பகவத் கீதை, கிருஷ்ண தூஷணம், திரிபு விளக்கம், இந்துவிரோதக் கூட்டங்களின் தொடரும் சட்டமீறல்கள்! [1]
இந்துவிரோதிகளும், இந்துத்துவவாதிகளும்: ஜூலை 11, 2020ல் வீரமணி மறுபடியும் அதே தூஷணத்தை செய்திருப்பதால், இதனை விளக்கமாக எழுத வேண்டிய அவசியம் உண்டாகி உள்ளது. “இந்துத்துவம்” பேசிக் கொண்டு, தம்மை “இந்துவவாதிகள்,” என்று சொல்லிக் கொண்டு, இந்துமதத்தினையே தாங்கள் தான் காத்து வருகின்றது போலக் காட்டிக் கொண்டாலும், திடீரென்று, “பெரியார் கொள்கை தான் எங்கள் கொள்கை,” என்றெல்லாம் பேசியிருப்பது திகைப்படையச் செய்கிறது. தமிழகத்தில் திராவிடக் கட்சிகளின் ஆதரவில்லாமல், அரசு-அதிகாரம் பெறமுடியாது என்றதால், இவ்வாறு சமரசம் செய்து கொள்கின்றனரோ என்ற சந்தேகமும் எழுகிறது. இந்து, இந்து நலன், இந்து பாதுபாப்பு முதலியவை, குறுகிய “அரசியல்,” அரசியல் கூட்டணி, அரசியல் ஆதாயம் போன்றவற்றில் சிக்க வைத்து, குறுக்கி விட முடியாது. அதனால் தான், மற்றுக் கருத்து கொண்டவர்கள், விவரங்களை எடுத்துக் கொண்டு, அரைகுறையாக புரிந்து கொண்டு, தூஷித்துக் கொண்டிருக்கிறார்கள்.
பகவத் கீதை எதிர்ப்பு – ஆந்நியர் ஆட்சி முதல் திராவிட ஆட்சி வரை: பகவத் கீதையினை இந்துக்கள் ஆதரிப்பது அறிந்து, அதனை தூஷித்து புத்தகத்தை எழுதுவது, பேசுவது, தூஷிப்பது புதியதல்ல. ஆங்கிலேயர் காலத்திலிருந்தே, பகவத் கீதையை எதிர்த்து பிரச்சாரம் நடந்தது. சுமார் 150 ஆண்டு காலமாக இது நடந்து வருகிறது. தேசதுரோக அறிக்கை கமிட்டி, “பகவத் கீதை வன்முறையைத் தூண்டுகிறது,” அதனால், அதனை தடை செய்யவும் முற்பட்டது[1]. இந்திய புத்தகங்கள் ஸ்காட்லான்ட் யார்டுக்கு அனுப்பப் பட்டு புலன் விசாரணைக்கு உட்படுத்தப் பட்டது[2]. 1896ல் பிளேக்கினால் கோடிக் கணக்கான மக்கள் இறந்த போது, ஆங்கிலேயர் உகந்த நடவடிக்கை எடுக்காததால், திலகர் “கேசரி”யில் அவர்களைத் தாக்கி எழுதினார். 1659ல் சிவாஜி எப்படி ஒரு முகலாய தலபதியைக் கொன்றார் என்று குறிப்பிட்டார். பிறகு, ஆர்பாட்டக் காரர்கள், ஒரு ஆங்கிலேய அதிகாரியைக் கொன்றனர். அதனால், திலகருக்கு ஆறுவருடம் தீவாந்திர தண்டனை கொடுக்கப் பட்டது. இதனால், ஆங்கிலேயர் அவருக்கு திலகருக்கும், காந்திக்கும் இடையிலேயே கீதை ஆதரிப்பு-எதிர்ப்பு விவாதம் நடந்தது. காந்தி உண்மையில் கீதையை ஆதரிப்பது போல காட்டிக் கொண்டு, எதிர்க்கவே செய்தார். திலகர் வழக்கை வைத்துப் பார்த்தால், இப்பொழுது, வன்முறையினைத் தூண்டுபவர்கள், இந்துவிரோத திரவிடத்துவ, பெரியாரிஸ, கம்யூனிஸ, துலுக்கக் கூட்டங்கள் தான். அவ்வப்பொழுது, பெயரை மாற்றிக் கொள்கின்றன, ஆனால், வேலை செய்வது, ஊக்குவிப்பது அவர்கள் தான்.
சமீபத்தைய எதிர்ப்புகள்: இந்திய வரலாற்றுப் பேரவை போன்ற கம்யூனிஸ-துலுக்க ஆதரவு அமைப்புகள் அத்தகைய ஆய்வுக் கட்டுரைகளை ஊக்குவித்தன[3]. அவ்வப்போது, ஆங்கிலத்தில், செய்திகள் வந்து கொண்டிருக்கும். சிலர், அரைகுறையாக திரித்து விளக்கம் கொடுப்பர்[4]. அவையெல்லாம் ஊடகங்களில் வந்து கொண்டிருக்கும், இன்றும் வந்து கொண்டிருக்கின்றன[5]. போதாகுறைக்கு, பகவத் கீதை, பௌத்தத்திலிருந்து காபியடித்து எழுதப் பட்டது என்றெல்லாம் சில ஆராய்ச்சியாளர்கள் எடுத்துக் காட்டுகின்றனர். 2012ல் ரஷ்யாவில் தடை செய்யப் பட வேண்டும் என்று வழக்கு தொடரப் பட்டது, ஆனால், நீதிமன்றம் தள்ளுபடி செய்தது[6]. சென்ற வருடம் அண்ணா பல்கலைக் கழகத்தில், சேர்க்கப் பட்டது என்றபோதும், பிரச்சினையைக் கிளப்பினர்[7]. உண்மையில், பிளாடோ போன்றவர்களின் தத்துவத்துடன், இந்திய தத்துவத்தையும் படிக்க ஏற்பாடு செய்தபோது, எதிர்ப்புத் தெரிவித்தனர்[8]. எப்படி சைவ-வைணவ சர்ச்சை, சண்டை, எதிர்ப்புகள் இலக்கியங்களாக வெளிப்பட்டபோது, அவை மற்றவர்களால் சாதகமாக உபயோகித்துக் கொண்டார்களோ, அதேபோல இந்த விவரங்களை வைத்துக் கொண்டு, தன்னுடைய காழ்ப்பு, வெறுப்பு, துவேசம் முதலியவற்றைச் சேர்த்து இப்புத்தகத்தை வீரமணி எழுதித் தள்ளினார். இந்துஎதிர்ப்பு ஒன்றையே பிரதானமாக வைத்துக் கொண்டு, வீரமணி கூட்டம் திரும்பத் திரும்ப இந்த பிரச்சாரத்தை செய்து வருகின்றது. மேலே குறிப்பிட்ட இந்துவிரோத குப்பைகளை அள்ளிக் கொண்டு, இங்கு குப்பைக் கொட்ட முயல்கிறது இந்துவிரோதக் கூட்டம்.
ஜூலை 2020 – நாவலர் நெடுஞ்செழியன் நூற்றாண்டு விழா காணொலியில் வீரமணி பேசியது[9]: “பகவத் கீதை ஏன், எதற்காக?” என்ற சிறிய நூலை வாங்கி நீங்கள் மேலும் விரிவாகப் படித்துத் தெரிந்து கொள்ளலாம் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி காணொலி மூலம் உரையாற்றியது[10], “இது உங்களையெல்லாம், நம்மையெல்லாம் குழப்புகிறது என்று மட்டும் நினைக்காதீர்கள். அர்ஜுனனையே குழப்புகிறது. கீதையிலேயே அதைச் சொல்லியிருக்கின்றான். கீதையினுடைய அத்தியாயம் மூன்று – சுலோகம் இரண்டிலே அர்ஜுனன் சொல்லுகிறான்:
“ஜனார்த்தனா! (ஜனார்த்தனன் என்றால் கிருஷ்ணன்) என் னைக் குழப்பாதே!” கெஞ்சுகிறான் உனது பேச்சுக்கள் அனைத்தும் குழப்பமாய் இருக்கின்றன. குழப்பம் உண்டாவதால் எனது மதி மயங்குகிறது – மதிமயங்காமல் வேறு என்ன செய்யும்?…….”ஏதாவது ஒன்றைச் சொல்லி இதுதான் உயர்ந்தது என்று சொல். நான் அதைப் பின்பற்றுகிறேன். இல்லாவிட்டால் ஆளைவிடு. என்னைப் போட்டு குழப்பு குழப்பு என்று குழப்புகிறாயே! |
உலகம் முழுவதும் எத்தனையோ தத்துவ ஞானிகள் படித்து பொருள் கொடுத்துள்ளாற்கள். ஆனால், இத ஆளுக்கு மட்டும் இப்படி தோன்றுகிறது: விசயம் தெரிந்தவர்கள் இதனைப் படித்தால், இந்த ஆளுக்கு ஒன்றும் தெரியவில்லை என்பதை நன்றாகவே தெரிந்து கொள்வார்கள். அது தான் நடந்து கொண்டிருக்கிறது. அதனால் டான், இந்த ஆளை யாரும் பொருட்படுத்துவது இல்லை. அதனாலேயே, தொடர்ந்து இப்படி குப்பைகளைக் கொட்டி வருவதும் விசித்திரமான விசயமே! |
…….ஒரு சுலோகத்தினைச் சொல்லி முடிக்க 5 நிமிடம் வேண்டும். 700 சுலோகங்களையும் சொல்லி முடிக்க 5 நாட்கள் வேண்டும்……..பயனை எதிர்பார்க்காமல் எவன் கடமையைச் செய்வான்? நாங்கள் வெட்டியாட்களாகவா வந்து உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கிறோம். பேசினால் அதனைக் கேட்பவர்களுக்குக் கொஞ்சமாவது புத்தி வருமே என்பதற்காகத்தான் பேசிக் கொண்டிருக்கிறோமே தவிர, நீ உழைத்துக் கொண்டே இரு, பலனை எதிர்பார்க்காதே, நான் கொடுப்பதை வாங்கிக் கொள். நீயாகக் கேட்காதே, கடமையைச் செய் என்கிற அறிவுரையை எல்லோரும் சொல்லுகிறார்கள். இதை எப்படிச் சொல்லுகிறார்கள் என்று புரியவில்லை?,” என்று பல உளறல்கள் உள்ளன. இங்கு முக்கியமானவை மட்டும் கொடுக்கப்பட்டுள்ளன.
2019ல் வெளியிட்டக் கருத்து: 2019ல் பேசிய / எழுதிய சமாசாரங்களும் ஒன்றும் புதியவை அல்ல. கடந்த 100-150 ஆண்டுகளாக, வெளிநாட்டவர் எழுதி வந்துள்ளதை தொகுத்தவை தான். “இதற்கான நியாயமான காரணங்கள் இதோ”, என்று வீரமணி சொல்வது[11]:
- கீதை ஒரு இந்து மத நூல் மட்டுமல்ல, ஜாதியை ஆதரித்து நியாயப்படுத்தும் நூல்.
“சதுர் வர்ணம் மயா ஸ்ருஷ்டம், குண – கர்ம விபாகச
தஸ்ய கர்த்தாரமபி மாம் வித்த்யா கர்த்தாரர மவ்யயம்”
(அத்தியாயம் 4, சுலோகம் 13)
அதாவது, ‘‘நாலு வருணங்களையும் நானே படைத்தேன். நானே அதனைப் படைத்தவனாக இருந்தாலும் அதனை மாற்றிட அல்லது திருத்தி அமைத்திட என்னால் முடியாது” என்று கூறும் நூல்.
- சூத்திரர்களும், பெண்களும் ‘பாவயோனி‘யில் பிறந்தவர்கள் என்று அவர்களைக் கேவலப்படுத்தும் நூல்.
“மாம் ஹி பார்த்த வ்யபாச்ரித்ய யேஸ்பி ஸ்யு, பா – யோன்ய
ஸத்ரியோ வைச்யாஸ் – ததா சூத்ராஸ் – தேஸ் பியாந்தி பராங்கதிம்”
(அத்தியாயம் 9, சுலோகம் 32)
அதாவது, ‘‘பெண்களும், சூத்திரர்களும் பாவ யோனியில் பிறந்தவர்கள். அதனால் அவர்கள் கீழானவர்கள். “பிராமணன், சத்திரியன், வைசியன் ஆகிய மூன்று வர்ணத்தாருக்கும் தொண்டூழியம் செய்வது ஒன்றே சூத்திரர்களின் இயல்பான கடமையாகும்” என்றும் கூறும் நூல் பகவத் கீதை. மகளிரும் படிக்கும் ஒரு பல்கலைக் கழகத்தில் இப்படி இழிவுபடுத்தும் நூல் இடம்பெறலாமா?
© வேதபிரகாஷ்
29-07-2020
[1] Sedition Committee Report, 1918 found that Bhagawat Gita was inspiring extreme nationalist freedom fighters were resorting to violence by the teachings of Bhagawat Gita and therefore, it had to be proscribed.
[2] ஆங்கிலேய அரசு இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் பகவஹ் கீதைப் படித்து, ஊக்கம் கொண்டு தான், ஆங்கிலேய அதிகாரிகளைக் கொன்று வருகின்றனர் என்று நினைத்துக் கொண்டனர். உண்மையில் அவர்கள் தங்களது வாழ்க்கை நிலையில்லாதது, அதனால், உயிரை தேசத்திற்காக அர்ப்பணிக்கலாம் என்பதனைத் திரித்து விளக்கம் கொண்டது.
[3] Ganachari, Aravind. British official view of Bhagawat Gita as text book for the mental trainng of revolutionary, Proceedings of the Indian History Congress. Vol. 56. Indian History Congress, 1995, pp.601-610.
[4] Bangalore Mirror, Gita propagates violence: Sreedhar, Prathibha Nandakumar, Updated: Feb 28, 2015, 22:21 IST.
[5] https://bangaloremirror.indiatimes.com/opinion/views/bhagavad-gita-violence/articleshow/46414314.cms
[6] Corley, Felix. “RUSSIA: Has «madness» of banning religious publications been stopped?».” Forum, 2012.
[7] Indian Express, Anna University includes Bhagavad Gita in curriculum, irks academics, Published: 26th September 2019 05:23 AM | Last Updated: 26th September 2019 10:00 AM
[8] https://www.newindianexpress.com/cities/chennai/2019/sep/26/anna-university-includes-bhagavad-gita-in-curriculum-irks-academics-2039110.html
[9] கே. வீரமணி, ‘‘பகவத் கீதை ஏன் எதற்காக,” July 28, 2020 • Viduthalai • கழகம்
[10]https://viduthalai.page/article/%E2%80%98%E2%80%98%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%22/JVUSo8.html
[11] கி.வீரமணி, தலைவர், திராவிடர் கழகம் 26.9.2019, முகாம்: பிலெடெல்ஃபியா (அமெரிக்கா). https://www.facebook.com/asiriyarkv/posts/2489306694438478