Posts Tagged ‘எண்ணூர்’

நார்த் மெட்ராஸ் – சவுத் மெட்ராஸ் கட்டுக்கதை “வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது” என்பதன், உல்டா சித்தாந்தம்!

செப்ரெம்பர் 20, 2019

நார்த் மெட்ராஸ்சவுத் மெட்ராஸ் கட்டுக்கதைவடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறதுஎன்பதன், உல்டா சித்தாந்தம்!

North , south Madras -1

அம்பட்ட வாராதியும், நார்த் மெட்ராஸ்சவுத் மெட்ராஸ் கட்டுக்கதைகளும்: சமீபத்தில், சிலர் வடக்கு சென்னை – தெற்கு சென்னை, நார்த் மெட்ராஸ் – சவுத் மெட்ராஸ்  போன்ற ரீதியில், ஏதோ வடக்கு சென்னை / நார்த் மெட்ராஸ் என்றால் இழிவானது, மோசமானது, ரௌடியிஸத்தைக் குறிக்கிறது என்றெல்லாம் கதைக் கட்டி வருகின்றனர். தமிழகத்தைப் பொறுத்த வரையில், திராவிட-திராவிடத்துவ-பகுத்தறிவு சித்தாந்தங்கள் சரித்திரத்தைப் பற்றிக் கவலைப் படக்கூடியது கிடையாது, இல்லை சரித்திரம், காலக்கிரம நிகழ்சிகள் அலசல் போன்றவை தேவையில்லை என்ற ரீதியில், எதை வேண்டுமானாலும் பேசலாம்-எழுதலாம் என்ற நிலையில் உள்ளனர். அரசியல், பணம் ஆதரவுகள் இருக்கும் போது, மற்றவற்றைப் பற்றியும் கண்டுகொள்வதில்லை. புத்தக வெளியீடு, பாராட்டு விழா என்று நடத்திக் கொண்டு காலந்தள்ளிக் கொண்டிருக்கின்றன. பிறகு, புத்தகக் கண்காட்சியிலும் விழா நடத்துவார்கள். தாங்கள் சொல்வது-எழுதியது தான் உண்மை என்பது போலக் காட்டிக் கொள்வார்கள்[1].

North , south Madras -2

நார்த்-மெட்ராஸ்-சவுத்-பெட்ராஸ் என்றால், மிடில்-மெட்ராஸ் எங்கே?: எண்ணூர், திருவொற்றியூர், டோல்கேட், பேசின் பிரிட்ஜ், வியாசர்பாடி, மாதவரம், பெரம்பூர், அம்பத்தூர், ஆவடி முதலிய இடங்களிலிருது தான் வேலையாட்கள் வருகிறார்கள் என்றால், அங்கு, தொழிற்பேட்டை மற்றும் தொழிற்சாலைகள் இருந்ததாலும், பிறகு, அங்கிருந்த சில தொழிற்சாலைகள் மூடப் பட்டு, வடசென்னையில் ஆரம்பித்ததாலும், அத்தகைய நிலை ஏற்பட்டது[2]. பொன்னேரி, கும்பிடிப் பூண்டி பகுதிகளில் தொழிற்சாலைகள் ஆரம்பித்த போது, இடபெயர்ச்சி ஏற்பட்டு, பிறகு வீடுகள் கட்டிக் கொண்டு வாழ ஆரம்பித்த போது, அவை மேம்பட ஆரம்பித்தன. இப்பொழுது, அவையே சென்னைக்கு ஈடாக மாறிவிட்டன. நகரப்பெருக்கம், விரிவு, வளர்ச்சி முதலிய காரணிகளை வைத்துப் பார்த்தால் இவையெல்லாம் சாதாரணமான இகழ்வுகள் தான். இதே நிலைதான் திருவான்மியூர், பாலவாக்கம், புது மற்றும் பழைய மகாபலிபுரம் பகுதிகளில் வேறுவிதமாக ஏற்பட்டுள்ளன. விஜிபி தங்க கடற்கரை உல்லாச விடுதி எப்படி வடக்கிலிருந்து, தெற்காக சென்றுள்ளதோ, மக்களும் சென்றுள்ளார்கள். இதை வைத்துக் கொண்டு எந்தவிதமான பிரிவினைகளையும் உண்டாக்க முடியாது. ராயபுரம் முதல் எண்ணூர் வரை மீன் பிடித்துக் கொண்டிருப்பார்கள், அதனால், மீனவர்கள் அதிகம் என்பதெல்லாம் பொதுப்படையாகச் சொல்வது. கடற்கரைகளில் வாழ்பவர்கள் மீன் பிடிக்கத்தான் செய்வர்[3]. இதில் வர்க்கம், ஜாதி, பேசுகின்ற முறை முதலியவற்றை வைத்து விளக்கம் அளிப்பது மக்களப் பிரிக்கும் போக்கைத் தான் காட்டுகிறது[4].

Saidapet dhobi khana

வண்ணாரப் பேட்டை பற்றிய விவரங்கள்: வண்ணாரப் பேட்டையில் வண்ணார்கள் வாழ்ந்தார்கள், துணி துவைத்துக் கொண்டிருந்தார்கள் என்றால், தெற்கில் அத்தகையோர் இல்லை என்றாகாது. சைப்பேட்டையில், அவர்களுக்கு என்று துறையுள்ளது, கோவில் உள்ளது. இன்றும் துவைத்துக் கொண்டிருக்கிறார்கள். சென்னை, சைதாப்பேட்டை வண்ணான் துறைக்கு ரேணுகாதேவி பெர் இருப்பது, அங்கிருக்கும் கல்வெட்டு, இன்றும் எடுத்துக் காட்டுகிறது. சேத்துப் பட்டிலும் வண்ணாந்துறை இருந்தது, இருக்கிறது. “தோபி கானா” எனப்பட்டன. அதாவது, 100 ஆண்டுகளுக்கு முன்னால், இந்த கூவம், அடையாறு நதிகளில் நல்ல நீர் ஓடிக்கொண்டிருந்தது. அப்பொழுது, துணிகள் துவைக்கப் பட்டன. இப்பொழுதுள்ள எழுத்தாளர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் உண்மையறியாது, ஏதோ பத்து புத்தகங்களைப் படித்து, அடுத்தவர்கள் சொன்ன கதைகளை வைத்து, ஏதோ “இன்பூளுயன்ஸ்” வைத்துக் கொண்டு, ஊடகங்களில் “ரீல்” விட்டுக் கொண்டிருக்கிறார்கள். நாளடைவில், அதுவே விவாதமாக மாறுகிறது.

Tiruvotriyur Temple

சினிமா, வசனங்கள், அளவு கோளாக முடியாது: மனோரமா, லூஸ் மோஹன், கமல் ஹஸன் மெட்ராஸ் பாடையில் வசனம் பேசியதால் மட்டும் அவ்வாறு ஆகி விடமுடியாது. “அடுத்தாத்து அம்புஜத்த பார்த்தேளா?” பாடிக் கொண்டிருந்தபோது தான் [எதிர்நீச்சல் 1968], “வா வாத்தியாரெ வூட்டான்டே,” [பொம்மலாட்டம்  , 1968] “முத்துக் குளிக்க வாரிகளா?” [அனுபவி ராஜா அனுபவி, 1967] பாட்டுகள் ஒலித்தக் கொண்டிருந்தன. சினிமாவை வைத்து, ஒட்டு மொத்தமாக சமூகத்தை எடை போடுவதும், அரசியல் விமர்சனம் செய்வதும் சரியாகாது. ஏனெனில், அவற்றில் பொய்கள் தான் அதிகமாக இருக்கின்றன. குறிப்பாக 70-150 வருட சரித்திர நிகழ்வுகளை அறியாமல் அல்லது மறைத்து திரிபு விளக்கம் கொடுப்பது தான் தெரிகிறது. “அம்பட்ட வாராதி” கதை அவர்களது வாத-விவாதங்கள், பேச்சு-எழுத்துகளில் தென்படுகிறது.

Trupati umbrella procession

கருப்புப் பட்டினம் [Black Town], வெள்ளைப் பட்டினம் [White town]: வடக்கு சென்னை – தெற்கு சென்னை, நார்த் மெட்ராஸ் – சவுத் மெட்ராஸ் போன்ற பிரிவுகள் – உண்மையில் அத்தகைய பாகுபாடு இருந்ததில்லை. தேர்தலுக்காக அவ்வாறு பிரிக்கப் பட்டது தான். ஆங்கிலேயர் கோட்டைக் கட்டிக் கொண்டு வாழ்ந்ததால், அவர்கள் கோட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை இனரீதியில்[5], “வெள்ளைப் பட்டினம்,” மற்றதை “கருப்புப் பட்டினம்” என்றழைத்தனர். அந்த “கருப்புப் பட்டினம்” “கருப்புப் பட்டினம்” தான், பிறகு, பொய்யாக “ஜியார்க் டவுன்” சொல்லப் பட்டது. அப்பொழுது தென் சென்னை அல்லது சவுத் மெட்ராஸ் இல்லை எனலாம். மேடுகளாக-பள்ளங்களாக, ஏரிகளாக, சுடுகாடுகள் போன்ற பகுதிகளாக இருந்தன. மிகப்பெரிய பள்ளம் தான், மாபள்ளம் ஆகி, மாம்பலம் ஆகியது. மூர் மார்க்கெட், கொத்தவால் சாவடி, சால்ட்-குவாட்டர்ஸ், பூக்கடை, பாய்க்கடை என்று எல்லா வியாபாரங்களுக்கும் மையாமக இருந்தது. “திருப்பதி கொடைகள்” வந்தால், கவுனியிலிருந்து புறப்படும், சென்னை முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டுவர். திருமலைக்கு நடந்து செல்வோர் இங்கிருந்து தான் அதிகமாக இன்றளவும் இருக்கின்றனர்.

Trupati padayatra

வடசென்னை பழமையானது, புனிதமானது: பழங்கால கோவில்கள் இருந்ததால், சங்கரர், சம்பந்தர் போன்றவர்களும் கோவில்களுக்கு வந்துள்ளனர். மிகப்பழமையான கோவில், கடலில் மூழ்கியே விட்டது. குணங்குடி மஸ்தான் சாஹிபு [1792-1838], ராமலிங்க அடிகள் [1823-1874], போன்றோர் வாழ்ந்ததும் இங்குதான். குணங்குடி மஸ்தானை மக்கள் தொண்டியார் என்று அழைத்து வந்ததால் அவரிருந்த இடம் தொண்டியார்பேட்டை ஆயிற்று என்றும் சொல்லப்படுவதுண்டு. ராமலிங்க அடிகள், தாயார் குழந்தைகளோடு பொன்னேரி சென்று வாழ்ந்தார். பின்னர் சென்னையில் ஏழுகிணறு பகுதி 39, வீராசாமி பிள்ளை தெருவில் உள்ள வீட்டில் குடியேறினார். அண்ணன் சபாபதி சமயச் சொற்பொழிவு செய்து வந்தார். சித்தர்கள், சோதிடம், போன்ற புத்தகங்களை மின்டிலிருக்கும் ரத்னசாமி நாயக்கர் அன்ட் சன்ஸ் வெளியிட்டது. 1890ல் ஆறுமுக நாவலர், வித்யானுபால அச்சகத்தை இங்கு 300, மின்ட் சாலையில் நிறுவினார்.  நார்த் மெட்ராஸ் என்று எதிர்மறை விளக்கம் கொடுப்பவர்கள், இவற்றையெல்லாம் வைத்துப் பார்த்தால், என்ன செய்வார்கள்?

Ennore port

நார்த் மெட்ராஸ்சவுத் மெட்ராஸ் கட்டுக்கதைவடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறதுஎன்பதன், உல்டா சித்தாந்தம்: 190களில் திராவிடத்துவாதிகள் பேசி-பேசியே மக்களை மூளை சல்லவை செய்து வைத்தனர். தலைவர்களின் கவர்ச்சி, அழுத்தம், முதலியவற்றில் கட்டுண்டு கிடந்ததால், “தீக்குளிக்கவும்” தயாராக இருந்தார்கள் என்று காட்டிக் கொண்டனர். அதற்கேற்றார் போல, “மொழிப் போர் தியாகிகளை” உண்டாக்கினர். அதற்கு பென்சன் எல்லாம் கொடுக்கப் பட்டது. இதனால், தீக்குளிப்பதும் அதிகமாகின. பிறகு, இந்தி எதிர்ப்பு போராட்டங்களில் கலந்து கொண்டவர்களை “மொழிப்போர் தியாகிகள்” என்று பட்டங்கள், பென்சன் எல்லாம் கொடுத்தனர். இவையெல்லாம் இந்தி பேசும் மக்களுக்கு வியப்பாக இருந்தது. இந்தியர்களாக இருந்து கொண்டு, ஒரு மொழியை எதிர்த்தால் எப்படி தியாகிகள் ஆவார்கள் என்று அவர்கள் கேட்கவும் செய்தனர். “வெவ்வேறு மொழிபேசும் இனங்கள் வாழும் நாட்டில் தங்கள் தாய்மொழியின் தூய்மையை, பிறமொழித் திணிப்பை காக்க நடக்கும் போர்,” என்றெல்லாம் குறிப்பிட்டு, மக்களிடையே வெறுப்பைத் தான் வளர்த்தனர். ஆகவே, இங்கு. “வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது” என்றெல்லாம் சொல்ல முடியாது. வடக்கு தான் நன்றாக முன்னேறியுள்ளது. தெற்கில் உள்ளவர்கள் அவதிப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

© வேதபிரகாஷ்

20-09-2019

Tirupati temple umrella crossing yanai kavuni

[1]  இப்பொழுதெல்லாம், இவை வியாபாரத் தந்திரங்களே. புத்தகம் அல்லது திரைப்படத்திற்கு விளம்பரம் இவ்வாறு தேடப் படுகிறது. புரளியை அவர்களே கிளப்பி விடுவார்கள்.

[2]  ரியல் எஸ்டேட் மதிப்பு உயர்வதாலும், தொழிற்சாலைப் பகுதி இடத்தை விற்று கோடிகளில் அள்ளும் மோசடிகளும் இருக்கின்றன. “ஸ்பெகுலேஷன்                                          ” என்ற ரீதியிலும் இது செயல்பட்டு வருகிறது.

[3] DTNext, North and South Madras: Understanding the needs of a city through its working population, AM by Bernard D’Sami Published: Nov 09,201808:00

[4] https://www.dtnext.in/News/City/2018/11/09051742/1094939/North-and-South-Madras-Understanding-the-needs-of-.vpf

[5]  இல்லை இனவெறி ரீதியில் என்றும் சொல்லலாம். “அபார்தியட்” போன்று தான் பிரித்து வைத்தார்கள்.