Posts Tagged ‘இந்தி எதிர்ப்பு’

கருணாநிதி சிலை திறப்பு – சிலை வைத்தல், எடுத்தல், கடத்தல், உடைத்தல் எல்லாமே திராவிட கலாச்சாரம், பண்பாடு, நாகரிகம் தான்! சேர்ந்த அரசியல் அநாகரிகம் [2]

திசெம்பர் 17, 2018

கருணாநிதி சிலை திறப்புசிலை வைத்தல், எடுத்தல், கடத்தல், உடைத்தல் எல்லாமே திராவிட கலாச்சாரம், பண்பாடு, நாகரிகம் தான்! சேர்ந்த அரசியல் அநாகரிகம் [2]

EVR-karu-atheist-path-of-jihadi

1973, ஈவேராவுக்கு சிலை வைத்த போது, மறுபடியும் கருணாநிதி சிலை பேச்சு எழுந்தது: அதன் பின்னர் 1973-ம் ஆண்டு பெரியார் மறைவுக்குப் பின்னர் திமுக சார்பில், சென்னை அண்ணா சாலையில் (சிம்சன் அருகில்) பேராசிரியர் க.அன்பழகன், தலைமையில்,  மணியம்மை முன்னிலையில், பெரியார் சிலையை அப்போதைய முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார். சிலை திறப்பு விழாவில் பேசிய அப்போதைய தி.க.தலைவர் மணியம்மை, “சொன்னபடி பெரியாருக்கு சிலை வைத்துவிட்டீர்கள். பெரியாருக்கு சிலை திறந்த பின்னர் எனக்கு சிலை வைக்கலாம் என்று பேசிய நீங்கள் இனியும் சாக்குப்போக்கு சொல்ல முடியாது தி..சார்பில் உங்களுக்குச் சிலை அமைக்க அனுமதி தரவேண்டும் என்று மேடையிலேயே கோரிக்கை வைத்தார். திராவிடர் கழகம் சார்பில் அண்ணா சாலையில் முழு உருவ வெண்கலைச் சிலை அமைக்க உள்ளோம், இதற்கு மறுப்பு கூறக்கூடாது,” என்று பேசினார்.

Karunanidhi statue broken in December 1987

சிலை விவகாரத்தில் திமுகஅதிமுக மோதல்: சிலைத் திறப்பை எதிர்த்து அதிமுக சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டது[1]. துலுக்கர் எதிர்க்காதது ஆச்சரியமே! ஒருவேளை, அப்பொழுது தர்கா தான் இருந்தது என்று இப்பொழுது வாதிக்கலாம்! முதலமைச்சர் கலைஞர் வெளியூர் பயணத்தில் இருந்தபோது, இடையில் அ.தி.மு.க.வினால் ஏற்பட்ட சட்டப் போராட்டத்தையும் திராவிடர் கழகம் எதிர் கொண்டு வென்று, அண்ணாசாலை- ஜெனரல் பேட்டர்ஸ் சாலை சந்திப்பில் முறைப்படி அரசாணை பெற்று, 21.9.1975 அன்று பெரியதோர் திருவிழாவாக நடத்தினோம். (G.O. MS.No.877 Dated 21.5.1975, Rural Development and Local Administration Department). அந்த வழக்கை திராவிடர் கழகம் வென்று அண்ணாசாலை தர்கா அருகே 1975-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21-ம் தேதி கருணாநிதியின் வெண்கலச்சிலை திறக்கப்பட்டது[2].

Kundrakkudi, EVR nexus-2

குன்றக்குடி அடிகளார் சிலையைத் திறந்து வைத்தார். இளமையான தோற்றத்துடன் மேடையில் பேசுவதுபோன்று கையை மூன்று விரல்களை உயர்த்திய நிலையில் அமைக்கப்பட்ட தத்ரூபமான சிலை அது. அதன் பின்னர் 1987-ம் ஆண்டு டிசம்பர் மாதம் எம்ஜிஆர் மறைந்தபோது ஏற்பட்ட கலவரத்தில் கருணாநிதியின் சிலையை சில விஷமிகள் கடப்பாரையால் இடித்துத் தள்ளினர். சிலையை உடைத்ததைக்கூட நகைச்சுவையாக எடுத்துக்கொண்ட கருணாநிதி அந்தப்படத்தை முரசொலியில் வெளியிட்டு “உடன் பிறப்பே, செயல்பட விட்டோர் சிரித்து மகிழ்ந்து நின்றாலும் அந்த சின்னத்தம்பி என் முதுகிலே குத்தவில்லைநெஞ்சிலே தான் குத்துகிறான், அதனால் நிம்மதி எனக்கு. வாழ்க! வாழ்க!” என்று குறிப்பிட்டிருந்தார்[3]. அதன்பின்னர் அதே இடத்தில் திராவிடர் கழகம் சார்பில் சிலை அமைக்க முயற்சி எடுத்தபோது மனதை பாதித்த அந்த நிகழ்வால் கருணாநிதி அதைத் தடுத்துவிட்டார்[4]. இதையடுத்து தி.க.வினர் மீண்டும் சிலை அமைக்கும் முயற்சியைக் கைவிட்டனர். இந்நிலையில் கருணாநிதி மறைந்தவுடன் மீண்டும் அதே இடத்தில் சிலை அமைக்கப்படும் என்று தி.க.தலைவர் வீரமணி சமீபத்தில் அறிவித்திருந்தார். மீண்டும் அதே இடத்தில் சிலை கம்பீரமாக எழுந்து நிற்கும் என்று அறிவித்திருந்தார். இந்நிலையில் திமுக சார்பில் அண்ணா அறிவாலயத்தில் அண்ணா சிலை அருகே அவரை நேசித்த தமையன் கருணாநிதியின் சிலை அமைக்கப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்து அதற்கான செயலிலும் இறங்கினார். வேக வேகமாக சிலை அமைக்கும்பணி நடந்தது. அதை பலமுறை நேரில் பார்வையிட்டு திருத்தங்கள் கூறி சரியான முறையில் தத்ரூபமாக கொண்டுவரும் செயலில் ஸ்டாலின் செயல்பட்டார்.

Kundrakkudi, Sonia, Rahul

ஈவேராவின் பிடிவாதம், வீரமணியின் தீவிரம், ஸ்டாலினை துரிதப் படுத்தியதா?: 07-08-2018 அன்று கருணாநிதி காலமானார். அப்பொழுதே, அவரைப் புதைக்க சர்ச்சை உண்டானது. அண்ணாவுக்கு அருகில் புதைக்க வேண்டும் என்று திமுக ஆர்வம் காட்டியது. மெரினாவில், இனி யாரும் சிலை வைக்க்க் கூடாது என்று ஒரு திமுககாரரே வழக்குப் போட்டிருந்தார். ஒருவழியாக நீதிமன்றத்தில் வழக்குகள் விலக்கிக் கொள்ளப் பட்டதும், மெரினாவில் உடல் புதைக்கப் பட்டது. பிறகு தினம்-தினம் அரசியல் தலைவர்கள், நண்பர்கள், பிரபலங்கள் என்று வந்து எல்லா விதமான    கிரியைகளையும் செய்து சென்றனர். வைர்முத்து, பால் சகிதம் வந்து, பூஜை செய்து, பால் சொரிந்து சென்றது, விமர்சனத்திற்கு உள்ளானது.

Karunanidhi statue, Stalin keen interest

2018ல் சிலை வைக்க ஸ்டாலினின் பிடிவாதம்:  ஈவேராவே கருணாநிக்கு சிலை வைக்க வேண்டும் என்று 1968 மற்றும் 1971ல் ஆசைப்பட்டாராம், ஆனால், கருணாநிதி மறுத்தாராம்! 1987ல் உடைக்கப் பட்டப் பிறகு, வீரமணி அதே இடத்தில் சிலை வைக்க ஆசைப் பட்டாராம், ஆனால், கருணாநிதி, அவரது குடும்பம் மற்றும் திமுகவினர் அதற்கு ஒப்ப்புக் கொள்ளவில்லை. வழக்கம் போல ஆஸ்தான ஜோதிடரிடத்தில் கருத்து கேட்ட போது, வேண்டாம் என்றதால், அத்திட்டம் முடிவடைந்தது. வீரமணி விடவில்லை ஆகஸ்ட் 18, 2018 அன்று வெண்கலத்தில் சிலை வைப்பேன் என்று ஆரம்பித்தார், வைகோ தொந்தரவும் சேர்ந்தது.  உடனே, ஸ்டாலின் ஆலோசனை செய்ய ஆரம்பித்தார். தயாளு அம்மாள் வேண்டாம் என்று சொல்லி விட்டார். இதனால், தேர்தல் சமயத்தில் லாபம் பெற கருணாநிதி சிலை செய்யப் பட்டு, இறந்ததிலிருந்து 130வது நாளில் சிலை திறப்பு என்று பிடிவாதமாக ஸ்டாலின்  இறங்கினார்.

கரு-இந்திராவை வசை பாடியது- சர்வாதிகாரி, காந்தாரி.....

மாமியாரை வைததையும், கொலை செய்ய தீர்மானம் போட்டதையும், பதியை கொன்ற பழியையும் மறந்து சிலை திறக்கும் விதி! ஸ்டாலின் ஒப்புக் கொண்டதால், சிலை தயாரிக்கும் வேலை ஆரம்பித்தது. இனி கருணாநிதி பக்தி மிகும் நிலையில், பெரியாரின் மனைவிக்கு சிலை வைத்தது போல, அவரது மனைவிக்கும் சிலைவைக்கப் படலாம்! ஆகஸ்ட் 7ம் தேதியில் அண்ணா திவசம் போலவே கடை பிடிக்கலாம், கோவில்களில் வருடாந்திர சாப்பாடு போடலாம்! சிற்பி தீனதயாளனின் குழுவினரால் உருவாக்கப்பட்ட கருணாநிதியின் சிலை காங்கிரஸின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, ஆந்திரா மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் மற்றும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஆகியோர் கலந்துகொள்ளும் நிகழ்வில் இன்று மாலை அண்ணா அறிவாலயத்தில் அண்ணா சிலைக்கு அருகில் திறக்கப்பட்டது. அந்த வகையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் சிலை திறப்பு விழாவுக்கு சோனியா காந்தி மற்றும் ராகுல்காந்தி உள்ளிட்டோர் மாலை சென்னை  வந்தடைந்தனர். அதேபோல கேரளா முதல்வர் பினராயி விஜயன், ஆந்திரா முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோரும் வருகை தந்தனர். மேலும் திருமாவளவன், வைகோ, முத்தரசன், ஜி.கே.வாசன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் கலந்துகொண்டனர். திரையுலகம் சார்பில் ரஜினி,வைரமுத்து, சத்ருகன் சின்ஹா, பிரபு,  நாசர், குஷ்பு, வடிவேலு ஆகியோர் பங்கேற்றனர். விழாவுக்கு வந்த தலைவர்களை ஸ்டாலின் வரவேற்றார்[5].

Anti-Modi hashtag orchestrated- Gayatri Raguram-12-04-2018

டுவிட்டர் சண்டையார் வென்றது?: இச்சூழலில், ட்விட்டர் வலைத்தளத்தில் கருணாநிதி சிலை தொடர்பான ஹாஷ்டேக்குகள் இந்திய அளவில் டிரெண்டாகி வருகின்றன. திமுக ஆதரவாளர்கள் #StatueOfKalaignar என்ற ஹாஷ்டேக்கை பயன்படுத்த, எதிர்ப்பாளர்கள் பயன்படுத்தும் #StatueOfCorruption என்ற ஹாஷ்டேக்கும் டிரெண்டிங் பட்டியலில் இடம்பெற்றுள்ளது[6]. இதுமட்டுமின்றி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை தமிழகத்தில் இருந்து திரும்பச் செல்லக்கோரி #GoBackSonia என்ற ஹாஷ்டேக் டிரெண்டாகிறது. 200,000 ட்வீட்களை பெற்று உலகளாவிய அளவில் டிரெண்டிங் பட்டியலில் முதலிடம் பெற்ற #GoBackModi என்ற ஹாஷ்டேக்கை #GoBackSonia முந்துமா என்பது சந்தேகமே[7].

வேதபிரகாஷ்

16-12-2018.

Anti-Modi demo, Chennai 12-04-2018

[1] தமிழ்.ஒன்.இந்தியா, அண்ணா சாலையில் கருணாநிதி சிலை.. ஞாபகம் இருக்கிறதா?, By Sutha | Published: Saturday, August 11, 2018, 16:50 [IST]

[2] https://tamil.oneindia.com/news/tamilnadu/k-veeramani-bats-karunanidhi-statue-at-mount-road-327220.html?fbclid=IwAR1TfHm2WTDjcNm6fHtujL2arp-HduBPV2OlftOO-MtZsa2G_ImHrFFlhX0

[3] தமிழ்.இந்து, சிலை வைக்க கடைசிவரை தடைப்போட்ட கருணாநிதி: சிலைத் திறப்பு ஒரு மீள்பார்வை, மு.அப்துல் முத்தலீஃப், Published : 16 Dec 2018 13:53 IST; Updated : 16 Dec 2018 14:54 IST

[4] https://tamil.thehindu.com/tamilnadu/article25756876.ece

[5] https://www.vikatan.com/news/tamilnadu/144787-sonia-gandhi-unveiled-karunanidhis-statue-in-anna-arivalayam.html

[6] பிபிசி, மு.கருணாநிதி சிலை திறப்பு விழா: #GoBackModiக்கு பழித்தீர்க்கும் பாஜக தொண்டர்கள், 16-12-2018.

[7] https://www.bbc.com/tamil/india-46583135

தமிழர்-தமிழரல்லாதோர் பிரச்சினை உருவாக்கப் படக் கூடாது – சட்டத்தைக் கையில் எடுக்கக் கூடாது, கும்பல் கொலைக்கு நியாயம் கற்பிக்கக் கூடாது (2)

மே 17, 2018

தமிழர்தமிழரல்லாதோர் பிரச்சினை உருவாக்கப் படக் கூடாதுசட்டத்தைக் கையில் எடுக்கக் கூடாது, கும்பல் கொலைக்கு நியாயம் கற்பிக்கக் கூடாது (2)

Lynching Tamilnadu style- Pazhaverkadu

கும்பல் கொலை நடதுள்ள விவரங்கள்: திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி, பழவேற்காடு, பெரிய பாளையம், ஆரணி, ஊத்துக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் குழந்தை கடத்தல் பீதி நிலவுகிறது[1]. இதனால் ஊருக்குள் வரும் அப்பாவி வெளியாட்கள் தாக்கப்படும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது[2].

  1. 09-05-2018 அன்று, புலிகேட்டில், வீடில்லாத பாலத்தின் மீதுபடுத்துத் தூக்கிக் கொடிருந்த 45 வயது ஆளை அடித்து உதைத்து அந்த பாலத்திலிருந்தே தொங்கவிட்டனர். இது தொடர்பாக 16 பேர் கைது செய்யப்பட்டனர்.
  2. திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த தம்புகொட்டான்பாறை என்ற இடத்தில், அத்திமூர் முத்துமாரியம்மன் கோயிலுக்கு வழி கேட்டு காரில் வந்தவர்களை, குழந்தை கடத்தல் கும்பல் என்று சந்தேகித்துகிராமத்தினர் அடித்து உதைத்தனர்[3]. அதில் ருக்மணி, 55 / 65 வயது பெண்மணி கொல்லப்பட்டார்[4]. இதுதொடர்பாக, 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்[5]. போலீஸ் நடவடிக்கைக்கு பயந்து கிராம மக்கள் தலைமறைவாகியுள்ளனர்[6]. இப்பகுதிகளிலிருந்து, செம்மரம் கடத்தல் விவகாரத்தில், ஆந்திராவில் அதிகம் கைது செய்யப் படுவது கவனிக்கத்தக்கது.
  3. வேலூரை அடுத்த சிங்கிரிகோவில் என்ற இடத்தில் 09-05-2018 அன்று மாலையில் சாலையில் நடந்த சென்ற 30 வயது மதிக்கத்தக்க ஒரு வட-இந்திய வாலிபரை, குழந்தையை கடத்த வந்தவர் / திருடன் என நினைத்து, அடித்து உதைத்ததில், அவனும் மாண்டான்.
  4. கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள காட்டுமயிலூர் கிராமத்தில் 09-05-2018 அன்று இரவு சுற்றித்திரிந்த வடமாநில பெண் ஒருவரை, குழந்தை கடத்தல் கும்பலை சேர்ந்தவர் என கருதி கிராம மக்கள் மடக்கி பிடித்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த வேப்பூர் போலீசார், அந்த பெண்ணை அங்கிருந்து மீட்டு அழைத்துச்சென்று விசாரித்தபோது அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என தெரியவந்தது. பின்னர் அந்த பெண் சிகிச்சைக்காக விருத்தாசலம் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

போலீஸார், வடநாட்டவருக்கு எதிராக “வாட்ஸ்-அப்” தகவல்களை தவறாகப் பரப்புவதால் அவ்வாறான நிகழ்சிகள் ஏற்படுகின்றன என்கிறார்கள்[7].

Lynching Tamilnadu style- Tiruvannamalai.woman.2

செம்மரக்கடத்தல், அக்குற்றத்தில் ஈடுபடும் தமிழகள், அதை மறைக்க இந்த பிரச்சாரம் என்றால், குற்றங்கள் இன்னும் அதிகமாகும்: செம்மரக் கடத்தல் கைதுகளில் சம்பந்தப் பட்டிருப்பவர்கள், இப்பகுதிகளைச் சேர்ந்தவர் என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம். இதனால், தமிழகத்திற்கும், ஆந்திராவுக்கும் பிரச்சினை உண்டாக்க, திராவிட சித்தாந்திகள் திட்டமிட்டுள்ளார்களா என்றும் யோசிக்க வேண்டியுள்ளது. ஏனெனில், தெலுங்கர்ளுக்கரெதிராகவும் பிரச்சாரம் நடந்து வருகிறது. குழந்தை கடத்தல் தொடர்பான வதந்திகள் வட மாவட்டங்களை கலக்கி வருகின்றன. காஞ்சீபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் குழந்தைகளை கடத்தும் வடமாநில கும்பலின் நடமாட்டம் இருப்பதாக கடந்த சில நாட்களாக வதந்தி பரவி வருகிறது[8]. ‘வாட்ஸ்-அப்’, ‘முகநூல்’ போன்ற சமூக வலைத்தளங்கள் மூலம் பரவும் இதுபோன்ற வதந்திகளால், இதுவரை அப்பாவிகள் பலர் தாக்கப்பட்டு உள்ளனர்[9].குழந்தை கடத்தல் தொடர்பாக வாட்ஸ்-அப்பில் வதந்தி பரப்புவோர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஓராண்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Lynching Tamilnadu style- Tiruvannamalai

எனது தாயை இப்படி அநியாயமாகச் சந்தேகித்துக் கொன்றவர்களுக்கு கடுமையான தண்டனை அளிக்கப்பட வேண்டும்[10]: குழந்தைக் கடத்தல் வதந்தியாலும், தவறான புரிதலாலும் கடந்த வாரம் பொதுமக்களால் அடித்துக் கொல்லப்பட்ட ருக்மிணியம்மாளின் மகன் 42 வயது கோபிநாத்தின் துயரம் எல்லையற்றது. கோபிநாத்தைப் பின் தொடர்ந்து வந்த அவரது 2 வயது மகன் தனது பாட்டியைக் காண வேண்டும் என்று அழுத காட்சி மேலும் உருக்கமாகவும், வேதனையாகவும் இருந்தது. கடந்த வாரம் செவ்வாய் மாலை வரை தனது பேரன், பேத்திகளுடன் சென்னையை அடுத்த பல்லாவரத்தில் இருந்த தனது மகன் வீட்டில் கதை பேசி மகிழ்ந்து சோறூட்டிக் கொண்டாடி இரவுகளில் அவர்களைத் தூங்க வைத்து தலை கோதிக் கொண்டிருந்த ஒரு வயதான பெண்மணியை அறிமுகமில்லாத கிராம மக்களில் சிலர் குழந்தைக் கடத்தல்காரி எனச் சந்தேகித்து சரமாரியாகத் தாக்கிக் கொன்ற விதம் காணொளியாகக் காணக் கிடைக்கிறது. அதைக் கண்டு துக்கத்திலும், ஆத்திரத்திலும் பொங்கியவராக அவரது மகன் கோபிநாத், ‘எனது தாயை இப்படி அநியாயமாகச் சந்தேகித்துக் கொன்றவர்களுக்கு கடுமையான தண்டனை அளிக்கப்பட வேண்டும், எது அதிகபட்ச தண்டனையோ அது அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்’ என்று அரற்றுவது ஒருவகையில் நியாயமானதாகக் கூடத் தோன்றுகிறது[11].

Lynching Tamilnadu style- Tiruvannamalai.woman.3

குழந்தைகள் கடத்தல், குழந்தைகள் காணாமல் போவது, கிடைப்பது-கிடைக்காதது மக்களுக்கு ஆரிவிக்கப் படவேண்டும்:  குழந்தைகள் கடத்தல் சமாசாரம் பேசப்படாமல் இருந்தாலும், மாநிலக் குற்ற ஆவணக் காப்பகம் தரும் அதிகாரபூர்வக் கணக்குகள்படியே தமிழ்நாட்டில் சுமார் 2000 குழந்தைகள் காணாமல் போகின்றனர். “புள்ளப் பிடிக்கிற காரன்கள்” சுற்றிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அன்றாடம் ஐந்து குழந்தைகள் காணாமல் போகின்றனர் எனும்போது, அவ்விசயத்தை விவாதிக்காமல், நடிகைகளைப் பற்றி ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஒருவேளை, பெற்றோர், உற்றோர், மற்றோர் பதற்றமடைவர், பயப்படுவர், மாநிலம் பெயர் கெடும் என்று மறைக்கப் பார்க்க்கின்றனர் போலும்.  இவர்களில் எத்தனை பேர் மீட்கப்படுகின்றனர், மீட்க முடியாமல் போகிறார்கள், வழக்குகள் எப்படி முடிக்கப் படுகின்றன என்பதெல்லாம், பொது மக்களுக்குத் தெரியாது. பொது இடங்களில் பிச்சை எடுப்பது, கூலிவேலைகளுக்கு பயன்படுத்தப் படுவது, முதலியவைப்பற்றியும் விவரங்கள் தெரியப்படுத்துவதில்லை.

Arya-dravida myths acting still-derogatory usage

ஊடகங்கள் பழக்கும் பசிக்கே சமூக வலைதளங்கள் தீனி தயாரிக்கின்றன: தி.இந்து, “செய்தி வியாபாரத்துக்காக நாள் முழுவதும் மக்களிடம் பரபரப்பைப் பரப்பிவரும் ஊடகங்களுக்கும் இதில் முக்கியமான பங்கு இருக்கிறது[12]. ஊடகங்கள் பழக்கும் பசிக்கே சமூக வலைதளங்கள் தீனி தயாரிக்கின்றன[13]. தன்னுடைய பன்மைத்துவக் குணத்தால் உலகின் பல்வேறு திசைகளிலும் பரவியிருக்கும் தமிழ்ச் சமூகத்தை இன்று கொஞ்சம் கொஞ்சமாக இனவெறி நோய்க்கிருமிகள் பீடிக்கத் தொடங்குவது மிக அபாயகரமானது. உடனடியாக முடிவுகட்டப்பட வேண்டியது!,” என்பதில் உண்மை இருக்கிறது. தி.இந்துவிலா, இது வந்துள்ளது என்று ஆச்சரியமாக இருந்தாலும், உண்மை என்பதால், கருத்தைப் பாராட்ட வேண்டியிருக்கிறது. ஆனால், ஊடகங்கள் அந்த அளவுக்கு தாழ்ந்து விட்டனவா என்ற கேள்வியும் எழுகின்றது.

© வேதபிரகாஷ்

17-05-2018

Arya-dravida myths acting still-mental

[1] மாலைமலர், குழந்தை கடத்தல் பீதிமனநோயாளி கொலையில் மேலும் 2 பேர் கைது, பதிவு: மே 14, 2018 13:09

[2] https://www.maalaimalar.com/News/District/2018/05/14130903/1162890/Two-more-people-have-been-arrested-in-Mental-patient.vpf

[3] தி.இந்து, குழந்தை கடத்தல் கும்பல் என்று சந்தேகித்து தாக்குதல்; மூதாட்டி கொலை வழக்கில் 23 பேர் கைது, திருவண்ணாமலை, Published : 11 May 2018 08:01 IST; Updated : 11 May 2018 08:01 IST

[4] http://tamil.thehindu.com/tamilnadu/article23845548.ece

[5] மாலைமலர், குழந்தை கடத்தல் பீதியில் மூதாட்டி கொலைகைது நடவடிக்கைக்கு பயந்து 11 கிராம மக்கள் ஓட்டம், பதிவு: மே 11, 2018 14:12.

[6] https://www.maalaimalar.com/News/District/2018/05/11141250/1162299/child-kidnapping-rumor-11-village-people-escaped-police.vpf

[7] The police say the trigger for the lynchings could be a rash of xenophobic messages circulating on WhatsApp warning that “north Indians” are looking to kidnap children in Tamil Nadu.

http://www.thehindu.com/opinion/editorial/loss-of-innocents/article23857175.ece

[8] ஐ.இ.தமிழ், குழந்தை கடத்தல் வதந்தி : வட மாவட்டங்களை உலுக்கும் கொலைகள், போலீஸ் எச்சரிக்கை, WebDesk, May 11, 2018

[9] https://www.ietamil.com/tamilnadu/child-trafficking-rumours-murders-police-warning/

[10] தினமணி, என் தாயைக் கொன்றவர்களுக்கு உச்சபட்ச தண்டனை அளியுங்கள்! ருக்மிணியம்மாளின் மகன் உருக்கமான வேண்டுகோள்!, By RKV | Published on : 14th May 2018 01:09 PM

[11] http://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2018/may/14/give-maximum-punishment-to-my-mothers-killers–gopinath-so-rukmini-2919581.html

[12] தி.இந்து, அப்பாவிகள் படுகொலைக்கு முடிவுகட்டப்பட வேண்டும்!, Published : 16 May 2018 08:51 IST; Updated : 16 May 2018 12:44 IST

[13] http://tamil.thehindu.com/opinion/editorial/article23899718.ece

 

கோல்வால்கருக்கும் திருவள்ளுவருக்கும் என்ன சம்பந்தம்? – பகவத் கீதை, சங்கராச்சாரியார், வீரமணி, திராவிட கழகம் – பெரியார் திடலில் விவாதம் (4)!

செப்ரெம்பர் 20, 2015

கோல்வால்கருக்கும் திருவள்ளுவருக்கும் என்ன சம்பந்தம்? – பகவத் கீதை, சங்கராச்சாரியார், வீரமணி, திராவிட கழகம்பெரியார் திடலில் விவாதம் (4)! 

பகவத் கீதை, சங்கராச்சாரியார், வீரமணி, திராவிட கழகம் – பெரியார் திடலில் விவாதம்

பகவத் கீதை, சங்கராச்சாரியார், வீரமணி, திராவிட கழகம் – பெரியார் திடலில் விவாதம்

திருவள்ளுவரை ஹிந்து மதத்தைச் சார்ந்தவர் என்று சாயம்பூசி, அதிகாரப் பூர்வமாக்கி அரசு இயந்திரத்தின் மூலம் பரவச் செய்தால் ஏற்படும் கேடு பன்மடங்காகி விடும்: வீரமணி தொடர்ந்து எச்சரிக்கை விடுக்கிறார், “இதில் திருவள்ளுவரின் திருக்குறளில் இல்லாத மோட்சம் – “வீடுஇருப்பதாக தவறாக விளக்கமும் கூறி திரிபுவாதம் செய்யப்பட்டுள்ளது. அத்தகைய கோணத்தில் மத்திய அரசு திருவள்ளுவரை ஹிந்து மதத்தைச் சார்ந்தவர் என்று சாயம்பூசி, தம் இச்சைபோல வளைத்து விடவோ, திருவள்ளுவர் பிறப்புப்பற்றிய தவறானஅருவறுக்கதக்க கதைகளை கூறி, அவற்றை அதிகாரப் பூர்வமாக்கி அரசு இயந்திரத்தின் மூலம் பரவச் செய்தால் ஏற்படும் கேடு பன்மடங்காகி விடும். எனவே, விழிப்புணர்வுடன் வரவேற்க வேண்டிய அறிவிப்பு இது என்று தமிழ் கூறும் நல்லுலகத்தினையும், ஏனையோரையும் எச்சரிக்க வேண்டியது நமது முக்கிய கடமையாகும்”, இவ்வாறு கி.வீரமணி கூறியுள்ளார். அரசு ஆவணங்களில் இந்து என்றுதான் போட்டுக் கொண்டு வாழ்க்கை நடத்தி வருகின்றனர், பிறகென்ன, இந்த வெத்துவேட்டு வெங்காயம் / எதிர்ப்பெல்லாம் என்று கருப்புச்சட்டைகள் புரிந்து கொள்ளவேண்டும்[1]. பகுத்தறிவு-சுயமரியாதை திருமணமே இந்து திருமண சட்டத்தில் ஐக்கியமானதும் நினைவு கூரத்தக்கது[2].

பகவத் கீதை, சங்கராச்சாரியார், வீரமணி, திராவிட கழகம் – பெரியார் திடலில் விவாதம்.3

பகவத் கீதை, சங்கராச்சாரியார், வீரமணி, திராவிட கழகம் – பெரியார் திடலில் விவாதம்.3

கிருஷ்ணன் என்ன உனக்கு மட்டும்தானா தெரியும்? உன் கிருஷ்ணனையும் தெரியும், அவன் பாட்ட னையும் எங்களுக்குத் தெரியும்!: வீரமணியை கடந்த ஆண்டுகளில் அதிகம் பாதித்துள்ளது ஶ்ரீ கிருஷ்ண பரமாத்மா தான்! 2013ல் இப்படி பிதற்றியுள்ளார்[3], ஒரு கூட்டத்தில் பேசியது இப்படியுள்ளது, “உங்களுக்கு என்ன தெரியும்? உன் கிருஷ்ணனையும் தெரியும், அவன் பாட்டனையும் எங்களுக்குத் தெரியும்! ஆக, எங்கள் கிருஷ்ணனைப்பற்றி பேசிவிட்டார்களா என்று நீங்கள் கேட்கிறீர்கள். கிருஷ்ணன் என்ன உனக்கு மட்டும்தானா தெரியும்? உன் கிருஷ்ணனையும் தெரியும், அவன் பாட்டனையும் எங்களுக்குத் தெரியும்! ஏனென்றால், நீ கிருஷ்ணன் என்று சொல்கின்ற கடவுளைப்பற்றி, உன் மூக்கை சொறிந்து, திசை திருப்பிவிட்டிருக்கிறார்கள் யாரோ!” பாவம், அந்த அளவுக்கு குற்றம் கண்டுபிடிக்க கீதை பற்றி ஆராய்ச்சியே செய்துள்ளார் போலும்.

பகவத் கீதை, சங்கராச்சாரியார், வீரமணி, திராவிட கழகம் – பெரியார் திடலில் விவாதம்.2

பகவத் கீதை, சங்கராச்சாரியார், வீரமணி, திராவிட கழகம் – பெரியார் திடலில் விவாதம்.2

கோர்ட்டில் கிருஷ்ணனையும் கூப்பிட முடியும்; கிருஷ்ணதாசர்களையும் கூப்பிட முடியும்: வீரமணி பொறிந்து தள்ளினார், “இன்னும் சில பேர் வழக்கு போடுவோம் என்று சொல் கிறார்கள். போடுங்கள்! உங்கள் வழக்கைத்தான் நான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். அப்போதுதான், கோர்ட்டில் கிருஷ்ணனையும் கூப்பிட முடியும்; கிருஷ்ணதாசர்களையும் கூப்பிட முடியும். உன்னாலே வர முடியுமானால், வழக்கு போடுங்கள்!ஆதாரபூர்வமாக தாக்கல் செய்கிறோம்! கோர்ட்டில், நாங்கள் ஆதாரபூர்வமாக, கிருஷ்ணன் செய்த லீலைகளைப் படமாகப் போட்டு, குளத்தில் பெண்கள் எல்லாம் பாதி நிர்வாணமாக நிற்கிறார்கள்; சேலைகளைத் தூக்கிக்கொண்டு மரத்தின்மீது கிருஷ்ணன் இருக்கிறார் பாருங்கள் அந்தப் படத்தினை, நீதிபதி அவர்களே இதனை ஆதாரபூர்வமாக தாக்கல் செய்கிறோம் என்று சொன்னால், என்ன ஆவார் கிருஷ்ணன், அதனை நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்”. எப்படி முகலாய போலித்தன சரித்திரவியல், கட்டுக்கதை உருவாக்கம், சித்திரங்கள் வரந்த விதம்[4], இவர்களைப் போன்ற நாத்திகர்களால் உபயோகப்படுத்தப் படுகிறது என்பதனையும் கவனிக்க வேண்டும்[5].

சைவ-வைணவ சிண்டு முடுக்கும் வீரமணி

சைவ-வைணவ சிண்டு முடுக்கும் வீரமணி

ஒரு லட்சம் பிரதிக்குமேல் விற்பனையாகிய கீதையின் மறுபக்கம்: தன்னுடைய புத்தகத்தைப் பற்றி பீழ்த்திக் கொள்கிறார், “கீதையின் மறுபக்கம்! இதோ என் கைகளில் இருப்பது கீதையின் மறுபக்கம் நூல்!கிருஷ்ணன் உபதேசம் செய்தாராம் – யாருக்கு, அர்ஜுனனுக்கு! அதுதான் கீதை!எதிர் எதிரே படைகள் இருக்கு. அந்தப் படையில் அர்ஜுனன் சண்டை போட போகிறாராம். அர்ஜுனனுக்குத் தேரோட்டியாக கிருஷ் ணன் போறாராம். அப்போது காதோடு காதாக கீதா உபதேசம் செய்றாராம். எங்கே? எதிரிப் படைகள் நிற்கின்ற இடத்தில் – 700 சுலோகம் முடியும் வரை எதிரிப் படைகள் அமைதியாக நிற்கின்றதாம். கீதையின் மறுபக்கம் நூல் இருக்கிறதே, ஒரு லட்சம் பிரதிக்குமேல் விற்பனையாகி இருக்கிறது. அதுமட்டுமல்ல, ஆங்கிலத்திலே, இந்தியிலே, எல்லா மொழிகளிலும் அச்சாகி இருக்கிறது. இதற்கு ஒரு வரி மறுப்பு கிடையாது”. இக்காலத்தில் புத்தகத்தின் விற்பனையை எப்படி கணக்கில் காட்டுகிறார்கள் என்று நன்றாகவே தெரியும். தமிழக வரலாற்றுப் பேரவையில் திக-புத்தகங்கள் இலவசமாக 300 பேராளர்களுக்குக் கொடுக்கப்பட்டன என்று முன்னர் எடுத்துக் காட்டப்பட்டது. ஆக டஜன் கணக்கில் பிரைவேட் லிமிடெட் கம்பெனிகள் நடத்தும் வீரமணிக்கு ஒரு லட்சம் பிரதிகள் விற்பது என்பது என்ன முடியாத காரியமா? அதற்கு ஒரு வரி மறுப்பு கிடையாது என்பதில்லை, அதாவது லட்சம் பிரதிகள் விற்று யாரிடம் போய் சேர்ந்தன என்று தெரியவில்லை. மேலும், அரைகுறையாக, அரைவேக்காட்டுத்தனமான, அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்கும், இத்தகைய சித்தாந்திகளை மற்றவர்கள் ஒரு பொருட்டாக எடுத்துக் கொண்டு, தங்களது நேரத்தை விரயமாக்க மாட்டார்கள் என்பதனையும் நோக்க வேண்டும்.

சைவ-வைணவ சிண்டு முடிக்கும் வீரமணி. மாமா

சைவ-வைணவ சிண்டு முடிக்கும் வீரமணி. மாமா

பகவத் கீதையை புனித நூலாக சைவர்கள் ஏற்கமாட்டார்கள்: கி.வீரமணி பேட்டி: தஞ்சையில் திராவிட கழகம் சார்பில் இந்தியாவின் தேசியப் புனித நூலாக பகவத் கீதையை அறிவிப்பதற்குக் கண்டனம் தெரிவித்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தஞ்சை வந்த திராவிட கழகதலைவர் கி.வீரமணி நிரூபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது[6]: “பகவத் கீதை முழுமையான இந்து நூலாக கருதப்படுவதில்லை. இந்து மதம் என்பது பல பிரிவுகளை கொண்டது. அந்த வகையில் வைணவர்கள் தான் பகவத் கீதையை இந்து மதத்தை சார்ந்தது எனக் கூறுகின்றனர். சைவர்கள் பகவத் கீதையை ஏற்கமாட்டார்கள். அதேபோல மற்ற பிரிவுகளை சார்ந்தவர்களும் இதை ஏற்று கொள்வதில்லை. எனவே இந்து மதத்தை இந்நூல் முழுமையாக உரிமை கொண்டாட முடியாது. ஆனால் மத்திய அரசு தேசிய புனித நூலாக பகவத் கீதையை திணிக்க முயற்சிக்கிறது. இந்தியை எப்படி அதிகாரம் படைத்த மொழியாக திணிக்கின்றனரோ அதேபோல சமஸ்கிருதத்தையும் திணிக்க ஆசைப்படுகின்றனர். அது போல இதையும் நிறைவேற்ற முயற்சி செய்கின்றனர். நம் நாட்டில் பல கலாசாரங்கள், பல்வேறு மதங்கள் பல மொழிகள் இருக்கின்றன. இந்த நாட்டின் என் மதம் மட்டும்தான் ஆள வேண்டும் எனச் சொல்லக் கூடிய பாசிச முறையிலான இந்த செயல்பாட்டை இந்தியாவே எதிர்க்கிறது”, இவ்வாறு அவர் கூறினார்[7]. பேட்டியின்போது தி.மு.க. தேர்தல் பணிக்குழு செயலாளர் எல்.கணேசன், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் ரா. திருஞானம், தமிழர் தேசிய முன்னணி பொதுச்செயலாளர் அய்யனாபுரம் சி.முருகேசன் ஆகியோர் உடன் இருந்தனர். ஆகா, சைவர்கள் மீதுதான், வீரமணிக்கு எத்தனை பற்றுதல்! சிண்டு முடித்து விடுகிறார்கள். சோழன் குடுமி சும்மா ஆடாது என்றெல்லாம் இவர்கள் கிண்டல் செய்வார்களே, இப்பொழுது வீரமணி அதே வேலையைத்தான் செய்துள்ளார்.

© வேதபிரகாஷ்

20-09-2015

[1] திராவிடத்துவவாதிகளின் இரட்டைவேடங்கள் இனிமேலும் எடுபடாது. குடும்ப வாழ்க்கை-மேடை வாழ்க்கை என்று போலித்தனமாக வாழும் இவர்கள் இனி மற்றவர்களால் ஒதுக்கப்படுவார்கள். இருக்கும் கூட்டம் இன்னும் 50-100 ஆண்டுகள் வரை கத்திக் கொண்டிருக்கும்.

[2] 1969ல் அண்ணாதுரை தலைமையில் ஆட்சிக்கு வந்ததும், முதலில் அத்திருமணபங்களை செல்லுபடியாக்கசுயமரியாதை திருமணம் சட்ட வடிவம் (28.11.1967) மசோதாவை அறிமுகப்படுத்தினர். “சுயமரியாதை திருமணம்” கிளப்பிய அவலத்தை இந்து திருமண சட்டத்தில் (The Hindu Marriage Act, 1956) பிரிவு 7A என்றதை நுழைத்து மானத்தைக் காப்பாற்றிக் கொண்டனர்[1]. அதாவது, அப்படி தடாலடியாக செய்து வைத்த திருமணங்கள் எல்லாம் செல்லாது, ……….என்றெல்லாம் நீதிமன்றங்களில் தீர்ப்புகள் வந்தபோது அதிர்ந்து விட்டனர் பகுத்தறிவி ஜீவிகள்! அதாவது இந்து திருமண சட்டத்தில் தான்[2] அந்த “சுய மரியாதை” அடங்கிவிடுகிறது! அனால், இன்றும், இப்படி பொய்களை பேசியே வாழ்க்கையை நடத்துகின்றனர். இந்துமதத்தை ஆபாசமாக வர்ணித்த பகுத்தறிவு பகலவன் பாதையில் திருமணம் செய்து கொண்டவர்கள், திராவிடர்கள் “இந்துக்களாகி” தமது மானத்தைக் காப்பாற்றிக் கொண்டனர்.

https://secularsim.wordpress.com/2015/01/17/freedom-of-thought-ones-rights-cannot-violate-the-rights-of-others/

[3]  வீரமணி, உன் கிருஷ்ணனையும் தெரியும், அவன் பாட்டனையும் எங்களுக்குத் தெரியும்!, விடுதலை, 03-10-2013.

[4] https://indianhistoriography.wordpress.com/2015/06/25/pornography-like-works-written-during-mughal-period-involving-even-radha-krishna/

[5] https://indianhistoriography.wordpress.com/2015/06/26/indian-divine-symbols-figures-attacked-by-mohammedan-poets-sufis/

[6] மாலைமலர், பகவத் கீதையை புனித நூலாக சைவர்கள் ஏற்கமாட்டார்கள்: கி.வீரமணி பேட்டி, பதிவு செய்த நாள் : ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 21, 5:01 PM IST.

[7]  http://www.maalaimalar.com/2014/12/21170111/Vegetarians-will-accept-the-Bh.html

பிராமணர்கள் மீது வன்முறையைத் தூண்டுகிறார் இரட்டை வேடம் போடும் கருணாநிதி!

மார்ச் 7, 2012

பிராமணர்கள் மீது வன்முறையைத் தூண்டுகிறார் இரட்டை வேடம் போடும் கருணாநிதி!

திராவிட சித்தாந்திகளால் தமிழகத்திற்கு கிடைத்தது என்ன? திராவிட இயக்க நூற்றான்டு விழா என்ற சாக்கை வைத்துக் கொண்டு, கருணாநிதி தனது வாய்வழி-தீவிரவாதத்தை, தீயாக உமிழ்ந்தார் கருணாநிதி[1]. ஆனால், ஒன்றும் நடக்கவில்லை. நாட்டுப்பற்று, தேசியப்பற்று என்று எதுவும் இல்லாத இந்த “திராவிட” சித்தாந்திகளால், இந்தியாவிற்கு எந்த பிரயோஜனமும் இல்லை இன்று இந்தியர்கள் உணர்ந்து விட்டார்கள்[2]. எப்பொழுதும் பிரிவினைவாதம் பேசி, இந்தியை எதிர்ப்போம் என்று தேசிய சொத்துகளை கோடிக்கணக்கில் சேதம் விளைவித்து, தமிழ் நாட்டை வளர்க்கவிடாமல் செய்தது தான் இவர்களது சாதனை[3]. வெட்டிப்பேச்சு பேசி, மேடை போட்டு கூட்டங்கள் நடத்தி சிலைகளை வைத்து, விழாக்கள் நடத்தி காலத்தை ஓட்டி விட்டார்கள்[4]. இனி சாகும் வேலையில் வேறெந்த பருப்பும் வேகாது என்ற நிலையில், மறுமடியும் பிராமண-எதிர்ப்பு வாதத்தை வைத்துள்ளார் கருணாநிதி. பிராமணரான ஜெயலலிதாவை எதிர்ப்போம் என்ற சாக்கில் இந்த வயதில் தனது விஷத்தைக் கக்கியுள்ளார். பிராமண சங்கமும் பயந்து இரண்டு வாரங்கள் கழித்து தனது அறிக்கையை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் பிராமணர்கள் மீது தி.மு.க. தலைவர் கருணாநிதி வன்முறையைத் தூண்டி விடுவதாக தமிழ்நாடு பிராமணர் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது[5].இது தொடர்பாக பிராமணர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை[6]:

சுதந்திரநாளை, துக்கநாளாகக் கொண்டாடியவர்கள் வளர்த்த பிரிவினைவாதம் திராவிட இனவாதம்: தற்கால அரசியலுக்கு ஒவ்வாத நிலைப்பாடாக, 1912ம் ஆண்டு திராவிட இயக்கக் கூட்டத்தில், டாக்டர் நடேசன் மற்றும் டி.எம்.நாயர் கூறிய கருத்துக்கு, மெருகு பூசி சினிமா பாணியில் புதிதாகக் கதை அளக்கிறார் தி.மு.க., தலைவர் கருணாநிதி. நூறு ஆண்டுகளுக்கு முன்னர், அதாவது, 1912ல் நடைபெற்றது பிரிட்டிஷ் அரசாங்கம் – தமிழ்நாடு என்று அப்போது இல்லாமல், சென்னை மாகாணம் ராஜதானி என்று அழைக்கப்பட்டு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா என்று பிரிக்கப்படாமல் இருந்தது. அப்போது திராவிட இயக்கத்தின் தலைவர்கள் என்று கூறப்பட்ட டி.எம்.நாயர் (மலையாளம் பேசுபவர்) சர்.பி.டி.தியாகராஜன் (தெலுங்கு பேசுபவர்) டாக்டர் நடேசன் போன்றவர்கள் நீதிக் கட்சியின் சார்பில் வெள்ளையர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டவர்கள்; நமது சுதந்திர போராட்டத்தைக் கொச்சைப்படுத்தியவர்கள். சுதந்திர நாளை, துக்க நாளாகக் கொண்டாடியவர்கள்[7].

கலாமும் பிராமண ஆசிரியரும்: கடந்த, 1960 வரை பல ஆயிரக்கணக்கான பிராமண தமிழ் ஆசிரியர்கள் தமிழகத்தில் பல பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் சிறப்பாக பணியாற்றியதை யாரும் மறந்திருக்கமுடியாது. முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம், தான் ராமேஸ்வரத்தில் படித்தபோது, உதவி செய்த ஆசிரியரான சுப்பிரமணிய அய்யரை தன் பதவியேற்புக்கு டில்லிக்கு அழைத்துச் சென்று மரியாதை செய்தார் .இப்படிப்பட்ட சூழ்நிலையில், தற்போதைய நிலைமைக்கு ஒவ்வாத பிராமண எதிர்ப்புக் கொள்கையை, தனக்கு சிக்கல், தோல்வி வரும்போதெல்லாம் ஒரு ஆயுதமாக எடுப்பதில் கருணாநிதி வல்லவர்.

கருணாநிதி குடும்பமும் பிராமணர்களும்: பிராமணர்களின் அறிவுரைப்படி, ஆலோசனை உதவியுடன் தனது கட்சியையும், குடும்ப வியாபாரத்தையும் வளர்த்தவர் தான் இந்த தலைவர். தயாளுவில் ஆரம்பித்து, ஸ்டாலின் மனைவி மற்றும் குடும்பத்தின் மூன்று தலைமுறைக்கு பிரசவம் பார்த்தது பிராமணரான டாக்டர் பி.ராமமூர்த்தியும், அவரது மனைவியுமான டாக்டர் இந்திரா ராமமூர்த்தியும் தான். பல ஆண்டுகளாக இவருக்கு ஆடிட்டராக இருப்பது ஜெகதீசன் அன்ட் கம்பெனி. தற்போது எங்கு போனாலும் உடன் வந்து மருத்துவம் செய்வது பிராமணரான டாக்டர் கோபால் தான்.

திமுக ஆட்சிகளில் பிராமணர்கள்: கடந்த, 1996ல், 2006ல் ஆட்சி செய்தபோது ஆலோசனை வழங்கியது, டாக்டர் எம்.எஸ்.குகன் ஐ.ஏ.எஸ்., 2006- 2011 வரை தலைமைச் செயலராகவும், கோப்புகளில் தனியாகக் கையெழுத்து இடும் அளவுக்கு அதிகாரம் படைத்தவராக எஸ்.ஸ்ரீபதி ஐ.ஏ.எஸ்., உள்துறைச் செயலராக (ஹோம் செகரட்டரி) மாலதி ஐ.ஏ.எஸ்., மேடைகளில், விழாக்களில் தன்னைப் பற்றி புகழ்பாட கவிஞர் வாலி, குடும்ப பிசினஸ் பார்ட்னராக இந்தியா சிமென்ட்ஸ் சீனிவாசன், தனக்கு யோகாசனம் சொல்லிக் கொடுக்க தேசிகாச்சாரி என்று இவரது தேவைகளுக்கான பிராமணர் பட்டியல் தொடரும். தனக்குத் தேவை என்றால் இவர்கள் எல்லோரும் பிராமணர்கள் அல்லாதவர்கள்.

பித்தலாட்ட குடும்பம்: தன் வீட்டுக் குழந்தைகள், பேரப்பிள்ளைகள் சென்னை டி.ஏ.வி., பள்ளியில் இந்தி படிக்கலாம்; மற்றவர்கள் தமிழ் தான் படிக்க வேண்டும். தமிழ் சுதந்திரப் போராட்ட தியாகி கோட்டாவில் தனது பேரன் (மு.க.அழகிரி மகன்) அண்ணா பல்கலைக்கழகத்தில், பி.இ., படிக்கலாம். தன் வீட்டு குழந்தைகளுக்கு ஸ்டாலின், தயாநிதி, கலாநிதி, சூர்யா, ஆதித்யா போன்ற சம்ஸ்கிருத பெயர்கள். தனது ‘டிவி’க்களுக்கு சூரியா, ஆதித்யா, தேஜா, உதயா, ஜெமினி, சன் நெட்வொர்க் என்று வேற்று மொழிப் பெயர்கள். எத்தனை வருடங்களுக்குத்தான் இந்தப் பெரிய பித்தலாட்டம், ஏமாற்று வேலை?

கடந்த ஆட்சியில் திமுகவினருக்கு  கோடிகளில் பணம் எப்படி கிடைத்தது?: எந்த பிராமணனும் ஊரை அடித்து உலையில் போடவில்லை. அரசாங்கப் பணத்தை, மக்களது வரிப் பணத்தை, கொள்ளையடித்து கோடீஸ்வரன் ஆனதில்லை. டெலிகாம் ஊழல், சேது சமுத்திரத் திட்ட ஊழல், வீராணம் ஊழல் என்றெல்லாம் விஞ்ஞான முறையில் பொதுச் சொத்தை கொள்ளையடித்து, இந்தியாவிலேயே ஒரு பெரிய கோடீஸ்வர குடும்பம் என்று பெயர் பெறவில்லை! கடந்த 1967க்கு பிறகு, தமிழகத்தில் ஆட்சி செய்த , அமைச்சர்கள் பலர் இப்போது குறைந்தபட்சம், 100-200 கோடி ரூபாய்க்கு அதிபதி. இன்ஜினியரிங் கல்லூரி, மருத்துக் கல்லூரி, சினிமா தயாரிப்பு என்றெல்லாம் பல துறைகளில் பெரிய முதலாளிகள். இதெல்லாம் எப்படி வந்தது? கருணாநியின் மகள் டில்லி திகார் சிறையில் எட்டு மாதம் கம்பி எண்ணியது எதற்காக? தனது குடும்பத்தில் நடக்கும் வாரிசு பிரச்னையை, கட்சியின் தோல்வியை திசை திருப்பவே, இந்த பிராமணர் எதிர்ப்பு நாடகம். ஆனால், நமது அரசியல் சாசனப்படி எந்த ஜாதியையும், பழித்துச் சொல்ல, இழிவுபடுத்த சட்டத்தில் இடமில்லை.

வன்முறையை தூண்டுகிறார்: எல்லா மக்களுடன் அமைதியாக, நட்பாக வாழும் பிராணமர்கள் மீது வன்முறையை தூண்டும்படி, அச்சுறுத்தும் படியாக பேசும், தி.மு.க., தலைவர்கள் கருணாநிதி மீதும், அன்பழகன் மீதும் மத்திய, மாநில அரசுகள் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கருணநிதி குடும்பத்தில் உள்ள பிராமணர்களை பிராமண ச்டங்கம் ஏன்மறந்து விட்டது என்று தெரியவில்லை: முந்தைய இடுகையில் குறிப்பிட்டுள்ளபடி,உங்கள் உற்றார், உறவினர், பந்து மித்திரர், தோழர், தோழியருக்கெல்லாம் சொல்லி, விளக்கி, கட்சியில் அங்கத்தினராகச் சேருங்கள். கட்சிப் பத்திரிகைகளைப் படியுங்கள். நம் பத்திரிகைகள் வளர்ந்தால் தான், நம் எதிர்க்கட்சியான பார்ப்பனக் கூட்டம் நடுங்கும்” என, தி.மு.க., தலைவர் கருணாநிதி அறிவுறுத்தி உள்ளார். இருப்பினும் அவரது குடும்பத்தில் உள்ள பாப்பாத்திகளையும், அந்த பாப்பாத்திகளுக்குப் பிறந்தவர்களையும் விரட்டியடிப்பாரா என்று தெரியவில்லை”, கருணாநிதி செய்வாரா என்று தெரியவில்லை.

வேதபிரகாஷ்

07-03-2012


 


[2] இந்திய-தேசிய விரோதக் கொள்கைகளினால், மற்ற மாநிலங்களில் உள்ளவர்கள் தமிழ்நாட்டு மக்களை வித்தியாசமாக நினைத்தார்கள். இந்தி பேசும் மக்கள், தமது மொழிக்கு விரோதமாக இப்படி செய்ல்படுகின்றனர் என்றும் என்று திகைத்தும் இருந்தார்கள். ஏனெனில், அவர்களுக்கு, இவர்கள் (தங்கள திராவிடர்கள் என்று சொல்லிக் கொல்பவர்கள் இந்தியை ஏன் வெறுக்கிறார்கள் என்று கூட தெரியாமல் இருந்தார்கள்)

[3] இந்தியை எதிர்ப்போனம் என்று இந்தி எதிர்ப்பு போராட்டங்கள் நடத்தினர், அதில் தீக்குளிப்பு, தீவைப்பு போன்ற வன்முறைகளும் நடந்தன. ரெயில் பயணிகள் அதிக அளவில் பாதிக்கப் பட்டனர். பிறகு, இந்தி எதிர்ப்பு போராட்டங்களில் கலந்து கொண்டவர்களை “மொழிப்போர் தியாகிகள்” என்று பட்டங்கள், பென்சன் எல்லாம் கொடுத்தனர். இவையெல்லாம் இந்தி பேசும் மக்களுக்கு வியப்பாக இருந்தது. இந்தொயர்களாக இருந்து கொண்டு, ஒரு மொழியை எதிர்த்தால் எப்படி தியாகிகள் அவ்வார்கள் என்று அவர்கள் கேட்கவும் செய்தனர்.

[4] மற்ற மாநிலங்களில் தொழிற்சாலைகள் அதிகமாக வளர்ந்தன, ஆனால், தமிழகத்தில் தொழிற்சாலைகள்வைக்க இந்தி பேசும் அல்லது வடவிந்தியர்கள் தயங்கினர். டிவிஎஸ், அசோக் லேலேண்ட், ஈஸ்வரன் அண்ட் சன்ஸ்,  போன்ற பிராமணக் கம்பெனிகள் / தொழிற்சாலைகள் தவிர மற்றவையெல்லாம், 1990, 2000 ஆனண்டுகளுக்குப் பிறகு வந்தவை என்று நோக்கத்தக்கது.

கருணாநிதிஜியின் ஆசை: இந்தியாவின் ஆட்சி மொழியாக தமிழ்!

ஜனவரி 26, 2010

கருணாநிதிஜியின் ஆசை: இந்தியாவின் ஆட்சி மொழியாக தமிழ்!

© வேதபிரகாஷ்

குறிப்பு: பத்திகளின் தலைப்புகள் மட்டும் என்னால் கொடுக்கப்பட்டுள்ளன. கருணாநிதி சொன்னது சாய்வெழுத்துகளில் கொடுக்கப்பட்டுள்ளன.

நடக்கமுடியாததைச் சொல்லுவோம், நடக்கக்கூடாதையும் சொல்லுவோம்[1]! இப்படி புதிய பிரசாரகர்கள் கிளம்பிவிட்டனர் போலும்! விளம்பரங்களில் மனிதனுக்கு அளவிலாத காமம், இச்சை, மோகம் வந்துவிட்டது. எப்படியாவது பிரபலம் ஆகவேண்டும், அதற்காக என்னவேண்டுமானாலும் செய்யத்தயார், பேசத் தயார் என்ற நிலை உருவாக்குவது மனப்பாங்காகிறது. இதில் அரசியல்வாதிகளின் வழி அலாதியானது. நடக்கமுடியாததை நடத்துவோம் (எல்லொருக்கும் வேலை கொடுப்போம்……போன்றது), செய்யமுடியாததைச் செய்வோம் (வறுமையைப் போக்குவோம்……..பொன்ற வகையறாக்கள்) என்றெல்லாம் பேசுவதுதான் அராசியல்வாதிகள் தந்திரம், என்பதுதான் அரசியலின் மந்திரம், அப்படியே ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்வது யந்திரம்! பல நேரங்களில் பலவிதமாக, பலதரப்பட்ட கூட்டங்களுக்குத் திருப்தி செய்ய பேசுவர். அதனால்தான் அவர்களின் பேச்சுகளில் முரண்பாடுகள் ஏற்படுகின்றன. பொதுவாக அவர்கள் சொல்லிவிடுவர், “ஊடகக்காரர்கள் நான் பேசியதை மாற்றிச் சொல்லிவிட்டார்கள்”, என்று!

கருணாநிதிஜியின் “தமிழ் ஆட்சி மொழி” பற்றிய பேச்சு: தினமணி[2] கூறுவது, “தமிழுக்கு மத்திய ஆட்சி மொழி அந்தஸ்து கேட்பதில் என்ன தவறு …”, என்று கருணாநிதி கேள்வி கேட்டதாகத் தலைப்பு. தினமலர் சொல்வதோ[3], “இந்தியாவின் ஆட்சி மொழியாக தமிழ் : முதல்வர் கருணாநிதி விருப்பம்”, என்பதாகும். தினகரன் அன்பழகனைக் குறிப்பிட்டுக் கூறுவது[4], தமிழில் பேசும் நிலை விரைவில் உருவாகும்”, என்பதாகும்! எது எப்படியாகிலும் அரசியல்வாதிகள் எல்லாவிதமாகவும் பேசுவார்கள், எல்லோருடனும் அனுசரித்திச் செல்வது போலக் காட்டிக் கொள்வார்கள், ஆனால், உண்மையில் அவர்கள் ஆசைப்படுவது, சாகும் வரை சிம்மாசனத்தில் இருக்கவேண்டும் என்பதுதான்!. இனி வெளியிடப்பட்டுள்ள செய்தி தொகுக்கப்பட்டு அலசப்படுகிறது.

1965-2010: ஜனவரி 26 – 55வது துக்கநாள்: கொண்டாடும் கருணாநிதிஜி? 1965ல் குடியரசு தினத்தை “துக்க நாள்” என்று அறிவித்து திமுக கொண்டாடியது. அப்பொழுது காங்கிரஸ்காரர்கள் எதிர்தார்கள்! ஆனால், இன்று காங்கிரஸ்காரர்களுக்கு சரித்திரம் மறந்து போயிருக்கும். 1965 இந்தி எதிர்ப்பு போராட்டம் வைத்துக் கொண்டுதான் திமுக வளர்ந்தது. எனவே 2011க்கு முன்பு அத்தகைய உணர்ச்சிகளை திட்டமிட்டு எழுப்புகிறாரா என்று பார்க்கவேண்டும்.

மொழிப்போர் தியாகிகள் வீரவணக்கநாள்!: நேருஜியின் 1959ம் ஆண்டு சமரசத்தில் மறந்துவிட்ட தியாகங்கள், திடீரென்று தமிழ் செம்மொழியானப் பிறகு, மாநாடு நடத்தப்படும் வேளையில் பேசப்படுவது விந்தையே! நேருவின் உறுதிமொழியே மோசடி என்று சொல்லும் திராவிடவாதிகளும்[5] உண்டு! அனால் 1959ல் திமுக வரவேற்று தீர்மானம் நிறைவேற்றியது. தாரைப்பூசும் போராளிகளுக்கு தாரை வர்க்கப்படுகிறது – பத்மஸ்ரீக்கள், பத்மவிபூஷண்கள்…………………! தன்மானம் மிக்க, தமிழினப் போராளிகள் ஜி/ஜீபோட்டு வாங்கிக் கொட்டு வருகின்றன! குடியரசு நாளில் கருணாநிதிஜி தனது பிரிவினையை மறைமுகமாக ஊட்டுகிறார் என்பதுதான் உண்மை. தில்லியில் ஹிந்தியில் “நமஸ்தேஜி” என்று விளித்து, “கைஸே ஹைஜி?” நலம் கேட்கும் கருணாநிதிஜி, கனிமொழிஜி, மாறன்ஜிகள்……………..இன்று ஹிந்தியை எதிர்ப்பு பாட்டு பாட மறைமுகமாக ஆரம்பித்துவிட்டார்களா என்ன!

கருணாநிதிஜியின் முரண்பாடா? இந்தி எதிர்ப்புக்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு!: 1976ல், இந்தி எதிர்ப்பு கிளர்ச்சிகளில் இறந்தவர்களுக்கு அரசு தரப்பில் பென்ஸன் கொடுத்தபோது, அந்த ஆணையை எதிர்த்து வழக்குத் தொடரப்பட்டது. சென்னை உயர்நீதி மன்றம் அப்பொழுது அதற்கு ஆதரவாகத் தீர்ப்பு கொடுத்தது! உடனே, அப்பீலுக்கு உச்சநீதி மன்றத்திற்குச் சென்றபோது, சாமர்த்தியமாக, அந்த தீர்ப்பை விலக்கும்போது குறிப்பிட்டது, “இந்தியை ஊக்குவிப்பதற்கு பதிலாக, இந்திக்கு எதிரான உணர்ச்சியை தூண்டுவதாக உள்ளது”. என்று சரிசெய்தது[6]. அதே மாதிரி முரசொலி தொடுத்த மற்றொரு வழக்கில்[7], பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகும் ஆங்கிலத்தை இந்திகூட உபயோகித்தாலும், இந்தி படித்தவர்களுக்கு சலுகை அளித்தாலும்[8] அவை பிரிவுகள் 343 (3) மற்றும் 344 (6) சொல்லியுள்ளபடி, பிரிவு 351ஐ மீறுவதாகது என்று தீர்ப்பளித்தது! ஆகவே, இவற்றையெல்லாம் மறைத்து பேசுவது என்பது, திராவிடவாதிகளுக்குக் கைவந்த கலைதான் போலும்[9].

ஆங்கிலம் தெரியாத நோபல் பரிசு பெற்றவர்களும், ஹிந்தி தெரியாத பத்மஸ்ரீக்களும்: தமிழ் பேச்சாளிகள்-எழுத்தாளிகள் தங்களுக்கு சாதகமாக இருந்தால் எதைவேண்டுமானாலும் பேசுவார்கள்-எழுதுவார்கள். அங்கு தமிழ்-தமிழல்லாதது என்றெல்லாம் நிலைகள் மறக்கப்படும்!

  • இந்தி தெரிந்தால் வேலை கிடைக்கும் என்றல், இந்தி படித்தவர்களுக்கெல்லாம் ஏன் வேலை கிடைப்பதில்லை?
  • தமிழ் படித்தால் வேலைக் கிடைக்காதா?
  • நோபல் பரிசு பெற்றவர்களுக்குக் கூட ஆங்கிலம் தெரியாதே?
  • செத்தபாடை பேசுமா?

இப்படி அருமையாக தமிழில் மணிக்ககணக்கில் பேசி, பேச்சாளி என்ற முறையில் பணத்தை வாங்கிக் கொண்டு[10] கிளம்பிவிடுவார்! கேட்பவர்களுக்கு மகிழ்ச்சியுடன், ஏதோ டிவியில் ஒரு நிகழ்ச்சி பார்த்தது போன்ற உணர்ச்சியுடன் சென்றுவிடுவர்! ஆனால், சாகித்ய அகடமி பரிசுக்காக அலையும் கோஷ்டிகள் ஏராளம்!

ஹிந்தி எதிர்ப்பு பட்டியலிடும் கருணாநிதிஜி: வடசென்னை மாவட்ட தி.மு.க. சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்கநாள் பொதுக் கூட்டம், சென்னை பெரவல்லூரில் நேற்று நடந்தது[11]. இந்நிகழ்ச்சியில் முதல்வர் கருணாநிதி பேசியதாவது: “கடந்த 1938 ம் ஆண்டு முதல், இந்தியை கட்டாயமாக திணிக்கப்படுவதை எதிர்த்து 30 க்கும் மேற்பட்டோர் உயிர்த் தியாகம் செய்துள்ளனர். அந்த மொழிப்போரில் ஈடுபட்டவர்களின் தியாகத்தை நினைவுகூறும் விதமாக இக்கூட்டம் நடக்கிறது. இதை, கொண்டாட்டம் என கூறக்கூடாது. மொழிப்போர் தியாகிகளை நினைவூட்டும் நாள். எதிர்காலத்தில் தமிழுக்கு எந்தவித எதிர்ப்பும் வந்துவிடக்கூடாது என்பதற்கான அடையாளம்”.

இந்தி மொழிக்கு நாம் விரோதி அல்ல!: கருணாநிதி தொடர்கிறார், “இந்தி உள்பட எந்த மொழியையும் நாம் எதிர்க்கவில்லை. இந்தி மொழிக்கு நாம் விரோதி அல்ல. அதை, நம்மீது திணிக்கும்போது, மறுக்கிறோம்; எதிர்க்கிறோம். தமிழ் மொழிக்கான இடம் பறிக்கப்படுவதை எதிர்க்கிறோம்.

  • கடந்த 1938 ல், இந்தியை கட்டாயப் பாடமாக்குவதில் அப்போதைய முதல்வர் ராஜாஜி தீவிரமாக இருந்தார், இந்தியை கட்டாயம் என அறிவித்தார். எனினும் காலம் மாறியது.
  • 1965-ல் அதே ராஜாஜி இந்தியை எதிர்த்து என்னுடன் ஒரே மேடையில் நின்று எதிர்ப்புக் குரல் எழுப்பினார். இந்தி வந்தால், நாம் இரண்டாவது குடிமகனாக ஆகிவிடுவோம் என்றும் கூறினார்.
  • 1967ல் தி.மு.., உதயமானபோது, முதல்வர் அண்ணாதுரை மொழிப்போர் தியாகிகளின் ஆத்மா சாந்தியடைய தீர்மானம் கொண்டு வந்தார். மொழிப்போரில் உயிர் நீத்தவர்களுக்கு வழங்கப்படும் ஆறுதல் தொடர வேண்டும்”.

இந்தியை ஆதரித்த திராவிட மறவர்கள்: 1925ல் திரு. வி.க தலைமையில் நடந்த காஞ்சிபுரம் மாநாட்டில், “தமிழ் இளைஞர்கள் மிக விரைவில் இந்தி கற்றுக் கொள்ளவேண்டும்”, என தீர்மானத்தை நிறைவேறியது! இன்று குறிப்பிடப்பட்டபடி, இந்தி எதிர்ப்பெல்லாம் கருணாநிஜிக்கு, அவர் பெரிய குடும்பம், குடும்ங்களுக்கு இல்லை. அங்கெல்லாம், “சல்தா ஹைஜி” தான்!

மோடியின் குஜராத் நீதிமன்றம் சொல்கிறது இந்தி மொழி தேசிய மொழி அல்ல என்று! கருணாநிதி தொடர்கிறார், “மொழிப் போர் தியாகிகள் தினம் அனுசரிக்கும் இந்த நாளில் குஜராத் உயர் நீதிமன்றம் ஒரு தீர்ப்பை தந்துள்ளது. இந்தி மொழி தேசிய மொழி அல்ல என்றும், அதை தேசிய மொழி என யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்றும், மற்ற மாநில மொழிகளைப் போல இந்தியும் சில மாநிலங்களில் பேசக் கூடிய ஒரு மொழி மட்டுமே என்றும் அந்த தீர்ப்பில் நீதிபதிகள் கூறியுள்ளனர். இந்தியாவில், ஆட்சிமொழியாக இந்தி, அதையடுத்து ஆங்கிலம் உள்ளது. தமிழையும் ஆட்சிமொழியாக ஆக்க வேண்டும் என்பதையே மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாளில் கோரிக்கையாக வைக்கிறோம். அதற்காக, தமிழை மட்டும் ஆட்சி மொழியாக ஆக்க வேண்டும் என்று நாங்கள் கூறவில்லை”. மேலும், அத்தீர்ப்பு, விற்கப்படும் பொருள் பொட்டலம், அட்டைப்பெட்டி முதலியவற்ரின் மீது விலை, உற்பத்திசெய்யப்பட்ட தேதி, உற்பத்தியாளர் பெயர், முகவரி முதலிவற்றை இந்தியில் இருக்கவேண்டும் என்று கூறி ஒருவர் பொதுநல வழக்கு தொடர்ந்ததில் தான், இவ்வாறான தீர்ப்பு வழங்கப்பட்டது! இதன்மேலே அவர் அப்பீல் போவாரா இல்லையா என்றெல்லாம் தெரியாது.

குழப்பும் கருணாநிதிஜி: இந்தி தேசிய மொழி என்பது வேறு, ஆட்சிமொழி என்பது வேறு: “அம்பேத்காருடைய” இந்திய அரசியல் நிர்ணய சட்டத்தின் 343 சரத்தின்படி, “தேவநகரியிலுள்ள இந்தி ஆட்சி மொழியாகும்” என்பதுதான். அதுமட்டுமல்லாது 351ன்படி இந்தி மொழி வளர்ச்சிக்காக ஆவண செய்ய வரைமுறைக் கொடுத்துள்ளது. ஆகவே, “….……. “1ன்படி இந்தி மொழி வளர்ச்சிக்காக ஆவண செய்ய வரைமுறைக் கொடுத்துள்ளது. ஆகவே த்திசெய்யப்பட்ட தேதி, உற்பத்தியாளர் பெயர், முகவரி முடதமிழை மட்டும் ஆட்சி மொழியாக ஆக்க வேண்டும் என்று நாங்கள் கூறவில்லை. மலையாளம், தெலுங்கு, கன்னடம், வங்க மொழி, இந்தி ஆகிய மொழிகள் உள்பட தமிழையும் சேர்த்து அனைத்து தேசிய மொழிகளையும் ஆட்சி மொழிகளாக அங்கீரிக்க வேண்டும் என்றுதான் கோருகிறோம்”, என்று பேசுவது, நடக்கமுடியாததை பேசுவதேயாகும்! சட்டரீதியாக முடியாததை சொல்கிறார் என்பதில்லை, அவ்வாறு சொல்லி மூட்டிவிடுகிறார் எனலாம்.

எல்லாமொழிகளும் ஆட்சிமொழிகளாக்க வேண்டும்! கருணாநிதி தொடர்கிறார், “தமிழையும் ஆட்சிமொழியாக ஆக்க வேண்டும் என்பதையே மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாளில் கோரிக்கையாக வைக்கிறோம். அதற்காக, தமிழை மட்டும் ஆட்சி மொழியாக ஆக்க வேண்டும் என்று நாங்கள் கூறவில்லை. மலையாளம், தெலுங்கு, கன்னடம், வங்க மொழி, இந்தி ஆகிய மொழிகள் உள்பட தமிழையும் சேர்த்து அனைத்து தேசிய மொழிகளையும் ஆட்சி மொழிகளாக அங்கீரிக்க வேண்டும் என்றுதான் கோருகிறோம்[12].

  • 1963ல் காங்கிரஸ் ஆட்சியின்போது, இந்தித் திணிப்பை எதிர்த்து அண்ணா அரசியல் சட்ட நகலை எரிக்க முயன்று, கைதானார். ஆனால் அவரது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை யாரும் பறிக்கவில்லை.

  • 1986-ல் எனினும் அண்ணாவின் பெயரால் கட்சி நடத்திய எம்.ஜி.ஆர். ஆட்சியில், இந்தித் திணிப்பை எதிர்த்து அரசியல் சட்ட நகலை எரிக்க முயன்றதற்காக . அன்பழகன் உள்ளிட்ட 10 தி.மு.. எம்.எல்..க்களின் பதவி பறிக்கப்பட்டது. இது மிகவும் வேதனையானது”.

சிங்கங்கள் நாங்கள், புலிகள் அல்ல, சிங்காசனங்கள் எங்களுக்குத் துச்சம்! கருணாநிதி தொடர்கிறார், “தமிழகத்தைப் பொருத்த வரை எங்களுக்கு ஆட்சி பெரிதல்ல. நாங்கள் சிங்கத்தமிழர் கூட்டம். நாங்கள் ஆட்சியில் இருப்பது பெரிதல்ல; தமிழ்த் தாயின் சிம்மாசனத்தை[13] பறித்தால், விடமாட்டோம்[14]. இந்தியாவில் ஆட்சிமொழியாக, தமிழும் வரவேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை”. இவ்வாறு முதல்வர் பேசினார். கூட்டத்துக்கு வடசென்னை மாவட்ட தி.மு.க. செயலாளர் வி.எஸ். பாபு எம்.எல்.ஏ. தலைமை வகித்தார். கூட்டத்தில் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், சென்னை மாநகர மேயர் மா. சுப்பிரமணியன், தென்சென்னை மாவட்ட தி.மு.க. செயலாளர் ஜெ. அன்பழகன் உள்ளிட்டோர் பேசினர்.

© வேதபிரகாஷ்

24-01-2010


[1] முன்பு சொன்னது, “சொன்னத்தை செய்வோம், செய்ததை சொல்வோம்!”

[2] தினமணி, தமிழுக்கு மத்திய ஆட்சி மொழி அந்தஸ்து கேட்பதில் என்ன தவறு? கருணாநிதி, 26 Jan 2010

http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Chennai&artid=187523&SectionID=97&MainSectionID=97&… %BF

[3] தினமலர், இந்தியாவின் ஆட்சி மொழியாக தமிழ் : முதல்வர் கருணாநிதி விருப்பம், ஜனவரி 26,2010

http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?news_id=6402

[4] தினகரன், http://www.dinakaran.com/arasialdetail.aspx?id=4549 தெலுங்குக்காரரான அன்பழகனுக்கு ஹிந்தி தெரியுமா என்று தெரியவில்லை!

[5] தியாகு, முடியவில்லை மொழிப்போர், தமிழக மாணவர் இயக்கம்,  சென்னை, 1993, ப. 5-6.

[6] Dalavai vs State of Tamilnadu – AIR. 1976. S.C. 1559 (paras, 4, 6).

[7] Union of India vs Murasoli – AIR. 1977. S.C. 225 .

[8] Union of India vs Murasoli – AIR. 1977. S.C. 225 (230).

[9] வீரமணி, ராஜேந்திரன், கொளத்தூர் மணி, பெ. மணியரசன் மற்றும் கம்யூனிஸ-நக்ஸலைட் உதிரிகள் சிறு-சிறு புத்தகங்கள் போட்டு குழப்பிவருவது சாதாரண விஷயமே.

[10] இப்பொழுதெல்லாம் பேசுவதற்கே ஆயிரம் கணக்கில் பணம் கேட்கிறார்களாம், வாங்குகிறார்களாம், வாழ்க தமிழ், வளர்க தமிழ் பேச்சாளிகள்! அடுத்த வருமான வரி “ரெய்டு” இவர்கள் மீது இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை!

[11] 25-01-2010 அன்று நடந்த கட்சி கூட்டத்தில் கருணநிதி பேசியது.

[12] இதுவே நடக்காத காரியம். அரசியல் நிர்ணய சட்டத்தை மாற்றாமல் நடக்காது. இன்றைய நிலையில், பல முக்கியமான பிரச்சினைகளை விட்டுவிட்டு, சோனியா மெய்னோ, இதற்கா கவலைப் படுவார்? ஏற்கெனவே மொழிவாரி மாநிலங்கள் பிரச்சினை போய், தெலிங்கானா போன்ற ப்ய்திய பிரச்சினைகள் வந்துள்ல நிலையில், இவரது பிரிவினைத் தூண்டும் பேச்சுகளை கவனிக்கவேண்டும்.

[13] “சிம்மாசனம்” தமிழா, இந்தியா, செத்த பாடையா, அந்நாளில், இவ்வர்த்தையை உபயோகிக்கலாமா?

[14] என்ன, உருட்டல், மிரட்டல்கள்! காங்கிரஸ்காரர்கள்தாம் கவனிக்க வேண்டும்! இன்று உண்மையான காங்கிரஸ்காரர்கள் இருப்பது கடினமே. எற்கெனவே, குமரி அனந்தனை தமிழ் பற்றி பேசவைத்து விட்டார்கள் சன்-டிவியில். சனிக்கிழமை, வீரப்பாண்டியன் நிகழ்ச்சி. ஆகவே, அவரும் அமைதியாகத்தான் இருப்பார்.