Posts Tagged ‘பார்ப்பனர்’

இந்துத்துவ பாதையில் திமுக: பகுத்தறிவு சூழ்ச்சி, நாத்திக தந்திரம், மற்றும் அரசியல் யுக்தி- திமுக வலையில் சிக்கிக் கொண்ட பிஜேபி, இந்துத்துவ வாதிகள் பார்ப்பனர்களைத் தூற்றியது (3)

திசெம்பர் 1, 2020

இந்துத்துவ பாதையில் திமுக: பகுத்தறிவு சூழ்ச்சி, நாத்திக தந்திரம், மற்றும் அரசியல் யுக்தி- திமுக வலையில் சிக்கிக் கொண்ட பிஜேபி, இந்துத்துவ வாதிகள் பார்ப்பனர்களைத் தூற்றியது (3)

பல புகைப் படங்கள் இருந்தாலும், சிலவற்றை வைத்து தூஷித்தது!

இந்துத்துவவாதிகள் எதிர்க்க வேண்டியது திமுகவையா, பார்ப்பனர்களையா?: 30-11-2020 அன்று, “இந்துத்துவ பாதையில் திமுக: பகுத்தறிவு சூழ்ச்சி, நாத்திக தந்திரம், மற்றும் அரசியல் யுக்தி எந்த அளவுக்கு உதவும் என்பது 2021 தேர்தல் நிரூபித்து விடும் (1)” மற்றும் “இந்துத்துவ பாதையில் திமுக: பகுத்தறிவு சூழ்ச்சி, நாத்திக தந்திரம், மற்றும் அரசியல் யுக்தி: உதயநிதி விபூதி பூசுவது, துர்கா கோவில் கட்டுவது முதலியன(2)” என்று, எவ்வாறு திமுக “மென்மையான இந்துத்துவத்தை” பின்பற்ற ஆரம்பித்து விட்டது என்று “பிளாக்” போட்டு முடித்த சிறிது நேரத்தில், டுவிட்டரில் உள்ள சில புகைப் படங்களை[1], பேஸ்புக்கில் போட்டு, அவற்றை வைத்து, பார்ப்பனரை விமர்சிக்க ஆரம்பித்தனர். எதிர்பார்த்தப் படி, அப்படியே ஷேர் செய்வது, லைக் போடுவது, திட்டுவது என்பது தொடர்ந்து அதிகமாகின. குறிப்பிட்ட பிஜேபிகாரர்கள், ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி (வகையறாக்கள் உட்பட), நபர்கள் அத்தகைய அதிரடி, தாக்குதல், போஸ்டிங்குகளை செய்ய ஆரம்பித்தனர். இது நிச்சயமாக “இதுத்துவத்திற்கு” ஒவ்வானதாகும். இருப்பினும் மிக மோசமாக அத்தாக்குதல் அரங்கேறியுள்ளது. அதனால், மூன்றாம் பகுதியில், இவற்றை பதிவு செய்ய வேண்டிய நிலை / கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

பல புகைப் படங்கள் இருந்தாலும், சிலவற்றை வைத்து தூஷித்தது! இவர்கள் பார்ப்பனரா என்பது அவர்களுக்குத் தெரியாது போலும்!

அரசியல் போர்வையில் நடத்திய தாக்குதல்: திமுகவை எதிர்க்கிறேன் என்று நூற்றுக் கணக்கான, முகநூல் பிஜேபி, ஆர்.எஸ்.எஸ், இது முன்னணி  வகையறாக்கள், பிராமணர்களைத் தாக்கி வசைப்பாடியுள்ளனர். Subbu FOTOGRAFI என்று டுவிட்டரில், உதயநிதிக்கு விபூதி வைப்பது, அக்ஷதை போடுவது, தலையில் பொன்னாடை கட்டுவது, மாலை போடுவது என்று பலவித பிராமணர் / பார்ப்பனர், பட்டர், சிவச்சாரி………. (துலுக்கர் உட்பட) என்று புகைப்படங்கள் உள்ளன. ஆனால், இந்துத்துவ வாதிகள், பிஜேபிகாரர்கள், ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி (வகையறாக்கள் உட்பட), பார்ப்பனரை / பிராமணரை மட்டும், மிகக் கேவலமாக, மோசமான, ஆபாசமான………வார்த்தைகளை உபயோகப் படுத்தி தூஷித்துள்ளனர். பார்ப்பனர் அல்லாத பற்பல இந்துத்துவவாதிகள், திக-திமுக-கம்யூனிஸ வகையறாக்கள் கூட வியாபாரம், நட்பு, பார்ட்டிகளில் கொண்டாட்டம் போடுவது……என்றெல்லாம் உள்ளனர். தைரியம் இருந்தால், இதே போன்று  ஒரு சுப்புவை வைத்து,  போட்டோ எடுத்துப் போட்டிருக்க வேண்டும். திமுக வலையில் நன்றாக மாட்டிக் கொண்டனர். லாஜிக்கே இல்லாமல், எதிரிகளை எதிர்க்காமல், பிரமாண துவேசத்தைக் கக்கியுள்ளனர்.

பல புகைப் படங்கள் இருந்தாலும், சிலவற்றை வைத்து தூஷித்தது! இவர்கள் பார்ப்பனரா என்பது அவர்களுக்குத் தெரியாது போலும்!

ஆபாசமாக, கேவலமாக பதிவு செய்துள்ளதில் சிலஉதாரணத்திற்கு[2]: இந்துத்துவ வாதிகள், பிஜேபிகாரர்கள், ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி (வகையறாக்கள் உட்பட), பார்ப்பனரை / பிராமணரை மட்டும், மிகக் கேவலமாக, மோசமான, ஆபாசமான………வார்த்தைகளை உபயோகப் படுத்தி தூஷித்துள்ள வசனங்களில் சில[3]:

 • இது திமுகவின் பிராமண அணி,
 • எவ்வளவு செருப்படி பட்டாலும் புத்தி வராது பிராமணனக்கு,
 • நெல்லிக்காய் மூட்டை ன்னு சொல்வாங்க. இவங்கள லாம் நம்பறது படு டேஞ்சர்,
 • ஆந்திர இறக்குமதி,
 • தன் பெருமை உணராத அடிமைகள்.
 • கோடாரி …..இவனுங்கலுக்கு அங்க என்ன வேலை ?
 • பூணுல் அறுக்கும் கூட்டத்திடம் செல்பி.. மானம் கெட்டவர்கள்.
 • கருணாநிதி முன்னோர்கள்  மாநில ஆந்திர இறக்குமதி பார்ப்பனர்கள்.
 • தொடர்ந்து இந்து மதத்தை இழிவு செய்யும் திருட்டு திராவிட “ஈனப்பயலுடன்” செல்பி படம் எடுக்கும் இந்த கேடுகெட்டவனை.. படம் [செருப்பால் அடிக்க வேண்டும்]
 • நக்குனா இப்படி தான் நக்கனும் இதை விட அசிங்கமா எழுதுவேன் என் ஆத்மார்த்த நண்பர் deva priyaji, piriya ramkumar, போன்றவர்களின் மனம் புண்பட கூடாது என்பதற்காக அடக்கி வாசிக்கிறேன்.
 • அட குரங்கு குப்பங்களா யாருக்கு என்ன மரியாதை செய்யணும்னு தெரியாதா?

இவர்கள் உண்மையிலேயே ஆர்.எஸ்.எஸ்,சில் பயிற்சி எடுத்திருந்தால், அவ்வாறான கமென்டுகளை செய்திருக்க மாட்டார்கள். ஆனால், செய்துள்ளார்கள் என்பதால், பல சதேகங்கள் எழுகின்றன.

இது மட்டும் தான் அவர்களுக்குத் தெரிந்தது போலும்!

திமுகவுடன் சேர்ந்து போட்டோ எடுத்துக் கொண்டவர்கள் அனைவரையும் ஒரே மாதிரியாக விமர்சிப்பு, தாக்குதல் முதலியன ஏன் செய்யவில்லை?: முன்பு “இந்து முட்டாள்கள்” என்று பதிவு செய்த போது, கோபித்துக் கொண்டார்கள், ஆனால், இப்பொழுது, அதை விட மோசமாக கமென்ட் செய்துள்ளார்களே? என்ன செய்வது? இந்த “இந்துத்துவ முட்டாள்கள்” திமுகவை எதிர்க்கிறார்களா, இந்துக்களை எதிர்க்கிறார்கள், இந்து மதத்தை குறை கூறுகிறார்களா? பார்ப்பனர்கள் / பிராமணர்கள் என்றெல்லாம் முட்டாள் இந்துக்கள் விமர்சிப்பதால், எல்லா வந்தேறி – பார்ப்பனர்கள்  பிஜேபியிலிருந்து ,  இந்து அமைப்புகளிலிருந்து விலகி விடலாம்! சில நாட்களுக்கு முன்னர், அந்த ஆதின மடாதிபதி, இரவு 10 மணிக்கு மேலே, ஆசிர்வாதம் எல்லாம் நடத்திய போது, அவரை, ஜாதி பெயர் சொல்லி விமர்சிக்கவில்லை, இவ்வகையில் போட்டி போட்டுக் கொண்டு, தூஷிக்க வில்லை. இதிலிருந்து, அரசியல் ரீதியில், சூழ்ச்சியாகத்தான் பார்ப்பனரை / பிராம்மணரை எல்லோரும் சேர்ந்து தாக்குகின்றனர் என்று தெரிகிறது.

இவர்கள் பார்ப்பனர்களா? பூணூல் போட்டவர்களா?

திமுகவுடன் கூட்டு வைத்து போது ……………அந்த கதையினை சொல்ல வேண்டுமா?:

1999ல் அதிமுக ஒதுக்கியதால், திமுகவுடன் பிஜேபி கூட்டு வைத்துக் கொண்டது. கருணாநிதி, வைகோ என்று திராவிடத் தலைவர்கள் வாஜ்பேயுக்கு போன்னாடைப் போற்றி வாழ்த்தினர். அரசியல் வியபாரமும் நடந்தது, அதாவது, கூட்டணி உடன்படிக்கை ஏற்கப் பட்டது. ஒரு பார்ப்பனனைச் சுற்றியிருக்கும் அவர்கள் பார்ப்பனர்களா? என்றெல்லாம் யாரும் கேட்கவில்லை. 182 எம்.பிக்களைக் கொண்ட பிஜேபி, திமுக ஆதரவுடன் ஆட்சி அமைத்தது[4]. பிஜேபி-ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் திமுகவினருக்கும் தேர்தல் பிரச்சார செய்தனர்………. அதை இங்கு விளக்க விருப்பம் இல்லை. காவிகள் அறிவார்கள். முரசொலி மாறன், டி.ஆர்.பாலு, ஏ.ராஜா, முதலியோர் மத்திய அமைச்சர்கள் ஆகினர். “ஒரு கெட்ட கட்சியில் உள்ள அல்ல மனிதர்,” என்றெல்லாம் அந்த பார்ப்பன பிரதம மந்திரி விமர்சிக்கப் பட்டார். இன்னும் சொல்ல நிறைய உள்ளன…………..ஆகவே, 2020ல் இத்தகைய வெளிப்பாடு திகைப்பாக இருக்கிறது.

சிவாச்சாரியார் விபூதி வைத்தால், பார்ப்பனரை தூஷிப்பது ஏன்?

ஸ்டாலினை பாராட்டிய சி.பி.ராதாகிருஷ்ணன் செப்டம்பர் 2019[5]: முன்னாள் அமைச்சர் மற்றும் திமுக மாவட்ட செயலாளர் வெள்ளக்கோவில் சாமிநாதனின் குடும்ப திருமணவிழா திருப்பூரில் 05-09-2019 அன்று நடந்தது. திருமண விழாவில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின், பாஜக தலைவர்களில் ஒருவரான முன்னாள் எம்.பி சி.பி ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பல கட்சி பிரமுகர்கள் கலந்துகொண்டனர். திருமண நிகழ்ச்சியில் பேசிய, சி.பி ராதாகிருஷ்ணன்[6], “கலைஞருக்கு பிறகு கட்சியின் தலைமையை ஏற்ற தளபதி அவர்கள், எங்களையெல்லாம் தோற்கடித்து இன்று வெற்றி தளபதியாக உள்ளார். நாங்கள் இன்னும் உழைக்க வேண்டியதும், அதனை தளபதி அவர்களிடம் கற்றுக்கொள்ள வேண்டியது அதிகமுள்ளது,” என்று அவர் கூறினார்[7]. தமிழக பாஜகவின் தலைவருக்கான போட்டியில் சி.பி ராதாகிருஷ்ணன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே மாநில தலைவராக இருந்த ராதாகிருஷ்ணன், இரண்டு முறை எம்.பியாகவும் பொறுப்பு வகித்துள்ளார். தற்போது மத்திய கயிறு வாரியத்தின் தலைவராக பதவி வகித்து வருகிறார், என்றெல்லாம் ஊடகங்கள் குறிப்பிட்டன. திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அவர்களிடம் நாங்கள் இன்னும் அதிகம் உழைக்க வேண்டும் என்பதை கற்றுக்கொண்டுள்ளோம் என்று பாஜக தலைவர் சி.பி ராதாகிருஷ்ணன் பேசியுள்ளார். ஆக, பிஜேபி.காரர்கள் இவ்வாறு கற்றுக் கொண்டு, பார்ப்பனர்களை தூஷித்தார்கள் போலும். ஒரு ஆண்டில், நல்ல முன்னேற்றம் தான். இனி, குத்தூசி குருசாமி, அணுகுண்டு ஆறுமுகம்………….. போன்றவர்களும் தயாராகலாம்!

பல புகைப் படங்கள் இருந்தாலும், சிலவற்றை வைத்து தூஷித்தது! இவர்கள் பார்ப்பனரா என்பது அவர்களுக்குத் தெரியாது போலும்!

இந்துக்களின் இன்றை நிலை: இந்துக்களை, இந்துக்கள் என்று பாராமல், ஜாதிய கண்ணோட்டத்துடன் பார்க்கும் நிலை அபாயக்கரமானது.

 1. சமூகம், ஜாதி, மதம், தேசம், மொழி முதலியவை அரசியலாக்கும் முயற்சிகளில், அவற்றை சின்னங்களாக, அடையாளங்களாக, குறீயீடுகளாக மதிக்க முடியாது.
 2. அரசியல், செக்யூலரிஸம் போர்வையில் கடந்த 60 ஆண்டுகளாக இந்துக்களை ஒடுக்கி வைத்தது, அடக்கி வந்தது.
 3. பிஜேபி, “இந்து கட்சி” என்று பிரகனடப் படுத்திக் கொண்டதால், இந்துக்கள் கொஞ்சம்-கொஞ்சமாக பிஜேபிக்கு ஓட்டுப் போட ஆரம்பித்தனர்.
 4. பதிலுக்கு தங்கள் உரிமைகள் காக்கப் பட விரும்பினர். குடும்பம், குடும்பம் சார்ந்த விசயங்களில் சதோசம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தனர்.
 5. ராம ஜன்ம பூமி விசயம் பல ஆண்டுகளாக பாதித்து வந்து, இப்பொழுது முடிந்துள்ளது. எல்லா அரசியல் கட்சிகளும் அதை வைத்து இந்துக்களை சதாய்த்தாலும், பிஜேபி வென்றது.
 6. ஆனால், தொடர்ந்து நீதிமன்ற தீர்ப்புகள் இந்துக்களை பாதிப்பதாகவே இருந்து வருகின்றன.  அவை இந்து குடும்பங்கள், உறவுகள், வழி-வழி வரும் பழக்க-வழக்கங்கள் முதலியவற்றை தடுப்பதாக, மாற்றுவதாக உள்ளன.
 7. பொருளாதார ரீதியில் சாதாரண மக்களுக்கு எந்தவித மாற்றமும் ஏற்படதாகத் தெரியவில்லை, அதாவது உணவு உடை மற்றும் உறையுள் (ரோடி-பப்டா ஔர் மகான்) என்றவற்றின் விலை அதிகமாகிக் கொண்டிருக்கின்றன.  
 8. தங்கம்-பெட்ரோல்-டாலர்-ஷேர் மார்க்கெட், சந்தை பொருளாதாரம் எல்லாம் சாதாரண மக்களுக்குத் தேவையில்லை. தனது கூலிக்கு-சம்பளத்திற்கு சாப்பாடு கிடைக்கிறதா என்று தான் பார்ப்பார்கள்.
 9. அந்நிலையில், ஒரு பக்கத்தில் உரிமைகளும் பறிபோய், இன்னொரு பக்கத்தில் சமூக-பொருளாதார நிலைகளில் இந்துக்கள் பாதிக்கப் படுவது தெரிகிறது.
 10. இதனால், இந்துக்கள் இன்னொருவிதமான பிணைப்பில் அடைக்கப் படுகிறார்களா என்ற எண்ணம் தோன்றுகிறது.

ஆகவே, மேற்குறிப்பிட்ட இந்து கோஷ்டிகள் நிலைமை உணர்ந்து செயல்பட வேண்டும். சித்தாந்தத்தால் அடக்குவோம் என்ற போக்கு ஆபத்தானது.


© வேரபிரகாஷ்

01-12-2020

ஒரு பார்ப்பனனைச் சுற்றி????

[1]  அவற்றை நானும் பார்த்தேன், ஆனால், எனக்கு வித்தியாசமாகத் தெரியவில்லை. கருணாநிதி மற்றும் கருணாநிதி குடும்பம், ஶ்ரீசத்ய சாயபாபா, ஜக்கி வாசுதேவ், ரவிசங்கர் ………போன்றோருடன் போட்டோக்கள் எடுத்தக் கொண்ட விவரங்களை எனது பிளாக்குகளில் விவரித்துள்ளேன். இவர்கள் எல்லோரும் போலித் தனமானவர்கள், வீட்டில் ஒரு மாதிரி, வெளியில் மேடைகளில் வேறு மாதிரி, என்று இரட்டை வேடம் போட்டவர்கள் தான்.

[2]  பேஸ்புக்கில் இவற்றை இன்றும் பார்க்கலாம் என்று நம்புகிறேன். சிலர் சுதாரித்துக் கொண்டு, வார்த்தைகளை மாற்றியுள்ளனர்.

[3]  இதை விட மோசமான, ஆபாசமான பதிவுகள் உள்ளன, அவற்றை தவிர்த்துள்ளேன். எல்லாமே காவி-இந்துத்துவ-சங்கம் என்கிறவர்களிடமிருந்துதான் வெளிப்பட்டுள்ளது.

[4] The 1999 Indian general election polls in Tamil Nadu were held for 39 seats in the state. The result was a victory for the National Democratic Alliance (NDA) which won 26 seats. After leaving the NDA, All India Anna Dravida Munnetra Kazhagam, hoped to create some damage, but ended up losing 8 seats, compared to the 1998 Lok Sabha elections.

[5] இதையும் ஒரு உதாரணத்திற்குத் தான் கொடுத்துள்ளேன், நிறைய உள்ளன. ஆனால், அரசியலை வைத்துக் கொண்டு,இவர்களும் இரட்டைவேடம், முரண்பாடு கொண்ட வாத-விவாதங்கள் செய்வது தான் வேடிக்கை.

[6] நியூஸ்.18.தமிழ், திமுக தலைவர் மு. ஸ்டாலினை புகழ்ந்து தள்ளிய பாஜகவின் சி.பி ராதாகிருஷ்ணன்!, NEWS18, LAST UPDATED: SEPTEMBER 5, 2019, 10:30 AM IST.

[7] https://tamil.news18.com/news/tamil-nadu/bjp-leader-cp-radhakrishnan-praises-mk-stalin-in-thiruppur-san-202439.html

கருணாநிதியின் பிராமண துவேஷம் ஏன்?

ஜனவரி 17, 2010

கருணாநிதியின் பிராமண துவேஷம் ஏன்?

© வேதபிரகாஷ்

குறிப்பு: இங்கு குறிப்பிடும் பல விஷயங்கள் எல்லோருக்கும் தெரிந்தவையே. ஆகையால் அடிக்குறிப்புகள் அதிகமாகத் தரப்படவில்லை. ஆனால் எல்லாவற்றிற்கும் ஆதாரங்கள் உள்ளன.

ஜனவரி 14, 15, 16 மற்றும் 17, 2010 தமிழர்களை ஆட்டும் விதம்: இந்த தடவை, இத்தேதிகள் தமிழர்களை ஆட்டியது, வாட்டியது எனலாம். பொங்கல் தமிழர்களுக்கு கசப்பாகவே இருந்தது, ஏனெனில் விலைவாசி! நேற்று “M” போட்டு, பஸ் கட்டணத்தை வேறு ஏற்றிவிட்டார்கள்! போதாகுறைக்கு எல்லாமே “சொகுசு” வண்டிகள்தாம்! மக்கள் நிறையவே சாபம் இட்டுள்ளார்கள்! சோவின் மீட்டிங் வேறு! அசிங்கங்கள் அதிகமாகவே உள்ளன.

ஜனவரி 14 (வியாழன்) – தை அமாவாசை – பொங்கல் – கருணாநிதியின் தமிழ் புத்தாண்டு! சோ மீட்டிங்!

ஜனவரி 15 (வெள்ளி) – திருவள்ளுவர் தினம், மாட்டுப் பொங்கல் – திருவள்ளுவர் ஆண்டு 2040 – சூரிய கிரகணம்!

ஜனவரி 16 (சனி) – உழவர் திருநாள்

ஜனவரி 17 (ஞாயிறு) – எம்ஜியார் பிறந்த நாள்

இப்படி நாளுக்கு நாள் பிறந்தநாள் தமிழ்நாட்டில்!

கருணாநிதியும் ஜெயலலிதாவும்: இரு தமிழக அரசியல் தலைவர்கள் சண்டையிட்டுக் கொள்வதில் தமிழக மக்களுக்கும், குடிமக்களுக்கும் எந்தவிதத்திலும் நன்மையோ, லாபமோ இல்லை. அரிசி, பருப்பு விலை குறையப்போவதில்லை. காய்கறி, பால் விலை குறையப்போவதில்லை. இருவருமே குழாயடி சண்டைப்போட்டுக் கொண்டாலும் ஒன்றும் பிரயோஜனமில்லை! ஆனால், ஜெயலலிதா சாக்கு வைத்துக் கொண்டு கருணாநிதி மற்றும் திமுகவினரைச் சேர்ந்தவர்கள் பிராமணர்களை இழிவுபடுத்தி பேசுவது, அவமதிப்பது, ஜாதி துவேஷத்தை வளர்ப்பது, தூண்டிவிடுவது முதலிய காரியங்கள் ஏன் செய்யப்படுகின்றன என்பதை அந்த பொறுப்புள்ள வயதான மனிதர்[1] விளக்கியே ஆகவேண்டும். மற்றவர்களும் சிந்திக்கவேண்டும்.

ஊழலில் இருவருமே தலைசிறந்தவர்கள்: ஊழலில் இருவருமே சளைத்தவர்கள் இல்லை, ஏனெனில் பாழாகிப் போவது தமிழ்நாட்டு மக்கள்தான். கோடிகளில் கொழுக்கும் இவர்களால் மக்களுக்கு என்ன பயனும் இல்லை. பல்லாயிரக்கணக்கான கோடிகள் (ஸ்பெக்ட்ரம்) சம்பாதித்தார்களே, அதனால் தமிழ்நாட்டிற்கு, இந்தியாவிற்கு என்ன லாபம்? இதில் கருணாநிதி அல்லது ஜெயலலிதாவின் ஜாதிகள் ஒன்றும் செய்வதில்லை. பிராமணன், சூத்திரன் பார்த்து விலைகள் குறைவதில்லை. எப்பொழுதுமே பிரச்சினைகளில் சாவது எல்லோரும்தான் – எல்லா தமிழ்நாட்டு மாநில மக்கள்தாம். ஆகவே, கேள்விகள்-பதில்கள்[2] என்று வரும்போது ஏன் அத்தகைய நாகரிகம் இல்லாத,  பிராமணர்களுக்கு எதிரான வார்த்தைகள், வசைவுகள், தூஷணங்கள் வரவேண்டும்?

தினமலர், தினமணி தாக்கப்படுவது: ஊடகங்கள், குறிப்பாக இணைத்தளங்கள் மூலமாக திமுக-திக, எல்.டி.டி.ஈ ஆதரவாளர்கள் தேவையில்லாமல் பிராமண துவேஷம் பாரட்டுகின்றனர். ஏதோ இந்த இரண்டு பத்திரிக்கைகள்தாம் கருத்துருவாக்கத்தை ஏற்படுத்தி தமிழ்நாட்டு, இந்திய, ஏன் உலக அரசியல், பொருளாதாரம் எல்லாவற்றையும் மாற்றப்போகிறது, இவைகள்தாம் மிகவும் பலமுள்ள பத்திரிக்கைகள் என்ற பிரமிப்பை ஏற்படுத்துகின்றனர். ஆனால் உண்மையில் அவ்வாறு இல்லை. சமீபத்தை நிகழ்ச்சிகள் இதைக் காட்டுகின்றன. வைத்தியநாத ஐயரும், கிருஷ்ணமூர்த்தி ஐயரும் பயந்து விட்டார்கள் என்றே தெரிறது. நன்றாக மிரட்டிவிட்டார்கள் போலும், இருவரும் (இரண்டு பத்திரிக்கைகளும்) வரிந்து கட்டிக்கொண்டு கருவைப் புகழ ஆரம்பித்துவிட்டார்கள்[3]. ஒருவேளை ஐராவதம் மஹாதேவன்[4] “வைத்து”க்கு சொல்லியிருக்கலாம். கிருஷ்ணமூர்த்திக்கு, முன்பு தனது மகன் மாட்டிக் கொண்டது நினைவு படுத்தி இருக்கலாம். போதாகுறைக்கு “புவனேஸ்வரி” பிரச்சினை வேறு! எது எப்படியாகிலும், மறுபடியும் கருணாநிதியால் பிராமண துவேஷம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் மறுபடியும் சில குடுமிகள், பூணூல்கள் அறுக்கப்படலாம். பிராமணர்கள் தாக்கப்படலாம் அல்லது அயோத்யா மண்டபத்தின் மீது பெட்ரோல் குண்டு எரியப்படலாம்.

“இந்துராம்” – “மவுண்ட்ரோட் மஹாவிஷ்ணு” இழிவுபடுத்தப்படுவது: பிராமணர்களுக்கே “ஹிந்து”வைப் பிடிக்காது என்பதுதான் உண்மை. ஆப்படியிருக்கும்போது, அடிக்கொரு தடவை, பார்ப்பன இந்துராம் என்று துவேஷிப்பது ஜாதி அடிப்படையில்தான் உள்ளதே தவிர, சித்தாந்த ரீதியில் கூட இல்லை. அதாவது, ராம் ஒரு மார்க்ஸீயவாதி, கம்யூனிஸ்டுக்களின் நண்பன்………………..என்பதெல்லாம் தெரிந்த விஷயமே. இப்பொழுதைய சந்துரு, நீதிபதி சந்துரு, எப்படி நீதிபதியானார் என்றால், ராம்-கருணாநிதி பந்தம் ஒருபுறம், ராம்-சந்துரு காம்ரேட்-இணைப்பு மறுபுறம்! ராமும்-கருணாநிதியும் திருமண உறவினால் சம்பந்திகள் முறை வேறு! ஆகவே, ராமைத் திட்டுகிறோம் என்று, பிராமணர்களைத் திட்டுவது எந்தவிதத்தில் நியாயம்? உதாரணத்திற்கு சிதம்பரத்தை விமர்சிக்கும்போது, “செட்டியார்” என்று சொல்லி விமர்சிப்பது இல்லையே? இதே மாதிரி மற்றவர்களை முதலியார், பிள்ளை, ரெட்டி என்றெல்லாம் சாதிப்பெயர் சொல்லிக் குறிப்பிடுவதில்லையே? பிறகென்ன “பார்ப்பன ராம்”, “இந்து-ராம்” என்ற கூச்சல்கள்? புலிகள் ஆதரவாளர்கள் வேறு இதில் சேர்ந்து கொள்கிறர்கள் [வால் போஸ்டர்கள் ஒட்டுவது, மீட்டிங் போடுவது……….].

ராமும், கருணாநிதியும் உறவினர்கள்தாம் (பிராமண-சூத்திர பந்தம்): திமுக ஆரம்பத்திலிருந்தே தொழிற்சங்கம் மூலம் “தி ஹிந்துவை” ஆட்டிப் படைத்துள்ளது. “மவுண்ட் ரோடு மஹாவிஷ்ணு” என்று கருணாநிதி சொல்லி மிரட்டுவது, ராமஜெயத்திற்கு மட்டுமல்ல, 40-50 வருடங்களாக இந்து பத்திரிக்கையில் வேலை செய்த / செய்யும் கிழங்களுக்கும் நன்றாகவேத் தெரியும். பல நேரங்களில் ஜெயலலிதாவிற்கு எதிராக செய்திகள் வெளியிடுவது, முதலிய காரியங்களைச் செய்துள்ளது. ராமின் மச்சினி தயாநிதி மாறனின் மனைவி. பிரியா என்ற ஐய்யங்கார் ரங்கராஜனின் மகள்[5]. அதாவது பிராமணப் பெண் சூத்திரனின் மனைவி! இதே கதைதான், தம்பி கலாநிதி விஷயத்திலும்[6], ஏனெனில் அவரது மனைவி – காவேரியும் ஒரு பார்ப்பனச்சிதான்! முரசொலி மாறனின் பிராமண சம்பந்தம் அலாதியானது. அதை அவர்கள் பிள்ளைகளும் பின்பற்றுவது நன்றாகவே தெரிகின்றது. கனிமொழி விவாகரத்தாகி, சோகமாக, மனம் உடைந்திருந்த வேலையில், கொஞ்சம் மனம் “ரிலாக்ஸாக” இருக்க, இந்து பத்திரிக்கை அலவலகத்தில் தான் வேலை செய்து கொண்டிருந்தார். அத்தகைய பிராமண-சூத்திர பந்தம் பிணைந்திருக்கும் போது, ஏன் கரு துவேஷம் கொண்டு இந்த வயதில் அலைகிறார்?

“சோ”வை அவதூறு பேசுவது: சோ அரசியல் ரீதியில் திராவிடக் கழகங்களின் முரண்பாடுகளை, பிறழ்ச்சிகளை, பித்தலாட்டங்களை, மாய்மாலங்களை எடுத்துக் காட்டுகின்றார் என்ற ஒரே காரணத்திற்காக, அவரை வசை பாடுகின்றனர். அறிவுபூர்வமாக அவர் எழுதுவதை அறிவுபூர்வமாக ஆதாரங்களுடன் மறுப்பதைவிடுத்து “பார்ப்பன்”, ஐயர், அவாள், இவாள் என்று பாட்டை ஆரம்பித்து விடுகின்றனர். நேரிடையாக மோதாமல், திக-திமுக-மற்ற உதிரிகளைத் தூண்டிவிட்டு கலாட்டா செய்வது, மிரட்டுவது போன்ற வேலைகளில் ஈடுபடுகின்றனர். விமர்சனங்களை பொறுத்துக் கொள்ளமுடியாதவர்கள், ஜீரணிக்க முடியாதவர்கள், சகிக்காதவர்கள், இவ்வாறு எம்ஜியார் சொன்னார் என்று பிராமணர்களை ஏன் திட்டவேண்டும்?

இன்று எம்ஜியாரைக் குறிப்பிட்டு ஜெயலலிதாவை தூஷிக்கும் கருணாநிதி எம்ஜியாரின் விரோதிதானே? குறிப்பாக, எம்ஜியார் பிறந்ததினம் (17-01-2010) என்பதை மனத்தில் வத்துக் கொண்டு, இவ்வளவு துவேஷத்தைத் தூண்டி விடுகிறாரே, இவரென்ன எம்ஜியாரின் நலவிரும்பியா, அரசியல் நண்பரா, கூட்டுப்பங்குதாரரா இல்லையே? கூத்தாடி, ………………………..மளையாளி என்றெல்லாம் தூஷித்தது ஞாபகத்தில் உள்ளதே………………………பிறகென்ன, எம்ஜியார் பெயர் சொல்லி ஜெயலலிதாவை திட்டுவது? எம்ஜியார் ஜெயலலிதாவைப் பற்றி அவ்வாறு குறிப்பிட்டுள்ளது உண்மையென்றால், அதே விமர்சனம் கருணாநிதிக்கும் பொருந்துமே? அதுமட்டுமா, கருணநிதியைப் பற்றியே அவரது அரசியல் நண்பர்கள், விமர்சகர்கள், விரோதிகள் பல நேரங்களில், பலவிதமாகச் சொல்லியிருக்கிறார்கள், எழுதியிருக்கிறார்கள். அதையெல்லாம் எல்லொருக்கும் தெரியுமே. அவர் சொன்னார்-இவர் சொன்னார் என்று யாரும் அவ்வாறு தூஷண வேலைகளில் ஈடுபடவில்லையே?

கருணாநிதியின் லீலைகள் தமிழக மக்களுக்குத் தெரியாதா? திருக்குவலை கருணாநிதியைப் பற்றி தெரியாதா? நிச்சயமாகத் தெரியும். மனிதர் வயதாகி விட்டார், சொன்னால் நன்றாகயிருக்காது, என்பதால் கண்ணியத்தோடு நிறைய கிழங்கள் அமைதி காக்கின்றன. அவர்கள் எல்லாம் உண்மை சொல்ல ஆரம்பித்தால் நாறிவிடுமே? முன்பு எப்படி போட்டிப்போட்டர்கள், “வால் போஸ்டர்கள்” ஒட்டினார்கள் என்ற உண்மைகளை வெளியிட்டால், தண்டவாளம், வண்டவாளம் ஆகிவிடுமே? நடுராத்திரி, தொடர்ந்து அடுத்தநாள் காலை இரண்டு மணிவரை பேசிய பேச்சுகளை நினைவு படித்தினால்…………….., தமிழகப் பெண்கள் கூசி, கூனி …………….குனிவார்களே? அவர்கள்தாம் இப்பொழுது சட்டசபையில் பேசுகிறார்கள், இல்லை, சொன்னதாகப் பத்திரிக்கைகளில் வெளிவருகின்றன. இவற்றையெல்லாம் பொன்னேடுகளில்[7] வைரத்தால் பொதித்து வைக்கலாமா?

எல்லோருக்கும், எல்லாமே தெரியும், ஆதலால் அவதூறு பேசவேண்டும் என்ற போக்குத் தேவையில்லை: இருமனிதர்கள் சண்டையிட்டுக் கொண்டால், கண்ணியமாக, நாகரிகமாக அவ்வாறு முடியும் என்றால், கருணாநிதியும், ஜெயலலிதாவும் செய்யட்டும். ஆனால், அவ்வாறு இல்லாமல், ஒருவர் மீது ஒருவர் சகதியை அள்ளிவீசுவோம் என்றாலும் தனியாக செய்து கொள்ளட்டும், ஆனால் ஊடகங்கள் வழியில் பாரபட்சமான முறையில் செய்யவேண்டாம். இன்றைய இளைஞர்கள் பார்த்து-படித்து-கேட்டுக் கொண்டிருக்கிறர்கள், நிச்சயமாக அவர்கள் உண்மை என்ன என்று அலச ஆரம்பித்து விடுவார்கள், உண்மை என்ன என்று ஆராய்ச்சி செய்து எடுத்து விடுவார்கள். அப்பொழுது, நிச்சயமாக நன்றாகயிருக்காது.

சாவியும், சேகரும்: முன்பு சாவி – எஸ். விஸ்வநாதன் (பத்திரிக்கையாளர், தயாரிப்பாளர்) என்னசெய்து கொண்டிருந்தாரோ, அந்த வேலையைத்தான் எஸ். வி. சேகர் செய்து கொண்டிருக்கிறார் போல இருக்கிறது. உண்மையென்னவென்றால் கருணாநிதியின் பிராமண துவேஷம் சொல்லமாளாது, அது எல்லாவறையும் விட மிகப்பெரிய வெறி. என்னத்தான் படித்தவர்களாக இருக்கட்டும், வெளியே சிரித்தாலும், இரு பொருள் தொணிக்க பேசினாலும், மனத்தில்  மட்டும் கருவிக் கொண்டே இருப்பார். இது தஞ்சாவூர்காரர்களுக்குத் தான் தெரியும். மூப்பனாருக்கு நன்றகவே தெரியும்! சமீபத்தில் ஒரு தஞ்சாவூர் பிராமணருக்கு பட்டம் கொடுக்கப் பரிந்துரை செய்தபோது கூட அத்தகைய பேச்சு வந்தது. “பாப்பான் பேரில இருக்கிறத பாப்பனுக்கேக் கொடுத்தால் போயிற்று”, என்று கடைசியாக முடிவு எடுத்தாற்போல இருக்கிறது[8]. சாவியிடம் கருணாநிதி, “ஒரு நல்ல பிராமண பெண்ணை பாருங்கள், பார்த்து முடித்துவிடுவோம்”, என்றபோது, சாவி அவ்வாறேப் பார்த்துக் கொடுத்தார்[9]. இப்படி செய்யும் கருணாநிதி, வேறு நேரத்தில் கேவலப்படுத்துவது ஏன்?

கருணாநிதி நல்ல பேச்சாளர் என்று நன்றாகவே தெரியும்: மத்திய அரசு தணிக்கை அறிக்கைகள், கருணாநிதி, நிதியை கருணையுடன், வேறு செலவினங்களுக்குத் திருப்பிவிட்டாரா அல்லது முதன்மந்திரியாக, பொறுப்பாக செலவிட்டாரா, கணக்கிட்டாரா என்பதெல்லாம் தாராளமாக செய்யலாம். எதிர்கட்சித் தலைவர் / தலைவி கெட்டால், தகுந்தமுறையில் பதில் சொல்லிவிட்டுபோகலாம். அதைவிடுத்து, கேலிபேசுவது, கிண்டலடிப்பது, அவதூறு பேசுவது……………………என்ற முறையில்தான் பதில் வரவேண்டிய தேவையில்லை. சட்டசபையில், நாகரிகமாக பேசமுடியவில்லை என்றல் அது, அங்குள்ளவர்களுக்கு மட்டும் அவமானம், அசிங்கம் இல்லை, அவர்களை அங்கு உட்காரவைத்த தமிழ்நாட்டு மக்களுக்கே கேவலம். இங்கு திமுக-அதிமுகவோ, பிராணன்-சூத்திரன் என்றோ யாரும் பார்க்கப் போவதில்லை. கருணாநிதியைப் பொறுத்தவரைக்கும், ஏற்கெனவே அவருக்கு நிறைய நிகழ்ச்சிகளை, ஏற்படுத்திக் கொடுக்கிறர்கள். அதில் அவர் தாராளமாகவே பேசிவருகிறார். அங்கும் பார்ப்பனர்கள் என்று சொல்லிக்கொள்ளும் / கொல்லும் வாலி, கமலஹாசன் முதலியோர்கள் உள்ளார்கள். அவர் அவ்வாறாகவே பேசி-மகிழ்ந்து-திளைக்கட்டும். ஆனால், இந்த ரீதியில் இறங்கவேண்டாம்!

நாங்கள் பார்ப்பனீயத்திற்கு எதிரி, ஆனால் பார்ப்பனர்களுக்கு எதிரியல்ல!: கருணாநிதி, இதுபோன்ற புருடாக்களை / பொய்களை அடிக்கடி அள்ளிவீசுவது உண்டு. “ஓய்வுக்கு ஓய்வு கொடுக்கும்” ரீதியில் இப்படி பேசும் பேச்சுகளுக்கு அர்ததமே இல்லை. சரித்திர ஆதாரம் இல்லாத “ஆரிய-திராவிட” இனவெறி சித்தாந்தம் பேசிக் கொண்டு, ஆட்சி செய்யும் கட்சியாளர்கள் உலகத்திலேயே இந்தியாவில்தான் உள்ளார்கள் என்பது உண்மை. உலகத்திலேயே இனவெறி கூடாது என்ற நிலையில் இருக்கும்போது, தினமும் அத்தகைய இனவெறி பிடித்து பேசியலையும் கூட்டம் இங்குதான் உள்ளது. பிராமணர்கள் “ஆரியர்கள்”,  நாங்கள் “திராவிடர்கள்” என்று பேசிக் கொண்டு துவேஷம் பேசும் கூட்டம் இங்குதான் உள்ளது. இத்தகைய வெறியாளர்களை யாரும் கண்டிக்காமல் இருப்பது ஆச்சரிம்தான்! அதனால்தான் “பேராசிரியர்” என்று சொல்லியலையும் அன்பழகன் பொன்றோரும், இன்றும் அத்தகைய சித்தாந்தங்களைப் பேசியலைகின்றனர்!

பிராமணர்களுக்கு எச்சரிக்கை: இப்படி பேசப்படும்போது, பிராமணர்கள் தாக்கப்படுவது நோக்கத்தக்கது. ஆகவே, முன்பே குறிப்பிட்டபடி, இதனால் மறுபடியும் சில குடுமிகள், பூணூல்கள் அறுக்கப்படலாம். பிராமணர்கள் தாக்கப்படலாம் அல்லது அயோத்யா மண்டபத்தின் மீது பெட்ரோல் குண்டு எரியப்படலாம். அவர்களும் பேச்சிற்கு திகவினருக்குப் பதிலாக பெரியார்-திக என்று யாரையாவது கைது செய்து விஷயத்தை அமுக்கிவிடலாம். ஆனால், உலகத்தில், இப்படி பிராமணர்கள், “பிராமணர்கள்” என்ற ஒரே காரணத்திற்காக திட்டப்படுவது, அவமானம் செய்யப்படுவது, தாக்கப் படுவது, பெண்கள் இழிவுப் படுத்தபடுவது, ஊடகங்கள் கேவலப்படுத்துவது, ஆட்சியளர்கள், அதுவும் முதல் மந்திரி, மற்றவர்கள் அவதூறு பேசுவது போன்றவை, வேறெங்கும் நடக்காது என்பது நிச்சயமே. ஆகவே, ஏன் பிராமணர்கள் இவ்வாறுத் தாக்கபடுகிறர்கள்? அவ்வாறு தாக்குபவர்களின் மனோநிலை என்ன? மனோதத்துவம் என்ன? இல்லையென்ற பிறகும், இருக்கிறது என்று இனவெறியை மனத்தில் ஏற்றிக் கொண்டு, “பார்ப்பனீயத்தை எதிர்ப்போம்” என்ற சித்தாந்தத்தின் முகமூடியில் ஜாதிவெறியை வைத்துக்  கொண்டு இவ்வாறு உலா வருவது ஏன்?

© வேதபிரகாஷ்

17-01-2010


[1] ‘சூது வாது வஞ்சகம் அம்மு-எம்ஜிஆர்’ Created On 16-Jan-10 04:54:12 PM

http://www.andhimazhai.com/news/viewmore.php?id=10992&action_type=viewnews

http://www.dinakaran.com/arasialdetail.aspx?id=3927

[2] In his so-called Question-answer Report (dated 18-04-2008), he has responded as follows: பூணூல் இல்லாததுதான் காரணம்! கலைஞர் விளக்கம்

கேள்வி: அந்நாள் அமெரிக்க அதிபர் நிக்சன், அண்டை மாநிலத்து முதல்வர் ஹெக்டே இருவர் மீதும் அவர்களே தொலைபேசியை ஒட்டுக் கேட்டதாகக் கிளம்பிய குற்றச்சாட்டு காரணமாகத்தானே பதவியை ராஜினாமா செய்தார்கள் – ஆனால் அந்த வரலாறு தெரியாத சில வரட்டு மதியினர்; இங்கே தமிழகத்தில் இரு அதிகாரிகளுக்கிடையே தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்பட்டதற்காக முதல மைச்சர் ராஜினாமா செய்ய வேண்டுமென்கிறார்களே? இதற்குக் காரணம் என்ன?

கலைஞர்: என் செய்வது, இந்த முதலமைச்சருக்கு முப்பரி நூல் கிடையாதே! இவர் கடவுளின் முகத்தில் பிறந்த சாதியில் பிறந்தவர் அல்லவே – காலில் பிறந்த சாதியில் பிறந்தவரா யிற்றே! அதனால்தான் இந்த முதல்வர் தலைமையில் இந்த ஆட்சியில் அன்றாடம் நடைபெறுகிற அற்புத சாதனைகளை ஒரு சாரார் மூடி மறைத்துவிட்டு; வேண்டுமென்றே திட்ட மிட்டு சில விஷமச் செய்திகளைப் பரப்பி அந்த நெருப்பில் குளிர் காய முனைகிறார்கள். என்ன நடந்தது? எப்படி நடந்தது? யாரால் நடந்தது? என்று விசாரித்து அறிந்து வெளியிட உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியை நியமித் தாலும்; விகடன் கேலி செய்கிறார்! – சில பல ஆண்டுகளுக்கு முன்பு ஆந்திரத்து நடிகை, காஞ்சனமாலையின் பேச்சையே டேப் செய்து போட்டுக் காட்டி மிரட்டிய பணிய வைத்த பரம்பரையினர் அல்லவா?

[3] அரசு நிதியை தவறான வழியில் செலவழிக்கவில்லை : தணிக்கை குழு அறிக்கை குறித்து முதல்வர் தகவல், ஜனவரி 16,2010

http://www.dinamalar.com/Political_detail.asp?news_id=16168

தினகரன் விளக்கமாகக் குறிப்பிட்டபோது, தினமலர் சொன்னது, “எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை பற்றி, என்ன சொன்னார் என்பதை, 1989ம் ஆண்டு, “மக்கள் குரல்’ இதழின் ஆசிரியர் டி.ஆர்.ராமசாமி எழுதியுள்ளதை படித்தால் தெரியும்.இவ்வாறு முதல்வர்  தெரிவித்துள்ளார்”. அவ்வளவே!

[4] இந்த ஐயருக்கு வந்ததுதான் “பவிஸு”. கருணாநிதி, பட்டம் மேல் பட்டம் கொடுத்து அமுக்கிவிடுகிறார். அவரும் இடத்திற்கேற்றபடி மாற்றி-மாற்றி பேசுகிறார். செந்தமிழ் மாநாடு முடிந்ததும் கழட்டிவிடபடுவார்போலும்!

[5] 1994ல் இவர்கள்  திருமணம் நடந்தது! இவர்கள் அதாவது ஐய்யங்கார்வாளும், சூத்திரவாளும் எப்படி சம்பந்தி ஆனார்கள், என்றதெல்லாம் மர்மமாகவே இருக்கின்றன!

[6] 1991ல் ஒரு நண்பரின் இல்லத்தில் இருவரையும் சந்திக்க வைத்து கல்யாணம் செய்து வைத்தனராம்!

[7] சோனியா விஷயத்தில் சொன்னதை ஞாபகப் படுத்திக் கொள்ளவும். அவரது மாமியார் இந்திரா காந்தி மற்றும் அவரைக் கொலை செய்த வழக்கு முதலியவற்றையும் ஞாபகப் படுத்திகொள்ளவும்!

[8] ஆனால் நாகநாதன், ஜகதீஸன் முதலியோர் கடுமையாக எதிர்த்தனர். இருப்பினும் கருணாநிதி ஒப்புக்க்கொண்டார்!

[9] குமுதத்தில் இதைப் பற்றிய விவரங்கள் வெளிவந்தன. இதைப் பற்றி நான் எழுதி இணைத் தளத்தில் – குறிப்பாக www.indiainteracts.com ல் பதித்தவை காணாமல் போகின்றன.

http://tamilbrahmins.wordpress.com/category/karunanidhi/

http://tamilbrahmins.wordpress.com/2008/04/23/karunanidhi-varnashrama-dharma-and-brahmanism/