Archive for the ‘வேலூர் கோட்டை’ Category

காஃபிர் நடத்தும் “மசூதி நுழைவு” போராட்டம்!

ஜனவரி 21, 2010

காஃபிர் நடத்தும் “மசூதி நுழைவு” போராட்டம்!

வேலூர் கோட்டைக்குள் தடையை மீறி நுழைய முயன்ற திருமாவளவன் கைது
ஜனவரி 21,2010,00:00  IST

http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=15579

Important incidents and happenings in and around the world

வேலூர் (20-01-2010): வேலூர் கோட்டை மசூதிக்குள் தடையை மீறி நுழைய முயன்ற திருமாவளவன் உள்ளிட்ட 700 பேரை, போலீசார் கைது செய்தனர். வேலூர் கோட்டையில் இஸ்லாமியர்களுக்கு வழிபாட்டு உரிமையை வழங்கக்கோரி, விடுதலைச் சிறுத்தைகள் சார்பில், வேலூர் கலெக்டர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டமும், கோட்டை மசூதியில் நுழையும் போராட்டமும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆர்ப்பாட்டம் நடத்த மட்டும் அனுமதி அளித்த போலீசார் கோட்டை மசூதிக்குள் நுழைய அனுமதி அளிக்கவில்லை. தடையைமீறி மசூதிக்குள் நுழையப் போவதாக திருமாவளவன் அறிவித்ததால் வேலூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.வேலூர் கோட்டைக்கு சீல் வைக்கப்பட்டது. கோட்டை நுழைவாயில் மூடப்பட்டது. கோட்டைக்குள் இருக்கும் அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் மட்டும் கோட்டைக்குள் அனுமதிக்கப்பட்டனர். பொதுமக்களுக்கு அனுமதிமறுக்கப்பட்டது. கோட்டைக்குள் இருந்தகடைகள் மூடப்பட்டன. கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவிலில் சாமி கும்பிட சென்ற பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.ஆர்ப்பாட்டம் நடந்த சத்துவாச்சாரி கலெக்டர் அலுவலகத்தில் இருந்து கோட்டை வரை வழியெங்கும் சாலைகளில் தடைகள் அமைத்து பொதுமக்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. அந்த வழியாக சென்ற பஸ்கள் வேறு வழியாக திருப்பி விடப்பட்டன. வேலூர் டி.ஐ.ஜி., தாமரைக்கண்ணன் தலைமையில் 500 அதிரடிப்படை போலீசார், 1,000 ஆயுதப்படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.வேலூரின் இயல்பு நிலை பாதிக்கப் பட்டது. சாலைகள் வெறிச்சோடிகிடந்தது. பெறும்பாலான கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டன. பிற்பகல் 12.20 மணிக்கு சத்துவாச்சாரி கலெக்டர் அலுவலகம் முன் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.ஆர்ப்பாட்டம் முடிந்ததும், கோட்டை மசூதிக்குள் நுழையப் போவதாக அறிவித்து விட்டு, 1.30 மணிக்கு கோட்டை நோக்கி புறப்பட்ட திருமாவளவன் உள்ளிட்ட 700 பேரை, போலீசார் கைது செய்தனர்.

வேலூர் கோட்டைக்கு உள்ளே இந்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள மசூதியில் முஸ்லிம்கள் தொழுகை நடத்த அனுமதிக்கவேண்டும் என வலியுறுத்தி 20-01-2010 அன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கைது செய்யப்பட்டார். மாலையில் விடுவிக்கப்பட்டார். திருமாவளவனுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை. முஸ்லிம்களைப் பொறுத்த வரைக்கும் அவர்கள் நூல்களான குரான், ஹதிஸ், ஷரீயத் என்னசொல்கின்றனவோ அதன்படி நடப்பர். பலகாலமாக தொழுகை நடக்கவில்லை என்றால், அவ்விடத்தை மசூதியாகக் கருதப்படமாட்டாது. அதேமாதிரி, அவர்கள் சொல்லும் இடத்தில் சுதந்திரத்துக்குப் பின் தொழுகையே நடக்கவில்லை.

ஆனாலும் கோட்டைக்குள் உள்ள தெற்கு காவல் நிலையத்துக்கு எதிரே ஒதுக்கப்பட்டுள்ள தனி இடத்தில் இப்போது தொழுகை நடந்து வருகிறது.

வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு இன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திருமாவளவனுடன் அக்கட்சித் தொண்டர்களும் ஏராளமானோரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது நடவடிக்கையால், அசம்பாவிதங்கள் நிகழாமல் தடுக்கும் வகையில் கலெக்டர் அலுவலகம் மற்றும் கோட்டையைச் சுற்றிய பகுதிகளிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

முன்பு முஸ்லிம்கள் இதே மாதிரியான கோரிக்கைவைத்தனர். ஆனால் ASI மறுத்துவிட்டது. ஆகவே முஸ்லிம் அல்லாத திருமாவளவன் இதனைப் பிரச்சியாக்கி “போராட்டம்” நடத்துகிறேன் என்றும், முஸ்லிம் அதற்கு துணை போவதும் ஆச்சரியமாகத்தான் உள்ளது!

2008ல் நடந்த நிகழ்ச்சிகள்: வேலூர், மார்ச் 4, 2008: வேலூர் கோட்டை மசூதியில் தடையை மீறி தொழுகை நடத்துவோம் என்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் அறிவித்ததைக் கண்டு சில முஸ்லிம் அமைப்புகளே கவலை தெரிவித்துள்ளன.  வேலூர் கோட்டையின் பராமரிப்புப் பணியை இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை 1921-ல் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. கோட்டைக்குள் இருந்த ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் கோயில், மசூதி ஆகியவற்றில் அப்போது வழிபாடு நடைபெறவில்லை. ஆனால் சி.எஸ்.ஐ. தேவாலயத்தில் மட்டும் வழிபாடு தொடர்ந்து நடந்து வந்தது.

முஸ்லிம்கள் தொழுகை வேண்டாம் என்று ஒப்புக்கொண்டது: இந்நிலையில் ஜலகண்டேஸ்வரர் கோயிலை மக்கள் வழிபாட்டுக்கு திறந்துவிட பல்வேறு போராட்டத்தை வேலூர் மக்கள் நடத்தி வந்தனர். ஒருகட்டத்தில் இதனால் சட்டம் – ஒழுங்கு பிரச்னை ஏற்படும் நிலைக்கு மக்களின் போராட்டம் தீவிரமடைந்தது. அப்போதைய மாவட்ட ஆட்சியர் கங்கப்பா இதற்கு சுமுக தீர்வுகாண நடவடிக்கை மேற்கொண்டார். இதன் அடிப்படையில் 1981-ம் ஆண்டு கோயிலை வழிபாட்டுக்கு திறந்துவிட முடிவு செய்ததைத் தொடர்ந்து, கோட்டை வளாகத்திலேயே 1750-ம் ஆண்டில் கட்டப்பட்ட மசூதியையும் வழிபாட்டுக்கு திறந்து விடலாம் என்ற முடிவில் முஸ்லிம் அமைப்புகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களை அழைத்து ஆலோசனை நடத்தினார் ஆட்சியர். இதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் ஏ.கே. அப்துல் சமது, ஆடிட்டர் ஷெரீப் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் அந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள், அருகிலேயே ஹிந்து கோயில் உள்ளதால், மசூதியில் 5 வேளை தொழுகை நடத்தும்போது தேவையில்லாத பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே மசூதியில் வழிபாடு வேண்டாம் என்று கையொப்பமிட்டு கொடுத்துள்ளனர். எனவே 1981 மார்ச் 16-ம் தேதி சத்துவாச்சாரியில் இருந்த சிவலிங்கத்தை ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்று ஜலகண்டேஸ்வரர் கோயிலில் பிரதிட்சை செய்து வழிபடத் தொடங்கினர்.

த.மு.மு.க பிரச்சினையைக் கிளப்பியது: மசூதியை இஸ்லாமியர்களின் தொழுகைக்கு திறந்துவிட வேண்டும் என்று முதலில் கோரிக்கை விடுத்த திராவிட முஸ்லிம் முன்னேற்றக்கழக பொதுச் செயலாளர் இக்பால் இதுகுறித்து கூறியதாவது: எங்கள் அமைப்பின் சார்பில் கோரிக்கை விடுத்தபோது, அப்போது மாவட்ட ஆட்சியராக இருந்த சிவக்குமார், மசூதி தொடர்பான ஆவணங்களைக் காட்டி, இங்கு தொழுகை வேண்டாம் என்று முஸ்லிம் பெரியவர்களே எழுதிக் கொடுத்த கடிதத்தைப் பார்த்தவுடன், காரணம் இல்லாமல் பெரியவர்கள் செய்திருக்கமாட்டார்கள் என்று அந்த கோரிக்கையை வலியுறுத்துவதை நிறுத்திவிட்டோம். தற்போது தடையை மீறி தொழுகை நடத்துவோம் என்று தெரிவித்துள்ள ஜவாஹிருல்லா தி.மு.க. கூட்டணியில் இருக்கிறார். அவர் நேரடியாக முதல்வரிடம் பேசி மசூதியை தொழுகைக்கு சுமுகமாக திறந்து விடட்டும். அல்லது தனது பதவியை ராஜிநாமா செய்யட்டும். அதைவிடுத்து பொதுமக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபடுவது நல்லதல்ல என்றார். இவ்வளவு நாள்கள் அமைதியாக இருந்துவிட்டு, முஸ்லிம் பெரியவர்களே பிரச்னை கூடாது என்று முடிவு செய்துள்ள நிலையில் த.மு.மு.க. இப்பிரச்னையை கையிலெடுத்துள்ளது அனைவரிடமும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே முன்னதாகவே இப்பிரச்னையில் சுமுகத் தீர்வு காண மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.