இந்துத்துவ பாதையில் திமுக: பகுத்தறிவு சூழ்ச்சி, நாத்திக தந்திரம், மற்றும் அரசியல் யுக்தி- திமுக வலையில் சிக்கிக் கொண்ட பிஜேபி, இந்துத்துவ வாதிகள் பார்ப்பனர்களைத் தூற்றியது (3)
பல புகைப் படங்கள் இருந்தாலும், சிலவற்றை வைத்து தூஷித்தது!
இந்துத்துவவாதிகள் எதிர்க்க வேண்டியது திமுகவையா, பார்ப்பனர்களையா?: 30-11-2020 அன்று, “இந்துத்துவபாதையில்திமுக: பகுத்தறிவுசூழ்ச்சி, நாத்திகதந்திரம், மற்றும்அரசியல்யுக்திஎந்தஅளவுக்குஉதவும்என்பது 2021 தேர்தல்நிரூபித்துவிடும் (1)” மற்றும் “இந்துத்துவபாதையில்திமுக: பகுத்தறிவுசூழ்ச்சி, நாத்திகதந்திரம், மற்றும்அரசியல்யுக்தி: உதயநிதிவிபூதிபூசுவது, துர்காகோவில்கட்டுவதுமுதலியன(2)” என்று, எவ்வாறு திமுக “மென்மையான இந்துத்துவத்தை” பின்பற்ற ஆரம்பித்து விட்டது என்று “பிளாக்” போட்டு முடித்த சிறிது நேரத்தில், டுவிட்டரில் உள்ள சில புகைப் படங்களை[1], பேஸ்புக்கில் போட்டு, அவற்றை வைத்து, பார்ப்பனரை விமர்சிக்க ஆரம்பித்தனர். எதிர்பார்த்தப் படி, அப்படியே ஷேர் செய்வது, லைக் போடுவது, திட்டுவது என்பது தொடர்ந்து அதிகமாகின. குறிப்பிட்ட பிஜேபிகாரர்கள், ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி (வகையறாக்கள் உட்பட), நபர்கள் அத்தகைய அதிரடி, தாக்குதல், போஸ்டிங்குகளை செய்ய ஆரம்பித்தனர். இது நிச்சயமாக “இதுத்துவத்திற்கு” ஒவ்வானதாகும். இருப்பினும் மிக மோசமாக அத்தாக்குதல் அரங்கேறியுள்ளது. அதனால், மூன்றாம் பகுதியில், இவற்றை பதிவு செய்ய வேண்டிய நிலை / கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
பல புகைப் படங்கள் இருந்தாலும், சிலவற்றை வைத்து தூஷித்தது! இவர்கள் பார்ப்பனரா என்பது அவர்களுக்குத் தெரியாது போலும்!
அரசியல்போர்வையில்நடத்தியதாக்குதல்: திமுகவை எதிர்க்கிறேன் என்று நூற்றுக் கணக்கான, முகநூல் பிஜேபி, ஆர்.எஸ்.எஸ், இது முன்னணி வகையறாக்கள், பிராமணர்களைத் தாக்கி வசைப்பாடியுள்ளனர். Subbu FOTOGRAFI என்று டுவிட்டரில், உதயநிதிக்கு விபூதி வைப்பது, அக்ஷதை போடுவது, தலையில் பொன்னாடை கட்டுவது, மாலை போடுவது என்று பலவித பிராமணர் / பார்ப்பனர், பட்டர், சிவச்சாரி………. (துலுக்கர் உட்பட) என்று புகைப்படங்கள் உள்ளன. ஆனால், இந்துத்துவ வாதிகள், பிஜேபிகாரர்கள், ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி (வகையறாக்கள் உட்பட), பார்ப்பனரை / பிராமணரை மட்டும், மிகக் கேவலமாக, மோசமான, ஆபாசமான………வார்த்தைகளை உபயோகப் படுத்தி தூஷித்துள்ளனர். பார்ப்பனர் அல்லாத பற்பல இந்துத்துவவாதிகள், திக-திமுக-கம்யூனிஸ வகையறாக்கள் கூட வியாபாரம், நட்பு, பார்ட்டிகளில் கொண்டாட்டம் போடுவது……என்றெல்லாம் உள்ளனர். தைரியம் இருந்தால், இதே போன்று ஒரு சுப்புவை வைத்து, போட்டோ எடுத்துப் போட்டிருக்க வேண்டும். திமுக வலையில் நன்றாக மாட்டிக் கொண்டனர். லாஜிக்கே இல்லாமல், எதிரிகளை எதிர்க்காமல், பிரமாண துவேசத்தைக் கக்கியுள்ளனர்.
பல புகைப் படங்கள் இருந்தாலும், சிலவற்றை வைத்து தூஷித்தது! இவர்கள் பார்ப்பனரா என்பது அவர்களுக்குத் தெரியாது போலும்!
ஆபாசமாக, கேவலமாகபதிவுசெய்துள்ளதில்சில – உதாரணத்திற்கு[2]: இந்துத்துவ வாதிகள், பிஜேபிகாரர்கள், ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி (வகையறாக்கள் உட்பட), பார்ப்பனரை / பிராமணரை மட்டும், மிகக் கேவலமாக, மோசமான, ஆபாசமான………வார்த்தைகளை உபயோகப் படுத்தி தூஷித்துள்ள வசனங்களில் சில[3]:
இது திமுகவின் பிராமண அணி,
எவ்வளவு செருப்படி பட்டாலும் புத்தி வராது பிராமணனக்கு,
கருணாநிதி முன்னோர்கள் மாநில ஆந்திர இறக்குமதி பார்ப்பனர்கள்.
தொடர்ந்து இந்து மதத்தை இழிவு செய்யும் திருட்டு திராவிட “ஈனப்பயலுடன்” செல்பி படம் எடுக்கும் இந்த கேடுகெட்டவனை.. படம் [செருப்பால் அடிக்க வேண்டும்]
நக்குனா இப்படி தான் நக்கனும் இதை விட அசிங்கமா எழுதுவேன் என் ஆத்மார்த்த நண்பர் deva priyaji, piriya ramkumar, போன்றவர்களின் மனம் புண்பட கூடாது என்பதற்காக அடக்கி வாசிக்கிறேன்.
அட குரங்கு குப்பங்களா யாருக்கு என்ன மரியாதை செய்யணும்னு தெரியாதா?
இவர்கள் உண்மையிலேயே ஆர்.எஸ்.எஸ்,சில் பயிற்சி எடுத்திருந்தால், அவ்வாறான கமென்டுகளை செய்திருக்க மாட்டார்கள். ஆனால், செய்துள்ளார்கள் என்பதால், பல சதேகங்கள் எழுகின்றன.
இது மட்டும் தான் அவர்களுக்குத் தெரிந்தது போலும்!
திமுகவுடன்சேர்ந்துபோட்டோஎடுத்துக்கொண்டவர்கள்அனைவரையும் ஒரேமாதிரியாகவிமர்சிப்பு, தாக்குதல்முதலியனஏன் செய்யவில்லை?: முன்பு “இந்து முட்டாள்கள்” என்று பதிவு செய்த போது, கோபித்துக் கொண்டார்கள், ஆனால், இப்பொழுது, அதை விட மோசமாக கமென்ட் செய்துள்ளார்களே? என்ன செய்வது? இந்த “இந்துத்துவ முட்டாள்கள்” திமுகவை எதிர்க்கிறார்களா, இந்துக்களை எதிர்க்கிறார்கள், இந்து மதத்தை குறை கூறுகிறார்களா? பார்ப்பனர்கள் / பிராமணர்கள் என்றெல்லாம் முட்டாள் இந்துக்கள் விமர்சிப்பதால், எல்லா வந்தேறி – பார்ப்பனர்கள் பிஜேபியிலிருந்து , இந்து அமைப்புகளிலிருந்து விலகி விடலாம்! சில நாட்களுக்கு முன்னர், அந்த ஆதின மடாதிபதி, இரவு 10 மணிக்கு மேலே, ஆசிர்வாதம் எல்லாம் நடத்திய போது, அவரை, ஜாதி பெயர் சொல்லி விமர்சிக்கவில்லை, இவ்வகையில் போட்டி போட்டுக் கொண்டு, தூஷிக்க வில்லை. இதிலிருந்து, அரசியல் ரீதியில், சூழ்ச்சியாகத்தான் பார்ப்பனரை / பிராம்மணரை எல்லோரும் சேர்ந்து தாக்குகின்றனர் என்று தெரிகிறது.
1999ல் அதிமுக ஒதுக்கியதால், திமுகவுடன் பிஜேபி கூட்டு வைத்துக் கொண்டது. கருணாநிதி, வைகோ என்று திராவிடத் தலைவர்கள் வாஜ்பேயுக்கு போன்னாடைப் போற்றி வாழ்த்தினர். அரசியல் வியபாரமும் நடந்தது, அதாவது, கூட்டணி உடன்படிக்கை ஏற்கப் பட்டது. ஒரு பார்ப்பனனைச் சுற்றியிருக்கும் அவர்கள் பார்ப்பனர்களா? என்றெல்லாம் யாரும் கேட்கவில்லை. 182 எம்.பிக்களைக் கொண்ட பிஜேபி, திமுக ஆதரவுடன் ஆட்சி அமைத்தது[4]. பிஜேபி-ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் திமுகவினருக்கும் தேர்தல் பிரச்சார செய்தனர்………. அதை இங்கு விளக்க விருப்பம் இல்லை. காவிகள் அறிவார்கள். முரசொலி மாறன், டி.ஆர்.பாலு, ஏ.ராஜா, முதலியோர் மத்திய அமைச்சர்கள் ஆகினர். “ஒரு கெட்ட கட்சியில் உள்ள அல்ல மனிதர்,” என்றெல்லாம் அந்த பார்ப்பன பிரதம மந்திரி விமர்சிக்கப் பட்டார். இன்னும் சொல்ல நிறைய உள்ளன…………..ஆகவே, 2020ல் இத்தகைய வெளிப்பாடு திகைப்பாக இருக்கிறது.
ஸ்டாலினைபாராட்டியசி.பி.ராதாகிருஷ்ணன்செப்டம்பர் 2019[5]: முன்னாள் அமைச்சர் மற்றும் திமுக மாவட்ட செயலாளர் வெள்ளக்கோவில் சாமிநாதனின் குடும்ப திருமணவிழா திருப்பூரில் 05-09-2019 அன்று நடந்தது. திருமண விழாவில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின், பாஜக தலைவர்களில் ஒருவரான முன்னாள் எம்.பி சி.பி ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பல கட்சி பிரமுகர்கள் கலந்துகொண்டனர். திருமண நிகழ்ச்சியில் பேசிய, சி.பி ராதாகிருஷ்ணன்[6], “கலைஞருக்குபிறகுகட்சியின்தலைமையைஏற்றதளபதிஅவர்கள், எங்களையெல்லாம்தோற்கடித்துஇன்றுவெற்றிதளபதியாகஉள்ளார். நாங்கள்இன்னும்உழைக்கவேண்டியதும், அதனைதளபதிஅவர்களிடம்கற்றுக்கொள்ளவேண்டியதுஅதிகமுள்ளது,” என்று அவர் கூறினார்[7]. தமிழக பாஜகவின் தலைவருக்கான போட்டியில் சி.பி ராதாகிருஷ்ணன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே மாநில தலைவராக இருந்த ராதாகிருஷ்ணன், இரண்டு முறை எம்.பியாகவும் பொறுப்பு வகித்துள்ளார். தற்போது மத்திய கயிறு வாரியத்தின் தலைவராக பதவி வகித்து வருகிறார், என்றெல்லாம் ஊடகங்கள் குறிப்பிட்டன. திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அவர்களிடம் நாங்கள் இன்னும் அதிகம் உழைக்க வேண்டும் என்பதை கற்றுக்கொண்டுள்ளோம் என்று பாஜக தலைவர் சி.பி ராதாகிருஷ்ணன் பேசியுள்ளார். ஆக, பிஜேபி.காரர்கள் இவ்வாறு கற்றுக் கொண்டு, பார்ப்பனர்களை தூஷித்தார்கள் போலும். ஒரு ஆண்டில், நல்ல முன்னேற்றம் தான். இனி, குத்தூசி குருசாமி, அணுகுண்டு ஆறுமுகம்………….. போன்றவர்களும் தயாராகலாம்!
பல புகைப் படங்கள் இருந்தாலும், சிலவற்றை வைத்து தூஷித்தது! இவர்கள் பார்ப்பனரா என்பது அவர்களுக்குத் தெரியாது போலும்!
இந்துக்களின் இன்றை நிலை: இந்துக்களை, இந்துக்கள் என்று பாராமல், ஜாதிய கண்ணோட்டத்துடன் பார்க்கும் நிலை அபாயக்கரமானது.
சமூகம், ஜாதி, மதம், தேசம், மொழி முதலியவை அரசியலாக்கும் முயற்சிகளில், அவற்றை சின்னங்களாக, அடையாளங்களாக, குறீயீடுகளாக மதிக்க முடியாது.
அரசியல், செக்யூலரிஸம் போர்வையில் கடந்த 60 ஆண்டுகளாக இந்துக்களை ஒடுக்கி வைத்தது, அடக்கி வந்தது.
பிஜேபி, “இந்து கட்சி” என்று பிரகனடப் படுத்திக் கொண்டதால், இந்துக்கள் கொஞ்சம்-கொஞ்சமாக பிஜேபிக்கு ஓட்டுப் போட ஆரம்பித்தனர்.
பதிலுக்கு தங்கள் உரிமைகள் காக்கப் பட விரும்பினர். குடும்பம், குடும்பம் சார்ந்த விசயங்களில் சதோசம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தனர்.
ராம ஜன்ம பூமி விசயம் பல ஆண்டுகளாக பாதித்து வந்து, இப்பொழுது முடிந்துள்ளது. எல்லா அரசியல் கட்சிகளும் அதை வைத்து இந்துக்களை சதாய்த்தாலும், பிஜேபி வென்றது.
ஆனால், தொடர்ந்து நீதிமன்ற தீர்ப்புகள் இந்துக்களை பாதிப்பதாகவே இருந்து வருகின்றன. அவை இந்து குடும்பங்கள், உறவுகள், வழி-வழி வரும் பழக்க-வழக்கங்கள் முதலியவற்றை தடுப்பதாக, மாற்றுவதாக உள்ளன.
பொருளாதார ரீதியில் சாதாரண மக்களுக்கு எந்தவித மாற்றமும் ஏற்படதாகத் தெரியவில்லை, அதாவது உணவு உடை மற்றும் உறையுள் (ரோடி-பப்டா ஔர் மகான்) என்றவற்றின் விலை அதிகமாகிக் கொண்டிருக்கின்றன.
தங்கம்-பெட்ரோல்-டாலர்-ஷேர் மார்க்கெட், சந்தை பொருளாதாரம் எல்லாம் சாதாரண மக்களுக்குத் தேவையில்லை. தனது கூலிக்கு-சம்பளத்திற்கு சாப்பாடு கிடைக்கிறதா என்று தான் பார்ப்பார்கள்.
அந்நிலையில், ஒரு பக்கத்தில் உரிமைகளும் பறிபோய், இன்னொரு பக்கத்தில் சமூக-பொருளாதார நிலைகளில் இந்துக்கள் பாதிக்கப் படுவது தெரிகிறது.
இதனால், இந்துக்கள் இன்னொருவிதமான பிணைப்பில் அடைக்கப் படுகிறார்களா என்ற எண்ணம் தோன்றுகிறது.
ஆகவே, மேற்குறிப்பிட்ட இந்து கோஷ்டிகள் நிலைமை உணர்ந்து செயல்பட வேண்டும். சித்தாந்தத்தால் அடக்குவோம் என்ற போக்கு ஆபத்தானது.
[1] அவற்றை நானும் பார்த்தேன், ஆனால், எனக்கு வித்தியாசமாகத் தெரியவில்லை. கருணாநிதி மற்றும் கருணாநிதி குடும்பம், ஶ்ரீசத்ய சாயபாபா, ஜக்கி வாசுதேவ், ரவிசங்கர் ………போன்றோருடன் போட்டோக்கள் எடுத்தக் கொண்ட விவரங்களை எனது பிளாக்குகளில் விவரித்துள்ளேன். இவர்கள் எல்லோரும் போலித் தனமானவர்கள், வீட்டில் ஒரு மாதிரி, வெளியில் மேடைகளில் வேறு மாதிரி, என்று இரட்டை வேடம் போட்டவர்கள் தான்.
[2] பேஸ்புக்கில் இவற்றை இன்றும் பார்க்கலாம் என்று நம்புகிறேன். சிலர் சுதாரித்துக் கொண்டு, வார்த்தைகளை மாற்றியுள்ளனர்.
[3] இதை விட மோசமான, ஆபாசமான பதிவுகள் உள்ளன, அவற்றை தவிர்த்துள்ளேன். எல்லாமே காவி-இந்துத்துவ-சங்கம் என்கிறவர்களிடமிருந்துதான் வெளிப்பட்டுள்ளது.
[4] The 1999 Indian general election polls in Tamil Nadu were held for 39 seats in the state. The result was a victory for the National Democratic Alliance (NDA) which won 26 seats. After leaving the NDA, All India Anna Dravida Munnetra Kazhagam, hoped to create some damage, but ended up losing 8 seats, compared to the 1998 Lok Sabha elections.
[5] இதையும் ஒரு உதாரணத்திற்குத் தான் கொடுத்துள்ளேன், நிறைய உள்ளன. ஆனால், அரசியலை வைத்துக் கொண்டு,இவர்களும் இரட்டைவேடம், முரண்பாடு கொண்ட வாத-விவாதங்கள் செய்வது தான் வேடிக்கை.
[6] நியூஸ்.18.தமிழ், திமுகதலைவர்மு.கஸ்டாலினைபுகழ்ந்துதள்ளியபாஜகவின்சி.பிராதாகிருஷ்ணன்!, NEWS18, LAST UPDATED: SEPTEMBER 5, 2019, 10:30 AM IST.
கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி: இவர்கள்விபூதிவைத்தால்என்ன, துடைத்தால்என்ன? அவர்களுக்கு அதெல்லாம் சகஜம் ஆனால், திராவிடத்துவவாதிகளின் வழிகளை இந்துத்துவவாதிகள் பின்பற்றுவது ஏன்? (2)
தந்தைவிபூதிஅழித்தான், தனயன்வைத்துக்கொண்டான்: மயிலாடுதுறை உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கல்லூரி மாணவிகளிடம் உதயநிதி ஸ்டாலின் கலந்துரையாடினார்[1]. அதனைத்தொடர்ந்து கல்லூரி மாணவிகள் உதயநிதி ஸ்டாலினுடன் ஆர்வமுடன் செல்பி எடுத்துக்கொண்டனர். 22-11-2020 அன்று மூன்றாவது நாளாக கும்பகோணத்தில் பிரசாரம் மேற்கொள்ளும் உதயநிதி ஸ்டாலின் கும்பகோணம் பள்ளி தீவிபத்தில் பலியான குழந்தைகளின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகினார். பின்னர் திருபுவனத்தில் நெசவாளர்களின் குறைகளை கேட்டறிந்தார். மேலும் கும்பகோணத்தில் பல்வேறு இடங்களுக்கு சென்று பிரசாரம் மேற்கொண்டார். தேவர் குருபூஜைக்கு சென்ற திமுக தலைவர் ஸ்டாலின் அங்கு அவருக்கு வழங்கப்பட்ட திருநீற்றை நெற்றியில் இருந்து அழித்த விவகாரம் இன்னும் முடிந்தபாடில்லை[2]. ஆனால் ஸ்டாலின் மகனான உதயநிதி தருமபுரம் ஆதீனத்திடம் ஆசி பெற்று திருநீறு பூசியிருக்கிறார்.இது கட்சித் தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது[3], என்று ஊடகங்கள் குறிப்பிட்டாலும், தந்தையும்-தனயனும் திட்டத்துடன் தான் செயல்படுகின்றனர் என்பது நன்றாகவே தெரிகின்றது.
21-11-2020 அன்றே, தருமபுரிஆதீனம்புகைப்படங்களைப்போட்டு, சந்திப்பைபதிவுசெய்தது: முதலில், இச்சந்திப்பு, பல கேள்விகளை எழுப்பின.
இரவு பத்து மணிக்கு மேலே மடத்தில், இப்படி நாத்திகவாதியை வரவழைத்து, ஆசிர்வதித்து, பிரசாதம் கொடுக்கும் படலம் நடக்குமா?
“பெண்டாட்டியை வைத்து சாமி கும்பிடற ஆட்கள்,” அரசியலில் வெற்றி என்றால், தானே வந்து கும்பிடுவதில் எந்த ஆச்சரியமும் இல்லை!
‘தமிழ் கடவுள் சேயோன்’ என்ற ஆன்மிக நூலை சந்நிதானம் வெளியிட, முதல் பிரதியை உதயநிதி பெறுவதில் என்ன வியப்பு, ஞான பழத்தையா கொடுத்தார்?
“இரவு எத்தனை மணி ஆனாலும் தருமபுரம் குருமகா சந்நிதானத்தைச் சந்தித்து ஆசி பெறுவேன்,” என்று உதயநிதி கூறினார் என்றால், என்ன நாடகம் இது?
வேலை வைத்து இந்துதுவவாதிகள் வேலை செய்யும் போது, நாத்திகரும், “தமிழ் கடவுள் சேயோன்’ என்று வினை செய்தால், அம்மை-அப்பனே வரவேண்டும்!
போன்ற கேள்விகள் எழுந்தன. ஆனால், “திமுக இளைஞர்அணிசெயலர் உதயநிதிஸ்டாலின் தருமையாதீன குருமணிகளிடம் ஆசிபெற்றார்,” என்றும், “தாத்தாவும் பேரனும் தருமையாதீனத்தில்,” தலைப்பிட்டு, 21-11-2020 அன்றே, தருமபுரி ஆதீனம் புகைப்படங்களைப் போட்டு, சந்திப்பை பதிவு செய்தது. அதனால், திமுக மற்றும் மடம் இதனை, ரகசியமாக வைத்துக் கொள்ளவில்லை அல்லது சதிப்பு அத்தகையதல்ல, வெளிப்படையானது அல்லது வெளிப்படுத்த வேண்டிடியது என்று தீர்மானத்துடன் இருந்தது தெரிகிறது. ஊடகங்களிலும் அப்புகைப்படங்கள் வெளிவந்துவிட்டன. கருணாநிதி மற்றும் முந்தைய மடாதிபதி இருக்கும் புகைபடத்தை, பிரேம்-அலங்காரத்துடன் நினைவுப் பரிசாக கொடுத்தது, இது ஒரு தீர்மானிக்கப் பட்ட சந்திப்பு என்பதனை உறுதி செய்கிறது. சைவர்களோ, பக்தர்களோ, இவ்வாறு முறைகள் மீறப் படுகின்றன என்று கண்டிக்கவில்லை.
தாத்தாவும் பேரனும் தருமையாதீனத்தில், என்று நினைவு பரிசு அளித்தது !தாத்தா முதல் பேரன் வரை தருமபுர ஆதீன தொடர்புகள்!
இந்தநான்குகேள்விகேளுங்கள்எங்கேஉதயநிதிவந்தாலும். (ஆமஇந்தபெரியாரியவாதிகளைஉதயநிதிதன்வீட்டுநாய்என்றுநினைக்கிறாரா? சுயமரியாதைசுயமரியாதைஎன்றுஉதயநிதிக்குசொம்புதூக்கும்அளவுக்குவந்துவிட்டார்சுபவீ. இதெல்லாம்ஒருவாழ்க்கை!),” என்று பெரிய வீராப்பாக மாரிதாஸ் பதிவு செய்வது தமாஷாக இருக்கிறது. இதில் ஒன்றும் விசயமே இல்லை. 1960களிலிருந்து, நேரிடையாக தமிழக அரசியலை கவனித்து வருபவர்களுக்கு இது ஒரு ஜோக்! “இந்துக்களுக்குமீண்டும்சொல்கிறேன்முருகனுக்குக்காவடிதூக்கினாலும்ஒருபொழுதும்திமுகவைநம்பிவிடவேண்டாம்,” என்று சொல்வது தமாஷ். ஏதோ ஒட்டு மொத்த இந்துக்களுக்கு அறிவுரை சொல்கிறேன் என்ற ஆணவம் தான் உள்ளது. கமலாலயத்தில் 12-11-2020 அன்று கிருத்துவ பாஸ்டர்கள் ஜெபம் செய்த போது, இவரைக் காணோம், இப்பொழுது இதற்கெல்லாம் குதிக்கிறார்[4]. ஆக, இதெல்லாம் தேர்தல் வரை உச்சக்கட்டத்தில் இருக்கும்.
இந்த நடத்தை ஆதரித்து போற்றும் இந்துத்துவவாதிகள்!
“பெண்டாட்டியைவைத்துசாமிகும்பிடறஆட்கள்,” அரசியலில்வெற்றிஎன்றால், தானேவந்துகும்பிடுவதில்எந்தஆச்சரியமும்இல்லை: தினமலர், “தேர்தல்வருகிறது., புறப்படுவோம்கோவிலுக்கும், மடத்திற்கும்,“ என்று செய்தி வெளியிட்டுள்ளது[5]. ஆகவே, “பெண்டாட்டியைவைத்துசாமிகும்பிடறஆட்கள்,” அரசியலில்வெற்றிஎன்றால், தானேவந்துகும்பிடுவதில்எந்தஆச்சரியமும்இல்லை,” என்பது தான் நிதர்சனம். ஶ்ரீ ராமகோபாலன் முன்னரே, “பெண்டாட்டியை வைத்து சாமி கும்பிடற ஆட்கள்,” என்று திராவிட நாத்திக- இந்துவிரோதிகளைக் குறிப்பிட்டுள்ளார். ஆகவே, 2020ல் அதைப் பற்றி கண்டுபிடித்து, பெரிய ஆராய்ச்சி செய்ய வேண்டியதில்லை! இந்துக்கள், குறிப்பாக இந்துத்துவ வாதிகள் மாறுவதை கவனிக்க வேண்டும். அரசியல், அதிகாரம், பணம், பதவி……….என்றால் மாறும், மாறி விடும் போக்கைக் கவனிக்க வேண்டும். கருத்து-பதில் கருத்து என்ற உரையாடலைக் கூட சகித்துக் கொள்ளாமல் இருக்கும், இந்துத்துவ பண்டிதர்கள் இருப்பது திகைப்பாக இருக்கிறது! ஓட்டுவங்கி என்ற ரீதியில், மக்களை ஜாதி, மதம் என்று பார்க்கும் போது, எல்லா கட்சிகளும் ஒன்றாகத்தான் ஆகின்றனர். இந்துக்களுக்கு என்று, உண்மையான இந்துத்துவம் பேசும் சித்தாநந்தவாதிகளே, மாறும் போது, திராவிடத்துவவாதிகளை குறைச் சொல்வது எந்த பிரயோஜனும் இல்லை. “திருவாரூர் தேரை நாங்கள் தான் ஓட வைத்தோம்,” என்றெல்லாம் கூறிக்கொண்டதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.
வேல் யாத்திரையில், பெண்கள் தெருவில் ஆட்டம் போட்டது. இந்த நடத்தை ஆதரித்து போற்றும் இந்துத்துவவாதிகள்!இந்துத்துவப் பண்டிதர் ஆதரித்து பெரிய விளக்கம் கொடுத்தது!
வேல் யாத்திரையில் பெண்களை வைத்து நடனம்: வேல் யாத்திரையின் போது, நடுத்தெருவில், பெண்கள் சினிமா பாணியில் ஆடுவதாக ஒரு வீடியோ சுற்றில் உள்ளது. திராவிடத்துவவாதிகள் பாணியில், இதுக்கள் செல்ல வேண்டிய அவசியல் இல்லை. தெரிந்தும், அதனை ஆதரிக்க வேண்டும், நியாயப் படுத்த வேண்டும் என்று வலுக்கட்டாயமாக இந்துத்துவவாதிகள் ஆதரித்து வருகின்றனர். இந்துத்துவம் ஏன் இப்படி நீர்க்கப் படுகிறது, என்ற கோணத்தில் கவலைப் படவில்லை. மாறாக, ஸ்டான்லி ராஜன் (Stanely Rajan) என்ற இந்துத்தவ வாதி, வலதுசாரி பண்டிதர் ஒரு பெரிய விளக்கம் கொடுத்துள்ளது திகைப்பாக இருக்கிறது. அவர் “தேவதாசி” என்றெல்லாம் விளக்கம் கொடுத்துள்ளார். முன்பு, சொர்ணமால்யா “தேவதாசி” சிஸ்டத்தை ஏதோ ஒரு கூட்டத்தில் (பரத நாட்டியம் வாழவேண்டும், வார வேண்டும் என்ற ரீதியில்) ஆதரித்த போது, என்ன நடந்தது என்பதை ஞாபகத்தில் கொள்ளவில்லை. அரசியல் என்ற போதை-மயக்கத்தில் இருப்பதால், மற்றவையெல்லாம் இவர்கள் கண்களுக்கு, மனங்களுக்கு தெரியாமல் போகிறது என்று தெரிகிறது. மனசாட்சி இல்லாமல் வாத-விவாதங்களை செய்து கொண்டிருக்கிறார்கள். இந்துவிரோதிகளை வெல்ல, அவர்களது வழிகளையே நாங்கள் பின்பற்றுவோம் என்பது போல இந்துத்துவாதிகள் நடந்து கொள்வது சரியில்லை.
[2] தமிழ்.ஏசியன்.நெட்.நியூஸ், அப்பாநாத்தீகவாதியாம்.! மகன்ஆன்மீகவாதியாம். திமுககொள்கையைகிழித்துதொங்கவிடும்நெட்டிசன்கள்..!, By T Balamurukan,Mayiladuthurai, First Published 23, Nov 2020, 7:43 AM
[4] பதில் சொல்ல முடியாமல் தடுத்துள்ளார். கருத்து-பதில் கருத்து என்ற உரையாடலைக் கூட சகித்துக் கொள்ளாமல் இருக்கும், இந்துத்துவ பண்டிதர்கள் இருப்பது திகைப்பாக இருக்கிறது!
கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி: இவர்கள் விபூதி வைத்தால் என்ன, துடைத்தால் என்ன? இந்துவிரோதிகள் பற்றி கரிசனம் ஏன்? (1)
திருக்குவலையில் ஒரு வேடம், திருச்சியில், இன்னொரு வேடம்!
மென்மைஇந்துத்துவம் (Soft Hindutwa) பின்பற்றும்யுக்தியா?: “தேர்தல்சுற்றுப்பயணத்தின்போதுதருமபுரஆதீனத்திடம்உதயநிதிஸ்டாலின்ஆசிபெற்றார். அவருக்குவிபூதிபூசிஆதீனம்ஆசிவழங்கினார்,” என்று செய்தி வெளிவருதில் வியப்பில்லை. ஏனெனில், துலுக்கர் கூட அவ்வாறு தேர்தல் சமயங்களில், கோவில்களைச் சுற்றி வருவது வந்தது தமிழகத்திலேயே உண்டு, கோவில்களுக்குள் செல்வதும் உண்டு, விபூதி-குங்குமம்-சந்தனம் வைத்துக் கொள்வது, ஆசிபெறுவது போன்றவை சாதாரணமான விசயங்கள் தான். ஆக மடங்களுக்குச் செல்வது என்பனவெல்லாம், பெரிய விசயமே இல்லை. கிருத்துவர்கள் பற்றி கேட்கவே வேண்டாம், இம்மாதிரியான விசயங்களில் வேடங்கள் போட்டு ஏமாற்றுவதில் வல்லவர்கள். பிஜேபி தலைவர்கள் கிருத்துவர்களிடம் ஆசி பெறுவது, ஜெபிப்பது போன்றவை நடந்துள்ளன, புகைப்படங்களும் வெளி வதுள்ளன. ஆனானப் பட்ட, ராகுல் காந்தியே, கடந்த தேர்தலுக்கு எல்லா விதமான வேடங்கள் போட்டு, இந்துக்களின் ஓட்டைப் பெற முயன்றது தெரித விசயம். ஆகவே, நாகை மாவட்டம், திருக்குவளையில் தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் “விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்” என்ற தலைப்பில் 2021 சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தை தொடங்கி நடத்தி வருகிறார்.
இரவு பத்து மணிக்கு சந்தித்தல்
திமுகஇந்துக்களைத்தக்கவைக்கப்போடும்வேடமா?: கருணாநிதி பெரிய அரசியல் நடிகர் என்பதால், எல்லோரையும் தூக்கி சாப்பட்டார். சாமியார்களை தூஷித்து, அவர்களிடமே ஆசிகள் வாங்கிக் கொண்டார். ஸ்டானில் பற்றி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. முன்னரெல்லாம், 1980களில் துர்காவுடன், ஆலையம்மன் கோவிலில் கஞ்சி ஊற்றும் விழாவுக்குத் தவறாமல், வந்து போவார். சுவரொட்டிகள் எல்லாம், பிரமாதமாக ஒட்டுவார்கள். அவருடைய ஆயிரம் விளக்கு தொகுதியில் வரும் கோவில் என்று குறிப்பிடத் தக்கது. ஆக இப்பொழுது, உதயநிதி அவ்வாறான வேடத்தைப் போடுவதில் எந்த ஆச்சரியும் இல்லை. உதயநிதி ஸ்டாலின், தன்னுடைய பேஸ்புக்கில், இவ்வாறு பதிவு செய்திருக்கிறார், “மயிலாடுதுறையில்உள்ளதருமபுரம்ஆதீனத்தின் 27-ஆவதுகுருமகாசந்நிதானம்ஸ்ரீலஸ்ரீமாசிலாமணிதேசிகஞானசம்பந்தபரமாசாரியார்சுவாமிகளைஆதீனத்தில்நேற்றுசந்தித்துவாழ்த்துபெற்றேன். பிரச்சாரபயணம்வெல்லவாழ்த்தியஆதீனம்அவர்களுக்குநன்றி“. விபூதி வைத்த புகைப் படங்களையும் போட்டிருகிறார். ஆக, ஒரு வேளை மென்மையான இந்துத்துவத்தைப் பின்பற்றினால், என்னாகும்? திமுக இந்துக்கள் அப்படியே தான் இருப்பார்கள்.
19-11-2020 அன்று கோவில் பூரண கும்பத்தை மறுத்தது: பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, தி.மு.க., இளைஞர் அணி செயலர் உதயநிதி, 19-11-2020 அன்று திருச்சி வந்தார். அவருக்கு, கரியமாணிக்கம் கைலாசநாதர் கோவில் சார்பில், பூரண கும்ப மரியாதை வழங்க, கட்சி நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர்[1]. இதன்படி, உதயநிதி வந்த போது, கோவில் சிவாச்சாரியார்கள் பூரண கும்பம் மற்றும் பரிவட்டத்துடன் காத்திருந்தனர்[2]. ஆனால், உதயநிதி பரிவட்டம் கட்ட மறுப்பு தெரிவித்ததோடு, சிவாச்சாரியார்கள், தன் நெற்றியில் திருநீறு மற்றும் குங்குமம் வைக்கவும் அனுமதிக்கவில்லை. இந்த சம்பவம், நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த தி.மு.க.,வினர் மட்டுமின்றி, பொதுமக்கள் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதெல்லாம், அப்பனைப் போன்ற நாடகம் எனலாம். வெளிப்படையாக, ஒப்புக் கொண்டால் பிரச்சினை வரும் என்று மறுத்தது தெஇந்து கொள்ளலாம். அதே நேரத்தில், இரவில், மடத்திற்குள் நடந்த நாடகம் பிறக்ய் வெளியே வந்தது. வெளியே வந்து விட்டதால், இரண்டு தரப்பிலும் புகைப்படங்கள் இணைதளங்களில் போட்டுக் கொண்டன.
20-11-2020 அன்றுதொடர்ந்து, பிரச்சாரம்செய்வது: 21-11-2020 அன்று இரண்டாவது நாளாக நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்[3]. அப்போது அனுமதியின்றி கொரோனா பரவும் விதமாக கூட்டத்தை கூட்டியதாக உதயநிதி ஸ்டாலினை போலீசார் கைது செய்தனர்[4]. பின்னர் கைது செய்யப்பட்ட உதயநிதி ஸ்டாலின் மற்றும் தி.மு.க.வினரை போலீசார் இரவு 8 மணிக்கு விடுவித்தனர்[5]. விடுதலை செய்யப்படுவதற்கு முன்பாக உதயநிதி ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது[6]: “நேற்றுபிரசாரம்தொடங்கியவுடனேயேஎங்களைபோலீசார்கைதுசெய்தனர். அதுபோலவேஇன்றும்கைதுசெய்துள்ளனர். எங்களைப்பார்க்கவேண்டும், பேச்சைக்கேட்கவேண்டும்எனமக்கள்ஆவலுடன்எதிர்பார்த்துஇருக்கின்றனர். இதைப்பார்த்துசகிக்கமுடியாதஅ.தி.மு.க. அரசுபிரசாரத்திற்குஇடையூறுசெய்துவருகிறது. கைதுநடவடிக்கைகள்எடுத்தாலும்பிரசாரம்தொடரும். தொடர்ந்துஇடையூறுசெய்தால்தி.மு.க. கண்டிப்பாகநீதிமன்றத்துக்குசெல்லும். சட்டசபைதேர்தலில்அ.தி.மு.க., பா.ஜ.க.வுடன்கூட்டணிவைப்பதாகஅறிவித்துள்ளது. இதுதேர்தலில்வெற்றிபெறஎங்களுக்குசுலபமாகஇருக்கும். அ.தி.மு.க. அரசின்ஊழல்பட்டியல்பா.ஜ.க. கையில்இருக்கிறது. அதற்குபயந்துதான்அ.தி.மு.க., பா.ஜ.க.வுடன்கூட்டணிவைத்துள்ளது,” என்றார். தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் சிக்கல், நாகூர், பால்பண்ணைச்சேரி, பனங்குடி ஆகிய பகுதிகளில் பிரசாரம் செய்தார். இரவு தனது தாயார் ஊரான சீர்காழியை அடுத்த திருவெண்காட்டில் தங்கினார்.
இரவு 10 மணிக்குஆதீனம்தரிசனம்கொடுப்பாரா?: தனியார் திருமண மண்டபத்தில் சிறை வைக்கப்பட்ட உதயநிதி ஸ்டாலின் இரவு 8 மணிக்கு விடுதலை செய்யப்பட்டார்[7]. “இரவுஎத்தனைமணிஆனாலும்தருமபுரம்குருமகாசந்நிதானத்தைச்சந்தித்துஆசிபெறுவேன்,” என்று கூறினார்[8]. அதன்படியே இரவு 10 மணிக்கு தருமபுரம் ஆதின மடத்திற்கு வந்து சேர்ந்தார். அவருடன் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், அன்பில் பொய்யாமொழி ஆகியோர் வந்தனர். அவர்களுக்கு மடத்தின் நிர்வாகிகள் வாசலில் வரவேற்பளித்து அழைத்துச் சென்றார்கள். தொடர்ந்து மயிலாடுதுறைக்கு சென்ற அவர் அங்கு தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்மந்த பராமாச்சாரிய சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்றார். அவருக்கு விபூதி பூசி ஆதீனம் ஆசி வழங்கினார். அவருக்கு திருக்கடையூர் அபிராமி, வைத்தீஸ்வரன் கோயில் செல்வமுத்துக்குமாரசாமி, திருபுவனம் சரபேஸ்வரர், மயிலாடுதுறை குரு தட்சிணாமூர்த்தி, தருமபுரம் துர்க்கை ஆகிய ஐந்து ஆலய பிரசாதங்கள் வழங்கப்பட்டன.1972 -ல் தருமபுரம் கலைக் கல்லூரியின் வெள்ளி விழா நிகழ்ச்சியில் கருணாநிதி கலந்து கொண்ட படத்தையும், திருக்குறள் புத்தகத்தையும் நினைவுப் பரிசாக குருமகாசந்நிதானம் வழங்கினார்[9]. “ஆதீன கர்த்தர் கொடுத்த திருநீறும் அணிந்து பயபக்தியுடன் வழிபட்டார்,” என்கிறது தமிழ்.இந்து[10].
‘தமிழ்கடவுள்சேயோன்‘ என்றஆன்மிகநூல்வெளியிடும்மர்மம்என்ன?: பின்னர் திருக்கயிலாய பரம்பரை தருமபுர ஆதீன 26-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிய ஞானசம்மந்த பராமாச்சாரிய சுவாமிகளின் முதலாம் ஆண்டு குருபூஜையை முன்னிட்டு மயிலாடுதுறை ஆன்மீக பேரவை சார்பில் தமிழ்க்கடவுள் சேயோன் என்ற ஆன்மீக நூலை உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார் என்கிறது மாலைமலர். அதன்பின் திருக்கயிலாய பரம்பரை தருமபுர ஆதீன 26 -வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளின் முதலாமாண்டு குருபூஜையை முன்னிட்டு மயிலாடுதுறை ஆன்மிக பேரவை சார்பில் அதன் 50 – வது வெளியீடான ‘தமிழ் கடவுள் சேயோன்’ என்ற ஆன்மிக நூலை குருமகாசந்நிதானம் வெளியிட, முதல் பிரதியை தி.மு.க. மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பெற்றுக்கொண்டார், என்கிறது விகடன். ‘தமிழ்க் கடவுள் சேயோன்’ (முருகன் பாமாலை) என்கிறது தமிழ்.இந்து[11]. உதயநிதி வெளியிட்டாரா, குருமகாசந்நிதானம் வெளியிட்டாரா என்ற குழப்பத்தை ஒதுக்கி விட்டு, இதெல்லாம், முன்னரே ஏற்பாடு செய்யப் பட்ட நிகழ்ச்சி என்றே தெரிகிறது. ஏனெனில், பரிசு கொடுப்பதும் புத்தகம் வெளியிடுவதும், வாங்குவதும் எல்லாம் திடீரென்று செய்ய முடியாது.
கருணாநிதிசிலைதிறப்பு – சிலைவைத்தல், எடுத்தல், கடத்தல், உடைத்தல்எல்லாமேதிராவிடகலாச்சாரம், பண்பாடு, நாகரிகம்தான்! [1]
பிள்ளையார் சிலையை உடைத்தவன், அப்பனுக்கு சிலை வைக்கத் துடித்த கதை சொல்லும் பிள்ளை: தமிழகத்தில் சிலை-அரசியல் என்பது திக-திமுக கட்சிகளோடு பின்னிப் பிணைந்து, பிறகு அதிமுகவையும் ஆட்டிப் படைக்கிறது. அம்பேத்கர் சிலை அரசியல் என்பது பிறகு வந்தது. அது தேவர் சிலை அரசியலோடு சேர்ந்து கொண்டு, கலவரங்களில் முடியும் நிலை ஏற்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.மோஹன் கமிட்டியின் படி, சிலைகள் அவமதிக்கப் படுவதால் தான், தமிழகத்தில் கலவரங்கள் நடக்கின்றன என்று 1998லேயே எடுத்துக் காட்டினார்[1]. தேவர் ஜாதியினர் சிலைகள் 227, மஹாத்மா காந்தி 81 மற்றும் அம்பேத்கர் 66 இருப்பதாக இன்னொரு அறிக்கைக் குறிப்பிடுகிறது[2]. இதனால், புதிய சிலைகள் வைக்கக் கூடாது என்ற கருத்தும் உருவாகி வருகிறது. இங்கும் சிலையுடைப்பு அரசியலை ஆரம்பித்து வைத்தது ஈவேரா தான். உச்சநீதி மன்றம் அவரைக் கண்டித்துள்ளது, ஆனால், அவர் தான் கருணாநிதிக்கு சிலை வைப்பேன் என்று பிடிவாதம் பிடித்ததை இப்பொழுது அறிகிறோம்!
1968ல்இரண்டாவதுஉலகத்தமிழ்மாநாடுநடந்த்த்தும், சிலைகள்வைத்ததும்: 1968ல் இரண்டாவது உலகத் தமிழ் மாநாடு நடந்த போதே, யாருக்கெல்லாம் சிலை வைப்பது, எடுப்பது என்பது பற்றியெல்லாம், ஏகப்பட்ட குழப்பம்,, பிரச்சினை, எதிர்ப்பு, ஆதரவு எல்லாமே நடந்தேறியது. முதலில் பெஸ்கி, போப் சிலைகள் வைக்க திட்டம் இல்லை. அப்பொழுது, யாரோ ஒருவர் லெஸ்லி நியூபிகின் என்ற சி.எஸ்.ஐ பிஷப்பிற்கு போன் செய்து, அவர்கள் சிலைகள் சேர்க்கப் பட வேண்டும் என்று அறிவித்தானாம். உடனே, புரொடெஸ்டென்ட் நியூபிகின், கத்தோலிக்க ஆர். அருளப்பாவுடன் ஆலோசனை செய்து, சிலைகள் வைக்க திட்டம் போட்டனர். லெஸ்லி அண்ணாவின் மிக நெருங்கிய நண்பர், சிறுவயதில் காஞ்சிபுரத்திலிருந்தே பழக்கம் உண்டு. அவர் சொல்லை அண்ணா தட்டவே மாட்டார் என்ற அளவுக்கு நெருக்கம் என்று நியூபிகின் முன்வாந்தார். இதற்குள் செய்தி அரசுக்குச் சென்றவுடன், செல்யூலரிஸ முறைப்படி, உமறுப் புலவருக்கு சிலை வைக்கலாம், என்று மனவை முஸ்தபா[3] [1935-2017] சொன்னார். ஆனால், இஸ்லாமிய அடிப்படைவாதிகள் எதிர்ப்புத் தெரிவித்ததால், கைவிடப் பட்டது. மபொசி இளங்கோ அடிகள் சிலை வைக்க வேண்டும் என்றதை, கருணாநிதி விரும்பவில்லை. ஆக, தீர்மானிக்கப் பட்ட சிலைகள் இவ்வாறு வைக்கப் பட்டன.
எண்
திறந்துவைக்கப்பட்டதேதி
சிலை
விழாத்தலைவர்
திறந்துவைத்தவர்
1
02-01-1968
திருவள்ளுவர்
இஆ. நெடுஞ்செழியன்
கி.ஆ.பெ. விசுவநாதன்
2
02-01-1968
அவ்வையார்
சத்தியவாணி முத்து
எஸ்.எஸ். வாசன்
3
02-01-1968
கம்பர்
ஏ. கோவிந்தசாமி
மீ. பக்தவட்சலம்
4
02-01-1968
கண்ணகி
5
02-01-1968
சுப்பிரமணிய பாரதி
மாதவன்
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார்
6
02-01-1968
வீர்மாமுனிவர்
சாதிக் பாஷா
அருளப்பா
7
02-01-1968
கி.யூ.போப்
சி.பா. ஆதித்தனார்
பிஷப் லெஸ்லி நியூபிகின்
8
02-01-1968
பாரதிதாசன்
மா.முத்துசாமி
மு. வரராசனார்
9
02-01-1968
வி.ஓ.சிதம்பரம்
10
07-11-1971
இளங்கோ அடிகள்
இரா. நெடுஞ்செழியன்
ம.பொ.சிவஞானம்
கண்ணகி சிலை உலகத் தமிழ் மாநாட்டின் போது வைக்கப் பட்டது. ஆனால் அது டிசம்பர் 10, 2001 அன்று, மெரினா கடற்கரையை நவீனப் படுத்தும் சாக்கில் இடிக்கப் பட்டது. போதாகுறைக்கு, அச்சிலையால் தான் சென்னை பஞ்சத்தால் நீரின்றி தவிக்கிறது என்றும் சொல்லப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்தபோது, கருணாநிதி, ஜூன்.3, 2006ல் அதே இடத்தில் கண்ணகி சிலை வைத்தார். இப்படி சிலை சண்டை.
கருணாநிதிக்கு 1975ல்வைத்தசிலை 1987ல்இடிக்கப்பட்டது: 1975ல் கருணாநிதியின் சிலை மசூதிக்கு முன்பாக, அவர் ஆட்சியில் இருக்கும் போதே, ஜெனரல் பாட்டர்ஸன் – மவுண்ட் ரோடு சந்திப்பில் வைக்கப் பட்டது. அப்பொழுதே “உயிரோடு இருப்பவர்களுக்கு சிலை வைப்பதா, விக்கிரங்களை / சிலைகளை எதிர்ப்பவர், தனக்குத் தானே சிலை வைத்துக் கொள்வதா, இதனால், தீமை ஏற்படும்……….,” போன்ற பலதரப்பட்ட விமர்சனங்கள் வைக்கப் பட்டன. ஆத்திகரான, கடவுளை நம்பிய குன்றக்குடி அடிகள், நாத்திகரான-இந்துவிரோதியான, கருணாநிதியின் சிலையை திறந்து வைத்தார்! இருப்பினும், கருணாநிதிக்கு விருப்பம் இருந்ததால், நிறைவேற்றப்பட்டது. எந்த சாத்திரம் என்னவாகிற்றோ, எம்ஜிஆர் 1987ல் இறந்த போது, கருணாநிதி உயிரோடிருந்த நிலையில் சிலை உடைக்கப் பட்டது. ஒரு இளைஞன் கடப்பாரையினால், சிலையை உடைக்கும் காட்சியின் புகைப்படங்கள், நாளிதழ்களில் வெளிவந்தன. அது கண்டு போபப்பட்ட கருணாநிதி, “அது மற்றவகளுக்கு இறுதி சிரிப்பாக இருக்கலாம், ஆனால், என் தம்பி என் நெஞ்சில் குத்தி விட்டான்”, என்று இளைஞன் உடைத்த படத்தின் கீழே எழுதினார்.
உயிருடன்இருந்தபோதுவைக்கப்பட்டசிலைகள்: தமிழக அரசியல் வரலாற்றில் உயிருடன் இருக்கும்போதே சிலை அமைக்கப்பட்ட தலைவர்கள் இரண்டுபேர் ஒன்று காமராஜர் மற்றொன்று கருணாநிதி. சிலை அமைக்கப்பட்டு மீண்டும் புதிய சிலை அமைக்கப்பட்ட தலைவர்கள் இரண்டுபேர். ஒன்று கருணாநிதி மற்றொன்று ஜெயலலிதா. இது சம்மீபத்தில் ஏற்பட்ட கோளாறுகள். கருணாநிதிக்கு முதன் முதலில் சிலை வைக்கவேண்டும் என்று அறிக்கை விட்டவர் பெரியார். அண்ணா உயிருடன் இருக்கும்போதே 1968-ம் ஆண்டே பெரியார் இந்த வேண்டுகோளை வைத்தார். 1968 இலும்,1971 ஆகஸ்டு 14 இலும் இருமுறை அறிவித்தார் பெரியார்! அதற்கு முன் உயிருடன் இருந்தவர்களில் அப்போதைய காங்கிரஸ் தலைவர் காமராஜருக்கு மட்டுமே ஜிம்கானா கிளப் அருகே சிலை திறக்கப்பட்டிருந்தது. அதை நேரு திறந்து வைத்தார்.
ஈவேராகருணாநிதிக்குசிலைவைக்கவிரும்பியது (1971): அண்ணா மறைவுக்குப் பின்னர் முதல்வர் பதவியேற்றார், பின்னர் 1971-ம் ஆண்டு சட்டமன்றத்தை கலைத்துவிட்டு நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்ந்து தேர்தலை திமுக சந்தித்தது. மிகப்பெரிய வெற்றியை திமுக இந்த தேர்தலில் பெற்றது. ஆகஸ்டு 14, 1971 அன்று பெரியார் திடலில் நடைபெற்ற பாராட்டுக் கூட்டத்தில், பெரியார் ஏற்கெனவே தான் வைத்த கோரிக்கையை மீண்டும் அப்போதைய முதல்வர் கருணாநிதியை அருகில் வைத்துக்கொண்டே வைத்தார். செயற்கரிய சாதனை செய்தவர் என்பதால் சென்னை தலைநகரில் கருணாநிதிக்குச் சிலை வைக்கவேண்டும் என்று தம் விருப்பத்தை பெரியார் தெரிவித்தார். அதை மேடையில் இருந்த குன்றக்குடி அடிகளார் போன்றவர்கள் ஆமோதித்தனர். அதே மேடையில் கருணாநிதி சிலை அமைப்புக் குழுவையும் பெரியார் அறிவித்தார். அப்போது கூட்டத்தில் பேசிய கருணாநிதி திமுக சார்பில் பெரியாருக்கு ஒரு சிலை திறக்கிறோம், அதன் பின்னர் எனக்கு சிலை திறக்கலாம் என்று அதைத் தட்டிக்கழித்தார்.
வேதபிரகாஷ்
16-12-2018.
[1] In October 1998 the Times of India (ToI) reported that a high-level committee headed by retired Supreme Court judge S.Mohan to investigate caste conflict in southern Tamil Nadu had made special note of statues: “Justice Mohan observed that most of the clashes that took place in the region were because of desecration of statues and both the government and private bodies were advised to desist from installing new statues.”
Times of India, View: Statue politics & shifting sands of time, By Vikram Doctor, ET Bureau|Updated: Mar 10, 2018, 10.57 AM IST
[2] Another ToI report on the committee showed the scale of the problem: “statistics in the report reveal that there are over 708 statues of various leaders in nine southern districts of Tamil Nadu alone.” Of these 227 were of dominant Thevar community leaders, 81 were of Mahatma Gandhi and 66 were of Dr.Ambedkar. Riots often sprang from mere rumours about disrespect to statues and sometimes communities disfigured their own leaders’ statues “as an excuse for attacking the other.”
[3] தென்மொழிகள் புத்தக டிரஸ்ட் நிர்வாக இயக்குநராக 40 ஆண்டுகள், ‘புத்தக நண்பன்’ (புக் பிரண்ட் – மாத இதழ்) ஆசிரியராக 4 ஆண்டுகள், யுனெஸ்கோ கூரியர் – பன்னாட்டு மாத இதழ் – ஆசிரியராக 35 ஆண்டுகள், என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா தலைமை பொறுப்பாசிரியர் – தமிழ் பதிப்பு, முதலமைச்சர் தலைமையில் அமைக்கப்பட்ட ‘சுதந்திர பொன்விழா குழு” முன்னாள் உறுப்பினராகவும், முதலமைச்சர் தலைமையிலான தமிழ்நாடு அரசு உயர்கல்வி – தமிழ் ஆக்கப்பணிக்குழு முன்னாள் உறுப்பினராகவும், அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்க முன்னாள் இணைச் செயலாளராகவும், உலகத் தமிழ் மாநாடுகளை நடத்தி வரும் சர்வதேசத் தமிழ் ஆராய்ச்சி பேரவையின் இந்தியக் குழுவின் முன்னாள் இணைச் செயலாளராகவும், ‘பாரதிய ஞானபீடப் பரிசு தேர்வுக்குழு’ உறுப்பினராகவும், 1968, 1982, 1987, 1995 ஆண்டுகளில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாடுகளில் 7 ஆய்வுக் கட்டுரைகள் படித்துள்ளார்.
10 ஆண்டுகளுக்குமுன்பு (2008) பெரியாரைசெருப்பால்அடிப்பேன்என்றுக்கூறியதைபொறுத்துரௌத்திரம்பழகாததன்விளைவைதான்தற்போதுஅனுபவிப்பது (2018): ஆரூர் புதியவனின் “சொற்களால் ஒரு சுதந்திரப் போர்” நூல் வெளியீட்டு விழா சென்னை கவிக்கோ அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பங்கேற்ற கனிமொழி எம்.பி நூலை வெளியிட்டதுடன், சிறப்புரை நிகழ்த்தினார். ஜி.எஸ்.டி., முத்தலாக் என எல்லா திசைகளிலும் மக்களை ஒடுக்கும், அச்சுறுத்தும் நிகழ்வுகள் நடைபெறுவதாக குறிப்பிட்ட கனிமொழி, இவைகள் குறித்து பேசாததன் விளைவாக நமது மௌனமே நம்மை அழித்துவிடும் என்ற நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தமிழன் ரௌத்திரம் பழகுவதை நிறுத்திக் கொண்டதால் தான் இந்த நிலையில் தமிழன் உள்ளதாகக் கூறிய கனிமொழி, 10 ஆண்டுகளுக்கு முன்பு ஒருவர் பெரியாரை செருப்பால் அடிப்பேன் என்றுக் கூறியதை நாம் பொறுத்துக் கொண்டு ரௌத்திரம் பழகாததன் விளைவை தான் தற்போது அனுபவித்து வருவதாக அதே நூல் வெளியீட்டு விழாவில் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டதை நினைவுக்கூர்ந்து அது சரியான கருத்து என்றார். சுயமரியாதையை இழந்துவிட்டு ஏதுமில்லை என்றுக் கூறிய கனிமொழி, நம் வாழ்க்கையில் வெள்ளை என்ற ஒளி உருவாக வேண்டும் எனில் நாம் கருப்பில் இருந்துதான் ஆரம்பிக்க வேண்டும் என்றும், பெரியார் என்ற கருப்புச்சட்டை இல்லாமல் விடியல் இல்லை என்று குறிப்பிட்டார்.
ஆண்டாள்எந்தசாதியில்பிறந்திருந்தால்என்ன?: ஜாதி என்ற சொல்லையே அழிக்க வேண்டும், ஜாதியே இல்லாத நிலையை உருவாக்குவதே திராவிட அரசியலின் அடிநாதம் என்றுக் கூறிய கனிமொழி, ஜாதியைக் கொண்டு ஒருவன் ஒருவரை ஒடுக்கினால் அதையே ஆயுதமாக தூக்க வேண்டியது அவசியமாகிறது என்றும் குறிப்பிட்டார். நாம் தூக்க வேண்டிய ஆயுதம் எதுவென தீர்மானிப்பது எதிரியே என்றும் கனிமொழி தெரிவித்தார். ஜாதி இல்லை என்று எல்லோரும் சொல்கிறோம், எந்த ஜாதியில் பிறந்தவரும் என்னை வந்து சேரலாம் என்று கண்ணபிரான் கூறுவதாக கீதை சொல்கிறது எனில், ஆண்டாள் எந்த சாதியில் பிறந்திருந்தால் என்ன? ஆண்டாள் பிறப்பால் தலித்தாக இருந்திருக்கலாம், எந்த சாதியாகவும் இருந்திருக்கலாம் எதுவாய் இருந்தால் என்ன? அதில் என்ன பிரச்சனை எனவும் கனிமொழி குறிப்பிட்டார். இப்படிப்பட்ட விவாதங்களை நிகழ்த்தவில்லை எனில், பயந்திருப்போம் எனில், நிச்சயமாக தமிழினம் சுயமரியாதை அற்ற இனமாக, அடையாளம் அற்ற இனமாக, எதையெல்லாம் போராடி சாதித்தோமோ அதையெல்லாம் இழந்துவிடும் இனமாக மாறிவிடும் சூழல் நிலவுவதாக கனிமொழி தெரிவித்தார்.
கடவுளைஎதிர்த்துபேசிப்பேசிதான்கருணாநிதிக்குபேசமுடியாமல்போய்விட்டதாகசிலர்பேசுவதாகவேதனைதெரிவித்தகனிமொழி: கடவுளை எதிர்த்து பேசிப்பேசி தான் கருணாநிதிக்கு பேசமுடியாமல் போய் விட்டதாக சிலர் பேசுவதாக வேதனை தெரிவித்த கனிமொழி, உடல்நலம் சரியில்லாதபோது உதவியாளர் வைத்துவிடும் விபூதியைக் கூட அழித்துவிடுபவர் கருணாநிதி என்று தெரிவித்தார். தனது தாயார் கோவிலுக்குச் செல்வது குறித்து சிலர் கேட்பதாகவும், தனது தாயார் கோவிலுக்கு செல்வதற்கான உரிமைக்காகவும் தான் போராடுவதாக தெரிவித்தார்[1]. நிகழ்வின் போது தனது வீட்டில் நடைபெற்ற சம்பவம் ஒன்றைக் குறிப்பிட்டு கனிமொழி பேசினார். “இப்போதும் இருவரும் (கருணாநிதி, கனிமொழி) கடவுளை மறுப்பது ஏன்?” என தனது தாயார் கேட்டதாகவும், “தலைவர் (கருணாநிதி) தற்போது (கடவுள் விடயத்தில்) தனது கருத்தை சிறிது மாற்றியிருப்பார்” என்று தாயார் குறிப்பிட்டதாகவும், இது தொடர்பாக கருணாநிதியிடம் “கடவுள் இருக்கிறாரா?” என கேட்டபோது, வாய் பேசமுடியாத நிலையில், “இல்லை” என கருணாநிதி தலையசைத்ததாகவும் கனிமொழி குறிப்பிட்டார்[2]. தனது வீட்டில் நிகழ்ந்த சம்பவத்தை நினைவுக்கூர்ந்த கனிமொழி, கருணாநிதியின் மவுனம் கூட நாத்திகம் பேசும் என்று குறிப்பிட்டார்[3]. மேலும், எதை வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள், திமுக நாத்திகம் பேசுவதை நிறுத்தாது என்றும் அவர் உறுதிப்பட தெரிவித்தார்[4].
15-01-2018 கனிமொழிபேச்சு: ஆரூர் புதியவனின்[5] புத்தக வெளியீட்டின் போது, இவ்வாறு கனிமொழி பேசியது பல உண்மைகளை எடுத்துக் காட்டுகிறது. ராம கோபாலன், “இவர்கள் எல்லோருமே, தங்களது பெண்டாட்டிகளை வைத்து சாமி கும்பிடுகின்ற கூட்டம்”, என்று பேசியதுண்டு. அதை கனிமொழி இப்பொழுது ஒப்புக் கொண்டுள்ளார் என்றாகிறது. அம்மாவின் “சாமி கும்பிடுகின்ற உரிமைக்கு”. இவர் என்ன போராடுவது? அப்பொழுது அவ்வுரிமையை யார் பறித்தது என்ற கேள்வி எழுகின்றது. நாத்திக துணைவன் அவ்வாறு தடுத்துக் கொண்டிருந்தால், அது அவனது ஆணாதிக்கத்தைத் தான் எடுத்துக் காட்டுகிறது. 93 வயதாகியும் துணைவியை ஆட்டிப் படைக்கிறார் என்றால், அதை மகள் எடுத்துக் கஆட்டவேண்டும். மாறாக அவரது உரிமைக்குப் போராடுகிறேன் என்றால், தந்தையை எதிர்த்தாப் போராடப் போகிறார்?
“கடவுளைஎதிர்த்துபேசிப்பேசிதான்கருணாநிதிக்குபேசமுடியாமல்போய்விட்டது”: “கடவுளை எதிர்த்து பேசிப்பேசி தான் கருணாநிதிக்கு பேசமுடியாமல் போய் விட்டதாக சிலர் பேசுவதாக வேதனை தெரிவித்த கனிமொழி, உடல்நலம் சரியில்லாதபோது உதவியாளர் வைத்துவிடும் விபூதியைக் கூட அழித்துவிடுபவர் கருணாநிதி”, என்ற போதும் அவரது மனம், மனசாட்சி உறுத்துவதை அறியலாம். உதவியாளர் விபூதியை வைப்பதற்கு கருணாநிதி ஏன் அனுமதிக்க வேண்டும், பிறகு ஏன் அழிக்க வேண்டும்? அப்படியென்றால், வைத்தால் ஏதோ பலன் கிடைக்கும் அன்ற ஆசை, நப்பாசை உள்ளுக்குள் இருக்கிறது என்றாகிறது. முதல் நாத்திகப் பழமான, கனிக்கு அத்தகைய நம்பிக்கையே இருக்கக் கூடாது ஆயிற்றே? யாரோ சொன்னார்கள் என்றால் பலித்து விடுமா என்ன? அதென்ன சாபமா, செய்வினையா, திருஷ்டியா, ….அதையெல்லாம் நம்ப வேண்டிய அவசியமே இல்லையே? பிறகு, அப்படி நம்பி வருத்தப் படுவது எடைக் காட்டுகிறது? வைத்த விபூதியையேத் துடைத்துப் போடும் அளவிற்கு நாத்திகம்-பகுத்தறிவு ஊறியிருக்கும் போது, இதெல்லாம் ஒரு விசயமா என்ன?
கருணாநிதியின்மவுனம்கூடநாத்திகம்பேசும்: “கடவுள் விடயத்தில் தனது கருத்தை சிறிது மாற்றியிருப்பார்” என்று தாயார் குறிப்பிட்டதாகவும், இது தொடர்பாக கருணாநிதியிடம் “கடவுள் இருக்கிறாரா?” என கேட்டபோது, வாய் பேசமுடியாத நிலையில், “இல்லை” என கருணாநிதி தலையசைத்ததாகவும் கனிமொழி குறிப்பிட்டார்[6]. தனது வீட்டில் நிகழ்ந்த சம்பவத்தை நினைவுக்கூர்ந்த கனிமொழி, கருணாநிதியின் மவுனம் கூட நாத்திகம் பேசும் என்று கனிமொழி குறிப்பிட்டார்[7]. அதாவது ராஜாத்தி அம்மாள் கோவில்-கோவிலாக சென்று, கும்பிட்டு, அர்ச்சனை செய்து, பிரசாதம் வாங்கி வருவார், புருடன் சாப்பிடுவான் என்று, ஆனால் சாப்பிட்டப் பட்டதா-இல்லையா என்பது ரகசியம். பிறகு, சாய் பாபா வந்தபோது ஏன் காலில் விழுந்து கும்பிட வேண்டும்? எப்படியோ கனிமொழியின் மனம், மனசாட்சி உறுத்த ஆரம்பித்து விட்டது. அதனால், இந்த அளவுக்கு விளக்கம் கொடுக்க வேண்டியதாக உள்ளது போலும்.
[5] பேராசிரியர் முனைவர் ஹாஜா கனி, சென்னை மேடவாக்கம் காயிதேமில்லத் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர், தமுமுக வின் மாநிலச் செயலாளர், மக்கள் உரிமை வார இதழின் இணை ஆசிரியர்.
போகிதிருநாளும், பிடித்துள்ளசனியும்: ஸ்டாலின் பேசியது, “இன்றுபோகிதிருநாள். போகிஎன்றால்பழையனகழிதலும், புதியபுகுதலும்என்றநிலையில், நம்மைபிடித்துள்ளசனிஇன்றோடுஒழிந்திடவேண்டும். வீட்டிலிருக்கும்பழையனவற்றைமட்டுமல்ல, இந்தநாட்டிலிருக்கும்பழையனவற்றையும்அப்புறப்படுத்தவேண்டியகட்டாயம்நமக்குஉருவாகியிருக்கிறது[1]. அந்தளவுக்கு, ஏறக்குறைய 20 ஆண்டுகள்பின்தங்கி, மோசமானநிலையில்சிக்கித்தவித்துக்கொண்டிருக்கும்தமிழகத்திற்கு, நாளையதினம்தைபிறக்கின்றநேரத்தில்ஒருநல்லவிடிவுகாலம்பிறக்கும்என்றநம்பிக்கைநமக்கெல்லாம்உருவாகிஇருக்கிறது.எனவே, நம்முடையதமிழகத்தைகாப்பாற்ற, தமிழகத்துக்குஒருவிடிவுகாலத்தைஉருவாக்கிட, தமிழகமக்களுக்குத்தேவையானதிட்டங்களைஉருவாக்கிடவேண்டுமென்று, இந்ததமிழ்ப்புத்தாண்டுமற்றும்பொங்கல்விழாவில்உறுதியெடுத்துக்கொள்ளவேண்டும். அந்தநம்பிக்கையோடுஉங்கள்அனைவருக்கும்தமிழ்ப்புத்தாண்டும்மற்றும்பொங்கல்நல்வாழ்த்துகளைதெரிவித்துக்கொள்கிறேன்,” என்று கூறினார்[2]. இனி தளபதியை மாடு முட்ட வந்த விவகாரத்தை கவனிப்போம்.
மாடுமுட்டவந்தசமாசாரம்: வேடிக்கை என்னவென்றால், தளபதியை மாடு முட்ட வந்த விவகாரத்தை “தினமலர்” மட்டுமே வெளியிட்டதாகத் தெரிகிறது. ஒரு வீடியூ 15-01-2018 காலையில் தேடியபோது காணப்பட்டது. மதியம் காணப்படவில்லை. கொளத்துாரில், ஸ்டாலினை மாடு முட்ட வந்ததால், மாட்டிற்காக செய்யவிருந்த பூஜையை, ஸ்டாலின் ரத்து செய்தார்.தமிழக எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க., செயல் தலைவருமான ஸ்டாலினின் சொந்த தொகுதி கொளத்துார். இந்த தொகுதிக்கு உட்பட்ட, பெரவள்ளூர், பெரியார் நகர் பகுதிக்கு வந்தார். கொளத்துார் வீதிநகர் பகுதியில், நடந்த பொங்கல் விழாவிற்கு நலத்திட்ட உதவிகள் வழங்க ஸ்டாலின், 9:00 மணிக்கே வரவிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.ஆனால், 12:௦௦ மணிக்கு வந்த ஸ்டாலின், பொங்கல் விழா நடைபெறும் இடத்தில் இருந்த பசுமாட்டிற்கு மாலை போட சென்றார்.ஆனால், அந்த மாடு முட்ட வரவே, கோபமடைந்த ஸ்டாலின், மாலையை கட்சி தொண்டர் ஒருவரிடம் கொடுத்து மாட்டிற்கு போடச் சொன்னார்[3]. மேலும், பசு மாட்டிற்கு செய்யவிருந்த பூஜையையும் வேண்டாம் என்று கூறி மறுத்து விட்டார்[4]. சென்ற ஜூன் 2017ல் மாட்டுக்கறியை ஆதரித்துப் பேசியதை நினைவு கொள்ளலாம்[5]. இப்படி இரட்டை வேடும் போடும் இவர், பொங்கல் வாழ்த்து என்று இணைதளத்தில் படம் போடும் போது, மாட்டை சேர்த்துக் கொள்கிறார்.
மிருகம்போலிநாத்திகனின்முகமூடியைக்கிழித்துவிட்டது: ஸ்டாலினை மாடு முட்ட வந்தது, மாலை போட மறுத்தது, போலி நாத்திகத்தை தோலுரித்திக் காட்டுகிறது. குங்குமத்தை அழித்த ஸ்டாலினை மாடு முட்ட வந்தது, திராவிட நாத்திகத்திற்கு சரியான அடி! பகுத்தறிவால் எந்த விளக்கமும் கொடுக்க முடியாது! முன்னர் கருணாநிதி, திமுக தொண்டர் குங்குமத்துடன் வந்தபோது, நக்கலாக, “என்ன நெற்றியில் ரத்தமா?”, என்ற கேட்ட வயதான தந்தை கருணாநிதியின் வக்கிரம் தான், தனயன், நெற்றியில் இட்ட குங்குமத்தை அழித்தபோது புலப்பட்டது. பிறகு தனது தாயார், துணைவியார், சகோதரி என்று எல்லோரும் ஏன் குங்குமம் வைக்கின்றனர், அவற்றை அழிக்காமல் இருக்கும் இவரது யோக்கியதை என்ன என்பதனை கவனிக்க வேண்டும். ஸ்டாலின் – மாடு முட்ட வந்தால் வீரத்தமிழா, கோபம் வரக்கூடாது, கொம்புகளைப் பிடித்து அடலேறு போல அடக்கி வீரத்தைக் காட்ட வேண்டும்! ஜல்லைக் கட்டுக்கு வீரம் பேசிய இந்த தளபதி கோழை போல ஓடி போனது, கேவலமானது. வயதாகி விட்டது என்று சொல்லலாம், அப்பொழுது, வயதிற்கு வேண்டிய நாகரிகம் அப்பனுக்கும், மகனுக்கும் இல்லாத்தும் கேவலம் தான். நம்பிக்கையில்லாத ஸ்டாலின் சனி பற்றி பேசுவது, அவரது பொலித்தனத்தின் உச்சம்! பிறகு ராகு-கேது எல்லாம் வரும் போல!
போகி பண்டிகையில், பழையது கலைந்து, புதியதை உருவாக்குவோம். தமிழகத்தை சனிபிடித்து ஆட்சி செய்கிறது.தை பிறந்தால் வழிபிறக்கும், பெரியாரா இப்படி சொல்லிக் கொடுத்தார்? பண்டிகைகளைக் கேவலப்படுத்திய ஈவேரா மற்றும் திக முதலியவற்றை தமிழக மக்கள் அறிந்து, புரிந்து கொண்டு விட்டனர். ஹேமமாலினியையும், ஸ்டாலினையும் மாடு முட்ட வந்ததில் உள்ள ஒற்றுமை, வேற்றுமை என்ன என்று பார்த்தால், முன்னவர் பிராமண்ராக இருந்தாலும், தான் கடமையை செய்யும் போது முட்ட வந்தது. ஆனால், இங்கோ, பொங்கல் வைத்து, பசுக்கு மாலை போட வந்த போது முட்டப் பார்த்தது. ஆக, அந்த ஜீவனுக்கு, இந்த மனிதனின் போலித் தனம் தெரிந்திருக்கிறது.
இந்துமதம்மட்டுமல்லஎந்தமதத்தைஇழிவுபடுத்தினாலும்தி.மு.க. அதைஏற்காது: வைரமுத்து-ராஜா விவகாரத்தில், ஸ்டாலின் கூறிய இரு வரியை பெரியதாக எடுத்துக் கொள்ள முடியாது[6]. இந்து மதம் மட்டுமல்ல எந்த மதத்தை இழிவுபடுத்தினாலும் தி.மு.க. அதை ஏற்காது ஊக்கப்படுத்தாது, உடன்படாது. என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்[7]. ஆனால், அவர் அவ்வாறு செய்துள்ளாரா என்று பார்த்தால் ஒன்றும் கிடையாது. ஊடகங்களும் பதிலுக்கு எந்த கேள்வியையும் கேட்கவில்லை[8]. திமுக உடன்படாது என்றால், தான் உடன் படுவேன், ஊக்குவிப்பேன், ஏற்பேன் என்றாகிறது[9]. இது பேட்டியில் ஏதோ குறிப்பிட்டிருக்கிறார், அவ்வளவுதான், ஏனெனில், இதுவரை, இந்து மதம் தாக்கப் பட்டபோது, இவர் வாயை மூடிக் கொண்டுதான் இருந்தார். இப்பொழுது கூட கனிமொழி பேசியதற்கு ஒன்றையும் சொல்லக் காணோம். அதென்ன அப்பேச்சு இழிவு படுத்தியதாக ஆகாதா? அவ்வளவு ஏன், இவரது தந்தை பேசியது எல்லாம் ஞாபகப் படுத்திக் கொண்டால், இவரது மனதுக்கு, மனசாட்சிக்குத் தெரியாமலா போய் விட்டது? வைத்த குங்குனத்தை அழித்தபோது, இவர் என்ன செய்ததாக அர்த்தம்? ஆகவே, இந்த ஒரு வரியை வைத்து, இவரது குணத்தை ஒன்றும் எடை போட முடியாது. மேலும், ஊடகங்கள், பசு முட்ட வந்ததை மறைத்ததிலிருந்தே, அவகளது வழக்கமான, செக்யூலரிஸத்தைக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
பொங்கல்அன்றுகனிமொழிவீட்டிற்குசென்றகருணாநிதி: ஆழ்வார்பேட்டை இல்லத்தில் திமுக செயல்தலைவர் ஸ்டாலினை சந்தித்து கனிமொழி பொங்கல் வாழ்த்து தெரிவித்தார்[10]. இதேபோல் திமுக தொண்டர்களும் ஸ்டாலினை நேரில் சந்தித்து தங்களது பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தனர். தமிழக மக்களுக்கு கனி மொழி பொங்கல் வாழ்த்து தெரிவித்து உள்ளார்[11]. இந்த ஆண்டாவது தமிழக மக்களுக்கு விடிவுகாலம் பிறக்க வேண்டும் என கூறி உள்ளார். வழக்கமாக பொங்கல் அன்று கருணாநிதி வீடு களை கட்டும். இந்த ஆண்டும், சி.ஐ.டி காலணி வீட்டில் தடபுடல் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. பொங்கல் அன்று கோபாலபுரம் வீட்டில் தொண்டர்களைப் பார்த்து கையசைத்து பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.
கோபாலபுரம் வீட்டில் இருக்கும் கருணாநிதி, பொங்கல் அன்று தொண்டர்களைச் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. தனித்தனியாக தொண்டர்களை பார்க்க மருத்துவர்கள் அனுமதி தரவில்லை. நோய் தொற்று ஏற்பட்டு விடக்கூடாது என்று தடை போட்டுவிட்டனர். இந்நிலையில், 15 மாதங்களுக்கு பிறகு சென்னை சி.ஐ.டி காலணி வீட்டிற்கு ஜனவரி 15-ம் தேதி இரவு 9 மணிக்கு சென்றார் கருணாநிதி[12]. வீட்டுக்கு வந்த கருணாநிதியை அவரது மகள் கனிமொழி வரவேற்றார். ராஜாத்தி அம்மாள், அரவிந்தன் ஆகியோர் கருணாநிதியை வீட்டுக்குள் அழைத்து சென்றனர். ”வீட்டுக்கு அப்பா வந்தது மகிழ்சி அளிக்கிறது’ என்றார் கனிமொழி[13]. ஆக அப்பனை, அண்னனை மகள் சந்தித்தாள், என்று சொல்லாமல், ஏதோ ஒரு தலைவர், இன்னொருவரஇப் பார்த்தார் என்று செய்தி போட்டிருப்பது, நிருபர்கள், செய்தியாளர்களின் அடிமைத் தனத்தைக் காட்டுகிறது. “பொங்கல் இனாம்” கனமாக இருந்தது போலும். இதை ஏன் குறிப்பிட்டுகின்றேன் என்றால், மாடு முட்டிய விசயத்தை மறைத்ததால், அதனைப் பற்றி, பகுத்தறிவோடு செய்தி வெளியிட்டு விவாதிக்காமல் இருந்ததால் தான்.
பொங்கல்பற்றிதிராவிடநாத்திகர்களின்குழப்பமானநிலைப்பாடு: 1940களிலிருந்து ஈவேராவின் “ஆரிய-திராவிட” திரிபுவாதங்களால், பொங்கல் பண்டிகைக்கும் மாற்று விளக்கம் கொடுக்கப் பட்டு, திராவிடத்துவவாதிகள் பொங்கல் கொண்டாட்டங்களை எதிர்த்து வந்தது தெரிந்த விசயம். பிராமணர் அல்லாத உயர்ஜாதி இந்துக்கள் ஆதிக்கம் பெறுவதற்காக, சைவமும் திரிபுவாதங்களுக்கு உட்படுத்தப் பட்டு, “இந்து-விரோத” ரீதியில் எடுத்துச் செல்லப்பட்டது[1]. அந்நிலையில், திமுக ஆட்சியைப் பிடித்ததும், அரசு ஆதிக்கத்துடன், தமிழ கலாச்சாரம், நாகரிகம், பண்பாட்டு முதலிய காரணிகளை சிதைக்க “இந்து அறநிலையத் துறை” உபயோகப் படுத்தப் பட்டது. அண்ணாதுரை பொங்கல் பண்டிகையை எதிர்க்கவில்லை, அதனை “புனித பொங்கல்” என்றார்[2]. கருணாநிதி ஆரம்பத்தில் எதிர்த்தாலும், பிறகு வியாபார ரீதியில் “சமத்துவ பொங்கல்” ஆக்கினார்[3]. “சங்க இலக்கிய சரித்திர ஆதாரங்களுக்கு” முரண்பட்ட, விரோத கருத்துகளைப் புகுத்தி கெடுக்கப்பட்டது தான் “தமிழர் (பொங்கல்) விழா”. இருப்பினும் பெரும்பான்மையான மக்கள் பாரம்பரிய முறையில் கொண்டாடி வருவதால், பேச்சுடன் வைத்துக் கொண்டு, மற்ற சின்னங்களை அப்படியே திராவிடத்துவத்தில் அடக்கிக் கொண்டு மக்களை ஏமாற்றி வருகின்றனர். ஏனெனில், அதில் முக்கியமாக இருப்பது கோடிக் கணக்கான வியாபாரம், லாபங்கள்!
சென்னைசங்கமும், ஊழல்பொங்கல்கொண்டாட்டங்களும்: “சென்னை சங்கமம்,” கிறிஸ்தவ பாதிரி ஜகத் காஸ்பரின் “தமிழ் மையம்” மற்றும் தமிழக அரசு பண்பாடு மற்றும் சுற்றுலாத் துறை சேர்ந்து, கனிமொழி நடத்த ஆரம்பித்தார். இலக்கிய ரீதியிலும் தேசவிரோத கருத்துகளை பரப்பினர். ஸ்பெக்ட்ரம் ஊழலில் தொடர்புடைய கிரீன் ஹவுஸ் பிரமோட்டர்ஸிடமிருந்து தமிழ் மையத்திற்கு பெரிய நிதி வழங்கப்பட்டது குறித்தும், சி.பி.ஐ. விசாரணை நடந்தது. தமிழக அரசின் ஆதரவுடன் 2007ல் தொடங்கி, இதன் நான்காவது நிகழ்வு ஜனவரி 10 முதல் 16. 2010 வரை நடைபெற்று, பிறகு கோடிக்ககணக்கானா ஊழல் புகாரினால் முடங்கியது[4]. இவ்வாறு சித்தாந்தம் மற்றும் பணம் சம்பாதிக்கும் பின்னணியில் தான், திராவிட நாத்திக அரசியல்வாதிகளின் பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் இருந்தது. ரேசன் கார்ட் உள்ளவர்களுக்கு “இனாம்” கொடுக்கும் முறையும் தொடர்ந்து நடந்து வருகிறது. ஆக, 2018ல் கனிமொழி இந்துமதத்தை நாத்திக மாநாட்டில் கேவலப் படுத்திய நிலையில், சகோதரர் ஸ்டாலின், இவ்வாறு பொங்கல் கொண்டாடுவதை கவனிக்கலாம்.
பொங்கல்விழாவில்கலந்துகொண்டஸ்டாலின்: திமுக சார்பில் சென்னை அயனாவரம், கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பொங்கல் கொண்டாட்டங்கள் நடைபெற்றது. வீதிகள் தோறும் தோரணம் கட்டியும், மேடைகள் அமைத்தும் நாட்டுப்புற கலைகள் நிகழ்த்தப்பட்டதை, அக்கட்சியின் செயல்தலைவர் ஸ்டாலின் பார்வையிட்டார். தொடர்ந்து துறையூரில் நடைபெற்ற பொங்கல் நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றிய ஸ்டாலின், தமிழகம் 20 ஆண்டுகளுக்கு பின்னால் போய்க்கொண்டிருப்பதாக கூறினார்[5]. திமுக ஆட்சிக்கு வந்தால் தை முதல் நாள் தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்படும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை கொளத்தூரில் பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தை தொடக்கி வைத்த ஸ்டாலின், நலத்திட்ட உதவிகளையும் பொங்கல் பொருட்களையும் வழங்கினார். தை முதல் தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்பட்டு வந்தது. திமுக ஆட்சி காலத்தில் தை முதல்நாள் தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்படும் என்றும் கூறினார். தை பிறக்கும் காலத்தில் நல்ல விடிவுகாலம் பிறக்கப்போகிறது என குறிப்பிட்ட ஸ்டாலின், அரசியல் ரீதியாக நாட்டைப்பிடித்துக் கொண்டிருக்கும் சனி இன்றோடு ஒழிய வேண்டும் என்றும் கூறினார்[6]. ஆண்டாள் பற்றிய கருத்துக்கு வைரமுத்து மன்னிப்பு கேட்ட பின்னரும் அதனை பூதாகரமாக்கி வளரவிடுவது நியாயமல்ல என்றும் கூறினார்[7]. கருணாநிதி, அறிஞர் அண்ணா பற்றி எச். ராஜா எழுதி பெரிய ஆளாக வேண்டும் என்று நினைக்கிறார். அவரது கருத்துக்கு நான் பதில் கூற விரும்பவில்லை என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்[8].
ஸ்டாலின்முழுபேச்சு: நான் முதல்வராக வருகிறேனோ, இல்லையோ.. உங்களைப் பொறுத்தவரையில், உங்களுடைய காவலனாக, சிறந்த சேவகனாக என்றைக்கும் இருப்பேன் என உறுதியுடன் சொல்ல விரும்புகிறேன் என்று திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாக்களில் பங்கேற்றார். அப்போது பொதுமக்கள் மத்தியில் பேசிய ஸ்டாலின், ஒவ்வொரு ஆண்டும் நமது கொளத்தூர் தொகுதியில் தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் விழாக்களை நாம் தொடர்ந்து கொண்டாடி, அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளையும், பொங்கல் திருநாள் வாழ்த்துகளையும் தெரிவிக்கும் வாய்ப்பு உங்களில் ஒருவனாக இருக்கின்ற எனக்கு கிடைத்து வருகிறது. கொளத்தூர் தொகுதியை சேர்ந்த உங்களோடு நான் எப்போதும் இருப்பதால், இந்த நேரத்தில் உங்களிடம் நான் அதிக நேரம் பேச வேண்டியதில்லை.
காரணம், இது எனது தொகுதி என்று சொல்வதை விட, என்னுடைய இல்லம், வீடு என்று சொல்லக்கூடிய அளவுக்கு, என்னை நீங்கள் தேர்ந்தெடுத்து இருக்கின்றீர்கள் என்று சொல்வதை விட, என்னை உங்களோடு இணைத்துக் கொண்டு இருக்கிறீர்கள் என்று சொல்லும் நிலை இருக்கின்றது. எனவே, இந்த நிகழ்ச்சியில் ஒரு குடும்ப உணர்வோடு, பாசத்துடன் பங்கேற்று இருக்கிறீர்கள். இன்னும் சொல்ல வேண்டுமென்றால், உங்களுக்கு வாழ்த்து சொல்ல நான் வந்திருக்கிறேன் என்பதைவிட, உங்களிடம் நான் வாழ்த்துபெற வந்திருக்கிறேன் என்பதுதான் பொருத்தமாக இருக்கும். ஏனென்றால், நான் உங்கள் வீட்டுப் பிள்ளை. காரணம், இந்தத் தொகுதியில் என்னை கடந்த முறை பெற்ற வாக்குகளை விட அதிகமான வாக்குகள் அளித்து, இரண்டாவது முறையாக வெற்றி பெற வைத்து இருக்கின்றீர்கள். இங்கு ஜவகர் அவர்கள் பேசியபோது, முதலமைச்சராக வரப்போகிறார் என்று எண்ணி எனக்கு வாக்களித்தீர்கள் என்றார்[9]. நான் அவருக்கும், உங்களுக்கும் சொல்ல விரும்புவது, நான் முதலமைச்சராக வருகிறேனோ, இல்லையோ ஆனால் இந்தத் தொகுதியைப் பொறுத்தவரையில், நான் என்றைக்கும் உங்களுடைய முதல் குடிமகனாக, உங்களுடைய முதல் காவலனாக, இந்தத் தொகுதிக்குப் பணியாற்றும் சிறந்த சேவகனாக நான் என்றைக்கும் இருப்பேன் என உறுதியுடன் சொல்ல விரும்புகிறேன்[10].
[3] திகவின் வீரமணி “விடுதலை,” கருணாநிதியின் “முரசொலி,” நாத்திக-திராவிட சித்தாந்திகள் அத்தகைய கருத்துகளை பிரச்சாரம் செய்து, இளைஞர்களை ஏமாற்றி வந்தனர்.
[4] The searches were conducted at Tamil Maiyam, an NGO founded by Jegath Gasper Raj, in Mylapore. Tamil Nadu Chief Minister M. Karunanidhi’s daughter Kanimozhi, a DMK Member of Parliament, is a trustee of Tamil Maiyam, the key organisation behind Chennai Sangamam, a high-profile cultural event held since 2007.
The CBI recorded the statement of an employee of Green House Promoters Pvt Ltd whose Managing Director Batcha had fired over 40 employees on the recommendation of Balwa. Batcha, who was interrogated by the CBI, was found dead under mysterious circumstances in Chennai in March 2016. ….one company of DB Group, Eterna Developers Pvt Ltd had some business transactions with Green House Promoters Pvt Ltd. It (Eterna Developers) transferred around Rs 1.25 crore to Green House Promoters and after some time, this amount was paid back by Green House Promoters to Eterna Developers…..
ஜெயலலிதாவுக்கு முன்பு மற்றும் ஜெயலலிதாவுக்கு பின்பு: திராவிட கட்சிகளும், நிலையும், உருமாறுகின்ற தேவைகளும்!
மோடியைசந்தித்தபிறகுகௌதமிசதிசெய்கிறாரா– அதிமுககேட்கிறது: இதனால் நடிகை கவுதமிக்கு அ.தி.மு.க.வினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதுபற்றி அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் நாஞ்சில் சம்பத் ‘மாலைமலர்’ நிருபரிடம், மற்ற விவரங்களை விளக்கி விட்டு, கூறியதாவது[1]:- “…….நான்கவுதமியைகேட்கிறேன், நீஎந்தஉலகத்தில்இருக்கிறாய்? இதுபோன்றஅத்துமீறலைநிறுத்திக்கொள்வதுநல்லது. ஏற்கனவேகவுதமி, பிரதமரைஒருமுறைசந்தித்துவந்துள்ளார். இதற்குபின்னால்ஏதோஒருசதிதிட்டம்இருக்கிறதோஎனநான்சந்தேகிக்கிறேன்”. இதேபோல செய்தி தொடர்பாளர் தீரன், முன்னாள் அமைச்சர்கள் பண்ருட்டி ராமச்சந்திரன், வளர்மதி ஆகியோரும் கவுதமியின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்[2]. இந்த சதிக்கு சகோதரி கவுதமி விலைபோய் விட்டாரா? என்ற ஐயம் எழுகிறது. ஆகவே இது தேவையில்லாத பிரச்சனை. இதை யாரும் விவாதம் ஆக்க வேண்டாம். திருச்சியில் நேற்று கவுதமியின் உருவப்படத்தை அ.தி.மு.க. நிர்வாகிகள் சிலர் தீயிட்டு எரித்தனர்[3]. மேலும் கவுதமிக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதுகுறித்து அ.தி.மு.க.வினர் கூறுகையில், “ஜெயலலிதாமறைவில்எந்தசந்தேகங்களும்இல்லை. அவர்ஆஸ்பத்திரியில்இருந்தபோதுஅரசியல்கட்சிதலைவர்கள், முக்கியபிரமுகர்கள்நேரில்சென்றுவிசாரித்துஉள்ளனர். எனவேஅவருடையமறைவைகவுதமிவிமர்சித்துள்ளதுகண்டிக்கத்தக்கது,” என்றனர்[4].
ஜெயலலிதா இறப்பை வைத்து லாபம் பார்க்கத் துடிப்பது ஏன்?: கடந்த இரண்டு மாதங்களாக ஜெயலலிதாவின் ஆஸ்பத்திரிவாசம் பெரிய செய்தியாக இருந்து வந்துள்ளது. இப்பொழுதோ, அது பெரிதாகி விட்டது. ஜி.எஸ்.டியை விட, இதைப் பற்றித்தான் அதிகமாக பேசுகின்றனர். சமூக ஊடகங்களின் கீழ்த்தரமான பதிவுகள், சமூக ஊடகங்களின் தரத்தையேக் குறைத்து விட்டது. கட்சிசார்புடன் வேலைசெய்யும் பலரை வெளிகாட்டி வருகிறது. தகவல் தொழிற்நுட்ப சட்டம் மற்றும் இந்திய குற்றவியல் சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கும்போது, அலறும் சிலர், ஜெயலலிதாவை இறந்த பின்னரும் மோசமாக விமர்சித்து வருவதை மற்றவர்களும் கவனித்து வருகிறார்கள். பொதுவாக, இந்தியாவில் இறந்தவர்களைப் பற்றி அதிகமாக விமர்சிப்பதில்லை. குறிப்பாக பெண்ணை அவ்வாறு செய்வதில்லை. ஆனால், ஜெயலலிதா விசயத்தில் இரண்டும் மீறப்படுகின்றன. இது அந்த விமர்சர்களுக்கு, அவர்களை சார்ந்த அரசியல் கட்சிகளுக்கு, சித்தாந்த கூட்டங்களுக்கு எதிராக போகும் என்பதை அவர்கள் அறிந்து கொள்ல வேண்டும்.
திமுகவில் நடந்து வரும் மாற்றங்கள்: திராவிடக் கட்சிகளில் மாற்றம், உருவமைப்பு, முதலியவை ஏற்படுமா என்ற யேஷ்யங்கள் ஏற்பட்டுள்ளன. திமுக மறுபடியும் உயிர்த்தெழ வேண்டும் என்ற ஆசை வந்து விட்டது. எப்படியாவது, அதிமுகவைக் குலைக்க வேண்டும் என்ற எண்ணம் சென்ற மாதங்களை விட அதிகமாகி விட்டது. ஆனால் ஜாக்கிரதையாக செயல்பட வேண்டும் எண்ணமும் உள்ளது. ஸ்டாலின் ஜெயலலிதாவுக்கு மரியாதை செல்லுத்தியதும், ராகுல் கருணாநிதியை பார்க்காமல் சென்றதும், மோடி சசிகலா-நடராஜன் முதலியோருடன் பேசியதும், அழகிரி கருணாநிதியை வந்து சந்தித்ததும் நிச்சயமாக அத்தகைய திட்டத்தை எடுத்துக் காட்டுகிறது. கருணாநிதியும் உடல்நிலை சரியாக இல்லாத நிலையில், திமுகவிலும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. “ஜெயலலிதா-கருணாநிதி ஆஸ்பத்திரிவாசம்” நிச்சயமாக பாரபட்சமாக விமர்சிக்கப் பட்டது. கருணாநிதிக்குப் பிறகு திமுக தலைமை ஸ்டாலினுக்குத்தான் செல்லும் என்றாலும், அழகிரி விடுவதாக இல்லை. இதுவரை மறைந்திருந்த ராஜா, மற்படியும், வெளிவந்து ஸ்டாலினுடன் வலம் வருகிறார்.
காங்கிரஸில்ஏற்பட்டுள்ளமாற்றங்கள்: 2ஜி ஊழல் காங்கிரஸ்-திமுக கட்சிகளை இணைத்து வைத்தாலும், அதே விசயம் அவர்களை பாதித்து வருகின்றது என்பதும் தெரிந்த விசயமாக இருக்கிறது. கடந்த தேர்தலில் திமுகவின் தோல்விக்கு அது ஒரு முக்கியமான அம்சமாக இருந்தது. ஊழல் என்றாலே கருணாநிதி என்ற பழைய பிம்பம் மறுபடியும் பிரதிபலித்ததால், மக்கள் ஜெயலலிதாவைத்தான் தேர்ந்தெடுத்தனர். கருணாநியை தமிழக மக்கள் என்றுமே ஊழலில்லாத முறையில் பார்க்க முடிவதில்லை. 2ஜி ஊழல் ஏதோ திமுகவுடன் தான் இணைந்திருக்கிறது என்பது போல காட்ட வேண்டும் என்று ராகுல், தமிழகத்திற்கு வரும்போதெல்லாம் கருணாநிதியை சந்திக்காமல் சென்று வருகிறார். இப்பொழுதும், ஜெயலலிதாவைப் பார்த்து மரியாதை செல்லுத்தி விட்டு செல்லும் போது, கருணாநிதியை ஏன் பார்க்கவில்லை என்று கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. ராகுலுக்கு கருணாநிதியை விலக்க வேண்டும் என்ற எண்ணம் எப்படி ஏற்பட்டது என்பது மர்மமாக இருக்கிறது.
ஊழலை மீறி ஜெயித்த ஜெயலலிதா: ஜெயலலிதா உண்மையாக ஊழல் செய்தாரா அல்லது சசிகலா அண்ட் கம்பெனியால் மாட்டிக் கொண்டாரா, சுப்ரமணியன் சுவாமி மாட்டி வைத்தாரா என்றெல்லாம் ஆராய்ச்சி செய்தாலும், சட்ட-வழக்குகளை சீர்தூக்கிப் பார்த்தாலும், மக்கள் அவற்றைக் கன்டுகொள்ளவில்லை என்றே தெரிகிறது. குறிப்பாக அவர் கருணாநிதி போன்ற ஆண்களால் பலிவாங்கப் படுகிறார் என்ற எண்ணம் அதிகமாகியது. தமிழக பென்களின் ஆதரவு இன்னும் ஜெயலலிதாவுக்கு இருக்கிறது. இலவசதிட்டங்கள் எல்லாமெ பெரும்பாலும், பெண்களுக்கு என்பதை கவனிக்க வேண்டும். இதனால் தான் பெண்களின் ஆதரவு, இறந்த பின்னர் இன்னும் அதிகமாகியுள்ளதை கவனிக்கலாம். இனி ஜெயலலிதாவை, எம்.ஜி.ஆரைப் போன்று ஒரு ஓட்டுக்களை இழுக்கும் சின்னமாக்கி விட்டால், அவர் பெயரைச் சொல்லி இனி ஓட்டுகள் கேட்கலாம், மக்களும் ஓட்டுப் போடுவார்கள். எம்.ஜி.ஆர் படத்தை மற்ற கட்சிகள் போடுவதைப் போல, ஜெயலலிதா படத்தை போட முடியாது. அந்த விசயத்தில் அதிமுகவுக்கு லாபம் தான். இனி “எம்.ஜி.ஆர்-ஜெயலிதா” சின்னம் அமோகமான வெற்றிசின்னமாக இருக்கும். இதை எதிர்த்து யார் பேசினாலும் மக்கள் நிச்சயமாக நிராகரிப்பார். மேலும் இன்றைய இணைதள ஞானம் பரவியுள்ள காலத்தில், இளைஞர்களின் ஆதரவும் ஜெயலலிதாவுக்கு உள்ளது. அரசியலை சீர்துக்கிப் பார்க்கும் அவர்களிடத்தில் எப்படி மோடிக்கு ஆதரவு அளித்து வருகின்றனரோ, அத்தகைய ஆதரவு “எம்.ஜி.ஆர்-ஜெயலிதா” சின்னத்திற்குக் கிடைக்கும். ஆனால், அதிமுக ஊழலற்ற நிர்வாகத்துடன் செயல்பட வேண்டும். மோடி போன்று முன்னேற்றம், வளர்ச்சி, உன்னதி, மேன்மை என்ற ரீதியில் செயல்பட வேண்டும். மறுபடியும் வட்டம்-மாவட்டம்-கார்ப்பரேஷன் என்று ஊழல்களை ஆரம்பித்தால், இக்கால இளைஞர்கள் தூக்கி எரிந்து விடுவார்கள்.
அண்ணா, எம்.ஜி.ஆர், அம்மா சின்னங்கள்: தமிழகத்தைப் பொறுத்த வரையில், அண்ணா, எம்.ஜி.ஆர் சின்னங்களுக்குப் பிறகு “அம்மா” தான் வந்துள்ளது. அண்ணாதுரை, எம்.ஜி.ஆர், அடுத்து ஜெயலிதாவால் தான் மக்களைக் கவர முடிந்துள்ளது. திமுக “எம்.ஜி.ஆர்”ஐ வைத்துதான் ஓட்டு கேட்டது. அதிமுகவும் “எம்.ஜி.ஆர்”ஐ வைத்துதான் ஓட்டு கேட்டது. எம்.ஜி.ஆர் தெர்ந்தெடுத்தது –ஜெயலிதாவை. ஆனால், ஜெயலிதா யாரையும் நம்பவில்லை, தெர்ந்தெடுக்கவில்லை, தன்னை வைத்தே எல்லாவற்றையும் நடத்தினார். முக்கியமாக பொறுப்பேற்றுக் கொண்டார். மற்றவர்கள் மீது திணிக்கவில்லை, சுமத்தவில்லை, பழிபோடவில்லை. ஆக தமிழக மக்களை ஈர்க்கவோ, ஓட்டுகளை சேர்க்கவோ அண்ணா, எம்.ஜி.ஆர், அம்மா சின்னங்களே தவிர மற்றவையெல்ல. இனி திராவிட உதிரிக்கட்சிகள், பெரியார், அண்ணா, அம்பேத்கர், காந்தி, நேரு, எம்.ஜி.ஆர், என்ற முரண்பட்ட தலைவர்கள் சின்னங்களுடன் அம்மாவையும் சேர்ப்பார்கள். ஏன் முஸ்லிம் கட்சிகள் மட்டுமல்ல, பிஜேபியும் அம்மாவை சேர்த்துக் கொள்வார்கள்.
[3] தினதந்தி, ஜெயலலிதாமரணம்குறித்துவிமர்சனம்: நடிகைகவுதமிஉருவப்படத்தைஅ.தி.மு.க.வினர்எரித்தனர், பதிவு செய்த நாள்: ஞாயிறு, டிசம்பர் 11,2016, 2:32 AM IST; மாற்றம் செய்த நாள்: ஞாயிறு, டிசம்பர் 11,2016, 2:32 AM IST
கருணாதியைவைகோஎன்னசொல்லிவசைபாடினார்?: தேமுதிக-வில் இருந்து அக்கட்சி நிர்வாகிகளும், எம்.எல்.ஏ களும் வெளியேறுவதற்கு காரணம் திமுக தான் என்று குற்றம் சாட்டிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இந்த செயலை செய்யும் திமுக, வேறு ஏதாவது ஒரு தொழிலை செய்யலாம், என்றும் அது எந்த தொழில் என்று நான் சொன்னால், என் மீது ஊடகங்கள் என்னை விமர்சிக்கும், அந்த தொழில் ஆதி காலத்தில் இருந்து இருக்கிறது. அந்த தொழிலுக்கு அரசு அனுமதி தர வேண்டும், என்றும் தற்போது வலியுறுத்தி வருகிறார்கள், அப்படிப்பட்ட தொழிலை கருணாநிதியும், தேமுதிக-வுக்கு எதிராக போர்கொடி உயர்த்தியுள்ள சந்திரகுமாரும் செய்யலாம், என்று பேசிய வைகோ, இறுதியில் கருணாநிதியின் குடும்ப தொழில் நாதஸ்வரம், அதைகூட அவர் செய்யலாம், என்று சொன்னார்[1].”கலைஞர் நல்லா ஊதுவார்” என்று முன்பு ஒருமுறை பேசினார் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன். இப்போது வைகோவும் அதே பொருளில் பேசியுள்ளார். வேறு தொழில் செய்யலாமே என்று கேட்டுவிடலாம்………உலகம் பூராக பிரசித்தி பெற்ற ஆதிமனிதன் காலம் இருக்கிற / தொட்டு செய்து வந்த தொழில். அட்டப்பூர்வமாக்க வேண்டும் என்று பிரதமரிடம் கேட்டு வருகிற்ர்ரகள். அந்த தொழிலை இவர் செய்யலாம். கலைஞரும் செய்யலம், இவங்களும் செய்யலாம்,…..என்றெல்லாம் வீடியோவில் பதிவாகியுள்ளது[2].
February 26, 1973- CM. Karunanidhi presents the budget for the year 1973-74
உலகம்பூராவும்பிரசித்திபெற்றுஆதிமனிதன்காலத்தில்இருக்கிறஒருதொழில்… அதைசட்டப்பூர்வமாக்கவேண்டும்என்றுபலபேர்கேட்டுகொண்டிருக்கிறார்கள்….: “தொழில்” என்பது இங்கு குறிப்பிட்டுள்ளதை “நாதஸ்வரம் ஊதும் தொழில்” என்று மாற்றி விளக்கம் அளித்துள்ளது, ஊடகங்களில் ஏமாற்று வேலையே எனலாம். ஏனெனில்,
நாதஸ்வரம் ஊதுவது, வைகோ சொன்னது போல, “உலகம்பூராவும்பிரசித்திபெற்றுஆதிமனிதன்காலத்தில்இருக்கிறஒருதொழில்…” அல்ல.
“அதைசட்டப்பூர்வமாக்கவேண்டும்என்றுபலபேர்கேட்டுகொண்டிருக்கிறார்கள்….” – அம்மாதிரி நாதஸ்வரம் ஊதுவதை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்று பல பேர் கேட்டு கொண்டிருக்கிறார்கள்….என்பது அபத்தமானது.
“அந்ததொழிலைசெய்யலாம்இவங்க … கலைஞரும்செய்யலாம்.. இவங்களும்செய்யலாம்…. நா…நான்ஒன்னும்தப்பாசொல்லலைங்க…” – என்றது தேவதாசித் தொழிலை, விபச்சாரத்தைத் தான் குறிப்பிடுகிறார் என்பது தெரிகிறது. [இப்பொழுது அறிக்கையிலும் அதையே கூறியிருப்பது நோக்கத்தக்கது – “பணம்வாங்கிக்கொண்டுகட்சிமாறுவதுஇழிவானதுஎன்றுகூறியபோது, இதுஉலகத்தின்ஆதித்தொழிலைப்போன்றதுஎன்றுகூறினேன்.” பணத்தை வாங்கிக் கொண்டு ஆளை மாற்றுவது……அதுக்கும் பொருந்தும்]
“அவருநாதஸ்வரம்வாசிக்கக்கூடியதொழிலும்தெரியும்… அதனாலசொன்னேன்…” – அதாவது நக்கலாக சேர்த்து சொன்னது, அதாவது, அதுவும் தெரியும், இதுவும் தெரியும் என்கிறார்.
“ஒன்னும்இழிவாசொல்லலை… உலகத்தின்தலைசிறந்தஇசைதமிழிசை. அதுக்குதான்உயர்வாசொல்றேன்அண்ணன்கலைஞரை…” – பிறகு மாற்றி சமாளிக்கிறார்.
“பச்சைதுரோகம்…இதைவிடநீபாலில்விஷத்தைக்கொடுத்து… விஜயகாந்துக்குவிஷத்தைக்கொடுத்திருக்கலாம்…சோத்துலவிஷத்தைப்போட்டிருக்கலாம்.. போடுவீங்கநீங்க… இந்தமாதிரிஆளுக…” – என்று ஆரம்பித்து முடித்து வ்தத்தைக் கவனிக்கத்தக்கது.
“நாங்கநம்புறவனுக்காகதலையைகொடுப்போம்…நம்புறவனுக்காகஉயிரைகொடுப்போம்…” – நம்பிக்கை துரோகம்.
“இந்தமாதிரியானகீழ்த்தரமானஈனத்தனமானவேலை….” – துரோகம், பச்சைதுரோகம், விஷம் கலப்பது என்று கடைசியாக விசயத்திற்கு வருவது.
பிறகு தான் சமாளிக்கும் வகையில், “அவருநாதஸ்வரம்வாசிக்கக்கூடியதொழிலும்தெரியும்… அதனாலசொன்னேன்…ஒன்னும்இழிவாசொல்லலை… உலகத்தின்தலைசிறந்தஇசைதமிழிசை. அதுக்குதான்உயர்வாசொல்றேன்அண்ணன்கலைஞரை…..” என்று முடித்திருக்கிறார்.
ஆகவே “ஜாதி”யைப் பற்றி சொன்னாரா, “குலத்தை”ப்பற்றி சொன்னாரா, “குலத்தொழிலை”ப்பற்றி சொன்னாரா என்பதை படித்தேத் தெரிந்து கொள்ளலாம்[5]. திராவிட கலாச்சாரத்தின் பேச்சுத் தொழில் இவ்வாறுதான் இருக்கிறது. 1960களில் இருந்தது, இப்பொழுதும் உள்ளது.
வைகோவுக்குகிளம்பியஎதிர்ப்பு: தேர்தல் நேரத்தில், கட்சிகள் பிளவு பட்டு, கூட்டணிக் குழப்பங்களில் சிக்கியுள்ள நிலையில், எத்தலைவருக்கும், இத்தகைய உணர்ச்சிப்பூவமான பிரச்சினையை எதிர்கொள்ள விருப்பமில்லை. மேலும், தேர்தல் நேரத்தில் புகார்கள், வழக்குகள் என்று சிக்கிக்கொள்ள விருப்பமில்லை. இதையடுத்து, கருணாநிதியை தரக்குறைவாக பேசிய வைகோவுக்கு கண்டனம் தெரிவித்து, மு.க.அழகிரி ஆதரவாளர்கள், தமிழகம் முழுவதும் வைகோவின் உருவபொம்மையை எரித்தனர். ஸ்டாலின் ஆதரவாளர்கள் ஏன் எரிக்கவில்லை என்று ஊடகங்கள் நினைத்துப் பார்க்கவில்லை. தி.மு.க.வினர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து[6] தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் திரண்டு தி.மு.க.வினர் வைகோ உருவ பொம்மையை நூற்றுக்கும் மேலான இடங்களில் எரித்து அவருக்கு எதிராக கோஷம் எழுப்பிவருகின்றனர்[7]. பல அரசியல் தலைவர்கள் வைகோவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தனர். இவர்களின் மீது வழக்குப் பதிவு என்று தொடர்கிறது[8]. மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் சிலர் கூட, வைகோவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து பத்திரிகைகளுக்கு பேட்டிக்கொடுத்தனர். இந்த நிலையில், தரக்குறைவான தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்துள்ள வைகோ, திமுக தலைவர் மு.கருணாநிதியும் பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள மன்னிப்பு அறிக்கையில் கூறியிருப்பதாவது[9]:
[5] இவர்கள் தாம் அப்பொழுது, “ராஜாஜி குலத்தொழில் முறையை” ஆதரிக்கிறார் என்று எதிர்த்தவர்கள், அதனைக் கொச்சைப்படுத்திப் பேசியவர்கள், ராஜாஜியை வைது வசைப்பாடியவர்கள் என்பதனையும் ஞாபகத்தில் கொள்ளலாம்.
அதிகாரம், பலமுள்ள அரசியல்வாதிகளை நம்பி பிழைப்பு நடத்துக் கட்சிகள்: சோனியாவும், ஸ்டாலினும் இந்தியாவையும், தமிழகத்தையும் ஆளத்துடிக்கும் பலமும், அதிகாரமுள்ள அரசியல்வாதிகள். கோடிக்கணக்கான இந்தியர்களின் வாழ்க்கையை பலவிதங்களில் பாதிப்பை ஏற்படுத்தி வருபவர்கள். இன்றளவில், விஷயங்கள் வெளிப்படையாக இருக்க வேண்டும், அவற்றைத் தெரிந்து கொள்ள மக்களுக்கு உரிமைகள் உள்ளன என்றெல்லாம் சொல்லப்படுள்ளது. அதற்கேற்றார்போல சட்டங்கள் கூட இருக்கின்றன. ஆனால், அத்தகையவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று வரும்போது, தனிப்பட்ட முறையில், மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ள, ஓய்வு எடுக்க, வார இறுதி நாட்களைக் கழிக்கச் சென்று வருகிறார்கள் என்று செய்திகள் வருகின்றன. ஆனால், இதனால் மக்கள் எந்த அளவிற்கு பாதிக்கப் படுகின்றனர் என்பதை மக்களே அறியமுடியாத அளவிற்கு நிலைமை ஏற்ப்பட்டுள்ளது. சோனியா இந்தியாவில் இல்லாத போது, காங்கிரஸ்காரர்கள் உருப்படியான வேலை எதுவும் செய்யவில்லை[1], ஏனெனில் ஆணைகள் கிடைக்காததால், ஏனோதானோ என்று அறிக்கைகள் விட்டுக் கொண்டிருந்தார்கள். இதற்கும், எதிர்கட்சிகள் பாராளுமன்றத்தை நடத்தவிடாமல் இருந்தார்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்டதிற்கும் எந்த வேறுமையும் இல்லை. திமுகவைப் பொறுத்த வரையிலும், ஆட்சியில் இல்லாததால் அத்தகைய முடிவுகளை எடுக்க வேண்டிய எந்த பிரச்சினையும் இல்லை.
ஸ்டாலினின் லண்டன் பயணங்கள் (2008-2011): இங்கிலாந்திற்கு தமிழகத்திலிருந்து, குறிப்பாக திமுகவினர் அல்லது திமுகவை ஆதரிக்கும் நபர்கள், வியாபாரிகள்[2], நடிகர்கள், நடிகைகள்[3] சென்றுவருவதால், அவர்கள் தனிப்பட்ட முறையில் சென்று வருவதைத் தவிர, இந்தியாவை பாதிக்கும் வகையில் மற்ற விஷயங்களில் ஈடுபடுகிறார்களா என்று பார்க்க வேண்டிய நிலையில் இந்திய மக்கள் உள்ளார்கள்.
பிப்ரவரி 2011: கடந்த பிப்ரவரியில் 2011 சென்றபோது, திமுக-காங்கிரஸ் தேர்தல் பேச்சு வார்த்தைகள் பாதித்தன அப்பொழுது அவரது நண்பர் ராஜாசங்கர் செறிருந்தார்[4].
ஆகஸ்ட்-செப்டம்பர் 2009: முன்பு ஆகஸ்ட் 31, 2009 அன்று லண்டன் சென்றபோது, அமெரிக்கக் குழுவிடன் “கூவம் சம்பந்தமாக” நடத்த வேண்டிய பேச்சுவார்த்தைகளையும் நிறுத்துவிட்டு சென்றுள்ளார்[5]. அப்பொழுதும், சிகிச்சைக்குச் சென்றார் என்று குறிப்புகள் கொடுக்கப் பட்டனவேயன்றி, வேறெந்த விவரங்களும் அறிவிக்கப் படவில்லை. உதயநிதியும் சென்றிருந்தார். நாங்கள் தனிப்பட்ட முறையில் சென்றிருந்தோம், அரசு தரப்பில் செல்லவில்லை”, என்றார்[6].
ஜூன் 2008 – “வியாபார நிமித்தமாகச் சென்றாரா?”: அதற்கும் முன்பாக ஜூன் 2008ல் சென்றபோதும், இதே மாதிரி சொல்லப்பட்டது[7]. ஆனால் வியாபார நிமித்தமாக சென்றார் என்று ஆங்கில ஊடகங்கள் / பத்திரிக்கைகள் வெளியிட்டன. ஸ்டாலினுடைய இணைத்தளத்தில், ஒரு திமுக பக்தர், ஸ்டாலின் மருத்துவ சிகிச்சைக்காக லண்டனுக்குச் சென்றதைக் கேள்விபட்டு, அவரது ஆரோக்கியத்திற்காக ஆண்டவனை பிரார்த்திப்பதாக பதிவு செய்துள்ளார்[8]. நல்லவேளை, நாத்திகத் தந்தையார்[9] ஒன்றும் இடக்கு-மடக்காக எந்த கமண்டும் அடிக்கவில்லை போலும்!
இப்பொழுதைய பயணம் (செப்டம்பர் 2011): மு.க.ஸ்டாலின் கடந்த 4ஆம் தேதி சென்னையில் இருந்து லண்டனுக்கு மருத்துவ சிகிச்சைக்காக புறப்பட்டு சென்றார்[10]. பிறகு 10 நாட்கள் ஓய்விற்குப் பிறகு, சென்றிருந்த, 14-09-2011 அன்று அதிகாலை சென்னை திரும்பினார். திமுக பொருளாளரும் முன்னாள் துணை முதல்வருமான மு.க.ஸ்டாலின், மனைவி துர்கா, மகள், மறுமகன், பேரன்கள் மற்றும் குடும்பத்தினருடன் சென்றிருந்தார்[11]. 10 நாள் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று அதிகாலை 3.15 மணிக்கு பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் ஸ்டாலின் சென்னை திரும்பினார்[12].
இந்தியர்கள் ஏன் கவலைப் படவேண்டும்?தனிப்பட்ட நபர்களாக, இந்திய குடிமகன்களாக, யார் வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் சென்று வரலாம். ஆனால், அரசியல், வியாபாரம், அரசு என்றெல்லாம் வரும் போது, அவர்கள் அவ்வாறு பிரித்துப் பார்ப்பதில்லை, முறைகளைக் கடைப்பிடிப்பதில்லை என்பதிலிருந்துதான், பொது மக்கள் கவலைப் படவேண்டியுள்ளது. சோனியா அமெரிக்காவில் மருத்துவமனையில் இருந்தபோது, யார்-யாரெல்லாம் சென்று பார்த்தார்கள், நலம் விசாரித்தார்கள், நலம் பெற வாழ்த்தினார்கள் என்று இந்தியர்களுக்குத் தெரியாது. ஆனனல், அவர்களில் வியாபார நிமித்தமாக அல்லது அப்படி யாராவது சென்று பார்த்து வைத்தால், நாளைக்கு உபயோகமாக இருக்குமே என்று பார்த்து வந்தவர்கள் யார் என்றும் இந்தியர்களுக்குத் தெரியாது. இங்குதான் பிரச்சினை வருகிறது. இத்தகைய அரசு-அரசியல் சாரா தனிப்பட்ட சந்திப்புகள், பிரயாணங்களில் மற்றவர்கள் இருப்பது பிரச்சினையை, வேறு கோணங்களிலும் திருப்புகிறது.
[1] இருக்கும்போதும் செய்யமாட்டார்கள் என்பது வேறு விஷயம்! காங்கிரஸ் அல்லாத ஆளுக் கட்சிகள் மற்றும் அவர்களது அரசுகளைக் கவிழ்க்க என்னென்ன செய்ய வேண்டுமோ அதை அரசு இந்திரங்களை உபயோகித்துச் செய்து வருவர். அந்த வேலையே, பெரியவேலை அவர்களுக்கு!
[2] இதில் ஒரு பெரிய பட்டியலே உள்ளது. அவர்கள் அமெரிக்கா, மொரிசியஸ், மாலத்திவு முதலிய நாடுகளுக்கும் சென்றுவருகின்றனர். சில ஒப்பந்தங்கள், பரிமாற்றங்கள் அங்குதான் செய்யவேண்டியுள்ளன.
[3] குஷ்புவும் அடிக்கடிச் சென்று வருவது குறிப்பிடத் தக்கது. ஒருமுறை நிருபர்கள் கேட்டபோது, ஹனிமூன்/தேன்நிலவிற்காக செல்வதாக கூறியுள்ளார்.
[7] The sudden visit set tongues wagging. According to sources in the rulign DMK party, Stalin and family had gone on a holiday. But some party sources said it was for a medical check-up and rest and others made it out to be a business visit.
[8] Dear Respected Sir first of all i wish and pray for the god to give good health for you. Recently i saw the news paper that you had been to London for Medical check up that makes me worried lot. Because i love your the way of doing under your control( rural minister)……………………………… If you have any direct email please let me know i wish to send e mail as a party man suggest my openion and etc..
[9] முன்பு ஒரு தொண்டர் நெற்றியில் குங்குமம் வைத்துக் கொண்டு வந்தபோது, “என்ன……நெற்றியில் ரத்தம் வருகிறது……….” என்று நக்கலாக கருணாநிதி கமண்ட் அடித்ததை நினைவு கூறவேண்டும்.