Posts Tagged ‘கருப்பு’

தமிழ், தமிழகம், தமிழ்நாடு: நீட் தேர்வு, காவிரிப் பிரச்சினை, ஐபிஎல் என்று மோடி-எதிர்ப்பு வேலை செய்யும் விதம் [3]

ஏப்ரல் 20, 2018

தமிழ், தமிழகம், தமிழ்நாடு: நீட் தேர்வு, காவிரிப் பிரச்சினை, ஐபிஎல் என்று மோடிஎதிர்ப்பு வேலை செய்யும் விதம் [3]

Shoe- Tamilian threw chappals 10-04-2018

நீட் தேர்வு, காவிரிப் பிரச்சினை, ஐபிஎல் என்று மோடிஎதிர்ப்பு வேலை செய்யும் விதம்: இன்றைய வேலை தேடும் விசயத்தில் “சந்தை-வேலைமுறை” [Job-market] என்றது, சந்தை பொருளாதாரத்தில் பிரபலமாகி சரத்தாகி விட்டது. அகில-உலக பொருளாதாரத் தேவைகளுக்கு ஏற்றப்படி, படிப்பு-தொழிற்முறை பயிற்சிகள் மாற்றியமைக்கப் பட வேண்டியுள்ளது. அயல்நாட்டு கம்பெனிகளுக்காக வேலைசெய்வது, அவர்களது தேவைகளுக்கு ஏற்றப்படி, சேவை-உற்பத்திகள் மாற்றியமைக்கப் பட வேண்டியதாயிற்று. அந்நிலையில், மருத்துவப் படிப்பு தேசிய அளவில் முறைப்படுத்தும் நிலையில் நீட் தேர்வு அறிமுகப்படுத்தப் பட்டது. ஆனால், அதன் தராதரத்தை அறிந்து கொள்ளாமல், குறுகிய “தமிழ், தமிழகம், தமிழ்நாடு” சித்தாந்தத்தில் எதிர்ப்பு அரம்பித்துள்ளது. ஆனால், அதே நேரத்தில் நீட் தேர்விற்கான பயிற்சி வகுப்புகள் அதிரடியாக நடந்து வருகின்றன. அவற்றிற்கான லட்சக் கணக்கில் கொடுக்கப் படும் விளம்பரங்களை, எதிர்க்கும் டிவி-மற்ற மின்னணு-அச்சு ஊடகங்களில் வெளி வந்து கொண்டிருக்கின்றன. அந்நிலையில் தான் காவிரிப் பிரச்சினையாளர்கள், ஐபிஎல் மீது திரும்பினர்.

CSK fas beaten -Anti-national leaders- IPL match-2

சேப்பாக்கம் மைதானம் தாக்கப் பட்டது: 10-04-2018 அன்று இதே கூட்டங்கள் கேவலமாக நடந்து கொண்டதை உலகமே பார்த்து வெறுத்தது. கிரிக்கெட்டை விரும்பும் சேப்பாக்கமா இவ்வளவு அநாகரிகமாக நடந்து கொண்டனர் என்று, கிரிக்கெட் ரசிகர்கள் வெட்கப்பட்டனர். 10ம் தேதி ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற்றபோது, நடந்த போராட்டத்தில், போலீசாரை தாக்கியதாக சீமான் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது[1]. கொலை முயற்சி வழக்கில் சீமான் கைது செய்யப்பட்டுள்ளாரா என்ற சந்தேகம் ஏற்பட்டது. சென்னையில். இந்த நிலையில், சீமான் தங்க வைக்கப்பட்டுள்ள பல்லாவரம் ஸ்ரீகிருஷ்ணா கல்யாண மண்டபத்தை சுற்றி அதிரடிப்படை குவிக்கப்பட்டது. சீமான் எந்த நேரத்திலும் கைது செய்யப்படுவார் என்று தெரிகிறது என்று தமிழ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன[2]. ஆனால், அதற்குள் 12-04-2018 அன்று கலாட்டா செய்ய தயாராகி விட்டனர். அண்ணா அறிவாலயத்தில் கூட்டப்பட்ட அனைத்துக் கட்சிகளின் (9 கட்சிகள்) கூட்டத்தில் காவிரி நதி நீர் உரிமை குறித்து முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  1. ஸ்டாலின், செயல் தலைவர், திராவிட முன்னேற்றக் கழகம்.
  2. கி.வீரமணி, தலைவர், திராவிடர் கழகம்.
  3. சு.திருநாவுக்கரசர், தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி.
  4. கே.பாலகிருஷ்ணன், தமிழ்நாடு மாநில செயலாளர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
  5. ஆர்.முத்தரசன், தமிழ்நாடு மாநில செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
  6. கே.எம். காதர்மொகைதீன், தலைவர், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்
  7. தொல்.திருமாவளவன், தலைவர், விடுதலை சிறுத்தைகள் கட்சி
  8. எச். எம். ஜவாஹிருல்லா தலைவர், மனித நேய மக்கள் கட்சி.
  9. நாம் தமிழர் கட்சி

ஆம் ஆத்மி, மற்ற உதிரி கட்சிகளும் கலந்து கொண்டது, ஊடக செய்திகள் மூலம் தெரிகின்றது. அதாவது, அவ்வப்போது, அந்தந்த பிரச்சினைகளை வைத்துக் கொண்டு கலாட்டா செய்வது, பிற்கு மறந்து விடுவது என்ற நிலையில் போராட்டங்கள் நடப்பதும் தெரிகிறது.

CSK fas beaten -Anti-national leaders- IPL match-4

மோடிக்கு கருப்புக் கொடி ஆர்பாட்டம்: காவிரி நீர் உரிமையில் தமிழ் நாட்டை வஞ்சிக்கும் மத்திய அரசைக் கண்டிக்கும் வகையில் தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடிக்குக் கறுப்புக் கொடி காட்டுவது என்று அக் கூட்டத்தில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட தீர் மானங்களுள் ஒன்றாகும்[3]. அந்த வகையில் 12.4.2018 அன்று சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடிக்குக் கருப்புக் கொடி காட்டுவதற்கு தயாராயின[4]. திருவிடந்தையில் நடக்கும் மத்திய பாதுகாப்புத்துறையின் ராணுவக் கண்காட்சியில் கலந்துகொள்வதற்காக 12-04-2018 அன்று பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் பிரதமர் மோடி, சென்னை விமானநிலையம் வந்திறங்கினார்[5]. உள்நாட்டு முனைய வருகை பகுதியில் கருப்புக் கொடி ஏந்தி போராட்டம் நடத்திய இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர், வெற்றிமாறன், ராம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்[6]. அப்பொழுது, அவர்கள் பேசிய பேச்சு, அமிர் வெறி பிடித்தது போன்று நடந்து கொண்ட விதம் முதலியன விசித்திரமாக இருந்தது. மேலும் சுற்றியிருந்தவர்களில் பெரும்பாலோர் முகமதியர் என்பதும் நன்றாகவே தெரிந்தது. ஆகம் இவர்கள் எல்லோரும் இவ்வாறு ஒன்று பட்டுள்ளது காவிரிப் பிரச்சினைக்கா அல்லது மோடிக்கு எதிர்ப்பு தெரிவிப்பிற்கா என்ற கேள்வியும் எழுகின்றது. காவிரிப் பிரச்சினை போர்வையில் மோடி-எதிர்ப்பு பிரதானமாக அரங்கேறியுள்ளது. அதுதான் அரசியல் நோக்கக் காட்டுகிறது. அதன்படியே, கைதானவர்கள், வழக்கம் போல விடுதலை செய்யப்பட்டனர்[7]. பிறகு, வழக்குப் பதிவுகள், முந்தைய கைதுகள் என்னவாயிற்று என்று தெரியவில்லை[8].

Ameer anti-MODI ranta

சீமான் பேச்சு, நடவடிக்கை, புராணம் முதலியவற்றை தினம்தினம் அதிகமாக வெளியிட்டதுதமிழ்.ஒன்.இந்தியாதான்: “அதிமுக நடத்திய உண்ணாவிரதத்தால் என்ன பயன் கிடைத்துவிட்டது. ஐபிஎல் விளையாட்டை நடத்தக் கூடாது, தமிழகம் கொந்தளிக்கும் இந்த நேரத்தில் ஐபிஎல் எங்களுக்கு வேண்டாம். மீறி ஐபிஎல் போட்டிகளை நடத்தினால் எங்களின் எதிர்ப்பை எந்த விதத்தில் வெளிக்காட்ட வேண்டுமோ அப்படி வெளிக்காட்டுவோம்” என்று சீமான் சொன்னது,[9]தீர்மானத்துடன் அவ்வேலையில் இறங்கப் போவது தெரிந்தது. “காங்கிரஸ் கூட்டணியில் 10 ஆண்டுகள் இருந்த போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தற்போது திமுக போராடுவது வேடிக்கையாக உள்ளது”என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்[10]. பாஜக ஆட்சியிலும் வரவில்லை. அதிமுக பெயருக்கு உண்ணாவிரதம் நடத்தி உள்ளது[11]. மெரினாவில் மட்டும் போராடுவதற்கு அனுமதி கொடுத்தால் உலகமே திரும்பிப் பார்க்கும் வகையில் போராட்டம் நடத்தி காவிரி மேலாண்மை வாரியத்தை பெறுவோம்[12].  அதாவது கலாட்டா செய்ய வேண்டும் என்ற எண்ணம் தான் மேலோங்கி இருந்தது என்ற ஒப்புதல் வெளிப்படுகிறது.

© வேதபிரகாஷ்

19-04-2018

CSK gave victory, Tamilian threw chappals 10-04-2018

[1] தமிழ்.ஒன்.இந்தியா, கொலை முயற்சி வழக்கில் சீமான் கைது? சீமான் தங்க வைக்கப்பட்டுள்ள மண்டபத்தில் அதிரடி படை குவிப்பு, Posted By: Veera Kumar Updated: Thursday, April 12, 2018, 16:35 [IST]

[2] https://tamil.oneindia.com/news/tamilnadu/seeman-may-be-get-arrested-317054.html

[3] விடுதலை, தமிழ்நாட்டு மக்களின் உணர்வை பிரதமர் புரிந்து கொள்வாரா?, வெள்ளி, 13 ஏப்ரல் 2018 16:51

[4] http://www.viduthalai.in/component/content/article/71-headline/160044-2018-04-13-11-39-44.html

[5] தினத்தந்தி, பிரதமர் வருகைக்கு எதிர்ப்பு ;சீமான் வேல்முருகன், மணியரசன், தமிமுன் அன்சாரி, பாரதிராஜா, வெற்றிமாறன், அமீர் கைது, ஏப்ரல் 12, 2018, 10:58 AM

[6] https://www.dailythanthi.com/News/State/2018/04/12105816/Opposition-to-PMs-visit-Seeman-Velmurugan-Maniyarasan.vpf

[7] தமிழ்.ஒன்.இந்தியா, கைது பரபரப்புகளுக்கு முற்றுப்புள்ளி.. சீமான், தமிமுன் அன்சாரியை இரவில் விடுதலை செய்தது காவல்துறை!, Posted By: Veera Kumar Updated: Thursday, April 12, 2018, 21:04 [IST]

[8] https://tamil.oneindia.com/news/tamilnadu/seeman-may-be-get-arrested-317054.html

[9] தமிழ்.ஒன்.இந்தியா, காவிரிக்காக திமுக போராட்டம் நடத்துவது வேடிக்கையாக இருக்கிறதுசீமான்!, Posted By: Gajalakshmi Published: Saturday, April 7, 2018, 18:22 [IST]

[10] https://tamil.oneindia.com/news/tamilnadu/seeman-condemns-dmk-protests-cauvery-rights-316570.html

[11] தமிழ்.ஒன்.இந்தியா, மெரினாவில் போராட அனுமதி கொடுத்தால் தமிழர்கள் உலகையே திரும்பிப்பார்க்க வைப்பார்கள் : சீமான், Posted By: Mohan Prabhaharan Published: Sunday, April 8, 2018, 15:15 [IST].

[12] https://tamil.oneindia.com/news/tamilnadu/tamils-have-the-capability-hold-strong-says-seeman-316627.html

தமிழ், தமிழகம், தமிழ்நாடு: அரசியல் ஆட்சி, நிர்வாக மேன்மையிலிருந்து, கவர்ச்சி அரசியலுக்கு மாறியது – திராவிடத்துவவாதிகளின் வசைபாடும் போக்கு [1]

ஏப்ரல் 20, 2018

தமிழ், தமிழகம், தமிழ்நாடு: அரசியல் ஆட்சி, நிர்வாக மேன்மையிலிருந்து, கவர்ச்சி அரசியலுக்கு மாறியதுதிராவிடத்துவவாதிகளின் வசைபாடும் போக்கு [1]

கரு-இந்திராவை வசை பாடியது- சர்வாதிகாரி, காந்தாரி.....

காந்திஜி, ராஜாஜி, காமராஜ், இந்திரா, மொரார்ஜி போன்றோரை இழிவாகச் சித்தரித்து, பேசி, தூஷித்தது: பொதுவாக பிரபலமானவர்களை ஆதரித்தும், எதிர்த்தும் சிலர் பிரபலமடைய முயற்சிக்கலாம், திராவிடத்துவத்தில் அத்தகைய கொள்கையுள்ளது. வில்லன்களாக அறிமுகம் ஆகி, ஹீரோக்கள் ஆன லாஜிக் தான் [negative suggestion] பிரபலமானவர்களை ஆதரிப்பதும், எதிர்ப்பதும்! அரசியலிலும் காந்திஜி, ராஜாஜி, காமராஜ், இந்திரா, மொரார்ஜி போன்றோரை இழிவாகச் சித்தரித்து, பேசி, தூஷித்து, பிரிவினையை வளர்த்தனர். நடு இரவு கூட்டங்களில் ஆபாசமாக, கொச்சையாக மற்றும் அநாகரிகமாக பேசினர். இருப்பினும் பெரியார், அறிஞர், கலைஞர் என்ற உயர்வு நவிற்சிகளில் உலா வந்தனர். நன்றாக தமிழ் பேசுவர் என்ற திறமையைத் தவிர, வக்கிரத்துடன், வாயாலேயே கொக்கோகத்தை விவரித்து உசுப்புவர் என்ற தன்மையினை மறைத்தே வைத்தனர். பெரியார், அத்தகைய எதிர்ப்பில் தோல்வி கண்டார் எனலாம்[1]. ஆனால், தேர்தலில் நிற்கமுடியாது என்ற நிலை வந்தவுடன்[2], அண்ணாதுரையே, “திராவிட நாடு” கோரிக்கையை தூக்கிப் போட்டார், 14-01-1969 அன்று முதலமைச்சர் ஆனார். அதே தோரணையில், 50 ஆண்டுகள் கழித்து, இப்பொழுது மோடியை தூஷித்து வருகின்றனர். இன்றைக்கு மோடியை திட்டுவது, ஒருமையில் பேசுவது, தூஷிப்பது என்று திராவிட கீழ்தட்டு வர்க்க அரசியல்வாதிகள் தரந்தாழ்ந்து வாடிக்கையாக செய்து வருகின்றனர். இதற்கு தமிழ், தமிழர், தமிழ்நாடு, திராவிடம், திராவிட நாடு கட்டுக்கதைகளை, உணர்ச்சிப் பூர்வமான கோஷங்களை எழுப்பி, தீவிரவாதத்தை வளர்க்கப் பார்க்கிறார்கள்.

கரு-எம்ஜியாரை வசை பாடியது- கிழவன், கூத்தாடி

இந்திய பிரத மந்திரிகளும், திராவிட அரசியலும், பிரிவினை போராட்டங்களும்: இந்திய பிரதமர்களின் அட்டவணை, காலக் கிரமமாகக் கொடுக்கப்பட்டுள்ளது: இக்காலக்கட்டங்களில் திராவிட கட்சிகள் [திமுக-அதிமுக], மத்தியில் ஆண்ட கூட்டணியுடன் சேர்ந்து தான் அதிகாரத்தை அனுபவித்து, தத்தமது மாநில குறுகிய தன்னலங்களிலும் ஈடுபட்டிருந்தன.

  பிரதமந்திரி பெயர் இருந்து வரை ஆண்ட கட்சி
1 ஜவஹர்லால் நேரு 15-08-1947 27-05-1964 இந்திய தேசிய காங்கிரஸ்
குல்சாரிலால் நந்தா 27-05-1964 09-06-1964 இந்திய தேசிய காங்கிரஸ்
3 லால் பஹதூர் சாஸ்திரி 09-06-1964 11-01-1966 இந்திய தேசிய காங்கிரஸ்
குல்சாரிலால் நந்தா 11-01-1966 24-06-1966 இந்திய தேசிய காங்கிரஸ்
3 இந்திரா காந்தி 24-06-1966 24-03-1977 இந்திய தேசிய காங்கிரஸ்
4 மொரார்ஜி தேசாய் 24-03-1977 28-07-1979 ஜனதா கட்சி
5 சரண் சிங் 28-07-1979 14-01-1980 ஜனதா கட்சி [செக்யூலார்]
6 இந்திரா காந்தி 14-01-1980 31-10-1984 இந்திய தேசிய காங்கிரஸ்
7 ராஜிவ் காந்தி 31-10-1984 02-12-1989 இந்திய தேசிய காங்கிரஸ்
8 வி.பி. சிங் 02-12-1989 10-11-1990 இந்திய தேசிய காங்கிரஸ்
9 சந்திரசேகர் 10-11-1990 21-06-1991 இந்திய தேசிய காங்கிரஸ்
10 பி.வி. நரசிம்ம ராவ் 21-06-1991 16-05-1996 இந்திய தேசிய காங்கிரஸ்
11 அடல் பிஹாரி வாஜ்பாயி 16-05-1996 01-06-1996 பாரதிய ஜனதா பார்ட்டி
12 எச்.டி.தேவ கவுடா 01-06-1996 21-04-1997 ஜனதா தள் [யுனைடெட்]
13 ஐ.கே.குஜரால் 21-04-1997 19-03-1998 ஜனதா தள் [யுனைடெட்]
14 அடல் பிஹாரி வாஜ்பாயி 19-03-1998 22-05-2004 பாரதிய ஜனதா பார்ட்டி
மன் மோஹன் சிங் 19-03-1998 22-05-2004 இந்திய தேசிய காங்கிரஸ்
15 மன் மோஹன் சிங் 22-05-2004 26-05-2014 இந்திய தேசிய காங்கிரஸ்
16 நரேந்திர மோடி 26-05-2014 பாரதிய ஜனதா பார்ட்டி

1969-2019 என்று ஐம்பது ஆண்டு திராவிட கட்சிகளின் ஆட்சி என்று ஆராய்ச்சி செய்து பார்த்தால், அவற்றால் தமிழ், தமிழர், தமிழ்நாடு, முதலியவற்றிற்கு என்ன நன்மைக்-தீமை ஏற்பட்டன என்பதனை அலசிப் பார்த்துத் தெரிந்தும் கொள்ளலாம். திமுக மற்றும் அதிமுக தான் காங்கிரஸுடன் பல்லாண்டுகள் சேர்ந்து, கூட்டாட்சி நன்மைகளை பெற்றன. ஆகையால், காவிரிப் பிரச்சினைக்கு அவை என்ன செய்து கொண்டிருந்தன என்பதனையும் அறிந்து கொள்ளலாம்.

பார்ப்பன கூட்டம் நடுங்க வேண்டும் - 23-02-2012

எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா திராவிடர்களால் அதிகம் தூஷிக்கப் பட்டது: ஜவஹர்லால் நேரு காலத்தில் [1964 வரை] அண்ணாதுரை “அடைந்தால் திராவிட நாடு, இல்லாவிட்டால் சுடுகாடு, வடக்கு வாழ்கிறது, தெற்குத் தேய்கிறது” என்றெல்லாம் பேசி, பிறகு, அடங்கி-ஒடுங்கி, தேர்தலில் நின்று வெற்றி பெற்றி 1969ல் முதலமைச்சர் ஆனார் என்பது மேலே சுட்டிக் கட்டப்பட்டது. கருணாநிதியும் அதே பாணியைப் பின்பற்றி தொடர்ந்து ஆட்சியில் இருக்க எல்லா சூழ்ச்சிகளையும் [இந்தி எதிர்ப்பு, மாநில சுயயாட்சி] செய்து வந்தார். 1970-80களில், திராவிடத்துவவாதிகள் எம்.ஜி.ஆரை அவ்வாறு தான் தாக்கி வந்தனர். மலையாளி, கூத்தாடி, தாத்தா, என்றெல்லாம் சொல்லி, பேசி, திட்டினார்கள். ஆனால், முன்னர் அதே எம்.ஜி.ஆர் சுடப்பட்டு, ஆஸ்பதித்திரியில் இருந்த போது, அப்புகைப் படத்தை தேர்தல் பிரச்சாரத்திற்கு உபயோகப் படுத்தி, திமுக வெற்றிக் கண்டது. பிறகு, எம்.ஜி.ஆர், அதிமுக ஆரம்பித்தபோது, கருணாநிதி, தர்மத்திற்கு முன்னால் “அ” போட்டால் அதர்மம், நியாயத்திற்கு முன்னால் “அ” போட்டால் அநியாயம், என்றெல்லாம் விவரித்து, திமுக முன்னால் “அ” போட்டால் “அதிமுக” ஆயிற்று என்று சொன்னது போலத்தான், இன்று தீவிரவாத-பிரிவினைவாத கும்பல்கள், மோடியைத் தாக்கி வருகின்றனர். ஜெயலலிதாவையும் அதே பாணியில், பெண் என்றும் பார்க்காமல், கீழ்த்தரமாகத் திட்டி வந்தனர். போதாகுறைக்கு, அவர் பிராமணர் என்பதால், “பாப்பாத்தி” என்று வேறு மேடைகளில் அருவருப்பாகப் பேசி வந்தனர். அண்ணாவின் ஏசல்-பாணியை கரு அப்படியே பின்பற்றியது தான் “கடமை, கண்ணியம், கட்டுப்பாடு” என்ற கொள்கையாக இருந்தது.

Living with Soban babu - jaya- R.Rajanaygam

குடி அரசு, திராவிட நாடு, நாத்திகம், ஆபாசங்கள் இன்றும் விடுதலை, முரசொலிக்களில் தொடர்வது: ஜெயலலிதா மைனாரிடி அரசு என்று குறிப்பிட்டதை பொறுக்காமல், கருணாநிதி முரசொலியில் பழங்கதையை போட்டு அசிங்கப்படுத்தினார்[3]. முரசொலியில் ஜெயலலிதா பற்றிய எழுத்துகள் பெண்மையை தூசிக்கும் வரம்புகள், ஆபாசத்தின் எல்லைகள், எண்ணவுரிமை தரங்கள் எல்லாவற்றையும் கடந்ததவை என்பதை காணலாம்[4]. இப்படியெல்லாம் தரங்கெட்டு பேசினால், நடந்து கொண்டால், எல்லோரும் கண்டு கொள்ளாமல் இருக்கிறார்கள், அதனால், மக்கள் ஏற்றுக் கொண்டு விட்டார்கள் இல்லை நாம் அதிகாரத்தில் இருப்பதனால், யாரும் ஒன்றும் செய்ய முடியாது, அதிகாரத்தில் இல்லாமல் இருந்தாலும், அடிப்பார்கள்-உதைப்பார்கள்-அவமரியாதை செய்வார்கள் என்று தொடந்து செய்து வருகிறார்கள் என்று தெரிகிறது.  விடுதலையில் இன்றும் அத்தகைய தேசவிரோத, இந்துவிரோத, ஆனால், துலுக்க-கிருத்துவ ஆதரவு எழுத்துகளை காணலாம். பேச்சு-நடவடிக்கைகளும் அவ்வாற்றே உள்ளன, தொடர்கின்றன. “கடமை, கண்ணியம், கட்டுப்பாடு” என்ற கொள்கை தாராளமாக பின்பற்றப்பட்டு வருவது தெரிகிறது. அவர்களது நாத்திகம் செக்யூலரிஸ நாத்திகமாக இருந்து வருவதால், பிராமண எதிர்ப்பு, துவேசம் மற்று காழ்ப்புணர்வு கொதிப்புகள் ஜெயலலிதா மீது சிந்திகொண்டே இருந்தன.

© வேதபிரகாஷ்

19-04-2018


கரு-காமராஜரை வசை பாடியது-ஜாண்டக்காக்கா, மரமேறி, கட்டப்பீடி

[1] காந்தி, காங்கிரஸ் எதிர்ப்புகளிலிருந்து, இந்திய-இந்தி-இந்து-எதிர்ப்பு பவரை தோல்வி கண்டார், ஆனால், ஜின்னாவும், அம்பேத்கரும் அவரவர் வழிகளில் வெர்றிக் கண்டனர்.

[2] அரசியல் நிர்ணய சட்ட திருத்தத்தினால், திராவிட நாடு கொள்கையை, மறந்தார்.

[3] 1978-ம் ஆண்டு குமுதம் இதழில் வெளிவந்த ஜெயலலிதாவின் “மனம் திறந்து பேசுகிறேன்” என்கிற தொடரில்தான் தெலுங்கு நடிகர் சோபன் பாபுவும் தாமும் ஒரே வீட்டில் குடித்தனம் நடத்துவது குறித்தும் சோபன்பாபுவுக்கு பால்கனியில் நின்று ஜெயலலிதா டாட்டா காண்பிக்கும் படங்களும் வெளியாகி இருந்தன என குறிப்பிடப்படுவது உண்டு. 2009-ம் ஆண்டு ஆகஸ்ட் 19-ந் தேதி முரசொலி நாளேடானது 1978-ல் குமுதம் இதழில் வெளிவந்த ஜெயலலிதா பேட்டி என ஒன்றை பிரசுரம் செய்தது.

[4] Twenty years later, in 2009, when Jayalalithaa referred to the DMK government as ‘the minority government’ — which is a political statement — Karunanidhi retorted by a personal attack on Jayalalithaa, calling her ‘thirumathi’ (meaning, Mrs.), implying that she was married to Sobhan Babu, and reprinting in the DMK’s official daily Murasoli (dated 19.08.2009)Jayalalithaa’s old interview to Kumudham weekly (in which she talked about her relationship with Sobhan Babu).

Rajanayagam, Popular Cinema and Politics in South India: The Films of MGR and Rajinikanth, Routledge, New Delhi, 2015, p……, fn.23.

திகவின் போலி நாத்திகமும், சீமானின் புது ஆத்திகமும் – தாக்கப்படுவது இந்துமதமே- செபாஸ்டியன் சீமான் திடீரென்று “முருக பக்தன்” ஆகியது, இந்து வேடம் போடுவது, ஆனால் கருவறை நுழைவு போராட்டம் நடத்துவது (3)

பிப்ரவரி 13, 2015

திகவின் போலி நாத்திகமும், சீமானின் புது ஆத்திகமும்தாக்கப்படுவது   இந்துமதமே செபாஸ்டியன் சீமான் திடீரென்றுமுருக பக்தன்ஆகியது, இந்து வேடம் போடுவது, ஆனால் கருவறை நுழைவு போராட்டம் நடத்துவது (3)

சீமானின் புதிய கட்சி 2015

சீமானின் புதிய கட்சி 2015

சுபவீரப்பாண்டியனும் செபாஸ்டியன் சீமானும்: சுபவீரப்பாண்டியன் என்கின்ற திக-நாத்திகவாதி சீமானைத் தாக்கி தனது வலைப்பூவில் எழுதியிருப்பது வியப்பாக இருக்கிறது[1]. ஆனால், சுபவீரப்பாண்டியனின் எழுத்துக்களை உன்னிப்பாகப் படித்துப் பார்த்தால் தெரியும், தாக்கப்படுவது இந்துமதம் தான் என்பது. ஜைனர்களைப்போல, பௌத்தர்களைப் போல, கிருத்துவர்களைப் போல இவர்களும் அதே முறையினை கையாளுகிறார்கள். இதில் சுபவீரப்பாண்டியன் நாத்திகம் மற்றும் சீமான் கிருத்துவம் சித்தாந்தளுக்குக் கொடி பிடிக்கின்றனர். தமிழக நாத்திகம் எப்படி கிருத்துவ-இஸ்லாம் மதங்களை எதிர்க்காதோ, அதே போல “தமிழர் சமயம்” என்று சொல்லிக் கொண்டு, செபாஸ்டியன் சீமான் இந்துக்களை ஏமாற்ற வேடம் போட்டுள்ளது தெரிகிறது. சுபவீரப்பாண்டியன் எழுதியுள்ளதை அப்படியே போடப்பட்டுள்ளது. ஆனால், பத்திகள் சேர்க்கப்பட்டு தலைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. விமர்சனம், ஒவ்வொரு பத்தியின் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சீமான், முருகன், ராவணன்

சீமான், முருகன், ராவணன்

வீரத் தமிழர் முன்னணியும், பண்பாட்டுப் புரட்சியும்: இடுப்பில் பச்சை வேட்டி, தோளில் பச்சைத் துண்டு, கையில் வேல், காவடி எடுக்கும் மனைவி அருகில் என்று பழனிக்குப் புறப்பட்டு விட்டார் தம்பி சீமான். தனியாக இல்லை….தம்பிகள் பலரையும் அழைத்துக் கொண்டு! பண்பாட்டுப் புரட்சி அல்லாது, அரசியல் புரட்சி வெல்லாது’ என்னும் முழக்கத்தோடு, “வீரத் தமிழர் முன்னணி” என்னும் பெயரில் பழனிக்குக் காவடி எடுப்பதே பண்பாட்டுப் புரட்சி என அறிவித்துவிட்டார். (இந்தப் பண்பாட்டுப் புரட்சியை ஆண்டுதோறும் லட்சக்கணக்கான முருக பக்தர்கள் ஏற்கனவே செய்து கொண்டுள்ளனர். அது மட்டுமின்றி, அலகு குத்தி, நெருப்பு மிதித்துக் காவடி எடுக்கும் பெரும் புரட்சியாளர்களாகவும் அவர்கள் உள்ளனர்). இது குறித்து,  ‘தி இந்து’ 08.02.15 ஆம் நாளிட்ட தமிழ் நாளேட்டில் ‘இயக்குனர் சீமான் புதிய இயக்கம் தொடக்கம்’ என்னும் தலைப்பில் ஒரு செய்தி வெளிவந்துள்ளது. அதே செய்தியில், ‘இந்த இயக்கம் புதிய அரசியல் கட்சியல்ல என்றும், நாம் தமிழர் கட்சியில் ஒரு இயக்கமாகச் செயல்படும் என சீமான் தெரிவித்தார்’ என்றும், ‘நாம் தமிழர் கட்சியில் ஏற்பட்ட நெருக்கடி காரணமாகவே சீமான், அந்தக் கட்சிக்கு மாற்றாக புதிய கட்சி தொடங்குவதற்காக இந்தப் புதிய இயக்கத்தைத் தொடங்கியதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது’ என்றும் இருவேறு செய்திகள் இடம்பெற்றுள்ளன. அவர்கள் கட்சி விவகாரம் எப்படி வேண்டுமானாலும் போகட்டும். ‘நாம் பண்பாட்டுப் புரட்சி’ பற்றி மட்டும் பார்க்கலாம். கடந்த 7ஆம் தேதி பழனியில் தொடங்கப்பட்டுள்ள வீரத் தமிழர் முன்னணி நிகழ்ச்சி, இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக, இணையத்தளத்தில் (யூ ட்யூப்) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில் ஒன்றரை மணி நேரம் சீமானின் பேச்சு இடம் பெற்றுள்ளது. அதனை முழுமையாகக் கேட்ட பின் நமக்குப் பல செய்திகள் புரிகின்றன.

  1. திராவிடத்துவ சகோதரப்போராட்டம் “கண்ணீர் துளிகள்” போன்று வெளிப்படுகிறது.
  2. கிருத்துவ சர்ச் அல்லது முஸ்லிம்களின் மசூதிக்கு செல்லாமல், கோவிலுக்குச் செல்லத் துடித்திருப்பதால், ஆக்கிரமிப்பு எண்ணமும் வெளிப்படுகிறது.
  3. திராவிட நாத்திகம் நீர்த்துப் போகும் வேளையில், திராவிட ஆத்திகம் திராவிடர்களைக் குழப்பி விடுமோ என்ற அச்சமும் வெளிப்பட்டுள்ளது.

சீமானின் குழப்புவாதம்

சீமானின் குழப்புவாதம்

முன்னோர் வழிபாடும், முருகன் வழிபாடும்: தன் உரையின் மூலம் அவர் மூன்று செய்திகளைத் தொட்டுக் காட்டுகின்றார். முருகன் வழிபாடு என்பது முன்னோர் வழிபாட்டின் ஒரு பகுதி என்பதும், தமிழின உணர்வின் வெளிப்பாடு என்பதும், பார்ப்பனிய எதிர்ப்பின் வடிவம் என்பதும் அவருடைய கருத்துகளாக வெளிப்படுகின்றன. முன்னோர் வழிபாடு என்பது புதுமையும் இல்லை, புரட்சியும் இல்லை. காலகாலமாகத் தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கும் ஒன்றுதான் அது. ‘வையத்துள் வாழ்வாங்கு வாழ்வோரை வானுறையும்  தெய்வத்துள் வைத்துப்’ பார்க்கும் மரபு!  அதனைத்தான் நாட்டார் தெய்வ மரபு என்கிறோம். அந்த மரபில் முருகனை இணைத்து, அவன் நம் முப்பாட்டன் என்கிறது, வீரத் தமிழர் முன்னணி. முருகன், இராவணன், வள்ளுவர் ஆகிய மூவரையும் முன்னோர் வழிபாட்டில் சீமான் சேர்க்கின்றார். முருகன் புராணத்தில்  இடம் பெற்றுள்ள பாத்திரம். இராவணன் இதிகாசப் பாத்திரம். வள்ளுவரோ  வரலாறு. எல்லோரையும்  ஒன்றாகப் போட்டுக் குழப்பி அடிப்பதன் நோக்கம் திட்டமிடப்பட்ட ஒன்றாகவே தெரிகிறது. முன்னோர் வழிபாடு, நடுகல் வணக்கத்தில் தொடங்குகிறது. இது குறித்துத் தொல்காப்பியத்திலேயே, “காட்சி, கால்கோள், நீர்ப்படை, நடுகல்” என்று கூறப்பட்டுள்ளது. புறநானூற்றில் இது பற்றிய பாடல்கள் உள்ளன. சிலம்பில் கண்ணகிக்குக் கோட்டம் அமைப்பதே இந்த அடிப்படையில்தான். இந் நடுகல் வழிபாட்டின் தொடர்ச்சியாகத் தமிழகத்தின் தென் மாவட்டங்களில், அம்மன்,  மாடன், வீரன், கருப்பு ஆகிய முன்னோர் வழிபாடுகள் தொடங்கின. மாரியம்மன், காளியம்மன், இசக்கியம்மன் என்றும், சுடலை மாடன், பன்றி மாடன், காட்டு மாடன், புல மாடன் என்றும், மதுரை வீரன், முனிய வீரன், காத்தவராய வீரன் என்றும், பெரிய கருப்பு, சின்னக் கருப்பு, சங்கிலிக் கருப்பு, பதினெட்டாம்படிக் கருப்பு என்றும் பல தெய்வ வழிபாடாக அவை விரிந்தன.

  1. ஆன்மா, மறுபிறப்பு முதலியற்றில் நம்பிக்கை இல்லாத ஜென்மங்களுக்கு, முன்னோர் வழிபாடு பற்றி பேசுவது ஏமாற்றுவேலையே.
  2. திராவிட நாத்திகம், திராவிட ஆத்திகம் இரண்டுமே குழப்புவாதங்கள் தாம்.

தைப் பூசம் கொண்டாடினால், சிவராத்திரியும் கொண்டாடுவார்களா?: முருகன் நம் முன்னோன், அவனை வழிபட வேண்டும் என்றால், மாடன், வீரன், அம்மன் எல்லோரும் நம் முன்னோர்தானே! அவர்களையும் வழிபட வேண்டாமா? பிறகு, வருடம் முழுவதும் வழிபடும் வேலை ஒன்றினைத்தானே செய்து கொண்டிருக்க முடியும்? முருகன் நம் முன்னோன் என்பதால் ஆண்டுதோறும் தைப் பூசம் கொண்டாட வேண்டும் என்று கூறும் சீமான், சிவனும் நம் முப்பாட்டனுக்குப் பாட்டன் என்கிறார். அப்படியானால், சிவராத்திரி கொண்டாட வேண்டாமா? இந்த முன்னோர் வழிபாடு, வீரத்தமிழர் முன்னணி தொடக்கி வைக்கும் பண்பாட்டுப் புரட்சி என்கிறார்  சீமான். அப்படியானால்,  இதுவரை நடந்துவந்த வழிபாட்டுக்கெல்லாம்  என்ன பெயர்?  தமிழின உணர்வைத் தூண்டுவது எங்கள் நோக்கம், தமிழின மரபை மீட்பது எங்கள் நோக்கம் என்று அவர் பேசுகின்றார்.

  1. கந்தப்புராணம் ராமாயணத்தைப் பார்த்துக் காப்பியடிக்கப்பட்டது என்பதை சீமான் எதிர்ப்பாரா?
  2. கந்தப்புராணத்தை விமர்சித்த பெரியாரை, சீமான் விமர்சிப்பாரா, எதிர்ப்பாரா?
  3. தெய்வயானையை, விவாக ரத்து செய்ய வைப்பார்களா?

தொல்காப்பியர் முருகனுடன், கண்ணன், இந்திரன், வருணன் முதலியோரைச் சேர்த்தது: உண்மைதான், குறிஞ்சி நிலக் கடவுள் முருகன் என்றுதான் தொல்காப்பியம் தொடங்கிப் பழந் தமிழ் நூல்கள் எல்லாம் கூறுகின்றன. ஆனால் அவை முருகனை மட்டும்  குறிப்பிடவில்லை. வேறு பல தெய்வங்களையும் குறிப்பிடுகின்றன.

“மாயோன் மேயக் காடுறை உலகமும்

சேயோன் மேய மைவரை உலகமும்

வேந்தன் மேயத் தீம்புனல் உலகமும்

வருணன் மேயப் பெருமணல் உலகமும்”

என்கிறது தொல்காப்பியம்! மைவரை (குறிஞ்சி) உலகத்துச் சேயோனை (முருகன்) மட்டும் வணங்கினால் போதுமா?  காடுறை (முல்லை) உலகத்து மாயோனை (கண்ணன்), தீம்புனல் (மருதம்) உலகத்து வேந்தனை (இந்திரன்), பெருமணல் (நெய்தல்) உலகத்து வருணனை எல்லாம் வணங்க வேண்டாமா? அவர்களுக்கும் வெவ்வேறு நாள்களில் விழா எடுக்க வேண்டாமா? வீரத் தமிழர் முன்னணி தொடக்க விழாவில் பேசிய சீமான், தான் பக்தி மார்க்கத்தில் கலந்து விட்டதை மறைப்பதற்கு, இதுதான் பகுத்தறிவு என்கிறார். முருகனை வணங்க வேண்டும் என்று சொல்லும் அவர், பிள்ளையாரையும், ராமரையும் எதிர்த்துப் பேசுகின்றார். பார்ப்பனிய எதிர்ப்பில் உறுதியாக இருப்பது போல் காட்டிக் கொள்கின்றார். இது ஒரு ஏமாற்று வித்தை. தமிழ் உணர்வின் பெயரால், பகுத்தறிவுச் சிந்தனைகளைக்  காயடிக்கும் தந்திரம்.

  1. சங்கத்தமிழ் நூல்களில் ராமாயணம், மகாபாரதம் குறிப்புகள் அதிகமாகவே உள்ளனவே?
  2. இந்திர விழா கொண்டாட்டங்கள் ஐம்பெருங்காப்பியங்களில் உள்ளனவே?
  3. இதெல்லாம் ஆரிய சூழ்ச்சியா, திராவிட முரண்பாடா?

ஆரியப் பார்ப்பனியச் சூழ்ச்சியில் சிக்காமல் தப்பியவன் முருகன்: பழனிக்குப் போய் முருகனை வணங்கினோம் என்கின்றனரே, அங்கு முருகன் சிலைக்குப் பூஜை செய்பவர் யார்? போகர் வழிவந்த  புலிப் பாணிச் சித்தர்களா அங்கு கருவறைக்குள் உள்ளனர்? அவர்களைத்தான் திருமலை நாயக்கர் காலத்திலேயே தளவாய் ராமப்பைய்யர் துரத்தி விட்டாரே! பார்ப்பனர்கள்தானே இன்று அங்கு ஆதிக்கம் செய்கின்றனர். அவர் கட்சியைச் சேர்ந்த ஒருவர் பேசும்போது, “என் முப்பாட்டனைக் கண்டதும், மகிழ்ச்சியில்  கண் கலங்கி நின்று விட்டேன்” என்கிறார். கண் கலங்கி விட்டதால், உள்ளே இருக்கும் பார்ப்பனரைப் பார்க்கவில்லை போலிருக்கிறது! பாட்டனைப் பார்க்கப் போன அவர், குத்தாட்டம் போட்டு மகிழ்ந்தாராம். அவரே சொல்கிறார். அடேயப்பா…புதிய பண்பாட்டுப் புரட்சிதான். “ஆரியப் பார்ப்பனியச் சூழ்ச்சியில் சிக்காமல் தப்பியவன் முருகன்” என்கிறார் சீமான். எப்படித் தெரியுமா? நாரதர் கொண்டுவந்த மாம்பழக் கதையை அதற்கு எடுத்துக் காட்டாகக் கூறுகின்றார். பார்ப்பனியச் சூழ்ச்சியை எதிர்த்து அவர் பழனி மலைக்கு வந்து விட்டாராம். அந்தக் கதையே பார்ப்பனியக் கதைதான். அதனை நம்புவதும், சிவபெருமான் நக்கீரரிடம் நெற்றிக் கண்ணைத் திறந்து காட்டியதை நம்புவதும் எந்த விதமான பகுத்தறிவு என்று நமக்குப் புரியவில்லை. இந்த இரண்டு கதைகளையும் எடுத்துச் சொல்லித் தன் தொண்டர்களுக்குத் தமிழ் உணர்வை ஊட்ட முயல்கின்றார் அவர்.

  1. பத்துப்பாட்டு, எட்டுத்தொகையில் உள்ள பார்ப்பனர்களை என்ன செய்வார்கள்?
  2. பார்ப்பனப் பெண்களைத் திருமணம் செய்து கொண்டுள்ள திராவிடப்பித்தர்கள் என்ன செய்வார்கள்?
  3. வீட்டிலே இருக்கலாம், குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளலாம், மாமி-போல சாமி கும்பிடலாம், ஆனால், கோவிலில் இருப்பது ஏன் உறுத்துகிறது?
  4. எல்லா இடங்களிலும் விரட்டி விடுவதுதானே?

தனிநாடு கேட்டலும், மனைவியை வைத்து சாமி கும்பிடுதலும்: தமிழீழத் தேசியத் தலைவர் பிராபகரனுக்கு முன்பே தமிழனுக்குத் தனிநாடு கேட்டவர் முருகன் என்கிறார். எந்த வரலாற்று நூலிலிருந்து இந்தச் செய்தி கிடைத்ததோ தெரியவில்லை. இந்தக் கட்டுரையைப் படித்ததும், இங்கு எழுப்பப்பட்டுள்ள எந்த வினாவிற்கும் விடை சொல்லாமல், தி.மு.க.வில் யாரும் கோயிலுக்குப் போவதில்லையா, கலைஞர் வீட்டில் யாருக்குமே கடவுள் நம்பிக்கை கிடையாதா என்று நண்பர்கள் சிலர் பின்னூட்டம் இடுவார்கள் என்பதை அறிவேன். அது தனி மனித நம்பிக்கைக்கு உட்பட்டதே தவிர, அதற்கென்று தி.மு.க.வில் வீரத் தி.மு.க. முன்னணி என்று தனிப் பிரிவு ஏதும் இல்லை. சீமானின் துணைவியாருக்குக் கடவுள் நம்பிக்கை இருக்குமானால், அவர் காவடி தூக்கிக் கொண்டு போவது அவருடைய சொந்த விருப்பம். அதனை யாரும் கேள்வி கேட்கப் போவதில்லை. கேட்கவும் முடியாது. ஆனால் அதனையே ஒரு தத்துவமாக்கி, அதற்கு ஒரு அணியையும் உருவாக்கி, அவற்றை நியாயப் படுத்துவது நேர்மையாகாது!

  1. கால்டுவெல் 19ம் நூற்றாண்டில் சொல்லியதை நம்பிக்கொண்டு, இந்தியர்களை ஏமாற்றி வர்ய்ம் போது, கச்சியப்ப சிவாச்சாரியார் சொன்னதை நம்புவதில் என்ன மயக்கமோ?
  2. தி.மு.க.வில் வீரத் தி.மு.க. முன்னணி என்று தனிப் பிரிவு ஏதும் இல்லை என்று சொல்லவே வேண்டாமே, அதுதான் மனைவிமார்கள் சென்று சாமி கும்பிட்டு வருகிறார்களே?
  3. திக-திமுகவில் எப்படி அவரவர் பெண்டாட்டிகள் தூக்கிக்கொண்டிருக்கிறார்களே, அதேபோல சீமானின் துணைவியார் தூக்குகிறார், இதிலென்ன கோபமோ?
  4. ஆமாம், “துணைவி” என்பதன் உள்ளர்த்தம் என்னவோ, “மனைவி” வேறு என்று கலைஞர் பாடையில் கூறுவது ஏனோ?

கோயிலைக் கைப்பற்றாமல், நீ கோட்டையை எப்படிக் கைப்பாற்றுவாய்?”: உண்மையில் இந்த அணிக்கு இப்போது என்ன தேவை வந்தது என்பதை அவரே அவருடைய பேச்சின் நடுவில் வெளிப்படுத்தியுள்ளார். மூன்று ஆண்டுகளுக்கு முன், பஞ்சாபைச் சேர்ந்த சிம்ரன்ஜித் சிங் மான், சீமானிடம், “கோயிலைக் கைப்பற்றாமல், நீ கோட்டையை எப்படிக் கைப்பாற்றுவாய்?” என்று கேட்டாராம். அது நெஞ்சில் உறுத்திக் கொண்டே இருந்ததாம். பிறகு, அம்பேத்காரைப் படித்த போது, பண்பாட்டுப் புரட்சி இல்லாமல், அரசியல் புரட்சி செய்ய முடியாது என்று அவர் எழுதியிருந்தாராம். அதனால்தான் இந்த இயக்கம் என்கிறார் அவர். கோயிலைப் பிடித்தவரெல்லாம்  கோட்டையைப் பிடித்து விடலாம் என்றால், தமிழ்நாட்டு ஆட்சியை என்றோ பா.ஜ.க. பிடித்திருக்குமே? சரி, அவர் எப்படியாவது கோட்டையைப் பிடித்துவிட்டுப் போகட்டும். அதற்காக அம்பேத்கார் கூற்றினை இப்படியா கொச்சைப்படுத்துவது? பண்பாட்டுப் புரட்சியில் முருகனுக்காக  மொட்டை போட்டு, எதிர்காலத்தில் தமிழனுக்கும் மொட்டை போடலாம் என்ற எண்ணத்தில்தான் வீரத் தமிழர் முன்னணி உருவாகியுள்ளதோ?

  1. திக-திமுகவினர்கள் தாம் ஏற்கெனவே கோவில்கள், கோவில் சொத்துகள் முதலியவற்றைக் கொள்ளையடுத்து வருகின்றனர். இனி இந்த ஆள் வேறு வருவது பொறுக்கவில்லை போலும்!
  2. அம்பேத்கர் பார்ப்பன பெண்ணை இரண்டாம் பெண்டாட்டியாக வைத்துக் கொண்டது போல, இவர்களும் வைத்துக் கொண்டுள்ளது “பண்பாண்டுப் புரட்சியா” அல்லது வேற்ந்த புரட்சியா?
  3. கருணாநிதியே குடுமி வைத்திருந்தபோது, இவர்கள் மொட்டை போட்டால் என்ன, குடுமி வைத்தால் என்ன?

[1] சுபவீரப்பாண்டியன், முருகனுக்கு அரோகரா ….தமிழனுக்கும் அரோகரா!, http://subavee-blog.blogspot.in/2015/02/blog-post_10.html#comment-form

தமிழ்முறைப்படி சீர்திருத்த முறையில் நடந்த திருமணத்தில் தாலி கட்டப்படாமல், “ரெடிமேட் தாலி” ஏன் அணிவிக்கப்பட்டது?

செப்ரெம்பர் 10, 2013

தமிழ்முறைப்படி சீர்திருத்த முறையில் நடந்த திருமணத்தில் தாலி கட்டப்படாமல், “ரெடிமேட் தாலி”  ஏன் அணிவிக்கப்பட்டது?

முக்கியமான குறிப்பு: சீமான்-கயல்விழி திருமணம் அவர்களது சொந்த விவகாரம். அவர்களுக்கு எல்லா உரிமைகளும் இருக்கின்றன. அவர்கள் எப்பட் வேண்டுமானாலும், எங்கேயாவது, எந்தவிதத்திலும், திருமணம் செய்து கொள்ளலாம். அது அவ்ழர்களது தனிப்பட்ட விவகாரம். அதைப் பற்றி இங்கு விமர்சிக்கப் படவில்லை. “தமிழ்முறைப்படி சீர்திருத்த முறையில் திருமணம் நடந்தது”, என்று ஊடகங்கள் பறைச்சாற்றியுள்ளதால், தமிழகர்கள் உண்மை என்ன அறிந்தாக வேண்டிய நிலை உள்ளது.சீமான் போன்ற நாத்திகக்காரர்கள், பெரியார்-சுயமரியாதை முகமூடிகளை அணிந்து கொண்டு, இந்துக்களை மிக்கக் கடுமையாக விமர்சித்துள்ளாதாலும், தமிழர்களை அவர்களது உண்மையான கலாச்சாரம், நாகரிகம், பண்பாடு, பாரம்பரியம் முதலியவற்றை அறியாமல் செய்து விட்டதாலும், சில உண்மைகளை சொல்ல வேண்டிய அவசியத்தில் கீழ்கண்ட கருத்துகள் சொல்லப்பட்டுள்ளன.
தமிழ்முறைப்படி சீர்திருத்த முறையில் திருமணம் நடந்தது!

தமிழ்முறைப்படி சீர்திருத்த முறையில் திருமணம் நடந்தது!

தமிழ் முறை மற்றும் எது சீர்திருத்த முறை எது: தமிழ்முறை மற்றும் எது சீர்திருத்தமுறை சீமான் – கயல்விழி திருமணம் தமிழ் ஆராய்ச்சியாளர்களை உசுப்பியுள்ளது எனலாம். ஏனெனில் சாதாரணமாக, ஒரு கல்யாணத்தில் என்ன நடக்கவேண்டுமே எல்லாமே நடந்தது. “தீ” தான் வளர்க்கப் படவில்லை. தமிழ்முறைப்படி சீர்திருத்த முறையில் நடந்த கல்யாணம் எனும்போது, எது தமிழ்முறை மற்றும் எது சீர்திருத்தமுறை என்ற கேள்விகள் எழுகின்றன. திராவிட இயக்கத்தின் படி, சுயமரியாதை திருமணங்கள் நடந்தன. ஆனால், அவையெல்லாம் செல்லுபடியாகாது என்ற நிலையும் ஏற்பட்டது. அண்ணாதுரை பதவிக்கு வந்ததும், இந்து திருமணச் சட்டத்தில் ஒரு பிரிவை சேர்த்துக் கொண்டு, திராவிடர்களின் சுயமரியாதையைக் காப்பாற்றினார்! அதாவது தங்களை “இந்துக்கள்” என்று ஒப்புக்கொண்டுதான் மானத்தைக் காப்பாற்றிக் கொண்டார்கள்.

தாலி கட்டுவதா, அணிவிப்பதா, தொங்கவிடுவதா - எது தமிழ்முறை,  சீர்திருத்த முறை  திருமணம்?

தாலி கட்டுவதா, அணிவிப்பதா, தொங்கவிடுவதா – எது தமிழ்முறை, சீர்திருத்த முறை திருமணம்?

பட்டுவேட்டி,  பட்டுசட்டை,  பட்டுசேலை முதலியன எந்த முறை?: நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்– காளிமுத்துவின் மகள் கயல்விழி திருமணம் சென்னையில் 08-09-2013 அன்று காலையில் ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடந்தது.  தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன் தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைத்தார். சீமான் பட்டு வேட்டி, பட்டு சட்டை அணிந்து இருந்தார். மணப்பெண் கயல்விழி தங்கநிற பட்டு சேலை அணிந்து இருந்தார், என்று ஊடகங்கள் விவரித்தன. புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களும் வெளியிட்டப்பட்டன. தமிழ்முறைப்படி சீர்திருத்த முறையில் திருமணம் நடந்தது[1].  ஆனால், இவையெல்லாம் என்று விவரிக்கப்படவில்லை. இவற்றிற்கு பதிலாக கருப்புக் கலரில் உடைகள் அணிந்து கொண்டு புரட்சிகரமான இணையும் நிகழ்ச்சியை செய்திருக்கலாம். ராமருக்கே செருப்பு மாலைகள் போட்ட பகுத்தறிவாளிகள் என்பதனால், பூமாலைகளுக்குப் பதிலாக வேறெந்த மாலைகளை தேர்ந்தெடுத்திருக்கலாம். ஆனால், ஏன் செய்யவில்லை?

10.06க்குதாலிஅணிவித்தது: சீமான் பட்டு, வேட்டி சட்டை அணிந்து காலை 9.20 மணியளவில் மண மேடைக்கு வந்தார். கயல்விழி பொன்நிற பட்டு சேலை அணிந்து 9.45 மணியளவில் மண மேடைக்கு அழைத்து வரப்பட்டார். தமிழ்முறைப்படி சீர்திருத்த முறையில் திருமணம் நடந்தது. அதன்பின் சீமானும்–கயல்விழியும் இணைந்து திருமணத்துக்கு வந்திருந்தவர்களை பார்த்து கை குப்பி வரவேற்றனர். சீமான்–கயல்விழி திருமணத்தை உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன், காலை 10.05 மணிக்கு தமிழில் முதல் எழுத்தான ‘அ’ எழுத்து பொறிக்கப்பட்ட டாலருடன் கூடிய தாலியை சீமான் கையில் எடுத்து கொடுத்தார். பாவம் அப்பொழுது அவரைத் தாங்கலாக இருக்கச் செய்யவேண்டியதாயிற்று. அதை கயல்விழி கழுத்தில் சீமான் அணிவித்தார். அதைத் தொடர்ந்து சீமானும், கயல்விழி இருவரும் மாலை மாற்றிக்கொண்டார்கள். இதெல்லாம் எந்த முறை என்று தெரியவில்லை.

சுபமுகூர்த்த தினத்தில்,  சுபமங்கல நேரத்தில் ஏன்  “புரோசு மயக்கி”  தாலி கட்டி (இல்லை அணிவித்து), மேளதாளத்துடன் திருமணம் நடத்த வேண்டும்?: நாட்களை, மதங்களை, ஏன் ஆண்டுகளையே மாற்றி ஏன் இப்படி திருமணம் நடத்தப்பட வேண்டும்? 08-09-2013 மிக்கவும் சிறந்த சுபமுகூர்த்த நாள் என்பது தமிழகத்தில் உள்ள படிக்காதவனுக்குக் கூட நன்றாகத் தெரியும். அன்று பேருந்துகள், ரெயில்கள், மற்ற வண்டிகள் என்று எல்லாவற்றிலும் திருமணங்களுக்குச் சென்று கொண்டிருந்தனர். ஆகவே, சுபமுகூர்த்த தினத்தில், சுபமங்கல நேரத்தில் ஏன் “புரோசு மயக்கி” தாலிகட்டி, மேளதாளத்துடன் திருமணம் நடத்த வேண்டும் என்ற கேள்வி எழுகின்றது?

  • பெரியார் இப்படித்தான் திருமணம் செய்யவேண்டும் என்று வரையறைத்தாரா?
  • இனமானத் தலைவர் வீரமணி இப்படித்தான் திருமணம் நடத்தி வைக்கிறாரா?
  • முத்தமிழ் வித்தகர், முத்தாரக் கணவன் இப்படித்தான் மணமக்களை சேர்த்து வைக்கிறாரா?

ராகுகாலம் (காலை 4.30 – 6.00) இல்லை; எமகண்டம் (12.00 – 01.30) இல்லை; கரணன் (10.30ம் – 12.00) இல்லை – நல்ல சுபமுகூர்த்த நேரம் = 7.30 – 8.30, ஆனால், அதற்கு மேலும் 10.30 வரை மணப்பெண், மணமகன் நட்சத்திரத்தின் படி நடத்தலாம். சீமானின் ராசி தனுஸ் / தனுசு [Sagittarius], தொடர்புடைய நட்சத்திரங்கள் மூலம், பூராடம், உத்திராடம் (பாதம்-1). தனுசுக்குப் பொறுத்தமான பெண்ராசி – கடகம் என்றால், அது கயல்விழியுடையதா என்று பார்க்கவேண்டும். ஆகவே, கயல்விழியின் நட்சத்திரம் ஹஸ்தம் அல்லது சித்திரை என்றிருக்க வேண்டும். எந்த திராவிட சோதிடர், சுயமரியதை கணியன், அல்லது பகுத்தறிவு பார்ப்பனன் இந்த நேரத்தைக் கணித்துக் கொடுத்தான் என்று தெரியவில்லை.

தாலி கட்டுவதற்கும்,  அணிவிப்பதற்கும் என்ன வித்தியாசம்?: பொதுவாக தாலி கட்டும் போது, மூன்று முடிச்சுகள் போடுவது வழக்கம். ஆனால், தயாராக செய்து வைத்தத் தாலியை, ஏதோ நகையை அணிவிப்பது போல அணிவிப்பது எதில் சேர்த்தி என்று தெரியவில்லை. அதற்கு மேள வாத்தியங்கள் ஏன் முழங்க வேண்டும் என்று தெரியவில்லை. முன்பிருந்த பழக்க-வழக்கங்களை மாற்றவேண்டும் என்றால், புதியதாக மாற்று சடங்குகளை உருவாக்கி அறிமுகப்படுத்த வேண்டும். சுயமரியாதை திருமணங்கள் செல்லாது என்ரபோது, பகுத்தறிவுகள் கலங்கிவிட்டன. நீதிமன்றத் தீர்ப்புகளில் பொதுவாக திருமணங்களில் செய்யப்பட்டுவரும் சடங்குகள் ஏதாவது செய்யப்பட்டன என்று மெய்ப்பித்தால் தான் கணவன் -மனைவி தாம்பத்திய உறவு உரிமைகள் கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டவுடன், திராவிடர்கள் 1962ற்குப் பிறகு ஒன்று-ஓன்றாக சேர்த்துக் கொண்டு விட்டனர். ஐயர், ஹோமம் இல்லாமல் மற்ற எல்லாவற்ரையும் சேர்த்துக் கொண்டுதான், இந்த நாத்திகவாதிகள், பெரியார் குஞ்சுகள், திராவிட வித்தகர்கள் திருமணம் செய்து கொள்கிறார்கள்.

பொய்யும்,  வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணம் என்ப: தொல்காப்பியர், “பொய்யும், வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணம் என்ப” என்று கூறியுள்ளார். அதாவது, களவு மற்றும் கற்பு நெறிகள் பின்பற்ரி வந்த காலத்தில், ஆண்கள் பொய் சொல்வது, இதனால் சமூகத்தில் வழுவு ஏற்படுதல் என்ற்றிருந்த நேரத்தில் ஐயர் / மேலோர் கரணங்களை, தாலிகட்டுவது போன்ற சடங்குமுறைகளை அறிமுகப்படுத்தினர். இவற்றை சங்ககால மக்களும் பின்பற்றி வந்தார்கள். சுமார் 2500 வருடங்களுக்குப் பிறகு தான், அதாவது அவர்கள் “திராவிடர்கள்” ஆனபிறகு, “சுயமரியாதை திருமணம்” என்று வேதமுறை ஒழித்து ஏற்படுத்தப்பட்டது. ஆனால், அவை செல்லாது என்றபோது, மறுபடியும் மந்திரங்கள், தீவளர்த்தல் இன்றி மற்றவை சேர்த்துக் கொள்ளப்பட்டன. அதனால்தான், தாலி நிலைத்தது. ஆக, பெரியார் ஐயரிடம் தோற்றுவிட்டார். இப்பொழுது, கருணாநிதி, வீரமணி, நெட்டுமாறன் போன்ற “ஐயர்கள்” கிளம்பியுள்ளார்கள். இவர்களைத்தான் நான் “திராவிட புரோகிதர்கள்” என்று குறிப்பிட்டுள்ளேன்.

பத்துப்பாட்டு — எட்டுத்தொகை சொல்லாதவை தமிழ் முறையா?: தமிழ் முதல் எழுத்தான “அ” பொறிக்கப்பட்ட டாலருடன் கூடிய தாலியை பழ.நெடுமாறன் எடுத்து கொடுக்க அதை சீமான் கயல்விழி கழுத்தில் அணிவித்தார்[2]. பின்னர் இருவரும் மாலை மாற்றிக் கொண்டனர். சீமான் தாலி கட்டுவதற்கு முன் மேடையில் வைக்கப்பட்டு இருந்த பிரபாகரனின் தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை, தாயார் பானுமதி அம்மாள், காளிமுத்து, மணிவண்ணன் ஆகியோர் படங்களுக்கு மாலை அணிவித்தார். அப்போது மணமக்களும், நாம் தமிழர் கட்சியினரும் ஈழப் போரில் உயிர் நீத்த தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் உறுதி மொழி எடுத்து கொண்டனர். திருமண மேடையில் விடுதலைப்புலி தலைவர் பிரபாகரன் அவரது மனைவி மதிவதனி ஆகியோர் திருமண கோலத்தில் இருக்கும் படம் பொறித்த பிரமாண்ட பேனர் வைக்கப்பட்டு இருந்தது. மேடையின் இடது புறத்தில் பெரியார் புகைப்படமும், வலது புறத்தில் திருவள்ளுவர் படமும் வைக்கப்பட்டு இருந்தது. சீமான் பிரபாகரனுடன் ஒன்றாக இருக்கும் போட்டோக்கள் விழா அரங்கிலும், வெளியிலும் ஏராளமாக வைக்கப்பட்டு இருந்தன[3].

திராவிட்ட புரோகிதர்கள் நடத்தி வைத்துள்ள சில திருமணங்கள்:

மு. ரமேசு _ இ. சிவசங்கரி ஆகியோரது வாழ்க்கை இணைநல ஏற்பு விழாவினை தமிழர் தலைவர் நடத்தி வைத்தார். சட்டமன்ற உறுப்பினர்கள், தொழிலதிபர்கள் உடன் உள்ளனர் (மதுரை, 31.1.2010).

ரா. சுதேஷ்பாபு _ ஸ்வீட்டி ஏஞ்சலின் பிளாரன்ஸ் ஆகியோரின் மண விழாவினை துணை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நடத்தி வைத்தார். தமிழர் தலைவர் கி. வீரமணி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்துரை வழங்கினர் (சென்னை, 1.02.2010).

© வேதபிரகாஷ்

10-09-2013


அய்யப்பன் பிறப்பு வளர்ப்பு தெரிந்தால் மாலை போடுவீர்களா?

நவம்பர் 29, 2009

அய்யப்பன் பிறப்பு வளர்ப்பு தெரிந்தால் மாலை போடுவீர்களா?

இது “விடுதலை” என்கின்ற திராவிட கழகத்தினரின் நாளிதழில் “ஓடும் நதி” என்ற பெயரில் மறைந்து கொண்டு யாரோ ஒரு இந்து-விரோதி எழுதி வெளிவந்த சிறு கட்டுரையாகும். இன்றும் (டிசம்பர் 2013) கீழ்கண்ட தளத்தில் இருக்கின்றது:

http://viduthalai.periyar.org.in/20091129/news22.html

அதனால் தான், கீழ் கண்ட குறிப்பையும் நவம்பர் 2009லேயே செர்த்திருந்தேன்.

இதோ, ஐயப்பன் பக்தர்களையும் விட்டுவைப்பதில்லை.வருடா வருடம் இதே மாதிரியான தூஷணங்கள்! ஆனால், யாரும் நடவடிக்கை எடுக்காததால், இப்படியே அச்சடித்து இப்பத்திரக்கை நடதத்தப் படுகிறது.இதன் ஆசிரியர் கே. வீரமணியோ ஒரு நிகர்-பல்கலைக் கழகம் வைத்து நடத்துகிறார்.அதில் வேலை செய்யும் பலர் மாலை அணிந்துள்ளனர். அவர்கள் என்ன செய்வார்கள்?

அவர்கள் என்ன நினைப்பார்கள்?

அங்கு படிக்கும் மாணவர்கள் என்ன நினைப்பார்கள்?

ஏனெனில் மாணவர்களில் பலரும் மாலை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்!!

குறிப்பு: ஐய்யப்பப் பக்தர்களைப் புண்படுத்த இப்பதிவு செய்யப்படவில்லை. உண்மையில் நாத்திகவாதிகளின் மனப்பாங்கை எடுத்துக் காட்டி, அவர்களைன் போலித்தனத்தை எடுத்துக் காட்டவே நான் இப்பதிவை செய்துள்ளேன்.     

                                                                                                                  சென்னை, நவ. 29_ கேரளம் _ கேர என்ற மலையாள சொல்-லுக்கு தென்னை என்று பெயர். கேரளம் என்றால் தேங்காய் விளைகிற இடம் என்று பெயர். சந்தேகமாக இருந்-தால், உங்களுக்குத் தெரிந்த மலையாள சேட்டான், சேச்சியிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். கேரளாவிலிருந்து வந்த தேங்காயை, தமிழ்நாட்-டுத் தமிழன் விலைக்கு வாங்கி, தலையில் இரு-முடிகட்டி திரும்பவும் எங்கிருந்து வந்ததோ, அங்கேயே பக்தியின் பெயரால் கொண்டு போய் சேர்கிறான். அந்த தேங்காய்களை சபரிமலை கோவில் நிர்-வா-கமும் ஏதாவது எண்-ணைய் எடுக்கிற நிறுவனத்-திற்கு மொத்த விலைக்கு விற்று விடுகிறது. அந்த நிறுவனங்கள் தமிழ்-நாட்-டில் சிறு சிறு பாக்கெட், பாட்டில்களில் தேங்காய் எண்ணையை அடைத்து வந்து விற்கிறது. தேங்-காயை விலைக்கு வாங்-கிய தமிழன்,அதே தேங்-காயை, எண்ணைய் என்ற வடிவத்தில் திரும்ப-வும் விலைக்கு வாங்கு-கிறான். அதாவது புரிகிற மாதிரி சொல்வது என்-றால், ஒரு பொருளை இரண்டு முறை விலைக்கு வாங்குகிறான். கேரளக்காரன் தமிழ-னின் தலையில் இப்படித்-தான் மிளகாய் அரைக்-கிறான்! அய்யப்பனுக்கு மாலையணிந்து கோவி-லுக்கு போய் திரும்பும் வரை மிகவும் ஒழுக்கமாக நடந்து கொள்ள வேண்-டும் சரியாகச் சொன்-னால், கோயிலுக்குப் போய் திரும்பும் வரைக்கு-மாவது நல்லவர்களைப் போல நடியுங்கள் என்-கிறார்கள்! கேரள அய்யப்பனுக்கு மாலை போட்டுப் போகிற தமிழர்கள் தயவு செய்து அய்யப்பனின் பிறப்பு, வளர்ப்பு கதையை படித்த பிறகு,தைரியம் இருந்தால் அதற்கு பிறகு மாலை போடுங்கள்! எவ்வளவுக் எவ்வளவு அசிங்கங்-கமாக, கேவலமாக இருக்க வேண்டுமோ, அவ்வள-வுக்கு அவ்வளவு ஆபாச-மாக இருக்கிறது, அய்யப்-பனின் பிறப்பு வளர்ப்பு வரலாறு! அவைகளை படித்தால் ஒழுக்கக் கேடு-கள் தான் நாடெங்கும் தலை விரித்தாடும்..! கேரளா கிறித்தவர்கள் அதிகம் நிறைந்த மாநிலம்.

அதாவது அய்யப்பன் பிறந்து வளர்ந்து கிழித்த-தாக கூறப்படும் கேரளத்-தில், கேரள மக்கள் அய்யப்-பன விட இயேசு கிறிஸ்துவைத் தான் அதிகம் பின்பற்று-கிறார்-கள்! இது ஒன்று போதாதா? அய்யப்பன் வெறும் பொய்யப்பன் என்று புரிந்து கொள்ள… அதா-வது தன்னை சிலுவை-யில் உயிரோடு அறைந்த போது தன்னையே காப்-பாற்றிக் கொள்ளாத இயேசு தான் இவர்களை காப்பாற்றும், சக்தி வாய்ந்த கடவுளாம்! கொடுமைடா சாமி! நீங்கள் சொல்வதெல்-லாம் சரிதான்ங்க, ஆனால் நம்மை மீறிய சக்தி ஒன்னு இருக்கு, அதுக்கு பெயர் தான் கடவுள் என்பர்களே! கடவுளின் பெயரால் இந்த கேணத் தனங்கள், எதற்கு? கடைசியாக உங்களிடம் வேண்டிக் கொள்வ-தெல்-லாம், ஒன்றே ஒன்று தான்! தமிழர்களே! தமிழர்-களாக இருங்கள்!!

நன்றி: ஓடும் நதி

பின்குறிப்பு: இந்த இடுகை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இடப்பட்டது. நாத்திகம் என்ற போர்வையில், வீரமணி எப்படி தூஷணம் செய்கிறார் என்பதைத்தான் எடுத்துக் காட் ட அவ்வாறு செய்யப்பட்டது. கோடிக்கணக்கான பக்தர்களின் உணர்வுகளைப் புண்படுத்தக் கூடாது என்ற எண்ணம் அந்த மெத்த “படித்த” மேதாவிக்கு, நிகர்நிலை பல்கலைக்கழக வேந்தருக்குத் தெரியாமல் இருப்பதையும் எடுத்துக் காட்டப்பட்டது. இப்பொழுதும் இதற்கு பதில்கள் வருவதால், இக்குறிப்பு சேர்க்கப்பட்டுள்ளது.

 2009லிருந்து 2013 வரை படிப்பவர்கள் இதனை முழுவது படிக்காமலேயே, என்னை திட்டி பதில்களை பதிவு செய்து வருகிறார்கள்.

ஆகவே, தயவு செய்து முழுமையாக படித்து விட்டு பதிலை இடுங்கள் .

வேதபிரகாஷ்

04-12-2013