Posts Tagged ‘நித்தி’

நித்யானந்தாவின் மீது அமெரிக்க சாமி நித்ய பிரபா செக்ஸ் புகார்!

மார்ச் 30, 2010

நித்யானந்தாவின் மீது அமெரிக்க சாமி நித்ய பிரபா செக்ஸ் புகார்!

நித்யானந்தாவை காணவில்லையாம்: இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சாமியார் நித்தியானந்தா மீது அமெரிக்காவிலும் செக்ஸ் மோசடி புகார் எழுந்துள்ளது. நடிகை ரஞ்சிதாவுடன் செக்ஸ் லீலையில் ஈடுபட்டு வீடியோவில் பதிவாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் நித்தியானந்தா. தற்போது இருவரும் தலைமறைவாகி விட்டனர். வீடியோக்கள் மூலம் அவ்வப்போது பேசி வருகிறார் நித்தியானந்தா.

கடல் தாண்டி செக்ஸ்-புகார்: அவர் மீதான வழக்குகளை கர்நாடக போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் கடல் தாண்டி அமெரிககாவிலும் நித்தியானந்தா மீது செக்ஸ் லீலை புகார் எழுந்துள்ளது. கலிபோர்னியா மாகாணம் சான் ஜோஸ் பகுதியை சேர்ந்த டக்ளஸ் மெக்கல்லர் என்ற முன்னாள் சீடர், அம்மாகாண அட்டர்னி ஜெனரல் ஜெர்ரி பிரவுனிடம் இதுதொடர்பான புகாரை அளித்துள்ளார்.

நித்ய பிரபா நித்யானந்தாவின் மீது புகார்: அந்த அமெரிக்கருக்கு நித்தியானந்தா வைத்த பெயர் சுவாமி நித்ய பிரபா என்பதாகும். அவர் தனது மனுவில்,  அமெரிக்காவில் பல இடங்களில் நித்யானந்தாவுக்கு ஆசிரமங்கள் உள்ளன. அங்கு வரும்போது, அவரது தனிப்பட்ட குடியிருப்பில், அழகான பெண்களுடன்தான் இருப்பார். அவர்களுடன்தான் சாப்பிடுவார். ஒருமுறை, கலிபோர்னியா மாகாணம் நார்வாக் பகுதியில் உள்ள சனாதன் தர்மா கோவிலில் 2 நாட்கள் பயிற்சி முகாமுக்கு நித்யானந்தா வந்திருந்தார்.

வெளியில் காவலுக்கு நிற்க வைத்தார்…அப்போது, அவரை தனியறையில் ஒரு பெண் சந்தித்தார். அப்பெண்ணுடன் தனிமையில் இருக்கும்போது, வேறு யாரும் வந்து விடாமல் பார்த்துக் கொள்ளுமாறு நித்யானந்தா என்னை கதவு அருகே காவலுக்கு நிற்க சொன்னார். மேலும், இந்து மத நம்பிக்கைகளை நித்யானந்தா தவறாக பயன்படுத்தினார். ஆசிரமத்தில் இருப்பவர்களை அவர் அடிக்கவும் செய்வார். எனது வங்கிக் கணக்கில் இருந்து 4 லட்சம் டாலர் பணத்தை எடுத்து மோசடி செய்துள்ளார்.

அமெரிக்க ஸ்டைலில் ஆபாஷ புகார்: லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில், நான் 2007-ம் ஆண்டு ஜுன் மாதம், ஒரு வார கால தியான பயிற்சிக்காக தங்கி இருந்தேன். அந்த தியான வகுப்பின்போது, நான் மயக்க நிலையில் இருந்தேன். ஏதோ மருந்து காரணமாக, நான் உணர்வை இழந்தது போல இருந்தது.  அந்த தியான வகுப்பின்போது, நித்யானந்தா, யாகம் வளர்த்தார். பக்தர்கள் அனைவரும் தங்கள் தலைமுடியை வெட்டி, தீயில் போடுமாறு சொன்னார். மேலும், அவர் அந்த தீயில் கஞ்சா விதை போல தோன்றிய ஏதோ ஒன்றை போட்டார் என்று கூறியுள்ளார்.  அமெரிக்காவுக்கு நித்தியானந்தா செல்லும்போதெல்லாம் அவருடன் இரு தமிழ்ப் பட நடிகைகளும் செல்வார்கள், அங்கு நிர்வாண நடனம் ஆடுவார்கள் என்றெல்லாம் சமீபத்தில் செய்திகள் வெளியாகின என்பது நினைவிருக்கலாம். இந்தப் பின்னணியில்தான் அமெரிக்கர் ஒருவர், நித்தியானந்தா மீது செக்ஸ் புகார் அளித்துள்ளார்.

காந்த படுக்கை விவகாரத்தில் சன் டிவி நிருபர் (பழைய செய்தி)!

மார்ச் 7, 2010

காந்த படுக்கை விவகாரத்தில் சன் டிவி நிருபர்!

[லெனின் கருப்பன் உள்ளாரா என்று தேடப்படுகிறது]

“காந்த படுக்கை மோசடி” தொடர்பாக நீதிமன்ற நடவரிக்கைகளைப் படம் பிடிக்க வந்த சில நிருபர்களில் சுரேஸ் என்பரும் இருந்தார். அப்பொழுது குற்றம் சாட்டப் பட்ட தரப்பில் ஆஜரான ராமசாமி என்ற வக்கீல் அதிகாரம் இல்லாமல் நீதிமன்றத்திற்குள் படமெடுப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார். (Asian Age 6.2.03)

கே. கே. சுரேஸ்குமார் “காந்த படுக்கை மோசடி” தொடர்பாக ஒரு வழக்கறிஞர் கொடுத்த புகாரில் கைது செய்யப்பட்டார்.  இவர் சன் டிவியில் நிருபராக வேலை செய்து வந்தார்.  இவர் தமது நன்பர்களுடன் சென்னை உயர்நீதி மன்ற வளாகத்தில் வக்கில்களுடன் வாதிட்டதாகவும், அதில் மிரட்டியதாகவும் சொல்லப்பட்டது. அதனால் பார் அசோசியேசனின் தலைவர்  ஜெயபாலன் (IV metropolitan magistrate) அவர்களிடம் புகார் கொடுத்தார். சுரேஸ்குமாரும் கோட்டூர்புரம் போலீஸாரிடம் புகார் கொடுத்தார். பிப்ரவரி 4, 2003 அன்று வழக்கை விசாரித்து, அவருக்கு பிணை-விடுதலை அளிக்கப்பட்டது. (The Hindu dated 05.02.2003)

MEDIA/FREEDOM OF PRESS – 2003, Compiled By K. Samu,Human Rights Documentation,Indian Social Institute, Lodi Road, New Delhi

Click to access Media-2003.pdf

காந்த படுக்கை மோசடி பற்றிய நீதிமன்ற தீர்ப்புகளை இங்கே பார்க்கலாம்:

http://www.indiankanoon.org/doc/378163/

http://www.indiankanoon.org/doc/267753/