Posts Tagged ‘திராவிட இயக்கம்’

திராவிட ஆட்சிகளில் தேசத் துரோக மற்றும் பத்திரிக்கையாளர்களின் வழக்குகளும், அவற்றின் பின்னணியும் – தேசிய அளவில் உள்ள வழக்குகளுடன் அவற்றை ஒப்பிட முடியாது (3)

மே 15, 2022

திராவிட ஆட்சிகளில் தேசத் துரோக மற்றும் பத்திரிக்கையாளர்களின் வழக்குகளும், அவற்றின் பின்னணியும் தேசிய அளவில் உள்ள வழக்குகளுடன் அவற்றை ஒப்பிட முடியாது (3)

நீதிமன்றமும் அரசையும், சட்டமன்றத்தையும் மதிக்க வேண்டும்: உச்ச நீதிமன்றத்தின் இவ்வுத்தரவு பற்றி மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜுஜூ கூறியதாவது[1]: “நாங்கள் எங்கள் நிலைப்பாட்டை மிகத் தெளிவாகக் கூறியுள்ளோம். மேலும் இவ்விவகாரத்தில் பிரதமரின் நோக்கம் குறித்து நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளோம். நீதிமன்றத்தையும் அதன் சுதந்திரத்தையும் நாங்கள் மதிக்கிறோம். ஆனால் லட்சுமண ரேகை என ஒன்று உள்ளது. அதனை அரசின் அனைத்து அமைப்புகளும் மதிக்க வேண்டும். நீதிமன்றமும் அரசையும், சட்டமன்றத்தையும் மதிக்க வேண்டும். எங்களிடம் தெளிவான எல்லை நிர்ணயம் உள்ளது. அந்த லட்சுமண ரேகயை யாரும் கடக்கக்கூடாது,” இவ்வாறு கூறினார்[2]. அப்பிரிவு தேவயில்லை என்ற படசத்தில், இன்னொரு சட்டம் உருவாக்கப் படும். ஏனெனில், தேசத்துரோக கருத்துகள், வேலைகள், தீவிரவாதங்கள் இருக்கத்தான் செய்கின்றன. பிறகு அவற்றைக் க்ட்டுப் படுத்த, தடுக்க, தீர்க்க்க, தண்டிக்க நீதிமன்றம், அரசு, சட்டமன்றம், நாடாளுமன்றம் என்ன செய்ய முடியும் என்று கவனிக்க வேண்டும்

பிரிட்டிஷ் கால சட்டங்களில் ஒன்று தேச துரோக சட்டம்[3]. இந்த சட்டம் அரசியல் காரணங்களுக்காக பழிவாங்கவே அதிகம் பயன்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டு உள்ளது[4]. இதில் மத்திய, மாநில அரசுகள் எதுவும் விதிவிலக்கல்ல என்றும் கூறப்படுகிறது. இச்சட்டத்தை நீக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் ஏராளமான மனுக்கள் உள்ளன. கடந்த திங்களன்று (மே 09) இம்மனுக்கள் தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு, இச்சட்டம் குறித்து பரிசீலிப்பதாகவும், அதன் முடிவுகள் வரும் வரை இச்சட்டத்திற்கு எதிரான மனுக்களை விசாரிக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டது. இந்நிலையில் இன்று மீண்டும் அம்மனுவை விசாரித்த கோர்ட், அச்சட்டத்தை நிறுத்தி வைப்பதாக அதிரடி உத்தரவு பிறப்பித்தது. ”அரசின் பரிசீலனை முடியும் வரை தேச துரோக சட்டத்தை பயன்படுத்தக் கூடாது. மத்திய, மாநில அரசுகள் பிரிவு 124ஏ-வை பயன்படுத்தி வழக்கு பதியாது என நம்புகிறோம். தேச துரோக வழக்கின் கீழ் உள்ள விசாரணைகள் நிறுத்தி வைக்கப்படுகிறது. ஏற்கனவே தேச துரோக வழக்கில் சிறையில் உள்ளவர்கள் ஜாமின் கோரி நீதிமன்றத்தை அணுகலாம்” என நீதிபதிகள் கூறினர்.

இந்தியாவில் தேசத்துரோக சட்டம், முந்தைய வழக்குகள்: பிரிடிஷ்-இந்திய அரசுக்கு எதிராக இருந்தவர்களைத் `தேசத்துரோகிகள்’ என்று அழைக்கப் பட்டனர், அதில், விடுதலை போராளிகளும் அடங்குவர். பகத்சிங் போன்றவர்கள் தேசத்துரோகிகள் எனராங்கிலேயர் அரசு முத்திரைக் குத்தியது. தேசத் துரோக வழக்கில் திலகர் 18 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். 1922-ம் ஆண்டு மகாத்மா காந்தி, யங் இந்தியா இதழில் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராகக் கட்டுரை எழுதியபோது, காந்தி மீதும் `யங் இந்தியா’ வெளியீட்டாளர் சங்கர்லால் பாங்கர் மீதும் இந்தச் சட்டம் பாய்ந்தது. “இந்தியர்கள் மீது அடக்குமுறையைப் பாய்ச்சுவதற்காகவே இந்தச் சட்டம் திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது,” என்று காந்தி, 124ஏ பிரிவு குறித்து கூறியுள்ளார். ஜவகர்லால் நேரு இச்சட்டப் பிரிவு 124ஏ ஏற்றுக்கொள்ள முடியாத மிகவும் ஆட்சேபனைக்குரிய சட்டம் எனத் தெரிவித்தார். இந்தியர்களை அடக்கி வைக்கவே தேசத்துரோகச் சட்டத்தை பிரிடிஷ்-இந்திய ஆட்சியாளர்கள் திட்டமிட்டு இயற்றினர் என மகாத்மா காந்தி கருத்து தெரிவித்தார். தேசத் துரோக வழக்கில் வ. உ. சிதம்பரம்பிள்ளை 1908 முதல் 1912 முடிய வரை சிறையில் அடைக்கப்பட்டார். 2003-ஆம் ஆண்டில் விசுவ இந்து பரிசத் பொதுச் செயலாளர் பிரவீன் தொகாடியா தேசத் துரோக வழக்கில் கைது செய்யப்பட்டார். 2010-இல் எழுத்தாளர் அருந்ததி ராய் காஷ்மீர் பிரிவினைவாதம் மற்றும் மாவோயிஸ்டுகளுக்கு ஆதரவாகவும், இந்திய அரசுக்கு எதிராகவும் எழுதியதற்கு தேசத் துரோக வழக்கில் குற்றம் சாட்டப்பட்டார்.

பிரிவு 124 க்கு ஆதரவான கருத்துக்கள்: இந்திய தண்டனைச் சட்டம், பிரிவு 124 ஏ தேசப் பிரிவினைவாதிகள் மற்றும் தீவிரவாதிகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்படுகிறது. வன்முறை மற்றும் சட்டவிரோதமாக அரசை அகற்றுவதற்கான முயற்சிகள் நடந்தால், அவற்றிலிருந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை இந்தச் சட்டம் பாதுகாக்கிறது. அரசின் நிலையான தன்மை, தேசத்தின் ஒற்றுமைக்கும் பொருளாதாரத்துக்கும் முக்கியமானதாகும். நீதிமன்ற அவமதிப்பு செய்தால், தண்டனை வழங்கப்படுவது போல அரசை அவமதித்தால் தண்டனை கிடைக்கும் என்பதை இந்தச் சட்டம் உறுதி செய்கிறது’ என இதன் ஆதரவாளர்கள் கருதுகின்றனர். பல மாநிலங்களில் மாவோயிஸ்ட்டுகள் கிளர்ச்சி செய்து வருகின்றனர். இவர்கள் அரசைக் கவிழ்க்க முயன்று, பல்வேறு கிளர்ச்சிகளில் ஈடுபடுகின்றனர். வடகிழக்கு மாநிலங்களில், காஷ்மீரத்தில் தேசவிரோத குழுக்கள் வெளிப்ப்டையாகவே, ஆயுதம் ஏந்தி போராடி வருகின்றன. இவற்றைத் தடுத்து, அரசை நிலைநாட்ட இந்தச் சட்டம் பயன் படுத்தப்படுவதாக இதன் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். 03-07-2019  அன்று நாடாளுமன்றத்தில் பேசிய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய், “எந்தக் காரணத்தைக் கொண்டும் தேசத்துரோக சட்டம் ரத்து செய்யப்படாது, தேச விரோத, பிரிவினைவாத மற்றும் பயங்கரவாதிகளைத் திறம்பட எதிர்த்துப் போராடுவதற்காகவே இந்தச் சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது,” என்றார்.

பிரிவு 124 க்கு எதிர் கருத்துகள்: தேசத்துரோகச் சட்டம், காலனிய ஆதிக்கத்தின் நினைவாக இன்னும் இந்தியாவில் இருந்து கொண்டிருக்கிறது. ஜனநாயக நாட்டுக்கு இதுபோன்ற சட்டங்கள் பொருந்தாது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் தன் குடிமக்களுக்குத் தந்த பேச்சு சுதந்திரத்தை இந்தச் சட்டம் பறிக்கிறது’ என்று இந்தச் சட்டத்தை எதிர்ப்பவர்கள் கூறுகின்றனர். அரசின் கருத்துக்கு எதிராக நிலைப்பாட்டைக் கொண்டிருப்பது, விவாதம் நடத்துவது ஜனநாயகத்திற்குத் தேவையான அத்தியாவசியமான விஷயங்கள். ஆட்சியாளர்களைக் கேள்வி கேட்கும் உரிமை, விமர்சிக்கும் உரிமை மக்களின் அடிப்படைத் தேவை. “தேசத்துரோக வழக்கை வைத்து இந்தியர்கள் மீது அடக்குமுறையை ஏவிய, பிரிட்டன் தன் நாட்டில் தேசத்துரோக சட்டத்தையே ரத்து செய்து விட்டது. இந்தியாவில் இந்தச் சட்டம் இன்னும் பயன்பாட்டில் இருப்பது ஏன்?,” என்கிற கேள்வியும் இந்தச் சட்டத்தை எதிர்ப்பவர்களிடம் எழுகிறது.

கேதார் நாத் சிங் வழக்கும், தீர்ப்பும்: தேசத் துரோகம் தொடர்பான இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 124(அ) குறித்து தேசிய அளவில் தீவிர விவாதம் எழுந்துள்ளது. மூன்றாண்டுகள் முதல் ஆயுட்காலம் வரையிலும் நீட்டிக்கக்கூடிய சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனை விதிக்க இப்பிரிவு வகைசெய்கிறது. மத்திய அரசின் பார்வையோ நடைமுறையில் இருந்துவரும் இந்தச் சட்டப்பிரிவு மேலும் தொடர வேண்டும் என்பதாகவே இருக்கிறது. இச்சட்டப்பிரிவு செல்லும் என்று 1962-ல் அளிக்கப்பட்ட கேதார் நாத் சிங் வழக்கின் தீர்ப்பையே உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு பின்பற்ற வேண்டும் என்ற அரசு வழக்கறிஞர்களின் வாதங்களை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை. கேதார் நாத் சிங் வழக்கின் தீர்ப்பில் தேசத் துரோகச் சட்டப்பிரிவை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டபோதிலும்கூட, அப்பிரிவு தவறாகப் பயன்படுத்தக்கூடாது என்பதற்கான கட்டுப்பாடுகளையும் விதித்தது. வன்முறையைத் தூண்டிவிடவோ அல்லது அதற்கு அழைப்புவிடுக்கவோ செய்யாதபட்சத்தில், அரசின் மீது கூறப்படும் விமர்சனங்கள் தேசத் துரோகம் ஆகாது என்று அத்தீர்ப்பு வரையறுத்தது.

வினோத் துவாவின் விமர்சனம், அரசியல் ரீதியிலான முறையீடு: தற்போது தொடரப்பட்டிருக்கும் வழக்கு இமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் வினோத் துவா, பெருந்தொற்றின்போது புலம்பெயர் தொழிலாளர்களின் பிரச்சினைகளை மத்திய அரசு எதிர்கொண்ட விதத்தை விமர்சனம் செய்து தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் அவருக்கு எதிராகத் தொடரப்பட்ட தேச விரோதக் குற்றச்சாட்டைத் தொடர்ந்து எழுந்ததாகும்[5]. வினோத் துவா மீதான இக்குற்றச்சாட்டை, இரண்டு நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு ஏற்கெனவே தள்ளுபடி செய்துவிட்டது. தன் மீதான முதல் தகவல் அறிக்கையை ரத்துசெய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனு செய்திருந்த வினோத் துவா, குறைந்தபட்சம் பத்தாண்டு காலம் ஊடகங்களில் பணிபுரிந்த பத்திரிகையாளர்கள் மீது இக்குற்றச்சாட்டைப் பதிவுசெய்யும் முன்னர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அல்லது அவரால் நியமிக்கப்பட்டவர், எதிர்க்கட்சித் தலைவர், மாநில உள்துறை அமைச்சர் ஆகியோரைக் கொண்ட குழுவிடம் முன்கூட்டி ஒப்புதல் பெறப்பட வேண்டும் என்று உத்தரவிடுமாறும் கோரியிருந்தார். உள்நோக்கம் கொண்ட இக்கோரிக்கையில், அரசியல் இருப்பது வெளிப்பட்டது. சட்டப்பிரிவு தவறாகப் பயன்படுத்தப்படக் கூடாது என்ற நோக்கில் அவர் கோரிய இந்த வேண்டுதலை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை[6].

© வேதபிரகாஷ்

15-05-2022


[1] தினமலர், லட்சுமண ரேகையை கடக்க வேண்டாம்:சுப்ரீம் கோர்ட் உத்தரவு குறித்து மத்திய அமைச்சர்,மாற்றம் செய்த நாள்: மே 11,2022 19:06

[2] https://m.dinamalar.com/detail.php?id=3027322

[3] தினகரன், தேச துரோக சட்டம் மறு பரிசீலினை: ஒன்றிய அரசு, 2022-05-09@ 16:05:06.

[4] https://www.dinakaran.com/news_detail.asp?Nid=763940

[5] தமிழ்.இந்து, தேசத் துரோகம் என்னும் காலனிய எச்சம்!,, செல்வ புவியரசன், Published : 09 May 2022 06:46 AM; Last Updated : 09 May 2022 06:46 AM

[6] https://www.hindutamil.in/news/opinion/columns/797680-treason-1.html

திராவிட ஆட்சிகளில் தேசத் துரோக வழக்குகளும், அவற்றின் பின்னணியும் –  திராவிடஸ்தான் முதல் திராவிடியன் ஸ்டாக் வரை – தேசிய அளவில் உள்ள வழக்குகளுடன் அவற்றை ஒப்பிட முடியாது (2)

மே 15, 2022

திராவிட ஆட்சிகளில் தேசத் துரோக வழக்குகளும், அவற்றின் பின்னணியும்  திராவிடஸ்தான் முதல் திராவிடியன் ஸ்டாக் வரைதேசிய அளவில் உள்ள வழக்குகளுடன் அவற்றை ஒப்பிட முடியாது (2)

திராவிடஸ்தான் முதல் மாநில சுயயாட்சி வரை: 1930-40களில் தனித்தமிழ் இயக்கம், திராவிட இனக் கட்டுக்கதைகளை வளர்த்தன. சைவம் என்ற போர்வையில், வைணவத்தை எதிர்த்து, தெலுங்கு பேசும் மக்களை அவமதித்த போக்கு, நீதிகட்சியைக் குலைத்து, திராவிட கழக போர்வையில், தமிழக பிரிவினை உருவெடுத்தது[1]. திராவிடஸ்தான் என்று ஆரம்பித்து, “அடைந்தால் திராவிட நாடு, இல்லையென்றால் சுடுகாடு” என்று சென்று, பிறகு, எல்லாமே குப்பையில் என்றாகியது. ஆனால், அத்தகைய தேசவிரோத கொள்கையிலிருந்து மற்ற மொழி மக்கள் வேறுபட்டனர். 1940-50 திராவிட இனவெறி கட்டுக் கதைகளினால் தான், முதலில் ஆந்திரா தனியாகப் பிரிந்தது, முதல் மொழிவாரி மாநிலமானது. தொடர்ந்து “தமிழ்” தான் உயர்ந்தது, அதிலுருந்து தான் மற்ற மொழிகள் தோன்றின என்பதனை சாதாரண மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. குறிப்பாக, தெலுங்கு மக்கள் ஒப்புக் கொள்ளவில்லை. பட்டிபோர்லு [Bhattiporlu] வரிவடிவங்களை [script] மற்றும் கல்வெட்டுகளை [inscriptions] வைத்துக் கொண்டு, தெலுங்கு வரிவடிவம் BCE மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று வாதிட்டனர்.

1950-70களில் பெரியார்-அண்ணா திராவிட நாட்டை குப்பைத் தொட்டியில் போட்டனர்: பெரியார் ஆதித்தனாருடன் சேர்ந்து “திராவிட நாடு” தேவையில்லை என்றே பேசினார். அண்ணாவைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை, முதலமைச்சர் ஆக வேண்டும், தேதலில் நிற்க்கவேண்டும் என்றால், பிரிவினை பேச முடியாது. அதனால், திராவிடஸ்தானும் போய் விட்டது, திராவிட நாடும் மறந்து விட்டது, “தமிழ் நாடு” என்பதில் திருப்தி பட்டு, சுருங்கி விட்டனர். அப்படியிருந்த நிலையில், இப்பொழுது, ஸ்டாலின் “திராவிடியன் ஸ்டாக்” என்று பேசியதை / பேசுவதை கவனிக்கலாம். யாரோ தவறாக சொல்லிக் கொடுத்திருக்கின்றனர் போலும். “திராவிடியன் மாடல்” வசனங்கள் வேறு தொடர்கின்றன. அவை, “ஒன்றிய” அரசுக்கு எதிராக இருக்கிறன. கூட கவர்னர் எதிர்ப்பு வேறு. இவையெல்லாம் தேசவிரோதம் ஆகுமா, தேசாபிமானம் ஆகுமா என்று தெரியவில்லை. “மாநில சுயயாட்சி” வாதம், டிவி விவாதங்களில் எதிரொலிக்கின்றன. திமுக-திக-கம்யூனிஸ்ட் வகையறாக்கள் இதில் சளைத்தவர்கள் அல்லர்.

எம்,ஜி.ஆருக்குப் பிறகு பிரிவினைவாடம் குறைந்தது: “தமிழ்நாடு” உருவானபோது கூட, எல்லை தகராறுகளில் கேரளா, ஆந்திரா மற்றும் ஆந்திராவுடன் எதிராகவே இருந்தது. தமிழநாட்டைத் தவிர மற்ற மாநில மக்கள் தாங்கள் “திராவிடர்கள்” என்றெல்லாம் ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால், திராவிடத்துவ சித்தாந்தம் தமிழ்நாடு மாநிலத்துடன் சுருங்கி விட்டது. 1950-60களில், “இந்தி-எதிர்ப்பை” கையில் எடுத்து உசுப்பி விட்டனர். 1960-70களில் மேடை பேச்சு, சினிமா வைத்டுக் கொண்டு ஆட்சியைப் பிடித்தனர். 1980-70களில் காவிரி பிரச்சினையில், முன்னர் பாமகவினால், அதிகமாகவே வெறியூட்டப் பட்டு, பிறகு திராவிட பிரிவினைவாதிகளால் தீயூட்டப் பட்டது. அப்பொழுது, இங்கு “உடுப்பி” ஹோட்டல்கள் அடித்து நொறுக்கப்பட்டன. ஶ்ரீ ராகவேந்திர மடங்களும் தாக்கப்பட்டன.  1970-80களில் எம்ஜிஆரால் பிரிவினைவாதம் கொஞ்சம் குறைந்தது. “மாநில சுயயாட்சி” போர்வையில், அவ்வப்போது, திராவிடத்துவ சித்தாந்திகள் பேசுவது வழக்கமாக இருக்கிறது.

ஆரியன்திராவிடன்இனவாதம் முதல் திராவிடியன் ஸ்டாக் இனவெறிவாதம் வரை: திராவிட சித்தாந்திகள் தமிழரை, தமிழகத்தை பிரித்து வைத்து, துவேசத்தை வளர்த்து வருவது: தமிழகத்தில் கடந்த நூறாண்டு காலத்தில், –

  • தமிழ்-தமிழரல்லாதவர்,
  • திராவிடன் – ஆரியன்,
  • தென்னகத்தவன் – வடக்கத்தியன்,
  • வடக்கு வாழ்கிறது-தெற்கு தேய்கிறது
  • ஹிந்தி-ஹிந்தி-திணிப்பு
  • ஹிந்தி-எதிர்ப்பு இந்தி-திணிப்பு

போன்ற பிரச்சாரங்களால், மற்ற மொழி பேசும், மற்ற மாநிலத்தவர் மீது, மனங்களில் துவேசத்தை வளர்த்து கொண்டிருக்கிறார்கள். “வந்தேறி” தத்துவம் எப்பொழுதுமே உணர்ச்சிப் பூர்வமாக எடுத்துக் கொண்டு, மற்றவர்களைத் தாக்கப் பயம் படுத்தப் பட்டு வருகிறது. பிராமணர், மார்வாடி, குஜராத்தி, வடவிந்தியன் போன்ற பிரிவினை துவேசம் இன்றும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.யைப்பொழுது அது “குஜராத்திற்கு” எதிராக இருக்கிறது. எந்த பிரச்சினை என்றாலும், “தமிழன்” என்று தான் அடைமொழி போட்டு செய்தி போடுவது, ஊடகங்களுக்கும் வாடிக்கையாக இருக்கிறது. ஶ்ரீலங்கா மதப்பிரச்சினை என்றாலும், “தமிழர்-முஸ்லிம்” என்று தான் செய்திகள் வெளியிட்டு, மதப்பிரச்சினையை மறைக்கப் பார்த்தனர்.

2021ல் ஸ்டாலின், திராவிடியன் ஸ்டாக் என்று கிளம்பியுள்ளார்: முத்துவேலர் கருணாநிதி ஸ்டாலின் என்கின்ற நான் என்று பதவியேற்று, தான் திராவிடியன் ஸ்டாக் என்று குறிப்பிட்டுக் கொண்டாலும், விளம்பர அரசியல் நடத்திக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் தான், திராவிட மொழி பேசும், தனிநாடு கேட்கும், திராவிட இனத்தவரான பலூச்சிஸ்தான் மக்கள் ஜின்னாவில் சிலையை தகர்த்துள்ளனர். இங்கு, கருணாநிதிக்கும், பெரியாருக்கும் சிலைகள் வைப்போம் என்று கிளம்பியுள்ளனர். பிரஹூயி, பிரோஹி, பிரஹூய், என்றெல்லாம் குறிப்பிடப் படுகின்ற மொழி திராவிடக் குடும்ப மொழி என்று திராவிடத்துவ வாதிகள் தம்பட்டம் அடித்துக் கொள்கிறார்கள், இன்றும் மேடைகளில் டமாரம் அடிக்கிறார்கள்! பிறகு, அம்மொழி பேசும் மக்களைக் கொடுமைப் படுத்தும் பாகிஸ்தானை ஏன் திராவிடத்துவ வாதிகள் கண்டு கொள்வதில்லை?

பொருளாதாரம்நிதி என்று வந்தால் சித்தாந்தம் முடங்கி விடும்: “காவிரி பிரச்சினை” என்றாலும், திராவிட அரசியல்வாதிகளின்  கையாலாகாத விசயத்தை மறைத்து, கர்நாடகாவை, கன்னட மொழி பேசுபவர்கள் மீது வெறுப்பை-காழ்ப்பை வளர்த்து வருகின்றனர். அதற்கு சத்தியராஜ், விவேக் போன்ற நடிகர்களும் உடந்தையாக இருந்தனர். ஒரு திரைப்படத்தில், “இது பெங்களூரு கத்தரிக்காய், காவிரி நீரால் வளர்ந்து பெரிதாக இருக்கிறது, அது தமிழக கத்திரிக்காய், சிறிதாக இருக்கிறது, காவிரி நீர் கிடைத்தால், அதுவும் பெரிதாக வளரும்,” என்று சொல்வது, பிரிவினையின் வக்கிரகத்தைத் தான் வெளிக்காட்டியது. ஐடியால் கர்நாடகா வளர்ந்த நிலையிலும், வியாபார சம்பந்தங்களினாலும், இப்பொழுது அடக்கி வாசிக்கப் படுகிறது. சன்–குழுமங்களின் தொடர்புகள் அறிந்த விசயமே. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, அவை வேறு வகையிலும் செயல்படுகின்றன. பொருளாதாரம், நிதியுதவி, திட்டங்கள் என்றெல்லாம் வரும் பொழுது, “ஒன்றியம்”என்று வேலை செய்யாது. தொடர்ந்து கவர்னரை எதிர்த்து வந்தாலும், வினையில் தான் சென்று முடியும்.

தேசத் துரோகம் எல்லாவற்றிலும் தான் செயல்படுகிறது: தினம்-தினம் கொலைகள், தற்கொலைகள், செக்ஸ்-வக்கிர வன்மங்கள் (அப்பா மகளை கற்பழிப்பது, மாமனார் மறுமகளிடம் எல்லை மீறுவது), வன்முறைகள், குடும்பசீரழிவுகள், கணவன்–மனைவி உறவுகள் சீரழிதல், தாம்பத்தியத்தை மீறிய உறவுகள், குடும்பக் கொலைகள் (அப்பா மனனைக் கொல்லுதல், மகன் அப்பாவைக் கொல்லுதல் முதலியன), குறைந்து வரும் மாணவ-மாணவியர் ஒழுக்கம், நடத்தை, லஞ்சத்தைப் பற்றி சொல்லவே வேண்டாம், தினம்-தினம் கைது, சஸ்பெண்ட் என்ற செய்திகள்…இந்நிலையில் திராவிடக் கட்சிகள் பரஸ்பர குற்றச் சாட்டுகள் சொல்லிக் கொண்டு தப்பிக்க / காலந்தள்ள முடியாது. விலைவாசிகள் ஏறுகின்றன என்றால், வியாபர ஒழுக்கம், வணிக தராதரம், முதலியவைப் பற்றி கண்டுகொள்வதில்லை. சங்கங்கள் மூலம் அரசியல் செய்யும் போது, கூட்டுக் கொள்ளைதான் அடிக்கிறார்கள். தக்காளியை ரோடிலும் கொட்டுவார்கள், ரூ.100/-க்கும் விற்பார்கள். கேட்டால் பெரிய பொருளாதார நிபுணன் போல, சப்ளை-டிமான்ட் என்றெல்லாம் கூடப் பேசுவான் திராவிட வியாபாரி.

© வேதபிரகாஷ்

15-05-2022


[1]  இப்பொழுதும் சரவணன், சென்னைப் பல்கலை, சைவசித்தாந்த துறை, போன்ற கும்பல்கள், சைவர் இந்துக்கள் அல்லர் என்று சொல்லி வருகின்றனர். பேஸ்புக்கிலும், இந்த வாத-விவாதங்கள் தொடர்கின்றன.

திராவிட ஆட்சிகளில் தேசத் துரோக வழக்குகளும், அவற்றின் பின்னணியும் – தேசிய அளவில் உள்ள வழக்குகளுடன் அவற்றை ஒப்பிட முடியாது (1)

மே 15, 2022

திராவிட ஆட்சிகளில் தேசத் துரோக வழக்குகளும், அவற்றின் பின்னணியும் தேசிய அளவில் உள்ள வழக்குகளுடன் அவற்றை ஒப்பிட முடியாது (1)

தமிழகத்தில் இரண்டாவதாக அதிக தேசதுரோக வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன: தமிழகத்தில் கடந்த 2010 முதல் 2020ம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சியில் அதிகளவு தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டதால், நாட்டிலேயே 2வது இடத்தை பெற்றுள்ளது[1]. இவ்விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் விசாரணை நடத்தி வரும் நிலையில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது[2] என்று தினகரன் கூறுவது வேடிக்கைதான். தேச துரோகம் தொடர்பான இந்திய தண்டனைச் சட்டத்தின் 124ஏ பிரிவு குறித்து உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்தச் சட்டத்தை மறுபரிசீலனை செய்யத் தேவையில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு  தரப்பு வாதாடி வந்தது. ஆனால், இந்தச் சட்டம் தவறாகப்  பயன்படுத்தப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க முடியும் என்று ஒன்றிய அரசின் தரப்பில் கூறப்பட்டது. அதனால், தற்போது நிலுவையில் இருக்கும் தேசதுரோக வழக்குகளையும், இடைப்பட்ட காலத்தில் பதிவு செய்யப்பட்ட தேசதுரோக வழக்குகளையும் எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பான விபரங்கள் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பிரிவினைவாதம் பேசப் படுவது புதியதல்ல: அதிமுக ஆட்சியில் அதிகம், திமுக ஆட்சியில் அதிகம் / குறைவு என்பதெல்லாம் விசயமே இல்லை, ஏனெனில், தமிழ்-தமிழ்நாடு-தமிழ்தேசம்-தமிழ்தேசியம் என்றெல்லாம் பேசி பிரிவினைவாதத்தில், பிரிவினையில் ஈடுபட்டவர்கள், ஈடுபட்டு வருபவர்கள் அதிகமாக இருக்கின்றனர். கருணாநிதி முதலமைச்சராக இருந்த பொழுது அத்தகையோரின் மாநாடுகளுக்கு தடை விதித்துள்ளனர். கொடைக்கானல் டிவி நிலையத்தில் குண்டுவெடிப்பு, மீன்சுருட்டியில் இந்தியன் வங்கி கொள்ளை-கொலை……போன்றவை ஞாபகத்தில் கொள்ளலாம். தமிழீழம் போர்வையிலும், பல குழுக்கள் செயல் பட்டு வந்தது-வருபவை அறியப் பட்டவையே. இப்பொழுது கிலாபா போர்வையில் முஸ்லிம் குழுக்கள் வேலை செய்து வருகின்றன. ஆகவே, தமிழகத்தில் “ஒன்றிய” போர்வையில் நடந்து வரும் பேச்சுகளும் கவனிக்கப் பட்டு வருகின்றன. “மாநில சுயயாட்சி,” “திராவிடியன் ஸ்டாக்,” “திராவியன் மாடல்” என்பவை எல்லாம் அவற்றின் முகமூடிகளே. ஏனெனில், இப்பொழுது இனம், இனவாதம் எல்லாம் யாரும், எந்நாடிலும் பேசுவதில்லை.

ஐபிசியின் பிரிவு  124ன் கீழ் தேசத்துரோக வழக்கு பதிவு: தேசதுரோக வழக்கின்படி, எந்தவொரு நபரும் அரசுக்கு எதிரான கருத்துக்களை எழுதினாலோ அல்லது பேசினாலோ அல்லது அத்தகைய உள்ளடக்கத்தை ஆதரித்தாலோ அல்லது தேசிய சின்னங்கள் மூலம்  அரசியலமைப்பை இழிவுபடுத்த முயன்றால், அவர் மீது ஐபிசி-யின் பிரிவு  124ஏ-ன் கீழ் தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்படலாம். மேலும், தேச விரோத அமைப்போடு தொடர்புடையவராகவோ அல்லது அவர்களுக்கு உடந்தையாக செயல்பட்டால் அவருக்கு எதிராகவும் தேசத்துரோக வழக்கு பதிய முடியும். இந்நிலையில், தேசத் துரோகச் சட்டம் குறித்த விவாதங்களுக்கு மத்தியில் அதிர்ச்சித் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது என்று தினகரன் குறிப்பிடுவது தமாஷான விசயம் தான். எல்லாவற்றையும் அதிமுக ஆட்சியின் மீது பழி போட்டு தப்பித்துக் கொள்ள முடியாது. இந்த ஐந்தாண்டுகள் பற்றி, பிறகு தான் எடைபோட முடியும். தங்களுக்குத் தானே சான்றிதழ் கொடுத்துக் கொள்ளலாம், ஆனால், மக்களை ஏமாற்ற முடியாது.

2010-2022 ஆண்டுகளில் பதிவான வழக்குகள் எண்ணிக்கை: நாடு முழுவதும் கடந்த 2010ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரை அதிகளவு தேசத்துரோக வழக்குகளை பதிவு செய்த மாநிலமாக பீகார் உள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் தமிழ்நாடு உள்ளது. தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்ட அறிக்கையின்படி, கடந்த 2010ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரை, பீகாரில் மட்டும் 168 தேசதுரோக வழக்குகள் பதிவாகியுள்ளன. தொடர்ந்து –

தமிழ்நாட்டில் – 139, உத்தரப் பிரதேசத்தில் – 115, ஜார்கண்ட்டில் -62, கர்நாடகாவில் – 50, ஒடிசாவில் – 30, அரியானாவில் – 29, ஜம்மு காஷ்மீரில் – 26,மேற்குவங்கத்தில் – 22, பஞ்சாப்பில் – 21, குஜராத்தில் – 17, இமாச்சல் பிரதேசத்தில் – 15, டெல்லியில் – 14, லட்சத்தீவில் – 14, கேரளாவில் – 14

என்ற வரிசையில் வழக்குகள் பதிவாகி உள்ளன. இதில் திமுக அரசு பெருமைப் பட்டுக் கொள்வதில் ஒன்றும் இல்லை. இந்த ஒரு வருடத்தில், இந்துவிரோத செயல்கள் எவ்வளவு நடந்துள்ளன என்பதை கவனிக்கலாம். அவையெல்லாம் பெருமை சேர்ப்பவை அல்ல. ஒரு நிலையில் அவையும் தேசவிரோதம் ஆகும்.

வழக்குகள் அதிகம், ஆனால், குற்றம் நிரூபிக்கப் படுவது குறைஆக உள்ளது: மேலும், கடந்த 2016 மற்றும் 2019 ஆண்டுக்கு இடையில், தேசத்துரோக வழக்குகளின் எண்ணிக்கை 160 சதவீதம் (93 வழக்குகள்) அதிகரித்துள்ளது. ஆனால் 2019ம் ஆண்டில் தண்டனை விகிதம் என்று பார்த்தால் 3.3 சதவீதமாக உள்ளது. குற்றம் சாட்டப்பட்ட 93 பேரில் இருவர் மட்டுமே குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தை பொருத்தமட்டில் 2010ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரை அதிகளவு தேசத்துரோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அந்த காலக் கட்டத்தில் தமிழகத்தில் அதிமுக ஆட்சி நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது, என்று தினகரன் குறிப்பிட்டு சந்தோசப்படுகிறது. ஆனால், திமுகவின் பிரிவினைவாதம் உலகம் அறிந்தது. இப்பொழுதைய “ஒன்றிய” நிலை தொடர்ந்து, கவர்னர் தாக்கப் பட்டால், த்ஹிராவிடியன் மாடல் தகர்ந்து விடும். சடம்-ஒழுங்கு சீரழிந்து கொண்டிருந்தால், முடிவு வேறு மாதிரி சென்று விடும்..

152 ஆண்டுகள் பழமையான தேசவிரோத சட்டத்தை தற்காலிகமாக நிறுத்திவைத்தது: 152 ஆண்டுகள் பழமையான தேசவிரோத சட்டத்தை தற்காலிகமாக நிறுத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது[3]. 124 ஏ சட்டத்தின் கீழ் வழக்கு பதியவும் தடை விதித்துள்ள உச்ச நீதிமன்றம், தேச துரோக சட்டத்தின் கீழ் சிறையில் உள்ளவர்கள் ஜாமீன் பெற விண்ணப்பிக்கலாம் எனவும் கூறியுள்ளது[4]. ஆங்கிலேயே காலனிய ஆட்சியின்போது அரசுக்கு எதிராக விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடுபவர்களை ஒடுக்கும் விதமாக தேசத்துரோக வழக்குகள் பதியப்பட்டன. நாடு விடுதலை பெற்ற பின்னரும் காலனிய சட்டமான தேசத் துரோக வழக்கு பதியப்பட்டு வருகிறது.இந்நிலையில், அரசுக்கு எதிராக குரல் எழுப்பும் சமூக ஆர்வலர்கள், அரசியல் தலைவர்கள், பத்திரிக்கையாளர்கள் மீது  124A சட்டப்பிரிவின் கீழ் தேசத் துரோக வழக்குப் பதியப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டு வருகிறது. எனவே, காலனியத்துவ தேசத்துரோக வழக்கு சட்டப்பிரிவான 124A-ஐ ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை எழுப்பப்பட்டது.

பத்திரிக்கை சங்கங்கள் வழக்கு தொடர்ந்தன: தேச துரோக சட்டத்துக்கு தடைகோரி எடிட்டர்ஸ் கில்டு, பத்திரிக்கையாளர் அருண் சோரி, எம்பி மௌவா மைத்ரா, பி.யு.சி.எல் உள்ளிட்டோர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா, நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் ஹிமா கோஹ்லி ஆகியோர் அடங்கிய மூன்று நீதிபதிகள் அமர்வு இந்த வழக்கை விசாரித்து வருகிறது. வழக்கு 11-05-2022 அன்று விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசும் மாநில அரசுகளும் தேச விரோத சட்டத்தை பயன்படுத்த இடைக்கால தடை விதித்தது[5]. தலைமை நீதிபதி அமர்வு, அதனையும் மீறி ஏதேனும் வழக்குகள் எங்காவது பதிவு செய்யப்பட்டால் நீதிமன்றத்தை நாட உத்தரவிட்டது[6]. இதுதொடர்புடைய வழக்குகளை நீதிமன்றங்கள் விரைந்து முடிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. இந்த சட்டத்தை பயன்படுத்தாமல் இருக்க மத்திய அரசு மாநிலங்களுக்கு கூடுதல் ஆலோசனைகளை வழங்கலாம் எனவும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ஏற்கனவே கைது செய்யப்பட்ட 13 ஆயிரம் பேர் நீதிமன்றங்கள் மூலம் ஜாமின் பெற்றுக்கொள்ளவும் உச்சநீதிமனறம் அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

© வேதபிரகாஷ்

15-05-2022


[1] தினகரன், 2010 முதல் 2020ம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சியில் தேச துரோக வழக்கு பதிந்ததில் தமிழ்நாடு 2வது இடம்: சுப்ரீம் கோர்ட் விசாரணைக்கு மத்தியில் அதிர்ச்சி தகவல், 2022-05-11@ 15:05:14.

[2] https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=764520 

[3] NEWS18 TAMIL, தேச துரோக வழக்கு பதிய உச்ச நீதிமன்றம் தடை.. சட்டம் தற்காலிகமாக நிறுத்திவைப்பு, Published by:Murugesh M, LAST UPDATED : MAY 11, 2022, 13:41 IST. First published: May 11, 2022, 13:40 IST.

[4] https://tamil.news18.com/news/national/breaking-sedition-law-in-abeyance-supreme-court-urges-centre-states-not-to-file-firs-invoking-section-124a-mur-743986.html

[5] தமிழ்.இந்தியன்.இக்ஸ்பிரஸ், அரசு மறுபரிசீலனை செய்யும் வரை தேச துரோக விசாரணையை நிறுத்தி வைத்த உச்ச நீதிமன்றம்!, Written by WebDesk, Updated: May 11, 2022 10:05:24 pm

[6] https://tamil.indianexpress.com/india/supreme-court-interim-order-on-sedition-section-124a-centre-452724/

சீமான் – பிரபாகரன் சந்திப்பு: திராவிடத்துவ பொய்களா, உண்மை மறுப்பா, சரித்திர மறைப்புகளா, நடப்பது என்ன?

திசெம்பர் 2, 2019

சீமான் – பிரபாகரன் சந்திப்பு: திராவிடத்துவ பொய்களா, உண்மை மறுப்பா, சரித்திர மறைப்புகளா, நடப்பது என்ன?

V. Prabhakaran with Anton Balasingham

திராவிடத்துவாதிகளின் சமகால நிகழ்வுகளைப் பற்றி பலவித கருத்துகள் ஏன்?: ஈவேரா பேசியது எழுதியது என்று பல குறும்புத்தகங்கள், தொகுப்பு நூல்கள் பலர், பலவிதமாக வெளியிட்டிருக்கிறார்கள் என்பது பற்றி முன்னமே எடுத்துக் காட்டியுள்ளேன். ஈவேரா யாரை சந்தித்தார் என்ன பேசினார் என்பது பற்றிக் கூட தெளிவான தகவல்கள் இல்லை. ஏன் ஜின்னா-அம்பேத்கரை சந்தித்தது பற்றியே தெளிவான உண்மையான தகவல்கள் இல்லை. அந்நிலையில் இப்பொழுது, சீமான் சொன்னதை விமர்சித்து திராவிட கட்சிகள், விமர்சித்திருப்பது நோக்கத்தக்கது. அறுபது எழுபது ஆண்டுகளுக்குள் நிகழ்ந்த நிகழ்வுகளைப் பற்றியே இவ்விதமாக, மாறுபட்ட கருத்துகள் இருப்பது அல்லது இல்லாமல் இருப்பது வியப்பாக இருக்கிறது. இவர்கள் உண்மையில் நடந்த நிகழ்வுகளை பதிவு செய்து இருக்கிறார்களா அல்லது பதிவு செய்யப்பட்டதை மறைக்கிறார்களா என்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு தோன்றுகிறது.

V. Prabhakaran with Seeman

சீமான் பிரபாகரனை சந்தித்த விவகாரமும், சர்ச்சையும்: பிரபாகரன் மற்றும் ராஜிவ் கொலையாளிகள் பற்றிய விவரங்கள் எப்படி அரசியலாக்கப் பட்டிருக்கின்றனவோ, அதே போலத்தான், இஅந்த விவகாரமும் இருக்கிறது. இறந்த மனிதன் வந்து சாட்சி சொல்லப் போவதில்லை. பிரபாகரனைச் சந்தித்த பல நேரங்களில் கண்ணீரே என் பதில் என, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்[1]. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் 65-வது பிறந்த நாள் விழா, நவ.26, 2019 அன்று) சென்னை போரூரில், நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்றது[2]. எல்.டி.டி.இ தடை செய்யப் பட்ட இயக்கமாக இருந்தாலும்,ஐத்தகைய கூட்டங்கள் தொடர்ந்து நடத்தப் பட்டு வருகின்றன. இந்நிகழ்வில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பிரபாகரனை நேரில் சந்தித்தது குறித்துப் பேசினார்[3]. அப்போது, “பிரபாகரனை நேரில் சந்தித்தபோது, நான் என்ன உணவு உண்டேன் என்பதைக் கூட விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த ஒருவர் எழுதிக்கொண்டிருந்தார். “சாப்பிடுவதை ஏன் எழுதுகிறீர்கள்என அவரிடம் நான் கேட்டேன். அதற்கு நான் என்ன சாப்பிடுகிறேன் என்பதை பிரபாகரனுக்கு அனுப்ப வேண்டும் எனத் தெரிவித்தார். ஒரு தலைவர் தன் தம்பி என்ன சாப்பிடுகிறார் என்பதைக் கூட தெரிந்துகொள்ள வேண்டும் என நினைக்கிறார். அந்த சமயத்தில் அழுவதைத் தவிர எதுவுமே செய்ய முடியவில்லை. பல நேரங்களில் பிரபாகரன் என்னுடன் பேசும்போது கண்ணீரைத் தவிர வேறு பதில் என்னிடம் இருக்காது. குறிப்பாக அவர் எம்ஜிஆரைப் பற்றி பேசும்போது மெய் சிலிர்த்துவிடும். இயல்பாகவே மெதுவாகப் பேசும் பிரபாகரன், எம்ஜிஆரைப் பற்றி பேசும்போது மிகவும் மெதுவாகப் பேசுவார். அந்த நேரங்களில், நான் தலைகுனிந்தபடி அழுது கொண்டேதான் இருப்பேன். அதற்கு முன்பு எம்ஜிஆரை பற்றி எந்த மதிப்பீடும் இல்லை. இலங்கைக்கு வண்டி ஏறும் வரை, நான் கருணாநிதியின் ஆள். ஒரு சத்தியத் தலைவனின் பிறந்த நாளில் நான் சத்தியத்தைப் பேசுகிறேன்“. இவ்வாறு சீமான் பேசினார்[4].

V. Prabhakaran with NNedumaran

அச்சந்திப்பு பற்றி ராஜேந்திரன் வெளியிட்ட அறிக்கை: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனை சந்திக்க சீமானுக்கு 10 நிமிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டது; இதில் 4 நிமிடங்கள் சோதனை செய்வதற்கே போய்விடும் என்று திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச்செயலாளர் விடுதலை ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்[5]. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்[6], “விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனோடு மாதக்கணக்கில் பேசியவர்கள், அவரோடு தங்கியிருந்தவர்கள், போராட்ட களத்துக்கு ஆதரவாக இருந்தவர்கள், போராட்ட களத்தில் உடன் இருந்தவர்கள் , வைகோ, பழ. நெடுமாறன், கொளத்தூர் மணி, கோவை. ராமகிருஷ்ணன் போன்றவர்கள் எல்லாம் பேசாமல் இருக்கிறார்கள்.. ….சினிமா எடுக்க நல்ல இயக்குனர் தேவை என்று தலைவர் கேட்டு கொண்டதன் பேரில் கொளத்தூர் மணி தான் சீமானை தேர்வு செய்து ஈழத்திற்கு அனுப்பி வைத்தார்.. ….தலைவர் பிரபாகரனை சந்திக்க சீமானுக்கு ஒதுக்கப்பட்ட நேரம் பத்து நிமிடம் மட்டும் தரப்பட்டது. அதில் நான்கு நிமிடங்கள் தலைவரை சந்திப்பதற்கு முன்பான சோதனை செய்வதற்கே போய்விடும், நான் தலைவரை சந்தித்த போதும் அப்படி தான் சந்தித்தேன்………..இந்த 10 நிமிட சந்திப்பை வைத்து கொண்டு சீமான் அவர்கள் மாத கணக்கில் பிரபாகரனோடு பேசியதாகவும், அவரோடு தங்கியிருந்ததை போலவும், ஆமைகறி சாப்பிட்டதாகவும் கதை சொல்லி வருவது கைதட்டு வாங்குவதை தாண்டி ஈழத்தமிழர்களுக்கு எந்த பயனும் இல்லை.

Rajendran criticizes Seeman

விடுதலை ராஜேந்திரன் தொடர்ந்து சொன்னது[7]: “அந்த சந்திப்பின் போது உடன் இருந்த புலிகள் தற்போதும் கனடாவில் இருந்து கடிதம் மூலம் கண்டனம் தெரிவித்த பிறகும் அவர் இவ்வாறு பேசிவருவது சரியல்ல என்பதையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார்[8]. தற்போது கோத்தபய ராஜபக்சே இந்தியா வந்த போது வைகோ அவர்கள் வழக்கம் போல் டெல்லியில் கருப்பு கொடி ஆர்ப்பாட்டத்தினை நடத்தினார். நாங்களும் சென்னையில் நடத்தினோம் இவர் எதையுமே செய்யவில்லை. மாறாக பிரபாகரன் படத்தை போட்டுக்கொண்டு தமிழகத்தில் இவர் தான் பிரபாகரன் போன்ற தோற்றத்தை கொடுத்து வருகிறார். சீமானின் பொய் பிததலாட்டத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வருவோம்,” என்றும் விடுதலை ராஜேந்திரன் வைகோ, பழ. நெடுமாறன், கொளத்தூர் மணி, கோவை. ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்[9].

V. Prabhakaran with VAIKO.jpg

இலங்கை எம்.பி சீமானைக் கண்டித்தது: விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் குறித்தும், பிரபாகரன் உடன் இருந்தது குறித்தும், ஈழப் பிரச்சனைகள் தொடர்பாகவும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தேவையில்லாமல் மேடைதோறும் பேசி வருகிறார். இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் இலங்கை மட்டகளப்பு எம்.பி. யோகேஸ்வரன், சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும் போது, சீமான் போன்ற அரசியல்வாதிகள் எல்லா பிரச்சனையும் தீர்ந்த பிறகு, வெறும் பேச்சு பேசி வருவதாக தெரிவித்தார்[10]. மேலும் தமிழ் தேசிய கூட்டமைப்பை விமர்சிக்க, திருமுருகன் காந்திக்கு என்ன அருகதை உள்ளது என்று கேள்வி எழுப்பினார் யோகேஸ்வரன்[11]. விடுதலைப் புலிகள் தாங்கள் செய்கின்ற செயலை ஒப்புக் கொள்ளும் கொள்கை உடையவர்களாக எப்போதும் இருந்துள்ளார்கள். அப்படி இருக்கும் போது ராஜீவ்காந்தியை கொலை செய்ததாக ஒரு போதும் ஒப்புக் கொள்ளவில்லை. ஆனால், இங்குள்ளவர்கள் பேசுகிற பேச்சால் தங்களுக்குத் தான் பிரச்சனை என்றார். அதோடு, சீமான் தாங்கள்தான் கொன்றதாக பொய் பிரச்சாரம் செய்து வருவதாக குற்றம் சாட்டினார். மேலும், தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள், தங்கள் ஆதாயத்திற்கு பேசும் பேச்சால் தங்களுக்கு தான் பிரச்சனை என்று வருந்தியவர். இவர்கள் தொடங்கி வைத்துவிட்டு உட்கார்ந்து விடுவார்கள் பாதிப்பு அங்குள்ள மக்களுக்கு என்பதை புரிந்துகொள்ள வேண்டும் என்றும் பேசினார்.

V. Prabhakaran with others.jpg

ஆராய்ச்சியாளர்கள் கவனிக்க வேண்டியது: ஈவேரா, ஜின்னா அம்பேத்கரை சந்தித்து என்ன பேசினார் என்று தெரியாமல் இருப்பது போல, இங்கும் சீமான் பிரபாகரனை சந்தித்து பற்றி கேள்விகள் எழுப்பப்படுகின்றன. இதெல்லாம் இப்போது தமிழகத்துக்கு வேண்டிய முக்கியமான விஷயங்களா என்று தெரியவில்லை, இருப்பினும் ஊடகங்கள் செய்திகளாக வெளியிட்டு வருகிறார்கள். அவர்களே சீமான் சொன்னது பொய் என்று எடுத்துக் காட்டுகிறார்கள். பிறகு, யார் சொல்வது உண்மை, யார் சொல்வது பொய் என்பது பற்றி மற்றவர்கள் கவலைப்படாமல் இருக்கலாம், ஆனால், ஆராய்ச்சியாளர்களுக்கு இது பெரிய தலைவலியாக, பிரச்சினையாக, மர்மமாக இருக்கிறது ஆராய்ச்சி எனும் பொழுது, ஆராய்ச்சியாளன் மூல ஆவணத்தைப் பார்த்து, படித்து, தன்னுடைய கருத்தை தொகுத்து எழுத வேண்டிய நிலை உள்ளது. ஆனால், இங்கே அடுத்தவர்கள் சொல்வதை, வைத்துக்கொண்டு தான்,ஆராய்ச்சி செய்ய வேண்டிய நிலை உள்ளது. ஆகவே, திராவிடம், திராவிடர் திராவிட இயக்கம் போன்றவற்றில் ஆராய்ச்சி செய்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய அவசியம் உள்ளது.

© வேதபிரகாஷ்

02-12-2019

V. Prabhakaran with MGR

[1] தமிழ்.இந்து, பிரபாகரனைச் சந்திப்பதற்கு முன் நான் கருணாநிதியின் ஆள்: சீமான் பேச்சு, Published : 27 Nov 2019 15:12 pm; Updated : 27 Nov 2019 15:12 pm.

[2] https://www.hindutamil.in/news/tamilnadu/527442-seeman-talks-about-prabhakaran.html

[3] மாலைமலர், பிரபாகரன் பெயரையே என் மகனுக்கும் சூட்டி அவனிலும் அவரையே பார்க்கிறேன்சீமான் நெகிழ்ச்சி, பதிவு: நவம்பர் 26, 2019 11:59 IST.

[4] https://www.maalaimalar.com/news/district/2019/11/26115947/1273253/Prabhakaran-birthday-Seeman-statement.vpf

[5] தமிழ்.ஒன்.இந்தியா, பிரபாகரனை சந்திக்க சீமானுக்கு ஒதுக்கப்பட்டது 10 நிமிடம் மட்டும்தான்..விடுதலை ராஜேந்திரன் , By Mathivanan Maran | Updated: Sunday, December 1, 2019, 19:08 [IST].

[6] https://tamil.oneindia.com/news/chennai/viduthalai-rajendran-comments-on-seeman-s-story-on-prabhakaran-370126.html

[7] https://tamil.asianetnews.com/politics/seman-is-alier-told-viduthalai-rajendran-q1v8f7

[8] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், சீமானின் பொய், பித்தலாட்டத்துக்கு ஒரு அளவே இல்லையா ? கொந்தளித்த விடுதலை ராஜேந்திரன் !!, By Selvanayagam PChennai, First Published 2, Dec 2019, 9:00 AM IST…

[9] https://tamil.asianetnews.com/politics/seman-is-alier-told-viduthalai-rajendran-q1v8f7

[10] நக்கீரன், சீமான் பொய் பேசுவதை நிறுத்தணும்திருமுருகன் காந்தி யாரு?… கடும் எச்சரிக்கை விடுத்த இலங்கை தமிழ் எம்.பி!, Published on 02/12/2019 (17:04) | Edited on 02/12/2019 (17:16)

[11] https://www.nakkheeran.in/24-by-7-news/politics/srilankan-tamil-mp-speech-about-thirumurugan-gandhi-and-seeman

தமிழர்-தமிழரல்லாதோர் பிரச்சினை உருவாக்கப் படக் கூடாது – சட்டத்தைக் கையில் எடுக்கக் கூடாது, கும்பல் கொலைக்கு நியாயம் கற்பிக்கக் கூடாது (2)

மே 17, 2018

தமிழர்தமிழரல்லாதோர் பிரச்சினை உருவாக்கப் படக் கூடாதுசட்டத்தைக் கையில் எடுக்கக் கூடாது, கும்பல் கொலைக்கு நியாயம் கற்பிக்கக் கூடாது (2)

Lynching Tamilnadu style- Pazhaverkadu

கும்பல் கொலை நடதுள்ள விவரங்கள்: திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி, பழவேற்காடு, பெரிய பாளையம், ஆரணி, ஊத்துக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் குழந்தை கடத்தல் பீதி நிலவுகிறது[1]. இதனால் ஊருக்குள் வரும் அப்பாவி வெளியாட்கள் தாக்கப்படும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது[2].

  1. 09-05-2018 அன்று, புலிகேட்டில், வீடில்லாத பாலத்தின் மீதுபடுத்துத் தூக்கிக் கொடிருந்த 45 வயது ஆளை அடித்து உதைத்து அந்த பாலத்திலிருந்தே தொங்கவிட்டனர். இது தொடர்பாக 16 பேர் கைது செய்யப்பட்டனர்.
  2. திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த தம்புகொட்டான்பாறை என்ற இடத்தில், அத்திமூர் முத்துமாரியம்மன் கோயிலுக்கு வழி கேட்டு காரில் வந்தவர்களை, குழந்தை கடத்தல் கும்பல் என்று சந்தேகித்துகிராமத்தினர் அடித்து உதைத்தனர்[3]. அதில் ருக்மணி, 55 / 65 வயது பெண்மணி கொல்லப்பட்டார்[4]. இதுதொடர்பாக, 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்[5]. போலீஸ் நடவடிக்கைக்கு பயந்து கிராம மக்கள் தலைமறைவாகியுள்ளனர்[6]. இப்பகுதிகளிலிருந்து, செம்மரம் கடத்தல் விவகாரத்தில், ஆந்திராவில் அதிகம் கைது செய்யப் படுவது கவனிக்கத்தக்கது.
  3. வேலூரை அடுத்த சிங்கிரிகோவில் என்ற இடத்தில் 09-05-2018 அன்று மாலையில் சாலையில் நடந்த சென்ற 30 வயது மதிக்கத்தக்க ஒரு வட-இந்திய வாலிபரை, குழந்தையை கடத்த வந்தவர் / திருடன் என நினைத்து, அடித்து உதைத்ததில், அவனும் மாண்டான்.
  4. கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள காட்டுமயிலூர் கிராமத்தில் 09-05-2018 அன்று இரவு சுற்றித்திரிந்த வடமாநில பெண் ஒருவரை, குழந்தை கடத்தல் கும்பலை சேர்ந்தவர் என கருதி கிராம மக்கள் மடக்கி பிடித்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த வேப்பூர் போலீசார், அந்த பெண்ணை அங்கிருந்து மீட்டு அழைத்துச்சென்று விசாரித்தபோது அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என தெரியவந்தது. பின்னர் அந்த பெண் சிகிச்சைக்காக விருத்தாசலம் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

போலீஸார், வடநாட்டவருக்கு எதிராக “வாட்ஸ்-அப்” தகவல்களை தவறாகப் பரப்புவதால் அவ்வாறான நிகழ்சிகள் ஏற்படுகின்றன என்கிறார்கள்[7].

Lynching Tamilnadu style- Tiruvannamalai.woman.2

செம்மரக்கடத்தல், அக்குற்றத்தில் ஈடுபடும் தமிழகள், அதை மறைக்க இந்த பிரச்சாரம் என்றால், குற்றங்கள் இன்னும் அதிகமாகும்: செம்மரக் கடத்தல் கைதுகளில் சம்பந்தப் பட்டிருப்பவர்கள், இப்பகுதிகளைச் சேர்ந்தவர் என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம். இதனால், தமிழகத்திற்கும், ஆந்திராவுக்கும் பிரச்சினை உண்டாக்க, திராவிட சித்தாந்திகள் திட்டமிட்டுள்ளார்களா என்றும் யோசிக்க வேண்டியுள்ளது. ஏனெனில், தெலுங்கர்ளுக்கரெதிராகவும் பிரச்சாரம் நடந்து வருகிறது. குழந்தை கடத்தல் தொடர்பான வதந்திகள் வட மாவட்டங்களை கலக்கி வருகின்றன. காஞ்சீபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் குழந்தைகளை கடத்தும் வடமாநில கும்பலின் நடமாட்டம் இருப்பதாக கடந்த சில நாட்களாக வதந்தி பரவி வருகிறது[8]. ‘வாட்ஸ்-அப்’, ‘முகநூல்’ போன்ற சமூக வலைத்தளங்கள் மூலம் பரவும் இதுபோன்ற வதந்திகளால், இதுவரை அப்பாவிகள் பலர் தாக்கப்பட்டு உள்ளனர்[9].குழந்தை கடத்தல் தொடர்பாக வாட்ஸ்-அப்பில் வதந்தி பரப்புவோர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஓராண்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Lynching Tamilnadu style- Tiruvannamalai

எனது தாயை இப்படி அநியாயமாகச் சந்தேகித்துக் கொன்றவர்களுக்கு கடுமையான தண்டனை அளிக்கப்பட வேண்டும்[10]: குழந்தைக் கடத்தல் வதந்தியாலும், தவறான புரிதலாலும் கடந்த வாரம் பொதுமக்களால் அடித்துக் கொல்லப்பட்ட ருக்மிணியம்மாளின் மகன் 42 வயது கோபிநாத்தின் துயரம் எல்லையற்றது. கோபிநாத்தைப் பின் தொடர்ந்து வந்த அவரது 2 வயது மகன் தனது பாட்டியைக் காண வேண்டும் என்று அழுத காட்சி மேலும் உருக்கமாகவும், வேதனையாகவும் இருந்தது. கடந்த வாரம் செவ்வாய் மாலை வரை தனது பேரன், பேத்திகளுடன் சென்னையை அடுத்த பல்லாவரத்தில் இருந்த தனது மகன் வீட்டில் கதை பேசி மகிழ்ந்து சோறூட்டிக் கொண்டாடி இரவுகளில் அவர்களைத் தூங்க வைத்து தலை கோதிக் கொண்டிருந்த ஒரு வயதான பெண்மணியை அறிமுகமில்லாத கிராம மக்களில் சிலர் குழந்தைக் கடத்தல்காரி எனச் சந்தேகித்து சரமாரியாகத் தாக்கிக் கொன்ற விதம் காணொளியாகக் காணக் கிடைக்கிறது. அதைக் கண்டு துக்கத்திலும், ஆத்திரத்திலும் பொங்கியவராக அவரது மகன் கோபிநாத், ‘எனது தாயை இப்படி அநியாயமாகச் சந்தேகித்துக் கொன்றவர்களுக்கு கடுமையான தண்டனை அளிக்கப்பட வேண்டும், எது அதிகபட்ச தண்டனையோ அது அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்’ என்று அரற்றுவது ஒருவகையில் நியாயமானதாகக் கூடத் தோன்றுகிறது[11].

Lynching Tamilnadu style- Tiruvannamalai.woman.3

குழந்தைகள் கடத்தல், குழந்தைகள் காணாமல் போவது, கிடைப்பது-கிடைக்காதது மக்களுக்கு ஆரிவிக்கப் படவேண்டும்:  குழந்தைகள் கடத்தல் சமாசாரம் பேசப்படாமல் இருந்தாலும், மாநிலக் குற்ற ஆவணக் காப்பகம் தரும் அதிகாரபூர்வக் கணக்குகள்படியே தமிழ்நாட்டில் சுமார் 2000 குழந்தைகள் காணாமல் போகின்றனர். “புள்ளப் பிடிக்கிற காரன்கள்” சுற்றிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அன்றாடம் ஐந்து குழந்தைகள் காணாமல் போகின்றனர் எனும்போது, அவ்விசயத்தை விவாதிக்காமல், நடிகைகளைப் பற்றி ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஒருவேளை, பெற்றோர், உற்றோர், மற்றோர் பதற்றமடைவர், பயப்படுவர், மாநிலம் பெயர் கெடும் என்று மறைக்கப் பார்க்க்கின்றனர் போலும்.  இவர்களில் எத்தனை பேர் மீட்கப்படுகின்றனர், மீட்க முடியாமல் போகிறார்கள், வழக்குகள் எப்படி முடிக்கப் படுகின்றன என்பதெல்லாம், பொது மக்களுக்குத் தெரியாது. பொது இடங்களில் பிச்சை எடுப்பது, கூலிவேலைகளுக்கு பயன்படுத்தப் படுவது, முதலியவைப்பற்றியும் விவரங்கள் தெரியப்படுத்துவதில்லை.

Arya-dravida myths acting still-derogatory usage

ஊடகங்கள் பழக்கும் பசிக்கே சமூக வலைதளங்கள் தீனி தயாரிக்கின்றன: தி.இந்து, “செய்தி வியாபாரத்துக்காக நாள் முழுவதும் மக்களிடம் பரபரப்பைப் பரப்பிவரும் ஊடகங்களுக்கும் இதில் முக்கியமான பங்கு இருக்கிறது[12]. ஊடகங்கள் பழக்கும் பசிக்கே சமூக வலைதளங்கள் தீனி தயாரிக்கின்றன[13]. தன்னுடைய பன்மைத்துவக் குணத்தால் உலகின் பல்வேறு திசைகளிலும் பரவியிருக்கும் தமிழ்ச் சமூகத்தை இன்று கொஞ்சம் கொஞ்சமாக இனவெறி நோய்க்கிருமிகள் பீடிக்கத் தொடங்குவது மிக அபாயகரமானது. உடனடியாக முடிவுகட்டப்பட வேண்டியது!,” என்பதில் உண்மை இருக்கிறது. தி.இந்துவிலா, இது வந்துள்ளது என்று ஆச்சரியமாக இருந்தாலும், உண்மை என்பதால், கருத்தைப் பாராட்ட வேண்டியிருக்கிறது. ஆனால், ஊடகங்கள் அந்த அளவுக்கு தாழ்ந்து விட்டனவா என்ற கேள்வியும் எழுகின்றது.

© வேதபிரகாஷ்

17-05-2018

Arya-dravida myths acting still-mental

[1] மாலைமலர், குழந்தை கடத்தல் பீதிமனநோயாளி கொலையில் மேலும் 2 பேர் கைது, பதிவு: மே 14, 2018 13:09

[2] https://www.maalaimalar.com/News/District/2018/05/14130903/1162890/Two-more-people-have-been-arrested-in-Mental-patient.vpf

[3] தி.இந்து, குழந்தை கடத்தல் கும்பல் என்று சந்தேகித்து தாக்குதல்; மூதாட்டி கொலை வழக்கில் 23 பேர் கைது, திருவண்ணாமலை, Published : 11 May 2018 08:01 IST; Updated : 11 May 2018 08:01 IST

[4] http://tamil.thehindu.com/tamilnadu/article23845548.ece

[5] மாலைமலர், குழந்தை கடத்தல் பீதியில் மூதாட்டி கொலைகைது நடவடிக்கைக்கு பயந்து 11 கிராம மக்கள் ஓட்டம், பதிவு: மே 11, 2018 14:12.

[6] https://www.maalaimalar.com/News/District/2018/05/11141250/1162299/child-kidnapping-rumor-11-village-people-escaped-police.vpf

[7] The police say the trigger for the lynchings could be a rash of xenophobic messages circulating on WhatsApp warning that “north Indians” are looking to kidnap children in Tamil Nadu.

http://www.thehindu.com/opinion/editorial/loss-of-innocents/article23857175.ece

[8] ஐ.இ.தமிழ், குழந்தை கடத்தல் வதந்தி : வட மாவட்டங்களை உலுக்கும் கொலைகள், போலீஸ் எச்சரிக்கை, WebDesk, May 11, 2018

[9] https://www.ietamil.com/tamilnadu/child-trafficking-rumours-murders-police-warning/

[10] தினமணி, என் தாயைக் கொன்றவர்களுக்கு உச்சபட்ச தண்டனை அளியுங்கள்! ருக்மிணியம்மாளின் மகன் உருக்கமான வேண்டுகோள்!, By RKV | Published on : 14th May 2018 01:09 PM

[11] http://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2018/may/14/give-maximum-punishment-to-my-mothers-killers–gopinath-so-rukmini-2919581.html

[12] தி.இந்து, அப்பாவிகள் படுகொலைக்கு முடிவுகட்டப்பட வேண்டும்!, Published : 16 May 2018 08:51 IST; Updated : 16 May 2018 12:44 IST

[13] http://tamil.thehindu.com/opinion/editorial/article23899718.ece

 

தமிழ், தமிழகம், தமிழ்நாடு: தனித்தமிழ் இயக்கம்-திராவிட இனவெறி மற்றவர்களிடமிருந்து பிரித்தது, மொழிவாரி மாநிலங்கள் உருவானதில் தனிமைப்படுத்தப் பட்ட நிலை [2]

ஏப்ரல் 20, 2018

தமிழ், தமிழகம், தமிழ்நாடு: தனித்தமிழ் இயக்கம்திராவிட இனவெறி மற்றவர்களிடமிருந்து பிரித்தது, மொழிவாரி மாநிலங்கள் உருவானதில் தனிமைப்படுத்தப் பட்ட நிலை [2]

Tamil vs Telugu, Bhattiporlu

தமிழ், தமிழர், தமிழ்நாடு [திராவிடக் கட்டுகதை] என்று மூளைசலவை செய்து, தமிழ்நாட்டை கெடுத்து, சீரழித்ததே, இந்த கோஷ்டிகள் தாம்: 1930-40களில் தனித்தமிழ் இயக்கம், திராவிட இனக் கட்டுக்கதைகளை வளர்த்தன. சைவம் என்ற போர்வையில், வைணவத்தை எதிர்த்து, தெலுங்கு பேசும் மக்களை அவமதித்த போக்கு, நீதிகட்சியைக் குலைத்து, திராவிட கழக போர்வையில், தமிழக பிரிவினை உருவெடுத்தது. ஆனால், அத்தகைய தேசவிரோத கொள்கையிலிருந்து மற்ற மொழி மக்கள் வேறுபட்டனர். 1940-50 திராவிட இனவெறி கட்டுக் கதைகளினால் தான், முதலில் ஆந்திரா தனியாகப் பிரிந்தது, முதல் மொழிவாரி மாநிலமானது[1]. தொடர்ந்து “தமிழ்” தான் உயர்ந்தது, அதிலுருந்து தான் மற்ற மொழிகள் தோன்றின என்பதனை சாதாரண மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. குறிப்பாக, தெலுங்கு மக்கள் ஒப்புக் கொள்ளவில்லை. பட்டிபோர்லு [Bhattiporlu] வரிவடிவங்களை [script] மற்றும் கல்வெட்டுகளை [inscriptions] வைத்துக் கொண்டு, தெலுங்கு வரிவடிவம் BCE மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று வாதிட்டனர். “தமிழ்நாடு” உருவானபோது கூட, எல்லை தகராறுகளில் கேரளா, ஆந்திரா மற்றும் ஆந்திராவுடன் எதிராகவே இருந்தது. தமிழநாட்டைத் தவிர மற்ற மாநில மக்கள் தாங்கள் “திராவிடர்கள்” என்றெல்லாம் ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால், திராவிடத்துவ சித்தாந்தம் தமிழ்நாடு மாநிலத்துடன் சுருங்கி விட்டது. காவிரி பிரச்சினையில், முன்னர் பாமகவினால், அதிகமாகவே வெறியூட்டப் பட்டு, பிறகு திராவிட பிரிவினைவாதிகளால் தீயூட்டப் பட்டது. அப்பொழுது, இங்கு “உடுப்பி” ஹோட்டல்கள் அடித்து நொறுக்கப்பட்டன. ஶ்ரீ ராகவேந்திர மடங்களும் தாக்கப்பட்டன.

Kannadigas - woodland hotel attacked- Sept.2016

தமிழகத்தில் நடந்த எல்.டி.டி..யின் வாரிசு / அதிகாரச் சண்டை திசைமாறியுள்ள நிலை: எல்.டி.டி.ஈ.யின் வாரிசு சண்டை தமிழக அரசியல் கட்சிகள், பெரிய புள்ளிகள் மற்றும் சித்தாந்தவாதிகளிடம் அதிகமாகவே வெளிப்படுகிறது. முன்பு, ஒரு நபரால் கட்டுக்கோப்பாக வைத்திருந்தது, சிதறிவிட்டது. எல்.டி.டி.ஈ.யின் பங்கு போதை மருந்து கடத்தல், விநியோகம் மற்றும் வியாபாரம், வெடிகுண்டுகள், ஆயுதங்கள் வாங்கல்-விற்றல், தமிழ்த் திரைப்பட விநியோகம், திருட்டு சிடி-விசிடி, குறிப்பிட்ட மின்னணு உதிரிகள் என பல விஷயங்களில் இருந்தது, இன்றும் இருக்கிறது[2]. போதை மருந்து கடத்தல் விவகாரங்கள் அப்பட்டமாக இருந்தாலும், தமிழக ஊடகங்கள் மறைத்தே வந்ததன-வருகின்றன[3]. இதனால் தான் “மத்திய அரசு எதிர்ப்பு” அடிக்கடி ஏற்படுகிறது. தெற்கு மாவட்டங்களில் மீனவர்களின் உதவிகளுடன் அத்தகைய சட்டமீறல்கள் நடந்து வருவதால், எல்லா கட்சிகளில் சம்பந்தங்களும் காக்கப்பட்டு வருகின்றன. ஆனால், அதிகாரப் பிரயோகம், அதிகாரப் பகிர்வு முதலியன யாரிடம் இருப்பது என்பது பற்றிதான் சண்டை-சச்சரவு நடந்து கொண்டிருக்கிறது. இதில் தமிழகத்தைச் சார்ந்தவர்கள், ஸ்ரீலங்காவைச் சேர்ந்தவர்கள் மற்றும் இரண்டிலும் அல்லது கனடா-பாரிஸ்-அமெரிக்காவில் இருப்பவர்கள் என்று மூன்று குழுக்களாக செயல்படுகின்றனர்[4]. திரைத்துறை, அரசியல் முதலிய பகிர்வு போராட்டங்கள் வைகோ, நெடுமாறன், செபாஸ்டியன் சீமான்[5], ஜெகத் காஸ்பர்…………என்று பலநேரங்களில் வெளிப்படும். கடந்த குறுகிய காலத்தில், நிறைய அளவு பணம் திரைப்படம், கட்டுமானப் பணிகள், தொழிற்சாலைகள் முதலியவற்றில் முதலீடு செய்யப்படுகிறது. அந்நிலையில், குறிப்பிட்ட தனிநபர்கள், குழுமங்கள் என தேர்ந்தெடுக்கப்பட்டவர்களிடம் குவியும் போது, நிச்சயமாக சண்டை வரத்தான் செய்கிறது. அதுமட்டுமல்லாது மத்தியில் மற்றும் மாநிலத்தில் தனித்தனி கூட்டணிக் கட்சியினருக்கு, பெரும்பாலான பணம் செல்லும்போதும் மற்றவர்களுக்கு கடுப்பாகிறது.

Holiday for Pongal and anti-Modi slogan

தீவிர தமிழ்வாத பிரிவினை கொலைகளில் முடிந்தது: 1984-89களில் எல்.டி.டி.இ வைத்துக் கொண்டு கருணாநிதியும் பிரிவினைவாத கோஷ்டிகளுடன் செயல்பட்டார். அவர்கள் நடத்திய உயநிர்ணய, பிரிவினைவாத மாநாடுகள் பெயரளவில் தடை செய்யப் பட்டன. இதனால், விடுதலை புலிகள் முதல், விடுதலை குயில்கள் வரை எல்லாம் ஊக்குவிக்கப் பட்டன. வி.பி.சிங் ஆட்சிகாலத்தில், பாமக போன்ற கட்சிகளும் “சுயநிர்ணயம்” போர்வையில் பிரிவினைவாதம் பேசியுள்ளது. பாமகவினால் தமிழக-கர்நாடக விசரிசல்கள் பெரிதாகின, அமைச்சர் பதவி கிடைத்ததும் பாமக அடங்கி விட்டது. மற்றவை “மண்டல்” போர்வையில் கலாட்டா செய்து வந்தன. இவர் 21 மே 1991 ராஜிவ் காந்தி படுகொலை திராவிட அரசியல்வாதிகளின் முகத்திரைகளைக் கிழித்து, அவர்களது தேசவிரோத கள்ளக்கடத்தல், வரியேய்த்தல், போதை மருந்து விரயாபாரம் என்று பற்பல சட்டமீறல்கள், குற்றங்கள் முதலியவற்றை எடுத்துக் காட்டின. 1996-2004ல், பதவி போதையில், திமுக சுருண்டு கிடந்தது. 2004-2014களில் ஊழலில் மிதந்து, கோடிகளை அள்ளி, ஊடக சாம்ராஜ்ஜியத்தை நிலைப் படுத்திக் கொண்டது. டிவி அதிரடி தாக்கம், பிரச்சார யுக்திகளினால் திராவிட குற்றங்களுக்கு வெள்ளையெடித்து, அதே நேரத்தில், காங்கிரசுக்கு சாதகமாக, இந்து-விரோத பிரச்சாரத்தை “பிஜேபி-எதிர்ப்பு” போர்வையில் நடத்தியது[6], நடத்திக் கொண்டிருக்கிறது. ஆனால், சத்தியராஜ் போன்ற நடிகர்களால் எதிர்மறை விளைவுகள் அதிகமாக ஏற்பட்டன. ரஜினியின் நிலையற்ற தன்மை மற்றும் இப்பொழுதைய கமல் ஹஸனின் பாரபட்சம் மிக்க பேச்சுகள்-நடவடிக்கைகள் போலித் தனமாக இருக்கின்றன. இப்பொழுது கூட, கமல்-ரஜினி பிளவுகள் போலித்தனத்தையே எடுத்துக் காட்டுகின்றன.

Dravidastan, new slogan 2018

கார்புரேட்டுகளின் தொடர்புகள், அயல்நாட்டு வியாபாரங்கள், வரியேப்பு, மோடிஎதிர்ப்பு: கார்புரேட்டுகளின் விளம்பரப் பணம் கொட்டி, வியாபாரம் சினிமாக்களில் பெருகி, பணத் தோட்டத்தில்[7], அதிகார போதையுடன், சுகபோகங்களை அனுபவித்தன. இதில் கம்யூனிஸம் பேசும் வகையறாக்களும் அடக்கம். இவற்றில் கடல்கடந்த வியாபார தொடர்புகள், இணைப்புகள், பண பரிவர்த்தனைகள் எல்லாமும் அடக்கம். எந்த திராவிடக் கட்சியும், பிரிவினைவாத கோஷ்டியும், சினிமாக்காரனும் இதில் சோடை போனதில்லை. அரசியல்வாதிகள் மற்றும் சினிமாக்காரர்களின் அடிக்கடி அமெரிக்க-ஐரோப்பிய பயணங்கள் அவற்றை வெளிப்படுத்தின. மோடியின் “கருப்புப் பண வேட்டை” முதலியவை இவர்களை பாதித்ததால் தான், மோடியை எதிர்க்க ஆரம்பித்தார்கள். ஆக, கள்ளப்பணம், வரியேய்ப்புகளில் ஈடுபட்ட கூட்டங்கள் தாம் இன்று தெருக்களில் கருப்பு சட்டம் அணிந்து கலாட்டா செய்து, பொது மக்களை இம்சித்து வருகின்றனர். திர்ப்புகள் சேவை வரி முதல் ஜிஎஸ்டி வரை இதில் உள்ளதை கவனிக்கலாம். இருப்பினும் வியாபாரம் செய்பவன், லாபங்களில் கொழுப்பதினால், அமைதியாகவே இருக்கிறான்.

© வேதபிரகாஷ்

19-04-2018

Karunanidhi, separate Tamilnadu

[1] Andhra Pradesh was carved out of Madras Presidency on October 1, 1953. This gave a death blow to the concept of “Dravidastan” and the separate nation for “Dravidian speaking people.” In other words, the “Dravidian” demand was restricted to “Tamilnadu.” The linguistic formation of States took place in 1956 with Kerala and Karnataka. Thus, “Dravidastan” was reduced to “Tamilnadu”.

[2] Citing Royal Canadian Mounted Police sources the Jane’s Intelligence Review said the Liberation Tigers of Tamil Eelam (LTTE) controls portion of US Dollar one billion drug market in the Canadian city of Montreal. The Jane’s Intelligence Review said that one of the main ways of earning money out of its USD 200-300 million annual income of the Liberation Tigers of Tamil Eelam (LTTE) is narcotics smuggling using its merchant ships, which also transports illicit arms and explosives which they procure all over the world for a separatist insurgency in the Indian Ocean island of Sri Lanka.

Steven W. Casteel, Narco-Terrorism: International Drug Traffickingand Terrorism – a Dangerous MixStatement ofSteven W. Casteel Assistant Administrator for Intelligence Before theSenate Committee on the Judiciary May 20, 2003; http://www.justice.gov/dea/pubs/cngrtest/ct052003.html

[3] Kartikeya, LTTE fall will alter drug trade in India, TOI, May 30, 2009, Read more: ‘LTTE fall will alter drug trade in India’ – Mumbai – City – The Times of Indiahttp://timesofindia.indiatimes.com/city/mumbai/LTTE-fall-will-alter-drug-trade-in-India/articleshow/4595554.cms#ixzz0xzdLhzpw

http://timesofindia.indiatimes.com/city/mumbai/LTTE-fall-will-alter-drug-trade-in-India/articleshow/4595554.cms

[4] http://www.eurasiareview.com/201006143193/sri-lanka-ltte-diaspora-wars-south-asia-intelligence-review.html

[5] செபாஸ்டியன் சீமான், ஜகத் காஸ்பரை இந்தியாவின் ஒற்றன் என்றெல்லாம் சொல்வதும், ஏதோ பெரிய விடுதலைப் போராளி போல நடந்து கொள்வதும், அதேபோல ஜகத் காஸ்பர் வெளிப்படையாக எல்.டி.டி.ஈ.யினரை ஆதரித்து பேசுவது-எழுதுவது சென்று செய்தாலும், கண்டு கொள்ளாமல் இருப்பது, முதலியவை தமிழகத்தில் வேடிக்கையான விஷயங்களே.

[6] சன் குழும நிகழ்ச்சிகள், பட்டிமன்றங்கள், சீரியல்கள் முதலியவற்றை அலசிப் பார்க்கும் போது, இது வெளிக்காட்டுகிறது.

[7] அண்ணாவின் “பணத்தோட்டம்” திராவிட அரசியல் மற்றும் கம்பெனிகளின் கூட்டுக் கொள்ளை, வரியேய்ப்பு முதலியவற்றை காட்டுவது மட்டுமல்லாது, சினிமா-கிரிக்கெட் தொடர்புகளையும் வெளிப்படுத்தி விட்டன.

திராவிட இயக்கம், கூடா ஒழுக்கம், அரசியல் நாகரிகம், புலம்பும் பகுத்தறிவு, ஆரியத்தை விரும்பும் திராவிடத்தின் தந்திரம் என்னவோ? (1)

பிப்ரவரி 25, 2015

திராவிட இயக்கம், கூடா ஒழுக்கம், அரசியல் நாகரிகம், புலம்பும் பகுத்தறிவு, ஆரியத்தை விரும்பும் திராவிடத்தின் தந்திரம் என்னவோ? (1)

Jaya-Karu-1960s-assembly-The Hindu photo

Jaya-Karu-1960s-assembly-The Hindu photo

வேதனைக்கும், வெட்கத்திற்கும் உரிய கூடா ஒழுக்கம்: திராவிட இயக்கம் தோன்றிய பிறகு தமிழகத்தில் அரசியல் நாகரிகம் இல்லாமல் போய்விட்டது என்ற கசப்பான உண்மையை வேதனையோடு ஒப்புக்கொள்ள வேண்டும் என திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தெரிவித்துள்ளார்[1]. “திருமண வீடுசாவு வீட்டில் கூடசந்திக்க மறுக்கும் தமிழ்நாட்டுத் தலைவர்கள் வடநாட்டைப் பார்க்கட்டும்![2] பிரதமர் மோடியும் – லாலுவும் – முலாயமும் கூடிக் குலவும் காட்சியைப் பார்த்த பிறகாவது தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் புதிய நாகரிகத்தை வளர்க்கட்டும்” என்று தலைப்பிட்டு, விடுதலை நாளிதழின் முதல் பக்கத்தில் வீரமணி இவ்வாறு அறிக்கை விடுத்திருந்தது வேடிக்கையாக இருந்தது[3]. இது தொடர்பாக 23-02-2015 திங்கள்கிழமை அன்று அவர் வெளியிட்ட அறிக்கை[4]: “தமிழ்நாடும் தென் மாநிலங்களும் மிகவும் பண்பட்டவை நனி நாகரிகம் படைத்தவை. வடநாட்டவர்களைவிட பல துறைகளில் முன்னேறியவர்கள் என்று பெருமைபேசி மகிழுபவர்கள் என்ற நிலை அரசியல் கட்சிகளின் தவறான அணுகுமுறையால் ஒரு கட்சித் தலைவரோ, அல்லது வேறு பொறுப்பாளர்களோ, திருமணம், வரவேற்பு மற்றும் துக்க, இரங்கல் நிகழ்ச்சிகளில்கூட ஒருவரை மற்றொருவர் சந்திப்பது, குறைந்தபட்ச மரியாதையை, விசாரிப்புகளை ஒருவருக்கொருவர் இன்முகத்தோடு பரிமாறிக் கொள்ளுதல் போன்றவைகூட, – காணாமற் போனவையாக ஆகி விட்டன! இது வேதனைக்கும், வெட்கத்திற்கும் உரிய கூடா ஒழுக்கம் ஆகும்!

இதெல்லாம் கூட திராவிட கலாச்சாரமக்கத்தானே, இன்றளவும் இருந்து வந்துள்ளது

இதெல்லாம் கூட திராவிட கலாச்சாரமக்கத்தானே, இன்றளவும் இருந்து வந்துள்ளது

தலைவர்களே, வடநாட்டைப் பாருங்கள்!: “வடநாட்டைப் பார்த்து தமிழ்நாட்டவர் கற்றுக் கொள்ளும் நிலை இன்று ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் எவ்வளவு கடுமையாக கட்சித் தலைவர்களோ, நாடாளுமன்ற உறுப்பினர்களோ, அமைச்சர்களோ பேசித் தாக்கிக் கொண்டாலும் மத்திய அரங்கம் (Central Hall Parliament) என்ற நாடாளுமன்ற அரங்கில் நுழையும்போது, தோள் மேல் கைபோட்டு, நட்புறவும் நயத்தக்க நனி நாகரிகமும் பொங்கி வழிவது போல் பேசிக் கொள்ளும் நடைமுறை வெகு சர்வ சாதாரணம் ஆனால்தமிழ்நாட்டில்….? இந்நிலையை மாற்ற அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஒத்துழைக்க வேண்டும். வட மாநிலங்களில் அரசியல் தலைவர்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது அரசியலை மறந்து அன்பு பாராட்டி மகிழும் நாகரிகத்தைப் பார்க்க முடிகிறது. லாலு பிரசாத் யாதவ், முலாயம் சிங் யாதவ் இல்லத் திருமண விழாவில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி அவர்களுடன் கூடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் எதிர்த்துப் போட்டியிட்டாலும் தேர்தல் முடிந்ததும் பிரதமர் மோடியை ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜரிவால் சந்தித்துப் பேசினார். இருமல், ஆஸ்துமாவில் இருந்து விடுபட கேஜரிவாலுக்கு தான் சிகிச்சை பெற்று வரும் மருத்துவரை மோடி பரிந்துரை செய்து தமது பண்பை வெளிப்படுத்தியுள்ளார்”. தொடர்கிறார் வீரமணி!

லல்லு, மோடி, mullaayam -another - நக்கீரன் போட்டோ

லல்லு, மோடி, mullaayam -another – நக்கீரன் போட்டோ

தமிழ்நாட்டில் நடப்பது என்ன?: “ஆனால், தமிழகத்தில் திருமண வீடு, துக்க வீடுகளில் கூட அரசியல் கட்சித் தலைவர்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கத் தயங்கும், மறுக்கும் சூழ்நிலை உள்ளது. சட்டப்பேரவையில் நேருக்கு நேர் பார்த்து மற்றொரு கட்சியினர் வணக்கம் சொல்வதும், பதிலுக்கு புன்னகையுடன் வணக்கம் சொல்வதும் இன்று அருகிவிட்டது. விமான, ரயில் பயணங்களின்போது ஒரே பெட்டியில் பயணம் செய்யும்போது ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து விடக் கூடாது என்பதற்காக ஓடோடிச் சென்று அறைக் கதவைச் சாத்திக் கொள்வது, சந்திப்பைத் தவிர்ப்பதற்காக ரயில் நிற்பதற்கு முன்பே குதித்து ஓடி காரில் ஏறி கதவை அடைத்துக் கொள்வது போன்ற கசப்பான நிகழ்வுகள் நடக்கின்றன. திராவிட இயக்கத்தின் பிறப்புக்குப் பின்னரே இந்த நிலை என்பது கசப்பான உண்மையாகும். இதை நாம் வெட்கத்தோடும், வேதனையோடும் ஒப்புக்கொண்டே ஆக வேண்டும். இந்த நிலை மாற வேண்டும்”, என கி. வீரமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்[5]. இது அப்படியே மற்றா இணைத்தள செய்திகளிலும் காணப்படுகிறது: ஒன்.இந்தியா.தமிழ்[6], நக்கீரன்[7] முதலியவை வெளியிட்டுள்ளன. ஆனால் விடுதலையில், வீரமணி தொடர்கிறார்!

லல்லு, மோடி,  mullaayam - நக்கீரன் போட்டோ

லல்லு, மோடி, mullaayam – நக்கீரன் போட்டோ

பிறந்த நாளிலாவது வாழ்த்து கூறக் கூடாதா?: “திராவிடர் இயக்கத்தின் பிறப்புக்குப் பின் இந்நிலை என்பது கசப்பான உண்மையாகும். இதனை நாம் வெட்கத்தோடும், வேதனையோடும் ஒப்புக் கொண்டே ஆக வேண்டும். எவ்வளவு கருத்து வேறுபாடு, கொள்கை மாறுபாடு இருந்தாலும், பிறந்த நாள்களுக்கு வாழ்த்து அனுப்பியோ; நேரில் சந்தித்து வாழ்த்துக் கூறுவதோ, மனித நேயத்தையும், மக்கள் பண்பையும் வளர்த்து, தொண்டர்கள் மத்தியில் வெறுப்புக் குறைய, அல்லது மறைய வாய்ப்பை ஏற்படுத்தும். அந்தக் காலத்துத் தலைவர்களின் அன்பும், பண்பும் அகிலம் அறிந்தவை. (ஒரு பெரிய புத்தகமே எழுதலாம்). வடநாட்டுத் தலைவர்கள் பலரிடமும் நான் பழகியுள் ளேன்எந்தவித பந்தாவும் இல்லாமல் பழகுபவர்கள் அவர்கள். தமிழ்நாட்டில் தான் இப்படி ஒரு வெறுக்கத்தக்க நோய் எப்படியோ கடந்த 30 ஆண்டுகளாகப் பரவி விட்டது. யார்மீதும் குற்றம் சுமத்தி புண்ணைக்குடைய விரும்பவில்லை நாம்”, என்று நொந்து போய் கூறியுள்ளார் போலும்!

வீரமணியின் ஆதங்கம்-திராவிட அநாகரிகம்

வீரமணியின் ஆதங்கம்-திராவிட அநாகரிகம்

தமிழர்களை உலக அரங்கில் உயர்த்தும்[8]: “நம் நாட்டில் கட்சி, கொள்கை வேறுபாடுகளைத் தள்ளி வைத்து (தற்காலிகமாக) பிறந்த நாள் போன்ற நிகழ்வுகளில் தயங்காமல் சந்தித்து அன்புடனும், பண்புடனும் தலைவர்கள், பொறுப்பாளர்கள் நடத்து கொள்ளுவது தமிழர்களை உலக அரங்கில் உயர்த்திட, திராவிடத்திற்கு ஏற்றம் தேடிடச் செய்ய அணுகுமுறை மாற்றம் அவசரம் அவசியம் என்று கனிவுடன் வேண்டுகோளாக வைக்கிறோம்”, என்று வீரமணியின் அறிக்கை முடிகிறது.

தமிழர் தலைவர் விடுத்துள்ள நனி நாகரிக அறிக்கை

தமிழர் தலைவர் விடுத்துள்ள நனி நாகரிக அறிக்கை

.தி.மு.., தலைமை கழக பேச்சாளர் ஆவடிகுமார்மனதுக்குள் ஒன்றை வைத்து, மற்றவர்களுக்காக நாடகம் போடுவது போலியான கலாசாரம். எதிரி வீட்டு சுக, துக்கங்களில் பங்கேற்று விட்டு, அவரது காலைவாரி விடுவதும் சரியல்ல. அதனால், மனதுக்குள் என்ன உள்ளதோ, அதை நேர்மையாக வெளிப்படுத்துகின்றனர்; இதில் தவறில்லை. பாசாங்கு செய்யத் தேவையில்லை. எதிரி என்றால், அரசியலில் மட்டுமல்ல; அனைத்திலும் என முடிவெடுத்து தான், எதிரி வீட்டு சுக, துக்கங்களையும் தவிர்க்கின்றனர். முலாயம் வீட்டு திருமணத்துக்கு மோடி சென்றார் என்றால், ராஜ்யசபாவில், பா.ஜ.,வுக்கு மெஜாரிட்டி இல்லை. அதற்கு, தாஜா செய்ய வேண்டிய நிர்பந்தம் மோடிக்கு இருக்கிறது. அதற்காக, அவர் சென்றிருக்கக் கூடும்; மேலோட்டமாக பார்த்து, எதையும் தீர்மானிக்க முடியாது.

jayalalita caricatured-brahmanism

jayalalita caricatured-brahmanism

தி.மு.., – எம்.பி., கே.பி. ராமலிங்கம்: ‘தமிழகத்தில், அரசியல் நாகரிகம் இல்லை; இதற்கு, திராவிட இயக்கங்கள் காரணம்’ என, பொதுவாக சொல்லக் கூடாது. யார் காரணம் என்பதை, திராவிடர் கழகம் தெளிவாகச் சொல்ல வேண்டும். தி.மு.க., தலைவர் கருணாநிதி, அ.தி.மு.க., முன்னாள் பொதுச் செயலர் எம்.ஜி.ஆர்., ஆகியோர், அரசியல் எதிரிகளாக இருந்தாலும், அரசியல் நாகரிகத்தை கடைபிடித்தனர். மாற்றுக் கட்சியினரை சந்தித்ததற்கோ, பேசியதற்கோ, கட்சியிலிருந்து யாரும் ஓரம் கட்டப்படவில்லை. அவர்கள் இருவரும், கட்சித் தொண்டர்களுக்கு அது போன்ற  கட்டளையையும் பிறப்பிக்கவில்லை.

கொள்கை பிடிப்பு: கட்சி மற்றும் அரசியலில், ஜெயலலிதா அதிகாரத்துக்கு வந்த பின் தான், இதுபோன்ற நிலை ஏற்பட்டுள்ளது. மாற்றுக் கட்சியினரை சந்திக்கக் கூடாது என நிர்வாகிகளுக்கோ, தொண்டர்களுக்கோ, ஜெயலலிதா உத்தரவிடுகிறாரா எனத் தெரியவில்லை. கொள்கையில் பிடிப்பும், லட்சியமும் உள்ளவர்கள் எங்கு சென்றாலும், அவர்கள் கொள்கையில் தெளிவாக இருப்பர். கொள்கைப் பிடிப்பு இல்லாதவர்கள் தான், நட்பு, உறவு என, கொள்கையை இழந்து விடுவர்.

மார்க்சிஸ்ட் எம்.எல்.., பால கிருஷ்ணன்: திராவிட இயக்கம்பிறப்புக்குப் பின், அரசியல் நாகரிகம் கெட்டுவிட்டது என, திராவிடர் கழகம் வருத்தப்படுவது நியாயமே. குறிப்பாக, தி.மு.க.,விலிருந்து பிரிந்து அ.தி.மு.க., உதயமான பின்பே, இப்போக்கு தீவிரமானது. தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் அவர்களுக்குள், பரஸ்பரம் நாகரிகத்தை கடைபிடிக்காமல் இருப்பது அவர்களுக்கு மட்டுமல்ல; தமிழகத்தின் நலனையே பாதித்துள்ளது. இவர்களின் தனிப்பட்ட விரோதம், தமிழகத்தின் பொது பிரச்னைகளான, காவிரி, முல்லைப் பெரியாறு போன்றவற்றிலும் பிரதிபலிக்கிறது. பிற மாநிலங்களில், எதிர் எதிர் கட்சிகள் இருந்தாலும், மாநில நலனைக் காப்பதில் ஒருமித்து இருப்பர். ஆனால், தமிழகத்தில் அது போன்ற நிலை இல்லை. இதனால், மாநில அரசியலைத் தாண்டி, தமிழகத்தின் உரிமைகளைப் பெறுவதிலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு, அவர்கள் கூறினார்.

 

an incident which occurred in the Tamil Nadu assembly on March 25, 1989

an incident which occurred in the Tamil Nadu assembly on March 25, 1989

இதுகுறித்து, தமிழக அரசியல் கட்சியினர் கருத்து[9]: தினமலர், அதிமுக, திமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினரின் சார்பாக அவரவர் கருத்துகளை வெளியிட்டுள்ளது கவனிக்கத்தக்கது[10]. அ.தி.மு.க., தலைமை கழக பேச்சாளர் ஆவடிகுமார், தி.மு.க., – எம்.பி., கே.பி. ராமலிங்கம், மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ., பால கிருஷ்ணன் முதலியோரின் கருத்துகள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன[11]. ஜெயலலிதா பிறந்த நாள் அன்று இவர் இதை வெளியிட்டிருப்பது அரசியல் நோக்கம் கொண்டது என்பது தெரிந்த விசயமே. முன்பு ஜெயலலிதா பதவிக்கு வந்த போது, “ஆரிய-திராவிட யுத்தம் தொடர்கிறது!” என்று புத்தகத்தை வெளியிட்டார். ஜெயலலிதா பாப்பாத்தி என்ற வசைகளை, தூஷணங்களை தாராளமாக வெளியிட்டார். போதாகுறைக்கு சட்டசபையிலேயே ஜெயலலிதாவின் ஜாக்கெட்டைக் கிழித்து[12], புடவையை உருவ முயன்ற நாகரிகமான திராவிடர்கள் இவர்கள்[13]. கருணாநிதியோ, வழக்கம் போல துளிக்கூட நாகரிகம் இல்லாமல், சோபன் பாபுவுடன் இருந்த போட்டோக்களை “முரசொலி”யில் போட்டு மகிழ்ந்தார். 1960களில் அனந்தநாயகியைப் பற்றி பேசியதெல்லாம் இவர்கள் மறந்து விட்டார்கள் போலும்.

 

© வேதபிரகாஷ்

25-02-2015


 

[1] http://www.viduthalai.in/page1/96691-23-02-2015-1.html

[2] நக்கீரன் மட்டும் இதையே தலைப்பாகக் கொண்டு அறிக்கையை, நிறைய புகைப்படங்களுடன் வெளியிட்டுள்ளது. “திருமண வீடுசாவு வீட்டில்கூடசந்திக்க மறுக்கும் தமிழக தலைவர்களே வடநாட்டைப் பாருங்கள்; கி.வீரமணி”, http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=138391

[3] http://www.viduthalai.in/2011-08-04-12-53-29/96688-2015-02-23-08-56-27.html

[4] தினமணி, தமிழகத்தில் அரசியல் நாகரிகம் இல்லாமல் போனதற்கு திராவிட இயக்கமே காரணம்: கி. வீரமணி, By Venkatesan Sr, சென்னை; First Published : 24 February 2015 03:42 AM IST.

[5]http://www.dinamani.com/tamilnadu/2015/02/24/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95/article2684159.ece

[6] http://tamil.oneindia.com/news/tamilnadu/only-after-the-rise-dravidian-party-we-lost-political-decency-says-veeramani-221569.html

[7] http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=138391

[8] http://www.viduthalai.in/page1/96708.html

[9] http://www.dinamalar.com/news_detail.asp?id=1192158

[10] தினமலர், தமிழகத்தில் அரசியல் நாகரிகம் சீரழிய யார் காரணம்?, 25-02-2015: பதிவு செய்த நாள் : பிப்ரவரி 24,2015,23:40 IST.

[11] தினமலர் (நமது சிறப்பு நிருபர்),

[12]  The famous Jayalalitha saree episode took place in the Tamil Nadu Assembly on March 25, 1989. She was then the leader of the Opposition. Jayalalithaa got furious when a minister allegedly pulled her sari on the floor of the House. I have written an essay about this incident in my Tamil Magazine “Engal Baratham” March 2003 issue. We want to bring it to the remembrance of all the readers that how Jayalalitha was targeted for nothing during 1989. During the budget session of the assembly in 1989 as an opposition leader, Jayalalitha said Karunanidhi had no moral right to be CM. All hell broke loose and she was manhandled, with some DMK members allegedly trying to pull at her Sari. Jayalalithaa told former Minister Durai Murugan and his colleague Veerapandi Arumugam jumped on the table and did this vile act. There are photographs of her with disheveled hair and tears in her eyes. That day, she must have sworn revenge, like Draupadi, resolving that she would re-enter the assembly only as chief minister. This incident is the root cause of her hatred for Karunanidhi. After she had faced humiliation in the assembly, during the next election in 1991, she told people that Karunanidhi was a Duryodhana and there was a Dutchaathanaa among the legislators who had tried to disrobe her. The electorate responded by giving her thumping majority to Jayalalithaa. The same Victory repeated to Jayalalithaa even in 2011 elections by explaining to the people the corruption regime of Karunanithi and his family and ministers like famous Raja. So at least in future Karunanidhis to remember the proverb “evil begets evil.”

http://yessveeramani.livejournal.com/84131.html

[13] JAYALALITHA loyalists have a pet theory about her hatred towards Karunanidhi and the DMK. They point to an incident which occurred in the Tamil Nadu assembly on March 25, 1989, when a DMKMLA tugged at Jayalalitha’s cape. She was quick to reap political mileage and the AIADMK drew a parallel with the disrobing of Draupadi. Karunanidhi was compared to Duryodhan. In fact, Jayalalitha kept harping on the incident in her 1991 election campaign.

 http://www.outlookindia.com/article/The-Revenge-Of-Draupadi/205451