குருவின் சாவிக்காக சிஷ்யைகள் சண்டை – பீட்டரிடம் சாவியிருந்தால் இந்த தொல்லை வந்திருக்காதே?

குருவின் சாவிக்காக சிஷ்யைகள் சண்டை – பீட்டரிடம் சாவியிருந்தால் இந்த தொல்லை வந்திருக்காதே?

லெனின், நக்கீரன், தினகரன்: “இம்மூவரும்” முன்பு ஆபாச விடியோ எடுத்ததற்கு, டிவி-செனலில் விடாமல் ஒலி-ஒளிபரப்பியதற்கு, ஊடகங்களில் தாராளமாக தூண்டிவிடும் வகையில் செய்திகளை வெளியிட்டுப் பரப்பியதற்கு காரணமாக இருந்தார்கள். லெனின் குருப் தான் சரியான ஆள். அந்த ஆளிருக்கும் போது, பெட்ரூமிலேலேயே வீடியோ கேமரா வைத்து படம் எடுத்துள்ளதாக, ஊடகங்கள் வெளியிட்டு, பெரிய பிரச்சினையாகி இருந்தது. அப்பொழுது நித்யானந்தா அறையின் சாவியை யார் வைத்திருந்தது என்று தெரியவில்லை. அப்பொழுது, லெனின் குரூப் எப்படி உள்ளே சென்று வீடியோ கேமரா வைத்தான், ஆபாசப் படம் எடுத்தான் போன்ற விவகாரங்கள் தெரியவில்லை. ஒருவேளை “நக்கீரனுக்கு” பிரத்யேகமாகத் தெரிந்திருக்கக் கூடும். இப்பொழுது, லெனின் இருந்திருந்தால், சாவிக்காக இப்படி சிஷ்யைகள் சண்டை போட்டுக் கொண்டிருக்க மாட்டார்கள்.

  சொர்க்க வாசலின் சாவியையே, பீட்டர் என்ற ஏசுவின் சீடர் வைத்திருந்தாராம். அதற்கு பலத்த எதிர்ப்பு, சண்டைகள் இருந்து வந்தனவாம். இது போப்புடைய அதிகாரத்தை இன்று எடுத்துக் காட்டுகிறது, ஏனெனில் முதல் போப், பீட்டர் என்று கிருத்துவப் புராணங்கள் கூறிகின்றன.அதாவது, சாவியுள்ளவரிடம் தான் அதிகாரம் இருக்கும். அது[போல, இளையப்பட்டம், முதியப்பட்டத்தின் சாவியை வாங்கிக் கொள்ள அவசரப்படுகிறது போலும்.

நிச்சயமாக, இவ்வளவு அவசரம் கூடாது சாமி. அதற்கு, சிஷ்யைகள் இப்படி சண்டைப் போட்டுக் கொண்டால், மடம் என்னாவது?

மதுரை ஆதீனத்தின் பெண் உதவியாளர் வைஷ்ணவி மீது தாக்குதல்: நித்யானந்தா பெண் சீடர் மீது புகார்[1]: மதுரை ஆதீனம் அருணகிரிநாதரின் பெண் உதவியாளர் வைஷ்ணவி (வயது-28). இவர் தஞ்சை அருகே உள்ள கச்சனம் பகுதியை சேர்ந்தவர். பல மாதங்களாக அருணகிரி நாதரின் “நெருக்கமான”[2] உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நித்யானந்தா நியமிக்கப்பட்ட பின்னர் வைஷ்ணவியை அங்கிருந்து வெளியேற்ற நித்யானந்தா சீடர்கள் அவரிடம் தகராறு செய்து வருவதாக ஏற்கனவே புகார் எழுந்தன. இந்த நிலையில் நேற்று முன்தினம் மதுரை ஆதீன மடத்தில் வருமானவரி துறை சோதனை நடத்தியது. அப்போது வைஷ்ணவியிடம் அதிகாரிகள் அதிக நேரம் விசாரணை நடத்தி உள்ளனர்.

தினகரன் கூறுவது[3]: மதுரை ஆதீனத்தின் செயலாளாரான வைஷ்ணவி மீது நித்தியானந்தாவின் ஆட்கள் சரமாரியாக தாக்குதல் நடத்தியதாகவும்,சுடிதாரை கிழித்து விட்டதாகவும் பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து அங்கு போலீஸார் விரைந்து சென்றனர். பத்திரிக்கையாளர்களை நித்தியானந்தாவின் ஆட்கள் ஆதினத்திற்குள் அனுமதிக்கவில்லை. இதற்கு மதுரை ஆதீனத்தின் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் நித்தியானந்தாவின் ஆட்களுக்கும், மதுரை ஆதீனத்தின் ஆதரவாளர்களுக்குள் மோதல் மூண்டதாக கூறப்படுகிறது. தினமலர் கூறுவது[4]: மதுரை ஆதீன மடத்தில் ஆதீனம் தரப்பினருக்கும், நித்தியானந்தா தரப்பினருக்கும் இடையே மோதல் ‌ஏற்பட்டது. மதுரை ஆதீனமாக நித்தியானந்தா முடிசூட்டப்பட்டதை பெரும் சர்ச்சை நிலவிவருகிறது. இந்நிலையில் மதுரை ஆதீன மடத்திற்குள் பத்திரிகையாளர்களை அனுமதிப்பதாக வேண்டாமா என ஆதீன தரப்பினரு்க்கும், நித்தியானந்தா தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இரு தரப்பினரும் மடத்திற்க்குள்ளேயே மோதிக்கொண்டனர்[5].
தினமலரின் மற்றொரு செய்தி[6]: முன்னதாக மதுரை ஆதீன மடத்தில் பணிவி‌டை செய்து கொண்டிருந்த வைஷ்ணவி என்ற ‌பெண் சீடர் ஆதீன மடத்தினை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த நித்தியானந்தா சீடர்கள் அப்பெண்ணை மிரட்டி தாக்கினார். இனி இங்கு உனக்கு வேலை இல்லை வெளியேறுமாறு கூறியதாக கூறப்படுகிறது. இதனால் மதுரை ஆதீன மடத்தில் பரபரப்பு ‌ஏற்பட்டுள்ளது. நக்கீரன் கூறுவது[7]: அருணகிரிநாதருடைய நெருக்கமான உதவியாளராக வைஷ்ணவி இருந்தார். அவரது தனி அறையின் சாவியை (பணம் மற்றும் தங்க நகைகள் உள்ள அறை) வைஷ்ணவியிடம் ஒப்படைத்துவிட்டு திருவண்ணாமலைக்கு சென்றார். இந்த நிலையில் வைஷ்ணவியிடம், நித்தியானந்தாவின் சீடர் ரிஷி மற்றும் அவரது மனைவி, ஆட்கள் அந்த சாவியை கேட்டதற்கு வைஷ்ணவி மறுத்துள்ளார். இதனால் வைஷ்ணவியை அவர்கள் தாக்கியதில் அவரின் சுடிதார் கிழிந்துவிட்டது.

ஆதினத்தின் அறை சாவிக்காக தகராறு: இந்த நிலையில் நேற்று மதுரை ஆதீனம் அருணகிரி நாதரும், இளைய ஆதீனம் நித்யானந்தாவும் திருவண்ணாமலையில் இருந்து மதுரைக்கு திரும்பி கொண்டிருந்தனர். அவர்களது அறையை வைஷ்ணவி தயார் செய்ததாக கூறப்படுகிறது. அப்போது நித்யானந்தாவின் பெண் சீடர் மத்தியா (30) சமையல் செய்வதற்காக பாத்திரங்கள் வேண்டும் மதுரை ஆதீன அறை சாவியை தா என்று வைஷ்ணவியிடம் கேட்டுள்ளார். இதற்கு வைஷ்ணவி மதுரை ஆதீனம் சொன்னால் மட்டுமே சாவியை தருவேன் என்று கூறியதாக தெரிகிறது. அப்போது நித்யானந்தா சீடர்கள் வைஷ்ணவியை அடிக்க பாய்ந்தனர். அப்போது பெண் சீடர் மத்தியா, வைஷ்ணவியின் துப்பட்டாவை பிடித்து இழுத்ததில் கிழிந்து விட்டது. அப்போது கதறி அழுத வைஷ்ணவி வெளியே வந்து நடந்த சம்பவங்களை விளக்கினார். இதனால் மதுரை ஆதீன மடத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.   இதற்கிடையில் நேற்று இரவு 8 மணிக்கு திருவண்ணாமலையில் இருந்து மதுரை ஆதீனமும், நித்யானந்தாவும் மதுரை வந்தனர். அவர்களிடம் மடத்தில் நடந்த சம்பவங்கள் குறித்து கூறினார்.

சீஷ்யைகளிடம் சமாதான பேச்சு: மதுரை ஆதீனம் அருணகிரி நாதரும், இளைய ஆதீனம் நித்யானந்தாவும் வைஷ்ணவி, மத்தியா இருவரையும் அழைத்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். அதன் பின்னர் அங்கு அமைதி ஏற்பட்டதாக மடத்தில் உள்ள சீடர்கள் தெரிவித்துள்ளனர். வைஷ்ணவி தாக்கப்பட்டதற்கு முக்கிய காரணம், நேற்று முன்தினம் வருமானவரித்துறை சோதனை நடத்தப்பட்டபோது முக்கிய ஆவணங்களை வைஷ்ணவி சொல்லித்தான் ஆதீனத்திடம் அதிகாரிகள் கேட்டு பெற்றதாக கூறப்படுகிறது. இதன் பின்னணியில்தான் வைஷ்ணவியை நித்யானந்தா சீடர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த மோதல் சம்பவம் குறித்து போலீசில் புகார் தெரிவிக்கப்படவில்லை. ஆனாலும் அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் குறித்து மதுரை ஆதீனம் மாலைமலர் நிருபரிடம் கூறியதாவது:-

பத்திரிக்கைக்காரர்களுக்கு சொன்னது: நேற்று ஆதீன மடத்தில் பெண் சீடர் வைஷ்ணவி தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து இரவு அனைவரையும் அழைத்து விசாரித்தோம். பின்னர் அவர்களை சமரசம் செய்து வைத்தேன். மற்றப்படி எந்த பிரச்சினையும் இல்லை. இது ஒரு சாதாரண சம்பவம் சிலரால் பெரிதாக்கப்பட்டுள்ளது. இப்போது மதுரை ஆதீன மடத்தில் எந்த பிரச்சினையும் இல்லை. நேற்று முன்தினம் நடந்த வருமான வரித்துறை சோதனையின்போது அதிகாரிகள் கேட்ட கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் விளக்கமாக பதில் கொடுத்துள்ளோம். அவர்கள் மடத்தின் கணக்கு புத்தகங்களை எடுத்து சென்றுள்ளனர். மற்றபடி ஒன்றுமில்லை. இவ்வாறு மதுரை ஆதீனம் கூறினார்.

வேதபிரகாஷ்

07-05-2012


 


[2] இப்படி விவரித்துள்ளது “நக்கீரன்” தான்!

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , ,

15 பதில்கள் to “குருவின் சாவிக்காக சிஷ்யைகள் சண்டை – பீட்டரிடம் சாவியிருந்தால் இந்த தொல்லை வந்திருக்காதே?”

  1. Mariam Nayanathara Says:

    மதுரை ஆதின மடத்தில் கலவரம்! வைஷ்ணவி …
    nakkheeran publications – 4 நாட்களுக்கு முன்னர்

    வைஷ்ணவி மீது நித்தியானந்தா ஆட்கள் தாக்குதல்! மதுரை ஆதின மடத்தில் சனிக்கிழமை (05.05.2012) வருமான வரித்துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தின …

    நக்கீரன் இப்படி ஒரு செய்தியைப் ப்[ஓட்டிருக்கிறது.

    சரி, ப்ய்ய் படிப்போம் என்று கிளிக்கினால், கிடைக்கும் செய்தி இதோ:

    எச்சரிக்கை- இத்தளத்திற்குப் வருவது உங்கள் கணினிக்குத் தீங்கு விளைவிக்கக் கூடும்!
    ஆலோசனைகள்:
    முந்தைய பக்கத்துக்கு திரும்பி வேறொரு முடிவைத் தேர்வு செய்க.
    நீங்கள் தேடுவதை கண்டறிய வேறு தேடலை முயற்சிக்கவும்.
    அல்லது உங்கள் சொந்த விருப்பத்தின்பேரில் http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=75315 -க்கு தொடரலாம். நாங்கள் கண்டறிந்த சிக்கல்களைப் பற்றிய விரிவான தகவல்களுக்கு, Google இன் பாதுகாப்பான உலாவல் பகுப்பாய்வு பக்கத்தைக் காண்க.

    ஆன்லைனில் தீங்கான மென்பொருள்களிலிருந்து உங்களைப் பாதுகாத்து கொள்வது பற்றிய மேலும் விவரங்களுக்களுக்கு StopBadware.org க்கு செல்க.

    நீங்கள் இந்த வலைத்தளத்தின் உரிமையாளராக இருந்தால், Google இன் வெப்மாஸ்டர் கருவிகளைப் பயன்படுத்தி ஒரு மதிப்பாய்வை கோரலாம். மதிப்பாய்வு செயல்முறையைப் பற்றிய மேலும் விவரங்கள் Google இன் வெப்மாஸ்டர் உதவி மையத்தில் உள்ளன.அறிவுரை வழங்கியது

    அப்படியென்றல், நக்கீரன் தந்திரமாக வைரஸை அனுப்பிறானா?

    • Mariam Nayanathara Says:

      மதுரை ஆதின மடத்தில் கலவரம்! வைஷ்ணவி மீது நித்தியானந்தா ஆட்கள் தாக்குதல்!

      http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=75315

      மதுரை ஆதின மடத்தில் சனிக்கிழமை (05.05.2012) வருமான வரித்துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தின நேரத்தில், மாலையில் மதுரை ஆதினம் அருணகிரிநாதர் திருவண்ணாமலைக்கு புறப்பட்டுவிட்டார். மாலையில் அங்கு நித்தியானந்தாவுக்கு நடக்கும் பட்டாபிஷேகத்தில் பங்கேற்றார்.

      உதவியாளர் வைஷ்ணவியை ஆதின மடத்திலேயே தங்க வைத்த ஆதினம் அருணகிரிநாதர், பாதுகாப்புக்கு நித்தியானந்தா ஆட்களை நிறுத்திவிட்டுச் சென்றார்.

      இந்த நிலையில் இன்று (06.05.2012) மாலை 5 மணி அளவில், நித்தியானந்தாவின் ஆட்கள் மற்றும் அவருடைய உதவியாளர் உள்பட சிலர் தன்னை மடத்தை விட்டு வெளியேற சொல்லி அடித்து காயப்படுத்தி, தனி அறையில் பூட்டி விட்டனர் என்று மதுரை போலீசுக்கும், ஆதின முன்னாள் உதவியாளர் ராமராஜீக்கும், இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜீன் சம்பத்துக்கும் தனது செல்போன் மூலம் கதறியபடி கூறியுள்ளார் வைஷ்ணவி.

      இதையடுத்து ஆதின மடத்தின் இரண்டு பக்க கதவுகளை மூடிவிட்டு போலீசார் சோதனை நடத்தினர். மடத்துக்குள் இளம்பெண் தாக்கப்பட்ட சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • V. Narayanan Says:

      நக்கீரன் ஒருவேளை வைரஸ் விட்டு வியாபாரம் செய்கிறதோ என்னமோ?

      • vedaprakash Says:

        வியாபாரம் என்றால், எப்படியும் செய்யலாம்.

        அதை ஊடகக்காரர்களுக்குச் சொல்லித் தர வேண்டிய அவசியமில்லை.

        லாட்டரிக்கு, சூதாரட்டத்திற்கு, விபச்சாரத்திற்கு, பயங்கரவாதத்திற்கு, தீவிரவாதத்திற்கு என குரூரக்கொடுமைகளுக்கு அத்தகைய அறிவு உபயோகப்படுத்தப் படுகிறது.

        ஆகவே, இத்தகைய பகட்டு-ஜிகினா செய்திகள் போட்டு, கவர்ந்து, கிளிக்கினால் வைரஸ் விடுத்து வியாபாரம் தாராளமாகவே செய்யலாம்.

        படித்தப் பண்பாளர்கள் காசு வாங்கிக் கொண்டு வேலை செய்யத் தயாராக உள்ளார்கள்.

  2. Mariam Nayanathara Says:

    வைஷ்ணவி எங்கே?
    டென்சனில் மதுரை ஆதின மடம்!

    http://www.nakkheeeran.com/users/frmNews.aspx?N=75128

    மதுரை ஆதினத்தின் தனி உதவியாளராக திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த வைஷ்ணவி நியமிக்கப்பட்டார். கடந்த 6 மாதத்திற்கு மேலாக மதுரை ஆதினத்திற்கு உதவியாளராக இருந்த வைஷ்ணவி, கடந்த திங்கள்கிழமை அதிகாலை 6 மணிக்கு ஆதின டத்தில் இருந்து காணவில்லை என்று ஆதினமும், நித்தியானந்தாவும் ரகசிய ஆலோசனை செய்து (போலீசுக்கு போகாமல்) தேடி வருகிறார்கள்.

    இந்தநிலையில் வைஷ்ணவி கடத்தப்பட்டரா அல்லது தலைமறைவாக இருக்கிறாரா என்று ஆதினமும், நித்தியானந்தாவும் தொடர்ந்து பதட்டத்தில் இருக்கிறார்கள்.

    ஆதினத்தை தொடர்புகொண்ட பத்திரிகையாளர்கள் வைஷ்ணவி எங்கே என்று கேட்டதற்கு, அவரை மடத்தைவிட்டு திருவாரூக்கு அனுப்பி வைத்துவிட்டேன் என்று கூறியிருக்கிறார். ஆனால் வைஷ்ணவி குடும்பத்தினரை தொடர்பு கொண்டபோது, அவர் வரவில்லை என்றும், மடத்தில்தான் இருக்கிறார் என்றும் கூறியிருப்பது புரியாத புதிராக இருக்கிறது என்று ஆதின மடத்து பக்தர்கள் குழப்பத்தில் இருக்கிறார்கள்.

    • Mariam Nayanathara Says:

      நித்தி சீடர்கள் தாக்குதல்!
      கிழிந்தது வைஷ்ணவியின் சுடிதார்!

      http://www.nakkheeeran.com/users/frmNews.aspx?N=75319

      மதுரை ஆதின மடத்தின் 292வது ஆதினமாக அருணகிரிநாதர் இருந்தார். அவருடைய நெருக்கமான உதவியாளராக வைஷ்ணவி இருந்தார். அருணகிரிநாதர் ஆதினத்தின் தனி அறையின் சாவியை (பணம் மற்றும் தங்க நகைகள் உள்ள அறை) வைஷ்ணவியிடம் ஒப்படைத்துவிட்டு திருவண்ணாமலைக்கு சென்றார்.

      இந்த நிலையில் வைஷ்ணவியிடம், நித்தியானந்தாவின் சீடர் ரிஷி மற்றும் அவரது மனைவி, நித்தியானந்தா ஆட்கள் தனி அறையின் சாவியை கேட்டுள்ளனர். இதற்கு வைஷ்ணவி மறுத்துள்ளார். இதனால் வைஷ்ணவியை அவர்கள் தாக்கியுள்ளனர். இதில் வைஷ்ணவியின் சுடிதார் கிழிந்துவிட்டது.

    • V. Narayanan Says:

      நக்கீரனிடம் சொன்னாலே போதுமே, தேடி கண்டு பிடித்து கொடுத்து விடுவர்களே?

      ஆனால், லெனினிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

      • vedaprakash Says:

        இப்பிரச்சினையை வைத்துக் கொண்டு காசு பண்ணிக் கொண்டிருக்கும் ஊடகங்களில், இது தலைமையானது!

  3. Mariam Nayanathara Says:

    மதுரை ஆதீனத்தின் இளம்பெண் உதவியாளர் மாயம் :
    போலீசுக்கு தெரிவிக்காமல் தேடுதல் வேட்டை

    http://www.nakkheeeran.com/users/frmNews.aspx?N=75041

    தஞ்சாவூர் மாவட்டம் கச்சனத்தை சேர்ந்தவர் வைஷ்ணவி( திருமணமகாதவர்). இவர் கடந்த 6 மாதங்களாக மதுரை ஆதீனம் மடத்தில் தங்கி ஆதீனத்தின் உதவியாளராக இருந்து வந்தார். அவருடன் அவரது தங்கையும் கஸ்தூரியும் (திருமணமாகாதவர்) மடத்தில் தங்கியிருந்தார்.

    நித்தியானந்தா மதுரை வந்தபோது சகோதரிகள் உடன் இருந்தனர். பின்னர் கடந்த வாரம் நித்தியானந்தாவின் பெங்களூர் மடத்திற்கு ஆதீனம் சென்றபோது, வைஷ்ணவி மற்றும் அவரது தங்கை கஸ்தூரியும் சென்றிருந்தனர்.

    ஆதீனம் ,நித்தியானந்தாவுடன் இவர்கள் நேற்று முன் தினம் மதுரை திரும்பினர். நித்தியானந்தா பதவியேற் றபோது சகோதரிகள் இருவரும் அருகிலேயே இருந்தனர்.

    நித்தியானந்தா பதவியேற்பு நிகழ்ச்சி முடிந்தபிறகு, தங்கை கஸ்தூரியை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தார் வைஷ்ணவி. கஸ்தூரியிடம் நிறைய நகைகள் மற்றும் பணத்தையும் கொடுத்தனுப்பினார்.

    வைஷ்ணவி மடத்திலேயே தங்கியிருந்தார். இந்நிலையில் இன்று ( 1.5.2012) காலை 6 மணி முதல் வைஷ்ணவியை மடத்தில் காணவில்லை. போலீசுக்கு தகவல் தெரிவிக்காமலேயே மடத்தினர் தேடி வருகின்றனர்.

    -முகில்

    • Mariam Nayanathara Says:

      நக்கீரன் ஒரு ஆபாசப் பத்திரிக்கை, சுற்றுதல் எண்ணிக்கை அதிகரிக்க அதையும் செய்யத் துணிந்த ஒரு பத்திரிக்கை என்று அடிக்கடி மெய்ப்பித்து வருகிறது.

      பெண்களைப் பற்றிய செய்திகளைக் கேவலமாக வெளியிட்டு வருகிறது.

      உபயோகப்படுத்தும் வார்த்தைகள் கூட ஆபாசமாகத்தான் உள்ளது.

      தமிழில் படிக்கும் போதே நீலப்படம் பபார்க்க வேண்டுமானால், நக்கீரனைப் படிக்கலாம் போலயருக்கிறது.

  4. Mariam Nayanathara Says:

    போலீசுக்கு தகவல் சொன்ன வைஷ்ணவி! சமாதானம் செய்யும் நித்தி – ஆதினம் அருணகிரிநாதர்!

    வைஷ்ணவி

    நித்தியானந்தாவின் ஆட்கள் மற்றும் அவருடைய உதவியாளர் உள்பட சிலர் தன்னை மடத்தை விட்டு வெளியேற சொல்லி அடித்து காயப்படுத்தி, தனி அறையில் பூட்டி விட்டனர் என்று மதுரை போலீசுக்கும், ஆதின முன்னாள் உதவியாளர் ராமராஜீக்கும், இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜீன் சம்பத்துக்கும் தனது செல்போன் மூலம் கதறியபடி கூறியுள்ளார் வைஷ்ணவி.

    இதையடுத்து ஆதின மடத்தின் இரண்டு பக்க கதவுகளை மூடிவிட்டு போலீசார் சோதனை நடத்தினர்.

    வைஷ்ணவிரி போலீசுக்கு தகவல் கொடுத்த நிலையில், திருவண்ணாமலையில் இருந்து மதுரைக்கு நித்தியானந்தாவும், ஆதினம் அருணகிரிநாதரும் அவசர அவசரமாக திரும்பினர். அவர்கள் தொடர்ந்து வைஷ்ணவியை சமாதானப்படுத்தி வருகின்றனர்.

    http://www.nakkheeeran.com/users/frmNews.aspx?N=75320

    • Mariam Nayanathara Says:

      ஆதின முன்னாள் உதவியாளர் ராமராஜீக்கும், இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜீன் சம்பத்துக்கும் தனது செல்போன் மூலம் கதறியபடி கூறியுள்ளார் வைஷ்ணவி.

      அப்படியென்றல், இவர்களுக்கும், இந்த “கல்யாணம் ஆகாத பெண்களுக்கும்” என்ன சம்பந்தம் என்று நக்கீரன் கேட்குமா? இதிலிருந்தே, நக்கீரன் மற்றும் அந்த “இந்து” கட்சிகளின் போலித்தனம் வெளிப்படுகிறது.

      உண்மையில் கொள்கைக்கிற்காக வேலை செய்யும் யாரும் இவ்வாறான செய்ககளில் ஈடுபட மாட்டார்கள்.

  5. vedaprakash Says:

    மதுரை ஆதினத்தை யாரும் `மை’ போட்டு மயக்கவில்லை: நித்தியானந்தா பேட்டி Salem வியாழக்கிழமை, ஜூன் 07, 9:28 AM IST
    http://www.maalaimalar.com/2012/06/07092803/nithiyanantha-interview-madura.html

    சேலம், ஜுன். 7-
    சேலம் அருகே உள்ள பெரியசீரகாபாடியில் அமைந்திருக்கும் தியான பீடத்துக்கு மதுரை ஆதீனம் அருணகிரிநாதரும், நித்யானந்தாவும் நேற்று இரவு வந்தனர். அப்போது அவர்களுக்கு 500க்கும் மேற்பட்ட சீடர்கள் வரவேற்பு கொடுத்தனர். அங்கு வைத்திசுவரி சிலையை நித்யானந்தா பிரதிஷ்டை செய்தார். பின்னர் நடந்த நிகழ்ச்சியில் மதுரை ஆதீனம் பேசியதாவது:-

    நித்யானந்தா தமிழ் சமூதாயத்திற்கு கிடைத்த பெரிய பரிசு. அவரிடம் நிறைய சக்தி உள்ளது. அவரை எதிர்ப்பவர்கள் எல்லாம் காமெடி பீஸ்கள். மதுரை ஆதீனம் மீட்புகுழு என்ற பெயரில் சிலர் போராடுகிறார்கள். அவர்களுக்கு நித்யானந்தாவை பற்றி குறை கூற எந்ததகுதியும் இல்லை. கடந்த 10 ஆண்டு காலத்தில் நித்யானந்தா 1 கோடியே 20 லட்சம் பக்தர்களை பெற்று இருக்கிறார்.

    இவ்வாறு மதுரை ஆதீனம் கூறினார்.

    பின்னர் நித்யானந்தா பேசியதாவது:- மதுரை ஆதினத்திடம் சிறிது கூட கபடு, சூது கிடையாது. அவர் காட்டும் வழியில் நான் செல்வேன். அவர் நாளைக்கே இளைய மதுரை ஆதீனம் பதவி வகிக்க வேண்டாம் என்று கூறினால் அந்த சொல்லுக்கு கட்டுப்படுவேன். மதுரை ஆதினத்தை மை போட்டு மயக்கி விட்டதாக கூறுகிறார்கள். அது மாதிரி நான் எதையும் செய்யவில்லை.

    மீட்பு குழுவின் போராட்டத்தின் போது நான் விலகி விடுவதாக கூறினேன் அதற்கு அவர் மறுத்து எது வந்தாலும் போராடி ஜெயிக்க வேண்டும் என்று ஆதீனம் என்னிடம் அறிவுறுத்தினார். இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ள வைத்தீஸ்வரி அம்மன் எல்லா நோய்களையும் போக்கும். வரும் காலத்தில் இந்த அம்மன் பிரபலமடைந்து வணங்குபவர்களின் குறைகளை போக்கும்.

    இவ்வாறு நித்யானந்தா பேசினார்.

    முன்னதாக நாமக்கல் அருகே உள்ள பொரச பாளையத்தில் நித்யானந்த தியான பீடம் உள்ளது. இந்த பீடத்திற்கு நேற்று மதுரை ஆதீனம் அருணகிரிநாதர், இளையஆதீனம் நித்யானந்தா ஆகியோர் வருகை புரிந்தனர். பின்னர் அவர்கள் இருவரும் கூட்டாக இணைந்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

    மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான சொத்துக்களை 140 பேர் ஆக்கிரமித்து உள்ளதை இதுவரை கண்டறிந்து உள்ளோம். அவர்களிடம் இருந்து ஆதீனம் சொத்துக்களை மீட்கும் நடவடிக்கையை தொடங்கி உள்ளோம். சமீபத்தில் கோவில் தேர் திருவிழாவில் சில இடங்களில் விபத்து ஏற்பட்டு உள்ளது. இதற்கு கவனக்குறைவும், பொறுப்பு உணர்ச்சி இல்லாததுமே காரணம் ஆகும். நாங்கள் ஒரு கட்சிக்கு சொந்தகாரர்கள் இல்லை. அனைத்து கட்சியினரும் எங்களுக்கு வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

  6. vedaprakash Says:

    பிடதி ஆசிரமத்தில் பத்திரிக்கையாளர்- நித்தியானந்தா ஆதரவாளர்கள் மோதல் வெள்ளிக்கிழமை, ஜூன் 8, 2012, 8:14 [IST]
    http://tamil.oneindia.in/news/2012/06/08/india-kannada-tv-journalist-evicted-from-nithyanantha-press-155287.html

    பெங்களூர்: நித்தியானந்தாவுக்கு வழஙகப்பட்ட சம்மனை ஏன் அவர் பெறவில்லை என்று கன்னட தொலைக்காட்சி சானலின் செய்தியாளர் கேள்வி கேட்டதால் அவரை வெளியேற்ற நித்தியானந்தா உத்தரவிட்டார். இதையடுத்து அவருக்கும், நித்தியானந்தா ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது.
    நித்தியானந்தாவும், மதுரை ஆதீனமும் பெங்களூர் வந்து பிடதி ஆசிரமத்தில் தங்கியுள்ளனர். நேற்று இருவரும் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது அமெரிக்காவச் சேர்ந்த நித்தியானந்தாவின் பெண் சீடர் ஆர்த்தி ராவ், நித்தியானந்தா மீது சுமத்தியுள்ள பாலியல் புகார் குறித்து கன்னட சுவர்ணா டிவியைச் சேர்ந்த நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

    அதற்குப் பதிலளித்த நித்தியானந்தா, பாலியல் நோய்க்காக ஆர்த்தி ராவ் என்னிடம் சிகிச்சை பெற வந்தார். அவருடன் எனக்கு குரு சிஷ்யை உறவு மட்டுமே உள்ளது. அவர் மீது அமெரிக்கா, தமிழகம், ராம நகரம், வாரணாசியில் வழக்குகள் உள்ளன. அவற்றில் வழங்கிய சம்மனை பெற்று கொள்ளாமல் தலைமறைவாகி உள்ளார் என்றார்.

    அப்போது சுவர்ணா டிவி நிருபர் குறுக்கிட்டு, ஆர்த்தி ராவ் விவகாரம் தொடர்பாக 2001ல் உங்களுக்கு வந்த சம்மனை ஏன் வாங்கவில்லை? என்று கேட்டார். அதற்கு நித்தியானந்தா, எனக்கு சம்மன் எதுவும் வரவில்லை என்றார். அதையடுத்து அந்த நிருபர், அந்த சம்மன் நகல் என்னிடம் உள்ளது என்றார். மேலும் அதை நித்தியானந்தாவிடம் கொடுக்க எழுந்து சென்றார்.

    இதையடுத்து அவரை அங்கிருந்து வெளியேற்றுமாறு நித்தியானந்தா உத்தரவிட்டார். இதையடுத்து நித்தியானந்தா ஆதரவாளர்கள் அவரைச் சூழ்ந்து தள்ளியபடி வெளியேற்றினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சுவர்ணா டிவி நிருபரை வெளியேற்றியதைக் கண்டித்து பிற பத்திரிக்கையாளர்களும் எழுந்ததால் பத்திரிக்கையாளர் சந்திப்பு பாதியில் முடிந்தது.

    நித்தியானந்தா ஆதரவாளர்கள் சுவர்ணா டிவி நிருபரை சூழ்நது கொண்டு தாக்கியதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

    50க்கும் மேற்பட்டோர் ஆயுதங்களுடன்…

    அதேசமயம், சுவர்ணா டிவி சேனலின் தலைவர் அஜீத் தலைமையில் 20க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து ஆசிரமத்தில் தாக்குதல் நடத்தியதாக நித்தியானந்தா தரப்பு குற்றம் சாட்டியுள்ளது.

    இதில் ஆசிரம நிர்வாகி ஆத்மபிரபானந்தாவும், இன்னொருவரும் காயமடைந்ததாக அது கூறியுள்ளது.

    சுவர்ணா டிவிக்குச் சொந்தமான வேனில் 50க்கும் மேற்பட்டோர் ஆயுதங்களுடன் வந்ததாகவும், தங்களை கர்நாடக நவ நிர்மான சேனாவைச் சேர்ந்த தொண்டர்கள் எனக் கூறிக் கொண்டதாகவும், நித்தியானந்தாவை எதிர்த்து அவர்கள் கோஷமிட்டதாகவும் நித்தியானந்தா தரப்பு கூறுகிறது.

    அவர்களைத் தடுத்து நிறுத்தி ஆசிரம நிர்வாகிகள் விசாரிக்க முயன்றபோது அந்த குண்டர்கள் தாக்குதலில் இறங்கியதாகவும், மயத்தினாந்தா என்பவரை முதலில் தாக்கியதாகவும், பிறகு ஆசிரமத்தைச் சேர்ந்த ஒரு பிரம்மச்சாரி வைத்திருந்த கேமராவைப் பிடுங்கி சேதப்படுத்தியதாகவும் கூறுகிறார்கள்.

    அதன் பிறகு பெரிய கல்லை எடுத்து ஆத்மபிரபானந்தாவைத் தாக்கியதால் அவரது தலையிலிருந்து ரத்தம் கொட்டியதாகவும் நித்தியானந்தா தரப்பு கூறுகிறது.

    இந்த வன்முறையை பிடதி போலீஸார் வேடிக்கை மட்டுமே பார்த்ததாகவும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்றும் நித்தியானந்தா தரப்பு கூறுகிறது.

  7. சைவத்திற்கும், இந்துமதத்திற்கும் இழிவை சேர்க்கும் மதுரை ஆதினம் – அ.தி.மு.க.வை ஆதரித்து 40 நாடாள Says:

    […] [11] https://dravidianatheism2.wordpress.com/2012/05/07/fight-for-key-resembles-heavens-key-with-peter-pow… […]

பின்னூட்டமொன்றை இடுக