ஆனைமுகத்தோனுக்கு ஆனைவெடி வைத்து உடைத்தேன் என்று ஆண்டிப்பட்டி ராஜா, ஆனைமுத்து இழவு விழாவில் பேசி ஒப்பாரி வைத்தது! ஈவேராவை பின்பற்றி மாலிகாபூராக மாறியது (2)

அம்மா கொடுத்த விபூதிகளை முதலில் பூசிக் கொண்டேன், பிறகு தூக்கி எறிந்தேன்: “1973 இல் நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது, பெரியார் குடில் நடத்தினார் ஆனைமுத்து, அதில் நான் படித்தேன், அப்போது நான் விடுதிக்கு கிளம்பும்போதே என் அம்மா, இது முருகன் கோயில் விபூதி… காலையில் எழுந்ததும் இந்த விபூதிகளை வச்சுக்கோ, இருட்டில் போனால் இந்த விபூதி வச்சுக்கோ என்று தருவாங்க. நானும் வச்சிட்டு இருந்தேன். அப்போதுதான் பெரியாரின் கடைசி உரையை நான் கேட்டேன்.. …….அதற்கு பிறகு மதம் ஏன் ஒழிய வேண்டும் என்பது போன்ற சின்ன சின்ன புத்தகங்களைப் படித்தேன். அதன்பிறகுதான் அந்த விபூதிகளை எல்லாம் தூக்கிப் போட்டேன். தூக்கிப் போட்டதும் இல்லாமல் எங்க ஊரில் ஒரு பிள்ளையார் சிலை இருந்தது, அந்த சிலைக்கு கீழே ஒரு ஆனைவெடி வச்சுட்டேன்.. அது உடைந்து சிதறியது, பின் அது பெரிய பிரச்சனை ஆயிடுச்சு. அதெல்லாம் ஒரு காலம்.. …” சிறுவயதில் அத்தகைய எண்ண உருவானது, என்பது, மனோதத்துவ ரீதியில் அலசவேண்டியுள்ளது. ஆனைமுத்து வீட்டில் எல்லோரும் கடவுள் நம்பிக்கைக் கொண்டவர்கள் தான். ராசாவைப் போல யாரும் அம்மாவின் பேச்சைக் கேட்காமல், மனம் புண்படும் படி நடந்து கொள்ளவில்லை.

நானே நினைத்தாலும் இந்துவாக இருந்து என்னால் வெளியேற முடியாது: ஏ.ராசா பேசியது, “என் வாழ்வில் நான் மாற்றியதற்கு காரணம் பெரியார் பேசிய அந்த கடைசி பேச்சு தான். தொடர்ந்து பேசிய அவர் நானே நினைத்தாலும் இந்துவாக இருந்து என்னால் வெளியேற முடியாது[1]. ஏன் என்றால் இந்து அமைப்பு சட்டத்தில் யார் கிறிஸ்துவர்கள், யார் இஸ்லாமியன், யார் யூதன் இல்லையோ மற்ற அனைவரும் இந்து என்றுதான் சட்டம் உள்ளது. எனவே நானே நினைத்தாலும் வெளியேற முடியவில்லை அப்படி வெளியேறினால் அந்த நாள் வந்தால் அதுதான் ஆனைமுத்துவிற்கு மரியாதை செய்யும் நாளாக இருக்கும்,” என தெரிவித்த அவர் காவியை அழிக்க அனைத்து கருப்பு சிவப்பு நீலமும் ஒன்று சேர வேண்டும் என கூறினார்[2]. இங்கு, அம்பேத்கர் அரசியல் சாசனம் சரியில்லை என்கிறாரா அல்லது இந்துசார்புடையது என்கிறாரா என்பதை கவிக்க வேண்டும். அம்பேத்கர் இந்துவிரோதி, இந்துமதத்தை வெறுப்பவர், தோஷிப்பவர்….. அதனால் தான், அவரது பேச்சுகளும், புத்தகங்களும் அவ்வாறே இருந்தன. பிறகு, அவரது அரசியல் சாசனம், நிர்ணய சட்டத்தைக் குறை சொல்வது ஏன் என்று தெரியவில்லை.

ராசா கொடுக்கும் விளக்கம்[3]: ‘இந்து’ என்றழைக்கப்படும் மக்களில் 95% சதவீதமாகவுள்ள இந்த பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உரிமைக்கோரி தி.மு.க போராடியபோதெல்லாம் அவற்றை எதிர்த்தவர்கள் கிறிஸ்தவர்களா? இஸ்லாமியர்களா? இல்லையே! அதை செய்தவர்கள் பிராமணர்களும் அவர்களோடு சேர்ந்த முன்னேறிய சாதியை சார்ந்த இந்துக்களும்தான். வேறு மொழியில் சொன்னால், பாஜகவும் அதன் பரிவாரங்களுமே இன்றுவரை இடஒதுக்கீட்டை எதிர்த்து வருகின்றன. எனவே, தி.மு.க இந்து விரோத கட்சியல்ல. யார் ‘இந்து’ என்பதில் பிரச்சனை இருக்கிறது.‘இந்து’ என்று தங்களை ஏற்கும் பிற்படுத்தப்பட்ட சூத்திரர்களுக்கும், தாழ்த்தப்பட்ட பஞ்சமர்களுக்கும், அந்த மதத்தில் சொல்லப்பட்டுள்ள வரையறைகளும், வரம்புகளும், கடமைகளும், கட்டுப்பாடுகளும் ஏற்புடையதா என்பதில் எங்களுக்கு கருத்து வேறுபாடு உண்டு. அதனால்தான், பேரறிஞர் அண்ணா அவர்களே ‘இந்து’ எனும் அடையாளத்தை ஏற்க மறுத்தார். இந்த கருத்துப் போராட்டம் கடந்த நூறு ஆண்டுகளுக்கு மேலாக, குறிப்பாக 1916-ல் வெளிவந்த பிராமணர் அல்லாதோர் அறிக்கை (Non-Brahmin Manifesto) வந்ததில் இருந்தே தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. அந்த கருத்துப் போராட்டத்தில் நாங்கள் எப்போதும் தோற்றதில்லை. தி.மு.க.வின் அரசியல்-சமூகப்பார்வை தமிழர்களை இனத்தால், மொழியால் இனணப்பதேயன்றி; மதத்தால், சாதியால் பிரிப்பதல்ல!.: என்றெல்லாம் விளக்கம் கொடுத்தது விசித்திரமாக இருந்தது[4].

இந்துவிரோதம் மற்றும் எங்க கட்சியில் இந்துக்கள் உள்ளார்கள் என்ற முரண்பாடு தொடரும்: ஆ. ராசா என்கின்ற ஆண்டிப்பட்டி ராஜா இந்து-துவேசம் பேசுவது புதியதல்ல. அவரது வீடியோ பேச்சுகள் ஏற்கெனவே அந்த இதுவிடரோதத் தன்மையினை வெளிக்கட்டியுள்ளது. ஸ்டாலின் விபூதியை அழித்தது போல, இவரும் தனது பராக்கிரமத்தைக் காட்டுகிறார் போலும். தாயின் மத உணர்வுகளைக் கூட மதிக்காதவர்களை மக்கள் புரிந்து கொள்வர்கள். அதே போலத்தான், துர்கா ஸ்டாலின், தனது கணவனுக்கு நேர்த்திக் கடன் செய்வது, விரதம் மேற்கொள்வது, பூஜைகள் செய்வது, சமஸ்கிருத சுலோகங்கள் சொல்லி பாராயணம் செய்வது போன்ற காரியங்கள். தனது மாமனாருக்கும் காசிக்குச் சென்று காரியங்களை செய்து வந்துள்ளார். ஆனைவெடி வைத்து ஆனைமுகத்தோனை உடைப்பேன். ஆனால், தீபாவளிக்கு வாழ்த்து சொல்ல மாட்டேன், திமுகவினரும் சொல்ல மாட்டார்கள்! ஆக, திமுகவின் இரு வேடங்கள் தெரிந்த விசயமே. இதனை சாதாரண மக்கள் புரிந்து கொள்ளும் வரை, தொடர்ந்து கொண்டே இருக்கும். பிரச்சாரம், விளம்பரங்கள் அதிகமாகும்.

ஆ.ராசாவின் சித்தாந்தம் என்ன?: சிறுவயதிலிருந்து வெடி வைகத்தேன், உடைத்தேன் போன்ற மனப் பாங்கு, வன்முறையினைத் தான் காட்டுகிறது. அத்தகைய உணர்சுகள் அவர் முகத்திலும்வெளிப்படுவது, புகைப்படங்களில் காணலாம்.
- ஈவேரா உடைத்தார், அதனால் நானும் உடைத்தேன் என்பது அந்த துலுக்க விக்கிரங்களை உடைக்கும் தீவிரவாதத்தை தான் காட்டுகிறது.
- ஏனெனில், மொஹம்மதைப் போலத்தான், தானும் மொஹம்மது என்று சொல்லிக் கொண்டு, இந்தியாவில் கஜினி-கோரி மொஹம்மதுகள் தீவிரவாதத்துடன் கோவில்களை இடித்தார்கள், விக்கிரங்களை உடைத்தார்கள், செல்வங்களைக் கொள்ளையடித்துச் சென்றாற்கள்.
- தென்னகத்தில்மாலிக்காபூர் இடைக்காலத்தில் அவ்வாறு செய்தான். இப்பொழுது, நவீன காலத்தில் திராவிடத்துவ வாதிகள் செய்து வருகின்றனர்.
- சிலை உடைப்பு சித்தாந்தம், நியாயப் படுத்துத்தல், பெருமைப் பேச்சிக் கொள்வது எல்லாம் ஒன்றாகத்தான் இருக்கின்றன.
- அண்ணா சொல்லியபடி, “இனம் இனத்தோடு சேர்கிறது,” கோவில் இடிப்புகள். விக்கிர உடைப்புகளும் அவ்வாறே உள்ளன.
- அம்மாவின் உணர்வுகளையும் மீறி, மதிக்காமல், அவர் கொடுத்த விபூதிகளை எறிந்தேன் என்பதெல்லாம், ஸ்டாலினை திருதிப் படுத்தவா, அல்லது அவரையும் விஞ்சிய திராவிடத்துவத் தலைவர் என்பதை எடுத்துக் காட்டாவா என்று தெரியவில்லை.
- எஸ்.சி என்ற நிலையில் எல்லாவற்றையும் அனுபவித்து, “நானே நினைத்தாலும் இந்துவாக இருந்து என்னால் வெளியேற முடியாது,” என்று பேசியிருப்பதெல்லாம், எப்படி இந்து என்று சொல்லிக் கொண்டு, இந்திய அரசியல் நிர்ணயச்சட்டத்தின் படியே ஏமாற்றுகிறார் என்பதும் தெரிகிறது.
© வேதபிரகாஷ்
06-01-2022

[1] தினசரி, பிள்ளையார் சிலைக்கு வெடி வைத்தேன்: இந்து மதத்தை அவமதித்து ஆ ராசா சர்ச்சை பேச்சு, ஜனவரி.5, 2022 11.30 AM.
[2] https://dhinasari.com/latest-news/236281-i-bombed-the-pillaiyar-statue-a-rasa-controversy-speech-insulting-hinduism.html
[3] புதியதலைமுறை, “திமுக இந்து விரோத கட்சியல்ல. யார் ‘இந்து’ என்பதில்தான் பிரச்சனை” –ஆ.ராசா சிறப்பு பேட்டி, சிறப்புச் செய்திகள், puthiyathalaimurai.com sharpana Published :21,Jul 2020 04:07 PM
[4] https://www.puthiyathalaimurai.com/newsview/74315/The-DMK-is-not-an-anti-Hindu-party–The-problem-is-who-is-a—-Hindu—–A-Rasa-Special-Interview
