![]() ![]() |
|
திருமணத்திற்கு முன்பு பெண்கள் உடலுறவு வைத்துக் கொள்வது தொடர்பில், பிரபல திரைப்பட நடிகை குஷ்பு தெரிவித்திருந்த கருத்துக்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த 22 வழக்குகளையும் இந்திய உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
திருமணத்துக்கு முன்னர் பெண்கள் பாலியல் உறவு வைத்துக் கொள்வது தவறில்லை என்று அவர் கூறியிருந்தார். படித்த இளைஞர்கள் தமக்கு மனைவியாக வருபவர்கள் கன்னித் தன்மையுடன் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாமில்லை என்றும் குஷ்பு கருத்து வெளியிட்டிருந்தார். 2005 ஆம் ஆண்டு பத்திரிகை பேட்டி ஒன்றில் அவர் வெளியிட்டிருந்த இந்த கருத்துக்களுக்கு எதிராக அவர் மீது 22 வழக்குகள் தமிழ்நாட்டின் வெவ்வேறு நீதிமன்றங்களில் தொடுக்கப்பட்டிருந்தது. இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் பல்வேறு நீதிமன்றங்களில் குஷ்பு மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதை எதிர்த்து குஷ்பு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்தது.
சென்னை உயர்நீத்மன்ற தீர்ப்பை எதிர்த்து இந்திய உச்சநீதிமன்றத்தில் குஷ்பு மேல்முறையீடு செய்தார். அந்த வழக்கில் தீர்பளித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், குஷ்புவின் மனுவை ஏற்று, இது தொடர்பாக அவர் மீது தாக்கல் செய்யப்பட்ட 22 வழக்குகளையும் தள்ளுபடி செய்து இன்று (புதன்கிழமை) உத்தரவிட்டனர்.
பாலியல் உறவு வைத்துக் கொண்டால் யாரும் கேட்க முடியாது. பெற்றோர்கள் கூட என்ன செய்யவேண்டும் என்பது புரியவில்லை!படித்த இளைஞர்கள் தமக்கு மனைவியாக வருபவர்கள் கன்னித் தன்மையுடன் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாமில்லை: படித்த இளைஞர்கள் என்ன அந்த அளவிற்கு கேடு கெட்டவர்களா என்று தெரியவில்லை. இல்லை, பெண்களும் அத்தகைய சோரம் போனவர்களாக இருந்து, தாலிக் கட்டிக் கொள்ளத் தயார் ஆகிறார்களா என்றும் தெரியவில்லை! அதாவது, ஒன்று பெண் வயதுக்கு வந்தவுடன் கல்யாணம் செய்து கொள்ளவேண்டும், இல்லையென்றால், கற்புள்ளதா இல்லையா என்ற ஆராய்ச்சியோ, சோதனயோ செய்யக் கூடாது!
சென்னை : தமிழ் பெண்களின் கற்பு குறித்து நடிகை குஷ்பு கருத்து தெரிவித்த வழக்கில், சுப்ரீம் கோர்ட்டில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது.
பத்திரிகை ஒன்றிற்கு பேட்டியளித்த நடிகை குஷ்பு, தமிழ் பெண்களின் கற்பு குறித்து தனது கருத்தை தெரிவித்தார். இக்கருத்து, தமிழகத்தில் பெரும் சர்ச்சையாக வெடித்தது. கருத்து தெரிவித்த குஷ்புவை எதிர்த்து தமிழகத்தில் 20க்கும் மேற்பட்ட மாஜிஸ்திரேட் கோர்ட்களில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில் மேட்டூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில், குஷ்பு ஆஜரானார். வழக்கை ரத்து செய்யக் கோரி, சென்னை ஐகோர்ட்டில் அவர் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட், அதை ரத்து செய்ய மறுத்து விட்டது. இதை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது. சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான ‘பெஞ்ச்’ வழக்கை விசாரித்து வந்தது. பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் இவ்வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்படுகிறது.