Posts Tagged ‘காந்தி சிலை’

சிலை உடைத்த நாத்திகர்களுக்கு சிலை வைக்கும் கலாச்சாரத்தை உண்டாக்கிய திராவிடத்துவம்! ஸ்டாலின் – அண்ணாசாலையில் கருணாநிதி சிலை நிச்சயம் அமைக்கப்படும் (2)

செப்ரெம்பர் 2, 2021

சிலை உடைத்த நாத்திகர்களுக்கு சிலை வைக்கும் கலாச்சாரத்தை உண்டாக்கிய திராவிடத்துவம்! ஸ்டாலின்அண்ணாசாலையில் கருணாநிதி சிலை நிச்சயம் அமைக்கப்படும் (2)

ஸ்டாலின்அண்ணாசாலையில் கருணாநிதி சிலை நிச்சயம் அமைக்கப்படும்: அப்போது எழுந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அண்மையில் திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி தன்னை சந்தித்த போது இந்த கோரிக்கை தொடர்பாக தன்னிடம் வலியுறுத்துயதாக தெரிவித்தார்[1]. பெரியார் கட்டளையிட்டு திராவிடர் கழகம் வைத்த சிலையை மீண்டும் நிறுவ வேண்டுமென கி.வீரமணி கோரிக்கை வைத்ததையும் முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்[2]. பொதுவான இடங்களில் போக்குவரத்திற்கு இடையூறாக சிலை வைக்க கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை தான் சுட்டிக் காட்டியதாக கூறிய முதல்வர், ஏற்கனவே நீதிமன்றத்தில் அனுமதி பெற்றுத்தான் சிலை வைக்கப்பட்டதாகவும் எனவே மீண்டும் அந்த இடத்தில் சிலை நிறுவ எந்த பிரச்சினையும் இல்லை என கி.வீரமணி கூறியதாகவும் முதல்வர் தெரிவித்தார்[3]. அண்ணா சாலையில் பெரியார், அண்ணா, எம்ஜிஆர் ஆகியோருக்கு சிலைகள் இருப்பதை போன்று கருணாநிதி சிலையை அதே இடத்தில் நிறுவ வேண்டுமென கி.வீரமணி மீண்டும் தன்னிடம் வலியுறுத்தியதாக கூறிய முதலமைச்சர், இது தொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து, அண்ணாசாலையில் கருணாநிதி சிலை நிச்சயம் அமைக்கப்படும் என கூறினார்[4].

மேற்காணும் பேச்சுகளில் உள்ள போலித் தனம், உண்மையற்ற நிலைகளுக்கு விளக்கம்:

  1. பலர் கருணாநிதியிடம், அவ்வாறு சிலை வைக்க வேண்டாம், நல்லதல்ல என்று அறிவுரை கூறினர்.
  2. ஒருநிலையில், குன்றக்குடியும் எடுத்துக் காட்டினார், ஒப்புக் கொள்ளவில்லை, ஆனால், சிலை திறப்பு விழாவில், அவரையே உபயோகப் படுத்திக் கொண்டனர்.
  3. வீரமணி பிடிவாதமாக இருந்தார். எல்லா வாதங்களையும் எதிர்க்க வேண்டுமானால், சிலை வைத்தே ஆகவேண்டும் என்று உசுப்பினார்.
  4. மவுண்ட் ரோடில் பெரியார், அண்ணா என்று சிலைகள் வரிசையாக இருக்கும் போது, அடுத்தது, கருணாநிதி சிலை இருக்க வேண்டும், என்று பகுத்தறிவுடன் எடுத்துக் காட்டினார்.
  5. கருணாநிதியின் எம்ஜிஆரின் மீதான வன்மப் பேச்சுகள் தான், அவரது ரசிகர்கள், தொண்டர்கள், முதலியோரை எதிர்மறை விளைவுக்குத் தள்ளியது.
  6. கருணாநிதியின் இத்தகைய செயல்களால் தான், 31-01-1976ல் ஜனாதிபதியா ஆட்சி நீக்க செய்யப் பட்டு, 31-01-1976 முதல் 30-06-1977 வரை ஜனாதிபதி ஆட்சி நடந்தது.
  7. 30-06-1977 அன்று எம்ஜிஅர் ஆட்சிக்கு வந்தார். நடந்த தேர்தலில் கருணாநிதி-திமுக படுதோல்வி அடைந்தது.
  8. 24-12-1987 அன்று எம்ஜிஆர் இறந்தாலும், 12-05-1996 வரை திமுக ஆட்சி நடந்தது.
  9. அதாவது, 17-02-1980 முதல் 13-05-1996 வரை, கருணாநிதி ஆட்சியில் இல்லை. 16 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சியில்லாமல் தான் இருந்தார். இவரது “பெரியார் விக்கிரகம்,” பெரியார் அருள், ஆசீர்வாதம், மகிமை முதலியவை வேலை செய்யவில்லை.
  10. அதை அவர், “அஞ்ஞான வாசம்” என்றாலும், அ. கணேசன் போன்ற ஜோதிடர்கள் உண்மையினை சொல்வர். இவர் நடத்திய பரிகார ஹோமங்கள், பூஜைகள் அவர் வீட்டிலிருப்பவர்களுக்குத் தெரியும்.

2018 – பெரியார் இருந்திருந்தால் ஏன் சிலை வைக்கிறீர்கள் எனக் கேட்டிருப்பார்கமல் ஹஸன்: தமிழகத்தில் பெரியார் வாழ்ந்த காலத்தில் அவரின் சிந்தனை, கருத்துக்களுக்கு எதிராக இருந்தவர்களின் செயல்பாடுகள் இன்றும் தொடர்கிறது என்று சொல்வதில்லை தவறொன்றும் இல்லை. சிலை வழிபாடுகளுக்கு எதிராக பேசிய பெரியாருக்கு எதற்காக சிலைகள் என்ற கேள்விகள் எப்பொழுதும் முன்வைக்கப்படும். அதற்கான பதிலை பெரியாரே அவர் வாழ்ந்த காலத்தில் கூறி விட்டு சென்றுள்ளார். என்றெல்லாம், பெரியாரிஸ்டுகள் வாதம் செய்து வருகிறார்கள். 2018-ல் பெரியார் சிலை உடைப்பு பற்றி பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கருத்து தெரிவித்த போது தமிழகத்தில் அவருக்கு எதிராக கண்டனங்கள் எழுந்தன. அந்நேரத்தில், நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரான கமல்ஹாசன் “சிலைகள் வைப்பதில் வித்தியாசமான கருத்துடையவன் நான். ஆனால், அதை  உடைப்பது கேவலமான செயல். பெரியார் இருந்திருந்தால் ஏன் சிலை வைக்கிறீர்கள் எனக் கேட்டிருப்பார்,” என ஈரோட்டில் பேசி இருந்தார். இது திராவிடத்துவவாதிகளின் முகத்திரைகளைக் கிழித்து விட்டது. இதனால், மறுபடியும், அதற்கு விளக்கம் கொடுத்தனர்.

விடுதலை ஆதாரம் என்று பழையக் கதையை சொன்னது: 29-07-1944 அன்று கடலூரில் பெரியாரின் மீது ஒன்றை செருப்பு வீசப்பட்ட சம்பவம் நிகழ்ந்தது. தன் மீது விழுந்த ஒற்றை செருப்பு தனக்கும் பயன்படாது, வீசியவருக்கும் பயன்பாடாது என்பதால் அதன் மற்றொரு ஜோடி செருப்பையும் பெற்றுக் கொண்டார் பெரியார் என்ற தகவல் விடுதலை நாளிலில் இடம்பெற்று இருக்கிறது. இதற்கு பின், அதே இடத்தில் 28 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு 1972-ல்  கருணாநிதி ஆட்சியில் கடலூர் மக்களால் பெரியாருக்கு சிலை திறக்கப்படுகிறது. கருணாநிதி திறந்து வைத்த சிலை திறப்பு நிகழ்சிக்கு முன்னிலை வகித்தார் ஈ.வெ.ரா.பெரியார். சிலைகள் வைப்பதற்கு பெரியாரே எதிர்ப்பார் என கமல்ஹாசன் கூறியது தவறான தகவல். சிலைகள் வைப்பதற்கு பெரியார் எதிர்ப்பு தெரிவித்து இருக்கமாட்டார். அதேபோன்று, ஏன் உயிருடன் இருந்தவர் தனக்கு தானே சிலை வைத்துக் கொண்டார் என சிலரும் கேள்வி கேட்பதுண்டு. ஏ.ஆர். வெங்கடாசலபதி போன்ற சரித்திராசிரியர்களும், இதைப் பற்றியெல்லாம் ஆராய்ச்சி செய்வதில்லை. கருணாந்தம், எங்கேயாவது உட்கார்ந்து, தூங்கிக் கொண்டிருப்பார். சுப.வீரப் பாண்டியனும் கண்டுகொள்ளமட்டார். விடுதலை ராஜேந்திரன், கொளத்தூர் மணி பற்றி சொல்லவேண்டிய அவசியம் இல்லை.

உயிரோடு இருப்பவர்களுக்கு சிலை வைக்கலாம் என்று நியாயப் படுத்தி வாதித்தது: பெரியார் தனக்கு தானே சிலை வைத்துக் கொள்ளவில்லை. சிலைகள் மக்கள் மத்தியில் பகுத்தறிவு சிந்தனையை பிரச்சாரமாக மாற்றுவதாக இருக்க வேண்டும் என்பதே பெரியாரின் நோக்கம். சிலை என்பது வழிபாட்டுக்குரியது அல்ல. பயன்பாட்டுக்கு உரியது என்று கூறியுள்ளார். சிலைகளே பகுத்தறிவு பிரச்சாரத்தை செய்யும் என அவர் நினைத்தார். “பிற்காலத்தில் ராமசாமினு ஒருத்தன் இருந்தான். அவன் பகுத்தறிவு பிரச்சாரம் பண்ணிக்கிட்டு இருந்தானு பேசுவாங்க. அதுக்காக தான் இந்த சிலை,” என பெரியார் சிலை திறப்பு நிகழ்ச்சியில் பேசியதாக மின்னம்பலம் செய்தியில் வெளியாகி இருக்கிறது. விடுதலை நாளிதழில், உயிருடன் இருப்பவருக்கு சிலை வைப்பது தவறில்லை என்றே வெளிப்படுத்தி உள்ளனர். சென்னை சர்வகலாசாலை வைஸ் சான்ஸ்லர் டாக்டர் லட்சுமணசாமி, ஓய்வு பெற்ற சென்னை பிரதம நீதிபதி டாக்டர் ராஜாமன்னார், கர்மவீரர் காமராஜர் என பலருக்கும் உயிருடன் இருக்கும் போதே சிலை வைக்கப்பட்டது என விடுதலை நாளிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. பெரியார் தன் பிறந்தநாள், சிலை திறப்பு, படத்திறப்பு போன்றவற்றை இயக்கத்தின் பிரச்சார கருவியாக பயன்படுத்தினார். அண்ணாவிற்கும் அவர் வாழ்ந்த காலத்தில் படத்திறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று உள்ளன என்கிறார்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள்.

திகதிமுகவினரின் சமீபத்தைய சரித்திர உரிமை கோரிக்கைகள் சரிபார்க்கவேண்டும்: மேற்காணும் வாதங்கள், அவ்வாதங்களுக்கான ஆதாரங்கள், அவர்களுடைது தான். விடுதலையில் வந்த-வரும் செய்திகளை சரிபார்க்க, வேறொரு ஆவணம் அல்லது மூலத்தை வைத்து பரிசோதிக்க முயற்சிகளை செய்வது கிடையாது. ஒருதலைப் பட்சமாகவே, இத்தகைய வாத-விவாதங்கள், செய்திகளை வெளியிடுதல், ஏன் புத்தகங்கள் எழுதுவது, ஆராய்ச்சி செய்வது என்று நடந்து வருகின்றன. ஒரு சிலரே, ஈரோடு, பவானி, திருச்சி, கடலூர் என்று சென்று, அங்கிருக்கும் 60-90 வயதான முதியவர்களிடம் பேசி, விவரங்களை சேகரித்து வருகின்றனர். அவற்றில், இவர்களின் கூற்று, எந்த அளவுக்கு ஒருதலைப் பட்சமாக இருக்கிறது, ஏன் உண்மைக்குப் புறம்பாகவும் இருக்கிறது என்பது தெரிகிறது. அதனால் தான், ஈவேரா பிள்ளையார் உடைப்பு, ஜின்னாவுடனான சகவாசம், ஆங்கிலேயரிடம் சரண்டர் ஆனது, உனெஸ்கோ விருது போன்றவை எடுத்தும் காட்டி வருகின்றன.

அண்ணாசாலையில் கருணாநிதி சிலை நிச்சயம் அமைக்கப்படும் என கூறினார்: ஸ்டாலின், கருணாநிதியில் மகன், முதலமைச்சர் இவ்வாறு கூறியப் பிறகு, யார் எதிர்க்கப் போகிறார்கள், எதிர்க்க முடியும். எந்த நீதிபதியும் மாறாக, தீர்ப்பும் கொடுக்க முடியாது. முதலமைச்சர் தீர்மானமாக, உறுதியாக சொல்லியாகி விட்டது, “அண்ணாசாலையில் கருணாநிதி சிலை நிச்சயம் அமைக்கப்படும்.” எனவே, இனி, வீரமணி வேகமாக வேலை செய்ய ஆரம்பித்து விடுவார். 2024 பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக, சோனியா காந்தி போன்றோரை வரவழைத்து, சிலைத் திறப்பு விழா பிரம்மாண்டமாக நடத்தப் படும். மற்ற எதிர்கட்சி தலைவர்களும் இருப்பார்கள். கடற்கரையில், கூட்டணி தேர்தல் பிரச்சாரக் கூட்டமும் நடைபெறும். அதிமுக-பாஜக எதிர்ப்பு முழுமையாக வெளிப்படும்.

© வேதபிரகாஷ்

02-09-2021


[1] மாலைமலர், அண்ணா சாலையில் கருணாநிதிக்கு சிலைமு..ஸ்டாலின் அறிவிப்பு, பதிவு: செப்டம்பர் 01, 2021 13:05 ISTமாற்றம்: செப்டம்பர் 01, 2021 15:20 IST.

[2] https://www.maalaimalar.com/news/topnews/2021/09/01130550/2973854/Tamil-News-MK-Stalin-announced-Karunanidhi-statue.vpf

[3] தினமலர், அண்ணாசாலையில் கருணாநிதிக்கு சிலை: முதல்வர் அறிவிப்பு, Updated : செப் 01, 2021  13:41 |  Added : செப் 01, 2021  13:39.

[4] https://www.dinamalar.com/news_detail.asp?id=2835053

காந்தி சிலை உடைப்பு இங்கே, காந்தியின் பெயரில் மாவட்டம் அங்கே!

ஜனவரி 27, 2010

காந்தி சிலை உடைப்பு ஏன்?

தமிழகத்தில் தொடர்ந்து காந்தி சிலைகள் உடைக்கப் படுவது மிகவும் கேவலமக இருக்கிறது.

26-01-2010: சென்னை: சென்னை அருகே மகாதமா காந்தி சிலை தகர்த்து சேதப்படுத்தப்பட்ட செயலுக்கு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தேசப்பிதா அண்ணல் மகாத்மா காந்திஜி திருவுருவச்சிலை திருவொற்றியூரில் நேற்று சேதப்படுத்தப்பட்டுள்ளது. இக்கொடியச் செயலுக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
குடியரசு கொண்டாட்ட நாளான நேற்று அதற்காகவே தன் உடல், பொருள், ஆவி அத்தனையும் தியாகம் செய்த தேசப்பிதாவின் திருவுருவச் சிலை மக்கள் நடமாட்டம் மிகுந்த அந்நகரின் காலடிப்பேட்டை மார்க்கெட் அருகிலேயே களங்கப்படுத்தப்பட்டுள்ளது. அதைக் கண்டதும் கொதித்தெழுந்த ஏராளமான காங்கிரஸ் சகோதர, சகோதரிகள் திருவொற்றியூர் நகர காங்கிரஸ் தலைவர் சுகுமார் தலைமையில் திரண்டனர். அண்ணலின் திருவுருவச் சிலையை ஊனப்படுத்திய சமூக விரோதிகளை உடனே கண்டுபிடித்து சிறையிலடைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தவாறு மறியலில் ஈடுபட்டனர்.  இதுவரை குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்காக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மனக் கொதிப்போடு பொறுமை காத்து வரும் காங்கிரஸ் சகோதர, சகோதரிகள் மத்தியில் அமைதியின்மை நிலவுகிறது. எனவே காவல்துறையினர் காலதாமதமின்றி தேசப்பிதாவின் திருவுருவச் சிலையை ஊனப்படுத்திய சமூக விரோதிகளை கண்டு பிடித்து தண்டிக்க வேண்டும்.  ஏற்கனவே இது போன்று தேசத் தலைவர்களின் திருவுருவப்படங்கள், சிலைகள் களங்கப்படுத்தப்பட்டு வந்துள்ளன. இனியும் தேச விரோதச் செயலுக்குரிய இக்குற்றம் தொடரா வண்ணம் காவல்துறை முன்னெச்சரிக்கை எடுக்க வேண்டுகிறேன் என்று கூறியுள்ளார்.

3-11-1957 அன்று தஞ்சையில் எடைக்குஎடைவெள்ளி நாணயம் வழங்கிய மாநாட்டில் பெரியார் ஈ.வெ.ரா. சொற்பொழிவு : (விடுதலை 8-11-1957): இதில் பெரியார் காந்தி சிலையை உடை என்று தூண்டியிருக்கிறார்.

ஓமலூரில் காந்தி சிலை உடைப்பு
மே 19,2009,00:00  IST

http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=10210

Important incidents and happenings in and around the worldஓமலூர் : ஓமலூர் அருகே நள்ளிரவில் காந்தி சிலை உடைக்கப்பட்டதை கண்டித்து, காங்., கட்சியினர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டதால் பதட்டம் ஏற்பட்டது.

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த ஆர்.சி.செட்டிப்பட்டியில், 1974ல் அப்போதைய காங்கிரஸ் கமிட்டி சார்பில் 6 அடி உயரத்தில் பீடத்துடன் கூடிய காந்தி சிலை அமைக்கப்பட்டது. நேற்று முன்தினம் நள்ளிரவு மர்ம நபர்கள் சிலர், ஆர்.சி.செட்டிப்பட்டியில் அமைக்கப்பட்டிருந்த காந்தி சிலையை கற்களால் அடித்து, உடைத்து விட்டு, தப்பி ஓடி விட்டனர். நேற்று அதிகாலை இதைப் பார்த்த பொதுமக்கள், ஓமலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். மீதி இருந்த காந்தி சிலையை போலீசார் மீட்டு ஓமலூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு எடுத்து செல்ல முயன்றனர்.

இதை அறிந்த காங்., கட்சியின் மாநில செயலர் சுசீந்திரகுமார் தலைமையில் 50க்கும் மேற்பட்ட காங்., கட்சியினர் ஆர்.சி.செட்டிப்பட்டி பகுதியில் குவிந்து காந்தி சிலையை உடைத்தவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கோஷம் எழுப்பினர். பின், சேலம்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஓமலூர் பை-பாஸ் ரோடு அருகே திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பதட்டம் ஏற்பட்டது. போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஒரு மணி நேர மறியல் போராட்டத்தால் சேலம்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஹூஸ்டன் மாகாணத்தில் ஒரு பகுதிக்கு மகாத்மா காந்தி பெயர்!

வாஷிங்டன்: அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரின் தென் மேற்கு பகுதிக்கு மகாத்மா காந்தியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. காந்தியின் 141வது பிறந்த ஆண்டையொட்டி இந்த கெளரவம் தரப்பட்டுள்ளது. தெற்காசியர்கள் குறிப்பாக இந்தியர்கள் அதிகம் வசிக்கும் ஹில்கிராப்ட் மாவட்டத்திற்குத்தான் காந்தியின் பெயர் சூட்டப்படுகிறது. இந்த மாதம் முதல் இந்த பெயர் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்தது. இதற்கான அறிவிப்பை ஹில்கிராப்ட் மேயர் அனிஸ் பார்க்கர் அறிவித்தார். அப்போது இந்திய துணைத் தூதர் சஞ்சீவ் அரோரா உடன் இருந்தார். ஹில்கிராப்ட் பகுதி மினி இந்தியா என்று அழைக்கப்படுகிது. இங்குள்ள இந்திய கலாச்சார மையம்தான், காந்தியின் பெயரை இந்தப் பகுதிக்கு சூட்ட கடுமையாக முயற்சித்து வந்தது. கடந்த 7 ஆண்டு கால முயற்சியின் விளைவாக தற்போது காந்தி பெயர் இங்கு சூட்டப்பட்டுள்ளது.  ஹில்கிராப்ட்டுக்கு காந்தி பெயர் சூட்டப்பட்டிருப்பதை அங்குள்ள இந்தியர்கள் உற்சாகத்துடன் வரவேற்றுள்ளனர். இங்கு நகைக் கடை பிசினஸில் ஈடுபட்டுள்ள உஷா என்பவர் கூறுகையில், இது இந்தியர்களை அங்கீகரித்துள்ளது போல உள்ளது. பெருமையாக இருக்கிறது என்றார்.