Posts Tagged ‘பரிவட்டம்’

கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி: இவர்கள் விபூதி வைத்தால் என்ன, துடைத்தால் என்ன? இந்துவிரோதிகள் பற்றி கரிசனம் ஏன்? (1)

நவம்பர் 23, 2020

கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி: இவர்கள் விபூதி வைத்தால் என்ன, துடைத்தால் என்ன? இந்துவிரோதிகள் பற்றி கரிசனம் ஏன்? (1)

திருக்குவலையில் ஒரு வேடம், திருச்சியில், இன்னொரு வேடம்!

மென்மை இந்துத்துவம்  (Soft Hindutwa) பின்பற்றும் யுக்தியா?: “தேர்தல் சுற்றுப்பயணத்தின்போது தருமபுர ஆதீனத்திடம் உதயநிதி ஸ்டாலின் ஆசி பெற்றார். அவருக்கு விபூதி பூசி ஆதீனம் ஆசி வழங்கினார்,” என்று செய்தி வெளிவருதில் வியப்பில்லை. ஏனெனில், துலுக்கர் கூட அவ்வாறு தேர்தல் சமயங்களில், கோவில்களைச் சுற்றி வருவது வந்தது தமிழகத்திலேயே உண்டு, கோவில்களுக்குள் செல்வதும் உண்டு, விபூதி-குங்குமம்-சந்தனம் வைத்துக் கொள்வது, ஆசிபெறுவது போன்றவை சாதாரணமான விசயங்கள் தான். ஆக மடங்களுக்குச் செல்வது என்பனவெல்லாம், பெரிய விசயமே இல்லை. கிருத்துவர்கள் பற்றி கேட்கவே வேண்டாம், இம்மாதிரியான விசயங்களில் வேடங்கள் போட்டு ஏமாற்றுவதில் வல்லவர்கள். பிஜேபி தலைவர்கள் கிருத்துவர்களிடம் ஆசி பெறுவது, ஜெபிப்பது போன்றவை நடந்துள்ளன, புகைப்படங்களும் வெளி வதுள்ளன. ஆனானப் பட்ட, ராகுல் காந்தியே, கடந்த தேர்தலுக்கு எல்லா விதமான வேடங்கள் போட்டு, இந்துக்களின் ஓட்டைப் பெற முயன்றது தெரித விசயம். ஆகவே, நாகை மாவட்டம், திருக்குவளையில் தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் “விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்” என்ற தலைப்பில் 2021 சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தை தொடங்கி நடத்தி வருகிறார்.

இரவு பத்து மணிக்கு சந்தித்தல்

திமுக இந்துக்களைத் தக்க வைக்கப் போடும் வேடமா?: கருணாநிதி பெரிய அரசியல் நடிகர் என்பதால், எல்லோரையும் தூக்கி சாப்பட்டார். சாமியார்களை தூஷித்து, அவர்களிடமே ஆசிகள் வாங்கிக் கொண்டார். ஸ்டானில் பற்றி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. முன்னரெல்லாம், 1980களில் துர்காவுடன், ஆலையம்மன் கோவிலில் கஞ்சி ஊற்றும் விழாவுக்குத் தவறாமல், வந்து போவார். சுவரொட்டிகள் எல்லாம், பிரமாதமாக ஒட்டுவார்கள். அவருடைய ஆயிரம் விளக்கு தொகுதியில் வரும் கோவில் என்று குறிப்பிடத் தக்கது. ஆக இப்பொழுது, உதயநிதி அவ்வாறான வேடத்தைப் போடுவதில் எந்த ஆச்சரியும் இல்லை. உதயநிதி ஸ்டாலின், தன்னுடைய பேஸ்புக்கில், இவ்வாறு பதிவு செய்திருக்கிறார், “மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதீனத்தின் 27-ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரியார் சுவாமிகளை ஆதீனத்தில் நேற்று சந்தித்து வாழ்த்து பெற்றேன். பிரச்சார பயணம் வெல்ல வாழ்த்திய ஆதீனம் அவர்களுக்கு நன்றி“. விபூதி வைத்த புகைப் படங்களையும் போட்டிருகிறார். ஆக, ஒரு வேளை மென்மையான இந்துத்துவத்தைப் பின்பற்றினால், என்னாகும்? திமுக இந்துக்கள் அப்படியே தான் இருப்பார்கள்.

19-11-2020 அன்று கோவில் பூரண கும்பத்தை மறுத்தது: பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, தி.மு.க., இளைஞர் அணி செயலர் உதயநிதி, 19-11-2020 அன்று திருச்சி வந்தார். அவருக்கு, கரியமாணிக்கம் கைலாசநாதர் கோவில் சார்பில், பூரண கும்ப மரியாதை வழங்க, கட்சி நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர்[1]. இதன்படி, உதயநிதி வந்த போது, கோவில் சிவாச்சாரியார்கள் பூரண கும்பம் மற்றும் பரிவட்டத்துடன் காத்திருந்தனர்[2]. ஆனால், உதயநிதி பரிவட்டம் கட்ட மறுப்பு தெரிவித்ததோடு, சிவாச்சாரியார்கள், தன் நெற்றியில் திருநீறு மற்றும் குங்குமம் வைக்கவும் அனுமதிக்கவில்லை. இந்த சம்பவம், நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த தி.மு.க.,வினர் மட்டுமின்றி, பொதுமக்கள் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதெல்லாம், அப்பனைப் போன்ற நாடகம் எனலாம். வெளிப்படையாக, ஒப்புக் கொண்டால் பிரச்சினை வரும் என்று மறுத்தது தெஇந்து கொள்ளலாம். அதே நேரத்தில், இரவில், மடத்திற்குள் நடந்த நாடகம் பிறக்ய் வெளியே வந்தது. வெளியே வந்து விட்டதால், இரண்டு தரப்பிலும் புகைப்படங்கள் இணைதளங்களில் போட்டுக் கொண்டன.

20-11-2020 அன்று தொடர்ந்து, பிரச்சாரம் செய்வது: 21-11-2020 அன்று இரண்டாவது நாளாக நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்[3]. அப்போது அனுமதியின்றி கொரோனா பரவும் விதமாக கூட்டத்தை கூட்டியதாக உதயநிதி ஸ்டாலினை போலீசார் கைது செய்தனர்[4]. பின்னர் கைது செய்யப்பட்ட உதயநிதி ஸ்டாலின் மற்றும் தி.மு.க.வினரை போலீசார் இரவு 8 மணிக்கு விடுவித்தனர்[5]. விடுதலை செய்யப்படுவதற்கு முன்பாக உதயநிதி ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது[6]: “நேற்று பிரசாரம் தொடங்கியவுடனேயே எங்களை போலீசார் கைது செய்தனர். அது போலவே இன்றும் கைது செய்துள்ளனர். எங்களைப் பார்க்க வேண்டும், பேச்சைக் கேட்க வேண்டும் என மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கின்றனர். இதைப்பார்த்து சகிக்க முடியாத .தி.மு.. அரசு பிரசாரத்திற்கு இடையூறு செய்து வருகிறது. கைது நடவடிக்கைகள் எடுத்தாலும் பிரசாரம் தொடரும். தொடர்ந்து இடையூறு செய்தால் தி.மு.. கண்டிப்பாக நீதிமன்றத்துக்கு செல்லும். சட்டசபை தேர்தலில் .தி.மு.., பா...வுடன் கூட்டணி வைப்பதாக அறிவித்துள்ளது. இது தேர்தலில் வெற்றிபெற எங்களுக்கு சுலபமாக இருக்கும். .தி.மு.. அரசின் ஊழல் பட்டியல் பா... கையில் இருக்கிறது. அதற்கு பயந்துதான் .தி.மு.., பா...வுடன் கூட்டணி வைத்துள்ளது,” என்றார். தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் சிக்கல், நாகூர், பால்பண்ணைச்சேரி, பனங்குடி ஆகிய பகுதிகளில் பிரசாரம் செய்தார். இரவு தனது தாயார் ஊரான சீர்காழியை அடுத்த திருவெண்காட்டில் தங்கினார்.

இரவு 10 மணிக்கு ஆதீனம் தரிசனம் கொடுப்பாரா?: தனியார் திருமண மண்டபத்தில் சிறை வைக்கப்பட்ட உதயநிதி ஸ்டாலின்  இரவு 8 மணிக்கு விடுதலை செய்யப்பட்டார்[7]. “இரவு எத்தனை மணி ஆனாலும் தருமபுரம் குருமகா சந்நிதானத்தைச்  சந்தித்து ஆசி பெறுவேன்,” என்று கூறினார்[8]. அதன்படியே இரவு 10 மணிக்கு தருமபுரம் ஆதின மடத்திற்கு வந்து சேர்ந்தார். அவருடன் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், அன்பில் பொய்யாமொழி ஆகியோர் வந்தனர். அவர்களுக்கு மடத்தின் நிர்வாகிகள் வாசலில் வரவேற்பளித்து அழைத்துச் சென்றார்கள். தொடர்ந்து மயிலாடுதுறைக்கு சென்ற அவர் அங்கு தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்மந்த பராமாச்சாரிய சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்றார். அவருக்கு விபூதி பூசி ஆதீனம் ஆசி வழங்கினார். அவருக்கு திருக்கடையூர் அபிராமி, வைத்தீஸ்வரன் கோயில் செல்வமுத்துக்குமாரசாமி, திருபுவனம் சரபேஸ்வரர், மயிலாடுதுறை குரு தட்சிணாமூர்த்தி, தருமபுரம் துர்க்கை ஆகிய ஐந்து ஆலய பிரசாதங்கள் வழங்கப்பட்டன.1972 -ல் தருமபுரம் கலைக் கல்லூரியின் வெள்ளி விழா நிகழ்ச்சியில் கருணாநிதி கலந்து கொண்ட படத்தையும், திருக்குறள் புத்தகத்தையும் நினைவுப் பரிசாக குருமகாசந்நிதானம் வழங்கினார்[9].  “ஆதீன கர்த்தர் கொடுத்த திருநீறும் அணிந்து பயபக்தியுடன் வழிபட்டார்,” என்கிறது தமிழ்.இந்து[10].

தமிழ் கடவுள் சேயோன்என்ற ஆன்மிக நூல் வெளியிடும் மர்மம் என்ன?: பின்னர் திருக்கயிலாய பரம்பரை தருமபுர ஆதீன 26-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிய ஞானசம்மந்த பராமாச்சாரிய சுவாமிகளின் முதலாம் ஆண்டு குருபூஜையை முன்னிட்டு மயிலாடுதுறை ஆன்மீக பேரவை சார்பில் தமிழ்க்கடவுள் சேயோன் என்ற ஆன்மீக நூலை உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார் என்கிறது மாலைமலர். அதன்பின் திருக்கயிலாய பரம்பரை தருமபுர ஆதீன 26 -வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளின் முதலாமாண்டு குருபூஜையை முன்னிட்டு மயிலாடுதுறை ஆன்மிக பேரவை சார்பில் அதன் 50 – வது வெளியீடான ‘தமிழ் கடவுள் சேயோன்’ என்ற ஆன்மிக நூலை குருமகாசந்நிதானம் வெளியிட, முதல் பிரதியை தி.மு.க. மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பெற்றுக்கொண்டார், என்கிறது விகடன்.  ‘தமிழ்க் கடவுள் சேயோன்’ (முருகன் பாமாலை) என்கிறது தமிழ்.இந்து[11]. உதயநிதி வெளியிட்டாரா, குருமகாசந்நிதானம் வெளியிட்டாரா என்ற குழப்பத்தை ஒதுக்கி விட்டு, இதெல்லாம், முன்னரே ஏற்பாடு செய்யப் பட்ட நிகழ்ச்சி என்றே தெரிகிறது. ஏனெனில், பரிசு கொடுப்பதும் புத்தகம் வெளியிடுவதும், வாங்குவதும் எல்லாம் திடீரென்று செய்ய முடியாது.

©வேதபிரகாஷ்

23-11-2020


[1] தினமலர், பூரண கும்ப மரியாதையை ஏற்க மறுத்த உதயநிதி, Updated : நவ 22, 2020 01:27 | Added : நவ 20, 2020 22:42.

[2] https://www.dinamalar.com/news_detail.asp?id=2656057

[3] மாலை மலர், தேர்தல் சுற்றுப்பயணத்தின்போது தருமபுர ஆதீனத்திடம் ஆசி பெற்ற உதயநிதி ஸ்டாலின், பதிவு: நவம்பர் 22, 2020 14:11

[4] https://www.maalaimalar.com/amp/news/state/2020/11/22141142/2093390/Udayanithi-Stalin-receiving-blessings-from-dharmapura.vpf

[5] நியூஸ்.18.தமிழ், தருமபுரம் ஆதீனத்திடம் திருநீறு பூசிக்கொண்டு ஆசிபெற்ற உதயநிதி ஸ்டாலின், NEWS18 TAMIL, LAST UPDATED: NOVEMBER 22, 2020, 9:20 AM IST.

[6] https://tamil.news18.com/news/tamil-nadu/udhayanidhi-stalin-blessed-with-dharmapuram-atinam-vjr-372503.html

[7] விகடன், நாகை: 5 கோயில் பிரசாதம்மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனகர்த்தரிடம் ஆசிப்பெற்ற உதயநிதி ஸ்டாலின்!, மு. இராகவன், பா. பிரசன்ன வெங்கடேஷ் Published:22-11-2020  at 11 AM; Updated:22-11-2020  at 11 AM;.

[8] https://www.vikatan.com/news/politics/udhayanithi-stalin-got-blessings-from-dharmapuram-adheenam

[9] தமிழ்.இந்து, தருமபுரம் ஆதீனத்திடம் ஆசிபெற்ற உதயநிதி! முருகன் பாமாலை நூலையும் பெற்றுக்கொண்டார், தமிழ்.இந்து, கரு.முத்து,Published : 22 Nov 2020 10:45 AM, Last Updated : 22 Nov 2020 10:46 AM.

[10] https://www.hindutamil.in/news/tamilnadu/604129-udayanidhi-seeks-blessing-from-dharumapuram-adheenam.html

[11] தமிழ்.இந்து, தருமபுரம் ஆதீனத்திடம் ஆசி பெற்ற உதயநிதி ஸ்டாலின்,, Published : 23 Nov 2020 03:11 AM Last Updated : 23 Nov 2020 03:11 AM.