Posts Tagged ‘தமிழ்’

தமிழ், தமிழகம், தமிழ்நாடு: தனித்தமிழ் இயக்கம்-திராவிட இனவெறி மற்றவர்களிடமிருந்து பிரித்தது, மொழிவாரி மாநிலங்கள் உருவானதில் தனிமைப்படுத்தப் பட்ட நிலை [2]

ஏப்ரல் 20, 2018

தமிழ், தமிழகம், தமிழ்நாடு: தனித்தமிழ் இயக்கம்திராவிட இனவெறி மற்றவர்களிடமிருந்து பிரித்தது, மொழிவாரி மாநிலங்கள் உருவானதில் தனிமைப்படுத்தப் பட்ட நிலை [2]

Tamil vs Telugu, Bhattiporlu

தமிழ், தமிழர், தமிழ்நாடு [திராவிடக் கட்டுகதை] என்று மூளைசலவை செய்து, தமிழ்நாட்டை கெடுத்து, சீரழித்ததே, இந்த கோஷ்டிகள் தாம்: 1930-40களில் தனித்தமிழ் இயக்கம், திராவிட இனக் கட்டுக்கதைகளை வளர்த்தன. சைவம் என்ற போர்வையில், வைணவத்தை எதிர்த்து, தெலுங்கு பேசும் மக்களை அவமதித்த போக்கு, நீதிகட்சியைக் குலைத்து, திராவிட கழக போர்வையில், தமிழக பிரிவினை உருவெடுத்தது. ஆனால், அத்தகைய தேசவிரோத கொள்கையிலிருந்து மற்ற மொழி மக்கள் வேறுபட்டனர். 1940-50 திராவிட இனவெறி கட்டுக் கதைகளினால் தான், முதலில் ஆந்திரா தனியாகப் பிரிந்தது, முதல் மொழிவாரி மாநிலமானது[1]. தொடர்ந்து “தமிழ்” தான் உயர்ந்தது, அதிலுருந்து தான் மற்ற மொழிகள் தோன்றின என்பதனை சாதாரண மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. குறிப்பாக, தெலுங்கு மக்கள் ஒப்புக் கொள்ளவில்லை. பட்டிபோர்லு [Bhattiporlu] வரிவடிவங்களை [script] மற்றும் கல்வெட்டுகளை [inscriptions] வைத்துக் கொண்டு, தெலுங்கு வரிவடிவம் BCE மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று வாதிட்டனர். “தமிழ்நாடு” உருவானபோது கூட, எல்லை தகராறுகளில் கேரளா, ஆந்திரா மற்றும் ஆந்திராவுடன் எதிராகவே இருந்தது. தமிழநாட்டைத் தவிர மற்ற மாநில மக்கள் தாங்கள் “திராவிடர்கள்” என்றெல்லாம் ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால், திராவிடத்துவ சித்தாந்தம் தமிழ்நாடு மாநிலத்துடன் சுருங்கி விட்டது. காவிரி பிரச்சினையில், முன்னர் பாமகவினால், அதிகமாகவே வெறியூட்டப் பட்டு, பிறகு திராவிட பிரிவினைவாதிகளால் தீயூட்டப் பட்டது. அப்பொழுது, இங்கு “உடுப்பி” ஹோட்டல்கள் அடித்து நொறுக்கப்பட்டன. ஶ்ரீ ராகவேந்திர மடங்களும் தாக்கப்பட்டன.

Kannadigas - woodland hotel attacked- Sept.2016

தமிழகத்தில் நடந்த எல்.டி.டி..யின் வாரிசு / அதிகாரச் சண்டை திசைமாறியுள்ள நிலை: எல்.டி.டி.ஈ.யின் வாரிசு சண்டை தமிழக அரசியல் கட்சிகள், பெரிய புள்ளிகள் மற்றும் சித்தாந்தவாதிகளிடம் அதிகமாகவே வெளிப்படுகிறது. முன்பு, ஒரு நபரால் கட்டுக்கோப்பாக வைத்திருந்தது, சிதறிவிட்டது. எல்.டி.டி.ஈ.யின் பங்கு போதை மருந்து கடத்தல், விநியோகம் மற்றும் வியாபாரம், வெடிகுண்டுகள், ஆயுதங்கள் வாங்கல்-விற்றல், தமிழ்த் திரைப்பட விநியோகம், திருட்டு சிடி-விசிடி, குறிப்பிட்ட மின்னணு உதிரிகள் என பல விஷயங்களில் இருந்தது, இன்றும் இருக்கிறது[2]. போதை மருந்து கடத்தல் விவகாரங்கள் அப்பட்டமாக இருந்தாலும், தமிழக ஊடகங்கள் மறைத்தே வந்ததன-வருகின்றன[3]. இதனால் தான் “மத்திய அரசு எதிர்ப்பு” அடிக்கடி ஏற்படுகிறது. தெற்கு மாவட்டங்களில் மீனவர்களின் உதவிகளுடன் அத்தகைய சட்டமீறல்கள் நடந்து வருவதால், எல்லா கட்சிகளில் சம்பந்தங்களும் காக்கப்பட்டு வருகின்றன. ஆனால், அதிகாரப் பிரயோகம், அதிகாரப் பகிர்வு முதலியன யாரிடம் இருப்பது என்பது பற்றிதான் சண்டை-சச்சரவு நடந்து கொண்டிருக்கிறது. இதில் தமிழகத்தைச் சார்ந்தவர்கள், ஸ்ரீலங்காவைச் சேர்ந்தவர்கள் மற்றும் இரண்டிலும் அல்லது கனடா-பாரிஸ்-அமெரிக்காவில் இருப்பவர்கள் என்று மூன்று குழுக்களாக செயல்படுகின்றனர்[4]. திரைத்துறை, அரசியல் முதலிய பகிர்வு போராட்டங்கள் வைகோ, நெடுமாறன், செபாஸ்டியன் சீமான்[5], ஜெகத் காஸ்பர்…………என்று பலநேரங்களில் வெளிப்படும். கடந்த குறுகிய காலத்தில், நிறைய அளவு பணம் திரைப்படம், கட்டுமானப் பணிகள், தொழிற்சாலைகள் முதலியவற்றில் முதலீடு செய்யப்படுகிறது. அந்நிலையில், குறிப்பிட்ட தனிநபர்கள், குழுமங்கள் என தேர்ந்தெடுக்கப்பட்டவர்களிடம் குவியும் போது, நிச்சயமாக சண்டை வரத்தான் செய்கிறது. அதுமட்டுமல்லாது மத்தியில் மற்றும் மாநிலத்தில் தனித்தனி கூட்டணிக் கட்சியினருக்கு, பெரும்பாலான பணம் செல்லும்போதும் மற்றவர்களுக்கு கடுப்பாகிறது.

Holiday for Pongal and anti-Modi slogan

தீவிர தமிழ்வாத பிரிவினை கொலைகளில் முடிந்தது: 1984-89களில் எல்.டி.டி.இ வைத்துக் கொண்டு கருணாநிதியும் பிரிவினைவாத கோஷ்டிகளுடன் செயல்பட்டார். அவர்கள் நடத்திய உயநிர்ணய, பிரிவினைவாத மாநாடுகள் பெயரளவில் தடை செய்யப் பட்டன. இதனால், விடுதலை புலிகள் முதல், விடுதலை குயில்கள் வரை எல்லாம் ஊக்குவிக்கப் பட்டன. வி.பி.சிங் ஆட்சிகாலத்தில், பாமக போன்ற கட்சிகளும் “சுயநிர்ணயம்” போர்வையில் பிரிவினைவாதம் பேசியுள்ளது. பாமகவினால் தமிழக-கர்நாடக விசரிசல்கள் பெரிதாகின, அமைச்சர் பதவி கிடைத்ததும் பாமக அடங்கி விட்டது. மற்றவை “மண்டல்” போர்வையில் கலாட்டா செய்து வந்தன. இவர் 21 மே 1991 ராஜிவ் காந்தி படுகொலை திராவிட அரசியல்வாதிகளின் முகத்திரைகளைக் கிழித்து, அவர்களது தேசவிரோத கள்ளக்கடத்தல், வரியேய்த்தல், போதை மருந்து விரயாபாரம் என்று பற்பல சட்டமீறல்கள், குற்றங்கள் முதலியவற்றை எடுத்துக் காட்டின. 1996-2004ல், பதவி போதையில், திமுக சுருண்டு கிடந்தது. 2004-2014களில் ஊழலில் மிதந்து, கோடிகளை அள்ளி, ஊடக சாம்ராஜ்ஜியத்தை நிலைப் படுத்திக் கொண்டது. டிவி அதிரடி தாக்கம், பிரச்சார யுக்திகளினால் திராவிட குற்றங்களுக்கு வெள்ளையெடித்து, அதே நேரத்தில், காங்கிரசுக்கு சாதகமாக, இந்து-விரோத பிரச்சாரத்தை “பிஜேபி-எதிர்ப்பு” போர்வையில் நடத்தியது[6], நடத்திக் கொண்டிருக்கிறது. ஆனால், சத்தியராஜ் போன்ற நடிகர்களால் எதிர்மறை விளைவுகள் அதிகமாக ஏற்பட்டன. ரஜினியின் நிலையற்ற தன்மை மற்றும் இப்பொழுதைய கமல் ஹஸனின் பாரபட்சம் மிக்க பேச்சுகள்-நடவடிக்கைகள் போலித் தனமாக இருக்கின்றன. இப்பொழுது கூட, கமல்-ரஜினி பிளவுகள் போலித்தனத்தையே எடுத்துக் காட்டுகின்றன.

Dravidastan, new slogan 2018

கார்புரேட்டுகளின் தொடர்புகள், அயல்நாட்டு வியாபாரங்கள், வரியேப்பு, மோடிஎதிர்ப்பு: கார்புரேட்டுகளின் விளம்பரப் பணம் கொட்டி, வியாபாரம் சினிமாக்களில் பெருகி, பணத் தோட்டத்தில்[7], அதிகார போதையுடன், சுகபோகங்களை அனுபவித்தன. இதில் கம்யூனிஸம் பேசும் வகையறாக்களும் அடக்கம். இவற்றில் கடல்கடந்த வியாபார தொடர்புகள், இணைப்புகள், பண பரிவர்த்தனைகள் எல்லாமும் அடக்கம். எந்த திராவிடக் கட்சியும், பிரிவினைவாத கோஷ்டியும், சினிமாக்காரனும் இதில் சோடை போனதில்லை. அரசியல்வாதிகள் மற்றும் சினிமாக்காரர்களின் அடிக்கடி அமெரிக்க-ஐரோப்பிய பயணங்கள் அவற்றை வெளிப்படுத்தின. மோடியின் “கருப்புப் பண வேட்டை” முதலியவை இவர்களை பாதித்ததால் தான், மோடியை எதிர்க்க ஆரம்பித்தார்கள். ஆக, கள்ளப்பணம், வரியேய்ப்புகளில் ஈடுபட்ட கூட்டங்கள் தாம் இன்று தெருக்களில் கருப்பு சட்டம் அணிந்து கலாட்டா செய்து, பொது மக்களை இம்சித்து வருகின்றனர். திர்ப்புகள் சேவை வரி முதல் ஜிஎஸ்டி வரை இதில் உள்ளதை கவனிக்கலாம். இருப்பினும் வியாபாரம் செய்பவன், லாபங்களில் கொழுப்பதினால், அமைதியாகவே இருக்கிறான்.

© வேதபிரகாஷ்

19-04-2018

Karunanidhi, separate Tamilnadu

[1] Andhra Pradesh was carved out of Madras Presidency on October 1, 1953. This gave a death blow to the concept of “Dravidastan” and the separate nation for “Dravidian speaking people.” In other words, the “Dravidian” demand was restricted to “Tamilnadu.” The linguistic formation of States took place in 1956 with Kerala and Karnataka. Thus, “Dravidastan” was reduced to “Tamilnadu”.

[2] Citing Royal Canadian Mounted Police sources the Jane’s Intelligence Review said the Liberation Tigers of Tamil Eelam (LTTE) controls portion of US Dollar one billion drug market in the Canadian city of Montreal. The Jane’s Intelligence Review said that one of the main ways of earning money out of its USD 200-300 million annual income of the Liberation Tigers of Tamil Eelam (LTTE) is narcotics smuggling using its merchant ships, which also transports illicit arms and explosives which they procure all over the world for a separatist insurgency in the Indian Ocean island of Sri Lanka.

Steven W. Casteel, Narco-Terrorism: International Drug Traffickingand Terrorism – a Dangerous MixStatement ofSteven W. Casteel Assistant Administrator for Intelligence Before theSenate Committee on the Judiciary May 20, 2003; http://www.justice.gov/dea/pubs/cngrtest/ct052003.html

[3] Kartikeya, LTTE fall will alter drug trade in India, TOI, May 30, 2009, Read more: ‘LTTE fall will alter drug trade in India’ – Mumbai – City – The Times of Indiahttp://timesofindia.indiatimes.com/city/mumbai/LTTE-fall-will-alter-drug-trade-in-India/articleshow/4595554.cms#ixzz0xzdLhzpw

http://timesofindia.indiatimes.com/city/mumbai/LTTE-fall-will-alter-drug-trade-in-India/articleshow/4595554.cms

[4] http://www.eurasiareview.com/201006143193/sri-lanka-ltte-diaspora-wars-south-asia-intelligence-review.html

[5] செபாஸ்டியன் சீமான், ஜகத் காஸ்பரை இந்தியாவின் ஒற்றன் என்றெல்லாம் சொல்வதும், ஏதோ பெரிய விடுதலைப் போராளி போல நடந்து கொள்வதும், அதேபோல ஜகத் காஸ்பர் வெளிப்படையாக எல்.டி.டி.ஈ.யினரை ஆதரித்து பேசுவது-எழுதுவது சென்று செய்தாலும், கண்டு கொள்ளாமல் இருப்பது, முதலியவை தமிழகத்தில் வேடிக்கையான விஷயங்களே.

[6] சன் குழும நிகழ்ச்சிகள், பட்டிமன்றங்கள், சீரியல்கள் முதலியவற்றை அலசிப் பார்க்கும் போது, இது வெளிக்காட்டுகிறது.

[7] அண்ணாவின் “பணத்தோட்டம்” திராவிட அரசியல் மற்றும் கம்பெனிகளின் கூட்டுக் கொள்ளை, வரியேய்ப்பு முதலியவற்றை காட்டுவது மட்டுமல்லாது, சினிமா-கிரிக்கெட் தொடர்புகளையும் வெளிப்படுத்தி விட்டன.

ஸ்டாலினை பசு முட்ட வந்ததும், குங்குமத்தை அழித்ததும், இப்பொழுது சனியைப் பற்றி பேசும் ஸ்டாலினும், வாய்ச்சொல் கேட்டு அஞ்சும் கனிமொழியும்! (3)

ஜனவரி 16, 2018

ஸ்டாலினை பசு முட்ட வந்ததும், குங்குமத்தை அழித்ததும், இப்பொழுது சனியைப் பற்றி பேசும் ஸ்டாலினும், வாய்ச்சொல் கேட்டு அஞ்சும் கனிமொழியும்! (3)

Kanimozhi confession -13-01-2018-2

10 ஆண்டுகளுக்கு முன்பு (2008) பெரியாரை செருப்பால் அடிப்பேன் என்றுக் கூறியதை பொறுத்து ரௌத்திரம் பழகாததன் விளைவை தான் தற்போது அனுபவிப்பது (2018): ஆரூர் புதியவனின் “சொற்களால் ஒரு சுதந்திரப் போர்” நூல் வெளியீட்டு விழா சென்னை கவிக்கோ அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பங்கேற்ற கனிமொழி எம்.பி நூலை வெளியிட்டதுடன், சிறப்புரை நிகழ்த்தினார். ஜி.எஸ்.டி., முத்தலாக் என எல்லா திசைகளிலும் மக்களை ஒடுக்கும், அச்சுறுத்தும் நிகழ்வுகள் நடைபெறுவதாக குறிப்பிட்ட கனிமொழி, இவைகள் குறித்து பேசாததன் விளைவாக நமது மௌனமே நம்மை அழித்துவிடும் என்ற நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தமிழன் ரௌத்திரம் பழகுவதை நிறுத்திக் கொண்டதால் தான் இந்த நிலையில் தமிழன் உள்ளதாகக் கூறிய கனிமொழி, 10 ஆண்டுகளுக்கு முன்பு ஒருவர் பெரியாரை செருப்பால் அடிப்பேன் என்றுக் கூறியதை நாம் பொறுத்துக் கொண்டு ரௌத்திரம் பழகாததன் விளைவை தான் தற்போது அனுபவித்து வருவதாக அதே நூல் வெளியீட்டு விழாவில் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டதை நினைவுக்கூர்ந்து அது சரியான கருத்து என்றார். சுயமரியாதையை இழந்துவிட்டு ஏதுமில்லை என்றுக் கூறிய கனிமொழி, நம் வாழ்க்கையில் வெள்ளை என்ற ஒளி உருவாக வேண்டும் எனில் நாம் கருப்பில் இருந்துதான் ஆரம்பிக்க வேண்டும் என்றும், பெரியார் என்ற கருப்புச்சட்டை இல்லாமல் விடியல் இல்லை என்று குறிப்பிட்டார்.

Kanimozhi confession -13-01-2018-1

ஆண்டாள் எந்த சாதியில் பிறந்திருந்தால் என்ன?: ஜாதி என்ற சொல்லையே அழிக்க வேண்டும், ஜாதியே இல்லாத நிலையை உருவாக்குவதே திராவிட அரசியலின் அடிநாதம் என்றுக் கூறிய கனிமொழி, ஜாதியைக் கொண்டு ஒருவன் ஒருவரை ஒடுக்கினால் அதையே ஆயுதமாக தூக்க வேண்டியது அவசியமாகிறது என்றும் குறிப்பிட்டார். நாம் தூக்க வேண்டிய ஆயுதம் எதுவென தீர்மானிப்பது எதிரியே என்றும் கனிமொழி தெரிவித்தார். ஜாதி இல்லை என்று எல்லோரும் சொல்கிறோம், எந்த ஜாதியில் பிறந்தவரும் என்னை வந்து சேரலாம் என்று கண்ணபிரான் கூறுவதாக கீதை சொல்கிறது எனில், ஆண்டாள் எந்த சாதியில் பிறந்திருந்தால் என்ன? ஆண்டாள் பிறப்பால் தலித்தாக இருந்திருக்கலாம், எந்த சாதியாகவும் இருந்திருக்கலாம் எதுவாய் இருந்தால் என்ன? அதில் என்ன பிரச்சனை எனவும் கனிமொழி குறிப்பிட்டார். இப்படிப்பட்ட விவாதங்களை நிகழ்த்தவில்லை எனில், பயந்திருப்போம் எனில், நிச்சயமாக தமிழினம் சுயமரியாதை அற்ற இனமாக, அடையாளம் அற்ற இனமாக, எதையெல்லாம் போராடி சாதித்தோமோ அதையெல்லாம் இழந்துவிடும் இனமாக மாறிவிடும் சூழல் நிலவுவதாக கனிமொழி தெரிவித்தார்.

Kanimozhi confession -13-01-2018-3

கடவுளை எதிர்த்து பேசிப்பேசி தான் கருணாநிதிக்கு பேசமுடியாமல் போய் விட்டதாக சிலர் பேசுவதாக வேதனை தெரிவித்த கனிமொழி: கடவுளை எதிர்த்து பேசிப்பேசி தான் கருணாநிதிக்கு பேசமுடியாமல் போய் விட்டதாக சிலர் பேசுவதாக வேதனை தெரிவித்த கனிமொழி, உடல்நலம் சரியில்லாதபோது உதவியாளர் வைத்துவிடும் விபூதியைக் கூட அழித்துவிடுபவர் கருணாநிதி என்று தெரிவித்தார். தனது தாயார் கோவிலுக்குச் செல்வது குறித்து சிலர் கேட்பதாகவும், தனது தாயார் கோவிலுக்கு செல்வதற்கான உரிமைக்காகவும் தான் போராடுவதாக தெரிவித்தார்[1]. நிகழ்வின் போது தனது வீட்டில் நடைபெற்ற சம்பவம் ஒன்றைக் குறிப்பிட்டு கனிமொழி பேசினார். “இப்போதும் இருவரும் (கருணாநிதி, கனிமொழி) கடவுளை மறுப்பது ஏன்?” என தனது தாயார் கேட்டதாகவும், “தலைவர் (கருணாநிதி) தற்போது (கடவுள் விடயத்தில்) தனது கருத்தை சிறிது மாற்றியிருப்பார்” என்று தாயார் குறிப்பிட்டதாகவும், இது தொடர்பாக கருணாநிதியிடம் “கடவுள் இருக்கிறாரா?” என கேட்டபோது, வாய் பேசமுடியாத நிலையில், “இல்லை” என கருணாநிதி தலையசைத்ததாகவும் கனிமொழி குறிப்பிட்டார்[2]. தனது வீட்டில் நிகழ்ந்த சம்பவத்தை நினைவுக்கூர்ந்த கனிமொழி, கருணாநிதியின் மவுனம் கூட நாத்திகம் பேசும் என்று குறிப்பிட்டார்[3]. மேலும், எதை வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள், திமுக நாத்திகம் பேசுவதை நிறுத்தாது என்றும் அவர் உறுதிப்பட தெரிவித்தார்[4].

 

15-01-2018 -Arur Pudhiyavan, book release.215-01-2018 கனிமொழி பேச்சு: ஆரூர் புதியவனின்[5]  புத்தக வெளியீட்டின் போது, இவ்வாறு கனிமொழி பேசியது பல உண்மைகளை எடுத்துக் காட்டுகிறது. ராம கோபாலன், “இவர்கள் எல்லோருமே, தங்களது பெண்டாட்டிகளை வைத்து சாமி கும்பிடுகின்ற கூட்டம்”, என்று பேசியதுண்டு. அதை கனிமொழி இப்பொழுது ஒப்புக் கொண்டுள்ளார் என்றாகிறது. அம்மாவின் “சாமி கும்பிடுகின்ற உரிமைக்கு”. இவர் என்ன போராடுவது? அப்பொழுது அவ்வுரிமையை யார் பறித்தது என்ற கேள்வி எழுகின்றது. நாத்திக துணைவன் அவ்வாறு தடுத்துக் கொண்டிருந்தால், அது அவனது ஆணாதிக்கத்தைத் தான் எடுத்துக் காட்டுகிறது. 93 வயதாகியும் துணைவியை ஆட்டிப் படைக்கிறார் என்றால், அதை மகள் எடுத்துக் கஆட்டவேண்டும். மாறாக அவரது உரிமைக்குப் போராடுகிறேன் என்றால், தந்தையை எதிர்த்தாப் போராடப் போகிறார்?

15-01-2018 -Arur Pudhiyavan, book release

கடவுளை எதிர்த்து பேசிப்பேசி தான் கருணாநிதிக்கு பேசமுடியாமல் போய் விட்டது: “கடவுளை எதிர்த்து பேசிப்பேசி தான் கருணாநிதிக்கு பேசமுடியாமல் போய் விட்டதாக சிலர் பேசுவதாக வேதனை தெரிவித்த கனிமொழி, உடல்நலம் சரியில்லாதபோது உதவியாளர் வைத்துவிடும் விபூதியைக் கூட அழித்துவிடுபவர் கருணாநிதி”, என்ற போதும் அவரது மனம், மனசாட்சி உறுத்துவதை அறியலாம்.  உதவியாளர் விபூதியை வைப்பதற்கு கருணாநிதி ஏன் அனுமதிக்க வேண்டும், பிறகு ஏன் அழிக்க வேண்டும்? அப்படியென்றால், வைத்தால் ஏதோ பலன் கிடைக்கும் அன்ற ஆசை, நப்பாசை உள்ளுக்குள் இருக்கிறது என்றாகிறது. முதல் நாத்திகப் பழமான, கனிக்கு அத்தகைய நம்பிக்கையே இருக்கக் கூடாது ஆயிற்றே? யாரோ சொன்னார்கள் என்றால் பலித்து விடுமா என்ன? அதென்ன சாபமா, செய்வினையா, திருஷ்டியா, ….அதையெல்லாம் நம்ப வேண்டிய அவசியமே இல்லையே? பிறகு, அப்படி நம்பி வருத்தப் படுவது எடைக் காட்டுகிறது? வைத்த விபூதியையேத் துடைத்துப் போடும் அளவிற்கு நாத்திகம்-பகுத்தறிவு ஊறியிருக்கும் போது, இதெல்லாம் ஒரு விசயமா என்ன?

15-01-2018 - Kanimozhi on atheism-regrets about the comments on karu

கருணாநிதியின் மவுனம் கூட நாத்திகம் பேசும்: “கடவுள் விடயத்தில் தனது கருத்தை சிறிது மாற்றியிருப்பார்” என்று தாயார் குறிப்பிட்டதாகவும், இது தொடர்பாக கருணாநிதியிடம் “கடவுள் இருக்கிறாரா?” என கேட்டபோது, வாய் பேசமுடியாத நிலையில், “இல்லை” என கருணாநிதி தலையசைத்ததாகவும் கனிமொழி குறிப்பிட்டார்[6]. தனது வீட்டில் நிகழ்ந்த சம்பவத்தை நினைவுக்கூர்ந்த கனிமொழி, கருணாநிதியின் மவுனம் கூட நாத்திகம் பேசும் என்று கனிமொழி குறிப்பிட்டார்[7]. அதாவது ராஜாத்தி அம்மாள்  கோவில்-கோவிலாக சென்று, கும்பிட்டு, அர்ச்சனை செய்து, பிரசாதம் வாங்கி வருவார், புருடன் சாப்பிடுவான் என்று, ஆனால் சாப்பிட்டப் பட்டதா-இல்லையா என்பது ரகசியம். பிறகு, சாய் பாபா வந்தபோது ஏன் காலில் விழுந்து கும்பிட வேண்டும்? எப்படியோ கனிமொழியின் மனம், மனசாட்சி உறுத்த ஆரம்பித்து விட்டது. அதனால், இந்த அளவுக்கு விளக்கம் கொடுக்க வேண்டியதாக உள்ளது போலும்.

© வேதபிரகாஷ்

16-01-2018

15-01-2018 - Kanimozhi on atheism

[1] நியூஸ்..7.செய்தி, எதை வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள், திமுக நாத்திகம் பேசுவதை நிறுத்தாது!” : கனிமொழி, January 15, 2018. Last Modified திங்கள், 15 ஜனவரி 2018 (23:00 IST).

[2] http://ns7.tv/ta/tamil-news/tamilnadu/15/1/2018/kanimozhi-mp-karunanidhi-athist-philosaphy

[3] தமிழ்.வெப்.துனியா, என்ன ஆனாலும் திமுக நாத்திகம் பேசுவதை நிறுத்தாது: கனிமொழி, January 15, 2018.

[4] http://tamil.webdunia.com/article/regional-tamil-news/we-don-t-stop-atheism-speech-says-kanimozhi-118011500020_1.html

[5] பேராசிரியர் முனைவர் ஹாஜா கனி, சென்னை மேடவாக்கம் காயிதேமில்லத் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர், தமுமுக வின் மாநிலச் செயலாளர், மக்கள் உரிமை வார இதழின் இணை ஆசிரியர்.

[6] http://ns7.tv/ta/tamil-news/tamilnadu/15/1/2018/kanimozhi-mp-karunanidhi-athist-philosaphy

[7] தமிழ்.வெப்.துனியா, என்ன ஆனாலும் திமுக நாத்திகம் பேசுவதை நிறுத்தாது: கனிமொழி, January 15, 2018.

 

ஸ்டாலினை பசு முட்ட வந்ததும், மாட்டுக்கறிக்கு ஆதரித்ததும், குங்குமத்தை அழித்ததும் தமிழ்நாட்டவர் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் – இப்பொழுது சனியைப் பற்றி பேசும் ஸ்டாலின் (2)

ஜனவரி 16, 2018

ஸ்டாலினை பசு முட்ட வந்ததும், மாட்டுக்கறிக்கு ஆதரித்ததும், குங்குமத்தை அழித்ததும் தமிழ்நாட்டவர் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்இப்பொழுது சனியைப் பற்றி பேசும் ஸ்டாலின் (2)

Blood pongal - as Kru compared kumkum with blood

போகி திருநாளும், பிடித்துள்ள சனியும்: ஸ்டாலின் பேசியது, “இன்று போகி திருநாள். போகி என்றால் பழையன கழிதலும், புதிய புகுதலும் என்ற நிலையில், நம்மை பிடித்துள்ள சனி இன்றோடு ஒழிந்திட வேண்டும். வீட்டிலிருக்கும் பழையனவற்றை மட்டுமல்ல, இந்த நாட்டிலிருக்கும் பழையனவற்றையும் அப்புறப்படுத்த வேண்டிய கட்டாயம் நமக்கு உருவாகியிருக்கிறது[1]. அந்தளவுக்கு, ஏறக்குறைய 20 ஆண்டுகள் பின்தங்கி, மோசமான நிலையில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் தமிழகத்திற்கு, நாளைய தினம் தை பிறக்கின்ற நேரத்தில் ஒரு நல்ல விடிவுகாலம் பிறக்கும் என்ற நம்பிக்கை நமக்கெல்லாம் உருவாகி இருக்கிறது. எனவே, நம்முடைய தமிழகத்தை காப்பாற்ற, தமிழகத்துக்கு ஒரு விடிவுகாலத்தை உருவாக்கிட, தமிழக மக்களுக்குத் தேவையான திட்டங்களை உருவாக்கிட வேண்டுமென்று, இந்த தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் விழாவில் உறுதியெடுத்துக் கொள்ள வேண்டும். அந்த நம்பிக்கையோடு உங்கள் அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டும் மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்று கூறினார்[2]. இனி தளபதியை மாடு முட்ட வந்த விவகாரத்தை கவனிப்போம்.

Cow marched towards Stalin - 14-01-2018, twitter

மாடு முட்ட வந்த சமாசாரம்: வேடிக்கை என்னவென்றால், தளபதியை மாடு முட்ட வந்த விவகாரத்தை “தினமலர்” மட்டுமே வெளியிட்டதாகத் தெரிகிறது. ஒரு வீடியூ 15-01-2018 காலையில் தேடியபோது காணப்பட்டது. மதியம் காணப்படவில்லை. கொளத்துாரில், ஸ்டாலினை மாடு முட்ட வந்ததால், மாட்டிற்காக செய்யவிருந்த பூஜையை, ஸ்டாலின் ரத்து செய்தார்.தமிழக எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க., செயல் தலைவருமான ஸ்டாலினின் சொந்த தொகுதி கொளத்துார். இந்த தொகுதிக்கு உட்பட்ட, பெரவள்ளூர், பெரியார் நகர் பகுதிக்கு வந்தார். கொளத்துார் வீதிநகர் பகுதியில், நடந்த பொங்கல் விழாவிற்கு நலத்திட்ட உதவிகள் வழங்க ஸ்டாலின், 9:00 மணிக்கே வரவிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.ஆனால், 12:௦௦ மணிக்கு வந்த ஸ்டாலின், பொங்கல் விழா நடைபெறும் இடத்தில் இருந்த பசுமாட்டிற்கு மாலை போட சென்றார்.ஆனால், அந்த மாடு முட்ட வரவே, கோபமடைந்த ஸ்டாலின், மாலையை கட்சி தொண்டர் ஒருவரிடம் கொடுத்து மாட்டிற்கு போடச் சொன்னார்[3]. மேலும், பசு மாட்டிற்கு செய்யவிருந்த பூஜையையும் வேண்டாம் என்று கூறி மறுத்து விட்டார்[4]. சென்ற ஜூன் 2017ல் மாட்டுக்கறியை ஆதரித்துப் பேசியதை நினைவு கொள்ளலாம்[5]. இப்படி இரட்டை வேடும் போடும் இவர், பொங்கல் வாழ்த்து என்று இணைதளத்தில் படம் போடும் போது, மாட்டை சேர்த்துக் கொள்கிறார்.

Cow and stalin - DM-14_01_2018_016_026

மிருகம் போலி நாத்திகனின் முகமூடியைக் கிழித்து விட்டது: ஸ்டாலினை மாடு முட்ட வந்தது, மாலை போட மறுத்தது, போலி நாத்திகத்தை தோலுரித்திக் காட்டுகிறது. குங்குமத்தை அழித்த ஸ்டாலினை மாடு முட்ட வந்தது, திராவிட நாத்திகத்திற்கு சரியான அடி! பகுத்தறிவால் எந்த விளக்கமும் கொடுக்க முடியாது! முன்னர் கருணாநிதி, திமுக தொண்டர் குங்குமத்துடன் வந்தபோது, நக்கலாக, “என்ன நெற்றியில் ரத்தமா?”, என்ற கேட்ட வயதான தந்தை கருணாநிதியின் வக்கிரம் தான், தனயன், நெற்றியில் இட்ட குங்குமத்தை அழித்தபோது புலப்பட்டது. பிறகு தனது தாயார், துணைவியார், சகோதரி என்று எல்லோரும் ஏன் குங்குமம் வைக்கின்றனர், அவற்றை அழிக்காமல் இருக்கும் இவரது யோக்கியதை என்ன என்பதனை கவனிக்க வேண்டும். ஸ்டாலின் – மாடு முட்ட வந்தால் வீரத்தமிழா, கோபம் வரக்கூடாது, கொம்புகளைப் பிடித்து அடலேறு போல அடக்கி வீரத்தைக் காட்ட வேண்டும்! ஜல்லைக் கட்டுக்கு வீரம் பேசிய இந்த தளபதி கோழை போல ஓடி போனது, கேவலமானது. வயதாகி விட்டது என்று சொல்லலாம், அப்பொழுது, வயதிற்கு வேண்டிய நாகரிகம் அப்பனுக்கும், மகனுக்கும் இல்லாத்தும் கேவலம் தான். நம்பிக்கையில்லாத ஸ்டாலின் சனி பற்றி பேசுவது, அவரது பொலித்தனத்தின் உச்சம்! பிறகு ராகு-கேது எல்லாம் வரும் போல!

Cow marched towards Stalin - 14-01-2018, Chennai.Karu enquires

போகி பண்டிகையில், பழையது கலைந்து, புதியதை உருவாக்குவோம். தமிழகத்தை சனிபிடித்து ஆட்சி செய்கிறது.தை பிறந்தால் வழிபிறக்கும், பெரியாரா இப்படி சொல்லிக் கொடுத்தார்? பண்டிகைகளைக் கேவலப்படுத்திய ஈவேரா மற்றும் திக முதலியவற்றை தமிழக மக்கள் அறிந்து, புரிந்து கொண்டு விட்டனர். ஹேமமாலினியையும், ஸ்டாலினையும் மாடு முட்ட வந்ததில் உள்ள ஒற்றுமை, வேற்றுமை என்ன என்று பார்த்தால், முன்னவர் பிராமண்ராக இருந்தாலும், தான் கடமையை செய்யும் போது முட்ட வந்தது. ஆனால், இங்கோ, பொங்கல் வைத்து, பசுக்கு மாலை போட வந்த போது முட்டப் பார்த்தது. ஆக, அந்த ஜீவனுக்கு, இந்த மனிதனின் போலித் தனம் தெரிந்திருக்கிறது.

Stalin, atheist visiting temples- 13-01-2018

இந்து மதம் மட்டுமல்ல எந்த மதத்தை இழிவுபடுத்தினாலும் தி.மு.. அதை ஏற்காது: வைரமுத்து-ராஜா விவகாரத்தில், ஸ்டாலின் கூறிய இரு வரியை பெரியதாக எடுத்துக் கொள்ள முடியாது[6]. இந்து மதம் மட்டுமல்ல எந்த மதத்தை இழிவுபடுத்தினாலும் தி.மு.க. அதை ஏற்காது ஊக்கப்படுத்தாது, உடன்படாது. என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்[7]. ஆனால், அவர் அவ்வாறு செய்துள்ளாரா என்று பார்த்தால் ஒன்றும் கிடையாது. ஊடகங்களும் பதிலுக்கு எந்த கேள்வியையும் கேட்கவில்லை[8]. திமுக உடன்படாது என்றால், தான் உடன் படுவேன், ஊக்குவிப்பேன், ஏற்பேன் என்றாகிறது[9]. இது பேட்டியில் ஏதோ குறிப்பிட்டிருக்கிறார், அவ்வளவுதான், ஏனெனில், இதுவரை, இந்து மதம் தாக்கப் பட்டபோது, இவர் வாயை மூடிக் கொண்டுதான் இருந்தார். இப்பொழுது கூட கனிமொழி பேசியதற்கு ஒன்றையும் சொல்லக் காணோம். அதென்ன அப்பேச்சு இழிவு படுத்தியதாக ஆகாதா? அவ்வளவு ஏன், இவரது தந்தை பேசியது எல்லாம் ஞாபகப் படுத்திக் கொண்டால், இவரது மனதுக்கு, மனசாட்சிக்குத் தெரியாமலா போய் விட்டது? வைத்த குங்குனத்தை அழித்தபோது, இவர் என்ன செய்ததாக அர்த்தம்? ஆகவே, இந்த ஒரு வரியை வைத்து, இவரது குணத்தை ஒன்றும் எடை போட முடியாது. மேலும், ஊடகங்கள், பசு முட்ட வந்ததை மறைத்ததிலிருந்தே, அவகளது வழக்கமான, செக்யூலரிஸத்தைக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

Karunanidhi meeting DNK 13-01-2018

பொங்கல் அன்று கனிமொழி வீட்டிற்கு சென்ற கருணாநிதி: ஆழ்வார்பேட்டை இல்லத்தில் திமுக செயல்தலைவர் ஸ்டாலினை சந்தித்து கனிமொழி பொங்கல் வாழ்த்து தெரிவித்தார்[10]. இதேபோல் திமுக தொண்டர்களும் ஸ்டாலினை நேரில் சந்தித்து தங்களது பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தனர். தமிழக மக்களுக்கு கனி மொழி பொங்கல் வாழ்த்து தெரிவித்து உள்ளார்[11]. இந்த ஆண்டாவது தமிழக மக்களுக்கு விடிவுகாலம் பிறக்க வேண்டும் என கூறி உள்ளார். வழக்கமாக பொங்கல் அன்று கருணாநிதி வீடு களை கட்டும். இந்த ஆண்டும், சி.ஐ.டி காலணி வீட்டில் தடபுடல் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. பொங்கல் அன்று கோபாலபுரம் வீட்டில் தொண்டர்களைப் பார்த்து கையசைத்து பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.

Stalin, atheist visiting temples-duplicity- 60th marriage

கோபாலபுரம் வீட்டில் இருக்கும் கருணாநிதி, பொங்கல் அன்று தொண்டர்களைச் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. தனித்தனியாக தொண்டர்களை பார்க்க மருத்துவர்கள் அனுமதி தரவில்லை. நோய் தொற்று ஏற்பட்டு விடக்கூடாது என்று தடை போட்டுவிட்டனர். இந்நிலையில், 15 மாதங்களுக்கு பிறகு சென்னை சி.ஐ.டி காலணி வீட்டிற்கு ஜனவரி 15-ம் தேதி இரவு 9 மணிக்கு சென்றார் கருணாநிதி[12]. வீட்டுக்கு வந்த கருணாநிதியை அவரது மகள் கனிமொழி வரவேற்றார். ராஜாத்தி அம்மாள், அரவிந்தன் ஆகியோர் கருணாநிதியை வீட்டுக்குள் அழைத்து சென்றனர். ”வீட்டுக்கு அப்பா வந்தது மகிழ்சி அளிக்கிறது’ என்றார் கனிமொழி[13]. ஆக அப்பனை, அண்னனை மகள் சந்தித்தாள், என்று சொல்லாமல், ஏதோ ஒரு தலைவர், இன்னொருவரஇப் பார்த்தார் என்று செய்தி போட்டிருப்பது, நிருபர்கள், செய்தியாளர்களின் அடிமைத் தனத்தைக் காட்டுகிறது. “பொங்கல் இனாம்” கனமாக இருந்தது போலும். இதை ஏன் குறிப்பிட்டுகின்றேன் என்றால், மாடு முட்டிய விசயத்தை மறைத்ததால், அதனைப் பற்றி, பகுத்தறிவோடு செய்தி வெளியிட்டு விவாதிக்காமல் இருந்ததால் தான்.

© வேதபிரகாஷ்

16-01-2018

Stalin, atheist visiting temples-duplicity- 13-01-2018

[1] பாலிமர்.நியூஸ், கொளத்தூர் தொகுதி பொங்கல் விழாக்களில் மு..ஸ்டாலின் பங்கேற்பு, 13-ஜன-2018 12:43

[2]https://www.polimernews.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D/

[3] தினமலர், முட்ட வந்தது பசு மாடு பூஜையை நிராகரித்த ஸ்டாலின், Added : ஜன 14, 2018 04:39.

[4] http://www.dinamalar.com/news_detail.asp?id=1938542

[5] http://www.timesnownews.com/india/video/beef-ban-dmk-protest-mk-stalin-iit-madras-assault/62078

 

[6] பாலிமர்.நியூஸ், எந்த மதத்தை இழிவுபடுத்தினாலும் தி.மு.. அதை ஏற்காதுமு..ஸ்டாலின், 13-ஜன-2018 15:04

[7]https://www.polimernews.com/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5/

[8] தி.இந்து, அதிமுக ஆட்சி அகலவேண்ண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு: ஸ்டா;இன் பேட்டி, Published :  13 Jan 2018  15:50 IST; Updated :  13 Jan 2018  15:50 IST

[9] http://tamil.thehindu.com/tamilnadu/article22436018.ece

[10] தினத்தந்தி, தமிழக மக்களுக்கு கனிமொழி பொங்கல் வாழ்த்து தெரிவித்தார், ஜனவரி 14, 2018, 10:23 AM

[11] http://www.dailythanthi.com/News/TopNews/2018/01/14102338/Kanimozhi-for-Tamil-people-Pongal-greeted.vpf

[12] விகடன், கனிமொழி வீட்டில் கருணாநிதி….!, எஸ். முத்துகிருஷ்ணன், Posted Date : 01:15 (16/01/2018); Last updated : 01:15 (16/01/2018)

[13] https://www.vikatan.com/news/tamilnadu/113646-karunanidhi-went-to-kanimozhis-cit-colony-house-after-15-months.html – vuukle_div

வசைபாடி மன்னிப்புக் கேட்கும் திராவிடத்துவத்தின் மகத்துவம் என்ன – மன்னிப்பினால் துவேச-தூஷணங்களின் தாக்குதல் அடங்குமா, மறையுமா, குறையுமா?

ஏப்ரல் 9, 2016

வசைபாடி மன்னிப்புக் கேட்கும் திராவிடத்துவத்தின் மகத்துவம் என்ன – மன்னிப்பினால் துவேச-தூஷணங்களின் தாக்குதல் அடங்குமா, மறையுமா, குறையுமா?

கரு முஸ்லிம் லீக், குழுக்களுடன்

திராவிட கட்சி பேரங்களில் ஈடுபட்ட முஸ்லிம்கள்:. “நேற்று (ஏப்.6) மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை அலுவலகமான தாயகத்தில் செய்தியாளர்கலை சந்தித்தபோது, தேசிய முற்போக்கு திராவிட கழகத்தில் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து விளக்கம் அளித்தேன். அக்கட்சியின் மூன்று சட்டமன்ற உறுப்பினர்களும், சில மாவட்டச் செயலாளர்களும் அக்கட்சித் தலைமை சட்டமன்ற தேர்தல் குறித்து மார்ச் 23ஆம் தேதியன்று எடுத்த முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தலைமையைக் கடுமையாக விமர்சித்து பத்திரிகையாளர்களைச் சந்தித்துக் கூறிய கருத்துகளுக்குப் பதில் சொல்லும் விதத்தில் சில விளக்கங்கள் அளித்தேன். தேசிய முற்போக்கு திராவிட கழகத்தினரை தலைமைக்கு எதிராக அறிக்கை விடச் செய்ய திராவிட முன்னேற்றக் கழகம் கோடிக்கணக்கில் பணத்தைக் கொடுத்து, வலை வீசுகிரார்கள், அதற்குச் சாட்சியமாக திருநெல்வேலி மாவட்டத்தில் தேமுதிக நெல்லை மாநகர் மாவட்டச் செயலாளர் முகமது அலி என்பவரை அக்கட்சித் தலைமைக்கு எதிராக அழைத்து வந்தால் அவருக்கு 3 கோடியும், அழைத்து வருபவருக்கு 50 லட்ச ரூபாயும் தருவதாக, கோல்டன் கான் என்ற இஸ்லாமிய நண்பரிடம், தேனியைச் சேர்ந்த நஜ்முதீன் பேசி இருக்கிறார் என்ற தகவலைச் சொன்னேன்[1]. வைகோ அறிக்கை தொடர்கிறது.

கரு-இந்திராவை வசை பாடியது- மாத விடாய்நான் வணங்கும் தெய்வமான என் அன்னை மாரியம்மாள் மீது ஆணையிட்டுக் கூறுகிறேன்: “பணம் வாங்கிக் கொண்டு கட்சி மாறுவது இழிவானது என்று கூறியபோது, இது உலகத்தின் ஆதித்தொழிலைப் போன்றது என்று கூறினேன். ஆனால், அண்ணன் டாக்டர் கலைஞர் அவர்களைக் குறித்தோ, அவரது குடும்பத்தினர் குறித்தோ, மறைமுகமாக இப்படிச் சொல்ல வேண்டும் என்று இம்மி அளவும் என் மனதில் எண்ணம் இல்லை என்பதை, நான் வணங்கும் தெய்வமான என் அன்னை மாரியம்மாள் மீது ஆணையிட்டுக் கூறுகிறேன். ஆனால், அதன்பின் நாதஸ்வரம் வாசிக்கும் அகலை அவருக்குத் தெரியும் என்று கூறியது, தவறாகப் பொருள் கொள்ளும்படி ஆகி விட்டது. அது மிகப்பெரிய தவறுதான், அண்ணன் கலைஞர் அவர்களைச் சாதியைக் குறித்து நான் இப்படிச் சொன்னதாகப் பழிப்பதற்கும் நான் ஆளாகி விட்டதை எண்ணி வேதனைப்படுகிறேன். நான் சாதிய உணர்வுகளுக்கு முற்றிலும் அப்பாற்பட்டவன், அதை அண்ணன் கலைகர் அவர்களே அறிவார்கள்.” வைகோ அறிக்கை தொடர்கிறது.

வைகோ 1978ல் பேசும் படம் - திருமலை நாயக்கர் விழா

என் உயிர் பிரியும் வரை உங்களுக்கு நான் கும்பகர்ணனாகவே இருப்பேன்:  “அண்ணன் கலைஞர் அவர்களை 30 ஆண்டுகளாக என் நெஞ்சில் வைத்துப் போற்றியவன் நான். அவர் மீது துரும்பு படுவதர்கும் சகிக்காதவனாக, அவருக்கு ஒரு கேடு என்றால் அதைத் தடுக்க என் உயிரையும் தத்தம் செய்யச் சித்தமாக இருந்தவன் நான். அதனால் தான் 1993 அக்டோபர் 3 இல் என் மீது கொலைப்பழி சுமத்தப்பட்டபோது, என் உயிர் பிரியும் வரை உங்களுக்கு நான் கும்பகர்ணனாகவே இருப்பேன் என்று அறிக்கை விட்டேன். ஆனால், உலகின் ஆதித் தொழில் என்று கலைஞர் குடும்பத்தைக் குறிப்பிட்டு நான் கூறியதாகக் கருதுவதற்கு ஒரு இடம் ஏற்பட்டு விட்டதே என்பதை நினைக்கும்போது என் மேனி முழுவதும் நடுக்கமுற்றது என்பதை என் அருகில் இருந்தவர்கள் அறிவார்கள். இப்படி நான் கூறியது என் வாழ்நாளில் செய்த ஒரு குற்றமாகவே கருதுகிறேன். அதற்கு மன்னிப்பும் கேட்டுக் கொள்கிறேன். அண்ணன் கலைஞர் அவர்கள் தாயுள்ளத்தோடு என் விளக்கத்தை ஏற்றுக் கொள்ள வேண்டுகிறேன், ”  இவ்வாறு அறிக்கையில் வைகோ தெரிவித்துள்ளார்.  வாழ்நாளில் செய்த ஒரு குற்றமாகவே கருதுகிறேன்[2]. அதற்கு மன்னிப்பும் கேட்டுக் கொள்கின்றேன். என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்[3].

Anti-Hindu Karunanidhiதிராவிடத் தலைவர்களின் பரஸ்பர வசைபாடுகள்: 1960களிலிருந்தே, பொதுவாக திராவிட சித்தாந்திகள், மேடை பேச்சாளிகள், அரசியல்வாதிகள், முதலியோர் ஆபாசமாக, கொச்சையாக, கேவலமாக, இரட்டை அர்த்தம் தொணிக்க பேசுவது எல்லாம் சகஜமாக இருந்தது. இப்பொழுது, ஊடகங்கள் மூலம் அவை பரவி வருவதால், இக்காலத்தவர், அடடா என்ன பெரியார், அண்ணா, கருணாநிதி …… முதலியோர் இப்படியா பேசினர் என்று திகைக்கின்றனர். இதனால், அவர்களைப் பற்றிய கருத்துகளும் இளைஞர்களிடையே மாறி வருகின்றன. உதாரணத்திற்கு சிலவற்றைப் பார்ப்போம்[4]:

  1. கருணாநிதி ‘காமராஜரின் தாய் கருவாடு விற்றவர்’ என்று சொன்ன போது கண்ணதாசன் தாக்குதல் மிகக்கடுமையாக இருந்தது. “என் தலைவனின் தாய் கருவாடு மட்டும் தான் விற்றார்” [அப்படியென்றால், வேறென்னதை விற்றார் என்ற கேள்வி எழுகிறது அல்லவா?].
  2. கண்ணதாசன் இறந்த போது கருணாநிதி இரங்கல், “தென்றலாய் வீசியவனும் நீ! நெருப்பாய் சுட்டவனும் நீ! தாக்குகின்ற கணை எத்தனை நீ தொடுத்த போதும் அத்தனையும் தாங்கும் என் நெஞ்சே உன் அன்னை!”  [அதாவது கருணாநிதி, பதிலுக்கு, உங்கம்மாதான் அப்படி செய்வாள் என்பது போல சாவு-இரங்களிலும் மறக்காமல் வசைப்பாடி பழித்தீர்த்துக் கொண்டுள்ளார்]
  3. எம்.ஜி.ஆர் புதுகட்சி ஆரம்பித்த போது கருணா நிதியின் எள்ளல் அன்று – எம்.ஜி.ஆர், “கூத்தாடி”, அதிமுக “நடிகர் கட்சி!” தன் மீதான “கூத்தாடி” …..என்றெல்லாம் பேசினார் [ஆனால், அண்ணா, முதலியோர் நாடகம்-சினிமா துறைகளில் நடிகனாக, எழுத்தாளராக…….வேலைப் பார்த்து பணம் சம்பாதித்தை மறந்து-மறைத்து வசைப்பாடியது].
  4. இதனால், அத்தகைய விமர்சனத்திற்கும், அதிமுக – ’நடிகர் கட்சி’ எள்ளலுக்கும் எம்.ஜி.ஆர் ஒரு கட்டத்தில் பொறுமையிழந்து சொன்னார், “கருணாநிதி தாசி பரம்பரை” என்றார் [என்ன செய்வது, பொறுமைக்கும் ஒரு இல்லையுண்டல்லவா, பொதுவாக எம்ஜியார் அப்படியெல்லாம் பேச மாட்டார். ஆனால், தூண்டப்பட்டார்].
  5. எம்.ஜி.ஆர் மறைந்த போது கருணாநிதி புகழாரம், “சொல்வாக்கும் செல்வாக்கும் மிகுந்த முதலமைச்சர்!” [அதாவது கருணாநிதி, பதிலுக்கு, “சொல்வாக்கு” என்று குறிப்பிட்டு சாவு-இரங்களிலும் மறக்காமல் வசைப்பாடி பழித்தீர்த்துக் கொண்டுள்ளார்]

அதாவது, தொடர்ச்சியாக ஒருவரை மோசமாக விமர்சித்துக் கொண்டே இருந்தால், ஒருநிலையில், யாரும் பொறுமை இழக்க நேரிடும் என்பதற்காக இது எடுத்துக் காட்டப் படுகிறது. மேலும், பெரியார், அண்ணா, கருணாநிதி ……போன்றோர் இவாறெல்லாம் பேச வேண்டிய அவசியம் என்ன என்பதும் நோக்கத்தக்கது.

பார்ப்பன கூட்டம் நடுங்க வேண்டும் - 23-02-2012

பிராமண எதிர்ப்பு விளைவுகள்யாரோஅனோனிமஸ்” என்று பதிவாகியுள்ளது[5]: தமிழகத்தில் பிராமணர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருவதை யாரும் பதிவி செய்து வைக்கவில்லை என்றே தெரிகிறது. பெரியாரிலிருந்து, இன்று கருணாநிதி வரை “பார்ப்பன எதிர்ப்பு”, “பார்ப்பனீய எதிர்ப்பு”, “ஆரியர் துவேசம்” போன்ற போர்வைகளில் பிராமணர்கள் பலவிதங்களில் பலவித தாக்குதல்களுக்கு உட்படுத்தப் பட்டு வருகிறார்கள். உதாரணத்திற்கு, பிராமணர்கள் தாக்கப்படுவது குறித்து ஒருவர் பதிவு செய்துள்ளதை இங்கு குறிப்பிடுகிறேன். “புத்தூர் அக்ரஹாரத்திலும், ஸ்ரீரங்கத்திலும் இன்னும் நூற்றுக்கணக்கான அக்ரஹாரங்களிலும் பிராமணர்கள் ஒவ்வொரு முறையும் தி மு க வெற்றி பெறும் பொழுது தாக்கப் பட்டே வருகிறார்கள். உடம்பு பூராவும் ரத்தக் காயங்களுடன் கொலை வெறி பிடித்த தி மு க வினரால் தாக்கப் பட்டு உயிர் தப்பி வீடு வந்த என் தந்தையை சிறு வயதில் நான் கண்டு அடைந்த நடுக்கம் இன்று வரை போகவில்லை. தமிழ் நாட்டு பிராமணர்கள் மனதில் ஹிட்லர் காலத்தில் ஜெர்மனியில் வாழ்ந்த யூதர்களிடம் இருந்த அதே அச்சம் நிலவி வருகிறது என்பதே உண்மை நிலை. இன்று கருணாநிதி முரசொலியில் ஜெயலலிதாவை எத்தனை முறை கடும் வெறியுடன் பாப்பாத்தி என்று எழுதியிருக்கிறார் என்பதைப் படித்தீர்களா? அதைக் கண்டித்து ஒரு கட்டுரை எழுதும் நேர்மை உங்களுக்கு உண்டா? அதைப் படிக்கும் ஒவ்வொரு பிராமணன் மனதிலும் அச்ச உணர்வு ஏற்படுவதில்லை என்று எப்படிக் கூசாமல் எழுத முடிகிறது?” “கருணாநிதியின் பிராமண துவேஷம் ஏன்?’ என்ற கட்டுரையில் அப்பின்னணியை விவரித்துள்ளேன்[6]. சென்ற தேர்தலுக்குப் பிறகு, திராவிட இயக்க நூற்றாண்டு துவக்க விழா நேரத்தில், கருணாநிதி ஜெயலலிதாவைத் தாக்குவது போல, பிரமணர்களின் மீது அவதூறாக, வன்முறையைத் தூண்டும் விதத்தில் பேசியது ஞாபகத்தில் கொள்ளலாம்[7]. பொய்களை வைத்து, தனக்கேயுரிய பேச்சை தமிழர்கள் நினைவு கொள்ள வேண்டும்[8].

 Jayalalitha running out of TN Assembly on March 25 1989.2

© வேதபிரகாஷ்

09-04-2016

[1] முஸ்லிம்கள் பணம் கொடுக்க வருவது, எதிர்-எதிராகத் தூண்டி விடுவது, முதலிய விவகாரங்கள் என்ன என்பதையும் ஊடகங்கள் விளக்கவில்லை.

[2] தமிழ்.ஒன்.இந்தியா, இது என் வாழ்நாள் குற்றம்: கருணாநிதி குறித்து ஜாதிரீதியான விமர்சனத்துக்கு மன்னிப்பு கேட்ட வைகோ!, By: Karthikeyan, Updated: Thursday, April 7, 2016, 10:52 [IST].

[3] http://tamil.oneindia.com/news/tamilnadu/vaiko-apology-the-speech-about-karunanidhi-250651.html

[4] திராவிட அரசியல் பாரம்பரியத்தில் இப்படி தலைவர்கள் பரஸ்பர வசைப்பாடல், திட்டுகள், தூஷணங்கள் முதலியவற்றில் ஈடுப்பட்டுள்ளது, ஈடுபட்டு வருவது, அவர்களுக்கேயுரிய நாகரிகத்தைக் காட்டுகிறது.

[5]  வேதனையுடன் ச. திருமலை – Wed Nov 05, 12:00:00 AM GMT+5:30;

http://www.badriseshadri.in/2008/11/blog-post_04.html

[6]https://dravidianatheism2.wordpress.com/2010/01/17/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A3-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5/

[7] https://dravidianatheism2.wordpress.com/2012/03/07/karunanidhi-grinds-anti-brahmin-bogey-again/

[8] https://dravidianatheism2.wordpress.com/2012/02/24/564-karunanidhi-spewing-old-hypothesis-enjoying-his-leisure/

செபாஸ்டியன் சீமான் திடீரென்று “முருக பக்தன்” ஆகியது, இந்து வேடம் போடுவது, ஆனால் கருவறை நுழைவு போராட்டம் நடத்துவது (1)

பிப்ரவரி 9, 2015

செபாஸ்டியன் சீமான் திடீரென்றுமுருக பக்தன்ஆகியது, இந்து வேடம் போடுவது, ஆனால் கருவறை நுழைவு போராட்டம் நடத்துவது (1)

சீமான் வேலுடன் பழனியில்.எச்சரிக்கை

சீமான் வேலுடன் பழனியில்.எச்சரிக்கை

நாம் தமிழர் கட்சியின் கிளை அமைப்பான வீரத்தமிழர் முன்னணியின் தொடக்க விழா திண்டுக்கல் மாவட்டம், பழனியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடந்தது [1]. “சீமானின் நாம் தமிழர் கட்சியில்” பண்பாட்டு மீட்புக்காக “வீரத் தமிழர் முன்னணி” என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது அவரது முரண்பாடு[2] மற்றும் ரகசிய திட்டத்தைக் காட்டுகிறது. கிருத்துவராக இருந்து கொண்டு, கிருத்துவர்களோடு சேர்ந்து கொண்டு இந்துக்களுக்கு விரோதமாக இவர் செயல்பட்ட விவகாரங்கள் ஏராளமாக உள்ளன. செபாஸ்டியன் சீமானின் கிருத்துவப் பின்னணி முதலிய விவரங்களை இங்கே பார்க்கவும்[3]. பிறகு, இலங்கைப் பிரச்சினையை வைத்துக் கொண்டு அரசியல் வியாபாரம் நடத்தினார். பிரபாகரன் இறப்பிற்குப் பிறகு, ராஜபக்ஷேவின் தோல்விக்குப் பிறகு, இவரது சித்தாந்தம் புழுத்துப் போய், ஏற்பார் இல்லாமல் போய் விட்டது. மேலும், “தமிழ் தேசியம்” பேசிவந்த, பிரிவினைவாதிகளின் பலமும் குறைந்து விட்டது. இவர் சினிமாகாரர் என்பதனால், பணத்தை வைத்துக் கொண்டு சமாளித்துக் கொண்டிருந்தார். ஆனால், உட்பூசல்கள் அதிகமாகிக் கொண்டிருந்தன. இவ்வேளையில், தமிழர்களை ஏமாற்ற “கலாச்சாரம்” என்ற உணர்ச்சிப்பூர்வமான விசயத்தை எடுத்துக் கொண்டுள்ளார் என்று தெரிகிறது.

சீமானின் புதிய கட்சி 2015

சீமானின் புதிய கட்சி 2015

பண்பாட்டு புரட்சி, இறையோன் முருகன், கிருபானந்த வாரியார், என்ற பட்டியலில் பெரியாரைக் காணோம்:  “வீரத் தமிழர் முன்னணி”யின் தொடக்க விழா பழனியில் நடைபெற உள்ளது என்று அவர்களது இணைதளம் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி தலைமை நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கை[4] என்று இவ்வாறுள்ளது: “பண்பாட்டு புரட்சி இல்லாது, அரசியல் புரட்சி வெல்லாது என்பதை நடுகல் மரபினராகிய நாங்கள் நன்கு உணர்ந்திருக்கிறோம். இயற்கை வழிபாட்டை கொண்ட தமிழர் நாம் உலகப் பொதுமறையாம் திருக்குறளே எமது மறை; எங்கள் வழி வள்ளுவம்; எங்கள் வழிபாடு இயற்கை; எங்கள் தெய்வங்கள் முன்னோர்கள் என்ற நெறியின் படி.. பெரும்புகழ் இறையோன் முருகன், வாழ்வியல் நெறிகட்டி வள்ளுவப் பெருந்தகை, தமிழ்மொழி இலக்கணம் கண்ட தொல்காப்பியர், மகத்துவம் பொருந்திய மாமுனி அகத்தியர், அறம் முழங்கிய ஔவை பாட்டி, நீதியின் வடிவம் கண்ணகி, வழிபாட்டு வழிகாட்டி அய்யா வள்ளலார், ஆன்மிகமும் அறிவியலும் கற்பித்த ஆசான் திருமூலச் சித்தர், அய்யா வழி வைகுந்தர், பெருமைமிகு கிருபானந்த வாரியார், மதிப்புமிகு குன்றக்குடி அடிகளார் உள்ளிட்டோரைக் குறியீடுகளாகக் கொண்டும், எங்கள் இனம் காக்க போராடிய கரிகாற்சோழன், அருண்மொழிச்சோழன், அரசேந்திர சோழன், பூலித்தேவன், தீரன் சின்னமலை, வேலு நாச்சியார், பண்டார வன்னியன், மருதுபாண்டியர், அழகுமுத்துக்கோன், பெரும்பிடுகு, சுந்தரலிங்கம், ஒண்டிவீரன் ஆகியோரை தெய்வங்களாக நெஞ்சில் நிறுத்தியும் வரும் தைப்பூச நாட்களில் புதிய எழுச்சிக்கு நாம் தயாராகிவிட்டோம். நாளை பிப்ரவரி 7 ஆம் தேதி பழனியில் தமிழ்ப் பண்பாட்டை மீட்கவும் காக்கவும் வீரத்தமிழர் முன்னணியைத் தொடங்க இருக்கிறோம். மாலை 3 மணிக்கு பழனியாண்டவர் கலை கல்லூரியிலிருந்து பேரணி தொடங்கி தேரடி வீதியில் நிறைவடைந்து தொடக்க விழா பொதுக்கூட்டம் நடைபெறுகிறது”, இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது[5].

Seeman withn VEL- exploiting culture

Seeman withn VEL- exploiting culture

பொதுமறையாம் திருக்குறளே எமது மறை; எங்கள் வழி வள்ளுவம்: தெய்வநாயகம் பாணியில் இப்படி ஆரம்பித்திருப்பது கிருத்துவ திட்டத்தை வெலிப்படுத்துகிறது. “பெரும்புகழ் இறையோன் முருகன்,” என்றபோது ஜான் சாமுவேலை நினைவு படுத்துகிறது. “தமிழ்மொழி இலக்கணம் கண்ட தொல்காப்பியர், மகத்துவம் பொருந்திய மாமுனி அகத்தியர், அறம் முழங்கிய ஔவை பாட்டி, நீதியின் வடிவம் கண்ணகி, வழிபாட்டு வழிகாட்டி அய்யா வள்ளலார், ஆன்மிகமும் அறிவியலும் கற்பித்த ஆசான் திருமூலச் சித்தர், அய்யா வழி வைகுந்தர், பெருமைமிகு கிருபானந்த வாரியார், மதிப்புமிகு குன்றக்குடி அடிகளார் உள்ளிட்டோரைக் குறியீடுகளாகக் கொண்டு,” எனும்போது, அடையாளங்களை குழப்பப் பார்க்கும் போக்கு, “எங்கள் இனம் காக்க போராடிய கரிகாற்சோழன், அருண்மொழிச்சோழன், அரசேந்திர சோழன், பூலித்தேவன், தீரன் சின்னமலை, வேலு நாச்சியார், பண்டார வன்னியன், மருதுபாண்டியர், அழகுமுத்துக்கோன், பெரும்பிடுகு, சுந்தரலிங்கம், ஒண்டிவீரன் ஆகியோரை தெய்வங்களாக நெஞ்சில் நிறுத்தி”, எனும்போது, ஜாதித்துவமும், “தமிழ்ப் பண்பாட்டை மீட்கவும் காக்க”, எனும்போது, இவரது போலித்தனமும் வெலிப்படுகின்றன. இத்தனை நாட்களாக இவர் எப்படி “தமிழ்ப் பண்பாட்டை மீட்டிருக்கிறார், “காக்க”, என்ன செய்திருக்கிறார், என்பது இவரது வசைமொழிகள், தூஷ்ணங்கள் மூலமாகவே அறிந்து கொள்ளலாம்.

அய்யாநாதன் - நாம் தமிழர் கட்சி பிளவு- ஜனவரி 2015

அய்யாநாதன் – நாம் தமிழர் கட்சி பிளவு- ஜனவரி 2015

சீமானுக்கு எதிராக கட்சி முக்கிய நிர்வாகிகள் சிலர் போர்க்கொடி உயர்த்திய விளைவா?:  நாம் தமிழர் கட்சியை 2010-ல் இயக்குநர் சீமான் தொடங்கினார். இந்த கட்சியை, தமிழ்த் தேசிய, ஈழப்போராட்ட ஆதரவு அரசியல் இயக்கமாக நடத்தினார். சமீபத்தில், இந்த கட்சியில் சீமானுக்கு எதிராக கட்சி முக்கிய நிர்வாகிகள் சிலர் போர்க்கொடி உயர்த்தி தனித்து செயல்படப் போவதாகவும், கட்சியில் இருந்து சீமானை நீக்கப்போவதாகவும்[6] அறிவித்தனர்[7]. நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக செயல்படப் போவதாக அக்கட்சியின் சர்வதேச ஊடகவியல் பொறுப்பாளர் அய்யநாதன் உள்பட ஈரோடு ஜெயராஜ் மற்றும் 13 மாவட்ட பொறுப்பாளர்கள், முக்கிய நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்[8]. நாம் தமிழர் கட்சியின் சர்வதேச ஊடகவியல் பொறுப்பாளராக இருக்கும் அய்யநாதன், சிவகங்கை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மாறன் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் காரைக்குடியில் பத்திரிகையாளர்களை இன்று சந்தி்த்தனர்[9]. அப்பொழுது பேசிய அய்யநாதன், “தமிழ் நாட்டை பாலைவனமாக்கும் மீத்தேன் திட்டத்திற்கு தமிழகத்தில் எதிர்ப்பு எழுந்துள்ளது. அதையும் மீறி காரைக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மீத்தேன் ஆய்விற்காக தொடர்ந்து பணிகள் நடைபெற்று வருகின்றன. மீத்தேன் திட்டத்தை எதிர்த்து போராடி, அந்த குழாய்களை பிடுங்கி எரிந்த சிவகங்கை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மாறன் உட்பட ஒன்பது பேர் மீது வழக்கு பதிவு செய்யபட்டு அவர்கள் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களுக்காக சீமான் ஒரு கண்டன அறிக்கை கூட வெளியிடவில்லை. அதேபோல் ராமேஸ்வரம் மீனவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கபட்டதை கண்டித்து நடைபெற்ற போராட்த்தில் சிறை சென்ற ராமநாதபுரம் மாவட்ட நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் கவி.இளங்கோ கைது செய்யப்பட்டதற்கும் ஒரு கண்டன அறிக்கை கூட சீமான் வெளியிடவில்லை.

 

அய்யாநாதன் - நாம் தமிழர் கட்சி பிளவு- ஜனவரி 2015..கூட்டம்

அய்யாநாதன் – நாம் தமிழர் கட்சி பிளவு- ஜனவரி 2015..கூட்டம்

புதிய நபர்களை வைத்து பொதுக்குழுவை நடத்தியுள்ளார்[10]: மாறாக தமிழர் நலனுக்காக போராடிய இவர்களை தொடர்ந்து கண்டித்து இவர்கள் இல்லாமல் புதிய நபர்களை வைத்து பொதுக்குழுவை நடத்தியுள்ளார். தமிழ் உணர்வு அற்றவர்களுக்கு பொறுப்பு வழங்கியுள்ளார். இவர்களின் செயல்பாட்டிற்கு முட்டுக்கட்டை போடுகிறார். அதற்காக தான் தமிழர் பிரச்சினையில் நாங்கள் வீரியத்துடன் செயல்பட நாம் தமிழர் கட்சியில் தனித்து செயல்படுவது என்ற முடிவினை நாங்கள் எடுத்துள்ளோம். எங்களுடன் எட்டு மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கைகோர்த்துள்ளனர். நாங்கள் நாம் தமிழர் கட்சியில் தான் இருப்போம். ஆனால் தனித்து செயல்பட உள்ளோம். இந்த கட்சியை தேர்தல் கமிஷனில் பதிவு செய்து ஒரு ஆண்டு ஆகியும் எந்த பொறுப்பாளர்களும் நியமிக்கப்படவில்லை. அதேபோல் கட்சியில் எந்த உறுப்பினருக்கும் உறுப்பினர் அட்டை கிடையாது. சீமானுக்கே நாம் தமிழர் கட்சியில் உறுப்பினர் அட்டை கிடையாது. இந்த நிலை தொடர்வதை நாங்கள் பொறுத்து கொள்ள முடியாது. பொதுக்குழுவை கூட்டி அதன் மூலம் தான் தலைவர், செயலாளர் உள்ளிட்ட பதவிகளை அறிவிக்க முடியும். சீமானால் தன்னிச்சையாக அறிவிக்க முடியாது. தற்பொழுது வரை சீமான் ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியில் தான் உள்ளார். ஆனால் வேலுப்பிள்ளை பிராபகரனை தலைவராக ஏற்றுகொண்ட ஒரு இயக்கம் இப்படி செயல்படுவதை நாங்கள் பார்த்துகொண்டு இருக்க முடியாமல் தான் இந்த முடிவை எடுத்துள்ளோம்”, என்றார் அவர்.

marumalarchy naam tamilar-2

marumalarchy naam tamilar-2

திடீரென்று பழனி முருகன் மீது பிறந்த பக்தியா, பித்தா, வெறியா?: பழனியில் நாம் தமிழர் கட்சி சார்பில் வீரதமிழர் முன்னணி என்ற அமைப்பு தொடக்க விழா நடந்தது. இதில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்றார். முன்னதாக கட்சியினர் பழனியாண்டவர் கல்லூரியில் இருந்து ஊர்வலமாக மலைக்கோவில் நோக்கி சென்றனர். திடீரென பஸ் ஸ்டாண்ட் ரவுண்டானாவில் இருந்து மலைக்கோயில் நோக்கி வாகனங்கள் சென்றன[11]. அப்போது, “முருகனை காண மலைக்கோயிலுக்கு செல்கிறோம்’ என சீமான் மற்றும் தொண்டர்கள் மலை ஏறினர். கோவிலில் சீமான் தொண்டர்களுடன் கருவறை நுழைவு வாயிலில் போராட்டம் நடத்தபோவதாக போலீசாருக்கும் மற்றும் இந்து முன்னணி அமைப்பினருக்கும் தகவல் தெரிந்தது. இதனையடுத்து போலீசார் மற்றும் இந்து முன்னணி அமைப்பினர் மலைக்கோவிலில் குவிந்தனர். டி.எஸ்.பி., சண்முகசுந்தரம், தாசில்தார் மாரியப்பன் ஆகியோர் மலைக்கோயிலில் சீமானை தடுத்து நிறுத்த காத்திருந்தனர்[12]. அப்போது போலீசார் மலைக்கோவில் வாசலில் சீமான் மற்றும் தொண்டர்களை தடுத்து கோவிலுக்குள் ஊர்வலமாக செல்ல அனுமதி வாங்கவில்லை என்று தெரிவித்தனர்[13]. .இதுகுறித்து டி.எஸ்.பி., சண்முகசுந்தரம் கூறுகையில், “”ஊர்வலம், பொதுகூட்டம் நடத்த அனுமதி வாங்கியிருந்தனர். திடீரென ஊர்வலத்தின் போது மலைக்கோயிலுக்கு செல்வதாக கூறினர். இதனால் தடுத்தோம்,” என்றார். இதனையடுத்து சீமான் வெளிபிரகாரத்தில் வணங்கி விட்டு பொதுக்கூட்டத்திற்கு சென்றார். பொதுக்கூட்டத்தில் சீமான், தனது கட்சியை சேர்ந்த சிலர் தமிழில் பெயரை மாற்றிக் கொண்ட விபரத்தை வாசித்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Seeman withn VEL- exploiting culture, sentiments

Seeman withn VEL- exploiting culture, sentiments

வருங்கால இளைஞர்களுக்கு எடுத்துறைக்கும் வகையில் எந்த ஒரு அமைப்பும் இல்லை: முன்னதாக சீமான் நிருபர்களிடம் கூறியதாவது[14]:– தமிழகத்தில் இளைஞர் பாசறை, மகளிர் பாசறை, இலக்கிய பண்பாட்டு பாசறை போன்றவைகளும் இந்து அமைப்புகளும் ஏராளமாக உள்ளன. ஆனால் பண்டைய தமிழர்களின் மரபு, வீரம் உள்ளிட்டவைகளை வருங்கால இளைஞர்களுக்கு எடுத்துறைக்கும் வகையில் எந்த ஒரு அமைப்பும் இல்லை. இதனால் நாம் நம் முன்னோர்களான ஆதி தமிழர்களின் வாழ்வு முறையை மறந்து போகும் நிலை உள்ளது. எனவே தமிழர்களின் மரபை அழிவில் இருந்து மீட்கும் ஒரு அமைப்பாகவே வீரதமிழர் முன்னணி உருவாக்கப்பட்டுள்ளது. குறிஞ்சி தமிழர் தந்த முப்பாட்டன் முருகப்பெருமான் கோவில் கொண்டுள்ள பழனியில் இந்த அமைப்பை தொடங்கி வைப்பதில் நான் பெருமையடைகிறேன்[15]. பழனியில் தற்போது வீரதமிழர் முன்னணி என்ற புது இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இது அரசியல் கட்சியல்ல. நாம் தமிழர் கட்சியின் ஒரு இயக்கமாக செயல்படும்.

சீமான் வேலுடன் பழனியில்

சீமான் வேலுடன் பழனியில்

கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் …..?: கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் திருவள்ளுவருடைய நெறிமுறைகளை பின்பற்றுபவர்கள், அதன்படி வாழ விருப்ப படுபவர்களுக்காக வீரதமிழர் முன்னணி இயக்கத்தை ஆரம்பத்துள்ளோம். வீரதமிழர் முன்னணி இயக்கம் திராவிட இயக்கங்களுக்கு மாற்றாக இருக்கும். 2016–ம் ஆண்டு பொதுத்தேர்தலில் அனைத்து சட்டமன்ற தொகுதியிலும் தனித்து போட்டியிடுவோம். இலங்கை தமிழர்கள் அந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பும் மத்திய அரசு முடிவு கண்டனத்திற்குரியது. இலங்கைக்கு திருப்பி அனுப்பமாட்டோம் என தமிழகஅரசு முடிவெடுத்து இருப்பது வரவேற்கத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார். நாம் தமிழர் கட்சியில் ஏற்பட்ட நெருக்கடி காரணமாகவே சீமான், அந்த கட்சிக்கு மாற்றாக புதிய கட்சி தொடங்கு வதற்காக இந்த புதிய இயக்கத்தை தொடங்கியதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது[16].இதையடுத்து வீரதமிழர் முன்னணி அமைப்பு சார்பில் கொள்கை விளக்க பேரணி நடந்தது. பழனியாண்டவர் கலைக்கல்லூரியில் தொடங்கிய இப்பேரணி பழனி தேரடிவீதியில் நிறைவடைந்தது. தொடர்ந்து வீரதமிழர் முன்னணி அமைப்புக்கான மாநில ஒருங்கிணைப்பாளர்களாக பெஞ்சமின், அலாவுதீன், செந்தில்நாதன் சேகுவேரா, சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டனர்[17].

© வேதபிரகாஷ்

09-02-2015

[1] http://naamtamilar.org/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81

[2] http://www.daytamil.com/2014/01/tamil_3808.html

[3]https://christianityindia.wordpress.com/2010/05/23/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%86/

[4] http://tamil.oneindia.com/news/tamilnadu/seeman-launch-veerath-thamizhar-munnani-220469.html

[5] தமிழ்.ஒன்.இந்தியா, சீமானின் நாம் தமிழர்கட்சியில் பண்பாட்டு மீட்புக்காகவீரத்தமிழர் முன்னணி” – நாளை உதயம்!!, Posted by: Mathi, Published: Friday, February 6, 2015, 14:17 [IST]

[6] https://www.facebook.com/pathivumedia/posts/563479750454837

[7] தி இந்து, இயக்குநர் சீமான் புதிய இயக்கம் தொடக்கம்: நாம் தமிழர் கட்சிக்கு மாற்றாக புதிய கட்சியா?, Published: February 8, 2015 10:55 ISTUpdated: February 8, 2015 10:55 IST

[8] ஒன்.இந்தியா.தமிழ், நாம் தமிழர் கட்சியில் பிளவு?…. சீமானுக்கு எதிராக செயல்படப் போவதாக ஒரு பிரிவு அறிவிப்பு, Posted by: Sutha

Updated: Wednesday, January 7, 2015, 19:38 [IST]

[9] http://www.yarl.com/forum3/index.php?/topic/151729-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%813/

[10] http://tamil.oneindia.com/news/tamilnadu/naam-tamil-splits-218540.html

[11] தினமலர், பழநி கோயிலில் சீமான்: போலீசார் அனுமதி மறுப்பு, பிப்ரவரி.08-02-2015, 01:17.

[12] http://www.dinamalar.com/news_detail.asp?id=1178637

[13] மாலைமலர், பழனி மலைக்கோவிலுக்குள் ஊர்வலமாக செல்ல சீமானுக்கு அனுமதி மறுப்பு, பதிவு செய்த நாள் : ஞாயிற்றுக்கிழமை, பெப்ரவரி 08, 1:11 PM IST.

[14] http://www.maalaimalar.com/2015/02/08131115/police-refuse-permission-to-se.html

[15] தினத்தந்தி, இலங்கை தமிழர்கள் பிரச்சினை: தமிழக அரசின் முடிவு பாராட்டுக்குரியது சீமான் பேட்டி, ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 08, 2015

[16]http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/article6870989.ece?homepage=true

[17] http://www.dailythanthi.com/News/Districts/dindugal/2015/02/07211902/Sri-Lankan-Tamils-issue-the-decision-of-the-State.vpf

மோடி-பிஜேபி வேறு, வாஜ்பேயி-பிஜேபி வேறு – ராஜா-கனிமொழியை சிறைவைத்த காங்கிரஸ் – இக்கட்சிளுடன் திமுக கூட்டு கிடையாது – கருணாநிதி திமுகவினரிடம் கெஞ்சலாக அறிவிப்பு (1)!

திசெம்பர் 16, 2013

மோடி-பிஜேபி வேறு, வாஜ்பேயி-பிஜேபி வேறு – ராஜா-கனிமொழியை சிறைவைத்த காங்கிரஸ் – இக்கட்சிளுடன் திமுக கூட்டு கிடையாது – கருணாநிதி திமுகவினரிடம் கெஞ்சலாக அறிவிப்பு (1)!

திமுகவின் கூட்டணி  பற்றி  கருணநிதியின்  விளக்கமான  பேச்சு: 15-12-2013 அன்று பொதுக்குழுவில் பிஜேபியுடன் கூட்டு வைத்துக் கொள்ள வேண்டும் என்று சிலர் பேசினர், ஆனால், காங்கிரஸுடன் கூட்டு கூடாது என்று கடுமையாக வாதிட்டனர்[1]. கருணாநிதியின் பேச்சு மிகப்பெரிய பேச்சாக இருந்தது, அதில் திமுக ஏன் பிஜேபி மற்றும் காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டு கூடாது என்று விளக்கிய பிறகு, திமுகவினர் ஒற்றுமையாக இருந்து கொண்டு, மற்ற கட்சிகளுடன் கூட்டு வைத்துக் கொண்டு, வருகின்ற தேர்தலை ஒரு சோதனையாக சந்திக்க வேண்டும் என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டுள்ளார். தனியாக நின்று தோற்றாலும் பரவாயில்லை என்ற ரீதியில் கூட பேசி முடித்தார். பிறகு பத்திரிக்கையாளர்களுடன் பேசும் போது கூட அதே பாணியில் பதில் அளித்தார்[2]. ஆங்கில பத்திரிக்கையாளர்களிடம் மட்டும் திட்டவட்டமாக பிஜேபி அல்லது காங்கிரஸ் கூட, கூட்டு இல்லை என்று தெரிவித்தார்[3].

 

காங்கிரஸ்,    பாரதிய   ஜனதா   கட்சிகளுடன்   கூட்டணி   இல்லை   என்று  திமுக   தலைவர்  கருணாநிதி,   நேற்று   கட்சியின்   பொதுக்குழு  கூட்டத்தில்  அறிவித்தார்[4]. திமுக பொதுக்குழு கூட்டம் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடந்தது. அதில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர் மதியம் அந்த கூட்டம் தொடர்ந்து நடந்தது. கூட்டத்தில் திமுகவின் பொதுக்குழு உறுப்பினர்கள் பலர் தேர்தல் கூட்டணி பற்றி கருத்து கூறினர்.
அனைவரின் கருத்தையும் கேட்டறிந்த திமுக தலைவர் கருணாநிதி கூட்டத்தின் இறுதியில் பேசியதாவது: 

நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில், அடுத்து வரவிருக்கின்ற சட்ட மன்றத் தேர்தலில் நாம் எத்தகைய வியூகத்தை வகுக்க வேண்டும் என்பதற்காக இங்கே கூடி இருக்கிறோம். தேர்தலில் நாம் ஈடுபட வேண்டும்; வேண்டுமா, வேண்டாமா எப்படி ஈடுபடுவது? எந்த வகையில், என்ன முறையில், யாரோடு கூட்டுச் சேர்ந்து என்றெல்லாம் இந்த பொதுக்குழுவில் கேள்விகள் கேட்கப்பட்டு, வழி முறைகளும் கூறப்பட்டு, இறுதியாக எல்லா பொறுப்புகளையும் நீங்களே தாங்கிக் கொள்ளுங்கள் என்று எங்கள் தலையில் பாரத்தைச் சுமத்தி, சிக்க வைத்திருக்கிறீர்கள். கூட்டணி இல்லாமல் ஜெயிக்க முடியாது என்று நன்கறிந்த கருணாநிதி, தனித்து நிற்போம் என்று பேசியது உள்நோக்கத்துடன் தான் என்று தெரிகிறது. வெற்றிபெற உதவி தேவை என்ற நிலையில் இருக்கும் போது, வீராப்பான பேச்சு ஒரு உபயோகமும் இல்லை என்பது தெரிந்த விசயமே. 10-15 எம்.பிக்கள் இருந்தால் தான் மத்தியில் மவுசு இருக்கும், மந்திரி பதவி கிடைக்கும். இல்லையென்றால் திமுகவை யாரும் மதிக்க மாட்டார்கள் என்று திமுகவினர் வெளிப்படையாகவே கருத்தைத் தெரிவித்தனர்.

தி.மு..வை பொறுத்தவரை தனித்து நின்றே கூட இந்த வெற்றியைப் பெற முடியும். தனித்து நின்றேகூடஎன்று நான் கூறும்போது, ‘கூடஎன்று குறிப்பிட்ட வார்த்தையை மறந்து விடக் கூடாது. தனித்து நின்றே இந்த வெற்றியைப் பெறுவோம் என்று நான் சொல்லவில்லை. தனித்து நின்றே கூட நாம் வெற்றி பெற முடியுமென்று சொன்னால், கொஞ்ச நஞ்சம் ஒருவர், இருவருடைய உதவி இருப்பது நல்லது.

மோடி   கவர்ச்சியில்  சில  திமுகவினர்: “மோடி அவர்கள் அரங்கத்திற்கு வந்திருக்கிறார். வந்த நேரமே, வந்த விதமே, அவருடைய படாடோப விளம்பரங்கள், அவருக்காக பத்திரிகைகள், ஊடகங்கள், கார்பரேட் நிறுவனங்கள் தருகின்ற ஊக்கங்கள், உலகம் முழுதும் இருக்கின்ற செய்தியாளர்கள் அல்லது ஊடக உரிமையாளர்கள் தருகின்ற விளம்பரங்கள்.

எங்களுக்கு அதிர்ச்சி அளிக்கவில்லை. ஆனால் உங்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. அதனால் தான் பாரதீய ஜனதா, பாரதீய ஜனதா என்கிறீர்கள். நாமும் ஒரு காலத்தில் பாரதீய ஜனதோடு நாம் நட்பு கொண்டிருந்தவர்கள் தான். அது எந்த பாரதீய ஜனதா? மனிதாபிமானம் இல்லாமல் நடந்து கொண்ட அத்வானி போன்ற தலைவர்கள் உள்ள பாரதீய ஜனதா அல்ல. பிஜேபியுடன் கூட்டு வேண்டும் என்று திமுகவினர் தயாராக உள்ளனர். ஆனால், மோடியின் அதிகாரத்தோரணை கருணநிதிக்கு சவாலாக உள்ளது என்று தெரிகிறது. அவருக்கு வாஜ்பேயி போன்ற மென்மையான தலைவர் வேண்டும் என்று எதிர்பார்க்கிறார், ஆனால், மோடியிடம் அது எடுபடாது. மேலும், இப்பொழுதுள்ள நிலையும் வேறு.

நாம் கோரிக்கை வைத்தால், அதை உடனடியாக ஏற்றுக் கொண்டு, தோழமை உணர்வோடு நம்மோடு பழகிய வாஜ்பாய் போன்ற நல்ல மனிதர்கள் இருந்த அந்த காலத்தில் நாம் பாரதீய ஜனதாவோடு கை குலுக்கினோம்.

வாஜ்பாய்  பாரதிய  ஜனதா  கட்சியின்  தலைவராக  இருந்தாலும்,   அவர்  மனிதாபிமான  மிக்கத்  தலைவராக  இருந்தார்: “காமராஜருக்கு கன்னியாகுமரி கடற்கரையில் மணி மண்டபம் கட்ட வேண்டும் என நான் முதல் அமைச்சராக இருந்தபோது, அன்றைக்கு பிரதமராக இருந்த வாஜ்பாய்க்கு கடிதம் அனுப்பி வைத்தேன்.

ஆனால், அவரைச் சுற்றியிருந்த அதிகாரிகள், கருணாநிதி கேட்கிற அந்த இடம் கடலுக்கு மிக அருகே உள்ளதால் அனுமதிக்க இயலாது என்று சொன்னார்கள். அந்த கருத்தை வாஜ்பாய் எனக்கு எழுதி அனுப்பினார்கள். நான் விடவில்லை, மீண்டும் மீண்டும் அதை வற்புறுத்திக் கேட்டதால், கடற்கரையோரத்தில் காமராஜருக்கு நினைவு மாளிகை எழுப்ப வாஜ்பாய் அனுமதி தந்தார். மோடி இப்பொழுது இந்தியாவில் உள்ள பற்பல பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அந்நிலையில் திமுக சொல்வதையெல்லாம், மோடி ஏற்றுக் கொள்வார் என்றால், கூட்டு வைத்துக் கொள்வோம் என்ற ரீதியில் பேசினால், மோடி என்ன வாஜ்பேயி ஆகிவிடுவாரா என்ன? மோடி, மோடித்தான்வாஜ்பேயி, வாஜ்பேயிதான்!

அவர் நம்முடைய தமிழ்நாட்டுத் தலைவர்களை மதிப்பவர் என்பதை எண்ணிய காரணத்தால் தான், வாஜ்பாய் அவர்கள் நம்முடைய நண்பராக இருந்த காரணத்தால் தான் அப்போது நாம் அவர்களோடு உறவு கொண்டோம்.

வாஜ்பாயினுடைய   பாரதிய  ஜனதா  வேறு,   இப்போது இருக்கிற  பா...   வேறு: “மாறன் இறந்த போது அவரை இடுகாட்டிற்கு எடுத்துச் சென்ற போது, இடுகாட்டிலே வாஜ்பாய் அவர்கள் திடீரென்று வந்து இறுதி வணக்கம் செலுத்தியதையும் நான் மறந்து விடக் கூடியதல்ல. என்னதான் பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக இருந்தாலும், அவர் மனிதாபிமானமிக்கத் தலைவராக இருந்தார். தோழமைக்கு மதிப்பு அளிக்கக் கூடியவராக இருந்தார், எனவே தான் பாரதிய ஜனதா என்பது வாஜ்பாய் அவர்கள் பொறுப்பிலே இருந்ததோடு அந்த வரலாறு நம்மைப் பொறுத்த வரையிலே முடிந்து விட்டது.

அந்த பாரதிய ஜனதா கட்சியிலே இருக்கின்ற, எல்லோரும் வாஜ்பாய் அவர்களைப் போன்றவர்களா என்றால், இல்லைபாரதிய ஜனதாவோடு தேர்தலில் உடன்பாடு கொள்ளலாமா, கூட்டணி அமைக்கலாமா என்றெல்லாம் காலையிலிருந்து இதுவரையில் பேசினீர்களே, இதற்கெல்லாம் பதிலாகத் தான், இதற்கெல்லாம் விளக்கவுரையாகத் தான் நான் இந்தச் சுருக்கமாக கருத்துகளை உங்களிடம் சொல்லியிருக்கிறேன். கூட்டு வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. பிறகென்ன, அது வேறுஇது வேறு என்ற சித்தாந்தம் எல்லாம். முன்பு மதவாதம் பேசி, பிஜேபியை ஒதுக்கினர். 2002 என்று சொல்லி மிரட்டிப் பார்த்தனர், ஆனால், பொருளாதார முன்னேற்றம், வளர்ச்சி என்று மோடி பேச ஆரம்பித்ததும், இளைஞர்கள் வேறுவிதமாக சிந்திக்க ஆரம்பித்து விட்டனர். ஆமாம், அவர்களும், அந்த மோடி வேறு, இந்த மோடி வேறு என்றுதான் சொல்ல ஆரம்பித்துள்ளனர்.  

நீங்கள் புரிந்து கொள்வீர்கள்[5]. வாஜ்பாயினுடைய பாரதிய ஜனதா வேறு, இப்போது இருக்கிற பா... வேறு.

சி.பி..யை  ஆயுதமாக  வைத்து  திமுகவை  கேவலப்  படுத்திய  காங்கிரஸ்: “இந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தனியாக நின்றாலும் நிற்குமே தவிர, நம்மை மதிக்காத, அலட்சியப்படுத்து கின்ற காங்கிரஸ்காரர்களைப் போல நம்மிடத்திலே நன்றி மறந்து செயல்படுகின்ற சைபர், சைபர், சைபர் என்று ஏழு சைபரைப் போட்டு இந்த அளவிற்கு ஆயிரம், லட்சம், கோடி ரூபாய் ஊழல் நடந்திருக்கிறது என்று சொல்லி, அதற்கெல்லாம் யாரும் காரணம் இல்லை, ஒரே ஒரு நபர் தான், ராஜா தான் என்று அவரை சிறையிலே வைத்து ­இன்னமும் அவர் மீது வழக்கு நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

ராஜா மாத்திரமல்ல, என்னுடைய மகள் கனிமொழியை எட்டு மாத காலம் சிறைச்சாலையிலே வைத்து வாட்டி, இன்னமும் வழக்கு நடக்கிறதுஆனால், வழக்கை நடத்துகிறவர்களும் சரி, வழக்கிலே சாட்சியம் தந்தவர்களும் சரி, அந்த வழக்கிலே என்ன தீர்ப்பு வரப்போகிறதோ, அந்தத் தீர்ப்பை, இப்போதே தயாரித்து, பத்திரிகைகளிலே அதைப் பற்றிய செய்திகளை ஓட விடு பவர்களும் சரி, அனைவருமே தெரிந்து ஒரு உண்மை தான், குற்றமே செய்யாதவர்களை, குற்றவாளிகளாக சி.பி.. மூலமாக கூண்டிலே ஏற்றியிருக்கிறார்கள் என்றால், அந்தச் சி.பி.. யாருடைய கை வாள்? சிபிஐ.யை வைத்து மாநில அரசுகளை காங்கிரஸ் மிரட்டி வருகின்றது என்று கருணாநிதி இப்பொழுது மிகவும் வருத்தப் பட்டுக் கொள்கிறார், பிறகு, தகுந்த வேலையில், முன்னமே அதைப் பற்றி எடுத்துக் காட்டியிருக்கலாமே? ஆனால், செய்யவில்லையே? இன்று முல்லாயம், மாயாவதி என்று எல்லோருமே, சிபிஐ வழக்குகளினின்று விடுபட்டுள்ளனர். லல்லுவுக்கும் ஜாமீன் என்று சொல்கிறார்கள். ராஜாகனிமொழி ஏற்கெனவே வெளியில் வந்து விட்டார்கள். பிறகு கருணாநிதி எதிர்பார்ப்பது என்ன? காங்கிரஸ் வாபஸ் வாங்கிவிட்டால், காங்கிரஸுடன் கூட்டணி என்பாரா?

அந்தச் சி.பி.. யாருடைய கையிலே இருந்த கடிவாளம்? அந்தச் சி.பி.. யார் கையிலே இருந்த ஆயுதம்? தெரியாதா மக்களுக்கு?

ராஜாவையும்,   கனிமொழியையும்  சிறை   வைத்தவர்கள்: “அன்றைக்கு பக்கம் பக்கமாக ஊழல் ஊழல் என்று, எத்தனை லட்சம், எத்தனை ஆயிரம், எத்தனை கோடி என்றெல்லாம் எண்ணிப் பார்க்க முடியாத அளவிற்கு அன்றையதினம் ஊழல் புகார் சொன்ன, அந்தக் காரியங்களுக்கெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்து விட்டு, அந்த வேடிக்கையைப் பார்த்து ரசித்து விட்டு, அதிலே யார் யார் சிக்குகிறார்கள் என்பதையெல்லாம் பார்த்து, நம்மை விட்டால் சரி என்ற அளவிற்கு, பெரிய இடங்களிலே இருந்தவர்கள், பெரிய பதவியிலே இருந்தவர்கள், பெரிய நிர்வாகத் தலைமையிலே

இருந்தவர்கள் எல்லாம் தப்பித்தால் போதும் என்ற நிலைமையில் மாட்டியவர்கள், சிக்கியவர்கள் தான் குற்றவாளிகள் என்று ராஜாவையும், அதற்குப் பிறகு திடீரென்று என்னுடைய மகள் கனிமொழியையும் சிறையிலே வைத்து எட்டு மாத காலம் வாட்டினார்களே, இன்னமும் அந்த வழக்கு நடை பெற்றுக் கொண்டிருக்கிறதே, யாருடைய ஆட்சியில்? யார் இப்போது ஆட்சி யிலே இருக்கிறார்கள்? காங்கிரஸ்காரர்கள் தானே? எனவே அதையும் நாம் மறந்து விட மாட்டோம். மறந்து விடுவதற்கில்லை. ராஜாகனிமொழியை சிறை வைத்த காங்கிரஸை மறக்க முடியாது. களங்கம் ஏற்படுத்தியதையும் மறக்க முடியாது என்றெல்லாம் பேச வேண்டிய அவசியம் என்ன? ஊழலில் ஊறி நாறிப்போன காங்கிரஸே, வெட்கமில்லாமல் தேர்தல் கூட்டங்களில் ஊழலை ஒழிப்போம் என்று பேசுகிறது. இன்றோ லோக்பால் மசோதாவிற்கே நாங்கள் தான் காரணம் என்று மார்தட்டிக் கொள்கிறது, பிறகு, திமுக ஏன் கவலைப்பட வேண்டும்?

ராஜாவிற்கு ஏற்பட்ட அந்தச் சோதனை, ராஜாவுக்கு ஏற்பட்ட அந்தச் சங்கடம், அந்த அடக்கு முறை, அந்தக் களங்கம் இவைகள் எல்லாம் இன்றையதினம் டெல்லியிலே ஆட்சியிலே இருக்கின்ற காங்கிரஸ்காரர்களால் ஏற்படுத்தப்பட்டது அல்லவா? அவர்களால் மறைமுகமாகச் செய்யப்பட்ட மாய்மாலங்கள் அல்லவா? எனவே இந்தப் பொதுக்குழுவிலே அமர்ந்திருக்கின்ற உங்களுக்கெல்லாம் நான் உறுதி அளிக்கிறேன்.

வேதபிரகாஷ்

© 16-12-2013


[4] தினகரன், பொதுக்குழுவில்கருணாநிதிதிட்டவட்டம் : காங்கிரஸ், பாரதியஜனதாவுடன்திமுககூட்டணிஇல்லை,மாற்றம் செய்த நேரம்:12/16/2013 1:53:01 AM.

தமிழ்முறைப்படி சீர்திருத்த முறையில் நடந்த திருமணத்தில் தாலி கட்டப்படாமல், “ரெடிமேட் தாலி” ஏன் அணிவிக்கப்பட்டது?

செப்ரெம்பர் 10, 2013

தமிழ்முறைப்படி சீர்திருத்த முறையில் நடந்த திருமணத்தில் தாலி கட்டப்படாமல், “ரெடிமேட் தாலி”  ஏன் அணிவிக்கப்பட்டது?

முக்கியமான குறிப்பு: சீமான்-கயல்விழி திருமணம் அவர்களது சொந்த விவகாரம். அவர்களுக்கு எல்லா உரிமைகளும் இருக்கின்றன. அவர்கள் எப்பட் வேண்டுமானாலும், எங்கேயாவது, எந்தவிதத்திலும், திருமணம் செய்து கொள்ளலாம். அது அவ்ழர்களது தனிப்பட்ட விவகாரம். அதைப் பற்றி இங்கு விமர்சிக்கப் படவில்லை. “தமிழ்முறைப்படி சீர்திருத்த முறையில் திருமணம் நடந்தது”, என்று ஊடகங்கள் பறைச்சாற்றியுள்ளதால், தமிழகர்கள் உண்மை என்ன அறிந்தாக வேண்டிய நிலை உள்ளது.சீமான் போன்ற நாத்திகக்காரர்கள், பெரியார்-சுயமரியாதை முகமூடிகளை அணிந்து கொண்டு, இந்துக்களை மிக்கக் கடுமையாக விமர்சித்துள்ளாதாலும், தமிழர்களை அவர்களது உண்மையான கலாச்சாரம், நாகரிகம், பண்பாடு, பாரம்பரியம் முதலியவற்றை அறியாமல் செய்து விட்டதாலும், சில உண்மைகளை சொல்ல வேண்டிய அவசியத்தில் கீழ்கண்ட கருத்துகள் சொல்லப்பட்டுள்ளன.
தமிழ்முறைப்படி சீர்திருத்த முறையில் திருமணம் நடந்தது!

தமிழ்முறைப்படி சீர்திருத்த முறையில் திருமணம் நடந்தது!

தமிழ் முறை மற்றும் எது சீர்திருத்த முறை எது: தமிழ்முறை மற்றும் எது சீர்திருத்தமுறை சீமான் – கயல்விழி திருமணம் தமிழ் ஆராய்ச்சியாளர்களை உசுப்பியுள்ளது எனலாம். ஏனெனில் சாதாரணமாக, ஒரு கல்யாணத்தில் என்ன நடக்கவேண்டுமே எல்லாமே நடந்தது. “தீ” தான் வளர்க்கப் படவில்லை. தமிழ்முறைப்படி சீர்திருத்த முறையில் நடந்த கல்யாணம் எனும்போது, எது தமிழ்முறை மற்றும் எது சீர்திருத்தமுறை என்ற கேள்விகள் எழுகின்றன. திராவிட இயக்கத்தின் படி, சுயமரியாதை திருமணங்கள் நடந்தன. ஆனால், அவையெல்லாம் செல்லுபடியாகாது என்ற நிலையும் ஏற்பட்டது. அண்ணாதுரை பதவிக்கு வந்ததும், இந்து திருமணச் சட்டத்தில் ஒரு பிரிவை சேர்த்துக் கொண்டு, திராவிடர்களின் சுயமரியாதையைக் காப்பாற்றினார்! அதாவது தங்களை “இந்துக்கள்” என்று ஒப்புக்கொண்டுதான் மானத்தைக் காப்பாற்றிக் கொண்டார்கள்.

தாலி கட்டுவதா, அணிவிப்பதா, தொங்கவிடுவதா - எது தமிழ்முறை,  சீர்திருத்த முறை  திருமணம்?

தாலி கட்டுவதா, அணிவிப்பதா, தொங்கவிடுவதா – எது தமிழ்முறை, சீர்திருத்த முறை திருமணம்?

பட்டுவேட்டி,  பட்டுசட்டை,  பட்டுசேலை முதலியன எந்த முறை?: நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்– காளிமுத்துவின் மகள் கயல்விழி திருமணம் சென்னையில் 08-09-2013 அன்று காலையில் ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடந்தது.  தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன் தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைத்தார். சீமான் பட்டு வேட்டி, பட்டு சட்டை அணிந்து இருந்தார். மணப்பெண் கயல்விழி தங்கநிற பட்டு சேலை அணிந்து இருந்தார், என்று ஊடகங்கள் விவரித்தன. புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களும் வெளியிட்டப்பட்டன. தமிழ்முறைப்படி சீர்திருத்த முறையில் திருமணம் நடந்தது[1].  ஆனால், இவையெல்லாம் என்று விவரிக்கப்படவில்லை. இவற்றிற்கு பதிலாக கருப்புக் கலரில் உடைகள் அணிந்து கொண்டு புரட்சிகரமான இணையும் நிகழ்ச்சியை செய்திருக்கலாம். ராமருக்கே செருப்பு மாலைகள் போட்ட பகுத்தறிவாளிகள் என்பதனால், பூமாலைகளுக்குப் பதிலாக வேறெந்த மாலைகளை தேர்ந்தெடுத்திருக்கலாம். ஆனால், ஏன் செய்யவில்லை?

10.06க்குதாலிஅணிவித்தது: சீமான் பட்டு, வேட்டி சட்டை அணிந்து காலை 9.20 மணியளவில் மண மேடைக்கு வந்தார். கயல்விழி பொன்நிற பட்டு சேலை அணிந்து 9.45 மணியளவில் மண மேடைக்கு அழைத்து வரப்பட்டார். தமிழ்முறைப்படி சீர்திருத்த முறையில் திருமணம் நடந்தது. அதன்பின் சீமானும்–கயல்விழியும் இணைந்து திருமணத்துக்கு வந்திருந்தவர்களை பார்த்து கை குப்பி வரவேற்றனர். சீமான்–கயல்விழி திருமணத்தை உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன், காலை 10.05 மணிக்கு தமிழில் முதல் எழுத்தான ‘அ’ எழுத்து பொறிக்கப்பட்ட டாலருடன் கூடிய தாலியை சீமான் கையில் எடுத்து கொடுத்தார். பாவம் அப்பொழுது அவரைத் தாங்கலாக இருக்கச் செய்யவேண்டியதாயிற்று. அதை கயல்விழி கழுத்தில் சீமான் அணிவித்தார். அதைத் தொடர்ந்து சீமானும், கயல்விழி இருவரும் மாலை மாற்றிக்கொண்டார்கள். இதெல்லாம் எந்த முறை என்று தெரியவில்லை.

சுபமுகூர்த்த தினத்தில்,  சுபமங்கல நேரத்தில் ஏன்  “புரோசு மயக்கி”  தாலி கட்டி (இல்லை அணிவித்து), மேளதாளத்துடன் திருமணம் நடத்த வேண்டும்?: நாட்களை, மதங்களை, ஏன் ஆண்டுகளையே மாற்றி ஏன் இப்படி திருமணம் நடத்தப்பட வேண்டும்? 08-09-2013 மிக்கவும் சிறந்த சுபமுகூர்த்த நாள் என்பது தமிழகத்தில் உள்ள படிக்காதவனுக்குக் கூட நன்றாகத் தெரியும். அன்று பேருந்துகள், ரெயில்கள், மற்ற வண்டிகள் என்று எல்லாவற்றிலும் திருமணங்களுக்குச் சென்று கொண்டிருந்தனர். ஆகவே, சுபமுகூர்த்த தினத்தில், சுபமங்கல நேரத்தில் ஏன் “புரோசு மயக்கி” தாலிகட்டி, மேளதாளத்துடன் திருமணம் நடத்த வேண்டும் என்ற கேள்வி எழுகின்றது?

  • பெரியார் இப்படித்தான் திருமணம் செய்யவேண்டும் என்று வரையறைத்தாரா?
  • இனமானத் தலைவர் வீரமணி இப்படித்தான் திருமணம் நடத்தி வைக்கிறாரா?
  • முத்தமிழ் வித்தகர், முத்தாரக் கணவன் இப்படித்தான் மணமக்களை சேர்த்து வைக்கிறாரா?

ராகுகாலம் (காலை 4.30 – 6.00) இல்லை; எமகண்டம் (12.00 – 01.30) இல்லை; கரணன் (10.30ம் – 12.00) இல்லை – நல்ல சுபமுகூர்த்த நேரம் = 7.30 – 8.30, ஆனால், அதற்கு மேலும் 10.30 வரை மணப்பெண், மணமகன் நட்சத்திரத்தின் படி நடத்தலாம். சீமானின் ராசி தனுஸ் / தனுசு [Sagittarius], தொடர்புடைய நட்சத்திரங்கள் மூலம், பூராடம், உத்திராடம் (பாதம்-1). தனுசுக்குப் பொறுத்தமான பெண்ராசி – கடகம் என்றால், அது கயல்விழியுடையதா என்று பார்க்கவேண்டும். ஆகவே, கயல்விழியின் நட்சத்திரம் ஹஸ்தம் அல்லது சித்திரை என்றிருக்க வேண்டும். எந்த திராவிட சோதிடர், சுயமரியதை கணியன், அல்லது பகுத்தறிவு பார்ப்பனன் இந்த நேரத்தைக் கணித்துக் கொடுத்தான் என்று தெரியவில்லை.

தாலி கட்டுவதற்கும்,  அணிவிப்பதற்கும் என்ன வித்தியாசம்?: பொதுவாக தாலி கட்டும் போது, மூன்று முடிச்சுகள் போடுவது வழக்கம். ஆனால், தயாராக செய்து வைத்தத் தாலியை, ஏதோ நகையை அணிவிப்பது போல அணிவிப்பது எதில் சேர்த்தி என்று தெரியவில்லை. அதற்கு மேள வாத்தியங்கள் ஏன் முழங்க வேண்டும் என்று தெரியவில்லை. முன்பிருந்த பழக்க-வழக்கங்களை மாற்றவேண்டும் என்றால், புதியதாக மாற்று சடங்குகளை உருவாக்கி அறிமுகப்படுத்த வேண்டும். சுயமரியாதை திருமணங்கள் செல்லாது என்ரபோது, பகுத்தறிவுகள் கலங்கிவிட்டன. நீதிமன்றத் தீர்ப்புகளில் பொதுவாக திருமணங்களில் செய்யப்பட்டுவரும் சடங்குகள் ஏதாவது செய்யப்பட்டன என்று மெய்ப்பித்தால் தான் கணவன் -மனைவி தாம்பத்திய உறவு உரிமைகள் கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டவுடன், திராவிடர்கள் 1962ற்குப் பிறகு ஒன்று-ஓன்றாக சேர்த்துக் கொண்டு விட்டனர். ஐயர், ஹோமம் இல்லாமல் மற்ற எல்லாவற்ரையும் சேர்த்துக் கொண்டுதான், இந்த நாத்திகவாதிகள், பெரியார் குஞ்சுகள், திராவிட வித்தகர்கள் திருமணம் செய்து கொள்கிறார்கள்.

பொய்யும்,  வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணம் என்ப: தொல்காப்பியர், “பொய்யும், வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணம் என்ப” என்று கூறியுள்ளார். அதாவது, களவு மற்றும் கற்பு நெறிகள் பின்பற்ரி வந்த காலத்தில், ஆண்கள் பொய் சொல்வது, இதனால் சமூகத்தில் வழுவு ஏற்படுதல் என்ற்றிருந்த நேரத்தில் ஐயர் / மேலோர் கரணங்களை, தாலிகட்டுவது போன்ற சடங்குமுறைகளை அறிமுகப்படுத்தினர். இவற்றை சங்ககால மக்களும் பின்பற்றி வந்தார்கள். சுமார் 2500 வருடங்களுக்குப் பிறகு தான், அதாவது அவர்கள் “திராவிடர்கள்” ஆனபிறகு, “சுயமரியாதை திருமணம்” என்று வேதமுறை ஒழித்து ஏற்படுத்தப்பட்டது. ஆனால், அவை செல்லாது என்றபோது, மறுபடியும் மந்திரங்கள், தீவளர்த்தல் இன்றி மற்றவை சேர்த்துக் கொள்ளப்பட்டன. அதனால்தான், தாலி நிலைத்தது. ஆக, பெரியார் ஐயரிடம் தோற்றுவிட்டார். இப்பொழுது, கருணாநிதி, வீரமணி, நெட்டுமாறன் போன்ற “ஐயர்கள்” கிளம்பியுள்ளார்கள். இவர்களைத்தான் நான் “திராவிட புரோகிதர்கள்” என்று குறிப்பிட்டுள்ளேன்.

பத்துப்பாட்டு — எட்டுத்தொகை சொல்லாதவை தமிழ் முறையா?: தமிழ் முதல் எழுத்தான “அ” பொறிக்கப்பட்ட டாலருடன் கூடிய தாலியை பழ.நெடுமாறன் எடுத்து கொடுக்க அதை சீமான் கயல்விழி கழுத்தில் அணிவித்தார்[2]. பின்னர் இருவரும் மாலை மாற்றிக் கொண்டனர். சீமான் தாலி கட்டுவதற்கு முன் மேடையில் வைக்கப்பட்டு இருந்த பிரபாகரனின் தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை, தாயார் பானுமதி அம்மாள், காளிமுத்து, மணிவண்ணன் ஆகியோர் படங்களுக்கு மாலை அணிவித்தார். அப்போது மணமக்களும், நாம் தமிழர் கட்சியினரும் ஈழப் போரில் உயிர் நீத்த தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் உறுதி மொழி எடுத்து கொண்டனர். திருமண மேடையில் விடுதலைப்புலி தலைவர் பிரபாகரன் அவரது மனைவி மதிவதனி ஆகியோர் திருமண கோலத்தில் இருக்கும் படம் பொறித்த பிரமாண்ட பேனர் வைக்கப்பட்டு இருந்தது. மேடையின் இடது புறத்தில் பெரியார் புகைப்படமும், வலது புறத்தில் திருவள்ளுவர் படமும் வைக்கப்பட்டு இருந்தது. சீமான் பிரபாகரனுடன் ஒன்றாக இருக்கும் போட்டோக்கள் விழா அரங்கிலும், வெளியிலும் ஏராளமாக வைக்கப்பட்டு இருந்தன[3].

திராவிட்ட புரோகிதர்கள் நடத்தி வைத்துள்ள சில திருமணங்கள்:

மு. ரமேசு _ இ. சிவசங்கரி ஆகியோரது வாழ்க்கை இணைநல ஏற்பு விழாவினை தமிழர் தலைவர் நடத்தி வைத்தார். சட்டமன்ற உறுப்பினர்கள், தொழிலதிபர்கள் உடன் உள்ளனர் (மதுரை, 31.1.2010).

ரா. சுதேஷ்பாபு _ ஸ்வீட்டி ஏஞ்சலின் பிளாரன்ஸ் ஆகியோரின் மண விழாவினை துணை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நடத்தி வைத்தார். தமிழர் தலைவர் கி. வீரமணி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்துரை வழங்கினர் (சென்னை, 1.02.2010).

© வேதபிரகாஷ்

10-09-2013


அண்ணா நூலகத்தை எடுத்தே தீருவேன் என்கிற நாள்தான் கருணாநிதி தீக்குளிக்கும் நாளாக இருக்கும்!

மார்ச் 19, 2012

அண்ணா நூலகத்தை எடுத்தே தீருவேன் என்கிற நாள்தான் கருணாநிதி தீக்குளிக்கும் நாளாக இருக்கும்

தில்லை நடராஜனையும், ஶ்ரீரங்கநாதனையும் பீரங்கி வைத்து பிளப்பது எந்நாளோ, அந்நாளே பொன்னாள்” என்று அண்ணா பேசி தமிழர்களை ஏமாறியது போல, இன்று கருணநிதி இப்படி பேசி ஏமாற்றப் பார்க்கிறார்.

திராவிடம் என்பது செல்லாக் காசாகி விட்டது எனலாம். 1960களில் காணப்பட்ட வெறி அடங்கி விட்டது, ஏனெனில் மக்கள் உண்மையை அறிந்து கொண்டு விட்டார்கள். ஆரியர்-திராவிடர் என்று பேசுவதை யாரும் இனி நம்பமாட்டார்கள், ஏனெனில் கருணாநிதியே தனது குடும்பத்தில் பல ஆரிய / பிராமணப் பெண்களை மறுமகள்காக வைத்திருக்கிறார்.

இப்பொழுது இத்தகைய பேச்சுகளை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்றாலும், அத்தகைய பித்து அல்லது வெட்டிப் பேச்சு எப்படி ஒரு வயதான, பொறுப்பான, முதல்வர் பதவி வகித்த மனிதரிடத்திலிருந்து வருகிறது என்பதுதான் கவனிக்க வேண்டிய விஷயமாகிறது. அண்ணா நூலகத்தை எடுத்தே தீருவேன் என்கிற நாள்தான் கருணாநிதி தீக்குளிக்கும் நாளாக இருக்கும்”, என்று பேசியது அந்த தோரணையில் தான் உள்ளது.

தேர்தல் கூட்டத்தில் தீக்குளிப்பு ஒப்பாரி: திருமணத்தில் அரசியல், அரசியலில் சினிமா, சினிமாவில் சித்தாந்தம், சித்தாந்தத்தில் பிரிவினைவாதம் என்று மாறி-மாறி பேசிவருவது இவர்களுக்கு கைவந்த கலை. ஆகவே, சென்னை அண்ணா நூலகத்தை மருத்துவமனையாக மாற்றியே தீருவேன் என்று சொல்லும் நாள்தான் கருணாநிதி தீக்குளிக்கும் நாளாக இருக்கும் என்றார் திமுக தலைவர் கருணாநிதி. சங்கரன்கோவிலில் திமுக வேட்பாளர் ஜவஹர் சூரியகுமாரை ஆதரித்து வியாழக்கிழமை இரவு நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் அவர் மேலும் பேசியது:

அண்ணா பெயரில் கட்சி வைத்துக் கொள்ள அருகதை இருக்கிறதா? “சென்னையில், நான் முதல்வராக இருந்தபோது, அண்ணா பெயரால் அமைத்த நூற்றாண்டு

இப்பொழுதெல்லாம் சில பெயர்கள் வியாபார சின்னம், வணிக முத்திரை, விற்பனை அடையாளம் போன்று ஆகி விட்டன. அம்பேத்கர் என்ற பெயரும், அவரது படமும் அப்படியாகி விட்டது. யார்-யாரோ உபயோகப் படுத்திகிறார்கள். அவர்களை கேட்கமுடிவதில்லை.

 நூலகத்தில் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. ஆசியாவிலேயே மிகப் பெரிய நூலகம் என்று பிரிட்டிஷ், ரஷிய நாட்டினர்களும் கூறுகிறார்கள். அண்ணா வாழ்ந்ததை எதிர்காலத்தினர் மத்தியில் பதிவு செய்வதற்காகதான் இந்த நூலகத்தை அமைத்தேன். ஆனால், அதை மருத்துவமனையாக மாற்றுவேன் என்று கூறுபவர்கள், அண்ணா பெயரில் கட்சி வைத்துக் கொள்ள அருகதை இருக்கிறதா?

அண்ணா நூலகத்தை எடுத்தே தீருவேன் என்கிற நாள்தான் கருணாநிதி தீக்குளிக்கும் நாளாக இருக்கும்: மருத்துவமனை கூடாது என்று கூறுபவன் அல்ல நான். ஆனால், வேண்டும் என்றே அதை மருத்துவமனையாக மாற்ற முயற்சிக்கிறார்கள். இது தொடர்பான வழக்கு தற்போது நடைபெறுகிறது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றம் வரைக்கும் போகலாம். நீதிமன்ற தீர்ப்புகள் வந்தாலும், அண்ணா நூலகத்தை எடுத்தே தீருவேன் என்கிற நாள்தான் கருணாநிதி தீக்குளிக்கும் நாளாக இருக்கும்.

எனது சூளுரைக்கு பலம் சேர்க்க திமுகவை ஆதரியுங்கள்: எங்களை ஆளாக்கியவர் அண்ணா. இளைஞர்களை அறிவாளியாக்கியவர் அவர். உலகம் என்றும் அவரை நினைத்துக்கொண்டிருக்கிறது. அவர் பெயரால் அமைத்த நூலகத்தை எடுத்தே

அண்ணா தமிழகத்தில் புகழ் பெற்றது மாறுபட்ட கால கட்டம் ஆகும். அதே போல எம்.ஜி.ஆர் இருந்தார். ஆனால், கருணாநிதிக்கு அத்தகைய தனிப்பட்ட சிறப்பான அடையாளம் கிடைக்கவில்லை. அதனால் தான், பெரியார், அண்ணா என்று பெயர்களை இக்காலத்திலும் சொல்லிக் கொண்டு மிரட்டி வருகிறார்.

 தீருவேன் என்று ஒரு பெண்மணி ஆக்ரோஷமாக கூறிவருகிறார். தேர்தல் மட்டும் எங்களுக்கு முக்கியம் அல்ல. அண்ணாவும் முக்கியம். அவரை உருவாக்கிய பெரியாரும் முக்கியம். அவர்களால் உருவாக்கப்பட்ட நாங்கள் தந்தைக்கும், தனயனுக்கும் செலுத்த வேண்டிய கடமைகள் உள்ளன. என்னை யாரும் தடுத்துவிட முடியாது. எங்கள் குறிக்கோளை நிறைவேற்றியே தீருவோம். அந்த குறிக்கோள் வலுப்பெற திமுகவுக்கு ஆதரவு தாருங்கள். எனது சூளுரைக்கு பலம் சேர்க்க திமுகவை ஆதரியுங்கள் என்றார் கருணாநிதி.

தமிழகத்தில் தீக்குளிப்பு கலாச்சாரம் திராவிட கட்சிகளின் பாரம்பரியமாக வளர்ந்து தொடர்ந்து வருகிறது: அதில் அரசியலும் உள்ளது. ஏனெனில், எந்த மனிதனும் தற்கொலை செய்து கொள்ள விரும்ப மாட்டான். அத்தகைய முடிவை எடுக்கும்

திராவிட பாரம்பரியத்தில் தீக்குளிப்பு என்பது வியாபாரமாகி விட்டது. 1960களில் இருந்த மனப்பாங்கு இப்பொழுது எந்த திராவிட தியாகியிடத்திலும் இல்லை. அதாவது, முன்பு போல உயிர் தியாகம் செய்ய யாரும் முன்வருவதில்லை. அவ்வாறு தயார் செய்யவும் முடிவதில்லை.

 மனிதன், விரைந்து தனது யுரிரை மாய்த்துக் கொள்ள விரும்புவான். தீக்குளித்து இறத்தல் என்பது ஒரு கொடுமையான இறப்பாகும். அதில் சிலர் இறக்காமல் தீக்காயங்களுடன் பிழைத்தும் உள்ளாரள். அவர்கள் நரக வேதனை அனுபவித்துள்ளார்கள். ஆகவே அதை உயர்வாக நினைப்பது, மதிப்பது மனிதத்தன்மைக்கு விரோதமானது. தீக்குளிப்பு என்ற தற்கொலை மிரட்டல் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தும் செயற்பாடு அல்ல, மிரட்டுவதிலும் குரூரத்தைக் காட்டும் தன்மையாகும். திமுக ஆட்சியில் சிலர் இந்தி திணிப்பை எதிர்த்து தீக்குளிக்க ஆரம்பித்தனர். அதை திமுக பிரமலமாக்கி தியாகமாகச் சித்தரித்தது. அதனால், சிலர் மனசலனம் உள்ளவர்கள், வாழ்க்கையை வேறு காரணங்களுக்காக வெறுத்தவர்கள், தீக்குளிக்க யத்தனித்தது மற்றும் உண்மையாகவே தீக்குளித்தது நிதர்சனமாக இருந்தது.

கருணாநிதியின் `தீக்குளிப்பு’ பேச்சு பற்றி டாக்டர் ராமதாஸ் கருத்து[1]: சமீப காலத்தில் திராவிட இயக்கத்தைப் பற்றி அதிக அளவில் விமர்சித்து வருகிறார் ராமதாஸ். கருணநிதியின் தீக்குளிப்புப் பற்றியும் கரடுமையாக சாடியுள்ளார். உண்மையிலே போராளியாக இருந்தால் தீக்குளிப்பேன் என்று கருணாநிதி சொல்லமாட்டார் என்று டாக்டர் ராமதாஸ் பேசினார். “திராவிட மாயை” கருத்தரங்கம் பா.ம.க. சார்பில் `திராவிட மாயை’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் சென்னை அண்ணாசாலை தேவநேய பாவாணர் நூலக கட்டிடத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி தலைமை தாங்கினார். கருத்தரங்கை தொடங்கி வைத்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

“திராவிட மாயை” கருத்தரங்கம்: “திராவிட மாயை” என்று கம்யூனிஸ்ட் தலைவர் ராமமூர்த்தி ஒரு புத்தகத்தை எழுதியுள்ளாற். அதற்குப் பிறகு, “திராவிடத்தால் வீழ்ந்தோம்” என்ற புத்தகத்தை வெளியிடப்பட்டது. இப்பொழுது அதே ராகத்தை இவர் பாடுகிறார்ள்: “திராவிட இயக்கங்கள் அதன் வழிதோன்றல்கள், ஈரோட்டில் படித்தவர்கள், பெரியாரின் சீடர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள், `நூற்றாண்டு

திராவிடம் என்பது மாயை என்றால், அதைச் சுற்றியிருக்கும் கருத்துகள், சித்தாந்தம், முதலியவையும் மாயைதான். கட்டுக்கதைதான். இருப்பினும் அதை வைத்துக் கொண்டு பிழைப்பு நடத்தலாம் என்று இனறும் சிலர் இருந்தால், அது அவர்களது பலவீனத்தைக் காட்டுகிறது.

 விழா’ எடுக்க கிளம்பிவிட்டார்கள். குறிப்பாக கலைஞருக்கு சில கேள்விகளை நான் கேட்டுத்தான் ஆகவேண்டும். பெரியார், சாதி ஒழிப்புக்கு பாடுபடுவதை ஒருகொள்கையாக கொண்டார். நீங்கள் அதிலே செய்த சாதனை என்ன? சாதியை ஒழிப்பதற்கு பதிலாக, சாதியை வளர்த்தீர்கள். பெரியாரின் சீடர் என்று சொல்லிக்கொள்ளும் கலைஞர் அவர்களே மதத்தை பற்றி இப்போது பேசத் தயாரா? இன்றைக்கு மதத்தை பற்றி உங்கள் கருத்துக்களை வெளியிடத் தயாரா? கடவுளை பற்றி நீங்கள் இப்போது பேசத் தயாரா? தமிழ்நாட்டை சீரழித்து ஆட்சியில் இல்லாதபோது, ஆரியர், திராவிடர் என்ற பேச்சு உங்கள் நாவிலே, எழுத்திலே வருகிறது. தென்னிந்திய நல உரிமை சங்கம், சுயமரியாதை இயக்கம், நீதிக் கட்சி என்று பல இயக்கங்களை பெரியார் ஏற்படுத்தினார். 45 ஆண்டு காலம் தமிழ்நாட்டை சீரழித்து சின்னாபின்னமாக்கிய ஆட்சியாளர்கள் திராவிட இயக்கத்தை சேர்ந்தவர்கள்தான். இவற்றை எல்லாம் திசை திருப்ப, திராவிட இயக்கம் என்று சொல்லிக்கொண்டு, அதற்கு நூற்றாண்டு விழா என்று சொல்லிக்கொண்டு, ஏமாற்றிக்கொண்டு இருக்கிறார்கள். இவற்றை எல்லாம் மக்களுக்கு தொடர்ந்து புரியவைத்துக்கொண்டு இருப்போம்.

“திராவிட” என்ற பெயரை எப்படி திராவிட கட்சிகள் புறக்கணிக்க முடியும்: “திராவிட” என்பதனை ஒரு வியாபார முத்திரை, வணிக சின்னம் போல உபயோகித்து மக்களை ஏமாற்றி வரும் கட்சிகள் எப்படி அதை எடுக்கும்? ஆனால் ராமதாஸ் தொடர்கிறார், “பெயரை மாற்றுங்கள் தமிழர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஈழத்தமிழர்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடுவோம். இலங்கையில் தனி ஈழம் அமைவதுதான்

திராவிட என்ற சொல்லை எந்த திராவிடக் கட்சியும் எடுக்க முடியாது. ஏனெனில், அவை அவ்வாறே பதிவு செய்துள்ளன. பெயர் மாற்றினால் இருக்கின்ற அடையாளமும் தெரியாமல் போய்விடும்.

 பிரச்சினைக்கு தீர்வு ஆகும். இதை நோக்கி நமது செயல்பாடுகள் இருக்கவேண்டும். முதலில் உங்கள் கட்சியின் பெயரை மாற்றிக்கொள்ளுங்கள். திராவிட என்று இருப்பதை, `தமிழர் முன்னேற்றக் கழகம்’ என்று மாற்றிக்கொள்ளுங்கள். கட்சி என்றால் கொள்கை வேண்டும். பெரியார் சில கொள்கைகளை முன்வைத்து, அதற்காக கடைசிவரை போராடினார். இப்போதாவது கொள்கையை சொல்லி தமிழ் மக்களிடம் வாருங்கள். தமிழ் மக்கள் இன்றைக்கு ஏமாற தயாராக இல்லை. செம்மொழியை பெற்றுவிட்டோம் என்று எல்லாம் சொல்லுகிறீர்கள், இன்றைக்கு தமிழ் வளர்வதற்கு என்ன முயற்சிகளை எடுத்திருக்கின்றீர்கள்?. முத்தமிழ் என்றால் இயல், இசை, நாடகம் என்று சொல்லுகிறார்கள். இவற்றில் எதை நீங்கள் வளர்த்தீர்கள்?.
தீக்குளிப்பேன் என்பது வெட்டிப் பேச்சு: 45 ஆண்டுகளாக உங்களின் திராவிட கட்சி ஆட்சியில் வளர்த்து எல்லாம் சாராயத்தை கொடுத்து, திரைப்பட மோகத்தை தந்து, மக்களை இலவசங்களுக்கு கைஏந்தவைத்தீர்கள். தமிழுக்கு நீங்கள் செய்த சாதனை என்ன? என்று பட்டியல் இடுங்கள். முடிந்தால் அதுபற்றி உங்களோடு விவாதிக்க தயாராக இருக்கிறேன். இப்போது கலைஞர் தீக்குளிக்கப்போவதாக சொல்லுகிறார்.

தமிழ் என்று சொல்லியும் பிழைத்துக் கொள்ள முடியாது. ஏனெனில் ஒரு புண்ணியவான் திருக்குறளை வைத்தே ஏமாற்றி கோடிகளை அள்ளியுள்ளான்; இன்னொருவனோ திருவள்ளுவன் கையாலாகாத ஆள், தாமஸ் என்ற ஓடுகாலியிடம் பைபிளைக் கற்ருக் கொண்டுதான் திருக்குறலள் எழுதப் பட்டது என்கிறான்; இன்னொருவனோ, திருக்குறளை எங்கள் குருவினிடத்திலிருந்து திருடிக் கொண்டு சென்று விட்டார், அதை தனது என்று சொல்லி புழக்கத்தில் விட்டார் என்கிறான். இவர்கள் எல்லோருமே தங்களை “தமிழர்கள்” என்ரு தான் சொல்லிக் கொள்கிறார்கள்.

 ஒரு போராளி உண்மையிலே போராளியாக இருந்தால், தீக்குளிப்பேன் என்று சொல்லமாட்டார். இன்றைக்கு இந்த நிலையில் தமிழன் இருப்பதற்கு காரணம் கலைஞரும், திராவிட இயக்கமும்தான் என்று பல்வேறு பொதுக்கூட்டங்களில், கருத்தரங்கங்களில் சொல்ல முடியும். தமிழ் மெல்ல, மெல்ல சாகும் என்றுதான் சொன்னார்கள். இந்த நிலையில் தமிழ் இப்போது வேகமாக செத்துக்கொண்டு இருக்கிறது. இவ்வாறு டாக்டர் ராமதாஸ் பேசினார். முன்னதாக முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி, தமிழ் தேசிய விடுதலை இயக்க பொதுச்செயலாளர் தியாகு, மக்கள் மாநாட்டுக் கட்சி தலைவர் சக்திவேல், திரைப்பட இயக்குநர் வி.சேகர் தமிழாலயம் இயக்குநர் கு.பச்சைமால் ஆகியோர் பேசினார்கள். முடிவில் சென்னை மாவட்ட பா.ம.க. அமைப்பு செயலாளர் மு.ஜெயராமன் நன்றி கூறினார்.


 


பிராமணர்கள் மீது வன்முறையைத் தூண்டுகிறார் இரட்டை வேடம் போடும் கருணாநிதி!

மார்ச் 7, 2012

பிராமணர்கள் மீது வன்முறையைத் தூண்டுகிறார் இரட்டை வேடம் போடும் கருணாநிதி!

திராவிட சித்தாந்திகளால் தமிழகத்திற்கு கிடைத்தது என்ன? திராவிட இயக்க நூற்றான்டு விழா என்ற சாக்கை வைத்துக் கொண்டு, கருணாநிதி தனது வாய்வழி-தீவிரவாதத்தை, தீயாக உமிழ்ந்தார் கருணாநிதி[1]. ஆனால், ஒன்றும் நடக்கவில்லை. நாட்டுப்பற்று, தேசியப்பற்று என்று எதுவும் இல்லாத இந்த “திராவிட” சித்தாந்திகளால், இந்தியாவிற்கு எந்த பிரயோஜனமும் இல்லை இன்று இந்தியர்கள் உணர்ந்து விட்டார்கள்[2]. எப்பொழுதும் பிரிவினைவாதம் பேசி, இந்தியை எதிர்ப்போம் என்று தேசிய சொத்துகளை கோடிக்கணக்கில் சேதம் விளைவித்து, தமிழ் நாட்டை வளர்க்கவிடாமல் செய்தது தான் இவர்களது சாதனை[3]. வெட்டிப்பேச்சு பேசி, மேடை போட்டு கூட்டங்கள் நடத்தி சிலைகளை வைத்து, விழாக்கள் நடத்தி காலத்தை ஓட்டி விட்டார்கள்[4]. இனி சாகும் வேலையில் வேறெந்த பருப்பும் வேகாது என்ற நிலையில், மறுமடியும் பிராமண-எதிர்ப்பு வாதத்தை வைத்துள்ளார் கருணாநிதி. பிராமணரான ஜெயலலிதாவை எதிர்ப்போம் என்ற சாக்கில் இந்த வயதில் தனது விஷத்தைக் கக்கியுள்ளார். பிராமண சங்கமும் பயந்து இரண்டு வாரங்கள் கழித்து தனது அறிக்கையை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் பிராமணர்கள் மீது தி.மு.க. தலைவர் கருணாநிதி வன்முறையைத் தூண்டி விடுவதாக தமிழ்நாடு பிராமணர் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது[5].இது தொடர்பாக பிராமணர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை[6]:

சுதந்திரநாளை, துக்கநாளாகக் கொண்டாடியவர்கள் வளர்த்த பிரிவினைவாதம் திராவிட இனவாதம்: தற்கால அரசியலுக்கு ஒவ்வாத நிலைப்பாடாக, 1912ம் ஆண்டு திராவிட இயக்கக் கூட்டத்தில், டாக்டர் நடேசன் மற்றும் டி.எம்.நாயர் கூறிய கருத்துக்கு, மெருகு பூசி சினிமா பாணியில் புதிதாகக் கதை அளக்கிறார் தி.மு.க., தலைவர் கருணாநிதி. நூறு ஆண்டுகளுக்கு முன்னர், அதாவது, 1912ல் நடைபெற்றது பிரிட்டிஷ் அரசாங்கம் – தமிழ்நாடு என்று அப்போது இல்லாமல், சென்னை மாகாணம் ராஜதானி என்று அழைக்கப்பட்டு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா என்று பிரிக்கப்படாமல் இருந்தது. அப்போது திராவிட இயக்கத்தின் தலைவர்கள் என்று கூறப்பட்ட டி.எம்.நாயர் (மலையாளம் பேசுபவர்) சர்.பி.டி.தியாகராஜன் (தெலுங்கு பேசுபவர்) டாக்டர் நடேசன் போன்றவர்கள் நீதிக் கட்சியின் சார்பில் வெள்ளையர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டவர்கள்; நமது சுதந்திர போராட்டத்தைக் கொச்சைப்படுத்தியவர்கள். சுதந்திர நாளை, துக்க நாளாகக் கொண்டாடியவர்கள்[7].

கலாமும் பிராமண ஆசிரியரும்: கடந்த, 1960 வரை பல ஆயிரக்கணக்கான பிராமண தமிழ் ஆசிரியர்கள் தமிழகத்தில் பல பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் சிறப்பாக பணியாற்றியதை யாரும் மறந்திருக்கமுடியாது. முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம், தான் ராமேஸ்வரத்தில் படித்தபோது, உதவி செய்த ஆசிரியரான சுப்பிரமணிய அய்யரை தன் பதவியேற்புக்கு டில்லிக்கு அழைத்துச் சென்று மரியாதை செய்தார் .இப்படிப்பட்ட சூழ்நிலையில், தற்போதைய நிலைமைக்கு ஒவ்வாத பிராமண எதிர்ப்புக் கொள்கையை, தனக்கு சிக்கல், தோல்வி வரும்போதெல்லாம் ஒரு ஆயுதமாக எடுப்பதில் கருணாநிதி வல்லவர்.

கருணாநிதி குடும்பமும் பிராமணர்களும்: பிராமணர்களின் அறிவுரைப்படி, ஆலோசனை உதவியுடன் தனது கட்சியையும், குடும்ப வியாபாரத்தையும் வளர்த்தவர் தான் இந்த தலைவர். தயாளுவில் ஆரம்பித்து, ஸ்டாலின் மனைவி மற்றும் குடும்பத்தின் மூன்று தலைமுறைக்கு பிரசவம் பார்த்தது பிராமணரான டாக்டர் பி.ராமமூர்த்தியும், அவரது மனைவியுமான டாக்டர் இந்திரா ராமமூர்த்தியும் தான். பல ஆண்டுகளாக இவருக்கு ஆடிட்டராக இருப்பது ஜெகதீசன் அன்ட் கம்பெனி. தற்போது எங்கு போனாலும் உடன் வந்து மருத்துவம் செய்வது பிராமணரான டாக்டர் கோபால் தான்.

திமுக ஆட்சிகளில் பிராமணர்கள்: கடந்த, 1996ல், 2006ல் ஆட்சி செய்தபோது ஆலோசனை வழங்கியது, டாக்டர் எம்.எஸ்.குகன் ஐ.ஏ.எஸ்., 2006- 2011 வரை தலைமைச் செயலராகவும், கோப்புகளில் தனியாகக் கையெழுத்து இடும் அளவுக்கு அதிகாரம் படைத்தவராக எஸ்.ஸ்ரீபதி ஐ.ஏ.எஸ்., உள்துறைச் செயலராக (ஹோம் செகரட்டரி) மாலதி ஐ.ஏ.எஸ்., மேடைகளில், விழாக்களில் தன்னைப் பற்றி புகழ்பாட கவிஞர் வாலி, குடும்ப பிசினஸ் பார்ட்னராக இந்தியா சிமென்ட்ஸ் சீனிவாசன், தனக்கு யோகாசனம் சொல்லிக் கொடுக்க தேசிகாச்சாரி என்று இவரது தேவைகளுக்கான பிராமணர் பட்டியல் தொடரும். தனக்குத் தேவை என்றால் இவர்கள் எல்லோரும் பிராமணர்கள் அல்லாதவர்கள்.

பித்தலாட்ட குடும்பம்: தன் வீட்டுக் குழந்தைகள், பேரப்பிள்ளைகள் சென்னை டி.ஏ.வி., பள்ளியில் இந்தி படிக்கலாம்; மற்றவர்கள் தமிழ் தான் படிக்க வேண்டும். தமிழ் சுதந்திரப் போராட்ட தியாகி கோட்டாவில் தனது பேரன் (மு.க.அழகிரி மகன்) அண்ணா பல்கலைக்கழகத்தில், பி.இ., படிக்கலாம். தன் வீட்டு குழந்தைகளுக்கு ஸ்டாலின், தயாநிதி, கலாநிதி, சூர்யா, ஆதித்யா போன்ற சம்ஸ்கிருத பெயர்கள். தனது ‘டிவி’க்களுக்கு சூரியா, ஆதித்யா, தேஜா, உதயா, ஜெமினி, சன் நெட்வொர்க் என்று வேற்று மொழிப் பெயர்கள். எத்தனை வருடங்களுக்குத்தான் இந்தப் பெரிய பித்தலாட்டம், ஏமாற்று வேலை?

கடந்த ஆட்சியில் திமுகவினருக்கு  கோடிகளில் பணம் எப்படி கிடைத்தது?: எந்த பிராமணனும் ஊரை அடித்து உலையில் போடவில்லை. அரசாங்கப் பணத்தை, மக்களது வரிப் பணத்தை, கொள்ளையடித்து கோடீஸ்வரன் ஆனதில்லை. டெலிகாம் ஊழல், சேது சமுத்திரத் திட்ட ஊழல், வீராணம் ஊழல் என்றெல்லாம் விஞ்ஞான முறையில் பொதுச் சொத்தை கொள்ளையடித்து, இந்தியாவிலேயே ஒரு பெரிய கோடீஸ்வர குடும்பம் என்று பெயர் பெறவில்லை! கடந்த 1967க்கு பிறகு, தமிழகத்தில் ஆட்சி செய்த , அமைச்சர்கள் பலர் இப்போது குறைந்தபட்சம், 100-200 கோடி ரூபாய்க்கு அதிபதி. இன்ஜினியரிங் கல்லூரி, மருத்துக் கல்லூரி, சினிமா தயாரிப்பு என்றெல்லாம் பல துறைகளில் பெரிய முதலாளிகள். இதெல்லாம் எப்படி வந்தது? கருணாநியின் மகள் டில்லி திகார் சிறையில் எட்டு மாதம் கம்பி எண்ணியது எதற்காக? தனது குடும்பத்தில் நடக்கும் வாரிசு பிரச்னையை, கட்சியின் தோல்வியை திசை திருப்பவே, இந்த பிராமணர் எதிர்ப்பு நாடகம். ஆனால், நமது அரசியல் சாசனப்படி எந்த ஜாதியையும், பழித்துச் சொல்ல, இழிவுபடுத்த சட்டத்தில் இடமில்லை.

வன்முறையை தூண்டுகிறார்: எல்லா மக்களுடன் அமைதியாக, நட்பாக வாழும் பிராணமர்கள் மீது வன்முறையை தூண்டும்படி, அச்சுறுத்தும் படியாக பேசும், தி.மு.க., தலைவர்கள் கருணாநிதி மீதும், அன்பழகன் மீதும் மத்திய, மாநில அரசுகள் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கருணநிதி குடும்பத்தில் உள்ள பிராமணர்களை பிராமண ச்டங்கம் ஏன்மறந்து விட்டது என்று தெரியவில்லை: முந்தைய இடுகையில் குறிப்பிட்டுள்ளபடி,உங்கள் உற்றார், உறவினர், பந்து மித்திரர், தோழர், தோழியருக்கெல்லாம் சொல்லி, விளக்கி, கட்சியில் அங்கத்தினராகச் சேருங்கள். கட்சிப் பத்திரிகைகளைப் படியுங்கள். நம் பத்திரிகைகள் வளர்ந்தால் தான், நம் எதிர்க்கட்சியான பார்ப்பனக் கூட்டம் நடுங்கும்” என, தி.மு.க., தலைவர் கருணாநிதி அறிவுறுத்தி உள்ளார். இருப்பினும் அவரது குடும்பத்தில் உள்ள பாப்பாத்திகளையும், அந்த பாப்பாத்திகளுக்குப் பிறந்தவர்களையும் விரட்டியடிப்பாரா என்று தெரியவில்லை”, கருணாநிதி செய்வாரா என்று தெரியவில்லை.

வேதபிரகாஷ்

07-03-2012


 


[2] இந்திய-தேசிய விரோதக் கொள்கைகளினால், மற்ற மாநிலங்களில் உள்ளவர்கள் தமிழ்நாட்டு மக்களை வித்தியாசமாக நினைத்தார்கள். இந்தி பேசும் மக்கள், தமது மொழிக்கு விரோதமாக இப்படி செய்ல்படுகின்றனர் என்றும் என்று திகைத்தும் இருந்தார்கள். ஏனெனில், அவர்களுக்கு, இவர்கள் (தங்கள திராவிடர்கள் என்று சொல்லிக் கொல்பவர்கள் இந்தியை ஏன் வெறுக்கிறார்கள் என்று கூட தெரியாமல் இருந்தார்கள்)

[3] இந்தியை எதிர்ப்போனம் என்று இந்தி எதிர்ப்பு போராட்டங்கள் நடத்தினர், அதில் தீக்குளிப்பு, தீவைப்பு போன்ற வன்முறைகளும் நடந்தன. ரெயில் பயணிகள் அதிக அளவில் பாதிக்கப் பட்டனர். பிறகு, இந்தி எதிர்ப்பு போராட்டங்களில் கலந்து கொண்டவர்களை “மொழிப்போர் தியாகிகள்” என்று பட்டங்கள், பென்சன் எல்லாம் கொடுத்தனர். இவையெல்லாம் இந்தி பேசும் மக்களுக்கு வியப்பாக இருந்தது. இந்தொயர்களாக இருந்து கொண்டு, ஒரு மொழியை எதிர்த்தால் எப்படி தியாகிகள் அவ்வார்கள் என்று அவர்கள் கேட்கவும் செய்தனர்.

[4] மற்ற மாநிலங்களில் தொழிற்சாலைகள் அதிகமாக வளர்ந்தன, ஆனால், தமிழகத்தில் தொழிற்சாலைகள்வைக்க இந்தி பேசும் அல்லது வடவிந்தியர்கள் தயங்கினர். டிவிஎஸ், அசோக் லேலேண்ட், ஈஸ்வரன் அண்ட் சன்ஸ்,  போன்ற பிராமணக் கம்பெனிகள் / தொழிற்சாலைகள் தவிர மற்றவையெல்லாம், 1990, 2000 ஆனண்டுகளுக்குப் பிறகு வந்தவை என்று நோக்கத்தக்கது.

கடவுள் நம்பிக்கையிருந்தால், காவல்துறை பொறுப்பு கருணாநிதிக்குத் தேவையில்லையா?

ஜூலை 26, 2010

காவல்துறை பொறுப்பு கருணாநிதிக்குத் தேவையில்லையா?

கடவுள் நம்பிக்கை எல்லோருக்கும் இருந்தால், போலீஸ் தேவையில்லை. போலீஸ் தேவைப்படாவிட்டால் காவல்துறையும் தேவையில்லை[1]: “கடவுள் நம்பிக்கை எல்லோருக்கும் இருந்தால், போலீஸ் தேவையில்லை. போலீஸ் தேவைப்படாவிட்டால் காவல்துறையும் தேவையில்லை”, என்றார் துணை சபாநாயகர் வி.பி.துரைசாமி. சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் தங்கத் தேர் வெள்ளோட்டம் நேற்று நடைபெற்றது. இதில் அறநிலையத்துறை அமைச்சர்பெரியகருப்பன், விவசாயத்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், துணை சபாநாயகர் வி.பி.துரைசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது வி.பி.துரைசாமி பேசுகையில், “எல்லோருக்கும் கடவுள் பக்தி வந்துட்டா போலீசே தேவையிருக்காது. கடவுள் நம்பிக்கை இருந்துட்டா காவல்துறையே தேவையில்லை”, என்றார்.
காவல்துறை பொறுப்பு கருணாதிக்குத் தேவையில்லை! இதைக் கேட்டதும் திமுகவினர் குழப்பமடைந்தனர். நாத்திக வழியில் வந்தவரான முதல்வர் கைவசம் காவல்துறை இருக்கும் நிலையில் கடவுள் நம்பிக்கை இருந்தால் போலீஸே தேவையில்லை என்று வி.பி.துரைசாமி பேசியதே இந்த சலசலப்புக்குக் காரணம். அதாவது, கடவுள் நம்பிக்கை எல்லோருக்கும் இருந்தால், போலீஸ் தேவையில்லை. போலீஸ் தேவைப்படாவிட்டால் காவல்துறையும் தேவையில்லை, காவல்துறை தேவையில்லை என்றால் அதற்கு கருணாநிதியே தேவையில்லை என்றாகிறது!

கோட்டை மாரியம்மனும் மக்களும் ஒன்றாவார்களா? பின்னர் மைக்கைப் பிடித்த வீரபாண்டி ஆறுமுகம் இதை சமாளிக்கும் வகையில் பேசினார். அவர் கூறுகையில், “கோட்டை மாரியம்மன் தான் என்னை இங்கு அழைத்துவந்ததாக சொன்னார்கள். ஆனால் நான் மக்கள் அழைத்ததால்தான் வந்தேன். நாங்க பகுத்தறிவாளர்கள். எங்களுக்கு கோயில் விரோதம் கிடையாது. வழிபாடு சமமாக இருக்க வேண்டும் என்றுதான் விரும்புகிறோம். அதனால்தான் தலைவர், அனைத்து பிரிவினரும் அர்ச்சனை செய்யலாம் என்ற திட்டத்தை கொண்டுவந்தார்”, என்று நாத்திகம் பேசி பேலன்ஸ் செய்து சமாளித்தார்.


[1] கடவுள் நம்பிக்கை இருந்தா போலீஸ், காவல்துறை தேவையில்லை-துணை சபாநாயகர், திங்கள்கிழமை, ஜூலை 26, 2010,

http://thatstamil.oneindia.in/news/2010/07/26/dmk-salem-duraisamy-veerapandi-arumugam.html