Archive for the ‘மதமாற்றம்’ Category

ஸ்டாலினை பசு முட்ட வந்ததும், தளபதி கோபத்துடன் பின் வாங்கியதும், மாட்டுக்கறிக்கு ஆதரித்ததும், குங்குமத்தை அழித்ததும் தமிழ்நாட்டவர் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் (1)

ஜனவரி 16, 2018

ஸ்டாலினை பசு முட்ட வந்ததும், தளபதி கோபத்துடன் பின் வாங்கியதும், மாட்டுக்கறிக்கு ஆதரித்ததும், குங்குமத்தை அழித்ததும் தமிழ்நாட்டவர் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் (1)

Tamilar vizha- DK-2018 pongal

பொங்கல் பற்றி திராவிட நாத்திகர்களின் குழப்பமான நிலைப்பாடு: 1940களிலிருந்து ஈவேராவின் “ஆரிய-திராவிட” திரிபுவாதங்களால், பொங்கல் பண்டிகைக்கும் மாற்று விளக்கம் கொடுக்கப் பட்டு, திராவிடத்துவவாதிகள் பொங்கல் கொண்டாட்டங்களை எதிர்த்து வந்தது தெரிந்த விசயம். பிராமணர் அல்லாத உயர்ஜாதி இந்துக்கள் ஆதிக்கம் பெறுவதற்காக, சைவமும் திரிபுவாதங்களுக்கு உட்படுத்தப் பட்டு, “இந்து-விரோத” ரீதியில் எடுத்துச் செல்லப்பட்டது[1]. அந்நிலையில், திமுக ஆட்சியைப் பிடித்ததும், அரசு ஆதிக்கத்துடன், தமிழ கலாச்சாரம், நாகரிகம், பண்பாட்டு முதலிய காரணிகளை சிதைக்க “இந்து அறநிலையத் துறை” உபயோகப் படுத்தப் பட்டது. அண்ணாதுரை பொங்கல் பண்டிகையை எதிர்க்கவில்லை, அதனை “புனித பொங்கல்” என்றார்[2]. கருணாநிதி ஆரம்பத்தில் எதிர்த்தாலும், பிறகு வியாபார ரீதியில் “சமத்துவ பொங்கல்” ஆக்கினார்[3]. “சங்க இலக்கிய சரித்திர ஆதாரங்களுக்கு” முரண்பட்ட, விரோத கருத்துகளைப் புகுத்தி கெடுக்கப்பட்டது தான் “தமிழர் (பொங்கல்) விழா”. இருப்பினும் பெரும்பான்மையான மக்கள் பாரம்பரிய முறையில் கொண்டாடி வருவதால், பேச்சுடன் வைத்துக் கொண்டு, மற்ற சின்னங்களை அப்படியே திராவிடத்துவத்தில் அடக்கிக் கொண்டு மக்களை ஏமாற்றி வருகின்றனர். ஏனெனில், அதில் முக்கியமாக இருப்பது கோடிக் கணக்கான வியாபாரம், லாபங்கள்!

Pongal - chennai sangamam, corruption-crores spent-3

சென்னை சங்கமும், ஊழல் பொங்கல் கொண்டாட்டங்களும்: “சென்னை சங்கமம்,” கிறிஸ்தவ பாதிரி ஜகத் காஸ்பரின் “தமிழ் மையம்” மற்றும் தமிழக அரசு பண்பாடு மற்றும் சுற்றுலாத் துறை சேர்ந்து, கனிமொழி நடத்த ஆரம்பித்தார். இலக்கிய ரீதியிலும் தேசவிரோத கருத்துகளை பரப்பினர். ஸ்பெ‌க்‌ட்ர‌ம் ஊழ‌லி‌ல் தொட‌ர்புடைய ‌‌கி‌ரீ‌ன் ஹவு‌ஸ் ‌பிரமோ‌ட்ட‌ர்‌ஸிட‌மிரு‌ந்து த‌மி‌ழ் மைய‌த்‌தி‌ற்கு பெ‌ரிய‌ ‌நி‌தி வழ‌ங்க‌ப்ப‌ட்டது கு‌றி‌த்து‌ம், சி.‌பி.ஐ. ‌விசாரணை நடந்தது. தமிழக அரசின் ஆதரவுடன் 2007ல் தொடங்கி, இதன் நான்காவது நிகழ்வு ஜனவரி 10 முதல் 16. 2010 வரை நடைபெற்று, பிறகு கோடிக்ககணக்கானா ஊழல் புகாரினால் முடங்கியது[4]. இவ்வாறு சித்தாந்தம் மற்றும் பணம் சம்பாதிக்கும் பின்னணியில் தான், திராவிட நாத்திக அரசியல்வாதிகளின் பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் இருந்தது. ரேசன் கார்ட் உள்ளவர்களுக்கு “இனாம்” கொடுக்கும் முறையும் தொடர்ந்து நடந்து வருகிறது. ஆக, 2018ல் கனிமொழி இந்துமதத்தை நாத்திக மாநாட்டில் கேவலப் படுத்திய நிலையில், சகோதரர் ஸ்டாலின், இவ்வாறு பொங்கல் கொண்டாடுவதை கவனிக்கலாம்.

Pongal - chennai sangamam, corruption-crores spent-2

பொங்கல் விழாவில் கலந்து கொண்ட ஸ்டாலின்: திமுக சார்பில் சென்னை அயனாவரம், கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பொங்கல் கொண்டாட்டங்கள் நடைபெற்றது. வீதிகள் தோறும் தோரணம் கட்டியும், மேடைகள் அமைத்தும் நாட்டுப்புற கலைகள் நிகழ்த்தப்பட்டதை, அக்கட்சியின் செயல்தலைவர் ஸ்டாலின் பார்வையிட்டார். தொடர்ந்து துறையூரில் நடைபெற்ற பொங்கல் நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றிய ஸ்டாலின், தமிழகம் 20 ஆண்டுகளுக்கு பின்னால் போய்க்கொண்டிருப்பதாக கூறினார்[5]. திமுக ஆட்சிக்கு வந்தால் தை முதல் நாள் தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்படும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை கொளத்தூரில் பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தை தொடக்கி வைத்த ஸ்டாலின், நலத்திட்ட உதவிகளையும் பொங்கல் பொருட்களையும் வழங்கினார். தை முதல் தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்பட்டு வந்தது. திமுக ஆட்சி காலத்தில் தை முதல்நாள் தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்படும் என்றும் கூறினார். தை பிறக்கும் காலத்தில் நல்ல விடிவுகாலம் பிறக்கப்போகிறது என குறிப்பிட்ட ஸ்டாலின், அரசியல் ரீதியாக நாட்டைப்பிடித்துக் கொண்டிருக்கும் சனி இன்றோடு ஒழிய வேண்டும் என்றும் கூறினார்[6]. ஆண்டாள் பற்றிய கருத்துக்கு வைரமுத்து மன்னிப்பு கேட்ட பின்னரும் அதனை பூதாகரமாக்கி வளரவிடுவது நியாயமல்ல என்றும் கூறினார்[7]. கருணாநிதி, அறிஞர் அண்ணா பற்றி எச். ராஜா எழுதி பெரிய ஆளாக வேண்டும் என்று நினைக்கிறார். அவரது கருத்துக்கு நான் பதில் கூற விரும்பவில்லை என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்[8].

Pongal - chennai sangamam, corruption-crores spent

ஸ்டாலின் முழு பேச்சு: நான் முதல்வராக வருகிறேனோ, இல்லையோ.. உங்களைப் பொறுத்தவரையில், உங்களுடைய காவலனாக, சிறந்த சேவகனாக என்றைக்கும் இருப்பேன் என உறுதியுடன் சொல்ல விரும்புகிறேன் என்று திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாக்களில் பங்கேற்றார்.  அப்போது பொதுமக்கள் மத்தியில் பேசிய ஸ்டாலின், ஒவ்வொரு ஆண்டும் நமது கொளத்தூர் தொகுதியில் தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் விழாக்களை நாம் தொடர்ந்து கொண்டாடி, அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளையும், பொங்கல் திருநாள் வாழ்த்துகளையும் தெரிவிக்கும் வாய்ப்பு உங்களில் ஒருவனாக இருக்கின்ற எனக்கு கிடைத்து வருகிறது. கொளத்தூர் தொகுதியை சேர்ந்த உங்களோடு நான் எப்போதும் இருப்பதால், இந்த நேரத்தில் உங்களிடம் நான் அதிக நேரம் பேச வேண்டியதில்லை.

May 2017, beef support Stalin meeting-opposing centre

காரணம், இது எனது தொகுதி என்று சொல்வதை விட, என்னுடைய இல்லம், வீடு என்று சொல்லக்கூடிய அளவுக்கு, என்னை நீங்கள் தேர்ந்தெடுத்து இருக்கின்றீர்கள் என்று சொல்வதை விட, என்னை உங்களோடு இணைத்துக் கொண்டு இருக்கிறீர்கள் என்று சொல்லும் நிலை இருக்கின்றது. எனவே, இந்த நிகழ்ச்சியில் ஒரு குடும்ப உணர்வோடு, பாசத்துடன் பங்கேற்று இருக்கிறீர்கள். இன்னும் சொல்ல வேண்டுமென்றால், உங்களுக்கு வாழ்த்து சொல்ல நான் வந்திருக்கிறேன் என்பதைவிட, உங்களிடம் நான் வாழ்த்துபெற வந்திருக்கிறேன் என்பதுதான் பொருத்தமாக இருக்கும். ஏனென்றால், நான் உங்கள் வீட்டுப் பிள்ளை. காரணம், இந்தத் தொகுதியில் என்னை கடந்த முறை பெற்ற வாக்குகளை விட அதிகமான வாக்குகள் அளித்து, இரண்டாவது முறையாக வெற்றி பெற வைத்து இருக்கின்றீர்கள். இங்கு ஜவகர் அவர்கள் பேசியபோது, முதலமைச்சராக வரப்போகிறார் என்று எண்ணி எனக்கு வாக்களித்தீர்கள் என்றார்[9]. நான் அவருக்கும், உங்களுக்கும் சொல்ல விரும்புவது, நான் முதலமைச்சராக வருகிறேனோ, இல்லையோ ஆனால் இந்தத் தொகுதியைப் பொறுத்தவரையில், நான் என்றைக்கும் உங்களுடைய முதல் குடிமகனாக, உங்களுடைய முதல் காவலனாக, இந்தத் தொகுதிக்குப் பணியாற்றும் சிறந்த சேவகனாக நான் என்றைக்கும் இருப்பேன் என உறுதியுடன் சொல்ல விரும்புகிறேன்[10].

© வேதபிரகாஷ்

16-01-2018

Pongal - chennai sangamam, corruption

[1] மறைமலைகள் போறோரே இதற்கு காரணமாக இருந்தார்கள், பிறகு புரிந்து கொண்ட நிலையில் எல்லை மீறி போய் விட்டது.

[2]புனிதமான பொங்கல் நாள்என்று பெருமையாக பேசினார்நாத்திகத்தில்புனிதம்எப்படி வந்தது என்றுஅறிஞர்விளக்கவில்லைhttp://www.annavinpadaippugal.info/sorpozhivugal/punithamana_pongal.htm

[3] திகவின் வீரமணி “விடுதலை,” கருணாநிதியின் “முரசொலி,” நாத்திக-திராவிட சித்தாந்திகள் அத்தகைய கருத்துகளை பிரச்சாரம் செய்து, இளைஞர்களை ஏமாற்றி வந்தனர்.

[4]  The searches were conducted at Tamil Maiyam, an NGO founded by Jegath Gasper Raj, in Mylapore. Tamil Nadu Chief Minister M. Karunanidhi’s daughter Kanimozhi, a DMK Member of Parliament, is a trustee of Tamil Maiyam, the key organisation behind Chennai Sangamam, a high-profile cultural event held since 2007.

http://www.thehindu.com/todays-paper/tp-national/CBI-searches-target-Rajas-associates/article15595207.ece

The CBI recorded the statement of an employee of Green House Promoters Pvt Ltd whose Managing Director Batcha had fired over 40 employees on the recommendation of Balwa. Batcha, who was interrogated by the CBI, was found dead under mysterious circumstances in Chennai in March 2016.  ….one company of DB Group, Eterna Developers Pvt Ltd had some business transactions with Green House Promoters Pvt Ltd. It (Eterna Developers) transferred around Rs 1.25 crore to Green House Promoters and after some time, this amount was paid back by Green House Promoters to Eterna Developers…..

http://www.thehindu.com/news/national/Green-House-Promoters-and-DB-Group-closely-linked-CBI/article13874013.ece

[5] நியூஸ்.7.செய்தி, “அரசியல் ரீதியில் நாட்டைப் பிடித்திருக்கும் சனி இன்றோடு ஒழிய வேண்டும்” : ஸ்டாலின், January 13, 2018.

http://ns7.tv/ta/tamil-news/tamilnadu/13/1/2018/mk-stalin-allegation-against-tamilnadu-government

[6] http://ns7.tv/ta/tamil-news/tamilnadu/13/1/2018/mk-stalin-allegation-against-tamilnadu-government

[7] தமிழ்.ஒன்.இந்தியா, தை பிறந்தால் வழி பிறக்கும்தமிழகத்தை பிடித்த சனி ஒழியும்ஸ்டாலின், Posted By: Mayura Akilan, Published: Saturday, January 13, 2018, 14:23 [IST]

[8] https://tamil.oneindia.com/news/tamilnadu/new-government-on-thai-month-says-stalin-308363.html

[9] தினமணி, நான் முதல்வராக வருகிறேனோ, இல்லையோ..உங்கள் சேவகன் தான்: மு..ஸ்டாலின், Published on : 13th January 2018 04:23 PM .

[10]http://www.dinamani.com/tamilnadu/2018/jan/13/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8B-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-2844287.html

செபாஸ்டியன் சீமான் திடீரென்று “முருக பக்தன்” ஆகியது, இந்து வேடம் போடுவது, ஆனால் கருவறை நுழைவு போராட்டம் நடத்துவது (1)

பிப்ரவரி 9, 2015

செபாஸ்டியன் சீமான் திடீரென்றுமுருக பக்தன்ஆகியது, இந்து வேடம் போடுவது, ஆனால் கருவறை நுழைவு போராட்டம் நடத்துவது (1)

சீமான் வேலுடன் பழனியில்.எச்சரிக்கை

சீமான் வேலுடன் பழனியில்.எச்சரிக்கை

நாம் தமிழர் கட்சியின் கிளை அமைப்பான வீரத்தமிழர் முன்னணியின் தொடக்க விழா திண்டுக்கல் மாவட்டம், பழனியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடந்தது [1]. “சீமானின் நாம் தமிழர் கட்சியில்” பண்பாட்டு மீட்புக்காக “வீரத் தமிழர் முன்னணி” என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது அவரது முரண்பாடு[2] மற்றும் ரகசிய திட்டத்தைக் காட்டுகிறது. கிருத்துவராக இருந்து கொண்டு, கிருத்துவர்களோடு சேர்ந்து கொண்டு இந்துக்களுக்கு விரோதமாக இவர் செயல்பட்ட விவகாரங்கள் ஏராளமாக உள்ளன. செபாஸ்டியன் சீமானின் கிருத்துவப் பின்னணி முதலிய விவரங்களை இங்கே பார்க்கவும்[3]. பிறகு, இலங்கைப் பிரச்சினையை வைத்துக் கொண்டு அரசியல் வியாபாரம் நடத்தினார். பிரபாகரன் இறப்பிற்குப் பிறகு, ராஜபக்ஷேவின் தோல்விக்குப் பிறகு, இவரது சித்தாந்தம் புழுத்துப் போய், ஏற்பார் இல்லாமல் போய் விட்டது. மேலும், “தமிழ் தேசியம்” பேசிவந்த, பிரிவினைவாதிகளின் பலமும் குறைந்து விட்டது. இவர் சினிமாகாரர் என்பதனால், பணத்தை வைத்துக் கொண்டு சமாளித்துக் கொண்டிருந்தார். ஆனால், உட்பூசல்கள் அதிகமாகிக் கொண்டிருந்தன. இவ்வேளையில், தமிழர்களை ஏமாற்ற “கலாச்சாரம்” என்ற உணர்ச்சிப்பூர்வமான விசயத்தை எடுத்துக் கொண்டுள்ளார் என்று தெரிகிறது.

சீமானின் புதிய கட்சி 2015

சீமானின் புதிய கட்சி 2015

பண்பாட்டு புரட்சி, இறையோன் முருகன், கிருபானந்த வாரியார், என்ற பட்டியலில் பெரியாரைக் காணோம்:  “வீரத் தமிழர் முன்னணி”யின் தொடக்க விழா பழனியில் நடைபெற உள்ளது என்று அவர்களது இணைதளம் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி தலைமை நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கை[4] என்று இவ்வாறுள்ளது: “பண்பாட்டு புரட்சி இல்லாது, அரசியல் புரட்சி வெல்லாது என்பதை நடுகல் மரபினராகிய நாங்கள் நன்கு உணர்ந்திருக்கிறோம். இயற்கை வழிபாட்டை கொண்ட தமிழர் நாம் உலகப் பொதுமறையாம் திருக்குறளே எமது மறை; எங்கள் வழி வள்ளுவம்; எங்கள் வழிபாடு இயற்கை; எங்கள் தெய்வங்கள் முன்னோர்கள் என்ற நெறியின் படி.. பெரும்புகழ் இறையோன் முருகன், வாழ்வியல் நெறிகட்டி வள்ளுவப் பெருந்தகை, தமிழ்மொழி இலக்கணம் கண்ட தொல்காப்பியர், மகத்துவம் பொருந்திய மாமுனி அகத்தியர், அறம் முழங்கிய ஔவை பாட்டி, நீதியின் வடிவம் கண்ணகி, வழிபாட்டு வழிகாட்டி அய்யா வள்ளலார், ஆன்மிகமும் அறிவியலும் கற்பித்த ஆசான் திருமூலச் சித்தர், அய்யா வழி வைகுந்தர், பெருமைமிகு கிருபானந்த வாரியார், மதிப்புமிகு குன்றக்குடி அடிகளார் உள்ளிட்டோரைக் குறியீடுகளாகக் கொண்டும், எங்கள் இனம் காக்க போராடிய கரிகாற்சோழன், அருண்மொழிச்சோழன், அரசேந்திர சோழன், பூலித்தேவன், தீரன் சின்னமலை, வேலு நாச்சியார், பண்டார வன்னியன், மருதுபாண்டியர், அழகுமுத்துக்கோன், பெரும்பிடுகு, சுந்தரலிங்கம், ஒண்டிவீரன் ஆகியோரை தெய்வங்களாக நெஞ்சில் நிறுத்தியும் வரும் தைப்பூச நாட்களில் புதிய எழுச்சிக்கு நாம் தயாராகிவிட்டோம். நாளை பிப்ரவரி 7 ஆம் தேதி பழனியில் தமிழ்ப் பண்பாட்டை மீட்கவும் காக்கவும் வீரத்தமிழர் முன்னணியைத் தொடங்க இருக்கிறோம். மாலை 3 மணிக்கு பழனியாண்டவர் கலை கல்லூரியிலிருந்து பேரணி தொடங்கி தேரடி வீதியில் நிறைவடைந்து தொடக்க விழா பொதுக்கூட்டம் நடைபெறுகிறது”, இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது[5].

Seeman withn VEL- exploiting culture

Seeman withn VEL- exploiting culture

பொதுமறையாம் திருக்குறளே எமது மறை; எங்கள் வழி வள்ளுவம்: தெய்வநாயகம் பாணியில் இப்படி ஆரம்பித்திருப்பது கிருத்துவ திட்டத்தை வெலிப்படுத்துகிறது. “பெரும்புகழ் இறையோன் முருகன்,” என்றபோது ஜான் சாமுவேலை நினைவு படுத்துகிறது. “தமிழ்மொழி இலக்கணம் கண்ட தொல்காப்பியர், மகத்துவம் பொருந்திய மாமுனி அகத்தியர், அறம் முழங்கிய ஔவை பாட்டி, நீதியின் வடிவம் கண்ணகி, வழிபாட்டு வழிகாட்டி அய்யா வள்ளலார், ஆன்மிகமும் அறிவியலும் கற்பித்த ஆசான் திருமூலச் சித்தர், அய்யா வழி வைகுந்தர், பெருமைமிகு கிருபானந்த வாரியார், மதிப்புமிகு குன்றக்குடி அடிகளார் உள்ளிட்டோரைக் குறியீடுகளாகக் கொண்டு,” எனும்போது, அடையாளங்களை குழப்பப் பார்க்கும் போக்கு, “எங்கள் இனம் காக்க போராடிய கரிகாற்சோழன், அருண்மொழிச்சோழன், அரசேந்திர சோழன், பூலித்தேவன், தீரன் சின்னமலை, வேலு நாச்சியார், பண்டார வன்னியன், மருதுபாண்டியர், அழகுமுத்துக்கோன், பெரும்பிடுகு, சுந்தரலிங்கம், ஒண்டிவீரன் ஆகியோரை தெய்வங்களாக நெஞ்சில் நிறுத்தி”, எனும்போது, ஜாதித்துவமும், “தமிழ்ப் பண்பாட்டை மீட்கவும் காக்க”, எனும்போது, இவரது போலித்தனமும் வெலிப்படுகின்றன. இத்தனை நாட்களாக இவர் எப்படி “தமிழ்ப் பண்பாட்டை மீட்டிருக்கிறார், “காக்க”, என்ன செய்திருக்கிறார், என்பது இவரது வசைமொழிகள், தூஷ்ணங்கள் மூலமாகவே அறிந்து கொள்ளலாம்.

அய்யாநாதன் - நாம் தமிழர் கட்சி பிளவு- ஜனவரி 2015

அய்யாநாதன் – நாம் தமிழர் கட்சி பிளவு- ஜனவரி 2015

சீமானுக்கு எதிராக கட்சி முக்கிய நிர்வாகிகள் சிலர் போர்க்கொடி உயர்த்திய விளைவா?:  நாம் தமிழர் கட்சியை 2010-ல் இயக்குநர் சீமான் தொடங்கினார். இந்த கட்சியை, தமிழ்த் தேசிய, ஈழப்போராட்ட ஆதரவு அரசியல் இயக்கமாக நடத்தினார். சமீபத்தில், இந்த கட்சியில் சீமானுக்கு எதிராக கட்சி முக்கிய நிர்வாகிகள் சிலர் போர்க்கொடி உயர்த்தி தனித்து செயல்படப் போவதாகவும், கட்சியில் இருந்து சீமானை நீக்கப்போவதாகவும்[6] அறிவித்தனர்[7]. நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக செயல்படப் போவதாக அக்கட்சியின் சர்வதேச ஊடகவியல் பொறுப்பாளர் அய்யநாதன் உள்பட ஈரோடு ஜெயராஜ் மற்றும் 13 மாவட்ட பொறுப்பாளர்கள், முக்கிய நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்[8]. நாம் தமிழர் கட்சியின் சர்வதேச ஊடகவியல் பொறுப்பாளராக இருக்கும் அய்யநாதன், சிவகங்கை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மாறன் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் காரைக்குடியில் பத்திரிகையாளர்களை இன்று சந்தி்த்தனர்[9]. அப்பொழுது பேசிய அய்யநாதன், “தமிழ் நாட்டை பாலைவனமாக்கும் மீத்தேன் திட்டத்திற்கு தமிழகத்தில் எதிர்ப்பு எழுந்துள்ளது. அதையும் மீறி காரைக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மீத்தேன் ஆய்விற்காக தொடர்ந்து பணிகள் நடைபெற்று வருகின்றன. மீத்தேன் திட்டத்தை எதிர்த்து போராடி, அந்த குழாய்களை பிடுங்கி எரிந்த சிவகங்கை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மாறன் உட்பட ஒன்பது பேர் மீது வழக்கு பதிவு செய்யபட்டு அவர்கள் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களுக்காக சீமான் ஒரு கண்டன அறிக்கை கூட வெளியிடவில்லை. அதேபோல் ராமேஸ்வரம் மீனவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கபட்டதை கண்டித்து நடைபெற்ற போராட்த்தில் சிறை சென்ற ராமநாதபுரம் மாவட்ட நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் கவி.இளங்கோ கைது செய்யப்பட்டதற்கும் ஒரு கண்டன அறிக்கை கூட சீமான் வெளியிடவில்லை.

 

அய்யாநாதன் - நாம் தமிழர் கட்சி பிளவு- ஜனவரி 2015..கூட்டம்

அய்யாநாதன் – நாம் தமிழர் கட்சி பிளவு- ஜனவரி 2015..கூட்டம்

புதிய நபர்களை வைத்து பொதுக்குழுவை நடத்தியுள்ளார்[10]: மாறாக தமிழர் நலனுக்காக போராடிய இவர்களை தொடர்ந்து கண்டித்து இவர்கள் இல்லாமல் புதிய நபர்களை வைத்து பொதுக்குழுவை நடத்தியுள்ளார். தமிழ் உணர்வு அற்றவர்களுக்கு பொறுப்பு வழங்கியுள்ளார். இவர்களின் செயல்பாட்டிற்கு முட்டுக்கட்டை போடுகிறார். அதற்காக தான் தமிழர் பிரச்சினையில் நாங்கள் வீரியத்துடன் செயல்பட நாம் தமிழர் கட்சியில் தனித்து செயல்படுவது என்ற முடிவினை நாங்கள் எடுத்துள்ளோம். எங்களுடன் எட்டு மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கைகோர்த்துள்ளனர். நாங்கள் நாம் தமிழர் கட்சியில் தான் இருப்போம். ஆனால் தனித்து செயல்பட உள்ளோம். இந்த கட்சியை தேர்தல் கமிஷனில் பதிவு செய்து ஒரு ஆண்டு ஆகியும் எந்த பொறுப்பாளர்களும் நியமிக்கப்படவில்லை. அதேபோல் கட்சியில் எந்த உறுப்பினருக்கும் உறுப்பினர் அட்டை கிடையாது. சீமானுக்கே நாம் தமிழர் கட்சியில் உறுப்பினர் அட்டை கிடையாது. இந்த நிலை தொடர்வதை நாங்கள் பொறுத்து கொள்ள முடியாது. பொதுக்குழுவை கூட்டி அதன் மூலம் தான் தலைவர், செயலாளர் உள்ளிட்ட பதவிகளை அறிவிக்க முடியும். சீமானால் தன்னிச்சையாக அறிவிக்க முடியாது. தற்பொழுது வரை சீமான் ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியில் தான் உள்ளார். ஆனால் வேலுப்பிள்ளை பிராபகரனை தலைவராக ஏற்றுகொண்ட ஒரு இயக்கம் இப்படி செயல்படுவதை நாங்கள் பார்த்துகொண்டு இருக்க முடியாமல் தான் இந்த முடிவை எடுத்துள்ளோம்”, என்றார் அவர்.

marumalarchy naam tamilar-2

marumalarchy naam tamilar-2

திடீரென்று பழனி முருகன் மீது பிறந்த பக்தியா, பித்தா, வெறியா?: பழனியில் நாம் தமிழர் கட்சி சார்பில் வீரதமிழர் முன்னணி என்ற அமைப்பு தொடக்க விழா நடந்தது. இதில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்றார். முன்னதாக கட்சியினர் பழனியாண்டவர் கல்லூரியில் இருந்து ஊர்வலமாக மலைக்கோவில் நோக்கி சென்றனர். திடீரென பஸ் ஸ்டாண்ட் ரவுண்டானாவில் இருந்து மலைக்கோயில் நோக்கி வாகனங்கள் சென்றன[11]. அப்போது, “முருகனை காண மலைக்கோயிலுக்கு செல்கிறோம்’ என சீமான் மற்றும் தொண்டர்கள் மலை ஏறினர். கோவிலில் சீமான் தொண்டர்களுடன் கருவறை நுழைவு வாயிலில் போராட்டம் நடத்தபோவதாக போலீசாருக்கும் மற்றும் இந்து முன்னணி அமைப்பினருக்கும் தகவல் தெரிந்தது. இதனையடுத்து போலீசார் மற்றும் இந்து முன்னணி அமைப்பினர் மலைக்கோவிலில் குவிந்தனர். டி.எஸ்.பி., சண்முகசுந்தரம், தாசில்தார் மாரியப்பன் ஆகியோர் மலைக்கோயிலில் சீமானை தடுத்து நிறுத்த காத்திருந்தனர்[12]. அப்போது போலீசார் மலைக்கோவில் வாசலில் சீமான் மற்றும் தொண்டர்களை தடுத்து கோவிலுக்குள் ஊர்வலமாக செல்ல அனுமதி வாங்கவில்லை என்று தெரிவித்தனர்[13]. .இதுகுறித்து டி.எஸ்.பி., சண்முகசுந்தரம் கூறுகையில், “”ஊர்வலம், பொதுகூட்டம் நடத்த அனுமதி வாங்கியிருந்தனர். திடீரென ஊர்வலத்தின் போது மலைக்கோயிலுக்கு செல்வதாக கூறினர். இதனால் தடுத்தோம்,” என்றார். இதனையடுத்து சீமான் வெளிபிரகாரத்தில் வணங்கி விட்டு பொதுக்கூட்டத்திற்கு சென்றார். பொதுக்கூட்டத்தில் சீமான், தனது கட்சியை சேர்ந்த சிலர் தமிழில் பெயரை மாற்றிக் கொண்ட விபரத்தை வாசித்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Seeman withn VEL- exploiting culture, sentiments

Seeman withn VEL- exploiting culture, sentiments

வருங்கால இளைஞர்களுக்கு எடுத்துறைக்கும் வகையில் எந்த ஒரு அமைப்பும் இல்லை: முன்னதாக சீமான் நிருபர்களிடம் கூறியதாவது[14]:– தமிழகத்தில் இளைஞர் பாசறை, மகளிர் பாசறை, இலக்கிய பண்பாட்டு பாசறை போன்றவைகளும் இந்து அமைப்புகளும் ஏராளமாக உள்ளன. ஆனால் பண்டைய தமிழர்களின் மரபு, வீரம் உள்ளிட்டவைகளை வருங்கால இளைஞர்களுக்கு எடுத்துறைக்கும் வகையில் எந்த ஒரு அமைப்பும் இல்லை. இதனால் நாம் நம் முன்னோர்களான ஆதி தமிழர்களின் வாழ்வு முறையை மறந்து போகும் நிலை உள்ளது. எனவே தமிழர்களின் மரபை அழிவில் இருந்து மீட்கும் ஒரு அமைப்பாகவே வீரதமிழர் முன்னணி உருவாக்கப்பட்டுள்ளது. குறிஞ்சி தமிழர் தந்த முப்பாட்டன் முருகப்பெருமான் கோவில் கொண்டுள்ள பழனியில் இந்த அமைப்பை தொடங்கி வைப்பதில் நான் பெருமையடைகிறேன்[15]. பழனியில் தற்போது வீரதமிழர் முன்னணி என்ற புது இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இது அரசியல் கட்சியல்ல. நாம் தமிழர் கட்சியின் ஒரு இயக்கமாக செயல்படும்.

சீமான் வேலுடன் பழனியில்

சீமான் வேலுடன் பழனியில்

கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் …..?: கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் திருவள்ளுவருடைய நெறிமுறைகளை பின்பற்றுபவர்கள், அதன்படி வாழ விருப்ப படுபவர்களுக்காக வீரதமிழர் முன்னணி இயக்கத்தை ஆரம்பத்துள்ளோம். வீரதமிழர் முன்னணி இயக்கம் திராவிட இயக்கங்களுக்கு மாற்றாக இருக்கும். 2016–ம் ஆண்டு பொதுத்தேர்தலில் அனைத்து சட்டமன்ற தொகுதியிலும் தனித்து போட்டியிடுவோம். இலங்கை தமிழர்கள் அந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பும் மத்திய அரசு முடிவு கண்டனத்திற்குரியது. இலங்கைக்கு திருப்பி அனுப்பமாட்டோம் என தமிழகஅரசு முடிவெடுத்து இருப்பது வரவேற்கத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார். நாம் தமிழர் கட்சியில் ஏற்பட்ட நெருக்கடி காரணமாகவே சீமான், அந்த கட்சிக்கு மாற்றாக புதிய கட்சி தொடங்கு வதற்காக இந்த புதிய இயக்கத்தை தொடங்கியதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது[16].இதையடுத்து வீரதமிழர் முன்னணி அமைப்பு சார்பில் கொள்கை விளக்க பேரணி நடந்தது. பழனியாண்டவர் கலைக்கல்லூரியில் தொடங்கிய இப்பேரணி பழனி தேரடிவீதியில் நிறைவடைந்தது. தொடர்ந்து வீரதமிழர் முன்னணி அமைப்புக்கான மாநில ஒருங்கிணைப்பாளர்களாக பெஞ்சமின், அலாவுதீன், செந்தில்நாதன் சேகுவேரா, சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டனர்[17].

© வேதபிரகாஷ்

09-02-2015

[1] http://naamtamilar.org/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81

[2] http://www.daytamil.com/2014/01/tamil_3808.html

[3]https://christianityindia.wordpress.com/2010/05/23/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%86/

[4] http://tamil.oneindia.com/news/tamilnadu/seeman-launch-veerath-thamizhar-munnani-220469.html

[5] தமிழ்.ஒன்.இந்தியா, சீமானின் நாம் தமிழர்கட்சியில் பண்பாட்டு மீட்புக்காகவீரத்தமிழர் முன்னணி” – நாளை உதயம்!!, Posted by: Mathi, Published: Friday, February 6, 2015, 14:17 [IST]

[6] https://www.facebook.com/pathivumedia/posts/563479750454837

[7] தி இந்து, இயக்குநர் சீமான் புதிய இயக்கம் தொடக்கம்: நாம் தமிழர் கட்சிக்கு மாற்றாக புதிய கட்சியா?, Published: February 8, 2015 10:55 ISTUpdated: February 8, 2015 10:55 IST

[8] ஒன்.இந்தியா.தமிழ், நாம் தமிழர் கட்சியில் பிளவு?…. சீமானுக்கு எதிராக செயல்படப் போவதாக ஒரு பிரிவு அறிவிப்பு, Posted by: Sutha

Updated: Wednesday, January 7, 2015, 19:38 [IST]

[9] http://www.yarl.com/forum3/index.php?/topic/151729-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%813/

[10] http://tamil.oneindia.com/news/tamilnadu/naam-tamil-splits-218540.html

[11] தினமலர், பழநி கோயிலில் சீமான்: போலீசார் அனுமதி மறுப்பு, பிப்ரவரி.08-02-2015, 01:17.

[12] http://www.dinamalar.com/news_detail.asp?id=1178637

[13] மாலைமலர், பழனி மலைக்கோவிலுக்குள் ஊர்வலமாக செல்ல சீமானுக்கு அனுமதி மறுப்பு, பதிவு செய்த நாள் : ஞாயிற்றுக்கிழமை, பெப்ரவரி 08, 1:11 PM IST.

[14] http://www.maalaimalar.com/2015/02/08131115/police-refuse-permission-to-se.html

[15] தினத்தந்தி, இலங்கை தமிழர்கள் பிரச்சினை: தமிழக அரசின் முடிவு பாராட்டுக்குரியது சீமான் பேட்டி, ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 08, 2015

[16]http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/article6870989.ece?homepage=true

[17] http://www.dailythanthi.com/News/Districts/dindugal/2015/02/07211902/Sri-Lankan-Tamils-issue-the-decision-of-the-State.vpf

சேஷாசல முதலியார் – சேஷாசலம் – பெரியார்தாசன் – “……………….” – சித்தார்த்தா – அப்துல்லாஹ் (1950-2013) காலமானார்!

ஓகஸ்ட் 19, 2013

சேஷாசல முதலியார் – சேஷாசலம் – பெரியார்தாசன் – “………………….” – சித்தார்த்தா – அப்துல்லாஹ் (1950-2013) காலமானார்!

Abdullah - in different poses

பெரியார்தாசன் என்கின்ற அப்துல்லா காலமானார்: பாரதிராஜாவின் `கருத்தம்மா’, `காதலர் தினம்’ உள்பட பல்வேறு தமிழ் திரைப் படங்களில் நடித்தவர் பெரியார்தாசன். இவர் சென்னை பச்சையப்பா கல்லூரியில் 38 ஆண்டுகள் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். 15-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த இவர் பட்டிமன்றம், கருத்தரங்குகளில் பங்கேற்று வந்தார். ம.தி.மு.க. நிர்வாகியான இவர் அந்த கட்சியின் உயர் நிலைக்குழு உறுப்பினராக இருந்தார். பெரியார்தாசன் வீடு திருவேற்காடு மகாலட்சுமி நகர் 6-வது தெருவில் உள்ளது. கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். கல்லீரல் கோளாறு காரணமாக குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு 1.25 மணிக்கு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 63. அவரது உடல் திருவேற்காட்டில் உள்ள அவரது வீட்டில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது[1]. பெரியார்தாசனுக்கு வசந்தா (62) என்ற மனைவியும், வளவன் (35), சுரதா (35) என்ற 2 மகன்களும் உள்ளனர்[2].

Seshachalam-Periyardasan-Siddharth-Abdullah

அவருடையஆன்மாசாந்தியடையபிரார்த்தனை: “அவருடைய ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை” என்று செய்யலாமா, கூடாதா என்று தெரியவில்லை. இருப்பினும், இந்தியப் பாரம்பரியப்படி, “அவருடைய ஆன்மா சாந்தியடையடைவதாக” என்று சொல்லிக் கொண்டு, அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்ளலாம். இணைதளங்களில் தேடியபோது, நக்கீரனில் வெளிவந்த கீழ்கண்ட செய்தி கண்களில் பட்டது. அது அப்படியே கொடுக்கப்படுகிறது. கதிரவன் என்பவர் அச்செய்தியைக் கொடுத்திருக்கிறார்.

Abdullah introduced as Periyarthasan in Dubai - hand bill

என்னநடந்ததுஇவர்கள்  (பெரியார்தாசன்மற்றும்மணிவண்ணன்) வாழ்க்கையில்?: வ்வப்போது சினிமாவில் நடித்து வந்த பெரியார்தாசன் அண்மையில் (2010) ஆத்திகரானார்.  அதுமட்டுமில்ல – இஸ்லாம் மதத்திற்கு மாறினார் (11-03-2010). இவர் மாதிரியே பெரியாரின் தீவிர பற்றாளர் மணிவண்ணன்.  இவர் இப்போது சாய்பாபா பக்கம் சாய்ந்திருக்கிறார். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தத்துவ இயல்[3] பேராசிரியராக பணிபுரிந்த பெரியார்தாசனை பாரதிராஜா சினிமாவுக்கு கொண்டு வந்தார்.  நடிப்போடு ரியல் எஸ்டேட், மல்டி லெவல் மார்க்கெட்டிங்கிலும் கால் பதித்தார். கடந்த 2004ம் ஆண்டு அன்பு பாலா நடித்த அம்மா, அப்பா, செல்லம் படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரியில் நடந்தது.   இதற்காக சென்னையில் இருந்து நான், (பேட்டி எடுக்க) பெரியார்தாசன், நடிகை சபீதா ஆனந்த் (நடிக்க)  மூவரும் ஒரு காரில் புதுச்சேரி சென்றோம். அப்போது பெரியார்தாசன், தனது மகன் வ.சி.வளவன் திருமணம் அழைப்பிதழ் கொடுத்தார்.  அது ஒரு புத்தகமாகவே இருந்தது.    அந்த திருமண அழைப்பிதழில் பெரியாரின் படம் அச்சிடப்பட்டிருந்தது.  உள்ளே திருக்குறள் இன்பத்து பாலுக்கு பெரியார்தாசன் எழுதிய விளக்கவுரை.

Periyardasan marriage invitation card

ஏன்பெரியாரின்படத்தைதிருமணஅழைப்பிதழில்அச்சிட்டுள்ளேன்: ஏன் பெரியாரின் படத்தை திருமண அழைப்பிதழில் அச்சிட்டுள்ளேன் என்று நினைப்பீர்கள்? என்று அவராகவே கேட்டு அவராக விளக்கம் சொல்லிக்கொண்டு வந்தார். சேசாசலம் என்கிற என் பெயரையே பெரியார்தாசன்னு மாத்திக்கிட்டேன்னா பார்த்துக்குங்க…….என்று பெரியார் மீது தான் கொண்ட பற்று பற்றி,  கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரையில் ஆரம்பித்து மரக்காணம் வரை சொல்லிக்கொண்டு வந்தார். நொங்கு கடை, இளநீர் கடைகளில் கார் நின்ற போது மட்டும் இடைவேளை. ஐந்து வருடங்களில் (2005-2010) அவர் வாழ்க்கையில் என்ன மாற்றம் நிகழ்ந்ததோ….தற்போது இறைவன் மீது நாட்டம் கொண்டிருக்கிறார்.  இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளார். இதே போல் பெரியாரின் தீவிர பற்றாளர் மணிவண்ணன்.   இதனால்தான் இவருக்கும் நடிகர் சத்யராஜூக்கும் நெருக்கம் அதிகமானது. இவர் இப்போது பெரியார் தொண்டர்களுக்கு அடுத்த அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.  கடந்த சில வாரங்களுக்கு முன் மஹாராஷ்டிராவில் இருக்கும் சீரடி சாய்பாபா சன்னதிக்கு சென்று வந்திருக்கிறார்[4]. கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்யும் அளவிற்கு என்ன நடந்தது இவர்கள் வாழ்க்கையில்?

Periyardasan-explaining his position-about doubting him

2013ல்பெரியார்தாசன், மணிமண்ணன்காலமானது: ஜூன் 2013ல் தான் நாத்திகரான மணிவண்ணன் (31-07-1954 – 15-06-2013) காலமானார். கதிரவன் நக்கிரனில் எடுத்துக் காட்டியுள்ளபடி, மணிவண்ணன் “கடந்த சில வாரங்களுக்கு முன் மஹாராஷ்டிராவில் இருக்கும் சீரடி சாய்பாபா சன்னதிக்கு சென்று வந்திருக்கிறார்[5]” என்றிருந்தால், இந்த மூன்று ஆண்டுகளில் மணிவண்ணன் ஆதிகரானாரா, கடவுளை நம்ப ஆரம்பித்தாரா, என்பதெல்லாம் நமக்கு தெரியாது. ஆனால், அவரது நண்பர் இந்த மூன்று ஆண்டுகளாக முஸ்லிமாக இருந்திருக்கிறார். (பகுத்தறிவு, நாத்திகம் இவற்றையெல்லாம் மூட்டைக் கட்டிவிட்டு, பெரியாரையும் ஒதுக்கி விட்டு) கடவுளை நம்பியிருக்கிறார். திராவிடர்களுக்குக் குழப்பமாகத்தான் இருக்கும். ஊடகங்களும்[6] “பெரியார்தாசன் மரணம்” என்றுதான்[7] செய்திகளை[8] வெளியிட்டிருக்கிறார்கள்[9].

Periyar Sasan - Abdullah etc

இதயத்தில்விழுந்தஇடிபெரியார்தாசன்மறைவுக்குவைகோஇரங்கல்: இதயத்தில் விழுந்த இடி என்று பேராசிரியர் பெரியார்தாசன் மறைவுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்[10]. அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், திராவிட இயக்கத்தின் கருத்துக் களஞ்சியக் கருவூலமான, என் ஆருயிர்ச் சகோதரர் அப்துல்லாஹ் பெரியார்தாசன், என்னையும், இயக்கத்தோழர்களையும் கண்ணீரில் துடிக்க வைத்து மறைந்து விட்டார். தந்தை பெரியாரை, மாணவப் பருவத்தில் தலைவராக ஏற்றுக்கொண்டு, சுயமரியாதை வீரராக, பகுத்தறிவு நெறியை மக்களிடம் பரப்ப, எழுத்தாலும், பேச்சாலும் அவர் ஆற்றிய பணிகள் ஈடு இணையற்றவை.

Periyardasan met Ajaya Malhothra

பொருளியல், தத்துவஇயல், உளவியல்பயின்றது: பச்சையப்பன் கல்லூரியில், பொருளியல் இளங்கலை, தத்துவ இயல் முதுகலை  பட்டங்களைப் பெற்று, இலண்டன் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் உளவியல் பயின்று, முனைவர் பட்டம் பெற்று, அமெரிக்காவின் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் ஆறு ஆண்டுகள் பேராசிரியராகப் பணி ஆற்றி, 34 ஆண்டுகள் பச்சையப்பன் கல்லூரியில், மெய்ப்பொருள் இயல் பேராசிரியராகப் பணி ஆற்றினார். அண்ணல் டாக்டர் அம்பேத்கருடைய, அனைத்து நூல்களையும் பழுதறக் கற்று,  ஆய்ந்து அறிந்து, அதில் அவர் பெற்ற பாண்டித்யத்துக்கு நிகராக இன்னொருவரைச் சொல்ல முடியாது. அதைப்போலவே, தந்தை பெரியாரின் எழுத்துகளையும், உரைகளையும், முழுமையாகக் கற்று உணர்ந்தவர்; அறிவாசானின் நம்பிக்கையையும், அன்பையும் பெற்று, திராவிடர் கழகத்தில் கொள்கை பரப்புச் செயலாளராகவும் இயங்கியவர்.

periyar nagar poster -claimimg periyardasan instead of Abdullah

தமிழ்ஈழவிடுதலை, பௌத்தம், பாலிமொழிகற்றல்முதலியன: தமிழ் ஈழ விடுதலைக்காக அரும்பாடுபட்டவர். மூன்று தமிழர்களின் உயிர்களை, தூக்குக் கயிற்றில் இருந்து விடுவிக்க, நான் போராடிய காலத்தில், தாமாக முன்வந்து, தன்னை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்துக் கொண்டு, கடந்த இரண்டு ஆண்டுகளாக, கழகத்தை மக்கள் மன்றத்தில் வலுப்படுத்திட, மேடை முழக்கத்தின் மூலமாக, அவர் ஆற்றி உள்ள பணிகள் அளப்பரியதாகும். புத்தரின் போதனைகளைப் பயில்வதற்காக, இலங்கைக்குச் சென்று, பாலி மொழியைக் கற்றுத் தேர்ச்சி பெற்றார். 56 நூல்களைத் தந்து உள்ள பெரியார்தாசன், அம்பேத்கர் தொகுத்த புத்தரும் அவர் தம்மமும் என்ற நூலை, தமிழில் மொழி ஆக்கம் செய்தார்.  அந்தநூல், தைவான் நாட்டில் மூன்று இலட்சம் படிகள் அச்சிடப்பட்டு, உலகெங்கும் பரப்பப்பட்டன.

Periyardasan died, Dinamalar

உடலைஎரியூட்டவும்வேண்டாம்; புதைக்கவும்வேண்டாம்: அவர் உடல் நலம் குன்றியபோது, ஜூலைத் திங்களில் அவரது இல்லம் சென்று சந்தித்து, பல மணி நேரம் உரையாடிக் கொண்டு இருந்தேன். இரண்டு நாள்களுக்கு முன்பு, ஆகஸ்ட் 16 ஆம் நாள், குளோபல் மருத்துவமனையில் அவரைச் சந்தித்தேன். மூன்று மணி நேரம் அவர் என்னிடம் மனம்விட்டுப் பேசிக்கொண்டு இருந்தார். அதுதான், அவர் கடைசியாகப் பேசியது என்று, அவரது பிள்ளைகள், நேற்று என்னிடம் தெரிவித்தனர். பேரறிஞர் அண்ணாவைக் கொத்திச் சென்ற புற்று நோய்தான், பெரியார்தாசனையும் நம்மிடம் இருந்து பறித்து விட்டது. ‘தான் இறந்தபிறகு, விழிகளை சங்கர நேத்ராலயா மருத்துவமனைக்குத் தந்து விடுங்கள்; உடலை எரியூட்டவும் வேண்டாம்; புதைக்கவும் வேண்டாம்; உடலை சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர்களது ஆராய்ச்சி படிப்புக்காகக் கொடுத்து விடுங்கள்’ என்று குடும்பத்தாரிடம் கூறியதற்கு ஏற்ப, அவ்விதமே அவரது உடல், சென்னை மருத்துவக் கல்லூரிக்கு வழங்கப்படுகிறது. இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்து, திராவிட இயக்கத்துக்கும், தமிழ் இனத்துக்கும் அருந்தொண்டு ஆற்ற  இருந்த, எங்கள் கொள்கை வைரத்தை, சாவு கொடூரமாகக் கொண்டு போய் விட்டதே என்ற வேதனையில் தவிக்கிறேன். அவரை இழந்து ஆற்றொணாத் துயரத்தில் வாடும், அவரது குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்க்கும் எனது கண்ணீர் அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று தெரிவித்துள்ளார்[11].

வாழ்க்கைக்குறிப்பு: சேசாசலம் 1950ம் ஆண்டு வட ஆற்காடு மாவட்டத்தில் உள்ள அகரம் என்ற கிராமத்தில், சைவவேளாளர் குடும்பத்தில் பிறந்தார். சேசாசல முதலியாராக, இந்துமத நம்பிக்கையாளராக இருந்தார். 1980ல் பெரியாரின் தொடர்பினால், “பெரியார்தாசன்” ஆனார். திராவிட சித்தாந்தத்தில் ஊறியிருந்தாலும், பல நம்பிக்கைகளை ஆராய்ந்து கொண்டிருந்ததால், சில காலத்திற்கு கிருத்துவராகக் கூட இருந்தார் என்று சொல்லப்படுறது. பிறகு பௌத்தராகி, “சித்தார்த்” என்ற பெயரை வைத்திருந்தார். 2010ல் முஸ்லிம் ஆனார்.

காலம் பெயர் மதம் / நம்பிக்கை
c.1950-70 சேசாசல முதலியார் சைவம்/ இந்து
c.1970-80 சேசாசலம் பகுத்தறிவுவாதி
c.1980-2008 பெரியார்தாசன் நாத்திகம் / இந்துவிரோதம்
c.2008-10 சித்தார்த் பௌத்தம் / இந்துவிரோதம்
c.2010-13 அப்துல்லா இஸ்லாம் / கடவுள்-மதம் நம்பிக்கையாளர்

C = circa = approximately = நம்பிக்கை, மதநம்பிக்கை, கடவுள் நம்பிக்கையைப் பொறுத்த வரையிலும் நிலைமை மாறியுள்ளதால், இப்படி குறிப்பிடப் பட்டுள்ளது.

யார் மறைந்தது, எது கடந்தது, எது நின்றது?: சித்தாந்த கலவைகளினால், குழப்பங்களினால், நம்பிக்கைச் சிதறல்கள், மோதல்கள் இவற்றினால் உருவானவ போலிருந்தார் என்று அவரது வாழ்க்கைக் குறிப்புகள் காட்டுகிறது. ‘தான் இறந்தபிறகு, விழிகளை சங்கர நேத்ராலயா மருத்துவமனைக்குத் தந்து விடுங்கள்; உடலை எரியூட்டவும் வேண்டாம்; புதைக்கவும் வேண்டாம்; உடலை சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர்களது ஆராய்ச்சி படிப்புக்காகக் கொடுத்து விடுங்கள்’ என்று குடும்பத்தாரிடம் கூறியதிலிருந்து அத்தகைய போராட்டங்கள் வெளிப்படுகின்றன. 11-03-2010 முதல் 18/19-08-2013 அன்று வரை முஸ்லிமாக இருந்த அப்துல்லா இறந்தால், யார் இறந்தது என்று உலகம் சொல்லும்?

  • இந்துவாக இருந்த சேஷாசல முதலியார் இறந்தாரா?
  • நாத்திகன் சேஷாசலம்இறந்தாரா?
  • பெரியார்தாசன்  இறந்தாரா?
  • “……….” –இறந்தாரா?
  • சித்தார்த்தா என்ற பௌத்தர் –இறந்தாரா?
  • அப்துல்லாஹ் என்ற முஸ்லிம் இறந்தாரா?

இந்தியன் இந்தியனாக இருந்தாலே போதும் – மதம் மாறவேண்டிய அவசியம் இல்லை.

© வேதபிரகாஷ்

19-08-2013


[3] சைக்காலாஜி / மனோதத்துவம் என்றும் குறிப்பிடுகிறார்கள்.

[4] கதிரவன், என்னநடந்ததுஇவர்கள்  வாழ்க்கையில்?, நக்கீரன்,   http://cinema.nakkheeran.in/Talkies.aspx?T=360

[5] கதிரவன், என்னநடந்ததுஇவர்கள்  வாழ்க்கையில்?, நக்கீரன்,   http://cinema.nakkheeran.in/Talkies.aspx?T=360

[10] தினமணி, 19-08-2013