துருப்பிடித்த ஜெயலலிதாவின் கட்சிக்கு தங்கமுலாம் பூசும் விகடனின் மெகா முயற்சி! – முரசொலியில் கருணாநிதியின் “பாப்பாத்தி” வசவு!

கரு - முரசொலி - அம்மா விமர்சனம்துருப்பிடித்த ஜெயலலிதாவின் கட்சிக்கு தங்கமுலாம் பூசும் விகடனின் மெகா முயற்சி! முரசொலி கட்டுரை (2008) – – முரசொலியில் கருணாநிதியின் “பாப்பாத்தி” வசவு!

குறிப்பு: முரசொலி, விடுதலை, குடி அரசு போன்ற நாளிதழ்களில்  அதன் ஆசிரியர்கள்  கருணாநிதி, ஈவேரா, வீரமணி, போன்றோர் தாங்களாகவோ, புனைப்பெயரிலோ அல்லது வேறு எவரையாவது வைத்தோ தூஷண கட்டுரைகளை வெளியிடுவது வழக்கம். அம்மாதிரி, ஜெயலலிதவை வசவு பாடி வெளியிட்ட கட்டுரை இது:

தி.மு.கழக ஆட்சியை அகற்றிவிட்டு அந்த இடத்தில் மீண்டும் பாப்பாத்தி அம்மாளை அமர வைக்கவேண்டும் என்று துடியாய்த் துடிக்கின்றன அக்கிரகாரத்துப் பத்திரிகைகள்.

இந்த வாரத்து ஆனந்த விகடனில் ‘தி.மு.க.வின் 10 மெகா தவறுகள்’ என்ற தலைப்பில் – தி.மு.க.வையும் கலைஞரையும் கேலி செய்து ஒரு கட்டுரை வெளியிடப் பட்டிருக்கிறது. கட்டுரையை எழுதியிருப்பவர் ப.திருமாவேலன். (இவர் பார்ப்பனரல்ல)

பார்ப்பன நிர்வாகம் – ஆசிரியர் குழு இட்ட கட்டளையையேற்று – அல்லது ஆலோசனையை ஏற்று – 10 மெகா தவறுகள் என்று பட்டியலிட்டிருக்கிறார் அவர். முதல் தவறு என்று அவர் கண்டுபிடித்திருப்பது:-

தி.மு.க.வினர் அடி மட்டத் தொண்டன் முதல் தினமும் அடிக்கடி தலைமைக் கழகம் வந்து போகும் அமைச்சர்கள் வரை அத்தனை பேருக்கும் உள்ள சந்தேகம் “யார் தங்களுக்குத் தலைமை தாங்கப் போகும் அடுத்த தலைவர்” என்பதுதான்

– என்கிறார் கட்டுரையாளர்.

தி.மு.கழகம் அண்ணா அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட 1949ம் ஆண்டு முதல் இன்று வரையில் உள்கட்சித் தேர்தல்களை – 12 முறை நடத்தி இருக்கிறது. 13வது தேர்தல் இப்போது நடந்து கொண்டிருக்கிறது.

கிளைக்கழகத்திலிருந்து – மாவட்டக் கழகம் – பொதுக்குழு வரையில் அனைத்து மட்டங்களுக்கான தேர்தல்களும் ஜனநாயக முறைப்படி உறுப்பினர்கள் வாக்களிப்பின் மூலம் நடைபெற்று வருகிறது.

கரு காங்கிரசின் கூத்தாடி - குமுதம்அண்ணா காலம் வரையில் – அதாவது 1969 வரையில் கட்சியில் பொதுச் செயலாளர் பதவி மட்டுமே இருந்து வந்தது. 1956 வரையில் அண்ணாவே பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பொறுப்பு வகித்தார். 1956ல் அண்ணாவின் ஆதரவோடு நாவலர் இரா.நெடுஞ்செழியன் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1969ல் கட்சியில் தலைவர் பதவி புதிதாக உருவாக்கப்பட்டது. கலைஞர் தலைவர் ஆனார்; நாவலர் பொதுச் செயலாளராக நீடித்தார்.

1969க்குப் பிறகு இன்று வரையிலும் நடந்த ஒவ்வொரு தேர்தலிலும் கழகத்தின் தலைவராக கலைஞர் தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறார்.

நாவலர் – அ.தி.மு.க.வில் சேர்ந்த பிறகு கட்சியின் பொதுச் செயலாளராக இனமானப் பேராசிரியர் தேர்வு செய்யப்பட்டார். இன்று வரையில் – ஒவ்வொரு தேர்தலிலும் தேர்ந் தெடுக்கப்பட்டு பொதுச் செயலாளராகப் பணியாற்றி வருகிறார்.

ஆகவே தி.மு.க.வில் அடுத்த தலைவர் யார் என்ற கேள்வியே எழ இடமில்லை.

தேர்தலில் போட்டியிட்டு – பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படுபவர்களே – தலைவர் ஆகப் பொறுப்பேற்க முடியும்.

இது தி.மு.க.வின் அடிமட்டத் தொண்டனிலிருந்து, அமைச்சர் பெருமக்கள் வரையில் எல்லோருக்கும் தெரியும்.

ஆனந்தவிகடன் போல –

வாசன்

வாசன் மகன் பாலசுப்பிரமணியம்

பாலசுப்பிரமணியத்தின் மகன்

சீனிவாசன் என்று

எழுதத் தெரியுமோ – தெரியாதோ – ஆசிரியராக வந்து விடுவதுபோல – தி.மு.கழகத்தில் தலைவர் ஆகிவிட முடியாது.

இப்போது – ஒன்றியத் தேர்தல்கள் முடிந்து – மாவட்டச் செயலாளர்கள் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முறையாக இந்தத் தேர்தல்கள் நடந்து முடிந்த பிறகு – பொதுக்குழு உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டவர்கள் மூலம் அடுத்த தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார். இன்னும் ஓரிரு மாதங்கள் காத்திருந்தால் – புதிய பொதுக்குழு கூடி தி.மு.கழகத்தின் தலைவரைத் தேர்ந்தெடுப்பார்கள்.

இதுவெல்லாம் விகடனுக்குத் தெரியாதா என்றால், தெரியும்!

உட்கட்சித் தேர்தல்களையே நடத்தாது – தனது இஷ்டம் போல கிளைச் செயலாளர் – மாவட்டச் செயலாளர், தலைமைக் கழகச் செயலாளர் வரையில் பந்தாடுவார் ஜெயலலிதா! நேற்று இருந்தவர் இன்றில்லை என்கிற அளவுக்கு – கட்சியின் சகல மட்டங்களுக்கும் தனது விருப்பு வெறுப்புக்கேற்ப – நிர்வாகிகளை நியமனம் என்ற பேரால் திணிப்பார் அல்லது மிதிப்பார். பொதுக்குழு உறுப்பினர்கள் யார் என்று அ.தி.மு.க.வில் யாருக்குமே தெரியாது. ஜெயலலிதா இஷ்டப்பட்டு பொதுக்குழு என்று ஒன்றினைக் கூட்டுவார். அதிலே கலந்து கொள்ள அவர் யார் யாருக்கு அழைப்பு அனுப்புகிறாரோ – அவர்கள் மட்டும்தான் பொதுக்குழு உறுப்பினர்கள்.

பொதுக்குழுவுக்கு வரலாம். எதுபற்றியும் எவரும் பேச முடியாது. ஜெயலலிதா ஏழு நிமிடமோ – பத்து நிமிடமோ பேசுவார். கைதட்டலாம். வயிறு நிறைய பிரியாணி விருந்து சாப்பிடலாம்!

அ.தி.மு.க.வின் அடுத்த தலைவர்

யார் என்று கேட்கக்கூட

யாருக்கும்

தைரியம் கிடையாது.

அவர்களாவது கட்சிக்காரர்கள் – ஜெயலலிதாவைக் கண்டு நடுங்கி – ஒடுங்கிக் கிடப்பது பற்றி ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.

ஆனால் விகடன் போன்ற

வீராதி வீர ஏடுகள்கூட,

ஜெயலலிதாவின் 10 மெகா தவறுகள் என்று விமர்சனமோ; அ.தி.மு.க.வின் அடுத்த தலைவர் யார்? ஜெயலலிதாவா? சசிகலாவா? தினகரனா? – என்று கேள்வியோ எழுதுவதில்லையே; ஏன்?

ஜெயலலிதா

அவரே மார்தட்டிக்

கொண்டதுபோல

பாப்பாத்தி.

விகடன் சீனுவாச அய்யரின் சாதியைச் சேர்ந்தவர். அதனால் – அவர் இடறி விழுந்தாலும் அடடா; என்ன அழகாக விழுந்தார் என்று எழுதுவார்கள்! கோடநாட்டில் போய் மாதக்கணக்கில் ஓய்வு என்ற பேரில் ஒளிந்து கிடந்தாலும், அடடா; எப்பேர்ப்பட்ட ஓய்வு? எப்படிப்பட்ட தூக்கம்? என்ன இனிமையான குறட்டை?

– என்று பார்ப்பன பக்திபரவசத்துடன் – உடலெல்லாம் புல்லரிக்க – புளகாங்கிதத்தோடு போற்றி எழுதுவார்கள்!

கரு முஸ்லிம் லீக், குழுக்களுடன்2. ஜெயலலிதாவின் போயஸ் தோட்டத்துக் குடும்பத்தில் எத்தனை எத்தனையோ சண்டைகள் நடக்கும். வளர்ப்பு மகனையே கஞ்சா வழக்கில் கைது செய்வார்கள்; தினகரனா, மகாதேவனா என்று சிண்டு பிடிச் சண்டை நடக்கும்; சசிகலா வேண்டும்; சசிகலாவின் கணவர் வேண்டாதவர் என்று புழுதி மாயம் செய்யப்படும். சசிகலாவின் கணவருக்கு வேண்டியவர் என்பதாலேயே ஒரு பெண்ணை கஞ்சா வழக்கில் கைது செய்து – அவரிடமிருந்து பல லட்சம் ரூபாய்கள் பறிமுதல் செய்யப்படும்! சசிகலாவா? இளவரசியா? என்று புதிய போர் மூளும். இந்த மன்னார்குடிக் குடும்பத்து விவகாரங்களால் – ஜெயலலிதாவின் பெரும்பகுதி கவனம் அதிலேயே செலவாகிறது – என்று குற்றம் சொல்லாது விகடன் – காரணம் என்ன? ஜெயலலிதா பாப்பாத்தி ஆச்சே!

கரு - பாஜக கூட்டு - முஸ்லிம் லீக்3. ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் மந்திரிகள் அடிக்கடி பதவி பறிக்கப்பட்டார்கள்; ஒரு மந்திரி பதவி ஏற்ற மூன்றாம் நாளே கல்தா கொடுக்கப்பட்டார். ஒரு மந்திரி கன்னத்தில் போட்டுக் கொள்வதாலேயே பதவியில் நீடித்தார். ஜெயலலிதாவுக்கு வேண்டியவர் என்பதால் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிக்கு புதிய பதவி வீரப்பன் பேரால் உருவாக்கப்படும். ஜெயலலிதாவுக்கு வேண்டியவர் என்பதால் சட்டசபைச் செயலாளர் பதவி நீட்டிப்புச் செய்தபடியே இருக்கும். ஜெயலலிதாவுக்கு வேண்டியவர் என்பதால் தேர்தல் அதிகாரியின் பதவி ஆயுட்கால பதவியாக நீட்டிக்கப்படும் – அதையெல்லாம் சுட்டிக்காட்டி ‘சீனியர் சபா’ என்று தவறுப் பட்டியல் போடாது விகடன்!

காரணம்

ஜெயலலிதா

பாப்பாத்தி!

an incident which occurred in the Tamil Nadu assembly on March 25, 1989

an incident which occurred in the Tamil Nadu assembly on March 25, 1989

4. ஆரியமாயையும், கம்பரசமும், மாஜி கடவுள்களும், எழுதிய அண்ணாவின் பெயரைக் கட்சிக்கும் – அவரது உருவத்தைக் கொடியிலும் பொறித்து வைத்துக் கொண்டு – மலையாளத்து உன்னிகிருஷ்ணன் பணிக்கரின் ஆலோசனை கேட்டு யாகம் நடத்துவார்; அண்ணாவின் ஆட்சியில் நிறுவப் பெற்ற கண்ணகி சிலையை அகற்றி மியூசியத்து இருட்டறையில் தள்ளுவார்; சங்கர மடம் போய் கஜபூஜை நடத்துவார். குருவாயூர் கிருஷ்ணனுக்கு குட்டி யானை காணிக்கை செலுத்துவார். இப்படி அண்ணாவின் கொள்கைகளை காற்றில் பறக்க விட்டு விட்டு – வர்ணாஸ்ரமதர்ம – மனுதர்ம ஆட்சி நடத்தினாலும் ஜெயலலிதா கொள்கைகளை காற்றில் பறக்கவிட்டுவிட்டார் என்று ஒரு பட்டியல் போடாது விகடன். காரணம் என்ன?

ஜெயலலிதா

பாப்பாத்தி!

February 6, 1989- Jayalalithaa taking oath . Karunanidhi, looks on.

February 6, 1989- Jayalalithaa taking oath . Karunanidhi, looks on.

5 – 6 ராஜீவ் படுகொலையில் மூப்பனாருக்கும் பங்குண்டு என்று குற்றஞ்சாட்டிய ஜெயலலிதா – 2001 தேர்தலில் மூப்பனாரின் வீடு தேடிச் சென்று அவரோடு கூட்டணி அமைத்துக் கொண்டார்.

2001 தேர்தலில் அவரை ஆட்சிக் கட்டிலில் அமர்த்திய பா.ம.க., இடதுசாரிகள், காங்கிரஸ் (த.மா.கா.) ஆகிய கட்சிகளை எல்லாம் கூட்டணியிலிருந்து கழற்றிவிட்டார். ஜெயலலிதா தனது கூட்டணிக் கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு தராதது மெகா தவறு என்றோ, கூட்டணிக் கட்சிகளை காரணம் இல்லாமல் பகைத்தது மெகா தவறு என்றோ விகடன் பட்டியலிடாது. காரணம் என்ன? ஜெயலலிதா சுயஜாதியைச் சேர்ந்தவராயிற்றே!

கரு-இந்திரா, விதவை பென்சன்7. பல்டிகள் பலவிதம் என்று தி.மு.கழக ஆட்சியின் மெகா தவறு என்று பேனாவை ஓட்டும் விகடன்! மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டு வந்தது; பின்னர் 2004 தேர்தல் தோல்வி காரணமாக வாபஸ் பெற்றது; கிராமப்புற தெய்வங்களின் ஆலயங்களில் ஆடு, கோழி பலியிட்டு படையலிடக்கூடாது என்று ஒரு உத்தரவு; 2004 தேர்தலுக்குப் பிறகு – தோல்வி தந்த பாடத்தால் – வாபஸ் பெற்றது போன்றவையெல்லாம் விகடனின் பார்வையில் பல்டிகளாகப் படாது! பொடா சிறையிலடைத்த வைகோ.வை 2006 தேர்தலில் கூட்டணி சேர்த்துக் கொண்டதுகூட விகடனுக்கு பல்டிகள் பலவிதமாகத் தோன்றாது. காரணம் என்ன? ஜெயலலிதா பாப்பாத்தி ஆச்சே!

கர் போற்றி- போற்றி8. ஜெயலலிதா செய்ததெல்லாம் சரி என்பது போல இன்றைய தி.மு.கழக ஆட்சி நடைபெறுகிறதாம். ஜெயலலிதா 10 ஆயிரம் சாலைப்பணியாளர்களையும், 13 ஆயிரம் மக்கள் நல ஊழியர்களையும் வேலை நீக்கம் செய்தார். தி.மு.கழக ஆட்சி அவர்களுக்கெல்லாம் மீண்டும் வேலை கொடுத்தது. ஜெயலலிதா அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும் ஒரு சொட்டு மையில் டிஸ்மிஸ் செய்தார். தி.மு.கழக ஆட்சி அவர்கள் மீதான பழிவாங்கல் நடவடிக்கைகளை எல்லாம் அறவே ரத்துச் செய்தது. 20 சதவிகித போனசைத் திருப்பித் தந்தது; எஸ்மா – டெஸ்மா சட்டங்களுக்கு முடிவு கட்டியது. இவையெல்லாம் ஜெயலலிதா செய்த தவறுகளைச் சரி செய்த நடவடிக்கைகள். ஆனால் விகடன் மெகா தவறு என்ற பெயரில் என்ன கூறுகிறது? “ஜெயலலிதா செய்ததெல்லாம் சரிதான் என்ற எண்ணத்தை மக்கள் மனதில் தி.மு.கழக ஆட்சி ஏற்படுத்திவிட்டது” என்கிறது. காரணம் என்ன? கலைஞர் மீதான – சாதித் துவேஷம்; ஜெயலலிதா மீதான சுயசாதி அபிமானம்!

ஜெயாவை கடுமையாக விமர்சிக்கும் வினவு.டாட்.காம்9. விகடனின் இட்டுக்கட்டலில் ஒன்பதா வதாகக் கூறப்படும் தவறு “கேலிக் கூத்தாகும் கட்சித் தேர்தல்” என்பதாகும். தேர்தலே கிடையாது; வைத்தால் குடுமி, சிரைத்தால் மொட்டை என்பது போலச் செயல்படும் ஜெயலலிதாவுக்குப் பல்லக்குத் தூக்கி ‘பராக்’ கூறும் விகடன் – சிற்றூர்க் கிளை முதல் – மாநகராட்சி வரையில் நடத்தப்படும் தேர்தலில் – அங்கொன்றும் – இங்கொன்றுமாகத் தென்படும் சிறுசிறு குறைகளை – துரும்பைத் தூணாக்கிக் காட்டுவது போல – பூதக் கண்ணாடி வைத்து அவைகளைப் பெரிது படுத்தப் படாதபாடு பட்டிருக்கிறது.

“நம் கட்சியை நடத்துவது யார்?” என்ற கேள்விக்கு தி.மு.க.வின் அடிமட்டத் தொண்டனிடம் பதிலே இல்லையாம்! தி.மு.க.வை நடத்துவது விகடன் சீனுவாச அய்யர் இல்லை என்று தி.மு.க. தொண்டர்கள் எல்லோருக்கும் நன்றாகவே தெரியும்!

ஜெயாவை கடுமையாக விமர்சிக்கும் ஜூனியர் விகடன்10 ‘காணவில்லை கட்டுப்பாடு’ என்று ஒரு மெகா தவறை கற்பித்திருக்கிறது விகடன்! ஒன்றியத் தேர்தல் வரை பல்லாயிரக்கணக்கான ஊர்களில் – நிர்வாகிகள் தேர்தலில் போட்டி நடந்ததையும் – வெற்றி பெற்ற நிர்வாகிகளின் பெயர்ப் பட்டியல்களையும் நாள் தவறாது – தி.மு.க. தலைமை நிலையம் – முரசொலியில் பக்கம் பக்கமாக வெளியிட்டபடியே இருக்கிறது! ஆனால் விகடனோ காணவில்லை கட்டுப்பாடு என்கிறது! ஆட்சிக்கு வந்த பிறகு ஒருமுறைதான் கழகப் பொதுக்குழுக் கூட்டம் நடத்தப்பட்டது என்பது ஒரு தவறாம். ஆட்சிக்கு வருவதற்கு 2 மாதங்களுக்கு முன்பு 3.3.2006 அன்று திருச்சியில் பொதுக்குழுக் கூட்டம் நடந்தது. ஆட்சிக்கு வந்தபின் 2.6.2008 அன்று சென்னையில் பொதுக்குழு நடத்தப்பட்டது. சொற்பொழிவாளர்கள் கூட்டம் சமீபத்தில் நடைபெறவே இல்லை என்று கூறுகிறது விகடன். 2006 மார்ச் மாதத்தில் சொற்பொழிவாளர்கள் கூட்டமும் நடந்திருக்கிறது. மெகா தவறுகள் 10 என்று விகடன் பட்டியலிட்டிருப்பவை எல்லாம் – தி.மு.க.வின் தவறுகள் என்பதைவிட – ஜெயலலிதாவின் தவறுகளை மறைத்து – அவருக்குத் தங்க முலாம் பூசி – அவரை மீண்டும் முதல்வராக்க வேண்டும் என்கிற சுயசாதி அபிமானத்தின் வெளிப்பாடுகள் என்பதே பொருத்தமாக இருக்கும்.

இப்படி பாப்பாத்தி என்று  குறிப்பிட்டு வெளியான கட்டுரையை அந்நேரத்தில் யாரும் கண்டிக்கவில்லை. சகிப்புத்தன்மை பற்றியும் குறிப்பிடவில்லை. ஆனல், இப்பொழுது வைக்கோ கருணாநிதியின் ஜாதிரைக் குறிப்பிட்டார் என்று ஆர்பாட்டம் நடக்கிறது!

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , ,

ஒரு பதில் to “துருப்பிடித்த ஜெயலலிதாவின் கட்சிக்கு தங்கமுலாம் பூசும் விகடனின் மெகா முயற்சி! – முரசொலியில் கருணாநிதியின் “பாப்பாத்தி” வசவு!”

  1. பெரியார் – நாயக்கரா, பலிஜா நாயுடுவா, சூத்திரரா, தெலுங்கரா, கன்னடியரா, தமிழனா, திராவிடனா, யார்? | social Says:

    […] [9] https://dravidianatheism2.wordpress.com/2016/04/07/karunanidhi-attacked-and-getting-attacked-on-cast… […]

பின்னூட்டமொன்றை இடுக