கந்த சஷ்டி கவசம் பிறகு, கந்த புராணம்: கருப்பு, கருப்பு–சிவப்புக் கூட்டத்தாரின் தாக்குதல்கள் – தொடர்ந்து இந்துவிரோத திமுக இவ்வாறு ஈடுபடுவது.

இந்துவிரோதமும், இந்துவிரோத மறுப்பும் – யுக்திகள், வழிமுறைகள்: சமீப காலமாக மதம் சார்ந்த நம்பிக்கைகளை கொச்சைப்படுத்துவது டிரெண்டாக மாறிவிட்டது, என்கிறது ஊடகம், ஆனால், இந்து என்று முதலில் குறிப்பிடவில்லை. மேலும், தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், இது 100 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது, ஆனால், இந்துத்துவவாதிகளால், அதைக் கட்டுப் படுத்த முறையாக எதுவும் செய்ய முடியவில்லை. எதிர்-பிரச்சாரமும் சொதப்பலாகத் தான் இருந்து வருகிறது. அதாவது, இந்து விரோத நாத்திகர்கள், திராவிட பகுத்தறிவுகள், பெரியார் பிஞ்சுகள், ஈவேரா குஞ்சுகள் எல்லாம், இந்து கடவுளர்களை தூஷித்துக் கொக்கரித்துக் கொண்டிருக்கும் போது, இந்த இந்துத்துவவாதிகள், ஈவேரா, மணியம்மை, வீரமணிகளைத் தாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்துத்துவ வாதிகள் இவ்வாறு முறையற்ற ஒப்பீட்டு விமர்சனங்களினால், தோற்றுப் போகின்றனர். முறையாக, முழுமையாக திராவிட சித்தாந்தத்தை, அதனை ஆதரிக்கும் அரசியல் மற்றும் அரசியல் ஆதரவு 70-100 ஆண்டுகள் பயனாளிகள் ஆதரவு முதலியவற்றை அறியாமல் அல்லது மறந்து, இவ்வாறு செய்து வருகின்றனர். அதனால், அவர்களுக்கு ஈடு கொடுக்க முடியாத நிலையில் உள்ளனர்.

சைவர்கள் இந்துக்கள் அல்லர் போன்ற பேச்சுகள் – அவற்றை ஆதரிக்கும் கூட்டங்கள்: இந்துவிரோத கும்பல்கள் வேண்டுமென்றே மடாதிபதிகள், சைவ குருமார்கள் என்று சிலரை வைத்துக் கொண்டும், தூஷணங்களை செய்து வருகின்றனர். 2020 டிசம்பரில் அதத்தைய கூத்து அரங்கேறியது. ஆனால், 2020 அக்டோபரில் உஷாரான சில மடாதிபதிகள், தங்கள் பெயர்கள் ஒரு மாநாட்டு அழைப்பிதழில் தோன்றியபோது, மறுத்து, ஒதுங்கினர்[1]. ஆனால், அவர்களது அனுமதி இல்லாமல் அவ்வாறு நடந்ததா என்று தெரியவில்லை[2]. சென்னை பல்கலைக்கழக “உலக சைவ மாநாட்டு கருத்தரங்கத்தில்” பேசிய இரு மடாதிபதிகள், “சைவர்கள் இந்துக்கள்” அல்ல போன்ற சித்தாந்தத்ததாதரித்துப் பேசியதை நினைவு கொள்ள வேண்டும். ஆகவே, இவையெல்லாம், ஏதோ ஒரு திட்டத்துடன், தொடர்ந்து நடப்பதாகத் தெரிகிறது. சைவ சித்தாந்தத் துறை சரவணன் வெளிப்படையாக பேசியது போல, கர்நாடக வீரசைவர்கள் இந்துக்கள் அல்லர் என்று சொல்லிக் கொள்வது போல, தாங்களும் அவ்வாறே, கூறிக் கொள்கிறோம் என்று பேசியதும் இங்குக் கவனிக்க வேண்டும். பிறகு, சைவ மடங்கள், இந்து அறநிலையத் துறையிலிருந்து வெளியேறி விடலாமே? ஒருவேளை அத்தகைய சதித்திட்டத்தைத் தான் தீட்டியுள்ளனர் போலும்.

கந்தபுராணம் பாடலை இழிவு படுத்தியதற்கு, காமாட்சிபுரி ஆதீனம் ஸ்ரீசிவலிங்கேஸ்வர சுவாமிகள் கண்டனம் தெரிவித்தது: ஆன்மிக பெரியோர்கள், ஆதீனங்கள், மடாதிபதிகள் இதுபோன்ற இந்து விரோத பேச்சுகளுக்கு, செயல்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்தும், மத நம்பிக்கைகளை இழிவுபடுத்தும் செயல்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், தி.மு.க.,வினர் கந்தபுராணத்தை கொச்சைப்படுத்தி, கட்சி விளம்பரம் தேட முயன்றுள்ளனர். இதற்கு காமாட்சிபுரி ஆதீனம் ஸ்ரீசிவலிங்கேஸ்வர சுவாமிகள் கண்டனம் தெரிவித்துள்ளார். கந்தபுராணத்தில், ‛வான்முகில் வழாதுபெய்க, மலிவளம் சுரக்க மன்னர் கோன்முறை அரசு செய்க, குறைவிலாது உயிர்கள் வாழ்க, நான்மறை அறங்கள் ஓங்க, நற்றவம் வேள்வி மல்க மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்,’ என்று மங்கல வாழ்த்து பாடல் இடம்பெற்றுள்ளது[3].
வான்முகில் வழாது பெய்க மலிவளம் சுரக்க மன்னன் கோன்முறை அரசு செய்க குறைவிலாது உயிர்கள் வாழ்க நான்மறை அறங்கள் ஓங்க நற்றவம் வேள்வி மல்க மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலக மெல்லாம். கந்தபுராணம் | மல்குக வேத வேள்வி வழங்குக சுரந்து வானம் பல்குக வளங்கள் எங்கும் பரவுக அறங்கள் இன்பம் நல்குக உயிர்கட் கெல்லாம் நான்மறைச் சைவம் ஓங்கிப் புல்குக உயிர்கட் கெல்லாம் புரவலன் செங்கோல் வாழ்க. திருவிளையாடற்புராணம் |
இதை மைந்தன் கோன்முறை அரசு என்று கருணாநிதி, ஸ்டாலின் படத்தை காண்பித்தும், மேன்மைகொள் சமூக நீதி ஐம்பெரும் அறங்கள் ஓங்க, நன்னெறி தொழில்கள் மல்க ‘ என்று பாடல்வரிகளை தஙகளது கட்சிவிளம்பரத்திற்கு ஏற்ப மாற்றி அமைத்துள்ளனர்[4]. இது குறித்து காமாட்சிபுரி ஆதினம் கூறியதாவது[5]: “மேற்கூரிய கந்தபுராண பாடல் தேசிய கீதத்தை போன்று உலகம் சிறப்புற இறைவனிடம் வேண்டும் பாடல். பெரும்பான்மையான மக்கள் வழிபடும் பாடலை கொச்சைபடுத்தும் விதமாக அரசியல் கட்சி வெளியிட்டுள்ள பாடல் வரிகள் அமைத்துள்ளன. அரசியல் கட்சிகள் தங்களது கொள்கை கோட்பாடுகளில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். மத நம்பிக்கைகளை இழிவுபடுத்தும் செயல்களை கைவிட வேண்டும். மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தும் இது போன்ற செயல்கள் தொடர்ந்து நடந்து வருமேயானால், கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்,” இவ்வாறு அவர் கூறினார்[6].

கந்த சஷ்டி கவசம் முதல் கந்த புராணம் வரை: சமீபத்தில், கந்தசஷ்டியை இழிவுபடுத்தி யூ டியூப்பில் வெளியான கருத்துக்கு தமிழகம் முழுவதும் கடும் கண்டனம் எழுந்தது. அது ஓய்வதற்குள் தி.மு.க.,வினர் கந்தபுராணத்தை டப்பிங் செய்து வீடியோ பாடல் வெளியிட்டது சமூக வலைதளங்களில் வைரலாகி கண்டனத்திற்கு ஆளாகி வருகிறது. “இந்து என்ற சொல்லைக் கேட்டாலே எரிகிறது,” என்று சிலரைப் பேச வைத்து சிரித்து ரசித்த தி.மு.க தலைவர் ஸ்டாலின் தற்போது கோவில்களில் பிரச்சாரக் கூட்டம் நடத்துவது, இந்து சமய நூல்களை புகழ் மாலை புனையப் பயன்படுத்துவது என்று கிளம்பி இருக்கிறார்[7]. ஆன்மீகப் பெரியோர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்த போதும் இந்துக்களின் நம்பிக்கைகளை கொச்சைப்படுத்தும் விதமாக நடந்து கொள்வது தொடர்ந்து வருகிறது. இந்து என்று ஒரு மதமே கிடையாது என்று தி.மு.க கிறிஸ்துமஸ் விழாவில் கலையரசி நடராஜன் என்பவர் பேசியது கடும் சர்ச்சையைக் கிளப்பிய நிலையில் தற்போது கந்த புராணப் பாடலைக் கொச்சைப்படுத்தும் விதமாக தி.மு.க பிரச்சாரப் பாடலாக பயன்படுத்துவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது[8]. ஆக, “கந்த சஷ்டி கவசம் முதல் கந்த புராணம் வரை,” போன்ற கேவலமான நாடகங்களை அரங்கேற்றி மக்களை ஏமாற்றும் வேலைகள் தேவையில்லை.

சைவசமய சின்னங்கள், இலக்கிய வரிகள் முதலியவற்றை உபயோகப் படுத்துவது: இந்த வீடியோவிலும், கருணாநிதி, ஸ்டாலினை தனது அரசியல் வாரிசாக அறிவித்ததை, ராஜராஜன், ராஜேந்திரனுடன் ஒப்பிடும் வகையில், கங்கைகொண்ட சோழபுரம் சிற்பத்தைக் காட்டி, தாங்கள் இருக்கும் புகைப்படத்தை, “மைந்தன் கோன்முறை அரசு செய்க, என்று அற்பத் தனமாகக் காட்டுகின்றனர். அவ்வாறு ஒப்பிட்டுக் கொள்ள, கருணாநிதிக்கும், ஸ்டாலினுக்கும் எந்த அருகதையும் இல்லை. ஏனெனில், பார்ப்பன அடிவருடிகள் என்று அந்த சோழர்களை இழித்துப் பேசியுள்ளதை கவனிக்க வேண்டும், பிறகு அத்தகைய, ஒப்பீடுப் பார்ப்பதில் என்ன வறட்டு சந்தோசம்? மேலும், இந்து விரோதத்துடன் நெற்றியில் குங்குமத்தை வைத்துக் கொண்டதை இகழ்ந்தவர் தந்தை கருணாநிதி. நெற்றியில் வைத்த குங்குமம், விபூதி, சந்தனம் முதலியவற்றை அழித்தவர் தனயன் ஸ்டாலின். இப்பொழுது வேண்டுமென்றே, கோவில்களுக்கு அருகில், கோவில் வளகங்களில், மைதானங்களில் கூட்டம் போட்டு தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இத்தகைய கேடுகெட்ட தூவேசிகளை உண்மையான இந்து யாரும் ஆதரிக்க மாட்டார்கள்.
© வேதபிரகாஷ்
05-01-2021

[1] தினசரி, இந்து ஆன்மீக விரோதிகள் நடத்தும் கூட்டத்தில் தாங்கள் பேசப் போவதில்லை: மறுத்துள்ள ஆதீனங்கள், செங்கோட்டை அஶ்ரீராம், 22-10-2020 4.05 மணி.
[2] https://dhinasari.com/latest-news/178399-perur-atheenam-denied-to-participate-tamilnadu-vizha-webinar.html
[3] வேல்ஸ்.மீடியா, கந்த புராணத்தை மாற்றி தேர்தல் பிரசார பாடல்! திமுகவுக்கு எதிராக ஆத்திகர்கள் கொதிப்பு, velsmedia team, ஜனவரி 4, 2021 3:06 pm.
[4] https://velsmedia.com/dmk-election-campaign-song-by-changing-kandapuranam-words/
[5] தினமலர், கந்த புராணத்தை வைத்து விளம்பரம்: தி.மு.க.,வுக்கு காமாட்சிபுரி ஆதினம் கண்டனம், Updated : ஜன 03, 2021 15:59 | Added : ஜன 03, 2021 15:58. https://www.dinamalar.com/news_detail.asp?id=2682846
[6] https://www.dinamalar.com/news_detail.asp?id=2682846&Print=1
[7] கதிர்.நியூஸ், கந்தபுராண பாடலில் ‘சைவ நீதி‘யை ‘சமூகநீதி‘ என்று மாற்றிய தி.மு.க! ஆதீனம் கண்டனம்!, By Yendhizhai Krishnan | Mon, 4 Jan 2021
[8] https://kathir.news/tamil-nadu/dmk-condemns-aadeenam-for-changing-vegetarian-justice-to-so/cid1961034.htm