Archive for the ‘ஹிந்து’ Category

கந்த சஷ்டி கவசம் முதல், கந்த புராணம் வரை: கருப்பு, கருப்பு-சிவப்புக் கூட்டத்தாரின் தாக்குதல்கள் – தேர்தல் நேரத்திலும் தொடர்ந்து இந்துவிரோத திமுக இவ்வாறு ஈடுபடுவது.

ஜனவரி 5, 2021

கந்த சஷ்டி கவசம் முதல், கந்த புராணம் வரை: கருப்பு, கருப்புசிவப்புக் கூட்டத்தாரின் தாக்குதல்கள் –  தேர்தல் நேரத்திலும் தொடர்ந்து இந்துவிரோத திமுக இவ்வாறு ஈடுபடுவது.

நாகர்கோவிலில் கூட்டத்தில்ஹிந்துக்களை வஞ்சிக்கும் கட்சிகளை ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்க வேண்டும்என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது (03-01-2021): நாகர்கோவிலில் திருத்தொண்டர்கள் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடந்த சிவனடியார்கள் கூட்டமைப்பு கூட்டத்தில் ”ஹிந்துக்களை வஞ்சிக்கும் கட்சிகளை ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்க வேண்டும்” என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது[1]. இந்த கூட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிவனடியார்கள் கலந்து கொண்டனர். ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கோயில் சொத்துகளை ஒரு சதுர அடி கூட விடாமல் மீட்டு கோயில்கள் வசம் ஒப்படைப்பது. அடியார்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு மருத்துவம், கல்வி உதவி வழங்க வேண்டும். சைவ மதத்துக்கு எதிராக தவறான கருத்து சொல்பவர்களை மாநிலம் முழுவதும் ஒரே குரலில் எதிர்க்க வேண்டும். ஹிந்துக்களை வஞ்சிக்கும் அரசியல் கட்சிகளை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பது உள்ளிட்ட 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன[2]. இது விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் வகையில் சிறப்பாகத் தெரிகிறது. இத்தகைய கூட்டங்கள் நிறைய நடத்தப் படவேண்டும். அத்தகைய செய்திகள் மக்களைச் சென்றட்டைய வேண்டும். குறிப்பாக, இன்றும் திக-திமுக திராவிடக் கட்சிகளை விசுவாசமாக ஆதரித்து வரும், சில சைவ சமூகத்தினர், இதுவரை நடந்துள்ள, நடந்து வரும் தீமைகளைக் கருத்திற்க் கொண்டு மாற வேண்டும்.

நெல்லையில் எதிர்ப்பு தெரிவித்த இந்து அமைப்பினர்: கந்தபுராண பாடலை திமுக கட்சி பாடல் போல் மாற்றி இழிவு படுத்தியதைக் கண்டித்து நெல்லை டவுனில் இந்து முன்னணியினர்,  சிவனடியார்கள், பாரதிய ஜனதா கட்சி உள்ளிட்ட இந்து அமைப்புகள் இணைந்து திருமுறைகள் பாடி பெருந்திரல் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்[3]. வான்முகில் வழாது பெய்க என்ற கந்தபுராண வாழ்த்து பாடலை இழிவுபடுத்தும் விதமாக சமூக வலைதளங்களில் திமுக தேர்தல் பிரச்சார பாடல் போல மாற்றி பதிவேற்றம் செய்த நபர்களையும் இறை வழிபாட்டு பாடல் கட்சி பாடல் போல் உருவாக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் நெல்லை டவுன் வாகையடி முனையில் இந்து முன்னணி சார்பில் பெருந்திரல் பிரார்த்தனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த பிரார்த்தனை கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சி உள்ளிட்ட இந்து அமைப்புகள் மற்றும் சிவனடியார்கள் திருக்கூட்டம் இணைந்து தேவார திருவாசக திருமுறை பாடல்கள் பாடி இறைவனை வழிபட்டு பெருந்திரள் பிரார்த்தனையில் ஈடுபட்டனர் அதனைத் தொடர்ந்து கட்சி பாடலாக  மாற்றம் செய்து கந்தபுராண வாழ்த்துப் பாடலை இழிவுபடுத்திய நபர்கள் மீதும் சமூக வலைதளங்களில் அதை பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது[4].

2020ல் காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் கருப்பர் கூட்டத்தைக் கண்டித்தது: இந்து கடவுள்களை அவமதித்தால் நாக்கை துண்டிக்க பயப்பட தேவையில்லை என காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் 22-07-2020 அன்று தெரிவித்துள்ளார்[5]. கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கறுப்பர் கூட்ட யூ ட்யூப் சேனலுக்கு கண்டனம் தெரிவித்தார்.  தமிழகத்தில் இது போன்ற பேச்சுகள் நிறுத்தப்பட வேண்டும் என்றும் இந்து மதத்தை இது போன்று இழிவுபடுத்தும் செயல்களில் யாராவது செயல்பட்டால் அவர்களின் நாக்கை துண்டிப்பதற்கும் கூட பயப்பட தேவையில்லை எனவும் ஆதீனம் பேசினார்[6].  உண்மையில், அவர் ஆதங்கத்துடன், பேசியுள்ளதை நினைவு கூறவேண்டும். தெய்வநம்பிக்கை ஆழமாக-உறுதியாக இருப்பது நல்லது தான், ஆனால், எல்லாவற்றையும் கடவுள் பார்த்துக் கொள்வார் என்று சும்மா இருக்க முடியாது. தேர்தல், ஓட்டு, ஓட்டுவங்கி, ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், இத்தகைய இந்துமத-தூஷணங்களை செய்து வருவதால், நிச்சயமாக, இந்துக்கள் அதே முறையில், சரியான பதிலை சொல்லியாக வேண்டும். அவர்களுக்கு இந்து-ஆதரவு ஆட்சித் தேவையா அல்லது இந்து-விரோத ஆட்சி வேண்டுமா என்று இந்துக்கள் தான் தீர்மானிக்க வேண்டிய நிலையுள்ளது. “ஆவணன் ஆண்டால் என்ன, ராமன் ஆண்டால் என்ன” என்று இருந்தால், இதே இந்துவிரோத நிலைத் தான் தொடரும்.

2019ல் சில மடாதிபதிகள் பேசியது: சென்னை சேப்பாக்கத்தில் 12-04-2019 அன்று ஆதீனங்கள், துறவிகள், மடாதிபதிகள் என 11 பேர், தங்களது தேர்தல் நிலைப்பாட்டை அறிவித்தனர். அப்போது பேசிய பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாசல அடிகள், இந்து மதத்திற்கு எதிராக செயல்படுபவர்களுக்கு பாடம் புகட்டும் வகையில், மக்கள் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்[7]. யார் இந்து மத தொண்டர்கள் என தங்களை அறிவிக்கிறார்களோ, குங்குமம் வைக்கிறார்களோ, அவர்களுக்கே ஆதரவளிக்க வேண்டும் எனவும், அவர் குறிப்பிட்டார்[8]. பின்னர் பேசிய கோவை காமாட்சிபுரி ஆதீனம் சாக்தஸ்ரீ சிவலிங்கேஸ்வரர், தெய்வபக்தி நிறைந்த தமிழகத்தில் ஆன்மிகத்திற்கு எதிராக தலைவர்கள் பேசுவதற்கு கண்டனம் தெரிவித்தார். இதே நிலை, இப்பொழுது 2021லும் தொடர வேண்டும். இந்து அமைப்புகள் மறுபடியும் இத்தகைய கூட்டங்களைக் கூட்ட வேண்டும், இணதள பிரச்சாரங்களும் நடந்து வருவதால், அத்தகைய முறைகளையும் கையாள வேண்டும். சைவ மடங்கள், உழவாரப் பணி குழுக்கள் முதலியவற்றையும், அதில் ஈடுபடுத்தப் படவேண்டும்.

இந்துக்கள் கவனிக்க வேண்டியது, செய்ய வேண்டியது முதலியன: மேற்குறிப்பிட்ட நிகழ்வுகள், பின்னணி. அரசியல், அதிகாரம் போன்ற காரணிகளை உன்னிப்பாக அலசிய பின்னர் கீழ்காணும் அம்சங்கள் கொடுக்கப் படுக்கின்றன:

  1. முன்பு ஆண்டாள், இப்பொழுது முருகன் என்று திட்டம் போட்டு, இந்துக்களின் மங்களைப் புண்படுத்தி வருவது தெரிகிறது.
  2. உண்மையான நாத்திகம் என்றால், கடவுள் இல்லை என்பதும் உண்மையான கொள்கையாக இருக்க வேண்டும். ஆனால், நாத்திகர் என்று பிரகடனப் படுத்திக் கொண்டு, இந்து-அல்லாத கடவுளர்களை விமர்சிப்பது, தூஷிப்பது கிடையாது. எனவே, அவர்களது நாத்திகம், இந்துவிரோத நாத்திகம் ஆகிறது.
  3. அதனால், தான் கிறிஸ்தவ-முஸ்லிம் கோஷ்டிகள் இவர்களது மேடைகளில் பிரசங்கம் செய்கிறார்கள் மற்றும் கிறிஸ்தவ-முஸ்லிம் மேடைகளில், இந்துவிரோத நாத்திகர்-திராவிடத்துவ துவேசிகள் பேசி வருகிறார்கள்.
  4. கஞ்சி குடித்தும், கேக்-வெட்டி நக்கி சாப்பிட்டும், கிறிஸ்தவ-முஸ்லிம்களுக்கு ஜால்றா போட்டு வருகிறார்கள், பாராட்டி பேசுகிறார்கள்.
  5. புகார் கொடுத்தாலும், எப்.ஐ.ஆர் போட்டாலும், சட்டப் படி, இவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. அவையெல்லாம் அப்படியே காலாவதியாகின்றன,
  6. அதனால் தான், செய்த குற்றங்களையே, திரும்பச் செய்து வருகிறார்கள். சட்டப் படி, தங்களை ஒன்றும் செய்ய முடியாது என்ற ரீதியில் அதே தூஷணங்களை செய்து வருகிறார்கள்.
  7. ஆகவே, சட்டப் படி நடவடிக்கை எடுக்க வைத்து, ஒருவனையாவது, தண்டனைக்கு உட்பத்த வைத்து, தண்டிக்கப் பட்டால், மற்றவர்களுக்கு பாடமாக்க இருக்கும், அச்சம் ஏற்படும்.
  8. இல்லையென்றால், பயமில்லாமல் போகும், “காலையில் கைது, மாலையில் விடுதலை,” போன்ற விளையாட்டாகி ஆகிவிடும்.
  9. தேர்தல் நேரத்தில் இவ்வாறு செய்யும் போது, அத்தகைய தேர்தல் சட்டங்கள் பிரிவுகளின் கீழ், உரிய சட்டமீறல்களை குறிப்பிட்டு, ஆதாரங்களுடன் புகார் கொடுத்தால், தேர்தலில் நிற்கமுடியாத நிலையையும் உண்டாக்கலாம்.
  10. தமிழகத்தில் இருக்கும் சுமார் 300 இந்து மடங்கள், அமைப்புகள் முதலியவை, இதில் ஒன்று பட்டு செயல்படவேண்டும்.

© வேதபிரகாஷ்

05-01-2021


[1] தினமலர், ஹிந்துக்களை வஞ்சிக்கும்கட்சிகளை ஆட்சிக்கு வரவிடக்கூடாது: சிவனடியார்கள் தீர்மானம், Added : ஜன 04, 2021 01:34

[2] https://www.dinamalar.com/news_detail.asp?id=2683101

[3] தினமலர், நெல்லை டவுணில் திமுகவைக் கண்டித்து இந்து அமைப்பினர் போராட்டம், பதிவு செய்த நாள் : 03 ஜனவரி 2021 18:44.

[4] http://www.dinamalarnellai.com/web/districtnews/52654

[5] தினத்தந்தி, இந்து கடவுள்களை அவமதித்தால் நாக்கை துண்டியுங்கள்காமாட்சிபுரி ஆதீனம், பதிவு : ஜூலை 23, 2020, 10:40 PM

[6] https://www.thanthitv.com/News/TamilNadu/2020/07/23224038/1543722/Hindu-Gods-Kamtchi-aadenam.vpf.vpf

[7] நியூஸ்.7.செனல், இந்து மதத்திற்கு விரோதமாக இருக்கும் சக்திகளுக்கு மக்கள் வாக்களிக்க கூடாது” : தமிழக இந்து துறவிகள் குழு, April 13, 2019 1 view Posted By : manoj.b, Authors. https://ns7.tv/ta/q7bcv9

[8]  https://ns7.tv/ta/q7bcv9  [now snapshot view is available accessed on 05-01-2021]

ஸ்டாலினை பசு முட்ட வந்ததும், குங்குமத்தை அழித்ததும், இப்பொழுது சனியைப் பற்றி பேசும் ஸ்டாலினும், வாய்ச்சொல் கேட்டு அஞ்சும் கனிமொழியும்! (3)

ஜனவரி 16, 2018

ஸ்டாலினை பசு முட்ட வந்ததும், குங்குமத்தை அழித்ததும், இப்பொழுது சனியைப் பற்றி பேசும் ஸ்டாலினும், வாய்ச்சொல் கேட்டு அஞ்சும் கனிமொழியும்! (3)

Kanimozhi confession -13-01-2018-2

10 ஆண்டுகளுக்கு முன்பு (2008) பெரியாரை செருப்பால் அடிப்பேன் என்றுக் கூறியதை பொறுத்து ரௌத்திரம் பழகாததன் விளைவை தான் தற்போது அனுபவிப்பது (2018): ஆரூர் புதியவனின் “சொற்களால் ஒரு சுதந்திரப் போர்” நூல் வெளியீட்டு விழா சென்னை கவிக்கோ அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பங்கேற்ற கனிமொழி எம்.பி நூலை வெளியிட்டதுடன், சிறப்புரை நிகழ்த்தினார். ஜி.எஸ்.டி., முத்தலாக் என எல்லா திசைகளிலும் மக்களை ஒடுக்கும், அச்சுறுத்தும் நிகழ்வுகள் நடைபெறுவதாக குறிப்பிட்ட கனிமொழி, இவைகள் குறித்து பேசாததன் விளைவாக நமது மௌனமே நம்மை அழித்துவிடும் என்ற நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தமிழன் ரௌத்திரம் பழகுவதை நிறுத்திக் கொண்டதால் தான் இந்த நிலையில் தமிழன் உள்ளதாகக் கூறிய கனிமொழி, 10 ஆண்டுகளுக்கு முன்பு ஒருவர் பெரியாரை செருப்பால் அடிப்பேன் என்றுக் கூறியதை நாம் பொறுத்துக் கொண்டு ரௌத்திரம் பழகாததன் விளைவை தான் தற்போது அனுபவித்து வருவதாக அதே நூல் வெளியீட்டு விழாவில் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டதை நினைவுக்கூர்ந்து அது சரியான கருத்து என்றார். சுயமரியாதையை இழந்துவிட்டு ஏதுமில்லை என்றுக் கூறிய கனிமொழி, நம் வாழ்க்கையில் வெள்ளை என்ற ஒளி உருவாக வேண்டும் எனில் நாம் கருப்பில் இருந்துதான் ஆரம்பிக்க வேண்டும் என்றும், பெரியார் என்ற கருப்புச்சட்டை இல்லாமல் விடியல் இல்லை என்று குறிப்பிட்டார்.

Kanimozhi confession -13-01-2018-1

ஆண்டாள் எந்த சாதியில் பிறந்திருந்தால் என்ன?: ஜாதி என்ற சொல்லையே அழிக்க வேண்டும், ஜாதியே இல்லாத நிலையை உருவாக்குவதே திராவிட அரசியலின் அடிநாதம் என்றுக் கூறிய கனிமொழி, ஜாதியைக் கொண்டு ஒருவன் ஒருவரை ஒடுக்கினால் அதையே ஆயுதமாக தூக்க வேண்டியது அவசியமாகிறது என்றும் குறிப்பிட்டார். நாம் தூக்க வேண்டிய ஆயுதம் எதுவென தீர்மானிப்பது எதிரியே என்றும் கனிமொழி தெரிவித்தார். ஜாதி இல்லை என்று எல்லோரும் சொல்கிறோம், எந்த ஜாதியில் பிறந்தவரும் என்னை வந்து சேரலாம் என்று கண்ணபிரான் கூறுவதாக கீதை சொல்கிறது எனில், ஆண்டாள் எந்த சாதியில் பிறந்திருந்தால் என்ன? ஆண்டாள் பிறப்பால் தலித்தாக இருந்திருக்கலாம், எந்த சாதியாகவும் இருந்திருக்கலாம் எதுவாய் இருந்தால் என்ன? அதில் என்ன பிரச்சனை எனவும் கனிமொழி குறிப்பிட்டார். இப்படிப்பட்ட விவாதங்களை நிகழ்த்தவில்லை எனில், பயந்திருப்போம் எனில், நிச்சயமாக தமிழினம் சுயமரியாதை அற்ற இனமாக, அடையாளம் அற்ற இனமாக, எதையெல்லாம் போராடி சாதித்தோமோ அதையெல்லாம் இழந்துவிடும் இனமாக மாறிவிடும் சூழல் நிலவுவதாக கனிமொழி தெரிவித்தார்.

Kanimozhi confession -13-01-2018-3

கடவுளை எதிர்த்து பேசிப்பேசி தான் கருணாநிதிக்கு பேசமுடியாமல் போய் விட்டதாக சிலர் பேசுவதாக வேதனை தெரிவித்த கனிமொழி: கடவுளை எதிர்த்து பேசிப்பேசி தான் கருணாநிதிக்கு பேசமுடியாமல் போய் விட்டதாக சிலர் பேசுவதாக வேதனை தெரிவித்த கனிமொழி, உடல்நலம் சரியில்லாதபோது உதவியாளர் வைத்துவிடும் விபூதியைக் கூட அழித்துவிடுபவர் கருணாநிதி என்று தெரிவித்தார். தனது தாயார் கோவிலுக்குச் செல்வது குறித்து சிலர் கேட்பதாகவும், தனது தாயார் கோவிலுக்கு செல்வதற்கான உரிமைக்காகவும் தான் போராடுவதாக தெரிவித்தார்[1]. நிகழ்வின் போது தனது வீட்டில் நடைபெற்ற சம்பவம் ஒன்றைக் குறிப்பிட்டு கனிமொழி பேசினார். “இப்போதும் இருவரும் (கருணாநிதி, கனிமொழி) கடவுளை மறுப்பது ஏன்?” என தனது தாயார் கேட்டதாகவும், “தலைவர் (கருணாநிதி) தற்போது (கடவுள் விடயத்தில்) தனது கருத்தை சிறிது மாற்றியிருப்பார்” என்று தாயார் குறிப்பிட்டதாகவும், இது தொடர்பாக கருணாநிதியிடம் “கடவுள் இருக்கிறாரா?” என கேட்டபோது, வாய் பேசமுடியாத நிலையில், “இல்லை” என கருணாநிதி தலையசைத்ததாகவும் கனிமொழி குறிப்பிட்டார்[2]. தனது வீட்டில் நிகழ்ந்த சம்பவத்தை நினைவுக்கூர்ந்த கனிமொழி, கருணாநிதியின் மவுனம் கூட நாத்திகம் பேசும் என்று குறிப்பிட்டார்[3]. மேலும், எதை வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள், திமுக நாத்திகம் பேசுவதை நிறுத்தாது என்றும் அவர் உறுதிப்பட தெரிவித்தார்[4].

 

15-01-2018 -Arur Pudhiyavan, book release.215-01-2018 கனிமொழி பேச்சு: ஆரூர் புதியவனின்[5]  புத்தக வெளியீட்டின் போது, இவ்வாறு கனிமொழி பேசியது பல உண்மைகளை எடுத்துக் காட்டுகிறது. ராம கோபாலன், “இவர்கள் எல்லோருமே, தங்களது பெண்டாட்டிகளை வைத்து சாமி கும்பிடுகின்ற கூட்டம்”, என்று பேசியதுண்டு. அதை கனிமொழி இப்பொழுது ஒப்புக் கொண்டுள்ளார் என்றாகிறது. அம்மாவின் “சாமி கும்பிடுகின்ற உரிமைக்கு”. இவர் என்ன போராடுவது? அப்பொழுது அவ்வுரிமையை யார் பறித்தது என்ற கேள்வி எழுகின்றது. நாத்திக துணைவன் அவ்வாறு தடுத்துக் கொண்டிருந்தால், அது அவனது ஆணாதிக்கத்தைத் தான் எடுத்துக் காட்டுகிறது. 93 வயதாகியும் துணைவியை ஆட்டிப் படைக்கிறார் என்றால், அதை மகள் எடுத்துக் கஆட்டவேண்டும். மாறாக அவரது உரிமைக்குப் போராடுகிறேன் என்றால், தந்தையை எதிர்த்தாப் போராடப் போகிறார்?

15-01-2018 -Arur Pudhiyavan, book release

கடவுளை எதிர்த்து பேசிப்பேசி தான் கருணாநிதிக்கு பேசமுடியாமல் போய் விட்டது: “கடவுளை எதிர்த்து பேசிப்பேசி தான் கருணாநிதிக்கு பேசமுடியாமல் போய் விட்டதாக சிலர் பேசுவதாக வேதனை தெரிவித்த கனிமொழி, உடல்நலம் சரியில்லாதபோது உதவியாளர் வைத்துவிடும் விபூதியைக் கூட அழித்துவிடுபவர் கருணாநிதி”, என்ற போதும் அவரது மனம், மனசாட்சி உறுத்துவதை அறியலாம்.  உதவியாளர் விபூதியை வைப்பதற்கு கருணாநிதி ஏன் அனுமதிக்க வேண்டும், பிறகு ஏன் அழிக்க வேண்டும்? அப்படியென்றால், வைத்தால் ஏதோ பலன் கிடைக்கும் அன்ற ஆசை, நப்பாசை உள்ளுக்குள் இருக்கிறது என்றாகிறது. முதல் நாத்திகப் பழமான, கனிக்கு அத்தகைய நம்பிக்கையே இருக்கக் கூடாது ஆயிற்றே? யாரோ சொன்னார்கள் என்றால் பலித்து விடுமா என்ன? அதென்ன சாபமா, செய்வினையா, திருஷ்டியா, ….அதையெல்லாம் நம்ப வேண்டிய அவசியமே இல்லையே? பிறகு, அப்படி நம்பி வருத்தப் படுவது எடைக் காட்டுகிறது? வைத்த விபூதியையேத் துடைத்துப் போடும் அளவிற்கு நாத்திகம்-பகுத்தறிவு ஊறியிருக்கும் போது, இதெல்லாம் ஒரு விசயமா என்ன?

15-01-2018 - Kanimozhi on atheism-regrets about the comments on karu

கருணாநிதியின் மவுனம் கூட நாத்திகம் பேசும்: “கடவுள் விடயத்தில் தனது கருத்தை சிறிது மாற்றியிருப்பார்” என்று தாயார் குறிப்பிட்டதாகவும், இது தொடர்பாக கருணாநிதியிடம் “கடவுள் இருக்கிறாரா?” என கேட்டபோது, வாய் பேசமுடியாத நிலையில், “இல்லை” என கருணாநிதி தலையசைத்ததாகவும் கனிமொழி குறிப்பிட்டார்[6]. தனது வீட்டில் நிகழ்ந்த சம்பவத்தை நினைவுக்கூர்ந்த கனிமொழி, கருணாநிதியின் மவுனம் கூட நாத்திகம் பேசும் என்று கனிமொழி குறிப்பிட்டார்[7]. அதாவது ராஜாத்தி அம்மாள்  கோவில்-கோவிலாக சென்று, கும்பிட்டு, அர்ச்சனை செய்து, பிரசாதம் வாங்கி வருவார், புருடன் சாப்பிடுவான் என்று, ஆனால் சாப்பிட்டப் பட்டதா-இல்லையா என்பது ரகசியம். பிறகு, சாய் பாபா வந்தபோது ஏன் காலில் விழுந்து கும்பிட வேண்டும்? எப்படியோ கனிமொழியின் மனம், மனசாட்சி உறுத்த ஆரம்பித்து விட்டது. அதனால், இந்த அளவுக்கு விளக்கம் கொடுக்க வேண்டியதாக உள்ளது போலும்.

© வேதபிரகாஷ்

16-01-2018

15-01-2018 - Kanimozhi on atheism

[1] நியூஸ்..7.செய்தி, எதை வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள், திமுக நாத்திகம் பேசுவதை நிறுத்தாது!” : கனிமொழி, January 15, 2018. Last Modified திங்கள், 15 ஜனவரி 2018 (23:00 IST).

[2] http://ns7.tv/ta/tamil-news/tamilnadu/15/1/2018/kanimozhi-mp-karunanidhi-athist-philosaphy

[3] தமிழ்.வெப்.துனியா, என்ன ஆனாலும் திமுக நாத்திகம் பேசுவதை நிறுத்தாது: கனிமொழி, January 15, 2018.

[4] http://tamil.webdunia.com/article/regional-tamil-news/we-don-t-stop-atheism-speech-says-kanimozhi-118011500020_1.html

[5] பேராசிரியர் முனைவர் ஹாஜா கனி, சென்னை மேடவாக்கம் காயிதேமில்லத் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர், தமுமுக வின் மாநிலச் செயலாளர், மக்கள் உரிமை வார இதழின் இணை ஆசிரியர்.

[6] http://ns7.tv/ta/tamil-news/tamilnadu/15/1/2018/kanimozhi-mp-karunanidhi-athist-philosaphy

[7] தமிழ்.வெப்.துனியா, என்ன ஆனாலும் திமுக நாத்திகம் பேசுவதை நிறுத்தாது: கனிமொழி, January 15, 2018.

 

துருப்பிடித்த ஜெயலலிதாவின் கட்சிக்கு தங்கமுலாம் பூசும் விகடனின் மெகா முயற்சி! – முரசொலியில் கருணாநிதியின் “பாப்பாத்தி” வசவு!

ஏப்ரல் 7, 2016

கரு - முரசொலி - அம்மா விமர்சனம்துருப்பிடித்த ஜெயலலிதாவின் கட்சிக்கு தங்கமுலாம் பூசும் விகடனின் மெகா முயற்சி! முரசொலி கட்டுரை (2008) – – முரசொலியில் கருணாநிதியின் “பாப்பாத்தி” வசவு!

குறிப்பு: முரசொலி, விடுதலை, குடி அரசு போன்ற நாளிதழ்களில்  அதன் ஆசிரியர்கள்  கருணாநிதி, ஈவேரா, வீரமணி, போன்றோர் தாங்களாகவோ, புனைப்பெயரிலோ அல்லது வேறு எவரையாவது வைத்தோ தூஷண கட்டுரைகளை வெளியிடுவது வழக்கம். அம்மாதிரி, ஜெயலலிதவை வசவு பாடி வெளியிட்ட கட்டுரை இது:

தி.மு.கழக ஆட்சியை அகற்றிவிட்டு அந்த இடத்தில் மீண்டும் பாப்பாத்தி அம்மாளை அமர வைக்கவேண்டும் என்று துடியாய்த் துடிக்கின்றன அக்கிரகாரத்துப் பத்திரிகைகள்.

இந்த வாரத்து ஆனந்த விகடனில் ‘தி.மு.க.வின் 10 மெகா தவறுகள்’ என்ற தலைப்பில் – தி.மு.க.வையும் கலைஞரையும் கேலி செய்து ஒரு கட்டுரை வெளியிடப் பட்டிருக்கிறது. கட்டுரையை எழுதியிருப்பவர் ப.திருமாவேலன். (இவர் பார்ப்பனரல்ல)

பார்ப்பன நிர்வாகம் – ஆசிரியர் குழு இட்ட கட்டளையையேற்று – அல்லது ஆலோசனையை ஏற்று – 10 மெகா தவறுகள் என்று பட்டியலிட்டிருக்கிறார் அவர். முதல் தவறு என்று அவர் கண்டுபிடித்திருப்பது:-

தி.மு.க.வினர் அடி மட்டத் தொண்டன் முதல் தினமும் அடிக்கடி தலைமைக் கழகம் வந்து போகும் அமைச்சர்கள் வரை அத்தனை பேருக்கும் உள்ள சந்தேகம் “யார் தங்களுக்குத் தலைமை தாங்கப் போகும் அடுத்த தலைவர்” என்பதுதான்

– என்கிறார் கட்டுரையாளர்.

தி.மு.கழகம் அண்ணா அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட 1949ம் ஆண்டு முதல் இன்று வரையில் உள்கட்சித் தேர்தல்களை – 12 முறை நடத்தி இருக்கிறது. 13வது தேர்தல் இப்போது நடந்து கொண்டிருக்கிறது.

கிளைக்கழகத்திலிருந்து – மாவட்டக் கழகம் – பொதுக்குழு வரையில் அனைத்து மட்டங்களுக்கான தேர்தல்களும் ஜனநாயக முறைப்படி உறுப்பினர்கள் வாக்களிப்பின் மூலம் நடைபெற்று வருகிறது.

கரு காங்கிரசின் கூத்தாடி - குமுதம்அண்ணா காலம் வரையில் – அதாவது 1969 வரையில் கட்சியில் பொதுச் செயலாளர் பதவி மட்டுமே இருந்து வந்தது. 1956 வரையில் அண்ணாவே பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பொறுப்பு வகித்தார். 1956ல் அண்ணாவின் ஆதரவோடு நாவலர் இரா.நெடுஞ்செழியன் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1969ல் கட்சியில் தலைவர் பதவி புதிதாக உருவாக்கப்பட்டது. கலைஞர் தலைவர் ஆனார்; நாவலர் பொதுச் செயலாளராக நீடித்தார்.

1969க்குப் பிறகு இன்று வரையிலும் நடந்த ஒவ்வொரு தேர்தலிலும் கழகத்தின் தலைவராக கலைஞர் தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறார்.

நாவலர் – அ.தி.மு.க.வில் சேர்ந்த பிறகு கட்சியின் பொதுச் செயலாளராக இனமானப் பேராசிரியர் தேர்வு செய்யப்பட்டார். இன்று வரையில் – ஒவ்வொரு தேர்தலிலும் தேர்ந் தெடுக்கப்பட்டு பொதுச் செயலாளராகப் பணியாற்றி வருகிறார்.

ஆகவே தி.மு.க.வில் அடுத்த தலைவர் யார் என்ற கேள்வியே எழ இடமில்லை.

தேர்தலில் போட்டியிட்டு – பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படுபவர்களே – தலைவர் ஆகப் பொறுப்பேற்க முடியும்.

இது தி.மு.க.வின் அடிமட்டத் தொண்டனிலிருந்து, அமைச்சர் பெருமக்கள் வரையில் எல்லோருக்கும் தெரியும்.

ஆனந்தவிகடன் போல –

வாசன்

வாசன் மகன் பாலசுப்பிரமணியம்

பாலசுப்பிரமணியத்தின் மகன்

சீனிவாசன் என்று

எழுதத் தெரியுமோ – தெரியாதோ – ஆசிரியராக வந்து விடுவதுபோல – தி.மு.கழகத்தில் தலைவர் ஆகிவிட முடியாது.

இப்போது – ஒன்றியத் தேர்தல்கள் முடிந்து – மாவட்டச் செயலாளர்கள் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முறையாக இந்தத் தேர்தல்கள் நடந்து முடிந்த பிறகு – பொதுக்குழு உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டவர்கள் மூலம் அடுத்த தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார். இன்னும் ஓரிரு மாதங்கள் காத்திருந்தால் – புதிய பொதுக்குழு கூடி தி.மு.கழகத்தின் தலைவரைத் தேர்ந்தெடுப்பார்கள்.

இதுவெல்லாம் விகடனுக்குத் தெரியாதா என்றால், தெரியும்!

உட்கட்சித் தேர்தல்களையே நடத்தாது – தனது இஷ்டம் போல கிளைச் செயலாளர் – மாவட்டச் செயலாளர், தலைமைக் கழகச் செயலாளர் வரையில் பந்தாடுவார் ஜெயலலிதா! நேற்று இருந்தவர் இன்றில்லை என்கிற அளவுக்கு – கட்சியின் சகல மட்டங்களுக்கும் தனது விருப்பு வெறுப்புக்கேற்ப – நிர்வாகிகளை நியமனம் என்ற பேரால் திணிப்பார் அல்லது மிதிப்பார். பொதுக்குழு உறுப்பினர்கள் யார் என்று அ.தி.மு.க.வில் யாருக்குமே தெரியாது. ஜெயலலிதா இஷ்டப்பட்டு பொதுக்குழு என்று ஒன்றினைக் கூட்டுவார். அதிலே கலந்து கொள்ள அவர் யார் யாருக்கு அழைப்பு அனுப்புகிறாரோ – அவர்கள் மட்டும்தான் பொதுக்குழு உறுப்பினர்கள்.

பொதுக்குழுவுக்கு வரலாம். எதுபற்றியும் எவரும் பேச முடியாது. ஜெயலலிதா ஏழு நிமிடமோ – பத்து நிமிடமோ பேசுவார். கைதட்டலாம். வயிறு நிறைய பிரியாணி விருந்து சாப்பிடலாம்!

அ.தி.மு.க.வின் அடுத்த தலைவர்

யார் என்று கேட்கக்கூட

யாருக்கும்

தைரியம் கிடையாது.

அவர்களாவது கட்சிக்காரர்கள் – ஜெயலலிதாவைக் கண்டு நடுங்கி – ஒடுங்கிக் கிடப்பது பற்றி ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.

ஆனால் விகடன் போன்ற

வீராதி வீர ஏடுகள்கூட,

ஜெயலலிதாவின் 10 மெகா தவறுகள் என்று விமர்சனமோ; அ.தி.மு.க.வின் அடுத்த தலைவர் யார்? ஜெயலலிதாவா? சசிகலாவா? தினகரனா? – என்று கேள்வியோ எழுதுவதில்லையே; ஏன்?

ஜெயலலிதா

அவரே மார்தட்டிக்

கொண்டதுபோல

பாப்பாத்தி.

விகடன் சீனுவாச அய்யரின் சாதியைச் சேர்ந்தவர். அதனால் – அவர் இடறி விழுந்தாலும் அடடா; என்ன அழகாக விழுந்தார் என்று எழுதுவார்கள்! கோடநாட்டில் போய் மாதக்கணக்கில் ஓய்வு என்ற பேரில் ஒளிந்து கிடந்தாலும், அடடா; எப்பேர்ப்பட்ட ஓய்வு? எப்படிப்பட்ட தூக்கம்? என்ன இனிமையான குறட்டை?

– என்று பார்ப்பன பக்திபரவசத்துடன் – உடலெல்லாம் புல்லரிக்க – புளகாங்கிதத்தோடு போற்றி எழுதுவார்கள்!

கரு முஸ்லிம் லீக், குழுக்களுடன்2. ஜெயலலிதாவின் போயஸ் தோட்டத்துக் குடும்பத்தில் எத்தனை எத்தனையோ சண்டைகள் நடக்கும். வளர்ப்பு மகனையே கஞ்சா வழக்கில் கைது செய்வார்கள்; தினகரனா, மகாதேவனா என்று சிண்டு பிடிச் சண்டை நடக்கும்; சசிகலா வேண்டும்; சசிகலாவின் கணவர் வேண்டாதவர் என்று புழுதி மாயம் செய்யப்படும். சசிகலாவின் கணவருக்கு வேண்டியவர் என்பதாலேயே ஒரு பெண்ணை கஞ்சா வழக்கில் கைது செய்து – அவரிடமிருந்து பல லட்சம் ரூபாய்கள் பறிமுதல் செய்யப்படும்! சசிகலாவா? இளவரசியா? என்று புதிய போர் மூளும். இந்த மன்னார்குடிக் குடும்பத்து விவகாரங்களால் – ஜெயலலிதாவின் பெரும்பகுதி கவனம் அதிலேயே செலவாகிறது – என்று குற்றம் சொல்லாது விகடன் – காரணம் என்ன? ஜெயலலிதா பாப்பாத்தி ஆச்சே!

கரு - பாஜக கூட்டு - முஸ்லிம் லீக்3. ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் மந்திரிகள் அடிக்கடி பதவி பறிக்கப்பட்டார்கள்; ஒரு மந்திரி பதவி ஏற்ற மூன்றாம் நாளே கல்தா கொடுக்கப்பட்டார். ஒரு மந்திரி கன்னத்தில் போட்டுக் கொள்வதாலேயே பதவியில் நீடித்தார். ஜெயலலிதாவுக்கு வேண்டியவர் என்பதால் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிக்கு புதிய பதவி வீரப்பன் பேரால் உருவாக்கப்படும். ஜெயலலிதாவுக்கு வேண்டியவர் என்பதால் சட்டசபைச் செயலாளர் பதவி நீட்டிப்புச் செய்தபடியே இருக்கும். ஜெயலலிதாவுக்கு வேண்டியவர் என்பதால் தேர்தல் அதிகாரியின் பதவி ஆயுட்கால பதவியாக நீட்டிக்கப்படும் – அதையெல்லாம் சுட்டிக்காட்டி ‘சீனியர் சபா’ என்று தவறுப் பட்டியல் போடாது விகடன்!

காரணம்

ஜெயலலிதா

பாப்பாத்தி!

an incident which occurred in the Tamil Nadu assembly on March 25, 1989

an incident which occurred in the Tamil Nadu assembly on March 25, 1989

4. ஆரியமாயையும், கம்பரசமும், மாஜி கடவுள்களும், எழுதிய அண்ணாவின் பெயரைக் கட்சிக்கும் – அவரது உருவத்தைக் கொடியிலும் பொறித்து வைத்துக் கொண்டு – மலையாளத்து உன்னிகிருஷ்ணன் பணிக்கரின் ஆலோசனை கேட்டு யாகம் நடத்துவார்; அண்ணாவின் ஆட்சியில் நிறுவப் பெற்ற கண்ணகி சிலையை அகற்றி மியூசியத்து இருட்டறையில் தள்ளுவார்; சங்கர மடம் போய் கஜபூஜை நடத்துவார். குருவாயூர் கிருஷ்ணனுக்கு குட்டி யானை காணிக்கை செலுத்துவார். இப்படி அண்ணாவின் கொள்கைகளை காற்றில் பறக்க விட்டு விட்டு – வர்ணாஸ்ரமதர்ம – மனுதர்ம ஆட்சி நடத்தினாலும் ஜெயலலிதா கொள்கைகளை காற்றில் பறக்கவிட்டுவிட்டார் என்று ஒரு பட்டியல் போடாது விகடன். காரணம் என்ன?

ஜெயலலிதா

பாப்பாத்தி!

February 6, 1989- Jayalalithaa taking oath . Karunanidhi, looks on.

February 6, 1989- Jayalalithaa taking oath . Karunanidhi, looks on.

5 – 6 ராஜீவ் படுகொலையில் மூப்பனாருக்கும் பங்குண்டு என்று குற்றஞ்சாட்டிய ஜெயலலிதா – 2001 தேர்தலில் மூப்பனாரின் வீடு தேடிச் சென்று அவரோடு கூட்டணி அமைத்துக் கொண்டார்.

2001 தேர்தலில் அவரை ஆட்சிக் கட்டிலில் அமர்த்திய பா.ம.க., இடதுசாரிகள், காங்கிரஸ் (த.மா.கா.) ஆகிய கட்சிகளை எல்லாம் கூட்டணியிலிருந்து கழற்றிவிட்டார். ஜெயலலிதா தனது கூட்டணிக் கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு தராதது மெகா தவறு என்றோ, கூட்டணிக் கட்சிகளை காரணம் இல்லாமல் பகைத்தது மெகா தவறு என்றோ விகடன் பட்டியலிடாது. காரணம் என்ன? ஜெயலலிதா சுயஜாதியைச் சேர்ந்தவராயிற்றே!

கரு-இந்திரா, விதவை பென்சன்7. பல்டிகள் பலவிதம் என்று தி.மு.கழக ஆட்சியின் மெகா தவறு என்று பேனாவை ஓட்டும் விகடன்! மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டு வந்தது; பின்னர் 2004 தேர்தல் தோல்வி காரணமாக வாபஸ் பெற்றது; கிராமப்புற தெய்வங்களின் ஆலயங்களில் ஆடு, கோழி பலியிட்டு படையலிடக்கூடாது என்று ஒரு உத்தரவு; 2004 தேர்தலுக்குப் பிறகு – தோல்வி தந்த பாடத்தால் – வாபஸ் பெற்றது போன்றவையெல்லாம் விகடனின் பார்வையில் பல்டிகளாகப் படாது! பொடா சிறையிலடைத்த வைகோ.வை 2006 தேர்தலில் கூட்டணி சேர்த்துக் கொண்டதுகூட விகடனுக்கு பல்டிகள் பலவிதமாகத் தோன்றாது. காரணம் என்ன? ஜெயலலிதா பாப்பாத்தி ஆச்சே!

கர் போற்றி- போற்றி8. ஜெயலலிதா செய்ததெல்லாம் சரி என்பது போல இன்றைய தி.மு.கழக ஆட்சி நடைபெறுகிறதாம். ஜெயலலிதா 10 ஆயிரம் சாலைப்பணியாளர்களையும், 13 ஆயிரம் மக்கள் நல ஊழியர்களையும் வேலை நீக்கம் செய்தார். தி.மு.கழக ஆட்சி அவர்களுக்கெல்லாம் மீண்டும் வேலை கொடுத்தது. ஜெயலலிதா அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும் ஒரு சொட்டு மையில் டிஸ்மிஸ் செய்தார். தி.மு.கழக ஆட்சி அவர்கள் மீதான பழிவாங்கல் நடவடிக்கைகளை எல்லாம் அறவே ரத்துச் செய்தது. 20 சதவிகித போனசைத் திருப்பித் தந்தது; எஸ்மா – டெஸ்மா சட்டங்களுக்கு முடிவு கட்டியது. இவையெல்லாம் ஜெயலலிதா செய்த தவறுகளைச் சரி செய்த நடவடிக்கைகள். ஆனால் விகடன் மெகா தவறு என்ற பெயரில் என்ன கூறுகிறது? “ஜெயலலிதா செய்ததெல்லாம் சரிதான் என்ற எண்ணத்தை மக்கள் மனதில் தி.மு.கழக ஆட்சி ஏற்படுத்திவிட்டது” என்கிறது. காரணம் என்ன? கலைஞர் மீதான – சாதித் துவேஷம்; ஜெயலலிதா மீதான சுயசாதி அபிமானம்!

ஜெயாவை கடுமையாக விமர்சிக்கும் வினவு.டாட்.காம்9. விகடனின் இட்டுக்கட்டலில் ஒன்பதா வதாகக் கூறப்படும் தவறு “கேலிக் கூத்தாகும் கட்சித் தேர்தல்” என்பதாகும். தேர்தலே கிடையாது; வைத்தால் குடுமி, சிரைத்தால் மொட்டை என்பது போலச் செயல்படும் ஜெயலலிதாவுக்குப் பல்லக்குத் தூக்கி ‘பராக்’ கூறும் விகடன் – சிற்றூர்க் கிளை முதல் – மாநகராட்சி வரையில் நடத்தப்படும் தேர்தலில் – அங்கொன்றும் – இங்கொன்றுமாகத் தென்படும் சிறுசிறு குறைகளை – துரும்பைத் தூணாக்கிக் காட்டுவது போல – பூதக் கண்ணாடி வைத்து அவைகளைப் பெரிது படுத்தப் படாதபாடு பட்டிருக்கிறது.

“நம் கட்சியை நடத்துவது யார்?” என்ற கேள்விக்கு தி.மு.க.வின் அடிமட்டத் தொண்டனிடம் பதிலே இல்லையாம்! தி.மு.க.வை நடத்துவது விகடன் சீனுவாச அய்யர் இல்லை என்று தி.மு.க. தொண்டர்கள் எல்லோருக்கும் நன்றாகவே தெரியும்!

ஜெயாவை கடுமையாக விமர்சிக்கும் ஜூனியர் விகடன்10 ‘காணவில்லை கட்டுப்பாடு’ என்று ஒரு மெகா தவறை கற்பித்திருக்கிறது விகடன்! ஒன்றியத் தேர்தல் வரை பல்லாயிரக்கணக்கான ஊர்களில் – நிர்வாகிகள் தேர்தலில் போட்டி நடந்ததையும் – வெற்றி பெற்ற நிர்வாகிகளின் பெயர்ப் பட்டியல்களையும் நாள் தவறாது – தி.மு.க. தலைமை நிலையம் – முரசொலியில் பக்கம் பக்கமாக வெளியிட்டபடியே இருக்கிறது! ஆனால் விகடனோ காணவில்லை கட்டுப்பாடு என்கிறது! ஆட்சிக்கு வந்த பிறகு ஒருமுறைதான் கழகப் பொதுக்குழுக் கூட்டம் நடத்தப்பட்டது என்பது ஒரு தவறாம். ஆட்சிக்கு வருவதற்கு 2 மாதங்களுக்கு முன்பு 3.3.2006 அன்று திருச்சியில் பொதுக்குழுக் கூட்டம் நடந்தது. ஆட்சிக்கு வந்தபின் 2.6.2008 அன்று சென்னையில் பொதுக்குழு நடத்தப்பட்டது. சொற்பொழிவாளர்கள் கூட்டம் சமீபத்தில் நடைபெறவே இல்லை என்று கூறுகிறது விகடன். 2006 மார்ச் மாதத்தில் சொற்பொழிவாளர்கள் கூட்டமும் நடந்திருக்கிறது. மெகா தவறுகள் 10 என்று விகடன் பட்டியலிட்டிருப்பவை எல்லாம் – தி.மு.க.வின் தவறுகள் என்பதைவிட – ஜெயலலிதாவின் தவறுகளை மறைத்து – அவருக்குத் தங்க முலாம் பூசி – அவரை மீண்டும் முதல்வராக்க வேண்டும் என்கிற சுயசாதி அபிமானத்தின் வெளிப்பாடுகள் என்பதே பொருத்தமாக இருக்கும்.

இப்படி பாப்பாத்தி என்று  குறிப்பிட்டு வெளியான கட்டுரையை அந்நேரத்தில் யாரும் கண்டிக்கவில்லை. சகிப்புத்தன்மை பற்றியும் குறிப்பிடவில்லை. ஆனல், இப்பொழுது வைக்கோ கருணாநிதியின் ஜாதிரைக் குறிப்பிட்டார் என்று ஆர்பாட்டம் நடக்கிறது!

சேஷாசல முதலியார் – சேஷாசலம் – பெரியார்தாசன் – “……………….” – சித்தார்த்தா – அப்துல்லாஹ் (1950-2013) காலமானார்!

ஓகஸ்ட் 19, 2013

சேஷாசல முதலியார் – சேஷாசலம் – பெரியார்தாசன் – “………………….” – சித்தார்த்தா – அப்துல்லாஹ் (1950-2013) காலமானார்!

Abdullah - in different poses

பெரியார்தாசன் என்கின்ற அப்துல்லா காலமானார்: பாரதிராஜாவின் `கருத்தம்மா’, `காதலர் தினம்’ உள்பட பல்வேறு தமிழ் திரைப் படங்களில் நடித்தவர் பெரியார்தாசன். இவர் சென்னை பச்சையப்பா கல்லூரியில் 38 ஆண்டுகள் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். 15-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த இவர் பட்டிமன்றம், கருத்தரங்குகளில் பங்கேற்று வந்தார். ம.தி.மு.க. நிர்வாகியான இவர் அந்த கட்சியின் உயர் நிலைக்குழு உறுப்பினராக இருந்தார். பெரியார்தாசன் வீடு திருவேற்காடு மகாலட்சுமி நகர் 6-வது தெருவில் உள்ளது. கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். கல்லீரல் கோளாறு காரணமாக குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு 1.25 மணிக்கு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 63. அவரது உடல் திருவேற்காட்டில் உள்ள அவரது வீட்டில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது[1]. பெரியார்தாசனுக்கு வசந்தா (62) என்ற மனைவியும், வளவன் (35), சுரதா (35) என்ற 2 மகன்களும் உள்ளனர்[2].

Seshachalam-Periyardasan-Siddharth-Abdullah

அவருடையஆன்மாசாந்தியடையபிரார்த்தனை: “அவருடைய ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை” என்று செய்யலாமா, கூடாதா என்று தெரியவில்லை. இருப்பினும், இந்தியப் பாரம்பரியப்படி, “அவருடைய ஆன்மா சாந்தியடையடைவதாக” என்று சொல்லிக் கொண்டு, அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்ளலாம். இணைதளங்களில் தேடியபோது, நக்கீரனில் வெளிவந்த கீழ்கண்ட செய்தி கண்களில் பட்டது. அது அப்படியே கொடுக்கப்படுகிறது. கதிரவன் என்பவர் அச்செய்தியைக் கொடுத்திருக்கிறார்.

Abdullah introduced as Periyarthasan in Dubai - hand bill

என்னநடந்ததுஇவர்கள்  (பெரியார்தாசன்மற்றும்மணிவண்ணன்) வாழ்க்கையில்?: வ்வப்போது சினிமாவில் நடித்து வந்த பெரியார்தாசன் அண்மையில் (2010) ஆத்திகரானார்.  அதுமட்டுமில்ல – இஸ்லாம் மதத்திற்கு மாறினார் (11-03-2010). இவர் மாதிரியே பெரியாரின் தீவிர பற்றாளர் மணிவண்ணன்.  இவர் இப்போது சாய்பாபா பக்கம் சாய்ந்திருக்கிறார். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தத்துவ இயல்[3] பேராசிரியராக பணிபுரிந்த பெரியார்தாசனை பாரதிராஜா சினிமாவுக்கு கொண்டு வந்தார்.  நடிப்போடு ரியல் எஸ்டேட், மல்டி லெவல் மார்க்கெட்டிங்கிலும் கால் பதித்தார். கடந்த 2004ம் ஆண்டு அன்பு பாலா நடித்த அம்மா, அப்பா, செல்லம் படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரியில் நடந்தது.   இதற்காக சென்னையில் இருந்து நான், (பேட்டி எடுக்க) பெரியார்தாசன், நடிகை சபீதா ஆனந்த் (நடிக்க)  மூவரும் ஒரு காரில் புதுச்சேரி சென்றோம். அப்போது பெரியார்தாசன், தனது மகன் வ.சி.வளவன் திருமணம் அழைப்பிதழ் கொடுத்தார்.  அது ஒரு புத்தகமாகவே இருந்தது.    அந்த திருமண அழைப்பிதழில் பெரியாரின் படம் அச்சிடப்பட்டிருந்தது.  உள்ளே திருக்குறள் இன்பத்து பாலுக்கு பெரியார்தாசன் எழுதிய விளக்கவுரை.

Periyardasan marriage invitation card

ஏன்பெரியாரின்படத்தைதிருமணஅழைப்பிதழில்அச்சிட்டுள்ளேன்: ஏன் பெரியாரின் படத்தை திருமண அழைப்பிதழில் அச்சிட்டுள்ளேன் என்று நினைப்பீர்கள்? என்று அவராகவே கேட்டு அவராக விளக்கம் சொல்லிக்கொண்டு வந்தார். சேசாசலம் என்கிற என் பெயரையே பெரியார்தாசன்னு மாத்திக்கிட்டேன்னா பார்த்துக்குங்க…….என்று பெரியார் மீது தான் கொண்ட பற்று பற்றி,  கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரையில் ஆரம்பித்து மரக்காணம் வரை சொல்லிக்கொண்டு வந்தார். நொங்கு கடை, இளநீர் கடைகளில் கார் நின்ற போது மட்டும் இடைவேளை. ஐந்து வருடங்களில் (2005-2010) அவர் வாழ்க்கையில் என்ன மாற்றம் நிகழ்ந்ததோ….தற்போது இறைவன் மீது நாட்டம் கொண்டிருக்கிறார்.  இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளார். இதே போல் பெரியாரின் தீவிர பற்றாளர் மணிவண்ணன்.   இதனால்தான் இவருக்கும் நடிகர் சத்யராஜூக்கும் நெருக்கம் அதிகமானது. இவர் இப்போது பெரியார் தொண்டர்களுக்கு அடுத்த அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.  கடந்த சில வாரங்களுக்கு முன் மஹாராஷ்டிராவில் இருக்கும் சீரடி சாய்பாபா சன்னதிக்கு சென்று வந்திருக்கிறார்[4]. கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்யும் அளவிற்கு என்ன நடந்தது இவர்கள் வாழ்க்கையில்?

Periyardasan-explaining his position-about doubting him

2013ல்பெரியார்தாசன், மணிமண்ணன்காலமானது: ஜூன் 2013ல் தான் நாத்திகரான மணிவண்ணன் (31-07-1954 – 15-06-2013) காலமானார். கதிரவன் நக்கிரனில் எடுத்துக் காட்டியுள்ளபடி, மணிவண்ணன் “கடந்த சில வாரங்களுக்கு முன் மஹாராஷ்டிராவில் இருக்கும் சீரடி சாய்பாபா சன்னதிக்கு சென்று வந்திருக்கிறார்[5]” என்றிருந்தால், இந்த மூன்று ஆண்டுகளில் மணிவண்ணன் ஆதிகரானாரா, கடவுளை நம்ப ஆரம்பித்தாரா, என்பதெல்லாம் நமக்கு தெரியாது. ஆனால், அவரது நண்பர் இந்த மூன்று ஆண்டுகளாக முஸ்லிமாக இருந்திருக்கிறார். (பகுத்தறிவு, நாத்திகம் இவற்றையெல்லாம் மூட்டைக் கட்டிவிட்டு, பெரியாரையும் ஒதுக்கி விட்டு) கடவுளை நம்பியிருக்கிறார். திராவிடர்களுக்குக் குழப்பமாகத்தான் இருக்கும். ஊடகங்களும்[6] “பெரியார்தாசன் மரணம்” என்றுதான்[7] செய்திகளை[8] வெளியிட்டிருக்கிறார்கள்[9].

Periyar Sasan - Abdullah etc

இதயத்தில்விழுந்தஇடிபெரியார்தாசன்மறைவுக்குவைகோஇரங்கல்: இதயத்தில் விழுந்த இடி என்று பேராசிரியர் பெரியார்தாசன் மறைவுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்[10]. அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், திராவிட இயக்கத்தின் கருத்துக் களஞ்சியக் கருவூலமான, என் ஆருயிர்ச் சகோதரர் அப்துல்லாஹ் பெரியார்தாசன், என்னையும், இயக்கத்தோழர்களையும் கண்ணீரில் துடிக்க வைத்து மறைந்து விட்டார். தந்தை பெரியாரை, மாணவப் பருவத்தில் தலைவராக ஏற்றுக்கொண்டு, சுயமரியாதை வீரராக, பகுத்தறிவு நெறியை மக்களிடம் பரப்ப, எழுத்தாலும், பேச்சாலும் அவர் ஆற்றிய பணிகள் ஈடு இணையற்றவை.

Periyardasan met Ajaya Malhothra

பொருளியல், தத்துவஇயல், உளவியல்பயின்றது: பச்சையப்பன் கல்லூரியில், பொருளியல் இளங்கலை, தத்துவ இயல் முதுகலை  பட்டங்களைப் பெற்று, இலண்டன் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் உளவியல் பயின்று, முனைவர் பட்டம் பெற்று, அமெரிக்காவின் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் ஆறு ஆண்டுகள் பேராசிரியராகப் பணி ஆற்றி, 34 ஆண்டுகள் பச்சையப்பன் கல்லூரியில், மெய்ப்பொருள் இயல் பேராசிரியராகப் பணி ஆற்றினார். அண்ணல் டாக்டர் அம்பேத்கருடைய, அனைத்து நூல்களையும் பழுதறக் கற்று,  ஆய்ந்து அறிந்து, அதில் அவர் பெற்ற பாண்டித்யத்துக்கு நிகராக இன்னொருவரைச் சொல்ல முடியாது. அதைப்போலவே, தந்தை பெரியாரின் எழுத்துகளையும், உரைகளையும், முழுமையாகக் கற்று உணர்ந்தவர்; அறிவாசானின் நம்பிக்கையையும், அன்பையும் பெற்று, திராவிடர் கழகத்தில் கொள்கை பரப்புச் செயலாளராகவும் இயங்கியவர்.

periyar nagar poster -claimimg periyardasan instead of Abdullah

தமிழ்ஈழவிடுதலை, பௌத்தம், பாலிமொழிகற்றல்முதலியன: தமிழ் ஈழ விடுதலைக்காக அரும்பாடுபட்டவர். மூன்று தமிழர்களின் உயிர்களை, தூக்குக் கயிற்றில் இருந்து விடுவிக்க, நான் போராடிய காலத்தில், தாமாக முன்வந்து, தன்னை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்துக் கொண்டு, கடந்த இரண்டு ஆண்டுகளாக, கழகத்தை மக்கள் மன்றத்தில் வலுப்படுத்திட, மேடை முழக்கத்தின் மூலமாக, அவர் ஆற்றி உள்ள பணிகள் அளப்பரியதாகும். புத்தரின் போதனைகளைப் பயில்வதற்காக, இலங்கைக்குச் சென்று, பாலி மொழியைக் கற்றுத் தேர்ச்சி பெற்றார். 56 நூல்களைத் தந்து உள்ள பெரியார்தாசன், அம்பேத்கர் தொகுத்த புத்தரும் அவர் தம்மமும் என்ற நூலை, தமிழில் மொழி ஆக்கம் செய்தார்.  அந்தநூல், தைவான் நாட்டில் மூன்று இலட்சம் படிகள் அச்சிடப்பட்டு, உலகெங்கும் பரப்பப்பட்டன.

Periyardasan died, Dinamalar

உடலைஎரியூட்டவும்வேண்டாம்; புதைக்கவும்வேண்டாம்: அவர் உடல் நலம் குன்றியபோது, ஜூலைத் திங்களில் அவரது இல்லம் சென்று சந்தித்து, பல மணி நேரம் உரையாடிக் கொண்டு இருந்தேன். இரண்டு நாள்களுக்கு முன்பு, ஆகஸ்ட் 16 ஆம் நாள், குளோபல் மருத்துவமனையில் அவரைச் சந்தித்தேன். மூன்று மணி நேரம் அவர் என்னிடம் மனம்விட்டுப் பேசிக்கொண்டு இருந்தார். அதுதான், அவர் கடைசியாகப் பேசியது என்று, அவரது பிள்ளைகள், நேற்று என்னிடம் தெரிவித்தனர். பேரறிஞர் அண்ணாவைக் கொத்திச் சென்ற புற்று நோய்தான், பெரியார்தாசனையும் நம்மிடம் இருந்து பறித்து விட்டது. ‘தான் இறந்தபிறகு, விழிகளை சங்கர நேத்ராலயா மருத்துவமனைக்குத் தந்து விடுங்கள்; உடலை எரியூட்டவும் வேண்டாம்; புதைக்கவும் வேண்டாம்; உடலை சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர்களது ஆராய்ச்சி படிப்புக்காகக் கொடுத்து விடுங்கள்’ என்று குடும்பத்தாரிடம் கூறியதற்கு ஏற்ப, அவ்விதமே அவரது உடல், சென்னை மருத்துவக் கல்லூரிக்கு வழங்கப்படுகிறது. இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்து, திராவிட இயக்கத்துக்கும், தமிழ் இனத்துக்கும் அருந்தொண்டு ஆற்ற  இருந்த, எங்கள் கொள்கை வைரத்தை, சாவு கொடூரமாகக் கொண்டு போய் விட்டதே என்ற வேதனையில் தவிக்கிறேன். அவரை இழந்து ஆற்றொணாத் துயரத்தில் வாடும், அவரது குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்க்கும் எனது கண்ணீர் அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று தெரிவித்துள்ளார்[11].

வாழ்க்கைக்குறிப்பு: சேசாசலம் 1950ம் ஆண்டு வட ஆற்காடு மாவட்டத்தில் உள்ள அகரம் என்ற கிராமத்தில், சைவவேளாளர் குடும்பத்தில் பிறந்தார். சேசாசல முதலியாராக, இந்துமத நம்பிக்கையாளராக இருந்தார். 1980ல் பெரியாரின் தொடர்பினால், “பெரியார்தாசன்” ஆனார். திராவிட சித்தாந்தத்தில் ஊறியிருந்தாலும், பல நம்பிக்கைகளை ஆராய்ந்து கொண்டிருந்ததால், சில காலத்திற்கு கிருத்துவராகக் கூட இருந்தார் என்று சொல்லப்படுறது. பிறகு பௌத்தராகி, “சித்தார்த்” என்ற பெயரை வைத்திருந்தார். 2010ல் முஸ்லிம் ஆனார்.

காலம் பெயர் மதம் / நம்பிக்கை
c.1950-70 சேசாசல முதலியார் சைவம்/ இந்து
c.1970-80 சேசாசலம் பகுத்தறிவுவாதி
c.1980-2008 பெரியார்தாசன் நாத்திகம் / இந்துவிரோதம்
c.2008-10 சித்தார்த் பௌத்தம் / இந்துவிரோதம்
c.2010-13 அப்துல்லா இஸ்லாம் / கடவுள்-மதம் நம்பிக்கையாளர்

C = circa = approximately = நம்பிக்கை, மதநம்பிக்கை, கடவுள் நம்பிக்கையைப் பொறுத்த வரையிலும் நிலைமை மாறியுள்ளதால், இப்படி குறிப்பிடப் பட்டுள்ளது.

யார் மறைந்தது, எது கடந்தது, எது நின்றது?: சித்தாந்த கலவைகளினால், குழப்பங்களினால், நம்பிக்கைச் சிதறல்கள், மோதல்கள் இவற்றினால் உருவானவ போலிருந்தார் என்று அவரது வாழ்க்கைக் குறிப்புகள் காட்டுகிறது. ‘தான் இறந்தபிறகு, விழிகளை சங்கர நேத்ராலயா மருத்துவமனைக்குத் தந்து விடுங்கள்; உடலை எரியூட்டவும் வேண்டாம்; புதைக்கவும் வேண்டாம்; உடலை சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர்களது ஆராய்ச்சி படிப்புக்காகக் கொடுத்து விடுங்கள்’ என்று குடும்பத்தாரிடம் கூறியதிலிருந்து அத்தகைய போராட்டங்கள் வெளிப்படுகின்றன. 11-03-2010 முதல் 18/19-08-2013 அன்று வரை முஸ்லிமாக இருந்த அப்துல்லா இறந்தால், யார் இறந்தது என்று உலகம் சொல்லும்?

  • இந்துவாக இருந்த சேஷாசல முதலியார் இறந்தாரா?
  • நாத்திகன் சேஷாசலம்இறந்தாரா?
  • பெரியார்தாசன்  இறந்தாரா?
  • “……….” –இறந்தாரா?
  • சித்தார்த்தா என்ற பௌத்தர் –இறந்தாரா?
  • அப்துல்லாஹ் என்ற முஸ்லிம் இறந்தாரா?

இந்தியன் இந்தியனாக இருந்தாலே போதும் – மதம் மாறவேண்டிய அவசியம் இல்லை.

© வேதபிரகாஷ்

19-08-2013


[3] சைக்காலாஜி / மனோதத்துவம் என்றும் குறிப்பிடுகிறார்கள்.

[4] கதிரவன், என்னநடந்ததுஇவர்கள்  வாழ்க்கையில்?, நக்கீரன்,   http://cinema.nakkheeran.in/Talkies.aspx?T=360

[5] கதிரவன், என்னநடந்ததுஇவர்கள்  வாழ்க்கையில்?, நக்கீரன்,   http://cinema.nakkheeran.in/Talkies.aspx?T=360

[10] தினமணி, 19-08-2013