Posts Tagged ‘ஐயனார்’

பூட்டிக் கிடக்கும் கோவில்களும், உடைக்கப் படும் உண்டியல்கள், கதவுகள், சிலைகள் முதலியன – உள்நோக்கங்களுடன் நடக்கின்றனவா தற்செயலான நிகழ்வுகளா?

ஒக்ரோபர் 23, 2021

பூட்டிக் கிடக்கும் கோவில்களும், உடைக்கப் படும் உண்டியல்கள், கதவுகள், சிலைகள் முதலியன உள்நோக்கங்களுடன் நடக்கின்றனவா தற்செயலான நிகழ்வுகளா?

சாதாராண மக்களின் நேர்த்திக் கடன், வேண்டுதல்கள், பொங்கல் வைப்பது, முதலிய காரியங்கள் தடைப் பட்டுள்ளது: கொரோனா தொற்று, உயிரிழப்பு போன்ற காரணங்களினால், தமிழகத்தில் பெரும்பாலான கோவில்கள் மூடிக் கிடக்கின்றன. இதனால், பக்தர்களுன் கூட்டம் அறவே குறைந்து விட்டது. மற்ற நகரங்களிலிருந்து, மாநிலங்களிலிருந்து கார்களில், பேரூந்துகளில் வந்து செல்லும் கூட்டமும் குறைந்து விட்டது. சாதாரண மக்கள் வேன்களில், ஏன் லாரிகளில் கூட்டம்-கூடமாக வந்து, நேர்த்திக் கடன், வேண்டுதல்கள், பொங்கல் வைப்பது, முதலியவற்றை செய்யும் கட்சிகளும் மறைந்து விட்டன. பிறந்த நாள், திருமணநாள், திருமணம் போன்ற நிகழ்வுகளும் பாதிக்கப் பட்டுள்ளன. பக்தி, சிரத்தை, நேர்த்திக் கடன், வேண்டுதல்கள், முதலியவற்றில் எந்த இடையூறுகள்  வரக்கூடாது என்று பிடிவாதமாக சில பக்தர்கள் கஷ்டப் பட்டு வந்தாலும், கோவில்கள் பூட்டிக் கிடப்பதால், வெளியேலேயே மனம் நொந்து, ஆனால், விடாமல் தங்களது படையல்களை, வேண்டுதல்களை செய்வது, முடிப்பது என்று நடந்து வருகிறது.

தலை உடைக்கப்பட்ட நிலை
சப்தமாதர்கள் சிலைகளின் அடிபாகம் பெயர்க்கப் பட்டுள்ள நிலை

பூட்டை உடைத்து பூஜை செய்த பக்தர்கள்: இந்நிலையில், முக்கியமாக வெள்ளி-சனி-ஞாயிறு நாட்களில் கோவில்கள் பூட்டிக் கிடப்பது, பலருக்கு வருத்தத்தைஅளித்தது. புதியதாக நத்திக-இந்து விரோத கட்சி அரசுக்கு வந்திருப்பதால், அவ்வாறு நடக்கிறது என்று மக்கள் நம்ப ஆரம்பித்து விட்டனர். இந்நிலையில், மூடநம்பிக்கைகளில் அல்லது அப்போர்வைகளில் சிலர் கோவில்களில் நுழைந்து சேதங்களை ஏற்படுத்தி வருகிறார்கள். ஒரு பக்கம் பக்தியின் சிரத்தையினால், கோவில் பூட்டையே உடைத்து, உள்ளே சென்று பூஜை செய்து விட்டு செல்லும் பக்தர்களையும் காண்கிறோம். இன்னொரு பக்கம் உண்டிகளை உடைப்பது, திருடுவது போன்றவை அதிகமாகியுள்ளன. ஆனால், அவற்றையும் மீறி, இப்பொழுது, கோவில் சிலைகளை உடைப்பதில் சிலர் ஈட்டுபட்டிருப்பது தெரிகிறது. இது திட்டமிட்ட செயலா, அல்லது பெரியாரின் தடி வேல செய்கிறாதா, அல்லது பெரியார் போல, சாமி வந்து ஆடும் பக்தர்கள் போல, சிலைகளை உடைக்கிறார்களா என்று தெரியவில்லை.

சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலும், துணைகோவில்களும்: பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் பிரசித்தி பெற்ற மதுரகாளியம்மன் கோயில் உள்ளது. இக்கோவிலுக்கு ஆயிரக்கணக்கில் தினமும் வேண்டுதலாக, குலதெய்வம் என்ற முறையிலும், அனைத்து சமூகத்தினரும் வந்து செல்வார்கள். இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலின் துணை கோயில்களான பெரியசாமி- செல்லியம்மன் கோயில், செங்கமலையார் கோயில்கள் சிறுவாச்சூரில் பெரியசாமி மலையில் அமைந்துள்ளன[1]. இங்கு பெரியசாமி, செல்லியம்மன் சிலைகள் மற்றும் செங்கமலையார், கன்னிமார்கள், பரிவார தெய்வங்களின் 14 சுடுமண் சிலைகள் உள்ளன[2]. இந்த கோவிலுக்கு அருகே, அந்த கோவில்களின் தல வரலாற்றின்படி மூலஸ்தான கோவிலான பெரியசாமி மலைக்கோவில் உள்ளது[3]. வருபவர்கள் எல்லா கோவிகளுக்கும் வந்து தரிசித்து செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

05-10-2021 கோவில்களில் சிலைகள் உடைப்பு: இந்நிலையில், அக்டோபர் 5ம்தேதி அன்று காலை பூசாரிகள் மற்றும் பக்தர்கள் கோயிலுக்குச் சென்றபோது, பெரியசாமி மலையில் உள்ள பெரியசாமி, செல்லியம்மன் சிலைகள், செங்கமலையார் கோயிலில் உள்ள கன்னிமார் சிலைகள் மற்றும் பரிவார தெய்வங்களின் சிலைகள் சேதப்படுத்தப்பட்டு கிடந்தன[4]. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் அளித்த தகவலின்பேரில், பெரம்பலூர் போலீஸார் அங்கு சென்று பார்வையிட்டனர். தொடர்ந்து, சிலைகளை சேதப்படுத்தியது யார் என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்[5]. தலை, கால் என்று உடைத்த நிலையைப் பார்த்தால், விலையுயர்ந்த பொருளுக்கு ஆசைப்பட்டு செய்ததாகத் தெரியவில்லை. மற்ற உயரமுள்ள சிலைகளின் தலைகள் அப்படியே இருக்கின்றன. சிலைகளை உடைக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்திருந்தால், மற்ற சிலைகளையும் சேதப் படுத்தி இருக்கலாம்.

07-10-2021 அன்று இன்னொரு கோவிலில் சிலைகள் உடைப்பு: இந்த நிலையில், 07-10-2021 வியாழக்கிழமை இரவு திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுவாச்சூர் கிராம பகுதியில் இருந்த பெரியாண்டவர் கோவிலில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான 13 கல் சிலைகளும், உடைக்கப்பட்டிருந்தன[6]. அதோடு, கற்சிலைகளின் அடிப்பாகத்தில் வைக்கப்பட்டிருந்த எந்திரத் தகடுகள், காசுகள் திருடப்பட்டிருந்தன. மேலும், சிறுவாச்சூர் முருகன் கோவிலில், குதிரை மற்றும் மயில் சிலைகளும் சேதப்படுத்தப்பட்டிருந்தன.  பெரியசாமி சிலையின் தலையில் பரிவட்டம், இடது கையில் இருந்த பாதுகாப்பு கேடயம், செல்லியம்மன் சிலை, 2 கொங்கானி கருப்பு சிலைகளின் வலது கையில் இருந்த கத்திகள், 4 சாத்தடையார் சிலைகளின் வலது கையில் இருந்த கத்திகள், 2 பாப்பாத்தியம்மன் சிலைகள், புலி வாகனம் ஒன்று ஆகியவை உடைக்கப்பட்டு, சேதமடைந்து கிடந்தன[7]. மேலும் பெரியசாமி மலை கோவில் அருகே உள்ள செங்கமலையார் கோவிலில் சப்த கன்னிமார்கள் மற்றும் பரிவார தெய்வங்கள் என அங்குள்ள 14 சாமி சிலைகளில் 5 சிலைகள் உடைத்து சேதப்படுத்தப்பட்டிருந்தது[8]. மாவட்டம் முழுவதும் உள்ள பக்தர்கள் இந்தத் தொடர் சிலை உடைப்புகளால் அதிர்ச்சியடைந்தனர் .சிலைகள் உடைப்பு குறித்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணி நேரில் விசாரணை நடத்தினார்.

சக்கரம்எந்திரம் தேவை என்றால், அடிப்பகுதிகள் தான் சேதப் பட்டிருக்க வேண்டும்: சப்த மதர் சிலைகள் அடியோடு பெயர்த்துத் தள்ளப் பட்டுள்ளன. இது நிச்சயமாக சக்கரம்-எந்திரம் தேவை என்ற ரீதியில் சேதப் படுத்தியது தெரிகிறது. இந்த நிலையில், பெரியசாமி கோயில் பக்கம் சந்தேகத்திற்கு இடமாக சுற்றிக் கொண்டிருந்த நபரைப் போலீசார் பிடித்து விசாரித்ததில் அவர் தான் சிலைகளை உடைத்தவர் என்பது தெரியவந்தது[9]. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோயிலைச் சேர்ந்த 35 வயதான நடராஜன் என்கிற நாதன் என்பது விசாரணையில் தெரியவந்தது[10]. சிலைகளின் அடியில் உள்ள எந்திரத் தகடுகளை வீட்டில் வைத்தால், செல்வம் கொழிக்கும்; பணமழை கொட்டும்; குடும்பம் சுபிட்சமாகும் என நினைத்துள்ளார் நடராஜன், என்று ஊடகங்கள் நிறுத்திக் கொண்டுள்ள நிலையில், நக்கீரன், இதனை கொஞ்சம் நீட்டியுள்ளது. அதாவது, அவர் சென்னையைச் சேர்ந்த நாதன் என்கின்ற தெலுங்கு பிராமணர் வகுப்பைச் சேர்ந்தவர் என்று தாடி ராஜா சொன்னதாகக் கூறுகிறது[11]. இதனால் போலீஸ் அவரது மனநலம் குறித்து மருத்துவரீதியாக சோதித்து விட்டு, அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளது[12].

சிலைகள் உடைப்பதற்கு உள்நோக்கம் என்ன?: “கிராமக் கோவில்களில் சிலைகளை உடைக்கும் வக்கிரக் கும்பல்,” என்றால் அக்கும்பலில் உள்ள மற்றவர்கள் யார் என்று சொல்ல வேண்டும். ஒருவரை மட்டும் பிடித்து, வழக்கை முடித்து விடும் போக்கு இருக்கக் கூடாது. பல இடங்களில் செய்துள்ளதால், ஒரே நபர் செய்திருக்க முடியாது. ஆகவே இங்கு ஆதாயம் என்பதை விட, வேறு உள்நோக்கம் இருப்பதையும் கவனிக்கலாம். கிராமக் கோவில்களைக் குறிவைக்கிறார்கள் என்பதா அல்லது அத்த்கைய தோற்றத்தை உண்டாக்க வேண்டும் என்றுள்ளதா? இக்கோவில்களுக்கும் மக்கள் வரவேண்டும் என்று கவனத்தை ஈர்க்க செய்யப் பட்டுள்ளதா? தமிழ்-தெலுங்கு போன்ற நக்கீரத்தனமும் உள்ளதா? இல்லை இந்துவிரோத, நாத்திக, பெரியாரிஸ மற்ற கும்பல்கள் வேலை செய்கின்றனவா போன்ற கேள்விகளையும் எழுப்பலாம். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, இத்தகைய நிகழ்ச்சிகளும் நடப்பதும் திகைப்பாக இருக்கிறது.  

© வேதபிரகாஷ்

23-10-2021


[1] தமிழ்.இந்து, சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயிலின் துணை கோயில்களில் சாமி சிலைகள் சேதம், செய்திப்பிரிவு, Published : 07 Oct 2021 03:15 AM; Last Updated : 07 Oct 2021 03:15 AM.

[2] https://www.hindutamil.in/news/todays-paper/regional01/723682-.html

[3] மாலை மலர், பெரம்பலூரில் பெரியாண்டவர் கோவிலில் 13 சாமி சிலைகள் உடைப்பு, பதிவு: அக்டோபர் 08, 2021 15:13 IST

[4] https://www.maalaimalar.com/news/district/2021/10/08151339/3080520/Tamil-News-13-god-statue-broken-in-perambalur.vpf

[5] இ.டிவி.பாரத்.காம், பெரம்பலூர் அருகே சிறுவாச்சூர் பெரியசாமி மலையில் சாமி சிலைகள் உடைப்பு, Published on: Oct 6, 2021, 11:04 PM IST.

[6] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/state/perambalur/sami-idols-smashed-on-siruvachchur-periyasamy-hill-near-perambalur/tamil-nadu20211006230446227

[7] தினத்தந்தி, மதுரகாளியம்மன் உபகோவில்களில் சாமி சிலைகள் உடைப்பு, பதிவு: அக்டோபர் 07,  2021 01:35 AM.

[8] https://www.dailythanthi.com/Districts/Chennai/2021/10/07013518/Breaking-of-Sami-idols-in-Madurakaliamman-sub-temples.vpf

[9] NEWS18 TAMIL, சாமி சிலைகளுக்கு அடியில் எந்திர தகடுகிடைத்தால் பணம் கொட்டும்… 29 சிலைகளை உடத்த நபர், LAST UPDATED : OCTOBER 09, 2021, 19:43 IST

[10] https://tamil.news18.com/news/tamil-nadu/perambalur-district-person-who-broke-the-20-god-idols-in-perambalur-vjr-581563.html

[11] நக்கீரன், கிராமக் கோவில்களில் சிலைகளை உடைக்கும் வக்கிரக் கும்பல்!, எஸ்.பி. சேகர், Published on 20/10/2021 (07:03) | Edited on 20/10/2021 (07:42).

[12] https://www.nakkheeran.in/nakkheeran/perverted-mob-breaking-idols-village-temples/perverted-mob-breaking-idols-village