நீதிமன்றமும்அரசையும், சட்டமன்றத்தையும்மதிக்கவேண்டும்: உச்ச நீதிமன்றத்தின் இவ்வுத்தரவு பற்றி மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜுஜூ கூறியதாவது[1]: “நாங்கள்எங்கள்நிலைப்பாட்டைமிகத்தெளிவாகக்கூறியுள்ளோம். மேலும்இவ்விவகாரத்தில்பிரதமரின்நோக்கம்குறித்துநீதிமன்றத்திற்குத்தெரிவித்துள்ளோம். நீதிமன்றத்தையும்அதன்சுதந்திரத்தையும்நாங்கள்மதிக்கிறோம். ஆனால்லட்சுமணரேகைஎனஒன்றுஉள்ளது. அதனைஅரசின்அனைத்துஅமைப்புகளும்மதிக்கவேண்டும். நீதிமன்றமும்அரசையும், சட்டமன்றத்தையும்மதிக்கவேண்டும். எங்களிடம்தெளிவானஎல்லைநிர்ணயம்உள்ளது. அந்தலட்சுமணரேகயையாரும்கடக்கக்கூடாது,” இவ்வாறு கூறினார்[2]. அப்பிரிவு தேவயில்லை என்ற படசத்தில், இன்னொரு சட்டம் உருவாக்கப் படும். ஏனெனில், தேசத்துரோக கருத்துகள், வேலைகள், தீவிரவாதங்கள் இருக்கத்தான் செய்கின்றன. பிறகு அவற்றைக் க்ட்டுப் படுத்த, தடுக்க, தீர்க்க்க, தண்டிக்க நீதிமன்றம், அரசு, சட்டமன்றம், நாடாளுமன்றம் என்ன செய்ய முடியும் என்று கவனிக்க வேண்டும்
பிரிட்டிஷ்காலசட்டங்களில்ஒன்றுதேசதுரோகசட்டம்[3]. இந்த சட்டம் அரசியல் காரணங்களுக்காக பழிவாங்கவே அதிகம் பயன்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டு உள்ளது[4]. இதில் மத்திய, மாநில அரசுகள் எதுவும் விதிவிலக்கல்ல என்றும் கூறப்படுகிறது. இச்சட்டத்தை நீக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் ஏராளமான மனுக்கள் உள்ளன. கடந்த திங்களன்று (மே 09) இம்மனுக்கள் தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு, இச்சட்டம் குறித்து பரிசீலிப்பதாகவும், அதன் முடிவுகள் வரும் வரை இச்சட்டத்திற்கு எதிரான மனுக்களை விசாரிக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டது. இந்நிலையில் இன்று மீண்டும் அம்மனுவை விசாரித்த கோர்ட், அச்சட்டத்தை நிறுத்தி வைப்பதாக அதிரடி உத்தரவு பிறப்பித்தது. ”அரசின் பரிசீலனை முடியும் வரை தேச துரோக சட்டத்தை பயன்படுத்தக் கூடாது. மத்திய, மாநில அரசுகள் பிரிவு 124ஏ-வை பயன்படுத்தி வழக்கு பதியாது என நம்புகிறோம். தேச துரோக வழக்கின் கீழ் உள்ள விசாரணைகள் நிறுத்தி வைக்கப்படுகிறது. ஏற்கனவே தேச துரோக வழக்கில் சிறையில் உள்ளவர்கள் ஜாமின் கோரி நீதிமன்றத்தை அணுகலாம்” என நீதிபதிகள் கூறினர்.
இந்தியாவில்தேசத்துரோகசட்டம், முந்தையவழக்குகள்: பிரிடிஷ்-இந்திய அரசுக்கு எதிராக இருந்தவர்களைத் `தேசத்துரோகிகள்’ என்று அழைக்கப் பட்டனர், அதில், விடுதலை போராளிகளும் அடங்குவர். பகத்சிங் போன்றவர்கள் தேசத்துரோகிகள் எனராங்கிலேயர் அரசு முத்திரைக் குத்தியது. தேசத் துரோக வழக்கில் திலகர் 18 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். 1922-ம் ஆண்டு மகாத்மா காந்தி, யங் இந்தியா இதழில் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராகக் கட்டுரை எழுதியபோது, காந்தி மீதும் `யங் இந்தியா’ வெளியீட்டாளர் சங்கர்லால் பாங்கர் மீதும் இந்தச் சட்டம் பாய்ந்தது. “இந்தியர்கள் மீது அடக்குமுறையைப் பாய்ச்சுவதற்காகவே இந்தச் சட்டம் திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது,” என்று காந்தி, 124ஏ பிரிவு குறித்து கூறியுள்ளார். ஜவகர்லால் நேரு இச்சட்டப் பிரிவு 124ஏ ஏற்றுக்கொள்ள முடியாத மிகவும் ஆட்சேபனைக்குரிய சட்டம் எனத் தெரிவித்தார். இந்தியர்களை அடக்கி வைக்கவே தேசத்துரோகச் சட்டத்தை பிரிடிஷ்-இந்திய ஆட்சியாளர்கள் திட்டமிட்டு இயற்றினர் என மகாத்மா காந்தி கருத்து தெரிவித்தார். தேசத் துரோக வழக்கில் வ. உ. சிதம்பரம்பிள்ளை 1908 முதல் 1912 முடிய வரை சிறையில் அடைக்கப்பட்டார். 2003-ஆம் ஆண்டில் விசுவ இந்து பரிசத் பொதுச் செயலாளர் பிரவீன் தொகாடியா தேசத் துரோக வழக்கில் கைது செய்யப்பட்டார். 2010-இல் எழுத்தாளர் அருந்ததி ராய் காஷ்மீர் பிரிவினைவாதம் மற்றும் மாவோயிஸ்டுகளுக்கு ஆதரவாகவும், இந்திய அரசுக்கு எதிராகவும் எழுதியதற்கு தேசத் துரோக வழக்கில் குற்றம் சாட்டப்பட்டார்.
பிரிவு 124 ஏ–க்குஆதரவானகருத்துக்கள்: இந்திய தண்டனைச் சட்டம், பிரிவு 124 ஏ தேசப் பிரிவினைவாதிகள் மற்றும் தீவிரவாதிகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்படுகிறது. வன்முறை மற்றும் சட்டவிரோதமாக அரசை அகற்றுவதற்கான முயற்சிகள் நடந்தால், அவற்றிலிருந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை இந்தச் சட்டம் பாதுகாக்கிறது. அரசின் நிலையான தன்மை, தேசத்தின் ஒற்றுமைக்கும் பொருளாதாரத்துக்கும் முக்கியமானதாகும். நீதிமன்ற அவமதிப்பு செய்தால், தண்டனை வழங்கப்படுவது போல அரசை அவமதித்தால் தண்டனை கிடைக்கும் என்பதை இந்தச் சட்டம் உறுதி செய்கிறது’ என இதன் ஆதரவாளர்கள் கருதுகின்றனர். பல மாநிலங்களில் மாவோயிஸ்ட்டுகள் கிளர்ச்சி செய்து வருகின்றனர். இவர்கள் அரசைக் கவிழ்க்க முயன்று, பல்வேறு கிளர்ச்சிகளில் ஈடுபடுகின்றனர். வடகிழக்கு மாநிலங்களில், காஷ்மீரத்தில் தேசவிரோத குழுக்கள் வெளிப்ப்டையாகவே, ஆயுதம் ஏந்தி போராடி வருகின்றன. இவற்றைத் தடுத்து, அரசை நிலைநாட்ட இந்தச் சட்டம் பயன் படுத்தப்படுவதாக இதன் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். 03-07-2019 அன்று நாடாளுமன்றத்தில் பேசிய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய், “எந்தக்காரணத்தைக்கொண்டும்தேசத்துரோகசட்டம்ரத்துசெய்யப்படாது, தேசவிரோத, பிரிவினைவாதமற்றும்பயங்கரவாதிகளைத்திறம்படஎதிர்த்துப்போராடுவதற்காகவேஇந்தச்சட்டம்உருவாக்கப்பட்டுள்ளது,” என்றார்.
பிரிவு 124 ஏ–க்குஎதிர்கருத்துகள்: தேசத்துரோகச் சட்டம், காலனிய ஆதிக்கத்தின் நினைவாக இன்னும் இந்தியாவில் இருந்து கொண்டிருக்கிறது. ஜனநாயக நாட்டுக்கு இதுபோன்ற சட்டங்கள் பொருந்தாது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் தன் குடிமக்களுக்குத் தந்த பேச்சு சுதந்திரத்தை இந்தச் சட்டம் பறிக்கிறது’ என்று இந்தச் சட்டத்தை எதிர்ப்பவர்கள் கூறுகின்றனர். அரசின் கருத்துக்கு எதிராக நிலைப்பாட்டைக் கொண்டிருப்பது, விவாதம் நடத்துவது ஜனநாயகத்திற்குத் தேவையான அத்தியாவசியமான விஷயங்கள். ஆட்சியாளர்களைக் கேள்வி கேட்கும் உரிமை, விமர்சிக்கும் உரிமை மக்களின் அடிப்படைத் தேவை. “தேசத்துரோகவழக்கைவைத்துஇந்தியர்கள்மீதுஅடக்குமுறையைஏவிய, பிரிட்டன்தன்நாட்டில்தேசத்துரோகசட்டத்தையேரத்துசெய்துவிட்டது. இந்தியாவில்இந்தச்சட்டம்இன்னும்பயன்பாட்டில்இருப்பதுஏன்?,” என்கிற கேள்வியும் இந்தச் சட்டத்தை எதிர்ப்பவர்களிடம் எழுகிறது.
கேதார்நாத்சிங்வழக்கும், தீர்ப்பும்: தேசத் துரோகம் தொடர்பான இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 124(அ) குறித்து தேசிய அளவில் தீவிர விவாதம் எழுந்துள்ளது. மூன்றாண்டுகள் முதல் ஆயுட்காலம் வரையிலும் நீட்டிக்கக்கூடிய சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனை விதிக்க இப்பிரிவு வகைசெய்கிறது. மத்திய அரசின் பார்வையோ நடைமுறையில் இருந்துவரும் இந்தச் சட்டப்பிரிவு மேலும் தொடர வேண்டும் என்பதாகவே இருக்கிறது. இச்சட்டப்பிரிவு செல்லும் என்று 1962-ல் அளிக்கப்பட்ட கேதார் நாத் சிங் வழக்கின் தீர்ப்பையே உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு பின்பற்ற வேண்டும் என்ற அரசு வழக்கறிஞர்களின் வாதங்களை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை. கேதார் நாத் சிங் வழக்கின் தீர்ப்பில் தேசத் துரோகச் சட்டப்பிரிவை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டபோதிலும்கூட, அப்பிரிவு தவறாகப் பயன்படுத்தக்கூடாது என்பதற்கான கட்டுப்பாடுகளையும் விதித்தது. வன்முறையைத் தூண்டிவிடவோ அல்லது அதற்கு அழைப்புவிடுக்கவோ செய்யாதபட்சத்தில், அரசின் மீது கூறப்படும் விமர்சனங்கள் தேசத் துரோகம் ஆகாது என்று அத்தீர்ப்பு வரையறுத்தது.
வினோத்துவாவின்விமர்சனம், அரசியல்ரீதியிலானமுறையீடு: தற்போது தொடரப்பட்டிருக்கும் வழக்கு இமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் வினோத் துவா, பெருந்தொற்றின்போது புலம்பெயர் தொழிலாளர்களின் பிரச்சினைகளை மத்திய அரசு எதிர்கொண்ட விதத்தை விமர்சனம் செய்து தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் அவருக்கு எதிராகத் தொடரப்பட்ட தேச விரோதக் குற்றச்சாட்டைத் தொடர்ந்து எழுந்ததாகும்[5]. வினோத் துவா மீதான இக்குற்றச்சாட்டை, இரண்டு நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு ஏற்கெனவே தள்ளுபடி செய்துவிட்டது. தன் மீதான முதல் தகவல் அறிக்கையை ரத்துசெய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனு செய்திருந்த வினோத் துவா, குறைந்தபட்சம் பத்தாண்டு காலம் ஊடகங்களில் பணிபுரிந்த பத்திரிகையாளர்கள் மீது இக்குற்றச்சாட்டைப் பதிவுசெய்யும் முன்னர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அல்லது அவரால் நியமிக்கப்பட்டவர், எதிர்க்கட்சித் தலைவர், மாநில உள்துறை அமைச்சர் ஆகியோரைக் கொண்ட குழுவிடம் முன்கூட்டி ஒப்புதல் பெறப்பட வேண்டும் என்று உத்தரவிடுமாறும் கோரியிருந்தார். உள்நோக்கம் கொண்ட இக்கோரிக்கையில், அரசியல் இருப்பது வெளிப்பட்டது. சட்டப்பிரிவு தவறாகப் பயன்படுத்தப்படக் கூடாது என்ற நோக்கில் அவர் கோரிய இந்த வேண்டுதலை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை[6].
திராவிடஸ்தான்முதல்மாநிலசுயயாட்சிவரை: 1930-40களில் தனித்தமிழ் இயக்கம், திராவிட இனக் கட்டுக்கதைகளை வளர்த்தன. சைவம் என்ற போர்வையில், வைணவத்தை எதிர்த்து, தெலுங்கு பேசும் மக்களை அவமதித்த போக்கு, நீதிகட்சியைக் குலைத்து, திராவிட கழக போர்வையில், தமிழக பிரிவினை உருவெடுத்தது[1]. திராவிடஸ்தான் என்று ஆரம்பித்து, “அடைந்தால் திராவிட நாடு, இல்லையென்றால் சுடுகாடு” என்று சென்று, பிறகு, எல்லாமே குப்பையில் என்றாகியது. ஆனால், அத்தகைய தேசவிரோத கொள்கையிலிருந்து மற்ற மொழி மக்கள் வேறுபட்டனர். 1940-50 திராவிட இனவெறி கட்டுக் கதைகளினால் தான், முதலில் ஆந்திரா தனியாகப் பிரிந்தது, முதல் மொழிவாரி மாநிலமானது. தொடர்ந்து “தமிழ்” தான் உயர்ந்தது, அதிலுருந்து தான் மற்ற மொழிகள் தோன்றின என்பதனை சாதாரண மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. குறிப்பாக, தெலுங்கு மக்கள் ஒப்புக் கொள்ளவில்லை. பட்டிபோர்லு [Bhattiporlu] வரிவடிவங்களை [script] மற்றும் கல்வெட்டுகளை [inscriptions] வைத்துக் கொண்டு, தெலுங்கு வரிவடிவம் BCE மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று வாதிட்டனர்.
1950-70களில் பெரியார்-அண்ணா திராவிட நாட்டை குப்பைத் தொட்டியில் போட்டனர்: பெரியார் ஆதித்தனாருடன் சேர்ந்து “திராவிட நாடு” தேவையில்லை என்றே பேசினார். அண்ணாவைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை, முதலமைச்சர் ஆக வேண்டும், தேதலில் நிற்க்கவேண்டும் என்றால், பிரிவினை பேச முடியாது. அதனால், திராவிடஸ்தானும் போய் விட்டது, திராவிட நாடும் மறந்து விட்டது, “தமிழ் நாடு” என்பதில் திருப்தி பட்டு, சுருங்கி விட்டனர். அப்படியிருந்த நிலையில், இப்பொழுது, ஸ்டாலின் “திராவிடியன் ஸ்டாக்” என்று பேசியதை / பேசுவதை கவனிக்கலாம். யாரோ தவறாக சொல்லிக் கொடுத்திருக்கின்றனர் போலும். “திராவிடியன் மாடல்” வசனங்கள் வேறு தொடர்கின்றன. அவை, “ஒன்றிய” அரசுக்கு எதிராக இருக்கிறன. கூட கவர்னர் எதிர்ப்பு வேறு. இவையெல்லாம் தேசவிரோதம் ஆகுமா, தேசாபிமானம் ஆகுமா என்று தெரியவில்லை. “மாநில சுயயாட்சி” வாதம், டிவி விவாதங்களில் எதிரொலிக்கின்றன. திமுக-திக-கம்யூனிஸ்ட் வகையறாக்கள் இதில் சளைத்தவர்கள் அல்லர்.
எம்,ஜி.ஆருக்குப்பிறகுபிரிவினைவாடம்குறைந்தது: “தமிழ்நாடு” உருவானபோது கூட, எல்லை தகராறுகளில் கேரளா, ஆந்திரா மற்றும் ஆந்திராவுடன் எதிராகவே இருந்தது. தமிழநாட்டைத் தவிர மற்ற மாநில மக்கள் தாங்கள் “திராவிடர்கள்” என்றெல்லாம் ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால், திராவிடத்துவ சித்தாந்தம் தமிழ்நாடு மாநிலத்துடன் சுருங்கி விட்டது. 1950-60களில், “இந்தி-எதிர்ப்பை” கையில் எடுத்து உசுப்பி விட்டனர். 1960-70களில் மேடை பேச்சு, சினிமா வைத்டுக் கொண்டு ஆட்சியைப் பிடித்தனர். 1980-70களில் காவிரி பிரச்சினையில், முன்னர் பாமகவினால், அதிகமாகவே வெறியூட்டப் பட்டு, பிறகு திராவிட பிரிவினைவாதிகளால் தீயூட்டப் பட்டது. அப்பொழுது, இங்கு “உடுப்பி” ஹோட்டல்கள் அடித்து நொறுக்கப்பட்டன. ஶ்ரீ ராகவேந்திர மடங்களும் தாக்கப்பட்டன. 1970-80களில் எம்ஜிஆரால் பிரிவினைவாதம் கொஞ்சம் குறைந்தது. “மாநில சுயயாட்சி” போர்வையில், அவ்வப்போது, திராவிடத்துவ சித்தாந்திகள் பேசுவது வழக்கமாக இருக்கிறது.
“ஆரியன்–திராவிடன்” இனவாதம்முதல்திராவிடியன்ஸ்டாக்இனவெறிவாதம்வரை: திராவிட சித்தாந்திகள் தமிழரை, தமிழகத்தை பிரித்து வைத்து, துவேசத்தை வளர்த்து வருவது: தமிழகத்தில் கடந்த நூறாண்டு காலத்தில், –
தமிழ்-தமிழரல்லாதவர்,
திராவிடன் – ஆரியன்,
தென்னகத்தவன் – வடக்கத்தியன்,
வடக்கு வாழ்கிறது-தெற்கு தேய்கிறது
ஹிந்தி-ஹிந்தி-திணிப்பு
ஹிந்தி-எதிர்ப்பு இந்தி-திணிப்பு
போன்ற பிரச்சாரங்களால், மற்ற மொழி பேசும், மற்ற மாநிலத்தவர் மீது, மனங்களில் துவேசத்தை வளர்த்து கொண்டிருக்கிறார்கள். “வந்தேறி” தத்துவம் எப்பொழுதுமே உணர்ச்சிப் பூர்வமாக எடுத்துக் கொண்டு, மற்றவர்களைத் தாக்கப் பயம் படுத்தப் பட்டு வருகிறது. பிராமணர், மார்வாடி, குஜராத்தி, வடவிந்தியன் போன்ற பிரிவினை துவேசம் இன்றும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.யைப்பொழுது அது “குஜராத்திற்கு” எதிராக இருக்கிறது. எந்த பிரச்சினை என்றாலும், “தமிழன்” என்று தான் அடைமொழி போட்டு செய்தி போடுவது, ஊடகங்களுக்கும் வாடிக்கையாக இருக்கிறது. ஶ்ரீலங்கா மதப்பிரச்சினை என்றாலும், “தமிழர்-முஸ்லிம்” என்று தான் செய்திகள் வெளியிட்டு, மதப்பிரச்சினையை மறைக்கப் பார்த்தனர்.
2021ல்ஸ்டாலின், திராவிடியன்ஸ்டாக்என்றுகிளம்பியுள்ளார்: முத்துவேலர் கருணாநிதி ஸ்டாலின் என்கின்ற நான் என்று பதவியேற்று, தான் திராவிடியன் ஸ்டாக் என்று குறிப்பிட்டுக் கொண்டாலும், விளம்பர அரசியல் நடத்திக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் தான், திராவிட மொழி பேசும், தனிநாடு கேட்கும், திராவிட இனத்தவரான பலூச்சிஸ்தான் மக்கள் ஜின்னாவில் சிலையை தகர்த்துள்ளனர். இங்கு, கருணாநிதிக்கும், பெரியாருக்கும் சிலைகள் வைப்போம் என்று கிளம்பியுள்ளனர். பிரஹூயி, பிரோஹி, பிரஹூய், என்றெல்லாம் குறிப்பிடப் படுகின்ற மொழி திராவிடக் குடும்ப மொழி என்று திராவிடத்துவ வாதிகள் தம்பட்டம் அடித்துக் கொள்கிறார்கள், இன்றும் மேடைகளில் டமாரம் அடிக்கிறார்கள்! பிறகு, அம்மொழி பேசும் மக்களைக் கொடுமைப் படுத்தும் பாகிஸ்தானை ஏன் திராவிடத்துவ வாதிகள் கண்டு கொள்வதில்லை?
பொருளாதாரம்–நிதிஎன்றுவந்தால்சித்தாந்தம்முடங்கிவிடும்: “காவிரி பிரச்சினை” என்றாலும், திராவிட அரசியல்வாதிகளின் கையாலாகாத விசயத்தை மறைத்து, கர்நாடகாவை, கன்னட மொழி பேசுபவர்கள் மீது வெறுப்பை-காழ்ப்பை வளர்த்து வருகின்றனர். அதற்கு சத்தியராஜ், விவேக் போன்ற நடிகர்களும் உடந்தையாக இருந்தனர். ஒரு திரைப்படத்தில், “இது பெங்களூரு கத்தரிக்காய், காவிரி நீரால் வளர்ந்து பெரிதாக இருக்கிறது, அது தமிழக கத்திரிக்காய், சிறிதாக இருக்கிறது, காவிரி நீர் கிடைத்தால், அதுவும் பெரிதாக வளரும்,” என்று சொல்வது, பிரிவினையின் வக்கிரகத்தைத் தான் வெளிக்காட்டியது. ஐடியால் கர்நாடகா வளர்ந்த நிலையிலும், வியாபார சம்பந்தங்களினாலும், இப்பொழுது அடக்கி வாசிக்கப் படுகிறது. சன்–குழுமங்களின் தொடர்புகள் அறிந்த விசயமே. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, அவை வேறு வகையிலும் செயல்படுகின்றன. பொருளாதாரம், நிதியுதவி, திட்டங்கள் என்றெல்லாம் வரும் பொழுது, “ஒன்றியம்”என்று வேலை செய்யாது. தொடர்ந்து கவர்னரை எதிர்த்து வந்தாலும், வினையில் தான் சென்று முடியும்.
தேசத்துரோகம்எல்லாவற்றிலும்தான்செயல்படுகிறது: தினம்-தினம் கொலைகள், தற்கொலைகள், செக்ஸ்-வக்கிர வன்மங்கள் (அப்பா மகளை கற்பழிப்பது, மாமனார் மறுமகளிடம் எல்லை மீறுவது), வன்முறைகள், குடும்பசீரழிவுகள், கணவன்–மனைவி உறவுகள் சீரழிதல், தாம்பத்தியத்தை மீறிய உறவுகள், குடும்பக் கொலைகள் (அப்பா மனனைக் கொல்லுதல், மகன் அப்பாவைக் கொல்லுதல் முதலியன), குறைந்து வரும் மாணவ-மாணவியர் ஒழுக்கம், நடத்தை, லஞ்சத்தைப் பற்றி சொல்லவே வேண்டாம், தினம்-தினம் கைது, சஸ்பெண்ட் என்ற செய்திகள்…இந்நிலையில் திராவிடக் கட்சிகள் பரஸ்பர குற்றச் சாட்டுகள் சொல்லிக் கொண்டு தப்பிக்க / காலந்தள்ள முடியாது. விலைவாசிகள் ஏறுகின்றன என்றால், வியாபர ஒழுக்கம், வணிக தராதரம், முதலியவைப் பற்றி கண்டுகொள்வதில்லை. சங்கங்கள் மூலம் அரசியல் செய்யும் போது, கூட்டுக் கொள்ளைதான் அடிக்கிறார்கள். தக்காளியை ரோடிலும் கொட்டுவார்கள், ரூ.100/-க்கும் விற்பார்கள். கேட்டால் பெரிய பொருளாதார நிபுணன் போல, சப்ளை-டிமான்ட் என்றெல்லாம் கூடப் பேசுவான் திராவிட வியாபாரி.
[1] இப்பொழுதும் சரவணன், சென்னைப் பல்கலை, சைவசித்தாந்த துறை, போன்ற கும்பல்கள், சைவர் இந்துக்கள் அல்லர் என்று சொல்லி வருகின்றனர். பேஸ்புக்கிலும், இந்த வாத-விவாதங்கள் தொடர்கின்றன.
“பிள்ளையார்சிலைக்குஅடியில்ஆனைவெடிவச்சவன்நான்“.. அதுசுக்குநூறாகிஊரேரெண்டாச்சு.. அலறவிட்டஆ.ராசா: சென்னை சேப்பாக்கத்தில் பெரியார் ஆனைமுத்து படத்திறப்பு மற்றும் வெளியீட்டு நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினரும் திமுக துணைப் பொதுச் செயலாளருமான ஆ ராசா பேசியதாவது :………., என்று ஏசியாநெட்.நியூஸ் கதையை ஆரம்பிக்கிறது[1]. “அதன்பிறகுதான் அந்த விபூதிகளை எல்லாம் தூக்கிப் போட்டேன். தூக்கிப் போட்டதும் இல்லாமல் எங்க ஊரில் ஒரு பிள்ளையார் சிலை இருந்தது, அந்த சிலைக்கு கீழே ஒரு ஆனைவெடி வச்சுட்டேன்.. அது உடைந்து சிதறியது, பின் அது பெரிய பிரச்சனை ஆயிடுச்சு. அதெல்லாம் ஒரு காலம்……,” என்று ராசா பேசியதை வெளியிட்டுள்ளது[2]. “என்வாழ்வில்நான்மாறியதற்குகாரணம்பெரியார்பேசியஅந்தகடைசிபேச்சுதான். பெரியாரின்சிந்தனைகள்என்னுள்வந்தபின்புஊரில்இருந்தபிள்ளையார்சிலைக்குஅடியில்ஆனைவெடிவைத்துஅதைதகர்த்தவன்தான்,” என திமுக நாடாளுமன்ற உறுப்பினரும், அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளருமான ஆ.ராசா கூறியுள்ளார்[3]. பெரியாரின் கருத்துக்கள் உள்வாங்கிய நான் அம்மா கொடுத்த விபூதி பொட்டளங்களை தூக்கி எறிந்ததாகவும் அவர் பேசியுள்ளார்[4]. பொட்டலம், என்று தமிழில் ஒழுங்காக எழுதத் தெரியாத இந்த திராவிடத்துவ வாதிகள் தாம் தமிழைக் காக்கிறோம், உயிரை விடுகிறோம் என்று வீராப்பு-சால்ஜாப்பு பேசி வருகின்றனர்.
விளம்பரம்–தினசரிஅறிக்கை–அதிரடிடிவிசெய்திகள்மூலம்ஆட்சிநடத்துவது: ஏசியாநெட்.நியூஸ் கதையை தொடர்கிறது, “திமுகஆட்சிபொறுப்புக்குவந்ததுமுதல்அரசியல்ரீதியாகவும்நிர்வாகரீதியிலும்பல்வேறுஅதிரடிநடவடிக்கைகள்எடுக்கப்பட்டுவருகிறது. கொரோனாகாலம்தொட்டு, மழைவெள்ளம்பாதிப்புவரைஅரசுஎடுத்தஒவ்வொருநடவடிக்கைகளையும்மக்கள்வெகுவாகபாராட்டிவருகின்றனர். இதுஒருபுறம்இருந்தாலும்எதிர்க்கட்சிகளானஅதிமுக–பாஜகபிரச்சாரத்தின்போதுதிமுககொடுத்தவாக்குறுதிகளைநிறைவேற்றவில்லை, பொய்வாக்குறுதிகளைகொடுத்துஆட்சிக்குவந்துவிட்டதுஎன்றுதிமுகமீதுகடுமையானவிமர்சனங்களைமுன்வைத்துவருகின்றன. அதேபோல்பல்வேறுமாநிலங்களில்பெட்ரோலுக்கானமாநிலவரிகுறைக்கப்பட்டுள்ளது, அதேபோல்தமிழகஅரசும்அந்தவரியைகுறைக்கவேண்டும்எனதொடர்ந்துவலியுறுத்திவருகின்றன”. விளம்பரம்-தினசரி அறிக்கை-அதிரடி டிவி செய்திகள் மூலம் ஆட்சி நடத்துவது என்பது தொடர்ந்து வருகிறது. ஆக, ஆ. ராசவின் பேச்சு, அத்தகைய பிரச்சஆத்தின் யுக்தியாகவும் இருக்கலாம். ஏனெனில், இதெல்லாம் திராவிடத்துவவாதிகளுக்கு கைவைந்த கலை.
இந்துக்களைஎதிர்த்துவரும்கழகங்கள்: ஏசியாநெட்.நியூஸ் கதையை தொடர்கிறது, “அதிமுக எதிர்க்கட்சியாக இருந்தாலும் உண்மையான எதிர்க்கட்சி பாஜகதான் என்பதை கட்டமைக்கும் வகையில் பாஜகவினர் தொடர்ந்த திமுக அரசை மூர்க்கமாக எதிர்த்து வருகின்றனர். அந்த வகையில் திமுக ஆட்சி என்பது இந்துக்களுக்கும் இந்து மதத்திற்கும் எதிரானது, அதனால்தான் இந்து அறநிலைத்துறையின் பெயரில் இந்துக் கோவில்களில் உள்ள தங்க நகைகளை உருக்குவோம் எனக் கூறி வருகின்றனர். இன்னும் பல்வேறு இடங்களில் கோவில் சொத்துக்கள் மீட்கப்படாமல் உள்ளன[5]. அதை மீட்க முயற்சிகள் இல்லை, அதேபோல விநாயகர் சதுர்த்தியின் போது சிலைகளை வைக்க அனுமதி வழங்காததும் இந்து மத விரோத போக்கு இல்லாமல் வேறொன்றும் இல்லை என கடுமையாக விமர்சித்து வருகின்றனர்[6]. கழகங்கள் இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம் என்ற முழக்கத்துடன் பாஜக செயல்பட்டு வந்தாலும் அதிமுக திமுக என்ற இரண்டு கழகங்களில் அதிமுகவுடன் கைகோர்த்து திமுகவை கடுமையாக விமர்சித்து வருகிறது. திமுக எதிர்ப்பு என்பது அரசியல் எதிர்ப்பு மட்டும் அல்ல சித்தாந்த ரீதியான எதிர்பார்க்க பாஜக செய்து வருகிறது. தமிழகத்தைப் பொறுத்த வரையில் அதிமுகதான் எதிர்க்கட்சி என்றாலும் பாஜக- திமுகவுக்கு இடையேதான் கடுமையான எதிர்ப்பு நிலவி வருகிறது என்பதே நிதர்சனம்.
கருப்புசிவப்புநீலம்ஒன்றாகஇருந்தால்மட்டுமே 2024 ல்பாஜகஎன்றகாவியைவீழ்த்தமுடியும்: ஏசியாநெட்.நியூஸ் கதையை தொடர்கிறது, “இந்நிலையில்அதைமெய்ப்பிக்கும்வகையில்திமுகநாடாளுமன்றஉறுப்பினர்ஆ.ராசாபெரியாரின்சுயமரியாதைமற்றும்கொள்கைபாதையைப்பின்பற்றியஆனைமுத்துபடத்திறப்புவிழாவில்இந்துமதத்தைதான்ஏன்எதிர்க்கிறேன்என்றும், காவிஎவ்வளவுஆபத்தானதுஎன்பதுகுறித்தும்விளக்கிபேசியுள்ளார். மேலும்கருப்புசிவப்புநீலம்ஒன்றாகஇருக்கவேண்டும்அப்படிஇருந்தால்மட்டுமே 2024 ல்பாஜகஎன்றகாவியைவீழ்த்தமுடியும்,” என்று பேசியுள்ளார்[7]. தொடர்ந்து அவர் தனது பேச்சுக்கள் மூலம் பாஜக எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார். இதை தமிழ்.ஒன்.இந்தியாவும் வெளியிட்டுள்ளது[8]. இங்கு பச்சையை ஏன் விட்டனர் என்று தெரியவில்லை. அதை வைத்து தான், கடந்த 100 ஆண்டுகளாக ஆட்சி நடத்துகின்றனர், பிரிவினையையும் வளர்த்து வருகின்றனர். தீவிரவாதத்தை வளர்க்கின்றனர் என்று தெரிந்தும், கூட்டு வைத்துக் கொண்டு அரசியல் நடத்தி வருகின்றனர். இதைப் பற்றி என்.ஐ.ஏ, மற்ற அனைத்துலக நிறுவனங்களே எடுத்துக் காட்டி வருகின்றன. இருப்பினும், இங்கு ஒன்றுமே தெரியாதது போலவும், உள்ளூர் ஊடகங்களில் செய்திகள், தகவல்கள் வராமலும் கட்டுப்பாடுகளை வைட்துள்ளனர்.
ஆ.ராசாவின்பேச்சு – அதன்விவரம்பின்வருமாறு: ஏசியாநெட்.நியூஸ் கதையை தொடர்கிறது, சென்னை சேப்பாக்கத்தில் மார்க்சிய பெரியாரிய பொதுவுடமைக் கட்சியின் சார்பில் பெரியாரியல் பெரியார் ஆனைமுத்து படத்திறப்பு மற்றும் நினைவலைகள் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது இதில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர் அதில் நாடாளுமன்ற உறுப்பினர் திமுக துணைப் பொதுச் செயலாளர்களில் ஒருவரான ஆ ராசா கலந்து கொண்டார் அப்போது பேசிய அவர், “96 வயதுவரைவாழ்ந்து, 75 ஆண்டுகாலம்பெரியார்குறித்துமட்டுமேபேசிமறைந்தஆனைமுத்துபடத்திறப்புநிகழ்ச்சியில்கலந்துகொள்வதில்மகிழ்ச்சிஅடைகிறேன். அவருக்கும்எனக்கும்உள்ளதொடர்புநீண்டநெடியது, டெல்லிக்குவரும்போதெல்லாம்என்வீட்டிற்குவந்துநீண்டநேரம்பேசுவார். ஒருதத்துவத்தைகூறிஅந்ததத்துவம்நிறைவேறுவதைதன்கண்ணால்பார்த்தஒரேதலைவர்பெரியார்அந்தபெரியாரேபேரறிஞர்எனஆனைமுத்துவைகூறினார். அதைவிடஅவருக்குநாம்என்னபெருமையைசெய்யமுடியும். பூலோகரீதியாகஆனைமுத்துவும்நானும்ஒரேமாவட்டத்தைசேர்ந்தவர்கள்”.
[1] ஆசியாநெட்.நியூஸ், பிள்ளையார்சிலைக்குஅடியில்ஆனைவெடிவச்சவன்நான்“.. அதுசுக்குநூறாகிஊரேரெண்டாச்சு.. அலறவிட்டஆ.ராசா, Ezhilarasan Babu, Chennai, First Published Jan 4, 2022, 10:57 AM IST.
[7] தமிழ்.ஒன்.இந்தியா, கருப்பு + சிவப்பு + நீலம்ஒன்றாகட்டும்.. காவியைவிட்டுவிடுவோம்.. சேப்பாக்கத்தைதெறிக்கவிட்டஆ.ராசா, By Hemavandhana Published: Monday, January 3, 2022, 12:09 [IST]
ஸ்டாலின் – அண்ணாசாலையில்கருணாநிதிசிலைநிச்சயம்அமைக்கப்படும்: அப்போது எழுந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அண்மையில் திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி தன்னை சந்தித்த போது இந்த கோரிக்கை தொடர்பாக தன்னிடம் வலியுறுத்துயதாக தெரிவித்தார்[1]. பெரியார் கட்டளையிட்டு திராவிடர் கழகம் வைத்த சிலையை மீண்டும் நிறுவ வேண்டுமென கி.வீரமணி கோரிக்கை வைத்ததையும் முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்[2]. பொதுவான இடங்களில் போக்குவரத்திற்கு இடையூறாக சிலை வைக்க கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை தான் சுட்டிக் காட்டியதாக கூறிய முதல்வர், ஏற்கனவே நீதிமன்றத்தில் அனுமதி பெற்றுத்தான் சிலை வைக்கப்பட்டதாகவும் எனவே மீண்டும் அந்த இடத்தில் சிலை நிறுவ எந்த பிரச்சினையும் இல்லை என கி.வீரமணி கூறியதாகவும் முதல்வர் தெரிவித்தார்[3]. அண்ணா சாலையில் பெரியார், அண்ணா, எம்ஜிஆர் ஆகியோருக்கு சிலைகள் இருப்பதை போன்று கருணாநிதி சிலையை அதே இடத்தில் நிறுவ வேண்டுமென கி.வீரமணி மீண்டும் தன்னிடம் வலியுறுத்தியதாக கூறிய முதலமைச்சர், இது தொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து, அண்ணாசாலையில் கருணாநிதி சிலை நிச்சயம் அமைக்கப்படும் என கூறினார்[4].
பலர் கருணாநிதியிடம், அவ்வாறு சிலை வைக்க வேண்டாம், நல்லதல்ல என்று அறிவுரை கூறினர்.
ஒருநிலையில், குன்றக்குடியும் எடுத்துக் காட்டினார், ஒப்புக் கொள்ளவில்லை, ஆனால், சிலை திறப்பு விழாவில், அவரையே உபயோகப் படுத்திக் கொண்டனர்.
வீரமணி பிடிவாதமாக இருந்தார். எல்லா வாதங்களையும் எதிர்க்க வேண்டுமானால், சிலை வைத்தே ஆகவேண்டும் என்று உசுப்பினார்.
மவுண்ட் ரோடில் பெரியார், அண்ணா என்று சிலைகள் வரிசையாக இருக்கும் போது, அடுத்தது, கருணாநிதி சிலை இருக்க வேண்டும், என்று பகுத்தறிவுடன் எடுத்துக் காட்டினார்.
கருணாநிதியின் எம்ஜிஆரின் மீதான வன்மப் பேச்சுகள் தான், அவரது ரசிகர்கள், தொண்டர்கள், முதலியோரை எதிர்மறை விளைவுக்குத் தள்ளியது.
கருணாநிதியின் இத்தகைய செயல்களால் தான், 31-01-1976ல் ஜனாதிபதியா ஆட்சி நீக்க செய்யப் பட்டு, 31-01-1976 முதல் 30-06-1977 வரை ஜனாதிபதி ஆட்சி நடந்தது.
30-06-1977 அன்று எம்ஜிஅர் ஆட்சிக்கு வந்தார். நடந்த தேர்தலில் கருணாநிதி-திமுக படுதோல்வி அடைந்தது.
24-12-1987 அன்று எம்ஜிஆர் இறந்தாலும், 12-05-1996 வரை திமுக ஆட்சி நடந்தது.
அதாவது, 17-02-1980 முதல் 13-05-1996 வரை, கருணாநிதி ஆட்சியில் இல்லை. 16 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சியில்லாமல் தான் இருந்தார். இவரது “பெரியார் விக்கிரகம்,” பெரியார் அருள், ஆசீர்வாதம், மகிமை முதலியவை வேலை செய்யவில்லை.
அதை அவர், “அஞ்ஞான வாசம்” என்றாலும், அ. கணேசன் போன்ற ஜோதிடர்கள் உண்மையினை சொல்வர். இவர் நடத்திய பரிகார ஹோமங்கள், பூஜைகள் அவர் வீட்டிலிருப்பவர்களுக்குத் தெரியும்.
2018 – பெரியார்இருந்திருந்தால்ஏன்சிலைவைக்கிறீர்கள்எனக்கேட்டிருப்பார் – கமல்ஹஸன்: தமிழகத்தில் பெரியார் வாழ்ந்த காலத்தில் அவரின் சிந்தனை, கருத்துக்களுக்கு எதிராக இருந்தவர்களின் செயல்பாடுகள் இன்றும் தொடர்கிறது என்று சொல்வதில்லை தவறொன்றும் இல்லை. சிலை வழிபாடுகளுக்கு எதிராக பேசிய பெரியாருக்கு எதற்காக சிலைகள் என்ற கேள்விகள் எப்பொழுதும் முன்வைக்கப்படும். அதற்கான பதிலை பெரியாரே அவர் வாழ்ந்த காலத்தில் கூறி விட்டு சென்றுள்ளார். என்றெல்லாம், பெரியாரிஸ்டுகள் வாதம் செய்து வருகிறார்கள். 2018-ல் பெரியார் சிலை உடைப்பு பற்றி பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கருத்து தெரிவித்த போது தமிழகத்தில் அவருக்கு எதிராக கண்டனங்கள் எழுந்தன. அந்நேரத்தில், நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரான கமல்ஹாசன் “சிலைகள் வைப்பதில் வித்தியாசமான கருத்துடையவன் நான். ஆனால், அதை உடைப்பது கேவலமான செயல். பெரியார் இருந்திருந்தால் ஏன் சிலை வைக்கிறீர்கள் எனக் கேட்டிருப்பார்,” என ஈரோட்டில் பேசி இருந்தார். இது திராவிடத்துவவாதிகளின் முகத்திரைகளைக் கிழித்து விட்டது. இதனால், மறுபடியும், அதற்கு விளக்கம் கொடுத்தனர்.
விடுதலைஆதாரம்என்றுபழையக்கதையைசொன்னது: 29-07-1944 அன்று கடலூரில் பெரியாரின் மீது ஒன்றை செருப்பு வீசப்பட்ட சம்பவம் நிகழ்ந்தது. தன் மீது விழுந்த ஒற்றை செருப்பு தனக்கும் பயன்படாது, வீசியவருக்கும் பயன்பாடாது என்பதால் அதன் மற்றொரு ஜோடி செருப்பையும் பெற்றுக் கொண்டார் பெரியார் என்ற தகவல் விடுதலை நாளிலில் இடம்பெற்று இருக்கிறது. இதற்கு பின், அதே இடத்தில் 28 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு 1972-ல் கருணாநிதி ஆட்சியில் கடலூர் மக்களால் பெரியாருக்கு சிலை திறக்கப்படுகிறது. கருணாநிதி திறந்து வைத்த சிலை திறப்பு நிகழ்சிக்கு முன்னிலை வகித்தார் ஈ.வெ.ரா.பெரியார். சிலைகள் வைப்பதற்கு பெரியாரே எதிர்ப்பார் என கமல்ஹாசன் கூறியது தவறான தகவல். சிலைகள் வைப்பதற்கு பெரியார் எதிர்ப்பு தெரிவித்து இருக்கமாட்டார். அதேபோன்று, ஏன் உயிருடன் இருந்தவர் தனக்கு தானே சிலை வைத்துக் கொண்டார் என சிலரும் கேள்வி கேட்பதுண்டு. ஏ.ஆர். வெங்கடாசலபதி போன்ற சரித்திராசிரியர்களும், இதைப் பற்றியெல்லாம் ஆராய்ச்சி செய்வதில்லை. கருணாந்தம், எங்கேயாவது உட்கார்ந்து, தூங்கிக் கொண்டிருப்பார். சுப.வீரப் பாண்டியனும் கண்டுகொள்ளமட்டார். விடுதலை ராஜேந்திரன், கொளத்தூர் மணி பற்றி சொல்லவேண்டிய அவசியம் இல்லை.
உயிரோடுஇருப்பவர்களுக்குசிலைவைக்கலாம்என்றுநியாயப்படுத்திவாதித்தது: பெரியார் தனக்கு தானே சிலை வைத்துக் கொள்ளவில்லை. சிலைகள் மக்கள் மத்தியில் பகுத்தறிவு சிந்தனையை பிரச்சாரமாக மாற்றுவதாக இருக்க வேண்டும் என்பதே பெரியாரின் நோக்கம். சிலை என்பது வழிபாட்டுக்குரியது அல்ல. பயன்பாட்டுக்கு உரியது என்று கூறியுள்ளார். சிலைகளே பகுத்தறிவு பிரச்சாரத்தை செய்யும் என அவர் நினைத்தார். “பிற்காலத்தில்ராமசாமினுஒருத்தன்இருந்தான். அவன்பகுத்தறிவுபிரச்சாரம்பண்ணிக்கிட்டுஇருந்தானுபேசுவாங்க. அதுக்காகதான்இந்தசிலை,” என பெரியார் சிலை திறப்பு நிகழ்ச்சியில் பேசியதாக மின்னம்பலம் செய்தியில் வெளியாகி இருக்கிறது. விடுதலை நாளிதழில், உயிருடன் இருப்பவருக்கு சிலை வைப்பது தவறில்லை என்றே வெளிப்படுத்தி உள்ளனர். சென்னை சர்வகலாசாலை வைஸ் சான்ஸ்லர் டாக்டர் லட்சுமணசாமி, ஓய்வு பெற்ற சென்னை பிரதம நீதிபதி டாக்டர் ராஜாமன்னார், கர்மவீரர் காமராஜர் என பலருக்கும் உயிருடன் இருக்கும் போதே சிலை வைக்கப்பட்டது என விடுதலை நாளிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. பெரியார் தன் பிறந்தநாள், சிலை திறப்பு, படத்திறப்பு போன்றவற்றை இயக்கத்தின் பிரச்சார கருவியாக பயன்படுத்தினார். அண்ணாவிற்கும் அவர் வாழ்ந்த காலத்தில் படத்திறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று உள்ளன என்கிறார்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள்.
திக–திமுகவினரின்சமீபத்தையசரித்திரஉரிமைகோரிக்கைகள்சரிபார்க்கவேண்டும்: மேற்காணும் வாதங்கள், அவ்வாதங்களுக்கான ஆதாரங்கள், அவர்களுடைது தான். விடுதலையில் வந்த-வரும் செய்திகளை சரிபார்க்க, வேறொரு ஆவணம் அல்லது மூலத்தை வைத்து பரிசோதிக்க முயற்சிகளை செய்வது கிடையாது. ஒருதலைப் பட்சமாகவே, இத்தகைய வாத-விவாதங்கள், செய்திகளை வெளியிடுதல், ஏன் புத்தகங்கள் எழுதுவது, ஆராய்ச்சி செய்வது என்று நடந்து வருகின்றன. ஒரு சிலரே, ஈரோடு, பவானி, திருச்சி, கடலூர் என்று சென்று, அங்கிருக்கும் 60-90 வயதான முதியவர்களிடம் பேசி, விவரங்களை சேகரித்து வருகின்றனர். அவற்றில், இவர்களின் கூற்று, எந்த அளவுக்கு ஒருதலைப் பட்சமாக இருக்கிறது, ஏன் உண்மைக்குப் புறம்பாகவும் இருக்கிறது என்பது தெரிகிறது. அதனால் தான், ஈவேரா பிள்ளையார் உடைப்பு, ஜின்னாவுடனான சகவாசம், ஆங்கிலேயரிடம் சரண்டர் ஆனது, உனெஸ்கோ விருது போன்றவை எடுத்தும் காட்டி வருகின்றன.
அண்ணாசாலையில்கருணாநிதிசிலைநிச்சயம்அமைக்கப்படும்எனகூறினார்: ஸ்டாலின், கருணாநிதியில் மகன், முதலமைச்சர் இவ்வாறு கூறியப் பிறகு, யார் எதிர்க்கப் போகிறார்கள், எதிர்க்க முடியும். எந்த நீதிபதியும் மாறாக, தீர்ப்பும் கொடுக்க முடியாது. முதலமைச்சர் தீர்மானமாக, உறுதியாக சொல்லியாகி விட்டது, “அண்ணாசாலையில்கருணாநிதிசிலைநிச்சயம்அமைக்கப்படும்.” எனவே, இனி, வீரமணி வேகமாக வேலை செய்ய ஆரம்பித்து விடுவார். 2024 பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக, சோனியா காந்தி போன்றோரை வரவழைத்து, சிலைத் திறப்பு விழா பிரம்மாண்டமாக நடத்தப் படும். மற்ற எதிர்கட்சி தலைவர்களும் இருப்பார்கள். கடற்கரையில், கூட்டணி தேர்தல் பிரச்சாரக் கூட்டமும் நடைபெறும். அதிமுக-பாஜக எதிர்ப்பு முழுமையாக வெளிப்படும்.
சிலைஉடைத்தநாத்திக–இந்துவிரோதிகளுக்குசிலைவைத்தல்: ஈவேரா பிள்ளையார் சிலைகளை உடைத்தது, உச்சநீதி மன்றத்தில் வாங்கிக் கட்டிக் கொண்டது, நிறைய தமிழக மக்களுக்கு, ஏன் பெரியார்/ஈவேரா பற்றி ஆராய்ச்சி செய்பவர்களுக்கேத் தெரியாது. ஈவேரா தனக்குத் தானே சிலை வைத்துக் கொண்டதற்கு நியாயம் கற்பிக்கும் வாதங்கள் எல்லாமே, அவர்களிடத்திலிருந்து தான் வந்துள்ளன. ஆனால், மற்றவர்கள் மறுத்துள்ளது, மறைக்கப் படுகிறது. சிலை வைத்து, கொடிக்கம்பம் நட்டு இடங்களை ஆக்கிரமித்துக் கொள்வது, கம்யூனிஸ்டுகளுக்கு திராவிடக் கட்சிகளுக்கு கைவந்த கலையாக இருந்து வருகிறது. உயிரோடிருக்கும் மனிதர்களுக்கு சிலை வைக்கும் வழக்கம் கிடையாது, அவ்வாறு யாரும் நினைத்தும் பார்க்க முடியாது, ஏனெனில், அது அமங்கலமாகக் கருதப் பட்டு வருகிறது. எனவே, 1972ல் ஈவேராவுக்கு கடலூரில் மற்றும் 1975ல் கருணாநிதிக்கு மவுண்ட் ரோடில் சிலைகள் வைத்து, விழா கொண்டாடியது, நிச்சயமாக, பகுத்தறிவுக்கு மட்டுமல்லாது, சாதாரண மனோதத்துவ ரீதியில் நோக்கும் போதும் ஒவ்வாதது, முரண்பாடானது.
சிலைஉருவாக்கும்தன்மை (Iconogenesis) மற்றும்சிலைகளைஉடைக்கும்வன்மம் (Iconoclasm): சிலை உருவாக்கும் தன்மை (Iconogenesis) மற்றும் சிலைகளை உடைக்கும் வன்மம் (Iconoclasm) இரண்டையும் எளிதாகப் புரிந்து கொள்ளலாம். இந்த நாட்டில் துலுக்கர் பெரும்பாலாக அதனை மெய்ப்பித்துள்ளனர். பிறகு போர்ச்சுகீசியர், டச்சு, டேனிஸ், பிரெஞ்சு மற்றும் ஆங்கிலேய அடிப்படைவாத கிருத்துவர்களும் பால இடங்களில் வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் சிலையுடைப்பு-கோவில் இடிப்பு வேலைகளை செய்துள்ளனர். இப்பொழுது, திராவிடத்துவவாதிகள் செய்து வருகின்றனர். ஆகவே, திராவிடத்துவ வாதிகள், நாத்திகத்துடன் நடத்திக் காட்டிய சிலையுடைப்புகள், ஆபாச ஊர்வலங்கள் அவர்களது, கொடிய-குரூர-அசிங்கமான-ஆபாசமான மனப் பாங்குகளைத் தான் எடுத்துக் காட்டியுள்ளன. மறுபடியும் அவற்றை உயிர்ப்பித்து, சிலைகளை வைத்து, கொண்டாடும் பட்சத்தில், இக்காலத்திலும் அதே வன்மத்துடன், கொடிய சிந்தனைகளுடன், திய-முரண்பாடுகளுடன், வாழ்ந்து வருகிறாற்கள் என்பது புலப் படுத்துகிறது. இவர்களால், சமூகத்திற்கு என்றுமே ஆபத்துதான். தாலிபான், ஐசிஸ், போன்ற தீவிரவாதிகளுக்கும், இந்த திராவிடத்துவ அடிப்படை-தீவிரவாதிகளுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.
ஈவேராகருணாநிதிக்குசிலைவைக்கவிரும்பியது (1971): அண்ணா மறைவுக்குப் பின்னர் முதல்வர் பதவியேற்றார், பின்னர் 1971-ம் ஆண்டு சட்டமன்றத்தை கலைத்துவிட்டு நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்ந்து தேர்தலை திமுக சந்தித்தது. மிகப்பெரிய வெற்றியை திமுக இந்த தேர்தலில் பெற்றது. ஆகஸ்டு 14, 1971 அன்று பெரியார் திடலில் நடைபெற்ற பாராட்டுக் கூட்டத்தில், பெரியார் ஏற்கெனவே தான் வைத்த கோரிக்கையை மீண்டும் அப்போதைய முதல்வர் கருணாநிதியை அருகில் வைத்துக்கொண்டே வைத்தார். செயற்கரிய சாதனை செய்தவர் என்பதால் சென்னை தலைநகரில் கருணாநிதிக்குச் சிலை வைக்கவேண்டும் என்று தம் விருப்பத்தை பெரியார் தெரிவித்தார்[1]. அதை மேடையில் இருந்த குன்றக்குடி அடிகளார் போன்றவர்கள் ஆமோதித்தனர்[2]. அதே மேடையில் கருணாநிதி சிலை அமைப்புக் குழுவையும் பெரியார் அறிவித்தார்[3]. அப்போது கூட்டத்தில் பேசிய கருணாநிதி திமுக சார்பில் பெரியாருக்கு ஒரு சிலை திறக்கிறோம், அதன் பின்னர் எனக்கு சிலை திறக்கலாம் என்று அதைத் தட்டிக்கழித்தார்[4]. அதாவது, உயிருடன் இருக்கும் போது, சிலை வைக்கக் கூடாது என்று அவருக்குச் சொல்லப் பட்டதால் மறுத்தார்[5].
1973, ஈவேராவுக்குசிலைவைத்தபோது, மறுபடியும்கருணாநிதிசிலைபேச்சுஎழுந்தது: அதன் பின்னர் 1973-ம் ஆண்டு பெரியார் மறைவுக்குப் பின்னர் திமுக சார்பில், சென்னை அண்ணா சாலையில் (சிம்சன் அருகில்) பேராசிரியர் க.அன்பழகன், தலைமையில், மணியம்மை முன்னிலையில், பெரியார் சிலையை அப்போதைய முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார். சிலை திறப்பு விழாவில் பேசிய அப்போதைய தி.க.தலைவர் மணியம்மை, “சொன்னபடி பெரியாருக்கு சிலை வைத்துவிட்டீர்கள். பெரியாருக்கு சிலை திறந்த பின்னர் எனக்கு சிலை வைக்கலாம் என்று பேசிய நீங்கள் இனியும் சாக்குப்போக்கு சொல்ல முடியாது தி.க.சார்பில் உங்களுக்குச் சிலை அமைக்க அனுமதி தரவேண்டும் என்று மேடையிலேயே கோரிக்கை வைத்தார். திராவிடர் கழகம் சார்பில் அண்ணா சாலையில் முழு உருவ வெண்கலைச் சிலை அமைக்க உள்ளோம், இதற்கு மறுப்பு கூறக்கூடாது,” என்று பேசினார்[6].
சிலைவிவகாரத்தில்திமுக–அதிமுகமோதல்: சிலைத் திறப்பை எதிர்த்து அதிமுக சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டது. துலுக்கர் எதிர்க்காதது ஆச்சரியமே! ஒருவேளை, அப்பொழுது தர்கா தான் இருந்தது என்று இப்பொழுது வாதிக்கலாம்! முதலமைச்சர் கலைஞர் வெளியூர் பயணத்தில் இருந்தபோது, இடையில் அ.தி.மு.க.வினால் ஏற்பட்ட சட்டப் போராட்டத்தையும் திராவிடர் கழகம் எதிர் கொண்டு வென்று, அண்ணாசாலை- ஜெனரல் பேட்டர்ஸ் சாலை சந்திப்பில் முறைப்படி அரசாணை பெற்று, 21.9.1975 அன்று பெரியதோர் திருவிழாவாக நடத்தினோம். (G.O. MS.No.877 Dated 21.5.1975, Rural Development and Local Administration Department). அந்த வழக்கை திராவிடர் கழகம் வென்று அண்ணாசாலை தர்கா அருகே 1975-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21-ம் தேதி கருணாநிதியின் வெண்கலச்சிலை திறக்கப்பட்டது.
1975ல்வைக்கப்பட்டகருணாநிதிசிலை 1987ல்தகர்க்கப்பட்டது: 01-09-2021 அன்று, தமிழக சட்டப்பேரவையில் வீட்டுவசதித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய தஞ்சாவூர் திமுக உறுப்பினர் நீலமேகம், மவுண்ட் ரோடில் இருந்த கருணாநிதி சிலை பற்றி பேசியது, செய்தியாக வந்துள்ளது[7]. 1971 ஆம் ஆண்டு சென்னையில் கருணாநிதிக்கு சிலை வைக்க வேண்டும் என்று பெரியார் முடிவு செய்தார்[8]. அதன் பின்னர் 1975 ஆம் ஆண்டு அப்போதைய திராவிடர் கழகத் தலைவர் மணியம்மை, சென்னை அண்ணாசாலையில் கருணாநிதியின் சிலையை நிறுவி குன்றக்குடி அடிகளாரால் அந்த சிலை திறந்து வைக்கப்பட்டதாகவும் நீலமேகம் குறிப்பிட்டார்[9]. அதன் பின்னர், 1987 ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதி நடைபெற்ற சம்பவத்தில் சில விஷமிகள் கருணாநிதி சிலையை சேதப்படுத்தியதாகவும், அதே இடத்தில் மீண்டும் கருணாநிதி சிலை வைக்க, கருணாநிதி வேண்டாம் என தடுத்துவிட்டதாக கூறினார்[10]. அப்போது ‘சின்ன தம்பி என் நெஞ்சில்தான் குத்தினான். முதுகில் குத்தவில்லை’ என்று கருணாநிதி கூறினார்[11]. எனவே பெரியார் நினைத்ததை மணியம்மை செய்து காட்டியதின் அடிப்படையில் மீண்டும் அண்ணாசாலையில் கருணாநிதியின் சிலையரரசின் சார்பில் நிறுவ வேண்டுமென நீலமேகம் கேட்டுக்கொண்டார்[12].
[5] ஜோதிடர்களிடம் தயாளு அம்மாள் விசாரித்ததும், அதனால் மறுத்ததும் சிலருக்கேத் தெரிந்த விசயமாக இருந்தது. இப்பொழுது துர்கா கோவிலுக்குச் செல்வது எல்லாம், ஊடகங்களில் வருவது போல, அப்பொழுது, ஊடகங்களில் செய்திகள் வெளியிடுவது இல்லை.
[6] நாத்திகம், பகுத்தறிவு என்ற கொள்கைகள் கொண்ட கருணாநிதி, வீரமையிடன் ஏன் மறுத்தார் என்பதையும், “இனியும்சாக்குப்போக்குசொல்லமுடியாது………இதற்குமறுப்புகூறக்கூடாது,” என்பதிலிருந்தும், பின்னணியை அறிந்து கொள்ளலாம்.
[9] நியூஸ்.18.தமிழ், அண்ணாசாலையில்கருணாநிதிசிலைஅமைக்கப்படும் – முதல்வர்மு.க.ஸ்டாலின்உறுதி, Published by: Karthick S, First published:September 01, 2021, 17:07 IST.
நாகர்கோவிலில்கூட்டத்தில் ”ஹிந்துக்களைவஞ்சிக்கும்கட்சிகளைஆட்சிக்குவரவிடாமல்தடுக்கவேண்டும்” எனதீர்மானம்நிறைவேற்றப்பட்டது (03-01-2021): நாகர்கோவிலில் திருத்தொண்டர்கள் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடந்த சிவனடியார்கள் கூட்டமைப்பு கூட்டத்தில் ”ஹிந்துக்களை வஞ்சிக்கும் கட்சிகளை ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்க வேண்டும்” என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது[1]. இந்த கூட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிவனடியார்கள் கலந்து கொண்டனர். ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கோயில் சொத்துகளை ஒரு சதுர அடி கூட விடாமல் மீட்டு கோயில்கள் வசம் ஒப்படைப்பது. அடியார்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு மருத்துவம், கல்வி உதவி வழங்க வேண்டும். சைவ மதத்துக்கு எதிராக தவறான கருத்து சொல்பவர்களை மாநிலம் முழுவதும் ஒரே குரலில் எதிர்க்க வேண்டும். ஹிந்துக்களை வஞ்சிக்கும் அரசியல் கட்சிகளை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பது உள்ளிட்ட 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன[2]. இது விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் வகையில் சிறப்பாகத் தெரிகிறது. இத்தகைய கூட்டங்கள் நிறைய நடத்தப் படவேண்டும். அத்தகைய செய்திகள் மக்களைச் சென்றட்டைய வேண்டும். குறிப்பாக, இன்றும் திக-திமுக திராவிடக் கட்சிகளை விசுவாசமாக ஆதரித்து வரும், சில சைவ சமூகத்தினர், இதுவரை நடந்துள்ள, நடந்து வரும் தீமைகளைக் கருத்திற்க் கொண்டு மாற வேண்டும்.
நெல்லையில்எதிர்ப்புதெரிவித்தஇந்துஅமைப்பினர்: கந்தபுராண பாடலை திமுக கட்சி பாடல் போல் மாற்றி இழிவு படுத்தியதைக் கண்டித்து நெல்லை டவுனில் இந்து முன்னணியினர், சிவனடியார்கள், பாரதிய ஜனதா கட்சி உள்ளிட்ட இந்து அமைப்புகள் இணைந்து திருமுறைகள் பாடி பெருந்திரல் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்[3]. வான்முகில் வழாது பெய்க என்ற கந்தபுராண வாழ்த்து பாடலை இழிவுபடுத்தும் விதமாக சமூக வலைதளங்களில் திமுக தேர்தல் பிரச்சார பாடல் போல மாற்றி பதிவேற்றம் செய்த நபர்களையும் இறை வழிபாட்டு பாடல் கட்சி பாடல் போல் உருவாக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் நெல்லை டவுன் வாகையடி முனையில் இந்து முன்னணி சார்பில் பெருந்திரல் பிரார்த்தனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த பிரார்த்தனை கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சி உள்ளிட்ட இந்து அமைப்புகள் மற்றும் சிவனடியார்கள் திருக்கூட்டம் இணைந்து தேவார திருவாசக திருமுறை பாடல்கள் பாடி இறைவனை வழிபட்டு பெருந்திரள் பிரார்த்தனையில் ஈடுபட்டனர் அதனைத் தொடர்ந்து கட்சி பாடலாக மாற்றம் செய்து கந்தபுராண வாழ்த்துப் பாடலை இழிவுபடுத்திய நபர்கள் மீதும் சமூக வலைதளங்களில் அதை பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது[4].
2020ல்காமாட்சிபுரிஆதீனம்சிவலிங்கேஸ்வரசுவாமிகள்கருப்பர்கூட்டத்தைக்கண்டித்தது: இந்து கடவுள்களை அவமதித்தால் நாக்கை துண்டிக்க பயப்பட தேவையில்லை என காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் 22-07-2020 அன்று தெரிவித்துள்ளார்[5]. கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கறுப்பர் கூட்ட யூ ட்யூப் சேனலுக்கு கண்டனம் தெரிவித்தார். தமிழகத்தில் இது போன்ற பேச்சுகள் நிறுத்தப்பட வேண்டும் என்றும் இந்து மதத்தை இது போன்று இழிவுபடுத்தும் செயல்களில் யாராவது செயல்பட்டால் அவர்களின் நாக்கை துண்டிப்பதற்கும் கூட பயப்பட தேவையில்லை எனவும் ஆதீனம் பேசினார்[6]. உண்மையில், அவர் ஆதங்கத்துடன், பேசியுள்ளதை நினைவு கூறவேண்டும். தெய்வநம்பிக்கை ஆழமாக-உறுதியாக இருப்பது நல்லது தான், ஆனால், எல்லாவற்றையும் கடவுள் பார்த்துக் கொள்வார் என்று சும்மா இருக்க முடியாது. தேர்தல், ஓட்டு, ஓட்டுவங்கி, ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், இத்தகைய இந்துமத-தூஷணங்களை செய்து வருவதால், நிச்சயமாக, இந்துக்கள் அதே முறையில், சரியான பதிலை சொல்லியாக வேண்டும். அவர்களுக்கு இந்து-ஆதரவு ஆட்சித் தேவையா அல்லது இந்து-விரோத ஆட்சி வேண்டுமா என்று இந்துக்கள் தான் தீர்மானிக்க வேண்டிய நிலையுள்ளது. “ஆவணன் ஆண்டால் என்ன, ராமன் ஆண்டால் என்ன” என்று இருந்தால், இதே இந்துவிரோத நிலைத் தான் தொடரும்.
2019ல்சிலமடாதிபதிகள்பேசியது: சென்னை சேப்பாக்கத்தில் 12-04-2019 அன்று ஆதீனங்கள், துறவிகள், மடாதிபதிகள் என 11 பேர், தங்களது தேர்தல் நிலைப்பாட்டை அறிவித்தனர். அப்போது பேசிய பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாசல அடிகள், இந்து மதத்திற்கு எதிராக செயல்படுபவர்களுக்கு பாடம் புகட்டும் வகையில், மக்கள் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்[7]. யார் இந்து மத தொண்டர்கள் என தங்களை அறிவிக்கிறார்களோ, குங்குமம் வைக்கிறார்களோ, அவர்களுக்கே ஆதரவளிக்க வேண்டும் எனவும், அவர் குறிப்பிட்டார்[8]. பின்னர் பேசிய கோவை காமாட்சிபுரி ஆதீனம் சாக்தஸ்ரீ சிவலிங்கேஸ்வரர், தெய்வபக்தி நிறைந்த தமிழகத்தில் ஆன்மிகத்திற்கு எதிராக தலைவர்கள் பேசுவதற்கு கண்டனம் தெரிவித்தார். இதே நிலை, இப்பொழுது 2021லும் தொடர வேண்டும். இந்து அமைப்புகள் மறுபடியும் இத்தகைய கூட்டங்களைக் கூட்ட வேண்டும், இணதள பிரச்சாரங்களும் நடந்து வருவதால், அத்தகைய முறைகளையும் கையாள வேண்டும். சைவ மடங்கள், உழவாரப் பணி குழுக்கள் முதலியவற்றையும், அதில் ஈடுபடுத்தப் படவேண்டும்.
இந்துக்கள்கவனிக்கவேண்டியது, செய்யவேண்டியதுமுதலியன: மேற்குறிப்பிட்ட நிகழ்வுகள், பின்னணி. அரசியல், அதிகாரம் போன்ற காரணிகளை உன்னிப்பாக அலசிய பின்னர் கீழ்காணும் அம்சங்கள் கொடுக்கப் படுக்கின்றன:
முன்பு ஆண்டாள், இப்பொழுது முருகன் என்று திட்டம் போட்டு, இந்துக்களின் மங்களைப் புண்படுத்தி வருவது தெரிகிறது.
உண்மையான நாத்திகம் என்றால், கடவுள் இல்லை என்பதும் உண்மையான கொள்கையாக இருக்க வேண்டும். ஆனால், நாத்திகர் என்று பிரகடனப் படுத்திக் கொண்டு, இந்து-அல்லாத கடவுளர்களை விமர்சிப்பது, தூஷிப்பது கிடையாது. எனவே, அவர்களது நாத்திகம், இந்துவிரோத நாத்திகம் ஆகிறது.
அதனால், தான் கிறிஸ்தவ-முஸ்லிம் கோஷ்டிகள் இவர்களது மேடைகளில் பிரசங்கம் செய்கிறார்கள் மற்றும் கிறிஸ்தவ-முஸ்லிம் மேடைகளில், இந்துவிரோத நாத்திகர்-திராவிடத்துவ துவேசிகள் பேசி வருகிறார்கள்.
புகார் கொடுத்தாலும், எப்.ஐ.ஆர் போட்டாலும், சட்டப் படி, இவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. அவையெல்லாம் அப்படியே காலாவதியாகின்றன,
அதனால் தான், செய்த குற்றங்களையே, திரும்பச் செய்து வருகிறார்கள். சட்டப் படி, தங்களை ஒன்றும் செய்ய முடியாது என்ற ரீதியில் அதே தூஷணங்களை செய்து வருகிறார்கள்.
ஆகவே, சட்டப் படி நடவடிக்கை எடுக்க வைத்து, ஒருவனையாவது, தண்டனைக்கு உட்பத்த வைத்து, தண்டிக்கப் பட்டால், மற்றவர்களுக்கு பாடமாக்க இருக்கும், அச்சம் ஏற்படும்.
இல்லையென்றால், பயமில்லாமல் போகும், “காலையில் கைது, மாலையில் விடுதலை,” போன்ற விளையாட்டாகி ஆகிவிடும்.
தேர்தல் நேரத்தில் இவ்வாறு செய்யும் போது, அத்தகைய தேர்தல் சட்டங்கள் பிரிவுகளின் கீழ், உரிய சட்டமீறல்களை குறிப்பிட்டு, ஆதாரங்களுடன் புகார் கொடுத்தால், தேர்தலில் நிற்கமுடியாத நிலையையும் உண்டாக்கலாம்.
தமிழகத்தில் இருக்கும் சுமார் 300 இந்து மடங்கள், அமைப்புகள் முதலியவை, இதில் ஒன்று பட்டு செயல்படவேண்டும்.
இந்துவிரோதமும், இந்துவிரோதமறுப்பும் – யுக்திகள், வழிமுறைகள்: சமீப காலமாக மதம் சார்ந்த நம்பிக்கைகளை கொச்சைப்படுத்துவது டிரெண்டாக மாறிவிட்டது, என்கிறது ஊடகம், ஆனால், இந்து என்று முதலில் குறிப்பிடவில்லை. மேலும், தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், இது 100 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது, ஆனால், இந்துத்துவவாதிகளால், அதைக் கட்டுப் படுத்த முறையாக எதுவும் செய்ய முடியவில்லை. எதிர்-பிரச்சாரமும் சொதப்பலாகத் தான் இருந்து வருகிறது. அதாவது, இந்து விரோத நாத்திகர்கள், திராவிட பகுத்தறிவுகள், பெரியார் பிஞ்சுகள், ஈவேரா குஞ்சுகள் எல்லாம், இந்து கடவுளர்களை தூஷித்துக் கொக்கரித்துக் கொண்டிருக்கும் போது, இந்த இந்துத்துவவாதிகள், ஈவேரா, மணியம்மை, வீரமணிகளைத் தாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்துத்துவ வாதிகள் இவ்வாறு முறையற்ற ஒப்பீட்டு விமர்சனங்களினால், தோற்றுப் போகின்றனர். முறையாக, முழுமையாக திராவிட சித்தாந்தத்தை, அதனை ஆதரிக்கும் அரசியல் மற்றும் அரசியல் ஆதரவு 70-100 ஆண்டுகள் பயனாளிகள் ஆதரவு முதலியவற்றை அறியாமல் அல்லது மறந்து, இவ்வாறு செய்து வருகின்றனர். அதனால், அவர்களுக்கு ஈடு கொடுக்க முடியாத நிலையில் உள்ளனர்.
சைவர்கள்இந்துக்கள்அல்லர்போன்றபேச்சுகள் – அவற்றைஆதரிக்கும்கூட்டங்கள்: இந்துவிரோத கும்பல்கள் வேண்டுமென்றே மடாதிபதிகள், சைவ குருமார்கள் என்று சிலரை வைத்துக் கொண்டும், தூஷணங்களை செய்து வருகின்றனர். 2020 டிசம்பரில் அதத்தைய கூத்து அரங்கேறியது. ஆனால், 2020 அக்டோபரில் உஷாரான சில மடாதிபதிகள், தங்கள் பெயர்கள் ஒரு மாநாட்டு அழைப்பிதழில் தோன்றியபோது, மறுத்து, ஒதுங்கினர்[1]. ஆனால், அவர்களது அனுமதி இல்லாமல் அவ்வாறு நடந்ததா என்று தெரியவில்லை[2]. சென்னை பல்கலைக்கழக “உலக சைவ மாநாட்டு கருத்தரங்கத்தில்” பேசிய இரு மடாதிபதிகள், “சைவர்கள் இந்துக்கள்” அல்ல போன்ற சித்தாந்தத்ததாதரித்துப் பேசியதை நினைவு கொள்ள வேண்டும். ஆகவே, இவையெல்லாம், ஏதோ ஒரு திட்டத்துடன், தொடர்ந்து நடப்பதாகத் தெரிகிறது. சைவ சித்தாந்தத் துறை சரவணன் வெளிப்படையாக பேசியது போல, கர்நாடக வீரசைவர்கள் இந்துக்கள் அல்லர் என்று சொல்லிக் கொள்வது போல, தாங்களும் அவ்வாறே, கூறிக் கொள்கிறோம் என்று பேசியதும் இங்குக் கவனிக்க வேண்டும். பிறகு, சைவ மடங்கள், இந்து அறநிலையத் துறையிலிருந்து வெளியேறி விடலாமே? ஒருவேளை அத்தகைய சதித்திட்டத்தைத் தான் தீட்டியுள்ளனர் போலும்.
கந்தபுராணம்பாடலைஇழிவுபடுத்தியதற்கு, காமாட்சிபுரிஆதீனம்ஸ்ரீசிவலிங்கேஸ்வரசுவாமிகள்கண்டனம்தெரிவித்தது: ஆன்மிக பெரியோர்கள், ஆதீனங்கள், மடாதிபதிகள் இதுபோன்ற இந்து விரோத பேச்சுகளுக்கு, செயல்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்தும், மத நம்பிக்கைகளை இழிவுபடுத்தும் செயல்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், தி.மு.க.,வினர் கந்தபுராணத்தை கொச்சைப்படுத்தி, கட்சி விளம்பரம் தேட முயன்றுள்ளனர். இதற்கு காமாட்சிபுரி ஆதீனம் ஸ்ரீசிவலிங்கேஸ்வர சுவாமிகள் கண்டனம் தெரிவித்துள்ளார். கந்தபுராணத்தில், ‛வான்முகில் வழாதுபெய்க, மலிவளம் சுரக்க மன்னர் கோன்முறை அரசு செய்க, குறைவிலாது உயிர்கள் வாழ்க, நான்மறை அறங்கள் ஓங்க, நற்றவம் வேள்வி மல்க மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்,’ என்று மங்கல வாழ்த்து பாடல் இடம்பெற்றுள்ளது[3].
வான்முகில் வழாது பெய்க மலிவளம் சுரக்க மன்னன் கோன்முறை அரசு செய்க குறைவிலாது உயிர்கள் வாழ்க நான்மறை அறங்கள் ஓங்க நற்றவம் வேள்வி மல்க மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலக மெல்லாம். கந்தபுராணம்
மல்குக வேத வேள்வி வழங்குக சுரந்து வானம் பல்குக வளங்கள் எங்கும் பரவுக அறங்கள் இன்பம் நல்குக உயிர்கட் கெல்லாம் நான்மறைச் சைவம் ஓங்கிப் புல்குக உயிர்கட் கெல்லாம் புரவலன் செங்கோல் வாழ்க. திருவிளையாடற்புராணம்
இதை மைந்தன் கோன்முறை அரசு என்று கருணாநிதி, ஸ்டாலின் படத்தை காண்பித்தும், மேன்மைகொள் சமூக நீதி ஐம்பெரும் அறங்கள் ஓங்க, நன்னெறி தொழில்கள் மல்க ‘ என்று பாடல்வரிகளை தஙகளது கட்சிவிளம்பரத்திற்கு ஏற்ப மாற்றி அமைத்துள்ளனர்[4]. இது குறித்து காமாட்சிபுரி ஆதினம் கூறியதாவது[5]: “மேற்கூரியகந்தபுராணபாடல்தேசியகீதத்தைபோன்றுஉலகம்சிறப்புறஇறைவனிடம்வேண்டும்பாடல். பெரும்பான்மையானமக்கள்வழிபடும்பாடலைகொச்சைபடுத்தும்விதமாகஅரசியல்கட்சிவெளியிட்டுள்ளபாடல்வரிகள்அமைத்துள்ளன. அரசியல்கட்சிகள்தங்களதுகொள்கைகோட்பாடுகளில்மட்டும்கவனம்செலுத்தவேண்டும். மதநம்பிக்கைகளைஇழிவுபடுத்தும்செயல்களைகைவிடவேண்டும். மக்களிடம்குழப்பத்தைஏற்படுத்தும்இதுபோன்றசெயல்கள்தொடர்ந்துநடந்துவருமேயானால், கடுமையானவிளைவுகளைசந்திக்கநேரிடும்,” இவ்வாறு அவர் கூறினார்[6].
கந்தசஷ்டிகவசம்முதல்கந்தபுராணம்வரை: சமீபத்தில், கந்தசஷ்டியை இழிவுபடுத்தி யூ டியூப்பில் வெளியான கருத்துக்கு தமிழகம் முழுவதும் கடும் கண்டனம் எழுந்தது. அது ஓய்வதற்குள் தி.மு.க.,வினர் கந்தபுராணத்தை டப்பிங் செய்து வீடியோ பாடல் வெளியிட்டது சமூக வலைதளங்களில் வைரலாகி கண்டனத்திற்கு ஆளாகி வருகிறது. “இந்து என்ற சொல்லைக் கேட்டாலே எரிகிறது,” என்று சிலரைப் பேச வைத்து சிரித்து ரசித்த தி.மு.க தலைவர் ஸ்டாலின் தற்போது கோவில்களில் பிரச்சாரக் கூட்டம் நடத்துவது, இந்து சமய நூல்களை புகழ் மாலை புனையப் பயன்படுத்துவது என்று கிளம்பி இருக்கிறார்[7]. ஆன்மீகப் பெரியோர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்த போதும் இந்துக்களின் நம்பிக்கைகளை கொச்சைப்படுத்தும் விதமாக நடந்து கொள்வது தொடர்ந்து வருகிறது. இந்து என்று ஒரு மதமே கிடையாது என்று தி.மு.க கிறிஸ்துமஸ் விழாவில் கலையரசி நடராஜன் என்பவர் பேசியது கடும் சர்ச்சையைக் கிளப்பிய நிலையில் தற்போது கந்த புராணப் பாடலைக் கொச்சைப்படுத்தும் விதமாக தி.மு.க பிரச்சாரப் பாடலாக பயன்படுத்துவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது[8]. ஆக, “கந்தசஷ்டிகவசம்முதல்கந்தபுராணம்வரை,” போன்ற கேவலமான நாடகங்களை அரங்கேற்றி மக்களை ஏமாற்றும் வேலைகள் தேவையில்லை.
சைவசமயசின்னங்கள், இலக்கியவரிகள்முதலியவற்றைஉபயோகப்படுத்துவது: இந்த வீடியோவிலும், கருணாநிதி, ஸ்டாலினை தனது அரசியல் வாரிசாக அறிவித்ததை, ராஜராஜன், ராஜேந்திரனுடன் ஒப்பிடும் வகையில், கங்கைகொண்ட சோழபுரம் சிற்பத்தைக் காட்டி, தாங்கள் இருக்கும் புகைப்படத்தை, “மைந்தன் கோன்முறை அரசு செய்க, என்று அற்பத் தனமாகக் காட்டுகின்றனர். அவ்வாறு ஒப்பிட்டுக் கொள்ள, கருணாநிதிக்கும், ஸ்டாலினுக்கும் எந்த அருகதையும் இல்லை. ஏனெனில், பார்ப்பன அடிவருடிகள் என்று அந்த சோழர்களை இழித்துப் பேசியுள்ளதை கவனிக்க வேண்டும், பிறகு அத்தகைய, ஒப்பீடுப் பார்ப்பதில் என்ன வறட்டு சந்தோசம்? மேலும், இந்து விரோதத்துடன் நெற்றியில் குங்குமத்தை வைத்துக் கொண்டதை இகழ்ந்தவர் தந்தை கருணாநிதி. நெற்றியில் வைத்த குங்குமம், விபூதி, சந்தனம் முதலியவற்றை அழித்தவர் தனயன் ஸ்டாலின். இப்பொழுது வேண்டுமென்றே, கோவில்களுக்கு அருகில், கோவில் வளகங்களில், மைதானங்களில் கூட்டம் போட்டு தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இத்தகைய கேடுகெட்ட தூவேசிகளை உண்மையான இந்து யாரும் ஆதரிக்க மாட்டார்கள்.
இந்நாட்டின்அரசமைப்புச்சட்டத்தின்மதச்சார்பின்மை (Secularism) கொள்கைக்குமுற்றிலும்முரணானதுஇது. இந்து மத நூலை இப்படி விருப்பப் பாடம் என்ற போர்வையோடு பல்கலைக் கழகத்தில் வைத்தால், மற்ற மதவாதிகளான இசுலாமியரின் ‘‘குரான்”, கிறித்துவர்களின் ‘‘பைபிள்”, சீக்கியர்களின் ‘‘கிரந்தம்”, பவுத்தர்களின் ‘‘தம்மபதம்”, ஜொராஷ்டர்களின் ‘‘அவெஸ்தா”, பகுத்தறிவாளர்களின் ‘‘கீதையின் மறுபக்கம்” நூல் – இவைகளை அதேபோல் விருப்பப் பாடமாக வைக்க வேண்டும் என்ற குரல் எழுந்தால், அதை ஏற்று துணைவேந்தரோ – அவரது ‘அகாடமிக் கவுன்சில்’ என்ற அமைப்பு தலையாட்டுமா?
கீதைவன்முறையைத்தூண்டும்ஒருகொலைகாரநூல்!: முன்னாள் நீதிபதி எழுதிய ‘மகாத்மாவின் கொலை’ நூல். ‘தேசப்பிதா’ என்று அழைக்கப்படும் அண்ணல் காந்தியாரை சுட்டுக்கொன்ற – தொடக்கத்தில் ஆர்.எஸ்.எஸ்.சிடம் பயிற்சி பெற்ற நாதுராம் விநாயக் கோட்சே, நீதி மன்றத்தில் கொடுத்த வாக்குமூலத்திலேயே, தான் இந்த கொலை முடிவுக்கு வருவதற்குப் பெரிதும் துணை நின்று தூண்டிய நூல் ‘பகவத் கீதை’ என்று கூறியுள்ள நிலையில், ‘The Murder of the Mahatma’ – ‘மகாத்மாவின் கொலை’ என்ற தலைப்பில் பஞ்சாப் உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஜஸ்டிஸ் ஜி.டி.கோஸ்லா 1963 இல் எழுதிய நூலில், 1977 வரை மூன்று பதிப்புகள் வெளியாகி – விற்பனையாகி – இக்கருத்தை அவர் பதிவு செய்துள்ளார்! எவரே மறுப்பர்? பகவத் கீதை வன்முறையைத் தூண்டும் நூல்! கீதை கொலை நூல்தான் என்று சுவாமி சித்பவானந்தா எழுதிய விளக்கவு ரையிலேயே குறிப்பிட்டுள்ளார்! ‘‘இந்து சாஸ்திரங்களில் சொல்லப் பட்டபடி நடந்துகொள்வதுதான் நல்ல மனிதன் ஒருவருடைய கடமை – தர்மம் ஆகும்” என்பதே கோட்சே வாக்குமூலம். (அவர் கைப்பட எழுதியது ‘May it Please Your Honour’ என்ற தலைப்பில் ஒரு நூலாகவும் (ஆங்கிலத்தில்) அது வெளி வந்துள்ளது). ‘‘…தாயகத்தைக் காப்பாற்ற உயிரைக் கொடுத்தும் போராடவேண்டும் என்று ஹிந்துக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். பகவத் கீதையிலிருந்து சில சுலோ கங்களைச் சொல்லி உணர்ச்சிகரமாகத் தனது வாக்குமூல உரையை முடித்தார்….” – இப்படி நீதிபதி ஜி.டி.கோஸ்லா அந்த நூலில் குறிப்பிடுகிறார்!
‘‘கடமையைச்செய்; பலனைஎதிர்பார்க்காதே”: ‘‘கடமையைச் செய்; பலனை எதிர் பார்க்காதே” என்பதில் கடமை என்பது ஜாதி – வருணத்தைக் காப்பாற்றும் கடமையைச் செய்யவேண்டும் என்று வன்முறையைத் தூண்டும் ஒரு நூல் பகவத் கீதை ஆகும். இப்படிப்பட்ட நூலில் இருப்பதாகத் தவறான மேற்கோள்களைக் காட்டி மக்களை ஏமாற்றுகின்றனர். குறளை விருப்பப் பாடமாக வைக்கட்டும்! திருக்குறள் போன்ற உலகப் பொது ஒழுக்க நூல் – ‘வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ் நாட்டில்’ அவரது குறளை விருப்பப் பாடமாக வைக்க வேண்டாமா? அண்ணா பல்கலைக் கழகத்தில் அண் ணாவின் அரிய சிந்தனைக் கருவூலங்களை வைக்கவேண்டாமா? அவர் பெயரால் அமைந்த பல்கலைக் கழகம் அல்லவா அது? தமிழ்நாடு முழுவதும் அறப்போர் கிளர்ச்சி உறுதி! இன்னும் ஒரு மாதத்திற்குள் இதைப் பின்வாங்கி மாற்றாவிடில், தமிழ்நாடு முழுவதும் அறப்போர்க் கிளர்ச்சி தொடர் போராட்டமாக, அண்ணா பல்கலைக் கழகம் முன் தொடங்கி, தொடருவது உறுதி! உறுதி!! பெரியார் மண்ணில் இப்படி உணர்ச் சிபூர்வ நெருப்புடன் நெருங்கும் முயற்சி யில் இப்பல்கலைக் கழகத் துணைவேந்தர் ஈடுபடக் கூடாது. ஒன்றுபட்டு கண்டனக் குரல் எழட்டும்! தமிழக அரசும், முதலமைச்சரும் – மதச்சார்பின்மைக்கு எதிரான இதனை அகற்றிட முழு முயற்சியில் உடனடியாக ஈடுபடவேண்டும்! ஒத்த கருத்துள்ள அனைவரும், அனைத்துக் கட்சித் தலைவர்களும், கல்வி யாளர்களும் ஒன்றுபட்டு கண்டனக்குரல் எழுப்பிட முன்வரவேண்டும்.
2017லும்இதேகருத்தைவெளியிட்டது[1]: சதுர் வர்ணம் மயா ஸ்ருஷ்டம் என்று கடவுள் அவதாரமான கண்ணன் கூறுகிறான் என்று எழுதி, ஜாதியைப் பாதுகாக்கிறது. கொலையை நியாயப்படுத்தும் நூல் இந்நூல் – காந்தியாரைக் கொன்ற கோட்சே, நான் கீதையைப் படித்தபிறகே இந்த முடிவுக்கு வந்தேன் என்று நீதிமன்றத்திலேயே வாக்குமூலம் தந்துள்ளான். இந்த வன்முறையைத் தூண்டும் நூலை- மாணவர்களின் பிஞ்சு உள்ளத்தில் புகுத்தினால் அது நஞ்சைப் புகுத்துவது அல்லவா? இந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் உள்ள அத்தனை எதிர்க்கட்சிகளும் கடுமையாக எதிர்த்து தோற்கடிக்க வேண்டும். பகவத் கீதையை தேசிய நூலாக்க அரசு பிரகடனப்படுத்த வேண்டும் என்று முன்பு குரல் எழுப்பியவுடன் எதிர்ப்பு – கண்டனம் புயல்போல் கிளம்பியதால் அது பின்வாங்கப்பட்டது.மீண்டும் ஆழம் பார்க்கவே இம்முயற்சி; எல்லோரும் ஒன்று திரண்டு இம்முயற்சியை முறியடிக்க வேண்டும்” என்று வீரமணி தெரிவித்துள்ளார்[2].
கிருஷ்ணன்என்னஉனக்குமட்டும்தானாதெரியும்? உன்கிருஷ்ணனையும்தெரியும், அவன்பாட்டனையும்எங்களுக்குத்தெரியும்!: வீரமணியை கடந்த ஆண்டுகளில் அதிகம் பாதித்துள்ளது ஶ்ரீ கிருஷ்ண பரமாத்மா தான்! 2013ல் இப்படி பிதற்றியுள்ளார்[3], ஒரு கூட்டத்தில் பேசியது இப்படியுள்ளது, “உங்களுக்குஎன்னதெரியும்? உன்கிருஷ்ணனையும்தெரியும், அவன்பாட்டனையும்எங்களுக்குத்தெரியும்! ஆக, எங்கள்கிருஷ்ணனைப்பற்றிபேசிவிட்டார்களாஎன்றுநீங்கள்கேட்கிறீர்கள். கிருஷ்ணன்என்னஉனக்குமட்டும்தானாதெரியும்? உன்கிருஷ்ணனையும்தெரியும், அவன்பாட்டனையும்எங்களுக்குத்தெரியும்! ஏனென்றால், நீகிருஷ்ணன்என்றுசொல்கின்றகடவுளைப்பற்றி, உன்மூக்கைசொறிந்து, திசைதிருப்பிவிட்டிருக்கிறார்கள்யாரோ!” பாவம், அந்த அளவுக்கு குற்றம் கண்டுபிடிக்க கீதை பற்றி ஆராய்ச்சியே செய்துள்ளார் போலும். திமிருடன், இவ்வாறு ஒருமையில் பேசியிருப்பதை கவனிக்க வேண்டும். மனத்தில் எந்த அளவுக்கு வன்மம் இருந்தால் ஒழிய, இவ்வாறு பேச்சு வந்திருக்காது. பிறகு, இத்தகைய ஆட்களிடமிருந்து எதை எதிர்பார்க்க முடியும்?
கோர்ட்டில்கிருஷ்ணனையும்கூப்பிடமுடியும்; கிருஷ்ணதாசர்களையும்கூப்பிடமுடியும்: வீரமணி பொறிந்து தள்ளினார், “இன்னும்சிலபேர்வழக்குபோடுவோம்என்றுசொல்கிறார்கள். போடுங்கள்! உங்கள்வழக்கைத்தான்நான்எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன். அப்போதுதான், கோர்ட்டில்கிருஷ்ணனையும்கூப்பிடமுடியும்; கிருஷ்ணதாசர்களையும்கூப்பிடமுடியும். உன்னாலேவரமுடியுமானால், வழக்குபோடுங்கள்!ஆதாரபூர்வமாகதாக்கல்செய்கிறோம்! கோர்ட்டில், நாங்கள்ஆதாரபூர்வமாக, கிருஷ்ணன்செய்தலீலைகளைப்படமாகப்போட்டு, குளத்தில்பெண்கள்எல்லாம்பாதிநிர்வாணமாகநிற்கிறார்கள்; சேலைகளைத்தூக்கிக்கொண்டுமரத்தின்மீதுகிருஷ்ணன்இருக்கிறார்பாருங்கள்அந்தப்படத்தினை, நீதிபதிஅவர்களேஇதனைஆதாரபூர்வமாகதாக்கல்செய்கிறோம்என்றுசொன்னால், என்னஆவார்கிருஷ்ணன், அதனைநீங்கள்எண்ணிப்பார்க்கவேண்டும்”. எப்படி முகலாய போலித்தன சரித்திரவியல், கட்டுக்கதை உருவாக்கம், சித்திரங்கள் வரந்த விதம், இவர்களைப் போன்ற நாத்திகர்களால் உபயோகப்படுத்தப் படுகிறது என்பதனையும் கவனிக்க வேண்டும்.
ஒருலட்சம்பிரதிக்குமேல்விற்பனையாகியகீதையின்மறுபக்கம்: தன்னுடைய புத்தகத்தைப் பற்றி பீழ்த்திக் கொள்கிறார், “கீதையின்மறுபக்கம்! இதோஎன்கைகளில்இருப்பதுகீதையின்மறுபக்கம்நூல்! கிருஷ்ணன்உபதேசம்செய்தாராம் – யாருக்கு, அர்ஜுனனுக்கு! அதுதான்கீதை! எதிர்எதிரேபடைகள்இருக்கு. அந்தப்படையில்அர்ஜுனன்சண்டைபோடபோகிறாராம். அர்ஜுனனுக்குத்தேரோட்டியாககிருஷ்ணன்போறாராம். அப்போதுகாதோடுகாதாககீதாஉபதேசம்செய்றாராம். எங்கே? எதிரிப்படைகள்நிற்கின்றஇடத்தில் – 700 சுலோகம்முடியும்வரைஎதிரிப்படைகள்அமைதியாகநிற்கின்றதாம். கீதையின்மறுபக்கம்நூல்இருக்கிறதே, ஒருலட்சம்பிரதிக்குமேல்விற்பனையாகிஇருக்கிறது. அதுமட்டுமல்ல, ஆங்கிலத்திலே, இந்தியிலே, எல்லாமொழிகளிலும்அச்சாகிஇருக்கிறது. இதற்குஒருவரிமறுப்புகிடையாது”. முதலில் வாங்கிப் படித்தார்களா, இல்லை, கண்டுகொள்ளவில்லையா என்பது தெரியவில்லை. ஏனெனில், ஏற்கெனவே தெரிந்த பொய்களை, திரட்டி புத்தகம் போட்டால், யாரும் படிக்க மாட்டார்கள், அதன், தரம் தெரிந்தவர், ஒதுக்கத்தான் செய்வார்கள். பிறகு, அதனைப் பற்றி தம்படாம் அடித்துக் கொள்வதில் என்ன பலனும் இல்லை.
தமிழர்–தமிழரல்லாதோர்பிரச்சினைஉருவாக்கப்படக்கூடாது – சட்டத்தைக் கையில் எடுக்கக் கூடாது, கும்பல்கொலைக்குநியாயம்கற்பிக்கக்கூடாது (1)
திராவிடசித்தாந்திகள்தமிழரை, தமிழகத்தைபிரித்துவைத்து, துவேசத்தைவளர்த்துவருவது: தமிழகத்தில் கடந்த நூறாண்டு காலத்தில், –
தமிழ்-தமிழரல்லாதவர்,
திராவிடன் – ஆரியன்,
தென்னகத்தவன் – வடக்கத்தியன்,
வடக்கு வாழ்கிறது-தெற்கு தேய்கிறது
போன்ற பிரச்சாரங்களால், மற்ற மொழி பேசும், மற்ற மாநிலத்தவர் மீது, மனங்களில் துவேசத்தை வளர்த்து கொண்டிருக்கிறார்கள். “வந்தேறி” தத்துவம் எப்பொழுதுமே உணர்ச்சிப் பூர்வமாக எடுத்துக் கொண்டு, மற்றவர்களைத் தாக்கப் பயம் படுத்தப் பட்டு வருகிறது. பிராமணர், மார்வாடி, குஜராத்தி, வடவிந்தியன் போன்ற பிரிவினை துவேசம் இன்றும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. எந்த பிரச்சினை என்றாலும், “தமிழன்” என்று தான் அடைமொழி போட்டு செய்தி போடுவது, ஊடகங்களுக்கும் வாடிக்கையாக இருக்கிறது. ஶ்ரீலங்கா மதப்பிரச்சினை என்றாலும், “தமிழர்-முஸ்லிம்” என்று தான் செய்திகள் வெளியிட்டு, மதப்பிரச்சினையை மறைக்கப் பார்த்தனர். “காவிரி பிரச்சினை” என்றாலும், திராவிட அரசியல்வாதிகளின் கையாலாகாத விசயத்தை மறைத்து, கர்நாடகாவை, கன்னட மொழி பேசுபவர்கள் மீது வெறுப்பை-காழ்ப்பை வளர்த்து வருகின்றனர். அதற்கு சத்தியராஜ், விவேக் போன்ற நடிகர்களும் உடந்தையாக இருந்து வருகின்றனர். ஒரு திரைப்படத்தில், “இது பெங்களூரு கத்தரிக்காய், காவிரி நீரால் வளர்ந்து பெரிதாக இருக்கிறது, அது தமிழக கத்திரிக்காய், சிறிதாக இருக்கிறது, காவிரி நீர் கிடைத்தால், அதுவும் பெரிதாக வளரும்,” என்று சொல்வது, பிரிவினையின் வக்கிரகத்தைத் தான் வெளிக்காட்டுகிறது.
மோடிஎதிர்ப்பு, வடவிந்தியர்எதிர்ப்பும்: சமீப மாதங்களில் “ஜல்லிக் கட்டு” பாணியில், மோடிக்கு எதிர்ப்பு, ராணுவ மந்திரி மீது கல்லெறிதல் என்றெல்லாம் அரங்கேறியுள்ளன. லலித் மோடி, நீரவ் மோடி போன்றோரை, பிரதமர் மோடியுடன் இணைத்து நக்கல் அடிப்பதும், திராவிட இனவெறியில் உருவானது, ஊக்குவிப்பது. இதெல்லாம் ஏதோ, வீர-சூர-பராக்கிரம வேலைகளாக சித்தரிக்கப் பட்டு, சமூக ஊடகங்களில் செய்திகளை, வதந்திகளாகப் பரப்பி வருகின்றனர். அதற்கு பிரிவினைவாத திராவிட சித்தாந்த அரசியல்வாதிகள் தான் ஊக்குவிப்பாளர்களாக இருந்து வருகின்றனர். நோயாளியான, கருணாநிதிக்கே, கருப்புச் சட்டை போட்டு, மோடிக்கு எதிர்ப்பு தெரிவிப்பது போல, ஸ்டாலின் போன்றவர்களே செய்திருக்கிறார்கள். இதனால், சாதாரண “தமிழ்” பேசும், தமிழனை உசுப்பி விட்டால் போலகிறது. நாமும், இதுபோல செய்தால், புகழடையலாம், நமது போட்டோ சமூக வலைதளங்களில் பரவும், பிரபலமாகி விடலாம் போன்ற பொய்யான உத்வேக மனப்பாங்கை அவன் கொள்கிறான். செயலிலும் இறங்கி விடுகிறான். “கும்பல்” என்ருவ்ரும் போது, “தரும அடி” பாணியில், எல்லோரும் அடிக்கிறார்கள். கொலையில் முடியும் போது, குற்றமாகி விடுகிறது. மோடி எதிர்ப்பை, மோடியே கண்டு கொள்ளாமல் சென்று விடலாம், ஆனால், கொலையை மறிக்க முடியாது.
குழந்தைகடத்தல், விழிப்பானகொலையாளிகள், கொலைகள், நரபலிகள்,கும்பல்கொலைகள்: மாட்டிறைச்சி விவகாரத்தில், திருவண்ணாமலையில், மாட்டிறைச்சி உண்ணும் விழா நடைப் பெற்றதை நினைவு படுத்திக் கொள்ளவேண்டும். “மாட்டிறைச்சி கும்பல் கொலை” விவகாரத்தில், செல்யூலரிஸ ஊடகங்கள் அதிகமாகவே ஊளையிட்டன. இப்பொழுதைய “வடவிந்தியர்” படுகொலைகளும் திரித்துப் பேசப்படுகின்றன. ஆனால், “தமிழனை, தமிழன் கொன்று விட்டான்,” எனும்போது, எதிர்க்க்கப் படுகிறது. தி.இந்துவே, கருத்தை தைரியமாக வெளியிடுகிறது. ஆக, இதில் கூட பாரபட்சம் பார்ப்பது, படுகேவலமாக இருக்கிறது. வருடத்திற்கு 2000 குழந்தைகள் காணாமல் போவதும், ஆயிரக் கணக்கான குழந்தைகள் கிருத்துவ காப்பகங்களில், ஆஸ்ரமங்களில் கற்பழிப்பதும், செக்யூலரிஸ ஊடகங்களுக்கு வேறுவிதமாக தெரிகிறது போலும். திராவிட சித்தாந்திகளுக்கும் அது குற்றமாகத் தெரியவில்லை. இனமான தலைவர்களுக்கு, மானம், சூடு, சொரணை எல்லாம் வரவில்லை போலும். இத்தகைய, குரூர வன்மத்துடன் இருப்பதும், சமுதாயத்திற்கு தீங்குதான் விளைவிக்கும், குற்றங்கள் பெருகும். 1960லிருந்து, அத்தகைய நிலை தான் வளர்ந்து வருகிறது. குற்றங்களை, குற்ற்றங்களாக பாவிக்காமல், அவர்கள் அப்படித்தான் இருப்பார்கள், என்று பொதுப்படையான கருத்தை உருவாக்குவதும் குற்றமாகிறது[1]. ஆங்கிலேயர் எப்படி குறிப்பிட்ட குழுக்களை, “குற்றம் சேய்யும் கும்பல்” எண்ரு சட்டப்ப்டி அறிவித்தனரோ, அதுபோல இக்காலத்தில் அறிவிக்க முடியாது, என்பதனை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவேண்டும்[2].
வதந்திகள்வடசென்னைப்பகுதிகளில்பரவுதுஏன்?: ஆர்.கே.பேட்டை சுற்றுப்பகுதியில், இரண்டு மாதங்களுக்கு முன், தனியாக இருக்கும் பெண்களை, மர்ம நபர்கள் கழுத்தை அறுத்து கொலை செய்வதாக ஒரு செய்தி பரவியது[3]. இந்த வதந்தியால், அறிமுகம் இல்லாத புதிய நபர்களை, மக்கள் அடித்து நொறுக்கிய சம்பவங்களும் நடந்தன. அந்த பரபரப்பு சற்றே ஓய்ந்த நிலையில், தற்போது, குழந்தை கடத்தல் கும்பல் நடமாடுவதாக புரளி கிளம்பியுள்ளது. இந்த புரளி, சமூக வலைதளங்கள் மூலம், வேகமாக பரவி வருகிறது.இதனால், அப்பாவி நபர்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டோர், மீண்டும் தாக்குதலுக்கு உள்ளாகும் நிலை உள்ளது.இதை தவிர்க்கும் விதமாக, காவல் துறையினர், ஒலிபெருக்கி வாயிலாக, கிராமங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். சந்தேகப்படும்படியான புதிய நபர்களை கண்டால், அவர்களை துன்புறுத்தாமல், காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என, அறிவுறுத்தப்படுகிறது. வட மாநில வாலிபர்கள் சிலரை, கிராம பொதுமக்கள் தாக்கிய பின், போலீசாரிடம் ஒப்படைக்கின்றனர். விசாரணைக்கு பின், அவர்கள் அப்பாவி நபர்கள் என்பது தெரிய வருகிறது. வட மாநிலத்தவர் மீது நடத்தும் தாக்குதலை தடுக்கும் வகையில், மாவட்ட எஸ்.பி., சிபிசக்கரவர்த்தி, அனைத்து காவல் நிலையத்திற்குட்பட்ட கிராமம் மற்றும் நகரங்களில், விழிப்புணர்வு கூட்டம் நடத்த உத்தரவிட்டுள்ளார். அதில், வடமாநிலத்தினர் மற்றும் அப்பாவிகள் தாக்கப்படுவதை தடுக்க வேண்டும் என, அறிவுறுத்தியுள்ளார்[4].
திருத்தணி, ஊத்துக்கோட்டைபகுதிகளில்மர்மநபர்கள்திரிவதாகவதந்தி[5]: திருத்தணி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, 98 கிராமங்களிலும், டி.எஸ்.பி., சேகர் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் வினாயகம் தலைமையிலான போலீசார், கிராமங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர். நான்கு நாட்களாக, ஊத்துக்கோட்டை, அண்ணாநகர், எட்டிக்குளம், பாலவாக்கம், செஞ்சியகரம், ஆரணி, பெரியபாளையம் மற்றும் மாவட்டத்தின் பல பகுதிகளில், மர்ம நபர்கள் திரிவதாக வதந்தி பரவுகிறது. இதனால், அப்பகுதி இளைஞர்கள், இரவு நேரத்தில் உருட்டுக்கட்டை உள்ளிட்ட ஆயுதங்களுடன், சாலையில் திரிகின்றனர். அசம்பாவிதம் எதும் நிகழக்கூடாது என, ஊத்துக்கோட்டை போலீசார், ஆட்டோ மூலம் விழிப்புணர்வு பிரசாரம் செய்கின்றனர். மேலும், மக்கள் கூடும் இடங்களில், வட மாநிலத்தவர் மீது பொதுமக்கள் தாக்குதல் நடத்த கூடாது என, ‘நோட்டீஸ்’ ஒட்டியுள்ளனர். ஊத்துக்கோட்டை டி.எஸ்.பி., சந்திரதாசன் கூறியதாவது: “குழந்தைகள்கடத்தல்என்றசெய்தி, வெறும்வதந்தி. கிராமங்களில், வெளியாட்கள்நடமாடினால்உடனடியாகஅந்தந்தபகுதிகாவல்நிலையத்திற்குதகவல்கொடுக்கவேண்டும். அவர்களைதாக்குவதுகுற்றச்செயலாகும். இதுபோன்றநடவடிக்கையில்யாரும்ஈடுபடவேண்டாம். மீறினால், கடும்நடவடிக்கைஎடுக்கப்படும்,” என்று கூறினார்[6].
”சிண்டுமுடிந்திடுவோய்போற்றி” என்ற ‘துவஜாரோகணம்‘ செய்யத்தொடங்கிவிட்டனர்[1]: திராவிட இயக்கங்களுக்கு தாங்கள்தான் மாற்று என்ற பாஜகவினரின் ‘கரிசனம்’ அதிமுகவின் மீது கரைபுரண்டு ஓடத் தொடங்கிவிட்டது. எனவே அதிமுகவினருக்கு எச்சரிக்கை தேவை. இது நாடகமே என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி குற்றம்சாட்டியுள்ளார். அறிஞர் அண்ணா கூறிய, ”சிண்டு முடிந்திடுவோய் போற்றி” என்ற அனுபவ மொழிப்படி, அ.தி.மு.க.வின் எம்.எல்.ஏ.,க்கள், முக்கிய பொறுப்பாளர்களிடையே பிளவை வலிந்து உண்டாக்கி, இடையே புகுந்து, நூல் பிளந்து பார்க்கும் முயற்சியில் ஈடுபடத் துவங்கிவிட்டனர். பல்வேறு கலகங்களை உருவாக்கிட, கட்டுக் கோப்பான அக்கட்சியினை ஜாதி அடிப்படையில் பிரித்தாள தங்களது பேனாக்கள்மூலம் ‘துவஜா ரோகணம்’ செய்யத் தொடங்கிவிட்டனர். எனவே, அதிமுகவின் சகோதரர்களே, சிண்டு முடிந்திடுவோரை, உங்கள்மீது திடீர் அனுதாபம், அளவற்ற ஆதரவு தருவது போல் நாடகம் போடுவோரை விழிப்போடு புரிந்துகொள்ளுங்கள். கட்சியின் கட்டுக்கோப்பை – கட்டுப்பாட்டை மறவாதீர். சிறுசிறு ஓட்டைகளைத் தேடி அலைந்து அவற்றைப் பெரிதாக்குகின்றனர். எனவே எச்சரிக்கை தேவை. இவ்வாறு வீரமணி கூறியுள்ளார்[2].
கண்ணீர்துளிகளும், கடல்நீர்துளிகளும்: “கடல்நீர் துளிகள் கடலாகாது, கடலை விட்டுச் சென்ற அவை கடல் என்று தம்மை அறிவித்துக் கொள்ள முடியாது”, என்று நெடுஞ்செழியன் அதிமுகவை விட்டுச் சென்றவர்களை குறிப்பிட்டார். ஆகஸ்ட்.21, 2000 அன்று வி.ஆர்.நெடுஞ்செழியனின் புத்தகங்களை வெளியிடும் போது, ஜெயலலிதா அதனைச் சுட்டிக் காட்டி பேசினார். அண்ணா உயிருடன் இருக்கும் போது, அவரை சாடியவர்கள், மறைமுகமாக எதிர்த்தவர்கள் இன்று அண்ணாவைப் பின்பற்றுவதாகச் சொல்லிக் கொள்கிறார்கள், என்று மறைமுகமாக விமர்சித்தார்[3]. கே. வீரமணி பிரதிகளைப் பெற்றுக் கொண்டார். 1948ல் பெரியார், திமுகவை “கண்ணீர் துளிகள்” என்று குறிப்பிட்டது தெரிந்ததே. 50 ஆண்டுகள் கழித்து, ஜெயலலிதா, அதிமுகவை விட்டு விலகியவர்களை “கடற்நீர் துளிகள்” என்று குறிப்பிட்டார்[4].
சமூக நீதி வீராங்கனை: 1998ல் அதிமுக பிஜேபியுடன் கூட்டு வைத்துக் கொண்டபோது, வீரமணி விமர்சித்தார். சுப்ரீம் கோர்ட் தீர்ப்பையடுத்து செப்டம்பர் 2001ல் தனது பதவியை ராஜினாமா செய்ததன் மூலம் தனதுதனித்தன்மையை ஜெயலலிதா நிலைநாட்டியுள்ளார் என்று திராவிடர் கழக பொதுச்செயலாளர் கி.வீரமணி கூறினார்[5]. இதுதொடர்பாக சென்னையில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சுப்ரீம்கோர்ட்தீர்ப்பைஏற்றுதனதுபதவியைஜெயலலிதாராஜினாமாசெய்துள்ளார். இதைபாராட்டுகிறேன். தனக்குபதவிஆசைஇல்லைஎன்பதைஅவர்நிரூபித்துள்ளார். மேலும், தென்மாவட்டத்தைச்சேர்ந்தஒருவரை, பிற்பட்டவகுப்பைச்சேர்ந்தஒருவரைமுதல்வராக்கியுள்ளதன்மூலம்சமூகநீதியைகாப்பதில்தான்எவ்வளவுஉறுதியாகஇருக்கிறேன்என்பதைஅவர்நிரூபித்துள்ளார். இதைநான்வரவேற்கிறேன். புதியமுதல்வர்பன்னீர்செல்வம்பீடுநடைபோட்டுசெயல்படவாழ்த்துகிறேன்”, என்றுகூறியுள்ளார் அவர்[6].
பெண்களைஅடக்கும், திட்டும், தூசிக்கும்திராவிடத்தலைவர்கள்: பெரியார் முதல் கருணாநிதி வரை என்னத்தான் “பகுத்தறிவு” என்றெல்லாம் பேசினால் கூட, அவர்களின் பலதார திருமணங்கள், தொடர்புகள், மக்களை அவர்கள் பெண்களை அடக்கியாள்பவர்களாகத் தான் சித்தரித்தது. பெரியார் தன்னைவிட இளைவரான மணியம்மையை திருமணம் செய்து கொண்டதை அண்ணா போன்ற தலைவர்களே வெளிப்படையாக எதிர்த்தனர், மற்றும் “கண்ணீர் துளிகளாக” திமுக உதயமாக காரணமாகியது. “நான் முற்றும் துறந்த முனிவனும் இல்லை, அவள் படி தாண்டா பத்தினியும் இல்லை”, என்றெல்லாம் பேசினாலும் கூட, அண்ணாவுக்கு குழந்தையில்லை என்பதனால் மக்களுக்கு இரக்கம் ஏற்பட்டது. இதே நிலைதான் எம்ஜியாருக்கும். பலதாரம் புரிந்த எம்ஜியார், இதனால் கண்டுகொள்ளவில்லை எனலாம். ஆனால், வீரமணியை, மணியம்மையை சொத்துக்காக அடக்கி வைக்கும் நபராகத்தான் கருதினர். கருணாநிதியின் முத்தார-மூன்று மனைவி-துணைவி பற்றி விவரிக்க வேண்டிய அவசியல் இல்லை. இந்நிலையில் எல்லோருக்கும் தெரிந்த, அறிந்த, புரிந்த ஜெயலலிதா உயர்ந்தது, ஒரு உதாரணமாகத் திகழ்கிறது.
ஜெயலலிதாவும், கரண்தாபரும்: ஆங்கிலம் மற்றும் இந்து மொழிகள் தெரிந்ததால், ஜெயலலிதாவுக்கு தேசியத் தலைவர்களுடன் நேரில் சந்தித்துப் பேசும் வசதியும் இருந்தது. கரண் டாபருடன் நடந்த பேட்டி திகைக்க வைத்தது, ஜெயலலிதாவின் பேச்சுத் திறமை, கேள்விகளை எதிர்கொள்ளும் திறமை, தாபரையே அதிர வைத்த ஆளுமை முதலியன படித்தவர்களையே சிந்திக்க வைத்தது. எதிரிகள் கூட பாராட்ட ஆரம்பித்தனர். பலமொழிகளில் நடித்த அனுபவத்தை ஜெயலலிதா அரசியலில் நன்றாகவே பயன்படுத்திக் கொண்டார். அந்நிலையில், ஜெயலலிதா உட்கார்ந்த இடத்தில் சசிகலா உட்காருவது என்பது எப்ப்டி பட்டது என்பது சொல்ல வேண்டிய் அவசியம் இல்லை. இருவரும் பெண்கள் தான், இருப்பினும் வித்தியாசங்கள் பலப்பல உள்ளன.
ஜெயலலிதாவைசதாய்த்ததிராவிடத்தலைவர்கள்: திராவிடத் தலைவர்களின் ஆபாச வசைகளினால் தூற்றப்பட்ட போது, மக்கள் உள்ளுக்குள்ளே கொதித்தனர். ஊழல் என்பது, திராவிடத்துவ அரசியலோடுப் பின்னிப்பிணைந்ததாலும், எல்லோருக்கும் அதைப்பற்றி நன்றாகவே தெரிந்திருந்ததாலும், ஊழல் வழக்குகள் அவர் மீது போடப்பட்டபோது, அதிகமாக பாதிப்பு ஏற்படவில்லை. மாறாக, கருணாநிதி மற்றும் சுப்ரமணியன்ஸ்வாமி, அவரை சதாய்த்து, கஷ்டப்படுத்துவதாகவே மக்கள் நினைத்தனர். சட்டசபையில் ஜெயலலிதா தாக்கப்பட்டபோது, “திரௌபதி துகிலுரித்த நிகழ்ச்சி” போன்றநிலை, மக்களை அதிகமாகவே பாதித்தது. நிச்சயமாக திமுகவினர் “கௌரவர்களாகி”, கருணாநிதி, “துச்சாதனன்” ஆகி, தோல்வியை சந்திக்க வேண்டியதாயிற்று. “எனக்கும் மூன்று துணைவியர் இருக்கிறார்கள், பெண்களைப் பற்றி எனக்கும் தெரியும்”, என்றெல்லாம் கருணாநிதி வசனம் பேசினாலும், மக்களிடம் அது எடுபடவில்லை. “முரசொலியில்” கருணாநிதியின் தூஷணம் எப்பொழுதும் இருந்து கொண்டே இருந்தது. சமீபத்தில் கூட “பாப்பாத்தி” என்றெல்லாம் ஏகவசனத்தில் தேர்தல் பிரச்சாரங்களில் பேசியது, நிச்சயமாக தமிழகப் பெண்களுக்குப் பிடிக்கவில்லை.
சுப்ரமணியன்சுவாமி, ஜெயலலிதாவை “திராவிடத்தலைவியாக” மாற்றியது: “உள்ள சூத்திர ஆட்சியைக் காப்போம்மென்று சுவரொட்டிகளை ஒட்டியதை நினைவு கொள்ள வேண்டும். கருணாநிதி, “மறுபடியும் ஆரிய அம்மையார் பதவிக்கு வந்துவிடுவார்” என்றெல்லாம் எச்சரிக்கை ஓலமிட்டது ஞாபகத்தில் கொள்ள வேண்டும். “தமிழகத்தை தமிழன் தான் ஆளவேண்டும்” போன்ற கூக்குரல்களை எல்லாம் மீறித்தான், தமிழகத்தை தமிழர்-அல்லாதவர்கள் ஆட்டிப் படைத்தார்கள், ஆண்டார்கள் என்று, தனித்தமிழ்த்துவ, தமிழ்வெறித்துவப் பிரிவினைவாதிகள் பேசியும், எழுதியும் வந்த நிலை. ஆனால், “எல்லோரும் திராவிடர்கள்” என்பதை, ஆந்திரா தனி மாநிலம் ஆகியபோதும், கேரளா ஒப்புக் கொள்ளாத போதும், கர்நாடகா காவிரி விசயத்திலும் தோலுரித்துக் காட்டியது. அந்நிலையில், பிராமணரான, தமிழரல்லாத ஜெயலலிதா, முற்றிலும் திராவிடத்துவப் படுத்தப் பட்ட காரியத்திற்கு, இன்னொரு பிராமணரான, சுப்ரமணியன்சுவாமி காரணமானார். அவர் போட்ட வழக்குகள், ஜெயலிதாவைத் தனிமைப் படுத்தி, “திராவிடத் தலைவி”யாக்கியது!
ஊழல்–காரணிஜெயலலிதாவைபாதிக்காதது: ஊழலில் திளைத்த திமுக 1970களிலேயே வழக்குகளில் சிக்கிக் கொண்டது. கருணாநிதி, “ஊழலின் மறு உருவம்” போன்று சித்தரிக்கப் பட்டார். “இந்திரா-கருணாநிதி” கூட்டு அவ்வாறே முரண்பாடாகக் கருதப் பட்டது. “சோனியா-கருணாநிதி” கூட்டோ பாதாளத்தில் தள்ளி விட்டது. இரண்டு தீமைகள் இருக்கும் போது, பெரியது எடு, சிறியது எது அல்லது, எதனால் அதிக அளவு பாதிப்பில்லை என்று பார்த்து தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற நிலையிலும், ஜெயலலிதா தனித்து நின்றார். “தமிழகத்தை இனி ஆண்டவன் கூட காப்பாற்ற முடியாது”, என்று ரஜினிகாந்த சொன்னது, நாத்திகரான கருணாநிதிக்கு, ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.
பெண்களைஅடக்கும், திட்டும், தூசிக்கும்திராவிடத்தலைவர்கள்: பெரியார் முதல் கருணாநிதி வரை என்னத்தான் “பகுத்தறிவு” என்றெல்லாம் பேசினால் கூட, அவர்களின் பலதார திருமணங்கள், தொடர்புகள், மக்களை அவர்கள் பெண்களை அடக்கியாள்பவர்களாகத் தான் சித்தரித்தது. பெரியார் தன்னைவிட இளைவரான மணியம்மையை திருமணம் செய்து கொண்டதை அண்ணா போன்ற தலைவர்களே வெளிப்படையாக எதிர்த்தனர், மற்றும் “கண்ணீர் துளிகளாக” திமுக உதயமாக காரணமாகியது. “நான் முற்றும் துறந்த முனிவனும் இல்லை, அவள் படி தாண்டா பத்தினியும் இல்லை”, என்றெல்லாம் பேசினாலும் கூட, அண்ணாவுக்கு குழந்தையில்லை என்பதனால் மக்களுக்கு இரக்கம் ஏற்பட்டது. இதே நிலைதான் எம்ஜியாருக்கும். பலதாரம் புரிந்த எம்ஜியார், இதனால் கண்டுகொள்ளவில்லை எனலாம். ஆனால், வீரமணியை, மணியம்மையை சொத்துக்காக அடக்கி வைக்கும் நபராகத்தான் கருதினர். கருணாநிதியின் முத்தார-மூன்று மனைவி-துணைவி பற்றி விவரிக்க வேண்டிய அவசியல் இல்லை. இந்நிலையில் எல்லோருக்கும் தெரிந்த, அறிந்த, புரிந்த ஜெயலலிதா உயர்ந்தது, ஒரு உதாரணமாகத் திகழ்கிறது.
[3] The Hindu, Jayalalitha move to appease partymen, Tuesday, August 22, 2000.
[4] Addressing partymen after releasing two books authored by former chairman, V.R. Nedunchezhiyan, Ms. Jayalalitha said, “none of those who hold the organisation as greater than themselves would be let down”. Quoting Nedunchezhiyan, she said those who had left the party were like droplets outside the ocean. “Once outside the ocean, the droplets cannot claim to be the ocean,” she said. While the AIADMK had faith in the people, its opponents believed in conspiracy. “The day is not far off when we will usher in MGR rule again.” Ms. Jayalalitha made a veiled attack on the ruling party saying those who had hurt Anna while he was alive were now claiming to be his followers.