அகில இந்திய பகுத்தறிவாளர் மாநாடு: நம்பிக்கையாளர்களுக்கு சவால் – IV
© வேதபிரகாஷ்
முன்பு இம்மாநாட்டின் நிகழ்வுகளை பத்திதுள்ளேன்[1] – அகில இந்திய பகுத்தறிவாளர் மாநாடு: நம்பிக்கையாளர்களுக்கு சவால் – I to III! இதில் தீர்மானங்கள் சம்பந்தமான விவரங்கள் கொடுக்கப்படுகின்றன.
7வது பகுத்தறிவாளர் கழக மாநாட்டின் தீமானங்கள்!: இரண்டாவது நாளில் (27-12-2009, ஞாயிற்றுக் கிழமை) மாநாட்டின் தீர்மானங்கள் முதலில் வாசிக்கப்பட்டு, அதன் விவரங்கள் பின்னணி நரேந்திர நாயக்கினால் விளக்கப்பட்டன:
1. இந்திய அரசு மதத்தை அரசியலிலிருந்து பிரிக்க தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும். அதற்காக ஒரு சட்டவடிவை உண்டாக்கி, சட்டமாக்க வேண்டும்[2]. லிப்ரான் கமிஷன் அறிக்கையிலும் இக்கருத்து சொல்லப்பட்டிருக்கிறது[3].
2. விளம்பரங்களில் வரும் மூட நம்பிக்கைகள் நிறுத்தப்படவேண்டும். அதாவது விளம்பரங்கள் மூடநம்பிக்கைகள் பரப்ப உபயோகிக்கக்கூடாது[4].
3. பொது சிவில் சட்டத்தை (Uniform Civil Code) அமூலாக்க வேண்டும்[5]. ஏற்கெனவே இரண்டு உச்சநீதிமன்ற தீர்ப்புகள் இதனை வலியுறுத்துள்ளது.
4. அயல்நாட்டிலிருந்து ஊக்குவிக்கப்படும் தீவிரவாதம் ஒழிக்கப்படவேண்டும்[6]. அதுமட்டுமல்லாது, எல்லாவிதமான தீவிரவாதங்களும் ஒழிக்கப்படவேண்டும்.
5. அரசியல் நிர்ணயச் சட்டத்தின் சரத்து 31 (Art.31), முக்கியமாக சிறுபான்மையினருக்கு அளிக்கப்பட்டுள்ள சலுகை நீக்கப்படவேண்டும். எல்லாமதங்களின் உரிமைகளும் மதிக்கப்படவேண்டும் (Art.14) என்பதைவிட, சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும் என்று மாற்றவேண்டும்.
6. கொடுக்கப்படும் மான்யங்கள் (Subsidies) அறவே ஒழிக்கப்படவேண்டும்.
7. சிறப்புத் திருமண சட்டத்தினைத் திருத்தி (Special marriage Act), பதிவு செய்தல் என்பது எல்லா மதங்களுக்கும் கட்டாயமாக்கவேண்டும்[7].
8. பொது இடங்களில் மதசம்பந்தமான அடையாளங்கள் / சின்னங்கள் வைப்பது நீக்கப்படவேண்டும். அவ்வாறே வழிபடும் இடங்கள் உள்ளதும் நீக்கப்படவேண்டும்.
9. ஸ்ரீலங்கத் தமிழர்களின் மனித உரிமை மீறல்களை கண்டிக்கிறது[8].
10. போலி-விஞ்ஞானம் ரீதியில் / மூலமாக பரப்பப்படும் மூடநம்பிக்கைகளை அரசு உரிய முறையில் தடுக்க ஆவன செய்யவேண்டும்.
நாயக்கின் விளக்கம் இந்து-விரொதமாகத்தான் இருந்தது: ஒவ்வொரு தீர்மானம் முன்மொழியும் போது, நரேந்திர நாயக் விளக்கங்கொடுத்து, இது தெரிந்த விஷயம்தான், இதை நிறைவேற்றுவதில் எந்தப் பிரச்சினையும் இருக்காது என்று நினைக்கிறேன் / இல்லை என்ற ரீதியில் பேசினார். மூடநம்பிக்கை பற்றி விவாதிக்கும் போது, செக்யூலரிஸ பாணியில், இந்து-எதிர்ப்பாக இருந்தது ஆச்சரியமான இருந்தது. “அயல்நாட்டிலிருந்து ஊக்குவிக்கப்படும் தீவிரவாதம் ஒழிக்கப்படவேண்டும்”, என்றப்பொது, சில குரல்கள் எழுந்தன, உடனே அவர், “எல்லாவிதமான தீவிரவாதங்களும் ஒழிக்கப்படவேண்டும்” என்று சேர்த்துக் கொள்கிறேன் என்றார். அரசியல் நிர்ணயச் சட்டத்தின் சரத்து 31 பற்றிய விவாதம் வந்தபோது “சரண்டர்” ஆகிய நிலைதான் ஏற்பட்டது[9]. “பொது இடங்களில் மதசம்பந்தமான அடையாளங்கள் / சின்னங்கள் வைப்பது நீக்கப்படவேண்டும். அவ்வாறே வழிபடும் இடங்கள் உள்ளதும் நீக்கப்படவேண்டும்”, என்று சமீபத்தை தீர்ப்பின்படி, தீமானத்தை கொண்டுவந்தாலும், முஸ்லிம்கள், கிருத்துவர்கள் செய்துவரும் ஆக்கிரமிப்பு முதலியவைப் பற்றி மூச்சுவிடவில்லை. தெருக்களில் உள்ள கோவில்கள் உடனே அகற்றப்படவேண்டும் என்றுதான் பேசினார்[10]. “ஈழத் தமிழர்களின் மனித உரிமை மீறல்களை கண்டிக்கிறது” என்பதற்கும் எதிர்ப்பு இருந்தது. நாயக் அதனை, ஸ்ரீலங்கத் தமிழர்களின் மனித உரிமை மீறல்களை கண்டிக்கிறது”, என்று மாற்றிவிட்டார்!
ஐந்தாவது தீர்மானத்திற்கு எதிர்ப்பு: தீர்மானங்களை கூட்டமைப்பின் தென் மண்டலச் செயலாளர் வா.நேரு முன்மொழிந்தார். கூட்டமைப்பின் பிற அமைப்பின் சார்பாக அளிக்கப்பட்ட சிறுபான்-மையினரின் சிறப்பு உரிமைகளை அரச-மைப்புச் சட்டத்திலி-ருந்து நீக்க வேண்டுகோள் விடுத்த – தீர்மான முன்-வரைவின் மீது பகுத்தறிவாளர் கழகப் பொதுச் செயலாளர் வீ.குமரேசன் தனது எதிர்ப்பினை பதிவு செய்தார்[11]. சிறுபான்-மையினருக்கான சிறப்பு உரிமைகள் இந்நாட்டில் ஆண்டாண்டு காலமாக ஆதிக்கம் செலுத்தி வரும் இந்துமத அமைப்புகளின் செயல்களுக்கு ஒரு பாதுகாப்பாக, சமத்துவத்தைப் பேண வழிகோலும் வேறுபாட்டு உரிமையாக, மனிதநேயத்தைப் பேணும் உரிமையாக உள்ள நிலைமையினை விளக்கி, அந்த சிறப்பு உரிமைகள் மேலும் மேலும் சீர்மைப்படுத்தப்பட்ட வேண்டியதன் அவசியத்தை விளக்கிப் பேசினார். இத்தகைய வலிந்து ஆதரிக்கும் நிலையில், மற்ற மதத்தினர்க்கு இந்த அமைப்பில் யாரும் இல்லை போலயிருக்கிறது.
முஸ்லிம்களே இல்லாத மாநாட்டில் முஸ்லிம்களுக்கு ஆதரவாக இருந்த நாத்திகர்கள்: நம்பிக்கையில்லாதவர், மூடநம்பிக்கை எதிர்ப்பவர், கடவுட்மறுப்பு சித்தாந்திகள், நாத்திகவாதிகள், பகுத்தறிவு வாதிகள் என்றேல்லாம் சொல்லிக் கொண்டு கூடியிருந்த கூட்டத்தில் ஒரு முஸ்லிமும் இல்லதது ஆச்சரியமாகவே இருந்தது. ஆனால், மேலே குறிப்பிட்ட ஐந்தாவது தீர்மானத்திற்லு கருப்புச் சாடைகள் எதிர்ப்பு தெரிவித்தன. சிறுபான்மை-யினர் உரிமையினை பாதிக்கும் அந்த தீர்மான முன்வரைவினை நீக்குவ-தற்கு பகுத்தறிவாளர் கழகம் எடுத்து வைத்த வாதங்களை பொதுக்குழு உணர்ந்து முன்வரைவு நிலையிலேயே அதற்கு முடிவு கட்டப்பட்டு அது நீக்கப்பட்டுவிட்டது.
நாத்திகர்களும், போலி-நாத்திகர்களும்: இந்தி பேசும் நாத்திகர்களைக் கண்டு, குறிப்பாகக் கேட்டு நமது கருப்புச் சட்டைகள் முழித்தது, அதிர்ந்தது முதலியன பார்ப்பதற்கு வேடிக்கையாக இருந்தது. இந்த 7வது ரேஸனலிஸ்ட் மாநாட்டிலேயே, போலி, சாதாரண மற்றும் பாரபட்சமுள்ள, குழப்பவாத, சந்தர்ப்பவாத நாத்திகர்களை மற்றும் நாத்திகவாதிகளைக் காணமுடிகிறது. அவர்களுக்குள் உள்ள முரண்பாடுகளும் வெளிப்படுகின்றன:
1. இந்து-விரோத நாத்திகம்: இந்தியாவில் இந்துக்கள் அதிகமாக இருப்பதால், இந்துமதத்தை எதிர்க்கிறோம் அன்றாலும், அத்தகைய வாதம், 100% நாத்திகமாக இல்லாமல், இந்து-விரோதமாகவே இருக்கிறது. வட-இந்தியாவில் எடுபடுவதில்லை என்று இந்த மாநாட்டிலேயே ஒப்புக்கொள்கிறர்கள்.
2. கிருத்துமத சார்புள்ள நாத்திகம்: தம்மை நாத்திகர்கள் என்று சொல்லிக் கொண்டாலும், கிருத்துவ அடிப்படை நம்பிக்கைகளைப் பற்றி விமர்சிக்க மாட்டார்கள் (பாவத்தின் சித்தாந்தம், ஆண் உறவு இல்லாமல் குழந்தை பிறப்பது, சிலுவையில் மரித்தது, உயிர்த்தெழுந்தது, ஆகாயத்தில் சென்றது……………….முதலியன), குறைகூற மாட்டார்கள். பொதுவான விஷயங்களை பேசி, உள்ள எல்லா சமூக-சீரழிவுகளுக்கும் இந்துமதம்தான் காரணம், ஆகையால் இந்துமதம் ஒழிக்கப் படவேண்டும் என்றும் பேசுவர்.
3. முஸ்லிம் மத சார்புள்ள நாத்திகம்: தம்மை நாத்திகர்கள் என்று சொல்லிக் கொண்டாலும், முஸ்லிம் மற்றும் இஸ்லாம் பற்றி மூச்சுக்கூட விடமாட்டர்கள். அடிப்படை நம்பிக்கைகளைப் பற்றி விமர்சிக்க மாட்டார்கள். பொதுவான விஷயங்களை பேசி, உள்ள எல்லா சமூக-சீரழிவுகளுக்கும் இந்துமதம்தான் காரணம், ஆகையால் இந்துமதம் ஒழிக்கப் படவேண்டும் என்றும் பேசுவர்[12].
4. தியானம், யோகா முதலியவற்றவை எதிர்க்கும் நாத்திகம்: சமீபத்தில் இத்தகையவற்றிற்கு மேலைநாடுகளில் அங்கீகாரம் கிடைத்ததாலும், அதன் பலனால், மக்கள் பலர் அவற்றைக் கடைப்பிடிப்பதாலும், தங்களுக்கு பாதிப்பு என்ற முறையில் எதிர்க்கின்றனர். வேடிக்கையென்னவென்றால், அதையே கிருத்துவர்கள், முஸ்லிம்கள் செய்தால் எதிர்க்கமாட்டார்கள். ஏனனில் அவர்களும் ஆஸ்ரமங்கள் வைத்துக் கொண்டு அப்பய்ற்ச்சிகளை மற்றவர்களுக்கு அளிக்கிறார்கள்[13].
5. சோதிடத்தையும், வானவியலையும் குழப்பும் நாத்திகம்: வேண்டுமென்றே சோதிடத்தையும் வானியலையும் குழப்பி, இந்திய வானியலை தூஷிப்பார்கள். விஷயம் இல்லையென்றால், இன்னென்ன தேதிகளில் சூரியகிரகணம், சந்திரகிரகணம், கோள்கள் ஒரே கோட்டில் வருவது முதலியன சோதிட-பஞ்சாங்களில் குறிப்பிடமுடியாது. வானியல் என்பது ஆண்டாண்டு காலமான நிகழ்வுகளை உன்னிப்பாக பல இடங்களில் பார்ப்பது, குறித்து வைப்பது, தொகுப்பது மற்றும் அதன் மூலம் அத்தகைய நிகழ்வுகள் ஏற்படும் என்று கூறுவது. 108 ஆண்டுகளுக்கு ஒருமுறை கங்கண கிரகணம் ஏற்படும், கோள்கள் ஒரே கிரமமாக வரும் முதலியன சோதிடம் ஆகாது, மூடநம்பிக்கையாகாது. பிறகெப்படி, பஞ்சாங்கள் அவற்றைக் குறிப்பிடுகின்றன?
6. நாத்திகத்தையும், பகுத்தறிவையும் குழப்பும் நாத்திகம்: இது “திராவிடம்” பேசும் “தமிழர்களிடம்” அதிகம் காணப்படுகிறது. அம்பேத்கரிஸம் முதலியன பேசுபவரிடமும் காணப்படும். நாத்திகம் என்பது கடவுட்தன்மையினை அறவோடு மறுப்பது. பகுத்தறிவு என்பது ஓரளவிற்கு மனித அறிவிற்கு புரிகிண்ர அளவில் ஏற்றுக்கொள்வது. இரண்டும் ஒன்றல்ல.
7. மூடநம்பிக்கையை எதிர்க்கும் நாத்திகம்: மேகங்கள் திரண்டு வந்தால் மழை பெய்யும் போன்றவையும் மூடநம்பிக்கைதான். ஏனெனில் மழை பெய்யலாம், பெய்யாமலும் இருக்கலாம்[14]. மழைகாலத்தில் மழை வரும், வெயில் காலத்தில் வெயில் வரும் என்பதெல்லாம் இப்பொழுது மாறிவிட்டன. இது பூகோளக் கோளாறு / பிறழ்ச்சி. அதிக விளைச்சல் இருந்தால் விலை முறைந்துவிடும் முதலியனவும் மூடநம்பிக்கைதான். ஏனெனில் பலநேரங்களில் அவ்வாறு விலை குறைவதில்லை. அரசு வரிவிகிதங்களைக் குறைக்கின்றது, சலுகைகளை அள்ளிவீசுகிறது, இருப்பினும் இப்பொழுது கட்டிடப் பொருட்கள் விலை 2003லிருந்து ஏறுமுகமாகவே உள்ளன[15]. இப்படி பல உதாரணங்களைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். பங்குச் சந்தையைப் பற்றி கேட்கவே வேண்டாம்!
8. செக்யூலரிஸ நாத்திகம்: இது இந்தியாவிற்கே உரித்தானது. இந்த மூடநம்பிக்கை இங்கிருந்து இப்பொழுது உலகம் முழுவதும் பரவி வருகிறது எனலாம்.
9. நவநாகரிக நாத்திகம்: அதாவது, பெண்கள் “பெண்கள் கிளப்பிற்கு போவது” என்ற ரீதியில் உள்ள நாத்திகர்கள்! பெயரளவில் நாத்திகர்கள் எனலாம். திக, திமுக, பாமக மற்றும் அம்பேத்கரிஸம் முதலிய கோஷ்டிகளில் அதிகமாகக் காணலாம். இவர்களைப் பொறுத்தவரைக்கும் அவர்கள் குடும்பத்தில் ஆண்கள் நாத்திகர், பெண்கள் ஆத்திகர்!
10. விஞ்ஞானம் பேசும் நாத்திகம்: ஓரளவிற்கு விஞ்ஞானம் பேசினாலும், ஒரு நிலையில் அதிலும் மூடநம்பிக்கை வந்துவிடும்[16]. இப்பொழுது மரபணு மற்றும் இனங்களைப் பற்றியும், மொழிகள் உண்டானது, நியாண்டர்தால் குரங்கு எப்படி பாடியது, பேசியது, ஆடியது போன்ற ஆராய்ச்சிகளினின்று அத்தகைய விஞ்ஞான-நாத்திகத்தை அறியலாம்[17].
© வேதபிரகாஷ்
16-01-2009
[1] வேதபிரகாஷ், அகில இந்திய பகுத்தறிவாளர் மாநாடு: நம்பிக்கையாளர்களுக்கு சவால், விவரங்களுக்கு இங்கு பார்க்கவும்:
https://dravidianatheism2.wordpress.com/2009/12/26/அகில–இந்திய–பகுத்தறிவாளர/
வேதபிரகாஷ், திராவிட பொய்களும், திரிபுகளும், பிரச்சாரங்களும், மேலும் விவரங்களுக்கு:
https://dravidianatheism2.wordpress.com/page/2/ மற்றும் https://dravidianatheism2.wordpress.com/page/3/
[2] மும்பையில் அத்தகைய வரைசட்டத்தை சட்டசபையில் கொண்டுவந்ததாகவும், ஆனால் மாநில அரசு தாமதப் படுத்துவதாகவும் நாயக் தெரிவித்தார்.
[3] கமிஷனின் அறிக்கைகளை, இந்திய அரசொயல்வாதிகள் என்றுமே மதிப்பதில்லை. மேலும் இந்த லிப்ரான் கமிஷன், முகுக்க-முழுக்க அரச்சியல் நோக்கம் கொண்டது என்பது அப்பட்டமாகத் தெரிவதால், சட்டரிதியில் யாரும் அதை பெரிதாகக் கொள்ளவில்லை. இரண்டு-மூன்று நாட்களில் ஊடகங்களேஅடங்கிவிட்டன.
[4] சிவப்பாக கிரீம், ஆண்கள் அழகாகக் கிரீம், முலைகளை பெரிதாக்க கிரீம் முதலியவற்றை எதிர்க்காதது ஆச்சரியமே!
[5] Smt. Sarla Mudgal, President, Kalyani and others vs. Union of India and other, AIR 1995 Supreme Court 1531 மற்றும் John Vallamattom v. Union of India AIR 2003 SC 2902.
திகவினர்-கருப்புச்சட்டைகள் இதனை எதிர்க்காதது ஆச்சரியமே. ஒருவேளை அதைப் பற்றி சரியாக தெரிந்து கொள்ளவில்லையா அல்லத் அவர்களது முஸ்லிம் நண்பர்கள் அதைப் பற்றி சொல்லவில்லையா அல்லது அத்தகைய தீர்மானம் வரும் என்பதை எதிர்பார்க்கவில்லையா?
Mohammad Ahmed Khan v. Shah Bano Begum – AIR 1985 SC 945 – இதுதான் ராஜிவ் காந்தி சட்டத்தை வளைத்து, முஸ்லிம் அடிப்படைவாதிகளுக்குத் துணைப்போய், ஒரு புதிய சட்டத்தை முகமதியர்க்லளுக்க்ய்=உ ஏற்படுத்தியது.
John Vallamattom v. Union of India AIR 2003 SC 2902 – சரளா முத்கல் வழக்கு அடுத்து உச்சநீதிமன்றத்தில், மறுபடியும் அரசாங்கத்திற்கு ஒரு பொது சிவில் சட்டத்தை எடுத்துவரவேண்டிய அவசியத்தை உணர்த்தியுள்ளது. ஆனால், நமது செக்யூலரிஸ அரசியல்வாதிகள் அமைதி காக்கின்றனர். மற்ற நேரங்களில் நீதிமன்ற தீர்ப்புபடித்தான் நடப்பொம் என்று முழக்கமிடும் வீரர்கள் இப்பொழுது ஊமையாகிவிடுகிண்ரனர். இதுதான் இந்தியாவில் சட்டத்தை, உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை மத்திக்கும் லட்சணம்!
இதை “சட்ட / நீதி நாத்திகம்” என்று கூட கூறலாம்!
[6] அயல்நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படுவது என்ன என்பது நாத்திகர்கள் பகுத்தறிவுவாதிகளுக்குத் தெரிந்திருப்பது சந்தோஷமான விஷயம்தான்.
[7] தமிழ்நாட்டில் அத்தகைய சட்டம் எடுத்து வந்துள்ளபோது, முஸ்லிம்கள் எதிர்த்துள்ளதை கருத்தில் கொள்ளவேண்டும்.
[8] திகவினர்-கருப்புச்சட்டைகள் இந்த விஷயத்தைக் கண்டுகொள்ளவே இல்லை. தமிழர்களுக்கு போராடுவோம், உயிர்விடுவோம் என்று பேசும் இவர்கள் அமைதியாக இருந்தனர். “ஈழம்” என்ற வார்த்தைக்கு வடமாநிலத்தவர் எதிர்ப்புத் தெரிவித்து அதை “ஸ்ரீலங்கா” என்று மாற்றியபோதும் கண்டுகொள்ளவில்லை.
[9] அவருக்குப் பிடிக்கவில்லை என்பது, அவர்முகபாவம் காட்டியது. இருப்பினும் நன்பர்களின் அழுத்ததால், சமரசம் செய்துகொண்டார் எனலாம்.
[10] மசூதி கட்ட நிலங்களை ஆக்கரமிப்பு செய்கின்றனர். பிறகு பட்டா வாங்கி சரிசெய்து கொள்கின்றனர். கிருத்துவர்களும் அதே வேலைத்தான் செய்து வருகின்றனர். அவர்கள் முதலில் சிலுவையை நட்டுவிடுவார்கள். பிறகு அதனைச் சுற்றி மேடைக் கட்ட்வார்கள். வரம் வாரம் தொழுகிறேன் என்று கூட்டம் கூட்டுவார்கள். பிறகு சுவர்கள், கூரை என வரும்………….அந்த இடத்தையே ஆக்கரமித்துவிடுவார்கள்.
[11] http://viduthalai.periyar.org.in/20091231/news19.html
[12] இப்பொழுது சிதம்பரத்தையும் இதில் சேர்த்துக் கொள்ளலாம். உள்துறை அமைச்சர் ஸ்தானத்தில் இருந்து கொண்டு, ஜிஹாத் சொல்லி பல குண்டுவெடிப்புகளை மேற்கொண்டு, அப்பாவி மக்களைக் கொன்று குவித்தபிறகும், ஜிஹாத் இல்லை என்று பேசும் போக்கு!
[13] இதைப் பற்றி தனியாகவே எழுதலாம். கேரளத்தில் மட்டுமல்லாது, இந்தியா முழுவதிலும் இப்பொழுது முஸ்லிம் சோதிடர்கள் அதிகமாகக் கிளம்பிவிட்டர்கள்! அரசு பேருந்துகளில் வேறு விளம்பரம் செய்து கொள்கிறார்கள்!
[14] சன், கலைஞர் டிவிகளில் ரமணர் உதிக்கும் முத்துகளைக் கேட்டு முடிவு செய்து கொள்ளலாம்.
[15] இரும்பைப் பொருத்த வரைக்கும் உற்பத்தியாளர்கள், ஆட்சியாளர்கள், அதிகாரிகள் முதலியோர் சேந்து கொள்ளையடிக்கின்றனர். பல அரசியல்வாதிகளே அத்தகைய இரும்பு தொழிற்சாலைகள் வைத்துக் கொண்டு கொள்ளையடிக்கிறார்கள்.
[16] சிவப்பாக கிரீம், ஆண்கள் அழகாகக் கிரீம், முலைகளை பெரிதாக்க கிரீம் முதலியவற்றை எதிர்க்காதது ஆச்சரியமே!
[17] மேனாட்டு விஞ்ஞானிகளிடன் இது அதிகமாகக் காணப்படுகிறது. விஞ்ஞான ரீதியில் ஆராய்ச்சி செய்தாலும், ஒரு நேரத்தில் தமது கிருத்துவமத அடிப்படைவாத்தில் மூழ்கி வேறுவிதமான விளக்கங்கள் கொடுப்பர், அதாவது பைபிளுக்கு எதிராக போகாமல், விளக்கம் கொடுப்பர்!