Posts Tagged ‘அணி’

தமிழ்முறைப்படி சீர்திருத்த முறையில் நடந்த திருமணத்தில் தாலி கட்டப்படாமல், “ரெடிமேட் தாலி” ஏன் அணிவிக்கப்பட்டது?

செப்ரெம்பர் 10, 2013

தமிழ்முறைப்படி சீர்திருத்த முறையில் நடந்த திருமணத்தில் தாலி கட்டப்படாமல், “ரெடிமேட் தாலி”  ஏன் அணிவிக்கப்பட்டது?

முக்கியமான குறிப்பு: சீமான்-கயல்விழி திருமணம் அவர்களது சொந்த விவகாரம். அவர்களுக்கு எல்லா உரிமைகளும் இருக்கின்றன. அவர்கள் எப்பட் வேண்டுமானாலும், எங்கேயாவது, எந்தவிதத்திலும், திருமணம் செய்து கொள்ளலாம். அது அவ்ழர்களது தனிப்பட்ட விவகாரம். அதைப் பற்றி இங்கு விமர்சிக்கப் படவில்லை. “தமிழ்முறைப்படி சீர்திருத்த முறையில் திருமணம் நடந்தது”, என்று ஊடகங்கள் பறைச்சாற்றியுள்ளதால், தமிழகர்கள் உண்மை என்ன அறிந்தாக வேண்டிய நிலை உள்ளது.சீமான் போன்ற நாத்திகக்காரர்கள், பெரியார்-சுயமரியாதை முகமூடிகளை அணிந்து கொண்டு, இந்துக்களை மிக்கக் கடுமையாக விமர்சித்துள்ளாதாலும், தமிழர்களை அவர்களது உண்மையான கலாச்சாரம், நாகரிகம், பண்பாடு, பாரம்பரியம் முதலியவற்றை அறியாமல் செய்து விட்டதாலும், சில உண்மைகளை சொல்ல வேண்டிய அவசியத்தில் கீழ்கண்ட கருத்துகள் சொல்லப்பட்டுள்ளன.
தமிழ்முறைப்படி சீர்திருத்த முறையில் திருமணம் நடந்தது!

தமிழ்முறைப்படி சீர்திருத்த முறையில் திருமணம் நடந்தது!

தமிழ் முறை மற்றும் எது சீர்திருத்த முறை எது: தமிழ்முறை மற்றும் எது சீர்திருத்தமுறை சீமான் – கயல்விழி திருமணம் தமிழ் ஆராய்ச்சியாளர்களை உசுப்பியுள்ளது எனலாம். ஏனெனில் சாதாரணமாக, ஒரு கல்யாணத்தில் என்ன நடக்கவேண்டுமே எல்லாமே நடந்தது. “தீ” தான் வளர்க்கப் படவில்லை. தமிழ்முறைப்படி சீர்திருத்த முறையில் நடந்த கல்யாணம் எனும்போது, எது தமிழ்முறை மற்றும் எது சீர்திருத்தமுறை என்ற கேள்விகள் எழுகின்றன. திராவிட இயக்கத்தின் படி, சுயமரியாதை திருமணங்கள் நடந்தன. ஆனால், அவையெல்லாம் செல்லுபடியாகாது என்ற நிலையும் ஏற்பட்டது. அண்ணாதுரை பதவிக்கு வந்ததும், இந்து திருமணச் சட்டத்தில் ஒரு பிரிவை சேர்த்துக் கொண்டு, திராவிடர்களின் சுயமரியாதையைக் காப்பாற்றினார்! அதாவது தங்களை “இந்துக்கள்” என்று ஒப்புக்கொண்டுதான் மானத்தைக் காப்பாற்றிக் கொண்டார்கள்.

தாலி கட்டுவதா, அணிவிப்பதா, தொங்கவிடுவதா - எது தமிழ்முறை,  சீர்திருத்த முறை  திருமணம்?

தாலி கட்டுவதா, அணிவிப்பதா, தொங்கவிடுவதா – எது தமிழ்முறை, சீர்திருத்த முறை திருமணம்?

பட்டுவேட்டி,  பட்டுசட்டை,  பட்டுசேலை முதலியன எந்த முறை?: நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்– காளிமுத்துவின் மகள் கயல்விழி திருமணம் சென்னையில் 08-09-2013 அன்று காலையில் ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடந்தது.  தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன் தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைத்தார். சீமான் பட்டு வேட்டி, பட்டு சட்டை அணிந்து இருந்தார். மணப்பெண் கயல்விழி தங்கநிற பட்டு சேலை அணிந்து இருந்தார், என்று ஊடகங்கள் விவரித்தன. புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களும் வெளியிட்டப்பட்டன. தமிழ்முறைப்படி சீர்திருத்த முறையில் திருமணம் நடந்தது[1].  ஆனால், இவையெல்லாம் என்று விவரிக்கப்படவில்லை. இவற்றிற்கு பதிலாக கருப்புக் கலரில் உடைகள் அணிந்து கொண்டு புரட்சிகரமான இணையும் நிகழ்ச்சியை செய்திருக்கலாம். ராமருக்கே செருப்பு மாலைகள் போட்ட பகுத்தறிவாளிகள் என்பதனால், பூமாலைகளுக்குப் பதிலாக வேறெந்த மாலைகளை தேர்ந்தெடுத்திருக்கலாம். ஆனால், ஏன் செய்யவில்லை?

10.06க்குதாலிஅணிவித்தது: சீமான் பட்டு, வேட்டி சட்டை அணிந்து காலை 9.20 மணியளவில் மண மேடைக்கு வந்தார். கயல்விழி பொன்நிற பட்டு சேலை அணிந்து 9.45 மணியளவில் மண மேடைக்கு அழைத்து வரப்பட்டார். தமிழ்முறைப்படி சீர்திருத்த முறையில் திருமணம் நடந்தது. அதன்பின் சீமானும்–கயல்விழியும் இணைந்து திருமணத்துக்கு வந்திருந்தவர்களை பார்த்து கை குப்பி வரவேற்றனர். சீமான்–கயல்விழி திருமணத்தை உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன், காலை 10.05 மணிக்கு தமிழில் முதல் எழுத்தான ‘அ’ எழுத்து பொறிக்கப்பட்ட டாலருடன் கூடிய தாலியை சீமான் கையில் எடுத்து கொடுத்தார். பாவம் அப்பொழுது அவரைத் தாங்கலாக இருக்கச் செய்யவேண்டியதாயிற்று. அதை கயல்விழி கழுத்தில் சீமான் அணிவித்தார். அதைத் தொடர்ந்து சீமானும், கயல்விழி இருவரும் மாலை மாற்றிக்கொண்டார்கள். இதெல்லாம் எந்த முறை என்று தெரியவில்லை.

சுபமுகூர்த்த தினத்தில்,  சுபமங்கல நேரத்தில் ஏன்  “புரோசு மயக்கி”  தாலி கட்டி (இல்லை அணிவித்து), மேளதாளத்துடன் திருமணம் நடத்த வேண்டும்?: நாட்களை, மதங்களை, ஏன் ஆண்டுகளையே மாற்றி ஏன் இப்படி திருமணம் நடத்தப்பட வேண்டும்? 08-09-2013 மிக்கவும் சிறந்த சுபமுகூர்த்த நாள் என்பது தமிழகத்தில் உள்ள படிக்காதவனுக்குக் கூட நன்றாகத் தெரியும். அன்று பேருந்துகள், ரெயில்கள், மற்ற வண்டிகள் என்று எல்லாவற்றிலும் திருமணங்களுக்குச் சென்று கொண்டிருந்தனர். ஆகவே, சுபமுகூர்த்த தினத்தில், சுபமங்கல நேரத்தில் ஏன் “புரோசு மயக்கி” தாலிகட்டி, மேளதாளத்துடன் திருமணம் நடத்த வேண்டும் என்ற கேள்வி எழுகின்றது?

  • பெரியார் இப்படித்தான் திருமணம் செய்யவேண்டும் என்று வரையறைத்தாரா?
  • இனமானத் தலைவர் வீரமணி இப்படித்தான் திருமணம் நடத்தி வைக்கிறாரா?
  • முத்தமிழ் வித்தகர், முத்தாரக் கணவன் இப்படித்தான் மணமக்களை சேர்த்து வைக்கிறாரா?

ராகுகாலம் (காலை 4.30 – 6.00) இல்லை; எமகண்டம் (12.00 – 01.30) இல்லை; கரணன் (10.30ம் – 12.00) இல்லை – நல்ல சுபமுகூர்த்த நேரம் = 7.30 – 8.30, ஆனால், அதற்கு மேலும் 10.30 வரை மணப்பெண், மணமகன் நட்சத்திரத்தின் படி நடத்தலாம். சீமானின் ராசி தனுஸ் / தனுசு [Sagittarius], தொடர்புடைய நட்சத்திரங்கள் மூலம், பூராடம், உத்திராடம் (பாதம்-1). தனுசுக்குப் பொறுத்தமான பெண்ராசி – கடகம் என்றால், அது கயல்விழியுடையதா என்று பார்க்கவேண்டும். ஆகவே, கயல்விழியின் நட்சத்திரம் ஹஸ்தம் அல்லது சித்திரை என்றிருக்க வேண்டும். எந்த திராவிட சோதிடர், சுயமரியதை கணியன், அல்லது பகுத்தறிவு பார்ப்பனன் இந்த நேரத்தைக் கணித்துக் கொடுத்தான் என்று தெரியவில்லை.

தாலி கட்டுவதற்கும்,  அணிவிப்பதற்கும் என்ன வித்தியாசம்?: பொதுவாக தாலி கட்டும் போது, மூன்று முடிச்சுகள் போடுவது வழக்கம். ஆனால், தயாராக செய்து வைத்தத் தாலியை, ஏதோ நகையை அணிவிப்பது போல அணிவிப்பது எதில் சேர்த்தி என்று தெரியவில்லை. அதற்கு மேள வாத்தியங்கள் ஏன் முழங்க வேண்டும் என்று தெரியவில்லை. முன்பிருந்த பழக்க-வழக்கங்களை மாற்றவேண்டும் என்றால், புதியதாக மாற்று சடங்குகளை உருவாக்கி அறிமுகப்படுத்த வேண்டும். சுயமரியாதை திருமணங்கள் செல்லாது என்ரபோது, பகுத்தறிவுகள் கலங்கிவிட்டன. நீதிமன்றத் தீர்ப்புகளில் பொதுவாக திருமணங்களில் செய்யப்பட்டுவரும் சடங்குகள் ஏதாவது செய்யப்பட்டன என்று மெய்ப்பித்தால் தான் கணவன் -மனைவி தாம்பத்திய உறவு உரிமைகள் கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டவுடன், திராவிடர்கள் 1962ற்குப் பிறகு ஒன்று-ஓன்றாக சேர்த்துக் கொண்டு விட்டனர். ஐயர், ஹோமம் இல்லாமல் மற்ற எல்லாவற்ரையும் சேர்த்துக் கொண்டுதான், இந்த நாத்திகவாதிகள், பெரியார் குஞ்சுகள், திராவிட வித்தகர்கள் திருமணம் செய்து கொள்கிறார்கள்.

பொய்யும்,  வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணம் என்ப: தொல்காப்பியர், “பொய்யும், வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணம் என்ப” என்று கூறியுள்ளார். அதாவது, களவு மற்றும் கற்பு நெறிகள் பின்பற்ரி வந்த காலத்தில், ஆண்கள் பொய் சொல்வது, இதனால் சமூகத்தில் வழுவு ஏற்படுதல் என்ற்றிருந்த நேரத்தில் ஐயர் / மேலோர் கரணங்களை, தாலிகட்டுவது போன்ற சடங்குமுறைகளை அறிமுகப்படுத்தினர். இவற்றை சங்ககால மக்களும் பின்பற்றி வந்தார்கள். சுமார் 2500 வருடங்களுக்குப் பிறகு தான், அதாவது அவர்கள் “திராவிடர்கள்” ஆனபிறகு, “சுயமரியாதை திருமணம்” என்று வேதமுறை ஒழித்து ஏற்படுத்தப்பட்டது. ஆனால், அவை செல்லாது என்றபோது, மறுபடியும் மந்திரங்கள், தீவளர்த்தல் இன்றி மற்றவை சேர்த்துக் கொள்ளப்பட்டன. அதனால்தான், தாலி நிலைத்தது. ஆக, பெரியார் ஐயரிடம் தோற்றுவிட்டார். இப்பொழுது, கருணாநிதி, வீரமணி, நெட்டுமாறன் போன்ற “ஐயர்கள்” கிளம்பியுள்ளார்கள். இவர்களைத்தான் நான் “திராவிட புரோகிதர்கள்” என்று குறிப்பிட்டுள்ளேன்.

பத்துப்பாட்டு — எட்டுத்தொகை சொல்லாதவை தமிழ் முறையா?: தமிழ் முதல் எழுத்தான “அ” பொறிக்கப்பட்ட டாலருடன் கூடிய தாலியை பழ.நெடுமாறன் எடுத்து கொடுக்க அதை சீமான் கயல்விழி கழுத்தில் அணிவித்தார்[2]. பின்னர் இருவரும் மாலை மாற்றிக் கொண்டனர். சீமான் தாலி கட்டுவதற்கு முன் மேடையில் வைக்கப்பட்டு இருந்த பிரபாகரனின் தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை, தாயார் பானுமதி அம்மாள், காளிமுத்து, மணிவண்ணன் ஆகியோர் படங்களுக்கு மாலை அணிவித்தார். அப்போது மணமக்களும், நாம் தமிழர் கட்சியினரும் ஈழப் போரில் உயிர் நீத்த தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் உறுதி மொழி எடுத்து கொண்டனர். திருமண மேடையில் விடுதலைப்புலி தலைவர் பிரபாகரன் அவரது மனைவி மதிவதனி ஆகியோர் திருமண கோலத்தில் இருக்கும் படம் பொறித்த பிரமாண்ட பேனர் வைக்கப்பட்டு இருந்தது. மேடையின் இடது புறத்தில் பெரியார் புகைப்படமும், வலது புறத்தில் திருவள்ளுவர் படமும் வைக்கப்பட்டு இருந்தது. சீமான் பிரபாகரனுடன் ஒன்றாக இருக்கும் போட்டோக்கள் விழா அரங்கிலும், வெளியிலும் ஏராளமாக வைக்கப்பட்டு இருந்தன[3].

திராவிட்ட புரோகிதர்கள் நடத்தி வைத்துள்ள சில திருமணங்கள்:

மு. ரமேசு _ இ. சிவசங்கரி ஆகியோரது வாழ்க்கை இணைநல ஏற்பு விழாவினை தமிழர் தலைவர் நடத்தி வைத்தார். சட்டமன்ற உறுப்பினர்கள், தொழிலதிபர்கள் உடன் உள்ளனர் (மதுரை, 31.1.2010).

ரா. சுதேஷ்பாபு _ ஸ்வீட்டி ஏஞ்சலின் பிளாரன்ஸ் ஆகியோரின் மண விழாவினை துணை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நடத்தி வைத்தார். தமிழர் தலைவர் கி. வீரமணி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்துரை வழங்கினர் (சென்னை, 1.02.2010).

© வேதபிரகாஷ்

10-09-2013