Posts Tagged ‘செம்மொழி’

அரைத்த மாவையே அரைக்கும் கருணாநிதி!

ஜூன் 24, 2010

தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து பெற்றது எப்படி? கருணாநிதி பேச்சு

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=25082

இன்னும் இது போன்று அரைத்த மாவையே அரைத்துக் கொண்டு, இன்னும் எத்தனை ஆண்டுகள் தாம் காலம் கழிப்பார்கள் என்று தெரியவில்லை.

இதில் தெரியாத விஷயம் என்னவென்று தெரியவில்லை.எல்லா மாநாடுகளிலும் இது போன்ற கட்டுக்கதைகளை அள்ளி வீசுகின்றனர்.

சரித்திர ஆசிரியர்கள், இத்தகைய கருதுகோள்கள், சித்தாந்தந்தகள் முதலியவற்றை ஏற்றுக் கொள்வதில்லை என்று உணராமல் இருப்பது ஆச்சரியமே!

ஏன் ரோமிலா தாபரையேக் கூப்பிட்டு, இம்மாநாட்டில் பேசவைத்திருக்கலாமே? ஏன் செய்யவில்லை?

80 வருடங்களுக்கு முன்னமே, மு. ராகவ ஐயங்கார் எழுதிய “ஆராய்ச்சித் தொகுதி”யில், இதைப் பற்றிய விவரங்கள் அதிகமாகவே உள்ளன.

அதிலிருந்து, பிச்சிப்பிடுங்கு அரைகுறையாக யாரோ எழுதிக் கொடுத்து, அதனை கருணாநிதி படித்திருப்பது நன்றாகவே தெரிகின்றது.

கோவை :””தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து வேண்டுமென, ஒரு நூற்றாண்டுக்கு மேலாக தமிழகத்தில் ஒலித்து வந்த குரல், காட்டில் காய்ந்த நிலவாய், கடலில் பெய்த மழையாய், கவனிப்பாரற்று போயிற்று. மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அமைந்தபின், தி.மு.க.,வின் கோரிக்கையை ஏற்று, தமிழ் செம்மொழியென அறிவிக்கப்பட்டது,” என்று, கோவையில் நேற்று துவங்கிய உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் முதல்வர் கருணாநிதி பேசினார்.

மாநாட்டுக்கு தலைமை வகித்து, முதல்வர் கருணாநிதி பேசியதாவது: தடைக் கற்கள் பல போடப்பட்டாலும், அவற்றையெல்லாம் அலட்சியப்படுத்திவிட்டு, தமிழகம், தமிழக மக்கள் மீதும் கொண்டுள்ள அன்பின் காரணமாக இம்மாநாட்டில் பங்கேற்ற ஜனாதிபதி பிரதிபா பாட்டீலுக்கு, தமிழர்களின் சார்பாக நன்றி தெரிவிக்கிறேன். கோவையில் நடக்கும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கு, மடைதிறந்த வெள்ளமென தமிழர்கள் வந்துள்ளனர். கோலமிகு கோவை மாநகரிலே உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்துவதை பெருமையாகக் கருதுகிறேன்.இதுவரை, “உலகத் தமிழ் மாநாடு’ என்ற பெயரில் எட்டு மாநாடுகள் நடந்துள்ளன. முன்னர் நடந்த எட்டு மாநாடுகளுக்கும், இப்போது நடக்கும் மாநாட்டுக்கும் வேறுபாடு உண்டு. முன்னர் நடந்தவை, “உலகத் தமிழ் மாநாடுகள்!’ இப்போது நடப்பது, “உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு!’

தமிழ் உலக மொழிகளுக்கெல்லாம் தாய் போன்றது: உலகத் தமிழ்ச் செம்மொழி என்பதில் உள்ள மூன்று சொற்களும் பொருள் பொதிந்தவை. தமிழ் உலகமொழி மட்டுமல்ல; உலக மொழிகளுக்கெல்லாம் தாய் போன்றது. மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர், “ஞால முதல்மொழி தமிழே’ என்று, நிறுவிக் காட்டியிருக்கிறார்.மூலத் தாய்மொழிச் சொற்கள் உலகமொழிகளில் சொல்வடிவில் உருத்திரிந்து, பொருள் அளவில் உருத்திரியாமல் இருக்கின்றன. எடுத்துக்காட்டாக, உலகமொழிகளில் உள்ள அம்மா, அப்பா எனும் உறவுப்பெயர்கள்; நான், நீ, அவன் எனும் மூவிடப்பெயர்கள். நீர், நெருப்பு, காற்று போன்ற இயற்கை பெயர்கள் போன்றவை, தமிழோடு மிகவும் நெருக்கம் கொண்டவையாக உள்ளன.

கால்டுவெல்லின் கதைகளை அளத்தல்: தமிழோடு தொடர்பில்லாத அடிப்படைச் சொற்கள் எவையும், உலக மொழிகளில் இல்லாததால், தமிழே உலக முதல் தாய்மொழி எனும் தகுதியைப் பெறுகிறது. உலக மொழிகளில் மிகத் தொன்மைக் காலம் முதலே இயல், இசை, கூத்து என்னும் முத்தமிழ், வளர்ச்சியை எய்தியதால், தமிழ் நிலையான தன்மையை அடைந்தது. இலக்கியம் தழுவிய கலை வளர்ச்சி, தமிழுக்கு நிலைத்து நிற்கும் ஆற்றலை தந்திருப்பதால், தமிழை உலகத் தாய்மொழி என, அறியலாம்கி.மு., 10ம் நூற்றாண்டில் வாழ்ந்த அரசன் சாலமனுக்கு, தமிழக கப்பல்கள் மயில் தோகையையும், யானை தந்தங்களையும், வாசனைப் பொருட்களையும் கொண்டு சென்றன. வடமொழியில், வேதங்களில் இருபதுக்கும் மேற்பட்ட தமிழ்ச் சொற்கள் இருப்பதை, ஆய்வறிஞர் கால்டுவெல் கண்டுபிடித்து அறிவித்தார்.

பழையக் கட்டுக்கதைகளை சொல்லுதல்: இதிலிருந்து, வடமொழிக்கு முன்பே தமிழ் இருந்தது என்பதை, அறியலாம். வால்மீகி ராமாயணத்தில் தென்னகத்தை ஆண்ட முவேந்தர்களை பற்றிய குறிப்பும், பாண்டியரின் தலைநகரான கபாடபுரம் பற்றிய குறிப்பும் உள்ளன. இது, லெமூரியா கண்டத்தில் இரண்டாம் தமிழ்ச் சங்கம் இருந்த கபாடபுரம் பற்றியதாகும் எனக்கருதப்படுகிறது. கி.மு., 4ம் நூற்றாண்டில் வாழ்ந்த சந்திரகுப்த மவுரியரின் அமைச்சரான சாணக்கியர், தன் அர்த்தசாஸ்திரத்தில் கபாடபுரத்தில் முத்துக்குளித்தலை பற்றி குறிப்பிடுகிறார். கி.மு., 350ல் வாழ்ந்த வடமொழி இலக்கணப் பேரறிஞர் காத்தியனார் சேர, சோழ, பாண்டியர்களை பற்றி குறிப்பிடுகிறார்.

காலக்க்கணக்கியலில் மூக்கை நுழைத்தல்: பாரதப்போர் பற்றிய குறிப்பில், புறநானூற்றில் பாண்டவர் ஐந்து பேருடன், 100 துரியோதனாதியர்களும் போரிட்டபோது, இரு பக்க படைகளுக்கும் பெருஞ்சோறு கொடுத்த காரணத்தால் உதியஞ்சேரலாதன் – சேரன் பெருஞ்சோற்றுதியன், சேரலாதன் என்று அழைக்கப்பட்டார். பாரதப்போர் நடந்த காலம் கி.மு., 1500 எனப்படுகிறது. அப்படியானால், இந்த சேரனின் காலம் கி.மு., 1500 ஆக இருக்க வேண்டும். இவை அனைத்தும் தமிழ் இனம், தமிழ் மொழியின் தொன்மையை புலப்படுத்துகின்றன. பேரறிஞர்களான ஜான்மார்ஷல், ஈராஸ் அடிகள், சர் மார்ட்டிமர் வீலர், கமில் சுவலபில் போன்றோர், “திராவிடர்களே சிந்துவெளி நாகரிகத் தோற்றத்தின் உரிமையாளர்கள்’ எனவும், அவர்களின் மொழி திராவிட மொழி தான் எனவும் உறுதிப்படுத்துகின்றனர்.

தமக்குப் பாட்டு பாடும் ஆராய்ச்சியாளர்கள் என்று கூறுவது: “சிந்துவெளி நாகரிகம் ஒரு திராவிடப் பண்பாடு; திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த பழந்தமிழ்ப் பண்பாட்டுடன் நெருங்கிய தொடர்பு கொண்டது. சிந்துவெளிக் குறியீடுகளை பழந்தமிழ் இலக்கியங்களில் பதிவாகியுள்ள தொன்மங்களோடு ஒப்பிட்டு புரிந்து கொள்ளலாம்’ என்று, கடந்த 40 ஆண்டுகளாக சிந்துவெளி பண்பாட்டு வரிவடிவங்களில் ஆய்வு மேற்கொண்டு வரும் டாக்டர் ஐராவதம் மகாதேவன் கூறியிருக்கிறார். இன்று, “கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது’ பெறும் பின்லாந்து நாட்டு பேராசிரியர் அஸ்கோ பர்போலோ, “சிந்துவெளி பண்பாடும், அதன் எழுத்தும் திராவிடக் குடும்பத்தைச் சார்ந்தவை’ என்னும் கருதுகோளை ஆய்வுச் சான்றுகளோடு முன் வைத்து, அத்துறையில் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.

5000, 3000, 2000 ஆண்டுகள் காலத்து முந்தைய தமிழ்கள்: சிந்துவெளியினர் திராவிடமொழி பேசுபவர்களே, என்பதற்கான தகுந்த ஆதாரங்களையும் அவர் விரிவாக கூறியிருக்கிறார். அகநானூறு, புறநானூறு போன்ற கடைச்சங்க இலக்கியங்கள் கிடைத்ததன் பயனாக, ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் நமக்கு கிடைத்தது.தொல்காப்பியம் கிடைத்ததால், மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் நமக்கு கிடைத்தது. சிந்துவெளி எழுத்துச் சான்றுகளின் பயனாக, ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் கண்டறியப்பட்டுள்ளது.

அரைத்த மாவையே அரைக்கும் கருணாநிதி: பண்டைத் தமிழர்கள் தரை, கடல் வழியாக பயணம் செய்து உஜ்ஜயினி, கலிங்கப்பட்டினம்,  காசி, பாடலிபுரம் முதலான இடங்களிலும், கடல் கடந்த நாடுகளாகிய காழகம் (பர்மா), தக்கோலம், கிடாரம், சாவகம் (கிழக்கிந்திய தீவுகள்) முதலான இடங்களுக்கும் சென்றும் வாணிகம் செய்தனர். தமிழக வாணிகர், அயல்நாடுகளுக்குச் சென்று வாணிகம் செய்தது போலவே, அயல்நாட்டு வாணிகரும் தமிழகத்துக்கு வந்து வாணிகம் செய்தனர். அக்காலத்தில், வாணிகத்திலே உலகப் புகழ் பெற்ற காவிரிப்பூம்பட்டினத் துறைமுகத்தில் அயல்நாடுகளிலிருந்து கப்பலோட்டி வந்த வேறு மொழிகளை பேசிய மக்கள் தங்கியிருந்ததை சிலப்பதிகாரம் கூறுகிறது.

தமிழகத்துக்கு வடமேற்கிலிருந்து வந்த அராபிய வாணிகரும், யவனர்களும், சேர நாட்டின் முசிறித்துறைமுகத்துக்கு வந்து வாணிகம் செய்தனர். இத்தகைய வாணிகத்தின் மூலமாகவும், பல்வேறு மொழிகளின் தொடர்புகள் காரணமாகவும் தமிழ், உலக நாடுகளில் எல்லாம் அறியப்பட்ட மொழியாயிற்று.அதன் தொன்மை, தனித்தன்மை, முதன்மைச் சிறப்பினால் தமிழ், உலக முதல் தாய்மொழியாக, உலகத்தமிழாக ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.

ஒரு மொழி, செம்மொழியாகக் கூறப்படுவதற்கு தகுதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன. தொன்மை, தனித்தன்மை, பொதுமைப் பண்பு, நடு நிலைமை, தாய்மைத் தன்மை, மொழிக்கோட்பாடு, இலக்கிய வளம், உயர் சிந்தனை, பண்பாடு, கலை, பட்டறிவு வெளிப்பாடு ஆகிய பதினோரு தகுதிகளை ஒரு மொழி பெற்றிருந்தால்தான், அது செம்மொழி.இந்த பதினோரு தகுதிகளை மட்டுமின்றி, இந்த தகுதிகளுக்கெல்லாம் மேலான மேன்மையான தகுதிகளைப் பெற்ற மொழிதான் தமிழ்மொழி என்பதை, தமிழகத்திலுள்ள தமிழறிஞர்கள் மட்டுமல்ல, தமிழைக் கற்றுத் தேர்ந்த உலக அறிஞர்கள் எல்லாம், ஒருமனதாக ஒப்புக்கொண்டுள்ளனர்.

தமிழ், செம்மொழியே என, முதன் முதலில் குரல் கொடுத்த தமிழறிஞர் வி.கோ.சூரிய நாராயண சாஸ்திரி எனும் பரிதிமாற்கலைஞர். தமிழ் செம்மொழி என்று முதன்முதலில் கூறிய வெளிநாட்டவர், அறிஞர் ராபர்ட் கால்டுவெல்.அயர்லாந்து நாட்டில், “ஷெப்பர்ட்ஸ் காலனி’ என்ற இடத்தில் வாழ்ந்த இவர், அங்கிருந்து குடிபெயர்ந்து, தமிழகத்தில் நெல்லை மாவட்டத்தில் இடையான்குடி என்ற ஊரில், தனது இறுதிக் காலம் வரை வாழ்ந்தவர். அந்த அளவிற்கு மண்ணின் பற்று, மொழியின் பற்று கொண்டவராக அவர் விளங்கினார். தமிழ்ச் செம்மொழி என்னும் அங்கீகாரத்தைப் பெறவேண்டுமென்று, சென்னை சைவசித்தாந்த மகாசமாஜம், கரந்தைத் தமிழ்ச் சங்கம் போன்ற அமைப்புகளும், சென்னைப் பல்கலை, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை உள்ளிட்ட தமிழகத்திலுள்ள பல்கலைக்கழகங்களும் குரல் கொடுத்தன.

ஜான் சாமுவேல் என்ற மோசடி பேர்வழி இங்கு எப்படி என்று தெரிவவில்லை: தவிர, மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர், முனைவர் ச.அகத்தியலிங்கம், வா.செ.குழந்தைசாமி, ஜான்சாமுவேல், மணவை முஸ்தபா, அவ்வை நடராஜன், பொற்கோ போன்ற தமிழறிஞர்களும், டாக்டர் சுனித்குமார் சட்டர்ஜி, கமில் சுவலபில், ஜார்ஜ் எல்.ஹார்ட் போன்ற வெளிமாநில, வெளிநாட்டு அறிஞர்களும் குரல் கொடுத்தனர். எனினும், ஒரு நூற்றாண்டுக்கு மேலாக தமிழகத்தில் ஓங்கி ஒலித்து வந்த அந்த குரல், காட்டில் காய்ந்த நிலவாய், கடலில் பெய்த மழையாய், கவனிப்பாரற்றுப் போயிற்று. ஆனால், சோனியாவின் வழிகாட்டுதலிலும், பிரதமர் மன்மோகன் சிங்கின் தலைமையிலும், ஐ.மு., கூட்டணி அரசு மத்தியில் அமைந்த பின்னர்தான், தமிழைச் செம்மொழியென பிரகடனப்படுத்த வேண்டுமென்ற தி.மு.க.,வின் கோரிக்கை ஏற்கப்பட்டது. 2004, அக்., 12ல் தமிழ்ச் செம்மொழி பிரகடன அறிவிப்பு மத்திய அரசால் வெளியிடப்பட்டது.

ஒரு நூற்றாண்டு காலமாக எழுப்பப்பட்டு வந்த குரல், குன்றின் மேலிட்ட விளக்காக ஒளி வீசத்தொடங்கியதற்கு பிறகு, நடக்கும் முதல் மாநாடு இது. இதனால்தான் தமிழின் பெயரால், உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு என்ற பெயரில், இந்த மாநாடு கோவை மாநகரில் நடக்கிறது.ஐயாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக அழகும், இளமையும் அணுவளவேனும் குறையாமல் இந்த அவனியிலே வாழ்ந்து வரும் தமிழ்மொழியை, எதிர்காலத்திற்கான தேவைகளை மதிப்பிட்டு கணினித் தமிழ், அறிவியல் தமிழ் ஆகியவற்றை வளர்த்தெடுப்பதற்கான வழிமுறைகளை வகுக்கவும்; இலக்கியம், ஒப்பிலக்கியம், மொழியியல், மொழி பெயர்ப்பியல், வரலாறு, தத்துவம், மானிடவியல், நாட்டுப்புறவியல் போன்ற பல துறைகளிலும் பண்பட்ட ஆய்வுகளை ஊக்கப்படுத்தவும்; சிந்து சமவெளி முதல் ஆதிச்சநல்லூர் கொடுங்கல் கொண்ட குமரிக்கண்டம் வரை தொல்லியல் துறையில் இதுவரை மேற்கொண்ட ஆய்வு முடிகளின் அடிப்படையில், மேலும் மேம்பட்ட ஆய்வுகளை மேற்கொள்ளவும், இந்த மாநாடு நடத்தப்படுகிறது. புலவர்களும், புரவலர்களும், தன்னேரிலாத் தலைவர்களும் உலாவிய புகழுக்கும், பெருமைக்கும் உரியது கொங்கு பூமி. அதன் கோலமிகு மாநகரம் கோவை. அதன் காரணமாகவே, உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கோவையில் நடத்தப்படுகிறது. இவ்வாறு கருணாநிதி பேசினார்.

வடகிழக்கு மாநில லாட்டரி சீட்டுகள், தமிழகத்தில் விற்பனை, சட்டமீறல்கள்

மார்ச் 29, 2010

வடகிழக்கு மாநில லாட்டரி சீட்டுகள், தமிழகத்தில் விற்பனை, சட்டமீறல்கள்

வேதபிரகாஷ்

உலகத்திலேயே லாட்டரி சீட்டுகள் அதிகமாக விற்பது தமிழகத்தில் தான்: குடி, விபச்சாரம், போதைப் பொருள், திருட்டி விசிடி / டிவிடி, பொருட்கடத்தல் முதலியவற்றுடன் அமோகமாக நடக்கும் தொழில்தான் லாட்டரி. தமிழ் மக்களுக்கு இதன் மீது ஒரு அலாதியான காதல், ஊடல், கிரக்கம், மயக்கம்…எல்லாமே உண்டு. தமிழ், தமிழ் மக்கள், தமிழ்நாடு என்று “எங்கும் தமிழ், எதிலும் தமிழ்’, என்ற மயக்கத்தில் இருந்தபோது, எல்லாருமே தமிழில் லாட்டரி டிக்கெட் அச்சடித்து, தமிழிலேயே பேசி, தமிழகத்தில் லாட்டரி விற்றது ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவேண்டும். குடிக்கக் கூழ் இருந்தாலும், இல்லாவிட்டாலும், சாப்பிட சாப்பாடு இருந்தாலும், இல்லாவிட்டாலும், லாட்டரி வாங்குவது தமிழனது தலையாயக் கடமையாக இருந்தது. அலுவகங்களில் கூட்டு சேர்ந்து கட்டுக்கட்டாக லாட்டரி வாங்குவார்கள். அதாவது, பண்டிலாக வாங்கினால் ஒரு பரிசு நிச்சயம் என்ற பகுத்தறிவோடு வாங்கினார்கள். உடனே, லாட்டரி விற்பவர்கள் அந்த சோதிடத்தை நடைமுறைப் படுத்தினார்கள்! அதாவது ஒரு கட்டு – 100 சீட்டுகள் வாங்கினால் ஒரு பரிசு நிச்சயம், என்றதும் ஆயிரக்கணக்கான வாங்க ஆரம்பித்தார்கள்!

“மார்டின் நிகழ்வு” (Martin phenomenon): அந்நிலையில் லாட்டரி சீட்டு விற்றே மில்லியனரான சாண்டியகோ மார்டின் சென்னையில்தான் உண்டு[1]. கே.ஏ.எஸ். ராமதாஸையும் மறந்திருக்க முடியாது. “மார்டின் நிகழ்வு” (Martin phenomenon) என்பது நிச்சயமாக ஒரு அதிசயமானதுதான். ஆகையால்தான் உதாரணத்திற்காக அது எடுத்துக் கொள்ளப்படுகிறது. அது மட்டுமல்லாமல், அதைச் சுற்றி மற்ற விஷயங்களும் வருகின்றன. மார்டின் வடகிழக்கு மாநிலங்களில் ஒரு பெரிய தாதா, இல்லை அதற்கும் மேலே. இந்திய ஜனாதிபதி-பிரதம மந்திரிக்குக் கூடக் கிடைக்காத மரியாதை மார்ட்டினுக்குத் தான் கிடைக்கும். அதே போல தமிழகத்திலும் மரியாதை, அரசியல்வாதிகளின் ஆதரவு உண்டு. கருணாநிதி ஆட்சியின் ஆரம்பத்தில் மார்ட்டினை விசாரிக்கும் படலம் ஆரம்பித்தது[2]. வரி ஏய்ப்பிலும் மார்டினின் கம்பெனிகள் சம்பந்தப் பட்டுள்ளன[3]. பர்மாவிலிருந்து வந்த மார்டின் சட்டத்திற்கு புரம்பாக லாட்டரி சீட்டு விற்பனை நடத்தி சம்பாதித்துள்ளது ரூ. 7200 கோடிகளாம்! இரண்டு  முறை சட்டரீதியில் நடவடிக்கை எடுத்தும், குற்றப்பத்திரிக்கைகள் தாக்கல் செய்யப் பட்டும் சுதந்திரமாக திரிந்து வருவதுதான் மார்டினின் திறமை. அது மட்டுமல்லாது, FICCI எனப்படுகின்ற இந்தியாவின் பிரதம வியாபார நிறுவனத்தின் அங்கமான அனைத்திந்திய லாட்டரி வியாபார மற்றும் சம்பந்தப்பட்ட தொழிற்துறை கூட்டமைப்பு (All India Federation of Lottery Trade and Allied Industry) என்பதில் அபரீதமான பங்கு வகிப்பதும் தெரிந்த விஷயமே[4].

மார்டின், திமுக, செம்மொழி, வியாபாரம்: சாண்டியாகோ மார்டின் கடந்த டிசம்பர் மாதம் 2009 சென்னைக்கு வந்தபோது, செம்மொழி மாநாடு சம்பந்தமான கூட்டத்தில் பங்கு கொண்டதாகத் தெரிகிறது. செம்மொழி மாநாடு ஒரு “ஹை-டெக்” வியாபாரமாகி விட்டதால், மார்டினையும் சம்பந்தப் படுத்த திமுக விரும்புகிறது. இவ்வாறு மார்டினின் திமுக மற்றும் காங்கிரஸின் தொடர்பும்[5] பக கதைகளைச் சொல்கின்றன[6]. ஒரு நிலையில் இக்கட்சிகள் மார்டினை லோக் / ராஜ்ய சபாவிற்கு தேந்தெடுக்கவும் பரிந்துரைத்தன[7]. அதுமட்டுமல்லாது, “சாஃப்ட்-வேர் நிபுணர்கள்” பலர் பிரத்யேகமாக வேலைக்கு அமர்த்தப் பட்டு[8], தனது சாம்ராஜ்யத்தை நடத்துகிறதும் மார்டினுடைய கம்பெனிகள் மூலம் அறியலாம்[9]. லைபிரிய நாட்டின் கௌரவ கவுன்சிலராக இருப்பதும் மார்டிந்தான்! பூடான் நாட்டு அரசு[10] லாட்டரி விற்கும் உரிமையே மார்டினுக்குத் தான் கொடுத்துள்ளது! மார்டினே சொல்வது என்னவென்றால், பூடான் லாட்டரி அதிக அளவில் விற்பது மேற்கு வங்காளம் மற்றும் கேரளாதான் என்ற விஷயம். அதாவது கம்யூனிஸ சித்தாந்தத்தில் ஊறிய மக்கள், அதிகமான படித்துள்ளவர் கொண்ட மாநிலங்கள், என்றெல்லாம் உள்ளவர்கள் தாம் எனும்போது உண்மையே உன் நிலை என்ன என்றுதான் கேட்கவேண்டியதுள்ளது!

தமிழ்நாட்டில் லாட்டரி தடை செய்யப்பட்டதே இந்த ஊழலை ஊக்குவிப்பதற்கே: தமிழகத்தில் லாட்டரி தடை செய்யப்பட்டது, ஏதோ புண்ணியமான காரியம் என்று நினைத்துக் கொள்ளவேண்டாம். அதுதான் தமிழக அரசியல்வாதிகளின் முதல் சம்பந்தமே. எப்படி விபச்சாரம் தடைசெய்யப் பட்டுள்ளதோ அதுபோல! இன்றைக்கு தினம்-தினம் தமிழகத்தில் என்ன நுழைகின்றன என்று பார்த்தால் – விபச்சாரிகள், போலி மருந்து, போதை மருந்து, லாட்டரி, ஆயுதங்கள், தீவிரவாதிகள்……………..முதலியவைதாம்! இது நிச்சயமாக இங்குள்ளவர்களின் சம்பந்தத்தை எடுத்துக் காட்டுகிறது. கீழ் காணும் செய்திகள் தினமலர் இணைத்தளத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளன. இது மாதிரி ஆயிரக் கணக்கான செய்திகள் உள்ளன. அவற்றை கவனமாகப் படிக்கும்போது, லாட்டரி சீட்டு வியாபாரம், அதிலும் தடை செய்யப் பட்ட பிறகும் தமிழகத்தில் நடப்பது, ஒன்றும் ஆச்சரியப்படக்கூடிய விஷயமாகத் தெரியவில்லை. சினிமா, தொழிற்துறை, …………………மற்றவர்கள் இதில் ஈடுபட்டிருப்பது, அரசியல்வாதிகள், போலீஸார், மற்ற துறை அதிகாரிகளின் ஒத்துழைப்பு……………..முதலியன தாராளமாகவே தெரிகின்றன[11].

பெங்களூர் படும் பாடு: இத்தகைய கலப்பட அரசியல், மசாலா-குற்றங்கள், தடை செய்யப் பட்ட வியாபாரங்கள், ஜிஹாதி-தீவிரவாதம், கிருத்துவ அடிப்படைவாதம், போக்குவரத்துகள் முதலியவற்றில் பெங்களூர் சிக்கி பரிதவிப்பது கண்கூடாக உள்ளது. முன்பு ஃபிளின் ஆஸ்திரேலிய கடத்தல்வாதியும் இங்குதான் புராதனமான நாணயங்கள், பொருட்கள் வாங்கியதாக ஒப்புக்கொண்டுள்ளான். கருணாநிதி பெங்களூர் சென்று தங்குவதும், கிருஷ்ணா[12] இங்கு வருவதும், இருவருக்கும் லாட்டரி அதிபர்களுக்கு இடையேயுள்ள பந்தம், பிணைப்பு, இணைப்பு முதலியனவும் நோக்கத்தக்கதே[13]. ஆன்-லைன் லாட்டரி, அதற்கு சம்மந்தப் பட்டுள்ள அரசியல்வாதிகள், மென்பொருள் நிபுணர்கள்[14], ஊடகங்கள் அளிக்கும் விளம்பர செய்திகள் முதலியனவும் இதில் உள்ளன[15]. நீதிபதி தினகரன் சமாசாரமும் அங்குதான் உள்ளது. எல்லைகளைத் தாண்டிய திராவிட தீவிரவாதமும் அங்குதான் செயல்பட்டது. நக்கீரனின் போக்குவரத்தும் அங்குதான் உள்ளது. சம்பந்தப் பட்டுள்ள கே. பி. என். டிராவல்ஸ் வண்டிகளும் இங்கிருந்துதான் சேலம் கோயம்புத்தூர் முதலிய ஊர்களுக்கு தினமும் சென்று வருகின்றன. இதற்கும் திமுகவிற்கும் உள்ள நெருங்கிய தொடர்பும் தெரிந்ததே. யார்-யார்கூட வேண்டுமானாலும் தொடர்பு வைத்துக் கொள்ளட்டும், என்ன வியாபாரம்-தொழில் வேண்டுமானலும் செய்யட்டும். அது அவர்களது சொந்த விஷயம். ஆனால் மக்கள் பாதிக்கப் படும்போது, பொது பிரச்சினையாகிறது. இந்நிலையில் தமிழக மக்களை மட்டுமல்லாது, இந்திய மக்களையும் யார் காப்பாற்றப் போகிறார்கள்?

லாட்டரி சீட்டுக்கள் பறிமுதல் : துணை நடிகர் உட்பட இருவர் கைது[16] (28-03-2010): சென்னை, பூந்தமல்லி அருகே, திருட்டுத்தனமாக வெளிமாநில லாட்டரி சீட்டுக்களை விற்று வந்த பிரபல லாட்டரி வியாபாரியும், அவருக்கு உடந்தையாக இருந்த துணை நடிகரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 10 லட்சம் ரூபாய் லாட்டரி சீட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.  பட்டாபிராமைச் சேர்ந்தவர் சுரேஷ் (எ) பூவை ராஜா(32). தமிழகத்தில் லாட்டரி சீட்டுக்கள் தடை செய்வதற்கு முன், பூந்தமல்லியில் பிரபல லாட்டரி வியாபாரியாக இருந்தார். பின், வெளிமாநில லாட்டரி சீட்டுக்களை வாங்கி வந்து, திருட்டுத்தனமாக விற்பனை செய்தார். இது தொடர்பாக அவர் பலமுறை கைதானார். போலீஸ் கெடுபிடி அதிகமாக இருந்ததால், கடந்த இரண்டு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தார். இந்நிலையில், பூந்தமல்லி அருகே பூவை ராஜா பதுங்கியிருப்பதாகவும், திருட்டுத்தனமாக வெளிமாநில லாட்டரி சீட்டுக்களை விற்று வருவதாகவும் தகவல் கிடைத்தது. மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

ரியல் எஸ்டேட், சினிமா, லாட்டரி சீட்டு – தொடர்பு: பூந்தமல்லி, கிழக்கு மாடவீதியில், ரியல் எஸ்டேட் தொழில் நடத்தி வரும் மகேஷ்ராஜா (38) என்பவரின் அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்தினர். பூவை ராஜா, மகேஷ்ராஜா இருவரையும் கைது செய்தனர். அங்கிருந்த 10 லட்சம் ரூபாய் லாட்டரி சீட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில், திருட்டுத்தனமாக லாட்டரி டிக்கெட்டுகள் விற்க உடந்தையாக இருந்த மகேஷ்ராஜா, காதலுக்கு தலைவணங்கு என்ற படத்தில் கதாநாயகனின் நண்பராக நடித்து வரும் துணை நடிகர் என்பது தெரிய வந்தது. புதுப்பட “டிவிடி’க்கள் பறிமுதல்: அம்பத்தூர் எஸ்டேட் பகுதியில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். அங்குள்ள அத்திப்பட்டு, பாலம் அருகே புதுப்பட “டிவிடி’க்களை விற்பனை செய்து கொண்டிருந்த முகப்பேரைச் சேர்ந்த சிஜூ (24) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

குன்னூரில் ரூ. 19 கோடி மதிப்புள்ள வெளிமாநில லாட்டரி சீட்டுகள் பறிமுதல்[17] (26-03-2010): Last Updated :

குன்னூர், மார்ச் 26- குன்னூரில் ரூ. 19 கோடி மதிப்புள்ள வெளிமாநில லாட்டரி சீட்டுகள் இன்று பறிமுதல் செய்யப்பட்டன. குன்னூரில் இன்று போலீஸôர் நடத்திய வாகன சோதனையின்போது ஒரு லாரியில் இந்த லாட்டரி சீட்டுகள் மொத்தம் 197 மூட்டைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். பிடிபட்ட லாரி கேரள மாநிலத்திலிருந்து ஆந்திராவுக்கு செல்லும் வழியில் குன்னூரில் பிடிபட்டுள்ளதாக கூறப்படுகிறது. கைது செய்யப்பட்டவர்களிடம் போலீஸôர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் அனுப்பி பெரும் மோசடி[18]: லாட்டரியுடன் துப்பாக்கியும் அனுப்பிய நபர் கைது (25-02-2010): தமிழகத்தில் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரிச் சீட்டுகளை, பார்சல் சர்வீஸ் மூலம் தமிழகம் முழுவதும் அனுப்பிய நபரை போலீசார் கைது செய்தனர். ஆறு கோடி ரூபாய் மதிப்பிலான லாட்டரிச் சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், கைது செய்யப்பட்ட நபர் இரண்டு மாதங்களில் 100 கோடி ரூபாய் மதிப்பிலான லாட்டரிச் சீட்டுகளை தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் இதே போல அனுப்பியுள்ளார் என்ற அதிர்ச்சித் தகவல் விசாரணையில் வெளியாகியுள்ளது. சென்னையிலிருந்து அருப்புக்கோட்டைக்கு, கே.பி.என்., டிராவல்ஸ் பார்சல் சர்வீஸ் வேனில், பார்சல் மூலம் ஆயுதங்கள் கடத்தப்படுவதாக சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அருப்புக்கோட்டை, டிராவல்ஸ் அலுவலகத்தை போலீசார் ரகசியமாக கண்காணித்தனர். நேற்று முன்தினம் காலை 11:30 மணிக்கு, இரண்டு பேர் சென்னையிலிருந்து வந்த பார்சலை வாங்க வந்தபோது, போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர். அவர்கள் வாங்கிய பார்சலை சோதனை செய்தபோது, பட்டுச் சேலைகளுக்கு நடுவே இரண்டு 9 எம்.எம்., ரக கைத்துப்பாக்கிகள்,  27 தோட்டாக்கள் இருந்தன. இத்துப்பாக்கி பார்சலை வாங்க வந்த விருதுநகர் வாகைக்குளத்தைச் சேர்ந்த மணிகண்டன், பண்ணை மூன்றடைப்பைச் சேர்ந்த செல்வராஜ் ஆகிய இருவர் பிடிபட்டனர் .  எம்.ரெட்டியப்பட்டியைச் சேர்ந்த குமார் என்பவர் பார்சலை வாங்கி வருமாறு தங்களை அனுப்பியதாக இருவரும்  தெரிவித்தனர். இதையடுத்து, குமாரையும் போலீசார் கைது செய்தனர்.

கே.பி.என்., டிராவல்ஸ் அலுவலகம் சோதனை (22-02-2010): சென்னை சிந்தாதிரிப்பேட்டை ரயில் நிலையத்தில் உள்ள கே.பி.என்., டிராவல்ஸ் அலுவலகம் மூலம் கடந்த 22ம் தேதி, சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்த சுரேஷ் என்ற பெயரில், அருப்புக்கோட்டையைச் சேர்ந்த மீனா என்பவருக்கு அனுப்பியது தெரிந்தது. சுரேஷ் என்ற பெயரில் ஏற்கனவே சில பார்சல்கள் அனுப்பப்பட்டிருப்பதாகவும், தற்போது மீண்டும் ஒரு பார்சல் சிந்தாதிரிப்பேட்டை கே.பி.என்., அலுவலகத்தில் வெளியூர்களுக்கு அனுப்புவதற்காக வைக்கப்பட்டிருப்பதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்த அலுவலகத்தில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, சுரேஷ் பெயரில் வெளியூர்களுக்கு அனுப்புவதற்காக 19 பெரிய பார்சல்கள் இருந்தது தெரிந்தது. அவற்றை போலீசார் கைப்பற்றி சோதனையிட்டபோது சேலம், நாமக்கல், ஈரோடு, திண்டுக்கல், கரூர், திருப்பத்தூர், அருப்புக்கோட்டை, திருச்சி, ஒட்டன்சத்திரம் ஆகிய ஊர்களுக்கு அனுப்புவதற்காக 43 சிறிய பார்சல்களில் நாகாலாந்து மாநில லாட்டரிச் சீட்டுகள் இருந்தது தெரிந்தது. இவற்றின் மதிப்பு ஆறு கோடி ரூபாய் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.

விமானத்தின் மூலம் கடத்தல்: விஜய் கிளியரிங் ஏஜன்சி மூலம் அனுப்பப்பட்ட பார்சல் புக்கிங் ரசீதில் இருந்த மொபைல் எண்ணை தொடர்பு கொண்டபோது, அது போலி என தெரிந்தது. பழைய ரசீதுகளை ஆய்வு செய்தபோது, மற்றொரு மொபைல் எண் சிக்கியது. இதன்மூலம், சுரேஷ் என்ற பெயரில் பார்சலை அனுப்பிய ஏழு கிணறு தாயப்பன்முதலி தெருவைச் சேர்ந்த கோபியை (44) போலீசார் கைது செய்தனர். லாட்டரி பார்சல்களை அனுப்ப கோபிக்கு, கிலோவிற்கு ஐந்து ரூபாய் கமிஷனாக வழங்கப்பட்டது. கோல்கட்டாவைச் சேர்ந்த அல்மா என்டர்பிரைசஸ் நிறுவனம் மூலம் அமிதாப், வசந்தகுமார் ஆகிய இருவர் விமானம் மூலம் லாட்டரிச் சீட்டுகளை அனுப்புவதாகவும், அவர்களது அறிவுரையின் பேரில் தமிழகத்தில் பல ஊர்களுக்கு அவற்றை பிரித்து அனுப்பி வந்ததாகவும் கோபி ஒப்புக் கொண்டார். மூன்று நாட்களுக்கு முன், சேலைகளுக்கு நடுவே மறைத்து வைத்து இரு கைத்துப்பாக்கிகளை பார்சலில் அனுப்பியதையும் கோபி ஒப்புக் கொண்டார். கோபிக்கு துப்பாக்கி மற்றும் வெளிமாநில லாட்டரிகளை விமானம் மூலம் அனுப்பிய நபர்கள் குறித்து விசாரணை நடத்த தனிப்படை போலீசார் கோல்கட்டா விரைகின்றனர். கைத்துப்பாக்கிகள் மேற்கு வங்கத்தில் உள்ள ஆயுதத் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்டவை என தெரியவந்துள்ளது. தமிழகத்தில் இதற்கு முன் கோபி மூலமாக எத்தனை பேர், என்னென்ன ஆயுதங்களை வாங்கியுள்ளனர் என்பது குறித்து போலீசார் விசாரிக்கவுள்ளனர்.

தடையையும் மீறி நடக்கும் அமோகமான வியாபாரம்: லாட்டரிச் சீட்டில் பணம் இழந்ததால் பல குடும்பங்கள் அவதிப்பட்டதையடுத்து, தமிழக அரசு லாட்டரிச் சீட்டு விற்பனையை தடை செய்தது. வெளிமாநிலங்களில் அச்சிடப்பட்டு லாட்டரிச் சீட்டுகளையும் தமிழகத்தில் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், தமிழகத்தின் பல பகுதிகளில் வெளிமாநில லாட்டரிச் சீட்டுகளை விற்பனை கனஜோராக நடந்து வந்திருப்பது தெரியவந்துள்ளது. போலீசாரால் கைது செய்யப்பட்ட கோபி, கடந்த இரண்டு மாதங்களாக கோல்கட்டாவிலிருந்து வந்த வெளிமாநில லாட்டரிச் சீட்டுகளை பார்சல் மூலம் தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் அனுப்பி வந்துள்ளார்.  இதனால், கடந்த இரு மாதங்களில் (டிசம்பர் 2009, ஜனவரி 2010) மட்டும் கோபி, 100 கோடி ரூபாய் மதிப்பிலான வெளிமாநில லாட்டரிச் சீட்டுகளை பார்சல் சர்வீஸ் மூலம் தமிழகம் முழுவதும் அனுப்பி வந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

மதுரை ரவுடிகளுடன் சம்பந்தம் – சி.பி.சி..டி.,க்கு மாற்றம்?: அரசின் தடையையும் மீறி தமிழகத்தின் பல பகுதிகளிலும் வெளிமாநில லாட்டரி விற்பனை தடையின்றி நடந்துள்ளது. வெளிமாநில லாட்டரிகள் எங்கிருந்து வருகின்றன; தமிழகத்தில் வெளிமாநில லாட்டரி விற்பனையில் ஈடுபடுவது யார்; இவ்வளவு நாட்களாக லாட்டரி விற்பனை வெளியே தெரியாமல் இருந்தது எப்படி என்ற கோணங்களில் விசாரணை நடக்கவுள்ளது. அருப்புக்கோட்டைக்கு பார்சலில் அனுப்பப்பட்ட இரண்டு கைத்துப்பாக்கிகள், மதுரையைச் சேர்ந்த ரவுடி ஒருவருக்கும், அவரது மைத்துனருக்கும் அனுப்பப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும், தமிழகத்தில் சட்டவிரோத துப்பாக்கி கடத்தல்[19] குறித்தும் தீவிர விசாரணை நடக்கவுள்ளது. அருப்புக்கோட்டையில் பார்சல் மூலம் அனுப்பப்பட்ட கைத்துப்பாக்கிகள் குறித்து அரசு மற்றும் போலீஸ் உயர்அதிகாரிகள் ஏற்கனவே ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதனால், இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றப்படும் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

டீராவல்ஸ், பார்சல், கூரியர் – தொடர்பு: டிராவல்ஸ் பார்சல்களை கண்காணிக்க போலீஸ் திட்டம்: ரயில், பஸ்சில் சட்ட விரோத பொருட்களை கடத்தினால், எளிதில் போலீசாரிடம் சிக்க வாய்ப்புள்ளது. டிராவல்ஸ் நிறுவன பார்சல்கள் மற்றும் கூரியர்கள் மூலம்  துப்பாக்கி, போதைப் பொருட்கள், கடத்தல் பொருட்கள், வெடிமருந்துகள், வெளிமாநில லாட்டரிகள் உள்ளிட்ட சட்டவிரோத பொருட்களை எடுத்துச் செல்லும்போது, போலீசாரின் பிடியிலிருந்து எளிதில் தப்ப முடியும். டிராவல்ஸ் மற்றும் கூரியர் நிறுவனங்களும் பார்சல்களில் என்ன உள்ளது என்பதை பல சமயங்களில் சோதிப்பதில்லை.  இதனால், பார்சல் மற்றும் கூரியர்களை கண்காணிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். சென்னை போலீஸ் கூடுதல் கமிஷனர் ஷகீல் அக்தர் நிருபர்களிடம் கூறும்போது, “”பார்சல்கள், கூரியர்கள் மூலம் துப்பாக்கி, வெடிமருந்து உட்பட சட்டத்திற்கு புறம்பான பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க திட்டம் வகுக்கப்படவுள்ளது. விரைவில் உயர் அதிகாரிகள் கலந்து பேசி, பார்சல்களை கண்காணிப்பதற்கான நடைமுறைகள் வகுக்கப்படும். அந்நடைமுறைகள் பார்சல் மற்றும் கூரியர் நிறுவனங்களுக்கு தெரிவிக்கப்படும்,” என்றார். இப்படி ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக சட்டம் இருக்கிறதா, இல்லையா என்று போலீஸாரே ஆராய்ச்சி செய்வது, அதைப் பற்றி வெளிப்படையாகப் பேசுவது முதலியன குற்றாவாளிகளுக்கு ஆலோசனை சொல்வது போல இருக்கிறது!

சூடு பறக்கும் லாட்டரி சீட்டு விற்பனை :கண்டும் காணாத போலீசார்[20]: சேலம் மாவட்டத்தில், தடைசெய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டு விற்பனை, அமோகமாக நடக்கிறது. சேலம் மாவட்டத்தில், நாகாலாந்து, சிக்கிம், கேரளா உள்ளிட்ட வெளிமாநில லாட்டரி விற்பனை, சக்கை போடு போடுகிறது.வெளிமாநிலங்களில் இருந்து லாட்டரி சீட்டுகள் மொத்தமாக சேலம் கொண்டு வரப்பட்டு, பஸ், கார், டூவீலர் மூலம் ஏரியா வாரியாக மாவட்டம் முழுவதும் அனுப்பப்படுகிறது. பகுதி வாரியாக இருக்கும் மொத்த லாட்டரி வியாபாரிகள், தங்களுக்கு கீழ் சில்லரை வியாபாரிகள் மூலம் பல லட்சம் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்கின்றனர்.பத்து சேம் பார்ச்சூன், 12 சேம் சிங்கம், 20 சேம் குயில், 30 சேம் ரோசா, 50 சேம் டீர், 100 சேம் நல்லநேரம், 200 சேம் குமரன், 300 சேம் டயம் லட்சுமி, 400 சேம் மணி லட்சுமி, 500 சேம் உள்ளிட்ட பெயரில், லாட்டரி சீட்டு விற்பனை கொடி கட்டி பறக்கிறது.  பில், போனஸ் உடன் விற்கப்படும் 100 லாட்டரி சீட்டு 90 ரூபாய்க்கும், பில் மற்றும் போனஸ் இன்றி “கட்டிங்’ லாட்டரி 100 டிக்கெட் 60 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

நகாலாந்து லாட்டரி மாலையிலே குலுக்கல்: லாட்டரி சீட்டுகள் நாள்தோறும் மாலை 3 மணிக்கு குலுக்கல் நடத்தப்பட்டு, அதன் முடிவு அடங்கிய பட்டியல் மாலை 6 மணிக்கு பேக்ஸ் மூலம் எல்லா வியாபாரிகளுக்கும் அனுப்பப்படுகிறது. இது வரை, மாலை 3 மணிக்கு குலுக்கல் நடக்கும் லாட்டரி சீட்டுகள் மட்டும் விற்பனை செய்யப்பட்டது. தற்போது, மாலை 7 மணிக்கு குலுக்கல் நடக்கும் லாட்டரி சீட்டுகளும் வெளியிடப்பட்டுள்ளது. நாகாலாந்து மாநிலத்தில் இருந்து வெளிவரும் 3 மணி குலுக்கல் லாட்டரி சீட்டு போலவே ஈவ்னிங் 7 மணி குலுக்கல் லாட்டரி சீட்டுகள் விற்பனைக்கு வந்துள்ளன. பத்து சேம் முதல் 200 சேம் வரையில் ஈவ்னிங் 7 மணி குலுக்கல் லாட்டரி பிப்., 15ம் தேதி முதல் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.இதனால், அப்பாவி ஏழைகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். உள்ளுர் போலீசார், ஆளுங்கட்சியினரை லாட்டரி அதிபர்கள் கவனிப்பதால், அவர்கள் கண்டுகொள்வதில்லை.போலீசார் மாமூலுக்கு ஆசைப்பட்டு, லாட்டரி விற்பனையை கண்டுகொள்வதில்லை. குறிப்பாக, சேலம் புறநகர் மாவட்டத்தில் கொண்டலாம்பட்டி, ஆத்தூர் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதியில் இருந்து தான், மாவட்டம் முழுவதற்கும், மாநகர பகுதிக்கு லாட்டரி விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2 கோடி ரூபாய்க்கு லாட்டரி சீட்டுக்கள் திருச்சி ரயில் நிலையத்தில் சிக்கின[21]:  ரயில் மூலம் திருச்சிக்குக் கடத்திவரப்பட்ட இரண்டு கோடி ரூபாய் மதிப்பிலான, தடை செய்யப்பட்ட லாட்டரிச் சீட்டுக்களைப் பறிமுதல் செய்த ரயில்வே போலீசார், இதுதொடர்பாக வியாபாரிகள் மூவரைக் கைது செய்தனர். ஈரோட்டிலிருந்து திருச்சிக்கு நேற்று முன்தினம் வந்த பாசஞ்சர் ரயிலில் சாக்குமூட்டையில் இருந்த சரக்குகளை ரயில்வே ஊழியர்கள் இறக்கினர். அப்போது சிலவற்றில் இருந்த லாட்டரிச் சீட்டுக்கள் கீழே கொட்டின. இதுகுறித்து ஆர்.பி.எப்., போலீசுக்குத் தகவல் கிடைத்தது. போலீசார், ரயிலில் இருந்து இறக்கப்பட்ட 28 மூட்டையைப் பிரித்துப் பார்த்ததில், இரண்டு கோடி ரூபாய் மதிப்பிலான, தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரிச் சீட்டுக்கள் இருந்தது தெரியவந்தது. இந்த லாட்டரிச் சீட்டுக்கள் அனைத்தும் திருச்சி ரயில்வே போலீசாரிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டன.

வடகிழக்கு இந்தியா-தமிழகத்திற்கு உள்ள தொடர்பு: ரயிலில் வந்த லாட்டரிச் சீட்டுக்களை எடுப்பதற்காக வந்த ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த செல்வம், அருணாச்சலம் ஆகிய இருவரையும் மடக்கிய போலீசார், அவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், ஆர்.கே.பாண்டே என்பவர் கோல்கட்டாவில் இருந்து ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் திருச்சி மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளைச் சேர்ந்த லாட்டரி வியாபாரிகளுக்கு அனுப்பியதாகக் கூறினர். இவர்கள் கொடுத்த தகவலின்படி, ரயில் மூலம் லாட்டரிச் சீட்டுக்களைக் கடத்த உதவியதாக சென்னையைச் சேர்ந்த கோபி என்ற வியாபாரி கைது செய்யப்பட்டார். லாட்டரிச் சீட்டுக்கள் கடத்தல் சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்புள்ளதா என, திருச்சி ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர். ரயில் மூலம் அடிக்கடி திருச்சிக்கு, தடை செய்யப்பட்ட லாட்டரிச் சீட்டுக்கள், பார்சல் போர்வையில் நீண்டகாலமாகக் கடத்தப்பட்டு வரும் நிலையில், தற்போது தான் முதன்முறையாகப் போலீசிடம் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சேலத்தில் வெளிநாட்டு லாட்டரி சீட்டு விற்ற 53 பேர் கைது[22]: லாட்டரி சீட்டு விற்ற 53 பேரை போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டத்தில், லாட்டரி சீட்டு விற்பனை கனஜோராக நடப்பதாக, போலீசுக்கு புகார்கள் வந்தன. போலீஸ் துணை கமிஷனர் ஜான் நிக்கல்சன் தலைமையில், போலீசார் திடீர் சோதனை நடத்தினர். 20 ஆயிரம் வெளிமாநில லாட்டரி சீட்டுக்கள், 49 ஆயிரத்து 880 ரூபாய், 23 மொபைல் போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. குபேரன் என்பவருக்கு சொந்தமான கடையில் 4,875 லாட்டரி சீட்டுக்கள், 31 ஆயிரத்து 885 ரூபாய் ரொக்க பணம், ஏழு மொபைல் போன் பறிமுதல் செய்யப்பட்டன. குபேரன் உட்பட 20 பேர் கைது செய்யப்பட்டனர். கைப்பற்றப்பட்ட லாட்டரி சீட்டுக்கள் அனைத்தும் அருணாசல பிரதேசம், சிக்கிம் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளன. சீட்டுகளை சேலம் வியாபாரிகள் பெங்களூரு, திருச்சி ஆகிய இடங்களில் இருந்து வாங்கி வந்து, சேலத்தில் விற்பனை செய்வதும் விசாரணையில் தெரிய வந்தது.

லாட்டரி சீட்டு விற்றால் குண்டர் சட்டம்: ராமதாஸ்[23]: “தமிழகத்தில் தடை செய்யப்பட்டுள்ள லாட்டரி சீட்டுக்களை விற்பவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்’ என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பா.ம.க., நிறுவனத் தலைவர் ராமதாஸ் சென்னையில் நேற்று அளித்த பேட்டி: கடந்த இரண்டு ஆண்டுகளாக தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. லாட்டரி சீட்டை பயந்து விற்கும் காலம் போய் பகிரங்கமாய் விற்கிறார்கள். வெளிமாநில லாட்டரி சீட்டுகள் இங்கு போலியாக அச்சடித்து விற்கப்படுகிறது. சில இடங்களில் போலீசாரின் துணையுடனும், பல இடங்களில் அரசியல்வாதிகள் துணையுடனும் லாட்டரி சீட்டுகள் விற்கப்படுகின்றன. லாட்டரி சீட்டு விற்பவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். அதே போல், பள்ளி, கல்லூரி அருகில் கஞ்சா விற்பனையும் நடந்து வருகிறது. இவ்வாறு ராமதாஸ் தெரிவித்தார்.

வேதபிரகாஷ்

29-03-2010


[1] SS-TV, SS-Lottery, Sur-Sangeet, etc., are owned by Santiago Martin. The ultra-modern offices at Chennai have been attraction to everybody, as everyday sleezy girls used come, while away time outside, before and after attending duty. Many sigh heavily when such girls go away in bikes with boys, who either used to come there to pick-up or come-and-go-together!

[2] டெலிவிஷன்–பாயின்ட், SS Music’s Santiago Martin in trouble over lottery business, http://www.televisionpoint.com/news2007/newsfullstory.php?id=1192264947

[3] In a very recent decision in Union of India Vs. Martin Lottery Agencies Ltd. (2009-VIL-01-SC-ST), the Supreme Court had occasion to deal with some fundamental principles relating to taxation of services.

http://www.business-standard.com/india/news/service-taxsalelottery-tickets/357677/

[4] http://www.tehelka.com/story_main43.asp?filename=Ne130210the_trader.asp

[5] Amongst those who welcomed the Chief Minister’s offer was, rather surprisingly, Subhash Chandra, the chairman of the Zee group. Ultra Entertainment Solutions Pvt. Ltd, a Zee group company, was awarded the licence in August 2002 by the State government to act as its agent in the online lottery business after an open tendering process.

[6] Last December, he visited Chennai to attend a meeting convened by the ruling DMK, which wanted him to be in the reception committee of World Tamil Conference scheduled for August. “It was one more attempt to gain acceptance among the political circles in the south,” a top DMK source told TEHELKA, adding: “Martin also has a direct connect with an influential Congress leader based in the national capital.

http://www.tehelka.com/story_main43.asp?filename=Ne130210the_trader.asp

[7] பிணராயி விஜயன் மார்டின் பெயரைப் பரிந்துரைத்தாகத் தெரிகிறது. P. Jayarajan prominent leader of the ruling CPI(M) general manager of Deshabhimani has reiterated the charges he made in the Kerala Assembly against the widely respected newspapersays sensationalism is the hallmark of yellow journalism and Mathrubhumi, by reporting that Deshabhimani has taken Rs 2 crores from a tainted lottery king Santiago Martin in the form of bonds, has invited the charges against it.

[8] Ramu Annamalai Ramasamy, Usman Fayaz

[9] Inlott Technologies Private Limited, InLott E Gaming Services Limited,

[10] Economic Times, Bhutan appoints Indian distributor for its paper lottery, 9 Dec 2007, 0830 hrs IST, PTI

http://economictimes.indiatimes.com/news/economy/foreign-trade/Bhutan-appoints-Indian-distributor-for-its-paper-lottery/articleshow/2608014.cms\

[11] Parvati Menon, The Lure f e-lottetry, fr more details, see here;

http://www.hinduonnet.com/fline/fl2023/stories/20031121001405000.htm

[12] The times of India News service, Other states copy Karnataka, join e-lottery race, Jul 31, 2001, 11.22pm IST

http://timesofindia.indiatimes.com/city/bangalore/Other-states-copy-Karnataka-join-e-lottery-race/articleshow/683183603.cms

[13]Writ against Nagaland’s Inlott lottery; 7 Oct, 2003, 2110 hrs IST,TNN;

Chief Justice N K Jain and Justice V G Sabahit of the Karnataka High Court on Tuesday issued notices to the Union and state governmen ts, Director of Lotteries among others following a petition filed by a city advocate seeking a ban on the sale and distribution of “Inlott lottery” tickets and prohibit the said lottery being run by the Nagaland government. S Umesh, in the petition contended that the Nagaland government had started Inlott lottery which is being run by Inlott Technology, Chennai. The tickets were being distributed and sold by three private traders. The lottery was unauthorised and illegal but the state government had not taken any action against it, the petitioner contended.

http://archives.infotech.indiatimes.com/articleshow/220372.cms

[14] D. S. Mathumathi, e-lottery bug bites top coporates, for more details, see here:

http://www.thehindubusinessline.com/2003/04/02/stories/2003040202620500.htm

[15] The Hindu, e-lottery banega crorepati, for more details, see here:

http://www.hinduonnet.com/thehindu/mp/2002/10/24/stories/2002102400300100.htm

[16] தினமலர், லாட்டரி சீட்டுக்கள் பறிமுதல் : துணை நடிகர் உட்பட இருவர் கைது: மார்ச் 29,2009,00:00  IST

http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=9419

[17] தினமணி, First Published : 26 Mar 2010 04:14:50 PM IST

[18] தினமலர், தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் அனுப்பி பெரும் மோசடி: துப்பாக்கியும் அனுப்பிய நபர் கைது, பிப்ரவரி 26,2010,00:00  IST

http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=16575

[19] தமிழகத்தில் சட்டவிரோத துப்பாக்கி கடத்தல், ரௌடிகள் தொடர்பு, அரசியல்வாதிகளின் ஆதரவு முதலியன பல பரிமாணங்களுடன் பிரச்சினை உருவெடுக்கிறது.

[20] தினமலர், சூடு பறக்கும் லாட்டரி சீட்டு விற்பனை :கண்டும் காணாத போலீசார் , பிப்ரவரி 22,2010,00:00  IST

http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?news_id=6686

[21] தினமலர், 2 கோடி ரூபாய்க்கு லாட்டரி சீட்டுக்கள் திருச்சி ரயில் நிலையத்தில் சிக்கின, ஜூன் 20,2009,00:00  IST

http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=10917

[22] தினமலர், லாட்டரி சீட்டு விற்ற 53 பேர் கைது:  ஆகஸ்ட் 22,2009,00:00  IST

http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=12272

[23] தினமலர், லாட்டரி சீட்டு விற்றால் குண்டர் சட்டம்: ராமதாஸ், மே 14,2008,00:00  IST,

http://www.dinamalar.com/Political_detail.asp?news_id=1493&ncat=TN&archive=1&showfrom=5/14/2008

இந்தி படிச்ச கமிஷனரு தமிழரானாரு! : தமிழ் படிச்ச மேயரோ இங்கிலீசுக்காரர் ஆனாரு!

ஜனவரி 30, 2010
இந்தி படிச்ச கமிஷனரு தமிழரானாரு! : தமிழ் படிச்ச மேயரோ இங்கிலீசுக்காரர் ஆனாரு!
ஜனவரி 30,2010,00:00  IST

http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?news_id=6447

Front page news and headlines today
கோவஒ மாநட்டு முரண்பாடுகள்: கோவை : உலகத்தமிழ் செம்மொழி மாநாடு, வரும் ஜூனில் கோவை மாநகரில் நடக்கிறது. மாநாடுக்கான ஆரம்ப வேலைகளும், மாநகரின் வளர்ச்சிப் பணிகளும் நடக்கின்றன. மாநாட்டில் பங்கேற்க வரும் வெளிநாட்டினரை வியக்க வைக்க, “எங்கும் தமிழ், எதிலும் தமிழ்’ என்ற முழங்கத்தை முன்னிறுத்தி, வர்த்தக நிறுவனங்கள், தொழில் கூடங்களின் பெயர் பலகைகளில் தமிழ் இடம்பெற, தமிழ் வளர்ச்சித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், மாநகர சாலைகளின் பெயர் பலகைகளிலும் தமிழ் இடம் பெற தீவிர முனைப்புடன் பணிகள் நடக்கின்றன. அரசு துறைகளின் அதிகாரிகள் மற்றும் கோவை மாநகராட்சி மேயர், ஆளுங்கட்சி பிரமுகர்களின் மேடை பேச்சும், சொல் வீச்சும் பெரும்பாலும் செம்மொழி மாநாடு பற்றியதாகவே உள்ளது.

தமிழும், ஆங்லிலமும், இந்தியும்! இவற்றை காணும் மக்கள், “தமிழ் மீது இவ்வளவு பற்றா’ என வியக்கின்றனர். மறுபுறமோ, நிலைமை வேறுமாதிரியாகவே உள்ளது. மேடை தோறும் உலகத்தமிழ் செம்மொழி மாநாடு குறித்து பேசும், கோவை மாநகராட்சி மேயர் வெங்கடாசலத்தின் காரில், அழகு தமிழுக்கு இடமில்லை. வாகனத்தின் முன்புற பலகையில் “மேயர், கோயம்புத்தூர் கார்ப்பரேஷன்’ என இங்கிலீசில் எழுதிப்போட்டு, தமிழை காணா மல் போக செய்துள்ளார்; இவர் தமிழர்(!).  அதே வேளையில், உத்தரபிரதேச மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவரும், கோவை மாநகராட்சி கமிஷனருமான அன்சுல் மிஸ்ரா தனது அரசு காரில், “ஆணையாளர், கோயம்புத்தூர் மாநகராட்சி’ என அழகு தமிழ் மிளிர பலகை வைத்துள்ளார்.  தமிழரல்லாத இவர், தமிழுக்கு உரிய அந்தஸ்தை வழங்கியுள்ளார். தமிழரான மேயர் வெங்கடாசலம், “இங்கிலீசு தான் சூப்பர்’ என்பதை போல, பெயர் பலகை வைத்துள்ளார். இவரும், உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டு மேடையில் நிச்சயம் இடம் பிடித்து அமர்ந்து, தமிழின் அருமை, பெருமை பற்றி பேசுவார் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை(!).

தினமலரின் செய்தி பிரமாதம்!

மக்கள்தாம் புரிந்துகொள்ளவேண்டும்!

அருமையான தலைப்பு!