திக–திமுக பேச்சாளர்கள், தலைவர்கள் மற்றும் சித்தாந்தவாதிகள், 1950களிலிருந்து பேசி வரும் கெட்ட, ஆபாச மற்றும் மோசமான வார்த்தைகள், வசவுகள் மற்றும் திட்டுகள் (2)

அண்ணாமலையைக் கடுமையாக வசைப் பாடியது: மேலும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மிக மோசமாக பேசியுள்ளார். போலீஸ் வேலையை பாதியிலேயே விட்டுவிட்டு ஓடி வந்த அண்ணாமலை திமுகவை பற்றி பேசுகிறார். பிரான்சில் வாங்கிய வாட்சை இந்தியாவில் கட்டிக்கொண்டு தேச பக்தியை பற்றி பேசுகிறார். அவர் தாய் அவரை எப்படி பெற்றெடுத்தார் என்று மிக மோசமாக விமர்சித்துள்ளார். மேலும், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியை உருவ கேலி செய்து பேசியது அதிமுகவினரை கொந்தளிக்க செய்துள்ளது. கவர்னரை அவதூறாகவும், கொலை மிரட்டல் விடுக்கும் வகையிலும் கடந்த சில நாட்களாக பேசி வரும் தி.மு.க,வைச் சேர்ந்த ஆர்.எஸ்.பாரதி, சிவாஜி கிருஷ்ணமூர்த்தி ஆகியோரை கைது செய்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ஜ., செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கோரிக்கை விடுத்துள்ளார்[1]. இது குறித்து அவர் கூறியதாவது[2]: கவர்னர் குறித்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசிய அந்த தரம் கெட்ட வார்த்தைகள் தி மு கவின் ஒப்புதலோடே பேசப்பட்டிருக்கிறது என்பதை உறுதி செய்யும்.

புகார் கொடுத்தும் போலீஸார் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது: “தொடர்ந்து பா.ஜ., தலைவர்களை தரக்குறைவாக பேசியது குறித்து புகார் அளித்தும் தமிழக காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை. கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் கூட பா.ஜ., தலைவர் அண்ணாமலை குறித்து சிவாஜி கிருஷணமூர்த்தி கூறிய கருத்துக்களை கண்டித்து நாம் புகாரளித்திருந்தும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்காது, கண்டும் காணாமல் இருப்பது தி மு கவின் முழு ஒப்புதலோடு பேச வைக்கப்படுகிறார் என்பதையே உறுதி செய்கிறது. காஷ்மீருக்கு கவர்னரை போகச்சொல்லி, தீவிரவாதிகளை இங்கிருந்து காஷ்மீருக்கு அனுப்பி வைத்து கவர்னரை கொலை செய்வோம் என்றும், சட்டசபையில் கொலை செய்தாலும் வழக்கு இல்லை என்று கூறியதும், அடித்தால் வீடு திரும்ப முடியாது என்று திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குறிப்பிட்டதையும் பார்க்கும் போது, திட்டமிட்ட ரீதியில் தமிழக ஆளுநர் ரவி மீது வன்முறையை கட்டவிழ்த்து விட தி.மு.க., சதி செய்கிறதோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது”.

ஸ்டாலின் சொல்வதும், திமுகவினர் செய்வதும்; “திமுக அரசின் தோல்விகளை மறைப்பதற்கு, சட்ட ஒழுங்கு சீர்கெட்டுக் கொண்டிருக்கிறது என்பதை மூடி மறைப்பதற்கு, பொருளாதார ரீதியாக தமிழகத்தை மேம்படுத்த முடியவில்லை என்பதை மறைப்பதற்கு, மத்திய அரசின் பல்வறு நலத்திட்டங்களில் கொண்டு வரப்பட்டுள்ள சீர்திருத்தங்களால் அத்திட்டங்களில் ஊழல்கள் செய்ய முடிவதில்லை என்ற ஆத்திரத்தில்,மாநில அரசு நிர்வாகத்தை திறம்பட செலுத்த முடியாத காரணத்தினால், மொழி ரீதியாக, சாதி ரீதியாக, மத ரீதியாக மக்களை தூண்டிவிட்டு திசை மாற்ற முயற்சிக்கிறது தி.மு.க. கவர்னரை காஷ்மீருக்கு செல் என்றும், அங்கு ‘நாங்கள்‘ தீவிரவாதிகளை அனுப்பி உன்னை கொன்று விடுவோம் என்று கூறியிருப்பது அதிர்ச்சியளிப்பதோடு, தி மு கவிற்கு தீவிரவாதிகளின் தொடர்பு குறித்த சந்தேகங்களை எழுப்புகிறது. தமிழக காவல் துறை உடனடியாக, இந்த இரு நபர்களையும் கைது செய்து விசாரணை செய்ய வேண்டும். இரு நாட்களுக்கு முன்னர் முதல்வர் ஸ்டாலின் , கவர்னர் குறித்து திமுகவினர் விமர்சிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தியதாக செய்திகள் வெளியான நிலையில், இரு நாட்களாக தான் அதிகளவில் ஆளுநரை விமர்சிக்கின்றனர்”.

சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஆர்.எஸ். பாரதி ஆகியோர் தி மு க தலைமையின் ஒப்புதலோடு, ஆசியோடு தான் ஆளுநரை தரக்குறைவாக, கொலை மிரட்டல் தொனியில் பேசியுள்ளனர்: “சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஆர்.எஸ். பாரதி ஆகியோர் தி மு க தலைமையின் ஒப்புதலோடு, ஆசியோடு தான் ஆளுநரை தரக்குறைவாக, கொலை மிரட்டல் தொனியில் பேசியுள்ளனர் என்பது தெளிவாகிறது. தமிழக காவல் துறை தலைவர் ,சென்னை மாநகர ஆணையர் உடனடியாக இந்த நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டியது அவசியம் மட்டுமல்ல அவசரமும் கூட. உண்மையில், முதல்வர் ஸ்டாலினுக்கு இந்த பேச்சுகளில் உடன்பாடு இல்லையெனில், சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஆர் எஸ் பாரதி இருவரையும் கைது செய்ய உத்தரவிடுவதோடு, தி மு க பொது கூட்டங்களில் அமைச்சர்களின் முன்னிலையில் இந்த கருத்துக்களை கூறியிருப்பதற்கு பொறுப்பேற்று தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இந்த இருவரையும் தி மு கவை விட்டு நீக்க வேண்டும். இல்லையேல், ஆளுநர் குறித்த அவதூறுகள் மற்றும் கொலை மிரட்டல்களுக்கு முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்க வேண்டும்,”. இவ்வாறு அவர் கூறினார்.

திக–திமுகவினரின் கெட்ட வார்த்தை பாரம்பரியம்:
- தி.மு.க..வின் துணை பொதுச் செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா, தேர்தல் பரப்புரையின் போது, கள்ள உறவில் பிறந்த குறைப் பிரசவம் தான் எடப்பாடி பழனிசாமி என தமிழக முதல்வரின் பிறப்பைப் பற்றி அருவருப்பான வகையில் பேசியுள்ளார்.
- தி.மு.க.வின் தலைவர் அண்ணாதுரையே இம்மாதிரியான பேச்சுகளுக்கு அடித்தளம் அமைத்தவர். காந்தியார் மீரா பாயுடனும், சுசிலாக்களுடனும், சத்காரியாதிகளிலே ஈடுபட்டுச் சரோஜினிகளின் பராமரிப்பில் பிர்லா மாளிகையில் இருந்தார் என எழுதியவர்.
- 1962 அக்டோபர் மாதம் 23ந் தேதி பாரத பிரதமர் நேரு இலங்கை விஜயத்தின் போது, சிறிமாவோ பண்டாரநாயக்காவை சந்தித்து, ஒரு மணி நேரம் விவாதித்த செய்தியை, அண்ணாதுரை, தம்பி, நேருவோ மனைவியை இழந்தவர், சிறிமாவோ கணவனை இழந்தவர், இருவரும் ஒரு மணி நேரம் தனிமையில் சந்தித்தார்கள் என்றால் என்ன நடந்திருக்கும் என சிந்தித்து பார் தம்பி என கட்டுரை எழுதியவர்.
- 1962-ல் சேலத்தில் நடந்த தி.க. மாநாட்டில் மாற்றான் மனைவி மற்றொருவனை விரும்பினால் அதை குற்றமாக கருத கூடாது என தீர்மானம் இயற்றிய ஈவெ. ராமசாமி நாயக்கர்.
- சேலத்தில் நடந்த தி.முக. பொதுக் கூட்டத்தில், அண்ணாதுரை, சினிமா நடிகையின் கற்பு பற்றி கீழ்தரமாக விமர்சனம் செய்தவர். அவள் ஒன்றும் படிதாண்டா பத்தினி அல்ல. நான் முற்றும் துறந்த முனிவன் அல்ல என கூறியது மட்டுமில்லாமல், அவள் தபால்நிலையத்தில் உள்ள மைக்கூடு, அதை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம், நானும் பயன்படுத்தினேன் என்றார்.
- சட்டசபையில் திராவிட நாடு எங்கே இருக்கிறது என கேள்வி எழுப்பிய காங்கிரஸ் உறுப்பினர் திருமதி அனந்தநாயகிக்கு பெண் உறுப்பினரிடம் பாவாடை நாடா பற்றி விரசமாகச் சொன்னவர் கருணாநிதி.
- மதுரையில் இந்திரா காந்தி வருகை தந்த போது, கருப்பு கொடி ஆர்பாட்டம் என்ற பெயரில் தாக்குதல்களை நடத்தியவர்கள் தி.முக.வினர்.
- தாக்குதலின் போது இந்திரா காந்தியின் நெற்றியில் கல் பட்டு ரத்தம் வழிந்தது. இது பற்றி கருணாநிதி முன் வைத்த விமர்சனம், அம்மையாருக்கு மாதவிடாய் ஏற்பட்டு இருக்கும் என்ற ஈனத்தனமாக விமர்சித்தவர்.
- 1972ல் எம்ஜிஆர் திமுக விலிருந்து பிரிந்து கணக்கு கேட்ட போது, கருணாநிதியின் பதில்களில் முக்கியமான பதில், ‘யாரிடம் கேட்கிறார் கணக்கு, போய் லதாவிடம், சரோஜா தேவியிடம், மஞ்சுளாவிடம் கணக்குக் கேள்’ என்பதுதான்.
- அன்பழகனை ஜெயலலிதா உதவிப் பேராசிரியர் என்று குறிப்பிட்டு பேசியதற்கு (திமுகவினர் அன்பழகனை ‘பேராசிரியர்’ என்றே பல காலம் கூறி வந்தனர். சமீபத்தில் தான் ஜெயலலிதா போட்டு உடைத்தார். அவர் கடைசியாக வகித்த பதவி ‘உதவிப் பேராசிரியர்’ என்று கூறியதற்கு, அன்பழகன் சட்டசபையிலேயே “எனக்கு நான் முன்பு செய்த தொழில் தெரியும் உங்களுக்கு உங்கள் பழைய தொழில் தெரியுமா” என்று விரசமாகப் பேசினார்.
- கல்லக்குடியில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்து கடும் விமர்ச்சனம் செய்தார். அதில், அவர் எடப்பாடி இல்ல. டெட்பாடி.
- உதயநிதி ஸ்டாலின் – முதல்வர் பதவிக்காக, சசிகலா கால்ல அப்படி தானே விழுந்து கெடந்தாரு. டேபிள், சேர்குள்ளலாம் புகுந்து வந்தாரு. விட்டா அந்த அம்மா காலுக்குள்ளயே புகுந்துருப்பாரு என்று நக்கல் நையாண்டி செய்தார்.

“அழுக்கு வார்த்தைகள்: தூற்றுதல் மற்றும் துஷ்பிரயோகத்தின் கலாச்சார வரலாறு” – வெங்கடாசலபதி: 07-01-2017 அன்று மாலை, சென்னை, சென்னை மேம்பாட்டு ஆய்வுக் கழகத்தின் பேராசிரியர் வெங்கடாசலபதி அவர்களால் “அழுக்கு வார்த்தைகள்: தூற்றுதல் மற்றும் துஷ்பிரயோகத்தின் கலாச்சார வரலாறு” வழங்கப்பட்டது. அவர் விசித்திரமான, கோபமான மற்றும் வினோதமான சூழ்நிலைகளில் மக்களால் துஷ்பிரயோகம், சாபம், பெயர்-அழைப்பு, கெட்ட மொழி பயன்படுத்துதல் போன்றவற்றைக் கையாண்டார். 19 ஆம் நூற்றாண்டில், ஷேக்ஸ்பியரில் தோன்றிய அழுக்கு வார்த்தைகள் தாமஸ் பவுட்லரால் அகற்றப்பட்டு “பவுட்லெரிசடோயன்” என்று அழைக்கப்பட்டது. அதே வழியில், பிரிட்டிஷ் அரசாங்கம் சில பகுதிகளை வெளியேற்றிய பிறகு சில தமிழ் இலக்கியங்களை அனுமதித்தது. கமல்ஹாசனின் “அபூர்வ ராகங்கள்” என்ற வார்த்தையில் எப்படி பயன்படுத்தப்பட்டது என்பதைக் குறிப்பிடும் இலக்கியங்களை விட சினிமாக்களில், அரிதாகவே மோசமான வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டன. அவர் தேர்ந்தெடுத்த எடுத்துக்காட்டுகள் தேர்ந்தெடுக்கப்பட்டவை, இது போன்ற மோசமான மொழியைப் பயன்படுத்துபவர்கள் மட்டுமே பயன்படுத்துகிறார்கள், மற்றவர்கள் பயன்படுத்தவில்லை. திராவிடத் தலைவர்கள் மேடைகளில் எப்படி அநாகரிகமான, ஒழுக்கக்கேடான வார்த்தைகளால் அவதூறாகப் பயன்படுத்தினார்கள் என்பதை வசதியாக அடக்கி வைத்திருந்தார். பெண்கள் ஒருபோதும் துஷ்பிரயோகம் செய்வது போல், இயற்கையில் “ஆணாதிக்கம்” போன்ற துஷ்பிரயோகங்களை அவர் பின்பற்ற முயன்றார். அவர் லாவகமாகவும், முரட்டுத்தனமாகவும், வாய்மொழியாகவும் இருந்தபோதிலும், “அடப்பாவி” என்பதைத் தவிர, எந்த ஒரு மோசமான வார்த்தையையும் அவர் ஒருபோதும் உச்சரிக்கவில்லை. அவர் நான்கு வார்த்தைகளை குறிப்பிட்டார், சில உதாரணங்களை மேற்கோள் காட்டி “F….K” என்ற வார்த்தை. முட்டாள், தட்டான், போர்ச்சுகீசியர் பறவர்களை, முகமதியர் திட்டுவதால் தான் மதம் மாறினர். அதாவது, சேவியர், பாதுகாப்பேன் என்ற சரத்துடன் தான் அவர்களை மதம் மாற்றினார்[3].
© வேதபிரகாஷ்
13-01-2022

இந்திரா காந்தியை, இவ்வாறெல்லாம் வசைபாடினார்………………….பிறகு கூட்டணியும் வைத்டுக் கொண்டார்………..
[1] தினமலர், ஆர்.எஸ். பாரதியை கைது செய்ய பா.ஜ., கோரிக்கை, மாற்றம் செய்த நாள்: ஜன 13,2023 22:19.
[2] https://m.dinamalar.com/detail-amp.php?id=3217369
[3] வெங்கடாசலபதி பேச்சை, இங்கே கேட்கலாம்: https://podtail.com/en/podcast/centre-of-south-asian-studies-seminars/professor-a-r-venkatachalapathy-dirty-words-a-hist/

காமராஜரை வசவு பாடிய, மாமேதை-கலைஞர்-கருணாநிதி……

எம்ஜிஆரையும் இவ்வாறு வசைபாடியுள்ளதை கவனிக்க வேண்டும்……