Posts Tagged ‘திராவிட எழுத்தாளர்கள்’

திராவிட ஆட்சிகளில் தேசத் துரோக மற்றும் பத்திரிக்கையாளர்களின் வழக்குகளும், அவற்றின் பின்னணியும் – தேசிய அளவில் உள்ள வழக்குகளுடன் அவற்றை ஒப்பிட முடியாது (3)

மே 15, 2022

திராவிட ஆட்சிகளில் தேசத் துரோக மற்றும் பத்திரிக்கையாளர்களின் வழக்குகளும், அவற்றின் பின்னணியும் தேசிய அளவில் உள்ள வழக்குகளுடன் அவற்றை ஒப்பிட முடியாது (3)

நீதிமன்றமும் அரசையும், சட்டமன்றத்தையும் மதிக்க வேண்டும்: உச்ச நீதிமன்றத்தின் இவ்வுத்தரவு பற்றி மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜுஜூ கூறியதாவது[1]: “நாங்கள் எங்கள் நிலைப்பாட்டை மிகத் தெளிவாகக் கூறியுள்ளோம். மேலும் இவ்விவகாரத்தில் பிரதமரின் நோக்கம் குறித்து நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளோம். நீதிமன்றத்தையும் அதன் சுதந்திரத்தையும் நாங்கள் மதிக்கிறோம். ஆனால் லட்சுமண ரேகை என ஒன்று உள்ளது. அதனை அரசின் அனைத்து அமைப்புகளும் மதிக்க வேண்டும். நீதிமன்றமும் அரசையும், சட்டமன்றத்தையும் மதிக்க வேண்டும். எங்களிடம் தெளிவான எல்லை நிர்ணயம் உள்ளது. அந்த லட்சுமண ரேகயை யாரும் கடக்கக்கூடாது,” இவ்வாறு கூறினார்[2]. அப்பிரிவு தேவயில்லை என்ற படசத்தில், இன்னொரு சட்டம் உருவாக்கப் படும். ஏனெனில், தேசத்துரோக கருத்துகள், வேலைகள், தீவிரவாதங்கள் இருக்கத்தான் செய்கின்றன. பிறகு அவற்றைக் க்ட்டுப் படுத்த, தடுக்க, தீர்க்க்க, தண்டிக்க நீதிமன்றம், அரசு, சட்டமன்றம், நாடாளுமன்றம் என்ன செய்ய முடியும் என்று கவனிக்க வேண்டும்

பிரிட்டிஷ் கால சட்டங்களில் ஒன்று தேச துரோக சட்டம்[3]. இந்த சட்டம் அரசியல் காரணங்களுக்காக பழிவாங்கவே அதிகம் பயன்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டு உள்ளது[4]. இதில் மத்திய, மாநில அரசுகள் எதுவும் விதிவிலக்கல்ல என்றும் கூறப்படுகிறது. இச்சட்டத்தை நீக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் ஏராளமான மனுக்கள் உள்ளன. கடந்த திங்களன்று (மே 09) இம்மனுக்கள் தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு, இச்சட்டம் குறித்து பரிசீலிப்பதாகவும், அதன் முடிவுகள் வரும் வரை இச்சட்டத்திற்கு எதிரான மனுக்களை விசாரிக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டது. இந்நிலையில் இன்று மீண்டும் அம்மனுவை விசாரித்த கோர்ட், அச்சட்டத்தை நிறுத்தி வைப்பதாக அதிரடி உத்தரவு பிறப்பித்தது. ”அரசின் பரிசீலனை முடியும் வரை தேச துரோக சட்டத்தை பயன்படுத்தக் கூடாது. மத்திய, மாநில அரசுகள் பிரிவு 124ஏ-வை பயன்படுத்தி வழக்கு பதியாது என நம்புகிறோம். தேச துரோக வழக்கின் கீழ் உள்ள விசாரணைகள் நிறுத்தி வைக்கப்படுகிறது. ஏற்கனவே தேச துரோக வழக்கில் சிறையில் உள்ளவர்கள் ஜாமின் கோரி நீதிமன்றத்தை அணுகலாம்” என நீதிபதிகள் கூறினர்.

இந்தியாவில் தேசத்துரோக சட்டம், முந்தைய வழக்குகள்: பிரிடிஷ்-இந்திய அரசுக்கு எதிராக இருந்தவர்களைத் `தேசத்துரோகிகள்’ என்று அழைக்கப் பட்டனர், அதில், விடுதலை போராளிகளும் அடங்குவர். பகத்சிங் போன்றவர்கள் தேசத்துரோகிகள் எனராங்கிலேயர் அரசு முத்திரைக் குத்தியது. தேசத் துரோக வழக்கில் திலகர் 18 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். 1922-ம் ஆண்டு மகாத்மா காந்தி, யங் இந்தியா இதழில் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராகக் கட்டுரை எழுதியபோது, காந்தி மீதும் `யங் இந்தியா’ வெளியீட்டாளர் சங்கர்லால் பாங்கர் மீதும் இந்தச் சட்டம் பாய்ந்தது. “இந்தியர்கள் மீது அடக்குமுறையைப் பாய்ச்சுவதற்காகவே இந்தச் சட்டம் திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது,” என்று காந்தி, 124ஏ பிரிவு குறித்து கூறியுள்ளார். ஜவகர்லால் நேரு இச்சட்டப் பிரிவு 124ஏ ஏற்றுக்கொள்ள முடியாத மிகவும் ஆட்சேபனைக்குரிய சட்டம் எனத் தெரிவித்தார். இந்தியர்களை அடக்கி வைக்கவே தேசத்துரோகச் சட்டத்தை பிரிடிஷ்-இந்திய ஆட்சியாளர்கள் திட்டமிட்டு இயற்றினர் என மகாத்மா காந்தி கருத்து தெரிவித்தார். தேசத் துரோக வழக்கில் வ. உ. சிதம்பரம்பிள்ளை 1908 முதல் 1912 முடிய வரை சிறையில் அடைக்கப்பட்டார். 2003-ஆம் ஆண்டில் விசுவ இந்து பரிசத் பொதுச் செயலாளர் பிரவீன் தொகாடியா தேசத் துரோக வழக்கில் கைது செய்யப்பட்டார். 2010-இல் எழுத்தாளர் அருந்ததி ராய் காஷ்மீர் பிரிவினைவாதம் மற்றும் மாவோயிஸ்டுகளுக்கு ஆதரவாகவும், இந்திய அரசுக்கு எதிராகவும் எழுதியதற்கு தேசத் துரோக வழக்கில் குற்றம் சாட்டப்பட்டார்.

பிரிவு 124 க்கு ஆதரவான கருத்துக்கள்: இந்திய தண்டனைச் சட்டம், பிரிவு 124 ஏ தேசப் பிரிவினைவாதிகள் மற்றும் தீவிரவாதிகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்படுகிறது. வன்முறை மற்றும் சட்டவிரோதமாக அரசை அகற்றுவதற்கான முயற்சிகள் நடந்தால், அவற்றிலிருந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை இந்தச் சட்டம் பாதுகாக்கிறது. அரசின் நிலையான தன்மை, தேசத்தின் ஒற்றுமைக்கும் பொருளாதாரத்துக்கும் முக்கியமானதாகும். நீதிமன்ற அவமதிப்பு செய்தால், தண்டனை வழங்கப்படுவது போல அரசை அவமதித்தால் தண்டனை கிடைக்கும் என்பதை இந்தச் சட்டம் உறுதி செய்கிறது’ என இதன் ஆதரவாளர்கள் கருதுகின்றனர். பல மாநிலங்களில் மாவோயிஸ்ட்டுகள் கிளர்ச்சி செய்து வருகின்றனர். இவர்கள் அரசைக் கவிழ்க்க முயன்று, பல்வேறு கிளர்ச்சிகளில் ஈடுபடுகின்றனர். வடகிழக்கு மாநிலங்களில், காஷ்மீரத்தில் தேசவிரோத குழுக்கள் வெளிப்ப்டையாகவே, ஆயுதம் ஏந்தி போராடி வருகின்றன. இவற்றைத் தடுத்து, அரசை நிலைநாட்ட இந்தச் சட்டம் பயன் படுத்தப்படுவதாக இதன் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். 03-07-2019  அன்று நாடாளுமன்றத்தில் பேசிய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய், “எந்தக் காரணத்தைக் கொண்டும் தேசத்துரோக சட்டம் ரத்து செய்யப்படாது, தேச விரோத, பிரிவினைவாத மற்றும் பயங்கரவாதிகளைத் திறம்பட எதிர்த்துப் போராடுவதற்காகவே இந்தச் சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது,” என்றார்.

பிரிவு 124 க்கு எதிர் கருத்துகள்: தேசத்துரோகச் சட்டம், காலனிய ஆதிக்கத்தின் நினைவாக இன்னும் இந்தியாவில் இருந்து கொண்டிருக்கிறது. ஜனநாயக நாட்டுக்கு இதுபோன்ற சட்டங்கள் பொருந்தாது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் தன் குடிமக்களுக்குத் தந்த பேச்சு சுதந்திரத்தை இந்தச் சட்டம் பறிக்கிறது’ என்று இந்தச் சட்டத்தை எதிர்ப்பவர்கள் கூறுகின்றனர். அரசின் கருத்துக்கு எதிராக நிலைப்பாட்டைக் கொண்டிருப்பது, விவாதம் நடத்துவது ஜனநாயகத்திற்குத் தேவையான அத்தியாவசியமான விஷயங்கள். ஆட்சியாளர்களைக் கேள்வி கேட்கும் உரிமை, விமர்சிக்கும் உரிமை மக்களின் அடிப்படைத் தேவை. “தேசத்துரோக வழக்கை வைத்து இந்தியர்கள் மீது அடக்குமுறையை ஏவிய, பிரிட்டன் தன் நாட்டில் தேசத்துரோக சட்டத்தையே ரத்து செய்து விட்டது. இந்தியாவில் இந்தச் சட்டம் இன்னும் பயன்பாட்டில் இருப்பது ஏன்?,” என்கிற கேள்வியும் இந்தச் சட்டத்தை எதிர்ப்பவர்களிடம் எழுகிறது.

கேதார் நாத் சிங் வழக்கும், தீர்ப்பும்: தேசத் துரோகம் தொடர்பான இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 124(அ) குறித்து தேசிய அளவில் தீவிர விவாதம் எழுந்துள்ளது. மூன்றாண்டுகள் முதல் ஆயுட்காலம் வரையிலும் நீட்டிக்கக்கூடிய சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனை விதிக்க இப்பிரிவு வகைசெய்கிறது. மத்திய அரசின் பார்வையோ நடைமுறையில் இருந்துவரும் இந்தச் சட்டப்பிரிவு மேலும் தொடர வேண்டும் என்பதாகவே இருக்கிறது. இச்சட்டப்பிரிவு செல்லும் என்று 1962-ல் அளிக்கப்பட்ட கேதார் நாத் சிங் வழக்கின் தீர்ப்பையே உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு பின்பற்ற வேண்டும் என்ற அரசு வழக்கறிஞர்களின் வாதங்களை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை. கேதார் நாத் சிங் வழக்கின் தீர்ப்பில் தேசத் துரோகச் சட்டப்பிரிவை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டபோதிலும்கூட, அப்பிரிவு தவறாகப் பயன்படுத்தக்கூடாது என்பதற்கான கட்டுப்பாடுகளையும் விதித்தது. வன்முறையைத் தூண்டிவிடவோ அல்லது அதற்கு அழைப்புவிடுக்கவோ செய்யாதபட்சத்தில், அரசின் மீது கூறப்படும் விமர்சனங்கள் தேசத் துரோகம் ஆகாது என்று அத்தீர்ப்பு வரையறுத்தது.

வினோத் துவாவின் விமர்சனம், அரசியல் ரீதியிலான முறையீடு: தற்போது தொடரப்பட்டிருக்கும் வழக்கு இமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் வினோத் துவா, பெருந்தொற்றின்போது புலம்பெயர் தொழிலாளர்களின் பிரச்சினைகளை மத்திய அரசு எதிர்கொண்ட விதத்தை விமர்சனம் செய்து தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் அவருக்கு எதிராகத் தொடரப்பட்ட தேச விரோதக் குற்றச்சாட்டைத் தொடர்ந்து எழுந்ததாகும்[5]. வினோத் துவா மீதான இக்குற்றச்சாட்டை, இரண்டு நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு ஏற்கெனவே தள்ளுபடி செய்துவிட்டது. தன் மீதான முதல் தகவல் அறிக்கையை ரத்துசெய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனு செய்திருந்த வினோத் துவா, குறைந்தபட்சம் பத்தாண்டு காலம் ஊடகங்களில் பணிபுரிந்த பத்திரிகையாளர்கள் மீது இக்குற்றச்சாட்டைப் பதிவுசெய்யும் முன்னர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அல்லது அவரால் நியமிக்கப்பட்டவர், எதிர்க்கட்சித் தலைவர், மாநில உள்துறை அமைச்சர் ஆகியோரைக் கொண்ட குழுவிடம் முன்கூட்டி ஒப்புதல் பெறப்பட வேண்டும் என்று உத்தரவிடுமாறும் கோரியிருந்தார். உள்நோக்கம் கொண்ட இக்கோரிக்கையில், அரசியல் இருப்பது வெளிப்பட்டது. சட்டப்பிரிவு தவறாகப் பயன்படுத்தப்படக் கூடாது என்ற நோக்கில் அவர் கோரிய இந்த வேண்டுதலை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை[6].

© வேதபிரகாஷ்

15-05-2022


[1] தினமலர், லட்சுமண ரேகையை கடக்க வேண்டாம்:சுப்ரீம் கோர்ட் உத்தரவு குறித்து மத்திய அமைச்சர்,மாற்றம் செய்த நாள்: மே 11,2022 19:06

[2] https://m.dinamalar.com/detail.php?id=3027322

[3] தினகரன், தேச துரோக சட்டம் மறு பரிசீலினை: ஒன்றிய அரசு, 2022-05-09@ 16:05:06.

[4] https://www.dinakaran.com/news_detail.asp?Nid=763940

[5] தமிழ்.இந்து, தேசத் துரோகம் என்னும் காலனிய எச்சம்!,, செல்வ புவியரசன், Published : 09 May 2022 06:46 AM; Last Updated : 09 May 2022 06:46 AM

[6] https://www.hindutamil.in/news/opinion/columns/797680-treason-1.html

திராவிட ஆட்சிகளில் தேசத் துரோக வழக்குகளும், அவற்றின் பின்னணியும் –  திராவிடஸ்தான் முதல் திராவிடியன் ஸ்டாக் வரை – தேசிய அளவில் உள்ள வழக்குகளுடன் அவற்றை ஒப்பிட முடியாது (2)

மே 15, 2022

திராவிட ஆட்சிகளில் தேசத் துரோக வழக்குகளும், அவற்றின் பின்னணியும்  திராவிடஸ்தான் முதல் திராவிடியன் ஸ்டாக் வரைதேசிய அளவில் உள்ள வழக்குகளுடன் அவற்றை ஒப்பிட முடியாது (2)

திராவிடஸ்தான் முதல் மாநில சுயயாட்சி வரை: 1930-40களில் தனித்தமிழ் இயக்கம், திராவிட இனக் கட்டுக்கதைகளை வளர்த்தன. சைவம் என்ற போர்வையில், வைணவத்தை எதிர்த்து, தெலுங்கு பேசும் மக்களை அவமதித்த போக்கு, நீதிகட்சியைக் குலைத்து, திராவிட கழக போர்வையில், தமிழக பிரிவினை உருவெடுத்தது[1]. திராவிடஸ்தான் என்று ஆரம்பித்து, “அடைந்தால் திராவிட நாடு, இல்லையென்றால் சுடுகாடு” என்று சென்று, பிறகு, எல்லாமே குப்பையில் என்றாகியது. ஆனால், அத்தகைய தேசவிரோத கொள்கையிலிருந்து மற்ற மொழி மக்கள் வேறுபட்டனர். 1940-50 திராவிட இனவெறி கட்டுக் கதைகளினால் தான், முதலில் ஆந்திரா தனியாகப் பிரிந்தது, முதல் மொழிவாரி மாநிலமானது. தொடர்ந்து “தமிழ்” தான் உயர்ந்தது, அதிலுருந்து தான் மற்ற மொழிகள் தோன்றின என்பதனை சாதாரண மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. குறிப்பாக, தெலுங்கு மக்கள் ஒப்புக் கொள்ளவில்லை. பட்டிபோர்லு [Bhattiporlu] வரிவடிவங்களை [script] மற்றும் கல்வெட்டுகளை [inscriptions] வைத்துக் கொண்டு, தெலுங்கு வரிவடிவம் BCE மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று வாதிட்டனர்.

1950-70களில் பெரியார்-அண்ணா திராவிட நாட்டை குப்பைத் தொட்டியில் போட்டனர்: பெரியார் ஆதித்தனாருடன் சேர்ந்து “திராவிட நாடு” தேவையில்லை என்றே பேசினார். அண்ணாவைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை, முதலமைச்சர் ஆக வேண்டும், தேதலில் நிற்க்கவேண்டும் என்றால், பிரிவினை பேச முடியாது. அதனால், திராவிடஸ்தானும் போய் விட்டது, திராவிட நாடும் மறந்து விட்டது, “தமிழ் நாடு” என்பதில் திருப்தி பட்டு, சுருங்கி விட்டனர். அப்படியிருந்த நிலையில், இப்பொழுது, ஸ்டாலின் “திராவிடியன் ஸ்டாக்” என்று பேசியதை / பேசுவதை கவனிக்கலாம். யாரோ தவறாக சொல்லிக் கொடுத்திருக்கின்றனர் போலும். “திராவிடியன் மாடல்” வசனங்கள் வேறு தொடர்கின்றன. அவை, “ஒன்றிய” அரசுக்கு எதிராக இருக்கிறன. கூட கவர்னர் எதிர்ப்பு வேறு. இவையெல்லாம் தேசவிரோதம் ஆகுமா, தேசாபிமானம் ஆகுமா என்று தெரியவில்லை. “மாநில சுயயாட்சி” வாதம், டிவி விவாதங்களில் எதிரொலிக்கின்றன. திமுக-திக-கம்யூனிஸ்ட் வகையறாக்கள் இதில் சளைத்தவர்கள் அல்லர்.

எம்,ஜி.ஆருக்குப் பிறகு பிரிவினைவாடம் குறைந்தது: “தமிழ்நாடு” உருவானபோது கூட, எல்லை தகராறுகளில் கேரளா, ஆந்திரா மற்றும் ஆந்திராவுடன் எதிராகவே இருந்தது. தமிழநாட்டைத் தவிர மற்ற மாநில மக்கள் தாங்கள் “திராவிடர்கள்” என்றெல்லாம் ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால், திராவிடத்துவ சித்தாந்தம் தமிழ்நாடு மாநிலத்துடன் சுருங்கி விட்டது. 1950-60களில், “இந்தி-எதிர்ப்பை” கையில் எடுத்து உசுப்பி விட்டனர். 1960-70களில் மேடை பேச்சு, சினிமா வைத்டுக் கொண்டு ஆட்சியைப் பிடித்தனர். 1980-70களில் காவிரி பிரச்சினையில், முன்னர் பாமகவினால், அதிகமாகவே வெறியூட்டப் பட்டு, பிறகு திராவிட பிரிவினைவாதிகளால் தீயூட்டப் பட்டது. அப்பொழுது, இங்கு “உடுப்பி” ஹோட்டல்கள் அடித்து நொறுக்கப்பட்டன. ஶ்ரீ ராகவேந்திர மடங்களும் தாக்கப்பட்டன.  1970-80களில் எம்ஜிஆரால் பிரிவினைவாதம் கொஞ்சம் குறைந்தது. “மாநில சுயயாட்சி” போர்வையில், அவ்வப்போது, திராவிடத்துவ சித்தாந்திகள் பேசுவது வழக்கமாக இருக்கிறது.

ஆரியன்திராவிடன்இனவாதம் முதல் திராவிடியன் ஸ்டாக் இனவெறிவாதம் வரை: திராவிட சித்தாந்திகள் தமிழரை, தமிழகத்தை பிரித்து வைத்து, துவேசத்தை வளர்த்து வருவது: தமிழகத்தில் கடந்த நூறாண்டு காலத்தில், –

  • தமிழ்-தமிழரல்லாதவர்,
  • திராவிடன் – ஆரியன்,
  • தென்னகத்தவன் – வடக்கத்தியன்,
  • வடக்கு வாழ்கிறது-தெற்கு தேய்கிறது
  • ஹிந்தி-ஹிந்தி-திணிப்பு
  • ஹிந்தி-எதிர்ப்பு இந்தி-திணிப்பு

போன்ற பிரச்சாரங்களால், மற்ற மொழி பேசும், மற்ற மாநிலத்தவர் மீது, மனங்களில் துவேசத்தை வளர்த்து கொண்டிருக்கிறார்கள். “வந்தேறி” தத்துவம் எப்பொழுதுமே உணர்ச்சிப் பூர்வமாக எடுத்துக் கொண்டு, மற்றவர்களைத் தாக்கப் பயம் படுத்தப் பட்டு வருகிறது. பிராமணர், மார்வாடி, குஜராத்தி, வடவிந்தியன் போன்ற பிரிவினை துவேசம் இன்றும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.யைப்பொழுது அது “குஜராத்திற்கு” எதிராக இருக்கிறது. எந்த பிரச்சினை என்றாலும், “தமிழன்” என்று தான் அடைமொழி போட்டு செய்தி போடுவது, ஊடகங்களுக்கும் வாடிக்கையாக இருக்கிறது. ஶ்ரீலங்கா மதப்பிரச்சினை என்றாலும், “தமிழர்-முஸ்லிம்” என்று தான் செய்திகள் வெளியிட்டு, மதப்பிரச்சினையை மறைக்கப் பார்த்தனர்.

2021ல் ஸ்டாலின், திராவிடியன் ஸ்டாக் என்று கிளம்பியுள்ளார்: முத்துவேலர் கருணாநிதி ஸ்டாலின் என்கின்ற நான் என்று பதவியேற்று, தான் திராவிடியன் ஸ்டாக் என்று குறிப்பிட்டுக் கொண்டாலும், விளம்பர அரசியல் நடத்திக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் தான், திராவிட மொழி பேசும், தனிநாடு கேட்கும், திராவிட இனத்தவரான பலூச்சிஸ்தான் மக்கள் ஜின்னாவில் சிலையை தகர்த்துள்ளனர். இங்கு, கருணாநிதிக்கும், பெரியாருக்கும் சிலைகள் வைப்போம் என்று கிளம்பியுள்ளனர். பிரஹூயி, பிரோஹி, பிரஹூய், என்றெல்லாம் குறிப்பிடப் படுகின்ற மொழி திராவிடக் குடும்ப மொழி என்று திராவிடத்துவ வாதிகள் தம்பட்டம் அடித்துக் கொள்கிறார்கள், இன்றும் மேடைகளில் டமாரம் அடிக்கிறார்கள்! பிறகு, அம்மொழி பேசும் மக்களைக் கொடுமைப் படுத்தும் பாகிஸ்தானை ஏன் திராவிடத்துவ வாதிகள் கண்டு கொள்வதில்லை?

பொருளாதாரம்நிதி என்று வந்தால் சித்தாந்தம் முடங்கி விடும்: “காவிரி பிரச்சினை” என்றாலும், திராவிட அரசியல்வாதிகளின்  கையாலாகாத விசயத்தை மறைத்து, கர்நாடகாவை, கன்னட மொழி பேசுபவர்கள் மீது வெறுப்பை-காழ்ப்பை வளர்த்து வருகின்றனர். அதற்கு சத்தியராஜ், விவேக் போன்ற நடிகர்களும் உடந்தையாக இருந்தனர். ஒரு திரைப்படத்தில், “இது பெங்களூரு கத்தரிக்காய், காவிரி நீரால் வளர்ந்து பெரிதாக இருக்கிறது, அது தமிழக கத்திரிக்காய், சிறிதாக இருக்கிறது, காவிரி நீர் கிடைத்தால், அதுவும் பெரிதாக வளரும்,” என்று சொல்வது, பிரிவினையின் வக்கிரகத்தைத் தான் வெளிக்காட்டியது. ஐடியால் கர்நாடகா வளர்ந்த நிலையிலும், வியாபார சம்பந்தங்களினாலும், இப்பொழுது அடக்கி வாசிக்கப் படுகிறது. சன்–குழுமங்களின் தொடர்புகள் அறிந்த விசயமே. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, அவை வேறு வகையிலும் செயல்படுகின்றன. பொருளாதாரம், நிதியுதவி, திட்டங்கள் என்றெல்லாம் வரும் பொழுது, “ஒன்றியம்”என்று வேலை செய்யாது. தொடர்ந்து கவர்னரை எதிர்த்து வந்தாலும், வினையில் தான் சென்று முடியும்.

தேசத் துரோகம் எல்லாவற்றிலும் தான் செயல்படுகிறது: தினம்-தினம் கொலைகள், தற்கொலைகள், செக்ஸ்-வக்கிர வன்மங்கள் (அப்பா மகளை கற்பழிப்பது, மாமனார் மறுமகளிடம் எல்லை மீறுவது), வன்முறைகள், குடும்பசீரழிவுகள், கணவன்–மனைவி உறவுகள் சீரழிதல், தாம்பத்தியத்தை மீறிய உறவுகள், குடும்பக் கொலைகள் (அப்பா மனனைக் கொல்லுதல், மகன் அப்பாவைக் கொல்லுதல் முதலியன), குறைந்து வரும் மாணவ-மாணவியர் ஒழுக்கம், நடத்தை, லஞ்சத்தைப் பற்றி சொல்லவே வேண்டாம், தினம்-தினம் கைது, சஸ்பெண்ட் என்ற செய்திகள்…இந்நிலையில் திராவிடக் கட்சிகள் பரஸ்பர குற்றச் சாட்டுகள் சொல்லிக் கொண்டு தப்பிக்க / காலந்தள்ள முடியாது. விலைவாசிகள் ஏறுகின்றன என்றால், வியாபர ஒழுக்கம், வணிக தராதரம், முதலியவைப் பற்றி கண்டுகொள்வதில்லை. சங்கங்கள் மூலம் அரசியல் செய்யும் போது, கூட்டுக் கொள்ளைதான் அடிக்கிறார்கள். தக்காளியை ரோடிலும் கொட்டுவார்கள், ரூ.100/-க்கும் விற்பார்கள். கேட்டால் பெரிய பொருளாதார நிபுணன் போல, சப்ளை-டிமான்ட் என்றெல்லாம் கூடப் பேசுவான் திராவிட வியாபாரி.

© வேதபிரகாஷ்

15-05-2022


[1]  இப்பொழுதும் சரவணன், சென்னைப் பல்கலை, சைவசித்தாந்த துறை, போன்ற கும்பல்கள், சைவர் இந்துக்கள் அல்லர் என்று சொல்லி வருகின்றனர். பேஸ்புக்கிலும், இந்த வாத-விவாதங்கள் தொடர்கின்றன.

திராவிட ஆட்சிகளில் தேசத் துரோக வழக்குகளும், அவற்றின் பின்னணியும் – தேசிய அளவில் உள்ள வழக்குகளுடன் அவற்றை ஒப்பிட முடியாது (1)

மே 15, 2022

திராவிட ஆட்சிகளில் தேசத் துரோக வழக்குகளும், அவற்றின் பின்னணியும் தேசிய அளவில் உள்ள வழக்குகளுடன் அவற்றை ஒப்பிட முடியாது (1)

தமிழகத்தில் இரண்டாவதாக அதிக தேசதுரோக வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன: தமிழகத்தில் கடந்த 2010 முதல் 2020ம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சியில் அதிகளவு தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டதால், நாட்டிலேயே 2வது இடத்தை பெற்றுள்ளது[1]. இவ்விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் விசாரணை நடத்தி வரும் நிலையில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது[2] என்று தினகரன் கூறுவது வேடிக்கைதான். தேச துரோகம் தொடர்பான இந்திய தண்டனைச் சட்டத்தின் 124ஏ பிரிவு குறித்து உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்தச் சட்டத்தை மறுபரிசீலனை செய்யத் தேவையில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு  தரப்பு வாதாடி வந்தது. ஆனால், இந்தச் சட்டம் தவறாகப்  பயன்படுத்தப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க முடியும் என்று ஒன்றிய அரசின் தரப்பில் கூறப்பட்டது. அதனால், தற்போது நிலுவையில் இருக்கும் தேசதுரோக வழக்குகளையும், இடைப்பட்ட காலத்தில் பதிவு செய்யப்பட்ட தேசதுரோக வழக்குகளையும் எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பான விபரங்கள் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பிரிவினைவாதம் பேசப் படுவது புதியதல்ல: அதிமுக ஆட்சியில் அதிகம், திமுக ஆட்சியில் அதிகம் / குறைவு என்பதெல்லாம் விசயமே இல்லை, ஏனெனில், தமிழ்-தமிழ்நாடு-தமிழ்தேசம்-தமிழ்தேசியம் என்றெல்லாம் பேசி பிரிவினைவாதத்தில், பிரிவினையில் ஈடுபட்டவர்கள், ஈடுபட்டு வருபவர்கள் அதிகமாக இருக்கின்றனர். கருணாநிதி முதலமைச்சராக இருந்த பொழுது அத்தகையோரின் மாநாடுகளுக்கு தடை விதித்துள்ளனர். கொடைக்கானல் டிவி நிலையத்தில் குண்டுவெடிப்பு, மீன்சுருட்டியில் இந்தியன் வங்கி கொள்ளை-கொலை……போன்றவை ஞாபகத்தில் கொள்ளலாம். தமிழீழம் போர்வையிலும், பல குழுக்கள் செயல் பட்டு வந்தது-வருபவை அறியப் பட்டவையே. இப்பொழுது கிலாபா போர்வையில் முஸ்லிம் குழுக்கள் வேலை செய்து வருகின்றன. ஆகவே, தமிழகத்தில் “ஒன்றிய” போர்வையில் நடந்து வரும் பேச்சுகளும் கவனிக்கப் பட்டு வருகின்றன. “மாநில சுயயாட்சி,” “திராவிடியன் ஸ்டாக்,” “திராவியன் மாடல்” என்பவை எல்லாம் அவற்றின் முகமூடிகளே. ஏனெனில், இப்பொழுது இனம், இனவாதம் எல்லாம் யாரும், எந்நாடிலும் பேசுவதில்லை.

ஐபிசியின் பிரிவு  124ன் கீழ் தேசத்துரோக வழக்கு பதிவு: தேசதுரோக வழக்கின்படி, எந்தவொரு நபரும் அரசுக்கு எதிரான கருத்துக்களை எழுதினாலோ அல்லது பேசினாலோ அல்லது அத்தகைய உள்ளடக்கத்தை ஆதரித்தாலோ அல்லது தேசிய சின்னங்கள் மூலம்  அரசியலமைப்பை இழிவுபடுத்த முயன்றால், அவர் மீது ஐபிசி-யின் பிரிவு  124ஏ-ன் கீழ் தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்படலாம். மேலும், தேச விரோத அமைப்போடு தொடர்புடையவராகவோ அல்லது அவர்களுக்கு உடந்தையாக செயல்பட்டால் அவருக்கு எதிராகவும் தேசத்துரோக வழக்கு பதிய முடியும். இந்நிலையில், தேசத் துரோகச் சட்டம் குறித்த விவாதங்களுக்கு மத்தியில் அதிர்ச்சித் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது என்று தினகரன் குறிப்பிடுவது தமாஷான விசயம் தான். எல்லாவற்றையும் அதிமுக ஆட்சியின் மீது பழி போட்டு தப்பித்துக் கொள்ள முடியாது. இந்த ஐந்தாண்டுகள் பற்றி, பிறகு தான் எடைபோட முடியும். தங்களுக்குத் தானே சான்றிதழ் கொடுத்துக் கொள்ளலாம், ஆனால், மக்களை ஏமாற்ற முடியாது.

2010-2022 ஆண்டுகளில் பதிவான வழக்குகள் எண்ணிக்கை: நாடு முழுவதும் கடந்த 2010ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரை அதிகளவு தேசத்துரோக வழக்குகளை பதிவு செய்த மாநிலமாக பீகார் உள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் தமிழ்நாடு உள்ளது. தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்ட அறிக்கையின்படி, கடந்த 2010ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரை, பீகாரில் மட்டும் 168 தேசதுரோக வழக்குகள் பதிவாகியுள்ளன. தொடர்ந்து –

தமிழ்நாட்டில் – 139, உத்தரப் பிரதேசத்தில் – 115, ஜார்கண்ட்டில் -62, கர்நாடகாவில் – 50, ஒடிசாவில் – 30, அரியானாவில் – 29, ஜம்மு காஷ்மீரில் – 26,மேற்குவங்கத்தில் – 22, பஞ்சாப்பில் – 21, குஜராத்தில் – 17, இமாச்சல் பிரதேசத்தில் – 15, டெல்லியில் – 14, லட்சத்தீவில் – 14, கேரளாவில் – 14

என்ற வரிசையில் வழக்குகள் பதிவாகி உள்ளன. இதில் திமுக அரசு பெருமைப் பட்டுக் கொள்வதில் ஒன்றும் இல்லை. இந்த ஒரு வருடத்தில், இந்துவிரோத செயல்கள் எவ்வளவு நடந்துள்ளன என்பதை கவனிக்கலாம். அவையெல்லாம் பெருமை சேர்ப்பவை அல்ல. ஒரு நிலையில் அவையும் தேசவிரோதம் ஆகும்.

வழக்குகள் அதிகம், ஆனால், குற்றம் நிரூபிக்கப் படுவது குறைஆக உள்ளது: மேலும், கடந்த 2016 மற்றும் 2019 ஆண்டுக்கு இடையில், தேசத்துரோக வழக்குகளின் எண்ணிக்கை 160 சதவீதம் (93 வழக்குகள்) அதிகரித்துள்ளது. ஆனால் 2019ம் ஆண்டில் தண்டனை விகிதம் என்று பார்த்தால் 3.3 சதவீதமாக உள்ளது. குற்றம் சாட்டப்பட்ட 93 பேரில் இருவர் மட்டுமே குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தை பொருத்தமட்டில் 2010ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரை அதிகளவு தேசத்துரோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அந்த காலக் கட்டத்தில் தமிழகத்தில் அதிமுக ஆட்சி நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது, என்று தினகரன் குறிப்பிட்டு சந்தோசப்படுகிறது. ஆனால், திமுகவின் பிரிவினைவாதம் உலகம் அறிந்தது. இப்பொழுதைய “ஒன்றிய” நிலை தொடர்ந்து, கவர்னர் தாக்கப் பட்டால், த்ஹிராவிடியன் மாடல் தகர்ந்து விடும். சடம்-ஒழுங்கு சீரழிந்து கொண்டிருந்தால், முடிவு வேறு மாதிரி சென்று விடும்..

152 ஆண்டுகள் பழமையான தேசவிரோத சட்டத்தை தற்காலிகமாக நிறுத்திவைத்தது: 152 ஆண்டுகள் பழமையான தேசவிரோத சட்டத்தை தற்காலிகமாக நிறுத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது[3]. 124 ஏ சட்டத்தின் கீழ் வழக்கு பதியவும் தடை விதித்துள்ள உச்ச நீதிமன்றம், தேச துரோக சட்டத்தின் கீழ் சிறையில் உள்ளவர்கள் ஜாமீன் பெற விண்ணப்பிக்கலாம் எனவும் கூறியுள்ளது[4]. ஆங்கிலேயே காலனிய ஆட்சியின்போது அரசுக்கு எதிராக விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடுபவர்களை ஒடுக்கும் விதமாக தேசத்துரோக வழக்குகள் பதியப்பட்டன. நாடு விடுதலை பெற்ற பின்னரும் காலனிய சட்டமான தேசத் துரோக வழக்கு பதியப்பட்டு வருகிறது.இந்நிலையில், அரசுக்கு எதிராக குரல் எழுப்பும் சமூக ஆர்வலர்கள், அரசியல் தலைவர்கள், பத்திரிக்கையாளர்கள் மீது  124A சட்டப்பிரிவின் கீழ் தேசத் துரோக வழக்குப் பதியப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டு வருகிறது. எனவே, காலனியத்துவ தேசத்துரோக வழக்கு சட்டப்பிரிவான 124A-ஐ ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை எழுப்பப்பட்டது.

பத்திரிக்கை சங்கங்கள் வழக்கு தொடர்ந்தன: தேச துரோக சட்டத்துக்கு தடைகோரி எடிட்டர்ஸ் கில்டு, பத்திரிக்கையாளர் அருண் சோரி, எம்பி மௌவா மைத்ரா, பி.யு.சி.எல் உள்ளிட்டோர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா, நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் ஹிமா கோஹ்லி ஆகியோர் அடங்கிய மூன்று நீதிபதிகள் அமர்வு இந்த வழக்கை விசாரித்து வருகிறது. வழக்கு 11-05-2022 அன்று விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசும் மாநில அரசுகளும் தேச விரோத சட்டத்தை பயன்படுத்த இடைக்கால தடை விதித்தது[5]. தலைமை நீதிபதி அமர்வு, அதனையும் மீறி ஏதேனும் வழக்குகள் எங்காவது பதிவு செய்யப்பட்டால் நீதிமன்றத்தை நாட உத்தரவிட்டது[6]. இதுதொடர்புடைய வழக்குகளை நீதிமன்றங்கள் விரைந்து முடிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. இந்த சட்டத்தை பயன்படுத்தாமல் இருக்க மத்திய அரசு மாநிலங்களுக்கு கூடுதல் ஆலோசனைகளை வழங்கலாம் எனவும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ஏற்கனவே கைது செய்யப்பட்ட 13 ஆயிரம் பேர் நீதிமன்றங்கள் மூலம் ஜாமின் பெற்றுக்கொள்ளவும் உச்சநீதிமனறம் அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

© வேதபிரகாஷ்

15-05-2022


[1] தினகரன், 2010 முதல் 2020ம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சியில் தேச துரோக வழக்கு பதிந்ததில் தமிழ்நாடு 2வது இடம்: சுப்ரீம் கோர்ட் விசாரணைக்கு மத்தியில் அதிர்ச்சி தகவல், 2022-05-11@ 15:05:14.

[2] https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=764520 

[3] NEWS18 TAMIL, தேச துரோக வழக்கு பதிய உச்ச நீதிமன்றம் தடை.. சட்டம் தற்காலிகமாக நிறுத்திவைப்பு, Published by:Murugesh M, LAST UPDATED : MAY 11, 2022, 13:41 IST. First published: May 11, 2022, 13:40 IST.

[4] https://tamil.news18.com/news/national/breaking-sedition-law-in-abeyance-supreme-court-urges-centre-states-not-to-file-firs-invoking-section-124a-mur-743986.html

[5] தமிழ்.இந்தியன்.இக்ஸ்பிரஸ், அரசு மறுபரிசீலனை செய்யும் வரை தேச துரோக விசாரணையை நிறுத்தி வைத்த உச்ச நீதிமன்றம்!, Written by WebDesk, Updated: May 11, 2022 10:05:24 pm

[6] https://tamil.indianexpress.com/india/supreme-court-interim-order-on-sedition-section-124a-centre-452724/

ஆரிய-திராவிட போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது – வீரமணியின் புலம்பல் – அண்ணா-எம்.ஜி.ஆருக்குப் பிறகு ஜெயலலிதா போன்ற தலைவர் வருவது கடினமே – ஜெயலலிதாவுக்கு முன்பும்-பின்னும் (5)

ஜனவரி 15, 2017

ஆரியதிராவிட போராட்டம் நடந்து கொண்டிருக்கிறதுவீரமணியின் புலம்பல்அண்ணாஎம்.ஜி.ஆருக்குப் பிறகு ஜெயலலிதா போன்ற தலைவர் வருவது கடினமேஜெயலலிதாவுக்கு முன்பும்பின்னும் (5)

aryan-myth-anna-tirade-against-brahmins

சிண்டு முடிந்திடுவோய் போற்றிஎன்ற  ‘துவஜா ரோகணம்செய்யத் தொடங்கிவிட்டனர்[1]: திராவிட இயக்கங்களுக்கு தாங்கள்தான் மாற்று என்ற பாஜகவினரின் ‘கரிசனம்’ அதிமுகவின் மீது கரைபுரண்டு ஓடத் தொடங்கிவிட்டது. எனவே அதிமுகவினருக்கு எச்சரிக்கை தேவை. இது நாடகமே என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி குற்றம்சாட்டியுள்ளார். அறிஞர் அண்ணா கூறிய, ”சிண்டு முடிந்திடுவோய் போற்றி” என்ற அனுபவ மொழிப்படி, அ.தி.மு.க.வின் எம்.எல்.ஏ.,க்கள், முக்கிய பொறுப்பாளர்களிடையே பிளவை வலிந்து உண்டாக்கி, இடையே புகுந்து, நூல் பிளந்து பார்க்கும் முயற்சியில் ஈடுபடத் துவங்கிவிட்டனர். பல்வேறு கலகங்களை உருவாக்கிட, கட்டுக் கோப்பான அக்கட்சியினை ஜாதி அடிப்படையில் பிரித்தாள தங்களது பேனாக்கள்மூலம் ‘துவஜா ரோகணம்’ செய்யத் தொடங்கிவிட்டனர். எனவே, அதிமுகவின் சகோதரர்களே, சிண்டு முடிந்திடுவோரை, உங்கள்மீது திடீர் அனுதாபம், அளவற்ற ஆதரவு தருவது போல் நாடகம் போடுவோரை விழிப்போடு புரிந்துகொள்ளுங்கள். கட்சியின் கட்டுக்கோப்பை – கட்டுப்பாட்டை மறவாதீர். சிறுசிறு ஓட்டைகளைத் தேடி அலைந்து அவற்றைப் பெரிதாக்குகின்றனர். எனவே எச்சரிக்கை தேவை. இவ்வாறு வீரமணி கூறியுள்ளார்[2].

tears-and-ocean-droplets-jaya-comparison-21-08-2000கண்ணீர் துளிகளும், கடல்நீர் துளிகளும்: “கடல்நீர் துளிகள் கடலாகாது, கடலை விட்டுச் சென்ற அவை கடல் என்று தம்மை அறிவித்துக் கொள்ள முடியாது”, என்று நெடுஞ்செழியன் அதிமுகவை விட்டுச் சென்றவர்களை குறிப்பிட்டார். ஆகஸ்ட்.21, 2000 அன்று வி.ஆர்.நெடுஞ்செழியனின் புத்தகங்களை வெளியிடும் போது, ஜெயலலிதா அதனைச் சுட்டிக் காட்டி பேசினார். அண்ணா உயிருடன் இருக்கும் போது, அவரை சாடியவர்கள், மறைமுகமாக எதிர்த்தவர்கள் இன்று அண்ணாவைப் பின்பற்றுவதாகச் சொல்லிக் கொள்கிறார்கள், என்று மறைமுகமாக விமர்சித்தார்[3]. கே. வீரமணி பிரதிகளைப் பெற்றுக் கொண்டார். 1948ல் பெரியார், திமுகவை “கண்ணீர் துளிகள்” என்று குறிப்பிட்டது தெரிந்ததே. 50 ஆண்டுகள் கழித்து, ஜெயலலிதா, அதிமுகவை விட்டு விலகியவர்களை “கடற்நீர் துளிகள்” என்று குறிப்பிட்டார்[4].

veeramani-with-jayalalitaசமூக நீதி வீராங்கனை: 1998ல் அதிமுக பிஜேபியுடன் கூட்டு வைத்துக் கொண்டபோது, வீரமணி விமர்சித்தார். சுப்ரீம் கோர்ட் தீர்ப்பையடுத்து செப்டம்பர் 2001ல் தனது பதவியை ராஜினாமா செய்ததன் மூலம் தனதுதனித்தன்மையை ஜெயலலிதா நிலைநாட்டியுள்ளார் என்று திராவிடர் கழக பொதுச்செயலாளர் கி.வீரமணி கூறினார்[5]. இதுதொடர்பாக சென்னையில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சுப்ரீம் கோர்ட்தீர்ப்பை ஏற்று தனது பதவியை ஜெயலலிதா ராஜினாமா செய்துள்ளார். இதைபாராட்டுகிறேன். தனக்கு பதவி ஆசை இல்லை என்பதை அவர் நிரூபித்துள்ளார். மேலும், தென் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரை, பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவரை முதல்வராக்கியுள்ளதன் மூலம் சமூக நீதியை காப்பதில் தான் எவ்வளவு உறுதியாக இருக்கிறேன் என்பதை அவர் நிரூபித்துள்ளார். இதை நான் வரவேற்கிறேன். புதிய முதல்வர் பன்னீர் செல்வம் பீடு நடை போட்டு செயல்பட வாழ்த்துகிறேன்”, என்றுகூறியுள்ளார் அவர்[6].

கரு-இந்திராவை வசை பாடியது- சர்வாதிகாரி, காந்தாரி.....பெண்களை அடக்கும், திட்டும், தூசிக்கும் திராவிடத் தலைவர்கள்: பெரியார் முதல் கருணாநிதி வரை என்னத்தான் “பகுத்தறிவு” என்றெல்லாம் பேசினால் கூட, அவர்களின் பலதார திருமணங்கள், தொடர்புகள், மக்களை அவர்கள் பெண்களை அடக்கியாள்பவர்களாகத் தான் சித்தரித்தது. பெரியார் தன்னைவிட இளைவரான மணியம்மையை திருமணம் செய்து கொண்டதை அண்ணா போன்ற தலைவர்களே வெளிப்படையாக எதிர்த்தனர், மற்றும் “கண்ணீர் துளிகளாக” திமுக உதயமாக காரணமாகியது. “நான் முற்றும் துறந்த முனிவனும் இல்லை, அவள் படி தாண்டா பத்தினியும் இல்லை”, என்றெல்லாம் பேசினாலும் கூட, அண்ணாவுக்கு குழந்தையில்லை என்பதனால் மக்களுக்கு இரக்கம் ஏற்பட்டது. இதே நிலைதான் எம்ஜியாருக்கும். பலதாரம் புரிந்த எம்ஜியார், இதனால் கண்டுகொள்ளவில்லை எனலாம். ஆனால், வீரமணியை, மணியம்மையை சொத்துக்காக அடக்கி வைக்கும் நபராகத்தான் கருதினர். கருணாநிதியின் முத்தார-மூன்று மனைவி-துணைவி பற்றி விவரிக்க வேண்டிய அவசியல் இல்லை. இந்நிலையில் எல்லோருக்கும் தெரிந்த, அறிந்த, புரிந்த ஜெயலலிதா உயர்ந்தது, ஒரு உதாரணமாகத் திகழ்கிறது.

கரு-இந்திராவை வசை பாடியது- மாத விடாய்ஜெயலலிதாவும், கரண் தாபரும்: ஆங்கிலம் மற்றும் இந்து மொழிகள் தெரிந்ததால், ஜெயலலிதாவுக்கு தேசியத் தலைவர்களுடன் நேரில் சந்தித்துப் பேசும் வசதியும் இருந்தது. கரண் டாபருடன் நடந்த பேட்டி திகைக்க வைத்தது, ஜெயலலிதாவின் பேச்சுத் திறமை, கேள்விகளை எதிர்கொள்ளும் திறமை, தாபரையே அதிர வைத்த ஆளுமை முதலியன படித்தவர்களையே சிந்திக்க வைத்தது. எதிரிகள் கூட பாராட்ட ஆரம்பித்தனர். பலமொழிகளில் நடித்த அனுபவத்தை ஜெயலலிதா அரசியலில் நன்றாகவே பயன்படுத்திக் கொண்டார். அந்நிலையில், ஜெயலலிதா உட்கார்ந்த இடத்தில் சசிகலா உட்காருவது என்பது எப்ப்டி பட்டது என்பது சொல்ல வேண்டிய் அவசியம் இல்லை. இருவரும் பெண்கள் தான், இருப்பினும் வித்தியாசங்கள் பலப்பல உள்ளன.

dravidian-leaders-jaya-with-evr-and-karunanidhiஜெயலலிதாவை சதாய்த்த திராவிடத் தலைவர்கள்: திராவிடத் தலைவர்களின் ஆபாச வசைகளினால் தூற்றப்பட்ட போது, மக்கள் உள்ளுக்குள்ளே கொதித்தனர். ஊழல் என்பது, திராவிடத்துவ அரசியலோடுப் பின்னிப்பிணைந்ததாலும், எல்லோருக்கும் அதைப்பற்றி நன்றாகவே தெரிந்திருந்ததாலும், ஊழல் வழக்குகள் அவர் மீது போடப்பட்டபோது, அதிகமாக பாதிப்பு ஏற்படவில்லை. மாறாக, கருணாநிதி மற்றும் சுப்ரமணியன்ஸ்வாமி, அவரை சதாய்த்து, கஷ்டப்படுத்துவதாகவே மக்கள் நினைத்தனர். சட்டசபையில் ஜெயலலிதா தாக்கப்பட்டபோது, “திரௌபதி துகிலுரித்த நிகழ்ச்சி” போன்றநிலை, மக்களை அதிகமாகவே பாதித்தது. நிச்சயமாக திமுகவினர் “கௌரவர்களாகி”, கருணாநிதி, “துச்சாதனன்” ஆகி, தோல்வியை சந்திக்க வேண்டியதாயிற்று. “எனக்கும் மூன்று துணைவியர் இருக்கிறார்கள், பெண்களைப் பற்றி எனக்கும் தெரியும்”, என்றெல்லாம் கருணாநிதி வசனம் பேசினாலும், மக்களிடம் அது எடுபடவில்லை. “முரசொலியில்” கருணாநிதியின் தூஷணம் எப்பொழுதும் இருந்து கொண்டே இருந்தது. சமீபத்தில் கூட “பாப்பாத்தி” என்றெல்லாம் ஏகவசனத்தில் தேர்தல் பிரச்சாரங்களில் பேசியது, நிச்சயமாக தமிழகப் பெண்களுக்குப் பிடிக்கவில்லை.

jaya-with-sonia-and-subramanian-swamyசுப்ரமணியன்சுவாமி, ஜெயலலிதாவைதிராவிடத் தலைவியாகமாற்றியது: “உள்ள சூத்திர ஆட்சியைக் காப்போம்மென்று சுவரொட்டிகளை ஒட்டியதை நினைவு கொள்ள வேண்டும். கருணாநிதி, “மறுபடியும் ஆரிய அம்மையார் பதவிக்கு வந்துவிடுவார்” என்றெல்லாம் எச்சரிக்கை ஓலமிட்டது ஞாபகத்தில் கொள்ள வேண்டும். “தமிழகத்தை தமிழன் தான் ஆளவேண்டும்” போன்ற கூக்குரல்களை எல்லாம் மீறித்தான், தமிழகத்தை தமிழர்-அல்லாதவர்கள் ஆட்டிப் படைத்தார்கள், ஆண்டார்கள் என்று, தனித்தமிழ்த்துவ, தமிழ்வெறித்துவப் பிரிவினைவாதிகள் பேசியும், எழுதியும் வந்த நிலை. ஆனால், “எல்லோரும் திராவிடர்கள்” என்பதை, ஆந்திரா தனி மாநிலம் ஆகியபோதும், கேரளா ஒப்புக் கொள்ளாத போதும், கர்நாடகா காவிரி விசயத்திலும் தோலுரித்துக் காட்டியது. அந்நிலையில், பிராமணரான, தமிழரல்லாத ஜெயலலிதா, முற்றிலும் திராவிடத்துவப் படுத்தப் பட்ட காரியத்திற்கு, இன்னொரு பிராமணரான, சுப்ரமணியன்சுவாமி காரணமானார். அவர் போட்ட வழக்குகள், ஜெயலிதாவைத் தனிமைப் படுத்தி, “திராவிடத் தலைவி”யாக்கியது!

anti-brahmin-jaya-criticismஊழல்காரணி ஜெயலலிதாவை பாதிக்காதது: ஊழலில் திளைத்த திமுக 1970களிலேயே வழக்குகளில் சிக்கிக் கொண்டது. கருணாநிதி, “ஊழலின் மறு உருவம்” போன்று சித்தரிக்கப் பட்டார். “இந்திரா-கருணாநிதி” கூட்டு அவ்வாறே முரண்பாடாகக் கருதப் பட்டது. “சோனியா-கருணாநிதி” கூட்டோ பாதாளத்தில் தள்ளி விட்டது. இரண்டு தீமைகள் இருக்கும் போது, பெரியது எடு, சிறியது எது அல்லது, எதனால் அதிக அளவு பாதிப்பில்லை என்று பார்த்து தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற நிலையிலும், ஜெயலலிதா தனித்து நின்றார். “தமிழகத்தை இனி ஆண்டவன் கூட காப்பாற்ற முடியாது”, என்று ரஜினிகாந்த சொன்னது, நாத்திகரான கருணாநிதிக்கு, ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.

jaya-cho-nexus-againat-sasikalaபெண்களை அடக்கும், திட்டும், தூசிக்கும் திராவிடத் தலைவர்கள்: பெரியார் முதல் கருணாநிதி வரை என்னத்தான் “பகுத்தறிவு” என்றெல்லாம் பேசினால் கூட, அவர்களின் பலதார திருமணங்கள், தொடர்புகள், மக்களை அவர்கள் பெண்களை அடக்கியாள்பவர்களாகத் தான் சித்தரித்தது. பெரியார் தன்னைவிட இளைவரான மணியம்மையை திருமணம் செய்து கொண்டதை அண்ணா போன்ற தலைவர்களே வெளிப்படையாக எதிர்த்தனர், மற்றும் “கண்ணீர் துளிகளாக” திமுக உதயமாக காரணமாகியது. “நான் முற்றும் துறந்த முனிவனும் இல்லை, அவள் படி தாண்டா பத்தினியும் இல்லை”, என்றெல்லாம் பேசினாலும் கூட, அண்ணாவுக்கு குழந்தையில்லை என்பதனால் மக்களுக்கு இரக்கம் ஏற்பட்டது. இதே நிலைதான் எம்ஜியாருக்கும். பலதாரம் புரிந்த எம்ஜியார், இதனால் கண்டுகொள்ளவில்லை எனலாம். ஆனால், வீரமணியை, மணியம்மையை சொத்துக்காக அடக்கி வைக்கும் நபராகத்தான் கருதினர். கருணாநிதியின் முத்தார-மூன்று மனைவி-துணைவி பற்றி விவரிக்க வேண்டிய அவசியல் இல்லை. இந்நிலையில் எல்லோருக்கும் தெரிந்த, அறிந்த, புரிந்த ஜெயலலிதா உயர்ந்தது, ஒரு உதாரணமாகத் திகழ்கிறது.

© வேதபிரகாஷ்

15-01-2017

admk-sucession-wars

[1] தமிழ்.ஒன்.இந்தியா, பிளவை உருவாக்கும் ஆரிய சக்திகளிடம் எச்சரிக்கையாக இருக்க அதிமுகவுக்கு வீரமணி அட்வைஸ் ! By: Karthikeyan, Updated: Thursday, December 8, 2016, 22:45 [IST]

[2] http://tamil.oneindia.com/news/tamilnadu/k-veeramani-allegation-on-bjp-269339.html

[3] The Hindu, Jayalalitha move to appease partymen, Tuesday, August 22, 2000.

[4] Addressing partymen after releasing two books authored by former chairman, V.R. Nedunchezhiyan, Ms. Jayalalitha said, “none of those who hold the organisation as greater than themselves would be let down”. Quoting Nedunchezhiyan, she said those who had left the party were like droplets outside the ocean. “Once outside the ocean, the droplets cannot claim to be the ocean,” she said. While the AIADMK had faith in the people, its opponents believed in conspiracy. “The day is not far off when we will usher in MGR rule again.” Ms. Jayalalitha made a veiled attack on the ruling party saying those who had hurt Anna while he was alive were now claiming to be his followers.

http://www.thehindu.com/2000/08/22/stories/04222233.htm

[5] தமிழ்.ஒன்.இந்தியா, சமூக நீதி காத்த ஜெ.-வீரமணி புகழாரம், Published: Sunday, September 23, 2001, 5:30 [IST].

[6] http://tamil.oneindia.com/news/2001/09/23/veeramani.html

ஆரிய-திராவிட போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது, தொடர்கிறது – வீரமணியின் புலம்பல் – ஜெயலலிதாவுக்கு முன்பும்-பின்னும் (4)

ஜனவரி 15, 2017

ஆரியதிராவிட போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது, தொடர்கிறது  – வீரமணியின் புலம்பல்ஜெயலலிதாவுக்கு முன்பும்பின்னும் (4)

deepa-assertive

தீபாவை இயக்குவது பாஜக என்கிறீர்களா?: சசிகலாவை எதிர்க்க வலிமையான தலைவர்கள் இல்லாத நிலையில் உறவு என்ற பெயரில் தீபாவை பாஜக மறைமுகமாகத் தூண்டி வருகிறது.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நடக்கும் சம்பவங்கள் இதை உறுதிப்படுத்துகின்றன. ஜெயலலிதாவின் உறவினர் என்பதைத் தவிர தீபாவுக்கு எந்தத் தகுதியும் இல்லை. ஆனால், சசிகலா கடந்த பல ஆண்டுகளாக ஜெயலலிதாவுடன் இருந்து அவரது அரசியல் வியூகங்களை உணர்ந்தவர். அது செயல் வடிவம் பெற பெரும் பங்காற்றியவர். எனவே, தீபாவுடன் சசிகலாவை ஒப்பிடுவதே பெரும் தவறு.

தமிழக பிஜேபியிலும் ஜாதி அரசியல் உள்ளது என்பது நிதர்சனம். ஆகவே, தீபாவை பிஜேபி ஆதரிக்கிறது என்பது பொய். அதிமுகவில் உள்ள அதிருப்தியாளர்கள், சசிகலாவின் எதேச்சதிகாரத்தை-சசிகலா-குடும்ப ஆட்சியை எதிர்ப்பவர்கள், எம்.ஜி.ஆர்-ஜெயலிதா அபிமானிகள் தான் தீபாவை ஆதரிக்கின்றனர். இது வெளிப்படையான உண்மை.

 j-jayakumar-marriage-in-1972-jaya-can-be-seen

ஜெயலலிதா மறைவால் தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக பாஜக தலைவர்கள் பேசி வருகிறார்களே?: ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு முதல்வராக ஓ.பன்னீர் செல்வமும், அதிமுக பொதுச்செயலாளராக சசிகலாவும் பதவியேற்றுள்ளனர்.

எனவே, தமிழக அரசியலில் வெற்றிடம் எதுவும் இல்லை. உண்மையில் வெற்றிடம் இருப்பது ஆளுநர் மாளிகையில்தான். முதலில் அந்த வெற்றிடத்தை நிரப்பிவிட்டு அரசியல் வெற்றிடம் பற்றி பாஜகவினர் பேசட்டும். மிகப்பெரிய மாநிலமான தமிழகத்துக்கு தனியாக ஒரு ஆளுநரை நியமிக்காமல் இருப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.

கருணாநிதிக்கு உடல்நிலை சரியில்லை, ஸ்டாலினோ அரசியல் மற்றும் இதர விசயங்களில் பலமானவரோ, முதிர்ச்சியுள்ளவரோ இல்லை. ஜெயலலிதா இல்லாமல் இருந்தும், திமுகவினரால் ஒன்றும் செய்து விட முடியாது. உண்மையில், திமுக தனது பணபலத்தால், அதிமுகவை உடைக்க முடியும், ஆனால், ஸ்டாலின் முதல்வர் ஆக முடியாது. இதுதான் பிரச்சினை.

deepa-i-will-enter-politics-with-pande

பாஜகவுக்கும், அதிமுகவுக்கும் கொள்கை ரீதியான வேறுபாடுகள் இல்லை என மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறியிருக்கிறாரே?: இப்படி பேசுவதும்கூட பாஜகவின் சதித் திட்டத்தின் ஓர் அங்கம்தான். ஜெயலலிதாவுக்கு கடவுள், மத நம்பிக்கை இருந்ததால் மட்டும் அதிமுக இந்துத்துவ கட்சியாகி விடாது.

இட ஒதுக்கீடு, சமூகநீதி, இந்தி எதிர்ப்பு என திராவிட இயக்கக் கொள்கைகளை என்றுமே அதிமுக விட்டுக் கொடுத்ததில்லை. இன்றும் மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்க நிகழ்ச்சியை அதிமுக நடத்துகிறது. பெரியாருக்கு விழா எடுக்கிறது. இதுவெல்லாம் பாஜகவின் கொள்கைகள்தானா என்பதை வெங்கய்ய நாயுடுதான் விளக்கவேண்டும். ஜெயலலிதா பார்ப்பனராக இருந்தாலும், பார்ப்பனர் கட்சியாக அதிமுகவை நடத்தவில்லை.

செக்யூலரிஸம் என்ற ரீதியில், இவருக்கு கொஞ்சம் கூட நம்பிக்கையில்லை என்பதை எடுத்துக் காட்டியுள்ளார். இந்து-எதிர்ப்பு நாத்திகத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். இவற்றுடன் தான் அந்த பார்ப்பன-எதிர்ப்பும் வருகிறது. காலத்தின் கட்டாயத்தில், பிஜேபியும் அதையெல்லாம் செய்து வருகிறது. ஒருவேளை ஆட்சிக்கு வந்தால், அவற்ரையெல்லாம் “திராவிட பாரம்பரியப்படி” செய்யும். இப்பொழுது “ஜல்லிக்கட்டுக்கு” ஜால்ரா போடுவதும் அந்த விதத்தில் தான்.

deepa-who-supports-her

ஜெயலலிதாவுக்காக அதிமுகவுக்கு வாக்களித்தவர்கள், இனி பாஜகவுக்கு வாக்களிப்பார்கள் என்றும் வெங்கய்ய நாயுடு கூறியிருக்கிறாரே?:

அவர் தனது ஆசையை கூறியிருக்கிறார். அதிமுக தொண்டர்கள் திராவிட இயக்கக் கொள்கைகளை ஏற்றுக் கொண்டவர்கள். அதனால்தான் எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் அதில் உறுதியாக நின்றனர். எனவே, அதிமுகவுக்கு வாக்களித்தவர்கள் ஒருபோதும் பாஜகவுக்கு வாக்களிக்க மாட்டார்கள். சமூகநீதிக்கு எதிரான மனநிலை கொண்ட பாஜகவை தமிழர்கள் ஏற்கமாட்டார்கள்.

அதிமுக-பிஜேபி கூட்டு என்பது, திமுக-பிஜேபி கூட்டு போன்றது. அப்பொழுது, திமுககாரர்கள் பிஜேபிக்கு ஓட்டுப் போடவில்லையா அல்லது ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் டி.ஆர்.பாலு போன்றோருக்கு வேலை செய்யவில்லையா? வீரமணி இவ்வாறு பிதற்றுவது வேடிக்கையாக இருக்கிறது, மற்றும் அவரது பய்த்தை வெளிப்படுத்துகிறது.

deepa-who-supports-her-admk-disgruntlers

50 எம்.பி.க்களை வைத்துள்ள அதிமுகவை பாஜக பகைத்துக் கொள்ளும் என நினைக்கிறீர்களா?:

நாடாளுமன்றத்தில் 50 எம்.பி.க் களுடன் பாஜக, காங்கிரஸுக்கு அடுத்து 3 ஆவது பெரிய கட்சியாக அதிமுக உள்ளது. இந்த அசுர பலத்துக்கு முன்பு எந்த அதிகாரமும், அச்சுறுத்தலும் சாதாரணம் என்பதை ஜெயலலிதா நிரூபித்து வந்தார். இதை உணர்ந்து இன்றைய அதிமுக தலைமை செயல்பட வேண்டும். குடியரசுத் தலைவர் தேர்தலில் அதிமுகவின் தயவு பாஜகவுக்கு தேவை. இந்தச் சூழலை அதிமுக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஜி.எஸ்.டி விவகாரத்தில் தான் பிஜேபி பயந்து வந்த்து. ஜெயலலிதா மறிந்து விட்டதால் தான் மோடி, சசிகலா தலைமீது கைவைத்து, நடராசனுடன் பேசினார். இவர்கள் ஆதரவு இருந்தாலும், இல்லாவிட்டாலும், சட்டம் அமூலுக்கு வரும். ஆகவே, 50 எம்பிக்களை வைத்து, பாராளுமன்றத்தில் இனி பாட்டு பாடுவதை விடுத்து, மற்றவர்களுடன் சேர்ந்து கொண்டு கலாட்டா செய்யலாம்.

jayas-death-created-a-vacuum-in-the-dravidian-polity

அதிமுக திராவிடக் கட்சி என்பதை திராவிட இயக்கத்தினரே ஏற்பதில்லை. ஆனால், நீங்கள் தாய்க் கழகம் என்ற முறையில் சசிகலாவுக்கு வேண்டு கோள் விடுப்பதாக கூறியுள்ளீர்களே?:

எங்களைப் பொறுத்தவரை அதிமுகவும் திராவிட கட்சிதான். திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கை யான இட ஒதுக்கீடு, சமூக நீதியில் அதிமுக உறுதியாக உள்ளது. 31 சதவீத இட ஒதுக்கீடு 68 சதவீதமாக உயர அதிமுகவே காரணம். வைகோ எடுக்கும் முடிவுகளில் எங்களுக்கு உடன்பாடு இல்லை என்றாலும் மதிமுகவும் திராவிடக் கட்சிதான்.

குழப்பத்தில் உள்ள வீரமணிக்கு, திராவிடத்துவத்தை உயிரூட்ட திட்டம் போடுகிறார் போலும். இடவொதிக்கீடு பேசியே, தமிழகத்தை ஆண்டுவிட முடியாது, ஊழலைப் பற்றி பேசாதது, திராவிடத்துவத்தின் பலவீனத்தை வெளிப்படுத்துகிறது. ஊழல் வழக்குகளில் சிக்கியதால் தான் சசிகலா-ஜெயலிலதா மாட்டிக் கொண்டனர், சிறை சென்றனர். வழக்குகளும் நிலுவையில் உள்ளன.

 deepa-at-jayas-tomb-marina

திமுகவை மட்டும் ஆதரித்து வந்த நீங்கள், இப்போது அதிமுகவையும் ஆதரிக்கிறீர்கள். இரு கட்சிகளையும் ஒன்றாகவே கருதுகிறீர்களா?:

திமுக, அதிமுக இரண்டும் திராவிடக் கட்சிகள். ஒரு தாயின் வயிற்றில் பிறந்த அண்ணன் – தம்பி போன்ற இயக்கங்கள். எதிரிகளுக்கு இடம் கொடுக்காமல் இந்த இயக்கத்தில் ஒன்று ஆளுங்கட்சியாகவும், மற்றொன்று எதிர்க்கட்சியாகவும் இருப்பதே பெரியார் கொள்கைகளுக்கு கிடைத்த வெற்றியாகும். எந்த ஆட்சியாக இருந்தாலும் நல்லது செய்தால் பாராட்டுவோம். கொள்கைப் பாதையிலிருந்து விலகிச் சென்றால் தவறுகளை சுட்டிக் காட்டுவோம்”, இவ்வாறு கி.வீரமணி கூறினார்[1].

திராவிடத்துவவாதிகள் எப்படியெல்லாம் பொய் சொல்வார்கள் என்பதற்கு, இவர் தான் உதாரணம். பெரியார் சொன்ன “கண்ணீர் துளிகள்”, மற்றும் நெடுஞ்செழியன் குறிப்பிட்ட “கடல்நீர் துளிகள்” முதலியவற்றை மறைத்துப் பேசுவது வீரமணியின் கைவைந்த கலை. ஊழலின் ஊற்று, சமுத்திரம் என்றெல்லாம் அதிமுக-திமுக வர்ணிக்கப் பட்டது, அப்பொழுது, அதற்கு காரணம் திகதானே? பிறகு இவர்களுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது, “தவறுகளை சுட்டிக் காட்டுவோம்” என்பதற்கு?

© வேதபிரகாஷ்

15-01-2017

jaya-sasi-deepa-all-together-1992

[1] எம். சரவணன் நன்றி: ‘தி தமிழ் இந்து’ 13.1.2017

ஆரிய-திராவிட போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது – வீரமணியின் புலம்பல் – ஜெயலலிதாவுக்கு முன்பும்-பின்னும் (3)

ஜனவரி 15, 2017

ஆரியதிராவிட போராட்டம் நடந்து கொண்டிருக்கிறதுவீரமணியின் புலம்பல்ஜெயலலிதாவுக்கு முன்பும்பின்னும் (3)

Jaya blessing prostratedதிராவிடத்துவவாதிகளின் முரண்பாடு: திராவிட அரசியல்வாதிகள், சித்தாந்திகள், பேச்சாளிகள், எழுத்தாளர்கள் என்றெல்லாம் உள்ளவர்களுக்கு, உறுதியான கொள்கையோ, சித்தாந்தத்தில் பிடிப்போ, பேச்சில் ஸ்திரமோ இல்லாதவர்களாகத்தான் இருக்கிறார்கள். “சுயமரியாதை” என்றெல்லாம், பீழ்த்திக் கொண்டாலும், மரியாதை இல்லாமல், வெட்கம், மானம், சூடு, சொரணை இல்லாமல் நடந்து வந்துள்ளார்கள். ஒருவரையொருவர் வசைப்பாடிக் கொண்டு, கட்டித் தழுவி வேடமிட்டு நடித்துள்ளார்கள். சினிமாமாவும், அரசியலும் ஒன்றாக வைத்து வியாபாரம் செய்து பிழைத்த கூத்தாடிகளுக்கு அதெல்லாம் இல்லை என்பதால், முரண்பாட்டைப் பற்றியும் கவலைப் படவில்லை. பிரமாணரான ஜெயலலிதாவின் நிலை திராவிட அரசியலில் அப்படித்தான் இருந்தது. திராவிட அரசியல்வாதிகள் அவரை நன்றாகப் பயன்படுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. அதிலும், முதலமைச்சாரக் இருந்த காலத்தில், அவரை வசைப்பாடியவர்கள் எல்லோரும் அவரது கால்களில் வந்து விழுந்தார்கள். வீரமணியும் விலக்கல்ல.

jayalalita-aasaultedபாப்பாத்தி-ஜெயலலிதாவை வசைவு பாடிய திராவிடர்கள், புகழ்வது-போற்றுவது: ஜெயலலிதாவை நேரிலும், மறைமுகமாகவும், ஊடகங்களிலும், மேடைப் பேச்சுகளிலும், கொச்சையாக, கேவலமாக, பெண் என்று கூட பார்க்காமல் விமர்சித்துள்ளார்கள். வயது முதிர்ந்த நிலையில் இருந்த மூப்பனார் முதல், இருக்கும் கருணாநிதி வரை அவ்வாறுதான் பேசியுள்ளனர். அது, வெறும் “ஆணாதிக்கம்” என்ற முறையில் இல்லை, மிக அருவருப்பான திராவிட பாரம்பரியத்தில் ஊறிய நிலையில் வெளிப்பட்ட வார்த்தைகள், வசைவுகள் மற்றும் தரமற்ற விமர்சனங்கள். “பாப்பாத்தி” என்று தாராளமாக பேசி, எழுதி வந்துள்ளதை, அவர்களது அங்கீகாரத்தில், அவர்களே ஆசிரியர்கள் என்று வெளிவரும் “விடுதலை”, “முரசொலி” முதலியவற்றில் தாராளமாகப் பதிவாகியுள்ளது. ஆராய்ச்சியாளர்கள் தாராளமாக பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். இவ்விசயத்தில் வீரமணியும் சளைத்தவர் அல்ல. இருப்பினும், திகவிற்கு ரூ. ஐந்து லட்சம் நிதி வாங்கியபோதும், இடவொதிக்கீடு விசயத்திலும், “சமூகநீதி காத்த வீராங்கனை” என்று பாராட்டி தப்பித்துக் கொண்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.

deepa-posing-as-jayaதீபாவை ஆதரிப்பது-எதிர்ப்பது “ஆரிய-திராவிட போராட்டமா?: இப்பொழுது, தீபா என்ற ஐய்யங்கார் பாப்பாத்தியை தூக்கிப் பிடித்து, அவரை தலைவராக்கி விட்டால், மறுபடியும், திராவிடர்கள் பாப்பாத்திக்கு அடிமையாக நேரிடும் என்ற நோக்கில், பழைபடி “நடப்பது ஆரியர் -திராவிடர் போராட்டமே!” என்று ஆரம்பித்துள்ளார். முன்பு ஜெயலைதா, அதிமுகவின் தலைமை ஏற்றபோதும், முதலமைச்சர் ஆனபோதும், “ஆரிய-திராவிட போராட்டம் ஆரம்பித்து விட்டது” என்று குறும்புத்தகம் எல்லாம் வெளியிட்டார், “விடுதலை”யில் எழுதினார். இன்றும், அதே பல்லவியைப் பாட ஆரம்பித்துள்ளார். போதாகுறைக்கு, இன்று பிஜேபி தமிழகத்தில் பேசப்பட்டு வருகிறது. மத்தியிலும் பெரும்பான்மையுடன் ஆட்சியில் உள்ளதால், திராவிட கட்சிகளின் தாக்கம் குறைந்து விடுமோ, திராவிடம் மறைந்து விடுமோ என்ற அச்சம் வந்து விட்டது. அதனால், மறுபடியும், பார்ப்பனீய எதிர்ப்பு, வசைவு என்று ஆரம்பித்து விட்டார் எனலாம்.

aryan-dravidian-war-started-about-deepa-veeramaniதி இந்துவுக்குதிக வீரமணியின் பேட்டி (13-01-2017)[1]: சென்னை, ஜன.13, 2017 அன்று, நாட்டில் நடப்பது ஆரியர் – திராவிடர் போராட்டமே என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி. இந்து (தமிழ்) (13.1.2017) ஏட்டுக்கு அவர் அளித்த பேட்டி வருமாறு, என்று “விடுதலை”யில் பெருமையாக வெளியிட்டுக் கொண்டார்.” சசிகலாவை வீழ்த்துவதற்காக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவை பாஜக தூண்டி விடுகிறது என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக ‘தி இந்து’வுக்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டி, பின்வருமாறு[2]. வழக்கம்போல, இடது பக்கத்தில் வீரமணியில் பதில் மற்றும் வலது பக்கத்தில் என்னுடைய விளக்கம், விமர்சனம் சேர்க்கப்பட்டுக் கொடுக்கப்பட்டுள்ளது.

aryan-dravidian-war-started-about-deepa-vs-sasikalaஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலாவுக்கு நீங்கள் ஆதரவு தெரிவிப்பது ஏன்?: என்ன காரணத்துக்காக சசிகலா எதிர்க்கப்படுகிறாரோ, அதற்காகவே அவரை திராவிடர் கழகம் ஆதரிக்கிறது. எம்ஜிஆருக்கும், ஜெயலலிதாவுக்கும் கடவுள் நம்பிக்கை இருந்தது.

ஆனாலும், திராவிட இயக்கத்தின் அடிப்படை கொள்கைகளுக்கு எதிராக அவர்கள் செயல்பட்டதில்லை. இந்த இருவரின் ஆட்சியில்தான் 31 சதவீத இட ஒதுக்கீடு 68 சதவீதமாக உயர்ந்தது. அவர்கள் வழியில் அதிமுகவை வழிநடத்த பார்ப்பனர் அல்லாத பிற்படுத்தப்பட்ட சமுதாயத் தைச் சேர்ந்த சசிகலாவால் முடியும் என நம்புகிறோம். “ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலாவுக்கு ஆதரவு” என்பதை கேட்டவரும், பதில் சொன்னவரும் எப்படி புரிந்து கொண்டாரோ தெரியவில்லை. ஆனால், திக உயர்ஜாதி ஆதிக்கத்தை ஆதரிக்கிறது என்பது தெரிகிறது. அதுதான், பெரியாரின் கொள்கையாகவும் இருந்தது. தாழ்த்தப்பட்ட மக்களைப் பற்றி கவலைப் படவில்லை.

i-am-the-sucessor-of-jayalalita-deepaபிராமணர் அல்லாதவர் என்பதுதான் உங்களது அளவுகோலா?[3]: பார்ப்பனர் அல்லாதவர் என்பதால் மட்டும் சசிகலாவை ஆதரிக்கவில்லை.

ஜெயலலிதாவின் நிழலாக அவரது வாழ்விலும், தாழ்விலும் 33 ஆண்டுகள் உற்ற துணையாக இருந்தவர். ‘இந்தியாவில் என்றுமே அரசியல் போராட்டங்கள் நடைபெற்றதே இல்லை. நடப்பவை அனைத்தும் ஆரிய – திராவிட இனப் போராட்டமே’ என்பார் பெரியார். இப்போதும் அதுதான் நடக்கிறது. ஜெயலலிதாவின் மறைவால் ஏற்பட்ட சூழலை பயன்படுத்தி குறுக்கு வழியில் தமிழகத்தில் காலூன்ற பாஜகவும், ஆர்.எஸ்.எஸ்.ஸும் திட்டமிடுகின்றன. இதை முறியடிக்கவே சசிகலாவை ஆதரிக்கிறோம்[4]. ஆக திராவிட உயர்ஜாதி ஆதிக்க அரசியலை மறைக்க, பார்ப்பன எதிர்ப்பு உபயோகப் படுகிறது. ‘நடப்பவை அனைத்தும் ஆரிய – திராவிட இனப் போராட்டமே’, என்ற செல்லாத, சரித்திர ஆதாரமில்லாத கொள்கையை வைத்துக் கொண்டு தான், திராவிட சித்தாந்திகள் காலந்தள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது. உழைப்பில்லாம, மக்கள் ஆதரவு இல்லாமல் தமிழகத்தில் பாஜக, ஆர்.எஸ்.எஸ் அல்லது யாரும் காலூன்ற முடியாது. அதேபோல, காலாவதியான, உபயோகமற்ற சித்தாந்தங்களையும் மக்கள் தூக்கி எரிந்து விடுவர் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.

amma-imitating-game-posters-etcதமிழகத்தில் 2 சதவீத வாக்கு வங்கியைக் கொண்ட பாஜகவால் 40 சதவீத வாக்கு வங்கியைக் கொண்ட அதிமுகவை கபளீகரம் செய்துவிட முடியுமா?: மத்தியில் அதிகாரத்தில் உள்ளவர்கள் நினைத்தால் முடியும் என்பதே கடந்தகால வரலாறு.

அருணாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட் போல தமிழகத்திலும் குழப்பத்தை ஏற்படுத்த பாஜக திட்டமிடுகிறது. தமிழகத்தில் காலூன்ற என்ன செய்யலாம் என்பது குறித்து பாஜக தலைவர்களுடன் அமித்ஷா ஆலோசனை நடத்தியதாக செய்திகள் வருகின்றன. சசிகலாவை வீழ்த்துவதற்காக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாமூலம் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். அதிமுக எம்.எல்.ஏக்கள் பிஜேபியில் சேருவார்களா, பிஜேபிகாரர்கள் ஒப்புக் கொள்வார்களா? அமித்ஷா என்ன அந்த அளவுக்கு முட்டாளா? இதையெல்லாம் மறைத்து, வீரமணி “பூச்சி” காட்டுவது வேடிக்கையாக இருக்கிறது. மக்கள் பலம், ஆதரவு, ஓட்டுவிகிதம் முதலியவை மற்றும் திராவிடத்துவத்தின் காலாவதித்தனம், இவைதான் தமிழகத்தின் அரசியலை தீர்மானிக்கும்.

 

© வேதபிரகாஷ்

15-01-2017

i-am-the-sucessor-of-jayalalita-deepa-competitor-poster

[1] தி.இந்து, தமிழகஅரசியலில் வெற்றிடம் இல்லை; சசிகலாவை வீழ்த்த தீபாவை தூண்டிவிடும் பாஜக: கி.வீரமணி சிறப்பு பேட்டி, எம். சரவணன் Published: January 13, 2017 09:44 ISTUpdated: January 13, 2017 09:46 IST

[2]http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/article9477436.ece

[3] விடுதலை, நடப்பது ஆரியர் -திராவிடர் போராட்டமே! இந்து (தமிழ்) ஏட்டுக்குத் தமிழர் தலைவர் பேட்டி, வெள்ளி, 13 ஜனவரி 2017 14:57

http://viduthalai.in/e-paper/136299.html

[4] http://viduthalai.in/e-paper/136299.html

அண்ணா நூலகத்தை எடுத்தே தீருவேன் என்கிற நாள்தான் கருணாநிதி தீக்குளிக்கும் நாளாக இருக்கும்!

மார்ச் 19, 2012

அண்ணா நூலகத்தை எடுத்தே தீருவேன் என்கிற நாள்தான் கருணாநிதி தீக்குளிக்கும் நாளாக இருக்கும்

தில்லை நடராஜனையும், ஶ்ரீரங்கநாதனையும் பீரங்கி வைத்து பிளப்பது எந்நாளோ, அந்நாளே பொன்னாள்” என்று அண்ணா பேசி தமிழர்களை ஏமாறியது போல, இன்று கருணநிதி இப்படி பேசி ஏமாற்றப் பார்க்கிறார்.

திராவிடம் என்பது செல்லாக் காசாகி விட்டது எனலாம். 1960களில் காணப்பட்ட வெறி அடங்கி விட்டது, ஏனெனில் மக்கள் உண்மையை அறிந்து கொண்டு விட்டார்கள். ஆரியர்-திராவிடர் என்று பேசுவதை யாரும் இனி நம்பமாட்டார்கள், ஏனெனில் கருணாநிதியே தனது குடும்பத்தில் பல ஆரிய / பிராமணப் பெண்களை மறுமகள்காக வைத்திருக்கிறார்.

இப்பொழுது இத்தகைய பேச்சுகளை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்றாலும், அத்தகைய பித்து அல்லது வெட்டிப் பேச்சு எப்படி ஒரு வயதான, பொறுப்பான, முதல்வர் பதவி வகித்த மனிதரிடத்திலிருந்து வருகிறது என்பதுதான் கவனிக்க வேண்டிய விஷயமாகிறது. அண்ணா நூலகத்தை எடுத்தே தீருவேன் என்கிற நாள்தான் கருணாநிதி தீக்குளிக்கும் நாளாக இருக்கும்”, என்று பேசியது அந்த தோரணையில் தான் உள்ளது.

தேர்தல் கூட்டத்தில் தீக்குளிப்பு ஒப்பாரி: திருமணத்தில் அரசியல், அரசியலில் சினிமா, சினிமாவில் சித்தாந்தம், சித்தாந்தத்தில் பிரிவினைவாதம் என்று மாறி-மாறி பேசிவருவது இவர்களுக்கு கைவந்த கலை. ஆகவே, சென்னை அண்ணா நூலகத்தை மருத்துவமனையாக மாற்றியே தீருவேன் என்று சொல்லும் நாள்தான் கருணாநிதி தீக்குளிக்கும் நாளாக இருக்கும் என்றார் திமுக தலைவர் கருணாநிதி. சங்கரன்கோவிலில் திமுக வேட்பாளர் ஜவஹர் சூரியகுமாரை ஆதரித்து வியாழக்கிழமை இரவு நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் அவர் மேலும் பேசியது:

அண்ணா பெயரில் கட்சி வைத்துக் கொள்ள அருகதை இருக்கிறதா? “சென்னையில், நான் முதல்வராக இருந்தபோது, அண்ணா பெயரால் அமைத்த நூற்றாண்டு

இப்பொழுதெல்லாம் சில பெயர்கள் வியாபார சின்னம், வணிக முத்திரை, விற்பனை அடையாளம் போன்று ஆகி விட்டன. அம்பேத்கர் என்ற பெயரும், அவரது படமும் அப்படியாகி விட்டது. யார்-யாரோ உபயோகப் படுத்திகிறார்கள். அவர்களை கேட்கமுடிவதில்லை.

 நூலகத்தில் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. ஆசியாவிலேயே மிகப் பெரிய நூலகம் என்று பிரிட்டிஷ், ரஷிய நாட்டினர்களும் கூறுகிறார்கள். அண்ணா வாழ்ந்ததை எதிர்காலத்தினர் மத்தியில் பதிவு செய்வதற்காகதான் இந்த நூலகத்தை அமைத்தேன். ஆனால், அதை மருத்துவமனையாக மாற்றுவேன் என்று கூறுபவர்கள், அண்ணா பெயரில் கட்சி வைத்துக் கொள்ள அருகதை இருக்கிறதா?

அண்ணா நூலகத்தை எடுத்தே தீருவேன் என்கிற நாள்தான் கருணாநிதி தீக்குளிக்கும் நாளாக இருக்கும்: மருத்துவமனை கூடாது என்று கூறுபவன் அல்ல நான். ஆனால், வேண்டும் என்றே அதை மருத்துவமனையாக மாற்ற முயற்சிக்கிறார்கள். இது தொடர்பான வழக்கு தற்போது நடைபெறுகிறது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றம் வரைக்கும் போகலாம். நீதிமன்ற தீர்ப்புகள் வந்தாலும், அண்ணா நூலகத்தை எடுத்தே தீருவேன் என்கிற நாள்தான் கருணாநிதி தீக்குளிக்கும் நாளாக இருக்கும்.

எனது சூளுரைக்கு பலம் சேர்க்க திமுகவை ஆதரியுங்கள்: எங்களை ஆளாக்கியவர் அண்ணா. இளைஞர்களை அறிவாளியாக்கியவர் அவர். உலகம் என்றும் அவரை நினைத்துக்கொண்டிருக்கிறது. அவர் பெயரால் அமைத்த நூலகத்தை எடுத்தே

அண்ணா தமிழகத்தில் புகழ் பெற்றது மாறுபட்ட கால கட்டம் ஆகும். அதே போல எம்.ஜி.ஆர் இருந்தார். ஆனால், கருணாநிதிக்கு அத்தகைய தனிப்பட்ட சிறப்பான அடையாளம் கிடைக்கவில்லை. அதனால் தான், பெரியார், அண்ணா என்று பெயர்களை இக்காலத்திலும் சொல்லிக் கொண்டு மிரட்டி வருகிறார்.

 தீருவேன் என்று ஒரு பெண்மணி ஆக்ரோஷமாக கூறிவருகிறார். தேர்தல் மட்டும் எங்களுக்கு முக்கியம் அல்ல. அண்ணாவும் முக்கியம். அவரை உருவாக்கிய பெரியாரும் முக்கியம். அவர்களால் உருவாக்கப்பட்ட நாங்கள் தந்தைக்கும், தனயனுக்கும் செலுத்த வேண்டிய கடமைகள் உள்ளன. என்னை யாரும் தடுத்துவிட முடியாது. எங்கள் குறிக்கோளை நிறைவேற்றியே தீருவோம். அந்த குறிக்கோள் வலுப்பெற திமுகவுக்கு ஆதரவு தாருங்கள். எனது சூளுரைக்கு பலம் சேர்க்க திமுகவை ஆதரியுங்கள் என்றார் கருணாநிதி.

தமிழகத்தில் தீக்குளிப்பு கலாச்சாரம் திராவிட கட்சிகளின் பாரம்பரியமாக வளர்ந்து தொடர்ந்து வருகிறது: அதில் அரசியலும் உள்ளது. ஏனெனில், எந்த மனிதனும் தற்கொலை செய்து கொள்ள விரும்ப மாட்டான். அத்தகைய முடிவை எடுக்கும்

திராவிட பாரம்பரியத்தில் தீக்குளிப்பு என்பது வியாபாரமாகி விட்டது. 1960களில் இருந்த மனப்பாங்கு இப்பொழுது எந்த திராவிட தியாகியிடத்திலும் இல்லை. அதாவது, முன்பு போல உயிர் தியாகம் செய்ய யாரும் முன்வருவதில்லை. அவ்வாறு தயார் செய்யவும் முடிவதில்லை.

 மனிதன், விரைந்து தனது யுரிரை மாய்த்துக் கொள்ள விரும்புவான். தீக்குளித்து இறத்தல் என்பது ஒரு கொடுமையான இறப்பாகும். அதில் சிலர் இறக்காமல் தீக்காயங்களுடன் பிழைத்தும் உள்ளாரள். அவர்கள் நரக வேதனை அனுபவித்துள்ளார்கள். ஆகவே அதை உயர்வாக நினைப்பது, மதிப்பது மனிதத்தன்மைக்கு விரோதமானது. தீக்குளிப்பு என்ற தற்கொலை மிரட்டல் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தும் செயற்பாடு அல்ல, மிரட்டுவதிலும் குரூரத்தைக் காட்டும் தன்மையாகும். திமுக ஆட்சியில் சிலர் இந்தி திணிப்பை எதிர்த்து தீக்குளிக்க ஆரம்பித்தனர். அதை திமுக பிரமலமாக்கி தியாகமாகச் சித்தரித்தது. அதனால், சிலர் மனசலனம் உள்ளவர்கள், வாழ்க்கையை வேறு காரணங்களுக்காக வெறுத்தவர்கள், தீக்குளிக்க யத்தனித்தது மற்றும் உண்மையாகவே தீக்குளித்தது நிதர்சனமாக இருந்தது.

கருணாநிதியின் `தீக்குளிப்பு’ பேச்சு பற்றி டாக்டர் ராமதாஸ் கருத்து[1]: சமீப காலத்தில் திராவிட இயக்கத்தைப் பற்றி அதிக அளவில் விமர்சித்து வருகிறார் ராமதாஸ். கருணநிதியின் தீக்குளிப்புப் பற்றியும் கரடுமையாக சாடியுள்ளார். உண்மையிலே போராளியாக இருந்தால் தீக்குளிப்பேன் என்று கருணாநிதி சொல்லமாட்டார் என்று டாக்டர் ராமதாஸ் பேசினார். “திராவிட மாயை” கருத்தரங்கம் பா.ம.க. சார்பில் `திராவிட மாயை’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் சென்னை அண்ணாசாலை தேவநேய பாவாணர் நூலக கட்டிடத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி தலைமை தாங்கினார். கருத்தரங்கை தொடங்கி வைத்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

“திராவிட மாயை” கருத்தரங்கம்: “திராவிட மாயை” என்று கம்யூனிஸ்ட் தலைவர் ராமமூர்த்தி ஒரு புத்தகத்தை எழுதியுள்ளாற். அதற்குப் பிறகு, “திராவிடத்தால் வீழ்ந்தோம்” என்ற புத்தகத்தை வெளியிடப்பட்டது. இப்பொழுது அதே ராகத்தை இவர் பாடுகிறார்ள்: “திராவிட இயக்கங்கள் அதன் வழிதோன்றல்கள், ஈரோட்டில் படித்தவர்கள், பெரியாரின் சீடர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள், `நூற்றாண்டு

திராவிடம் என்பது மாயை என்றால், அதைச் சுற்றியிருக்கும் கருத்துகள், சித்தாந்தம், முதலியவையும் மாயைதான். கட்டுக்கதைதான். இருப்பினும் அதை வைத்துக் கொண்டு பிழைப்பு நடத்தலாம் என்று இனறும் சிலர் இருந்தால், அது அவர்களது பலவீனத்தைக் காட்டுகிறது.

 விழா’ எடுக்க கிளம்பிவிட்டார்கள். குறிப்பாக கலைஞருக்கு சில கேள்விகளை நான் கேட்டுத்தான் ஆகவேண்டும். பெரியார், சாதி ஒழிப்புக்கு பாடுபடுவதை ஒருகொள்கையாக கொண்டார். நீங்கள் அதிலே செய்த சாதனை என்ன? சாதியை ஒழிப்பதற்கு பதிலாக, சாதியை வளர்த்தீர்கள். பெரியாரின் சீடர் என்று சொல்லிக்கொள்ளும் கலைஞர் அவர்களே மதத்தை பற்றி இப்போது பேசத் தயாரா? இன்றைக்கு மதத்தை பற்றி உங்கள் கருத்துக்களை வெளியிடத் தயாரா? கடவுளை பற்றி நீங்கள் இப்போது பேசத் தயாரா? தமிழ்நாட்டை சீரழித்து ஆட்சியில் இல்லாதபோது, ஆரியர், திராவிடர் என்ற பேச்சு உங்கள் நாவிலே, எழுத்திலே வருகிறது. தென்னிந்திய நல உரிமை சங்கம், சுயமரியாதை இயக்கம், நீதிக் கட்சி என்று பல இயக்கங்களை பெரியார் ஏற்படுத்தினார். 45 ஆண்டு காலம் தமிழ்நாட்டை சீரழித்து சின்னாபின்னமாக்கிய ஆட்சியாளர்கள் திராவிட இயக்கத்தை சேர்ந்தவர்கள்தான். இவற்றை எல்லாம் திசை திருப்ப, திராவிட இயக்கம் என்று சொல்லிக்கொண்டு, அதற்கு நூற்றாண்டு விழா என்று சொல்லிக்கொண்டு, ஏமாற்றிக்கொண்டு இருக்கிறார்கள். இவற்றை எல்லாம் மக்களுக்கு தொடர்ந்து புரியவைத்துக்கொண்டு இருப்போம்.

“திராவிட” என்ற பெயரை எப்படி திராவிட கட்சிகள் புறக்கணிக்க முடியும்: “திராவிட” என்பதனை ஒரு வியாபார முத்திரை, வணிக சின்னம் போல உபயோகித்து மக்களை ஏமாற்றி வரும் கட்சிகள் எப்படி அதை எடுக்கும்? ஆனால் ராமதாஸ் தொடர்கிறார், “பெயரை மாற்றுங்கள் தமிழர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஈழத்தமிழர்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடுவோம். இலங்கையில் தனி ஈழம் அமைவதுதான்

திராவிட என்ற சொல்லை எந்த திராவிடக் கட்சியும் எடுக்க முடியாது. ஏனெனில், அவை அவ்வாறே பதிவு செய்துள்ளன. பெயர் மாற்றினால் இருக்கின்ற அடையாளமும் தெரியாமல் போய்விடும்.

 பிரச்சினைக்கு தீர்வு ஆகும். இதை நோக்கி நமது செயல்பாடுகள் இருக்கவேண்டும். முதலில் உங்கள் கட்சியின் பெயரை மாற்றிக்கொள்ளுங்கள். திராவிட என்று இருப்பதை, `தமிழர் முன்னேற்றக் கழகம்’ என்று மாற்றிக்கொள்ளுங்கள். கட்சி என்றால் கொள்கை வேண்டும். பெரியார் சில கொள்கைகளை முன்வைத்து, அதற்காக கடைசிவரை போராடினார். இப்போதாவது கொள்கையை சொல்லி தமிழ் மக்களிடம் வாருங்கள். தமிழ் மக்கள் இன்றைக்கு ஏமாற தயாராக இல்லை. செம்மொழியை பெற்றுவிட்டோம் என்று எல்லாம் சொல்லுகிறீர்கள், இன்றைக்கு தமிழ் வளர்வதற்கு என்ன முயற்சிகளை எடுத்திருக்கின்றீர்கள்?. முத்தமிழ் என்றால் இயல், இசை, நாடகம் என்று சொல்லுகிறார்கள். இவற்றில் எதை நீங்கள் வளர்த்தீர்கள்?.
தீக்குளிப்பேன் என்பது வெட்டிப் பேச்சு: 45 ஆண்டுகளாக உங்களின் திராவிட கட்சி ஆட்சியில் வளர்த்து எல்லாம் சாராயத்தை கொடுத்து, திரைப்பட மோகத்தை தந்து, மக்களை இலவசங்களுக்கு கைஏந்தவைத்தீர்கள். தமிழுக்கு நீங்கள் செய்த சாதனை என்ன? என்று பட்டியல் இடுங்கள். முடிந்தால் அதுபற்றி உங்களோடு விவாதிக்க தயாராக இருக்கிறேன். இப்போது கலைஞர் தீக்குளிக்கப்போவதாக சொல்லுகிறார்.

தமிழ் என்று சொல்லியும் பிழைத்துக் கொள்ள முடியாது. ஏனெனில் ஒரு புண்ணியவான் திருக்குறளை வைத்தே ஏமாற்றி கோடிகளை அள்ளியுள்ளான்; இன்னொருவனோ திருவள்ளுவன் கையாலாகாத ஆள், தாமஸ் என்ற ஓடுகாலியிடம் பைபிளைக் கற்ருக் கொண்டுதான் திருக்குறலள் எழுதப் பட்டது என்கிறான்; இன்னொருவனோ, திருக்குறளை எங்கள் குருவினிடத்திலிருந்து திருடிக் கொண்டு சென்று விட்டார், அதை தனது என்று சொல்லி புழக்கத்தில் விட்டார் என்கிறான். இவர்கள் எல்லோருமே தங்களை “தமிழர்கள்” என்ரு தான் சொல்லிக் கொள்கிறார்கள்.

 ஒரு போராளி உண்மையிலே போராளியாக இருந்தால், தீக்குளிப்பேன் என்று சொல்லமாட்டார். இன்றைக்கு இந்த நிலையில் தமிழன் இருப்பதற்கு காரணம் கலைஞரும், திராவிட இயக்கமும்தான் என்று பல்வேறு பொதுக்கூட்டங்களில், கருத்தரங்கங்களில் சொல்ல முடியும். தமிழ் மெல்ல, மெல்ல சாகும் என்றுதான் சொன்னார்கள். இந்த நிலையில் தமிழ் இப்போது வேகமாக செத்துக்கொண்டு இருக்கிறது. இவ்வாறு டாக்டர் ராமதாஸ் பேசினார். முன்னதாக முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி, தமிழ் தேசிய விடுதலை இயக்க பொதுச்செயலாளர் தியாகு, மக்கள் மாநாட்டுக் கட்சி தலைவர் சக்திவேல், திரைப்பட இயக்குநர் வி.சேகர் தமிழாலயம் இயக்குநர் கு.பச்சைமால் ஆகியோர் பேசினார்கள். முடிவில் சென்னை மாவட்ட பா.ம.க. அமைப்பு செயலாளர் மு.ஜெயராமன் நன்றி கூறினார்.


 


நாத்திகமும், ஆத்திகமும்: அகில இந்திய பகுத்தறிவாளர் மாநாடு: நம்பிக்கையாளர்களுக்கு சவால் – IV

ஜனவரி 16, 2010

அகில இந்திய பகுத்தறிவாளர் மாநாடு: நம்பிக்கையாளர்களுக்கு சவால் – IV

© வேதபிரகாஷ்

முன்பு இம்மாநாட்டின் நிகழ்வுகளை பத்திதுள்ளேன்[1]அகில இந்திய பகுத்தறிவாளர் மாநாடு: நம்பிக்கையாளர்களுக்கு சவால் – I to III! இதில் தீர்மானங்கள் சம்பந்தமான விவரங்கள் கொடுக்கப்படுகின்றன.

7வது பகுத்தறிவாளர் கழக மாநாட்டின் தீமானங்கள்!: இரண்டாவது நாளில் (27-12-2009, ஞாயிற்றுக் கிழமை) மாநாட்டின் தீர்மானங்கள் முதலில் வாசிக்கப்பட்டு, அதன் விவரங்கள் பின்னணி நரேந்திர நாயக்கினால் விளக்கப்பட்டன:

1. இந்திய அரசு மதத்தை அரசியலிலிருந்து பிரிக்க தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும். அதற்காக ஒரு சட்டவடிவை உண்டாக்கி, சட்டமாக்க வேண்டும்[2]. லிப்ரான் கமிஷன் அறிக்கையிலும் இக்கருத்து சொல்லப்பட்டிருக்கிறது[3].

2. விளம்பரங்களில் வரும் மூட நம்பிக்கைகள் நிறுத்தப்படவேண்டும். அதாவது விளம்பரங்கள் மூடநம்பிக்கைகள் பரப்ப உபயோகிக்கக்கூடாது[4].

3. பொது சிவில் சட்டத்தை (Uniform Civil Code) அமூலாக்க வேண்டும்[5]. ஏற்கெனவே இரண்டு உச்சநீதிமன்ற தீர்ப்புகள் இதனை வலியுறுத்துள்ளது.

4. அயல்நாட்டிலிருந்து ஊக்குவிக்கப்படும் தீவிரவாதம் ஒழிக்கப்படவேண்டும்[6]. அதுமட்டுமல்லாது, எல்லாவிதமான தீவிரவாதங்களும் ஒழிக்கப்படவேண்டும்.

5. அரசியல் நிர்ணயச் சட்டத்தின் சரத்து 31 (Art.31), முக்கியமாக சிறுபான்மையினருக்கு அளிக்கப்பட்டுள்ள சலுகை நீக்கப்படவேண்டும். எல்லாமதங்களின் உரிமைகளும் மதிக்கப்படவேண்டும் (Art.14) என்பதைவிட, சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும் என்று மாற்றவேண்டும்.

6. கொடுக்கப்படும் மான்யங்கள் (Subsidies) அறவே ஒழிக்கப்படவேண்டும்.

7. சிறப்புத் திருமண சட்டத்தினைத் திருத்தி (Special marriage Act), பதிவு செய்தல் என்பது எல்லா மதங்களுக்கும் கட்டாயமாக்கவேண்டும்[7].

8. பொது இடங்களில் மதசம்பந்தமான அடையாளங்கள் / சின்னங்கள் வைப்பது நீக்கப்படவேண்டும். அவ்வாறே வழிபடும் இடங்கள் உள்ளதும் நீக்கப்படவேண்டும்.

9. ஸ்ரீலங்கத் தமிழர்களின் மனித உரிமை மீறல்களை கண்டிக்கிறது[8].

10. போலி-விஞ்ஞானம் ரீதியில் / மூலமாக பரப்பப்படும் மூடநம்பிக்கைகளை அரசு உரிய முறையில் தடுக்க ஆவன செய்யவேண்டும்.

நாயக்கின் விளக்கம் இந்து-விரொதமாகத்தான் இருந்தது: ஒவ்வொரு தீர்மானம் முன்மொழியும் போது, நரேந்திர நாயக் விளக்கங்கொடுத்து, இது தெரிந்த விஷயம்தான், இதை நிறைவேற்றுவதில் எந்தப் பிரச்சினையும் இருக்காது என்று நினைக்கிறேன் / இல்லை என்ற ரீதியில் பேசினார். மூடநம்பிக்கை பற்றி விவாதிக்கும் போது, செக்யூலரிஸ பாணியில், இந்து-எதிர்ப்பாக இருந்தது ஆச்சரியமான இருந்தது. “அயல்நாட்டிலிருந்து ஊக்குவிக்கப்படும் தீவிரவாதம் ஒழிக்கப்படவேண்டும்”, என்றப்பொது, சில குரல்கள் எழுந்தன, உடனே அவர், “எல்லாவிதமான தீவிரவாதங்களும் ஒழிக்கப்படவேண்டும்” என்று சேர்த்துக் கொள்கிறேன் என்றார். அரசியல் நிர்ணயச் சட்டத்தின் சரத்து 31 பற்றிய விவாதம் வந்தபோது “சரண்டர்” ஆகிய நிலைதான் ஏற்பட்டது[9]. “பொது இடங்களில் மதசம்பந்தமான அடையாளங்கள் / சின்னங்கள் வைப்பது நீக்கப்படவேண்டும். அவ்வாறே வழிபடும் இடங்கள் உள்ளதும் நீக்கப்படவேண்டும்”, என்று சமீபத்தை தீர்ப்பின்படி, தீமானத்தை கொண்டுவந்தாலும், முஸ்லிம்கள், கிருத்துவர்கள் செய்துவரும் ஆக்கிரமிப்பு முதலியவைப் பற்றி மூச்சுவிடவில்லை. தெருக்களில் உள்ள கோவில்கள் உடனே அகற்றப்படவேண்டும் என்றுதான் பேசினார்[10]. “ஈழத் தமிழர்களின் மனித உரிமை மீறல்களை கண்டிக்கிறது” என்பதற்கும் எதிர்ப்பு இருந்தது. நாயக் அதனை, ஸ்ரீலங்கத் தமிழர்களின் மனித உரிமை மீறல்களை கண்டிக்கிறது”, என்று மாற்றிவிட்டார்!

ஐந்தாவது தீர்மானத்திற்கு எதிர்ப்பு: தீர்மானங்களை கூட்டமைப்பின் தென் மண்டலச் செயலாளர் வா.நேரு முன்மொழிந்தார். கூட்டமைப்பின் பிற அமைப்பின் சார்பாக அளிக்கப்பட்ட சிறுபான்-மையினரின் சிறப்பு உரிமைகளை அரச-மைப்புச் சட்டத்திலி-ருந்து நீக்க வேண்டுகோள் விடுத்த – தீர்மான முன்-வரைவின் மீது பகுத்தறிவாளர் கழகப் பொதுச் செயலாளர் வீ.குமரேசன் தனது எதிர்ப்பினை பதிவு செய்தார்[11]. சிறுபான்-மையினருக்கான சிறப்பு உரிமைகள் இந்நாட்டில் ஆண்டாண்டு காலமாக ஆதிக்கம் செலுத்தி வரும் இந்துமத அமைப்புகளின் செயல்களுக்கு ஒரு பாதுகாப்பாக, சமத்துவத்தைப் பேண வழிகோலும் வேறுபாட்டு உரிமையாக, மனிதநேயத்தைப் பேணும் உரிமையாக உள்ள நிலைமையினை விளக்கி, அந்த சிறப்பு உரிமைகள் மேலும் மேலும் சீர்மைப்படுத்தப்பட்ட வேண்டியதன் அவசியத்தை விளக்கிப் பேசினார். இத்தகைய வலிந்து ஆதரிக்கும் நிலையில், மற்ற மதத்தினர்க்கு இந்த அமைப்பில் யாரும் இல்லை போலயிருக்கிறது.

முஸ்லிம்களே இல்லாத மாநாட்டில் முஸ்லிம்களுக்கு ஆதரவாக இருந்த நாத்திகர்கள்: நம்பிக்கையில்லாதவர், மூடநம்பிக்கை எதிர்ப்பவர், கடவுட்மறுப்பு சித்தாந்திகள், நாத்திகவாதிகள், பகுத்தறிவு வாதிகள் என்றேல்லாம் சொல்லிக் கொண்டு கூடியிருந்த கூட்டத்தில் ஒரு முஸ்லிமும் இல்லதது ஆச்சரியமாகவே இருந்தது. ஆனால், மேலே குறிப்பிட்ட ஐந்தாவது தீர்மானத்திற்லு கருப்புச் சாடைகள் எதிர்ப்பு தெரிவித்தன. சிறுபான்மை-யினர் உரிமையினை பாதிக்கும் அந்த தீர்மான முன்வரைவினை நீக்குவ-தற்கு பகுத்தறிவாளர் கழகம் எடுத்து வைத்த வாதங்களை பொதுக்குழு உணர்ந்து முன்வரைவு நிலையிலேயே அதற்கு முடிவு கட்டப்பட்டு அது நீக்கப்பட்டுவிட்டது.

நாத்திகர்களும், போலி-நாத்திகர்களும்: இந்தி பேசும் நாத்திகர்களைக் கண்டு, குறிப்பாகக் கேட்டு நமது கருப்புச் சட்டைகள் முழித்தது, அதிர்ந்தது முதலியன பார்ப்பதற்கு வேடிக்கையாக இருந்தது. இந்த 7வது ரேஸனலிஸ்ட் மாநாட்டிலேயே, போலி, சாதாரண மற்றும் பாரபட்சமுள்ள, குழப்பவாத, சந்தர்ப்பவாத நாத்திகர்களை மற்றும் நாத்திகவாதிகளைக் காணமுடிகிறது. அவர்களுக்குள் உள்ள முரண்பாடுகளும் வெளிப்படுகின்றன:

1. இந்து-விரோத நாத்திகம்: இந்தியாவில் இந்துக்கள் அதிகமாக இருப்பதால், இந்துமதத்தை எதிர்க்கிறோம் அன்றாலும், அத்தகைய வாதம், 100% நாத்திகமாக இல்லாமல், இந்து-விரோதமாகவே இருக்கிறது. வட-இந்தியாவில் எடுபடுவதில்லை என்று இந்த மாநாட்டிலேயே ஒப்புக்கொள்கிறர்கள்.

2. கிருத்துமத சார்புள்ள நாத்திகம்: தம்மை நாத்திகர்கள் என்று சொல்லிக் கொண்டாலும், கிருத்துவ அடிப்படை நம்பிக்கைகளைப் பற்றி விமர்சிக்க மாட்டார்கள் (பாவத்தின் சித்தாந்தம், ஆண் உறவு இல்லாமல் குழந்தை பிறப்பது, சிலுவையில் மரித்தது, உயிர்த்தெழுந்தது, ஆகாயத்தில் சென்றது……………….முதலியன), குறைகூற மாட்டார்கள். பொதுவான விஷயங்களை பேசி, உள்ள எல்லா சமூக-சீரழிவுகளுக்கும் இந்துமதம்தான் காரணம், ஆகையால் இந்துமதம் ஒழிக்கப் படவேண்டும் என்றும் பேசுவர்.

3. முஸ்லிம் மத சார்புள்ள நாத்திகம்: தம்மை நாத்திகர்கள் என்று சொல்லிக் கொண்டாலும், முஸ்லிம் மற்றும் இஸ்லாம் பற்றி மூச்சுக்கூட விடமாட்டர்கள். அடிப்படை நம்பிக்கைகளைப் பற்றி விமர்சிக்க மாட்டார்கள். பொதுவான விஷயங்களை பேசி, உள்ள எல்லா சமூக-சீரழிவுகளுக்கும் இந்துமதம்தான் காரணம், ஆகையால் இந்துமதம் ஒழிக்கப் படவேண்டும் என்றும் பேசுவர்[12].

4. தியானம், யோகா முதலியவற்றவை எதிர்க்கும் நாத்திகம்: சமீபத்தில் இத்தகையவற்றிற்கு மேலைநாடுகளில் அங்கீகாரம் கிடைத்ததாலும், அதன் பலனால், மக்கள் பலர் அவற்றைக் கடைப்பிடிப்பதாலும், தங்களுக்கு பாதிப்பு என்ற முறையில் எதிர்க்கின்றனர். வேடிக்கையென்னவென்றால், அதையே கிருத்துவர்கள், முஸ்லிம்கள் செய்தால் எதிர்க்கமாட்டார்கள். ஏனனில் அவர்களும் ஆஸ்ரமங்கள் வைத்துக் கொண்டு அப்பய்ற்ச்சிகளை மற்றவர்களுக்கு அளிக்கிறார்கள்[13].

5. சோதிடத்தையும், வானவியலையும் குழப்பும் நாத்திகம்: வேண்டுமென்றே சோதிடத்தையும் வானியலையும் குழப்பி, இந்திய வானியலை தூஷிப்பார்கள். விஷயம் இல்லையென்றால், இன்னென்ன தேதிகளில் சூரியகிரகணம், சந்திரகிரகணம், கோள்கள் ஒரே கோட்டில் வருவது முதலியன சோதிட-பஞ்சாங்களில் குறிப்பிடமுடியாது. வானியல் என்பது ஆண்டாண்டு காலமான நிகழ்வுகளை உன்னிப்பாக பல இடங்களில் பார்ப்பது, குறித்து வைப்பது, தொகுப்பது மற்றும் அதன் மூலம் அத்தகைய நிகழ்வுகள் ஏற்படும் என்று கூறுவது. 108 ஆண்டுகளுக்கு ஒருமுறை கங்கண கிரகணம் ஏற்படும், கோள்கள் ஒரே கிரமமாக வரும் முதலியன சோதிடம் ஆகாது, மூடநம்பிக்கையாகாது. பிறகெப்படி, பஞ்சாங்கள் அவற்றைக் குறிப்பிடுகின்றன?

6. நாத்திகத்தையும், பகுத்தறிவையும் குழப்பும் நாத்திகம்: இது “திராவிடம்” பேசும் “தமிழர்களிடம்” அதிகம் காணப்படுகிறது. அம்பேத்கரிஸம் முதலியன பேசுபவரிடமும் காணப்படும். நாத்திகம் என்பது கடவுட்தன்மையினை அறவோடு மறுப்பது. பகுத்தறிவு என்பது ஓரளவிற்கு மனித அறிவிற்கு புரிகிண்ர அளவில் ஏற்றுக்கொள்வது. இரண்டும் ஒன்றல்ல.

7. மூடநம்பிக்கையை எதிர்க்கும் நாத்திகம்: மேகங்கள் திரண்டு வந்தால் மழை பெய்யும் போன்றவையும் மூடநம்பிக்கைதான். ஏனெனில் மழை பெய்யலாம், பெய்யாமலும் இருக்கலாம்[14]. மழைகாலத்தில் மழை வரும், வெயில் காலத்தில் வெயில் வரும் என்பதெல்லாம் இப்பொழுது மாறிவிட்டன. இது பூகோளக் கோளாறு / பிறழ்ச்சி. அதிக விளைச்சல் இருந்தால் விலை முறைந்துவிடும் முதலியனவும் மூடநம்பிக்கைதான். ஏனெனில் பலநேரங்களில் அவ்வாறு விலை குறைவதில்லை. அரசு வரிவிகிதங்களைக் குறைக்கின்றது, சலுகைகளை அள்ளிவீசுகிறது, இருப்பினும் இப்பொழுது கட்டிடப் பொருட்கள் விலை 2003லிருந்து ஏறுமுகமாகவே உள்ளன[15]. இப்படி பல உதாரணங்களைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். பங்குச் சந்தையைப் பற்றி கேட்கவே வேண்டாம்!

8. செக்யூலரிஸ நாத்திகம்: இது இந்தியாவிற்கே உரித்தானது. இந்த மூடநம்பிக்கை இங்கிருந்து இப்பொழுது உலகம் முழுவதும் பரவி வருகிறது எனலாம்.

9. நவநாகரிக நாத்திகம்: அதாவது, பெண்கள் “பெண்கள் கிளப்பிற்கு போவது” என்ற ரீதியில் உள்ள நாத்திகர்கள்! பெயரளவில் நாத்திகர்கள் எனலாம். திக, திமுக, பாமக மற்றும் அம்பேத்கரிஸம் முதலிய கோஷ்டிகளில் அதிகமாகக் காணலாம். இவர்களைப் பொறுத்தவரைக்கும் அவர்கள் குடும்பத்தில் ஆண்கள் நாத்திகர், பெண்கள் ஆத்திகர்!

10. விஞ்ஞானம் பேசும் நாத்திகம்: ஓரளவிற்கு விஞ்ஞானம் பேசினாலும், ஒரு நிலையில் அதிலும் மூடநம்பிக்கை வந்துவிடும்[16]. இப்பொழுது மரபணு மற்றும் இனங்களைப் பற்றியும், மொழிகள் உண்டானது, நியாண்டர்தால் குரங்கு எப்படி பாடியது, பேசியது, ஆடியது போன்ற ஆராய்ச்சிகளினின்று அத்தகைய விஞ்ஞான-நாத்திகத்தை அறியலாம்[17].

© வேதபிரகாஷ்

16-01-2009


[1] வேதபிரகாஷ், அகில இந்திய பகுத்தறிவாளர் மாநாடு: நம்பிக்கையாளர்களுக்கு சவால், விவரங்களுக்கு இங்கு பார்க்கவும்:

https://dravidianatheism2.wordpress.com/2009/12/26/அகிலஇந்தியபகுத்தறிவாளர/

வேதபிரகாஷ், திராவிட பொய்களும், திரிபுகளும், பிரச்சாரங்களும், மேலும் விவரங்களுக்கு:

https://dravidianatheism2.wordpress.com/page/2/ மற்றும் https://dravidianatheism2.wordpress.com/page/3/

[2] மும்பையில் அத்தகைய வரைசட்டத்தை சட்டசபையில் கொண்டுவந்ததாகவும், ஆனால் மாநில அரசு தாமதப் படுத்துவதாகவும் நாயக் தெரிவித்தார்.

[3] கமிஷனின் அறிக்கைகளை, இந்திய அரசொயல்வாதிகள் என்றுமே மதிப்பதில்லை. மேலும் இந்த லிப்ரான் கமிஷன், முகுக்க-முழுக்க அரச்சியல் நோக்கம் கொண்டது என்பது அப்பட்டமாகத் தெரிவதால், சட்டரிதியில் யாரும் அதை பெரிதாகக் கொள்ளவில்லை. இரண்டு-மூன்று நாட்களில் ஊடகங்களேஅடங்கிவிட்டன.

[4] சிவப்பாக கிரீம், ஆண்கள் அழகாகக் கிரீம், முலைகளை பெரிதாக்க கிரீம் முதலியவற்றை எதிர்க்காதது ஆச்சரியமே!

[5] Smt. Sarla Mudgal, President, Kalyani and others vs. Union of India and other, AIR 1995 Supreme Court 1531 மற்றும் John Vallamattom v. Union of India AIR 2003 SC 2902.

திகவினர்-கருப்புச்சட்டைகள் இதனை எதிர்க்காதது ஆச்சரியமே. ஒருவேளை அதைப் பற்றி சரியாக தெரிந்து கொள்ளவில்லையா அல்லத் அவர்களது முஸ்லிம் நண்பர்கள் அதைப் பற்றி சொல்லவில்லையா அல்லது அத்தகைய தீர்மானம் வரும் என்பதை எதிர்பார்க்கவில்லையா?

http://vedaprakash.indiainteracts.in/2009/03/15/islam-goes-hi-tech-whether-it-is-terrorism-or-divorce/

Mohammad Ahmed Khan v. Shah Bano Begum – AIR 1985 SC 945 –  இதுதான் ராஜிவ் காந்தி சட்டத்தை வளைத்து, முஸ்லிம் அடிப்படைவாதிகளுக்குத் துணைப்போய், ஒரு புதிய சட்டத்தை முகமதியர்க்லளுக்க்ய்=உ ஏற்படுத்தியது.

John Vallamattom v. Union of India AIR 2003 SC 2902 – சரளா முத்கல் வழக்கு அடுத்து உச்சநீதிமன்றத்தில், மறுபடியும் அரசாங்கத்திற்கு ஒரு பொது சிவில் சட்டத்தை எடுத்துவரவேண்டிய அவசியத்தை உணர்த்தியுள்ளது. ஆனால், நமது செக்யூலரிஸ அரசியல்வாதிகள் அமைதி காக்கின்றனர். மற்ற நேரங்களில் நீதிமன்ற தீர்ப்புபடித்தான் நடப்பொம் என்று முழக்கமிடும் வீரர்கள் இப்பொழுது ஊமையாகிவிடுகிண்ரனர். இதுதான் இந்தியாவில் சட்டத்தை, உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை மத்திக்கும் லட்சணம்!

இதை “சட்ட / நீதி நாத்திகம்” என்று கூட கூறலாம்!

[6] அயல்நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படுவது என்ன என்பது நாத்திகர்கள் பகுத்தறிவுவாதிகளுக்குத் தெரிந்திருப்பது சந்தோஷமான விஷயம்தான்.

[7] தமிழ்நாட்டில் அத்தகைய சட்டம் எடுத்து வந்துள்ளபோது, முஸ்லிம்கள் எதிர்த்துள்ளதை கருத்தில் கொள்ளவேண்டும்.

[8] திகவினர்-கருப்புச்சட்டைகள் இந்த விஷயத்தைக் கண்டுகொள்ளவே இல்லை. தமிழர்களுக்கு போராடுவோம், உயிர்விடுவோம் என்று பேசும் இவர்கள் அமைதியாக இருந்தனர். “ஈழம்” என்ற வார்த்தைக்கு வடமாநிலத்தவர் எதிர்ப்புத் தெரிவித்து அதை “ஸ்ரீலங்கா” என்று மாற்றியபோதும் கண்டுகொள்ளவில்லை.

[9] அவருக்குப் பிடிக்கவில்லை என்பது, அவர்முகபாவம் காட்டியது. இருப்பினும் நன்பர்களின் அழுத்ததால், சமரசம் செய்துகொண்டார் எனலாம்.

[10] மசூதி கட்ட நிலங்களை ஆக்கரமிப்பு செய்கின்றனர். பிறகு பட்டா வாங்கி சரிசெய்து கொள்கின்றனர். கிருத்துவர்களும் அதே வேலைத்தான் செய்து வருகின்றனர். அவர்கள் முதலில் சிலுவையை நட்டுவிடுவார்கள். பிறகு அதனைச் சுற்றி மேடைக் கட்ட்வார்கள். வரம் வாரம் தொழுகிறேன் என்று கூட்டம் கூட்டுவார்கள். பிறகு சுவர்கள், கூரை என வரும்………….அந்த இடத்தையே ஆக்கரமித்துவிடுவார்கள்.

[11] http://viduthalai.periyar.org.in/20091231/news19.html

[12] இப்பொழுது சிதம்பரத்தையும் இதில் சேர்த்துக் கொள்ளலாம். உள்துறை அமைச்சர் ஸ்தானத்தில் இருந்து கொண்டு, ஜிஹாத் சொல்லி பல குண்டுவெடிப்புகளை மேற்கொண்டு, அப்பாவி மக்களைக் கொன்று குவித்தபிறகும், ஜிஹாத் இல்லை என்று பேசும் போக்கு!

[13] இதைப் பற்றி தனியாகவே எழுதலாம். கேரளத்தில் மட்டுமல்லாது, இந்தியா முழுவதிலும் இப்பொழுது முஸ்லிம் சோதிடர்கள் அதிகமாகக் கிளம்பிவிட்டர்கள்! அரசு பேருந்துகளில் வேறு விளம்பரம் செய்து கொள்கிறார்கள்!

[14] சன், கலைஞர் டிவிகளில் ரமணர் உதிக்கும் முத்துகளைக் கேட்டு முடிவு செய்து கொள்ளலாம்.

[15] இரும்பைப் பொருத்த வரைக்கும் உற்பத்தியாளர்கள், ஆட்சியாளர்கள், அதிகாரிகள் முதலியோர் சேந்து கொள்ளையடிக்கின்றனர். பல அரசியல்வாதிகளே அத்தகைய இரும்பு தொழிற்சாலைகள் வைத்துக் கொண்டு கொள்ளையடிக்கிறார்கள்.

[16] சிவப்பாக கிரீம், ஆண்கள் அழகாகக் கிரீம், முலைகளை பெரிதாக்க கிரீம் முதலியவற்றை எதிர்க்காதது ஆச்சரியமே!

[17] மேனாட்டு விஞ்ஞானிகளிடன் இது அதிகமாகக் காணப்படுகிறது. விஞ்ஞான ரீதியில் ஆராய்ச்சி செய்தாலும், ஒரு நேரத்தில் தமது கிருத்துவமத அடிப்படைவாத்தில் மூழ்கி வேறுவிதமான விளக்கங்கள் கொடுப்பர், அதாவது பைபிளுக்கு எதிராக போகாமல், விளக்கம் கொடுப்பர்!

அகில இந்திய பகுத்தறிவாளர் 7வது மாநாடு: நம்பிக்கையாளர்களுக்கு சவால் – II

திசெம்பர் 27, 2009

அகில இந்திய பகுத்தறிவாளர் 7வது மாநாடு: நம்பிக்கையாளர்களுக்கு சவால் – II

அகில இந்திய பகுத்தறிவாளர் 7வது மாநாடு: நம்பிக்கையாளர்களுக்கு சவால்! என்ற தலைப்பில் மூன்று கட்டுரைகளை பெரியார் திடலில் அகில இந்திய பகுத்தறிவாளர் மாநாட்டில் (டிசம்பர் 2009) கலந்து கொண்ட பிறகு www.wordpress.com ல் பதிவு செய்தேன். ஆனால், அப்பொழுதே அவை பதிவாகவில்லை. உடனே www.wordpress.com ற்கு புகாரும் செய்தேன். ஆனால், ஒன்றும் நடக்கவில்லை. ஏதோ விட்டு-விட்டு சில பதிவாயின, சில மறைந்தன. இப்பொழுது (21-05-2010), இதன் தொடர்பு உள்ளதால், மறுபடியும் புதிப்பிக்கப்படுகிறது.

குறிப்பு: மாநாட்டில் இவர்கள் பேசியதற்கும், “விடுதலை” கீழ்கண்டவாறு பிரசுரித்துள்ளதற்கும் வேறுபாடுகள் உள்ளன.

“நாத்திகம்” (atheism) என்பதற்கு பதிலாக “Rationalism” என்ற போர்வையில் விவாதங்கள் வைக்கப் படுகின்றன. அதனை “பகுத்தறிவு” என்று தமிழில் பேசப்படுகிறது.  agnosticism, skepticism, non-belief in religious system முதலிய கோணங்களில் விவாதிப்பதும், விஞ்ஞான ரீதியில் தர்க்கம் செய்வதும் ஒன்றாகாது. ஆனால் நாத்திகத்தை மறைத்து விஞ்ஞான போர்வையில் பலரக சித்தாந்திகள் ஒன்றுகூடி, இவ்வாறாக பேசுவது நன்றாகவே தெரிகிறது.

“பகுத்தறிவு” என்றே  முதலில் “விதலையில்” வெளிவந்தது அப்ப்டியே கொடுக்கப்படுகிறது:

வகுப்பு வெறியை முறியடிக்க பெரியாரின் சிந்தனைகளே தேவை: இந்திய பகுத்தறிவாளர் மாநாட்டில் கு.வெ.கி.ஆசான், அ.அருள்மொழி, ஆர்.ஜி.ராவ், வித்யாபூஷன்

http://viduthalai.periyar.org.in/20091227/news11.html

சென்னை, டிச.27_ வகுப்பு வெறியை முறி-யடிக்க பெரியாரின் சிந்-தனைகள்தான் பயன்-படும் என்று வித்யா பூஷன்-ராவத் நேற்று சென்னை பெரியார் திடலில் நடை-பெற்ற மாநாட்டில் கூறி விளக்கமளித்தார். 7ஆவது தேசிய மாநாடு டிசம்பர் 26 பிற்பகல் மற்-றும் மாலை நிகழ்ச்-சிகள் நேற்று நடைபெற்றன. அதன் தொடர்ச்சி வருமாறு: வகுப்புவாதத்தை ஒழிப்பதில் பகுத்தறிவு இயக்கங்களின் பங்கு எனும் தலைப்பில் முதல் கருத்தரங்கு நேற்று (26.12.2009) மாலை இந்திய பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் சென்னை பெரியார் திட-லில் நடைபெற்றது.

கு.வெ.கிஆசான்: பெரியார் பேருரை-யாளர் கு.வெ.கி.ஆசான் மாலையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்குத் தலைமை-யேற்றார். ஆங்கிலத்தில் உள்ள கம்யூனல் எனும் சொல்லை வகுப்புவாதம் எனும் விரும்பத்தகாத பொருளில் இந்தியா-வில்-தான் பெரும்பாலும் பயன்படுத்துகிறார்கள். சமுதாயமாக மக்கள் வாழ்-வது, ஒன்றைப் பொது-வாக அவர்கள் பயன்-படுத்துவது ஆகியவை-தான் அச்சொல்லின் இயல்பான பொருள் என்-பதைத் தெளிவுபடுத்-தினார். 1964இல் வெளி-யான கன்சைஸ் ஆக்ஸ்ஃ-போர்டு அகராதியின்படி, சமுதாயங்களுக்கு இடையே பகையுணர்வு எனும் பொருளில், கம்யூ-னல் எனும் சொல் இந்-தி-யாவில் பயன்படத் தொடங்-கியதை எடுத்துக்காட்-டினார்.

இந்து முஸ்லிம் பகை: பெரும்பான்மை இந்து மதத்தினர் சிறு-பான்மை மத்தினரை ஒதுக்கி, அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்த முற்-பட்ட பொழுது, சிறு-பான்-மையர் சட்டப் பாதுகாப்பை வகுப்பு-ரிமையின் அடிப்படையில் கேட்டனர். அது மறுக்-கப்பட்ட பொழுது இந்து, முஸ்லீம் பகை ஏற்பட்டு, பாகிஸ்தான் பிரிவினை-யில் முடிந்தது.

வி.பி.சிங் ஆட்சியில்: மேல்ஜாதியார் ஆதிக்-கத்தில் இருந்து, ஒடுக்கப்-பட்ட, ஒதுக்கப்பட்ட, அழுத்தப்பட்ட ஜாதியார் பாதுகாப்புப் பெற, இட-ஒதுக்கீட்டைக் கோரினர். அதை விழிப்புணர்வுடன் தென்நாடு முன்-னெடுத்-தது. ஆனால் வடபுலத்-தில் வகுப்புரிமை இயக்கம் வலுப்பெறவில்லை. மண்-டல் ஆணையத்தின் பரிந்-துரைப்படி, வி.பி.சிங் பிர-தமராக இருந்த பொழுது, மத்திய அரசில் பணி-யிடங்களுக்குப் பிற்படுத்-தப்பட்டோருக்கு இட-ஒதுக்கீடு அளித்தது. அதைத் தென் மாநிலங்கள் மகிழ்-வுடன் வரவேற்றன. ஆனால் வட இந்தியாவில் மேல்-ஜாதியாரின் தூண்டுத-லால் கலவரம் உண்டா-யிற்று.

உச்சகட்ட கலவரங்கள்: உண்மையான பிரச்-சினையிலிருந்து மக்களின் கவனத்தைத் திருப்ப, மதவெறியை இந்துத்-துவா சக்திகள் கிளப்பு-கின்றன. உண்மையான பிரச்சினைகளை மறைத்து, உணர்ச்சிகளை எழுப்பி, கற்பனைப் பிரச்-சினை-களைக் கொண்டு, சிறு-பான்மை மதத்தினர் மீது வெறுப்பை வளர்த்து கல-வரங்களைத் தொடர்ந்து நடத்துகின்றன. 1992இல் பாபர் மசூதி இடிப்பும், 2002இல் குஜராத் கல-வரங்களும் அவற்றில் உச்சகட்டமானவை.

பொதுமக்களின் கவ-னம் தவறான பாதையில் செல்லும் வரை, அவர் மீது தங்கள் ஆதிக்கம் நிலை-பெறும் என்பது படித்த, மற்றும் பணக்-காரக் கூட்டத்தினரின் கணிப்பாகும். ஆகையால் உண்மைப் பிரச்சினைகளில் இருந்து எளிய மக்களின் கவனத்-தைத் திருப்புதல், கலவரத்-தைத் தூண்டுதல், பக்தி-போதையை ஏற்றுதல், மதவெறியை ஊக்கு-வித்தல் முதலியவற்றில் மதவாதிகள் ஈடுபட்டு உள்ளனர். இவர்களின் முயற்சியை முறியடிக்கும் வகையில் பகுத்தறி-வா-ளர்கள் மக்களுக்கு உண்-மைகளைச் சொல்ல வேண்டும், மூடநம்பிக்-கைகளை முறியடிக்க வேண்டும், அறிவியல் பார்வையை உண்டாக்க வேண்டும். இவை போன்ற நடவடிக்கைகளால் விழிப்-படைந்த மக்கள் தேவையான காரியங்-களுக்கும் உரிமைகளுக்-கும் முயற்சி எடுத்துக்கொள்-வார்-கள். வீண் உணர்ச்-சிக்கு ஆட்பட்டு வகுப்-புக் கலவரங்களில் ஈடு-பட-மாட்டார்கள், வகுப்பு-வாதத்தை முறியடிப்-பார்-கள். இவ்வாறு கு.வெ.கி. ஆசான் உரையாற்றினார்.

வழக்கறிஞர் அ.அருள்மொழி: உயர்நீதிமன்ற வழக்கு-ரை-ஞர் அ.அருள்மொழி பேசுகையில், புத்தரின் போதனைகள் மறக்-கடிக்-கப்பட்டு, வேதியத்தின் அடிப்படையில் கதைகள் பரப்பப்படுவதைக் கண்-டித்தார். சென்னை மாகா-ணத்தில் நீதிக்கட்சி அரசு எல்லாப் பிரிவு மக்களுக்-கும் நீதி கிடைக்கும் வகை-யில் வகுப்புரிமை ஆணை பிறப்பித்து மக்களாட்-சியை உறுதிப்படுத்தியது. இவ்வாறு அனைவருக்-கும் தெரிய வேண்டும். இன்னும் தீண்டாமை-யைக் குற்றம் அற்றது எனக் கூறுவோர் இருக்-கிறார்கள் என்பதைச் சுட்டிக்காட்டினார்.

கோவா அறிவியல் பேரவைத் தலைவர், ஆர்.ஜி.ராவ்: இக்காலகட்டத்தில் தேவைப்படுவது மனித-நேயம் என்றார். மற்றவர் கருத்துக்கு மதிப்பளிக்க வேண்டும், அறிவியல் மனப்பான்மையை வளர்க்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

வித்யாபூஷன் ராவத்: டெல்லி, சமூக வளர்ச்சி நிறுவனத்தின் இயக்குநர், வித்யா பூஷன் ராவத் கருத்து அறிவிக்கையில் பெரியாரின் எண்ணங்-கள் பிற மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு எல்லோரிடமும் பரவ வேண்டும் என்றார். வகுப்பு நெறியை முறி-யடிக்க பெரியார் சிந்த-னை-கள் பயன்படும். காந்தி-யார் கூறிய மதச் சார்பின்மை பார்ப்-பனியம் சார்ந்த மதச் சார்பின்மை. பெரியாரின் மதச் சார்பின்மை, மனித நேயம் சார்ந்தது. மதச் சார்பின்மை வர்ணாஸ்-சிரம தர்மத்தை மறுப்ப-தாக இருக்க வேண்டும் என்றார்.

பி.எஸ்.பர்னாலா: பர்னாலா மத குருக்-கள் மூடநம்பிக்கை-களைப் பரப்புவது வருத்தத்திற்கு உரியது எனக்கூறி, பகுத்-தறிவாளர்கள் மக்களை இன்னும் அதிக அளவில் நாடு முழுவதும் சந்தித்-துப் பிரச்சாரம் செய்ய வேண்டிய தேவையை வலியுறுத்தினார்.

திராவிட நாத்திகம்

நவம்பர் 28, 2009

திராவிட நாத்திகம்

“திராவிட நாத்திகம்” என்பது “நாத்திகம்” என்ற போர்வையில் பெரும்பாலும் இந்துமத எதிர்ப்பு, மறுப்பு, விரோத மற்றும் அவதூறு செய்யும் போக்காக உள்ளது. கடந்த மற்றும் நடப்பு நூற்றாண்டுகளில் அத்தகைய பேச்சுகள், எழுதுக்கள்,  ஆராய்ச்சிக் கட்டுரைகள், புத்தகங்கள், இணைத்தள பதிவுகள் முதலியவற்றைப் பார்க்கும்பொது அறியப்பட்டுள்ளது.

இதில் “நாத்திகம்” மற்றும் “கடவுள் – இறை மறுப்பு” முகமூடி அணிந்துகொண்டு சித்தாந்தவாதிகளான கம்யூனிஸ்டுகள் மற்றும் அதன் உதிரிகள் ஒருபக்கம், மாற்றுமதத்தினரான கிருத்துவர்-முஸ்லிம்கள் மறுபக்கமும் கூட்டுச் சேர்ந்துள்ளார்கள்.

இதைத் தவிர “தான் / நான் இந்து” என்று சொல்லிக் கொண்டு, இந்துக்களைக் குறைகூறும், எதிர்மறையாக விமர்சனிக்கும் “இந்துக்களும்” அதிகம் உள்ளனர். அதில் “விண்ணப்பப்படிவ இந்துக்கள்” என்பவர் அதிகம், அதாவது, தமது வாழ்க்கையில் பல நேரங்களில், பல இடங்களில் “விண்ணப்பப்படிவங்கள்” பூர்த்தி செய்யும்போது, “மதம் / சமயம்” என்பதற்கு எதிராக இந்து என்று எழுதும் “இந்துக்கள்”.

மேலாக “செக்யூலரிஸம்” பேசி, அதிநவீன, அதிகம்-படித்த முற்போக்கு “இந்துக்கள்” என்பவர்களும் உண்டு.

இப்படி, இவர்கள் எல்லோராலும் தாக்கப்படுவது – இந்து மதமே, இந்துமதக் கடவுளே, இந்துமத நூல்களே, ………….இந்துமதச் சின்னங்களே.

எப்பொழுது பார்த்தாலும் இந்து மதம், இந்துமத பண்டிகைகள், விழாக்கள், சம்பிரதாயங்கள், பாரம்பரிய நடைமுறைகள் முதலியவை, ஏதோ தனக்குத் தான் எல்லாம் தெரியும் என்று அவற்றை விமர்சனம் செய்ய கிளம்பி விடுவார்கள்.

“திராவிட” அடைமொழி வைத்துக் கொண்டுள்ளக் கூட்டங்களுக்கு / அமைப்புகளுக்கு ஏதோ தமக்கு எல்லையில்லாத ஒட்டுமொத்த அனுமதி, அதிகாரங்கள் மற்றும் உரிமைகள் கொடுத்துவிட்டது மாதிரி இந்து மதத்தைப் பற்றி என்னவேண்டுமானாலும் எழுதலாம், பேசலாம், என்று இருக்கும் –

திராவிட நிறுவனங்கள், திராவிட அமைப்புகள்,

திராவிட சித்தாந்திகள், திராவிட எழுத்தாளர்கள், திராவிட பேச்சாளர்கள்,

திராவிட நடிகர்கள், திராவிட இயக்குனர்கள், திராவிடத் தயாரிப்பாளர்கள்,

திராவிட முனைவர்கள், திராவிட பேராளர்கள்,

திராவிட தமிழச்சிகள்,………………………,

திராவிடப் பெருங்கவிக்கோக்கள், ………………………..

திராவிட ………..திராவிட……………..என்று பட்டாளங்கள் கிளம்பி விட்டன.

தங்களை யாரும் விமர்சனிக்க முடியாது, தாங்கள் சொல்வதுதான் சரி, சொன்னதைப் பற்றி யாரும் ஆராய்ந்து பார்க்கக் கூடாது என்ற மமதையிலும் பலர் இன்னும் உள்ளனர்.

ஆகவே, இவர்களின் பொய்மையை எடுத்துக் காட்டவேண்டியுள்ளது.

ஊடகங்களின் தாக்கம், அவற்றின் திரிபுகள், திருத்தங்கள், மாற்றங்கள், ………….

தொழில் ரீதியாக பிரயோகிக்கும் நிலைகள் ……………..

முதலியவற்றைக் காணும்போது, தாக்கப்படுபவர்கள் தாங்கள் தாக்கப்படுகிறோம் என்ற உணர்வு கூட இல்லாமல் இருக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

ஒருவேளை தாங்கள் தாக்கப்படுகிறோம் என்று அறிந்தாலும் ஏற்படுத்தப்பட்டுள்ள “செக்யூலார் மாயை”யில் தாங்கள் எதுவும் சொல்ல/செய்ய முடியாது, சொன்னாலும் / செய்தாலும் எடுபடாது என்த நிலையும் உள்ளது.

அதைவிட “இந்து” என்றாலே, ஆஹா இவர்கள் “இந்துத்துவ-வாதி”, “ஆர்-எஸ்.எஸ் காரன்” என்று முத்திரைக் குத்தப்பட்டு தீண்டத்தகாதவனாக / தகாதாவராக ஒதுக்கப்பட்டுவிடுவர் என்ற நிலையும் ஏற்பட்டுள்ளது.

ஆகவே, இத்தகைய பல முனை தாக்குதல்களில் அகப்பட்டுள்ள மக்களைப் பற்றி ஆராய வேண்டியுள்ளது.

அத்தகைய பன்முனைத் தாக்குதல்கள், நேரிடை-மறைமுகத் தாக்குதல்கள் மனோதத்துவ ரீதியில் மேலே குறிப்பிட்ட சாதனங்கலையும் இணைத்தும் செயல்படுகிறது.

அந்நிலையில்தான் இந்த “திராவிடம்”, “திராவிட நாத்திகம்” எல்லாம் வருகின்றன.