Archive for the ‘ராகுல்’ Category

கருணாநிதி சிலை திறப்பு – சிலை வைத்தல், எடுத்தல், கடத்தல், உடைத்தல் எல்லாமே திராவிட கலாச்சாரம், பண்பாடு, நாகரிகம் தான்! [1]

திசெம்பர் 17, 2018

கருணாநிதி சிலை திறப்புசிலை வைத்தல், எடுத்தல், கடத்தல், உடைத்தல் எல்லாமே திராவிட கலாச்சாரம், பண்பாடு, நாகரிகம் தான்! [1]

EVR idol breaking case

பிள்ளையார் சிலையை உடைத்தவன், அப்பனுக்கு சிலை வைக்கத் துடித்த கதை சொல்லும் பிள்ளை: தமிழகத்தில் சிலை-அரசியல் என்பது திக-திமுக கட்சிகளோடு பின்னிப் பிணைந்து, பிறகு அதிமுகவையும் ஆட்டிப் படைக்கிறது. அம்பேத்கர் சிலை அரசியல் என்பது பிறகு வந்தது. அது தேவர் சிலை அரசியலோடு சேர்ந்து கொண்டு, கலவரங்களில் முடியும் நிலை ஏற்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.மோஹன் கமிட்டியின் படி, சிலைகள் அவமதிக்கப் படுவதால் தான், தமிழகத்தில் கலவரங்கள் நடக்கின்றன என்று 1998லேயே எடுத்துக் காட்டினார்[1]. தேவர் ஜாதியினர் சிலைகள் 227, மஹாத்மா காந்தி 81 மற்றும் அம்பேத்கர் 66 இருப்பதாக இன்னொரு அறிக்கைக் குறிப்பிடுகிறது[2]. இதனால், புதிய சிலைகள் வைக்கக் கூடாது என்ற கருத்தும் உருவாகி வருகிறது. இங்கும் சிலையுடைப்பு அரசியலை ஆரம்பித்து வைத்தது ஈவேரா தான். உச்சநீதி மன்றம் அவரைக் கண்டித்துள்ளது, ஆனால், அவர் தான் கருணாநிதிக்கு சிலை வைப்பேன் என்று பிடிவாதம் பிடித்ததை இப்பொழுது அறிகிறோம்!

Avvai, Valluvar, Kambar, Ilango

1968ல் இரண்டாவது உலகத் தமிழ் மாநாடு நடந்த்த்தும், சிலைகள் வைத்ததும்: 1968ல் இரண்டாவது உலகத் தமிழ் மாநாடு நடந்த போதே, யாருக்கெல்லாம் சிலை வைப்பது, எடுப்பது என்பது பற்றியெல்லாம், ஏகப்பட்ட குழப்பம்,, பிரச்சினை, எதிர்ப்பு, ஆதரவு எல்லாமே நடந்தேறியது. முதலில் பெஸ்கி, போப் சிலைகள் வைக்க திட்டம் இல்லை. அப்பொழுது, யாரோ ஒருவர் லெஸ்லி நியூபிகின் என்ற சி.எஸ்.ஐ பிஷப்பிற்கு போன் செய்து, அவர்கள் சிலைகள் சேர்க்கப் பட வேண்டும் என்று அறிவித்தானாம். உடனே, புரொடெஸ்டென்ட் நியூபிகின், கத்தோலிக்க ஆர். அருளப்பாவுடன் ஆலோசனை செய்து, சிலைகள் வைக்க திட்டம் போட்டனர். லெஸ்லி அண்ணாவின் மிக நெருங்கிய நண்பர், சிறுவயதில் காஞ்சிபுரத்திலிருந்தே பழக்கம் உண்டு. அவர் சொல்லை அண்ணா தட்டவே மாட்டார் என்ற அளவுக்கு நெருக்கம் என்று நியூபிகின் முன்வாந்தார். இதற்குள் செய்தி அரசுக்குச் சென்றவுடன், செல்யூலரிஸ முறைப்படி, உமறுப் புலவருக்கு சிலை வைக்கலாம், என்று மனவை முஸ்தபா[3] [1935-2017] சொன்னார்.  ஆனால், இஸ்லாமிய அடிப்படைவாதிகள் எதிர்ப்புத் தெரிவித்ததால், கைவிடப் பட்டது. மபொசி இளங்கோ அடிகள் சிலை வைக்க வேண்டும் என்றதை, கருணாநிதி விரும்பவில்லை. ஆக, தீர்மானிக்கப் பட்ட சிலைகள் இவ்வாறு வைக்கப் பட்டன.

Bharati, dasan, Pope, Caldwell

எண் திறந்து வைக்கப் பட்ட தேதி சிலை விழாத் தலைவர் திறந்து வைத்தவர்
1 02-01-1968 திருவள்ளுவர் இஆ. நெடுஞ்செழியன் கி.ஆ.பெ. விசுவநாதன்
2 02-01-1968 அவ்வையார் சத்தியவாணி முத்து எஸ்.எஸ். வாசன்
3 02-01-1968 கம்பர் ஏ. கோவிந்தசாமி மீ. பக்தவட்சலம்
4 02-01-1968 கண்ணகி    
5 02-01-1968 சுப்பிரமணிய பாரதி மாதவன் நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார்
6 02-01-1968 வீர்மாமுனிவர் சாதிக் பாஷா அருளப்பா
7 02-01-1968 கி.யூ.போப் சி.பா. ஆதித்தனார் பிஷப் லெஸ்லி நியூபிகின்
8 02-01-1968 பாரதிதாசன் மா.முத்துசாமி மு. வரராசனார்
9 02-01-1968 வி.ஓ.சிதம்பரம்    
10 07-11-1971 இளங்கோ அடிகள் இரா. நெடுஞ்செழியன் ம.பொ.சிவஞானம்

Arulappa, CNA, Lesslieகண்ணகி சிலை உலகத் தமிழ் மாநாட்டின் போது வைக்கப் பட்டது. ஆனால் அது டிசம்பர் 10, 2001 அன்று, மெரினா கடற்கரையை நவீனப் படுத்தும் சாக்கில் இடிக்கப் பட்டது. போதாகுறைக்கு, அச்சிலையால் தான் சென்னை பஞ்சத்தால் நீரின்றி தவிக்கிறது என்றும் சொல்லப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்தபோது, கருணாநிதி, ஜூன்.3, 2006ல் அதே இடத்தில் கண்ணகி சிலை வைத்தார். இப்படி சிலை சண்டை.

கருணாநிதிக்கு 1975ல் வைத்த சிலை 1987ல் இடிக்கப் பட்டது: 1975ல் கருணாநிதியின் சிலை மசூதிக்கு முன்பாக, அவர் ஆட்சியில் இருக்கும் போதே, ஜெனரல் பாட்டர்ஸன் – மவுண்ட் ரோடு சந்திப்பில் வைக்கப் பட்டது. அப்பொழுதே “உயிரோடு இருப்பவர்களுக்கு சிலை வைப்பதா, விக்கிரங்களை / சிலைகளை எதிர்ப்பவர், தனக்குத் தானே சிலை வைத்துக் கொள்வதா, இதனால், தீமை ஏற்படும்……….,” போன்ற பலதரப்பட்ட விமர்சனங்கள் வைக்கப் பட்டன. ஆத்திகரான, கடவுளை நம்பிய குன்றக்குடி அடிகள், நாத்திகரான-இந்துவிரோதியான, கருணாநிதியின் சிலையை திறந்து வைத்தார்! இருப்பினும், கருணாநிதிக்கு விருப்பம் இருந்ததால், நிறைவேற்றப்பட்டது. எந்த சாத்திரம் என்னவாகிற்றோ, எம்ஜிஆர் 1987ல் இறந்த போது, கருணாநிதி உயிரோடிருந்த நிலையில் சிலை உடைக்கப் பட்டது. ஒரு இளைஞன் கடப்பாரையினால், சிலையை உடைக்கும் காட்சியின் புகைப்படங்கள், நாளிதழ்களில் வெளிவந்தன. அது கண்டு போபப்பட்ட  கருணாநிதி, “அது மற்றவகளுக்கு இறுதி சிரிப்பாக இருக்கலாம், ஆனால், என் தம்பி என் நெஞ்சில் குத்தி விட்டான்”, என்று இளைஞன் உடைத்த படத்தின் கீழே எழுதினார்.

Karunanidhi statue demolished by a youth- 24-12-1987-main

உயிருடன் இருந்த போது வைக்கப் பட்ட சிலைகள்: தமிழக அரசியல் வரலாற்றில் உயிருடன் இருக்கும்போதே சிலை அமைக்கப்பட்ட தலைவர்கள் இரண்டுபேர் ஒன்று காமராஜர் மற்றொன்று கருணாநிதி. சிலை அமைக்கப்பட்டு மீண்டும் புதிய சிலை அமைக்கப்பட்ட தலைவர்கள் இரண்டுபேர். ஒன்று கருணாநிதி மற்றொன்று ஜெயலலிதா. இது சம்மீபத்தில் ஏற்பட்ட கோளாறுகள். கருணாநிதிக்கு முதன் முதலில் சிலை வைக்கவேண்டும் என்று அறிக்கை விட்டவர் பெரியார். அண்ணா உயிருடன் இருக்கும்போதே 1968-ம் ஆண்டே பெரியார் இந்த வேண்டுகோளை வைத்தார். 1968 இலும்,1971 ஆகஸ்டு 14 இலும் இருமுறை அறிவித்தார் பெரியார்! அதற்கு முன் உயிருடன் இருந்தவர்களில் அப்போதைய காங்கிரஸ் தலைவர் காமராஜருக்கு மட்டுமே ஜிம்கானா கிளப் அருகே சிலை திறக்கப்பட்டிருந்தது. அதை நேரு திறந்து வைத்தார்.

Karunanidhi statue demolished by a youth- 24-12-1987

ஈவேரா கருணாநிதிக்கு சிலை வைக்க விரும்பியது (1971): அண்ணா மறைவுக்குப் பின்னர் முதல்வர் பதவியேற்றார், பின்னர் 1971-ம் ஆண்டு சட்டமன்றத்தை கலைத்துவிட்டு நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்ந்து தேர்தலை திமுக சந்தித்தது. மிகப்பெரிய வெற்றியை திமுக இந்த தேர்தலில் பெற்றது. ஆகஸ்டு 14, 1971 அன்று பெரியார் திடலில் நடைபெற்ற பாராட்டுக் கூட்டத்தில், பெரியார் ஏற்கெனவே தான் வைத்த கோரிக்கையை மீண்டும் அப்போதைய முதல்வர் கருணாநிதியை அருகில் வைத்துக்கொண்டே வைத்தார். செயற்கரிய சாதனை செய்தவர் என்பதால் சென்னை தலைநகரில் கருணாநிதிக்குச் சிலை வைக்கவேண்டும் என்று தம் விருப்பத்தை பெரியார் தெரிவித்தார். அதை மேடையில் இருந்த குன்றக்குடி அடிகளார் போன்றவர்கள் ஆமோதித்தனர். அதே மேடையில் கருணாநிதி சிலை அமைப்புக் குழுவையும் பெரியார் அறிவித்தார். அப்போது கூட்டத்தில் பேசிய கருணாநிதி திமுக சார்பில் பெரியாருக்கு ஒரு சிலை திறக்கிறோம், அதன் பின்னர் எனக்கு சிலை திறக்கலாம் என்று அதைத் தட்டிக்கழித்தார்.

வேதபிரகாஷ்

16-12-2018.

EVR statue opened by Karu - EVR, Karu and others can be seen

[1] In October 1998 the Times of India (ToI) reported that a high-level committee headed by retired Supreme Court judge S.Mohan to investigate caste conflict in southern Tamil Nadu had made special note of statues: “Justice Mohan observed that most of the clashes that took place in the region were because of desecration of statues and both the government and private bodies were advised to desist from installing new statues.”

Times of India, View: Statue politics & shifting sands of time, By Vikram Doctor, ET Bureau|Updated: Mar 10, 2018, 10.57 AM IST

[2] Another ToI report on the committee showed the scale of the problem: “statistics in the report reveal that there are over 708 statues of various leaders in nine southern districts of Tamil Nadu alone.” Of these 227 were of dominant Thevar community leaders, 81 were of Mahatma Gandhi and 66 were of Dr.Ambedkar. Riots often sprang from mere rumours about disrespect to statues and sometimes communities disfigured their own leaders’ statues “as an excuse for attacking the other.”

https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/view-statue-politics-shifting-sands-of-time/articleshow/63241372.cms

[3] தென்மொழிகள் புத்தக டிரஸ்ட் நிர்வாக இயக்குநராக 40 ஆண்டுகள், ‘புத்தக நண்பன்’ (புக் பிரண்ட் – மாத இதழ்) ஆசிரியராக 4 ஆண்டுகள், யுனெஸ்கோ கூரியர் – பன்னாட்டு மாத இதழ் – ஆசிரியராக 35 ஆண்டுகள், என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா தலைமை பொறுப்பாசிரியர் – தமிழ் பதிப்பு, முதலமைச்சர் தலைமையில் அமைக்கப்பட்ட ‘சுதந்திர பொன்விழா குழு” முன்னாள் உறுப்பினராகவும், முதலமைச்சர் தலைமையிலான தமிழ்நாடு அரசு உயர்கல்வி – தமிழ் ஆக்கப்பணிக்குழு முன்னாள் உறுப்பினராகவும், அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்க முன்னாள் இணைச் செயலாளராகவும், உலகத் தமிழ் மாநாடுகளை நடத்தி வரும் சர்வதேசத் தமிழ் ஆராய்ச்சி பேரவையின் இந்தியக் குழுவின் முன்னாள் இணைச் செயலாளராகவும், ‘பாரதிய ஞானபீடப் பரிசு தேர்வுக்குழு’ உறுப்பினராகவும், 1968, 1982, 1987, 1995 ஆண்டுகளில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாடுகளில் 7 ஆய்வுக் கட்டுரைகள் படித்துள்ளார்.