Posts Tagged ‘ஆழ்கிணறு’

தமிழகத்தில் தொடரும் மின்சாரத் திருட்டு: வாரியத்திற்கு கோடிகளில் நஷ்டமாம், சம்பளம் கொடுக்கத் திணறுகிறதாம்!

ஓகஸ்ட் 28, 2011

தமிழகத்தில் தொடரும் மின்சாரத் திருட்டு: வாரியத்திற்கு கோடிகளில் நஷ்டமாம், சம்பளம் கொடுக்கத் திணறுகிறதாம்!

தமிழ்நாடு மின்சார வாரியம் 52,500 கோடிகள் வங்கிகளிடமிருந்து கடன் வாங்கியுள்ளது.  ஆனால் நஷ்டத்தில் இயங்கும் போதும், பற்பல சலுகைகளை அள்ளிவீசித்தான் வருகிறது. இலவச மின்சாரம் என்ற பெயரில் நடக்கும் கொள்ளையில் தான் கோடிக்கள் விரயமாகிறது. இந்நிலையில் மின்சார ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க பணமில்லை என்றாதால், தமிழக அரசே 2,300 கோடி நிதியுதவி அளித்து உதவுகிறதாம்[1]. கூடிய சீக்கிரத்தில், மின்சார கட்டணம் அதிகமகப் போகிறது என்பதை இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

தமிழகத்தில் மின்சாரம் திருடுவது என்பது திராவிட கட்சிகளின் பாரம்பரியமாகவே இருந்து வந்துள்ளது. ஒவ்வொரு தெருக்கூட்டத்திற்கும் அவ்வாறு திருடுவது (கம்பிப் போட்டுத் திருடுவது ஒரு கைவந்த கலை[2]) பிறகு அவர்கள் வளர்ந்தவுடன், பொருளாதார அதிகாரம் பெற்றவுடன், அவர்களுடைய வியாபார காரணங்களுக்கு மின்சாரம் திருடுவது வாடிக்கையாக இருந்து வந்தது. இதே கலை தான் இப்பொழுது வரை தொடர்ந்து வருகிறது. இதைப் பற்றி “தமிழகத்தில் மின்சாரத் திருட்டு ஏன்?” என்ற தலைப்பில் எழுதியுள்ளேன்[3]

பொது நிகழ்ச்சிகள் நடத்துவதில் திருட்டு: பொது கூட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு மின்சாரம் உபயோகப்படுத்துவதில், முதலில் மின்சாரவரியத்திலிருந்து “ஒப்புதல் சான்றிதழ்” பெற்றபிறகுதான் அனுமதிக்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டது. இதன்படி அவ்வாறு ஒப்புதல் இல்லாமல், மின்சாரத்தை உபயோகப்படுத்துவர்கள் மீது சட்டப்படி “மின்சாரத் திருட்டு” என்று போலீஸாரிடத்திலேயே புகார் கொடுத்து தக்க நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு மின்சார வாரிய விஜிலென்ஸ் துறை முடிவு செய்தது.
அருகிலுள்ள டிரான்ஸ்ஃபார்மரில் இருந்து திருடுவது: இதன்படி, நிகழ்ச்சிகளை நடத்துபவகள் குறுகிய கால உபயோக இணைப்புப் பெற்று, அதற்கான மின்னுபயோகத்திற்கு பணம் செல்லுத்தவேண்டும். இதனால் அருகில் இருக்கும் டிரான்ஃபார்மர்களிலிருந்து மின்சாராம் திருடுவது தடுக்கப்படும்.  மின்சார வாரிய விஜிலென்ஸ் துறை  தலைவர் வி.பாலச்சந்திரன், “ஜூன் 2005லிருந்தே இம்முறை இருந்தாலும், போலீஸாருக்கு உரிய ஆணைப் பிறப்பித்திருந்தாலும் சிலகாலத்திற்குப் பிறகு போலீஸார் அதை கடைப்பிடிப்பதை நிறுத்தி விட்டார்கள்”, என்று எடுத்துக் காட்டியுள்ளார்.
கம்பிபோட்டுத்திருடுவதால்இழப்பு, இனிமேல்போலீஸ்நடவடிக்கைஇருக்கும்என்றால், பிறகுமுன்புஏன்போலீஸார்நடவடிக்கைஎடுக்கவில்லை? “பொது கூட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு குறுகிய கால உபயோக இணைப்புப் பெற்று மினசாரத்தை உபயோகிக்க வேண்டும் இல்லை டீசல் ஜெனரேட்டர்களை உபயோகிக்க வேண்டும். ஆனால், பழையபடி, கொக்கிப் போட்டு மின்சாரத்தை திருட்டுத்தனமாக உபயோக்கப்படுத்துவதை நாங்கள் கண்டறிந்துள்ளதால், பழையபடி நடவடிக்கை எடுக்க உள்ளோம்” என்று சென்ற வருடத்தில் சொல்லிருந்தார்.
கட்டடங்கள்கட்டுபவர்கள்அருகிலுள்ளவயலிலிருந்துமின்சாரம்திருடுகிறார்கள்: இதே மாதிரி இப்பொழுது வீடு-கட்டிடங்கள் கட்டுபவர்களும், அத்தகைய திருட்டு வழியைப் பின்பற்றுகிறார்கள். பொதுவாக அருகில் உள்ள வீடு அல்லது வயலில் உள்ள இணைப்பிலிருந்து இவர்கள் மின்சாரத்தைத் திருடுகிறார்கள். அத்தகைய திருட்டுகளை 2008-2009ல் 512 மற்றும் 2009-2010ல் 1,532 என்று கண்டு பிடித்து நடவடிக்கை எடுக்கப்படுள்ளதாக அறிவித்தார்.
இலவசமின்சாரத்தைஆழ்கிணறுநீரெடுக்கப்பயன்படுத்துவது, நீரைவிற்பதுவிவசாயிகளின்திருட்டுவேலை: விவசாயத்திற்கு இலவச மின்சாரம் கொடுப்பதினால், அம்மின்சாரம் இவ்வாறான காரியங்களுக்கு உபயோகப்படுத்துவதால் வாரியத்திற்கு பெரிய அளவில் இழப்பு ஏற்ப்பட்டுள்ளது. குறிப்பாக தண்ணீரை லாரிகளில் விற்ப்பவர்கள், இக்காரியத்தை செய்து வருகிறர்கள். மேற்கு தமிழ்நாட்டில் கோயம்புத்தூரையும் சேர்ந்து மற்ற இடங்களில் இத்தகைய மின்சாரத்திருட்டு அதிகமாக நடக்கிறது. 2009-10ல் 329, 2008-09ல் 317 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கம்பிபோட்டுத்திருடுவதுதமிழகர்களுக்கு / திராவிடகட்சிகளுக்குகைவந்தகலை: மீட்டரை விடுத்து நேரிடையாக இணைப்பு கொடுத்தல்,  கம்பி போட்டு மின்சாரம் திருடும் முறைகள், 2009-10 வருடத்தில் குறைந்தாலும், புதிய முறைகளில் மின்சாரத்தைத் திருடும் வழிகள் அதிகரித்துள்ளன. 2008-9ல் கம்பிபோட்டு திருடுவது 2,765 ஆக இருந்தது 2009-10ல் 2,416க குறைந்தாலும், புதிய வகை திருட்டுமுறைகளில் அதிகமாகியுள்ளது. அதாவது ஒரே வருடத்தில் 563லிருந்து 3,266க புதிய திருட்டுகள் நடந்துள்ளன. அதாவது ழைந்து மடங்கு உயர்ந்துள்ளது. தூத்துக்குடி, ஈரோடு பகுதிகளில் புதியமுறை திருட்டுகள் நடைபெறுகின்றன. இதற்காகவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

மின் திருட்டு, மின்வாரிய சொத்து திருடுவோர் மீது குண்டாஸ்! தயாராகிறது அரசின் அடுத்த திட்டம்[4]: மின் திருட்டால் நஷ்டமடைந்துள்ள தமிழக மின்வாரியம், மின் திருட்டில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது. இதற்காக அமைக்கப்பட்டுள்ள மின்சார பாதுகாப்புப் படை, விரைவில் அதிரடி,”ரெய்டு’களை துவங்க உள்ளது. தமிழகத்தில் மின்திருட்டால், மின்வாரியத்திற்கு ஆண்டுதோறும் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. மின் மீட்டர்களை சேதப்படுத்துதல், காந்தம் வைத்து மீட்டர்களை ஓட விடாமல் வைத்தல், மீட்டருக்கான இணைப்பை ரத்து செய்தல், டிரான்ஸ்பார்மர்களில் கொக்கி போடுதல் என, பல வகைகளில் மின்சாரம் திருடப்படுகிறது. மின்திருட்டையும், பகிர்மானத்தின் போது ஏற்படும் மின் இழப்பையும் தடுத்தாலே, ஓரளவு நஷ்டத்தை மின்வாரியம் சரிக்கட்ட முடியும். முதற்கட்டமாக, மின் திருட்டை தடுக்கும் நடவடிக்கைகளை மின்வாரியம் மேற்கொண்டுள்ளது.

எடுக்கப்படும்-படுகின்ற நடவடிக்கைகள்: இதற்காக, மின்வாரிய சேர்மனின் நேரடி கட்டுப்பாட்டில் அமைக்கப்பட்டுள்ள 18 பறக்கும் படைகள், சென்னை, திருச்சி, மதுரை மற்றும் கோவை ஆகிய நான்கு இடங்களில் செயல்படுகின்றன. கடந்த ஆண்டில் மட்டும் பறக்கும்படை ரெய்டில், 6,230 வழக்குகள் பதியப்பட்டு, அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று மாதங்களில், 13.14 கோடி ரூபாய் மதிப்பிலான திருட்டு நடவடிக்கைகளை கண்டுபிடித்துள்ளது. ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில், தமிழகம் முழுவதும், 1,642 மின் திருட்டு வழக்குகள் பதிந்து, இந்திய மின்சார சட்டம் 2003ன் படி, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட மின்சார பாதுகாப்புப் படை அமைக்க, மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. இதற்கான முடிவுகள், மின்வாரிய 14வது கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு, ஓய்வு பெற்ற 400 ராணுவ வீரர்களை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது.

மின்வாரிய கண்காணிப்பு (விஜிலென்ஸ்) போலீசாரின் நடவடிக்கை:  இது மட்டுமின்றி, தமிழக மின்வாரியத்தில் செயல்படும் கண்காணிப்பு (விஜிலென்ஸ்) போலீசாரும், மின் திருட்டை தடுக்கும் நடவடிக்கையை துவங்கியுள்ளனர். வரும் காலங்களில், தொடர்ந்து மின் திருட்டில் ஈடுபடும் நிறுவனங்களின் மின் இணைப்புகளை, நிரந்தரமாக ரத்து செய்யவும், நிறுவனங்களின் அனைத்து அங்கீகாரங்களையும் ரத்து செய்ய பரிந்துரைக்கவும், மின்வாரியம் முடிவு செய்துள்ளது.மின் திருட்டில் ஈடுபடுவோர் மற்றும் மின்வாரிய பொருட்களுக்கு சேதம் விளைவிப்போர் மீது, குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து, மின்வாரிய பறக்கும்படை பொறியாளர் ஒருவர் கூறியதாவது:மின் திருட்டை தடுப்பதின் மூலம், 15 சதவீத நஷ்டத்தை சரிக்கட்ட முடியும். இதை கருத்தில் கொண்டு, மின் திருட்டை தடுக்க, 24 மணி நேர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளோம். திருட்டில் சிக்குவோர் மீது, இந்திய மின்சார சட்டம் 2003 பிரிவு 135(1) சி அடிப்படையில் நடவடிக்கை எடுக்கிறோம். இரண்டு வகையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. தவறை ஒப்புக் கொண்டு, மின்வாரிய நடவடிக்கைக்கு சமரசமாக ஒத்துழைப்போரிடம், மின்வாரியம் நிர்ணயிக்கும் கட்டணத்தை அபராதமாக பெற்று, எச்சரித்து அனுப்புகிறோம். இரண்டாவது வகையில், ஒன்றுக்கு மேற்பட்ட முறை தவறு செய்வோர் மீது வழக்கு பதிந்து, கோர்ட் மூலம் நடவடிக்கை எடுப்பதாகும். இதில், பெரும்பாலானோர், தவறை ஒப்புக் கொண்டு அபராதம் செலுத்தி விடுவர். தற்போது, மின்சார பாதுகாப்பு படையும் செயல்பாட்டுக்கு வரும் நிலையில்,  பலமுறை பிடிபடுவோரை போலீசாரிடம் ஒப்படைத்து, மின்சார சட்டம் மட்டுமின்றி, இந்திய குற்றவியல் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். எரிசக்தித் துறை உயரதிகாரி ஒருவர் கூறும்போது, “குடிமைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவைப் போல், மின்திருட்டில் தொடர்ந்து ஈடுபடுவோர் மீதும், மின் இணைப்பு பெட்டியின் கதவுகளை திருடுதல், மின்வாரிய கேபிள்களை திருடுதல்[5] போன்ற மின்வாரிய சொத்துக்களை திருடுவோர் மீது, குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுப்பது குறித்து, சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து வருகிறோம்’ என்றார்.

சட்டம் சொல்வதென்ன? இதுகுறித்து, சட்டத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:தற்போது, தமிழகத்தில் 1982 சட்டம் 14 என்ற சட்டத்தின் அடிப்படையில் தான், குண்டர் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.  “சட்டத்துக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடுவோர், கள்ளச் சாராயம் காய்ச்சுவோர், போதைப்பொருள் விற்பனை மற்றும் கடத்தல், வனச்சட்டத்துக்கு எதிரான செயல்கள், ரவுடி அராஜகம், விபச்சாரம், நில அபகரிப்பு, போலி வீடியோ தயாரித்தல் ஆகிய குற்றங்களுக்கு எதிரான சட்டவிரோத தடுப்பு தமிழக சட்டம் 1982(14)’ என, இச்சட்டம் அழைக்கப்படுகிறது. இதில், போலி வீடியோ தயாரிப்போரை குண்டர் சட்டத்தில் கைது செய்யும் சட்டம், கடந்த 2004ம் ஆண்டு முதல்வர் ஜெயலலிதா உத்தரவால் திருத்தம் செய்யப்பட்டதாகும்.

புதிய சட்டத்திற்கு தயாராகும் புதிய அரசு? தற்போது,  ஆட்சி மாற்றத்திற்கு பெரும் காரணியாக விளங்கிய மின் பிரச்னையை சரிசெய்ய, மின் திருட்டில் ஈடுபடுவோர் மீது, குண்டர் சட்டத்தை கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன. இந்த சட்டத்தில், “மின்துறைக்கு எதிரான சட்டவிரோத நடவடிக்கைகள்’ என்பதை இணைத்து, சட்டசபை கூடுவதற்கு முன் அவசரமாக தேவைப்பட்டால், கவர்னர் ஒப்புதலுடன் திருத்த (ஆர்டினன்ஸ்) சட்டமாக கொண்டு வரலாமா என, மின்துறை ஆலோசனை நடத்துகிறது[6]. இவ்வாறு அவர் கூறினார்.


[1] தினமலர், சம்பளம் கொடுக்க திணறும் மின்வாரியம்: தமிழக அரசு ரூ 2300 கோடி நிதியுதவி, 27-08-2011, சென்னை பதிப்பு, ப,2.

[2] சில தொண்டர்களுக்கு, அந்தந்த வட்டங்களில் சிறப்பான பயிற்சி அளிக்கப்படும் அல்லது மின்சார வேலை செய்யும் திராவிடக் கட்சித் தொண்டரே அதனை அழகாக செய்வார்.

[4] தினமலர், மின் திருட்டு, மின்வாரிய சொத்து திருடுவோர் மீது குண்டாஸ்!தயாராகிறது அரசின் அடுத்த திட்டம், பதிவு செய்த நாள் : ஜூலை 17,2011,23:38 IST; மாற்றம் செய்த நாள் : ஜூலை 18,2011,00:56 IST

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=277281

[5] இது மின்வாரியத் துறை அதிகாரிகள், ஊழியர்கள், தனியார் கம்பெனிகள் முதலியோர்களின் கூட்டுக்கொள்ளையில் நடந்து வருகிறது. இது சாலை போடுவது போன்ற மோசடி வேலையாகும். முதலில் கம்பிகள் காணவில்லை என்ரு செய்தி வரும், பிறகு அதற்கு சப்ளை செய்யப்பட்டது என்று கணக்கு எழுதப்படும். கோடிகளை அனைவரும் பங்கிட்டுக் கொள்வர்.

[6] புதிய சட்டம், திருத்தம் என்றாலே, அந்த தேதியிலிருந்து தான் அமூலுக்கு வரும். அப்படியென்றால், பழைய குற்றங்கள், அச்சட்டத்தில் வராது. அதாவது, பழைய குற்றவாளிகள் தப்பித்துக் கொள்ள மறைமுகமாக உதவ அரசியல்வாதிகள் இவ்வாறு செய்வார்கள்.