தமிழர்–தமிழரல்லாதோர் பிரச்சினை உருவாக்கப் படக் கூடாது – சட்டத்தைக் கையில் எடுக்கக் கூடாது, கும்பல் கொலைக்கு நியாயம் கற்பிக்கக் கூடாது (2)
கும்பல் கொலை நடதுள்ள விவரங்கள்: திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி, பழவேற்காடு, பெரிய பாளையம், ஆரணி, ஊத்துக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் குழந்தை கடத்தல் பீதி நிலவுகிறது[1]. இதனால் ஊருக்குள் வரும் அப்பாவி வெளியாட்கள் தாக்கப்படும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது[2].
- 09-05-2018 அன்று, புலிகேட்டில், வீடில்லாத பாலத்தின் மீதுபடுத்துத் தூக்கிக் கொடிருந்த 45 வயது ஆளை அடித்து உதைத்து அந்த பாலத்திலிருந்தே தொங்கவிட்டனர். இது தொடர்பாக 16 பேர் கைது செய்யப்பட்டனர்.
- திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த தம்புகொட்டான்பாறை என்ற இடத்தில், அத்திமூர் முத்துமாரியம்மன் கோயிலுக்கு வழி கேட்டு காரில் வந்தவர்களை, குழந்தை கடத்தல் கும்பல் என்று சந்தேகித்துகிராமத்தினர் அடித்து உதைத்தனர்[3]. அதில் ருக்மணி, 55 / 65 வயது பெண்மணி கொல்லப்பட்டார்[4]. இதுதொடர்பாக, 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்[5]. போலீஸ் நடவடிக்கைக்கு பயந்து கிராம மக்கள் தலைமறைவாகியுள்ளனர்[6]. இப்பகுதிகளிலிருந்து, செம்மரம் கடத்தல் விவகாரத்தில், ஆந்திராவில் அதிகம் கைது செய்யப் படுவது கவனிக்கத்தக்கது.
- வேலூரை அடுத்த சிங்கிரிகோவில் என்ற இடத்தில் 09-05-2018 அன்று மாலையில் சாலையில் நடந்த சென்ற 30 வயது மதிக்கத்தக்க ஒரு வட-இந்திய வாலிபரை, குழந்தையை கடத்த வந்தவர் / திருடன் என நினைத்து, அடித்து உதைத்ததில், அவனும் மாண்டான்.
- கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள காட்டுமயிலூர் கிராமத்தில் 09-05-2018 அன்று இரவு சுற்றித்திரிந்த வடமாநில பெண் ஒருவரை, குழந்தை கடத்தல் கும்பலை சேர்ந்தவர் என கருதி கிராம மக்கள் மடக்கி பிடித்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த வேப்பூர் போலீசார், அந்த பெண்ணை அங்கிருந்து மீட்டு அழைத்துச்சென்று விசாரித்தபோது அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என தெரியவந்தது. பின்னர் அந்த பெண் சிகிச்சைக்காக விருத்தாசலம் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
போலீஸார், வடநாட்டவருக்கு எதிராக “வாட்ஸ்-அப்” தகவல்களை தவறாகப் பரப்புவதால் அவ்வாறான நிகழ்சிகள் ஏற்படுகின்றன என்கிறார்கள்[7].
செம்மரக்கடத்தல், அக்குற்றத்தில் ஈடுபடும் தமிழகள், அதை மறைக்க இந்த பிரச்சாரம் என்றால், குற்றங்கள் இன்னும் அதிகமாகும்: செம்மரக் கடத்தல் கைதுகளில் சம்பந்தப் பட்டிருப்பவர்கள், இப்பகுதிகளைச் சேர்ந்தவர் என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம். இதனால், தமிழகத்திற்கும், ஆந்திராவுக்கும் பிரச்சினை உண்டாக்க, திராவிட சித்தாந்திகள் திட்டமிட்டுள்ளார்களா என்றும் யோசிக்க வேண்டியுள்ளது. ஏனெனில், தெலுங்கர்ளுக்கரெதிராகவும் பிரச்சாரம் நடந்து வருகிறது. குழந்தை கடத்தல் தொடர்பான வதந்திகள் வட மாவட்டங்களை கலக்கி வருகின்றன. காஞ்சீபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் குழந்தைகளை கடத்தும் வடமாநில கும்பலின் நடமாட்டம் இருப்பதாக கடந்த சில நாட்களாக வதந்தி பரவி வருகிறது[8]. ‘வாட்ஸ்-அப்’, ‘முகநூல்’ போன்ற சமூக வலைத்தளங்கள் மூலம் பரவும் இதுபோன்ற வதந்திகளால், இதுவரை அப்பாவிகள் பலர் தாக்கப்பட்டு உள்ளனர்[9].குழந்தை கடத்தல் தொடர்பாக வாட்ஸ்-அப்பில் வதந்தி பரப்புவோர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஓராண்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.
எனது தாயை இப்படி அநியாயமாகச் சந்தேகித்துக் கொன்றவர்களுக்கு கடுமையான தண்டனை அளிக்கப்பட வேண்டும்[10]: குழந்தைக் கடத்தல் வதந்தியாலும், தவறான புரிதலாலும் கடந்த வாரம் பொதுமக்களால் அடித்துக் கொல்லப்பட்ட ருக்மிணியம்மாளின் மகன் 42 வயது கோபிநாத்தின் துயரம் எல்லையற்றது. கோபிநாத்தைப் பின் தொடர்ந்து வந்த அவரது 2 வயது மகன் தனது பாட்டியைக் காண வேண்டும் என்று அழுத காட்சி மேலும் உருக்கமாகவும், வேதனையாகவும் இருந்தது. கடந்த வாரம் செவ்வாய் மாலை வரை தனது பேரன், பேத்திகளுடன் சென்னையை அடுத்த பல்லாவரத்தில் இருந்த தனது மகன் வீட்டில் கதை பேசி மகிழ்ந்து சோறூட்டிக் கொண்டாடி இரவுகளில் அவர்களைத் தூங்க வைத்து தலை கோதிக் கொண்டிருந்த ஒரு வயதான பெண்மணியை அறிமுகமில்லாத கிராம மக்களில் சிலர் குழந்தைக் கடத்தல்காரி எனச் சந்தேகித்து சரமாரியாகத் தாக்கிக் கொன்ற விதம் காணொளியாகக் காணக் கிடைக்கிறது. அதைக் கண்டு துக்கத்திலும், ஆத்திரத்திலும் பொங்கியவராக அவரது மகன் கோபிநாத், ‘எனது தாயை இப்படி அநியாயமாகச் சந்தேகித்துக் கொன்றவர்களுக்கு கடுமையான தண்டனை அளிக்கப்பட வேண்டும், எது அதிகபட்ச தண்டனையோ அது அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்’ என்று அரற்றுவது ஒருவகையில் நியாயமானதாகக் கூடத் தோன்றுகிறது[11].
குழந்தைகள் கடத்தல், குழந்தைகள் காணாமல் போவது, கிடைப்பது-கிடைக்காதது மக்களுக்கு ஆரிவிக்கப் படவேண்டும்: குழந்தைகள் கடத்தல் சமாசாரம் பேசப்படாமல் இருந்தாலும், மாநிலக் குற்ற ஆவணக் காப்பகம் தரும் அதிகாரபூர்வக் கணக்குகள்படியே தமிழ்நாட்டில் சுமார் 2000 குழந்தைகள் காணாமல் போகின்றனர். “புள்ளப் பிடிக்கிற காரன்கள்” சுற்றிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அன்றாடம் ஐந்து குழந்தைகள் காணாமல் போகின்றனர் எனும்போது, அவ்விசயத்தை விவாதிக்காமல், நடிகைகளைப் பற்றி ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஒருவேளை, பெற்றோர், உற்றோர், மற்றோர் பதற்றமடைவர், பயப்படுவர், மாநிலம் பெயர் கெடும் என்று மறைக்கப் பார்க்க்கின்றனர் போலும். இவர்களில் எத்தனை பேர் மீட்கப்படுகின்றனர், மீட்க முடியாமல் போகிறார்கள், வழக்குகள் எப்படி முடிக்கப் படுகின்றன என்பதெல்லாம், பொது மக்களுக்குத் தெரியாது. பொது இடங்களில் பிச்சை எடுப்பது, கூலிவேலைகளுக்கு பயன்படுத்தப் படுவது, முதலியவைப்பற்றியும் விவரங்கள் தெரியப்படுத்துவதில்லை.
ஊடகங்கள் பழக்கும் பசிக்கே சமூக வலைதளங்கள் தீனி தயாரிக்கின்றன: தி.இந்து, “செய்தி வியாபாரத்துக்காக நாள் முழுவதும் மக்களிடம் பரபரப்பைப் பரப்பிவரும் ஊடகங்களுக்கும் இதில் முக்கியமான பங்கு இருக்கிறது[12]. ஊடகங்கள் பழக்கும் பசிக்கே சமூக வலைதளங்கள் தீனி தயாரிக்கின்றன[13]. தன்னுடைய பன்மைத்துவக் குணத்தால் உலகின் பல்வேறு திசைகளிலும் பரவியிருக்கும் தமிழ்ச் சமூகத்தை இன்று கொஞ்சம் கொஞ்சமாக இனவெறி நோய்க்கிருமிகள் பீடிக்கத் தொடங்குவது மிக அபாயகரமானது. உடனடியாக முடிவுகட்டப்பட வேண்டியது!,” என்பதில் உண்மை இருக்கிறது. தி.இந்துவிலா, இது வந்துள்ளது என்று ஆச்சரியமாக இருந்தாலும், உண்மை என்பதால், கருத்தைப் பாராட்ட வேண்டியிருக்கிறது. ஆனால், ஊடகங்கள் அந்த அளவுக்கு தாழ்ந்து விட்டனவா என்ற கேள்வியும் எழுகின்றது.
© வேதபிரகாஷ்
17-05-2018
[1] மாலைமலர், குழந்தை கடத்தல் பீதி– மனநோயாளி கொலையில் மேலும் 2 பேர் கைது, பதிவு: மே 14, 2018 13:09
[2] https://www.maalaimalar.com/News/District/2018/05/14130903/1162890/Two-more-people-have-been-arrested-in-Mental-patient.vpf
[3] தி.இந்து, குழந்தை கடத்தல் கும்பல் என்று சந்தேகித்து தாக்குதல்; மூதாட்டி கொலை வழக்கில் 23 பேர் கைது, திருவண்ணாமலை, Published : 11 May 2018 08:01 IST; Updated : 11 May 2018 08:01 IST
[4] http://tamil.thehindu.com/tamilnadu/article23845548.ece
[5] மாலைமலர், குழந்தை கடத்தல் பீதியில் மூதாட்டி கொலை – கைது நடவடிக்கைக்கு பயந்து 11 கிராம மக்கள் ஓட்டம், பதிவு: மே 11, 2018 14:12.
[6] https://www.maalaimalar.com/News/District/2018/05/11141250/1162299/child-kidnapping-rumor-11-village-people-escaped-police.vpf
[7] The police say the trigger for the lynchings could be a rash of xenophobic messages circulating on WhatsApp warning that “north Indians” are looking to kidnap children in Tamil Nadu.
http://www.thehindu.com/opinion/editorial/loss-of-innocents/article23857175.ece
[8] ஐ.இ.தமிழ், குழந்தை கடத்தல் வதந்தி : வட மாவட்டங்களை உலுக்கும் கொலைகள், போலீஸ் எச்சரிக்கை, WebDesk, May 11, 2018
[9] https://www.ietamil.com/tamilnadu/child-trafficking-rumours-murders-police-warning/
[10] தினமணி, என் தாயைக் கொன்றவர்களுக்கு உச்சபட்ச தண்டனை அளியுங்கள்! ருக்மிணியம்மாளின் மகன் உருக்கமான வேண்டுகோள்!, By RKV | Published on : 14th May 2018 01:09 PM
[11] http://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2018/may/14/give-maximum-punishment-to-my-mothers-killers–gopinath-so-rukmini-2919581.html
[12] தி.இந்து, அப்பாவிகள் படுகொலைக்கு முடிவுகட்டப்பட வேண்டும்!, Published : 16 May 2018 08:51 IST; Updated : 16 May 2018 12:44 IST
[13] http://tamil.thehindu.com/opinion/editorial/article23899718.ece