Posts Tagged ‘மவுன்ட் ரோடு’

சிலை உடைத்த நாத்திகர்களுக்கு சிலை வைக்கும் கலாச்சாரத்தை உண்டாக்கிய திராவிடத்துவம்! சிலை உடைத்த அதே இடத்தில் சிலை வைக்கப் படும்! (1)

செப்ரெம்பர் 2, 2021

சிலை உடைத்த நாத்திகர்களுக்கு சிலை வைக்கும் கலாச்சாரத்தை உண்டாக்கிய திராவிடத்துவம்! சிலை உடைத்த அதே இடத்தில் சிலை வைக்கப் படும்! (1)

சிலை உடைத்த நாத்திகஇந்துவிரோதிகளுக்கு சிலை வைத்தல்: ஈவேரா பிள்ளையார் சிலைகளை உடைத்தது, உச்சநீதி மன்றத்தில் வாங்கிக் கட்டிக் கொண்டது, நிறைய தமிழக மக்களுக்கு, ஏன் பெரியார்/ஈவேரா பற்றி ஆராய்ச்சி செய்பவர்களுக்கேத் தெரியாது. ஈவேரா தனக்குத் தானே சிலை வைத்துக் கொண்டதற்கு நியாயம் கற்பிக்கும் வாதங்கள் எல்லாமே, அவர்களிடத்திலிருந்து தான் வந்துள்ளன. ஆனால், மற்றவர்கள் மறுத்துள்ளது, மறைக்கப் படுகிறது. சிலை வைத்து, கொடிக்கம்பம் நட்டு இடங்களை ஆக்கிரமித்துக் கொள்வது, கம்யூனிஸ்டுகளுக்கு திராவிடக் கட்சிகளுக்கு கைவந்த கலையாக இருந்து வருகிறது. உயிரோடிருக்கும் மனிதர்களுக்கு சிலை வைக்கும் வழக்கம் கிடையாது, அவ்வாறு யாரும் நினைத்தும் பார்க்க முடியாது, ஏனெனில், அது அமங்கலமாகக் கருதப் பட்டு வருகிறது. எனவே, 1972ல் ஈவேராவுக்கு கடலூரில் மற்றும் 1975ல் கருணாநிதிக்கு மவுண்ட் ரோடில் சிலைகள் வைத்து, விழா கொண்டாடியது, நிச்சயமாக, பகுத்தறிவுக்கு மட்டுமல்லாது, சாதாரண மனோதத்துவ ரீதியில் நோக்கும் போதும் ஒவ்வாதது, முரண்பாடானது.

சிலை உருவாக்கும் தன்மை (Iconogenesis) மற்றும் சிலைகளை உடைக்கும் வன்மம் (Iconoclasm): சிலை உருவாக்கும் தன்மை (Iconogenesis) மற்றும் சிலைகளை உடைக்கும் வன்மம் (Iconoclasm) இரண்டையும் எளிதாகப் புரிந்து கொள்ளலாம். இந்த நாட்டில் துலுக்கர் பெரும்பாலாக அதனை மெய்ப்பித்துள்ளனர். பிறகு போர்ச்சுகீசியர், டச்சு, டேனிஸ், பிரெஞ்சு மற்றும் ஆங்கிலேய அடிப்படைவாத கிருத்துவர்களும் பால இடங்களில் வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் சிலையுடைப்பு-கோவில் இடிப்பு வேலைகளை செய்துள்ளனர். இப்பொழுது, திராவிடத்துவவாதிகள் செய்து வருகின்றனர். ஆகவே, திராவிடத்துவ வாதிகள், நாத்திகத்துடன் நடத்திக் காட்டிய சிலையுடைப்புகள், ஆபாச ஊர்வலங்கள் அவர்களது, கொடிய-குரூர-அசிங்கமான-ஆபாசமான மனப் பாங்குகளைத் தான் எடுத்துக் காட்டியுள்ளன. மறுபடியும் அவற்றை உயிர்ப்பித்து, சிலைகளை வைத்து, கொண்டாடும் பட்சத்தில், இக்காலத்திலும் அதே வன்மத்துடன், கொடிய சிந்தனைகளுடன், திய-முரண்பாடுகளுடன், வாழ்ந்து வருகிறாற்கள் என்பது புலப் படுத்துகிறது. இவர்களால், சமூகத்திற்கு என்றுமே ஆபத்துதான். தாலிபான், ஐசிஸ், போன்ற தீவிரவாதிகளுக்கும், இந்த திராவிடத்துவ அடிப்படை-தீவிரவாதிகளுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.

ஈவேரா கருணாநிதிக்கு சிலை வைக்க விரும்பியது (1971): அண்ணா மறைவுக்குப் பின்னர் முதல்வர் பதவியேற்றார், பின்னர் 1971-ம் ஆண்டு சட்டமன்றத்தை கலைத்துவிட்டு நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்ந்து தேர்தலை திமுக சந்தித்தது. மிகப்பெரிய வெற்றியை திமுக இந்த தேர்தலில் பெற்றது. ஆகஸ்டு 14, 1971 அன்று பெரியார் திடலில் நடைபெற்ற பாராட்டுக் கூட்டத்தில், பெரியார் ஏற்கெனவே தான் வைத்த கோரிக்கையை மீண்டும் அப்போதைய முதல்வர் கருணாநிதியை அருகில் வைத்துக்கொண்டே வைத்தார். செயற்கரிய சாதனை செய்தவர் என்பதால் சென்னை தலைநகரில் கருணாநிதிக்குச் சிலை வைக்கவேண்டும் என்று தம் விருப்பத்தை பெரியார் தெரிவித்தார்[1]. அதை மேடையில் இருந்த குன்றக்குடி அடிகளார் போன்றவர்கள் ஆமோதித்தனர்[2]. அதே மேடையில் கருணாநிதி சிலை அமைப்புக் குழுவையும் பெரியார் அறிவித்தார்[3]. அப்போது கூட்டத்தில் பேசிய கருணாநிதி திமுக சார்பில் பெரியாருக்கு ஒரு சிலை திறக்கிறோம், அதன் பின்னர் எனக்கு சிலை திறக்கலாம் என்று அதைத் தட்டிக்கழித்தார்[4]. அதாவது, உயிருடன் இருக்கும் போது, சிலை வைக்கக் கூடாது என்று அவருக்குச் சொல்லப் பட்டதால் மறுத்தார்[5].

1973, ஈவேராவுக்கு சிலை வைத்த போது, மறுபடியும் கருணாநிதி சிலை பேச்சு எழுந்தது: அதன் பின்னர் 1973-ம் ஆண்டு பெரியார் மறைவுக்குப் பின்னர் திமுக சார்பில், சென்னை அண்ணா சாலையில் (சிம்சன் அருகில்) பேராசிரியர் க.அன்பழகன், தலைமையில்,  மணியம்மை முன்னிலையில், பெரியார் சிலையை அப்போதைய முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார். சிலை திறப்பு விழாவில் பேசிய அப்போதைய தி.க.தலைவர் மணியம்மை, “சொன்னபடி பெரியாருக்கு சிலை வைத்துவிட்டீர்கள். பெரியாருக்கு சிலை திறந்த பின்னர் எனக்கு சிலை வைக்கலாம் என்று பேசிய நீங்கள் இனியும் சாக்குப்போக்கு சொல்ல முடியாது தி.க.சார்பில் உங்களுக்குச் சிலை அமைக்க அனுமதி தரவேண்டும் என்று மேடையிலேயே கோரிக்கை வைத்தார். திராவிடர் கழகம் சார்பில் அண்ணா சாலையில் முழு உருவ வெண்கலைச் சிலை அமைக்க உள்ளோம், இதற்கு மறுப்பு கூறக்கூடாது,” என்று பேசினார்[6].

சிலை விவகாரத்தில் திமுகஅதிமுக மோதல்: சிலைத் திறப்பை எதிர்த்து அதிமுக சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டது. துலுக்கர் எதிர்க்காதது ஆச்சரியமே! ஒருவேளை, அப்பொழுது தர்கா தான் இருந்தது என்று இப்பொழுது வாதிக்கலாம்! முதலமைச்சர் கலைஞர் வெளியூர் பயணத்தில் இருந்தபோது, இடையில் அ.தி.மு.க.வினால் ஏற்பட்ட சட்டப் போராட்டத்தையும் திராவிடர் கழகம் எதிர் கொண்டு வென்று, அண்ணாசாலை- ஜெனரல் பேட்டர்ஸ் சாலை சந்திப்பில் முறைப்படி அரசாணை பெற்று, 21.9.1975 அன்று பெரியதோர் திருவிழாவாக நடத்தினோம். (G.O. MS.No.877 Dated 21.5.1975, Rural Development and Local Administration Department). அந்த வழக்கை திராவிடர் கழகம் வென்று அண்ணாசாலை தர்கா அருகே 1975-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21-ம் தேதி கருணாநிதியின் வெண்கலச்சிலை திறக்கப்பட்டது.

1975ல் வைக்கப் பட்ட கருணாநிதி சிலை 1987ல் தகர்க்கப் பட்டது: 01-09-2021 அன்று, தமிழக சட்டப்பேரவையில் வீட்டுவசதித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய தஞ்சாவூர் திமுக உறுப்பினர் நீலமேகம், மவுண்ட் ரோடில் இருந்த கருணாநிதி சிலை பற்றி பேசியது, செய்தியாக வந்துள்ளது[7]. 1971 ஆம் ஆண்டு சென்னையில் கருணாநிதிக்கு சிலை வைக்க வேண்டும் என்று பெரியார் முடிவு செய்தார்[8]. அதன் பின்னர் 1975 ஆம் ஆண்டு அப்போதைய திராவிடர் கழகத் தலைவர் மணியம்மை, சென்னை அண்ணாசாலையில் கருணாநிதியின் சிலையை நிறுவி குன்றக்குடி அடிகளாரால் அந்த சிலை திறந்து வைக்கப்பட்டதாகவும் நீலமேகம் குறிப்பிட்டார்[9]. அதன் பின்னர், 1987 ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதி நடைபெற்ற சம்பவத்தில் சில விஷமிகள் கருணாநிதி சிலையை சேதப்படுத்தியதாகவும், அதே இடத்தில் மீண்டும் கருணாநிதி சிலை வைக்க, கருணாநிதி வேண்டாம் என தடுத்துவிட்டதாக கூறினார்[10]. அப்போது ‘சின்ன தம்பி என் நெஞ்சில்தான் குத்தினான். முதுகில் குத்தவில்லை’ என்று கருணாநிதி கூறினார்[11]. எனவே பெரியார் நினைத்ததை மணியம்மை செய்து காட்டியதின் அடிப்படையில் மீண்டும் அண்ணாசாலையில் கருணாநிதியின் சிலையரரசின் சார்பில் நிறுவ வேண்டுமென நீலமேகம் கேட்டுக்கொண்டார்[12].

© வேதபிரகாஷ்

02-09-2021


[1] வேதபிரகாஷ், கருணாநிதி சிலை திறப்புசிலை வைத்தல், எடுத்தல், கடத்தல், உடைத்தல் எல்லாமே திராவிட கலாச்சாரம், பண்பாடு, நாகரிகம் தான்! [1], டிசம்பர் 17, 2018.

[2] https://dravidianatheism2.wordpress.com/2018/12/17/politics-of-karunanidhi-statue-unveiled-by-sonia-and-rahul-dravidian-myth/

[3] வேதபிரகாஷ், கருணாநிதி சிலை திறப்புசிலை வைத்தல், எடுத்தல், கடத்தல், உடைத்தல் எல்லாமே திராவிட கலாச்சாரம், பண்பாடு, நாகரிகம் தான்! [2], டிசம்பர் 17, 2018

[4].https://dravidianatheism2.wordpress.com/2018/12/17/karunanidhi-statue-unveiled-by-sonia-arya-dravidian-politics-or-corruption/

[5]  ஜோதிடர்களிடம் தயாளு அம்மாள் விசாரித்ததும், அதனால் மறுத்ததும் சிலருக்கேத் தெரிந்த விசயமாக இருந்தது. இப்பொழுது துர்கா கோவிலுக்குச் செல்வது எல்லாம், ஊடகங்களில் வருவது போல, அப்பொழுது, ஊடகங்களில் செய்திகள் வெளியிடுவது இல்லை.

[6]  நாத்திகம், பகுத்தறிவு என்ற கொள்கைகள் கொண்ட கருணாநிதி, வீரமையிடன் ஏன் மறுத்தார் என்பதையும், “இனியும் சாக்குப்போக்கு சொல்ல முடியாது……… இதற்கு மறுப்பு கூறக்கூடாது,” என்பதிலிருந்தும், பின்னணியை அறிந்து கொள்ளலாம்.

[7] தமிழ்.ஏ.பி.பி.லைவ்.நியூஸ், அண்ணா சாலையில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு சிலைமுதல்வர் அறிவிப்பு, By: ராஜேஷ். எஸ் | Updated : 01 Sep 2021 12:53 PM (IST).

[8] https://tamil.abplive.com/news/tamil-nadu/kalaignar-karunanidhi-statue-in-anna-salai-says-cm-mk-stalin-in-tn-assembly-15249

[9] நியூஸ்.18.தமிழ், அண்ணா சாலையில் கருணாநிதி சிலை அமைக்கப்படும்முதல்வர் மு..ஸ்டாலின் உறுதி, Published by: Karthick S, First published:September 01, 2021, 17:07 IST.

[10] https://tamil.news18.com/amp/news/tamil-nadu/mkstalin-said-karunanidhi-statue-will-be-made-in-anna-road-skd-550141.html

[11] தினமணி, அண்ணாசாலையில் கருணாநிதிக்கு மீண்டும் சிலை அமைக்கப்படும்: முதல்வா் மு..ஸ்டாலின், By DIN  |   Published on : 02nd September 2021 03:01 AM.

[12] https://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2021/sep/02/statue-of-karunanidhi-will-be-erected-again-in-anna-salai-3691334.html