Posts Tagged ‘திராவிட ஸ்டாக்’

திராவிட ஆட்சிகளில் தேசத் துரோக மற்றும் பத்திரிக்கையாளர்களின் வழக்குகளும், அவற்றின் பின்னணியும் – தேசிய அளவில் உள்ள வழக்குகளுடன் அவற்றை ஒப்பிட முடியாது (3)

மே 15, 2022

திராவிட ஆட்சிகளில் தேசத் துரோக மற்றும் பத்திரிக்கையாளர்களின் வழக்குகளும், அவற்றின் பின்னணியும் தேசிய அளவில் உள்ள வழக்குகளுடன் அவற்றை ஒப்பிட முடியாது (3)

நீதிமன்றமும் அரசையும், சட்டமன்றத்தையும் மதிக்க வேண்டும்: உச்ச நீதிமன்றத்தின் இவ்வுத்தரவு பற்றி மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜுஜூ கூறியதாவது[1]: “நாங்கள் எங்கள் நிலைப்பாட்டை மிகத் தெளிவாகக் கூறியுள்ளோம். மேலும் இவ்விவகாரத்தில் பிரதமரின் நோக்கம் குறித்து நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளோம். நீதிமன்றத்தையும் அதன் சுதந்திரத்தையும் நாங்கள் மதிக்கிறோம். ஆனால் லட்சுமண ரேகை என ஒன்று உள்ளது. அதனை அரசின் அனைத்து அமைப்புகளும் மதிக்க வேண்டும். நீதிமன்றமும் அரசையும், சட்டமன்றத்தையும் மதிக்க வேண்டும். எங்களிடம் தெளிவான எல்லை நிர்ணயம் உள்ளது. அந்த லட்சுமண ரேகயை யாரும் கடக்கக்கூடாது,” இவ்வாறு கூறினார்[2]. அப்பிரிவு தேவயில்லை என்ற படசத்தில், இன்னொரு சட்டம் உருவாக்கப் படும். ஏனெனில், தேசத்துரோக கருத்துகள், வேலைகள், தீவிரவாதங்கள் இருக்கத்தான் செய்கின்றன. பிறகு அவற்றைக் க்ட்டுப் படுத்த, தடுக்க, தீர்க்க்க, தண்டிக்க நீதிமன்றம், அரசு, சட்டமன்றம், நாடாளுமன்றம் என்ன செய்ய முடியும் என்று கவனிக்க வேண்டும்

பிரிட்டிஷ் கால சட்டங்களில் ஒன்று தேச துரோக சட்டம்[3]. இந்த சட்டம் அரசியல் காரணங்களுக்காக பழிவாங்கவே அதிகம் பயன்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டு உள்ளது[4]. இதில் மத்திய, மாநில அரசுகள் எதுவும் விதிவிலக்கல்ல என்றும் கூறப்படுகிறது. இச்சட்டத்தை நீக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் ஏராளமான மனுக்கள் உள்ளன. கடந்த திங்களன்று (மே 09) இம்மனுக்கள் தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு, இச்சட்டம் குறித்து பரிசீலிப்பதாகவும், அதன் முடிவுகள் வரும் வரை இச்சட்டத்திற்கு எதிரான மனுக்களை விசாரிக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டது. இந்நிலையில் இன்று மீண்டும் அம்மனுவை விசாரித்த கோர்ட், அச்சட்டத்தை நிறுத்தி வைப்பதாக அதிரடி உத்தரவு பிறப்பித்தது. ”அரசின் பரிசீலனை முடியும் வரை தேச துரோக சட்டத்தை பயன்படுத்தக் கூடாது. மத்திய, மாநில அரசுகள் பிரிவு 124ஏ-வை பயன்படுத்தி வழக்கு பதியாது என நம்புகிறோம். தேச துரோக வழக்கின் கீழ் உள்ள விசாரணைகள் நிறுத்தி வைக்கப்படுகிறது. ஏற்கனவே தேச துரோக வழக்கில் சிறையில் உள்ளவர்கள் ஜாமின் கோரி நீதிமன்றத்தை அணுகலாம்” என நீதிபதிகள் கூறினர்.

இந்தியாவில் தேசத்துரோக சட்டம், முந்தைய வழக்குகள்: பிரிடிஷ்-இந்திய அரசுக்கு எதிராக இருந்தவர்களைத் `தேசத்துரோகிகள்’ என்று அழைக்கப் பட்டனர், அதில், விடுதலை போராளிகளும் அடங்குவர். பகத்சிங் போன்றவர்கள் தேசத்துரோகிகள் எனராங்கிலேயர் அரசு முத்திரைக் குத்தியது. தேசத் துரோக வழக்கில் திலகர் 18 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். 1922-ம் ஆண்டு மகாத்மா காந்தி, யங் இந்தியா இதழில் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராகக் கட்டுரை எழுதியபோது, காந்தி மீதும் `யங் இந்தியா’ வெளியீட்டாளர் சங்கர்லால் பாங்கர் மீதும் இந்தச் சட்டம் பாய்ந்தது. “இந்தியர்கள் மீது அடக்குமுறையைப் பாய்ச்சுவதற்காகவே இந்தச் சட்டம் திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது,” என்று காந்தி, 124ஏ பிரிவு குறித்து கூறியுள்ளார். ஜவகர்லால் நேரு இச்சட்டப் பிரிவு 124ஏ ஏற்றுக்கொள்ள முடியாத மிகவும் ஆட்சேபனைக்குரிய சட்டம் எனத் தெரிவித்தார். இந்தியர்களை அடக்கி வைக்கவே தேசத்துரோகச் சட்டத்தை பிரிடிஷ்-இந்திய ஆட்சியாளர்கள் திட்டமிட்டு இயற்றினர் என மகாத்மா காந்தி கருத்து தெரிவித்தார். தேசத் துரோக வழக்கில் வ. உ. சிதம்பரம்பிள்ளை 1908 முதல் 1912 முடிய வரை சிறையில் அடைக்கப்பட்டார். 2003-ஆம் ஆண்டில் விசுவ இந்து பரிசத் பொதுச் செயலாளர் பிரவீன் தொகாடியா தேசத் துரோக வழக்கில் கைது செய்யப்பட்டார். 2010-இல் எழுத்தாளர் அருந்ததி ராய் காஷ்மீர் பிரிவினைவாதம் மற்றும் மாவோயிஸ்டுகளுக்கு ஆதரவாகவும், இந்திய அரசுக்கு எதிராகவும் எழுதியதற்கு தேசத் துரோக வழக்கில் குற்றம் சாட்டப்பட்டார்.

பிரிவு 124 க்கு ஆதரவான கருத்துக்கள்: இந்திய தண்டனைச் சட்டம், பிரிவு 124 ஏ தேசப் பிரிவினைவாதிகள் மற்றும் தீவிரவாதிகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்படுகிறது. வன்முறை மற்றும் சட்டவிரோதமாக அரசை அகற்றுவதற்கான முயற்சிகள் நடந்தால், அவற்றிலிருந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை இந்தச் சட்டம் பாதுகாக்கிறது. அரசின் நிலையான தன்மை, தேசத்தின் ஒற்றுமைக்கும் பொருளாதாரத்துக்கும் முக்கியமானதாகும். நீதிமன்ற அவமதிப்பு செய்தால், தண்டனை வழங்கப்படுவது போல அரசை அவமதித்தால் தண்டனை கிடைக்கும் என்பதை இந்தச் சட்டம் உறுதி செய்கிறது’ என இதன் ஆதரவாளர்கள் கருதுகின்றனர். பல மாநிலங்களில் மாவோயிஸ்ட்டுகள் கிளர்ச்சி செய்து வருகின்றனர். இவர்கள் அரசைக் கவிழ்க்க முயன்று, பல்வேறு கிளர்ச்சிகளில் ஈடுபடுகின்றனர். வடகிழக்கு மாநிலங்களில், காஷ்மீரத்தில் தேசவிரோத குழுக்கள் வெளிப்ப்டையாகவே, ஆயுதம் ஏந்தி போராடி வருகின்றன. இவற்றைத் தடுத்து, அரசை நிலைநாட்ட இந்தச் சட்டம் பயன் படுத்தப்படுவதாக இதன் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். 03-07-2019  அன்று நாடாளுமன்றத்தில் பேசிய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய், “எந்தக் காரணத்தைக் கொண்டும் தேசத்துரோக சட்டம் ரத்து செய்யப்படாது, தேச விரோத, பிரிவினைவாத மற்றும் பயங்கரவாதிகளைத் திறம்பட எதிர்த்துப் போராடுவதற்காகவே இந்தச் சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது,” என்றார்.

பிரிவு 124 க்கு எதிர் கருத்துகள்: தேசத்துரோகச் சட்டம், காலனிய ஆதிக்கத்தின் நினைவாக இன்னும் இந்தியாவில் இருந்து கொண்டிருக்கிறது. ஜனநாயக நாட்டுக்கு இதுபோன்ற சட்டங்கள் பொருந்தாது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் தன் குடிமக்களுக்குத் தந்த பேச்சு சுதந்திரத்தை இந்தச் சட்டம் பறிக்கிறது’ என்று இந்தச் சட்டத்தை எதிர்ப்பவர்கள் கூறுகின்றனர். அரசின் கருத்துக்கு எதிராக நிலைப்பாட்டைக் கொண்டிருப்பது, விவாதம் நடத்துவது ஜனநாயகத்திற்குத் தேவையான அத்தியாவசியமான விஷயங்கள். ஆட்சியாளர்களைக் கேள்வி கேட்கும் உரிமை, விமர்சிக்கும் உரிமை மக்களின் அடிப்படைத் தேவை. “தேசத்துரோக வழக்கை வைத்து இந்தியர்கள் மீது அடக்குமுறையை ஏவிய, பிரிட்டன் தன் நாட்டில் தேசத்துரோக சட்டத்தையே ரத்து செய்து விட்டது. இந்தியாவில் இந்தச் சட்டம் இன்னும் பயன்பாட்டில் இருப்பது ஏன்?,” என்கிற கேள்வியும் இந்தச் சட்டத்தை எதிர்ப்பவர்களிடம் எழுகிறது.

கேதார் நாத் சிங் வழக்கும், தீர்ப்பும்: தேசத் துரோகம் தொடர்பான இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 124(அ) குறித்து தேசிய அளவில் தீவிர விவாதம் எழுந்துள்ளது. மூன்றாண்டுகள் முதல் ஆயுட்காலம் வரையிலும் நீட்டிக்கக்கூடிய சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனை விதிக்க இப்பிரிவு வகைசெய்கிறது. மத்திய அரசின் பார்வையோ நடைமுறையில் இருந்துவரும் இந்தச் சட்டப்பிரிவு மேலும் தொடர வேண்டும் என்பதாகவே இருக்கிறது. இச்சட்டப்பிரிவு செல்லும் என்று 1962-ல் அளிக்கப்பட்ட கேதார் நாத் சிங் வழக்கின் தீர்ப்பையே உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு பின்பற்ற வேண்டும் என்ற அரசு வழக்கறிஞர்களின் வாதங்களை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை. கேதார் நாத் சிங் வழக்கின் தீர்ப்பில் தேசத் துரோகச் சட்டப்பிரிவை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டபோதிலும்கூட, அப்பிரிவு தவறாகப் பயன்படுத்தக்கூடாது என்பதற்கான கட்டுப்பாடுகளையும் விதித்தது. வன்முறையைத் தூண்டிவிடவோ அல்லது அதற்கு அழைப்புவிடுக்கவோ செய்யாதபட்சத்தில், அரசின் மீது கூறப்படும் விமர்சனங்கள் தேசத் துரோகம் ஆகாது என்று அத்தீர்ப்பு வரையறுத்தது.

வினோத் துவாவின் விமர்சனம், அரசியல் ரீதியிலான முறையீடு: தற்போது தொடரப்பட்டிருக்கும் வழக்கு இமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் வினோத் துவா, பெருந்தொற்றின்போது புலம்பெயர் தொழிலாளர்களின் பிரச்சினைகளை மத்திய அரசு எதிர்கொண்ட விதத்தை விமர்சனம் செய்து தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் அவருக்கு எதிராகத் தொடரப்பட்ட தேச விரோதக் குற்றச்சாட்டைத் தொடர்ந்து எழுந்ததாகும்[5]. வினோத் துவா மீதான இக்குற்றச்சாட்டை, இரண்டு நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு ஏற்கெனவே தள்ளுபடி செய்துவிட்டது. தன் மீதான முதல் தகவல் அறிக்கையை ரத்துசெய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனு செய்திருந்த வினோத் துவா, குறைந்தபட்சம் பத்தாண்டு காலம் ஊடகங்களில் பணிபுரிந்த பத்திரிகையாளர்கள் மீது இக்குற்றச்சாட்டைப் பதிவுசெய்யும் முன்னர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அல்லது அவரால் நியமிக்கப்பட்டவர், எதிர்க்கட்சித் தலைவர், மாநில உள்துறை அமைச்சர் ஆகியோரைக் கொண்ட குழுவிடம் முன்கூட்டி ஒப்புதல் பெறப்பட வேண்டும் என்று உத்தரவிடுமாறும் கோரியிருந்தார். உள்நோக்கம் கொண்ட இக்கோரிக்கையில், அரசியல் இருப்பது வெளிப்பட்டது. சட்டப்பிரிவு தவறாகப் பயன்படுத்தப்படக் கூடாது என்ற நோக்கில் அவர் கோரிய இந்த வேண்டுதலை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை[6].

© வேதபிரகாஷ்

15-05-2022


[1] தினமலர், லட்சுமண ரேகையை கடக்க வேண்டாம்:சுப்ரீம் கோர்ட் உத்தரவு குறித்து மத்திய அமைச்சர்,மாற்றம் செய்த நாள்: மே 11,2022 19:06

[2] https://m.dinamalar.com/detail.php?id=3027322

[3] தினகரன், தேச துரோக சட்டம் மறு பரிசீலினை: ஒன்றிய அரசு, 2022-05-09@ 16:05:06.

[4] https://www.dinakaran.com/news_detail.asp?Nid=763940

[5] தமிழ்.இந்து, தேசத் துரோகம் என்னும் காலனிய எச்சம்!,, செல்வ புவியரசன், Published : 09 May 2022 06:46 AM; Last Updated : 09 May 2022 06:46 AM

[6] https://www.hindutamil.in/news/opinion/columns/797680-treason-1.html

திராவிட ஆட்சிகளில் தேசத் துரோக வழக்குகளும், அவற்றின் பின்னணியும் –  திராவிடஸ்தான் முதல் திராவிடியன் ஸ்டாக் வரை – தேசிய அளவில் உள்ள வழக்குகளுடன் அவற்றை ஒப்பிட முடியாது (2)

மே 15, 2022

திராவிட ஆட்சிகளில் தேசத் துரோக வழக்குகளும், அவற்றின் பின்னணியும்  திராவிடஸ்தான் முதல் திராவிடியன் ஸ்டாக் வரைதேசிய அளவில் உள்ள வழக்குகளுடன் அவற்றை ஒப்பிட முடியாது (2)

திராவிடஸ்தான் முதல் மாநில சுயயாட்சி வரை: 1930-40களில் தனித்தமிழ் இயக்கம், திராவிட இனக் கட்டுக்கதைகளை வளர்த்தன. சைவம் என்ற போர்வையில், வைணவத்தை எதிர்த்து, தெலுங்கு பேசும் மக்களை அவமதித்த போக்கு, நீதிகட்சியைக் குலைத்து, திராவிட கழக போர்வையில், தமிழக பிரிவினை உருவெடுத்தது[1]. திராவிடஸ்தான் என்று ஆரம்பித்து, “அடைந்தால் திராவிட நாடு, இல்லையென்றால் சுடுகாடு” என்று சென்று, பிறகு, எல்லாமே குப்பையில் என்றாகியது. ஆனால், அத்தகைய தேசவிரோத கொள்கையிலிருந்து மற்ற மொழி மக்கள் வேறுபட்டனர். 1940-50 திராவிட இனவெறி கட்டுக் கதைகளினால் தான், முதலில் ஆந்திரா தனியாகப் பிரிந்தது, முதல் மொழிவாரி மாநிலமானது. தொடர்ந்து “தமிழ்” தான் உயர்ந்தது, அதிலுருந்து தான் மற்ற மொழிகள் தோன்றின என்பதனை சாதாரண மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. குறிப்பாக, தெலுங்கு மக்கள் ஒப்புக் கொள்ளவில்லை. பட்டிபோர்லு [Bhattiporlu] வரிவடிவங்களை [script] மற்றும் கல்வெட்டுகளை [inscriptions] வைத்துக் கொண்டு, தெலுங்கு வரிவடிவம் BCE மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று வாதிட்டனர்.

1950-70களில் பெரியார்-அண்ணா திராவிட நாட்டை குப்பைத் தொட்டியில் போட்டனர்: பெரியார் ஆதித்தனாருடன் சேர்ந்து “திராவிட நாடு” தேவையில்லை என்றே பேசினார். அண்ணாவைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை, முதலமைச்சர் ஆக வேண்டும், தேதலில் நிற்க்கவேண்டும் என்றால், பிரிவினை பேச முடியாது. அதனால், திராவிடஸ்தானும் போய் விட்டது, திராவிட நாடும் மறந்து விட்டது, “தமிழ் நாடு” என்பதில் திருப்தி பட்டு, சுருங்கி விட்டனர். அப்படியிருந்த நிலையில், இப்பொழுது, ஸ்டாலின் “திராவிடியன் ஸ்டாக்” என்று பேசியதை / பேசுவதை கவனிக்கலாம். யாரோ தவறாக சொல்லிக் கொடுத்திருக்கின்றனர் போலும். “திராவிடியன் மாடல்” வசனங்கள் வேறு தொடர்கின்றன. அவை, “ஒன்றிய” அரசுக்கு எதிராக இருக்கிறன. கூட கவர்னர் எதிர்ப்பு வேறு. இவையெல்லாம் தேசவிரோதம் ஆகுமா, தேசாபிமானம் ஆகுமா என்று தெரியவில்லை. “மாநில சுயயாட்சி” வாதம், டிவி விவாதங்களில் எதிரொலிக்கின்றன. திமுக-திக-கம்யூனிஸ்ட் வகையறாக்கள் இதில் சளைத்தவர்கள் அல்லர்.

எம்,ஜி.ஆருக்குப் பிறகு பிரிவினைவாடம் குறைந்தது: “தமிழ்நாடு” உருவானபோது கூட, எல்லை தகராறுகளில் கேரளா, ஆந்திரா மற்றும் ஆந்திராவுடன் எதிராகவே இருந்தது. தமிழநாட்டைத் தவிர மற்ற மாநில மக்கள் தாங்கள் “திராவிடர்கள்” என்றெல்லாம் ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால், திராவிடத்துவ சித்தாந்தம் தமிழ்நாடு மாநிலத்துடன் சுருங்கி விட்டது. 1950-60களில், “இந்தி-எதிர்ப்பை” கையில் எடுத்து உசுப்பி விட்டனர். 1960-70களில் மேடை பேச்சு, சினிமா வைத்டுக் கொண்டு ஆட்சியைப் பிடித்தனர். 1980-70களில் காவிரி பிரச்சினையில், முன்னர் பாமகவினால், அதிகமாகவே வெறியூட்டப் பட்டு, பிறகு திராவிட பிரிவினைவாதிகளால் தீயூட்டப் பட்டது. அப்பொழுது, இங்கு “உடுப்பி” ஹோட்டல்கள் அடித்து நொறுக்கப்பட்டன. ஶ்ரீ ராகவேந்திர மடங்களும் தாக்கப்பட்டன.  1970-80களில் எம்ஜிஆரால் பிரிவினைவாதம் கொஞ்சம் குறைந்தது. “மாநில சுயயாட்சி” போர்வையில், அவ்வப்போது, திராவிடத்துவ சித்தாந்திகள் பேசுவது வழக்கமாக இருக்கிறது.

ஆரியன்திராவிடன்இனவாதம் முதல் திராவிடியன் ஸ்டாக் இனவெறிவாதம் வரை: திராவிட சித்தாந்திகள் தமிழரை, தமிழகத்தை பிரித்து வைத்து, துவேசத்தை வளர்த்து வருவது: தமிழகத்தில் கடந்த நூறாண்டு காலத்தில், –

  • தமிழ்-தமிழரல்லாதவர்,
  • திராவிடன் – ஆரியன்,
  • தென்னகத்தவன் – வடக்கத்தியன்,
  • வடக்கு வாழ்கிறது-தெற்கு தேய்கிறது
  • ஹிந்தி-ஹிந்தி-திணிப்பு
  • ஹிந்தி-எதிர்ப்பு இந்தி-திணிப்பு

போன்ற பிரச்சாரங்களால், மற்ற மொழி பேசும், மற்ற மாநிலத்தவர் மீது, மனங்களில் துவேசத்தை வளர்த்து கொண்டிருக்கிறார்கள். “வந்தேறி” தத்துவம் எப்பொழுதுமே உணர்ச்சிப் பூர்வமாக எடுத்துக் கொண்டு, மற்றவர்களைத் தாக்கப் பயம் படுத்தப் பட்டு வருகிறது. பிராமணர், மார்வாடி, குஜராத்தி, வடவிந்தியன் போன்ற பிரிவினை துவேசம் இன்றும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.யைப்பொழுது அது “குஜராத்திற்கு” எதிராக இருக்கிறது. எந்த பிரச்சினை என்றாலும், “தமிழன்” என்று தான் அடைமொழி போட்டு செய்தி போடுவது, ஊடகங்களுக்கும் வாடிக்கையாக இருக்கிறது. ஶ்ரீலங்கா மதப்பிரச்சினை என்றாலும், “தமிழர்-முஸ்லிம்” என்று தான் செய்திகள் வெளியிட்டு, மதப்பிரச்சினையை மறைக்கப் பார்த்தனர்.

2021ல் ஸ்டாலின், திராவிடியன் ஸ்டாக் என்று கிளம்பியுள்ளார்: முத்துவேலர் கருணாநிதி ஸ்டாலின் என்கின்ற நான் என்று பதவியேற்று, தான் திராவிடியன் ஸ்டாக் என்று குறிப்பிட்டுக் கொண்டாலும், விளம்பர அரசியல் நடத்திக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் தான், திராவிட மொழி பேசும், தனிநாடு கேட்கும், திராவிட இனத்தவரான பலூச்சிஸ்தான் மக்கள் ஜின்னாவில் சிலையை தகர்த்துள்ளனர். இங்கு, கருணாநிதிக்கும், பெரியாருக்கும் சிலைகள் வைப்போம் என்று கிளம்பியுள்ளனர். பிரஹூயி, பிரோஹி, பிரஹூய், என்றெல்லாம் குறிப்பிடப் படுகின்ற மொழி திராவிடக் குடும்ப மொழி என்று திராவிடத்துவ வாதிகள் தம்பட்டம் அடித்துக் கொள்கிறார்கள், இன்றும் மேடைகளில் டமாரம் அடிக்கிறார்கள்! பிறகு, அம்மொழி பேசும் மக்களைக் கொடுமைப் படுத்தும் பாகிஸ்தானை ஏன் திராவிடத்துவ வாதிகள் கண்டு கொள்வதில்லை?

பொருளாதாரம்நிதி என்று வந்தால் சித்தாந்தம் முடங்கி விடும்: “காவிரி பிரச்சினை” என்றாலும், திராவிட அரசியல்வாதிகளின்  கையாலாகாத விசயத்தை மறைத்து, கர்நாடகாவை, கன்னட மொழி பேசுபவர்கள் மீது வெறுப்பை-காழ்ப்பை வளர்த்து வருகின்றனர். அதற்கு சத்தியராஜ், விவேக் போன்ற நடிகர்களும் உடந்தையாக இருந்தனர். ஒரு திரைப்படத்தில், “இது பெங்களூரு கத்தரிக்காய், காவிரி நீரால் வளர்ந்து பெரிதாக இருக்கிறது, அது தமிழக கத்திரிக்காய், சிறிதாக இருக்கிறது, காவிரி நீர் கிடைத்தால், அதுவும் பெரிதாக வளரும்,” என்று சொல்வது, பிரிவினையின் வக்கிரகத்தைத் தான் வெளிக்காட்டியது. ஐடியால் கர்நாடகா வளர்ந்த நிலையிலும், வியாபார சம்பந்தங்களினாலும், இப்பொழுது அடக்கி வாசிக்கப் படுகிறது. சன்–குழுமங்களின் தொடர்புகள் அறிந்த விசயமே. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, அவை வேறு வகையிலும் செயல்படுகின்றன. பொருளாதாரம், நிதியுதவி, திட்டங்கள் என்றெல்லாம் வரும் பொழுது, “ஒன்றியம்”என்று வேலை செய்யாது. தொடர்ந்து கவர்னரை எதிர்த்து வந்தாலும், வினையில் தான் சென்று முடியும்.

தேசத் துரோகம் எல்லாவற்றிலும் தான் செயல்படுகிறது: தினம்-தினம் கொலைகள், தற்கொலைகள், செக்ஸ்-வக்கிர வன்மங்கள் (அப்பா மகளை கற்பழிப்பது, மாமனார் மறுமகளிடம் எல்லை மீறுவது), வன்முறைகள், குடும்பசீரழிவுகள், கணவன்–மனைவி உறவுகள் சீரழிதல், தாம்பத்தியத்தை மீறிய உறவுகள், குடும்பக் கொலைகள் (அப்பா மனனைக் கொல்லுதல், மகன் அப்பாவைக் கொல்லுதல் முதலியன), குறைந்து வரும் மாணவ-மாணவியர் ஒழுக்கம், நடத்தை, லஞ்சத்தைப் பற்றி சொல்லவே வேண்டாம், தினம்-தினம் கைது, சஸ்பெண்ட் என்ற செய்திகள்…இந்நிலையில் திராவிடக் கட்சிகள் பரஸ்பர குற்றச் சாட்டுகள் சொல்லிக் கொண்டு தப்பிக்க / காலந்தள்ள முடியாது. விலைவாசிகள் ஏறுகின்றன என்றால், வியாபர ஒழுக்கம், வணிக தராதரம், முதலியவைப் பற்றி கண்டுகொள்வதில்லை. சங்கங்கள் மூலம் அரசியல் செய்யும் போது, கூட்டுக் கொள்ளைதான் அடிக்கிறார்கள். தக்காளியை ரோடிலும் கொட்டுவார்கள், ரூ.100/-க்கும் விற்பார்கள். கேட்டால் பெரிய பொருளாதார நிபுணன் போல, சப்ளை-டிமான்ட் என்றெல்லாம் கூடப் பேசுவான் திராவிட வியாபாரி.

© வேதபிரகாஷ்

15-05-2022


[1]  இப்பொழுதும் சரவணன், சென்னைப் பல்கலை, சைவசித்தாந்த துறை, போன்ற கும்பல்கள், சைவர் இந்துக்கள் அல்லர் என்று சொல்லி வருகின்றனர். பேஸ்புக்கிலும், இந்த வாத-விவாதங்கள் தொடர்கின்றன.

திராவிட ஆட்சிகளில் தேசத் துரோக வழக்குகளும், அவற்றின் பின்னணியும் – தேசிய அளவில் உள்ள வழக்குகளுடன் அவற்றை ஒப்பிட முடியாது (1)

மே 15, 2022

திராவிட ஆட்சிகளில் தேசத் துரோக வழக்குகளும், அவற்றின் பின்னணியும் தேசிய அளவில் உள்ள வழக்குகளுடன் அவற்றை ஒப்பிட முடியாது (1)

தமிழகத்தில் இரண்டாவதாக அதிக தேசதுரோக வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன: தமிழகத்தில் கடந்த 2010 முதல் 2020ம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சியில் அதிகளவு தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டதால், நாட்டிலேயே 2வது இடத்தை பெற்றுள்ளது[1]. இவ்விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் விசாரணை நடத்தி வரும் நிலையில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது[2] என்று தினகரன் கூறுவது வேடிக்கைதான். தேச துரோகம் தொடர்பான இந்திய தண்டனைச் சட்டத்தின் 124ஏ பிரிவு குறித்து உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்தச் சட்டத்தை மறுபரிசீலனை செய்யத் தேவையில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு  தரப்பு வாதாடி வந்தது. ஆனால், இந்தச் சட்டம் தவறாகப்  பயன்படுத்தப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க முடியும் என்று ஒன்றிய அரசின் தரப்பில் கூறப்பட்டது. அதனால், தற்போது நிலுவையில் இருக்கும் தேசதுரோக வழக்குகளையும், இடைப்பட்ட காலத்தில் பதிவு செய்யப்பட்ட தேசதுரோக வழக்குகளையும் எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பான விபரங்கள் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பிரிவினைவாதம் பேசப் படுவது புதியதல்ல: அதிமுக ஆட்சியில் அதிகம், திமுக ஆட்சியில் அதிகம் / குறைவு என்பதெல்லாம் விசயமே இல்லை, ஏனெனில், தமிழ்-தமிழ்நாடு-தமிழ்தேசம்-தமிழ்தேசியம் என்றெல்லாம் பேசி பிரிவினைவாதத்தில், பிரிவினையில் ஈடுபட்டவர்கள், ஈடுபட்டு வருபவர்கள் அதிகமாக இருக்கின்றனர். கருணாநிதி முதலமைச்சராக இருந்த பொழுது அத்தகையோரின் மாநாடுகளுக்கு தடை விதித்துள்ளனர். கொடைக்கானல் டிவி நிலையத்தில் குண்டுவெடிப்பு, மீன்சுருட்டியில் இந்தியன் வங்கி கொள்ளை-கொலை……போன்றவை ஞாபகத்தில் கொள்ளலாம். தமிழீழம் போர்வையிலும், பல குழுக்கள் செயல் பட்டு வந்தது-வருபவை அறியப் பட்டவையே. இப்பொழுது கிலாபா போர்வையில் முஸ்லிம் குழுக்கள் வேலை செய்து வருகின்றன. ஆகவே, தமிழகத்தில் “ஒன்றிய” போர்வையில் நடந்து வரும் பேச்சுகளும் கவனிக்கப் பட்டு வருகின்றன. “மாநில சுயயாட்சி,” “திராவிடியன் ஸ்டாக்,” “திராவியன் மாடல்” என்பவை எல்லாம் அவற்றின் முகமூடிகளே. ஏனெனில், இப்பொழுது இனம், இனவாதம் எல்லாம் யாரும், எந்நாடிலும் பேசுவதில்லை.

ஐபிசியின் பிரிவு  124ன் கீழ் தேசத்துரோக வழக்கு பதிவு: தேசதுரோக வழக்கின்படி, எந்தவொரு நபரும் அரசுக்கு எதிரான கருத்துக்களை எழுதினாலோ அல்லது பேசினாலோ அல்லது அத்தகைய உள்ளடக்கத்தை ஆதரித்தாலோ அல்லது தேசிய சின்னங்கள் மூலம்  அரசியலமைப்பை இழிவுபடுத்த முயன்றால், அவர் மீது ஐபிசி-யின் பிரிவு  124ஏ-ன் கீழ் தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்படலாம். மேலும், தேச விரோத அமைப்போடு தொடர்புடையவராகவோ அல்லது அவர்களுக்கு உடந்தையாக செயல்பட்டால் அவருக்கு எதிராகவும் தேசத்துரோக வழக்கு பதிய முடியும். இந்நிலையில், தேசத் துரோகச் சட்டம் குறித்த விவாதங்களுக்கு மத்தியில் அதிர்ச்சித் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது என்று தினகரன் குறிப்பிடுவது தமாஷான விசயம் தான். எல்லாவற்றையும் அதிமுக ஆட்சியின் மீது பழி போட்டு தப்பித்துக் கொள்ள முடியாது. இந்த ஐந்தாண்டுகள் பற்றி, பிறகு தான் எடைபோட முடியும். தங்களுக்குத் தானே சான்றிதழ் கொடுத்துக் கொள்ளலாம், ஆனால், மக்களை ஏமாற்ற முடியாது.

2010-2022 ஆண்டுகளில் பதிவான வழக்குகள் எண்ணிக்கை: நாடு முழுவதும் கடந்த 2010ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரை அதிகளவு தேசத்துரோக வழக்குகளை பதிவு செய்த மாநிலமாக பீகார் உள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் தமிழ்நாடு உள்ளது. தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்ட அறிக்கையின்படி, கடந்த 2010ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரை, பீகாரில் மட்டும் 168 தேசதுரோக வழக்குகள் பதிவாகியுள்ளன. தொடர்ந்து –

தமிழ்நாட்டில் – 139, உத்தரப் பிரதேசத்தில் – 115, ஜார்கண்ட்டில் -62, கர்நாடகாவில் – 50, ஒடிசாவில் – 30, அரியானாவில் – 29, ஜம்மு காஷ்மீரில் – 26,மேற்குவங்கத்தில் – 22, பஞ்சாப்பில் – 21, குஜராத்தில் – 17, இமாச்சல் பிரதேசத்தில் – 15, டெல்லியில் – 14, லட்சத்தீவில் – 14, கேரளாவில் – 14

என்ற வரிசையில் வழக்குகள் பதிவாகி உள்ளன. இதில் திமுக அரசு பெருமைப் பட்டுக் கொள்வதில் ஒன்றும் இல்லை. இந்த ஒரு வருடத்தில், இந்துவிரோத செயல்கள் எவ்வளவு நடந்துள்ளன என்பதை கவனிக்கலாம். அவையெல்லாம் பெருமை சேர்ப்பவை அல்ல. ஒரு நிலையில் அவையும் தேசவிரோதம் ஆகும்.

வழக்குகள் அதிகம், ஆனால், குற்றம் நிரூபிக்கப் படுவது குறைஆக உள்ளது: மேலும், கடந்த 2016 மற்றும் 2019 ஆண்டுக்கு இடையில், தேசத்துரோக வழக்குகளின் எண்ணிக்கை 160 சதவீதம் (93 வழக்குகள்) அதிகரித்துள்ளது. ஆனால் 2019ம் ஆண்டில் தண்டனை விகிதம் என்று பார்த்தால் 3.3 சதவீதமாக உள்ளது. குற்றம் சாட்டப்பட்ட 93 பேரில் இருவர் மட்டுமே குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தை பொருத்தமட்டில் 2010ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரை அதிகளவு தேசத்துரோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அந்த காலக் கட்டத்தில் தமிழகத்தில் அதிமுக ஆட்சி நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது, என்று தினகரன் குறிப்பிட்டு சந்தோசப்படுகிறது. ஆனால், திமுகவின் பிரிவினைவாதம் உலகம் அறிந்தது. இப்பொழுதைய “ஒன்றிய” நிலை தொடர்ந்து, கவர்னர் தாக்கப் பட்டால், த்ஹிராவிடியன் மாடல் தகர்ந்து விடும். சடம்-ஒழுங்கு சீரழிந்து கொண்டிருந்தால், முடிவு வேறு மாதிரி சென்று விடும்..

152 ஆண்டுகள் பழமையான தேசவிரோத சட்டத்தை தற்காலிகமாக நிறுத்திவைத்தது: 152 ஆண்டுகள் பழமையான தேசவிரோத சட்டத்தை தற்காலிகமாக நிறுத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது[3]. 124 ஏ சட்டத்தின் கீழ் வழக்கு பதியவும் தடை விதித்துள்ள உச்ச நீதிமன்றம், தேச துரோக சட்டத்தின் கீழ் சிறையில் உள்ளவர்கள் ஜாமீன் பெற விண்ணப்பிக்கலாம் எனவும் கூறியுள்ளது[4]. ஆங்கிலேயே காலனிய ஆட்சியின்போது அரசுக்கு எதிராக விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடுபவர்களை ஒடுக்கும் விதமாக தேசத்துரோக வழக்குகள் பதியப்பட்டன. நாடு விடுதலை பெற்ற பின்னரும் காலனிய சட்டமான தேசத் துரோக வழக்கு பதியப்பட்டு வருகிறது.இந்நிலையில், அரசுக்கு எதிராக குரல் எழுப்பும் சமூக ஆர்வலர்கள், அரசியல் தலைவர்கள், பத்திரிக்கையாளர்கள் மீது  124A சட்டப்பிரிவின் கீழ் தேசத் துரோக வழக்குப் பதியப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டு வருகிறது. எனவே, காலனியத்துவ தேசத்துரோக வழக்கு சட்டப்பிரிவான 124A-ஐ ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை எழுப்பப்பட்டது.

பத்திரிக்கை சங்கங்கள் வழக்கு தொடர்ந்தன: தேச துரோக சட்டத்துக்கு தடைகோரி எடிட்டர்ஸ் கில்டு, பத்திரிக்கையாளர் அருண் சோரி, எம்பி மௌவா மைத்ரா, பி.யு.சி.எல் உள்ளிட்டோர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா, நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் ஹிமா கோஹ்லி ஆகியோர் அடங்கிய மூன்று நீதிபதிகள் அமர்வு இந்த வழக்கை விசாரித்து வருகிறது. வழக்கு 11-05-2022 அன்று விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசும் மாநில அரசுகளும் தேச விரோத சட்டத்தை பயன்படுத்த இடைக்கால தடை விதித்தது[5]. தலைமை நீதிபதி அமர்வு, அதனையும் மீறி ஏதேனும் வழக்குகள் எங்காவது பதிவு செய்யப்பட்டால் நீதிமன்றத்தை நாட உத்தரவிட்டது[6]. இதுதொடர்புடைய வழக்குகளை நீதிமன்றங்கள் விரைந்து முடிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. இந்த சட்டத்தை பயன்படுத்தாமல் இருக்க மத்திய அரசு மாநிலங்களுக்கு கூடுதல் ஆலோசனைகளை வழங்கலாம் எனவும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ஏற்கனவே கைது செய்யப்பட்ட 13 ஆயிரம் பேர் நீதிமன்றங்கள் மூலம் ஜாமின் பெற்றுக்கொள்ளவும் உச்சநீதிமனறம் அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

© வேதபிரகாஷ்

15-05-2022


[1] தினகரன், 2010 முதல் 2020ம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சியில் தேச துரோக வழக்கு பதிந்ததில் தமிழ்நாடு 2வது இடம்: சுப்ரீம் கோர்ட் விசாரணைக்கு மத்தியில் அதிர்ச்சி தகவல், 2022-05-11@ 15:05:14.

[2] https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=764520 

[3] NEWS18 TAMIL, தேச துரோக வழக்கு பதிய உச்ச நீதிமன்றம் தடை.. சட்டம் தற்காலிகமாக நிறுத்திவைப்பு, Published by:Murugesh M, LAST UPDATED : MAY 11, 2022, 13:41 IST. First published: May 11, 2022, 13:40 IST.

[4] https://tamil.news18.com/news/national/breaking-sedition-law-in-abeyance-supreme-court-urges-centre-states-not-to-file-firs-invoking-section-124a-mur-743986.html

[5] தமிழ்.இந்தியன்.இக்ஸ்பிரஸ், அரசு மறுபரிசீலனை செய்யும் வரை தேச துரோக விசாரணையை நிறுத்தி வைத்த உச்ச நீதிமன்றம்!, Written by WebDesk, Updated: May 11, 2022 10:05:24 pm

[6] https://tamil.indianexpress.com/india/supreme-court-interim-order-on-sedition-section-124a-centre-452724/