தமிழ், தமிழகம், தமிழ்நாடு: நீட் தேர்வு, காவிரிப் பிரச்சினை, ஐபிஎல் என்று மோடி–எதிர்ப்பு வேலை செய்யும் விதம் [3]
நீட் தேர்வு, காவிரிப் பிரச்சினை, ஐபிஎல் என்று மோடி–எதிர்ப்பு வேலை செய்யும் விதம்: இன்றைய வேலை தேடும் விசயத்தில் “சந்தை-வேலைமுறை” [Job-market] என்றது, சந்தை பொருளாதாரத்தில் பிரபலமாகி சரத்தாகி விட்டது. அகில-உலக பொருளாதாரத் தேவைகளுக்கு ஏற்றப்படி, படிப்பு-தொழிற்முறை பயிற்சிகள் மாற்றியமைக்கப் பட வேண்டியுள்ளது. அயல்நாட்டு கம்பெனிகளுக்காக வேலைசெய்வது, அவர்களது தேவைகளுக்கு ஏற்றப்படி, சேவை-உற்பத்திகள் மாற்றியமைக்கப் பட வேண்டியதாயிற்று. அந்நிலையில், மருத்துவப் படிப்பு தேசிய அளவில் முறைப்படுத்தும் நிலையில் நீட் தேர்வு அறிமுகப்படுத்தப் பட்டது. ஆனால், அதன் தராதரத்தை அறிந்து கொள்ளாமல், குறுகிய “தமிழ், தமிழகம், தமிழ்நாடு” சித்தாந்தத்தில் எதிர்ப்பு அரம்பித்துள்ளது. ஆனால், அதே நேரத்தில் நீட் தேர்விற்கான பயிற்சி வகுப்புகள் அதிரடியாக நடந்து வருகின்றன. அவற்றிற்கான லட்சக் கணக்கில் கொடுக்கப் படும் விளம்பரங்களை, எதிர்க்கும் டிவி-மற்ற மின்னணு-அச்சு ஊடகங்களில் வெளி வந்து கொண்டிருக்கின்றன. அந்நிலையில் தான் காவிரிப் பிரச்சினையாளர்கள், ஐபிஎல் மீது திரும்பினர்.
சேப்பாக்கம் மைதானம் தாக்கப் பட்டது: 10-04-2018 அன்று இதே கூட்டங்கள் கேவலமாக நடந்து கொண்டதை உலகமே பார்த்து வெறுத்தது. கிரிக்கெட்டை விரும்பும் சேப்பாக்கமா இவ்வளவு அநாகரிகமாக நடந்து கொண்டனர் என்று, கிரிக்கெட் ரசிகர்கள் வெட்கப்பட்டனர். 10ம் தேதி ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற்றபோது, நடந்த போராட்டத்தில், போலீசாரை தாக்கியதாக சீமான் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது[1]. கொலை முயற்சி வழக்கில் சீமான் கைது செய்யப்பட்டுள்ளாரா என்ற சந்தேகம் ஏற்பட்டது. சென்னையில். இந்த நிலையில், சீமான் தங்க வைக்கப்பட்டுள்ள பல்லாவரம் ஸ்ரீகிருஷ்ணா கல்யாண மண்டபத்தை சுற்றி அதிரடிப்படை குவிக்கப்பட்டது. சீமான் எந்த நேரத்திலும் கைது செய்யப்படுவார் என்று தெரிகிறது என்று தமிழ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன[2]. ஆனால், அதற்குள் 12-04-2018 அன்று கலாட்டா செய்ய தயாராகி விட்டனர். அண்ணா அறிவாலயத்தில் கூட்டப்பட்ட அனைத்துக் கட்சிகளின் (9 கட்சிகள்) கூட்டத்தில் காவிரி நதி நீர் உரிமை குறித்து முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- ஸ்டாலின், செயல் தலைவர், திராவிட முன்னேற்றக் கழகம்.
- கி.வீரமணி, தலைவர், திராவிடர் கழகம்.
- சு.திருநாவுக்கரசர், தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி.
- கே.பாலகிருஷ்ணன், தமிழ்நாடு மாநில செயலாளர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
- ஆர்.முத்தரசன், தமிழ்நாடு மாநில செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
- கே.எம். காதர்மொகைதீன், தலைவர், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்
- தொல்.திருமாவளவன், தலைவர், விடுதலை சிறுத்தைகள் கட்சி
- எச். எம். ஜவாஹிருல்லா தலைவர், மனித நேய மக்கள் கட்சி.
- நாம் தமிழர் கட்சி
ஆம் ஆத்மி, மற்ற உதிரி கட்சிகளும் கலந்து கொண்டது, ஊடக செய்திகள் மூலம் தெரிகின்றது. அதாவது, அவ்வப்போது, அந்தந்த பிரச்சினைகளை வைத்துக் கொண்டு கலாட்டா செய்வது, பிற்கு மறந்து விடுவது என்ற நிலையில் போராட்டங்கள் நடப்பதும் தெரிகிறது.
மோடிக்கு கருப்புக் கொடி ஆர்பாட்டம்: காவிரி நீர் உரிமையில் தமிழ் நாட்டை வஞ்சிக்கும் மத்திய அரசைக் கண்டிக்கும் வகையில் தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடிக்குக் கறுப்புக் கொடி காட்டுவது என்று அக் கூட்டத்தில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட தீர் மானங்களுள் ஒன்றாகும்[3]. அந்த வகையில் 12.4.2018 அன்று சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடிக்குக் கருப்புக் கொடி காட்டுவதற்கு தயாராயின[4]. திருவிடந்தையில் நடக்கும் மத்திய பாதுகாப்புத்துறையின் ராணுவக் கண்காட்சியில் கலந்துகொள்வதற்காக 12-04-2018 அன்று பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் பிரதமர் மோடி, சென்னை விமானநிலையம் வந்திறங்கினார்[5]. உள்நாட்டு முனைய வருகை பகுதியில் கருப்புக் கொடி ஏந்தி போராட்டம் நடத்திய இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர், வெற்றிமாறன், ராம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்[6]. அப்பொழுது, அவர்கள் பேசிய பேச்சு, அமிர் வெறி பிடித்தது போன்று நடந்து கொண்ட விதம் முதலியன விசித்திரமாக இருந்தது. மேலும் சுற்றியிருந்தவர்களில் பெரும்பாலோர் முகமதியர் என்பதும் நன்றாகவே தெரிந்தது. ஆகம் இவர்கள் எல்லோரும் இவ்வாறு ஒன்று பட்டுள்ளது காவிரிப் பிரச்சினைக்கா அல்லது மோடிக்கு எதிர்ப்பு தெரிவிப்பிற்கா என்ற கேள்வியும் எழுகின்றது. காவிரிப் பிரச்சினை போர்வையில் மோடி-எதிர்ப்பு பிரதானமாக அரங்கேறியுள்ளது. அதுதான் அரசியல் நோக்கக் காட்டுகிறது. அதன்படியே, கைதானவர்கள், வழக்கம் போல விடுதலை செய்யப்பட்டனர்[7]. பிறகு, வழக்குப் பதிவுகள், முந்தைய கைதுகள் என்னவாயிற்று என்று தெரியவில்லை[8].
சீமான் பேச்சு, நடவடிக்கை, புராணம் முதலியவற்றை தினம்–தினம் அதிகமாக வெளியிட்டது “தமிழ்.ஒன்.இந்தியா”தான்: “அதிமுக நடத்திய உண்ணாவிரதத்தால் என்ன பயன் கிடைத்துவிட்டது. ஐபிஎல் விளையாட்டை நடத்தக் கூடாது, தமிழகம் கொந்தளிக்கும் இந்த நேரத்தில் ஐபிஎல் எங்களுக்கு வேண்டாம். மீறி ஐபிஎல் போட்டிகளை நடத்தினால் எங்களின் எதிர்ப்பை எந்த விதத்தில் வெளிக்காட்ட வேண்டுமோ அப்படி வெளிக்காட்டுவோம்” என்று சீமான் சொன்னது,[9]தீர்மானத்துடன் அவ்வேலையில் இறங்கப் போவது தெரிந்தது. “காங்கிரஸ் கூட்டணியில் 10 ஆண்டுகள் இருந்த போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தற்போது திமுக போராடுவது வேடிக்கையாக உள்ளது”என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்[10]. பாஜக ஆட்சியிலும் வரவில்லை. அதிமுக பெயருக்கு உண்ணாவிரதம் நடத்தி உள்ளது[11]. மெரினாவில் மட்டும் போராடுவதற்கு அனுமதி கொடுத்தால் உலகமே திரும்பிப் பார்க்கும் வகையில் போராட்டம் நடத்தி காவிரி மேலாண்மை வாரியத்தை பெறுவோம்[12]. அதாவது கலாட்டா செய்ய வேண்டும் என்ற எண்ணம் தான் மேலோங்கி இருந்தது என்ற ஒப்புதல் வெளிப்படுகிறது.
© வேதபிரகாஷ்
19-04-2018
[1] தமிழ்.ஒன்.இந்தியா, கொலை முயற்சி வழக்கில் சீமான் கைது? சீமான் தங்க வைக்கப்பட்டுள்ள மண்டபத்தில் அதிரடி படை குவிப்பு, Posted By: Veera Kumar Updated: Thursday, April 12, 2018, 16:35 [IST]
[2] https://tamil.oneindia.com/news/tamilnadu/seeman-may-be-get-arrested-317054.html
[3] விடுதலை, தமிழ்நாட்டு மக்களின் உணர்வை பிரதமர் புரிந்து கொள்வாரா?, வெள்ளி, 13 ஏப்ரல் 2018 16:51
[4] http://www.viduthalai.in/component/content/article/71-headline/160044-2018-04-13-11-39-44.html
[5] தினத்தந்தி, பிரதமர் வருகைக்கு எதிர்ப்பு ;சீமான் வேல்முருகன், மணியரசன், தமிமுன் அன்சாரி, பாரதிராஜா, வெற்றிமாறன், அமீர் கைது, ஏப்ரல் 12, 2018, 10:58 AM
[6] https://www.dailythanthi.com/News/State/2018/04/12105816/Opposition-to-PMs-visit-Seeman-Velmurugan-Maniyarasan.vpf
[7] தமிழ்.ஒன்.இந்தியா, கைது பரபரப்புகளுக்கு முற்றுப்புள்ளி.. சீமான், தமிமுன் அன்சாரியை இரவில் விடுதலை செய்தது காவல்துறை!, Posted By: Veera Kumar Updated: Thursday, April 12, 2018, 21:04 [IST]
[8] https://tamil.oneindia.com/news/tamilnadu/seeman-may-be-get-arrested-317054.html
[9] தமிழ்.ஒன்.இந்தியா, காவிரிக்காக திமுக போராட்டம் நடத்துவது வேடிக்கையாக இருக்கிறது – சீமான்!, Posted By: Gajalakshmi Published: Saturday, April 7, 2018, 18:22 [IST]
[10] https://tamil.oneindia.com/news/tamilnadu/seeman-condemns-dmk-protests-cauvery-rights-316570.html
[11] தமிழ்.ஒன்.இந்தியா, மெரினாவில் போராட அனுமதி கொடுத்தால் தமிழர்கள் உலகையே திரும்பிப்பார்க்க வைப்பார்கள் : சீமான், Posted By: Mohan Prabhaharan Published: Sunday, April 8, 2018, 15:15 [IST].
[12] https://tamil.oneindia.com/news/tamilnadu/tamils-have-the-capability-hold-strong-says-seeman-316627.html