Archive for the ‘வள்ளுவர்’ Category

கோல்வால்கருக்கும் திருவள்ளுவருக்கும் என்ன சம்பந்தம்? – பகவத் கீதை, சங்கராச்சாரியார், வீரமணி, திராவிட கழகம் – பெரியார் திடலில் விவாதம் (1)!

செப்ரெம்பர் 19, 2015

கோல்வால்கருக்கும் திருவள்ளுவருக்கும் என்ன சம்பந்தம்? – பகவத் கீதை, சங்கராச்சாரியார், வீரமணி, திராவிட கழகம்பெரியார் திடலில் விவாதம் (1)

Periyar thidal - 17-09-2015 DK conference

Periyar thidal – 17-09-2015 DK conference

கோல்வால்கருக்கும் திருவள்ளுவருக்கும் என்ன சம்பந்தம்? அவர் திருக்குறளைப் பற்றி என்ன கூற முடியும்?: விடுதலை, “ஆர்.எஸ்.எஸின் குருநாதர் என்று சொல்லப்படும் கோல்வால்கர் தமது ஞானகங்கை என்ற நூலில் திருக்குறள் பற்றிக் கருத்துக்கள் கூறியுள்ளார் என்று வீரமணி சொன்னபோது அரங்கத்தில் உள்ளோர் அனைவரின் கண்களும் தமிழர் தலைவரையே குத்திட்டு நின்றன. கோல்வால்கருக்கும் திருவள்ளுவருக்கும் என்ன சம்பந்தம்? அவர் திருக்குறளைப் பற்றி என்ன கூற முடியும்? என்ற அய்ய வினா அவர்களைத் தொற்றி நின்றது. திருக்குறள் இந்து மதத்தின் வருண தர்மத்தைப் பாதுகாக்கும் நூல் என்று கோல்வால்கர் குறிப்பிட்டதை கழகத் தலைவர் அவர்கள் எடுத்துச் சொன்ன போது மக்கள் மத்தியில் ஓர் ஏளனமான குறிப்புத் தென்பட்டது”, என்று இன்றைய நாளிதழில் வெளியிட்டுள்ளது[1].  ஒரு புத்தகத்தில் உள்ளவற்றை முழுமையாக அல்லது எந்த இடத்தில், எவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது என்பதனை சொல்லாமல், அங்கங்கு வாக்கியங்களைப் பிய்த்து போட்டு, திரிபுவாதம் செய்வது திராவிடத்துவவாதிகளுக்கு கைவந்த கலையாக இருந்து வருகிறது. இனி தொடர்ந்து வீரமணி என்ன சொன்னார் என்று பார்ப்போம்.

பெரியார், அம்பேத்கர், கோவால்கர்

பெரியார், அம்பேத்கர், கோவால்கர்

பாணினி இலக்கியம் என்பதெல்லாம் திருக்குறளுக்குப் பிறகு பிற்காலத்தில் வந்தது தான்: வீரமணியின் பேச்சு இவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ளது, “கோல்வால்கர் குறளைப் பற்றிச் சொன்னதைச் சொன்ன அடுத்த வரியிலே நூல்கள் எல்லாம் நூல்களை பற்றி எழுதுகின்றன என்று சொன்னபோது அரங்கமே கை தட்டலால் குலுங்கியது என்றே சொல்ல வேண்டும். திருக்குறளை நாம் பரப்புவதைவிட அதனைத் திரிபுவாதத்திற்கு இடம் கொடுக்கச் செய்யாமல் அதனைப் பாது காக்க வேண்டிய இடத்தில் நாமிருக்கிறோம் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் சொன்னது மிகவும் முக்கியமானதாகும். இனமானப் பேராசிரியர் தமிழ் இலக்கியங்களில் திருக்குறளை விட மூலமான நூல் வேறு எதுவும் இல்லை பாணினி இலக்கியம் என்பதெல்லாம் திருக்குறளுக்குப் பிறகு பிற்காலத்தில் வந்தது தான்[2]. இலக்கண நூல் என்கிற போது தொல்காப்பியத்துக்கு ஈடாகாது. சமஸ்கிருத இலக்கணங்களுக்கு முந்திய தமிழ் இலக்கணம் காலத்தால் முந்தியது என்று திமுக பொதுச் செயலாளர் குறிப்பிட்டார். கீதையின் மொழி பெயர்ப்பா? திருக்குறள் என்று சொல்லும்போதுஅதனை எதிர்த்துக் குரல் கொடுக்க முடியாத நிலையில் திருக்குறள் கீதையின் மறுபதிப்பு என்பதுபோல பார்ப்பனர் பேச எழுத ஆரம்பித்தனர்”.

Three Kamchi Acharyas

Three Kamchi Acharyas

சூப்பர் சீனியர் சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி, தீய திருக்குறளை படிக்கமாட்டோம் என்று பொருள் கூறியுள்ளார்[3]: திருக்குறளைப் பற்றி விளக்குகிறார் வீரமணி, “பகவன் என்ற பார்ப்பனருக்கும் ஆதி என்ற புலைச்சிக்கும் பிறந்தவர் என்றெல்லாம் பார்ப்பனர்கள் உளறினர்[4]. சிறந்த நூல்களை படைப்புகளைச் செய்யக் கூடியவர்கள் பார்ப்பனர்களாகத்தான் இருக்க முடியும் என்ற இறுமாப்பு எப்பொழுதுமே பார்ப்பனர்களுக்குண்டு. மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி குறள் பற்றி என்ன கூறினார்? ஆண்டாள் பாடியதாகக் கூறப்படும் திருப்பாவையில் இடம் பெற்றுள்ள இரண்டாம் பாடல் நாட்காலை நீராடி மையிட்டு எழுதோம். மலரிட்டு நாம் முடியோம்; செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்றோதோம் அய்யமும் பிச்சையும் ஆம்தனையும் காட்டி உய்யுமாறு எண்ணி உகந்தேலோர் எம்பாவாய்! என்பது ஆண்டாளின் திருப்பாவைப் பாட்டு; இதில் வரும் தீக்குறளை சென்றோதோம் என்ற வரிக்கு சூப்பர் சீனியர் சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி என்ன பொருள் கூறினார் தெரியுமா? தீய திருக்குறளை படிக்கமாட்டோம் என்று பொருள் கூறியுள்ளார். ஆனால் அவ்வரிக்கு உண்மையான பொருளோ வேறுவிதமானது; குறளை என்றால் கோள் சொல், குற்றம் என்ற பொருள் ஆகும். (மதுரைத் தமிழ்ப் பேரகராதி) தீக்குறளைச் சென்றோதோம் என்றால் தீமை விளைவிக்கும் கோட் சொற்களைச் சென்று சொல்ல மாட்டோம் என்பதுதான் இதன் பொருள்”.

திருக்குறள்- பகவத் கீதை

திருக்குறள்- பகவத் கீதை

திருக்குறளில் உள்ள அறத்துப் பால் கிட்டத்தட்ட பகவத் கீதையின் தமிழாக்கமேயாகும்: வீரமணி, சங்கராச்சாரியாரை சாடுகிறார்[5], “சூப்பர் சீனியர் சங்கராச்சாரியார் இவ்வாறு பொருள் கூறியதற்குத் தமிழ் மீதும் அதன் உயரிய நூலான திருக்குறள் மீதும் அவர் கொண்டிருந்த (இவர்கள் மொழியில் சொல்ல வேண்டுமென்றால்) ‘துவேஷத்தைதான் வெளிப்படுத்தும். அவ்வாறு அபாண்டமாக எழுதக் கூடாது என்பது அவாளின் எண்ணமென் றால் அவருக்குத் தமிழ் ஞானம் போதாது என்பதையாவது ஒப்புக் கொள்ள வேண்டும். அந்த சூப்பர் சீனியர் தான் அவ்வாறு குறள்மீது தமக்கே உரித்தான நஞ்சை உமிழ்ந்தார் என்றால் இப்பொழுது காஞ்சி சீனியர் சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி என்ன சொன்னார் தெரியுமா? “திருக்குறளில் உள்ள அறத்துப் பால் கிட்டத்தட்ட பகவத் கீதையின் தமிழாக்கமேயாகும். வாழ்வின் வழிமுறைகளும், குறிக்கோளும் அதில் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.” (தினத்தந்தி 15.4.2004) என்று மதுரையில் பேசினாரே! பிறப்போக்கும் எல்லா உயிர்க்கும் என்ற குறள் எங்கே? சதுர்வர்ணம் மயாசிருஷ்டம் (நான்கு வருணத்தையும் நானே படைத்தேன்) என்று கூறும் மனித குல விரோத கிருஷ்ணனின் கீதை எங்கே?

What Golwalkar said about Thirukural

What Golwalkar said about Thirukural

கோல்வால்கர் திருக்குறளைப் பற்றி சொன்னது என்ன?: கோல்வால்கர் சொன்னதை ஆங்கிலத்தில் உள்ளபடி கீழே கொடுக்கப்பட்டுள்ளது[6].

These days we are hearing much about Tamil. Some protagonists of Tamil claim that it is a distinct language altogether with a separate culture of its own. They disclaim faith in the Vedas, saying that Tirukkural is their distinct scripture. Tirukkural is undoubtedly a great scriptural text more than two thousands year old. Saint Tiruvalluvar is its great author. We remember him in our Pratah-smaranm. There is an authentic translation of that book by V.V.S.Iyer, the well-known revolutionary. What is the theme propounded therein, afterall? The same old Hindu concept of chaturvidha-purushartha is put forth as the ideal. Only the chapter on Moksha comes in the beginning. It does not advocate any particular mode of worship or name of God but enuntiates the pure idea of Moksha. Thus it is not even a sectarian book. Mahabharata also eulogises the same picture of social life as Tirukkural presents. Except with the Hindu, this unique vision of social life is not found anywhere else. It is thus purely a Hindu text propounding great Hindu thoughts in a chaste Hindu language.

இதன் தமிழ் மொழிபெயர்ப்பு இவ்வாறு கொடுக்கப்படுகிறது, “இந்த நாட்களில் நாம் தமிழைப் பற்றி அதிகமாக கேள்விப்படுகிறோம். தமிழைத் தூக்கிப் பிடிப்பவர்கள், தமிழ் ஒட்ரு தனி மொழி என்றும், அதற்கென தனியாக நாகரிகம் உள்ளது என்றும் கூறிக்கொள்கிறார்கள். வேதத்தை மறுத்து, திருக்குறள் தான் தங்களது புனித நூல் என்றும் பறைச்சாற்றிக் கொள்கிறார்கள். சந்தேகமில்லாமல் திருக்குறள் ஒரு மகத்தான நூல் தான், அதன் காலம் 2,000 ஆண்டுகளுக்கு முந்தையதாக உள்ளது. அதனை எழுதிய திருவள்ளுவர் ஒரு பெரிய கவியாவர். அவரை நாம் நமது “பிராத-ஸ்மரணத்தில்” (விடியற்காலை ஸ்தோத்திரம்) தினமும் நினைவு கொள்கிறோம். வி.வி.எஸ். ஐயர் என்ற புரட்சிப் போராளி மொழிபெயர்த்துள்ள ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு நூல் உள்ளது. அதில் எந்த தத்துவம் தான் சொல்லப்பட்டிருக்கிறது? இந்துமத தத்துவமான “சதுர்வித-புருஸார்த்தம்” தான் அதில் உள்ளது. “மோட்சம்” முதலில் வருகிறது. எந்த ஒரு வழிபாட்டையும், கடவுள் பெயரையும் குறிப்பிடாமல் மோட்சத்தைப் பற்றிய விவரத்தை கூறுகிறது. அதனால், அது எந்த பிரிவினரையும் சேர்ந்த நூலாகாது. மகாபாரதத்தில் காணப்படும் சமூக வாழ்க்கை அப்படியே திருக்குறளில் காணப்படுகிறது. இந்துவிடம் தவிர, இத்தகைய சிறப்பான சமூக வாழ்க்கை தத்துவம் வேறேங்கும் காணமுடியாது. இந்து சிந்தனைகளை விளக்கும், பவித்ரமான இந்து மொழியில் உள்ள ஒரு தூய்மையான நூல் ஆகும்”. இத்தகைய விவரங்களை பி.எஸ்.சுப்பிரமணிய சாஸ்திரி[7], வி.ஆர். ராமச்சந்திர தீட்சிதர் போன்றோர் எடுத்துக் காட்டியுள்ளனர். அதனால், கோல்வால்கர் சொல்லிவிட்டார் என்று திராவிடத்துவவாதிகள் இப்பொழுது புலம்ப வேண்டாம்.

© வேதபிரகாஷ்

19-09-2015

[1] விடுதலை, வரலாறு பேசும் வான் புகழ் விழா!, மின்சாரம், வெள்ளி, 18 செப்டம்பர் 2015 16:24

2 இத்தகைய அபத்தமான வாதங்களை வைத்துக் கொண்டு, இன்னும் எத்தனை காலம் தான் தள்ளுவார்கள் என்று தெரியவில்லை.

[3] இதற்கான ஆதாரங்களைக் கொடுக்கவில்லை. அக்னிஹோத்ரம் போன்றவர் அரைகுறையாக எழுதி வைத்ததை வைத்துக் கொண்டு வாதம் புரிந்தால் என்ன பிரயோஜனமும் இல்லை.

[4] அப்படியென்றால், திருவள்ளுவமாலை போன்ற நூற்களை பார்பொபனர்களா எழுதி வைத்தனர்?

[5] http://www.viduthalai.in/e-paper/108862.html

[6] M. S. Golwalkar, Bunch of Thought, Third edition, pp.100-101

http://www.rss.org/Encyc/2015/4/7/334_03_46_30_Bunch_of_Thoughts.pdf

[7] P. S. Subramanya Sastri, A History of Tamil Literature, Annamalai University, Chidambaram.

P. S. Subramanya Sastri, Tolkappiyam, Annamalai University, Chidambaram.

திகவின் போலி நாத்திகமும், சீமானின் புது ஆத்திகமும் – தாக்கப்படுவது இந்துமதமே- செபாஸ்டியன் சீமான் திடீரென்று “முருக பக்தன்” ஆகியது, இந்து வேடம் போடுவது, ஆனால் கருவறை நுழைவு போராட்டம் நடத்துவது (3)

பிப்ரவரி 13, 2015

திகவின் போலி நாத்திகமும், சீமானின் புது ஆத்திகமும்தாக்கப்படுவது   இந்துமதமே செபாஸ்டியன் சீமான் திடீரென்றுமுருக பக்தன்ஆகியது, இந்து வேடம் போடுவது, ஆனால் கருவறை நுழைவு போராட்டம் நடத்துவது (3)

சீமானின் புதிய கட்சி 2015

சீமானின் புதிய கட்சி 2015

சுபவீரப்பாண்டியனும் செபாஸ்டியன் சீமானும்: சுபவீரப்பாண்டியன் என்கின்ற திக-நாத்திகவாதி சீமானைத் தாக்கி தனது வலைப்பூவில் எழுதியிருப்பது வியப்பாக இருக்கிறது[1]. ஆனால், சுபவீரப்பாண்டியனின் எழுத்துக்களை உன்னிப்பாகப் படித்துப் பார்த்தால் தெரியும், தாக்கப்படுவது இந்துமதம் தான் என்பது. ஜைனர்களைப்போல, பௌத்தர்களைப் போல, கிருத்துவர்களைப் போல இவர்களும் அதே முறையினை கையாளுகிறார்கள். இதில் சுபவீரப்பாண்டியன் நாத்திகம் மற்றும் சீமான் கிருத்துவம் சித்தாந்தளுக்குக் கொடி பிடிக்கின்றனர். தமிழக நாத்திகம் எப்படி கிருத்துவ-இஸ்லாம் மதங்களை எதிர்க்காதோ, அதே போல “தமிழர் சமயம்” என்று சொல்லிக் கொண்டு, செபாஸ்டியன் சீமான் இந்துக்களை ஏமாற்ற வேடம் போட்டுள்ளது தெரிகிறது. சுபவீரப்பாண்டியன் எழுதியுள்ளதை அப்படியே போடப்பட்டுள்ளது. ஆனால், பத்திகள் சேர்க்கப்பட்டு தலைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. விமர்சனம், ஒவ்வொரு பத்தியின் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சீமான், முருகன், ராவணன்

சீமான், முருகன், ராவணன்

வீரத் தமிழர் முன்னணியும், பண்பாட்டுப் புரட்சியும்: இடுப்பில் பச்சை வேட்டி, தோளில் பச்சைத் துண்டு, கையில் வேல், காவடி எடுக்கும் மனைவி அருகில் என்று பழனிக்குப் புறப்பட்டு விட்டார் தம்பி சீமான். தனியாக இல்லை….தம்பிகள் பலரையும் அழைத்துக் கொண்டு! பண்பாட்டுப் புரட்சி அல்லாது, அரசியல் புரட்சி வெல்லாது’ என்னும் முழக்கத்தோடு, “வீரத் தமிழர் முன்னணி” என்னும் பெயரில் பழனிக்குக் காவடி எடுப்பதே பண்பாட்டுப் புரட்சி என அறிவித்துவிட்டார். (இந்தப் பண்பாட்டுப் புரட்சியை ஆண்டுதோறும் லட்சக்கணக்கான முருக பக்தர்கள் ஏற்கனவே செய்து கொண்டுள்ளனர். அது மட்டுமின்றி, அலகு குத்தி, நெருப்பு மிதித்துக் காவடி எடுக்கும் பெரும் புரட்சியாளர்களாகவும் அவர்கள் உள்ளனர்). இது குறித்து,  ‘தி இந்து’ 08.02.15 ஆம் நாளிட்ட தமிழ் நாளேட்டில் ‘இயக்குனர் சீமான் புதிய இயக்கம் தொடக்கம்’ என்னும் தலைப்பில் ஒரு செய்தி வெளிவந்துள்ளது. அதே செய்தியில், ‘இந்த இயக்கம் புதிய அரசியல் கட்சியல்ல என்றும், நாம் தமிழர் கட்சியில் ஒரு இயக்கமாகச் செயல்படும் என சீமான் தெரிவித்தார்’ என்றும், ‘நாம் தமிழர் கட்சியில் ஏற்பட்ட நெருக்கடி காரணமாகவே சீமான், அந்தக் கட்சிக்கு மாற்றாக புதிய கட்சி தொடங்குவதற்காக இந்தப் புதிய இயக்கத்தைத் தொடங்கியதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது’ என்றும் இருவேறு செய்திகள் இடம்பெற்றுள்ளன. அவர்கள் கட்சி விவகாரம் எப்படி வேண்டுமானாலும் போகட்டும். ‘நாம் பண்பாட்டுப் புரட்சி’ பற்றி மட்டும் பார்க்கலாம். கடந்த 7ஆம் தேதி பழனியில் தொடங்கப்பட்டுள்ள வீரத் தமிழர் முன்னணி நிகழ்ச்சி, இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக, இணையத்தளத்தில் (யூ ட்யூப்) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில் ஒன்றரை மணி நேரம் சீமானின் பேச்சு இடம் பெற்றுள்ளது. அதனை முழுமையாகக் கேட்ட பின் நமக்குப் பல செய்திகள் புரிகின்றன.

  1. திராவிடத்துவ சகோதரப்போராட்டம் “கண்ணீர் துளிகள்” போன்று வெளிப்படுகிறது.
  2. கிருத்துவ சர்ச் அல்லது முஸ்லிம்களின் மசூதிக்கு செல்லாமல், கோவிலுக்குச் செல்லத் துடித்திருப்பதால், ஆக்கிரமிப்பு எண்ணமும் வெளிப்படுகிறது.
  3. திராவிட நாத்திகம் நீர்த்துப் போகும் வேளையில், திராவிட ஆத்திகம் திராவிடர்களைக் குழப்பி விடுமோ என்ற அச்சமும் வெளிப்பட்டுள்ளது.

சீமானின் குழப்புவாதம்

சீமானின் குழப்புவாதம்

முன்னோர் வழிபாடும், முருகன் வழிபாடும்: தன் உரையின் மூலம் அவர் மூன்று செய்திகளைத் தொட்டுக் காட்டுகின்றார். முருகன் வழிபாடு என்பது முன்னோர் வழிபாட்டின் ஒரு பகுதி என்பதும், தமிழின உணர்வின் வெளிப்பாடு என்பதும், பார்ப்பனிய எதிர்ப்பின் வடிவம் என்பதும் அவருடைய கருத்துகளாக வெளிப்படுகின்றன. முன்னோர் வழிபாடு என்பது புதுமையும் இல்லை, புரட்சியும் இல்லை. காலகாலமாகத் தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கும் ஒன்றுதான் அது. ‘வையத்துள் வாழ்வாங்கு வாழ்வோரை வானுறையும்  தெய்வத்துள் வைத்துப்’ பார்க்கும் மரபு!  அதனைத்தான் நாட்டார் தெய்வ மரபு என்கிறோம். அந்த மரபில் முருகனை இணைத்து, அவன் நம் முப்பாட்டன் என்கிறது, வீரத் தமிழர் முன்னணி. முருகன், இராவணன், வள்ளுவர் ஆகிய மூவரையும் முன்னோர் வழிபாட்டில் சீமான் சேர்க்கின்றார். முருகன் புராணத்தில்  இடம் பெற்றுள்ள பாத்திரம். இராவணன் இதிகாசப் பாத்திரம். வள்ளுவரோ  வரலாறு. எல்லோரையும்  ஒன்றாகப் போட்டுக் குழப்பி அடிப்பதன் நோக்கம் திட்டமிடப்பட்ட ஒன்றாகவே தெரிகிறது. முன்னோர் வழிபாடு, நடுகல் வணக்கத்தில் தொடங்குகிறது. இது குறித்துத் தொல்காப்பியத்திலேயே, “காட்சி, கால்கோள், நீர்ப்படை, நடுகல்” என்று கூறப்பட்டுள்ளது. புறநானூற்றில் இது பற்றிய பாடல்கள் உள்ளன. சிலம்பில் கண்ணகிக்குக் கோட்டம் அமைப்பதே இந்த அடிப்படையில்தான். இந் நடுகல் வழிபாட்டின் தொடர்ச்சியாகத் தமிழகத்தின் தென் மாவட்டங்களில், அம்மன்,  மாடன், வீரன், கருப்பு ஆகிய முன்னோர் வழிபாடுகள் தொடங்கின. மாரியம்மன், காளியம்மன், இசக்கியம்மன் என்றும், சுடலை மாடன், பன்றி மாடன், காட்டு மாடன், புல மாடன் என்றும், மதுரை வீரன், முனிய வீரன், காத்தவராய வீரன் என்றும், பெரிய கருப்பு, சின்னக் கருப்பு, சங்கிலிக் கருப்பு, பதினெட்டாம்படிக் கருப்பு என்றும் பல தெய்வ வழிபாடாக அவை விரிந்தன.

  1. ஆன்மா, மறுபிறப்பு முதலியற்றில் நம்பிக்கை இல்லாத ஜென்மங்களுக்கு, முன்னோர் வழிபாடு பற்றி பேசுவது ஏமாற்றுவேலையே.
  2. திராவிட நாத்திகம், திராவிட ஆத்திகம் இரண்டுமே குழப்புவாதங்கள் தாம்.

தைப் பூசம் கொண்டாடினால், சிவராத்திரியும் கொண்டாடுவார்களா?: முருகன் நம் முன்னோன், அவனை வழிபட வேண்டும் என்றால், மாடன், வீரன், அம்மன் எல்லோரும் நம் முன்னோர்தானே! அவர்களையும் வழிபட வேண்டாமா? பிறகு, வருடம் முழுவதும் வழிபடும் வேலை ஒன்றினைத்தானே செய்து கொண்டிருக்க முடியும்? முருகன் நம் முன்னோன் என்பதால் ஆண்டுதோறும் தைப் பூசம் கொண்டாட வேண்டும் என்று கூறும் சீமான், சிவனும் நம் முப்பாட்டனுக்குப் பாட்டன் என்கிறார். அப்படியானால், சிவராத்திரி கொண்டாட வேண்டாமா? இந்த முன்னோர் வழிபாடு, வீரத்தமிழர் முன்னணி தொடக்கி வைக்கும் பண்பாட்டுப் புரட்சி என்கிறார்  சீமான். அப்படியானால்,  இதுவரை நடந்துவந்த வழிபாட்டுக்கெல்லாம்  என்ன பெயர்?  தமிழின உணர்வைத் தூண்டுவது எங்கள் நோக்கம், தமிழின மரபை மீட்பது எங்கள் நோக்கம் என்று அவர் பேசுகின்றார்.

  1. கந்தப்புராணம் ராமாயணத்தைப் பார்த்துக் காப்பியடிக்கப்பட்டது என்பதை சீமான் எதிர்ப்பாரா?
  2. கந்தப்புராணத்தை விமர்சித்த பெரியாரை, சீமான் விமர்சிப்பாரா, எதிர்ப்பாரா?
  3. தெய்வயானையை, விவாக ரத்து செய்ய வைப்பார்களா?

தொல்காப்பியர் முருகனுடன், கண்ணன், இந்திரன், வருணன் முதலியோரைச் சேர்த்தது: உண்மைதான், குறிஞ்சி நிலக் கடவுள் முருகன் என்றுதான் தொல்காப்பியம் தொடங்கிப் பழந் தமிழ் நூல்கள் எல்லாம் கூறுகின்றன. ஆனால் அவை முருகனை மட்டும்  குறிப்பிடவில்லை. வேறு பல தெய்வங்களையும் குறிப்பிடுகின்றன.

“மாயோன் மேயக் காடுறை உலகமும்

சேயோன் மேய மைவரை உலகமும்

வேந்தன் மேயத் தீம்புனல் உலகமும்

வருணன் மேயப் பெருமணல் உலகமும்”

என்கிறது தொல்காப்பியம்! மைவரை (குறிஞ்சி) உலகத்துச் சேயோனை (முருகன்) மட்டும் வணங்கினால் போதுமா?  காடுறை (முல்லை) உலகத்து மாயோனை (கண்ணன்), தீம்புனல் (மருதம்) உலகத்து வேந்தனை (இந்திரன்), பெருமணல் (நெய்தல்) உலகத்து வருணனை எல்லாம் வணங்க வேண்டாமா? அவர்களுக்கும் வெவ்வேறு நாள்களில் விழா எடுக்க வேண்டாமா? வீரத் தமிழர் முன்னணி தொடக்க விழாவில் பேசிய சீமான், தான் பக்தி மார்க்கத்தில் கலந்து விட்டதை மறைப்பதற்கு, இதுதான் பகுத்தறிவு என்கிறார். முருகனை வணங்க வேண்டும் என்று சொல்லும் அவர், பிள்ளையாரையும், ராமரையும் எதிர்த்துப் பேசுகின்றார். பார்ப்பனிய எதிர்ப்பில் உறுதியாக இருப்பது போல் காட்டிக் கொள்கின்றார். இது ஒரு ஏமாற்று வித்தை. தமிழ் உணர்வின் பெயரால், பகுத்தறிவுச் சிந்தனைகளைக்  காயடிக்கும் தந்திரம்.

  1. சங்கத்தமிழ் நூல்களில் ராமாயணம், மகாபாரதம் குறிப்புகள் அதிகமாகவே உள்ளனவே?
  2. இந்திர விழா கொண்டாட்டங்கள் ஐம்பெருங்காப்பியங்களில் உள்ளனவே?
  3. இதெல்லாம் ஆரிய சூழ்ச்சியா, திராவிட முரண்பாடா?

ஆரியப் பார்ப்பனியச் சூழ்ச்சியில் சிக்காமல் தப்பியவன் முருகன்: பழனிக்குப் போய் முருகனை வணங்கினோம் என்கின்றனரே, அங்கு முருகன் சிலைக்குப் பூஜை செய்பவர் யார்? போகர் வழிவந்த  புலிப் பாணிச் சித்தர்களா அங்கு கருவறைக்குள் உள்ளனர்? அவர்களைத்தான் திருமலை நாயக்கர் காலத்திலேயே தளவாய் ராமப்பைய்யர் துரத்தி விட்டாரே! பார்ப்பனர்கள்தானே இன்று அங்கு ஆதிக்கம் செய்கின்றனர். அவர் கட்சியைச் சேர்ந்த ஒருவர் பேசும்போது, “என் முப்பாட்டனைக் கண்டதும், மகிழ்ச்சியில்  கண் கலங்கி நின்று விட்டேன்” என்கிறார். கண் கலங்கி விட்டதால், உள்ளே இருக்கும் பார்ப்பனரைப் பார்க்கவில்லை போலிருக்கிறது! பாட்டனைப் பார்க்கப் போன அவர், குத்தாட்டம் போட்டு மகிழ்ந்தாராம். அவரே சொல்கிறார். அடேயப்பா…புதிய பண்பாட்டுப் புரட்சிதான். “ஆரியப் பார்ப்பனியச் சூழ்ச்சியில் சிக்காமல் தப்பியவன் முருகன்” என்கிறார் சீமான். எப்படித் தெரியுமா? நாரதர் கொண்டுவந்த மாம்பழக் கதையை அதற்கு எடுத்துக் காட்டாகக் கூறுகின்றார். பார்ப்பனியச் சூழ்ச்சியை எதிர்த்து அவர் பழனி மலைக்கு வந்து விட்டாராம். அந்தக் கதையே பார்ப்பனியக் கதைதான். அதனை நம்புவதும், சிவபெருமான் நக்கீரரிடம் நெற்றிக் கண்ணைத் திறந்து காட்டியதை நம்புவதும் எந்த விதமான பகுத்தறிவு என்று நமக்குப் புரியவில்லை. இந்த இரண்டு கதைகளையும் எடுத்துச் சொல்லித் தன் தொண்டர்களுக்குத் தமிழ் உணர்வை ஊட்ட முயல்கின்றார் அவர்.

  1. பத்துப்பாட்டு, எட்டுத்தொகையில் உள்ள பார்ப்பனர்களை என்ன செய்வார்கள்?
  2. பார்ப்பனப் பெண்களைத் திருமணம் செய்து கொண்டுள்ள திராவிடப்பித்தர்கள் என்ன செய்வார்கள்?
  3. வீட்டிலே இருக்கலாம், குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளலாம், மாமி-போல சாமி கும்பிடலாம், ஆனால், கோவிலில் இருப்பது ஏன் உறுத்துகிறது?
  4. எல்லா இடங்களிலும் விரட்டி விடுவதுதானே?

தனிநாடு கேட்டலும், மனைவியை வைத்து சாமி கும்பிடுதலும்: தமிழீழத் தேசியத் தலைவர் பிராபகரனுக்கு முன்பே தமிழனுக்குத் தனிநாடு கேட்டவர் முருகன் என்கிறார். எந்த வரலாற்று நூலிலிருந்து இந்தச் செய்தி கிடைத்ததோ தெரியவில்லை. இந்தக் கட்டுரையைப் படித்ததும், இங்கு எழுப்பப்பட்டுள்ள எந்த வினாவிற்கும் விடை சொல்லாமல், தி.மு.க.வில் யாரும் கோயிலுக்குப் போவதில்லையா, கலைஞர் வீட்டில் யாருக்குமே கடவுள் நம்பிக்கை கிடையாதா என்று நண்பர்கள் சிலர் பின்னூட்டம் இடுவார்கள் என்பதை அறிவேன். அது தனி மனித நம்பிக்கைக்கு உட்பட்டதே தவிர, அதற்கென்று தி.மு.க.வில் வீரத் தி.மு.க. முன்னணி என்று தனிப் பிரிவு ஏதும் இல்லை. சீமானின் துணைவியாருக்குக் கடவுள் நம்பிக்கை இருக்குமானால், அவர் காவடி தூக்கிக் கொண்டு போவது அவருடைய சொந்த விருப்பம். அதனை யாரும் கேள்வி கேட்கப் போவதில்லை. கேட்கவும் முடியாது. ஆனால் அதனையே ஒரு தத்துவமாக்கி, அதற்கு ஒரு அணியையும் உருவாக்கி, அவற்றை நியாயப் படுத்துவது நேர்மையாகாது!

  1. கால்டுவெல் 19ம் நூற்றாண்டில் சொல்லியதை நம்பிக்கொண்டு, இந்தியர்களை ஏமாற்றி வர்ய்ம் போது, கச்சியப்ப சிவாச்சாரியார் சொன்னதை நம்புவதில் என்ன மயக்கமோ?
  2. தி.மு.க.வில் வீரத் தி.மு.க. முன்னணி என்று தனிப் பிரிவு ஏதும் இல்லை என்று சொல்லவே வேண்டாமே, அதுதான் மனைவிமார்கள் சென்று சாமி கும்பிட்டு வருகிறார்களே?
  3. திக-திமுகவில் எப்படி அவரவர் பெண்டாட்டிகள் தூக்கிக்கொண்டிருக்கிறார்களே, அதேபோல சீமானின் துணைவியார் தூக்குகிறார், இதிலென்ன கோபமோ?
  4. ஆமாம், “துணைவி” என்பதன் உள்ளர்த்தம் என்னவோ, “மனைவி” வேறு என்று கலைஞர் பாடையில் கூறுவது ஏனோ?

கோயிலைக் கைப்பற்றாமல், நீ கோட்டையை எப்படிக் கைப்பாற்றுவாய்?”: உண்மையில் இந்த அணிக்கு இப்போது என்ன தேவை வந்தது என்பதை அவரே அவருடைய பேச்சின் நடுவில் வெளிப்படுத்தியுள்ளார். மூன்று ஆண்டுகளுக்கு முன், பஞ்சாபைச் சேர்ந்த சிம்ரன்ஜித் சிங் மான், சீமானிடம், “கோயிலைக் கைப்பற்றாமல், நீ கோட்டையை எப்படிக் கைப்பாற்றுவாய்?” என்று கேட்டாராம். அது நெஞ்சில் உறுத்திக் கொண்டே இருந்ததாம். பிறகு, அம்பேத்காரைப் படித்த போது, பண்பாட்டுப் புரட்சி இல்லாமல், அரசியல் புரட்சி செய்ய முடியாது என்று அவர் எழுதியிருந்தாராம். அதனால்தான் இந்த இயக்கம் என்கிறார் அவர். கோயிலைப் பிடித்தவரெல்லாம்  கோட்டையைப் பிடித்து விடலாம் என்றால், தமிழ்நாட்டு ஆட்சியை என்றோ பா.ஜ.க. பிடித்திருக்குமே? சரி, அவர் எப்படியாவது கோட்டையைப் பிடித்துவிட்டுப் போகட்டும். அதற்காக அம்பேத்கார் கூற்றினை இப்படியா கொச்சைப்படுத்துவது? பண்பாட்டுப் புரட்சியில் முருகனுக்காக  மொட்டை போட்டு, எதிர்காலத்தில் தமிழனுக்கும் மொட்டை போடலாம் என்ற எண்ணத்தில்தான் வீரத் தமிழர் முன்னணி உருவாகியுள்ளதோ?

  1. திக-திமுகவினர்கள் தாம் ஏற்கெனவே கோவில்கள், கோவில் சொத்துகள் முதலியவற்றைக் கொள்ளையடுத்து வருகின்றனர். இனி இந்த ஆள் வேறு வருவது பொறுக்கவில்லை போலும்!
  2. அம்பேத்கர் பார்ப்பன பெண்ணை இரண்டாம் பெண்டாட்டியாக வைத்துக் கொண்டது போல, இவர்களும் வைத்துக் கொண்டுள்ளது “பண்பாண்டுப் புரட்சியா” அல்லது வேற்ந்த புரட்சியா?
  3. கருணாநிதியே குடுமி வைத்திருந்தபோது, இவர்கள் மொட்டை போட்டால் என்ன, குடுமி வைத்தால் என்ன?

[1] சுபவீரப்பாண்டியன், முருகனுக்கு அரோகரா ….தமிழனுக்கும் அரோகரா!, http://subavee-blog.blogspot.in/2015/02/blog-post_10.html#comment-form