Posts Tagged ‘பெரியார்தாசன்’

சேஷாசல முதலியார் – சேஷாசலம் – பெரியார்தாசன் – “……………….” – சித்தார்த்தா – அப்துல்லாஹ் (1950-2013) காலமானார்!

ஓகஸ்ட் 19, 2013

சேஷாசல முதலியார் – சேஷாசலம் – பெரியார்தாசன் – “………………….” – சித்தார்த்தா – அப்துல்லாஹ் (1950-2013) காலமானார்!

Abdullah - in different poses

பெரியார்தாசன் என்கின்ற அப்துல்லா காலமானார்: பாரதிராஜாவின் `கருத்தம்மா’, `காதலர் தினம்’ உள்பட பல்வேறு தமிழ் திரைப் படங்களில் நடித்தவர் பெரியார்தாசன். இவர் சென்னை பச்சையப்பா கல்லூரியில் 38 ஆண்டுகள் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். 15-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த இவர் பட்டிமன்றம், கருத்தரங்குகளில் பங்கேற்று வந்தார். ம.தி.மு.க. நிர்வாகியான இவர் அந்த கட்சியின் உயர் நிலைக்குழு உறுப்பினராக இருந்தார். பெரியார்தாசன் வீடு திருவேற்காடு மகாலட்சுமி நகர் 6-வது தெருவில் உள்ளது. கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். கல்லீரல் கோளாறு காரணமாக குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு 1.25 மணிக்கு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 63. அவரது உடல் திருவேற்காட்டில் உள்ள அவரது வீட்டில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது[1]. பெரியார்தாசனுக்கு வசந்தா (62) என்ற மனைவியும், வளவன் (35), சுரதா (35) என்ற 2 மகன்களும் உள்ளனர்[2].

Seshachalam-Periyardasan-Siddharth-Abdullah

அவருடையஆன்மாசாந்தியடையபிரார்த்தனை: “அவருடைய ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை” என்று செய்யலாமா, கூடாதா என்று தெரியவில்லை. இருப்பினும், இந்தியப் பாரம்பரியப்படி, “அவருடைய ஆன்மா சாந்தியடையடைவதாக” என்று சொல்லிக் கொண்டு, அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்ளலாம். இணைதளங்களில் தேடியபோது, நக்கீரனில் வெளிவந்த கீழ்கண்ட செய்தி கண்களில் பட்டது. அது அப்படியே கொடுக்கப்படுகிறது. கதிரவன் என்பவர் அச்செய்தியைக் கொடுத்திருக்கிறார்.

Abdullah introduced as Periyarthasan in Dubai - hand bill

என்னநடந்ததுஇவர்கள்  (பெரியார்தாசன்மற்றும்மணிவண்ணன்) வாழ்க்கையில்?: வ்வப்போது சினிமாவில் நடித்து வந்த பெரியார்தாசன் அண்மையில் (2010) ஆத்திகரானார்.  அதுமட்டுமில்ல – இஸ்லாம் மதத்திற்கு மாறினார் (11-03-2010). இவர் மாதிரியே பெரியாரின் தீவிர பற்றாளர் மணிவண்ணன்.  இவர் இப்போது சாய்பாபா பக்கம் சாய்ந்திருக்கிறார். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தத்துவ இயல்[3] பேராசிரியராக பணிபுரிந்த பெரியார்தாசனை பாரதிராஜா சினிமாவுக்கு கொண்டு வந்தார்.  நடிப்போடு ரியல் எஸ்டேட், மல்டி லெவல் மார்க்கெட்டிங்கிலும் கால் பதித்தார். கடந்த 2004ம் ஆண்டு அன்பு பாலா நடித்த அம்மா, அப்பா, செல்லம் படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரியில் நடந்தது.   இதற்காக சென்னையில் இருந்து நான், (பேட்டி எடுக்க) பெரியார்தாசன், நடிகை சபீதா ஆனந்த் (நடிக்க)  மூவரும் ஒரு காரில் புதுச்சேரி சென்றோம். அப்போது பெரியார்தாசன், தனது மகன் வ.சி.வளவன் திருமணம் அழைப்பிதழ் கொடுத்தார்.  அது ஒரு புத்தகமாகவே இருந்தது.    அந்த திருமண அழைப்பிதழில் பெரியாரின் படம் அச்சிடப்பட்டிருந்தது.  உள்ளே திருக்குறள் இன்பத்து பாலுக்கு பெரியார்தாசன் எழுதிய விளக்கவுரை.

Periyardasan marriage invitation card

ஏன்பெரியாரின்படத்தைதிருமணஅழைப்பிதழில்அச்சிட்டுள்ளேன்: ஏன் பெரியாரின் படத்தை திருமண அழைப்பிதழில் அச்சிட்டுள்ளேன் என்று நினைப்பீர்கள்? என்று அவராகவே கேட்டு அவராக விளக்கம் சொல்லிக்கொண்டு வந்தார். சேசாசலம் என்கிற என் பெயரையே பெரியார்தாசன்னு மாத்திக்கிட்டேன்னா பார்த்துக்குங்க…….என்று பெரியார் மீது தான் கொண்ட பற்று பற்றி,  கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரையில் ஆரம்பித்து மரக்காணம் வரை சொல்லிக்கொண்டு வந்தார். நொங்கு கடை, இளநீர் கடைகளில் கார் நின்ற போது மட்டும் இடைவேளை. ஐந்து வருடங்களில் (2005-2010) அவர் வாழ்க்கையில் என்ன மாற்றம் நிகழ்ந்ததோ….தற்போது இறைவன் மீது நாட்டம் கொண்டிருக்கிறார்.  இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளார். இதே போல் பெரியாரின் தீவிர பற்றாளர் மணிவண்ணன்.   இதனால்தான் இவருக்கும் நடிகர் சத்யராஜூக்கும் நெருக்கம் அதிகமானது. இவர் இப்போது பெரியார் தொண்டர்களுக்கு அடுத்த அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.  கடந்த சில வாரங்களுக்கு முன் மஹாராஷ்டிராவில் இருக்கும் சீரடி சாய்பாபா சன்னதிக்கு சென்று வந்திருக்கிறார்[4]. கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்யும் அளவிற்கு என்ன நடந்தது இவர்கள் வாழ்க்கையில்?

Periyardasan-explaining his position-about doubting him

2013ல்பெரியார்தாசன், மணிமண்ணன்காலமானது: ஜூன் 2013ல் தான் நாத்திகரான மணிவண்ணன் (31-07-1954 – 15-06-2013) காலமானார். கதிரவன் நக்கிரனில் எடுத்துக் காட்டியுள்ளபடி, மணிவண்ணன் “கடந்த சில வாரங்களுக்கு முன் மஹாராஷ்டிராவில் இருக்கும் சீரடி சாய்பாபா சன்னதிக்கு சென்று வந்திருக்கிறார்[5]” என்றிருந்தால், இந்த மூன்று ஆண்டுகளில் மணிவண்ணன் ஆதிகரானாரா, கடவுளை நம்ப ஆரம்பித்தாரா, என்பதெல்லாம் நமக்கு தெரியாது. ஆனால், அவரது நண்பர் இந்த மூன்று ஆண்டுகளாக முஸ்லிமாக இருந்திருக்கிறார். (பகுத்தறிவு, நாத்திகம் இவற்றையெல்லாம் மூட்டைக் கட்டிவிட்டு, பெரியாரையும் ஒதுக்கி விட்டு) கடவுளை நம்பியிருக்கிறார். திராவிடர்களுக்குக் குழப்பமாகத்தான் இருக்கும். ஊடகங்களும்[6] “பெரியார்தாசன் மரணம்” என்றுதான்[7] செய்திகளை[8] வெளியிட்டிருக்கிறார்கள்[9].

Periyar Sasan - Abdullah etc

இதயத்தில்விழுந்தஇடிபெரியார்தாசன்மறைவுக்குவைகோஇரங்கல்: இதயத்தில் விழுந்த இடி என்று பேராசிரியர் பெரியார்தாசன் மறைவுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்[10]. அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், திராவிட இயக்கத்தின் கருத்துக் களஞ்சியக் கருவூலமான, என் ஆருயிர்ச் சகோதரர் அப்துல்லாஹ் பெரியார்தாசன், என்னையும், இயக்கத்தோழர்களையும் கண்ணீரில் துடிக்க வைத்து மறைந்து விட்டார். தந்தை பெரியாரை, மாணவப் பருவத்தில் தலைவராக ஏற்றுக்கொண்டு, சுயமரியாதை வீரராக, பகுத்தறிவு நெறியை மக்களிடம் பரப்ப, எழுத்தாலும், பேச்சாலும் அவர் ஆற்றிய பணிகள் ஈடு இணையற்றவை.

Periyardasan met Ajaya Malhothra

பொருளியல், தத்துவஇயல், உளவியல்பயின்றது: பச்சையப்பன் கல்லூரியில், பொருளியல் இளங்கலை, தத்துவ இயல் முதுகலை  பட்டங்களைப் பெற்று, இலண்டன் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் உளவியல் பயின்று, முனைவர் பட்டம் பெற்று, அமெரிக்காவின் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் ஆறு ஆண்டுகள் பேராசிரியராகப் பணி ஆற்றி, 34 ஆண்டுகள் பச்சையப்பன் கல்லூரியில், மெய்ப்பொருள் இயல் பேராசிரியராகப் பணி ஆற்றினார். அண்ணல் டாக்டர் அம்பேத்கருடைய, அனைத்து நூல்களையும் பழுதறக் கற்று,  ஆய்ந்து அறிந்து, அதில் அவர் பெற்ற பாண்டித்யத்துக்கு நிகராக இன்னொருவரைச் சொல்ல முடியாது. அதைப்போலவே, தந்தை பெரியாரின் எழுத்துகளையும், உரைகளையும், முழுமையாகக் கற்று உணர்ந்தவர்; அறிவாசானின் நம்பிக்கையையும், அன்பையும் பெற்று, திராவிடர் கழகத்தில் கொள்கை பரப்புச் செயலாளராகவும் இயங்கியவர்.

periyar nagar poster -claimimg periyardasan instead of Abdullah

தமிழ்ஈழவிடுதலை, பௌத்தம், பாலிமொழிகற்றல்முதலியன: தமிழ் ஈழ விடுதலைக்காக அரும்பாடுபட்டவர். மூன்று தமிழர்களின் உயிர்களை, தூக்குக் கயிற்றில் இருந்து விடுவிக்க, நான் போராடிய காலத்தில், தாமாக முன்வந்து, தன்னை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்துக் கொண்டு, கடந்த இரண்டு ஆண்டுகளாக, கழகத்தை மக்கள் மன்றத்தில் வலுப்படுத்திட, மேடை முழக்கத்தின் மூலமாக, அவர் ஆற்றி உள்ள பணிகள் அளப்பரியதாகும். புத்தரின் போதனைகளைப் பயில்வதற்காக, இலங்கைக்குச் சென்று, பாலி மொழியைக் கற்றுத் தேர்ச்சி பெற்றார். 56 நூல்களைத் தந்து உள்ள பெரியார்தாசன், அம்பேத்கர் தொகுத்த புத்தரும் அவர் தம்மமும் என்ற நூலை, தமிழில் மொழி ஆக்கம் செய்தார்.  அந்தநூல், தைவான் நாட்டில் மூன்று இலட்சம் படிகள் அச்சிடப்பட்டு, உலகெங்கும் பரப்பப்பட்டன.

Periyardasan died, Dinamalar

உடலைஎரியூட்டவும்வேண்டாம்; புதைக்கவும்வேண்டாம்: அவர் உடல் நலம் குன்றியபோது, ஜூலைத் திங்களில் அவரது இல்லம் சென்று சந்தித்து, பல மணி நேரம் உரையாடிக் கொண்டு இருந்தேன். இரண்டு நாள்களுக்கு முன்பு, ஆகஸ்ட் 16 ஆம் நாள், குளோபல் மருத்துவமனையில் அவரைச் சந்தித்தேன். மூன்று மணி நேரம் அவர் என்னிடம் மனம்விட்டுப் பேசிக்கொண்டு இருந்தார். அதுதான், அவர் கடைசியாகப் பேசியது என்று, அவரது பிள்ளைகள், நேற்று என்னிடம் தெரிவித்தனர். பேரறிஞர் அண்ணாவைக் கொத்திச் சென்ற புற்று நோய்தான், பெரியார்தாசனையும் நம்மிடம் இருந்து பறித்து விட்டது. ‘தான் இறந்தபிறகு, விழிகளை சங்கர நேத்ராலயா மருத்துவமனைக்குத் தந்து விடுங்கள்; உடலை எரியூட்டவும் வேண்டாம்; புதைக்கவும் வேண்டாம்; உடலை சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர்களது ஆராய்ச்சி படிப்புக்காகக் கொடுத்து விடுங்கள்’ என்று குடும்பத்தாரிடம் கூறியதற்கு ஏற்ப, அவ்விதமே அவரது உடல், சென்னை மருத்துவக் கல்லூரிக்கு வழங்கப்படுகிறது. இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்து, திராவிட இயக்கத்துக்கும், தமிழ் இனத்துக்கும் அருந்தொண்டு ஆற்ற  இருந்த, எங்கள் கொள்கை வைரத்தை, சாவு கொடூரமாகக் கொண்டு போய் விட்டதே என்ற வேதனையில் தவிக்கிறேன். அவரை இழந்து ஆற்றொணாத் துயரத்தில் வாடும், அவரது குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்க்கும் எனது கண்ணீர் அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று தெரிவித்துள்ளார்[11].

வாழ்க்கைக்குறிப்பு: சேசாசலம் 1950ம் ஆண்டு வட ஆற்காடு மாவட்டத்தில் உள்ள அகரம் என்ற கிராமத்தில், சைவவேளாளர் குடும்பத்தில் பிறந்தார். சேசாசல முதலியாராக, இந்துமத நம்பிக்கையாளராக இருந்தார். 1980ல் பெரியாரின் தொடர்பினால், “பெரியார்தாசன்” ஆனார். திராவிட சித்தாந்தத்தில் ஊறியிருந்தாலும், பல நம்பிக்கைகளை ஆராய்ந்து கொண்டிருந்ததால், சில காலத்திற்கு கிருத்துவராகக் கூட இருந்தார் என்று சொல்லப்படுறது. பிறகு பௌத்தராகி, “சித்தார்த்” என்ற பெயரை வைத்திருந்தார். 2010ல் முஸ்லிம் ஆனார்.

காலம் பெயர் மதம் / நம்பிக்கை
c.1950-70 சேசாசல முதலியார் சைவம்/ இந்து
c.1970-80 சேசாசலம் பகுத்தறிவுவாதி
c.1980-2008 பெரியார்தாசன் நாத்திகம் / இந்துவிரோதம்
c.2008-10 சித்தார்த் பௌத்தம் / இந்துவிரோதம்
c.2010-13 அப்துல்லா இஸ்லாம் / கடவுள்-மதம் நம்பிக்கையாளர்

C = circa = approximately = நம்பிக்கை, மதநம்பிக்கை, கடவுள் நம்பிக்கையைப் பொறுத்த வரையிலும் நிலைமை மாறியுள்ளதால், இப்படி குறிப்பிடப் பட்டுள்ளது.

யார் மறைந்தது, எது கடந்தது, எது நின்றது?: சித்தாந்த கலவைகளினால், குழப்பங்களினால், நம்பிக்கைச் சிதறல்கள், மோதல்கள் இவற்றினால் உருவானவ போலிருந்தார் என்று அவரது வாழ்க்கைக் குறிப்புகள் காட்டுகிறது. ‘தான் இறந்தபிறகு, விழிகளை சங்கர நேத்ராலயா மருத்துவமனைக்குத் தந்து விடுங்கள்; உடலை எரியூட்டவும் வேண்டாம்; புதைக்கவும் வேண்டாம்; உடலை சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர்களது ஆராய்ச்சி படிப்புக்காகக் கொடுத்து விடுங்கள்’ என்று குடும்பத்தாரிடம் கூறியதிலிருந்து அத்தகைய போராட்டங்கள் வெளிப்படுகின்றன. 11-03-2010 முதல் 18/19-08-2013 அன்று வரை முஸ்லிமாக இருந்த அப்துல்லா இறந்தால், யார் இறந்தது என்று உலகம் சொல்லும்?

  • இந்துவாக இருந்த சேஷாசல முதலியார் இறந்தாரா?
  • நாத்திகன் சேஷாசலம்இறந்தாரா?
  • பெரியார்தாசன்  இறந்தாரா?
  • “……….” –இறந்தாரா?
  • சித்தார்த்தா என்ற பௌத்தர் –இறந்தாரா?
  • அப்துல்லாஹ் என்ற முஸ்லிம் இறந்தாரா?

இந்தியன் இந்தியனாக இருந்தாலே போதும் – மதம் மாறவேண்டிய அவசியம் இல்லை.

© வேதபிரகாஷ்

19-08-2013


[3] சைக்காலாஜி / மனோதத்துவம் என்றும் குறிப்பிடுகிறார்கள்.

[4] கதிரவன், என்னநடந்ததுஇவர்கள்  வாழ்க்கையில்?, நக்கீரன்,   http://cinema.nakkheeran.in/Talkies.aspx?T=360

[5] கதிரவன், என்னநடந்ததுஇவர்கள்  வாழ்க்கையில்?, நக்கீரன்,   http://cinema.nakkheeran.in/Talkies.aspx?T=360

[10] தினமணி, 19-08-2013

திருமாவளவனுக்கு கிருத்துவர்கள் சரியான பட்டம் கொடுக்கிறார்கள்!

ஏப்ரல் 27, 2010

திருமாவளவனுக்கு கிருத்துவர்கள் சரியான பட்டம் கொடுக்கிறார்கள்!

திருமாவின் இறைத்தொண்டு: திருமாவளவன் பெரியார்தாசன் மாதிரி, கிருத்துவர்களுக்கு என்றும் புதியவர்கள் அல்லர். திருமா கிருத்துவர் என்ற பேச்சு ஏற்கெனவே உள்ளது. 80களில் கிருத்துவர்கள் நடத்தும் எல்லா கருத்தரங்களிலும் பார்க்கலாம் [குறிப்பாக AICUF, ஐக்கிய ஆலயம் …………..முதலியன]. “கிருத்துவர்களின் காவலன்” என்று போஸ்டர்கள் ஒட்டப் பட்டிருப்பதை பார்த்திருப்பவர்களுக்கு இது ஒன்றும் ஆச்சரியம் இல்லை. கிருஸ்துமஸ் கொண்டாட்டத்தைப் பார்க்க்க வேண்டுமே, அங்குதான் திருமாவின் உண்மையான உருவத்தை பார்க்கலாம். இறைத் தொண்டின் மகிமையே மகிமைதான்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், எம்பியுமான தொல். திருமாவளவனுக்கு இறையியல் கல்லூரியான குருகுலம் அகாடமி சார்பில் டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது. இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் வன்னி அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் கால் நூற்றாண்டுக்கும் மேலாக சமூகப் பணி ஆற்றி வருகிறார். இந்தப் பணியைப் பாராட்டி உலக அளவில் செயல்பட்டுவரும் இறையியல் கல்லூரியான குருகுலம் அகாடமி, டாக்டர் (முனைவர்) பட்டம் வழங்க உள்ளது. 2009ம் ஆண்டுக்கான டாக்டர் பட்டத்தை திருமாவளவனுக்கு இக் கல்லூரி வரும் 18.07.2010 அன்று வழங்க உள்ளது என்று கூறியுள்ளார்.  சமூகப் பணி மற்றும் இறைதொண்டு ஆகியவற்றில் சிறப்பான முறையில் பணியாற்றிய சிந்தனையாளர்கள் மற்றும் களப் போராளிகளுக்கு இக்கல்லூரி கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக டாக்டர் பட்டம் வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கிருத்துவர்கள் முந்தி கொண்டார்கள் போலும்: பெரியார்தாசன் மாறியதும், முஸ்லீம்கள் திருமாவிற்கு வலை வீசினர், “வாருங்கள்”, என்று வரவேற்பு கொடுத்து, சிவப்புக் கம்பளத்தினையும் விரித்தனர். ஆனால், நிலைமையை அறிந்து உசாராகி விட்டனர் கிருத்துவர்கள்!

பெரியார்தாசனை காண்காணிக்க வேண்டுமாம் – சொல்வது முஸ்லீம்கள்!

ஏப்ரல் 10, 2010

பெரியார்தாசனை காண்காணிக்க வேண்டுமாம் – சொல்வது முஸ்லீம்கள்!

இதெல்லாம் வேடிக்கையாகவே உள்ளது.

அதிரடியாக, பரபரப்புடன், அந்த ஆளை ரியாத்திற்கு அழைத்து வந்து சுன்னத் செய்து “முஸ்லீம்” என்று சொல்லி, மெக்கா-மெதினா தரிசனத்திற்கு அழைத்துச் சென்று………………….படங்கள் எல்லாம் எடுத்து காட்டி, இப்பொழுது “கண்காணிக்கப் படுவார்” என்றால் என்ன?

பெரியார்தாசனை கண்காணிக்கும் அதென்ன புதிய நிலைபாடு?

http://markaspost.wordpress.com/2010/04/10/பெரியார்தாசனை-கண்காணிக்/

பெரியார்தாசன் என்ன நோக்கில் இஸ்லாத்தை ஏற்றார் எனத் தெரியவில்லை! நாங்கள் அவரை கண்காணித்துக் கொண்டு இருக்கிறோம் என்ற தனி நபர் ஜமாஅத்தின் நிலைப்பாடு பற்றி மார்க்க அடிப்படையில் சரியா என்பதை அறிந்து கொள்ளும் முன் இதுபோன்ற விஷயங்களில் ஏற்கனவே அந்த ஜமாஅத்தின் நிலைப் பாடு என்ன? என்பதை பார்ப்போம்!

முதலாவதாக, இதுவரை இஸ்லாத்தை ஏற்ற அனைவருக்கும் இதே நிலைதான் எடுக்கப்பட்டதா?
தங்கள் ஜமாஅத்தில் வந்து இஸ்லாத்தை ஏற்றால் இந்த அளவு கோலைக் கொண்டுதான் அவர்களை அளந்தார்களா? கண்காணித்த பிறகுதான் அவர்கள் அறிமுகப்படுத்தப்பட்டர்களா?

அய்யம்பேட்டை சகோதரிகளை இப்படித்தான் கண்காணித்து அனைத்து ஊடகங்களில் எல்லாம் முன்னிலைப்படுத்தினார்களா? தவ்ஹீத் எழுச்சி மாநாட்டில் மேடை ஏறி உரை நிகழ்த்த அனுமதிக்கப்பட் டார்களா?

ஏ.ஆர். ரஹ்மானை மேடையேற்ற முடியுமா? என்றெல்லாம் கேட்கிறார்களே! ஏ.ஆர். ரஹ்மான் இன்றுதான் இஸ்லாத்தை ஏற்றார் என்றால் அவரையும் இதே நிலைபாடு கொண்டுதான் வரவேற்று அதன் பின் அவருக்கு மார்க்கத்தை எடுத் துச் சொல்ல வேண்டும்.

அவரது நிலை என்ன என்பது பற்றி நம்மிடத்தில் கேள்வி இல்லை. “அவர்களுக்காக நீர் விசாரிக்கப்பட மாட்டீர்” -(அல்குர்ஆன்) என அல்லாஹ் கூறுவதாலும், வந்தவர்களுக்கு நேர்வழியை எடுத்துச் சொல்லாமல் எட்டி நின்று கண்காணித்து “விழுந்த பின் தான் சுட்டிக் காட்டுவோம்’ என்பது என்ன நிலைபாடு?

மார்க்க அடிப்படையில் இஸ்லாத்தை ஏற்றவர்களின் உள்ளத்தைப் பிளந்து பார்க்கும் செயலைச் செய்யக் கூடாது என்பதை காலீத் பின் வலீத் (ரலீ) சம்பவத்திலும், உஸôமா (ரலி) சம்பவத்திலும் நாம் காண்கிறோம்.

நாளை அவர் வழிகெட்டு விட்டால்… என்ற கேள்வியே முதலில் தவறாகும். நபி (ஸல்) அவர்கள் காலத்தில் அவர்களிடத்திலே கலிமா சொல்லி இஸ்லாத்தை ஏற்ற எத்தனையோ பேர் இஸ்லாத்தை விட்டு வெளியேறிய சம்பவத்தை மிஃராஜின் போதும், பொய்த் தூதரை பின்பற்றிச் சென்ற சம்பவத்திலும் நாம் அறிந்திருக் கின்றோம்.

நபி (ஸல்) அவர்களின் காலத்திற் குப் பின்னும், அபுபக்கர் (ரலி) ஆட்சிக் காலத்தில் ஜகாத்தை மறுத்து ஒரு கூட்டமும், பொய்த் தூதர்களைப் பின்பற்றி ஒரு கூட்டமும் வழி தவறிச் சென்றது. உஸ்மான் (ரலி) காலத்தில் கார்ஜியாக்கள் என்று ஒரு பிரிவினர் வழிகெட்டுப் போனதை அறிந்திருக்கிறோம். இப்படி நபி (ஸல்) அவர்களால் உறுதிமொழி எடுத்த எத்தனையோ பேர் வழிகேட்டில் வீழ்ந்திருப்பதை அறிந்திருக்கிறோம்.

வழிகேடும், நேர்வழியும் நம் கையில் இல்லை. ஒருவர் சொர்கத்துக்குரிய காரியத்தை செய்து கொண்டே இருப்பார், இறுதி நேரத்தில் நரகத்திற்குரிய காரியத்தைச் செய்ய வைத்து அவரை அல்லாஹ் நரகத்திற்குரியவராக்குவான். ஒருவர் நரகத்திற்குரிய காரியத்தை செய்து கொண் டே இருப்பார், இறுதி நேரத்தில் சொர்க்கத்துக்குரிய காரியத்தை செய்ய வைத்து அவரை சொர்க் கத்திற்கு உரியவராக ஆக்குவான். (-புஹாரி)

நம்மில் எத்தனையோ பேர் வழிகேட்டில் இருந்து நேர்வழிக்கும், நேர்வழியில் இருந்து வழிகேட்டிற்கும் சென்றுள்ளதாக நீங்கள் கூறுகின்றீர்கள். ஏன்? ஆலிமான நீங்களே கூட இறை மறுப்புக் கொள்கைக்குச் சென்று நேர்வழிக்கு திரும்பி வந்ததாகக் கூறியுள்ளீர்கள்! இவ்வாறு இருக்கையில் இஸ்லாத்தை ஏற்ற ஒருவரின் உள்ளத்தை ஆராய மல் அவர்களை வரவேற்பதும், முக்கியத்துவம் அளிப்பதும் மார்க்க அடிப்படையில் தவறில்லையே!

புதிதாக இஸ்லாத்தை ஏற்ற முஹாஜிர்களுக்கு, அன்சாரிகளுக்கு இல்லாத முக்கியத்துவத்தை நபி (ஸல்) அளித்ததை நாம் ஹதீஸ்களில் பார்க்கிறோம். எந்த அளவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது என்றால், “நீங்கள் நீதமாக நடக்கவில்லை, புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து எங்களை புறக்கணிக்கின்றீர்கள் என அன்சாரிகள் நபி (ஸல்) அவர்களைப் பார்த்து கேட்கும் அளவிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

மக்கா வெற்றியின்போது “அபூஸுஃப்யான் வீட்டில் தஞ்சமடைபவர்களுக்கு பாதுகாப்பு உத்தரவாதம்” வழங்குமளவுக்கு இஸ்லாத்தை ஏற்றவர்களுக்கு சிறப்பும், கனிமத்து பொருட்களில் கூடுதல் பங்கும் வழங்கப்பட்டிருக்கும்போது நாம் ஏன் இதிலிருந்து படிப்பினை பெறாமல் மற்றவர்கள் மேடையில் பேசியபின் நமது மேடையில் ஏறுவதா? என்றும், இது நமது ஜமாஅத் நிலைப்பாடு! என்றும் கூறி நபி (ஸல்) நிலைப்பாட்டை புறந்தள்ளுவது சரியாகுமா?

நாத்திகரான கோவை ராம கிருஷ்ணனும், இணை வைப்பாள ரான இந்து மக்கள் கட்சி அர்ஜுன் சம்பத்தும், தாங்களும் இந்த விஷயத்தில் ஒரே நேர்கோட்டில் இணைந்து “”அவரை கண்காணிக்கிறோம்” என ஒரே வார்த்தைகளை வெளிப்படுத்தி இருப்பதன் மூலம், உங்கள் சிந்தனை காவியாகவோ, கருப்பாகவோ மாறிவிடாமல் இறைவனிடம் பிரார்த்திக்கிறோம்.

தகவல் – மங்கோலியன்

நன்றி; www.intjonline.in மற்றும் சமுதாய மக்கள் ரிப்போர்ட்

அன்புடன்;சதாம் ஹுசைன்

ஆக இஸ்லாத்திற்கு மாறியவர்கள் பற்றி இந்த அளவிற்கு ஆராய்ச்சி நடத்துகிறார்கள் என்றால், “மாற்றப்பட்டவர்களின் நிலை” பற்றி முஸ்லீம்கள் ஆராய்ச்சி செய்தது / செய்யாதது என்ன? நன்றாக படித்து, ஒருநிலையில் தாங்கள் ஏதோ ஒரு காரணத்திற்காகத் தான் மதம் மாற்றப்பட்டுள்ளோம் என அறிந்தால், அவர்களும் தங்களது நிலைப்பாடு பற்றி சிந்திக்க ஆரம்பித்து விடுவார்களே?

இப்படி எல்லா மதம் மாறிய முஸ்லீம்களும் கண்காணிக்கப் படுவார்களா?

நம்பிக்கையின் மீது ஆதாரமாக மதம் மாறினாரா அல்லது மாற்றப் பட்டரா என்ற கேள்வியும் அதற்கான பதிலும் பெரியார்தாசன் நண்பர்களிடையே ஏற்கெனவே உள்ளன, அவை தாராளாமாகவே பேசப் பட்டன. “பணத்திற்காகத்தான்” மாறினார் என்பது முதல் குற்றச்சாட்டு. அந்நிலையில் “நம்பிக்கை” போய்விடுகிறது.

மனிதன் தான் எப்படியாவது விளக்கம் அளித்து தன்னுடைய செயலை நியாயப் படுத்திக் கொள்ளலாம். அந்நிலையில் படித்த சேஷாசலத்திற்கு /பெரியார்தாசனுக்கு /  ……………க்கு/ சித்தார்தா……னந்தாவிற்கு / அப்துல்லாவிற்கு எந்த பிரச்சினையும் இல்லை.

அதுமட்டுமல்ல, சிலர் அப்துல்லாவிற்கே அறிவுரை அளிக்க ஆரம்பித்து விட்டனர்:

ஐயா , பேராசிரியர் அவர்களே!

நீங்கள் இஸ்லாத்தில் இணந்தது எங்களுக்கு பெருமைதான் என்றாலும் என் மனதுக்குள் ஒரு பயம் நிலவி வருகிறது. இது சுன்னத், அது ஹராம், இதைச் செய்யவேண்டும், அதைச் செய்யக்கூடாது  என்று இலவச அறிவுரை சொல்ல சில அரைகுறை ஆலிம்கள் வருவார்கள். உங்களுக்கே தெரியாமல் உங்களை மூளைச்சலவை செய்வார்கள். நீங்கள் மனோவியல் பேராசிரியர் மட்டுமல்ல சிகிச்சையாளரும்கூட, எனவே குர்ஆனையும் ஹதீஸையும் ஆராய்ந்ததுபோல் அவர்கள் சொல்வதையும் ஆய்ந்து ஆராய்ந்து ஏற்றுக்கொள்ளுங்கள். இது ஒன்று.

மற்றொன்று, ‘இறைவன் ஒருவன்தான், அவனுக்கு இணைவைக்கக்கூடாது, அவனுக்கு இணையாக எதுவுமில்லை’ என்ற செய்தி நபிகளாருக்குப் பிறகு இந்திய துணைக்கண்டம் முதல் எல்லா நாடுகளுக்கும் பரப்பியவர்கள் ஒரு சிலர். அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதையும் இறை தியானத்தில் மூழ்கி மக்களின் வாழ்க்கை முறை, உணவு, நாகரீகம், பண்பாட்டுமுறை இவைகள் அனைத்தையும் மாற்றி நேர்வழிப் படுத்தியவர்கள். சுருக்கமாகச் சொன்னால் இறைவன் சொன்னதை, நபிகளார் சொன்னதை மக்களின் அறிவுக்குத் தகுந்தவாறு போதனை புரிந்தவர்கள். சூஃபிகள் என்றழைக்கப்படும் இவர்களை சிலர் தவறாகச் சித்தரிக்கிறார்கள் என்பதை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

http://abedheen.wordpress.com/2010/04/10/jaffer-periyardasan/

எதற்கு இவ்வளவு கட்டுப்பாடு?

பாவம், ஒருவேளை, விட்டால் ஓடிவிடுவாரோ என்னவோ?

முஸ்லீம்கள் மதம் மாற்றும் பிரச்சினை இன்னுமொரு கோணத்தில் செல்கின்றது என்பதனை அறியலாம்.

அம்பேத்காரை அப்துல்லாஹ்-பெரியார்தாசன் பிறகு ஏமாற்றும் கருணாநிதி

ஏப்ரல் 5, 2010

அம்பேத்காரை அப்துல்லாஹ்-பெரியார்தாசன் பிறகு ஏமாற்றும் கருணாநிதி

அம்பேத்கார் தனது சட்டக்கூர்மையுடன் தான் பிரிவு 25ல், “இந்து” என்றால் அதில் ஜைன, பௌத்த, சீக்கியர்கள் அடங்குவர் என்று விளக்கங்கொடுத்து சேர்த்தார்.

Explanation-II: In sub-clause (b) of clause (2), the reference to hindus shall be construed as including a reference to persons professing he Sikh, Jaina or Buddha religion, and the reference to Hindu religious institututions shall be contstrued accordingly.

The Constitution (Scheduled Caste) Order 1950ன் படி “இந்துக்கள்” அதாவது சீக்கிய, பௌத்த மதத்தவர்களுக்கும் கொடுக்கப் பட்டது.

இங்குதான், உச்சநீதி மன்றம் தனது – சூசை எதிர் இந்தியா – AIR 1986 SC 733 என்றதில் SC என்றாலே இந்துமத்தைத் தான் குறிக்கும் என்று தீர்ப்பளித்தது!

——————————————————–
The Hon’ble Supreme Court in the case of Soosai vs Union of India (AIR 1986 SC 733) categorically held that SCs converted to Christianity cannot have SC status:“…………..it cannot be disputed that the caste system is a feature of the Hindu social structure. It is a social phenomenon peculiar to Hindu society. The division of the Hindu social order by reference at one time to professional or vocational occupation was moulded into a structural hierarchy which over the centuries crystallized into a stratification where the place of the individual was determined by birth” (para.7).

“During the framing of the Constitution, the Constituent Assembly recognized “that the Scheduled Castes were a backward section of the Hindu community who were handicapped by the practice of untouchability”, and that “this evil practice of untouchability was not recognized by any other religion and the question of any Scheduled caste belonging to a religion other than Hinduism did not therefore arise” B. Shivaji Rao: the Framing of India’s Constitution: A study, p.771” (Ibid).

“It must be remembered that the declaration incorporated in paragraph 3 (of the Constitution (Scheduled Caste) Order, 1950) deeming them to be members of the Scheduled Castes was a declaration made for the purposes of the Constitution. It was a declaration enjoined by clause (1) of Article 341 of the Constitution (para.8).

“To establish that paragraph 3 of the Constitutional (Scheduled Castes) Order, 1950 discriminates against Christian members of the enumerated castes, it must be shown that they suffer from comparable depth of social and economic disabilities and cultural and educational backwardness and similar levels of degradation within the Christian community necessitating intervention by the State under the provisions of the Constitution (Ibid).

“It is not sufficient to show that the same caste continues after conversion. It is necessary to establish further that the disabilities and handicaps suffered from such caste membership in the social order of its origin-Hinduism-continue in their oppressive severity in the new environment of a different community (Ibid).

“It is therefore, not possible to say that the President acted arbitrarily in the exercise of his judgment in enacting paragraph 3 of the Constitution (Scheduled Caste) Order, 1950” (Ibid)
—————————————————-
ஆகவே, இப்பொழுது கிருத்துவர்களோ, கருணநிதியோ அம்பேத்காரை ஏமாற்ற வேந்தும் என்று துடிக்கிறார்கள் போலும்.

அதுமட்டுமல்லாது, ஏசுவையே எமாற்றத் துடிக்கிறார்கள்.

அம்பேத்கார் பெயரைச் சொல்லிக் கொண்டே, ஏசுவையும், புத்தரையும் ஏமாற்றிய பெரியார்தாசன் / சித்தார்த்தா………………..னந்தா, முஸ்லீமாக மாறி “அப்துல்லாஹ்” என்று சொல்லிக் கொள்கிறார்!

அதே மாதிரி, கருணாநிதியும் தப்பான வழியைத் தான் கிருத்துவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கிறார்.

ஏற்கெனெவே, கிருத்துவ மதம், அதன் நம்பிக்கை, நம்பிக்கையாளர்கள் முதலியன உலகமெங்கும் குறைந்து வருகின்றன. இப்பொழுது கருணாநிதியைப் பின்பற்றினால், போதும், அதனை வேகமாக செய்து விடலாம். இல்லை, நாங்கள் அப்படித்தான் செய்வோம் என்றால், அது அவர்களுடைய சுதந்திரம்!

ஏசுவிற்கே நாமம் போடட்டும்!

சேஷாசல முதலியார் – சேஷாசலம் – பெரியார்தாசன் – “……….” – சித்தார்த்தா – அப்துல்லாஹ்!

மார்ச் 14, 2010

சேஷாசல முதலியார் – சேஷாசலம் – பெரியார்தாசன் – “……….” – சித்தார்த்தா – அப்துல்லாஹ்!

சேஷாசல முதலியார் என்றிருந்த சேஷாசலம்: சேஸாசல முதலியார் என்றிருந்த சேஸாசலம் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்துறையில் விரிவுரையாளராக இருந்தார். அவர் வேலைக்கு வந்ததே சாதி அடிப்படையில்தான். அவ்வப்போது தெலுங்கில் பேசிக் கொண்டும் இருப்பார்.

பெரியார்தாசன்: திகவினர் தொடர்பு ஏற்பட்டபோது, அதைப் பயன்படுத்திக் கொண்டு முன்னேரலாம் என்று அவர்கள் மேடையிலே பேச்சாளராக இடம் பிடித்தார். “பெரியார்தாசன்” ஆனார்.

கிருத்துவர் ஆனாரா? சினிமாவில் சந்தர்ப்பம் கிடைத்ததும் வேறு பாதையில் செல்ல ஆரம்பித்தார். அப்பொழுது ஒரு கிருத்துவ தொடர்பால், கிருத்துவராகி விட்டார் என்ற பேச்சும் அடிபட்டது. குறிப்பாக மாலைநேர குடிபார்ட்டி தொடர்ந்ததால் ஏற்பட்ட விளைவு.

சித்தர்த்தா: இடையில் புத்தரைப் பற்றிய புத்தகத்தை மொழிபெயர்த்தபோது கிடைத்த சந்தர்பத்தைப் பயன் படுத்திக் கொண்டார். “சித்தார்தா …………………னந்தா.” ஆனார்.

அப்துல்லாஹ்: இப்பொழுது ரியாத்தில் தாவா சென்டரில் சென்றவுடன், ஏற்கெனவே தீர்மானித்தப்படி 11-03-2010 (வியாழக்கிழமை) மதம் மாறி அப்துல்லாஹ் ஆனார்!

இப்படியாக இந்துவான சேஷாசலம், நாத்திக பெரியார்தாசனாகி, “………………..” கிருத்துவராகி (?), பௌத்த மதத்தில் சித்தார்த்த……..னந்தாவாகி, இப்பொழுது   அப்துல்லாஹ் ஆகியிருக்கிறாராம்!

கடவுளர்கள் பாவம்! இத்தனைக் கடவுளர்களைத் தூற்றி, ஏமாற்றி, போற்றி………………..தூற்றி, ஏமாற்றி, போற்றி…………..எப்படித்தான் மனம் வருகிறதோ. மதம் மாற்றத்தில் மனம் மாறுதல்தான் முக்கியம். அப்படியிருக்கும்போது, இப்படி மனம் மாறுவது கண்டு வேடிக்கையாகத்தான் இருக்கிறது!  இதை பகுத்தறிவு புரட்சி என்பதா, ஆன்மீக அபச்சாரம் என்பதா, தெய்வீக விபச்சாரமென்று சொல்வதா,……………..”சேஷுவின்” விளையாடல்……………யா அல்லாஹ்…………….!

  • மனம் மாறியதா, மதம் மாறியதா?
  • மதம் மாறியதா, மனிதன் மாறினானா?
  • மனிதன் மாறியதால் கடவுள் மாறினானா?
  • உள்ள மனிதனின் உள்ளம் மாறுமா?
  • நாத்திகம் எப்படி ஆத்திகம் ஆகும்?
  • கற்பிழந்தவள் எப்படி கற்பைத் திரும்பப் பெறுவாள்?
  • கடவுளை நம்பி, மறுத்து, ………..நம்பி, மறுத்து,……..நம்பி, மறுத்து,…………..வாழ்ந்தவன் யார்?
  • மனம் மாறினால் கடவுள் மாறினால் என்னாவது?

பெரியாருடைய ஆவி, தினகரன் ஆவி, ஜார்ஜின் ஆவி………..

ஜனவரி 1, 2010

27-12-2009: துணைவேந்தருக்கும், வேந்தருக்கும் வேறு-வேறு ஆவியா? பகுத்தறிவாளர் மாநாட்டில் வீரமணியை துணைவேந்தர் என்று சொல்லிவிட்டனராம்! பொத்துக்கொண்டு வந்துவிட்டது ராமச்சந்திரனுக்கு. ஓடிச் சென்றார் மேடைக்கு. “குறிப்பிட்டதுபோல, வீரமணி துணைவேந்தர் இல்லை, நாந்தான் துணவேந்தர்”, என்றவுடன் அனைவரும் ஆச்சரியமாக பார்த்தனர். தொடர்ந்தார், “வீரமணி தான் வேந்தர்”, என்றார்.

01-101-2009: விடுதலை:

ஆவி எத்தனை ஆவியடா! கதம்பம்  விடுதலை 01-01-2010, பக்கம்.2

http://viduthalai.periyar.org.in/20100101/news09.htmlஇந்து மதத் தத்துவங்கள் என்பவை-யெல்லாம் படிப்பவனைக் குழப்பும். எதுவும் தெளிவாக இருக்காது. இந்து மதம் மிகவும் ஆழமாக வலியுறுத்தும் ஆத்மா என்பதற்கான விளக்கங்களைப் பார்த்தால் கற்றாழைச் சாற்றை விளக்கெண்ணெயோடு சேர்த்து அதில் கிரீஸ் போட்டுக் கலக்கினாற் போன்று இருக்கும்.

கேண உபநிசத் கூறுவது போல் இதற்குப் பிறப்புமில்லை, இறப்புமில்லை. எங்கிருந்தும் வரவில்லை, வேறு ஒன்-றாக மாறவில்லை. ஆதிக்கும் முதலான ஆத்மா உடல் அழியும்போது கூடவே அழிவதில்லை என்கிறது. செத்துப் போன-வனின் ஆத்மா வேறொன்றின் உடலுக்குள் புகுந்து கொள்கிறது என்கிறார்களே, அப்படியானால் அந்தப் புது ஆளைப் பொறுத்த மட்டில் ஆத்மா எங்கிருந்தோ வந்ததுதானே! இந்த உண்மைக்கு மாறாக, கேணத்தனமாக கேண உபநிசத் கூறுகிறதே! ஆத்மாவிலிருந்து விண்வெளி தோன்றியது. விண்வெளியிலிருந்து காற்றும், காற்றிலிருந்து நெருப்பும், நெருப்பிலிருந்து நீரும், நீரிலிருந்து புவியும், புவியிலிருந்து செடி இனமும், செடி இனத்தில் இருந்து உணவுப் பொருளும், உணவுப் பொருள்களி-லிருந்து விந்தும், விந்திலிருந்து மானிட இனமும் தோன்றின என்கிறது தைத்ரிய உபநிசத். உலகமும், உயிர்-களும் எவ்வளவு எளிதாகத் தோன்-றின என்பதை விவரித்துவிட்டது பாருங்கள்! உயிர்கள் தோற்றம் பற்றி உலகத்தின் பாதிப் பகுதியை ஆறு ஆண்டுகள் சுற்றி ஆராய்ந்து அறிவித்தார் டார்வின். இவன் சுலபமாக எல்லாம் வானத்திலிருந்து வந்தவை எனக் கூறிவிட்டான்.

அதனால்தான் சார்வாகர்கள் வானத்தை விலக்கி நான்கு தனிமங்கள் மட்டுமே உள்ளன எனக் கூறினரோ?

யாகத்தில் சாதுவான விலங்கு-களைப் பலியாகத் தருவது இந்து மதப் பழக்கம். குதிரை, பசு, காளை, ஆடு போன்றவை மனித குலத்துக்குப் பயன்படும் விலங்குகள். ஆண்டவ-னைத் திருப்தி செய்கிறேன் எனக்-கூறிக் கொண்டு இவற்றை யாக நெருப்பில் வெட்டிப் போட்டு வதக்கிப் பார்ப்பனர்கள் தின்றனர். உயிர்ப் பலி கூடாது என்று தடுத்தவர்களைச் சமாளிப்பதற்கு பார்ப்பனர்கள் சொன்ன சமாதானம் என்னவென்றால், யாகத்தில் பலி கொடுக்கப்பட்ட விலங்குகள் மோட்சம் (சொர்க்கம்) போகின்றன என்-றனர். சொர்க்க லோக வாழ்வு அவ்-வளவு சுலபத்தில் கிடைக்கக்கூடியதா? எவ்வளவோ உழைத்தாலும், தியாகங்-கள் செய்தாலும், இறப்புக்குப் பின் சொர்க்கம் கிடைக்கும் என்பதற்கு உத்-தர-வாதம் இல்லை. நரகம் கிடைத்து-விடலாம்.

ஆனால், யாகத்தில் பலியிடப்படும் விலங்குகளுக்கு உறுதியாகச் சொர்க்க லோகம் கிடைக்கும். அதைத் தடுக்க-லாமோ என்று சமாளித்துச் சாப்பிட்-டனர் பார்ப்பனர்கள்.

உலக வரலாற்றில் மலிந்திருந்த பல மூட நம்பிக்கைகளில் பலி தருவது ஒரு பெரும் மூட நம்பிக்கை ஆகும். செய்துவிட்ட தவறுக்குப் பரிகாரம் பலி தருவது என்று வலியுறுத்தப்பட்டது. நல்ல விளைச்சல் இல்லையா? மன்-னனின் தவறான ஆட்சிதான் கார-ணம், ஆகவே மன்னனை வெட்டிப் பலி கொடு! என்றெல்லாம் நம்பிக்-கைகள் விதைக்கப் பட்டு மன்னர்களே கூட பலியிடப்பட்டனர். அத்தகைய வலிமை புரோகித வர்க்கத்துக்கு உண்டு.

புத்திசாலியான மன்னர்கள் தாங்கள் பலி இடப்படுவதற்குப் பதிலாக வேறு ஆளை நியமனம் செய்து பலி-யிடுவது நடந்துள்ளது. இப்படிப்பட்ட பதிலிகள் பெரும்பாலும் சிறையில் வாடும் போர்க் கைதிகளாகவே இருந்-தனர். சண்டையில் சாகாமல் தப்பிப் பிழைத்தவர்களைப் பலிகடாக்களாக ஆக்கி விட்டனர்.

பலி கொடுக்கப்பட்ட விலங்கு, சொர்க்கம் போகிறது என்பது உண்-மையானால், உன் தந்தையைப் பலி கொடேன், அவர் நிச்சயம் சொர்க்கம் போவார் அல்லவா? என்று கேட்டு மடக்கினர் சார்வாகர்கள்!

தம் அடிமடியில் கை வைக்கி-றார்-கள் என்றவுடன் பார்ப்பனர்கள் சார்வாகத்தையே ஒழித்து விட்டனர்!

ஆவிகள் (Spirits) உண்டு என்கிற மூட நம்பிக்கை பல மதங்களிலும் குடி கொண்டிருக்கிறது. கிறித்துவப் பிரச்சாரகர்கள், அஞ்ஞானிகளே, நீங்கள் கெட்ட ஆவியின் பிடியில் இருந்து விடுவிக்கப்படவேண்டும்; நான் அதற்காக ஜெபிக்கிறேன் என்றுதான் ஆரம்பிக்கிறார்கள்.

பலவிதமான ஆவிகளை இதற்காக இவர்கள் கற்பித்து உலவவிட்டிருக்-கிறார்கள். சாவு நிகழப் போகிறது என்பதை அறிந்து ஓலமிடும் ஆவி, இதே காரியத்தைச் செய்யும் நாய் வடிவப் பேய், தூங்குபவனை படுக்கையில் அமுக்கி அச்சுறுத்தும் ஆவி, தூங்கிக் கொண்டிருக்கும் ஆணுடன் உடல் உறவு கொள்ளும் பெண் பேய், செத்துப் போனவர்கள் உலவும் ஆவி போன்று பல ஆவிகளை உலவ விட்டிருக்-கிறார்கள்.

ஒரு பெண் ஆவி, குளம் குட்டை-களில் இருக்குமாம். ஆண்களுடன் கூடிக் கலவி செய்து குழந்தை பெற்றுத் தருவதன் மூலம் ஓர் ஆன்மாவை அடையுமாம் அந்த ஆவி. இந்த மூட நம்பிக்கையின்அடிப்படையில் ஓர் ஆங்கில சினிமா கூட எடுக்கப்பட்-டுள்ளது. அந்த ஆவி அன்டைன் (Undine) எனப்படுகிறது.

ஸ்காட்லாந்து நாட்டு ஆவி, நீரில் மூழ்குபவரைக் காப்பாற்றுவதற்காகக் குதிரை உருக்கொண்டு வருமாம். இதனை கெல்பி (Kelpie) என்கிறார்கள்.

ஜெர்மனி நாட்டின் குறும்புக்கார ஆவி, புராதன வீடுகளில் குடிகொண்டு எதையாவது விசமமாகச் செய்து கொண்டு இருக்கும். இதற்கு கோபோல்டு (Kobold) என்று பெயர் வைத்திருக்-கிறார்கள்.

ரோமாபுரியினரின் வீடுகள் ஒவ்-வொன்-றிலும் ஆவி உண்டாம். அவை லார் (லிணீக்ஷீ) எனப்படும். அந்தக் குடும்-பத்தின் இறந்து போனவர்களில் நல்லவர்கள் இந்த வகை ஆவியாகிக் குடும்பத்தவர்க்கு நன்மை செய்வார்-களாம்.

ஆவி, எத்தனை ஆவியடா!

29-02-2008: ஆத்மா – மறுபிறவியின் முரண்பாடுகள்: கருணாநிதியின் வியாக்யானம்!

ஒரு பெரியவரோ, ஒரு மூத்தவரோ, உற்றாரோ, உறவினரோ, நண்பரோ மறைந்துவிட்டால், அவர்கள் மறுபிறவி எடுப்பார்கள் என்ற நம்பிக்கையோடு சமுதாயத் திலே பல பேர் இருக்கிறார்கள். அந்த நம்பிக்கையும் இருக்கிறது, மறுபிறவி என்பது கிடையாது என்ற கருத்தும் இருக்கிறது. அதேநேரத்தில், அவர்கள் மறைந்தவுடன், பெரியவர்கள் அல்லது வைதீக எண்ணம் கொண்டவர்கள் அவர்களுடைய ஆத்மா சாந்தியடைய என்றும் சொல் கிறார்கள். சாந்தியடைய என்றால், அலையக் கூடாது, அது போய் இன்னொருவருக்கு குழந்தையாகப் பிறக்கக் கூடாது. அது சாந்தியடைந்து அப்படியே மறைந்து போய் விடும் என்ற எண்ணத்திலே சொல்கிறார்கள்.

ஆத்மா என்ற ஒன்றை நாம் குறிப்பிட்டு சொன்ன பிறகு, அது சாந்தி அடையும், அடையாது என்று நாம் பிரித்துப் பேசும்போது, அதற்கு மறுபிறவியைப் பற்றியும் பேசுகிறோம். இது முரண்பாடான ஒன்று. எனவே, ஆத்மா என்ற ஒன்று இருந்தால், அது எப்படி சாந்தியடையும் என்ற அந்தக் கேள்விக்குப் பதில் வேண்டும். மறுபிறவி எடுக்கக் கூடியது நம்முடைய உயிர் என்றால், மறுபிறவி எடுத்த பிறகு ஆத்மா ஏது? அது எங்கே சாந்தி அடைவது? இது இரண்டையும் ஒத்துக் கொண்டால், ஆண்டுதோறும் அந்த ஆத்மாவுக்காக புரோகிதரை அழைத்து, வீட்டிலே திதி, தெவசம் கொடுக்கிறோமே, அப்படி கொடுக்கும் போது என்ன சொல்கிறோம். இவர்கள் நாம் கொடுக்கின்ற தெவசத்திற்கு வந்து, அந்த ஆத்மா நாம் தருகின்ற திதியால், தெவசத்தால் புரோகிதருக்குத் தருகின்ற காணிக்கையால், மகிழ்ச்சி அடைகிறார்கள் என்றுதான் அவைகளைக் கொடுக்கிறோம். இது சாந்தி அடைந்த பிறகு எப்படி ஆண்டுதோறும் நாம் நடத்துகின்ற தெவசத்திற்கு, அந்த ஆத்மா வரும் என்ற அந்தக் கேள்வியைக் கேட்டால், அங்கே பகுத்தறிவு மணம் கமழ்வதாக அர்த்தம்.
– மறைந்த க. இராசாராம் அவர்களின் படத்திறப்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் கலைஞர் அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து – 29.2.2008.

 

20-102008: அருள்திரு ஜார்ஜ் அடிகளாருக்கு எமது வீர வணக்கம்: வீரமணி சொன்னது!

http://files.periyar.org.in/viduthalai/20081021/news03.html

http://files.periyar.org.in/viduthalai/20081021/thalai.html

திர ுச்சியில் கலைக் காவேரி என்ற அருமையான ஒரு நுண்கலைக் கல்லூரி யின் நிறுவனரும், தலை சிறந்த மனிதநேயரும், பண் பாட்டின், பாசத்தின் ஊற்று மான அருள்திரு ஜார்ஜ் அடி களார் அவர்கள் மறைந்தார் என்ற செய்தி பேரிடியாக என்னையும், எங்கள் குடும் பத்தினரையும், இயக்கத் தினரையும், திருச்சி பெரியார் கல்வி நிறுவனத்தவர்களையும் தாக்கியது. திடீரென வந்த அந்தச் செய்தியிலிருந்து – இப்பெரும் இழப்பிலிருந்து எப்படி மீளுவதோ அறியோம்.

திருச்சி மாநகரத்தில் ஒரு கண்ணியத்திற்குரிய பெரிய மனிதர் அவர்; ஜாதி, மதம், கட்சி இவைகளைக் கடந்து அனைவராலும் மதிக்கப்பெற்ற மாமேதை!

அவருள் அடங்கிக் கிடந்த ஆற்றலுக்கு அற்புத வடிவம் தந் தார் – அதுதான் கலைக்காவேரி என்ற அவர் பெற்ற பிள்ளை!

கிராமங்களிலிருந்து, ஒடுக்கப்பட்ட சமுதாயங்களிலிருந்து வந்தவர்களுக்குப் பரத நாட்டியம், பண்ணிசை இவைகளைக் கொண்ட நுண்கலைகளைக் கற்றுத் தந்து, அவர்தம் ஆற்றலை அகிலம் முழுவதிற்கும் அழைத்துப் போய் பெருமைப்படுத்திய பேராசான் அவர்!

எவரிடத்திலும் அன்பும், பண்பும் பொங்க மரியாதையுடனும் அவர் பழகும் பாங்கு தனித்தன்மையானது.

சில நாள்களுக்குமுன் அவர் என்னை அழைத்துப் பேசி னார்கள். அதுதான் கடைசி உரையாடல் என்று கனவில்கூட எண்ணிடவில்லை நான்.

விடுதலையின் வாசகராகி, வாழ்வியல் சிந்தனைக் காக என்னைத் தட்டிக் கொடுக்கும் பாங்கும், ஏழை, எளியவர்களுக்கு இரங்கி, அவர்தம் (Empathy) உள்ளத்தையே பெற்று, அவர்களின் துயர் துடைக்க முயலும் அருளாளர்.

திடீரென்று இன்று வரலாறாகி விட்டார்!

இயற்கையின் கோணல் புத்தி என்பார் தந்தை பெரியார்.

இப்படித்தான் பற்பல கேடுகள் – இழப்புகள் இயற்கையின் அந்த கோணல் புத்தியால் அமைந்துவிடுகிறது.

அவரது குடும்பத்தினர், அவரது பிரிவால் ஆறாத் துயர் கொள்ளும் அவரது கலைக்குடும்பமாம் கலைக்காவேரி மற்றும் ஆரூயிர் சகோதர, சகோதரிகளுக்கும் எங்கள் ஆழ்ந்த இரங்கலும்,

அந்த மாமனிதருக்கு, தொண்டறச் செம்மலுக்கு எமது வீர வணக்கமும் உரித்தாகட்டும்!

சென்னை
20.10.2008

தலைவர்,
திராவிடர் கழகம்.

பெரியாருக்கு ஆவி உண்டா? வருடாவருடம், பெரியார் சமாதியில், இந்த பகுத்தறிவாளிகள் கும்பிட்டு வருகின்றன. பார்ங்கள் பகுத்தறிவு சூன்யங்களின் உன்மத்தமான நிலையை! கைகளை கூப்பிக் கொண்டு மார்பைத் துட்டுக் கொண்டு, அபரிதமான மயக்கநிலையில் உள்ளது போல இருக்கிறார்கள்! சில சூன்யங்கள் கைகூப்பி வணங்கலாமா, வேண்டாமா என்ற நிலையில் நின்றுள்ளன. இதுதான் இன்றைய திராவிடத்தின் போலித்தனம்.

செத்த மனிதனுக்கு எதற்கு வணக்கம், மரியாதை, மாலை எல்லாம்? அப்படியென்றால், அந்த செத்த மனிதருடைய  ஏதோ ஒன்று இருக்கிறது என்றுதானே அவ்வாறு வணங்கி மரியாதை செய்கின்றனர்? இல்லையென்றால், மலர்கள் தூவுவதற்கு பதிலாக கற்களால் அடிக்கலாமே, பூமாலைக்கு பதிலாக செருப்பு மாலை போடலாமே?