Posts Tagged ‘கடத்தல்’

தமிழர்-தமிழரல்லாதோர் பிரச்சினை உருவாக்கப் படக் கூடாது – சட்டத்தைக் கையில் எடுக்கக் கூடாது, கும்பல் கொலைக்கு நியாயம் கற்பிக்கக் கூடாது (2)

மே 17, 2018

தமிழர்தமிழரல்லாதோர் பிரச்சினை உருவாக்கப் படக் கூடாதுசட்டத்தைக் கையில் எடுக்கக் கூடாது, கும்பல் கொலைக்கு நியாயம் கற்பிக்கக் கூடாது (2)

Lynching Tamilnadu style- Pazhaverkadu

கும்பல் கொலை நடதுள்ள விவரங்கள்: திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி, பழவேற்காடு, பெரிய பாளையம், ஆரணி, ஊத்துக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் குழந்தை கடத்தல் பீதி நிலவுகிறது[1]. இதனால் ஊருக்குள் வரும் அப்பாவி வெளியாட்கள் தாக்கப்படும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது[2].

  1. 09-05-2018 அன்று, புலிகேட்டில், வீடில்லாத பாலத்தின் மீதுபடுத்துத் தூக்கிக் கொடிருந்த 45 வயது ஆளை அடித்து உதைத்து அந்த பாலத்திலிருந்தே தொங்கவிட்டனர். இது தொடர்பாக 16 பேர் கைது செய்யப்பட்டனர்.
  2. திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த தம்புகொட்டான்பாறை என்ற இடத்தில், அத்திமூர் முத்துமாரியம்மன் கோயிலுக்கு வழி கேட்டு காரில் வந்தவர்களை, குழந்தை கடத்தல் கும்பல் என்று சந்தேகித்துகிராமத்தினர் அடித்து உதைத்தனர்[3]. அதில் ருக்மணி, 55 / 65 வயது பெண்மணி கொல்லப்பட்டார்[4]. இதுதொடர்பாக, 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்[5]. போலீஸ் நடவடிக்கைக்கு பயந்து கிராம மக்கள் தலைமறைவாகியுள்ளனர்[6]. இப்பகுதிகளிலிருந்து, செம்மரம் கடத்தல் விவகாரத்தில், ஆந்திராவில் அதிகம் கைது செய்யப் படுவது கவனிக்கத்தக்கது.
  3. வேலூரை அடுத்த சிங்கிரிகோவில் என்ற இடத்தில் 09-05-2018 அன்று மாலையில் சாலையில் நடந்த சென்ற 30 வயது மதிக்கத்தக்க ஒரு வட-இந்திய வாலிபரை, குழந்தையை கடத்த வந்தவர் / திருடன் என நினைத்து, அடித்து உதைத்ததில், அவனும் மாண்டான்.
  4. கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள காட்டுமயிலூர் கிராமத்தில் 09-05-2018 அன்று இரவு சுற்றித்திரிந்த வடமாநில பெண் ஒருவரை, குழந்தை கடத்தல் கும்பலை சேர்ந்தவர் என கருதி கிராம மக்கள் மடக்கி பிடித்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த வேப்பூர் போலீசார், அந்த பெண்ணை அங்கிருந்து மீட்டு அழைத்துச்சென்று விசாரித்தபோது அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என தெரியவந்தது. பின்னர் அந்த பெண் சிகிச்சைக்காக விருத்தாசலம் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

போலீஸார், வடநாட்டவருக்கு எதிராக “வாட்ஸ்-அப்” தகவல்களை தவறாகப் பரப்புவதால் அவ்வாறான நிகழ்சிகள் ஏற்படுகின்றன என்கிறார்கள்[7].

Lynching Tamilnadu style- Tiruvannamalai.woman.2

செம்மரக்கடத்தல், அக்குற்றத்தில் ஈடுபடும் தமிழகள், அதை மறைக்க இந்த பிரச்சாரம் என்றால், குற்றங்கள் இன்னும் அதிகமாகும்: செம்மரக் கடத்தல் கைதுகளில் சம்பந்தப் பட்டிருப்பவர்கள், இப்பகுதிகளைச் சேர்ந்தவர் என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம். இதனால், தமிழகத்திற்கும், ஆந்திராவுக்கும் பிரச்சினை உண்டாக்க, திராவிட சித்தாந்திகள் திட்டமிட்டுள்ளார்களா என்றும் யோசிக்க வேண்டியுள்ளது. ஏனெனில், தெலுங்கர்ளுக்கரெதிராகவும் பிரச்சாரம் நடந்து வருகிறது. குழந்தை கடத்தல் தொடர்பான வதந்திகள் வட மாவட்டங்களை கலக்கி வருகின்றன. காஞ்சீபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் குழந்தைகளை கடத்தும் வடமாநில கும்பலின் நடமாட்டம் இருப்பதாக கடந்த சில நாட்களாக வதந்தி பரவி வருகிறது[8]. ‘வாட்ஸ்-அப்’, ‘முகநூல்’ போன்ற சமூக வலைத்தளங்கள் மூலம் பரவும் இதுபோன்ற வதந்திகளால், இதுவரை அப்பாவிகள் பலர் தாக்கப்பட்டு உள்ளனர்[9].குழந்தை கடத்தல் தொடர்பாக வாட்ஸ்-அப்பில் வதந்தி பரப்புவோர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஓராண்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Lynching Tamilnadu style- Tiruvannamalai

எனது தாயை இப்படி அநியாயமாகச் சந்தேகித்துக் கொன்றவர்களுக்கு கடுமையான தண்டனை அளிக்கப்பட வேண்டும்[10]: குழந்தைக் கடத்தல் வதந்தியாலும், தவறான புரிதலாலும் கடந்த வாரம் பொதுமக்களால் அடித்துக் கொல்லப்பட்ட ருக்மிணியம்மாளின் மகன் 42 வயது கோபிநாத்தின் துயரம் எல்லையற்றது. கோபிநாத்தைப் பின் தொடர்ந்து வந்த அவரது 2 வயது மகன் தனது பாட்டியைக் காண வேண்டும் என்று அழுத காட்சி மேலும் உருக்கமாகவும், வேதனையாகவும் இருந்தது. கடந்த வாரம் செவ்வாய் மாலை வரை தனது பேரன், பேத்திகளுடன் சென்னையை அடுத்த பல்லாவரத்தில் இருந்த தனது மகன் வீட்டில் கதை பேசி மகிழ்ந்து சோறூட்டிக் கொண்டாடி இரவுகளில் அவர்களைத் தூங்க வைத்து தலை கோதிக் கொண்டிருந்த ஒரு வயதான பெண்மணியை அறிமுகமில்லாத கிராம மக்களில் சிலர் குழந்தைக் கடத்தல்காரி எனச் சந்தேகித்து சரமாரியாகத் தாக்கிக் கொன்ற விதம் காணொளியாகக் காணக் கிடைக்கிறது. அதைக் கண்டு துக்கத்திலும், ஆத்திரத்திலும் பொங்கியவராக அவரது மகன் கோபிநாத், ‘எனது தாயை இப்படி அநியாயமாகச் சந்தேகித்துக் கொன்றவர்களுக்கு கடுமையான தண்டனை அளிக்கப்பட வேண்டும், எது அதிகபட்ச தண்டனையோ அது அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்’ என்று அரற்றுவது ஒருவகையில் நியாயமானதாகக் கூடத் தோன்றுகிறது[11].

Lynching Tamilnadu style- Tiruvannamalai.woman.3

குழந்தைகள் கடத்தல், குழந்தைகள் காணாமல் போவது, கிடைப்பது-கிடைக்காதது மக்களுக்கு ஆரிவிக்கப் படவேண்டும்:  குழந்தைகள் கடத்தல் சமாசாரம் பேசப்படாமல் இருந்தாலும், மாநிலக் குற்ற ஆவணக் காப்பகம் தரும் அதிகாரபூர்வக் கணக்குகள்படியே தமிழ்நாட்டில் சுமார் 2000 குழந்தைகள் காணாமல் போகின்றனர். “புள்ளப் பிடிக்கிற காரன்கள்” சுற்றிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அன்றாடம் ஐந்து குழந்தைகள் காணாமல் போகின்றனர் எனும்போது, அவ்விசயத்தை விவாதிக்காமல், நடிகைகளைப் பற்றி ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஒருவேளை, பெற்றோர், உற்றோர், மற்றோர் பதற்றமடைவர், பயப்படுவர், மாநிலம் பெயர் கெடும் என்று மறைக்கப் பார்க்க்கின்றனர் போலும்.  இவர்களில் எத்தனை பேர் மீட்கப்படுகின்றனர், மீட்க முடியாமல் போகிறார்கள், வழக்குகள் எப்படி முடிக்கப் படுகின்றன என்பதெல்லாம், பொது மக்களுக்குத் தெரியாது. பொது இடங்களில் பிச்சை எடுப்பது, கூலிவேலைகளுக்கு பயன்படுத்தப் படுவது, முதலியவைப்பற்றியும் விவரங்கள் தெரியப்படுத்துவதில்லை.

Arya-dravida myths acting still-derogatory usage

ஊடகங்கள் பழக்கும் பசிக்கே சமூக வலைதளங்கள் தீனி தயாரிக்கின்றன: தி.இந்து, “செய்தி வியாபாரத்துக்காக நாள் முழுவதும் மக்களிடம் பரபரப்பைப் பரப்பிவரும் ஊடகங்களுக்கும் இதில் முக்கியமான பங்கு இருக்கிறது[12]. ஊடகங்கள் பழக்கும் பசிக்கே சமூக வலைதளங்கள் தீனி தயாரிக்கின்றன[13]. தன்னுடைய பன்மைத்துவக் குணத்தால் உலகின் பல்வேறு திசைகளிலும் பரவியிருக்கும் தமிழ்ச் சமூகத்தை இன்று கொஞ்சம் கொஞ்சமாக இனவெறி நோய்க்கிருமிகள் பீடிக்கத் தொடங்குவது மிக அபாயகரமானது. உடனடியாக முடிவுகட்டப்பட வேண்டியது!,” என்பதில் உண்மை இருக்கிறது. தி.இந்துவிலா, இது வந்துள்ளது என்று ஆச்சரியமாக இருந்தாலும், உண்மை என்பதால், கருத்தைப் பாராட்ட வேண்டியிருக்கிறது. ஆனால், ஊடகங்கள் அந்த அளவுக்கு தாழ்ந்து விட்டனவா என்ற கேள்வியும் எழுகின்றது.

© வேதபிரகாஷ்

17-05-2018

Arya-dravida myths acting still-mental

[1] மாலைமலர், குழந்தை கடத்தல் பீதிமனநோயாளி கொலையில் மேலும் 2 பேர் கைது, பதிவு: மே 14, 2018 13:09

[2] https://www.maalaimalar.com/News/District/2018/05/14130903/1162890/Two-more-people-have-been-arrested-in-Mental-patient.vpf

[3] தி.இந்து, குழந்தை கடத்தல் கும்பல் என்று சந்தேகித்து தாக்குதல்; மூதாட்டி கொலை வழக்கில் 23 பேர் கைது, திருவண்ணாமலை, Published : 11 May 2018 08:01 IST; Updated : 11 May 2018 08:01 IST

[4] http://tamil.thehindu.com/tamilnadu/article23845548.ece

[5] மாலைமலர், குழந்தை கடத்தல் பீதியில் மூதாட்டி கொலைகைது நடவடிக்கைக்கு பயந்து 11 கிராம மக்கள் ஓட்டம், பதிவு: மே 11, 2018 14:12.

[6] https://www.maalaimalar.com/News/District/2018/05/11141250/1162299/child-kidnapping-rumor-11-village-people-escaped-police.vpf

[7] The police say the trigger for the lynchings could be a rash of xenophobic messages circulating on WhatsApp warning that “north Indians” are looking to kidnap children in Tamil Nadu.

http://www.thehindu.com/opinion/editorial/loss-of-innocents/article23857175.ece

[8] ஐ.இ.தமிழ், குழந்தை கடத்தல் வதந்தி : வட மாவட்டங்களை உலுக்கும் கொலைகள், போலீஸ் எச்சரிக்கை, WebDesk, May 11, 2018

[9] https://www.ietamil.com/tamilnadu/child-trafficking-rumours-murders-police-warning/

[10] தினமணி, என் தாயைக் கொன்றவர்களுக்கு உச்சபட்ச தண்டனை அளியுங்கள்! ருக்மிணியம்மாளின் மகன் உருக்கமான வேண்டுகோள்!, By RKV | Published on : 14th May 2018 01:09 PM

[11] http://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2018/may/14/give-maximum-punishment-to-my-mothers-killers–gopinath-so-rukmini-2919581.html

[12] தி.இந்து, அப்பாவிகள் படுகொலைக்கு முடிவுகட்டப்பட வேண்டும்!, Published : 16 May 2018 08:51 IST; Updated : 16 May 2018 12:44 IST

[13] http://tamil.thehindu.com/opinion/editorial/article23899718.ece

 

தமிழர்-தமிழரல்லாதோர் பிரச்சினை உருவாக்கப் படக் கூடாது – சட்டத்தைக் கையில் எடுக்கக் கூடாது, கும்பல் கொலைக்கு நியாயம் கற்பிக்கக் கூடாது (1)

மே 17, 2018

தமிழர்தமிழரல்லாதோர் பிரச்சினை உருவாக்கப் படக் கூடாதுசட்டத்தைக் கையில் எடுக்கக் கூடாது, கும்பல் கொலைக்கு நியாயம் கற்பிக்கக் கூடாது (1)

Dravidanadu, Annaurai - flipflop 1958

திராவிட சித்தாந்திகள் தமிழரை, தமிழகத்தை பிரித்து வைத்து, துவேசத்தை வளர்த்து வருவது: தமிழகத்தில் கடந்த நூறாண்டு காலத்தில், –

  1. தமிழ்-தமிழரல்லாதவர்,
  2. திராவிடன் – ஆரியன்,
  3. தென்னகத்தவன் – வடக்கத்தியன்,
  4. வடக்கு வாழ்கிறது-தெற்கு தேய்கிறது

போன்ற பிரச்சாரங்களால், மற்ற மொழி பேசும், மற்ற மாநிலத்தவர் மீது, மனங்களில் துவேசத்தை வளர்த்து கொண்டிருக்கிறார்கள். “வந்தேறி” தத்துவம் எப்பொழுதுமே உணர்ச்சிப் பூர்வமாக எடுத்துக் கொண்டு, மற்றவர்களைத் தாக்கப் பயம் படுத்தப் பட்டு வருகிறது. பிராமணர், மார்வாடி, குஜராத்தி, வடவிந்தியன் போன்ற பிரிவினை துவேசம் இன்றும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. எந்த பிரச்சினை என்றாலும், “தமிழன்” என்று தான் அடைமொழி போட்டு செய்தி போடுவது, ஊடகங்களுக்கும் வாடிக்கையாக இருக்கிறது. ஶ்ரீலங்கா மதப்பிரச்சினை என்றாலும், “தமிழர்-முஸ்லிம்” என்று தான் செய்திகள் வெளியிட்டு, மதப்பிரச்சினையை மறைக்கப் பார்த்தனர். “காவிரி பிரச்சினை” என்றாலும், திராவிட அரசியல்வாதிகளின்  கையாலாகாத விசயத்தை மறைத்து, கர்நாடகாவை, கன்னட மொழி பேசுபவர்கள் மீது வெறுப்பை-காழ்ப்பை வளர்த்து வருகின்றனர். அதற்கு சத்தியராஜ், விவேக் போன்ற நடிகர்களும் உடந்தையாக இருந்து வருகின்றனர். ஒரு திரைப்படத்தில், “இது பெங்களூரு கத்தரிக்காய், காவிரி நீரால் வளர்ந்து பெரிதாக இருக்கிறது, அது தமிழக கத்திரிக்காய், சிறிதாக இருக்கிறது, காவிரி நீர் கிடைத்தால், அதுவும் பெரிதாக வளரும்,” என்று சொல்வது, பிரிவினையின் வக்கிரகத்தைத் தான் வெளிக்காட்டுகிறது.

Anti-Modi attitude, Dravida

மோடி எதிர்ப்பு, வடவிந்தியர் எதிர்ப்பும்: சமீப மாதங்களில் “ஜல்லிக் கட்டு” பாணியில், மோடிக்கு எதிர்ப்பு, ராணுவ மந்திரி மீது கல்லெறிதல் என்றெல்லாம் அரங்கேறியுள்ளன. லலித் மோடி, நீரவ் மோடி போன்றோரை, பிரதமர் மோடியுடன் இணைத்து நக்கல் அடிப்பதும், திராவிட இனவெறியில் உருவானது, ஊக்குவிப்பது. இதெல்லாம் ஏதோ, வீர-சூர-பராக்கிரம வேலைகளாக சித்தரிக்கப் பட்டு, சமூக ஊடகங்களில் செய்திகளை, வதந்திகளாகப் பரப்பி வருகின்றனர். அதற்கு பிரிவினைவாத திராவிட சித்தாந்த அரசியல்வாதிகள் தான் ஊக்குவிப்பாளர்களாக இருந்து வருகின்றனர். நோயாளியான, கருணாநிதிக்கே, கருப்புச் சட்டை போட்டு, மோடிக்கு எதிர்ப்பு தெரிவிப்பது போல, ஸ்டாலின் போன்றவர்களே செய்திருக்கிறார்கள். இதனால், சாதாரண “தமிழ்” பேசும், தமிழனை உசுப்பி விட்டால் போலகிறது. நாமும், இதுபோல செய்தால், புகழடையலாம், நமது போட்டோ சமூக வலைதளங்களில் பரவும், பிரபலமாகி விடலாம் போன்ற பொய்யான உத்வேக மனப்பாங்கை அவன் கொள்கிறான். செயலிலும் இறங்கி விடுகிறான். “கும்பல்” என்ருவ்ரும் போது, “தரும அடி” பாணியில், எல்லோரும் அடிக்கிறார்கள். கொலையில் முடியும் போது, குற்றமாகி விடுகிறது. மோடி எதிர்ப்பை, மோடியே கண்டு கொள்ளாமல் சென்று விடலாம், ஆனால், கொலையை மறிக்க முடியாது.

Lynching Tamilnadu style- children trafiicking

குழந்தை கடத்தல், விழிப்பான கொலையாளிகள், கொலைகள்நரபலிகள், கும்பல் கொலைகள்: மாட்டிறைச்சி விவகாரத்தில், திருவண்ணாமலையில், மாட்டிறைச்சி உண்ணும் விழா நடைப் பெற்றதை நினைவு படுத்திக் கொள்ளவேண்டும். “மாட்டிறைச்சி கும்பல் கொலை” விவகாரத்தில், செல்யூலரிஸ ஊடகங்கள் அதிகமாகவே ஊளையிட்டன. இப்பொழுதைய “வடவிந்தியர்” படுகொலைகளும் திரித்துப் பேசப்படுகின்றன. ஆனால், “தமிழனை, தமிழன் கொன்று விட்டான்,” எனும்போது, எதிர்க்க்கப் படுகிறது. தி.இந்துவே, கருத்தை தைரியமாக வெளியிடுகிறது. ஆக, இதில் கூட பாரபட்சம் பார்ப்பது, படுகேவலமாக இருக்கிறது. வருடத்திற்கு 2000 குழந்தைகள் காணாமல் போவதும், ஆயிரக் கணக்கான குழந்தைகள் கிருத்துவ காப்பகங்களில், ஆஸ்ரமங்களில் கற்பழிப்பதும், செக்யூலரிஸ ஊடகங்களுக்கு வேறுவிதமாக தெரிகிறது போலும். திராவிட சித்தாந்திகளுக்கும் அது குற்றமாகத் தெரியவில்லை. இனமான தலைவர்களுக்கு, மானம், சூடு, சொரணை எல்லாம் வரவில்லை போலும். இத்தகைய, குரூர வன்மத்துடன் இருப்பதும், சமுதாயத்திற்கு தீங்குதான் விளைவிக்கும், குற்றங்கள் பெருகும். 1960லிருந்து, அத்தகைய நிலை தான் வளர்ந்து வருகிறது. குற்றங்களை, குற்ற்றங்களாக பாவிக்காமல், அவர்கள் அப்படித்தான் இருப்பார்கள், என்று பொதுப்படையான கருத்தை உருவாக்குவதும் குற்றமாகிறது[1]. ஆங்கிலேயர் எப்படி குறிப்பிட்ட குழுக்களை, “குற்றம் சேய்யும் கும்பல்” எண்ரு சட்டப்ப்டி அறிவித்தனரோ, அதுபோல இக்காலத்தில் அறிவிக்க முடியாது, என்பதனை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவேண்டும்[2].

Criticizing outsiers - Tamilnadu style- 1

வதந்திகள் வடசென்னைப் பகுதிகளில் பரவுது ஏன்?: ஆர்.கே.பேட்டை சுற்றுப்பகுதியில், இரண்டு மாதங்களுக்கு முன், தனியாக இருக்கும் பெண்களை, மர்ம நபர்கள் கழுத்தை அறுத்து கொலை செய்வதாக ஒரு செய்தி பரவியது[3]. இந்த வதந்தியால், அறிமுகம் இல்லாத புதிய நபர்களை, மக்கள் அடித்து நொறுக்கிய சம்பவங்களும் நடந்தன. அந்த பரபரப்பு சற்றே ஓய்ந்த நிலையில், தற்போது, குழந்தை கடத்தல் கும்பல் நடமாடுவதாக புரளி கிளம்பியுள்ளது. இந்த புரளி, சமூக வலைதளங்கள் மூலம், வேகமாக பரவி வருகிறது.இதனால், அப்பாவி நபர்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டோர், மீண்டும் தாக்குதலுக்கு உள்ளாகும் நிலை உள்ளது.இதை தவிர்க்கும் விதமாக, காவல் துறையினர், ஒலிபெருக்கி வாயிலாக, கிராமங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். சந்தேகப்படும்படியான புதிய நபர்களை கண்டால், அவர்களை துன்புறுத்தாமல், காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என, அறிவுறுத்தப்படுகிறது. வட மாநில வாலிபர்கள் சிலரை, கிராம பொதுமக்கள் தாக்கிய பின், போலீசாரிடம் ஒப்படைக்கின்றனர். விசாரணைக்கு பின், அவர்கள் அப்பாவி நபர்கள் என்பது தெரிய வருகிறது. வட மாநிலத்தவர் மீது நடத்தும் தாக்குதலை தடுக்கும் வகையில், மாவட்ட எஸ்.பி., சிபிசக்கரவர்த்தி, அனைத்து காவல் நிலையத்திற்குட்பட்ட கிராமம் மற்றும் நகரங்களில், விழிப்புணர்வு கூட்டம் நடத்த உத்தரவிட்டுள்ளார். அதில், வடமாநிலத்தினர் மற்றும் அப்பாவிகள் தாக்கப்படுவதை தடுக்க வேண்டும் என, அறிவுறுத்தியுள்ளார்[4].

Criticizing outsiers - Tamilnadu style- 3

திருத்தணி, ஊத்துக்கோட்டை பகுதிகளில் மர்ம நபர்கள் திரிவதாக வதந்தி[5]: திருத்தணி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, 98 கிராமங்களிலும், டி.எஸ்.பி., சேகர் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் வினாயகம் தலைமையிலான போலீசார், கிராமங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர். நான்கு நாட்களாக, ஊத்துக்கோட்டை, அண்ணாநகர், எட்டிக்குளம், பாலவாக்கம், செஞ்சியகரம், ஆரணி, பெரியபாளையம் மற்றும் மாவட்டத்தின் பல பகுதிகளில், மர்ம நபர்கள் திரிவதாக வதந்தி பரவுகிறது. இதனால், அப்பகுதி இளைஞர்கள், இரவு நேரத்தில் உருட்டுக்கட்டை உள்ளிட்ட ஆயுதங்களுடன், சாலையில் திரிகின்றனர். அசம்பாவிதம் எதும் நிகழக்கூடாது என, ஊத்துக்கோட்டை போலீசார், ஆட்டோ மூலம் விழிப்புணர்வு பிரசாரம் செய்கின்றனர். மேலும், மக்கள் கூடும் இடங்களில், வட மாநிலத்தவர் மீது பொதுமக்கள் தாக்குதல் நடத்த கூடாது என, ‘நோட்டீஸ்’ ஒட்டியுள்ளனர். ஊத்துக்கோட்டை டி.எஸ்.பி., சந்திரதாசன் கூறியதாவது: “குழந்தைகள் கடத்தல் என்ற செய்தி, வெறும் வதந்தி. கிராமங்களில், வெளியாட்கள் நடமாடினால் உடனடியாக அந்தந்த பகுதி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்க வேண்டும். அவர்களை தாக்குவது குற்றச் செயலாகும். இது போன்ற நடவடிக்கையில் யாரும் ஈடுபட வேண்டாம். மீறினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று கூறினார்[6].

 

© வேதபிரகாஷ்

17-05-2018

Holiday for Pongal and anti-Modi slogan

[1] மாலைமலர், கடலூரில் மீனவர்கள் மோதலில் ஒருவர் வெட்டிக்கொலை – 20 பேர் மீது வழக்குப்பதிவு, பதிவு: மே 16, 2018 11:19

[2] https://www.maalaimalar.com/News/District/2018/05/16111909/1163414/Cuddalore-fishermen-murder-case.vpf

[3] தினமலர், வட மாநில மக்களை அடிக்காதேஉதைக்காதே! போலீசார் விழிப்புணர்வு பிரசாரம், Added : மே 11, 2018 06:04.

[4] http://www.dinamalar.com/news_detail.asp?id=2018668

[5] தினமலர், வட மாநில மக்களை அடிக்காதேஉதைக்காதே! போலீசார் விழிப்புணர்வு பிரசாரம், Added : மே 11, 2018 06:04.

[6] http://www.dinamalar.com/news_detail.asp?id=2018668