குவதே திராவிட அரசியலின் அடிநாதம் என்றுக் கூறிய கனிமொழி, ஜாதியைக் கொண்டு ஒருவன் ஒருவரை ஒடுக்கினால் அதையே ஆயுதமாக தூக்க வேண்டியது அவசியமாகிறது என்றும் குறிப்பிட்டார். நாம் தூக்க வேண்டிய ஆயுதம் எதுவென தீர்மானிப்பது எதிரியே என்றும் கனிமொழி தெரிவித்தார். ஜாதி இல்லை என்று எல்லோரும் சொல்கிறோம், எந்த ஜாதியில் பிறந்தவரும் என்னை வந்து சேரலாம் என்று கண்ணபிரான் கூறுவதாக கீதை சொல்கிறது எனில், ஆண்டாள் எந்த சாதியில் பிறந்திருந்தால் என்ன? ஆண்டாள் பிறப்பால் தலித்தாக இருந்திருக்கலாம், எந்த சாதியாகவும் இருந்திருக்கலாம் எதுவாய் இருந்தால் என்ன? அதில் என்ன பிரச்சனை எனவும் கனிமொழி குறிப்பிட்டார். இப்படிப்பட்ட விவாதங்களை நிகழ்த்தவில்லை எனில், பயந்திருப்போம் எனில், நிச்சயமாக தமிழினம் சுயமரியாதை அற்ற இனமாக, அடையாளம் அற்ற இனமாக, எதையெல்லாம் போராடி சாதித்தோமோ அதையெல்லாம் இழந்துவிடும் இனமாக மாறிவிடும் சூழல் நிலவுவதாக கனிமொழி தெரிவித்தார்.
கடவுளை எதிர்த்து பேசிப்பேசி தான் கருணாநிதிக்கு பேசமுடியாமல் போய் விட்டதாக சிலர் பேசுவதாக வேதனை தெரிவித்த கனிமொழி: கடவுளை எதிர்த்து பேசிப்பேசி தான் கருணாநிதிக்கு பேசமுடியாமல் போய் விட்டதாக சிலர் பேசுவதாக வேதனை தெரிவித்த கனிமொழி, உடல்நலம் சரியில்லாதபோது உதவியாளர் வைத்துவிடும் விபூதியைக் கூட அழித்துவிடுபவர் கருணாநிதி என்று தெரிவித்தார். தனது தாயார் கோவிலுக்குச் செல்வது குறித்து சிலர் கேட்பதாகவும், தனது தாயார் கோவிலுக்கு செல்வதற்கான உரிமைக்காகவும் தான் போராடுவதாக தெரிவித்தார்[1]. நிகழ்வின் போது தனது வீட்டில் நடைபெற்ற சம்பவம் ஒன்றைக் குறிப்பிட்டு கனிமொழி பேசினார். “இப்போதும் இருவரும் (கருணாநிதி, கனிமொழி) கடவுளை மறுப்பது ஏன்?” என தனது தாயார் கேட்டதாகவும், “தலைவர் (கருணாநிதி) தற்போது (கடவுள் விடயத்தில்) தனது கருத்தை சிறிது மாற்றியிருப்பார்” என்று தாயார் குறிப்பிட்டதாகவும், இது தொடர்பாக கருணாநிதியிடம் “கடவுள் இருக்கிறாரா?” என கேட்டபோது, வாய் பேசமுடியாத நிலையில், “இல்லை” என கருணாநிதி தலையசைத்ததாகவும் கனிமொழி குறிப்பிட்டார்[2]. தனது வீட்டில் நிகழ்ந்த சம்பவத்தை நினைவுக்கூர்ந்த கனிமொழி, கருணாநிதியின் மவுனம் கூட நாத்திகம் பேசும் என்று குறிப்பிட்டார்[3]. மேலும், எதை வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள், திமுக நாத்திகம் பேசுவதை நிறுத்தாது என்றும் அவர் உறுதிப்பட தெரிவித்தார்[4].
15-01-2018 கனிமொழி பேச்சு: ஆரூர் புதியவனின்[5] புத்தக வெளியீட்டின் போது, இவ்வாறு கனிமொழி பேசியது பல உண்மைகளை எடுத்துக் காட்டுகிறது. ராம கோபாலன், “இவர்கள் எல்லோருமே, தங்களது பெண்டாட்டிகளை வைத்து சாமி கும்பிடுகின்ற கூட்டம்”, என்று பேசியதுண்டு. அதை கனிமொழி இப்பொழுது ஒப்புக் கொண்டுள்ளார் என்றாகிறது. அம்மாவின் “சாமி கும்பிடுகின்ற உரிமைக்கு”. இவர் என்ன போராடுவது? அப்பொழுது அவ்வுரிமையை யார் பறித்தது என்ற கேள்வி எழுகின்றது. நாத்திக துணைவன் அவ்வாறு தடுத்துக் கொண்டிருந்தால், அது அவனது ஆணாதிக்கத்தைத் தான் எடுத்துக் காட்டுகிறது. 93 வயதாகியும் துணைவியை ஆட்டிப் படைக்கிறார் என்றால், அதை மகள் எடுத்துக் கஆட்டவேண்டும். மாறாக அவரது உரிமைக்குப் போராடுகிறேன் என்றால், தந்தையை எதிர்த்தாப் போராடப் போகிறார்?
“கடவுளை எதிர்த்து பேசிப்பேசி தான் கருணாநிதிக்கு பேசமுடியாமல் போய் விட்டது”: “கடவுளை எதிர்த்து பேசிப்பேசி தான் கருணாநிதிக்கு பேசமுடியாமல் போய் விட்டதாக சிலர் பேசுவதாக வேதனை தெரிவித்த கனிமொழி, உடல்நலம் சரியில்லாதபோது உதவியாளர் வைத்துவிடும் விபூதியைக் கூட அழித்துவிடுபவர் கருணாநிதி”, என்ற போதும் அவரது மனம், மனசாட்சி உறுத்துவதை அறியலாம். உதவியாளர் விபூதியை வைப்பதற்கு கருணாநிதி ஏன் அனுமதிக்க வேண்டும், பிறகு ஏன் அழிக்க வேண்டும்? அப்படியென்றால், வைத்தால் ஏதோ பலன் கிடைக்கும் அன்ற ஆசை, நப்பாசை உள்ளுக்குள் இருக்கிறது என்றாகிறது. முதல் நாத்திகப் பழமான, கனிக்கு அத்தகைய நம்பிக்கையே இருக்கக் கூடாது ஆயிற்றே? யாரோ சொன்னார்கள் என்றால் பலித்து விடுமா என்ன? அதென்ன சாபமா, செய்வினையா, திருஷ்டியா, ….அதையெல்லாம் நம்ப வேண்டிய அவசியமே இல்லையே? பிறகு, அப்படி நம்பி வருத்தப் படுவது எடைக் காட்டுகிறது? வைத்த விபூதியையேத் துடைத்துப் போடும் அளவிற்கு நாத்திகம்-பகுத்தறிவு ஊறியிருக்கும் போது, இதெல்லாம் ஒரு விசயமா என்ன?
கருணாநிதியின் மவுனம் கூட நாத்திகம் பேசும்: “கடவுள் விடயத்தில் தனது கருத்தை சிறிது மாற்றியிருப்பார்” என்று தாயார் குறிப்பிட்டதாகவும், இது தொடர்பாக கருணாநிதியிடம் “கடவுள் இருக்கிறாரா?” என கேட்டபோது, வாய் பேசமுடியாத நிலையில், “இல்லை” என கருணாநிதி தலையசைத்ததாகவும் கனிமொழி குறிப்பிட்டார்[6]. தனது வீட்டில் நிகழ்ந்த சம்பவத்தை நினைவுக்கூர்ந்த கனிமொழி, கருணாநிதியின் மவுனம் கூட நாத்திகம் பேசும் என்று கனிமொழி குறிப்பிட்டார்[7]. அதாவது ராஜாத்தி அம்மாள் கோவில்-கோவிலாக சென்று, கும்பிட்டு, அர்ச்சனை செய்து, பிரசாதம் வாங்கி வருவார், புருடன் சாப்பிடுவான் என்று, ஆனால் சாப்பிட்டப் பட்டதா-இல்லையா என்பது ரகசியம். பிறகு, சாய் பாபா வந்தபோது ஏன் காலில் விழுந்து கும்பிட வேண்டும்? எப்படியோ கனிமொழியின் மனம், மனசாட்சி உறுத்த ஆரம்பித்து விட்டது. அதனால், இந்த அளவுக்கு விளக்கம் கொடுக்க வேண்டியதாக உள்ளது போலும்.
© வேதபிரகாஷ்
16-01-2018
[1] நியூஸ்..7.செய்தி, “எதை வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள், திமுக நாத்திகம் பேசுவதை நிறுத்தாது!” : கனிமொழி, January 15, 2018. Last Modified திங்கள், 15 ஜனவரி 2018 (23:00 IST).
[2] http://ns7.tv/ta/tamil-news/tamilnadu/15/1/2018/kanimozhi-mp-karunanidhi-athist-philosaphy
[3] தமிழ்.வெப்.துனியா, என்ன ஆனாலும் திமுக நாத்திகம் பேசுவதை நிறுத்தாது: கனிமொழி, January 15, 2018.
[4] http://tamil.webdunia.com/article/regional-tamil-news/we-don-t-stop-atheism-speech-says-kanimozhi-118011500020_1.html
[5] பேராசிரியர் முனைவர் ஹாஜா கனி, சென்னை மேடவாக்கம் காயிதேமில்லத் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர், தமுமுக வின் மாநிலச் செயலாளர், மக்கள் உரிமை வார இதழின் இணை ஆசிரியர்.
[6] http://ns7.tv/ta/tamil-news/tamilnadu/15/1/2018/kanimozhi-mp-karunanidhi-athist-philosaphy
[7] தமிழ்.வெப்.துனியா, என்ன ஆனாலும் திமுக நாத்திகம் பேசுவதை நிறுத்தாது: கனிமொழி, January 15, 2018.
குறிச்சொற்கள்: அரசியல், ஆண்டாள், இந்தியா, இந்து தமிழன், இந்து விரோதத் தமிழன், இந்து-விரோத நாத்திகம், இஸ்லாம், கனிமொழி, கருணாநிதி, டிவி, தன்னம்பிக்கை, தமிழ், தமிழ் இந்து, திராவிட சித்தாந்திகள், திராவிட பேச்சாளர்கள், திராவிடம், திராவிடர், திராவிடர் கழகம், திருக்குறள், நாத்திக மாநாடு, நாத்திகத் தமிழன், நாத்திகம், போலி நாத்திகம், மருத்துவம், மாடு, முட்ட வந்தது, ஸ்டாலின், ஸ்பெக்ட்ரம்
மறுமொழியொன்றை இடுங்கள்