Archive for the ‘மொழிப்போர் தியாகிகள்’ Category

கருணாநிதிஜியின் ஆசை: இந்தியாவின் ஆட்சி மொழியாக தமிழ்!

ஜனவரி 26, 2010

கருணாநிதிஜியின் ஆசை: இந்தியாவின் ஆட்சி மொழியாக தமிழ்!

© வேதபிரகாஷ்

குறிப்பு: பத்திகளின் தலைப்புகள் மட்டும் என்னால் கொடுக்கப்பட்டுள்ளன. கருணாநிதி சொன்னது சாய்வெழுத்துகளில் கொடுக்கப்பட்டுள்ளன.

நடக்கமுடியாததைச் சொல்லுவோம், நடக்கக்கூடாதையும் சொல்லுவோம்[1]! இப்படி புதிய பிரசாரகர்கள் கிளம்பிவிட்டனர் போலும்! விளம்பரங்களில் மனிதனுக்கு அளவிலாத காமம், இச்சை, மோகம் வந்துவிட்டது. எப்படியாவது பிரபலம் ஆகவேண்டும், அதற்காக என்னவேண்டுமானாலும் செய்யத்தயார், பேசத் தயார் என்ற நிலை உருவாக்குவது மனப்பாங்காகிறது. இதில் அரசியல்வாதிகளின் வழி அலாதியானது. நடக்கமுடியாததை நடத்துவோம் (எல்லொருக்கும் வேலை கொடுப்போம்……போன்றது), செய்யமுடியாததைச் செய்வோம் (வறுமையைப் போக்குவோம்……..பொன்ற வகையறாக்கள்) என்றெல்லாம் பேசுவதுதான் அராசியல்வாதிகள் தந்திரம், என்பதுதான் அரசியலின் மந்திரம், அப்படியே ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்வது யந்திரம்! பல நேரங்களில் பலவிதமாக, பலதரப்பட்ட கூட்டங்களுக்குத் திருப்தி செய்ய பேசுவர். அதனால்தான் அவர்களின் பேச்சுகளில் முரண்பாடுகள் ஏற்படுகின்றன. பொதுவாக அவர்கள் சொல்லிவிடுவர், “ஊடகக்காரர்கள் நான் பேசியதை மாற்றிச் சொல்லிவிட்டார்கள்”, என்று!

கருணாநிதிஜியின் “தமிழ் ஆட்சி மொழி” பற்றிய பேச்சு: தினமணி[2] கூறுவது, “தமிழுக்கு மத்திய ஆட்சி மொழி அந்தஸ்து கேட்பதில் என்ன தவறு …”, என்று கருணாநிதி கேள்வி கேட்டதாகத் தலைப்பு. தினமலர் சொல்வதோ[3], “இந்தியாவின் ஆட்சி மொழியாக தமிழ் : முதல்வர் கருணாநிதி விருப்பம்”, என்பதாகும். தினகரன் அன்பழகனைக் குறிப்பிட்டுக் கூறுவது[4], தமிழில் பேசும் நிலை விரைவில் உருவாகும்”, என்பதாகும்! எது எப்படியாகிலும் அரசியல்வாதிகள் எல்லாவிதமாகவும் பேசுவார்கள், எல்லோருடனும் அனுசரித்திச் செல்வது போலக் காட்டிக் கொள்வார்கள், ஆனால், உண்மையில் அவர்கள் ஆசைப்படுவது, சாகும் வரை சிம்மாசனத்தில் இருக்கவேண்டும் என்பதுதான்!. இனி வெளியிடப்பட்டுள்ள செய்தி தொகுக்கப்பட்டு அலசப்படுகிறது.

1965-2010: ஜனவரி 26 – 55வது துக்கநாள்: கொண்டாடும் கருணாநிதிஜி? 1965ல் குடியரசு தினத்தை “துக்க நாள்” என்று அறிவித்து திமுக கொண்டாடியது. அப்பொழுது காங்கிரஸ்காரர்கள் எதிர்தார்கள்! ஆனால், இன்று காங்கிரஸ்காரர்களுக்கு சரித்திரம் மறந்து போயிருக்கும். 1965 இந்தி எதிர்ப்பு போராட்டம் வைத்துக் கொண்டுதான் திமுக வளர்ந்தது. எனவே 2011க்கு முன்பு அத்தகைய உணர்ச்சிகளை திட்டமிட்டு எழுப்புகிறாரா என்று பார்க்கவேண்டும்.

மொழிப்போர் தியாகிகள் வீரவணக்கநாள்!: நேருஜியின் 1959ம் ஆண்டு சமரசத்தில் மறந்துவிட்ட தியாகங்கள், திடீரென்று தமிழ் செம்மொழியானப் பிறகு, மாநாடு நடத்தப்படும் வேளையில் பேசப்படுவது விந்தையே! நேருவின் உறுதிமொழியே மோசடி என்று சொல்லும் திராவிடவாதிகளும்[5] உண்டு! அனால் 1959ல் திமுக வரவேற்று தீர்மானம் நிறைவேற்றியது. தாரைப்பூசும் போராளிகளுக்கு தாரை வர்க்கப்படுகிறது – பத்மஸ்ரீக்கள், பத்மவிபூஷண்கள்…………………! தன்மானம் மிக்க, தமிழினப் போராளிகள் ஜி/ஜீபோட்டு வாங்கிக் கொட்டு வருகின்றன! குடியரசு நாளில் கருணாநிதிஜி தனது பிரிவினையை மறைமுகமாக ஊட்டுகிறார் என்பதுதான் உண்மை. தில்லியில் ஹிந்தியில் “நமஸ்தேஜி” என்று விளித்து, “கைஸே ஹைஜி?” நலம் கேட்கும் கருணாநிதிஜி, கனிமொழிஜி, மாறன்ஜிகள்……………..இன்று ஹிந்தியை எதிர்ப்பு பாட்டு பாட மறைமுகமாக ஆரம்பித்துவிட்டார்களா என்ன!

கருணாநிதிஜியின் முரண்பாடா? இந்தி எதிர்ப்புக்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு!: 1976ல், இந்தி எதிர்ப்பு கிளர்ச்சிகளில் இறந்தவர்களுக்கு அரசு தரப்பில் பென்ஸன் கொடுத்தபோது, அந்த ஆணையை எதிர்த்து வழக்குத் தொடரப்பட்டது. சென்னை உயர்நீதி மன்றம் அப்பொழுது அதற்கு ஆதரவாகத் தீர்ப்பு கொடுத்தது! உடனே, அப்பீலுக்கு உச்சநீதி மன்றத்திற்குச் சென்றபோது, சாமர்த்தியமாக, அந்த தீர்ப்பை விலக்கும்போது குறிப்பிட்டது, “இந்தியை ஊக்குவிப்பதற்கு பதிலாக, இந்திக்கு எதிரான உணர்ச்சியை தூண்டுவதாக உள்ளது”. என்று சரிசெய்தது[6]. அதே மாதிரி முரசொலி தொடுத்த மற்றொரு வழக்கில்[7], பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகும் ஆங்கிலத்தை இந்திகூட உபயோகித்தாலும், இந்தி படித்தவர்களுக்கு சலுகை அளித்தாலும்[8] அவை பிரிவுகள் 343 (3) மற்றும் 344 (6) சொல்லியுள்ளபடி, பிரிவு 351ஐ மீறுவதாகது என்று தீர்ப்பளித்தது! ஆகவே, இவற்றையெல்லாம் மறைத்து பேசுவது என்பது, திராவிடவாதிகளுக்குக் கைவந்த கலைதான் போலும்[9].

ஆங்கிலம் தெரியாத நோபல் பரிசு பெற்றவர்களும், ஹிந்தி தெரியாத பத்மஸ்ரீக்களும்: தமிழ் பேச்சாளிகள்-எழுத்தாளிகள் தங்களுக்கு சாதகமாக இருந்தால் எதைவேண்டுமானாலும் பேசுவார்கள்-எழுதுவார்கள். அங்கு தமிழ்-தமிழல்லாதது என்றெல்லாம் நிலைகள் மறக்கப்படும்!

  • இந்தி தெரிந்தால் வேலை கிடைக்கும் என்றல், இந்தி படித்தவர்களுக்கெல்லாம் ஏன் வேலை கிடைப்பதில்லை?
  • தமிழ் படித்தால் வேலைக் கிடைக்காதா?
  • நோபல் பரிசு பெற்றவர்களுக்குக் கூட ஆங்கிலம் தெரியாதே?
  • செத்தபாடை பேசுமா?

இப்படி அருமையாக தமிழில் மணிக்ககணக்கில் பேசி, பேச்சாளி என்ற முறையில் பணத்தை வாங்கிக் கொண்டு[10] கிளம்பிவிடுவார்! கேட்பவர்களுக்கு மகிழ்ச்சியுடன், ஏதோ டிவியில் ஒரு நிகழ்ச்சி பார்த்தது போன்ற உணர்ச்சியுடன் சென்றுவிடுவர்! ஆனால், சாகித்ய அகடமி பரிசுக்காக அலையும் கோஷ்டிகள் ஏராளம்!

ஹிந்தி எதிர்ப்பு பட்டியலிடும் கருணாநிதிஜி: வடசென்னை மாவட்ட தி.மு.க. சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்கநாள் பொதுக் கூட்டம், சென்னை பெரவல்லூரில் நேற்று நடந்தது[11]. இந்நிகழ்ச்சியில் முதல்வர் கருணாநிதி பேசியதாவது: “கடந்த 1938 ம் ஆண்டு முதல், இந்தியை கட்டாயமாக திணிக்கப்படுவதை எதிர்த்து 30 க்கும் மேற்பட்டோர் உயிர்த் தியாகம் செய்துள்ளனர். அந்த மொழிப்போரில் ஈடுபட்டவர்களின் தியாகத்தை நினைவுகூறும் விதமாக இக்கூட்டம் நடக்கிறது. இதை, கொண்டாட்டம் என கூறக்கூடாது. மொழிப்போர் தியாகிகளை நினைவூட்டும் நாள். எதிர்காலத்தில் தமிழுக்கு எந்தவித எதிர்ப்பும் வந்துவிடக்கூடாது என்பதற்கான அடையாளம்”.

இந்தி மொழிக்கு நாம் விரோதி அல்ல!: கருணாநிதி தொடர்கிறார், “இந்தி உள்பட எந்த மொழியையும் நாம் எதிர்க்கவில்லை. இந்தி மொழிக்கு நாம் விரோதி அல்ல. அதை, நம்மீது திணிக்கும்போது, மறுக்கிறோம்; எதிர்க்கிறோம். தமிழ் மொழிக்கான இடம் பறிக்கப்படுவதை எதிர்க்கிறோம்.

  • கடந்த 1938 ல், இந்தியை கட்டாயப் பாடமாக்குவதில் அப்போதைய முதல்வர் ராஜாஜி தீவிரமாக இருந்தார், இந்தியை கட்டாயம் என அறிவித்தார். எனினும் காலம் மாறியது.
  • 1965-ல் அதே ராஜாஜி இந்தியை எதிர்த்து என்னுடன் ஒரே மேடையில் நின்று எதிர்ப்புக் குரல் எழுப்பினார். இந்தி வந்தால், நாம் இரண்டாவது குடிமகனாக ஆகிவிடுவோம் என்றும் கூறினார்.
  • 1967ல் தி.மு.., உதயமானபோது, முதல்வர் அண்ணாதுரை மொழிப்போர் தியாகிகளின் ஆத்மா சாந்தியடைய தீர்மானம் கொண்டு வந்தார். மொழிப்போரில் உயிர் நீத்தவர்களுக்கு வழங்கப்படும் ஆறுதல் தொடர வேண்டும்”.

இந்தியை ஆதரித்த திராவிட மறவர்கள்: 1925ல் திரு. வி.க தலைமையில் நடந்த காஞ்சிபுரம் மாநாட்டில், “தமிழ் இளைஞர்கள் மிக விரைவில் இந்தி கற்றுக் கொள்ளவேண்டும்”, என தீர்மானத்தை நிறைவேறியது! இன்று குறிப்பிடப்பட்டபடி, இந்தி எதிர்ப்பெல்லாம் கருணாநிஜிக்கு, அவர் பெரிய குடும்பம், குடும்ங்களுக்கு இல்லை. அங்கெல்லாம், “சல்தா ஹைஜி” தான்!

மோடியின் குஜராத் நீதிமன்றம் சொல்கிறது இந்தி மொழி தேசிய மொழி அல்ல என்று! கருணாநிதி தொடர்கிறார், “மொழிப் போர் தியாகிகள் தினம் அனுசரிக்கும் இந்த நாளில் குஜராத் உயர் நீதிமன்றம் ஒரு தீர்ப்பை தந்துள்ளது. இந்தி மொழி தேசிய மொழி அல்ல என்றும், அதை தேசிய மொழி என யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்றும், மற்ற மாநில மொழிகளைப் போல இந்தியும் சில மாநிலங்களில் பேசக் கூடிய ஒரு மொழி மட்டுமே என்றும் அந்த தீர்ப்பில் நீதிபதிகள் கூறியுள்ளனர். இந்தியாவில், ஆட்சிமொழியாக இந்தி, அதையடுத்து ஆங்கிலம் உள்ளது. தமிழையும் ஆட்சிமொழியாக ஆக்க வேண்டும் என்பதையே மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாளில் கோரிக்கையாக வைக்கிறோம். அதற்காக, தமிழை மட்டும் ஆட்சி மொழியாக ஆக்க வேண்டும் என்று நாங்கள் கூறவில்லை”. மேலும், அத்தீர்ப்பு, விற்கப்படும் பொருள் பொட்டலம், அட்டைப்பெட்டி முதலியவற்ரின் மீது விலை, உற்பத்திசெய்யப்பட்ட தேதி, உற்பத்தியாளர் பெயர், முகவரி முதலிவற்றை இந்தியில் இருக்கவேண்டும் என்று கூறி ஒருவர் பொதுநல வழக்கு தொடர்ந்ததில் தான், இவ்வாறான தீர்ப்பு வழங்கப்பட்டது! இதன்மேலே அவர் அப்பீல் போவாரா இல்லையா என்றெல்லாம் தெரியாது.

குழப்பும் கருணாநிதிஜி: இந்தி தேசிய மொழி என்பது வேறு, ஆட்சிமொழி என்பது வேறு: “அம்பேத்காருடைய” இந்திய அரசியல் நிர்ணய சட்டத்தின் 343 சரத்தின்படி, “தேவநகரியிலுள்ள இந்தி ஆட்சி மொழியாகும்” என்பதுதான். அதுமட்டுமல்லாது 351ன்படி இந்தி மொழி வளர்ச்சிக்காக ஆவண செய்ய வரைமுறைக் கொடுத்துள்ளது. ஆகவே, “….……. “1ன்படி இந்தி மொழி வளர்ச்சிக்காக ஆவண செய்ய வரைமுறைக் கொடுத்துள்ளது. ஆகவே த்திசெய்யப்பட்ட தேதி, உற்பத்தியாளர் பெயர், முகவரி முடதமிழை மட்டும் ஆட்சி மொழியாக ஆக்க வேண்டும் என்று நாங்கள் கூறவில்லை. மலையாளம், தெலுங்கு, கன்னடம், வங்க மொழி, இந்தி ஆகிய மொழிகள் உள்பட தமிழையும் சேர்த்து அனைத்து தேசிய மொழிகளையும் ஆட்சி மொழிகளாக அங்கீரிக்க வேண்டும் என்றுதான் கோருகிறோம்”, என்று பேசுவது, நடக்கமுடியாததை பேசுவதேயாகும்! சட்டரீதியாக முடியாததை சொல்கிறார் என்பதில்லை, அவ்வாறு சொல்லி மூட்டிவிடுகிறார் எனலாம்.

எல்லாமொழிகளும் ஆட்சிமொழிகளாக்க வேண்டும்! கருணாநிதி தொடர்கிறார், “தமிழையும் ஆட்சிமொழியாக ஆக்க வேண்டும் என்பதையே மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாளில் கோரிக்கையாக வைக்கிறோம். அதற்காக, தமிழை மட்டும் ஆட்சி மொழியாக ஆக்க வேண்டும் என்று நாங்கள் கூறவில்லை. மலையாளம், தெலுங்கு, கன்னடம், வங்க மொழி, இந்தி ஆகிய மொழிகள் உள்பட தமிழையும் சேர்த்து அனைத்து தேசிய மொழிகளையும் ஆட்சி மொழிகளாக அங்கீரிக்க வேண்டும் என்றுதான் கோருகிறோம்[12].

  • 1963ல் காங்கிரஸ் ஆட்சியின்போது, இந்தித் திணிப்பை எதிர்த்து அண்ணா அரசியல் சட்ட நகலை எரிக்க முயன்று, கைதானார். ஆனால் அவரது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை யாரும் பறிக்கவில்லை.

  • 1986-ல் எனினும் அண்ணாவின் பெயரால் கட்சி நடத்திய எம்.ஜி.ஆர். ஆட்சியில், இந்தித் திணிப்பை எதிர்த்து அரசியல் சட்ட நகலை எரிக்க முயன்றதற்காக . அன்பழகன் உள்ளிட்ட 10 தி.மு.. எம்.எல்..க்களின் பதவி பறிக்கப்பட்டது. இது மிகவும் வேதனையானது”.

சிங்கங்கள் நாங்கள், புலிகள் அல்ல, சிங்காசனங்கள் எங்களுக்குத் துச்சம்! கருணாநிதி தொடர்கிறார், “தமிழகத்தைப் பொருத்த வரை எங்களுக்கு ஆட்சி பெரிதல்ல. நாங்கள் சிங்கத்தமிழர் கூட்டம். நாங்கள் ஆட்சியில் இருப்பது பெரிதல்ல; தமிழ்த் தாயின் சிம்மாசனத்தை[13] பறித்தால், விடமாட்டோம்[14]. இந்தியாவில் ஆட்சிமொழியாக, தமிழும் வரவேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை”. இவ்வாறு முதல்வர் பேசினார். கூட்டத்துக்கு வடசென்னை மாவட்ட தி.மு.க. செயலாளர் வி.எஸ். பாபு எம்.எல்.ஏ. தலைமை வகித்தார். கூட்டத்தில் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், சென்னை மாநகர மேயர் மா. சுப்பிரமணியன், தென்சென்னை மாவட்ட தி.மு.க. செயலாளர் ஜெ. அன்பழகன் உள்ளிட்டோர் பேசினர்.

© வேதபிரகாஷ்

24-01-2010


[1] முன்பு சொன்னது, “சொன்னத்தை செய்வோம், செய்ததை சொல்வோம்!”

[2] தினமணி, தமிழுக்கு மத்திய ஆட்சி மொழி அந்தஸ்து கேட்பதில் என்ன தவறு? கருணாநிதி, 26 Jan 2010

http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Chennai&artid=187523&SectionID=97&MainSectionID=97&… %BF

[3] தினமலர், இந்தியாவின் ஆட்சி மொழியாக தமிழ் : முதல்வர் கருணாநிதி விருப்பம், ஜனவரி 26,2010

http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?news_id=6402

[4] தினகரன், http://www.dinakaran.com/arasialdetail.aspx?id=4549 தெலுங்குக்காரரான அன்பழகனுக்கு ஹிந்தி தெரியுமா என்று தெரியவில்லை!

[5] தியாகு, முடியவில்லை மொழிப்போர், தமிழக மாணவர் இயக்கம்,  சென்னை, 1993, ப. 5-6.

[6] Dalavai vs State of Tamilnadu – AIR. 1976. S.C. 1559 (paras, 4, 6).

[7] Union of India vs Murasoli – AIR. 1977. S.C. 225 .

[8] Union of India vs Murasoli – AIR. 1977. S.C. 225 (230).

[9] வீரமணி, ராஜேந்திரன், கொளத்தூர் மணி, பெ. மணியரசன் மற்றும் கம்யூனிஸ-நக்ஸலைட் உதிரிகள் சிறு-சிறு புத்தகங்கள் போட்டு குழப்பிவருவது சாதாரண விஷயமே.

[10] இப்பொழுதெல்லாம் பேசுவதற்கே ஆயிரம் கணக்கில் பணம் கேட்கிறார்களாம், வாங்குகிறார்களாம், வாழ்க தமிழ், வளர்க தமிழ் பேச்சாளிகள்! அடுத்த வருமான வரி “ரெய்டு” இவர்கள் மீது இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை!

[11] 25-01-2010 அன்று நடந்த கட்சி கூட்டத்தில் கருணநிதி பேசியது.

[12] இதுவே நடக்காத காரியம். அரசியல் நிர்ணய சட்டத்தை மாற்றாமல் நடக்காது. இன்றைய நிலையில், பல முக்கியமான பிரச்சினைகளை விட்டுவிட்டு, சோனியா மெய்னோ, இதற்கா கவலைப் படுவார்? ஏற்கெனவே மொழிவாரி மாநிலங்கள் பிரச்சினை போய், தெலிங்கானா போன்ற ப்ய்திய பிரச்சினைகள் வந்துள்ல நிலையில், இவரது பிரிவினைத் தூண்டும் பேச்சுகளை கவனிக்கவேண்டும்.

[13] “சிம்மாசனம்” தமிழா, இந்தியா, செத்த பாடையா, அந்நாளில், இவ்வர்த்தையை உபயோகிக்கலாமா?

[14] என்ன, உருட்டல், மிரட்டல்கள்! காங்கிரஸ்காரர்கள்தாம் கவனிக்க வேண்டும்! இன்று உண்மையான காங்கிரஸ்காரர்கள் இருப்பது கடினமே. எற்கெனவே, குமரி அனந்தனை தமிழ் பற்றி பேசவைத்து விட்டார்கள் சன்-டிவியில். சனிக்கிழமை, வீரப்பாண்டியன் நிகழ்ச்சி. ஆகவே, அவரும் அமைதியாகத்தான் இருப்பார்.