Posts Tagged ‘விபூதி வைப்பது’

இந்துத்துவ பாதையில் திமுக: பகுத்தறிவு சூழ்ச்சி, நாத்திக தந்திரம், மற்றும் அரசியல் யுக்தி எந்த அளவுக்கு உதவும் என்பது 2021 தேர்தல் நிரூபித்து விடும் (1)

நவம்பர் 30, 2020

இந்துத்துவ பாதையில் திமுக: பகுத்தறிவு சூழ்ச்சி, நாத்திக தந்திரம், மற்றும் அரசியல் யுக்தி எந்த அளவுக்கு உதவும் என்பது 2021 தேர்தல் நிரூபித்து விடும் (1)

வேல் யாத்திரையில் பிஜேபிக்கு எதிராக திமுக போட்டி: “நமது நிருபர்” என்று தினமலரில் இச்செய்தி வந்துள்ளது[1]. தமிழக பா.ஜ., வேல்யாத்திரை நடத்தி வரும் நிலையில், சென்னையில் இருந்து, வல்லக்கோட்டை முருகன் கோவிலுக்கு, தி.மு.க., – எம்.எல்.ஏ., மோகன் 27-11-2020 அன்று வேல் யாத்திரை மேற்கொண்டார்[2]. நியூஸ்.டி.எம்.தமிழ்[3], “வல்லக்கோட்டை அருள்மிகு முருகன் திருக்கோவிலுக்கு, தி.மு.. எம்.எல்.., மோகன் வேல் யாத்திரை மேற்கொண்ட நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,” என்று ஆரம்பித்து, “இந்த தகவல் அறிந்த திமுக தரப்பு கடும் அதிர்ச்சியில் உள்ளதாக தகவல்,” என்று முடித்துள்ளது[4] தமாஷாக இருக்கிறது. கருணாநிதி முதல் இப்பொழுது, உதயநிதி வரை, பெண்டாட்டி, அம்மா, மகள், அக்காள்,தங்கை என்று பெண்களை சாமி கும்பிட வைத்து, பலன் பெற்று, வெளியில், மேடைகளில் திராவிட நாத்திகம் பேசும், இந்து விரோதிகளாகத் தான், அவர்கள் இருந்திருக்கிறார்கள்,இருக்கிறார்கள். திக-திமுகவினருக்கு, இந்த நாடகம், இரட்டை வேடம் முதலியவைத் தெரிந்த விசயங்கள் தான்.

திமுக எம்.எல்.ஏ வேல் யாத்திரை செல்வது, பக்தியா, அரசியலா?: தமிழ் கடவுள் முருகனை இழிவுபடுத்தி, கருப்பர் கூட்டத்தினர் சமூக வலை தளங்களில், ‘வீடியோ’ வெளியிட்டனர். இதற்கு, தமிழக பா.ஜ., கடும் கண்டனம் தெரிவித்து, பல்வேறு போராட்டங்களை நடத்தியது. கருப்பர் கூட்டத்தை சேர்ந்தவர்கள், ‘குண்டர்’ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.இந்நிலையில், கடவுள் முருகனை இழிவுபடுத்துவோருக்கு எதிராக, தமிழக பா.ஜ., தலைவர் முருகன், வேல் யாத்திரை நடத்தி வருகிறார். அந்நிலையில், திமுக அவற்றை ஒடுக்க, தடுக்க மாற்றாக சில வழிமுறைகளைப் பின்பற்ற ஆரம்பித்துள்ளது. இதை, பிரஷாந்த் குமார் சொல்லிக் கொடுத்த யுக்தியா அல்லது திமுகவினரே திட்டமிட்டு, இந்துக்களை ஏமாற்ற முயல்கிறார்களா என்று கவனிக்க வேண்டும். எப்படியாகிலும் மே 2021ற்குள்தெரிந்து விடும்.

வல்லக்கோட்டைக்கு வேல் யாத்திரை செய்த திமுக எம்.எல்.வல்லான் என்ற அரக்கன்: திருத்தணி முருகன் கோவிலில் துவங்கிய இந்த யாத்திரை, அறுபடை வீடுகளில் வழிபாடு நடத்திய பின், திருச்செந்துாரில் முடிகிறது. இந்நிலையில், அண்ணாநகர் தொகுதி, தி.மு.க., – எம்.எல்.ஏ., மோகன் தலைமையில், பகுதி செயலர் ராமலிங்கம், பொதுக்குழு உறுப்பினர் முருகன் உட்பட, 50 தி.மு.க., நிர்வாகிகள், நேற்று சென்னை அமைந்தகரையில் உள்ள கன்னியம்மன் கோவிலுக்கு சென்றனர். கோவிலில் வேலுக்கு மாலை அணிவித்து பூஜை செய்தனர். பின், அங்கிருந்து அனைவரும், ஸ்ரீபெரும்புதுாரில் இருந்து, 9 கி.மீ., தொலைவில் உள்ள, வல்லக்கோட்டை முருகன் கோவிலுக்கு, வேலுடன் யாத்திரை புறப்பட்டு சென்றனர். வல்லான் என்ற அரக்கன், தேவர்களை சித்ரவதை செய்த தாகவும், முருகப்பெருமான் அவனை வீழ்த்தி அமைதியை நிலைநாட்டியதாகவும், அவரை பெருமைப்படுத்தும் வகையில், வல்லக்கோட்டை முருகன் கோவில் கட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இவ்வாறு புராணம் பாடி,  அண்ணாநகர் தொகுதி, தி.மு.க., – எம்.எல்.ஏ., மோகன் தலைமையில், 50 பேர் அனுமதியுடன் வேல் யாத்திரை சென்றது விவரிக்கப் பட்டது.

57 ஆண்டுகளாக சபரிமலைக்கு செல்வது, ஆண்டு தோறும் வல்லக்கோட்டை முருகன் கோவிலுக்கு செல்வது: வேல் யாத்திரை குறித்து, மோகன் எம்.எல்.ஏ., கூறியதாவது:வல்லக்கோட்டை முருகன் கோவிலுக்கு, 33வது ஆண்டாக யாத்திரை செல்கிறேன். எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் உண்டு. கடந்த, 57 ஆண்டுகளாக சபரிமலைக்கும் மாலை அணிந்து, விரதம் இருந்து, அய்யப்பனை தரிசித்து வருகிறேன். ஆண்டு தோறும் வல்லக்கோட்டை முருகன் கோவிலுக்கு, 2,௦௦௦ பக்தர்களுடன் செல்வேன். கொரோனா தொற்று பரவல் காரணமாக, இந்த ஆண்டு, 50 பேருக்கு தான் அனுமதி கிடைத்துள்ளது. வரும், 202௧ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், ஸ்டாலின் தலைமையில், தி.மு.க., ஆட்சி அமைய வேண்டும்; கொரோனா தாக்கத்திலிருந்து, உலக மக்கள் விடுபட வேண்டும். புயல் மழை வெள்ள பாதிப்புகளில் இருந்து மக்கள் மீள வேண்டும். இவை உட்பட, சில வேண்டுதல்களுடன், நானும், மற்றவர்களும் யாத்திரை மேற்கொள்கிறோம்.இவ்வாறு, அவர் கூறினார். பிறகு, இந்த எம்.எல்.ஏ.வை, கருணாநிதி கிண்டல் அடிக்காதது, கண்டிக்காதது, முன்னர் செய்திகள் வராதது வியப்பே. குங்குமம் பூசிய, ஒருவரைப் பார்த்தே, “என்ன நெற்றியில் ரத்தமா?,” என்ற கேட்ட தலைவர், இவரை எப்படி விட்டு வைத்தார் என்று தெரியவில்லை.


பாஜகவின் எழுச்சியால் தமிழக அரசியல் களம் மாறத் தொடங்கியுள்ளது[5]: ‘இந்து விரோதக் கட்சி’ என்ற முத்திரையை போக்கும் முயற்சியில் திமுகவினர் களமிறங்கி உள்ளனர்[6]. கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று, தனிப் பெரும்பான்மையுடன் தொடர்ந்து 2-வது முறையாக மத்தியில் ஆட்சி அமைத்துள்ள பாஜக, நாடு முழுவதும் கட்சியை வலுப்படுத்தி வருகிறது. 1 முதல் 3 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றுவந்த ஹரியாணா, வடகிழக்கு மாநிலங்களிலும் பாஜக ஆட்சி அமைத்துள்ளது. மேற்கு வங்கத்தில் இடதுசாரிகள், காங்கிரஸை வீழ்த்தி அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜிக்குகடும் போட்டியை ஏற்படுத்தியது, தெலங்கானாவில் சமீபத்தில் நடந்த சட்டப்பேரவை தொகுதி இடைத் தேர்தலில் ஆளும் தெலங்கானா ராஷ்டிர சமிதியை வீழ்த்தியது என்று பாஜகவின் எழுச்சி மற்றகட்சிகளை உற்றுநோக்க வைத்துள்ளது.

திமுகவை எதிர்த்து பிஜேபி செய்யும் பிரச்சாரம்: தமிழகத்தில் பாஜக இதுவரை 3 சதவீத வாக்குகளை தாண்டவில்லை. 1996 சட்டப்பேரவை தேர்தலில் தனித்து ஒரு தொகுதியில் வென்ற பாஜக, 2001-ல் திமுக கூட்டணியில் 4 தொகுதிகளை வென்றது. அதன் பிறகு எவ்வளவு முயன்றும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவால் ஓரிடத்தில்கூட வெல்ல முடியவில்லை. ஆனால், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் கணிசமான இடங்களில் வெல்ல பாஜக வியூகம் வகுத்துவருகிறது. அதிமுக அரசின் தடையையும் மீறி தமிழக பாஜக தலைவர் எல். முருகன் மேற்கொண்டு வரும் வேல் யாத்திரைக்கு கிடைத்த வரவேற்பால் அக்கட்சியினர் மகிழ்ச்சிஅடைந்துள்ளனர். திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் என்றுபாஜகவுக்கு செல்வாக்கே இல்லாத இடங்களிலும் வேல் யாத்திரைக்கு ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டது தமிழகத்திலும் பாஜக எழுச்சி பெறுகிறதோ என்ற எச்சரிக்கையை திமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு ஏற்படுத்தியுள்ளது. முகநூல், ட்விட்டர், யூ-டியூப், வாட்ஸ்-அப் போன்ற சமூக ஊடகங்களில் தமிழகத்தின் பிரதான கட்சிகளான அதிமுக, திமுகவுக்கு சவால்விடும் வகையில் பாஜக செயல்பட்டு வருகிறது. சமூக ஊடகங்களிலும், வேல் யாத்திரையின்போதும் திமுகவை இந்து விரோதக் கட்சி என்று பாஜகவினர் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இதனால் பெரும்பான்மை மக்களின் வாக்குகளை இழந்துவிடுவோமோ என்று திமுகவினர் நினைக்கத் தொடங்கியுள்ளனர்.

திமுக தனது வியூகத்தை மாற்றத் தொடங்கியுள்ளது: இதனால், திமுக தனது வியூகத்தை மாற்றத் தொடங்கியுள்ளது. கடந்த 20-ம் தேதி நாகை மாவட்டம் திருக்குவளையில் தனது சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சார பயணத்தை திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கினார். அப்போது, வேளாங்கண்ணி தேவாலயத்தின் தலைவருடன் காணொலியில் பேசுவதை சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தார். நாத்திக வாதம் பேசும் திமுக, இந்து அல்லாத மற்றமதத்தவர்களுடன் நெருக்கம் காட்டுவது ஏன் என்று சமூக ஊடகங்களில் பாஜகவினர் கிண்டலடித்தனர். அதைத் தொடர்ந்து மறுநாளே, திருவாவடுதுறை ஆதீனத்தை உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்துஆசி பெற்றார். இந்த படத்தை சமூகஊடகங்களில் பெரிய அளவில் திமுகவினர் விளம்பரம் செய்தனர். இந்து விரோதக் கட்சி என்ற குற்றச்சாட்டை மாற்றும் திமுகவின் உத்தியாகவே இதை அரசியல் நோக்கர்கள் கணிக்கின்றனர்.

© வேதபிரகாஷ்

30-11-2020


[1] தினமலர், வேல் யாத்திரை சென்ற தி.மு.., – எம்.எல்.., Updated : நவ 29, 2020 00:47, Added : நவ 28, 2020 22:50.

[2] https://www.dinamalar.com/news_detail.asp?id=2661203

[3] நியூஸ்.தமிழ், திமுக எம்எல்ஏ நடத்திய வேல் யாத்திரை !, By Newstm Desk | Sun, 29 Nov 2020

[4] https://newstm.in/tamilnadu/vail-pilgrimage-conducted-by-dmk-mla/cid1821284.htm

[5] தமிழ்.இந்து, தீபாவளிக்கு வாழ்த்துகோயில்களுக்காக போராட்டம்… ‘இந்து விரோதக் கட்சிஎன்ற முத்திரையை அகற்ற களமிறங்கும் திமுக: பாஜகவின் எழுச்சியால் மாறும் தமிழக அரசியல் களம், செய்திப்பிரிவு, Published : 30 Nov 2020 03:10 am; Updated : 30 Nov 2020 06:57 am

[6]  https://www.hindutamil.in/news/tamilnadu/606735-tamil-nadu-political-arena.html