Posts Tagged ‘பிஜேபி’

இந்துத்துவ பாதையில் திமுக: பகுத்தறிவு சூழ்ச்சி, நாத்திக தந்திரம், மற்றும் அரசியல் யுக்தி- திமுக வலையில் சிக்கிக் கொண்ட பிஜேபி, இந்துத்துவ வாதிகள் பார்ப்பனர்களைத் தூற்றியது (3)

திசெம்பர் 1, 2020

இந்துத்துவ பாதையில் திமுக: பகுத்தறிவு சூழ்ச்சி, நாத்திக தந்திரம், மற்றும் அரசியல் யுக்தி- திமுக வலையில் சிக்கிக் கொண்ட பிஜேபி, இந்துத்துவ வாதிகள் பார்ப்பனர்களைத் தூற்றியது (3)

பல புகைப் படங்கள் இருந்தாலும், சிலவற்றை வைத்து தூஷித்தது!

இந்துத்துவவாதிகள் எதிர்க்க வேண்டியது திமுகவையா, பார்ப்பனர்களையா?: 30-11-2020 அன்று, “இந்துத்துவ பாதையில் திமுக: பகுத்தறிவு சூழ்ச்சி, நாத்திக தந்திரம், மற்றும் அரசியல் யுக்தி எந்த அளவுக்கு உதவும் என்பது 2021 தேர்தல் நிரூபித்து விடும் (1)” மற்றும் “இந்துத்துவ பாதையில் திமுக: பகுத்தறிவு சூழ்ச்சி, நாத்திக தந்திரம், மற்றும் அரசியல் யுக்தி: உதயநிதி விபூதி பூசுவது, துர்கா கோவில் கட்டுவது முதலியன(2)” என்று, எவ்வாறு திமுக “மென்மையான இந்துத்துவத்தை” பின்பற்ற ஆரம்பித்து விட்டது என்று “பிளாக்” போட்டு முடித்த சிறிது நேரத்தில், டுவிட்டரில் உள்ள சில புகைப் படங்களை[1], பேஸ்புக்கில் போட்டு, அவற்றை வைத்து, பார்ப்பனரை விமர்சிக்க ஆரம்பித்தனர். எதிர்பார்த்தப் படி, அப்படியே ஷேர் செய்வது, லைக் போடுவது, திட்டுவது என்பது தொடர்ந்து அதிகமாகின. குறிப்பிட்ட பிஜேபிகாரர்கள், ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி (வகையறாக்கள் உட்பட), நபர்கள் அத்தகைய அதிரடி, தாக்குதல், போஸ்டிங்குகளை செய்ய ஆரம்பித்தனர். இது நிச்சயமாக “இதுத்துவத்திற்கு” ஒவ்வானதாகும். இருப்பினும் மிக மோசமாக அத்தாக்குதல் அரங்கேறியுள்ளது. அதனால், மூன்றாம் பகுதியில், இவற்றை பதிவு செய்ய வேண்டிய நிலை / கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

பல புகைப் படங்கள் இருந்தாலும், சிலவற்றை வைத்து தூஷித்தது! இவர்கள் பார்ப்பனரா என்பது அவர்களுக்குத் தெரியாது போலும்!

அரசியல் போர்வையில் நடத்திய தாக்குதல்: திமுகவை எதிர்க்கிறேன் என்று நூற்றுக் கணக்கான, முகநூல் பிஜேபி, ஆர்.எஸ்.எஸ், இது முன்னணி  வகையறாக்கள், பிராமணர்களைத் தாக்கி வசைப்பாடியுள்ளனர். Subbu FOTOGRAFI என்று டுவிட்டரில், உதயநிதிக்கு விபூதி வைப்பது, அக்ஷதை போடுவது, தலையில் பொன்னாடை கட்டுவது, மாலை போடுவது என்று பலவித பிராமணர் / பார்ப்பனர், பட்டர், சிவச்சாரி………. (துலுக்கர் உட்பட) என்று புகைப்படங்கள் உள்ளன. ஆனால், இந்துத்துவ வாதிகள், பிஜேபிகாரர்கள், ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி (வகையறாக்கள் உட்பட), பார்ப்பனரை / பிராமணரை மட்டும், மிகக் கேவலமாக, மோசமான, ஆபாசமான………வார்த்தைகளை உபயோகப் படுத்தி தூஷித்துள்ளனர். பார்ப்பனர் அல்லாத பற்பல இந்துத்துவவாதிகள், திக-திமுக-கம்யூனிஸ வகையறாக்கள் கூட வியாபாரம், நட்பு, பார்ட்டிகளில் கொண்டாட்டம் போடுவது……என்றெல்லாம் உள்ளனர். தைரியம் இருந்தால், இதே போன்று  ஒரு சுப்புவை வைத்து,  போட்டோ எடுத்துப் போட்டிருக்க வேண்டும். திமுக வலையில் நன்றாக மாட்டிக் கொண்டனர். லாஜிக்கே இல்லாமல், எதிரிகளை எதிர்க்காமல், பிரமாண துவேசத்தைக் கக்கியுள்ளனர்.

பல புகைப் படங்கள் இருந்தாலும், சிலவற்றை வைத்து தூஷித்தது! இவர்கள் பார்ப்பனரா என்பது அவர்களுக்குத் தெரியாது போலும்!

ஆபாசமாக, கேவலமாக பதிவு செய்துள்ளதில் சிலஉதாரணத்திற்கு[2]: இந்துத்துவ வாதிகள், பிஜேபிகாரர்கள், ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி (வகையறாக்கள் உட்பட), பார்ப்பனரை / பிராமணரை மட்டும், மிகக் கேவலமாக, மோசமான, ஆபாசமான………வார்த்தைகளை உபயோகப் படுத்தி தூஷித்துள்ள வசனங்களில் சில[3]:

  • இது திமுகவின் பிராமண அணி,
  • எவ்வளவு செருப்படி பட்டாலும் புத்தி வராது பிராமணனக்கு,
  • நெல்லிக்காய் மூட்டை ன்னு சொல்வாங்க. இவங்கள லாம் நம்பறது படு டேஞ்சர்,
  • ஆந்திர இறக்குமதி,
  • தன் பெருமை உணராத அடிமைகள்.
  • கோடாரி …..இவனுங்கலுக்கு அங்க என்ன வேலை ?
  • பூணுல் அறுக்கும் கூட்டத்திடம் செல்பி.. மானம் கெட்டவர்கள்.
  • கருணாநிதி முன்னோர்கள்  மாநில ஆந்திர இறக்குமதி பார்ப்பனர்கள்.
  • தொடர்ந்து இந்து மதத்தை இழிவு செய்யும் திருட்டு திராவிட “ஈனப்பயலுடன்” செல்பி படம் எடுக்கும் இந்த கேடுகெட்டவனை.. படம் [செருப்பால் அடிக்க வேண்டும்]
  • நக்குனா இப்படி தான் நக்கனும் இதை விட அசிங்கமா எழுதுவேன் என் ஆத்மார்த்த நண்பர் deva priyaji, piriya ramkumar, போன்றவர்களின் மனம் புண்பட கூடாது என்பதற்காக அடக்கி வாசிக்கிறேன்.
  • அட குரங்கு குப்பங்களா யாருக்கு என்ன மரியாதை செய்யணும்னு தெரியாதா?

இவர்கள் உண்மையிலேயே ஆர்.எஸ்.எஸ்,சில் பயிற்சி எடுத்திருந்தால், அவ்வாறான கமென்டுகளை செய்திருக்க மாட்டார்கள். ஆனால், செய்துள்ளார்கள் என்பதால், பல சதேகங்கள் எழுகின்றன.

இது மட்டும் தான் அவர்களுக்குத் தெரிந்தது போலும்!

திமுகவுடன் சேர்ந்து போட்டோ எடுத்துக் கொண்டவர்கள் அனைவரையும் ஒரே மாதிரியாக விமர்சிப்பு, தாக்குதல் முதலியன ஏன் செய்யவில்லை?: முன்பு “இந்து முட்டாள்கள்” என்று பதிவு செய்த போது, கோபித்துக் கொண்டார்கள், ஆனால், இப்பொழுது, அதை விட மோசமாக கமென்ட் செய்துள்ளார்களே? என்ன செய்வது? இந்த “இந்துத்துவ முட்டாள்கள்” திமுகவை எதிர்க்கிறார்களா, இந்துக்களை எதிர்க்கிறார்கள், இந்து மதத்தை குறை கூறுகிறார்களா? பார்ப்பனர்கள் / பிராமணர்கள் என்றெல்லாம் முட்டாள் இந்துக்கள் விமர்சிப்பதால், எல்லா வந்தேறி – பார்ப்பனர்கள்  பிஜேபியிலிருந்து ,  இந்து அமைப்புகளிலிருந்து விலகி விடலாம்! சில நாட்களுக்கு முன்னர், அந்த ஆதின மடாதிபதி, இரவு 10 மணிக்கு மேலே, ஆசிர்வாதம் எல்லாம் நடத்திய போது, அவரை, ஜாதி பெயர் சொல்லி விமர்சிக்கவில்லை, இவ்வகையில் போட்டி போட்டுக் கொண்டு, தூஷிக்க வில்லை. இதிலிருந்து, அரசியல் ரீதியில், சூழ்ச்சியாகத்தான் பார்ப்பனரை / பிராம்மணரை எல்லோரும் சேர்ந்து தாக்குகின்றனர் என்று தெரிகிறது.

இவர்கள் பார்ப்பனர்களா? பூணூல் போட்டவர்களா?

திமுகவுடன் கூட்டு வைத்து போது ……………அந்த கதையினை சொல்ல வேண்டுமா?:

1999ல் அதிமுக ஒதுக்கியதால், திமுகவுடன் பிஜேபி கூட்டு வைத்துக் கொண்டது. கருணாநிதி, வைகோ என்று திராவிடத் தலைவர்கள் வாஜ்பேயுக்கு போன்னாடைப் போற்றி வாழ்த்தினர். அரசியல் வியபாரமும் நடந்தது, அதாவது, கூட்டணி உடன்படிக்கை ஏற்கப் பட்டது. ஒரு பார்ப்பனனைச் சுற்றியிருக்கும் அவர்கள் பார்ப்பனர்களா? என்றெல்லாம் யாரும் கேட்கவில்லை. 182 எம்.பிக்களைக் கொண்ட பிஜேபி, திமுக ஆதரவுடன் ஆட்சி அமைத்தது[4]. பிஜேபி-ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் திமுகவினருக்கும் தேர்தல் பிரச்சார செய்தனர்………. அதை இங்கு விளக்க விருப்பம் இல்லை. காவிகள் அறிவார்கள். முரசொலி மாறன், டி.ஆர்.பாலு, ஏ.ராஜா, முதலியோர் மத்திய அமைச்சர்கள் ஆகினர். “ஒரு கெட்ட கட்சியில் உள்ள அல்ல மனிதர்,” என்றெல்லாம் அந்த பார்ப்பன பிரதம மந்திரி விமர்சிக்கப் பட்டார். இன்னும் சொல்ல நிறைய உள்ளன…………..ஆகவே, 2020ல் இத்தகைய வெளிப்பாடு திகைப்பாக இருக்கிறது.

சிவாச்சாரியார் விபூதி வைத்தால், பார்ப்பனரை தூஷிப்பது ஏன்?

ஸ்டாலினை பாராட்டிய சி.பி.ராதாகிருஷ்ணன் செப்டம்பர் 2019[5]: முன்னாள் அமைச்சர் மற்றும் திமுக மாவட்ட செயலாளர் வெள்ளக்கோவில் சாமிநாதனின் குடும்ப திருமணவிழா திருப்பூரில் 05-09-2019 அன்று நடந்தது. திருமண விழாவில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின், பாஜக தலைவர்களில் ஒருவரான முன்னாள் எம்.பி சி.பி ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பல கட்சி பிரமுகர்கள் கலந்துகொண்டனர். திருமண நிகழ்ச்சியில் பேசிய, சி.பி ராதாகிருஷ்ணன்[6], “கலைஞருக்கு பிறகு கட்சியின் தலைமையை ஏற்ற தளபதி அவர்கள், எங்களையெல்லாம் தோற்கடித்து இன்று வெற்றி தளபதியாக உள்ளார். நாங்கள் இன்னும் உழைக்க வேண்டியதும், அதனை தளபதி அவர்களிடம் கற்றுக்கொள்ள வேண்டியது அதிகமுள்ளது,” என்று அவர் கூறினார்[7]. தமிழக பாஜகவின் தலைவருக்கான போட்டியில் சி.பி ராதாகிருஷ்ணன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே மாநில தலைவராக இருந்த ராதாகிருஷ்ணன், இரண்டு முறை எம்.பியாகவும் பொறுப்பு வகித்துள்ளார். தற்போது மத்திய கயிறு வாரியத்தின் தலைவராக பதவி வகித்து வருகிறார், என்றெல்லாம் ஊடகங்கள் குறிப்பிட்டன. திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அவர்களிடம் நாங்கள் இன்னும் அதிகம் உழைக்க வேண்டும் என்பதை கற்றுக்கொண்டுள்ளோம் என்று பாஜக தலைவர் சி.பி ராதாகிருஷ்ணன் பேசியுள்ளார். ஆக, பிஜேபி.காரர்கள் இவ்வாறு கற்றுக் கொண்டு, பார்ப்பனர்களை தூஷித்தார்கள் போலும். ஒரு ஆண்டில், நல்ல முன்னேற்றம் தான். இனி, குத்தூசி குருசாமி, அணுகுண்டு ஆறுமுகம்………….. போன்றவர்களும் தயாராகலாம்!

பல புகைப் படங்கள் இருந்தாலும், சிலவற்றை வைத்து தூஷித்தது! இவர்கள் பார்ப்பனரா என்பது அவர்களுக்குத் தெரியாது போலும்!

இந்துக்களின் இன்றை நிலை: இந்துக்களை, இந்துக்கள் என்று பாராமல், ஜாதிய கண்ணோட்டத்துடன் பார்க்கும் நிலை அபாயக்கரமானது.

  1. சமூகம், ஜாதி, மதம், தேசம், மொழி முதலியவை அரசியலாக்கும் முயற்சிகளில், அவற்றை சின்னங்களாக, அடையாளங்களாக, குறீயீடுகளாக மதிக்க முடியாது.
  2. அரசியல், செக்யூலரிஸம் போர்வையில் கடந்த 60 ஆண்டுகளாக இந்துக்களை ஒடுக்கி வைத்தது, அடக்கி வந்தது.
  3. பிஜேபி, “இந்து கட்சி” என்று பிரகனடப் படுத்திக் கொண்டதால், இந்துக்கள் கொஞ்சம்-கொஞ்சமாக பிஜேபிக்கு ஓட்டுப் போட ஆரம்பித்தனர்.
  4. பதிலுக்கு தங்கள் உரிமைகள் காக்கப் பட விரும்பினர். குடும்பம், குடும்பம் சார்ந்த விசயங்களில் சதோசம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தனர்.
  5. ராம ஜன்ம பூமி விசயம் பல ஆண்டுகளாக பாதித்து வந்து, இப்பொழுது முடிந்துள்ளது. எல்லா அரசியல் கட்சிகளும் அதை வைத்து இந்துக்களை சதாய்த்தாலும், பிஜேபி வென்றது.
  6. ஆனால், தொடர்ந்து நீதிமன்ற தீர்ப்புகள் இந்துக்களை பாதிப்பதாகவே இருந்து வருகின்றன.  அவை இந்து குடும்பங்கள், உறவுகள், வழி-வழி வரும் பழக்க-வழக்கங்கள் முதலியவற்றை தடுப்பதாக, மாற்றுவதாக உள்ளன.
  7. பொருளாதார ரீதியில் சாதாரண மக்களுக்கு எந்தவித மாற்றமும் ஏற்படதாகத் தெரியவில்லை, அதாவது உணவு உடை மற்றும் உறையுள் (ரோடி-பப்டா ஔர் மகான்) என்றவற்றின் விலை அதிகமாகிக் கொண்டிருக்கின்றன.  
  8. தங்கம்-பெட்ரோல்-டாலர்-ஷேர் மார்க்கெட், சந்தை பொருளாதாரம் எல்லாம் சாதாரண மக்களுக்குத் தேவையில்லை. தனது கூலிக்கு-சம்பளத்திற்கு சாப்பாடு கிடைக்கிறதா என்று தான் பார்ப்பார்கள்.
  9. அந்நிலையில், ஒரு பக்கத்தில் உரிமைகளும் பறிபோய், இன்னொரு பக்கத்தில் சமூக-பொருளாதார நிலைகளில் இந்துக்கள் பாதிக்கப் படுவது தெரிகிறது.
  10. இதனால், இந்துக்கள் இன்னொருவிதமான பிணைப்பில் அடைக்கப் படுகிறார்களா என்ற எண்ணம் தோன்றுகிறது.

ஆகவே, மேற்குறிப்பிட்ட இந்து கோஷ்டிகள் நிலைமை உணர்ந்து செயல்பட வேண்டும். சித்தாந்தத்தால் அடக்குவோம் என்ற போக்கு ஆபத்தானது.


© வேரபிரகாஷ்

01-12-2020

ஒரு பார்ப்பனனைச் சுற்றி????

[1]  அவற்றை நானும் பார்த்தேன், ஆனால், எனக்கு வித்தியாசமாகத் தெரியவில்லை. கருணாநிதி மற்றும் கருணாநிதி குடும்பம், ஶ்ரீசத்ய சாயபாபா, ஜக்கி வாசுதேவ், ரவிசங்கர் ………போன்றோருடன் போட்டோக்கள் எடுத்தக் கொண்ட விவரங்களை எனது பிளாக்குகளில் விவரித்துள்ளேன். இவர்கள் எல்லோரும் போலித் தனமானவர்கள், வீட்டில் ஒரு மாதிரி, வெளியில் மேடைகளில் வேறு மாதிரி, என்று இரட்டை வேடம் போட்டவர்கள் தான்.

[2]  பேஸ்புக்கில் இவற்றை இன்றும் பார்க்கலாம் என்று நம்புகிறேன். சிலர் சுதாரித்துக் கொண்டு, வார்த்தைகளை மாற்றியுள்ளனர்.

[3]  இதை விட மோசமான, ஆபாசமான பதிவுகள் உள்ளன, அவற்றை தவிர்த்துள்ளேன். எல்லாமே காவி-இந்துத்துவ-சங்கம் என்கிறவர்களிடமிருந்துதான் வெளிப்பட்டுள்ளது.

[4] The 1999 Indian general election polls in Tamil Nadu were held for 39 seats in the state. The result was a victory for the National Democratic Alliance (NDA) which won 26 seats. After leaving the NDA, All India Anna Dravida Munnetra Kazhagam, hoped to create some damage, but ended up losing 8 seats, compared to the 1998 Lok Sabha elections.

[5] இதையும் ஒரு உதாரணத்திற்குத் தான் கொடுத்துள்ளேன், நிறைய உள்ளன. ஆனால், அரசியலை வைத்துக் கொண்டு,இவர்களும் இரட்டைவேடம், முரண்பாடு கொண்ட வாத-விவாதங்கள் செய்வது தான் வேடிக்கை.

[6] நியூஸ்.18.தமிழ், திமுக தலைவர் மு. ஸ்டாலினை புகழ்ந்து தள்ளிய பாஜகவின் சி.பி ராதாகிருஷ்ணன்!, NEWS18, LAST UPDATED: SEPTEMBER 5, 2019, 10:30 AM IST.

[7] https://tamil.news18.com/news/tamil-nadu/bjp-leader-cp-radhakrishnan-praises-mk-stalin-in-thiruppur-san-202439.html

இந்துத்துவ பாதையில் திமுக: பகுத்தறிவு சூழ்ச்சி, நாத்திக தந்திரம், மற்றும் அரசியல் யுக்தி: உதயநிதி விபூதி பூசுவது, துர்கா கோவில் கட்டுவது முதலியன(2)

நவம்பர் 30, 2020

இந்துத்துவ பாதையில் திமுக: பகுத்தறிவு சூழ்ச்சி, நாத்திக தந்திரம், மற்றும் அரசியல் யுக்தி: உதயநிதி விபூதி பூசுவது, துர்கா கோவில் கட்டுவது முதலியன(2)

செக்யூலரிஸ வாழ்த்துகளிலிருந்து, கம்யூனலிஸ வாழ்த்துகள்: ரம்ஜான், கிறிஸ்துமஸ் போன்றபண்டிகைகளுக்கு தவறாமல் வாழ்த்து கூறும் திமுக, தீபாவளிபண்டிகைக்கு வாழ்த்து கூறுவதுஇல்லை. ஆனால், திமுகவின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சியான கலைஞர் தொலைக்காட்சியில் இந்த ஆண்டு முதல்முறையாக ‘தீப ஒளித் திருநாள்’ கொண்டாட்டங்கள் என்ற பெயரில் சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டன. தவிர, திமுக மாவட்டச் செயலாளர்கள், எம்.பி., எம்எல்ஏக்கள் ஒன்றியச் செயலாளர் போன்ற முக்கிய நிர்வாகிகளும் சமூக ஊடகங்களில் முதல்முறையாக இந்த ஆண்டு தீபாவளி வாழ்த்துச் செய்திகளை பதிவிட்டனர். அதாவது, பெண்டாட்டியை வைத்து சாமி கும்பிடுவது போல, திமுக அரசியல்வாதியை வைத்து வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். இவ்வாறு, ஓட்டுக்குத் தான் வாழ்த்துத் தெர்விக்கின்றனர் என்பது இந்துக்கள் தெரிந்து கொள்வார்கள்.

சிறுபான்மையினரின் வாக்குகளை தக்கவைக்கும் அதேநேரம், பெரும்பான்மையினரின் வாக்குகளை இழந்துவிடக் கூடாது: முன்பெல்லாம் எங்காவது கோயில் இடிக்கப்பட்டால் பாஜக, இந்து அமைப்பினர் மட்டுமே போராடுவார்கள். சமீபகாலமாக கோயில்களுக்காக திமுகவினரும் குரல் கொடுக்கின்றனர். தூத்துக்குடியில் விநாயகர் கோயில் அகற்றப்பட்டதை கண்டித்து திமுக எம்எல்ஏ கீதா ஜீவன் போராடியதும், திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஆர்.எஸ்.பாரதி வழிபட்டதும் முக்கிய நிகழ்வுகளாகப் பார்க்கப்படுகின்றன. கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத திமுக, வரும் 2021 பேரவைத் தேர்தலில் எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்று தீவிரமாக போராடி வருகிறது. அமித் ஷாவின் சென்னை வருகைக்குப் பிறகு திமுக எதையும் எளிதாக எடுத்துக்கொள்ள விரும்பவில்லை. சிறுபான்மையினரின் வாக்குகளை தக்கவைக்கும் அதேநேரம், பெரும்பான்மையினரின் வாக்குகளை இழந்துவிடக் கூடாது என்று கவனத்துடன் திமுக காய் நகர்த்தி வருகிறது. இந்த பகுத்தறிவு சூழ்ச்சி, நாத்திக தந்திரம், மற்றும் அரசியல் யுக்தி எந்த அளவுக்கு உதவும் என்பது 2021 தேர்தல் நிரூபித்து விடும்.

மயிலாடுதுறை ஆன்மீகப் பேரவை தலைவர் ராம. சேயோன், திமுகவின் இந்து முகமா?:  ராம.சேயோன் என்பவர் –

  • மயிலாடுதுறை மாவட்ட வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் 
  • திமுக மாவட்ட வழக்குரைஞா் அணி அமைப்பாளா் ராம.சேயோன்
  • நாகை வடக்கு மாவட்ட தி.மு.க வழக்கறிஞர்கள் அணியின் மாவட்ட அமைப்பாளரும்,
  • நாகை வடக்கு மாவட்ட தி.மு.க. சட்ட பாதுகாப்பு குழு தலைவர்
  • மயிலாடுதுறை ஆன்மீக பேரவையின் நிறுவனர் 
  • மயிலாடுதுறை ஆன்மீக பேரவை ஒருங்கிணைப்பாளர்

பல பொறுப்புகளில் இருக்கிறார் என்று தெரிகிறது. 20-11-2020 அன்று ஆதீனத்தை உதயநிதியை சந்திக்கச் செய்தது, பரிசு பொருட்களை பறிமாறிக் கொண்டது, பிரசாதம் பெற்றது, ஆசிர்வாதம் பெற்று விபூதி பூசிக் கொண்டது, புத்தக வெளியீட்டில் கலந்து கொண்டு, முதல் பிரதியைப் பெற்றது, என்று அனைத்தையும் ஏற்பாடு செய்தது, இந்த ராம.சேயோன் தான். திமுகவின் இந்து முகம் போன்று, இவர் காட்டப் படுகிறார் மற்றும் செயல்படுகிறார் என்று தெரிகிறது. ஆகவே, எல்லாவற்றையும் கவனிக்கும் போது, மென்மையான இந்துத்துவம் கடைபிடிக்க அரம்பித்துள்ளது திண்ணம், உறுதி.

இந்துவிரோதி ஸ்டாலின் திடீரென்று கோவில்களுக்கு வக்காலத்து வாங்குவது (மார்ச்.2020): ‘இந்துக்களுக்கு நாங்கள் விரோதி அல்ல. என் மனைவி கோவில்களுக்கு செல்கிறார். அதை நான் தடுத்ததே இல்லை’ என, பிரசார மேடைகளில், ஸ்டாலின் 2019 ல் விளக்கம் கொடுத்ததை ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும். தமிழக இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள புரதான கோயில்களை மத்திய அரசின் தொல்லியல் துறை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு செல்ல மத்திய அரசு முடிவு செய்துள்ளது என்று தமிழ் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன.. அதாவது, பிரஹலாத் சிங், கலாச்சாரத் துறைஅமைச்சர், “……..மேலும் தொன்மையான கோவில்கள் தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் வர வேண்டும்,” என்று பாராளுமன்றத்தில் பேசினார். இதற்கு, தமிழக தொல்லியல் துறை ஆய்வறிஞர்கள், தொல்லியல் ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழர்களின் நாகரிகத்தை – கலாசாரத்தை சிதைக்க மத்திய பா.ஜ.க அரசு முயற்சி செய்தால் தி.மு.க சார்பில் தமிழ் மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார் என்று அவை விளக்கின. இதுகுறித்து ஸ்டாலின் அறிக்கையும் வெளியிட்டுள்ளது தமாஷாக இருந்தது.

1991க்குப் பிறகு 2006, அதற்குப் பிறகு 2021 என்று பொருந்தி வருவது எப்படி? (செப்டம்பர் 2020): மு.க.ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என தனது குலதெய்வம் கோயிலை புனரமைத்து வருகிறார் துர்கா ஸ்டாலின், இப்படி சில செய்திகள் வந்துள்ளன. திமுக தலைவர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின், தன் குல தெய்வமான அங்காளம்மன் கோயிலை புதுப்பித்து கட்டி வருகிறார்.

  1. கருணாநிதி குடும்பம் கடவுள் மறுப்பு கொள்கையை கடைபிடித்து வரும் நிலையில் கோயில், குளம் என பக்திமயமாக கடவுள் பற்றுதலோடு வலம் வருகிறார் ஸ்டாலின் மனைவி துர்கா. இவர் இவ்வாறெல்லாம் செய்வது புதியதல்ல.
  2. காசிக்கு எல்லாம் கூட சென்று வந்தார். ஆனால், புடவை வாங்கினேன் என்ற ரீதியில் பேசியது, தமாஷாக இருந்தது. ஆனால், நிச்சயமாக மாமனாரான நாத்திகரின் ஆன்மா சாந்தியடைவே சென்றது வெளிப்படையான உண்மை. பாவம் இல்லாத ஆன்மா எப்படி சாந்தி அடைந்தது என்பதை இல்லாத கடவுளைத் தான் கேட்க வேண்டும்.
  3. 1991ல் திருக்குவளைக் கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடந்தது.
  4. அதற்குப் பிறகு 15 ஆண்டுகள் கழித்து, மறுபடியும் 15 ஆண்டுகள் கழித்து, 2006ல் ஒரு வாரம் விமர்சியையாக மகா கணபதி ஹோமம், 04-07-2006 அன்று நடந்தது. கணபதி ஹோமத்தை யார் செய்தார்கள் என்று ஈவேரா, அண்ணா அல்லது கருணாநிதி சமாதியில் தான் சென்ற் கேட்க வேண்டும்.
  5. பிறகு 08-07-2006 அன்று கும்பாபிஷேகம் நடந்தது. பூசாரி கலிய பெருமாள் மற்றும் ஊரார் எல்லா ஏற்பாடுகளும் செய்தனர். ஸ்டாலின் தவிர எல்லா குடும்ப உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். இதேப் போல, செய்திகளும் வெளி வந்தன.
  6. ஆக, மறுபடியும் 15 ஆண்டுகளுக்குப் பிறகு 2021 ஆண்டு வருகிறது. அது அடுத்த ஆண்டுதான், ஆனால், தமிழக சட்டசபைக்கு தேர்தல் நடக்கப் போகின்ற வருடம்.  ஆனால், கோவில் மாறிவிட்டது போலும்!

அதிமுக, பிஜேபி என்ன செய்யப் போகின்றன?: ஜெயலலிதா இல்லாத நிலையில், அதிமுகவிற்கு அவரைப் போன்ற ஓட்டுக்களைக் குவிக்கும் தலைவர் இல்லை. அதனால் தான், இன்று வரை “அம்மாவின் ஆட்சி” என்றே பேசி வருகின்றனர். பிஜேபியைப் பொறுத்த வரையில், இது அவர்களுக்குப் பெருத்த இடி என்றே சொல்லலாம். ஏனெனில், அத்தகைய, “திராவிடத்துவ ஆன்மீகம்,” அல்லது “போலி ஆன்மீகம்” என்று, திமுக எப்படி பயன்படுத்தினாலும், அது அவர்களுக்கு சாதகமாகவே போகும்.  தேர்தல் பிரச்சாரத்தினால், மேடைப் பேச்சுகளால் பிஜேபிக்கு ஓட்டு கிடைக்காது. ஆக, திமுக

  1. திராவிடத்துவ மென்மையான இந்துத்துவம்
  2. இந்துத்துவ மென்மையான திராவிடத்துவம்
  3. திராவிடத்துவ நாத்திகம்
  4. திராவித்துவ இந்துவிரோத நாத்திகம்.
  5. திராவிடத்துவ இந்துத்துவம்.

என்று எதைப் பின்பற்றினாலும், ஒவ்வொரு வகையிலும் ஓட்டு கிடைக்கும். ஆனால், மற்ற கட்சிகளுக்கு என்ன கிடைக்கும்? திமுகவிற்கு 70 ஆண்டு விசுவாசத் தொண்டர்கள் உள்ளனர். அதனால் பதவிக்கு வந்த நீதிபதிகள், அதிகாரிகள் (எல்லாத் துறைகளையும் சேர்த்து) முதலியோர் உள்ளனர். அவர்களது மகள்-மகன் என்று அடுத்த தலைமுறை வாரிசுகள் உள்ளனர். அவர்கள் ஜாதி வாரியாக, விசுவாசமாக வேலை செய்து, பலன் பெற்று வருகின்றனர், நன்றாக சம்பாதித்து வருகின்றனர். இவற்றையெல்லாம் விளக்க வேண்டிய அவசியம் இல்லை.பிஜேபியினர் இந்த கட்டமைப்பை உடைக்க முடியுமா? திமுக போன்ற அஸ்திவாரம் இல்லாமல், 3% ஓட்டு வங்கியை வைத்துக் கொண்டு, ஆட்சியைப் பிடிப்பேன் என்று கனவு காண்பது அபத்தமானது.

© வேதபிரகாஷ்

30-11-2020

ஜெயலலிதாவுக்கு முன்பு மற்றும் ஜெயலலிதாவுக்கு பின்பு: திராவிட கட்சிகளும், நிலையும், உருமாறுகின்ற தேவைகளும்!

திசெம்பர் 11, 2016

ஜெயலலிதாவுக்கு முன்பு மற்றும் ஜெயலலிதாவுக்கு பின்பு: திராவிட கட்சிகளும், நிலையும், உருமாறுகின்ற தேவைகளும்!

aiadmk-opposition-to-gautami

மோடியை சந்தித்த பிறகு கௌதமி சதி செய்கிறாரா அதிமுக கேட்கிறது: இதனால் நடிகை கவுதமிக்கு அ.தி.மு.க.வினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதுபற்றி அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் நாஞ்சில் சம்பத் ‘மாலைமலர்’ நிருபரிடம், மற்ற விவரங்களை விளக்கி விட்டு, கூறியதாவது[1]:- “…….நான் கவுதமியை கேட்கிறேன், நீ எந்த உலகத்தில் இருக்கிறாய்? இதுபோன்ற அத்துமீறலை நிறுத்திக் கொள்வது நல்லது. ஏற்கனவே கவுதமி, பிரதமரை ஒருமுறை சந்தித்து வந்துள்ளார். இதற்கு பின்னால் ஏதோ ஒரு சதி திட்டம் இருக்கிறதோ என நான் சந்தேகிக்கிறேன்”. இதேபோல செய்தி தொடர்பாளர் தீரன், முன்னாள் அமைச்சர்கள் பண்ருட்டி ராமச்சந்திரன், வளர்மதி ஆகியோரும் கவுதமியின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்[2]. இந்த சதிக்கு சகோதரி கவுதமி விலைபோய் விட்டாரா? என்ற ஐயம் எழுகிறது. ஆகவே இது தேவையில்லாத பிரச்சனை. இதை யாரும் விவாதம் ஆக்க வேண்டாம். திருச்சியில் நேற்று கவுதமியின் உருவப்படத்தை அ.தி.மு.க. நிர்வாகிகள் சிலர் தீயிட்டு எரித்தனர்[3]. மேலும் கவுதமிக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதுகுறித்து அ.தி.மு.க.வினர் கூறுகையில், “ஜெயலலிதா மறைவில் எந்த சந்தேகங்களும் இல்லை. அவர் ஆஸ்பத்திரியில் இருந்த போது அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் நேரில் சென்று விசாரித்து உள்ளனர். எனவே அவருடைய மறைவை கவுதமி விமர்சித்துள்ளது கண்டிக்கத்தக்கது,” என்றனர்[4].

modi-formula-dravidian-tangle-intriguingஜெயலலிதா இறப்பை வைத்து லாபம் பார்க்கத் துடிப்பது ஏன்?: கடந்த இரண்டு மாதங்களாக ஜெயலலிதாவின் ஆஸ்பத்திரிவாசம் பெரிய செய்தியாக இருந்து வந்துள்ளது. இப்பொழுதோ, அது பெரிதாகி விட்டது. ஜி.எஸ்.டியை விட, இதைப் பற்றித்தான் அதிகமாக பேசுகின்றனர். சமூக ஊடகங்களின் கீழ்த்தரமான பதிவுகள், சமூக ஊடகங்களின் தரத்தையேக் குறைத்து விட்டது. கட்சிசார்புடன் வேலைசெய்யும் பலரை வெளிகாட்டி வருகிறது. தகவல் தொழிற்நுட்ப சட்டம் மற்றும் இந்திய குற்றவியல் சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கும்போது, அலறும் சிலர், ஜெயலலிதாவை இறந்த பின்னரும் மோசமாக விமர்சித்து வருவதை மற்றவர்களும் கவனித்து வருகிறார்கள். பொதுவாக, இந்தியாவில் இறந்தவர்களைப் பற்றி அதிகமாக விமர்சிப்பதில்லை. குறிப்பாக பெண்ணை அவ்வாறு செய்வதில்லை. ஆனால், ஜெயலலிதா விசயத்தில் இரண்டும் மீறப்படுகின்றன. இது அந்த விமர்சர்களுக்கு, அவர்களை சார்ந்த அரசியல் கட்சிகளுக்கு, சித்தாந்த கூட்டங்களுக்கு எதிராக போகும் என்பதை அவர்கள் அறிந்து கொள்ல வேண்டும்.

dmk-tries-to-break-aidmk-rajathi-meetingதிமுகவில் நடந்து வரும் மாற்றங்கள்: திராவிடக் கட்சிகளில் மாற்றம், உருவமைப்பு, முதலியவை ஏற்படுமா என்ற யேஷ்யங்கள் ஏற்பட்டுள்ளன. திமுக மறுபடியும் உயிர்த்தெழ வேண்டும் என்ற ஆசை வந்து விட்டது. எப்படியாவது, அதிமுகவைக் குலைக்க வேண்டும் என்ற எண்ணம் சென்ற மாதங்களை விட அதிகமாகி விட்டது. ஆனால் ஜாக்கிரதையாக செயல்பட வேண்டும் எண்ணமும் உள்ளது. ஸ்டாலின் ஜெயலலிதாவுக்கு மரியாதை செல்லுத்தியதும், ராகுல் கருணாநிதியை பார்க்காமல் சென்றதும், மோடி சசிகலா-நடராஜன் முதலியோருடன் பேசியதும், அழகிரி கருணாநிதியை வந்து சந்தித்ததும் நிச்சயமாக அத்தகைய திட்டத்தை எடுத்துக் காட்டுகிறது. கருணாநிதியும் உடல்நிலை சரியாக இல்லாத நிலையில், திமுகவிலும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. “ஜெயலலிதா-கருணாநிதி ஆஸ்பத்திரிவாசம்” நிச்சயமாக பாரபட்சமாக விமர்சிக்கப் பட்டது. கருணாநிதிக்குப் பிறகு திமுக தலைமை ஸ்டாலினுக்குத்தான் செல்லும் என்றாலும், அழகிரி விடுவதாக இல்லை. இதுவரை மறைந்திருந்த ராஜா, மற்படியும், வெளிவந்து ஸ்டாலினுடன் வலம் வருகிறார்.

rahul-karuna-ladaiகாங்கிரஸில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்: 2ஜி ஊழல் காங்கிரஸ்-திமுக கட்சிகளை இணைத்து வைத்தாலும், அதே விசயம் அவர்களை பாதித்து வருகின்றது என்பதும் தெரிந்த விசயமாக இருக்கிறது. கடந்த தேர்தலில் திமுகவின் தோல்விக்கு அது ஒரு முக்கியமான அம்சமாக இருந்தது. ஊழல் என்றாலே கருணாநிதி என்ற பழைய பிம்பம் மறுபடியும் பிரதிபலித்ததால், மக்கள் ஜெயலலிதாவைத்தான் தேர்ந்தெடுத்தனர். கருணாநியை தமிழக மக்கள் என்றுமே ஊழலில்லாத முறையில் பார்க்க முடிவதில்லை. 2ஜி ஊழல் ஏதோ திமுகவுடன் தான் இணைந்திருக்கிறது என்பது போல காட்ட வேண்டும் என்று ராகுல், தமிழகத்திற்கு வரும்போதெல்லாம் கருணாநிதியை சந்திக்காமல் சென்று வருகிறார். இப்பொழுதும், ஜெயலலிதாவைப் பார்த்து மரியாதை செல்லுத்தி விட்டு செல்லும் போது, கருணாநிதியை ஏன் பார்க்கவில்லை என்று கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. ராகுலுக்கு கருணாநிதியை விலக்க வேண்டும் என்ற எண்ணம் எப்படி ஏற்பட்டது என்பது மர்மமாக இருக்கிறது.

jaya-corruption-cases-jailed-releasedஊழலை மீறி ஜெயித்த ஜெயலலிதா: ஜெயலலிதா உண்மையாக ஊழல் செய்தாரா அல்லது சசிகலா அண்ட் கம்பெனியால் மாட்டிக் கொண்டாரா, சுப்ரமணியன் சுவாமி மாட்டி வைத்தாரா என்றெல்லாம் ஆராய்ச்சி செய்தாலும், சட்ட-வழக்குகளை சீர்தூக்கிப் பார்த்தாலும், மக்கள் அவற்றைக் கன்டுகொள்ளவில்லை என்றே தெரிகிறது. குறிப்பாக அவர் கருணாநிதி போன்ற ஆண்களால் பலிவாங்கப் படுகிறார் என்ற எண்ணம் அதிகமாகியது. தமிழக பென்களின் ஆதரவு இன்னும் ஜெயலலிதாவுக்கு இருக்கிறது. இலவசதிட்டங்கள் எல்லாமெ பெரும்பாலும், பெண்களுக்கு என்பதை கவனிக்க வேண்டும். இதனால் தான் பெண்களின் ஆதரவு, இறந்த பின்னர் இன்னும் அதிகமாகியுள்ளதை கவனிக்கலாம். இனி ஜெயலலிதாவை, எம்.ஜி.ஆரைப் போன்று ஒரு ஓட்டுக்களை இழுக்கும் சின்னமாக்கி விட்டால், அவர் பெயரைச் சொல்லி இனி ஓட்டுகள் கேட்கலாம், மக்களும் ஓட்டுப் போடுவார்கள். எம்.ஜி.ஆர் படத்தை மற்ற கட்சிகள் போடுவதைப் போல, ஜெயலலிதா படத்தை போட முடியாது. அந்த விசயத்தில் அதிமுகவுக்கு லாபம் தான். இனி “எம்.ஜி.ஆர்-ஜெயலிதா” சின்னம் அமோகமான வெற்றிசின்னமாக இருக்கும். இதை எதிர்த்து யார் பேசினாலும் மக்கள் நிச்சயமாக நிராகரிப்பார். மேலும் இன்றைய இணைதள ஞானம் பரவியுள்ள காலத்தில், இளைஞர்களின் ஆதரவும் ஜெயலலிதாவுக்கு உள்ளது. அரசியலை சீர்துக்கிப் பார்க்கும் அவர்களிடத்தில் எப்படி மோடிக்கு ஆதரவு அளித்து வருகின்றனரோ, அத்தகைய ஆதரவு “எம்.ஜி.ஆர்-ஜெயலிதா” சின்னத்திற்குக் கிடைக்கும். ஆனால், அதிமுக ஊழலற்ற நிர்வாகத்துடன் செயல்பட வேண்டும். மோடி போன்று முன்னேற்றம், வளர்ச்சி, உன்னதி, மேன்மை என்ற ரீதியில் செயல்பட வேண்டும். மறுபடியும் வட்டம்-மாவட்டம்-கார்ப்பரேஷன் என்று ஊழல்களை ஆரம்பித்தால், இக்கால இளைஞர்கள் தூக்கி எரிந்து விடுவார்கள்.

anna-mgr-jaya-funeralsஅண்ணா, எம்.ஜி.ஆர், அம்மா சின்னங்கள்: தமிழகத்தைப் பொறுத்த வரையில், அண்ணா, எம்.ஜி.ஆர் சின்னங்களுக்குப் பிறகு “அம்மா” தான் வந்துள்ளது. அண்ணாதுரை, எம்.ஜி.ஆர், அடுத்து ஜெயலிதாவால் தான் மக்களைக் கவர முடிந்துள்ளது. திமுக “எம்.ஜி.ஆர்”ஐ வைத்துதான் ஓட்டு கேட்டது. அதிமுகவும் “எம்.ஜி.ஆர்”ஐ வைத்துதான் ஓட்டு கேட்டது. எம்.ஜி.ஆர் தெர்ந்தெடுத்தது –ஜெயலிதாவை. ஆனால், ஜெயலிதா யாரையும் நம்பவில்லை, தெர்ந்தெடுக்கவில்லை, தன்னை வைத்தே எல்லாவற்றையும் நடத்தினார். முக்கியமாக பொறுப்பேற்றுக் கொண்டார். மற்றவர்கள் மீது திணிக்கவில்லை, சுமத்தவில்லை, பழிபோடவில்லை. ஆக தமிழக மக்களை ஈர்க்கவோ, ஓட்டுகளை சேர்க்கவோ  அண்ணா, எம்.ஜி.ஆர், அம்மா சின்னங்களே தவிர மற்றவையெல்ல. இனி திராவிட உதிரிக்கட்சிகள், பெரியார், அண்ணா, அம்பேத்கர், காந்தி, நேரு, எம்.ஜி.ஆர், என்ற முரண்பட்ட தலைவர்கள் சின்னங்களுடன் அம்மாவையும் சேர்ப்பார்கள். ஏன் முஸ்லிம் கட்சிகள் மட்டுமல்ல, பிஜேபியும் அம்மாவை சேர்த்துக் கொள்வார்கள்.

© வேதபிரகாஷ்

12-12-2016

jayalalita-aasaulted

[1] மாலைமலர், ஜெயலலிதா மரணம்: கவுதமியின் சந்தேகத்தின் பின்னால் சதி, பதிவு: டிசம்பர் 10, 2016 13:29, மாற்றம்: டிசம்பர் 10, 2016 13:30

[2] http://www.maalaimalar.com/News/District/2016/12/10132959/1055425/Gauthami-suspicion-conspiracy-for-Jayalalithaa-Died.vpf

[3] தினதந்தி, ஜெயலலிதா மரணம் குறித்து விமர்சனம்: நடிகை கவுதமி உருவப்படத்தை .தி.மு..வினர் எரித்தனர், பதிவு செய்த நாள்: ஞாயிறு, டிசம்பர் 11,2016, 2:32 AM IST; மாற்றம் செய்த நாள்: ஞாயிறு, டிசம்பர் 11,2016, 2:32 AM IST

[4] http://www.dailythanthi.com/News/State/2016/12/11023224/Jayalalithaa-death-Review-Actress-kavutami-cutout.vpf

ஜெயலலிதாவுக்கு முன்பு மற்றும் ஜெயலலிதாவுக்கு பின்பு: ஜெயலலிதாவுக்கு நிகராக இன்னொரு திராவிட தலைவர் உருவாகுவது கடினமே!

திசெம்பர் 11, 2016

ஜெயலலிதாவுக்கு முன்பு மற்றும் ஜெயலலிதாவுக்கு பின்பு: ஜெயலலிதாவுக்கு நிகராக இன்னொரு திராவிட தலைவர் உருவாகுவது கடினமே!

jaya-modi-gst-politicsஜெயலலிதாவும், ஜி.எஸ்.டி அரசியலும்: ஜி.எஸ்.டியை பற்றி அமித் மித்ரா எந்த அளவுக்கு தெரிந்து கொண்டிருக்கிறாரோ, அதைவிட ஜெயலலிதா தெரிந்து கொண்டிருந்தார் என்பதை, மோடி, அருண் ஜைட்லி, பியூஸ் கோயல் என்று படையெடுத்து வந்து ஜெயலலிதாவைப் பார்த்தது, சந்திக்க முயன்றது, மா ஃபோ பாண்டியன் பேசிய விதம் முதலியவை எடுத்துக் காட்டுகின்றன. இந்திய நிலையில், அதுதான் ஜெயலலிதாவை தேசியத்தலைவர் போன்ற தோற்றத்தை உருவாக்கியது. ஏனெனில், அவர்கள் கேரள அல்லது வங்காள முதலமைச்சர்களைச் சென்று பார்க்கவில்லை, பேசவில்லை. கடந்த தேர்தல்களில், தமிழகத்தில் பிஜேபியை கொஞ்சம் கூட கண்டு கொள்ளவில்லை. மோடி வந்து சென்றாலும், பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் தன்னுடைய பலத்தை நிரூபித்தார். ஜி.எஸ்.டியைப் பொறுத்த வரையில், சேவை வரி திரட்டும் அதிகாரத்தை மாநிலங்களுக்கு அளிக்க வேண்டும் என்று உறுதியாகக் கேட்டு வந்தது தமிழகம் தான். இந்நிலையில், காங்கிரஸ் கலாட்டா செய்து வருகின்ற நிலையில், பிஜேபி ஜெயலலிதாவின் ஆதரவை எதிர்பார்த்தது, ஆனால், ஜெயலலிதா காலமானது, எல்லாவற்றையும் முடக்கி விட்டது. ஜெயலிலதாவுக்குப் பிறகு, மோடியின் அதிமுக பக்கம் சாய்தலை இவ்வித்த்தில் தான் காணவேண்டும்.

jaya-death-gautami-letter-to-modiநடிகை கௌதமி மோடிக்கு எழுதிய கடிதம் (08-12-2016): ஜெயலலிதா இறந்த பிறகு, பலர் அவரை வாழ்த்தி வருவதே வினோதமான போக்காக இருக்கும் நிலையில், கௌதமி, ஜெயலலிதா மரணம் குறித்து பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளது, அதைவிட வினோதமாக உள்ளது. ‘அப்போலோவில் அனுமதிக்கப்பட்ட நாள் முதல் மறைந்த நாள் வரை ஏன் யாரையும் பார்க்க விடவில்லை? ஏன் அவருடைய உடல்நலம் குறித்த தகவல்கள் ரகசியமாக உள்ளன? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தலைவரைப் பற்றி மக்கள் தெரிந்துகொள்ளக்கூடாதா?’ என கேட்டுள்ளார்[1].  கடிதத்தில் இருந்து சில வரிகள்[2]: “I ask these questions now because it is a primary concern and right of every citizen of India to be aware of and informed about their democratically elected leaders. To be aware of their state of health and ability to perform their duties for the larger good of the people. To be concerned for the wellness and comfort of a beloved leader of the masses. And the fact that a tragedy of such tremendous scale should not go unquestioned and definitely, not unanswered, under any circumstances. If this be the case with a public figure of this magnitude, then what chance does the common citizen of India have when he fights for his personal rights? Gautami Tadimalla, 08.12.2016”. இப்படி அவரது பிளாக்கில் அக்கடிதம் வெளிவந்ததும், ஊடகங்கள், அதனை செய்தியாக்கி விட்டது[3].

jaya-death-suspicion-gautami-letter-to-modi-cr-saraswati-rebuttalஇப்பொழுது நடக்கும் ஊடகதர்மமும், செய்தி வெளியீடுகளும்: இன்றைக்கு பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்-அப் முதலியவற்றில் உள்ளவற்றையெல்லாம் செய்திகளாக்கி வருவது தரமற்ற செயலாக தெரிகிறது. பொதுவாக நிருபர்கள் விசாரித்து, செய்தித்தரம் உள்ளதா என்று பார்த்துதான், செய்திகளை அனுப்புவார்கள். அதனை, ஆசிரியர் பார்த்துப் படித்து, அதனை செய்தியாக வெளியிடலாமா வேண்டாமா என்று தீர்மானித்தப் பிறகு, வெளியாகும், இல்லை குப்பைத் தொட்டிக்கு போகும். பத்திரிக்கை / நாளிதழ் ஆசிரியர் ஊடகதர்மத்தைப் பின்பற்றி வந்தனர். ஆனால், இன்றைக்கு, குப்பைத்தொட்டிக்கு போகவேண்டிய விவகாரங்கள் செய்தியாகின்றன. இது நிருபர்கள் ஆதிக்கம் செல்லுத்துகின்றனரா அல்லது பத்திரிக்கை / நாளிதழ் ஆசிரியர் கைப்பாவைகளாக, பொம்மைகளாக வேலை செய்து வருகின்றனரா என்றா சந்தேகமும் எழுகின்றது. இன்றைக்கு, ஊடகங்கள் பெரும்பாலும், அரசியல் கட்சிகள், தொழிலதிபர்கள், அந்நியநாட்டு ஏஜென்டுகள்-சித்தாந்தவாதிகள் முதலியோரின் கைகளில் உள்ளது என்பது தெரிந்த விசயமாகி விட்டது. தெரிந்து விட்டநிலையிலும், அவை கவலைப்படுவதாக இல்லை. கூட்டணி கொள்ளையில், அவற்றிற்கு விளம்பரங்கள் கிடைக்கின்றன, வாழ்ந்து வளர்கின்றனர். மற்றவை வீழ்ந்து மறைகின்றன.

jaya-death-gautami-letter-to-modi-cr-saraswati-rebuttalகௌதமி கடிதத்தின் விவரங்கள்: “ஒரு சாதாரண இந்திய குடிமகளாக நான் இந்த கடிதத்தை எழுதுகிறேன்[4]. சமீபத்தில் காலமான தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் கோடிக்கணக்கான நபர்களில் நானும் ஒருவர். ஜெயலலிதா சிறந்த அரசியல் தலைவர் மட்டுமல்லாமல் பெண்கள் தங்கள் வாழ்வில் எப்படி தடைகளைத் தாண்டி முன்னேற வேண்டும் என்பதற்கும் நல்ல உதாரணம். பல்வேறு நல்வாழ்வுத் திட்டங்களை அவர் நிறைவேற்றியுள்ளார். சமீபத்தில் காலமான அவரின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் உள்ளன[5]. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது, சிகிச்சை அளிக்கப்பட்டது, அவர் குணமாகி வருவதாக கூறப்பட்டது, திடீரென மாரடைப்பால் மரணமடைந்தார் என அறிவிக்கப்பட்டது போன்ற பல சந்தேகங்கள் உள்ளன[6]. பல மர்மங்கள் நிறைந்திருக்கும் அவரது மரணத்தில் இருக்கும் சந்தேகங்களை பிரதமர் மோடி தீர்க்க வேண்டும். முதல்வரின் மரணம் குறித்து அறிந்து கொள்ள, ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் உரிமை உள்ளது[7]. தனிப்பட்ட நபரின் மரணமாக இருந்தால் அறிந்துகொள்ள எங்களுக்கு உரிமை இல்லாமல் இருக்கலாம். ஆனால் மக்களால் விரும்பப்பட்ட, தமிழக முதல்வராக பதவி வகித்த ஒருவரின் மரணம் குறித்து அறிந்து கொள்ள முயற்சி செய்வது எந்த விதத்திலும் தவறும் இல்லை. இந்த கடிதம் குறித்து நீங்கள் நடவடிக்கை எடுப்பீர்கள் என நான் முழுமனதுடன் நம்புகிறேன். இந்த விஷயத்திலும் நீங்கள் உண்மையை வெளிக்கொண்டு வருவீர்கள் என நான் நம்புகிறேன்,” என தனது கடிதத்தில் கௌதமி கூறியுள்ளார்[8].

jaya-death-modi-cameசி.ஆர்.சரஸ்வதியின் பதில்: இதுதொடர்பாக அதிமுக செய்தி தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி பிரபல தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில்[9], “ஜெயலலிதா வேகமாக குணம் அடைந்து வீடு திரும்புவார் என்று அனைவரும் எதிர்பார்த்தோம். அவர் நன்றாக தான் இருந்தார். திடீரென்று அவருக்கு மாரடைப்பு வரும் என்றோ, அவர் நம்மை விட்டு பிரிந்து செல்வார் என்றோ யாரும் நினைக்கவில்லையே?.அதிமுக அல்லாது தமிழகம் மற்றும் இந்தியா அளவில் கட்சியை சேர்ந்தவர்கள் அப்பல்லோ வந்து ஜெயலலிதா உடல்நலம் குறித்து விசாரித்தனர். அவர் உடல்நலம் தேறி வருவதாகவும், விரைவில் வீடு திரும்புவார் என்றே அனைவரும் கூறினர்[10]. இதை கௌதமி அவர்கள் பார்க்கவில்லையா? படித்து தெரிந்து கொள்ளவில்லையா?[11] அரசு மருத்துவர்களாக எய்ம்ஸ் மருத்துவர்கள் தானே சிகிச்சை அளித்தனர், ரிச்சர்டு என்ன அதிமுகவை சேர்ந்த மருத்துவரா? அத்தனை பேரும் ஜெயலலிதா நன்றாக இருப்பதாகவும், விரைவில் வீட்டுக்கு வந்து விடுவார் என்றும் பேட்டி கொடுத்தனர்[12]. அப்படியானால் அத்தனை பேரும் பொய் சொன்னார்கள் என்று கவுதமி சொல்கிறாரா?. வீணாக யாரும் வதந்தியை பரப்ப வேண்டாம்[13]. நன்றாக உடல் நலம் பெற்று வந்த அவருக்கு எதிர்பாராமல் உடல் நிலை மோசம் அடைந்ததாக லண்டன் டாக்டர் தனது டுவிட்டரில் பதிவு செய்திருக்கிறாரே? ஏன் நேற்று கூட அப்பல்லோ நர்ஸ்களும், மருத்துவர்கள் எவ்வளவு அருமையாக சொல்லி இருக்காங்க? ஏன் காட்டவில்லை என்று கௌதமி கேட்குறாங்க? ஐசியூவில் இருக்கும் போது யாராக இருந்தாலும் முதல்வரை சென்று பார்க்க முடியாது,” என கூறியுள்ளார்[14].

 

© வேதபிரகாஷ்

12-12-2016

j-jayalalitha-1948-2016

[1] விகடன், ஜெ., மரணத்தில் ஏன் ரகசியம்? – கௌதமியின் கடிதம், Posted Date : 07:44 (09/12/2016); Last updated : 10:06 (09/12/2016).

[2] http://www.vikatan.com/news/india/74516-gautami-writes-to-pm-modi-on-the-mystery-surrounding-jayalalithaas-death.art

[3] Gautami Tadimalla, 4/472, Kapaleeswarar Nagar, Neelankarai, Chennai 600041, +917338713979.

https://gautamitadimalla.wordpress.com/2016/12/08/tragedy-and-unanswered-questions/

[4] தமிழ்.வெப்துனியா, ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளது: நடிகை கௌதமி பிரதமருக்கு கடிதம்!, Last Modified: வெள்ளி, 9 டிசம்பர் 2016 (10:46 IST)

[5] http://www.tamil.webdunia.com/article/regional-tamil-news/gautami-raises-questions-on-jayalalithaa-s-mystery-death-writes-to-pm-modi-116120900006_1.html

[6] மாலைமலர், ஜெயலலிதா மரணம் குறித்த சர்ச்சை: பிரதமர் மோடிக்கு நடிகை கவுதமி கடிதம், பதிவு: டிசம்பர் 09, 2016 11:09

[7] http://www.maalaimalar.com/News/District/2016/12/09110950/1055149/Jayalalithaa-death-controversy-actress-gowthami-letter.vpf

[8]

[9] லங்காஶ்ரீ, நடிகை கௌதமிக்கு காட்டமாக பதிலடி கொடுத்த சி.ஆர்.சரஸ்வதி, டிசம்பர்.09, 2016.

[10] தினசரி, அதிமுக குறித்து வதந்தி பரப்புவதை கௌதமி நிறுத்த வேண்டும்: ஸி.ஆர்.சரஸ்வதி ஆவேசம், 09-12-2016.09.15.PM IST.

[11] http://www.dhinasari.com/politics/10813-cr-saraswathi-condemn-gauthamis-remark-over-jayalalithas-death-row.html

[12] தினதந்தி, யாரும் வதந்தியை பரப்ப வேண்டாம்: ஜெயலலிதா மரணம் குறித்து சந்தேகத்தை கிளப்புவதா? நடிகை கவுதமிக்கு, சி.ஆர்.சரஸ்வதி கண்டனம், பதிவு செய்த நாள்: சனி, டிசம்பர் 10,2016, 6:48 PM IST; மாற்றம் செய்த நாள்: சனி, டிசம்பர் 10,2016, 11:15 PM IST;

[13] http://www.dailythanthi.com/News/State/2016/12/10184858/I-do-not-want-anyone-to-spread-rumors-Actress-Gautami.vpf

[14] http://news.lankasri.com/india/03/115131

கோல்வால்கருக்கும் திருவள்ளுவருக்கும் என்ன சம்பந்தம்? – பகவத் கீதை, சங்கராச்சாரியார், வீரமணி, திராவிட கழகம் – பெரியார் திடலில் விவாதம் (3)!

செப்ரெம்பர் 20, 2015

கோல்வால்கருக்கும் திருவள்ளுவருக்கும் என்ன சம்பந்தம்? – பகவத் கீதை, சங்கராச்சாரியார், வீரமணி, திராவிட கழகம்பெரியார் திடலில் விவாதம் (3)! 

கீதையின் மறுபக்கம் - வீரமணி

கீதையின் மறுபக்கம் – வீரமணி

வீரமணிக்கு கீதை மீது பிறந்த காதல்: வீரமணி போன்ற இந்து-விரோதத்துவம் கொண்ட நாத்திகர்களே இன்று பகவத் கீதையைப் பற்றி விவாதிக்க ஆரம்பித்து விட்டனர். போதாகுறைக்கு, பெரியார் பிறந்த நாளைக் கொண்டாடும் நேரத்தில், கோல்வால்கர் பற்றி எல்லாம் பேச ஆரம்பித்து விட்டார். சரி, கோல்வால்கருக்கும், திருக்குறளுக்கும் என்ன சம்பந்தம் என்று கேள்வி கேட்டு விவரிக்க ஆரம்பித்தது தமாஷான விசயம் தான். ஆனால், இதை முன்னமே எடுத்துக் காட்டியுள்ளார். கோல்வால்கர் திருக்குறளை பொதுநூலாக பாவித்தார், ஆனால், திராவிடத்துவவாதிகள் அதனை தமிழர் நூல், திராவிடர்களின் நூல் என்று குறுகிய நோக்கில் சுருக்கினர். குறளைப் படித்து, மற்ற இலக்கியங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, சமஸ்கிருத இலக்கியத்துடனான நெருக்கம் தெரிந்தது[1]. இதனால், அதிலுள்ள நீதி, நேர்மை, தார்மீகக் கருத்துகள் வேத-உபநிஷ்ட நூல்களிலிருந்து பெற்றிருக்கலாம் என்று பல அறிஞர்கள், ஆராய்ச்சியாளர்கள் எடுத்துக் காட்டினர்[2]. மேலும், குறள், சூத்திரங்கள் போன்று ஈரடி, ஏழு சொற்கள், சுருங்கச் சொல்லுதல் முதலிய விதிகளையும் பின்பற்றியிருப்பதை எடுத்துக் காட்டினர். இதனால், தனித்தமிழ் இயக்க தமிழ் பண்டிதர்கள் அவ்வாறில்லை என்பதனை எடுத்துக் காட்டவே திரிபு விளக்கங்கள் கொடுக்க ஆரம்பித்தார்கள்.

குந்த-குந்த ஆச்சாரியாரும், வள்ளுவ நாயனாரும்

குந்த-குந்த ஆச்சாரியாரும், வள்ளுவ நாயனாரும்

திருக்குறள் மறைமுக எதிர்ப்பு தேச-விரோதமானது: இது 1960களில் ஜைனர்கள், கிருத்துவர்கள் போன்றோரை ஊக்குவித்தது. அவர்கள் குறள் தங்களது நூல் தான், வள்ளுவரும் தங்களது மதத்தவர் தான் என்று கதைகளைக் கட்டிவிட ஆரம்பித்தனர்[3]. வள்ளுவர் குந்தர்-குந்தரின் மாணவர் என்றும் அவரிடத்திலிருந்து குறளைத் திருடிச் சென்று தனது என்று அரங்கேற்றி விட்டார், இல்லை அவரே குந்த்-குந்தர் தான்[4] என்று ஜைன ஆராய்ச்சியாளர்கள் கதை கட்டினர். கிறிஸ்தவர்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். இதுதான் சாக்கு என்று, தாமஸ் சென்னைக்கு வந்தார், வள்ளுவரை சந்தித்தார், வள்ளுவர் அவரிடத்திலிருந்து பைபிள் கற்றுக் கொண்டு, அதன் தாக்கத்தில் தான் குறளை எழுதினார் என்று பெரிய கட்ட்டுக் கதையைக் கட்டி விட்டனர். போதாகுறைக்கு அத்தகைய போலித்தனமான கள்ள ஆராய்ச்சிகளுக்கு, அவர்களால் ஏற்படுத்தப் பட்ட பல்கலை பிரிவுகள்-சேர்களால் பட்டங்களும் கொடுக்கப்பட்டன. இதற்கெல்லாம் கருணாநிதி முதல் தமிழ்த்துறையில் உள்ள ஊழியர் வரை உதவி செய்துள்ளார்கள் என்பதனை ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும்.

Bhagavatgita, sedition, Tilak

Bhagavatgita, sedition, Tilak

பகவத் கீதை எதிர்ப்பு ஆந்நியர் ஆட்சி முதல் திராவிட ஆட்சி வரை: பகவத் கீதையினை இந்துக்கள் ஆதரிப்பது அறிந்து, அதனை தூஷித்து ஒரு புத்தகத்தை எழுதினார். இதுவொன்றும் புதியதல்ல. ஆங்கிலேயர் காலத்திலிருந்தே, பகவத் கீதையை எதிர்த்து பிரச்சாரம் நடந்தது. தேசதுரோக அறிக்கை கமிட்டி அதனை தடை செய்யவும் முற்பட்டது. திலகருக்கும், காந்திக்கும் இடையிலேயே கீதை ஆதரிப்பு-எதிர்ப்பு விவாதம் நடந்தது. காந்தி உண்மையில் கீதையை ஆதரிப்பது போல காட்டிக் கொண்டு, எதிர்க்கவே செய்தார். எப்படி சைவ-வைணவ சர்ச்சை, சண்டை, எதிர்ப்புகள் இலக்கியங்களாக வெளிப்பட்டபோது, அவை மற்றவர்களால் சாதகமாக உபயோகித்துக் கொண்டார்களோ, அதேபோல இந்த விவரங்களை வைத்துக் கொண்டு, தன்னுடைய காழ்ப்பு, வெறுப்பு, துவேசம் முதலியவற்றைச் சேர்த்து இப்புத்தகத்தை வீரமணி எழுதித் தள்ளினார். போதாகுறைக்கு இதே மதத்தில் (செப்டம்பர் 2015) தான் திருப்பதியில் 9 முதல் 11 வரை “ஶ்ரீமத் பகவத் கீதை”ப் பற்றி தேசிய மாநாடு நடந்துள்ளது[5].

Balagangadhara Tilak- Gandhi and Gita

Balagangadhara Tilak- Gandhi and Gita

ருண் விஜய்யின் தமிழ்த்தொல்லை, தினமணியின் கொசுத் தொல்லை, வீரமணியின் ஓடோமாஸ் கொள்ளை: ஆகஸ்ட் 2014ல் ஆர்.எஸ்.எஸ் திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்றது[6]. இந்து-விரோத தளங்கள் இப்படியெல்லாம் புலம்பித் தள்ளின[7], “ருண் விஜய்யின் தமிழ்த்தொல்லையும், தினமணியின் கொசுத் தொல்லையும் நாளுக்குநாள் தாங்க முடியவில்லை. வடமாநிலங்களில் திருக்குறள் பயிற்றுவிப்பு, திருவள்ளுவர் பிறந்தநாள் கொண்டாட்டம், திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்று வரிசையாக இந்த ஆர்.எஸ்.எஸ். நரி வைக்கும் ஊளையில் காது கிழிகிறது! திருக்குறளைத் தூக்கிக்கொண்டு காவி துடிக்க அலையும் இந்த நரி, மத்தியப் பள்ளிக்கூடங்கள், பல்கலைக்கழகங்கள் என சமஸ்கிருதத்தை திணித்துக்கொண்டே வரும் ஸ்மிருதி ராணியுடன் சேர்ந்துதிருக்குறள், தமிழுக்கு ஆதரவுபோஸ் கொடுத்தது. அடுத்த சீன், மத்திய உள்துறை ராஜ்நாத்சிங்கை சந்தித்து திருக்குறள் அறிமுகம் செய்து திருவள்ளுவர் சிலையை கைமாத்தியது. உடனே உளவுத் துறையை கையில் வைத்திருக்கும் உள்துறை அமைச்சர் பார்வையாளர் கண்களில் தெரியும்படி தமது அறையில் சிலையை வைக்குமாறு உத்திரவிட்டார். போதாதா? “பா...வின் தமிழ்க்காதல்பாரீர் என! தினமணி மாமா மூணு காலத்துக்கு படுத்துப் புரண்டு, பாரடா! எங்கள் பார்ப்பன சமர்த்தை என்று தொடையைத் தட்டுகிறார். திருவள்ளுவர் படத்துக்கே பூணூல் போட்டு அவர்எங்களவா?’ என்று ஆள்கடத்தல் செய்த தமிழக பார்ப்பனக் கும்பலையும் தாண்டி, திருவள்ளுவர் திரும்ப வரவா போகிறார் என்ற தைரியத்தில் தருண் விஜய் சீன் போடுகிறார்”. தருண் விஜய்க்கு சாபம் கொடுத்தன, வசை பாடின[8]. அவர் தமிழ் மீது காட்டும் காதல் பொய்யானது என்றும் கூறின[9].

tarun-vijay-vairamuthu-11

tarun-vijay-vairamuthu-11

வீரமணியின் கீதை காதலும், தருண் விஜயின் குறள் காதலும்: தருண் விஜய்க்கு திடீரென்று திருக்குறள் பற்று வந்து, அதனை ஆதரித்து, “திருவள்ளுவர் நாள்” என்றெல்லாம் அறிவித்தவுடன், வீரமணி உஷராகி விட்டார். வீரமணியின் கீதை மீதான காதல் அலாதியானது. ஆக, இந்த இரு காதலர்களும் மறைமுகமாகத் தாக்கிக் கொள்ள ஆரம்பித்தனர். வீரமணி தருணுக்கு எப்படியாவது செக் வைக்க அரும்பாடு பட்டார். இந்தியா முழுவதும் திருவள்ளுவர் நாள் என்ற மத்திய அமைச்சரின் அறிவிப்பு வரவேற்கத்தக்கதே என்றும், தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். வேரூன்றுவதற்கான கண்ணி வெடியாக இதனைப் பயன்படுத்தக் கூடாது என்றும் கி.வீரமணி கூறியுள்ளார்[10].

tarun-vijay-vairamuthu-21

tarun-vijay-vairamuthu-21

திருவள்ளுவர் நாள் அறிவிப்பு: தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். வேரூன்ற பயன்படுத்தக் கூடாது: கி.வீரமணி: திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி 29.11.2014 சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் – ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் இயக்கப்படி – நடைபெற்று வரும் பா.ஜ.க. அரசின் சார்பில் திருவள்ளுவர் நாள் இந்தியா முழுவதும் மத்திய அரசால் கொண்டாடப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார். இதற்கு வழி வகுக்கும் வகையில் உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த பா.ஜ.க., எம்.பி.யும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஹிந்தி ஏடான ‘பாஞ்சன்யா’வின் முன்னாள் ஆசிரியருமான தருண்விஜய் மக்களவையில் இப்படிப் பேசி வலியுறுத்தியதனால் அமைச்சர் அறிவிப்பதாகக் கூறியுள்ளார். திடீரென்று அவரே முடிவு செய்து அறிவித்திருக்க இயலாது; ஏற்கெனவே இதுபற்றி ஆர்.எஸ்.எஸ். வழிகாட்டிகளின் திட்டமாகத்தான் இது யோசிக்கப்பட்டு பிறகுதான் அறிவித்திருக்க முடியும். இதை வரவேற்கிறோம்; என்றாலும் ஆர்.எஸ்.எஸ். தமிழ்நாட்டிலும், தமிழர்கள் மத்தியில் வேரூன்றுவதற்கு இதை ஒரு தந்திர உபாயமாகவோ, “கண்ணி வெடியாகவோ” பயன்படுத்தலாம் என்றோ நினைத்துக் கொண்டு இதை தூண்டில் முயற்சியாக கருதி இறங்கக் கூடாது. நாம் இப்படி சொல்வது ஏனோ என்று சில ‘தமிழறிஞர்கள்’கூட எண்ணக் கூடும். அவர்கள் அறியாத ஒரு தகவலை நாம் இங்கே எழுதி தெரிவிக்க வேண்டிய கடமை நமக்கு உண்டு.

வீரமணி, ஸ்மிருதி இரானி, தருண் விஜய்

வீரமணி, ஸ்மிருதி இரானி, தருண் விஜய்

கோல்வால்கர் திருக்குறளைப் பற்றி குறிப்பிட்டது: ஆர்.எஸ்.எஸ். தலைவர்களில் தத்துவ போதகரான கோல்வால்கர் எழுதிய ‘Bunch of Thoughts என்ற ஆங்கில நூல் ‘ஞான கங்கை’ என்ற தலைப்பில் தமிழில் மொழி பெயர்த்து வெளியிடப்பட்டுள்ளது. (பக்கம் 168-169). அந்நூலில் – எம் மதத்தையும் சாராத திருவள்ளுவரை – ஒரு ஹிந்துத்வாவாதிபோல் சித்தரித்து எழுதியுள்ளார். அப்பகுதி இதோ: “தற்காலத்தில் தமிழைப்பற்றி நாம் அதிகம் கேள்விப்படுகிறோம். தமிழ் என்பது தனக்கென வேறான கலாசாரமுடைய தனிப்பட்ட மொழி என்று கூறுகின்றனர். அவர்கள் வேதத்தில் நம்பிக்கை கொள்ள மறுக்கின்றனர். திருக்குறளை அவர்களது மறையாகக் கருதுகின்றனர். திருக்குறள் இரண்டாயிரம் ஆண்டுகட்கும் மேற்பட்ட ஒரு பழைமையான அறநூல்தான். திருவள்ளுவ முனிவர் அதன் ஆசிரியர் ஆவார். அவரை நாம் நமது ப்ராதஸ்மரணத்தில் நினைவு கூர்கிறோம். மிகப் புகழ் பெற்ற புரட்சிவாதியான .வே.சு. அய்யர் திருக்குறளை (ஆங்கிலத்தில்) மொழி பெயர்த்துள்ளார்). திருக்குறளில் நாம் காண்பது என்ன? நாடெங்கும் அறிமுகமான நான்குவித வாழ்க்கை முறை (சதுர்வித புருஷார்த்தம்) அதில் விஷயமாகக் கூறப்பட்டுள்ளது. மோட்சத்தைப் பற்றிய அத்தியாயம் மட்டும் முன்னால் வைக்கப்பட்டுள்ளது. அது எந்தக் கடவுளையும் அல்லது எந்த வழிபாட்டு முறையையும் பின்பற்றுமாறு கூறவில்லை. மோட்சம் என்ற உயர்ந்த விஷயத்தைப் பற்றியே கூறுகின்றது. எனவே, அது எந்த ஒரு சாரரின் நூலும் அல்ல. மகாபாரதம்கூட திருக்குறள் கூறுவது போன்ற வாழ்க்கை முறைகளையே புகழ்ந்து கூறுகின்றது. ஹிந்துக்களிடம் அல்லாது மற்ற எந்த மதத்தவரிடமும் இவ்வாறான சிறந்த வாழ்க்கை முறை நோக்கு காணப்படவில்லை. எனவே, திருக்குறள் சிறந்த ஹிந்துக் கருத்துக்களைத் தூய ஹிந்து மொழியில் எடுத்துக் கூறும் ஒரு ஹிந்து நூல் ஆகும்”, என்று கோல்வால்கர் கூறியுள்ளார்.

© வேதபிரகாஷ்

20-09-2015

[1] Divine Life Society,Bhagavad Gita & Tirukkural Compendium, Divine Life Society of South Africa, 1989.

[2] M. Muthuraman, Gita and Kural, the University of Michigan, Higginbothams, 1971.

[3] http://jainology.blogspot.in/2007/11/saint-tiruvalluvar-was-jain.html

[4] Jainism is oldest organized religion in world and also it is first organized religion of Dravid culture (refer Archaeology Director in Mahal , Madurai).  Thiruvalluvar( Acharya kund kund) was a Jain saint (Naked) who contributed to Tamil Civilization, Tamil Script and Tamil culture, later who was renamed as Thiruvalluvar- You don’t have to trust our claim( you can verify this fact with Dr. Skandalingam, Director of State Archaelogy, Mahal, Madurai Tamilnadu) your narrow brain will be refreshed with fresh information.

[5] https://kvramakrishnarao.wordpress.com/2015/09/12/the-importance-of-bhagavatgita-in-prasthanatraya-the-national-seminar-held-at-tirupati-from-september-9th-to-11th-2015/

[6] உச்சநீதிமன்ற நீதிபதி  தவே அண்மையில் குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசுகையில்  பள்ளிகளில் முதல் வகுப்பிலேயே பகவத் கீதை மற்றும் மகாபாரதத்தை கற்றுக் கொடுக்க வேண்டும் என கூறியுள்ள கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள ஆர்.எஸ்.எஸ். -சின் கலாச்சார அமைப்பின் இயக்குனர் பி. பரமேஸ்வரன், அதனை தேசிய நூலாகவும் அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

http://www.vikatan.com/article.php?page=2&module=news&mid=9&sid=0&aid=31029

[7] http://www.vinavu.com/2014/12/05/thirukural-and-tarun-vijay-political-trickery/

[8] http://www.vinavu.com/2014/11/11/vairamuthu-selling-out-to-bjp-tarun-vijay/

[9] புதிய ஜனநாயகம் – அக்டோபர் 2014;  http://www.vinavu.com/2014/10/29/tarun-vijay-love-of-tamil-is-fake/

[10] http://www.nakkheeran.in/Users/frmnews.aspx?N=133291

நக்கீரன், திருவள்ளுவர் நாள் அறிவிப்பு: தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். வேரூன்ற பயன்படுத்தக் கூடாது: கி.வீரமணி, பதிவு செய்த நாள் : 29, நவம்பர் 2014 (17:43 IST) ;மாற்றம் செய்த நாள் :29, நவம்பர் 2014 (17:43 IST).

மோடி-பிஜேபி வேறு, வாஜ்பேயி-பிஜேபி வேறு – ராஜா-கனிமொழியை சிறைவைத்த காங்கிரஸ் – இக்கட்சிளுடன் திமுக கூட்டு கிடையாது – கருணாநிதி திமுகவினரிடம் கெஞ்சலாக அறிவிப்பு (1)!

திசெம்பர் 16, 2013

மோடி-பிஜேபி வேறு, வாஜ்பேயி-பிஜேபி வேறு – ராஜா-கனிமொழியை சிறைவைத்த காங்கிரஸ் – இக்கட்சிளுடன் திமுக கூட்டு கிடையாது – கருணாநிதி திமுகவினரிடம் கெஞ்சலாக அறிவிப்பு (1)!

திமுகவின் கூட்டணி  பற்றி  கருணநிதியின்  விளக்கமான  பேச்சு: 15-12-2013 அன்று பொதுக்குழுவில் பிஜேபியுடன் கூட்டு வைத்துக் கொள்ள வேண்டும் என்று சிலர் பேசினர், ஆனால், காங்கிரஸுடன் கூட்டு கூடாது என்று கடுமையாக வாதிட்டனர்[1]. கருணாநிதியின் பேச்சு மிகப்பெரிய பேச்சாக இருந்தது, அதில் திமுக ஏன் பிஜேபி மற்றும் காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டு கூடாது என்று விளக்கிய பிறகு, திமுகவினர் ஒற்றுமையாக இருந்து கொண்டு, மற்ற கட்சிகளுடன் கூட்டு வைத்துக் கொண்டு, வருகின்ற தேர்தலை ஒரு சோதனையாக சந்திக்க வேண்டும் என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டுள்ளார். தனியாக நின்று தோற்றாலும் பரவாயில்லை என்ற ரீதியில் கூட பேசி முடித்தார். பிறகு பத்திரிக்கையாளர்களுடன் பேசும் போது கூட அதே பாணியில் பதில் அளித்தார்[2]. ஆங்கில பத்திரிக்கையாளர்களிடம் மட்டும் திட்டவட்டமாக பிஜேபி அல்லது காங்கிரஸ் கூட, கூட்டு இல்லை என்று தெரிவித்தார்[3].

 

காங்கிரஸ்,    பாரதிய   ஜனதா   கட்சிகளுடன்   கூட்டணி   இல்லை   என்று  திமுக   தலைவர்  கருணாநிதி,   நேற்று   கட்சியின்   பொதுக்குழு  கூட்டத்தில்  அறிவித்தார்[4]. திமுக பொதுக்குழு கூட்டம் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடந்தது. அதில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர் மதியம் அந்த கூட்டம் தொடர்ந்து நடந்தது. கூட்டத்தில் திமுகவின் பொதுக்குழு உறுப்பினர்கள் பலர் தேர்தல் கூட்டணி பற்றி கருத்து கூறினர்.
அனைவரின் கருத்தையும் கேட்டறிந்த திமுக தலைவர் கருணாநிதி கூட்டத்தின் இறுதியில் பேசியதாவது: 

நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில், அடுத்து வரவிருக்கின்ற சட்ட மன்றத் தேர்தலில் நாம் எத்தகைய வியூகத்தை வகுக்க வேண்டும் என்பதற்காக இங்கே கூடி இருக்கிறோம். தேர்தலில் நாம் ஈடுபட வேண்டும்; வேண்டுமா, வேண்டாமா எப்படி ஈடுபடுவது? எந்த வகையில், என்ன முறையில், யாரோடு கூட்டுச் சேர்ந்து என்றெல்லாம் இந்த பொதுக்குழுவில் கேள்விகள் கேட்கப்பட்டு, வழி முறைகளும் கூறப்பட்டு, இறுதியாக எல்லா பொறுப்புகளையும் நீங்களே தாங்கிக் கொள்ளுங்கள் என்று எங்கள் தலையில் பாரத்தைச் சுமத்தி, சிக்க வைத்திருக்கிறீர்கள். கூட்டணி இல்லாமல் ஜெயிக்க முடியாது என்று நன்கறிந்த கருணாநிதி, தனித்து நிற்போம் என்று பேசியது உள்நோக்கத்துடன் தான் என்று தெரிகிறது. வெற்றிபெற உதவி தேவை என்ற நிலையில் இருக்கும் போது, வீராப்பான பேச்சு ஒரு உபயோகமும் இல்லை என்பது தெரிந்த விசயமே. 10-15 எம்.பிக்கள் இருந்தால் தான் மத்தியில் மவுசு இருக்கும், மந்திரி பதவி கிடைக்கும். இல்லையென்றால் திமுகவை யாரும் மதிக்க மாட்டார்கள் என்று திமுகவினர் வெளிப்படையாகவே கருத்தைத் தெரிவித்தனர்.

தி.மு..வை பொறுத்தவரை தனித்து நின்றே கூட இந்த வெற்றியைப் பெற முடியும். தனித்து நின்றேகூடஎன்று நான் கூறும்போது, ‘கூடஎன்று குறிப்பிட்ட வார்த்தையை மறந்து விடக் கூடாது. தனித்து நின்றே இந்த வெற்றியைப் பெறுவோம் என்று நான் சொல்லவில்லை. தனித்து நின்றே கூட நாம் வெற்றி பெற முடியுமென்று சொன்னால், கொஞ்ச நஞ்சம் ஒருவர், இருவருடைய உதவி இருப்பது நல்லது.

மோடி   கவர்ச்சியில்  சில  திமுகவினர்: “மோடி அவர்கள் அரங்கத்திற்கு வந்திருக்கிறார். வந்த நேரமே, வந்த விதமே, அவருடைய படாடோப விளம்பரங்கள், அவருக்காக பத்திரிகைகள், ஊடகங்கள், கார்பரேட் நிறுவனங்கள் தருகின்ற ஊக்கங்கள், உலகம் முழுதும் இருக்கின்ற செய்தியாளர்கள் அல்லது ஊடக உரிமையாளர்கள் தருகின்ற விளம்பரங்கள்.

எங்களுக்கு அதிர்ச்சி அளிக்கவில்லை. ஆனால் உங்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. அதனால் தான் பாரதீய ஜனதா, பாரதீய ஜனதா என்கிறீர்கள். நாமும் ஒரு காலத்தில் பாரதீய ஜனதோடு நாம் நட்பு கொண்டிருந்தவர்கள் தான். அது எந்த பாரதீய ஜனதா? மனிதாபிமானம் இல்லாமல் நடந்து கொண்ட அத்வானி போன்ற தலைவர்கள் உள்ள பாரதீய ஜனதா அல்ல. பிஜேபியுடன் கூட்டு வேண்டும் என்று திமுகவினர் தயாராக உள்ளனர். ஆனால், மோடியின் அதிகாரத்தோரணை கருணநிதிக்கு சவாலாக உள்ளது என்று தெரிகிறது. அவருக்கு வாஜ்பேயி போன்ற மென்மையான தலைவர் வேண்டும் என்று எதிர்பார்க்கிறார், ஆனால், மோடியிடம் அது எடுபடாது. மேலும், இப்பொழுதுள்ள நிலையும் வேறு.

நாம் கோரிக்கை வைத்தால், அதை உடனடியாக ஏற்றுக் கொண்டு, தோழமை உணர்வோடு நம்மோடு பழகிய வாஜ்பாய் போன்ற நல்ல மனிதர்கள் இருந்த அந்த காலத்தில் நாம் பாரதீய ஜனதாவோடு கை குலுக்கினோம்.

வாஜ்பாய்  பாரதிய  ஜனதா  கட்சியின்  தலைவராக  இருந்தாலும்,   அவர்  மனிதாபிமான  மிக்கத்  தலைவராக  இருந்தார்: “காமராஜருக்கு கன்னியாகுமரி கடற்கரையில் மணி மண்டபம் கட்ட வேண்டும் என நான் முதல் அமைச்சராக இருந்தபோது, அன்றைக்கு பிரதமராக இருந்த வாஜ்பாய்க்கு கடிதம் அனுப்பி வைத்தேன்.

ஆனால், அவரைச் சுற்றியிருந்த அதிகாரிகள், கருணாநிதி கேட்கிற அந்த இடம் கடலுக்கு மிக அருகே உள்ளதால் அனுமதிக்க இயலாது என்று சொன்னார்கள். அந்த கருத்தை வாஜ்பாய் எனக்கு எழுதி அனுப்பினார்கள். நான் விடவில்லை, மீண்டும் மீண்டும் அதை வற்புறுத்திக் கேட்டதால், கடற்கரையோரத்தில் காமராஜருக்கு நினைவு மாளிகை எழுப்ப வாஜ்பாய் அனுமதி தந்தார். மோடி இப்பொழுது இந்தியாவில் உள்ள பற்பல பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அந்நிலையில் திமுக சொல்வதையெல்லாம், மோடி ஏற்றுக் கொள்வார் என்றால், கூட்டு வைத்துக் கொள்வோம் என்ற ரீதியில் பேசினால், மோடி என்ன வாஜ்பேயி ஆகிவிடுவாரா என்ன? மோடி, மோடித்தான்வாஜ்பேயி, வாஜ்பேயிதான்!

அவர் நம்முடைய தமிழ்நாட்டுத் தலைவர்களை மதிப்பவர் என்பதை எண்ணிய காரணத்தால் தான், வாஜ்பாய் அவர்கள் நம்முடைய நண்பராக இருந்த காரணத்தால் தான் அப்போது நாம் அவர்களோடு உறவு கொண்டோம்.

வாஜ்பாயினுடைய   பாரதிய  ஜனதா  வேறு,   இப்போது இருக்கிற  பா...   வேறு: “மாறன் இறந்த போது அவரை இடுகாட்டிற்கு எடுத்துச் சென்ற போது, இடுகாட்டிலே வாஜ்பாய் அவர்கள் திடீரென்று வந்து இறுதி வணக்கம் செலுத்தியதையும் நான் மறந்து விடக் கூடியதல்ல. என்னதான் பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக இருந்தாலும், அவர் மனிதாபிமானமிக்கத் தலைவராக இருந்தார். தோழமைக்கு மதிப்பு அளிக்கக் கூடியவராக இருந்தார், எனவே தான் பாரதிய ஜனதா என்பது வாஜ்பாய் அவர்கள் பொறுப்பிலே இருந்ததோடு அந்த வரலாறு நம்மைப் பொறுத்த வரையிலே முடிந்து விட்டது.

அந்த பாரதிய ஜனதா கட்சியிலே இருக்கின்ற, எல்லோரும் வாஜ்பாய் அவர்களைப் போன்றவர்களா என்றால், இல்லைபாரதிய ஜனதாவோடு தேர்தலில் உடன்பாடு கொள்ளலாமா, கூட்டணி அமைக்கலாமா என்றெல்லாம் காலையிலிருந்து இதுவரையில் பேசினீர்களே, இதற்கெல்லாம் பதிலாகத் தான், இதற்கெல்லாம் விளக்கவுரையாகத் தான் நான் இந்தச் சுருக்கமாக கருத்துகளை உங்களிடம் சொல்லியிருக்கிறேன். கூட்டு வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. பிறகென்ன, அது வேறுஇது வேறு என்ற சித்தாந்தம் எல்லாம். முன்பு மதவாதம் பேசி, பிஜேபியை ஒதுக்கினர். 2002 என்று சொல்லி மிரட்டிப் பார்த்தனர், ஆனால், பொருளாதார முன்னேற்றம், வளர்ச்சி என்று மோடி பேச ஆரம்பித்ததும், இளைஞர்கள் வேறுவிதமாக சிந்திக்க ஆரம்பித்து விட்டனர். ஆமாம், அவர்களும், அந்த மோடி வேறு, இந்த மோடி வேறு என்றுதான் சொல்ல ஆரம்பித்துள்ளனர்.  

நீங்கள் புரிந்து கொள்வீர்கள்[5]. வாஜ்பாயினுடைய பாரதிய ஜனதா வேறு, இப்போது இருக்கிற பா... வேறு.

சி.பி..யை  ஆயுதமாக  வைத்து  திமுகவை  கேவலப்  படுத்திய  காங்கிரஸ்: “இந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தனியாக நின்றாலும் நிற்குமே தவிர, நம்மை மதிக்காத, அலட்சியப்படுத்து கின்ற காங்கிரஸ்காரர்களைப் போல நம்மிடத்திலே நன்றி மறந்து செயல்படுகின்ற சைபர், சைபர், சைபர் என்று ஏழு சைபரைப் போட்டு இந்த அளவிற்கு ஆயிரம், லட்சம், கோடி ரூபாய் ஊழல் நடந்திருக்கிறது என்று சொல்லி, அதற்கெல்லாம் யாரும் காரணம் இல்லை, ஒரே ஒரு நபர் தான், ராஜா தான் என்று அவரை சிறையிலே வைத்து ­இன்னமும் அவர் மீது வழக்கு நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

ராஜா மாத்திரமல்ல, என்னுடைய மகள் கனிமொழியை எட்டு மாத காலம் சிறைச்சாலையிலே வைத்து வாட்டி, இன்னமும் வழக்கு நடக்கிறதுஆனால், வழக்கை நடத்துகிறவர்களும் சரி, வழக்கிலே சாட்சியம் தந்தவர்களும் சரி, அந்த வழக்கிலே என்ன தீர்ப்பு வரப்போகிறதோ, அந்தத் தீர்ப்பை, இப்போதே தயாரித்து, பத்திரிகைகளிலே அதைப் பற்றிய செய்திகளை ஓட விடு பவர்களும் சரி, அனைவருமே தெரிந்து ஒரு உண்மை தான், குற்றமே செய்யாதவர்களை, குற்றவாளிகளாக சி.பி.. மூலமாக கூண்டிலே ஏற்றியிருக்கிறார்கள் என்றால், அந்தச் சி.பி.. யாருடைய கை வாள்? சிபிஐ.யை வைத்து மாநில அரசுகளை காங்கிரஸ் மிரட்டி வருகின்றது என்று கருணாநிதி இப்பொழுது மிகவும் வருத்தப் பட்டுக் கொள்கிறார், பிறகு, தகுந்த வேலையில், முன்னமே அதைப் பற்றி எடுத்துக் காட்டியிருக்கலாமே? ஆனால், செய்யவில்லையே? இன்று முல்லாயம், மாயாவதி என்று எல்லோருமே, சிபிஐ வழக்குகளினின்று விடுபட்டுள்ளனர். லல்லுவுக்கும் ஜாமீன் என்று சொல்கிறார்கள். ராஜாகனிமொழி ஏற்கெனவே வெளியில் வந்து விட்டார்கள். பிறகு கருணாநிதி எதிர்பார்ப்பது என்ன? காங்கிரஸ் வாபஸ் வாங்கிவிட்டால், காங்கிரஸுடன் கூட்டணி என்பாரா?

அந்தச் சி.பி.. யாருடைய கையிலே இருந்த கடிவாளம்? அந்தச் சி.பி.. யார் கையிலே இருந்த ஆயுதம்? தெரியாதா மக்களுக்கு?

ராஜாவையும்,   கனிமொழியையும்  சிறை   வைத்தவர்கள்: “அன்றைக்கு பக்கம் பக்கமாக ஊழல் ஊழல் என்று, எத்தனை லட்சம், எத்தனை ஆயிரம், எத்தனை கோடி என்றெல்லாம் எண்ணிப் பார்க்க முடியாத அளவிற்கு அன்றையதினம் ஊழல் புகார் சொன்ன, அந்தக் காரியங்களுக்கெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்து விட்டு, அந்த வேடிக்கையைப் பார்த்து ரசித்து விட்டு, அதிலே யார் யார் சிக்குகிறார்கள் என்பதையெல்லாம் பார்த்து, நம்மை விட்டால் சரி என்ற அளவிற்கு, பெரிய இடங்களிலே இருந்தவர்கள், பெரிய பதவியிலே இருந்தவர்கள், பெரிய நிர்வாகத் தலைமையிலே

இருந்தவர்கள் எல்லாம் தப்பித்தால் போதும் என்ற நிலைமையில் மாட்டியவர்கள், சிக்கியவர்கள் தான் குற்றவாளிகள் என்று ராஜாவையும், அதற்குப் பிறகு திடீரென்று என்னுடைய மகள் கனிமொழியையும் சிறையிலே வைத்து எட்டு மாத காலம் வாட்டினார்களே, இன்னமும் அந்த வழக்கு நடை பெற்றுக் கொண்டிருக்கிறதே, யாருடைய ஆட்சியில்? யார் இப்போது ஆட்சி யிலே இருக்கிறார்கள்? காங்கிரஸ்காரர்கள் தானே? எனவே அதையும் நாம் மறந்து விட மாட்டோம். மறந்து விடுவதற்கில்லை. ராஜாகனிமொழியை சிறை வைத்த காங்கிரஸை மறக்க முடியாது. களங்கம் ஏற்படுத்தியதையும் மறக்க முடியாது என்றெல்லாம் பேச வேண்டிய அவசியம் என்ன? ஊழலில் ஊறி நாறிப்போன காங்கிரஸே, வெட்கமில்லாமல் தேர்தல் கூட்டங்களில் ஊழலை ஒழிப்போம் என்று பேசுகிறது. இன்றோ லோக்பால் மசோதாவிற்கே நாங்கள் தான் காரணம் என்று மார்தட்டிக் கொள்கிறது, பிறகு, திமுக ஏன் கவலைப்பட வேண்டும்?

ராஜாவிற்கு ஏற்பட்ட அந்தச் சோதனை, ராஜாவுக்கு ஏற்பட்ட அந்தச் சங்கடம், அந்த அடக்கு முறை, அந்தக் களங்கம் இவைகள் எல்லாம் இன்றையதினம் டெல்லியிலே ஆட்சியிலே இருக்கின்ற காங்கிரஸ்காரர்களால் ஏற்படுத்தப்பட்டது அல்லவா? அவர்களால் மறைமுகமாகச் செய்யப்பட்ட மாய்மாலங்கள் அல்லவா? எனவே இந்தப் பொதுக்குழுவிலே அமர்ந்திருக்கின்ற உங்களுக்கெல்லாம் நான் உறுதி அளிக்கிறேன்.

வேதபிரகாஷ்

© 16-12-2013


[4] தினகரன், பொதுக்குழுவில்கருணாநிதிதிட்டவட்டம் : காங்கிரஸ், பாரதியஜனதாவுடன்திமுககூட்டணிஇல்லை,மாற்றம் செய்த நேரம்:12/16/2013 1:53:01 AM.