பகவத் கீதை, கிருஷ்ண தூஷணம், திரிபு விளக்கம், இந்துவிரோதக் கூட்டங்களின் தொடரும் சட்டமீறல்கள், வன்முறைத் தூண்டும் பிரச்சாரம், நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்! [3]
உண்மையில் விற்கப்பட்டதா, இலவசமாகக் கொடுக்க பட்டதா?: இக்காலத்தில் புத்தகத்தின் விற்பனையை எப்படி கணக்கில் காட்டுகிறார்கள் என்று நன்றாகவே தெரியும். தமிழக வரலாற்றுப் பேரவையில் திக-புத்தகங்கள் இலவசமாக 300 பேராளர்களுக்குக் கொடுக்கப்பட்டன என்று முன்னர் எடுத்துக் காட்டப்பட்டது. அப்படியென்றால், அந்த 10 புத்தக்கங்கள், 300 வீதம் விற்றதாகக் கணக்குக் காட்டிக் கொள்ளலாம். ஆக டஜன் கணக்கில் பிரைவேட் லிமிடெட் கம்பெனிகள் நடத்தும் வீரமணிக்கு ஒரு லட்சம் பிரதிகள் விற்பது என்பது என்ன முடியாத காரியமா? அதற்கு ஒரு வரி மறுப்பு கிடையாது என்பதில்லை, அதாவது லட்சம் பிரதிகள் விற்று யாரிடம் போய் சேர்ந்தன என்று தெரியவில்லை. மேலும், அரைகுறையாக, அரைவேக்காட்டுத்தனமான, அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்கும், இத்தகைய சித்தாந்திகளை மற்றவர்கள் ஒரு பொருட்டாக எடுத்துக் கொண்டு, தங்களது நேரத்தை விரயமாக்க மாட்டார்கள் என்பதனையும் நோக்க வேண்டும்.
பகவத் கீதையை புனித நூலாக சைவர்கள் ஏற்கமாட்டார்கள்: கி.வீரமணி பேட்டி: தஞ்சையில் திராவிட கழகம் சார்பில் இந்தியாவின் தேசியப் புனித நூலாக பகவத் கீதையை அறிவிப்பதற்குக் கண்டனம் தெரிவித்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தஞ்சை வந்த திராவிட கழகதலைவர் கி.வீரமணி நிரூபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது[1]: “பகவத் கீதை முழுமையான இந்து நூலாக கருதப்படுவதில்லை. இந்து மதம் என்பது பல பிரிவுகளை கொண்டது. அந்த வகையில் வைணவர்கள் தான் பகவத் கீதையை இந்து மதத்தை சார்ந்தது எனக் கூறுகின்றனர். சைவர்கள் பகவத் கீதையை ஏற்கமாட்டார்கள். அதேபோல மற்ற பிரிவுகளை சார்ந்தவர்களும் இதை ஏற்று கொள்வதில்லை. எனவே இந்து மதத்தை இந்நூல் முழுமையாக உரிமை கொண்டாட முடியாது. ஆனால் மத்திய அரசு தேசிய புனித நூலாக பகவத் கீதையை திணிக்க முயற்சிக்கிறது. இந்தியை எப்படி அதிகாரம் படைத்த மொழியாக திணிக்கின்றனரோ அதேபோல சமஸ்கிருதத்தையும் திணிக்க ஆசைப்படுகின்றனர். அது போல இதையும் நிறைவேற்ற முயற்சி செய்கின்றனர். நம் நாட்டில் பல கலாசாரங்கள், பல்வேறு மதங்கள் பல மொழிகள் இருக்கின்றன. இந்த நாட்டின் என் மதம் மட்டும்தான் ஆள வேண்டும் எனச் சொல்லக் கூடிய பாசிச முறையிலான இந்த செயல்பாட்டை இந்தியாவே எதிர்க்கிறது”, இவ்வாறு அவர் கூறினார்[2]. பேட்டியின்போது தி.மு.க. தேர்தல் பணிக்குழு செயலாளர் எல்.கணேசன், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் ரா. திருஞானம், தமிழர் தேசிய முன்னணி பொதுச்செயலாளர் அய்யனாபுரம் சி.முருகேசன் ஆகியோர் உடன் இருந்தனர். ஆகா, சைவர்கள் மீதுதான், வீரமணிக்கு எத்தனை பற்றுதல்! சிண்டு முடித்து விடுகிறார்கள். சோழன் குடுமி சும்மா ஆடாது என்றெல்லாம் இவர்கள் கிண்டல் செய்வார்களே, இப்பொழுது வீரமணி அதே வேலையைத்தான் செய்துள்ளார்.
பகவத் கீதை ஒரு இந்து பயங்கரவாத நூல், கிருஷ்ணன் ஒரு இந்து பயங்கரவாதி: வினவு போன்ற தீவிர-கம்யூனிஸ்ட் ஊடகங்களும், “அதன்படி பகவத் கீதை ஒரு இந்து பயங்கரவாத நூல், கிருஷ்ணன் ஒரு இந்து பயங்கரவாதி என்பதற்கும் எண்ணிறந்த சான்றுகளை அடுக்க முடியும்,” என்று ஊளையிடுகின்றன[3]. சம்புகன் என்ற பெயரில் உதிர்த்துள்ள துவேசங்கள்[4]:
- மற்ற மதங்களின் கடவுளுக்குரிய தன்மை கிஞ்சித்தும் இல்லாத பாத்திரம் தான் கிருஷ்ணன்.
- தன்னை ஒருவன் ஆராதிக்க முன்வந்தால் அவனை ஏற்றுக்கொள்வேன் என்று சொல்லும் கிருஷ்ணன், நேர்மையான வாழ்க்கையை ஒழுகுவதை அதற்கு நிபந்தனையாக சொல்லவில்லை.
- அதனால்தான் ஊழல் பேர்வழிகளும், கொலைகாரர்களும் கொண்ட பாஜக கிருஷ்ணனை தூக்கிபிடிக்கிறது. திருப்பதி உண்டியிலில் விழும் எண்ணிறந்த கருப்புப் பணமும் அதையே காட்டுகிறது.
- எந்த வகையிலும் தகுதியற்ற கீதையை தேசியப் புனித நூலாக்குவோம் என்பது கயமை நிறைந்தது.
- அதன்படி பகவத் கீதை ஒரு இந்து பயங்கரவாத நூல், கிருஷ்ணன் ஒரு இந்து பயங்கரவாதி என்பதற்கும் எண்ணிறந்த சான்றுகளை அடுக்க முடியும்.
ஆக, இவர்களிடமிருந்து தான், உண்மையினை எல்லோரும் அறிய முடியும், என்ற ரீதியில், பொய்களை அள்ளிவிட்டிருக்கிறார்கள். இந்துவிரோத கூட்டங்கள் இதைப் படித்து சந்தோசம் அடையலாம்!
முடிவுரை: மேலே உள்ள அனைத்தையும் கவனமாகப் படித்து, விவாதித்தப் பிறகு, குறிப்பாக, கீழ்கண்ட அம்சங்கள் கவனத்திற்குக் கொடுக்கப் படுகின்றன:
- வீரமணி போன்ற இந்துவிரோத கும்பல்கள், உருப்படியாக, படித்து உண்மைகளை அறிந்து கொள்ளவில்லை. இந்துவிரோத குப்பைகளைத் திரட்டி, பேசி-எழுதி வருவடுதான் புலப்படுகிறது. இதிலிருந்தே, அவர்களது தகுதியும் வெளிப்படுகிறது. அதனால் தான் கண்டுகொள்ளாமல் இருக்கிறாற்கள். ஆனால், செய்யும் குற்றத்தைத் திரும்பத்திரும்ப செய்தால், ஒரு நிலையில் கட்டுப்படுத்த வேண்டிய, நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை உண்டாகிறது. நிச்சயமாக 2020களில், இவர்கள் 1960கள் போன்று வன்முறாஇ செயல்களில் ஈடுபட்டு, இந்துக்களை மிரட்ட முடியாது.
- ஆங்கிலேயர் காலம் முதல் 2020 வரை நடந்துள்ள நிகழ்வுகளை கவனித்தால், இக்கூட்டங்கள் திட்டமிட்டு தூஷணம் செய்து கொண்டிருக்கின்றன என்பதனை அறிந்து கொள்ளலாம். ஈவேரா சொன்னதைத் தான், நான் சொன்னேன் – எழுதினேம் என்று தப்பித்துக் கொள்ள முடியாது. “அவன் தான் கொலை செய் என்றான், நான் செய்தேன்,” என்று தப்பித்துக் கொள்ள முடியாது.
- பகவத் கீதை உறவினர்கள், அன்பர்கள் எல்லோரையும் கொல் என்பது உருவகமாகச் சொல்லப் பட்டிருக்கிறது. வாழ்க்கை நிலையாம்மைவிளக்கப் பட்டிருக்கிறது. அதனால், கீதை படிப்பவன் எல்லோரும் கொலை செய்வான் என்று விளக்கம் கொடுப்பது மடத்தனமானது. அதனால் தான், மக்கள் இத்தகைய விளக்கங்களை கண்டுகொள்வதில்லை.
- வாழ்க்கை நிலையின்மையை, மக்கள் அன்றாகப் புரிந்து கொண்டுள்ளார்கள். கடந்த ஆண்டுகளில் பூகம்பங்கள், புயல்கள், வெள்ளங்கள், சுனாமி, இப்பொழுது கொரோனா போன்ற தொற்று வியாதிகள் என்று மக்கள் அனுபவித்து, உண்மையினை அறிந்து கொண்டுள்ளனர்.
- சுருக்கமாக சொல்வதானல், கிருஷ்ணர் அர்ச்சுனனுக்கு குருக்ஷேத்திரத்தில் சொன்னது. இப்பொழுது, யாரும் குருக்ஷேத்திரத்தில் இல்லை. சண்டைப் போட்டுக் கொள்ளவும் தயாராக இல்லை.
- வர்ண சங்கிரமம், miscegenation, என்று இக்காலத்தில் விஞ்ஞான ரீதியில் சொல்லப் படுகிறது. அதனால், வீரியம் குறைகிறதா, பிறக்கும் குழந்தைகள் புதிய நோய்களுக்கு, அங்கஹீனங்களுக்கு உட்படுகிறார்களா இல்லையா என்பது, அனுபவிப்பவர்களுக்குத் தெரியும். அரசியல் செய்பவர்களுக்குப் புரியாது.
- மக்கள் எவ்வாறு பிறக்கின்றனர் என்று, இப்பொழுதைய விஞ்ஞான காலத்தில் அனைவரும் அறிந்து கொண்டுள்ளனர். 60-100 ஆண்டுகளுக்கு முன்னர் வேண்டுமானால், அடுத்தவர் சொல்லித் தெரிந்து கொள்ளவேண்டிய நிலை இருந்திருக்கலாம்.
- இப்பொழுது பெண்கள் எல்லா துறைகளிலும் சிறந்து விளங்குகிறார்கள், ஆண்களுக்கு நிகராக, ஏன், மேலும் சிறந்துள்ளார்கள் என்பது தெரிந்த விசயமாகிஅ உள்ளது. ஆகவே, இன்னும், பழமையைச் சொல்லி மிரட்டினால், யாருன் கண்டுகொள்ளப் போவதில்லை.
- எல்லாவற்றையும் விட குறிப்பாக, ஜாதிகளை ஒழிப்போம் என்று சொன்ன, சொல்கின்ற எவனும் ஜாதியை ஒழிப்பதாக இல்லை, மாறாக, ஜாதிகளை வைத்துக் கொண்டு அரசியல் செய்கிறான், பிழைத்துக் கொண்டிருக்கிறான்.
- எல்லோரும், எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதைத் தடுப்பதே இவர்கள் தாம். குண்டுசட்டியில் குதிரையை ஓட்டிக் கொண்டிருப்பதால், அதையும் மீறி தெரிந்து கொள்ள விடுவதில்லை.
© வேதபிரகாஷ்
29-07-2020
[1] மாலைமலர், பகவத் கீதையை புனித நூலாக சைவர்கள் ஏற்கமாட்டார்கள்: கி.வீரமணி பேட்டி, பதிவு செய்த நாள் : ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 21, 5:01 PM IST.
[2] http://www.maalaimalar.com/2014/12/21170111/Vegetarians-will-accept-the-Bh.html
[3] வினவு, பகவத் கீதையை தடை செய் !, By – சம்புகன்-வினவு, December 9, 2014.
[4] https://www.vinavu.com/2014/12/09/sushma-swaraj-wants-bhagavad-gita-to-be-national-scripture/