கந்த சஷ்டி கவசம் முதல், கந்த புராணம் வரை: கருப்பு, கருப்பு–சிவப்புக் கூட்டத்தாரின் தாக்குதல்கள் – தேர்தல் நேரத்திலும் தொடர்ந்து இந்துவிரோத திமுக இவ்வாறு ஈடுபடுவது.

நாகர்கோவிலில் கூட்டத்தில் ”ஹிந்துக்களை வஞ்சிக்கும் கட்சிகளை ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்க வேண்டும்” என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது (03-01-2021): நாகர்கோவிலில் திருத்தொண்டர்கள் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடந்த சிவனடியார்கள் கூட்டமைப்பு கூட்டத்தில் ”ஹிந்துக்களை வஞ்சிக்கும் கட்சிகளை ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்க வேண்டும்” என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது[1]. இந்த கூட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிவனடியார்கள் கலந்து கொண்டனர். ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கோயில் சொத்துகளை ஒரு சதுர அடி கூட விடாமல் மீட்டு கோயில்கள் வசம் ஒப்படைப்பது. அடியார்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு மருத்துவம், கல்வி உதவி வழங்க வேண்டும். சைவ மதத்துக்கு எதிராக தவறான கருத்து சொல்பவர்களை மாநிலம் முழுவதும் ஒரே குரலில் எதிர்க்க வேண்டும். ஹிந்துக்களை வஞ்சிக்கும் அரசியல் கட்சிகளை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பது உள்ளிட்ட 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன[2]. இது விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் வகையில் சிறப்பாகத் தெரிகிறது. இத்தகைய கூட்டங்கள் நிறைய நடத்தப் படவேண்டும். அத்தகைய செய்திகள் மக்களைச் சென்றட்டைய வேண்டும். குறிப்பாக, இன்றும் திக-திமுக திராவிடக் கட்சிகளை விசுவாசமாக ஆதரித்து வரும், சில சைவ சமூகத்தினர், இதுவரை நடந்துள்ள, நடந்து வரும் தீமைகளைக் கருத்திற்க் கொண்டு மாற வேண்டும்.

நெல்லையில் எதிர்ப்பு தெரிவித்த இந்து அமைப்பினர்: கந்தபுராண பாடலை திமுக கட்சி பாடல் போல் மாற்றி இழிவு படுத்தியதைக் கண்டித்து நெல்லை டவுனில் இந்து முன்னணியினர், சிவனடியார்கள், பாரதிய ஜனதா கட்சி உள்ளிட்ட இந்து அமைப்புகள் இணைந்து திருமுறைகள் பாடி பெருந்திரல் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்[3]. வான்முகில் வழாது பெய்க என்ற கந்தபுராண வாழ்த்து பாடலை இழிவுபடுத்தும் விதமாக சமூக வலைதளங்களில் திமுக தேர்தல் பிரச்சார பாடல் போல மாற்றி பதிவேற்றம் செய்த நபர்களையும் இறை வழிபாட்டு பாடல் கட்சி பாடல் போல் உருவாக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் நெல்லை டவுன் வாகையடி முனையில் இந்து முன்னணி சார்பில் பெருந்திரல் பிரார்த்தனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த பிரார்த்தனை கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சி உள்ளிட்ட இந்து அமைப்புகள் மற்றும் சிவனடியார்கள் திருக்கூட்டம் இணைந்து தேவார திருவாசக திருமுறை பாடல்கள் பாடி இறைவனை வழிபட்டு பெருந்திரள் பிரார்த்தனையில் ஈடுபட்டனர் அதனைத் தொடர்ந்து கட்சி பாடலாக மாற்றம் செய்து கந்தபுராண வாழ்த்துப் பாடலை இழிவுபடுத்திய நபர்கள் மீதும் சமூக வலைதளங்களில் அதை பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது[4].

2020ல் காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் கருப்பர் கூட்டத்தைக் கண்டித்தது: இந்து கடவுள்களை அவமதித்தால் நாக்கை துண்டிக்க பயப்பட தேவையில்லை என காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் 22-07-2020 அன்று தெரிவித்துள்ளார்[5]. கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கறுப்பர் கூட்ட யூ ட்யூப் சேனலுக்கு கண்டனம் தெரிவித்தார். தமிழகத்தில் இது போன்ற பேச்சுகள் நிறுத்தப்பட வேண்டும் என்றும் இந்து மதத்தை இது போன்று இழிவுபடுத்தும் செயல்களில் யாராவது செயல்பட்டால் அவர்களின் நாக்கை துண்டிப்பதற்கும் கூட பயப்பட தேவையில்லை எனவும் ஆதீனம் பேசினார்[6]. உண்மையில், அவர் ஆதங்கத்துடன், பேசியுள்ளதை நினைவு கூறவேண்டும். தெய்வநம்பிக்கை ஆழமாக-உறுதியாக இருப்பது நல்லது தான், ஆனால், எல்லாவற்றையும் கடவுள் பார்த்துக் கொள்வார் என்று சும்மா இருக்க முடியாது. தேர்தல், ஓட்டு, ஓட்டுவங்கி, ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், இத்தகைய இந்துமத-தூஷணங்களை செய்து வருவதால், நிச்சயமாக, இந்துக்கள் அதே முறையில், சரியான பதிலை சொல்லியாக வேண்டும். அவர்களுக்கு இந்து-ஆதரவு ஆட்சித் தேவையா அல்லது இந்து-விரோத ஆட்சி வேண்டுமா என்று இந்துக்கள் தான் தீர்மானிக்க வேண்டிய நிலையுள்ளது. “ஆவணன் ஆண்டால் என்ன, ராமன் ஆண்டால் என்ன” என்று இருந்தால், இதே இந்துவிரோத நிலைத் தான் தொடரும்.

2019ல் சில மடாதிபதிகள் பேசியது: சென்னை சேப்பாக்கத்தில் 12-04-2019 அன்று ஆதீனங்கள், துறவிகள், மடாதிபதிகள் என 11 பேர், தங்களது தேர்தல் நிலைப்பாட்டை அறிவித்தனர். அப்போது பேசிய பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாசல அடிகள், இந்து மதத்திற்கு எதிராக செயல்படுபவர்களுக்கு பாடம் புகட்டும் வகையில், மக்கள் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்[7]. யார் இந்து மத தொண்டர்கள் என தங்களை அறிவிக்கிறார்களோ, குங்குமம் வைக்கிறார்களோ, அவர்களுக்கே ஆதரவளிக்க வேண்டும் எனவும், அவர் குறிப்பிட்டார்[8]. பின்னர் பேசிய கோவை காமாட்சிபுரி ஆதீனம் சாக்தஸ்ரீ சிவலிங்கேஸ்வரர், தெய்வபக்தி நிறைந்த தமிழகத்தில் ஆன்மிகத்திற்கு எதிராக தலைவர்கள் பேசுவதற்கு கண்டனம் தெரிவித்தார். இதே நிலை, இப்பொழுது 2021லும் தொடர வேண்டும். இந்து அமைப்புகள் மறுபடியும் இத்தகைய கூட்டங்களைக் கூட்ட வேண்டும், இணதள பிரச்சாரங்களும் நடந்து வருவதால், அத்தகைய முறைகளையும் கையாள வேண்டும். சைவ மடங்கள், உழவாரப் பணி குழுக்கள் முதலியவற்றையும், அதில் ஈடுபடுத்தப் படவேண்டும்.

இந்துக்கள் கவனிக்க வேண்டியது, செய்ய வேண்டியது முதலியன: மேற்குறிப்பிட்ட நிகழ்வுகள், பின்னணி. அரசியல், அதிகாரம் போன்ற காரணிகளை உன்னிப்பாக அலசிய பின்னர் கீழ்காணும் அம்சங்கள் கொடுக்கப் படுக்கின்றன:
- முன்பு ஆண்டாள், இப்பொழுது முருகன் என்று திட்டம் போட்டு, இந்துக்களின் மங்களைப் புண்படுத்தி வருவது தெரிகிறது.
- உண்மையான நாத்திகம் என்றால், கடவுள் இல்லை என்பதும் உண்மையான கொள்கையாக இருக்க வேண்டும். ஆனால், நாத்திகர் என்று பிரகடனப் படுத்திக் கொண்டு, இந்து-அல்லாத கடவுளர்களை விமர்சிப்பது, தூஷிப்பது கிடையாது. எனவே, அவர்களது நாத்திகம், இந்துவிரோத நாத்திகம் ஆகிறது.
- அதனால், தான் கிறிஸ்தவ-முஸ்லிம் கோஷ்டிகள் இவர்களது மேடைகளில் பிரசங்கம் செய்கிறார்கள் மற்றும் கிறிஸ்தவ-முஸ்லிம் மேடைகளில், இந்துவிரோத நாத்திகர்-திராவிடத்துவ துவேசிகள் பேசி வருகிறார்கள்.
- கஞ்சி குடித்தும், கேக்-வெட்டி நக்கி சாப்பிட்டும், கிறிஸ்தவ-முஸ்லிம்களுக்கு ஜால்றா போட்டு வருகிறார்கள், பாராட்டி பேசுகிறார்கள்.
- புகார் கொடுத்தாலும், எப்.ஐ.ஆர் போட்டாலும், சட்டப் படி, இவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. அவையெல்லாம் அப்படியே காலாவதியாகின்றன,
- அதனால் தான், செய்த குற்றங்களையே, திரும்பச் செய்து வருகிறார்கள். சட்டப் படி, தங்களை ஒன்றும் செய்ய முடியாது என்ற ரீதியில் அதே தூஷணங்களை செய்து வருகிறார்கள்.
- ஆகவே, சட்டப் படி நடவடிக்கை எடுக்க வைத்து, ஒருவனையாவது, தண்டனைக்கு உட்பத்த வைத்து, தண்டிக்கப் பட்டால், மற்றவர்களுக்கு பாடமாக்க இருக்கும், அச்சம் ஏற்படும்.
- இல்லையென்றால், பயமில்லாமல் போகும், “காலையில் கைது, மாலையில் விடுதலை,” போன்ற விளையாட்டாகி ஆகிவிடும்.
- தேர்தல் நேரத்தில் இவ்வாறு செய்யும் போது, அத்தகைய தேர்தல் சட்டங்கள் பிரிவுகளின் கீழ், உரிய சட்டமீறல்களை குறிப்பிட்டு, ஆதாரங்களுடன் புகார் கொடுத்தால், தேர்தலில் நிற்கமுடியாத நிலையையும் உண்டாக்கலாம்.
- தமிழகத்தில் இருக்கும் சுமார் 300 இந்து மடங்கள், அமைப்புகள் முதலியவை, இதில் ஒன்று பட்டு செயல்படவேண்டும்.
© வேதபிரகாஷ்
05-01-2021

[1] தினமலர், ஹிந்துக்களை வஞ்சிக்கும்கட்சிகளை ஆட்சிக்கு வரவிடக்கூடாது: சிவனடியார்கள் தீர்மானம், Added : ஜன 04, 2021 01:34
[2] https://www.dinamalar.com/news_detail.asp?id=2683101
[3] தினமலர், நெல்லை டவுணில் திமுகவைக் கண்டித்து இந்து அமைப்பினர் போராட்டம், பதிவு செய்த நாள் : 03 ஜனவரி 2021 18:44.
[4] http://www.dinamalarnellai.com/web/districtnews/52654
[5] தினத்தந்தி, இந்து கடவுள்களை அவமதித்தால் நாக்கை துண்டியுங்கள் – காமாட்சிபுரி ஆதீனம், பதிவு : ஜூலை 23, 2020, 10:40 PM
[6] https://www.thanthitv.com/News/TamilNadu/2020/07/23224038/1543722/Hindu-Gods-Kamtchi-aadenam.vpf.vpf
[7] நியூஸ்.7.செனல், “இந்து மதத்திற்கு விரோதமாக இருக்கும் சக்திகளுக்கு மக்கள் வாக்களிக்க கூடாது” : தமிழக இந்து துறவிகள் குழு, April 13, 2019 1 view Posted By : manoj.b, Authors. https://ns7.tv/ta/q7bcv9
[8] https://ns7.tv/ta/q7bcv9 [now snapshot view is available accessed on 05-01-2021]
